என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

79 ] அம்மாவும் அம்பாளுமே கதி !

2
ஸ்ரீராமஜயம்





பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம்.

பிறந்த பிற்பாடும் ஆகாரம் தருவதிலிருந்து சகலத்திற்கும் அவள்தான் கதியாக இருக்கிறாள்.

அம்பாள் கொடுத்த சக்தியால் சாப்பிடுகிறோம் என்று நினைக்கும் பொழுது, கெட்ட பதார்த்தங்களை உள்ளே தள்ளத் தோன்றாது. 

அம்பாள்தான் நடக்கச் சக்தி தருகிறாள் என்ற ஞாபகம் இருக்கும் பொழுது, ரேஸுக்கும், சினிமாவுக்கும் போகத்தோன்றாது.

அவள் கொடுப்பது வாக்கு என்னும் பொழுது வீணாக அரட்டை பேசவோ திட்டவோ கெட்ட விஷயங்களை விவாதம் பண்ணவோ மாட்டோம்.

சும்மா சும்மா சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதல்ல. ஆத்மாவுக்கும் நல்லதல்ல.

oooooOooooo

[ 1 ]

Here is an experience narrated by one 
Mr. Ramani in his own words…


My grand mother an ardent devotee of His Holiness Maha Periavah used to visit Kancheepuram often when H.H. Maha Periavah used to spend in around that place. I am talking about the period between 1957 – 1964. ( my grand mother died in 1964).

She had been aspiring to get a “Periavah Paadham” for doing her daily Pooja. Whenever she requested H.H. Maha Periavah would simply nod and never gave one to her. 

When others were given, somehow when her turn came nothing would be left for HIM to offer one. He would simply smile and say next time.

Once it was so disappointing incident when another woman accompanied her got it, but when her turn was next there was nothing left. 

Seeing her disappointment on her face H.H. Maha Periavah said, ” it is only ...... for doing Pooja only ...... isn’t it? You will have it “.

My grandma couldn’t digest this.

She literally came back crying, saying I don’t deserve, that is why HE has not given me. Or may be our Swami kovil is not in a separate room there is no sanctity in the house and that’s why she has not given … and things like that.

Next day after doing her morning Pooja, as usual, she kept the two Parijatha flowers at the bottom of the photo of H.H. Mahaperiavah dipping it in water and sticking on the glass face of the photo, as she used to do. 

After a Namaskaram she got up, among tears she noticed Two Paadhams having been formed in the photo, as if it is embossed. The water coming from the flower had transformed such an impression. She immediately rushed to Kanchipuram to share with Periavah.

Believe HE just smiled as if HE knew about it and just nodded. 

I am attaching the photo here. It is still there even after 50 years! 

You would notice the two Paadams at the bottom of the frame.

 

[Thanks to Mr. Ramani Sir and Sage of Kanchi 17.10.2013]



oooooOooooo

[ 2 ]





"இந்த காக்காயோட உபத்ரவம் ரொம்ப தாங்கலே பெரியவா! 

தெருவுல போறச்சே கூட  எங்கேர்ந்தோ வந்து தலைல உக்காந்துக்கறது... 

என்னிக்கோ ஒரு நாள் இப்டி  நடக்கறதுன்னு இல்லே.

தெனோமும் இப்டியே நடக்கறது; 

ரொம்ப வேதனையா இருக்கு... 

பெரியவாதான் எனக்கு ஒரு வழி சொல்லணும். 

கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு இருக்கா, ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா; அனாதைகளா  போயிடுமோ.. ன்னு கவலையா இருக்கு"


"காக்காய்க்கு தெனோமும் சாதம் போடு ! 






தெனோமும் நல்லெண்ணெய் விளக்கு ஏத்தி வை ! 






சனிக்கிழமை அன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போய் ஸ்வாமி தர்ஸனம் பண்ணு !." 




ப்ரஸாதம் வாங்கிக்கொண்டு நிம்மதியாக சென்றாள் அந்த பக்தை. 

பெரியவா பாரிஷதர்களிடம் சொன்னார்...


"நம்ம மடத்துக்கு, யானை, பசு, பூனை, நாய், பெருச்சாளி, எலி, குருவி, கொரங்குன்னு எல்லாப் பிராணிகளும் வருது... ஆனா, காக்கா மட்டும் வரதேயில்லை ! கவனிச்சேளோ ?"



"பெரியவா சாக்ஷாத் பரமேஸ்வரனாச்சே ! அதுனால சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ள நொழையக்கூட பயம் ! அதான் தன்னோட வாஹனத்தை கூட அனுப்பறதில்லே !" அழகாக பதில் சொன்னார் ஒரு பாரிஷதர். பெரியவா புன்முறுவல் பூத்தார்.



"நம்ம அஹங்கள்ள [வீடுகளில்] காக்காய்க்கு சாதம் போடறச்சே, "காக்காய், காக்காய்.. ன்னோ  காகம் காகம்.. வா ! வா ! .. ன்னோ கூப்டறதில்லே ! கா....கா.. ன்னு தானே  சொல்றா ?... அப்டீன்னா என்ன அர்த்தம்?"


"காக்கா... சாப்ட வா !.. ன்னு அர்த்தம்" என்றார் ஒரு பாரிஷதர்.

"அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! கா.....கா.....ன்னா, காப்பாத்து! காப்பாத்துன்னு அர்த்தம். 

நம்ம பித்ருக்கள் எல்லாருமே காக்கா ஸ்வரூபமா வர்றதா ஐதீகம்! 

கா....கா......ன்னா, பித்ருக்களே! எங்களை ரக்ஷியுங்கோ!..ன்னு அர்த்தம் சொல்லலாமோல்லியோ? 

அதுமட்டுமில்லே...பகவான்  எல்லா ஜந்துக்கள்கிட்டயும்  ஆத்மாவா இருக்கான். காக்காய்க்குள்ளேயும் இருக்கத்தானே செய்வான்? பகவானுக்கு நைவேத்யம் பண்ணறச்சே... அவன் சாப்டறதை  நம்மளால பார்க்க முடியலே! அவனே காக்காயா வந்து, நாம போடற சாதத்தை சாப்பிடறச்சே, நம்மளால பார்க்க முடியறது. 

ஏதோ ஒரு ஜீவன், வினைப்பயனா, காக்காயா பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு, அதாவது, நம்ம ஸரீரத்துக்குள்ள இருக்கற ஆத்மாவுக்கு, ஸ்வரூபம்தான் வேறே! சாதம் போடறோம்! இது அத்வைதம்தானே?"

அத்வைதம் இத்தனை எளிதா? 

அத்வைதம் ஆஸ்ரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறதா ! 

அதைத்தான் மஹாகவி "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று அனுபவத்தில் பாடியிருக்கிறார் !



 


[ Thanks to Mr. Sivan Krishnan Sir, for sharing this on 30.10.2013]


oooooOooooo

[ 3 ]


மஹாபெரியவாவின் நகைச்சுவை ரசனை !!!!!



”பச்சை மாவும் பவள வாயும்.”


இரவு வேளை.

விஷய ஞானமுள்ள அடியார் ஒருவர் வந்து பெரியவாள் முன் உட்கார்ந்தார்.

“ஆகாரம் பண்ணியாச்சா?”

” ஆச்சு”

“என்ன சாப்பிட்டே?”

“உப்புமா”

ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள்: 

“உனக்கு ஒரு கதை தெரியுமோ? உப்புமாக் கதை”

“தெரியாது”

“கேளு. ஒரு பக்தன் ஸ்ரீரங்கத்துக்கு போனான். பெருமாளை சேவித்தான். ஒரு சத்திரத்தில் ராத்திரி சாப்பிடப் போனான். உப்புமா போட்டார்கள். உப்புமா சரியாக வேகவில்லை. சின்னச் சின்னதாய் நிறைய கல் வேறே இருந்தது. பல்லில் அகப்பட்டு, வாயெல்லாம் புண்ணாகி, சிவப்பாகி விட்டது. நிறைய மிளகாய் தாளித்துப் போட்டிருந்ததால், காரம் தாங்கவில்லை. கண்களில் நீர் வழிந்து, சிவந்து போச்சு. அப்போ, ரொம்ப சிரமத்திலே ஒரு பாட்டுப் பாடினான். உனக்குத் தெரியுமோ?”


“தெரியாது”

“என்ன அப்படிச் சொல்றே? பச்சை மால் மலை போல் மேனி…..”


“இது எனக்குத் தெரியும்.”
“இவன் கொஞ்சம் மாற்றிப்பாடினான் . 



பச்சை மா (வேகாத மாவு) , 

மணி போல் மலை  


(உப்புமாவில் மணி மணியாகக் கற்கள்) , 


பவள வாய் (சாப்பிட்டவனுக்கு, வாய் புண்ணாகிச் சிவந்தது), 



செங்கண் ( காரம் தாங்காமல் கண்ணீர் வழிந்ததில், கண்களும் சிவந்து விட்டன), 


அச்சுதா….”

அருகிலிருந்தவர்களுடன் பெரியவாளும் சேர்ந்து கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்!

[நன்றி: அமிர்த வாஹினி 23.07.13 ]


oooooOooooo



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

50 கருத்துகள்:

  1. "கா....கா......ன்னா, பித்ருக்களே! எங்களை ரக்ஷியுங்கோ!..ன்னு அர்த்தம் சொல்லலாமோல்லியோ? " அப்படி ஒரு அர்த்தம் இருப்பதை இதை படித்த பிறகுதான் உணர்கிறேன். சரியான விளக்கம் அறிந்தேன். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. கடைசி உப்புமாக் கதை கேட்டதில்லை. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அரிசி உப்புமாவின் சுவைக்கு ஈடு இணை உண்டோ?
    அதை நகைசுவையுடன் பரிமாறும் பெரியவாவின்
    வாக்குக்கு ஈடு இணை உண்டோ?

    கா.கா. என்று காக்கையை அழைப்பதன் பொருளை விளக்கியது அருமை.

    மொத்தத்தில் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வை.கோ

    அம்மாவும் அம்பாளூமே கதி - பதிவு அருமை - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் புகைப்படம் அருமை - சிரிக்கின்ற படம் - பெரியவா பெரியவா தான்,

    அம்மாவின் உயிரில் - உடம்பில் - உணவில் தான் உண்டாகிறோம்.

    ஆங்கிலத்தில் இருக்கும் ரமணியின் அனுபவம் அருமை - பெரியவாளின் பாதம் ஃப்ரேமின் அடியில் - அருமை அருமை.

    காக்காய்க்கு தினமும் சாதம் போடுகிஅயில் கா கா எனக் கூவுவதன் தாத்பர்யம் - விளக்கம் அருமை. பித்ருக்கள் வந்து மனம் மகிழ உண்டு விட்டுச் செல்வது நாம் படைக்கும் பொழுது சொல்லும் கா கா என்னும் காப்பாத்து காப்பாத்து என்பதன் பலனே !

    பச்சை மாவும் பவள வாயும் - பெரியவாளின் நகைச்சுவை விளக்கம் அருமை - நான் பள்ளியில் படித்த காலத்தில்

    பச்சை மா மலை போல் மேனி
    பவளவாய்க் கமலச் செங்கண்
    அச்சுதா அமரறேறே
    ஆயர்தம் கொழுந்தே
    என்னும் இச்சுவை தவிர
    இந்திர லோகமாளும்
    அச்சுவை பெறினும்
    வேண்டேன் அரங்கமா நகருளானே !

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளின் நகைச்சுவை கேட்டிருப்பேணோ - நாங்கள் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது நான் ( நாங்கள் ) சொல்லும் விள்க்கம் இதோ :

    ஹோட்டலில் சென்று சாப்பிட உட்காரும் போது - இட்லி ஆர்டர் செய்து சாப்பிடும் போது கூறியவை இதோ :

    பச்சை மா - சரியாக அவியாமல் இருக்கும் இட்லி
    மலை போல் மேனி - பக்குவம் போதாமல் கல் போல இருக்கும் இட்லி
    பவள வாய் : இட்லிக்கு வைத்த சட்னியின் காரம் தாங்காமல் சிவந்த வாய்
    கமல்ச் செங்கண் - காரத்தினால் கண்ணீர் பெருக சிவந்த கண்
    அச்சுதா அமரறேறே ஆயர் தம் கொழுந்தே - பெருமாளே காப்பாற்று
    என்னும் இச்சுவை தவிர - ந்மமைக் கஷ்டப்படுத்தினாலும் இவ்விட்லி சட்னியின் சுவையினைத் தவிர
    யான் போய் இந்திர லோகம் ஆளும் - எனக்கு இந்திர லோகம் கிடைத்தாலும்
    எச்சுவை பெறினும் வேண்டேனே ! - அது வேண்டாமே !

    அரங்க மாநகருளானே !

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அம்மாவும் அம்பாளுமே கதி !

    அம்பாள் கொடுப்பது வாக்கு என்னும் பொழுது வீணாக அரட்டை பேசவோ திட்டவோ கெட்ட விஷயங்களை விவாதம் செய்யவோ மாட்டோம்.

    சிந்தையில் கொள்ள வேண்டிய அற்புதவரிகள்!..

    அழகிய பதிவு.. மிக்க நன்றி ஐயா!..

    பதிலளிநீக்கு
  6. அம்மாவை விட்டால்கூட அம்பாள்தான் கதி என்றிருந்தால் அம்மாவை விடவே முடியாது. மகத்தான சக்திகளாயிற்றே!!!!!!!!
    காகா என்று அழைத்தலின் பொருள் பெரியவாளல்லாது மற்றவர்களால் சொல்லவே முடியாது. பித்ருக்கள் உண்டு போவதுடன்,காகா,காப்பாற்றுங்கள் என நம்மையறியாமலேயே
    மனமுவந்து வேண்டுகோளும் விடுக்கிறோம்.
    எவ்வளவு அர்த்தமான கூப்பாடு.
    உப்புமா கதையும் ,ஹாஸ்யமும் ரஸிக்க வைக்கிறது.
    அமுத மொழிகளூடே ரஸிக்க விஷயங்களும். . அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. கா ...கா......சொல்வதன் அர்த்தம் விளங்கியது. உப்புமா கதை மிகவும் ஜோர். பெரியவாளின் பாதங்கள் போட்டோவில் வந்த அதிசயம் மஹா பெரியவர் அருள் என்பதை அழகாய் விளக்கியுள்ளீர்கள்..நன்றி அமுத மழைக்கு .
    தொடருங்கள்.......

    பதிலளிநீக்கு
  8. கா- கா- என்றால் காப்பாற்று என்று அர்த்தம்! அருமை! இது போல எளிமையாக புரியவைக்க பெரியவாளால்தான் முடியும்! பெரியவாளின் நகைச்சுவை உணர்வும் சிறப்பு! அம்பாளே எல்லாம் என்னும் தத்துவமொழிகளில் நனைந்தேன்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. பெரியவாளின் படம் அழகு! அப்படியே பார்த்துக்கொண்டே இருக்கும் வண்ணம் சிறப்பாக இருந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. கா- கா- என்றால் காப்பாற்று என்று அர்த்தம்!
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  11. இம்முறை அம்மாவுக்கும் அம்பாளுக்கும் கம்பேரிசனா?? பேஷ், பேஷ், ரொம்ப நல்லாயிருக்கு!!
    பவளமல்லியிலிருந்து பெரியவா பாதங்கள் அற்புதமே!!

    இனிமேல் 'பச்சை மா மலை போல்' பாட்டு கேட்கும் போதெல்லாம் இந்த உப்புமா கதை தான் நினைவுக்கு வரப் போகிறது!!

    பதிலளிநீக்கு
  12. எத்தனை எத்தனை அழகான, பொருள் பொதிந்த சம்பவங்கள்... அருமையாகப் பகிர்ந்து வருகிறீர்கள்!!.. போற்றத்தக்க சேவை.. தங்கள் வலைப்பூவில், கிடைத்தற்கரிய சத்சங்கம் கிடைக்கப்பெறுகிறேன். வணங்குகிறேன் தங்களை!!

    பதிலளிநீக்கு
  13. அவள் கொடுப்பது வாக்கு என்னும் பொழுது வீணாக அரட்டை பேசவோ திட்டவோ கெட்ட விஷயங்களை விவாதம் பண்ணவோ மாட்டோம்.

    அருமையான விளக்கம் ...!

    பதிலளிநீக்கு
  14. அத்வைதம் இத்தனை எளிதா?

    அத்வைதம் ஆஸ்ரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறதா !

    அதைத்தான் மஹாகவி "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று அனுபவத்தில் பாடியிருக்கிறார் !

    எத்தனை எளிதாக அருமையாக உயர்ந்த தத்துவம் உரைக்கப்பட்டிருக்கிறது என எண்ணும் போது வியக்கவைக்கிறது..!

    பதிலளிநீக்கு
  15. கா- கா- என்றால் காப்பாற்று என்று அர்த்தம்!

    கா .. வா ..வா.. கந்தா வந்து கா.. வா..வா

    என்ற பிரபலமான முருகன் பாட்டு நினைவு வந்தது ..

    பதிலளிநீக்கு
  16. உப்புமாக் கதை”
    வண்ண வண்ணமாக ரசிக்கவைத்து சிரிக்கவும் வைத்தது..!

    பதிலளிநீக்கு
  17. கா கா அர்த்தம் மிக நன்று ஐயா!! உப்புமா கதை சுவராஸ்யம்..

    பதிலளிநீக்கு
  18. //சும்மா சும்மா சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதல்ல. ஆத்மாவுக்கும் நல்லதல்ல.//

    உப்புமா கதை..... :) ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. கா.கா. என்று காக்கையை அழைப்பதன் பொருளை விளக்கியது அருமை. உப்புமாக் கதை உண்மையில் சிரிக்க வைத்தது!பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  20. அமுத மொழியனைத்தும் அமுத மழையே! தங்கள் தயவில் எங்களையும் நனைக்கிறது. அவரது ஹாஸ்யம் வெகு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  21. சும்மா சும்மா சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதல்ல. ஆத்மாவுக்கும் நல்லதல்ல.

    அருமை !

    பதிலளிநீக்கு
  22. அனைத்தும் ஆண்டவனே.... உண்மைதான்ன்.

    //சும்மா சும்மா சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதல்ல. ஆத்மாவுக்கும் நல்லதல்ல./// ஹா..ஹா..ஹா.. நிஜாயமான உண்மை.. புத்திக்குத் தெரிகிறது, ஆனா மனம் கேட்பதில்லை... ஏன் கோபு அண்ணனே தன் பெட்டிலேயே(bed) ஒரு குட்டிப் பெட்டிக்கடை வைத்திருக்கிறாரெனில்:) நாமெல்லாம் எம்மாத்திரம்:).

    பதிலளிநீக்கு
  23. அழகிய அனுபவக் கதைகள்.. படித்து .. சில புதிய அனுபவங்களும் கிடைக்கப் பெற்றேன்.

    பதிலளிநீக்கு
  24. காக்கா, உப்பமா, தாய் என்று பல விடயங்கள்.
    மிக்க நன்றி.
    இறையாசி நிறையட்டும்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  25. அம்மா கொடுத்த உயிர் அம்பாள் கொடுத்த வாக்கு உணர்ந்தால் தீயதை நினைப்போமா உணவு நெறிமுறைகளை நமக்காக உபதேசித்து மிகவும் எளிமையாக வாழ்ந்தும் காட்டிய மஹான் பக்தர்களுக்கு அவரவர் மனம் போல் அருளுவது மஹானின் லீலை.அனுபவத்தில்தான் உனரமுடியும்
    மஹாபெரியவாளின் நகைச்சுவை ரசிக்கதக்கதாக இருக்கிறது காக்கைக்குசாதம் போடுவது பித்ருக்களுக்காக நல்ல பகிர்வு நன்றி

    பதிலளிநீக்கு
  26. அன்பு அய்யாவிற்கு வணக்கம்.
    அம்மா. கா கா என்பதன் விளக்கம்.
    பச்சை மா மலை போல் மேனி
    /பவளவாய்க் கமலச் செங்கண்
    அச்சுதா அமரறேறே
    ஆயர்தம் கொழுந்தே
    என்னும் இச்சுவை தவிர
    இந்திர லோகமாளும்
    அச்சுவை பெறினும்
    வேண்டேன் அரங்கமா நகருளானே ! /
    எனும் பாடலுக்கு பெரியாவே கூறிய நகைச்சுவை கூடுதல் சுவை நமக்கு. அப்புறம் அந்த போட்டோ என்ன அருமை பக்தர்களுக்கு பெரியவா காட்டும் கருணை முகம் அழகு. அத்தனையும் அருமை.பகிர்வுக்கு நன்றீங்க அய்யா..

    பதிலளிநீக்கு
  27. மகாப் பெரியவரின் நகைச்சுவை உணர்வையும்
    தமிழ் பாண்டித்தியத்தையும் ஒரு சேர
    மிகச் சாதாரண உப்புமா விசயத்தில் வெளிப்படுத்தியவிதம்
    மெய்சிலிர்க்கவைத்தது
    தங்கள் ஆன்மீகத் தொடர்கள் மூலம் பல அற்புத
    விஷயங்களை அரிய விளக்கங்களை அறிய முடிவது
    நாங்கள் பெற்ற பேறு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  28. அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! கா.....கா.....ன்னா, காப்பாத்து! காப்பாத்துன்னு அர்த்தம்
    what great sayings.......
    I came to know so many things from this regular post.
    Thanks for sharing the photo above.
    Whenever i forget HIM., your post make me think of HIM.
    thanks.
    viji

    பதிலளிநீக்கு
  29. ஆத்மா பற்றிய விளக்கத்தோடு, கா ...கா பற்றி புதிய விளக்கம் கண்டேன். உப்பு மா பற்றி -- நல்ல ஜோக்

    பதிலளிநீக்கு
  30. wow ka ka means kapathungal beautiful I never knew this... thanks a lot sir for sharing...

    பதிலளிநீக்கு
  31. வை.கோ. சார் வலைப்பூவில் நீண்ட நாட்களாக ஒரே ஆன்மீகப் பகிர்வுகள் அதிகமாக இருக்கு.உங்க பொதுவான பகிர்வுகள், கதை எல்லாம் எப்பொழுது ? என் வலைப்பூவிற்கு வந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar November 15, 2013 at 7:55 PM

      வாங்கோ ... வணக்கம்.

      //வை.கோ. சார் வலைப்பூவில் நீண்ட நாட்களாக ஒரே ஆன்மீகப் பகிர்வுகள் அதிகமாக இருக்கு.//

      ஆமாம் ..... ஏதோ ..... ஆழம் தெரியாமல் ..... அதில் குதித்துவிட்டேன்.

      அந்த ஆன்மிகத்தொடரில் மொத்தம் 108 பகுதிகள் கொடுக்க உத்தேசித்துள்ளேன். இப்போ இதுவரை 80 பகுதிகள் மட்டும் முடிந்து வெளியிடப்பட்டுவிட்டன.

      இன்னும் 28 பகுதிகள் பாக்கியுள்ளன. அடுத்த 56வது நாள் இந்த ஆன்மிகத்தொடரிலிருந்து சற்றே வெளிவந்துவிட உத்தேசம்.

      \//உங்க பொதுவான பகிர்வுகள், கதை எல்லாம் எப்பொழுது ?//

      நீங்கள் மட்டுமல்ல ... உங்களைப்போல பலரும் இதே கேள்வியை என்னிடம் கேட்டுள்ளனர்.

      இதற்கான பதில், மிகவும் விளக்கமாக ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று [01/01/2014] என்னால் ஓர் தனிப்பதிவாகவே வெளியிடப்பட உள்ளது. காணத்தவறாதீர்கள்.

      ‘தை பிறந்தால் வழி பிறக்கும் ... தங்கமே தங்கம்’ என்ற பாடல்தான் இப்போதைக்கு, தங்கள் அனைவருக்கும் என் பதில்.

      14/01/2014 முதல் என் பதிவுகளுக்கு தாங்களும், தங்களைப் போன்ற பழைய நண்பர்கள் பலரும் அவசியம் வருகை தருவீர்கள் என நம்புகிறேன். ;)

      //என் வலைப்பூவிற்கு வந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி.//

      இங்கு தங்களின் அன்பான வருகைக்கும் அழகானதோர் சந்தேகக் கேள்விக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  32. பெரியவரின் anecdots எல்லாம் சுவையாய் இருக்கிறது. ரசித்துப் படித்தேன். பாராட்டுக்க்ள

    பதிலளிநீக்கு
  33. கா...கா... விளக்கம் அறிந்தேன். .

    பதிலளிநீக்கு
  34. ஏதோ ஒரு ஜீவன், வினைப்பயனா, காக்காயா பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு, அதாவது, நம்ம ஸரீரத்துக்குள்ள இருக்கற ஆத்மாவுக்கு, ஸ்வரூபம்தான் வேறே! சாதம் போடறோம்! இது அத்வைதம்தானே?"//

    அருமையான விளக்கம்.

    உப்புமா கதை மிக அருமை.
    நகைச்சுவை மிக அருமை.
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. நமது முன்னோர்களின் வடிவில் காக்கா வருகிறது என்பதை வெகு அழகாக விளக்கியிருக்கிறார் பெரியவா.

    பதிலளிநீக்கு
  36. பித்ருக்களை ஆராதிக்காவிட்டால் ஜன்மம் சாபல்யமடையாதுன்னு சொல்லுவார்கள்.

    பதிலளிநீக்கு
  37. இனிமேல உப்புமா சாப்பிடும் போதெல்லாம் பச்சைமா மலைபோல் மேனி தான் நினைவில் வரும்

    பதிலளிநீக்கு
  38. // சும்மா சும்மா சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதல்ல. ஆத்மாவுக்கும் நல்லதல்ல.//

    அதான் பசித்துப் புசின்னு சுளுவா சொல்லி இருக்காளே. கேட்டாதானே.

    பதிலளிநீக்கு
  39. திரு ரமணி அவர்களின் பாட்டிக்கு அருளிய விதம் அருமை.

    கா, கான்னா காப்பாத்து. தெரிஞ்சிருந்தாலும், மகா பெரியவா சொன்னாதானே புரியறது.

    இனிமே உப்புமா சாப்பிடும் போதெல்லாம் எத்தனை பேர் பச்சைமா மலை போல் மேனி பாடப் போறாளோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான வேடிக்கையான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  40. உப்புமா சாப்பிட்டு படிச்ச பாட்டு ஹா ஹா தா

    பதிலளிநீக்கு
  41. காகாகைக்கு சாதம் வைத்து கா கா என்று சொல்வதின் அர்த்தம் தெரிந்துகொண்டேன் இனி உப்புமா சாப்பிடும் போதெல்லாம் பச்சைமா மலைபோல் மேனிதான் நினைவில் வரும்.

    பதிலளிநீக்கு
  42. கா.....கா.....ன்னா, காப்பாத்து! காப்பாத்துன்னு அர்த்தம்.// பல முறை காகத்தை அழைத்திருந்தும் அதன் உட்பொருள் இங்குதான் தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  43. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (28.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/456503324852367/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  44. இந்த பதிவின் மற்றொரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (29.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=457533418082691

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு