என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

*அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்னு பழகு!!*


அடடா ..... என்ன அழகு!

’அடை’யைத் தின்னு பழகு!!

சமையல் குறிப்பு

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




இன்றுள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் விஷயமாக, தன் குடும்பத்தைப்பிரிந்து  உலகின் பல்வேறு பாகங்களில் தனித்துத்தங்க வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதில் பலருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பிட முடிவதில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது மிகவும் சகஜமாக உள்ளது.  அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தன் வீட்டில் சைவ சாப்பாடு மட்டுமே வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப்பழகியவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாகவே இருக்கும்.

மெஸ் போன்ற உணவு விடுதிகளிலோ, ஹோட்டல்களிலோ தினமும் சாப்பிடுவது என்பது நாளடைவில் 

1] மிகவும் அலுத்துப்போய் விடக்கூடும். 
2] அதிக பணச்செலவினை ஏற்படுத்தும்.
3] சிலர் உடம்புக்கு ஒத்து வராது
4] மன நிறைவு ஏற்படாமல் போகும்
5] ருசியில்லாமல் பசிக்காக மட்டும் சாப்பிட வேண்டிய 
    கட்டாயத்தினை  ஏற்படுத்தும்.

அவரவருக்கு வேண்டிய உணவினை அவரவர்களே தயாரித்து உண்ண பழகிக்கொண்டால் அதில் பல்வேறு நன்மைகள் உண்டு. இது சொல்வது மிகவும் சுலபம் தான்; ஆனால் இவ்வாறு செய்வதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளும் சிக்கல்களும் உண்டு தான்.

இந்த சமையல் கலை என்பது ஆரம்பத்தில் பழகும்  வரை சற்று கஷ்டமாக இருக்குமே தவிர, ஓரளவு பழகி விட்டால், பிறகு அதனால் ஏற்படும் பயன்களும், மன திருப்தியும் மிகவும் அதிகமே.

ஒரு காஸ் சிலிண்டர், காஸ் அடுப்பு, சாதம் வடிக்க ஒரு பிரஷர் குக்கர், ஒரு மிக்ஸி, ஒரு குளிர்சாதனப்பெட்டி, ஒருசில அத்யாவஸ்ய பாத்திரங்கள்,  தேவையான மளிகை சாமான்கள் முதலியன மட்டும் வாங்கி வைத்துக்கொண்டால் போதும். 

குக்கரில் சாதம் வடித்துக்கொள்வது மிகவும் எளிது. தயிர் + ஊறுகாய் போன்றவைகளை அவ்வப்போது ஃப்ரெஷ் ஆகக் கடையில் வாங்கி வைத்துக்கொண்டு விடலாம். வெறும் தயிர் / மோர் சாதம் மட்டும் சாப்பிட்டால் அதுவும் அலுத்துப்போகும் அல்லவா! 

தினமும் சாம்பார், ரஸம், அவியல், பொரியல் என செய்வதற்கெல்லாம் நிறைய பொறுமையும் நேரமும் தேவைப்படும். அதெல்லாம் சரிப்பட்டு வராது. நிறைய பாத்திரம் பண்டங்களைத் தேய்ப்பதும் மிகவும் கஷ்டமான வேலையாகிவிடும்.

அதனால் அதற்கு மாற்றாக “அடை” மாவு மிக்ஸியில் அரைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் நல்லது, இது ஆண்களுக்கு மிகவும் சுலபமானது.  காரசாரமான “அடை” தயாரிப்பது எப்படி? என விளக்க நினைக்கிறேன். இது ஆண்களுக்கு மிகவும் பயன்படக்கூடும். 

ஒவ்வொரு வேளையும் கனமான ஓரிரு அடைகளும், தயிர் சாதமும் சாப்பிட்டால் வயிறு கம்முனு இருக்கும். தயிர் சாதம் அல்லது மோர் சாதத்திற்கு, இந்த அடையையே தொட்டுக்கொண்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

அடை வார்ப்பதற்கு என்றே  கனமான அடைக்கல் என்று ஒன்று விற்கப்படுகிறது.     மெல்லிய தோசைக்கல்லோ, நான் ஸ்டிக் ஐட்டமோ இந்த அடை வார்க்க சரிப்பட்டு வராது. 

[கனமான அடைக்கல் வாங்க இங்கு திருச்சி பெரிய மார்க்கெட் மணிக்கூண்டுக்கு அருகே உள்ள இரும்புக் கடைக்கு வாங்க!] 

இப்போ “அடை” தயாரிப்புக்கான பொருட்கள் மற்றும் செய்முறைக்குப் போவோமா?

நல்ல கனமான 30 அடைகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் கொடுத்துள்ளேன்: 

1] நல்ல நயம் புழுங்கல் அரிசி*  : ஒரு கிலோ

    [*இட்லி அரிசி போதும்; சாப்பாட்டு அரிசி வேண்டாம் ]     

2] நல்ல நயம் துவரம் பருப்பு    : 625  கிராம்  

3] நல்ல நயம் கடலைப்பருப்பு :  250 கிராம்  

மேலே 1 முதல் 3 வரை கூறியுள்ள பொருட்களை தனித்தனியாகவோ அல்லது சேர்த்து ஒரே பாத்திரத்திலோ நல்ல நீரில் ஊறப்போட்டு மூடி வைக்கவும். குறைந்த பக்ஷம் 3 மணி நேரமாவது ஊறணும். அதிகபக்ஷம்  5 மணி நேரம் கூட ஊறலாம். அதன் பிறகு தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் புதிய தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். பிறகு அந்த நீரையும் வடித்து எடுத்து விடவும். 

4] கட்டிப்பெருங்காயம் : ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவு எடுத்து அதை  ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் நல்ல தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு மூடி வைக்கவும்.  பெருங்காயம் முற்றிலும் கரைய நீண்ட நேரம் ஆகும். அதனால் அதை முன்கூட்டியே சுமார் 12 மணி நேரம் முன்பாகவே ஊறப்போட்டு விடவும். அப்போது தான் அடியில் கட்டியாகத்தங்காமல் கரையக்கூடும்.  

நடுவில் முடிந்தால் பெருங்காயம் கரைந்த ஜலத்தை தனியாக எடுத்து சேமித்து வைத்துக்கொண்டு மீண்டும் தண்ணீர் விட்டு, பிசுக்கு போல அடியில் தேங்கியுள்ள பெருங்காயத்தை கை விரல்களால், பிசைந்து கலக்கி விடவும். 

இந்தக்கட்டிப் பெருங்காய ஜலத்துடன் அரைக்கும் அடைமாவு, ஜம்முனு வாசனையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போதும், அடை வார்க்கும் போதும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைக்கூட சுண்டி இழுத்து அழைத்து வரும் குணமும் மணமும் இந்தக் கட்டிப் பெருங்காய ஜலத்துக்கு மட்டுமே உண்டு.

5] நம் கைவிரல் அளவு நீளமுள்ள நல்ல சிவப்பு மிளகாய் வற்றல் [புதியதாக 40] நாற்பது எண்ணிக்கை நன்கு கழுவி விட்டு காம்புகளை மட்டும் நீக்கி வைத்துக்கொள்ளவும்.  

6] நன்கு கழுவிய நீண்ட பச்சை மிளகாய் [வாசனைக்காக] 5 எண்ணிக்கை
    காம்புகளை நீக்கி வைத்துக்கொள்ளவும்.

7] இஞ்சியின் மேல் தோலை நன்கு சீவி நீக்கிவிட்டு, உள்பக்க சதை பாகத்தை மட்டும் கத்தியால் சீவி வைத்துக்கொள்ளவும. சற்றே பெரிய ஒரு துண்டு இஞ்சி சீவலே போதுமானது.

8] டேபிள் சால்ட் [உப்பு] மொத்தமே ஆறு சிறிய ஸ்பூன் அளவு போதும்.  உப்பு இன்னும் கூட குறைவாகவே எடுத்துக்கொள்ளலாம். மாவு அரைத்து டேஸ்ட் பார்த்து விட்டு தேவைப்பட்டால் பிறகு உபரியாக சேர்த்துக்கொள்ளலாம். அதிகமாக உப்பைப் போட்டுவிட்டால் கரித்துக்கொட்டும். அதை எடுக்க முடியாமல் கஷ்டமாகப்போய்விடும். 

அதனால் உப்பு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. அரிசி+பருப்புகள் மேலே நான் சொன்ன அளவில் மொத்தமாக 2 கிலோ போட்டால் மட்டுமே ஆறு சிறிய ஸ்பூன்கள் உப்புத்தூள் சேர்க்கலாம்.

9] கருவேப்பிலை 2-3 ஆர்க் நன்கு கழுவி இலைகளைத்தனியே பிரித்து வைத்துக்கொள்ளவும்.

10] முருங்கை இலை கிடைத்தால் அவற்றையும் பறித்து கழுவி ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்.  முருங்கை இலையுடன் அடை வார்த்தால் அதன் டேஸ்ட் தனியாக இருக்கும்.  உடம்புக்கும் நல்லது.

11] வெங்காய அடை விரும்புவோர் அடை வார்க்கும் சமயத்தில் மட்டும் அதனை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கியபிறகு நீண்ட நேரம் உபயோகிக்காமல் வைக்கக் கூடாது.அதனால் அவ்வப்போது தேவைப்பட்டால்  நறுக்கி, அடைக்கல்லில்  அடை வார்க்கும் போது,  அதன் மேல் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

12] சிலருக்கு எந்த உணவிலும் தேங்காய் சேர்த்தால் தான் பிடித்தமாக இருக்கக்கூடும். அவர்கள் தேங்காயைத்துருவலாகவோ, அல்லது சிறிய பற்கள் வடிவிலோ வெட்டி தயாராக வைத்துக்கொள்ளலாம். 

13] அடை வார்க்க எண்ணெயோ, நெய்யோ அவரவர் விருப்பம் போல நிச்சயம் வேண்டும்.

14] அடைக்குத்தொட்டுக்கொள்ள வெல்லப்பொடியோ, ஜீனியோ, நெய்யோ  அவரவர் விருப்பம் போல ருசிக்காக சேர்த்துக்கொள்ளலாம். 

சிலர் அடைக்கு அவியல் தான் வேண்டும் என அடம் பிடிப்பார்கள். எனக்கு இந்த அவியல் என்பதே ஏனோ பிடிப்பதில்லை. சிலர் சாம்பார், சட்னி, தோசை மிளகாய்ப்பொடி, மோர்க்குழம்பு என்று ஏதேதோ கூட கேட்பார்கள்.  

காரசாரமான நல்ல தரமான அடைக்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம். சூடான காரசாரமான அடைக்கு, சீவிய மண்டை வெல்லப்பொடி + உருக்கிய நெய் நல்லதொரு காம்பினேஷன் என்பது என் அபிப்ராயம். 

அடைக்கு அரைப்பதற்கான  முன்னேற்பாடுகள்:
===============================================

மின் இணைப்பினைத் துண்டித்து விட்டு, மிக்ஸியை நன்றாக ஈரத்துணியால் புழுதி போகத்துடையுங்கள். அப்படியே மிக்ஸி கனெக்‌ஷன் ஒயரின் வெளிப்பக்கத்தையும்  துடையுங்கள். பிறகு காய்ந்த துணியால் ஒருமுறை துடையுங்கள்.

பெரிய சைஸ் மிக்ஸி ஜார் + ப்ளேடு நன்றாக கழுவிக்கொண்டு வாருங்கள்.

மின்சார சப்ளை அடுத்த அரை மணி நேரத்திற்காவது இருக்குமா என உறுதி செய்து கொள்ளுங்கள்.

அரைத்த மாவை ஊற்றி பத்திரப்படுத்த ஒரு சுத்தமான பாத்திரத்தை நன்கு அலம்பி, மிக்ஸி அருகே  தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

சுத்தமான தண்ணீர் ஒரு பாத்திரத்தில் மிக்ஸி அருகே வைத்துக்கொள்ளுங்கள். ஓரிரு கரண்டிகள் + ஸ்பூன்களும் இருக்கட்டும்.

நீர் வடிகட்டப்பட்ட ஊறிய அரிசி + பருப்புகளையும், பெருங்காயம் ஊறிய ஜலம் போன்ற Sl. Nos: 1 to 9 அனைத்தையும்,   மிக்ஸி அருகில் கொண்டு வந்து வரிசையாக அழகாக வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அடைக்கு அரைத்தல்:
===============================

ஸ்விட்சை ஆஃப் [SWITCH OFF} செய்து விட்டு மிக்ஸியின் PLUG குக்கு மெயின் மின்இணைப்பு இப்போது கொடுக்கவும். மிக்ஸியில் உள்ள கண்ட்ரோல் ஸ்விட்ச் ஆஃப் இல் உள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டு, மெயின் ஸ்விட்ச்சை இப்போது ”ON” செய்துகொள்ளவும்.

முதலில் Sl. Nos. 5 to 9 இல் உள்ள அனைத்துப்பொருட்களையும் [காம்பு நீக்கிய மிளகாய் வற்றல் + காம்பு நீக்கிய பச்சைமிளகாய் + சீவி வைத்துள்ள இஞ்சி + கருவேப்பிலை + உப்புத்தூள்] மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியை மெதுவாக ஓட விடுங்கள்.

நன்றாக சுண்டிய வற்றல் குழம்பு போல ஆகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு நன்றாக ஓட விட்டு, பிறகு அந்தக்குழம்பினை [விழுதினை] தனியாக ஓர் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

ஊறிய புழுங்கல் அரிசி + பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து மிக்ஸி பாத்திரத்தில் பாதி அளவுக்கு மட்டும் போடுங்கள். அத்துடன் மேலே உள்ள குழம்புக்கரைசலில் கொஞ்சம் ஊற்றி, பெருங்காய ஜலத்தையும் சிறிதளவு ஊற்றி, Just ஒரு கரண்டி அளவு நல்ல தண்ணீரும் விட்டு, மிக்ஸியை 2-3 நிமிடங்களுக்கு ஓட விடுங்கள்.   

நடுவே மிக்ஸியை ஆஃப் செய்துவிட்டு,  மிக்ஸி ஜாரைத்திறந்து ஸ்பூன் உதவியால்  கிளறி விடுங்கோ.  மாவு ஓரளவு கெட்டியாகவே இருப்பது நல்லது. அதிகமாக ஜலம் விடக்கூடாது.  அதுபோல மையாக அரைபட வேண்டும் என்ற தேவை இல்லை. கைக்கு நரநரப்பாகவே இருக்கட்டும். அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் ஓரளவுக்கு அரை பட்டுவிட்டால், அந்த விழுதினை தனியாக வைத்துள்ள பாத்திரத்தில் வழித்து ஊற்றிக்கொள்ளவும்.

இதே போல மீண்டும் மீண்டும் அரிசி+பருப்பு கலவை + காரக்குழம்பு கலவை + பெருங்காய ஜலம் இவற்றை, சற்றே ஜலம் விட்டு மிக்ஸி ஜாரில் பாதி அளவுக்குப்போட்டு 2-3 நிமிடங்களுக்கு ஓடவிட்டு, அரைத்த மாவை பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். இது போல ஒரு ஏழெட்டு முறை அதிகம் போனால் 10 முறை ஓட்டினால் ஊற வைத்த அரிசி+பருப்பு + காரக்குழம்பு விழுது + பெருங்காய ஜலம் முதலியன சுத்தமாக முழுவதும் தீர்ந்து, அரைக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு விடும்.

கடைசியாக மிக்ஸி பாத்திரத்தில் ஒட்டியுள்ள மாவை நன்கு வழித்து, ஒரு டம்ளர் ஜலம் விட்டு ஓடவிட்டு, அந்தக்கரைசலை தனியாக பாதுகாத்து வைத்துக்கொள்ளவும். ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கெட்டிமாவில் அதை இப்போது ஊற்ற வேண்டாம்.  

பிறகு அவ்வப்போது கொஞ்சமாக மாவை எடுத்து அடை வார்க்கும் போது அந்த கெட்டி மாவை சற்றே நீர்க்க வைக்க இந்தக்கடைசியாக அரைத்துவைத்த கரைசலை பயன் படுத்திக்கொள்ளலாம்.

காலியான மிக்ஸி ஜார் + மற்ற காலியான பாத்திரங்களை தண்ணீர் விட்டு ஊறப்போட்டு விட்டால், பிறகு அவற்றை பளபளப்பாகக் கழுவி வைக்க ஈஸியாக இருக்கும்.  அப்படியே விட்டுவிட்டால் ஆங்காங்கே சிந்தியுள்ள மாவினால் சுண்ணாம்புப்பட்டை அடித்தது போல அசிங்கமாக இருக்கும். பிறகு அவற்றைத் தேய்த்து பளபளப்பாக்குவதும் கஷ்டமாக இருக்கும்.


மிக்ஸியின் மின் இணைப்பினை துண்டிக்கவும். மிக்ஸி + மிக்ஸியின் இணைப்பு ஒயரின் மேல் சிந்திச்சிதறியுள்ள அடைமாவினை நன்றாக ஓர் ஈரத்துணியினால் துடைத்து விடுங்கள். 

அன்புள்ள அறிவுள்ள ஆண்களே! 

உங்களுக்கு இந்த இடத்தில் ஓர் எச்சரிக்கை. மிக்ஸியின் ஜார் + ப்ளேடு, மற்றும் மற்ற காலியான பாத்திரங்களை மட்டுமே தண்ணீர் ஊற்றி ஊறப்போட வேண்டும். 

எக்காரணம் கொண்டும் மிக்ஸியையோ, அதன் இணைப்பு ஒயரையோ தண்ணீர் ஊற்றி ஊறப்போடக்கூடாது.

அதுபோல செய்தீர்களானால் பிறகு அதை ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பழுது பார்க்க நேரிடும். அல்லது புது மிக்ஸி ஒன்றை உடனடியாக ஓடிப்போய் வாங்கி வர நேரிடும். 

அதனால் ஜாக்கிரதை!! 

வரும்முன் காத்துக்கொள்ளுங்கள்.



இது போல கஷ்டப்பட்டு அரைத்து வைத்துள்ள மாவை நன்கு கரண்டியால் கிளறி விட்டு, மூடி வைத்து விடவும். ஒரு கால் மணி நேரம் சென்ற பிறகு, சற்றே அரைத்த சூடு சற்றே அடங்கியபிறகு, அடை வார்க்கலாம். 

ஒரு ஸ்பூன் அடை மாவு பேஸ்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்துப் பாருங்கோ, காரசாரமாக ஜோராக பெருங்காய மணத்துடன் இருக்கும். உப்பு போதாவிட்டால் அவ்வப்போது, அடை வார்க்கும் போது கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளலாம்.

உடனடியாக அடை வார்ப்பதற்கு மாவு எவ்வளவு தேவையோ அதை மட்டும் வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, மீதி அதிக அளவு மாவை ஃப்ரிட்ஜில் மூடி வைத்து பாதுகாக்கவும். ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும். 

நாளாக நாளாக அடைமாவு சற்றே புளிக்கும். அந்த புளித்தமாவு அடை மிகவும் டேஸ்ட் ஆக இருக்கும். இந்த புளித்தமாவு அடைக்கு தொட்டுக்கொள்ள,எண்ணெயில் குழைத்த காரசாரமான தோசைமிளகாய்ப்பொடி மிகவும் ஜோராக இருக்கும்.

இப்போது அடை வார்ப்பதற்கான  முன் ஏற்பாடுகள்:
====================================================

காஸ் அடுப்பு பர்னர் முதலியவைகளை  நன்றாகத் துடைக்கவும்.

காஸ் சிலிண்டரில் காஸ் இருக்குமா என உறுதி செய்து கொள்ளவும்.

அடைக்கல்லை நன்றாக தேய்த்து அலம்பித் துடைத்து விட்டு அடுப்பின் மீது வைக்கவும்.

கெட்டியான தோசைத்திருப்பி, கிடுக்கி, எண்ணெய் அல்லது நெய் முதலியவற்றை சமையல் மேடையின் அருகே வைத்துக்கொள்ளவும்.

மேலே சொன்ன Sl. Nos. 10 + 11 + 12 அதாவது நன்கு கழுவி ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகள் + நறுக்கிய வெங்காயத்தூள்கள் + தேங்காய்த்துருவல் அல்லது தேங்காய் பற்கள் முதலியனவற்றில் அவரவர் விருப்பம்போல வார்க்க வேண்டிய அடையில் தூவி அர்ச்சிக்க தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். இந்த அர்ச்சனை ஒன்றும் அவசியமான தேவை அல்ல. விரும்புவோர் மட்டும், அவரவர்கள் விருப்பம் + வேண்டுதல்படி செய்தால் போதும். இவை [Sl. Nos: 10 to 12] ஏதும் இல்லாமலேயேகூட அடை சூப்பராகத்தான்  இருக்கும்.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

ஆண்களுக்கான ஸ்பெஷல் எச்சரிக்கை:
=======================================

சட்டை பனியன் ஏதும் அணியாமல் வெறும் தொந்தியுடன், தயவுசெய்து அடை வார்க்கச் செல்லாதீர்கள். இதில் எனக்கு ஏற்பட்டதோர் அனுபவத்தை நகைச்சுவையாக ஏற்கனவே சொல்லியுள்ளேன். 

பதிவின் தலைப்பு: ”உணவே வா .... உயிரே போ”

இணைப்பு: http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html    

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

காஸ் அடுப்பை பெரிதாகப்பற்ற விடுங்கள். ஓர் ஐந்து நிமிடங்கள் அடைக்கல் நன்றாக சூடேறட்டும்

லேசாக அடைக்கல் மீது தண்ணீரைத் தெளித்தால் சொர்ரென்று ஓர் சப்தம் வர வேண்டும். அந்த நாம் தெளித்த நீர் உடனே ஆவியாகிப்போக வேண்டும். அப்போது தான் அடைக்கல் நன்கு சூடாகியுள்ளது என்று அர்த்தம்.  

இப்போது முதல் அடை வார்ப்பதற்கு முன்பு மட்டும், ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்யை காலியான சூடான அடைக்கல்லில் ஊற்றி தோசைத்திருப்பியால் நன்கு பரவலாகத் தேய்த்து விடவும்.  அப்போது தான் எண்ணெய்ப்பசை ஏற்படும். அப்போது தான்  அடி ஒட்டாமல் முதல் அடையை அடைக்கல்லிலிருந்து எடுக்க வரும்.

கெட்டியாக உள்ள அடைமாவில் கொஞ்சூண்டு தண்ணீர் கலந்து கரண்டியால் கலக்கிக்கொள்ளவும். ஏற்கனவே மிக்ஸியில் கடைசியாக ஓடவிட்டு, நாம் எடுத்து வைத்துள்ள காரசார கரைசலையும் தண்ணீருக்கு பதில் இப்போது கலந்து கொள்ளலாம். 

அடைக்கல்லில் நாம் ஊற்றும்  மாவு சற்றே இலகுவாக இருக்க வேண்டும். அது தான் முக்கியம். ஒரேயடியாக ஓடஓட தோசைமாவு போலவும் இருக்கக்கூடாது.

சூடான அந்த அடைக்கல்லில் அடை மாவை அழகாகக் கரண்டியால் ஊற்றி வட்டமாக தேய்த்து விட்டு கோலம் போடுங்கள். கெட்டியாக 2 அல்லது 3 கரண்டி அடை மாவை ஊற்றினால் போதும். அந்த வட்டத்தின் நடுவே அழகாக தொப்புள் போல ஒரு கீறல் [ஓட்டை] தோசை திருப்பியின் விளிம்பினால் கொடுக்க வேண்டும். 

உடனே 2-3 ஸ்பூன் எண்ணெயோ அல்லது நெய்யோ, சுற்றிலும் பிரதக்ஷணமாக ஊற்ற வேண்டும். நடுவில் நாம் போட்டுள்ள ஓட்டையிலும் ஊற்ற வேண்டும். சொர்ரென்ற சப்தத்துடன் அடை ஆனந்தமாக வேக ஆரம்பிக்கும். தேவைப்பட்டால் அவ்வப்போது அடுப்பை ’சிம்ரன்’ இல் வைக்கலாம். [அதாவது அடுப்பை சிம்மில் ரன் செய்வதே “சிம்ரனில்” எனக்கூறப்பட்டுளளது]

இப்போது முருங்கை இலையையோ அல்லது வெங்காயத்தூள்களையோ அல்லது தேங்காய் துருவலையோ தேங்காய் பற்களையோ அடைக்கல்லில் உள்ள வட்டவடிவ அடைமாவின் மீது அர்ச்சிக்க விரும்புவோர் அர்ச்சிக்கலாம்.

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அடையின் அடிப்பகுதி நல்ல சூடாகி இருக்கும். இப்போது தோசைத்திருப்பியால் அடையை சுற்றிலும் லேசாக நெம்பிவிட வேண்டும். பிறகு தோசைத்திருப்பியை அடையின் ஏதாவது ஒரு பகுதியில் நடு ஓட்டை வரை ஒரே சொருகாகச் சொருகி, அப்படியே எடுத்து குப்புறக் கவிழ்த்துப்போட வேண்டும்.  

அடுப்பை சிம்ரனில் வைத்து, நம் இடது கையில் கிடுக்கியால் அடைக்கல்லை நன்கு கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, வலது கையில் தோசைத்திருப்பியை வைத்துக்கொண்டு கவனமாகச் செய்ய வேண்டிய வேலை இது.  அதாவது இந்த அடையை குப்புற படுக்கப்போடும் வேலை. 

இதில் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கவனம் சிதறினால் சூடான அந்த அடைக்கல் நம் கையைச்சுட்டு விடும். அடைக்கல்லே நழுவி நம் கால் விரல்களில் விழுந்து விடக்கூடிய அபாயமும் உண்டு. அதிக எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருந்தால் நம் கைகள் மீதும், ஆடை அணியாத நம் வயிற்றுப்பகுதியிலும் அது சுடச்சுட தெளித்து விடவும் கூடும்.


திருப்பிப்போட்ட அடையைச்சுற்றிலும் + நடுவே உள்ள ஓட்டையிலும் கொஞ்சமாக எண்ணெயோ அல்லது நெய்யோ [ஒரு ஸ்பூன் அளவு மட்டும்]  ஊற்றவும்.

இப்போது சிம்ரனிலேயே அடையின் மறுபக்கமும் ஓரிரு நிமிடங்களில் நன்றாக பதமாக வெந்து போய் விடும்.  அதிகம் போனால் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. அதை அப்படியே தோசைத்திருப்பியால் அலாக்காத் தூக்கி அருகே வைத்திருக்கும் ஒரு தட்டில் போட்டு விட்டு, அடுத்த அடைக்கு அடைக்கல்லில் மாவு ஊற்றி வட்டவடிவமாக்கி, ந்டுவில் துளை இட்டு, வழக்கப்படி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விட வேண்டும்.

முதலில் வார்க்கப்பட்ட அடையில் ஒரு துண்டு எடுத்து வாயில் புட்டுப் போட்டுக்கொண்டால், நன்றாக வெந்து விட்டதா? காரசாரம், உப்பு உரைப்பு போன்றவை சரியாக உள்ளதா? எனத் தெரியவரும். உப்பு குறைவாக இருந்தால் மேலும் சில சிட்டிகைகள், அடைமாவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

அவ்வளவு தாங்க! இதுபோல அடிக்கடி பர்னரை சின்னதாகவும் பெரிதாகவும் எரியவிட்டு, எவ்வளவு அடைகள் தேவையோ அவ்வளவு அடைகள் ஒருவர் வார்த்து வார்த்துப்போடப்போட மற்றவர்கள், எடுத்துப் போய் சூடாக சாப்பிட்டு மகிழலாம். 

கடைசியாக வார்க்கும் அடையை குப்புறப்படுக்கப்போடும் முன்பே காஸ் அடுப்பை சுத்தமாக அணைத்து விடலாம்.  அடைக்கல்லில் உள்ள சூட்டிலேயே அந்த அடை வெந்து போகும். இதனால் எரிபொருள் கொஞ்சம் மிச்சமாகும். 

குளிர் காலத்தில் இந்த அடையை சூடாக சாப்பிட்டால், குளிருக்கு இதமாக இருக்கும். 

இந்த சமையல் குறிப்பு பேச்சுலர்களுக்காக மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஆண்களே கூட மாதம் ஒருமுறையாவது இது போலச்செய்து, தன் மனைவிக்கு ஓய்வு கொடுத்து அசத்தலாம். 

அலுவலகம் போய் சோர்ந்து போய் வரும் தன் மனைவிக்கு கணவர் இதுபோல செய்து கொடுத்து ஆச்சர்யப்படுத்தலாம்.  

தன் கணவர் தனக்காக அன்பாகச் செய்துகொடுத்த  அடையைச் சாப்பிடும் மனைவி அடைக்கு பதிலாக வைர அட்டிகையே கிடைத்தது போல மகிழ்ச்சியும் கொள்ளலாம். 

கணவன் தன் மனைவிமேல் கொண்ட அன்பை வெளிக்காட்ட இதெல்லாம் ஓர் உபாயம் தானே !  நீங்களும் செய்வீர்கள் தானே!!



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்






பின் குறிப்பு [1]: 

2-3 நாட்கள் தொடர்ச்சியாக அடையையே சாப்பிட்டால் அதுவும் கொஞ்சம் அலுத்துப்போகும் அல்லவா! 

அப்போது அதே அடை மாவில் கொஞ்சம் வெங்காயம் கலந்து, கொதிக்கும் எண்ணெயில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிப்போட்டுப் பாருங்கள். 

பக்கோடா போல வரும். அதன் பெயர் ”கு ணு க் கு” என்பதாகும்.  வெங்காய மசால் வடை போல சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். அதே சமயம் சாப்பிட வாய்க்கு மிகவும் மிருதுவாக இருக்கும்,





மழைகாலத்தில் இந்த குணுக்கு போட்டு சூடாகச் சாப்பிட்டுப்பார்க்க வேண்டும்.  சொர்க்க லோகத்திற்கே சென்று ஆனந்தமாக மிதப்பது போல ருசியோ ருசியாக இருக்கும்.  எங்க அம்மா இருந்தவரை அடிக்கடி எனக்கு இதை செய்து தந்துள்ளார்கள். 

[என் அம்மா இப்போது சுவர்க்கத்தில்;அதனால் நான் இப்போது நரகத்தில்]

சூடான சுவையான குணுக்கை நினைத்தாலே வாயில் நீர் சுரக்கிறது எனக்கு. ;)))))

-oooooOooooo-


பின் குறிப்பு [2]: 


அனுபவம் இல்லாமல் முதன் முதலாக இந்த அடையை தயாரிக்க விரும்புவோர், குறைந்த அளவில் மேற்படி பொருட்களை எடுத்துக்கொண்டு. செய்து பார்ப்பதே நல்லது.

நல்ல கனமாக 6 அடைகளோ அல்லது சற்றே மெல்லிசாக 10 அடைகளோ தயாரிக்க மேற்படி பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு எடுத்துக்கொண்டால் போதும்.

அதாவது 

நயம் இட்லி புழுங்கல் அரிசி -  200 கிராம்
நயம் துவரம் பருப்பு                -  125 கிராம்
நயம் கடலைப்பருப்பு              -   50 கிராம்
LG பெருங்காய்ப்பொடி            -  1 சிறிய ஸ்பூன்
சிவப்பு மிளகாய் வற்ற்ல்       -   8 எண்ணிக்கை
பச்சை மிளகாய்                        -   1 அல்லது 2 
தோல் நீக்கிய் இஞ்சி               -   1 சிறிய துண்டு
கருவேப்பிலை                         -   1 ஆர்க் [10-15 இலைகள்]
உப்பு                                             -   1 அல்லது 2 சிறிய ஸ்பூன்

புழுங்கல் அரிசி + பருப்புகள் மட்டும் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு, மற்ற எல்லாப்பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே தடவையாகவோ அல்லது பிரித்து வைத்து இரண்டு தடவையாகவோ அரைத்துக்கொள்ளலாம். அதிகமாக ஓடஓடத் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாகவே அரைக்கணும். ஊறிய அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் அரைபட்டால் போதும். இட்லி தோசை மாவு போல மையாக அரைபட தேவையில்லை. 

ooooooooooooooooo






அடடா ..... என்ன அழகு!

’அடை’யைத் தின்னு பழகு!!


அன்புடன்
VGK

-ooooooooooOoooooooooo-


http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html
என்ற என்னுடைய பதிவுக்கு  
ஓர் பின்னூட்டம் வந்துள்ளது.
அது இதோ இங்கே 




http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/
my-first-event-bachelors-feast.html

நேரம் இருந்தால் வந்து பாருங்கள்




இது யார்? புதிதாக நமக்கு ஓர் அழைப்பு 

விடுத்துள்ளர்களே என்று நான் உட்புகுந்து 

பார்த்தால் ”சமையல் அட்டகாசங்கள்” 

பதிவர் Mrs. JALEELA KAMAL 

அவர்கள் தான் இந்த 

அழைப்பினை விடுத்துள்ளார்கள்.


BACHELORS களுக்குப் பயன்படும் சமையல் 

குறிப்புகள் கேட்டுள்ளார்கள். 





ஏதோ ஒரு போட்டியாம். 



அதற்குப் பரிசும் உண்டாம். 

பதிவை எழுதி நம் வலைத்தளத்தில்

வெளியிட்டுவிட்டு அதில் ஏதேதோ 

இணைப்புகள் கொடுத்து அவர்களுக்குத் 

தகவல் தர வேண்டுமாம்.



LINKY TOOL குறிப்புகளை இணைப்பது


எப்படி?  என்றெல்லாம் ஏதேதோ

சொல்லியிருக்கிறார்கள்.




எனக்கு அதெல்லாம் ஒன்றுமே



சுத்தமாகப் புரியவில்லை.





மேலும் அதையெல்லாம் 



செய்து கொண்டிருந்தால்



இங்கு நம் சூடான அடை 



ஆறிவிடும் அல்லவா! 




அதனால் அதையெல்லாம் அப்படியே



அம்போ என நான் விட்டுவிட்டேன்.


சரி, எனக்கு நேரம் ஆச்சு! 


நான் இப்போ சூடாக அடை சாப்பிடணும்!!


அப்போ வரட்டுமா!!! 



Bye for now ........





oooooOooooo





வெள்ளித்தட்டில் சூடான அடைகளும்

சுவையான வெல்லப்பொடியும் ரெடி.

உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!




அடடா ..... என்ன அழகு!

’அடை’யைத் தின்னு பழகு!!










அன்புடன் 

VGK



  


...

294 கருத்துகள்:

  1. அண்ணா :))) நீங்க சகல கலா வல்லவர்தான்

    அடை மொரு மொறுன்னு ..பசி கிள்ளுது ..


    எங்கம்மா இப்படித்தான் செய்வாங்க ..தேங்காய் சிறு பல்லுகலாக வெட்டி போட்டு
    நல்லெண்ணெய் ஊற்றி ...........

    நீங்க ஜலீலா அவர்களின் இவேண்டில் கலந்துக்க போறீங்களா
    அப்பா நான் விலகி கொள்கிறேன் ..உங்களுக்கு தான் கண்டிப்பா பரிசு
    இவ்ளோ அழகா ஸ்டெப் பை ஸ்டெப் ,குறிப்பு எல்லாமே சூப்பர் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin December 14, 2012 12:23 PM

      வாங்கோ நிர்மலா! வணக்கம்,

      //அண்ணா :))) நீங்க சகல கலா வல்லவர்தான் //

      அடடா, நான் மிகச்சாதாரணமானவன் தான், நிர்மலா.

      //அடை மொறுமொறுன்னு ..பசி கிள்ளுது ..//

      அடையை எடுத்துக்கோங்கோ நிர்மலா. முதல் அடையே [எனக்கு அன்புடன் அதிரஸம் செய்து கொடுத்த] நம் நிர்மலாவுக்குத்தான் என்பதில் சந்தோஷம் ஏற்படுகிறது.

      //எங்கம்மா இப்படித்தான் செய்வாங்க ..தேங்காய் சிறு பல்லுகலாக வெட்டி போட்டு .. நல்லெண்ணெய் ஊற்றி ........... //

      அப்படியாம்மா, சந்தோஷம் நிர்மலா. நான் இப்போது அம்மாவை நினைவு படுத்திட்டேனா! ஸாரிம்மா.

      தேங்காய் சிறு பல்லாக வெட்டிப்போட்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் அதை ருசிக்க பல் இல்லாத பஞ்சாமிகளின் பாடு கஷ்டமாகிப்போய் விடும். துருவல் என்றால் எல்லோருக்கும் நல்லது, நிர்மலா.

      //நீங்க ஜலீலா அவர்களின் இவேண்டில் கலந்துக்க போறீங்களா ? அப்போ நான் விலகி கொள்கிறேன் .. உங்களுக்கு தான் கண்டிப்பா பரிசு.//

      நீங்க விலக வேண்டாம் நிர்மலா. உங்களுக்கும் நிச்சயமாகப் பரிசு உண்டு.

      //இவ்ளோ அழகா ஸ்டெப் பை ஸ்டெப், குறிப்பு எல்லாமே சூப்பர் .....//

      ரொம்ப சந்தோஷம் நிர்மலா. அன்பான முதல் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  2. அடடா,இப்படி ஒரு அட்டகாசமான குறிப்பை கொடுத்து அசத்திட்டீங்க. பின் குறிப்பின் படி செய்து பார்க்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சார்,அந்த கடைசி படம் பார்த்து இப்பவே அடைக்கு ஊறப் போடுன்னு வயிறு கத்துது.பரிசு நிச்சயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar December 14, 2012 12:29 PM
      //அடடா, இப்படி ஒரு அட்டகாசமான குறிப்பை கொடுத்து அசத்திட்டீங்க. பின் குறிப்பின் படி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சார்,அந்த கடைசி படம் பார்த்து இப்பவே அடைக்கு ஊறப் போடுன்னு வயிறு கத்துது.
      பரிசு நிச்சயம்.//

      அடடா, நீங்களே ஒரு “சமைத்து அசத்தலாம்” அல்லவா!

      உங்களின் அன்பான வருகையும் அசத்தலான கருத்துக்களுமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.

      அன்புடன் VGK

      நீக்கு
  3. அன்பின் வை.கோ - சமையல் கலையில் விற்பன்னர் - நள மகராஜா - நூனுக்கமான சிறு சிறு செய்திகளைக் கூட விட்டு விடாமல் பொறுமையாகக் கூறுவது நன்று. இரசித்துச் சாப்பிடுவது எளிது - இரசித்துச் செய்வது கடினம் - செய்முறை இவ்வளவு விளக்கமாக எழுதுவது மிகவும் கடினம். அருமையாகப் பதிவிட்டமை நன்று. ஆவணப்படுத்துவதில் கெட்டிக் காரர். ஒரு நாள் அடை விருந்து தாருங்களேன் - இதற்காகவே திருச்சி வருகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா)December 14, 2012 2:57 PM
      //அன்பின் வை.கோ - சமையல் கலையில் விற்பன்னர் - நள மகராஜா - நுனுக்கமான சிறு சிறு செய்திகளைக் கூட விட்டு விடாமல் பொறுமையாகக் கூறுவது நன்று. இரசித்துச் சாப்பிடுவது எளிது - இரசித்துச் செய்வது கடினம் - செய்முறை இவ்வளவு விளக்கமாக எழுதுவது மிகவும் கடினம். அருமையாகப் பதிவிட்டமை நன்று. ஆவணப்படுத்துவதில் கெட்டிக் காரர்.//

      அன்பின் சீனா ஐயா, வணக்கம். வாங்கோ, வாங்கோ.
      தங்கள் வருகையும் கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஒரு நாள் அடை விருந்து தாருங்களேன் - இதற்காகவே திருச்சி வருகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      கட்டாயம் வாருங்கள் ஐயா. நானே செய்து தருகிறேன். அப்படியே கற்றுக்கொண்டு போய் உங்கள் வீட்டுக்கார அம்மாவையும் அசத்துங்கள் ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  4. பின் தொடர்வதற்காக இம்மறுமொழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா)December 14, 2012 2:58 PM
      //பின் தொடர்வதற்காக இம்மறுமொழி//

      நீங்கள் போய்!!!!! யாரைப் பின்தொடர்வதாக இருக்கிறீர்கள்?
      வேண்டாம் ஐயா, இது விபரீத ஆசை, இந்த வயதில் நமக்கு இதெல்லாம் வேண்டாம் ஐயா. எனக்கு பயமாக உள்ளது.;)

      VGK

      நீக்கு
  5. ஐயா...அருமையான அடைக்குறிப்பு + இலவச இணைப்பான குணுக்குக் குறிப்பும்.

    பிரமாதமாக இருக்கிறதே...உண்மையாகவே இது நீங்களே எழுதியதுதானா..இல்லை... உங்க ஆத்தில, உங்க சகதர்ம பத்தினி சொல்லி எழுதிதந்தாங்களோ....:)))

    இல்லைய்ய்..அத்துப்படியான சமையல்காரருக்கே அங்கங்கே விடுபட்டு போயிடும் குறிப்பு....:) அதனால் கேட்டேன்..:)
    அருமை, இத்தனை பொறுமையா ரசிச்சு எழுதி செய்து சாப்பிடணும்னு ஆவலை தந்துள்ளீர்கள்.

    மிக மிக சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்!!!

    குணுக்கு தான் செய்து பார்க்க ஆவலைத்தூண்டுகிறது எனக்கு.
    பகிர்வுக்கு மிக்க நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி December 14, 2012 3:42 PM

      வாங்கோ ய்ங் மூன் ! வாங்கோ!! வாங்கோ வணக்கம்.
      எப்படி இருக்கீங்கோ? நலம் தானே!

      நலமில்லாமலா இளய நிலாவில் அதற்குள் நாலாவது பதிவு கொடுத்துள்ளேன் ... என்கிறீர்களா! அதுவும் சரிதான். OK OK. VERY GOOD !

      //ஐயா...அருமையான அடைக்குறிப்பு + இலவச இணைப்பான குணுக்குக் குறிப்பும்.//

      ரொம்பவும் சந்தோஷம்ம்மா !!

      >>>>>> தொடரும் >>>>>>

      நீக்கு
    2. //பிரமாதமாக இருக்கிறதே... உண்மையாகவே இது நீங்களே எழுதியதுதானா.. இல்லை... உங்க ஆத்தில, உங்க சகதர்ம பத்தினி சொல்லி எழுதிதந்தாங்களோ ....:)))//

      இந்த லொள்ளு தான் வேண்டாம் என்கிறேன்.

      என்னால் மட்டுமே இதுபோலெல்லாம் எழுத முடியும்.

      என் சகதர்ம பத்தினியால் சமையல் + அடை முதலியன சூப்பராகச் செய்ய மட்டும் தான் முடியும்.

      அதற்கான செய்முறைகளைக்கூட பொறுமையாகச் சொல்லத்தெரியாதூஊஊஊ. அவங்க ரொம்ப நல்லவங்க.
      செய்பவர்களுக்கு சொல்லத்தெரியாது. சொல்பவர்களுக்கு செய்யத்தெரியாது. இது உங்களுக்குத் தெரியாதூஊஊஊ.

      //இல்லைய்ய்.. அத்துப்படியான சமையல்காரருக்கே அங்கங்கே விடுபட்டு போயிடும் குறிப்பு....:) அதனால் கேட்டேன்..:)//

      எதையாவது சொல்லிவிட்டு, ஏதாவது ஒரு சமாளிப்பு வேறு!

      //அருமை, இத்தனை பொறுமையா ரசிச்சு எழுதி செய்து சாப்பிடணும்னு ஆவலை தந்துள்ளீர்கள்.//

      உடனே செய்து சாப்பிடுங்கோ.

      //மிக மிக சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்!!!//

      மிக்க நன்றி, இளமதி.

      //குணுக்கு தான் செய்து பார்க்க ஆவலைத்தூண்டுகிறது எனக்கு. பகிர்வுக்கு மிக்க நன்றி!!!//

      செய்யும் போது சொல்லுங்கோ, பாஸ்போர்ட் ரெடியா இருக்கு. விசா மட்டும் ஏற்பாடு செய்யுங்கோ. குணுக்கு சாப்பிட மட்டுமே, ஜெர்மனிக்கு வருவேனாக்கும். ;)))))

      அன்புடன் VGK

      நீக்கு
  6. இந்த சமையல் குறிப்பு பேச்சுலர்களுக்காக மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஆண்களே கூட மாதம் ஒருமுறையாவது இது போலச்செய்து, தன் மனைவிக்கு ஓய்வு கொடுத்து அசத்தலாம்.

    அலுவலகம் போய் சோர்ந்து போய் வரும் தன் மனைவிக்கு கணவர் இதுபோல செய்து கொடுத்து ஆச்சர்யப்படுத்தலாம்.

    தன் கணவர் தனக்காக அன்பாகச் செய்துகொடுத்த அடையைச் சாப்பிடும் மனைவி அடைக்கு பதிலாக வைர அட்டிகையே கிடைத்தது போல மகிழ்ச்சியும் கொள்ளலாம்.//

    இது தான் பதிவின் மிக சிறந்த பகுதி.

    எவ்வளவு குறிப்புகள். முதன் முதலில் சமையல் செய்ய போகும் (அடுப்பங்கரை போகும் ஆண் , பெண்ணுக்கு ) ஒருவருக்கு கூட புரியும் படி நல்ல விளக்கமாய் நகைச்சுவையுடன் அருமையான சமையல் குறிப்பு.
    அடை சூடாய் இருக்கும் போதே சாப்பிடுங்கள்.

    நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு December 14, 2012 4:47 PM

      *****இந்த சமையல் குறிப்பு பேச்சுலர்களுக்காக மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஆண்களே கூட மாதம் ஒருமுறையாவது இது போலச்செய்து, தன் மனைவிக்கு ஓய்வு கொடுத்து அசத்தலாம்.

      அலுவலகம் போய் சோர்ந்து போய் வரும் தன் மனைவிக்கு கணவர் இதுபோல செய்து கொடுத்து ஆச்சர்யப்படுத்தலாம்.

      தன் கணவர் தனக்காக அன்பாகச் செய்துகொடுத்த அடையைச் சாப்பிடும் மனைவி அடைக்கு பதிலாக வைர அட்டிகையே கிடைத்தது போல மகிழ்ச்சியும் கொள்ளலாம்.*****

      //இது தான் பதிவின் மிக சிறந்த பகுதி.

      எவ்வளவு குறிப்புகள். முதன் முதலில் சமையல் செய்ய போகும் (அடுப்பங்கரை போகும் ஆண், பெண்ணுக்கு) ஒருவருக்கு கூட புரியும் படி நல்ல விளக்கமாய் நகைச்சுவையுடன் அருமையான சமையல் குறிப்பு.

      அடை சூடாய் இருக்கும் போதே சாப்பிடுங்கள்.

      நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

      வாங்கோ மேடம். தங்களின் அன்பான வருகையும், அழகாகச் சுட்டிக்காட்டியுள்ள இடமும், பாராட்டுக்களும், வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன. நன்றி.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  7. அடை அழகா! உங்கள் உரை நடை அழகா! சொல் அழகா! சுவை அழகா! அடடா! அடையும் குணுக்கும் நினைவில் நின்றன! நானும் விரும்பி சாப்பிட்ட/சாப்பிடும் உணவு வகைகள்தான்! அருமையான அடை விளக்கப் பதிவிற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. December 14, 2012 6:05 PM
      //அடை அழகா! உங்கள் உரை நடை அழகா! சொல் அழகா! சுவை அழகா! அடடா! அடையும் குணுக்கும் நினைவில் நின்றன! நானும் விரும்பி சாப்பிட்ட/சாப்பிடும் உணவு வகைகள்தான்! அருமையான அடை விளக்கப் பதிவிற்கு நன்றி ஐயா!//

      வாருங்கள் நண்பரே!

      அடடா! பின்னூட்டத்தையே அழகாக கவிதை நடையில் எழுதி தாங்கள் ஓர் மிகச்சிறந்த கவிஞர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். மிக்க நன்றி.

      நாளை முதல் தாங்கள் வலைச்சர ஆசிரியர் ஆவது போல ஓர் கனா கண்டேன், இன்று விடியற்காலம்.

      விடியற்காலம் கண்ட கனவு பலிக்கும் என்பார்கள். அது உண்மையா என இன்று இரவே தெரிந்து விடும். அவ்வாறு இருந்தால் என் அன்பான இனிய அட்வான்ஸ் வாழ்த்துகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
    2. http://blogintamil.blogspot.in/2012/12/nks.html

      //முகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |
      SUNDAY, DECEMBER 16, 2012

      N.K.S. ஹாஜா மைதீன் காரஞ்சன்( சேஷ்) என்ற சேஷாத்ரியிடம் பொறுப்பினை ஓப்படைக்கிறார்.//

      ஆஹா, நான் இன்று அதிகாலை கண்ட என் கனவு பலித்து விட்டது. சந்தோஷமாக உள்ளது.

      பாராட்டுக்கள் Mr. E S SESHADRI Sir.

      VGK

      நீக்கு
  8. அடடா..... என்ன அழகு, எத்தனை அழகு எனப் பாடத் தோன்றுகிறது.

    சூடான அடையும் கொஞ்சம் வெல்லமும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் அலாதியான இன்பம் தான்.....

    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் December 14, 2012 7:35 PM
      //அடடா..... என்ன அழகு, எத்தனை அழகு எனப் பாடத் தோன்றுகிறது.

      சூடான அடையும் கொஞ்சம் வெல்லமும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் அலாதியான இன்பம் தான்.....

      போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் ஜி!//

      அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், வெங்கட்ஜி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. middleclassmadhavi December 14, 2012 7:37 PM
      //Very detailed instructions and super photos!
      Sappitta thripti! Thanks.//

      வாங்கோ மேடம், வணக்கம், செளக்யம் தானே?

      அன்பான வருகைக்கும் சாப்பிட்டது போல திருப்தியாக இருப்பதாகச் சொன்ன கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  10. பதில்கள்
    1. middleclassmadhavi December 14, 2012 7:39 PM
      Thanks for the superb presentation! Vetrikku vaazhththukkal.

      மீண்டும் வருகைக்கும், சூப்பர் பிரஸண்டேஷன் என்று சொல்லி வெற்றிக்கு வாழ்த்தியுள்ளதற்கு மிக்க நன்றிகள் மேடம்

      நீக்கு
  11. சார். சமையல்லயும் அசத்தறிங்க. ஒரு பார்சல் அனுப்ப கூடாதா?
    கிச்சன்ல நான் பார்டர் மார்க்தான். அதான் நல்லா சமைக்கறவங்களை பார்த்தா ரொம்ப பாராட்டுவேன்.

    // அடுப்பை சிம்ரனில் வைத்து,// - சமையல் குறிப்பை கூட குறும்பாய்..நகைச்சுவையாய் சொல்லி சுவாரஸ்யமாக படிக்க வைத்து விடுகிறீர்கள்.

    நன்றி சார். உங்க சமையல் குறிப்புக்கு 50 மார்க் சாப்பிட கொடுத்திங்கன்னா மீதி 50 மார்க் தந்துடறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு December 14, 2012 8:53 PM

      வாருங்கள் திருமதி உஷா அன்பரசு மேடம்.

      //சார். சமையல்லயும் அசத்தறிங்க.//

      மிக்க நன்றி மேடம். இது தான் என் முதல் சமையல் பதிவு.

      ஏற்கனவே நான் வெளியிட்டுள்ள “உணவே வா ... உயிரே போ” என்பது என் தாயாரைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும், என் மருமகள்களைபற்றியும், அவர்களின் டேஸ்ட் ஆன சமையல் பற்றியும் நான் எழுதியது.

      //ஒரு பார்சல் அனுப்ப கூடாதா? //

      அனுப்பலாம் தான். [1] உங்கள் விலாசம் தெரியவில்லை
      [2] விலாசம் கண்டுபிடித்து அனுப்புவது ஒன்றும் எனக்குக் கஷ்டமே இல்லை, ரொம்ப ரொம்ப சுலபம் தான் [3] அடை உங்களை அடையும் போது அது ஆறிப்போய்விடுமே என்று தான் யோசிக்கிறேன்.

      //கிச்சன்ல நான் பார்டர் மார்க்தான்.//

      பாஸ் மார்க் வாங்கிட்டாப்போதுங்க! கொஞ்சம் கொஞ்சமாக FULL MARK வாங்கிவிடலாம்.

      பிரபலமான எழுத்தாளராகிய உங்களுக்கு ஒரு வேலையா இருவேலையா?

      குடும்பத்தையும் கவனிக்கணும், மாமியார் போன்ற வயசானவங்களையும், கணவரையும் கவனிக்கணும், ஆபீஸுக்கும் போய் வரணும், சமூக சேவைகளும் செய்யணும், தினமலர் பெண்கள் மலர், பாக்யா போன்ற பத்திரிகைகளிலும் உங்கள் பெயர் அடிக்கடி வரணும், வலைப்பதிவில் வாரம் நான்கு பதிவாவது தரணும், தோழிகள் / விருந்தினர் போன்றவர்களையும் கவனிக்கணும். அடடா, தினம் 24 மணி நேரமே போதாமல் சுறுசுறுப்பாக இருக்கின்றீர்கள். சந்தோஷமாக உள்ளது.

      //அதான் நல்லா சமைக்கறவங்களை பார்த்தா ரொம்ப பாராட்டுவேன்.//

      மேற்படி வேலைகள் தவிர பிற பதிவர்களின் பதிவுகளுக்குச்சென்று அவர்கள் படைப்புகளையும் படித்து விட்டுப் பாராட்டணும். அப்பப்பா ... உங்களைப்பார்த்தா எனக்கு மிகவும் பொறாமையா இருக்குதுங்க.

      //***அடுப்பை சிம்ரனில் வைத்து*** - சமையல் குறிப்பை கூட குறும்பாய்.. நகைச்சுவையாய் சொல்லி சுவாரஸ்யமாக படிக்க வைத்து விடுகிறீர்கள்.//

      அடுப்பை ’சிம்’ மில் வைத்து ’ரன்’ செய்வதை ஒரே வார்த்தையாக சிம்ரனில் என்று சொல்லியிருக்கிறேன். ;)
      சினிமா நடிகை சிம்ரனுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லைங்கோ. யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம், ப்ளீஸ்.

      குறும்புகளை + நகைசுவையை + அனைத்தையும் கூர்ந்து கவனித்துள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //நன்றி சார். உங்க சமையல் குறிப்புக்கு 50 மார்க் சாப்பிட கொடுத்திங்கன்னா மீதி 50 மார்க் தந்துடறேன்.//

      இப்போது கொடுத்துள்ள 50 மார்க்குக்கு என் நன்றிகள்.

      தாங்கள் திருச்சியில் என்னை என்றாவது சந்திக்கும் போது உங்களுக்கு ஸ்பெஷல் அடை வார்த்து சாப்பிடக்கொடுத்து மீதி 50 மார்க்குகளை நான் மறக்காமல் வாங்கிக்கொள்வேன்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  12. முதலில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கோபு சாருக்கு மிக்க நன்றி
    அடை வெல்லம் என்றால் முன்று வேளையும் சாப்பிட கொடுத்தாலும் சாப்பிடுவேன்.

    அடை எனக்கு பிடித்த டிபன் அயிட்டத்தில் அடைக்கு தான் முதலிடம்.
    உங்களை போல் தான் என் அப்பாவுக்கும், கடலை பருப்பு அடை ரொம்ப பிடிக்கும்.அதையும் ஒரு நாள் போஸ்ட் பண்றேன்.

    விளக்கமான பதிவு, மிக அருமை வாழ்த்துக்கள்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal December 14, 2012 9:09 PM

      வாருங்கள் திருமதி ஜலீலா கமால் மேடம். வணக்கம்.

      //முதலில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கோபு சாருக்கு மிக்க நன்றி//

      "சென்னை ப்ளாஸா" என்ற பெயரில் எனக்கு என் பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில், தாங்கள் Special அழைப்புக் கொடுத்திருந்தீங்க. அது கூட வேறு யாரோ என்னவோ என்று தான் முதலில் நான் நினைத்தேன். உட்புகுந்து பார்த்த பிறகு தான் தாங்கள் என்று நான் தெரிந்து கொண்டேன்.

      மிக்க நன்றி, மேடம்.

      //அடை வெல்லம் என்றால் முன்று வேளையும் சாப்பிட கொடுத்தாலும் சாப்பிடுவேன்.//

      அடடா, என்னைப்போலவே நீங்களுமா? ஆச்சர்யம் தான். ;)
      மூன்று வேளையும் என்றால் கஷ்டமாக இருக்கும், மேடம்.

      //எனக்கு பிடித்த டிபன் அயிட்டத்தில் அடைக்கு தான் முதலிடம்.//

      எங்கள் வீட்டிலும் எல்லோருக்குமே அப்படித்தான். மாதம் இரண்டு முறை கட்டாயம் அரைப்போம். 3+3=6 நாட்களாவது அடையுடன் உற்வாடி மகிழ்வோம்.

      //உங்களை போல் தான் என் அப்பாவுக்கும், கடலை பருப்பு அடை ரொம்ப பிடிக்கும்.//

      அப்படியா, சந்தோஷம். கடலைப்பருப்பு 1 பங்கு மட்டும், அதுபோல 2-1/2 பங்கு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு போல நான்கு பங்கு புழுங்கல் அரிசி.

      1 : 2.5 : 4 அவ்வளவு தாங்க அளவு விகிதாசாரம்.

      //அதையும் ஒரு நாள் போஸ்ட் பண்றேன்.//

      ஆஹா, பேஷா போஸ்ட் பண்ணுங்கோ.

      //விளக்கமான பதிவு, மிக அருமை வாழ்த்துக்கள்//

      த்ங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  13. கடைசியாக என் ஈவண்ட் பற்றி குறீப்பிட்டு இருந்தீங்க ஆனால் அதற்கும் கீழ் மெயில் பிச்சர் இருந்ததை கவனிக்கல,
    ஆகையால் முதல் படத்தை இணைத்து விட்டேன். பரவாயில்லை, பிறகு பதிவில் சொல்லும்போது போடுகீறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal December 14, 2012 9:10 PM
      //கடைசியாக என் ஈவண்ட் பற்றி குறீப்பிட்டு இருந்தீங்க.
      ஆனால் அதற்கும் கீழ் மெயில் பிச்சர் இருந்ததை கவனிக்கல; ஆகையால் முதல் படத்தை இணைத்து விட்டேன். பரவாயில்லை, பிறகு பதிவில் சொல்லும்போது போடுகீறேன்.//

      பதிவை எழுத ஆரம்பித்த அன்று என் வீட்டில் ஏதோ ஒரு விருந்தினருக்காக, அவர்களின் வேண்டுகோள்படி, காரம் கொஞ்சம் குறைவாகப்போட்டு அடை செய்தார்கள். அன்றைய படங்களை எடுத்து இணைத்து இந்தப்பதிவை முதலில் எழுத ஆரம்பித்தேன்.

      இந்தப்பதிவை தங்களின் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் மெயிலில் அனுப்பி வைத்த பிறகு, 14.12.2012 நள்ளிரவு வெளியிடுவதாக இருந்தேன். 14th இரவும் என் வீட்டில் வழக்கம்போல காரசாரமான அடை செய்திருந்தார்கள்.

      அதையும் வெல்லப்பொடியுடன் ஓர் புகைப்படம் எடுத்து கடைசியாக பதிவு வெளியிடும் போது சேர்க்க நேர்ந்தது.

      தங்களுக்கு அனுப்பி வைத்த மெயிலில் இல்லாமலும், தங்களிடம் தெரிவிக்காமலும், நான் இதுபோல ஒரு படத்தினை கடைசியில் சேர்த்து விட்டதால் ஏற்படுள்ள சிறிய குழப்பம் தான் மேடம். அதனால் பரவாயில்லை மேடம்.

      தாங்கள் போட்டி நிபந்தனைகளில் சொல்லியுள்ளபடி என் பதிவினை என்னால் இணைக்க முடியாமல் இருந்தும், தாங்களாகவே எனக்காக இணைத்து, போட்டியின் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK


      நீக்கு
  14. அடையைப் பற்றிய ஒவ்வொரு வரியும் அட அட என வியத்தகு வண்ணம் உள்ளது.

    //காலியான மிக்ஸி ஜார் + மற்ற காலியான பாத்திரங்களை தண்ணீர் விட்டு ஊறப்போட்டு விட்டால், பிறகு அவற்றை பளபளப்பாகக் கழுவி வைக்க ஈஸியாக இருக்கும். அப்படியே விட்டுவிட்டால் ஆங்காங்கே சிந்தியுள்ள மாவினால் சுண்ணாம்புப்பட்டை அடித்தது போல அசிங்கமாக இருக்கும். பிறகு அவற்றைத் தேய்த்து பளபளப்பாக்குவதும் கஷ்டமாக இருக்கும்.//

    அடை மொழியுடன் கூடிய வர்ணனை தங்களிடம் அடைக்கலம் ஆகி விட்டது .

    அடைப் புளித்தால் ருசி.உங்கள் எழுத்து புளிக்காமலேயே தனி ருசி.

    மிளகாய் பொடியுடன் கூடிய படம் ஒன்று இணைக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணேஷ் December 14, 2012 10:03 PM

      அன்புள்ள கணேஷ், வாப்பா, செளக்யமா?

      நீண்ட நாட்களுக்குப்பின் உன் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //அடையைப் பற்றிய ஒவ்வொரு வரியும் அட அட என வியத்தகு வண்ணம் உள்ளது.//

      மிகவும் சந்தோஷம் .. கணேஷ்.

      ***காலியான மிக்ஸி ஜார் + மற்ற காலியான பாத்திரங்களை தண்ணீர் விட்டு ஊறப்போட்டு விட்டால், பிறகு அவற்றை பளபளப்பாகக் கழுவி வைக்க ஈஸியாக இருக்கும். அப்படியே விட்டுவிட்டால் ஆங்காங்கே சிந்தியுள்ள மாவினால் சுண்ணாம்புப்பட்டை அடித்தது போல அசிங்கமாக இருக்கும். பிறகு அவற்றைத் தேய்த்து பளபளப்பாக்குவதும் கஷ்டமாக இருக்கும்.***

      //அடை மொழியுடன் கூடிய வர்ணனை தங்களிடம் அடைக்கலம் ஆகி விட்டது.//

      அருமையான கூற்று. என்ன சொல்வதென்றே சொல்லத் தெரியாமல் என் வாயை இப்படி ’அடை’த்து விட்டாயே! ;)

      //அடைப் புளித்தால் ருசி. உங்கள் எழுத்து புளிக்காமலேயே தனி ருசி.//

      புளிச்சமா அடையை சிறிய இரும்பு இலுப்பச்சட்டியில் கூட செய்து தருவார்களே உன் பாட்டியும் என் அம்மாவும். நினைவுள்ளதா கணேஷ்?

      //மிளகாய் பொடியுடன் கூடிய படம் ஒன்று இணைக்கவும்.//

      நம் ஆத்து தோசை மிளகாய்ப்பொடிக்கான செய்முறையை விளக்க வேண்டி நிறைய பேர் விரும்பிக் கேட்டுள்ளார்கள்.
      அப்போது இணைத்து விடுகிறேன், கணேஷ்.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி, கணேஷ்.

      பிரியமுள்ள கோபு மாமா.

      நீக்கு
  15. அன்புள்ள வைகோ ஸார்,
    உங்கள் நளபாகம் - அடை செய்யும் விதம் குறிப்புப் படித்தேன். பண்ணி சாப்பிட்டத் திருப்தி ஏற்பட்டது!

    கனமான அடைக்கல் தேடிக் கொண்டிருந்தேன். அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது திருச்சிக்கு வந்து வாங்கி விடுகிறேன்.

    அளவுகளும், ஒவ்வொன்றையும் தயார் செய்யும் விதமும் (நிறைய நகைச்சுவையுடன்) பக்காவாக எழுதி உள்ளீர்கள்.


    ஒரு சின்ன சந்தேகம்:5௦ கிராம் பெருங்காயம் அதிகம் (எல்ஜி பொடிப் பெருங்காய டப்பாவில் இருப்பது இந்த அளவு) என்று தோன்றுகிறது. 5 என்பது 5௦ ஆகிவிட்டதோ?

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan December 14, 2012 11:07 PM

      அன்புள்ள ரஞ்ஜூ மேடம், வாங்கோ, வணக்கம்.

      //ஒரு சின்ன சந்தேகம்:5௦ கிராம் பெருங்காயம் அதிகம் (எல்ஜி பொடிப் பெருங்காய டப்பாவில் இருப்பது இந்த அளவு) என்று தோன்றுகிறது. 5 என்பது 5௦ ஆகிவிட்டதோ?//

      தாங்கள் கேட்டுள்ள கேள்வியிலேயே சிறு தவறு உள்ளது.

      அந்தக்கேள்வி இப்படி இருக்க வேண்டும்:

      ***ஒரு சின்ன சந்தேகம்: 5௦0 கிராம் பெருங்காயம் அதிகம் (எல்ஜி பொடிப் பெருங்காய டப்பாவில் இருப்பது இந்த அளவு) என்று தோன்றுகிறது. 5 என்பது 5௦0 ஆகிவிட்டதோ?***

      நீங்க திருச்சிக்கு அடைக்கல் வாங்க வரும்போது, திருச்சி தெப்பக்குளம் அருகே, நந்திகோயில் தெருவில் உள்ள, ஆஞ்சநேயர் கோயிலுக்கு எதிர்புறம் சற்றே தள்ளி ’லக்ஷ்மி மளிகை’ என்று ஒரு மளிகைக்கடை உள்ளது.

      அங்கே LG பெருங்காயப்பவுடர் டப்பாவைத்தவிர, கட்டிப்பெருங்காயம் என்று LOOSE ஆக விற்கிறார்கள்.

      மெழுகு போல, ஜவ்வு மிட்டாய் போல, வாசனையாக அது ஜோராக இருக்கும்.

      அதையும் நீங்கள் வாங்கிண்டு போய், கையாலேயே சிறுசிறு உருண்டைகளாக [பவழம் போல] உருட்டி அஞ்சறைப்பெட்டியில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

      புதிதாக வாங்கி வரும் போது, நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் [ஜவ்வு போன்று] இந்தக்கடையில் விற்கும் மெழுகு போன்ற கட்டிப்பெருங்காயம் வரும்.

      இந்தச் சின்னச்சின்ன பவழம் போன்று உருட்டிப்போட்டவை தினப்படி சமையல்/ரஸம் போன்றவைகளுக்கு தாங்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.

      காய்கறி விற்பவர்கள் ஒரு தராசு வைத்திருப்பார்கள் தெரியுமா?

      இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவை நாம் வாங்கும் போது 50 கிராம் 100 கிராம் என நிறுத்துக்கொடுக்க எடைக்கற்கள் இருக்கும் தெரியுமா?

      அதிலும் 50 கிராம் என்ற எடைக்கல் மட்டுமே பித்தளையில் இருக்கும் தெரியுமா? மீதி 100 கிராம் 200 கிராம் எடைக் கற்களெல்லாம் இரும்பில் இருக்கும். இந்த 50 கிராம் எடைக்கல் மட்டுமே பித்தளையில் இருக்கும். பார்த்திருக்கிறீர்களா?

      அந்த பித்தளை 50 கிராம் எடைக்கல் போன்ற கட்டிப்பெருங்காயத்தை முழுவதும் ஊற வைத்து, அந்த ஊறிய ஜலம் முழுவதையுமே, மேற்படி அடைமாவில் கலந்தால் தான் நல்ல வாசனையாக இருக்கும் மேடம்.

      அதுவும் நான் சொன்ன “லக்ஷ்மி மளிகை” யில் மெழுகு போல் உள்ள கட்டிப்பெருங்காயத்தை 50 கிராமாகவே வாங்கி வந்து அப்படியே ஊறப்போட்டு விட்டால் ரொம்பவும் செளகர்யமாக இருக்கும்.

      அரிசி பருப்பு எல்லாம் சேர்த்து சுமார் இரண்டு கிலோ அளவுக்கு நாம் போட்டு கனமான 30 அடைகள் தயாரிக்கும் போது 50 கிராம் [பித்தளை எடைக்கல் போன்ற] அளவு கட்டிப் பெருங்காய ஜலத்தை அதன் தலையில் விட்டால் தான் நல்லா கும்முனு வாசனையாக இருக்கும், என்பது என் அனுபவம்.

      நீங்கள் சொல்லும் வெறும் ஐந்து கிராம் அதுவும் LG பெருங்காய்ப்பவுடர் என்றால் சமுத்திரத்தில் பெருங்காயம் கரைத்தால் போல ஆகிவிடும்.

      நீங்கள் வேண்டுமானால் உங்கள் தேவைக்குத் தகுந்தபடி பெருங்காயத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கோ.
      NO PROBLEM AT ALL.

      நீங்கள் சொல்லும் LG பெருங்காயப்பொடிக்கும், நான் சொல்லும் கட்டிப்பெருங்காய ஜலத்துக்கும் வித்யாசம் உண்டு.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  16. அடடடா! எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க சார். ஸ்டெப் பை ஸ்டெப் பிரமாதம்... சமையலே தெரியாதவங்களும் ஈசியா செய்யலாம்...

    நேற்று தான் எங்கள் வீட்டில் அடை...வெல்லமும் , நெய்யோடு தான்...:)

    இந்த குணுக்கும் நான் செய்வது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி December 14, 2012 11:16 PM
      //அடடடா! எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க சார். ஸ்டெப் பை ஸ்டெப் பிரமாதம்... சமையலே தெரியாதவங்களும் ஈசியா செய்யலாம்...//

      தாங்களே இவ்வாறு சொல்லியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

      //நேற்று தான் எங்கள் வீட்டில் அடை...வெல்லமும் , நெய்யோடு தான்...:)//

      எங்கள் ஆத்தில் 14th அன்று செய்தார்கள்.

      //இந்த குணுக்கும் நான் செய்வது உண்டு.//

      குணுக்கு எவ்வளவு டேஸ்ட் ஆக இருக்கும், மேடம். ;)

      அன்பான வருகை + கருத்து + பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  17. செய்முறை, தொட்டுக்கொள்ளக் கொடுத்திருக்கும் டிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. ஆனால் அரிசி, பருப்பின் அளவு தான் கண்களை உறுத்துகிறது. எங்க புகுந்த வீட்டில் ஒரு வேளைக்குப் பத்துப் பேர் சாப்பிடும் நாளில் கூட அடைக்கு இத்தனை ஊறப் போட்டதில்லை. :))))))) ரஞ்சனி பெருங்காயத்தை மட்டும் கேட்டிருக்கார்.

    //ஒரு சின்ன சந்தேகம்:5௦ கிராம் பெருங்காயம் அதிகம் (எல்ஜி பொடிப் பெருங்காய டப்பாவில் இருப்பது இந்த அளவு) என்று தோன்றுகிறது. 5 என்பது 5௦ ஆகிவிட்டதோ?//

    ஹிஹிஹி, ரஞ்சனி, பெருங்காயம் 50 கிராம் எனத் தான் போட்டிருக்கார். அரிசி எவ்வளவுனு பாருங்க, ஒரு கிலோ. ஒரு கிலோ அரிசியில் அரைக் கிலோவுக்கும் மேல் து.ப. கால்கிலோ க.பருப்புப் போட்டு அடை பண்ணினால் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் வரும். அதோடு 50 கிராம் பெருங்காயம் ஒரு மாசத்துக்கும் மேல் முழுச் சமையலுக்கும் வரக் கூடிய ஒன்று. அடைக்குப் போடச் சும்மா ஒரு சின்ன அரை இஞ்ச் துண்டு இருந்தால் போதுமானது. 200கிராம் புழுங்கலரிசி, 200 கிராம் பச்சரிசி, மற்றும் மேல் சாமான்கள் போட்டாலே அந்த மாவு இரண்டு பேர் கொண்ட குடும்பத்துக்கு நான்கு நாட்களும், நான்கு பேருக்கு இரண்டு நாட்களும் வரும். ஆகவே இவ்வளவெல்லாம் போட்டு அரைச்சுட்டுப் புதுசாப் பண்ணறவங்க முழிக்கப் போறாங்க. :))))))

    முதல் முறை வந்துட்டு பதிவிலே குத்தம் சொல்றேன்னு நினைக்க வேண்டாம். முதல்லே செய்து பார்க்கும்போது சாமான்களின் அளவு கொஞ்சமாக இருத்தலே நல்லது. அப்புறமா வேணும்னா கூடப்போட்டுக்கலாம். மற்றபடி நீங்க கொடுத்திருக்கும் சமையல் குறிப்பு அட்டகாசம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam December 14, 2012 11:56 PM

      வாங்கோ மேடம். சந்தோஷம்.
      வணக்கம். வருகைக்கு நன்றிகள்.

      //செய்முறை, தொட்டுக்கொள்ளக் கொடுத்திருக்கும் டிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு.//

      மிக்க நன்றி, மேடம்.

      //ஆனால் அரிசி, பருப்பின் அளவு தான் கண்களை உறுத்துகிறது. எங்க புகுந்த வீட்டில் ஒரு வேளைக்குப் பத்துப் பேர் சாப்பிடும் நாளில் கூட அடைக்கு இத்தனை ஊறப் போட்டதில்லை. :)))))))//

      எங்கள் ஆத்தில் [வீட்டில்] தற்சமயம் மொத்தம் நான்கு பெரிய டிக்கெட்கள் [நபர்கள்] உள்ளோம்.

      வெளியூரில் உள்ள பிள்ளைகள், மருமகள்கள், பேரன்கள், பேத்தி அனைவரும் கூடும் போது எட்டு முழு டிக்கெட்களும், இரண்டு அரை டிக்கெட்களும், ஒரு கால் டிக்கெட்டுமாக ஆக மொத்தம் பதினோரு பேர்கள் ஆகும்.

      அடை என்றால் எங்கள் வீட்டில் எல்லோருக்குமே குஷி தான்.

      மேலும் அடை வார்த்தால் எல்லோரும் பலகாரம் போல அடை மட்டுமே சாப்பிடுவார்கள். சாதம் காய்கறி முதலியன அன்று செலவாகாது.

      அதனால் அனைவரும் 8+2+1=11 Tickets கூடும் அதுபோன்ற சந்தர்ப்பங்களில், நான் சொன்னபடி கனமான முப்பது அடைகளுக்கு திட்டமிட்டால், தினமும் ஒரு வேளை வீதம் இரண்டே நாட்களில் மாவு காலியாகிவிடும்.

      நாங்கள் நான்கு பேர்கள் மட்டும் இருக்கும் போது, அதே மாவு தினமும் ஒரு வேளை வீதம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே வரும்.

      தொடரும்>>>>>>>>

      நீக்கு
    2. VGK to Mrs. Geetha Sambasivam Madam .....

      //50 கிராம் பெருங்காயம்//

      ஏற்கனவே திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன்.

      துல்லியமாக 50 கிராம் எடை இல்லாவிட்டாலும்,
      50 கிராம் எடைக்கல் அளவு உள்ள ஒரு பெரிய கட்டிப் பெருங்காயத்தை கட்டாயமாக ஊற வைத்து, அது முழுவதும் கரைந்த கெட்டியான ஜலத்தை பயன்படுத்தினால் தான், அடை மாவு நல்ல மணமாக இருக்கும் என்பது என் அனுபவம்.

      //200 கிராம் புழுங்கலரிசி, 200 கிராம் பச்சரிசி, மற்றும் மேல் சாமான்கள் போட்டாலே//

      எங்கள் வீட்டில் அடைக்கு பச்சரிசி போடுவது கிடையாது.
      புழுங்கல் அரிசி + துவரம்பருப்பு + கடலைப்பருப்பு மட்டுமே.
      பச்சரிசி போட்டால் அடை விரைத்துக்கொள்ளும்.

      கார்த்திகை தீபத்தன்று ஒரு நாள் மட்டும், பச்சரிசி மட்டும் போட்டு, ஓரிரு அடைகள் அதுவும் ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வதற்காக மட்டும் செய்வதுண்டு. மற்றபடி அடைக்கு அரைக்க பச்சரிசி பக்கமே போகமாட்டோம்.

      //ஆகவே இவ்வளவெல்லாம் போட்டு அரைச்சுட்டுப் புதுசாப் பண்ணறவங்க முழிக்கப் போறாங்க. :)))))) //

      அவரவர் தேவைக்கும் ருசிக்கும் தகுந்தபடி அளவினை கூட்டிக்குறைத்துக்கொள்ள வேண்டியது தான்.

      புதுசாப்பண்ணறவங்க முழிக்க வேண்டாம் என்பதனால் தான்
      பின் குறிப்பு [2]: .... என்பதில் அளவுகளை ஐந்தில் ஒரு பாகமாகக் குறைத்துக்கொடுத்துள்ளேனே!

      தாங்கள் ஒருவேளை அதை கவனிக்கவில்லையோ, என்னவோ!

      தொடரும் >>>>>>>>

      நீக்கு
    3. VGK to Mrs. Geetha Sambasivam Madam ..... [3]

      //முதல் முறை வந்துட்டு பதிவிலே குத்தம் சொல்றேன்னு நினைக்க வேண்டாம்.//

      நான் அதுபோலெல்லாம் நினைக்கக்கூடியவனே அல்ல.

      ஒருபோதும் அதுபோலெல்லாம் நினைக்கவே மாட்டேன்.

      குற்றத்தை சுட்டிக்காட்டுபவர்களை நான் மிகவும் மதிப்பேன்.
      வரவேற்பேன்.

      அது போன்றவர்களால் மட்டுமே, நம் தவறுகளை நாம் திருத்திக்கொள்ள முடியும், நம் எழுத்துக்களை நாம் மேலும் மெருகூட்டிக்கொள்ள முடியும் என மனதார நினைப்பேன்.

      சொல்லப்போனால் தங்களின் முதல் வருகை எனக்கு அளவிடமுடியாத சந்தோஷத்தையே அளித்துள்ளது.

      //முதல்லே செய்து பார்க்கும்போது சாமான்களின் அளவு கொஞ்சமாக இருத்தலே நல்லது. அப்புறமா வேணும்னா கூடப்போட்டுக்கலாம்.//

      அதையே தான் நான் என் பின்குறிப்பு [2] இல் மிகவும் விளக்கமாக வலியுறுத்திச் சொல்லியுள்ளேன்.

      //மற்றபடி நீங்க கொடுத்திருக்கும் சமையல் குறிப்பு அட்டகாசம்.//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான பல கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      இந்த பதிவு வெளியீடுபற்றி, டேஷ் போர்டில் ஏனோ காட்டப்படவில்லை. இருப்பினும் தாங்கள் எப்படியோ இங்கு வருகை தந்து கருத்துக் கூறியிருப்பது, எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

      நன்றியோ நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  18. பதில்கள்
    1. Geetha Sambasivam December 14, 2012 11:56 PM
      //தொடர//

      தொடர நினைக்கிறீர்களோ ... தாராளமாகத் தொடருங்கோ! ;)

      நீக்கு
  19. நீங்க சொல்வது பால் பெருங்காயம். அதுவும் இங்கே ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது. கோபால ஐயங்கார் கடையில். அது தான் வாங்கறேன். அடைக்கு ஒரு சின்ன உருண்டை போதும். ஒரு கிலோ போட்டால் கூடப் பத்து கிராம் அளவுக்குள் போதுமானது. அதிகம் போனால் கசக்கும். :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam December 14, 2012 11:58 PM
      //நீங்க சொல்வது பால் பெருங்காயம்.//

      இருக்கலாம். அதுபோலவும் சொல்லுவார்கள்.

      //அதுவும் இங்கே ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது. கோபால ஐயங்கார் கடையில். அது தான் வாங்கறேன்.//

      அப்படியா, சந்தோஷம்.

      //அடைக்கு ஒரு சின்ன உருண்டை போதும். ஒரு கிலோ போட்டால் கூடப் பத்து கிராம் அளவுக்குள் போதுமானது. அதிகம் போனால் கசக்கும். :)))))))//

      அரைக்கும் போது அப்படியே கட்டியாகப்போட்டு அரைத்தால் மட்டுமே கசக்கிறது மேடம்.

      பெருங்காயக்கட்டி கரைந்த கெட்டியான பால் போன்ற ஜலத்தினை மட்டும் நாம் ஊற்றுவதால் அதிகம் கசப்பதில்லை.

      எனினும் தாங்கள் சொல்வதுபோல அரிசி+பருப்பு இரண்டு கிலோ என்றால் 10+10=20 கிராம் பெருங்காயக் கட்டியாகவே இருந்துவிட்டுப்போகட்டும்.

      நான் ஊறப் போடச் சொன்னது தராசில் போடும் 50 கிராம் பித்தளை எடைக்கல் போன்ற சைஸுக்கு ஒரு பெருங்காயக்கட்டி என்பது தான்.

      அந்த அளவுப் பெருங்காயக்கட்டியின் எடை 20 கிராமாகவே கூட இருக்கலாம் தான்.

      தங்களின் மீண்டும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றியோ நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  20. Ada! So detailed description! A budding competitor for Meenakshi Ammal? Just a joke! Anyway, 'adai' was my favorite food some years ago - still so, but after my bypass surgery, later followed by an angioplasty, I had to drastically cut my taste buds. For adai to be really tasty, I guess that a copious amount of oil or ghee is required, and that is one of the culprits for the possible onset of heart disease. By the way, in my younger days when my parents were away, I, along with my village friend, tried to make adai, and the result was a cross like something between 'kanji' and "uppuma"! I therefore made a quick retreat and depended on my safe bet "thair sadham"!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. D. ChandramouliDecember 15, 2012 1:21 AM
      //Ada! So detailed description! A budding competitor for Meenakshi Ammal? Just a joke!//

      ;))))) மிக்க நன்றி, சார்.

      //Anyway, 'adai' was my favorite food some years ago - still so, but after my bypass surgery, later followed by an angioplasty, I had to drastically cut my taste buds. For adai to be really tasty, I guess that a copious amount of oil or ghee is required, and that is one of the culprits for the possible onset of heart disease.//

      ஆமாம் சார். அடை என்பது ஓரளவு தாராளமாக எண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றித்தான் செய்ய வேண்டியுள்ளது. வயதாக வயதாக நாம் ஆகாரத்திலும், இந்த எண்ணெய்ப்பதார்த்தங்களிலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நிறைய கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளன. SUNDROP என்ற எண்ணெய் தான் நாங்கள் எல்லாவற்றிற்கும் உபயோகப்படுத்தி வருகிறோம். மற்ற எண்ணெய்களில் செய்யப்பட்ட பஜ்ஜி முதலியவற்றை ஓர் ஆசையில் வெளியில் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டாலும் அவை தொண்டையை ஏதோ செய்ய ஆரம்பித்து விடுகின்றது. தாங்கள் சொல்வது மிகவும் நியாயமே. பைபாஸ் சர்ஜரி நடந்துள்ளதால் அடை போன்ற HARD ITEMS தவிர்ப்பதே நல்லது, சார். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கோ சார்.

      //By the way, in my younger days when my parents were away, I, along with my village friend, tried to make adai, and the result was a cross like something between 'kanji' and "uppuma"!//

      அடடா, தங்களின் சிறு வயதில், பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தாங்கள் அடை செய்யப்போய் அது அடையாக அமையாமல், கஞ்சிக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்று போல ஆகிவிட்டதாகச் சொல்லியுள்ளீர்கள். நல்ல நகைச்சுவை தான்.

      கிட்டத்தட்ட ’மோர்க்கிளி’ போல இருந்திருக்குமோ?
      இந்த மோர்க்கிளி என்பதை சூப்பராகச் செய்தால் அதுவும் தேவாமிர்தமாக இருக்கும். தனிப்பதிவே கூட போடலாம் எனத்தோன்றுகிறது. அதை வக்கணையாகச் செய்தால் சூப்பராக இருக்குமே சார். நிச்சயமாக அதுபற்றியும் அதன் சுவை பற்றியும் உங்களுக்குக் கட்டாயமாகத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

      //I therefore made a quick retreat and depended on my safe bet "thair sadham"!//

      ஆஹா! தயிர் சாதம் “தச்சி மம்மு” சார். அது தான் எல்லோருக்கும் எல்லா நேரத்திற்கும் ஏற்றது. வயிற்றுக்கும் நல்லது.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  21. வை கோபாலக்ருஷ்ணன் சார்
    அடடா போட வைக்கும் அடை சமையல் குறிப்பு பிரமாதம்.
    ஆனால் இப்ப எல்லாம் பாட்டி, அம்மா வார்த்துப் போட்ட மாதிரி அடை சாப்பிட முடியறதில்ல. அதனால நான் கொஞ்சம் தண்ணி சேர்த்து அடை தோசையாக்கிடறேன்.
    அப்புறம் தொட்டுக்க இன்னொரு ஐட்டம், கெட்டி வெண்ணை.

    ஸ்ரீரங்கத்திலிருந்து நல்ல பெரிய தோசைக்கல் வாங்கி வைத்திருக்கிறேன். மொறு, மொறு மசால்தோசை, அடை எல்லாம் அதில்தான்.

    நீங்க சொல்வது போல் ஆத்துக்காரர் அடை வார்த்துப்போட்டால் ஆஹா நினைக்கவே சூப்பர்தான். என்ன இருந்தாலும் நாங்களே செஞ்சு சாப்பிடும்போது என்னிக்காவது யாராவது செய்து கொடுத்தால் சூப்பரோ சூப்பர்தான்.

    தொடரட்டும் உங்கள் நளபாகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI December 15, 2012 2:22 AM

      வாங்கோ Mrs JAYANTHI RAMANI Madam. வணக்கம்.

      //வை கோபாலகிருஷ்ணன் சார்
      அடடா போட வைக்கும் அடை சமையல் குறிப்பு பிரமாதம்.//

      ரொம்ப ரொம்ப சந்தோஷம் மேடம்.

      //ஆனால் இப்ப எல்லாம் பாட்டி, அம்மா வார்த்துப் போட்ட மாதிரி அடை சாப்பிட முடியறதில்ல.//

      ஆமாம். அவர்கள் கைப்பக்குவமெல்லாம் தனிதான்.

      //அதனால நான் கொஞ்சம் தண்ணி சேர்த்து அடை தோசையாக்கிடறேன்.//

      அதனால் பரவாயில்லை. கனமான பட்டுப் புடவைகளுக்கு பதில், இப்போதெல்லாம் மெல்லிசாக உடம்போடு ஒட்டியதாக
      சில்க் காட்டன் என்றெல்லாம் புடவைகள் வந்து விட்டனவே! அதே போலத்தான் இந்த உங்களின் “அடதோசை”யும்.

      //அப்புறம் தொட்டுக்க இன்னொரு ஐட்டம், கெட்டி வெண்ணை.//

      சூடான அடையில் கெட்டி வெண்ணெயைப் போட்டால் அப்படியே உருகிப்போய் வெண்ணெய் நெய்யாகி விடுமோ?
      நல்ல பொருத்தமான ஐட்டம் ஆகத்தான் இருக்கக்கூடும். தகவலுக்கு நன்றி.

      //ஸ்ரீரங்கத்திலிருந்து நல்ல பெரிய தோசைக்கல் வாங்கி வைத்திருக்கிறேன். மொறு, மொறு மசால்தோசை, அடை எல்லாம் அதில்தான்.//

      அடடா, சொல்லும்போதே ஜோராக உள்ளது. இப்போதே மசால் தோசை சாப்பிடணும் போல ஆசை ஏற்படுகிறது.

      //நீங்க சொல்வது போல் ஆத்துக்காரர் அடை வார்த்துப்போட்டால் ஆஹா நினைக்கவே சூப்பர்தான்.//

      கற்பனை செய்து நினைத்தாவது மகிழுங்கோ. அதுவே சூப்பராகத்தான் இருக்கும்.

      //என்ன இருந்தாலும் நாங்களே செஞ்சு சாப்பிடும்போது என்னிக்காவது யாராவது செய்து கொடுத்தால் சூப்பரோ சூப்பர்தான்.//

      வாஸ்தவம் தான். தினமும் நாமே சமைத்து நாமே சாப்பிடுவதும் என்பதும் மிகவும் கஷ்டமாகத்தான் - அலுப்பாகத்தான் இருக்கும். உட்கார்ந்து சாப்பிடப்பிடிக்காமல் போகும். ஏதோ நின்றவாகில் பிரட்டிப் போட்டுக்கொள்வோம். எல்லவற்றையும் கொஞ்சமாக மாதிரி பார்ப்போம். அத்தோடு சரி. பெண்கள்பாடு மிகவும் சிரமம் தான்.

      //தொடரட்டும் உங்கள் நளபாகம்//

      ஆஹா, சமையல் சம்பந்தமாக இதுவே என் முதல் பதிவு.

      இந்த அடை என்பதை மட்டும் எப்போதாவது நானே ஊற வைத்து, மாவாக அரைத்துக் கொடுப்பதும் உண்டு தான்.

      அதுபோல தினமும் காய்கறிகள் வாங்கி வருவதும் அவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கித்தருவதும் என் வேலையாக வைத்துக்கொண்டுள்ளேன்.

      ஏதோ நம் வீட்டுப்பெண்களுக்கு நம்மால் ஆன ஒரு சின்ன உதவி தானே.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  22. அச்சச்சோ.. நோஓஓஓஓஒ இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்.. தீக்குளிப்பேன்ன்:)).. ஜல் அக்கா வெளில வாங்கோ.. எதுக்கு கோபு அண்ணனையும் அழைச்சீங்க:))).. இப்போ எனக்கு பரிசு கிடைக்காமல் போகப்போகுதே:))))...

    ஒரு குறிப்பை தொண்ணூறு வரியில சொல்லி.. விளங்கோ விளங்கென விளங்கப் படுத்தி.... பரிசைத்தட்டிச் செல்லப்போகிறாரே:))..

    இது ஆரம்பம்தான்.. இன்னும் இருக்கு சொல்ல.. பின்பு வாறேன்ன் இப்போ ..நோ ரைம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira December 15, 2012 3:39 AM

      அன்புள்ள அதிரா, வாங்கோ .. வாங்கோ, வணக்கம்.

      //அச்சச்சோ.. நோஓஓஓஓஒ இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்.. தீக்குளிப்பேன்ன்:))..//

      அமைதி அதிரா! அமைதியாய் இருங்கோ ப்ளீஸ். இதுக்கெல்லாம் தீக்குளிப்பாங்களா?

      வாங்கோ ...... நான் கொடுக்கும் அடையை முதலில் சாப்பிடுங்கோ! மொறுமொறுன்னு ருசியா இருக்கான்னு சொல்லுங்கோ.

      //ஜல் அக்கா வெளில வாங்கோ.. எதுக்கு கோபு அண்ணனையும் அழைச்சீங்க:)))..//

      அது யாரு ஜல் அக்கா? புய்சுபுய்சாப்பேரு வைக்கிறீங்களே, அதிரா. திருமதி ஜலீலா கமால் மேடமா? அவங்களிடம் கோபப்படாதீங்கோ. அவங்க உங்க கோபு அண்ணனை மட்டும் அழைக்கலை. எல்லோரையுமே அழைச்சிருக்காங்கோ. இதுவரை ஒரு 200 பேர்கள் ஏதேதோ பதிவுகள் கொடுத்து அசத்திருக்காங்கோ.

      // இப்போ எனக்கு பரிசு கிடைக்காமல் போகப்போகுதே:))))...//

      அப்படியெல்லாம் நெகடிவ் ஆக நினைக்காதீங்கோ, அதிரா! அப்புறம் உங்க கோபு அண்ணனுக்கு அழுகை அழுகையா வந்துடும். உங்களுக்குத்தான் முதல் பரிசு கட்டாயம் கிடைக்கும்ன்னு எல்லோரும் பேசிக்கிறாங்கோ.

      //ஒரு குறிப்பை தொண்ணூறு வரியில சொல்லி.. விளங்கோ விளங்கென விளங்கப் படுத்தி.... பரிசைத்தட்டிச் செல்லப்போகிறாரே:))..//

      நான் யாருக்குக்கிடைக்கும் பரிசையும் தட்டிச்செல்ல மாட்டேன் அதிரா. அவர்கள் தவறிப்போய் எனக்கு பரிசு கொடுத்தாலும், அதை நான் என் அன்புத்தங்கை அதிராவுக்குக் கொடுத்து விடுவேன். குழந்தை ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரா அடம் செய்து அழுதால் என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாதூஊஊஊஊ.

      //இது ஆரம்பம்தான்.. இன்னும் இருக்கு சொல்ல.. பின்பு வாறேன்ன் இப்போ ..நோ ரைம்:))//

      ஐயோ ஆரம்பமே பெரிய ரம்பமாக இருக்கே ஜாமீஈஈஈஈஈ;)
      இன்னும் வேறு இருக்காமே ஜாமீஈஈஈஈ. இப்போ நோ டைமாமே. மொத்தத்தில் நமக்கு டைம் சரியில்லை! ;(

      அன்புடன்
      கோபு அண்ணன்

      நீக்கு
  23. அஹா ...அடை to குணுக்கு...சான்சே இல்லை...அருமையான சமையல் குறிப்பு ...வயிறு வலிக்கிரதி ...ஆடை சாபிட்டு இல்லை...
    சிரித்து......

    By the way ,Simran எங்கிருந்து நடுவில் வந்தார் ??????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Usha SrikumarDecember 15, 2012 3:58 AM

      வாங்கோ மேடம். வணக்கம், ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

      //ஆஹா ... அடை to குணுக்கு... சான்சே இல்லை... அருமையான சமையல் குறிப்பு ... வயிறு வலிக்கிறது ... அடை சாப்பிட்டு இல்லை... சிரித்து......//

      தங்களின் சிரிப்பொலியை கற்பனை செய்து பார்த்தேன்.

      தாங்கள் செய்து பார்க்காத, பதிவிடாதா சமையல் ஐட்டங்களா? ஏதோ என்னால் கொஞ்சம் உங்களை சிரிக்க வைக்கவாவது முடிந்ததே, அதற்கு மட்டுமே நானும் சற்றே மகிழ்ச்சியடைகிறேன்.

      //By the way , Simran எங்கிருந்து நடுவில் வந்தார் ??????//

      சினிமா சூட்டிங்கிலிருந்து நடுவில் சிம்ரனும் நிச்சயமாக அடை சாப்பிடத்தான் வந்திருப்பார். ;)))))

      அடுப்பை ’சிம்’ மில் வைத்து ’ரன்’ செய்வதை ஒரே வார்த்தையாக சிம்ரனில் என்று சொல்லியிருக்கிறேன். ;)

      சினிமா நடிகை சிம்ரனுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை மேடம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  24. அடை பற்றிய அருமையான பதிவு.
    திரு சுஜாதா அவர்களுக்கு பிடித்தமான பதார்த்தம் "அடை"
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா திரு வை.கோபாலகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rathnavel Natarajan December 15, 2012 5:26 AM
      //அடை பற்றிய அருமையான பதிவு.
      திரு சுஜாதா அவர்களுக்கு பிடித்தமான பதார்த்தம் "அடை"
      எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
      நன்றி ஐயா திரு வை.கோபாலகிருஷ்ணன்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம். அன்பான வருகைக்கும், அனைத்துத்தகவல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  25. அடை சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது !

    அருமையான செயல் முறை விளக்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் December 15, 2012 6:52 AM
      //அடை சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது !

      அருமையான செயல் முறை விளக்கம்..//

      வாங்கோ சார், வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      அன்புடன்,
      வீ.....ஜீ
      vgk

      நீக்கு
  26. அடடா ஒரு குட்டியூண்டு அடைக்கு.. இவ்ளோ பெரிய விளக்கமோ?:).. இதைவிட வேறு எவராலுமே அடைக்கு விளக்கம் சொல்லவே முடியாது:)).. அவ்ளோ அருமையாக சொல்லியிருக்கிறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்... பரிசும் கிடைக்க வாழ்த்துக்கள்:))(நிஜமாத்தான்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira December 15, 2012 7:53 AM
      //அடடா ஒரு குட்டியூண்டு அடைக்கு.. இவ்ளோ பெரிய விளக்கமோ?:).. இதைவிட வேறு எவராலுமே அடைக்கு விளக்கம் சொல்லவே முடியாது:)).. அவ்ளோ அருமையாக சொல்லியிருக்கிறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்... //

      அதிரா, பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      //பரிசும் கிடைக்க வாழ்த்துக்கள்:))(நிஜமாத்தான்:))//

      அதிரா மிகவும் நல்ல பொண்ணு, சமத்தோ சமத்து. கட்டிச்சமத்து [நிஜமாத்தான்;))]

      அன்புடன்
      கோபு அண்ணன்

      நீக்கு
  27. ஒரே கலில் இரணு மாங்காய்.. அடை மட்டுமலல்.. கூடவே குணுக்கும் செய்து காட்டிட்டீங்க... உண்மையில் எனக்கு அடை செயத் தெரியாது.. நம்மவர்களிடையே இது பேமஸ் இல்லை பெரிதாக.. இப்போ சூப்பரா புரிஞ்சுகொண்டேன் எப்படிச் செய்வதென.. இனி செய்யப்போறேன்ன்.. குணுக்கும் செய்வேன்..

    ஆனா எனக்கு உந்த சிம்ரனை அடுப்பில் வைத்ததுதான் பிடிக்கவில்லையாக்கும்:)).. பாவம் அவ என்ன தப்பு பண்ணினா?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ ஜாமீஈஈஈஈ ஒரே ஸ்பெல்லிங்கு மிசுரேக்கூஊஊஊஊ:))

      நீக்கு
    2. athira December 15, 2012 7:58 AM
      //ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் .. அடை மட்டுமலல்.. கூடவே குணுக்கும் செய்து காட்டிட்டீங்க... உண்மையில் எனக்கு அடை செய்யத் தெரியாது.. நம்மவர்களிடையே இது பேமஸ் இல்லை பெரிதாக.. இப்போ சூப்பரா புரிஞ்சுகொண்டேன் எப்படிச் செய்வதென.. இனி செய்யப்போறேன்ன்.. குணுக்கும் செய்வேன்..//

      அடையும் செய்யுங்கோ .. குணுக்கும் செய்யுங்கோ. அதிரா கற்பூரம் போலவாக்கும். சொன்னா கப்புன்னு பிடிச்சுக்குவா.
      சூப்பராப் புரிஞ்சுக்கொண்டதாகச் சொன்னதற்கு சந்தோஷம் அதிரா.

      //ஆனா எனக்கு இந்த சிம்ரனை அடுப்பில் வைத்ததுதான் பிடிக்கவில்லையாக்கும்:))..//

      சிம்ரனை அடுப்பில் வைக்கச்சொல்லவில்லை அதிரா. அடுப்பைத்தான் ’சிம்’மில் வைத்து ’ரன்’ செய்யணும். அதைத்தான் சிம்ரனில் வைத்துன்னு எழுதிப்போட்டேன்.

      //பாவம் அவ என்ன தப்பு பண்ணினா?:)//

      சினிமா நடிகை சிம்ரனை அடுப்பில் வைக்கச்சொன்னதா நினைச்சுட்டீங்களா, அதிரா. அது இல்லை, அது இல்லை.

      இதுபோல மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகிடும் என்று தான் நான் ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களையும் கூட, சோம்பல் படாமல் விளக்கோ விளக்கென்று விளக்கி விடுவது உண்டு.

      நல்ல வேளையாக சினிமா நடிகை சிம்ரன் அதிரா கையில் அகப்படாமல் தப்பித்தார்கள். நானும் விஷயத்தை அதிராவுக்கு இப்போ விளக்கிட்டேன். இனிமேல் நிம்மதியாக நான் இருக்கலாம்.

      அன்புடன்
      கோபு அண்ணன்

      நீக்கு
    3. athira December 15, 2012 9:08 AM
      //ஹையோ ஜாமீஈஈஈஈ ஒரே ஸ்பெல்லிங்கு மிசுரேக்கூஊஊஊஊ:))//

      அதனால் பரவாயில்லை, அதிரா.

      பிரித்தானியா மஹா ராணியாரின் செல்லப்பேத்தியான அதிரா என்ன பேசுகிறார்களோ அதுவே இயற்தமிழ்,
      என்ன எழுதுகிறார்களோ அதுவே இசைத்தமிழ், ஸ்பெல்லிங்கு எது போட்டாலும் எப்படிப்போட்டாலும் அதுவே நாடகத்தமிழ்.

      முத்தமிழ் வித்தகி அதிரடி அதிரா வாழ்க வாழ்கவே.

      தமிழுக்கு அமுதென்று பெயர். அதிரா எழுதும் தமிழுக்கு அய்ய்கோ அய்கு என்று பெயர். ;)))))

      அன்புடன்
      கோபு அண்ணன்

      நீக்கு
  28. புழுங்கல் அரிசி என்பது கைக்குத்தரிசிதானே?, நெல்லை அவித்து பின்பு கோது நீக்கி காயவைத்து எடுக்கும் சோற்றுக்குப் பாவிக்கும் அரிசிதானே? அது ஊறப்போட்டு அரைத்தால்? ரப்பர்போல எல்லோ இருக்கும்? அரைபடுமோ? இதுவரை எதுக்கும் அதனைப் பாவித்ததில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira December 15, 2012 8:01 AM
      //புழுங்கல் அரிசி என்பது கைக்குத்தரிசிதானே?, நெல்லை அவித்து பின்பு கோது நீக்கி காயவைத்து எடுக்கும் சோற்றுக்குப் பாவிக்கும் அரிசிதானே? அது ஊறப்போட்டு அரைத்தால்? ரப்பர்போல எல்லோ இருக்கும்? அரைபடுமோ? இதுவரை எதுக்கும் அதனைப் பாவித்ததில்லை..//

      புழுங்கல் அரிசி = BOILED RICE
      பச்சரிசி = RAW RICE

      நெல் அறுவடைக்குப்பின் நெல்லைக்காயவைத்து அப்படியே ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்தால் உமி தனியாகவும், பச்சரிசி தனியாகவும் வந்துவிடும்.

      அதே நெல்லை அப்படியே பாய்லரில் போட்டு, ஆவியில் வேக வைத்து, புழுக்கி, அதன்பின் அதைக்காயவைத்து, அது நன்றாகக் காய்ந்த பிறகு, அந்த நெல்லை ரைஸ்மில்லில் கொடுத்து அரைத்து வருவது புழுங்கல் அரிசி.

      இந்தப்புழுங்கல் அரிசியில் தரம் பிரித்து சாப்பாட்டு புழுங்கல் அரிசி, பலகாரப்புழுங்கல் அரிசி என விற்கப்படுகின்றன.

      இதில் பலகாரப்புழுங்கல் அரிசி என்பதே இட்லி, தோசை, அடை போன்றவைகளுக்கு, நீரில் ஊற வைத்து மாவாக கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைக்க ஏற்றதாக இருக்கும்.

      கைக்குத்தல் அரிசி என்பது, ரைஸ்மில்லுக்குப்போகாமல், வீட்டிலேயே உரலில் நெல்லைப்போட்டு, கையில் உலக்கையைப் பிடித்து குத்திக்குத்தி, அதன்பின் அதை எடுத்து முறத்தில் போட்டு சலித்து, உமி தனியாக அரிசி தனியாக எடுக்கும் பழையகால முறையாகும்.

      இதற்கு மேல் இதை விளக்க என்னால் முடியாது, அதிரா.

      அன்புடன்
      கோபு அண்ணன்


      நீக்கு
  29. Message from Mrs. ஸாதிகா Madam

    ஸாதிகா has left a new comment on your post "*அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்...":


    அடுப்பை சிம்ரனில் / சார் அடுப்பை சிம்மில்தானே வைக்க முடியும். எப்படி சிம்ரனில் எடுக்க முடியும்?

    சாஆஆஆஆஆஆ

    //அடடா ..... என்ன அழகு!
    ’அடை’யைத் தின்னு பழகு!!//

    சூப்பராக தலைப்பு வைத்து அதைவிட சூப்பராக செய்முறை குறிப்பை சிரிக்க சிரிக்க தந்து விட்டீர்கள். இது வரை யாருமே தர முடியாத மாதிரி வெகு வித்தியாசமாக வெகு அருமையாக...

    ஜலீலாவுடைய போட்டியில் கலந்து கொண்டீர்களானால் கண்டிப்பாக உங்களுக்கு முதல் பரிசு கிடைத்து விடும் கண்டிப்பாக.

    ஆஆ.. அடையைப்பற்றி பேசவே இல்லையே. இந்த அடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    நீங்கள் சொன்ன காம்பினேஷனில் அவசியம் சாப்பிட்டு பார்க்க வேண்டும். அருமையான பகிரவை தந்ததற்கு மிக்க நன்றி.
    இனி அடிக்கடி உங்கள் பதிவை எதிர்பார்க்கலாம்தானே?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ Mrs. ஸாதிகா Madam, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகையும், அழகான விரிவான மனம் திறந்த கருத்துக்களும், பாராட்டுக்களும், வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றன. மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  30. விரிவான செய்முறை விளக்கம். அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமலக்ஷ்மி December 15, 2012 9:36 AM
      //விரிவான செய்முறை விளக்கம். அருமை. நன்றி.//

      வாருங்கள் Mrs. ராமலக்ஷ்மி Madam, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  31. // அடடா ..... என்ன அழகு!’அடை’யைத் தின்னு பழகு!! சமையல் குறிப்பு //
    சமையல் மாஸ்டர் அவதாரம் எடுத்து விட்டீர்கள். நல்ல நகைச்சுவை குறிப்புகளுடன், உங்கள் கருத்துரைப் பெட்டியில் மற்றவர்களின் விதம் விதமான அனுபவங்கள் மற்றும் சமையல் குறிப்புகளையும் படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோDecember 15, 2012 9:48 AM

      வாருங்கள் திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா,
      அன்பான வணக்கங்கள்.

      ***அடடா ..... என்ன அழகு!’அடை’யைத் தின்னு பழகு!! சமையல் குறிப்பு***

      //சமையல் மாஸ்டர் அவதாரம் எடுத்து விட்டீர்கள். நல்ல நகைச்சுவை குறிப்புகளுடன், உங்கள் கருத்துரைப் பெட்டியில் மற்றவர்களின் விதம் விதமான அனுபவங்கள் மற்றும் சமையல் குறிப்புகளையும் படிக்கலாம்.//

      ஆம், ஐயா. குறிப்பாக பெண் பதிவர்கள் நிறைய பேர் வருகை தந்து பாராட்டியுள்ளது மிகவும் வியப்பாகவே உள்ளது. இன்னும் யார் யார் வருகிறார்கள், என்னென்ன சொல்கிறார்கள் என ஆவலுடன், உங்களைப்போலவே நானும் எதிர்பார்க்கிறேன்.

      தங்களின் அன்பான வருகையும், கருத்துக்களும் எனக்கு உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  32. அடை செய்திருக்கின்றேன். ஆனால் இப்படி இதை வாசிக்கும் போது வாய் ஊறியதுபோல் சாப்பிட்ட போது கூட ஊறியது இல்லை . மிளகாய் பெருங்காயம் சேர்த்து செய்தது இல்லை. இது எனக்குப் புதிதாக இருக்கிறது . செய்தால் போச்சு . அது என்ன ஆண்களுக்கு உரிய சமையல் என்று எழுதி இருக்கின்றீர்கள் . நாங்களும் செய்வோம். ஆனால் நீங்கள் பாடம் நடத்திய விதம் கிளிப்பிள்ளைக்கு பாடம் நடத்தியது போல் இருக்கின்றது . சார் நீங்கள் இதிலும் வல்லவரா

    பதிலளிநீக்கு
  33. அடை செய்திருக்கின்றேன். ஆனால் இப்படி இதை வாசிக்கும் போது வாய் ஊறியதுபோல் சாப்பிட்ட போது கூட ஊறியது இல்லை . மிளகாய் பெருங்காயம் சேர்த்து செய்தது இல்லை. இது எனக்குப் புதிதாக இருக்கிறது . செய்தால் போச்சு . அது என்ன ஆண்களுக்கு உரிய சமையல் என்று எழுதி இருக்கின்றீர்கள் . நாங்களும் செய்வோம். ஆனால் நீங்கள் பாடம் நடத்திய விதம் கிளிப்பிள்ளைக்கு பாடம் நடத்தியது போல் இருக்கின்றது . சார் நீங்கள் இதிலும் வல்லவரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரகௌரி December 15, 2012 10:20 AM

      வாருங்கள் Mrs. சந்திரகெளரி Madam, வணக்கம்.

      //அடை செய்திருக்கின்றேன். ஆனால் இப்படி இதை வாசிக்கும் போது வாய் ஊறியதுபோல் சாப்பிட்ட போது கூட ஊறியது இல்லை.//

      அடடா, வாசிக்கும் போதே வாயில் நீர் ஊறுகிறதா! ஊறும் .. ஊறும் .. அதுதான் அடையின் தனிச்சிறப்பே / மகத்துவமே.

      //மிளகாய் பெருங்காயம் சேர்த்து செய்தது இல்லை. இது எனக்குப் புதிதாக இருக்கிறது. செய்தால் போச்சு.//

      மிளகாய் இல்லாமல் அடையா? நோ .. அப்போ நீங்க செய்ததற்குப்பெயர் அடையே அல்ல. அடை என்பது காரசாரமாக மட்டுமே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டல் அதன் பெயர் தோசை என்று தான் கூற முடியும்.

      //அது என்ன ஆண்களுக்கு உரிய சமையல் என்று எழுதி இருக்கின்றீர்கள். நாங்களும் செய்வோம்.//

      பொதுவாக சமையல் செய்யும் பொறுமை ஆண்களுக்கு இருக்காது. பெண்கள் மட்டுமே பொறுமையில் பூமாதேவி போன்றவர்கள் என்பது என் அபிப்ராயம்.

      ஆண்கள் கூட மனது வைத்தால் இந்த அடையைச் சுலபமாக செய்யலாம் என்பதற்காக மட்டுமே கூறியுள்ளேன்.

      தாங்களும் தாராளமாகச் செய்யலாம். எந்த ஆட்சேபணையும் எனக்கு இல்லை.

      //ஆனால் நீங்கள் பாடம் நடத்திய விதம் கிளிப்பிள்ளைக்கு பாடம் நடத்தியது போல் இருக்கின்றது.//

      ஆமாம். ஆண்கள் புதிதாக மாவு அரைக்கவோ, சமையல் அறையில் புகவோ நேர்ந்தால், மனைவியை அழைக்காமல் [தொந்தரவு செய்யாமல்] அவர்களால் பொதுவாக எதுவுமே செய்ய முடியாது.

      அதுபோல மனைவியை எதுவும் கேட்காமல், எதற்குமே அழைக்காமல், மனைவியிடம் எந்த ஒரு ஆலோசனையும் பெறாமல், கணவர் அடைக்கான மாவை ரகசியமாக அரைத்து, ரகசியமாக சூடாக வார்த்து, அதன் பிறகு அதை சுவைக்க மட்டுமே அன்புடன் மனைவியை அழைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

      அதற்கு ஏற்றாற்போல கிளிப்பிள்ளைக்கு[ஆண்களுக்கு]பாடம் நடத்தியுள்ளேன்.

      கீழே திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் என்பவர் ஓர் அழகான பின்னூட்டம் கொடுத்துள்ளார்கள், தயவுசெய்து அதைப் படித்துப்பாருங்கள்.

      மாதம் பூராவும் ஓய்வு இல்லாமல் சமையல் அறையையே சுற்றிச்சுற்றி வரும் சூழ்நிலையில் உள்ள மனைவிக்கு, மாதம் 2-3 நாட்களாவது ஓய்வு கொடுத்து, கணவர் உபசரிக்க வேண்டும் என்பதே நான் இந்த என் பதிவினில் சொல்ல வந்துள்ள விஷயம்.

      இதனால் கணவன்+மனைவி இடையே நல்லதொரு புரிதல் ஏற்படும், பாசமும் அன்பும் பெருகும். ஒருவர் கஷ்டம் மற்றொருவருக்குப் புரியவரும்.

      Just for a change, mutual sharing of routine kitchen work between husband & wife to develop their Love & Affection. That is all.

      //சார் நீங்கள் இதிலும் வல்லவரா//

      வல்லவர் என்றெல்லாம் இல்லை. டிபனில் அடை எனக்கு மிகவும் பிடித்தமானதோர் ஐட்டம். இதை எவ்வளவோ சந்தப்பங்களில் நானே தனியா அரைத்து / வார்த்து செய்தும் உள்ளேன். மேலும் ஒருசில சமையல்களும் செய்தது உண்டு. இது தான் என் முதல் சமையல் பதிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தாங்கள் முதன்முதலாக அடை செய்யும் போது, பின்குறிப்பு [2] என்பதில் நான் எழுதியுள்ள, குறைவான அளவு மட்டும் பொருட்களைப் பயன்படுத்தி செய்து பாருங்கள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  34. பதில்கள்
    1. சே. குமார் December 15, 2012 11:09 AM
      //அட... 'அடை'மழையா எழுதியிருக்கீங்க...//

      வாருங்கள், வணக்கம். தங்களின் கருத்து மழைக்கு நன்றி.

      நீக்கு
  35. நான் முன்பே சொல்லியிருக்கிற மாதிரி, உங்கள் பதிவுகளில் ' உணவே வா, உயிரே போ!' என்ற பதிவு தான் என்னை அசத்திய பதிவு. உண்மையில் நிறைய பெண்களுக்குக்கூட அத்தனை தகவல்கள் தெரிந்திருக்காது! தகவல்கள் அத்தனை கச்சிதமாயிருக்கும். அதற்கு மகுடம் வைத்த மாதிரி இந்த 'அடை' சமையல் குறிப்பு அமைந்து விட்டது! ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்குமே பயனளிக்கக்கூடிய குறிப்பு இது! ஒரு தரமான 'அடை' குறிப்பு கொடுத்ததற்கு அன்பார்ந்த நன்றி! நானும் பெருங்காயம், அதுவும் கட்டிப்பெருங்காயம் தூக்கலாகத்தான் சமையலில் சேர்ப்பேன். உங்களின் குறிப்புப்படி அடை செய்து பார்த்து விட்டு மறுபடியும் பதிலளிக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன்December 15, 2012 11:38 AM

      வாருங்கள் திருமதி மனோ மேடம். வணக்கம்.

      //நான் முன்பே சொல்லியிருக்கிற மாதிரி, உங்கள் பதிவுகளில் ' உணவே வா, உயிரே போ!' என்ற பதிவு தான் என்னை அசத்திய பதிவு. உண்மையில் நிறைய பெண்களுக்குக்கூட அத்தனை தகவல்கள் தெரிந்திருக்காது! தகவல்கள் அத்தனை கச்சிதமாயிருக்கும்.//

      அது நான் புதிதாக வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த சமயம் தங்களின் அன்புக்கட்டளைக்க்காக எழுதிய பதிவல்லவா!

      அதில் என் வாய்க்கு ருசியாக சமையல் செய்து போட்ட என் அன்புத்தாயார், என் மனைவி + என் மருமகள் ஆகியோரின் சமையல் கைப்பக்க்குவத்தைப் புகழ்ந்து, சற்றே நகைச்சுவையும் கலந்து, வ்ரிவாக மிகப்பெரிய பதிவாக வெளியிட்டிருந்தேன்.

      அதைத் தாங்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்ற போது மிகவும் பாராட்டி வலைச்சாத்தில் எழுதியிருந்தீர்கள். அவை என்றுமே மறக்க முடியாத சந்தோஷமான தருணங்கள் அல்லவா!!


      //அதற்கு மகுடம் வைத்த மாதிரி இந்த 'அடை' சமையல் குறிப்பு அமைந்து விட்டது! ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்குமே பயனளிக்கக்கூடிய குறிப்பு இது! ஒரு தரமான 'அடை' குறிப்பு கொடுத்ததற்கு அன்பார்ந்த நன்றி!//

      சொல்லப்போனால் இந்தப்பதிவே சமையல் குறிப்புக்கான என் முதல் பதிவு. அடிக்கடி சமையல் குறிப்புகள் பற்றி தரமான பதிவுகள் தந்து வரும் தங்களால் இன்று பாராட்டப்பட்டுள்ளது, எனக்கும் மகுடம் வைத்தது போல மகிழ்ச்சியளிக்கின்றது.

      //நானும் பெருங்காயம், அதுவும் கட்டிப்பெருங்காயம் தூக்கலாகத்தான் சமையலில் சேர்ப்பேன்.//

      அப்படியா .. நல்லது. அது மணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம் உடம்பில் வாயு கொள்ளாமல் கண்டிக்கும் மருத்துவகுணமும் அதற்கு உண்டு என்பார்கள்.

      //உங்களின் குறிப்புப்படி அடை செய்து பார்த்து விட்டு மறுபடியும் பதிலளிக்கிறேன்!!//

      ஆஹா, அந்த அடை நல்லபடியாக அமையணுமே, தங்களிடம் நான் நல்ல பெயர் வாங்கணுமே, என்ற கவலை எனக்கு இப்போ ஆரம்பித்து விட்டது. ;)

      இருப்பினும் இதைக்கேட்க எனக்கு சந்தோஷமாக உள்ளது.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
    2. http://blogintamil.blogspot.com/2011/08/blog-post_30.html

      வலைச்சர ஆசிரியராக திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் பொறுப்பேற்றபோது 30.08.2011 அன்று பாராட்டி எழுதியுள்ளது:

      சமையல் முத்துக்கள்:

      by: திருமதி. மனோ சாமிநாதன்

      எல்லாவற்றுக்கும் முன்னால் சமையல் முத்துக்கள் மின்ன வருகின்றன. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் வாழ்வதும் உழைப்பதும் இந்த ஒரு சாண் வயிற்றின் பசியை நீக்கத்தான். சரியான உணவு இல்லாவிடில் கவிதைகள் எழுதுதலோ, இலக்கியத்தேடலோ, சமுதாயச் சேவை செய்திடலோ எதுவுமே முழுமையாக நடைபெற இயலாது.

      நம் பெண்கள் புகுந்த வீட்டில் நுழைந்த வினாடி முதல் தங்களின் வாழ்வின் இறுதி வரை குடும்பத்தினரின் பசி தீர்க்க அந்த சமையல் கட்டிலேயே உழலுகிறார்கள்.

      திரு.விசு கூட, ஒரு படத்தில் ‘எங்களுக்கெல்லாம் ரிடயர்மெண்ட் என்ற ஒன்று இருக்கிறது, பெண்களாகிய உங்களுக்கு மட்டும் இந்த அடுப்படியிலிருந்து ஓய்வே கிடைப்பதில்லை’ என்று சொல்லுவார். அது நூறு சதவிகிதம் உண்மை என்பது அனைவருக்குமே தெரியும்.

      இப்படி அடுப்படியில் மற்றவர்களுக்காகப் பார்த்துப் பார்த்து சமைக்கிற அவளுக்கு, தனக்குப்பிடித்தது எது என்பதே மறந்து போகிறது.

      இப்படிப்பட்ட பெண் என்பவளுக்கும் அவளின் ருசியான சமையலுக்கும் முதல் மரியாதை செய்யும் வகையில் சமையல் முத்துக்கள் முதலில் வருகின்றன!

      வெறும் சமையல் மட்டும் ருசிகரமாகச் செய்வதில் எந்த அர்த்தமுமில்லை. அதை அன்போடு பரிமாறுவதிலும் தன் அன்பிற்குரியவர்களைப் பார்த்து பார்த்து கவனிப்பதிலும் தான் அந்த சமையல் முழுமை அடைகிறது.

      அறுசுவை அன்னமும் பாலும் தேனும் பழங்களும் பல வகை விருந்தும் அன்பில்லாதோர் அளித்தால் அதுவே விஷமாகும், பழைய சோறானாலும் அன்போடு இட்டால் அதுவே அமுதமாகும்’ என்று விருந்தோம்பலைப்பற்றி அந்தக்காலத்தில் பழந்தமிழ்க் கவிதைகள் சொல்லியிருக்கின்றன!

      இப்படி சமையலைப்பற்றியும் விருந்து வகைகள் பற்றியும் விருந்தோம்பலைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்!

      தாமதமாக்கினால் சமையலின் ருசி குறைந்து போகுமென்பதால் சமையல் தளங்கள் பக்கம் வந்து விட்டேன்!

      1. http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html [வை.கோபாலகிருஷ்ணன்]

      முதலிடத்தில் வருபவர் சகோதரர்
      திரு.வை. கோபாலகிருஷ்ணன்.

      அருமையான சிறுகதை எழுத்தாளரை இங்கு இழுத்து வருவதில் அவ்வளவாக எனக்கு உடன்பாடில்லை.

      ஆனால் இந்தப்பதிவினைப்படித்த பின் அவருக்குத்தான் பெண்களைக்காட்டிலும் முதல் இடம் கொடுப்பது நியாயம் என்று தோன்றி விட்டது.

      எந்நேரமும் சமையலறையிலேயே புழங்கும் பெண்களே அதிசயப்படும் அளவிற்கு சமையல் பொருள்கள், அவற்றை உபயோகிக்கும் விதம், ருசிகரமான சமையல் வகைகள், அதற்குத் தகுந்த ஜோடியாக கூட்டுப்பொருள்கள் என்று அசத்தியிருக்கும் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்!

      ”உணவே வா .... உயிரே போ”

      [சமையல் பற்றிய விரிவான நகைச்சுவைப்பதிவு]

      By வை. கோபாலகிருஷ்ணன்.

      http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
      திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

      என்றும் அன்புடன் VGK
      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

      நீக்கு
  36. பிரமாதமான பதிவு. அடை செய்து சாப்பிட்ட மாதிரியே இருந்தது.

    வெங்காயத்தை அர்ச்சனை செய்யும்போது "அன்னபூரணிக்கு ஜே" என்று சொல்லிவிட்டு பின்பு அர்ச்சனை செய்தால் அடை இன்னும் ருசியாக வரும். பெண்டாட்டி பெயரையும் சொல்லலாம். இது என் சொந்த அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி.கந்தசாமி December 15, 2012 3:26 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம். தங்களின் அபூர்வ வருகையும், அற்புதமாகதோர் கருத்தும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

      //பிரமாதமான பதிவு. அடை செய்து சாப்பிட்ட மாதிரியே இருந்தது.//

      மிக்க நன்றி, ஐயா.

      //வெங்காயத்தை அர்ச்சனை செய்யும்போது "அன்னபூரணிக்கு ஜே" என்று சொல்லிவிட்டு பின்பு அர்ச்சனை செய்தால் அடை இன்னும் ருசியாக வரும். பெண்டாட்டி பெயரையும் சொல்லலாம். இது என் சொந்த அனுபவம்.//

      அந்தக்கொதிக்கும் அடையை பொண்டாட்டியாகவே நினைத்து, பொண்டாட்டி பெயரைச்சொல்லி மட்டுமே வெங்காயத் தூள்களால் அடையை அர்ச்ச்னை செய்ய வேண்டும்.

      பொண்டட்டி பெயர் அன்னபூரணியாக இருந்தால் மட்டுமே “அன்னபூரணி”க்கு ஜே எனச்சொல்லலாம்.

      இல்லாவிட்டால் ஆபத்து. அது யாருய்யா அன்னபூரணி என நம்மிடம் நம் மனைவி பாயலாம். தோசைத்திருப்பியால் சூடு போடலாம். கிடுக்கியால் மண்டையில் ஓங்கி ஒரு போடு போடலாம். அங்குள்ள தட்டுக்கள் ஃப்ளையிங் சாஸர் போல நம்மை நோக்கி பறக்கலாம்.

      அதனால் இதில் மிகுந்த கவனம் தேவை. யார் பெயரை வேண்டுமானாலும் மனதுக்குள் நினைத்து மகிழ்ந்து கொள்ளுங்கள்.

      ஆனால் வாய்விட்டுச்சொல்லும் போது அது அவரவர் மனைவி பெயராக மட்டும் இருக்கட்டும். இல்லாவிட்டால் நாம் சும்மா இருப்பதே சுகம்.

      இந்த நம் டாக்டர் பழனி கந்தசாமி சார், ஏதோ குட்டி கலாட்டா செய்ய நினைக்கிறார். அதனால் எச்சரிக்கையாக இருங்கோ எல்லோரும். ;)))))

      அன்புடன்
      VGK

      நீக்கு
  37. 30 அடைனு பாத்ததுமே மயக்கமா வருது சார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை December 15, 2012 4:19 PM
      //30 அடைனு பாத்ததுமே மயக்கமா வருது சார்..//

      ஓடும் பாம்பை மிதிக்கும் வயதில் வாலிபப்பருவத்தில் நிறைய பேர்கள் உள்ள பெரிய சம்சாரி வீடுகளுக்கு, இதெல்லாம் எந்த மூலைக்கு சார்.

      7-8 பேர்கள் இருந்து 2 விருந்தினர்களும் வந்து சேர்ந்தால் ஆளுக்கு 3 அடைன்னு வைத்தாலும், காலியாகிப் போகுமே சார். இதுவே பத்தாது சார்.

      ஒரு சின்ன சம்பவம். என் வீட்டில் உண்மையில் சமீபத்தில் நடந்ததைச் சொல்கிறேன்.

      என் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஏதோ அசந்தர்ப்பமான சூழ்நிலை.

      நான் ஒரு பெரிய அடுக்கு நிறைய இரவு 8 மணிக்கு அடைக்கு அரைத்து முடித்து விட்டேன். ஒன்பது மணிக்கு ஒரு 10 அடைவரை வார்த்து, என் வீட்டில் உள்ள நால்வரும் 3+3+2+2 என சாப்பிட்டோம்.

      மீதி ஒரு 20 அடைக்கான மாவை ஃபிரிட்ஜில் பத்திரமாக வைத்து விட்டேன்.

      இரவு பத்தரை மணிக்கு மேல், முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல், 5 பெரியவர்களும் 4 குழந்தைகளுமாக விருந்தாளிகள், அதுவும் நல்ல பசியுடன் வந்துள்ளனர்.

      ஏதாவது சாப்பிடக்கிடைக்குமா? நாங்களே வேண்டுமானாலும் ஏதோ ஒரு உப்புமா போல ஏதாவது செய்து கொள்கிறோம் என்றனர், அதில் வந்திருந்த மூன்று பெண்மணிகள்.

      அடை மாவை ஃபிரிட்ஜிலிருந்து சந்தோஷமாக எடுத்துக்கொடுத்தேன். நானே அரைத்தது என்று சொன்னேன். அவர்கள் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்தைப்பார்க்கணுமே.

      அடடா ! அப்படியொரு சந்தோஷம் அவர்களுக்கு.

      அவர்களே அடைக்கல்லை கேஸ் அடுப்பில் போட்டு மளமளவென்று வார்த்து வயிறுப்பசிக்கு சாப்பிட்டனர்.

      அடைமாவு இருந்த பாத்திரத்தையும் அழகாக் தேய்த்து அலம்பி கவிழ்த்தும் விட்டனர். மாவு சுத்தமாகக் காலி.

      இருப்பினும் பசியுடன் இரவு அகால வேளையில் வந்தவர்களுக்கு, வாய்க்கு ருசியாக அடை கொடுத்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அதற்கு ஈடு இணை உண்டா, சார்?

      வீட்டில் இட்லி மாவோ, தோசை மாவோ, அடை மாவோ எப்போதும் நிறைய ஸ்டாக் இருக்கணும் சார். அப்போது தான் நாம் கவலை இல்லாமல் இருக்கலாம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  38. அடைக்குத் தனிக்கல்.... இப்போதுதான் கேள்விப் படுகிறேன்!

    விவரங்கள் பிரமாதம். காரம் அதிகமாக வேண்டாதவர்கள் காய்ந்த மிளகாய் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்!

    வெங்காய அர்ச்சனை... நல்ல வார்த்தைப் பிரயோகம்!

    அடைக்குத் தொட்டுக்கொள்ள உங்கள் தெரிவுதான் என் விருப்பமும்!

    தின்னுப் பழகு என்று தலைப்பு வைத்து விட்டு (எல் ஆர் ஈஸ்வரிக் குரலில் இந்த உல்டா தலைப்பு என் குரலில் ஒலிக்கிறது!)

    "செவ செவ என எண்ணெய் மினுக்கும் அடையை எடுக்கும் போது சூடு ஆறுமுன் முதலில் மொறுமொறுப் பகுதியைச் சுவைத்து விட வேண்டும்! முழுதும் அந்த மொறுமொறுப் பகுதியை முடித்து விடாமல் கடைசி வாய்க்கு ஒரு பகுதி மட்டும் மிச்சமும் வைத்துக் கொள்ளலாம். இதற்குத் தொட்டுக் கொள்ள கண்டிப்பாக எதுவும் தேவையில்லை. சூடும் படுத்தாது. அப்புறம் மெல்ல நடுவில் இருக்கும் சதைப் பகுதியை மெல்ல எடுத்து நெய்யில் புரட்டி, வெல்லத்தைத் தொட்டு வாயிலிட்டு, மெல்ல மெல்ல சவைக்க / சுவைக்க வேண்டும்! நடுவில் துளையிட்டிருக்கும் இடம் இன்னும் ஸ்பெஷல். அது கருப்பாக முறுக்கிப் போய்விடாமலிருக்க வேண்டும். அப்படிப் போனால் வேஸ்ட்! பொன்னிறமாக இருந்தால் அந்தச் சிறிய பகுதியையே நாலு பாகமாகப் பிரித்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம்!............"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்.December 15, 2012 4:44 PM

      வாருங்கள் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      தாங்கள் கடைசி பத்தியில் [Last Paragraph] சொல்லியுள்ளதை நானும் அப்படியே அமோதிக்கிறேன்.

      மொறுமொறுப்பகுதிகளின் சுவை + பொன் நிறமாக [கருகிப்போகாமல்] என்பதெல்லாம் பற்றி நிறைய எழுத ஆசைப்பட்டேன்.

      பதிவின் நீளம் கருதி குறைத்துக்கொண்டேன்.

      என்னுடைய டேஸ்ட் போலவே உங்களுடைய டேஸ்ட்டும் உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  39. அஞ்சும் (கவனிக்க: மஞ்சு அல்ல) மூணும் சரியாய் இருந்தா அறியாப் பிள்ளையும் கறி சமைக்குமாம். அடைக் குறிப்புகள்(குறும்புகள்) ரொம்ப நுணுக்கம். ஆனா 50 கிராம் கட்டி பெருங்காயம் ரொம்ப அதிகம்! இதுக்கு ஒரு தராசும் கூட
    வேணுமோ?! ( 625 கிராம் பருப்பு )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் December 15, 2012 5:11 PM

      வாங்கோ மேடம், வணக்கம். வருக! வருக!! வருக!!!

      //(கவனிக்க: மஞ்சு அல்ல)//

      போங்கோ மேடம். என் அன்புத்தங்கச்சி மை டியர் மஞ்சுவை ஒருவாரமாக்காணாமல் நானே மிகவும் கவலையுடன் இருக்கேன். நீங்க கிண்டல் பண்றீங்கோ!

      தினமும் ஒரு ஃபோன் அல்லது கட்டாயம் ஒரு மெயில் மஞ்சுவிடமிருந்து எனக்கு வரும். கடந்த ஒரு வாரமாகக் காணோம். என்னாச்சுன்னு தெரியவில்லை. உடம்புக்கு ஏதும் சரியில்லாமல் இருக்கங்களோன்னு ஒரே கவலையா இருக்கு.
      நான் மெயில் அனுப்பியும் பதில் வரவில்லை. நாளைக்கு நானே ஃபோன் செய்யலாம என நினைத்துக்கொண்டு உள்ளேன்.

      //அஞ்சும் (கவனிக்க: மஞ்சு அல்ல) மூணும் சரியாய் இருந்தா அறியாப் பிள்ளையும் கறி சமைக்குமாம். அடைக் குறிப்புகள்(குறும்புகள்) ரொம்ப நுணுக்கம். ஆனா 50 கிராம் கட்டி பெருங்காயம் ரொம்ப அதிகம்! இதுக்கு ஒரு தராசும் கூட வேணுமோ?! ( 625 கிராம் பருப்பு )//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். பெருங்காயம் அவ்வளவு தேவையில்லை என்றால் நீங்கள் குறைத்துக்கொள்ளுங்கோ.

      50 கிராம் என்று துல்லியமாக இல்லாவிட்டாலும் ஒரு கொட்டைப்பாக்கு அளவு போடணும். அல்லது 50 கிராம் எடைக்கல் அளவு சைஸுக்கு போட்டு கரைக்கணும். அந்த 50 கிராம் எடைக்கல் அளவு பெருங்காயம் 50 கிராம் எடை இருக்கணும்னு அவசியம் இல்லை.

      புதிதாகச் செய்பவர்களுக்கு மட்டுமே துவரம்பருப்பு 625 கிராம் என்ற அளவெல்லாம், அதுவும் பல்க்காக 30 கனமான அடை செய்ய மட்டுமே.

      அனுபவசாலியான நமக்கெல்லம் 4 டம்ளர் புழுங்கல் அரிசி + 2-1/2 டம்ளர் துவரம் பருப்பு + 1 டம்ளர் கடலைப்பருப்பு ... அவ்வளவு தான். தராசு ஏதும் வேண்டாம் தான்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  40. Message Received from Mr. கவியாழி கண்ணதாசன் Sir:

    கவியாழி கண்ணதாசன் has left a new comment on the post "SWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]":

    அடை சாப்பிடுவது ஆனந்தமே ஆனால் எடை கூடிடுமே என்ன செய்வது அதனால் ஒன்றிரண்டு சாப்பிட்டு விட்டு விடை கொடுப்பது தான் சரி ,நன்றிங்க சார் பழசையெல்லாம் நினைக்க வைச்சுட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திரு கவியாழி கண்ணதாசன் ஐயா, வாருங்கள்.

      அடை, எடை, விடை என அடுக்கு மொழியாகக் கருத்துக்கள் இட்டு, பதிவினை சிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

      மிக்க நன்றிகள் தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கவிதை ’நடை’க்கருத்துக்களுக்கும்.

      அன்புள்ள
      VGK

      நீக்கு
  41. அடைக்குத் துணை அடையே.:)
    இல்லாவிட்டால் வெண்ணெய்.

    சூப்பர் பதிவு விஜிகே சார் எனக்கு ஒரு அடைதான் அளவு. அடைதட்டிப் போடுவது வழக்கம். கரைத்தல் ஆகாது அடைக்கு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் December 15, 2012 10:06 PM
      //அடைக்குத் துணை அடையே.:)
      இல்லாவிட்டால் வெண்ணெய்.//

      நவநீதம் [வெண்ணெய்] போன்ற தங்களின் பதில் கோபாலகிருஷ்ணன் ஆகிய எனக்கு ப்ரீதியளிக்கிறதே! ;)

      //சூப்பர் பதிவு விஜிகே சார்//

      நன்றியோ நன்றிகள் மேடம்.

      //எனக்கு ஒரு அடைதான் அளவு.//

      அது தான் உடம்புக்கு நல்லது. கல்லைப்போட்டால் ஜீரணம் ஆகும் வயதாக இருந்தால் 2,3,4 என்று சாப்பிடலாம் தான்.

      //அடைதட்டிப் போடுவது வழக்கம். கரைத்தல் ஆகாது அடைக்கு:)//

      ஆமாம் கரெக்ட். மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

      >>>>>>

      நீக்கு
  42. அடை மொழி சேர்த்துச் சொல்ல வேண்டிய அடை.பிரமாதம்.
    அடைக்குத் துணை அடையே. வெண்ணெய் சேர்க்கலாம்.உங்கள் அடைப் பக்குவம் சொன்னவிதம்,அரைத்தவிதம்,செய்த விதம் அப்பாடி ! மீனாட்சி அம்மாள் தோற்றுவிட்டார் போங்கள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் December 15, 2012 10:09 PM
      //அடை மொழி சேர்த்துச் சொல்ல வேண்டிய அடை.பிரமாதம்.
      அடைக்குத் துணை அடையே. வெண்ணெய் சேர்க்கலாம். உங்கள் அடைப் பக்குவம் சொன்னவிதம்,அரைத்தவிதம்,செய்த விதம் அப்பாடி ! மீனாட்சி அம்மாள் தோற்றுவிட்டார் போங்கள்:)//

      அடடா, தாங்கள் ஏதேதோ சொல்லி என்னைப்புகழ்ந்து அடையைப்பற்றி எழுதிய என்னையே வெடவெடைக்க வெச்சுட்டீங்கோ! ;)))))

      என்னைப்பெற்றெடுத்த என் அன்புத்தாயாரின் பெயரும் அதே மீனாக்ஷி அம்மாள் தான். ;)))))

      >>>>>

      நீக்கு
  43. உங்க ஊரு கும்பகோணமோ:)
    பெருங்காய அளவைப் பார்த்துச் சொல்லுகிறேன். பட்டி இருக்கிற வரை எல் ஜி பெருங்காய டப்பா இரண்டு வாங்குவோம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன்December 15, 2012 10:14 PM
      //உங்க ஊரு கும்பகோணமோ:)//

      கீழ்க்கண்ட இரண்டு பதிவுகளில் என் ஊர் எது என்று சொல்லியிருகிறேன்.

      அவற்றைப் படித்துப்பார்த்துவிட்டுக் கருத்துக்கூறுங்கள்.

      அதில் இரண்டாவது ஒன்றை தாங்கள் ஏற்கனவே கொஞ்சூண்டு படிச்சுட்டு, கொஞ்சூண்டு கமெண்ட் கொடுத்துள்ளீர்கள்.

      அந்த கமெண்ட் ஏதோ ஒரு ஒரு சிறிய அடைத்துண்டு போல அமைந்துள்ளது.

      அந்த சிறிய அடைத்துண்டு எனக்குப் போதவே போதாது. ;)
      நிறைய அடை நிறைவாக வேண்டும். தாங்கோ ப்ளீஸ்.

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

      அன்புடன்
      VGK

      நீக்கு
  44. அடையே பிடிக்காதவங்களும் விரும்பி செய்து சாப்பிடற மாதிரி குறிப்பை நகைச்சுவையாயும் நாவிற்கு சுவையாகவும் எழுதி அசத்தி விட்டீர்கள் அண்ணா..சிரிப்பு கதை, துணுக்கு எழுதுவதில் வல்லவர்தான்.. குணுக்கு செய்வதிலும் வல்லவர்னு இப்பதான் தெரியுது.. போட்டியில நீங்கதான் அசத்தப் போறீங்க..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ராணி December 15, 2012 11:31 PM

      வாங்கோ தங்கச்சி, வணக்கம். தங்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

      //அடையே பிடிக்காதவங்களும் விரும்பி செய்து சாப்பிடற மாதிரி குறிப்பை நகைச்சுவையாயும் நாவிற்கு சுவையாகவும் எழுதி அசத்தி விட்டீர்கள் அண்ணா..சிரிப்பு கதை, துணுக்கு எழுதுவதில் வல்லவர்தான்.. குணுக்கு செய்வதிலும் வல்லவர்னு இப்பதான் தெரியுது.. போட்டியில நீங்கதான் அசத்தப் போறீங்க..:)//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ’துணுக்கு .. குணுக்கு’பற்றி படித்ததும் சிரித்தேன்.மகிழ்ச்சி.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  45. நாங்கள் அவ்வப்பொழுது கொஞ்சமாக அடைமாவு அரைத்துக்கொள்வோம்.இப்படி நிறைய அரைத்து எவ்வளவு நாட்களுக்கு ஃபிரிட்ஜ்ஜில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லவே இல்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா December 16, 2012 1:39 AM

      வாருங்கள் மேடம். வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      ஹஜ் யாத்திரை போய் வந்தவர்களைப்பார்த்தாலே புண்ணியம்.

      அதுவும் தாங்கள் அதைப்பற்றி மிகச்சிறப்பாக பதிவுகள் கொடுத்து அசத்தி வருகிறீர்கள். படிக்கப்படிக்க நாங்களே போய் வந்தது போல மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //நாங்கள் அவ்வப்பொழுது கொஞ்சமாக அடைமாவு அரைத்துக்கொள்வோம்.//

      அது தான் நல்லது. அவரவர் தேவைக்குத்தகுந்தபடி அவ்வப்போது குறைவாக அரைத்துக்கொள்வதே நல்லது.

      //இப்படி நிறைய அரைத்து எவ்வளவு நாட்களுக்கு ஃபிரிட்ஜ்ஜில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லவே இல்லையே?//

      ஒரு வாரம் வரை வைத்துக்கொள்ளலாம் மேடம். அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதால் மற்ற இட்லி மாவு / தோசை மாவு போன்றவை புளித்துப்போகும். வாய்க்குப் பிடிக்காமல் போகும்.

      ஆனால் இந்த அடை மாவு மட்டும் புளித்தாலும் இன்னும் ருசியாகவே இருக்கும். ஆனால் புளித்தமாவு அடைக்கு மட்டும் தொட்டுக்கொள்ள, எண்ணெயில் குழைத்த தோசைமிளகாய்ப்பொடி என்பதே ஜோராக இருக்கும்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  46. (சமையல்)அட்டகாச(ம்)மான அடைக்குறிப்பு. நானும் பச்சரிசியை போட்டுத்தான் அடை செய்திருக்கிறேன். உங்க குறிப்புப்பார்த்த பின்தான் தெரிகிறது. புழுங்கலரிசி சேர்க்கவேணுமென்று. மிகவும் நன்றாக புரியவைத்திருக்கிறீங்க. ஆனாலும் அந்த குணுக்குதான் பிடித்திருக்கு.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu December 16, 2012 3:13 AM

      வாங்கோ அம்முலு! செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

      //(சமையல்)அட்டகாச(ம்)மான அடைக்குறிப்பு.//

      ரொம்பவும் சந்தோஷம், அம்முலு.

      //நானும் பச்சரிசியை போட்டுத்தான் அடை செய்திருக்கிறேன். உங்க குறிப்புப்பார்த்த பின்தான் தெரிகிறது, புழுங்கலரிசி சேர்க்க வேண்டுமென்று.//

      புழுங்கல் அரிசி தான் ஏற்றது. அடை ஓரளவு SOFT ஆகவும் இருக்கும். பச்சரிசி என்றால் அடை விரைத்துப்போகும். சூடு ஆறிய பிறகு அதை தின்னமுடியாது. வெடாய்த்துக்கொள்ளும்.

      வெடாய்த்த அதை சாப்பிட்ட நீங்கள் என் பதிவுகள் பக்கம் எட்டிப்பார்க்காமல் வெடாய்த்துக்கொள்வீர்கள். அதனால் இனி பச்சரிசி போடாமல் புழுங்கள் அரிசியே போடவும்.

      அதிலும் சாப்பாட்டுப் புழுங்கல் அரிசி வேண்டாம். பலகாரத்திற்கான புழுங்கல் அரிசியே அடைக்கு சரிப்பட்டு வரும்.

      //மிகவும் நன்றாக புரியவைத்திருக்கிறீங்க.//

      ஏதோ எனக்குப்புரிந்ததை மற்றவர்களுக்கும் புரிய வைக்க ஓர் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. அவ்வளவு தான்.

      //ஆனாலும் அந்த குணுக்குதான் பிடித்திருக்கு.
      போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.//

      உடனே இன்றே இப்போதே குணுக்குப் போட்டு சாப்பிடுங்கோ.

      சாப்பிடும் போது மறக்காமல் என்னையும் நினைத்துக்கொண்டு, எனக்காகவும் சேர்த்து ஒரு 25 அல்லது 50 குணுக்குகளை அதிகமாகச் சாப்பிடுங்கோ.

      எனக்குப் புரையேற வேண்டும். அப்போது தான் நம் அம்முலு குணுக்குப்போட்டு நமக்கும் சேர்த்து சாப்பிடுகிறாங்க என நான் நம்புவேன்.

      அன்புடன்
      கோபு அண்ணா

      நீக்கு
  47. கோபால் சார் அட்டகாசம். எங்க வீட்டிலும் அடைக்கு செங்கோட்டைக்கல், சப்பத்திக்கு நான் ஸ்டிக் கல், தோசைக்கு இண்டாலியம் கல் என்று வித விதமாக தோசைக்கல்லில் தான் செய்து வரோம். அதுபோலவே ரசத்துக்கு ஈயச்சொம்பு, கீரை மசிக்க மண் சட்டி குழம்பு வைக்க கையா சட்டி சாதம் வடிக்க வெங்கலப்பானை என்று வித விதமான பாத்திரங்களில் தான் சமையல் செய்து கொண்டிருந்தேன், ஒரு 50 வருடங்கள் முன்னே. 50-வருடங்களாக வடனாட்டுபக்கமே சுத்திண்டு இருப்பதால குழந்தைகள் பெரிசானதும் அவங்க டேஸ்ட்டும் மாறிப்போச்சு. பராட்டா,பூரி பூல்காரொட்டி, சப்பாத்தி குருமான்னு ஆயிட்டு. அடை பண்ணினா கூட கனமா பண்ணாம தோசைபோல மெல்லிசா கேக்குராங்க.ஹெவி ஆகுதுன்னு வேர சொல்லிடுவாங்க. நீங்க கொடுத்திருக்கும் அடைக்குறிப்பு அவ்வளவு டேஸ்ட்டா இருக்கு.ஹ ஹ ஹ குறிப்பு சொன்ன விதம் அதுவும் நகைச்சுவையுடன் சொன்னவிதம் சூப்பர்.பொருத்தமான படங்களும் அருமை.இப்ப சிங்கப்பூரில் இருக்கேன். அதான் உடனே வர முடியல்லே. என் டாஷ் போர்டில் உங்க பதிவு தெரியல்லே. மெயிலில் பாத்துதான் கமெண்ட் பன்னுரேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Lakshmi December 16, 2012 7:21 PM

      வாங்கோ Mrs. LAKSHMI Madam. வணக்கம். நலம் தானே!

      உலகம் சுற்றும் வாலிபி* [வாலிபனின் பெண்பால்: வாலிபி*] ஆகிவிட்டீர்கள்.

      இன்று சிங்கப்பூரிலா? அந்தப் பயணத்தினைப் பற்றி மேலும் எழுதித்தள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்... உங்களுக்கு.

      என் பெரிய அக்கா பெண்ணும், என் பெரிய நாட்டுப்பொண்ணின் தங்கையும் சிங்கப்பூரில் தான் இருக்கிறார்கள். வருஷாவருஷம் என்னையும் அங்கு அழைக்கிறார்கள். என்னால் தான் வீட்டைவிட்டு அவ்வளவு சுலபமாக கிளம்ப முடிவது இல்லை.

      >>>>>> தொடரும் >>>>>>

      நீக்கு
    2. VGK to Mrs. LAKSHMI Madam [2]....

      //எங்க வீட்டிலும் அடைக்கு செங்கோட்டைக்கல், சப்பத்திக்கு நான் ஸ்டிக் கல், தோசைக்கு இண்டாலியம் கல் என்று வித விதமாக தோசைக்கல்லில் தான் செய்து வரோம். அதுபோலவே ரசத்துக்கு ஈயச்சொம்பு, கீரை மசிக்க மண் சட்டி குழம்பு வைக்க கையா சட்டி சாதம் வடிக்க வெங்கலப்பானை என்று வித விதமான பாத்திரங்களில் தான் சமையல் செய்து கொண்டிருந்தேன், ஒரு 50 வருடங்கள் முன்னே.//

      ஆஹா என் அம்மா போலவே தாங்களும் .... ஈயச்சொம்பு, பருப்பு உருளி, வெங்கலாப்பை, சிப்பல், கோதாரிக்குண்டு, கச்சிட்டி [கல் சட்டி] என ஏதேதோ பயன் படுத்தியுள்ளீர்கள்.

      அவற்றைப்பற்றியெல்லாம் நான் விபரமாக ஓர் மிகப்பெரிய பதிவே எழுதியுள்ளேன். முடிஞ்சா ஏற்கனவே படிக்காவிட்டால் படியுங்கோ. உங்களுக்குத்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்.

      இணைப்பு இதோ:
      http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

      >>>>>>


      நீக்கு
    3. VGK to Mrs. LAKSHMI Madam [3]...

      //நீங்க கொடுத்திருக்கும் அடைக்குறிப்பு அவ்வளவு டேஸ்ட்டா இருக்கு. ஹாஹ்ஹாஹ்ஹா! குறிப்பு சொன்ன விதம் அதுவும் நகைச்சுவையுடன் சொன்னவிதம் சூப்பர். பொருத்தமான படங்களும் அருமை.//

      தங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த அன்புடன் கூடிய இனிய நன்றிகள், மேடம்.

      தங்களின் வருகை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் உள்ளது.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  48. வைகோ சார்,

    அமர்க்களமான அடைக்குறிப்பு சார்.
    படிக்கும் போதே சாப்பிட தோன்றுகிறது.காஸ் அடுப்பு துடைப்பதிலிருந்து,மிக்சி ஆன் செய்து ,அரைத்து முடித்து மிக்சி துடைப்பது வரை
    அழகாக விளக்கமாக எல்லோருக்கும் புரியும்படியாக இருந்தது. நன்றி.
    உங்கள் அடைக் குறிப்பை படித்த என் வாழ்க்கை துணைவர்,இனி அவரே அடை செய்து கொள்வதாக அறிவித்துவிட்டார்.
    ஏதாவது டவுட் இருந்தாலும் உங்களிடமே க்ளீயர் செய்து கொள்வதாகவும் சொல்லிவிட்டார்.சொல்லிவிட்டு முதலில் ஐந்து கிராம் பெருங்காயம் ஊற வைக்கிறேன்
    என்று கூறி அடுக்களைக்கு சென்றிருக்கிறார். இந்த மாதிரி நிறைய ரெசிபிஸ் எழுதுங்கள்..உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்.
    எனக்கும் சமையல் வேலையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.
    நல்ல நகைச்சுவை, அடையின் சுவை கூட்டியது.
    படிக்க ,சாப்பிட, அருமை.

    பகிர்விற்கு ந்ன்றி.
    ராஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam December 17, 2012 1:55 AM

      //வைகோ சார்,//

      வாங்கோ Mrs. RAJALAKSHMI PARAMASIVAM Madam, வணக்கம்.

      //அமர்க்களமான அடைக்குறிப்பு சார்.
      படிக்கும் போதே சாப்பிட தோன்றுகிறது. காஸ் அடுப்பு துடைப்பதிலிருந்து, மிக்சி ஆன் செய்து,அரைத்து முடித்து மிக்சி துடைப்பது வரை அழகாக விளக்கமாக எல்லோருக்கும் புரியும்படியாக இருந்தது. நன்றி.//

      ஆஹா! உங்களின் இந்தத்தனிப்பட்ட பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. ஸ்பெஷல் நன்றிகள்.

      //உங்கள் அடைக் குறிப்பை படித்த என் வாழ்க்கை துணைவர், இனி அவரே அடை செய்து கொள்வதாக அறிவித்துவிட்டார். ஏதாவது டவுட் இருந்தாலும் உங்களிடமே க்ளீயர் செய்து கொள்வதாகவும் சொல்லிவிட்டார். சொல்லிவிட்டு முதலில் ஐந்து கிராம் பெருங்காயம் ஊற வைக்கிறேன் என்று கூறி அடுக்களைக்கு சென்றிருக்கிறார்.//

      அடடா! வசமாக மாட்டினாரா அவர். யாராவ்து ஒருவராவது துணிந்து இதுபோல கோதாவில் இறங்கியுள்ளதை தங்கள் பின்னூட்டம் மூலம் கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இனி உங்கள் பாடு படு ஜாலி தான். இப்போது மீண்டும் அவருக்காக ஒரு சிறு குறிப்பினை பதிவின் நடுவினில் சேர்த்துள்ளேன். சிவப்புக்கலர் எழுத்துக்களில், மஞ்சள் வண்ணம் பூசி BOLD LETTERS ஆக HIGHLIGHT செய்து காட்டியுள்ளேன். அதையும் தங்களின் அன்பான கணவரை படித்துக்கொள்ளச்சொல்லவும். பிறகு ஏதாவது ஒன்று என்றால் நான் பொறுப்பாக முடியாது அல்லவா! அதனால் மட்டுமே நினைவூட்டுகிறேன். அதையும் தாங்களும், தங்கள் கணவரும் படித்து முடித்ததும், அதற்கு இன்னொரு பின்னூட்டம் கொடுக்கவும்.

      //இந்த மாதிரி நிறைய ரெசிபிஸ் எழுதுங்கள்.. உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும். எனக்கும் சமையல் வேலையிலிருந்து விடுதலை கிடைக்கும்.//

      ஆசை ஆசை எவ்ளோ ஆசை உங்களுக்கு ... அதுவும் சமையல் அறையிலிருந்து விடுதலை கிடைக்க! ;)))))

      பாவம் உங்கள் வீட்டுக்காரர். அவர் விரும்பிக்கேட்டால் மட்டுமே அடுத்த ரெசிபி வெளியிடப்படும். என்னை அவர் தொடர்பு கொள்ள valambal@gmail.com

      //நல்ல நகைச்சுவை, அடையின் சுவை கூட்டியது.
      படிக்க, சாப்பிட,அருமை.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான வேடிக்கையான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      நன்றியோ நன்றிகள்.... மேடம்.

      //பகிர்விற்கு ந்ன்றி.
      ராஜி//

      அன்புடன் VGK

      நீக்கு
  49. // அடடா ..... என்ன அழகு!’அடை’யைத் தின்னு பழகு!! //

    வலைப் பதிவில் பின்னூட்டங்களின் அடைமழை! இதனால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த பதிவில் நான் ரசித்த வரிகள் ... .... ...

    //மின்சார சப்ளை அடுத்த அரை மணி நேரத்திற்காவது இருக்குமா என உறுதி செய்து கொள்ளுங்கள்.//

    //சட்டை பனியன் ஏதும் அணியாமல் வெறும் தொந்தியுடன், தயவுசெய்து அடை வார்க்கச் செல்லாதீர்கள். இதில் எனக்கு ஏற்பட்டதோர் அனுபவத்தை நகைச்சுவையாக ஏற்கனவே சொல்லியுள்ளேன்.//

    //தன் கணவர் தனக்காக அன்பாகச் செய்துகொடுத்த அடையைச் சாப்பிடும் மனைவி அடைக்கு பதிலாக வைர அட்டிகையே கிடைத்தது போல மகிழ்ச்சியும் கொள்ளலாம். //

    // வெள்ளித்தட்டில் சூடான அடைகளும சுவையான வெல்லப்பொடியும் ரெடி.
    உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்! //



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ December 17, 2012 8:16 AM
      // அடடா ..... என்ன அழகு!’அடை’யைத் தின்னு பழகு!! //

      வலைப் பதிவில் பின்னூட்டங்களின் அடைமழை! இதனால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த பதிவில் நான் ரசித்த வரிகள் ... .... ... ... ... ...

      ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...//

      அன்புள்ள திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள். வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது இன்று சற்று நேரம் முன்பு
      இந்தப்பதிவினில் மேலும் ஓர் சிறிய தகவல் நம் ஆண்களுக்காகவே இணைத்துள்ளேன். அவற்றை சிவப்புக்கலர் எழுத்துக்களில், மஞ்சள் வண்ணம் பூசி BOLD LETTERS ஆக HIGHLIGHT செய்து காட்டியுள்ளேன். அதைப் படித்துவிட்டு மீண்டும் கருத்தளிக்க வருவீர்களோ எனவும் நினைக்கிறேன்.

      தாங்கள் மிகவும் ரஸித்த பகுதிகளைச்சொல்லிப் பாராட்டியுள்ள்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  50. Mail message Received on 17/12/2012 from
    Mrs. Vijayalakshmi Krishnan Madam.
    -----------------------------------

    Vijayalakshmi Krishnan 19:48

    Sir, I am trying to post my comments at your blog.
    But it is not appearing I don't know why.
    Here is my comment.

    Paaramparyama samayal cheyyara pondukale eathavathu cholla vittupoiyvidum.

    Neenga evallavu supera oru point kooda vidamal chooli irukkeenga!!!!!!!!!

    Rasichu rasichu padichchen Sir.

    Adai photo parththathum udane sappitanum pol irrukku.

    Ada, adaiyai vidunko ...... antha kunukku ..........

    Besh besh .. romba nanna irrukku ........(Photo).

    Seri ippo vishayathukku varuvom ........

    Adaiellaam panninathu mamithane ??????????????????

    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mrs. Vijayalakshmi Krishnan Madam.

      வாங்கோ திருமதி விஜி மேடம். வணக்கம்.
      செள்க்யமா சந்தோஷமா நல்லா இருக்கீங்களா?

      Sir, I am trying to post my comments at your blog.
      But it is not appearing I don't know why.
      Here is my comment.

      //நான் உங்கள் பதிவின் பின்னூட்டப்பெட்டியில் கருத்துச்சொல்ல வேண்டும் என்று தான் முயற்சித்தேன். ஆனால் பின்னூட்டப்பெட்டியையேக் காணோம். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் இந்த என் கருத்துக்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளேன்.//

      அடடா, இந்தப்பின்னூட்டப்பெட்டி என்பது எப்படியெல்லாம் நம்மைப்பாடாய்ப்படுத்தி பம்பரமாய் ஆட்டுகிறது பாருங்கள்.

      நம் நட்பினைப்பிரிக்க யாரோ செய்யும் சதிவேலையாக இருக்குமோ? ;))))) இருந்தாலும் நாம் விடுவோமா என்ன? அது தான் மின்னஞ்சல் என்ற வசதி உள்ளதே!

      எது எப்படியோ என் பின்னூட்டப்பெட்டி [பணப்பெட்டி ;)] உங்களை சிரமப்படுத்தியதற்கு மன்னிச்சுக்கோங்கோ, மேடம்.

      Paaramparyama samayal cheyyara pondukale eathavathu cholla vittupoiyvidum.
      Neenga evallavu supera oru point kooda vidamal chooli irukkeenga!!!!!!!!!
      Rasichu rasichu padichchen Sir.

      //பாரம்பர்யமாக சமையல் செய்துவரும் பொண்டுகளுக்கே சமையல் செய்முறை விளக்கங்கள் அளிக்கும்போது, ஏதாவது சொல்ல விட்டுப்போய்விடும்//

      //நீங்க எவ்வளவு சூப்பரா ஒரு பாயிண்ட் கூட விட்டு விடாமல் சொல்லியிருக்கீங்க !!!!!!!!!//

      //ரஸித்து ரஸித்துப் படிச்சேன் ... ஸார்.//

      ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு மேடம்.
      ஸ்பெஷல் நன்றிகள்.

      Adai photo parththathum udane sappitanum pol irrukku.

      //அடை போட்டோ பார்த்ததும் உடனே சாப்பிடணும் போல இருக்கு//

      நம் ஆத்துக்கு வாங்கோ! உடனே சாப்பிட நான் ஏற்பாடு செய்கிறேன்.

      Ada, adaiyai vidunko ...... antha kunukku ..........
      Besh besh .. romba nanna irrukku ........(Photo).


      // அட, அடையை விடுங்கோ ......... அந்தக்குணுக்கு ..........
      பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு [போட்டோவில்] //

      14 ஆம் தேதி எங்காத்தில் அடை, இன்று அதே மாவில் குணுக்கு.

      குணுக்குகளைத் தின்று கொண்டே தான் பெருமகிழ்ச்சியுடன் இதை டைப் அடிக்கிறேன், மேட்ம்.

      ஆசையாகக் கேட்கிறீர்கள் .... பாவமாக உள்ளது.

      உங்களுக்காக என்று மேலும் சில குணுக்குகள் கேட்டு, வாங்கி உங்களை நினைத்துக்கொண்டு நானே சாப்பிட்டேன்.
      ;)))))


      Seri ippo vishayathukku varuvom ........
      Adaiellaam panninathu mamithane ??????????????????
      viji

      //சரி இப்போ விஷயத்துக்கு வருவோம் ........
      அடை பண்ணினது மாமி தானே ???????????????
      - விஜி//

      ஆஹா, தர்ம சங்கடமான கேள்வியாக உள்ளதே!
      சரி ...... மாமி என்றே வைத்துக்கொள்ளுங்கோ.

      நானும் இதைவிட ஜோராகச் செய்வேனாக்கும்.

      உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் எங்காத்து மாமிக்கு
      நீங்களே ஃபோன் போட்டு கேட்டுக்கொள்ளுங்கோ

      அன்புடன்
      VGK

      நீக்கு
  51. இன்று உங்கள் குறிப்புப்படி அடை செய்து பர்த்து விட்டேன். இது வரை பல வித அளவுகளில் அடை செய்து பார்த்திருக்கிறேன். உங்களுடைய அடை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. மிக மிக ருசியாக அமைந்து விட்டது! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் December 17, 2012 10:51 AM
      //இன்று உங்கள் குறிப்புப்படி அடை செய்து பர்த்து விட்டேன். இது வரை பல வித அளவுகளில் அடை செய்து பார்த்திருக்கிறேன். உங்களுடைய அடை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. மிக மிக ருசியாக அமைந்து விட்டது! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!//

      ஆஹா இதைத்தாங்கள் சொல்வது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

      தாங்கள் தங்கள் வலைப்பதிவின் மூலம் உலகுக்கே பல பயனுள்ள சமையல் குறிப்புகள் தருபவர்கள்.

      மேலும் வெளிநாட்டில் மிகப்பிரபலமான ரெஸ்டாரண்ட் நடத்தும் அனுபவமும் உள்ளவர்கள்.

      இந்தத்தங்களின் பாராட்டு மட்டுமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மதிப்பு வாய்ந்த "மு த ல் ப ரி சு".

      [I REQUEST OUR அதிரடி அதிரா TO PLEASE NOTE THIS POINT]

      அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  52. அடக்கடவுளே...
    ஒரு சின்னொன்டு அடைக்கு
    அடைமழை போல் விளக்கமா...?

    ஆனால் யவராலும் இவ்வளவு பொருமையாக
    விளக்கம் சொல்லியிருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
    நானும் செய்து பார்க்கிறேன் ஐயா.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருணா செல்வம் December 17, 2012 2:06 PM

      வாருங்கள் Mrs. அருணா செல்வம் Madam வணக்கம்.

      //அடக்கடவுளே...
      ஒரு சின்னூண்டு அடைக்கு
      அடைமழை போல் விளக்கமா...?//

      என்ன இப்படிச்சொல்லிட்டீங்க. கோயிலில் உள்ள கடவுள் விகரஹமே மிகச்சிறியது தான். மூர்த்தி சிறியதாயினும் அதன் கீர்த்தி பெரியது அல்லவா! [அடக்கடவுளே!!]

      அது போலத்தான் அனைத்து டிபன்களிலும் நம்பர் ஒன் ராஜா தான் இந்தச்சின்னூண்டு அடை என்பது.

      அதனால் மட்டுமே பலத்தமழையினை நாமும் “அடைமழை” என்று கூறி மகிழ்கிறோமாக்கும். ;)))))

      அதனால் தான் அடைமழை போல விளக்கம் தந்துள்ளேன்.
      OK யா ?

      //ஆனால் யவராலும் இவ்வளவு பொறுமையாக
      விளக்கம் சொல்லியிருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.//

      அப்பாடி, ஒத்துக்கொண்டீகளே! சந்தோஷம்!! ;)))))

      //நானும் செய்து பார்க்கிறேன் ஐயா. நன்றி.//

      உடனே செய்து பாருங்கோ. மேலே திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தையும் படிச்சுப்பாருங்கோ, ப்ளீஸ்.

      தங்களின் அன்பான வருகைக்கும், சிறிய மூர்த்திபோல ஆனாலும் மிகவும் கீர்த்திவாய்ந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  53. ஐயா! தங்களின் இந்தப் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். அடையின் சுவையை அனைவரும் அறிந்திட! வாருங்கள் ஐயா வலைச்சரத்திற்கு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s.December 17, 2012 5:00 PM
      //ஐயா! தங்களின் இந்தப் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். அடையின் சுவையை அனைவரும் அறிந்திட! வாருங்கள் ஐயா வலைச்சரத்திற்கு! நன்றி!//

      அடடா, அப்படியா! அதற்குள் இந்த அடை பற்றிய என் பதிவு அடைக்கல் போன்ற வலைச்சரத்தில் சூடாக ஏறிவிட்டதா? சுவை தான். தொட்டுக்கொள்ள மண்டை வெல்லப்பொடியும், உருக்கிய நெய்யும் போன்ற அதிக சுவை தான் இந்த இனியசெய்தி.

      அவசியமாக வந்து பார்க்கிறேன். தங்களின் அன்பான தகவலுக்கு மிக்க நன்றி, நண்பரே.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  54. நீங்கள் சுட்ட தோசையைவிட அதைபற்றிய விளக்கம் மிகப் பெரியதாக இருக்கிறது . நிச்சயம் கூடிய சீக்கிரம் கின்னஸ் புக்கில் உங்கள் பெயர் வந்துவிடும்போல இருக்குதே....


    இந்த வயதிலும் நீங்கள் விடாமல் எழுதி பதிவு இடுவது மிக ஆச்சிரியம். சில நேரங்களில் பதிவு போடுவதை நான் நிறுத்தாலாம் என நினைக்கும் போது உங்களை நினைத்தாலே போதும் மீண்டும் எழுத ஆர்வம் வந்து விடுகிறது..நன்றி சார்

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களௌம் உங்களுக்கு.....வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Avargal Unmaigal December 17, 2012 8:36 PM

      வாருங்கள் .... அன்புத்தம்பி, வணக்கம்.

      //நீங்கள் சுட்ட தோசையைவிட அதைபற்றிய விளக்கம் மிகப் பெரியதாக இருக்கிறது//

      சுட்டது தோசை இல்லையப்பா! அடை!! அடையை நீர் ஆசையில் சு ட் டு க்கொண்டு போய்விட்டு தோசையை Replace செய்து விட்டீரோ என எனக்கு ஓர் சந்தேகம் உம் பேரில்.

      விளக்கம் எப்போதுமே யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் விளக்கமாகத்தர வேண்டும் என்பதே இதற்கு என் விளக்கம்.
      OK யா?

      //நிச்சயம் கூடிய சீக்கிரம் கின்னஸ் புக்கில் உங்கள் பெயர் வந்துவிடும்போல இருக்குதே....//

      அடடா, எப்போதுமே உமக்கு குறும்பு ஜாஸ்தி. ஆனால் நீர் என்னைப்போய் ”குறும்புக்கார இளைஞர்” என்று சொல்லுவீர்.

      //இந்த வயதிலும் நீங்கள் விடாமல் எழுதி பதிவு இடுவது மிக ஆச்சிரியம்.//

      எழுத ஆர்வமும் மற்ற சுகமான சூழ்நிலைகளும் அமைந்தால் போதுமே. எவ்வளவோ எழுதலாம். வயது ஓர் தடையே இல்லை. மேலும் வயதானவர்களுக்கு இதைவிட மூளைக்கு வேலை ஏதும் இல்லை என்பது என் அபிப்ராயம். எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

      //சில நேரங்களில் பதிவு போடுவதை நான் நிறுத்தாலாம் என நினைக்கும் போது உங்களை நினைத்தாலே போதும் மீண்டும் எழுத ஆர்வம் வந்து விடுகிறது.. நன்றி சார்//

      அடடா இதுவேறா, இலவச இணைப்பு போல!

      //வாழ்த்துக்களும் பாராட்டுக்களௌம் உங்களுக்கு.....
      வாழ்க வளமுடன்//

      நன்றி நன்றி நன்றி. அன்புடன் VGK

      நீக்கு
  55. சின்னஞ்சிறு அடை மேலே,

    சிற்றோடை போல வெண்ணைய் ...

    வெல்லமங்கே சேர்ந்து விட்டால்

    உள்ளமது மகிழ்ந்திடுமே !!!!!!

    (சின்னச்சிறு பெண் போலே மெட்டில் ..)



    சார் ..அடையை நீங்க பண்ணனும் ...சாப்பிடணும் ....

    எடை கூடினாலும் பரவாயில்லை ..

    எப்ப வரெள் ஆரண்ய நிவாஸம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி December 17, 2012

      //சின்னஞ்சிறு அடை மேலே,
      சிற்றோடை போல வெண்ணைய் ...
      வெல்லமங்கே சேர்ந்து விட்டால்
      உள்ளமது மகிழ்ந்திடுமே !!!!!!

      (சின்னச்சிறு பெண் போலே மெட்டில் ..)//

      அடை போலவே எனக்குப்பிடித்த அருமையான பாடலை தந்துள்ளீர்கள். சின்னஞ்சிறு பெண் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு! ;)))))

      //சார் ..அடையை நீங்க பண்ணனும் ...சாப்பிடணும் ....
      எடை கூடினாலும் பரவாயில்லை ..
      எப்ப வரெள் ஆரண்ய நிவாஸம் ?//

      அடையுடன் வரணுமா?
      அடைமாவுடன் ஆட்டோவில் வரணுமா?
      அங்கு வந்து ஊறப்போடணுமா?
      அங்கு வந்து அரைக்கணுமா?
      அங்கு வந்து அடை தட்டணுமா?

      எனக்கு இதையெல்லாம் நினைத்தால் தொடை நடுக்கமாக உள்ளதே! ஸ்வாமி!! ஏன் இந்த விபரீத விளையாட்டு?

      அடேய் நம்மாளு! நீ எங்கே போய்த்தொலைந்தாய்?

      ஓடியா, ஓடியா, உங்க சாரு ஏதேதோ மஸக்கைக்காரியாட்டமா ஆசைப்படுகிறார்.

      என்னான்னு கொஞ்சம் கவனிப்பா! ;)))))

      அன்புடன்
      VGK

      நீக்கு
  56. வலைச்சரத்தில் நான் சமையல் பற்றியும் உங்கள் பதிவைப்பற்றியும் எழுதியதை மீண்டும் இங்கு பதிவிட்டிருப்பதற்கு மிக்க நன்றி!!

    நீங்க‌ள் குறிப்பிட்டிருப்ப‌தைப்போல‌, 2 த‌ம்ள‌ர் இட்லி அரிசி, 1 த‌ம்ள‌ர் துவ‌ர‌ம்ப‌ருப்பு, அரை ட‌ம்ள‌ர் க‌ட‌லைப்ப‌ருப்பு, ஒன்ற‌‌ரை spoon க‌ட்டிப்பெருங்காய‌த்தூள் த‌ண்ணீரில் க‌ரைத்தது, வற்ற‌‌ல் மிளகாய் 15 - உபயோகித்து அடை செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் December 17, 2012 10:26 PM

      மீண்டும் மூன்றாம் முறையாக வருகை தந்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்.

      //வலைச்சரத்தில் நான் சமையல் பற்றியும் உங்கள் பதிவைப்பற்றியும் எழுதியதை மீண்டும் இங்கு பதிவிட்டிருப்பதற்கு மிக்க நன்றி!! //

      அதை நாம் மறக்க முடியாதே, மேடம். பசுமையான நினைவுகள் அல்லவோ!

      //நீங்க‌ள் குறிப்பிட்டிருப்ப‌தைப்போல‌, 2 த‌ம்ள‌ர் இட்லி அரிசி, 1 த‌ம்ள‌ர் துவ‌ர‌ம்ப‌ருப்பு, அரை ட‌ம்ள‌ர் க‌ட‌லைப்ப‌ருப்பு, ஒன்ற‌‌ரை spoon க‌ட்டிப்பெருங்காய‌த்தூள் த‌ண்ணீரில் க‌ரைத்தது, வற்ற‌‌ல் மிளகாய் 15 - உபயோகித்து அடை செய்தேன்.//

      ரொம்பவும் சந்தோஷம் மேடம். மிக்க நன்றி.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  57. படிக்க படிக்க சுவாரசியமாகவும் சுவையாகவும் இருக்கு !

    இன்னிக்கே ட்ரைப் பண்ணி பார்த்திட வேண்டியதுதான் :)

    முதல் பரிசைத் தட்டிச்செல்ல வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேக்கனா M. நிஜாம் December 17, 2012 11:57 PM

      //படிக்க படிக்க சுவாரசியமாகவும் சுவையாகவும் இருக்கு !
      இன்னிக்கே ட்ரைப் பண்ணி பார்த்திட வேண்டியதுதான் :)
      முதல் பரிசைத் தட்டிச்செல்ல வாழ்த்துகள்...//

      வாருங்கள், வணக்கம். அன்பான வருகைக்கும், அழகான சுவையான, சுவாரஸ்யமான கருத்துக்கள், பாராட்டுக்கள், வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  58. 2 வரியில் தலைப்பை வைத்து இத்தனை நாளும் விட்டிருந்த இடைவெளியினை நிரப்பிவிட்டீர்கள் .

    முதலில் தந்துள்ள அளவுகள் குறிப்பாக பெருங்காய அளவினைப் பார்த்து அடை சாப்பிட உதித்த ஆசை ஓடியே போய்விட்டது.பிறகு பின்னுட்டத்தில் தங்களின் விளக்கம் ஆசுவாசப்படுத்தியது.மிக்சியில் அரைக்க ஆரம்பித்து பரிமாறி விட்டீர்கள்.பேச்சுலர் விளக்கம் சுப்பர்.குழந்தைகளுக்கான குறிப்பு எனில் எப்படி மென்று விழுங்க வேண்டும் என்றும் அரைப் பக்கத்திற்கு விளக்கம் தந்திருப்பீர்கள் .

    அடைக்காக அடை அடையாய் (எழுதி) விளக்கியிருக்கும் உங்கள் பொறுமை யாருக்கும் வராது.உங்களுக்கும் பேச்சுலருக்கும் சம்பந்தம் கிடையாது(தோழிகள் தான் அதிகம் ).உங்களின் அடை குறிப்பினில் மயங்கி ஏதாவது ஒரு பேச்சுலர் ஆடை செய்து பார்த்து வெற்றி பெறட்டும்.பதிகளும் திருமதிகளுக்கு அடை செய்து தந்து அசத்தட்டும்.இந்த அடை பதிவு வெற்றி பெற அடை அடையான வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar December 18, 2012 3:50 AM
      //2 வரியில் தலைப்பை வைத்து இத்தனை நாளும் விட்டிருந்த இடைவெளியினை நிரப்பிவிட்டீர்கள்.//

      இடைஇடையே தங்களைப்போன்ற என் உண்மையான விசிறிகள் எங்கேயோ மறைந்து போனதால் மட்டுமே இடைவெளி விடும்படியாக ஆனது. அதைக்கொஞ்சம் இந்த அடை மாவினால் அடைத்துள்ளேன். அவ்வளவு தான்.

      //முதலில் தந்துள்ள அளவுகள் குறிப்பாக பெருங்காய அளவினைப் பார்த்து அடை சாப்பிட உதித்த ஆசை ஓடியே போய்விட்டது. பிறகு பின்னுட்டத்தில் தங்களின் விளக்கம் ஆசுவாசப்படுத்தியது.//

      அடடா, உங்களுக்கு அடை சாப்பிட உதித்த அந்த ஆசை இனி ஓடிப்போகாமல் இருக்கவே, நான் அந்த இடத்தை சற்றே இப்போது திருத்தியுள்ளேன். உங்கள் செட்டிநாட்டில் பிரபலமாக இருக்கும் “பெரிய கொட்டைப்பாக்கு அளவு” கெட்டிப்பெருங்காயம் என மாற்றி விட்டேன். இப்போது OK தானே!

      //மிக்சியில் அரைக்க ஆரம்பித்து பரிமாறி விட்டீர்கள்.//

      ஆமாம். என் மிக்ஸிங் எ ப் பூ டீ ஈஈஈஈஈ??????

      //பேச்சுலர் விளக்கம் சூப்பர்.//

      பேச்சுலராக [ஜாலியாக] ஒருகாலத்தில் இருந்தவன் தானே! ;)

      //குழந்தைகளுக்கான குறிப்பு எனில் எப்படி மென்று விழுங்க வேண்டும் என்றும் அரைப் பக்கத்திற்கு விளக்கம் தந்திருப்பீர்கள்//

      என்னை நல்லாவேப்புரிந்து வைத்திருக்கிறீர்கள். நன்றி.

      //அடைக்காக அடை அடையாய் (எழுதி) விளக்கியிருக்கும் உங்கள் பொறுமை யாருக்கும் வராது.//

      உங்களைப்போல படிப்பவர்களுக்கும் அந்தப்பொறுமை வேண்டுமே! அது தான் என் கவலை.

      //உங்களுக்கும் பேச்சுலருக்கும் சம்பந்தம் கிடையாது
      ( தோழிகள் தான் அதிகம் ) //

      ஓரளவுக்கு வயதான பிறகு நாங்களும் பேச்சலர் போலத்தானே!

      [எனக்கு தோழிகள் அதிகம் என்கிறீர்கள் -
      நான் ஒத்துக்கொள்கிறேன்

      அதுபோல உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம்
      என்று நான் சொல்கிறேன் ;)))))

      நீங்களும் அதை ஒத்துக்கொள்ளுங்கள்]

      //உங்களின் அடை குறிப்பினில் மயங்கி ஏதாவது ஒரு பேச்சுலர் ஆடை செய்து பார்த்து வெற்றி பெறட்டும்.//

      அடைக்குறிப்பினில் மயங்கி ஆடை நெசவு செய்து பார்த்து வெற்றி பெறுவதா?

      என்ன சொல்கிறீர்கள் மேடம்.
      எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ;)))))

      //பதிகளும் திருமதிகளுக்கு அடை செய்து தந்து அசத்தட்டும்.//

      அதானே! பிறகு நீங்கள் ஜாலியாக நிம்மதியாக பதிவுகள் மட்டும் எழுதிக்கொண்டு இருக்கலாம் என்ற எண்ணமோ? ஆசை...... ஆசை...... அப்பளம் ........ வடை.! ;)))))

      //இந்த அடை பதிவு வெற்றி பெற அடை அடையான வாழ்த்துகள்//

      தங்களுக்கு உள்ள எவ்வளவோ நெருக்கடிகளுக்கு இடையில், தங்களின் பொன்னான நேரத்தினை எனக்காகக் கொஞ்சம் ஒதுக்கி, அன்பான வருகை தந்து, அழகான அதிசயமான மிக நீண்ண்ண்ண்ண்ட கருத்துக்களும் கூறி, வாழ்த்தியுள்ளீர்கள்.

      இவை அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  59. Theepz December 21, 2012 1:20 AM
    //i like your mun eccharikkai tips: )//

    WELCOME TO YOU !

    Thanks a Lot for your very first entry to my Blog and for the very sweet and valuable comments offered. ;)))))

    என் வலைத்தளத்தில் இன்றைய தங்களின் முதல் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    இதில் உள்ள நகைச்சுவையான முன்னெச்சரிக்கையைப் பகுதியினை மிகவும் ரஸித்து ருசித்து கருத்தளித்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  60. நான் லேட்டாக வந்திருப்பதாக நினைக்கலாம். என் பின்னூட்டம்,
    ரிடைரைட்டிங்னு சொல்லி வந்து விட்டு அப்புறம் காணோம்.
    அடையை,ரஸிக்காதவர்களும்,படிக்காதவர்களும் அதாவது உங்கள்ப் பதிவை பார்காதவர்களும்,செய்து சாப்பிடாதவர்களும், இருக்க மாட்டார்கள்.மினுமினுப்பும்கரகரப்பும்,காரஸாரமாக,ஆழ்ந்த பெருங்காய மணத்துடன்,வெல்லத்தோடு சாப்பிட நான் முந்தி,நீமுந்திதான். 4,5,தரம் எழுதி போகாவிட்டால் முதலில் எழுதின கமென்ட்டின் சாயல் குறைந்து விடுகிரது.காரசார ருசியான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi December 21, 2012 2:13 AM

      வாங்கோ காமக்ஷி மாமி. நமஸ்காரங்கள்.

      //நான் லேட்டாக வந்திருப்பதாக நினைக்கலாம்.//

      நான் அதுபோல நினைக்கவில்லை மாமி. ஆனாலும் இந்தப்பதிவினை அவசியமாகப்படிக்க வேண்டிய நம் காமாக்ஷி மாமியைக்காணோமே என மனதுக்குள் கொஞ்சம் கவலைப்பட்டேன்.

      //என் பின்னூட்டம்,ரிடைரைட்டிங்னு சொல்லி வந்து விட்டு அப்புறம் காணோம்.//

      இதுபோல எனக்கும் அடிக்கடி ஆகுது மாமி.

      நான் ஆர்வத்தில் மிகவும் நீண்ட பின்னூட்டங்கள் எழுதி அவை முறைப்படி சம்பந்தப்பட்டவர்களுக்குப் போய்ச்சேராமல், எங்கோ காணாமல் போய் நான் அழுதது உண்டு. அதனால் நான் இப்போதெல்லாம் சிறுசிறு பகுதிகளாக எழுதி அனுப்பி வருகிறேன். ஆங்காங்கே

      >>>>>>>> தொடரும்

      என போட்டு விடுவேன். [இப்போது உங்களுக்கும் அப்படியே]



      நீக்கு


    2. //அடையை,ரஸிக்காதவர்களும்,படிக்காதவர்களும் அதாவது உங்கள் பதிவை பார்காதவர்களும்,செய்து சாப்பிடாதவர்களும், இருக்க மாட்டார்கள். மினுமினுப்பும்கரகரப்பும், காரஸாரமாக, ஆழ்ந்த பெருங்காய மணத்துடன், வெல்லத்தோடு சாப்பிட நான் முந்தி, நீமுந்திதான்.//

      சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் மாமி. இவ்வாறு செய்ததாகவும், செய்வதாகவும், செய்து கொண்டே இருப்பதாகவும் பலரும் தங்கள் பின்னூட்டங்களில் சொல்லியுள்ளார்கள். சந்தோஷமாகவே உள்ளது.

      >>>>>>>>

      நீக்கு
    3. VGK TO காமாக்ஷி மாமி [3]

      //4,5,தரம் எழுதி போகாவிட்டால் முதலில் எழுதின கமென்ட்டின் சாயல் குறைந்து விடுகிறது.//

      தாங்கள் சொல்வதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. REDIRECTING வந்த பிறகு உடனே வெளியேறாமல் 2 நிமிடம் கழித்துத்தான் நாம் வெளியேற வேண்டும்.

      மேலும் இந்தத்தங்களின் கருத்துக்கள் கூட என்னுடைய பார்வைக்கு மெயில் மூலம் நேரிடையாக வராமல் SPAM என்ற இடத்தில் ஒளிந்து கொண்டு இருந்தது. இப்போது தான் அதனை அகஸ்மாத்தாகப்பார்த்து வெளிக்கொணர்ந்து வெளியிட்டேன்.

      //காரசார ருசியான பதிவு.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  61. அடடா...அடை அழகு... மணம்தூக்கல்...சர்க்கரையும் நெய்யும் தேன் இனிப்பு + காரச்சுவை மொத்தத்தில் வாய்சுவை.அதனால் வயிறுமோ திறந்து நிறைந்தது. சுவையாக சாப்பிட்டோம். சொல்ல வார்த்தைகள் இல்லை.

    மிக அருமை. பாராட்டுக்கள்.

    உங்களால்தான் இப்படி எல்லாம் சுவைக்கச் சுவைக்க எழுதமுடியும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி December 21, 2012 5:29 AM
      //அடடா...அடை அழகு... மணம் தூக்கல்...சர்க்கரையும் நெய்யும் தேன் இனிப்பு + காரச்சுவை மொத்தத்தில் வாய்சுவை. அதனால் வயிறுமோ திறந்து நிறைந்தது. சுவையாக சாப்பிட்டோம். சொல்ல வார்த்தைகள் இல்லை.

      மிக அருமை. பாராட்டுக்கள்.

      உங்களால்தான் இப்படி எல்லாம் சுவைக்கச் சுவைக்க எழுதமுடியும் வாழ்த்துகள்.//

      வாருங்கள் Ms.மாதேவி Madam, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  62. அடை (யாரு) போல் பதிவு மிக நீளம்
    படித்து முடித்து அடை செய்வதற்குள்
    பசி காதை அடைத்துவிடும்போல் இருக்கிறது
    அடையின் சுவையை பலமுறை அனுபவித்திருக்கிறேன்
    இனி அதோடு உங்கள் நகைசுவையையும் சேர்த்து ரசிப்பேன்.
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. aanandam December 22, 2012 1:54 AM
      //அடை(யாறு) போல் பதிவு மிக நீளம். படித்து முடித்து அடை செய்வதற்குள் பசி காதை அடைத்துவிடும்போல் இருக்கிறது. அடையின் சுவையை பலமுறை அனுபவித்திருக்கிறேன். இனி அதோடு உங்கள் நகைசுவையையும் சேர்த்து ரசிப்பேன். பாராட்டுக்கள்.//

      வாருங்கள் திரு.ஆனந்தம் சார். தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

      ”ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே !” என்பதை நான் என் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் அடிக்கடி உபயோகிப்பதும் உண்டு.

      உதாரணமாக:
      http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_25.html

      http://gopu1949.blogspot.in/2011/12/5-of-5.html

      மனமார்ந்த நன்றிகள் ... அன்புடன் VGK

      நீக்கு
  63. அன்னிக்கு அடை அளித்த விஷய்த்தை இன்னிக்கு என் பதிவுல வந்து சொல்லி இருக்கீங்க இதை நான் ஒத்துக்கமாட்டேன் உங்க ஊர்க்காரப்பெண்ணுக்காக அடை புதியவார்ப்புகள் தேவை!:)
    சும்மா தமாஷுக்கு வைகோ சார்

    அமர்க்களமாய் அடை பத்தி எழுதி இருக்கிங்க சத்தியமா இந்தப்பொறுமை எனக்கு வராது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷைலஜா December 22, 2012 2:33 AM

      வாங்கோ Mrs. ஷைலஜா Madam, வணக்கம்.

      //அன்னிக்கு அடை அளித்த விஷய்த்தை இன்னிக்கு என் பதிவுல வந்து சொல்லி இருக்கீங்க; இதை நான் ஒத்துக்கமாட்டேன்//

      அடடா, நம் அதிராவுக்கு அக்காவா இருக்கிறீர்களே நீங்கள்! ;)))))

      //உங்க ஊர்க்காரப்பெண்ணுக்காக அடை புதிய வார்ப்புகள் தேவை!:)//

      எங்க ஊர் பெண் என்பதால் தான் உங்களுக்கு என் ஸ்பெஷல் அழைப்பு கொடுத்தேனாக்கும். புதிதாக அடை வார்த்துத்தந்தால் போச்சு. No Problem at all.

      //சும்மா தமாஷுக்கு வைகோ சார்//

      நானும் சும்மா தமாஷாக இருக்குமே [உங்களுக்குப் படிக்க] என்று தான் அழைத்தேன்.

      //அமர்க்களமாய் அடை பத்தி எழுதி இருக்கிங்க சத்தியமா இந்தப்பொறுமை எனக்கு வராது!//

      எழுத பொறுமை இல்லாவிட்டால் பரவாயில்லை. அடைக்கு ஊறப்போடவோ, அடைக்கு அரைக்கவோ, அடை வார்க்கவோ அல்லது குறைந்தபக்ஷம் அடை சாப்பிடவோ பொறுமை உண்டு தானே. ;))))) வாங்கோ நம் ஊருக்கும் எங்கள் ஆத்துக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான உரிமையுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  64. வை.கோ. சார்! ஜாமாய்ச்சிருக்கீங்க.. சாங்கோபாங்கமான விவரிப்புக்கு சபாஷ்! எந்த இடத்திலும் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று செயல்முறை விளக்கத்தை ரொம்பவும் அக்கரை எடுத்துக்கொண்டு தயாரித்திருக்கிறீர்கள்.

    ஒரு இடத்தில் கோட்டை விட்டு விடுவீர்களோ என்று எதிர்பார்த்தேன். அந்த தொப்புள் கீறல் இடம்.

    நீங்களாவது விடறதாவது! அந்தத் 'தொ' கீறலில் எண்ணைய் விடுகிற வரை போனதுமல்லாமல், 'சொர்' என்ற சப்த ஸ்வரத்தையும் சொல்லி, ஆனந்தமாக வேகும் என்று முடிந்திருந்ததைப் பார்த்த பொழுது 'ஐயோ,பாவம், அந்த அடை' என்றிருந்தது. 'மொறுமொறு' என்று வேகிறதைப் பார்த்து நமக்குத் தான் ஆனந்தம். அதுக்கோ, சூட்டில் வெந்து தணியும் மேனியெல்லாம்! இல்லையா?.. டூ இன் ஒன்னாக உபயோகிக்க தோசைத் திருப்பியைத் திருப்பி நட்ட நடுவில் கீறிய பொழுது, இந்தப்பக்க அகலப்பகுதி கைமூட்டில் பட்டுச் சுட்டுக் கொண்ட சொந்த அனுபவமும் உண்டு! அதனால் இந்த நடுக்கீறலுக்காகவே தனியாக ஒரு சின்ன ஸ்பூன் வைத்துக் கொள்ளலாம் என்பது என் சஜஷன்.

    அடுத்தாற் போல், அந்த வெல்ல காம்பினேஷன். அடை வயிற்றில் கொஞ்சம் அதிக நேரம் அடைகாத்து ஜீரணம் ஆகிற சமாச்சாரம். மேல் வயிற்று மேல் பாகம் நிறைய தடவைகள் சுருங்கி விரிந்து நசுக்கிக் கூழாக்கி உள்ளே வந்து சேர்ந்ததை நொதநொதக்க வைக்க வேண்டும். அதனால் வாய் கிரைண்டர்லேயே உமிழ்நீரில் முக்குளிக்கிற மாதிரி அதிக நேரம் அரைத்து உள்ளே அனுப்பி வைப்பது உசிதம். அடையை வைத்து வயிற்றை அடைத்தால் அந்தக் காரம் கடாமுடா பண்ணும் என்பதால் தான் அனுசரணை யாக வெல்லம். வெல்ல கெமிஸ்டிரி நன்றாக வேலை செய்யும்.

    நமக்குத் தான் காஸ் சிலிண்டர், மின்சாரம் என்று கவலை. வெளி நாடுகளில் நோ ஒர்ரி! அதனால் அந்தக் கவலைகளும் இல்லை.

    ஒன்று செய்திருக்கலாம், நீங்கள். ஒரு அறிவிப்பு செய்திருக்கலாம். 'இந்த அடைக் கட்டுரையில் ஓரிடத்தில் அடைக்கும், அடை வார்த்தலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு வரி இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு விருது..' என்று ஏதாவது ஏற்பாடு பண்ணியிருக்கலாம். அடைக்குச் சம்பந்தமில்லாத ஒரு வரியையும் இண்ணு இடுக்கில் சேர்த்திருத்திருக்கலாம். வரிக்கு வரி, தலை முதல் வால் வரை ஒரு வார்த்தை தப்பாமல் படிக்கற ஒரு அனுபவம் வாசித்தோருக்குக் கிட்டியிருக்கும்.

    அப்போ, இதுவரையிலான இந்த 136 பின்னூட்டக் கணக்கும் கூடியிருக்குமோ, இல்லை குறைந்திருக்குமோ என்பது உங்கள் யூகத்திற்கு.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK To ஜீவி ஐயா [2]

      //ஒரு இடத்தில் கோட்டை விட்டு விடுவீர்களோ என்று எதிர்பார்த்தேன். அந்த தொப்புள் கீறல் இடம்.

      நீங்களாவது விடறதாவது! அந்தத் 'தொ' கீறலில் எண்ணைய் விடுகிற வரை போனதுமல்லாமல், 'சொர்' என்ற சப்த ஸ்வரத்தையும் சொல்லி, ஆனந்தமாக வேகும் என்று முடிந்திருந்ததைப் பார்த்த பொழுது 'ஐயோ,பாவம், அந்த அடை' என்றிருந்தது.//

      தன்யனானேன் ! ;)))))

      //'மொறுமொறு' என்று வேகிறதைப் பார்த்து நமக்குத் தான் ஆனந்தம். அதுக்கோ, சூட்டில் வெந்து தணியும் மேனியெல்லாம்! இல்லையா?..//

      ஆமாம் அதைப்பார்க்கும் ஆனந்தம் நமக்கு மட்டுமே.

      ஒருவர் ஆனந்தப்பட மற்றொருவர் தன் மேனியை தியாகம் செய்யத்தான் வேண்டியுள்ளது, என்ற உலகத் தத்துவத்தை இந்த அடை நமக்கு ஒருவேளை உணர்த்துகிறதோ! ;)

      //டூ இன் ஒன்னாக உபயோகிக்க தோசைத் திருப்பியைத் திருப்பி நட்ட நடுவில் கீறிய பொழுது, இந்தப்பக்க அகலப்பகுதி கைமூட்டில் பட்டுச் சுட்டுக் கொண்ட சொந்த அனுபவமும் உண்டு!//

      அடடா, தோசைத்திருப்பி என்பதை, கல்லில் உள்ள தோசையையோ அல்லது அடையையோ திருப்பிப்போட மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

      அந்த தோசைத்திருப்பியை எக்காரணம் கொண்டு நாம் திருப்பி உபயோகிக்கக்கூடாது. இதை நான் சொல்ல விட்டுட்டேனோ என்ற விசாரம் வந்து விட்டது, எனக்கு இப்போது. ;)

      //அதனால் இந்த நடுக்கீறலுக்காகவே தனியாக ஒரு சின்ன ஸ்பூன் வைத்துக் கொள்ளலாம் என்பது என் சஜஷன்.//

      தோசைத்திருப்பியின் அகண்ட பாகத்தின் ஓர் விளிம்பினாலேயே அடையின் நடுவே ஓட்டை போட்டுவிடலாம் சார். அதுவே ஈஸியாகத்தான் இருக்கும்.
      தோசைத்திருப்பியின் கைப்பிடியும் பெரியதாக நீளமாக இருப்பதால் சுட்டுக்கொள்ளவும் வாய்ப்பு இல்லை.

      நீங்கள் சொல்வது போல ஒரு சின்ன ஸ்பூன் அதற்கென தனியாகவும் வைத்துக்கொள்ளலாம் தான்.

      ஆனால் இந்த என் குறிப்பினைப்பார்த்து அடை செய்யப்போகிறவர்கள் குறிப்பாக நம் ஆண்கள், அல்லவா!

      அவசரத்தில் அந்த சின்ன ஸ்பூனையே அடைமாவில் கைநழுவி போட்டு விடுவார்களே, சார் ;) அதை எடுக்கிறேன் என கையைச்சுட்டுக்கொள்வார்களே, சார்.

      ஆண்களுக்கு பதட்டம் அதிகம் சார். பெண்கள் போல பொறுமை கிடையாதே சார் !

      >>>>>>


      Delete

      நீக்கு
    2. VGK To ஜீவி ஐயா [3]

      //அடுத்தாற் போல், அந்த வெல்ல காம்பினேஷன். அடை வயிற்றில் கொஞ்சம் அதிக நேரம் அடைகாத்து ஜீரணம் ஆகிற சமாச்சாரம். மேல் வயிற்று மேல் பாகம் நிறைய தடவைகள் சுருங்கி விரிந்து நசுக்கிக் கூழாக்கி உள்ளே வந்து சேர்ந்ததை நொதநொதக்க வைக்க வேண்டும். அதனால் வாய் கிரைண்டர்லேயே உமிழ்நீரில் முக்குளிக்கிற மாதிரி அதிக நேரம் அரைத்து உள்ளே அனுப்பி வைப்பது உசிதம்.//

      ”வாய் என்னும் கிரைண்டர்” சிரித்தேன்.! ;)))))
      ஸ்பெஷல் நன்றிகள்.

      //அடையை வைத்து வயிற்றை அடைத்தால் அந்தக் காரம் கடாமுடா பண்ணும் என்பதால் தான் அனுசரணை யாக வெல்லம். வெல்ல கெமிஸ்டிரி நன்றாக வேலை செய்யும்.//

      “வெல்லக் கெமெஸ்ட்ரியா?” வெல்லம் போல இனிக்கும் தகவலாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள், ஐயா.

      தங்களின் அன்பென்னும் வெல்லத்தில் நானும் இப்போது.

      //நமக்குத் தான் காஸ் சிலிண்டர், மின்சாரம் என்று கவலை. வெளி நாடுகளில் நோ ஒர்ரி! அதனால் அந்தக் கவலைகளும் இல்லை.//

      ஆமாம் ஐயா. இங்கு வருகை தந்த என் பெரிய மகனும், மருமகளும், பேரனும், பேத்தியும் தவித்துத்தான் போய் விட்டார்க்ள்.

      சதா ஸர்வ காலமும் வீட்டிலும், காரிலும், அலுவலகத்திலும், பள்ளியிலும், கடைகளிலும் என எல்லா இடங்களிலும், எப்போதும், ஏ.ஸி.யிலேயே இருந்து பழகி விட்டவர்களால், இன்று நம் தமிழ் நாட்டில் வந்து ஒரு மாதம் தங்கவா முடியும்?

      இது விஷயத்தில் வெளிநாடு வெளிநாடு தான். சந்தேகமே இல்லை.

      நம்மை அங்கு அவர்கள் அன்புடன் அழைத்தாலும் நம்மால் அங்கு நிரந்தரமாகத் தங்க முடியாமால் அல்லவா பல்வேறு இதர விஷயங்கள் குறுக்கீடு செய்கின்றன!

      >>>>>

      நீக்கு
    3. VGK To ஜீவி ஐயா [4]

      //ஒன்று செய்திருக்கலாம், நீங்கள். ஒரு அறிவிப்பு செய்திருக்கலாம். 'இந்த அடைக் கட்டுரையில் ஓரிடத்தில் அடைக்கும், அடை வார்த்தலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு வரி இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு விருது..' என்று ஏதாவது ஏற்பாடு பண்ணியிருக்கலாம்.//

      நகைச்சுவைக்காக ’சிம்ரன்’ ஐக் கொண்டு வந்துள்ளதற்கே ஏகப்பட்ட பேர்கள் நகைச்சுவையாக ஏதேதோ எழுதி மகிழ்ந்துள்ளார்கள்.

      //அடைக்குச் சம்பந்தமில்லாத ஒரு வரியையும் இண்ணு இடுக்கில் சேர்த்திருத்திருக்கலாம். வரிக்கு வரி, தலை முதல் வால் வரை ஒரு வார்த்தை தப்பாமல் படிக்கற ஒரு அனுபவம் வாசித்தோருக்குக் கிட்டியிருக்கும்.

      அப்போ, இதுவரையிலான இந்த 136 பின்னூட்டக் கணக்கும் கூடியிருக்குமோ, இல்லை குறைந்திருக்குமோ என்பது உங்கள் யூகத்திற்கு.//

      தாங்கள் சொல்வது, அனைவரையும் நம் பதிவின் அனைத்து வரிகளையும் வாசிக்க வைக்க நல்லதொரு ஐடியாகத்தான் உள்ளது. தங்கள் ஆலோசனைக்கு என் நன்றிகள்.

      //அன்புடன்,
      ஜீவி//

      இந்த என் பதிவுக்கு, தங்களின் அன்பான வருகையும், அழகான எண்ணப்பகிர்வுகளும் என்னை மிகவும் மகிழ்வித்தது, ஐயா.

      சூடான, சுவையான குணுக்குகளை நிறைய சாப்பிட்ட மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்தி விட்டீர்கள், ஐயா.

      நன்றியோ நன்றிகள்.

      தங்கள் மீது தனிப்பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
    4. ஜீவி December 23, 2012 12:48 AM

      VGK To ஜீவி ஐயா [1]

      வாருங்கள், திரு. ஜீவி ஐயா அவர்களே, வாருங்கள். அடியேனின் அன்பான அனந்த கோடி நமஸ்காரங்கள்.

      //வை.கோ. சார்! ஜாமாய்ச்சிருக்கீங்க.. சாங்கோபாங்கமான விவரிப்புக்கு சபாஷ்! எந்த இடத்திலும் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று செயல்முறை விளக்கத்தை ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொண்டு தயாரித்திருக்கிறீர்கள்.//

      இதைத்தங்கள் வாயிலாகக் கேட்பது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது, சார்.

      >>>>>>

      நீக்கு
  65. அடாடா, என்ன அருமையான அடைகள்!

    நீங்க, இனி , ரெசிபி பதிவுகளாக எழுதுமாறு, கோறுகிறேன்.

    இன்னும் தோசை மிளகாய் பொடி தயார் செய்யும் பதிவு வரவில்லையே?

    பதிலளிநீக்கு
  66. Pattu Raj December 23, 2012 6:08 AM

    அன்புள்ள பட்டு, வாங்கோ, வாங்கோ! அடை ஆறிடும் போலிருக்கே ஆளையே காணுமேன்னு ரொம்ப விசாரப்பட்டேன். நல்லவேளையா வந்து சேர்ந்துட்டீங்கோ. ரொம்பவும் சந்தோஷம்.

    //அடாடா, என்ன அருமையான அடைகள்!//

    தங்களின் அன்பான வருகையைவிடவா, அடைகள் அருமை?

    //நீங்க, இனி, ரெசிபி பதிவுகளாக எழுதுமாறு, கோறுகிறேன்.//

    அதுபோலெல்லாம் எழுத எனக்கும் ரொம்பவும் ஆசைதான். முதலில் எனக்குத் தெரிந்ததைத் தானே நான் எழுத முடியும்? அதனால் அடையையும் குணுக்கையும் எடுத்துக்கொண்டேன்.

    //இன்னும் தோசை மிளகாய் பொடி தயார் செய்யும் பதிவு வரவில்லையே?//

    ஞாபகம் உள்ளது, பட்டு. இதில் தாங்கள் காட்டும் ஆர்வத்தினையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

    ஆனால் அதை வெளியிடுவதில் மிகப்பெரியதொரு சிக்கல் உள்ளது.

    வேண்டாம் இங்கு வேண்டாம். நான் மெயில் மூலம் இதற்கான பதிலைத் தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    தங்களின் அன்பான வருகைக்கும், ஆர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள,
    VGK

    பதிலளிநீக்கு
  67. வை.கோ. சார்,

    சமையல்லே பட்டாசு கிளப்புறீங்க !? சபாஷ்.

    நல்ல சமையல் குறிப்பு.

    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னாடி எங்க சேலத்திலே ஒரு பாலக்காட்டு ஐயர் ஓட்டல் கடை நடத்தி வந்தார். அவர் கடையிலே அடைத்தான் ஸ்பெசல். சூட, தகதகவென முருவல ஒரு பெரிய சைஸ் அடை. பொன்னிறமா இருக்கும். நல்ல வாசனை. இப்போ அதோட தொட்டுக்க அவர் கொடுக்கிறததுதான் ஸ்பெசல்.

    அதாவது, ஒரு சிறு உருண்டை பசு வெண்ணை. அத அடையை தட்டுலே போட்டுட்டு பச்ச்ன்னு ஒரு லாவகமா அடையோட மத்தியிலே ஐயர் போடுவார். அத்தோட மனம் வீசும் கெட்டி சட்டினி. தேங்க சட்னியிலே லைட்டா இஞ்சி வாசமும் வரும். கொஞ்சம் பருப்பு சாம்பார். எல்லாத்துக்கும் மேலே ஒரு தேக்கரண்டி சக்கரை வைப்பார். இதை எல்லாத்தியும் தொட்டு சாப்பிட்ட அப்படியே தேவமிர்தமாக இருக்கும்.

    சூடா ரெண்டு இட்லி, ஒரு அடை. ஒரு பில்டர் காபி (அதாவது ஸ்ட்ராங் சக்கரை ஜாஸ்தி).

    கும்முன்னு இருக்கும்.

    இப்போ அந்த ஐயர் கடை இல்லை. இருந்தாலும் உங்க இந்த பதிவு அந்த நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது.

    நன்றி வை.கோ. சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Advocate P.R.Jayarajan December 23, 2012 10:30 AM

      வாருங்கள் சார், வணக்கம். தங்களைப்பார்த்து சுமார் 11 மாதங்கள் ஆகின்றன. நல்லா இருக்கீங்களா, சார்.

      //வை.கோ. சார்,

      சமையல்லே பட்டாசு கிளப்புறீங்க !? சபாஷ்.
      நல்ல சமையல் குறிப்பு.//

      ரொம்ப சந்தோஷம், சார்.

      >>>>>>

      நீக்கு
    2. VGK To Advocate Mr P.R.Jayarajan Sir [2]

      //சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னாடி எங்க சேலத்திலே ஒரு பாலக்காட்டு ஐயர் ஓட்டல் கடை நடத்தி வந்தார். அவர் கடையிலே அடைத்தான் ஸ்பெசல். சூட, தகதகவென முருவல ஒரு பெரிய சைஸ் அடை. பொன்னிறமா இருக்கும். நல்ல வாசனை. இப்போ அதோட தொட்டுக்க அவர் கொடுக்கிறததுதான் ஸ்பெசல்.

      அதாவது, ஒரு சிறு உருண்டை பசு வெண்ணை. அத அடையை தட்டுலே போட்டுட்டு பச்ச்ன்னு ஒரு லாவகமா அடையோட மத்தியிலே ஐயர் போடுவார். அத்தோட மனம் வீசும் கெட்டி சட்டினி. தேங்க சட்னியிலே லைட்டா இஞ்சி வாசமும் வரும். கொஞ்சம் பருப்பு சாம்பார்.

      எல்லாத்துக்கும் மேலே ஒரு தேக்கரண்டி சக்கரை வைப்பார். இதை எல்லாத்தியும் தொட்டு சாப்பிட்ட அப்படியே தேவமிர்தமாக இருக்கும்.

      சூடா ரெண்டு இட்லி, ஒரு அடை. ஒரு பில்டர் காபி (அதாவது ஸ்ட்ராங் சக்கரை ஜாஸ்தி).

      கும்முன்னு இருக்கும்.//

      தங்களின் இந்த வர்ணனையே கும்முனு ஜிம்மினு அழகாக இருக்கு சார், எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு.

      >>>>>>

      நீக்கு
    3. VGK To Advocate Mr P.R.Jayarajan Sir [3]

      //இப்போ அந்த ஐயர் கடை இல்லை. இருந்தாலும் உங்க இந்த பதிவு அந்த நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது.//

      செப்டெம்பர்/அக்டோபர் 1970 . எனக்கு அப்போது சரியாக 20 வயது. பெரம்பலூரில் மதனகோபாலபுரம் என்ற இடத்தில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் தற்காலிக கிள்ர்ர்க் வேலையில் பணியாற்றி வந்தேன்.

      அங்கிருந்த ஒரே ஒரு பஜாரில் “சரோஜா லாட்ஜ்” என்று பேச்சுலர்ஸ் தங்கும் இடம். அதில் தங்கியிருந்தேன்.

      இப்போது போல பெரம்பலூர் என்பது பெரிய மாவட்டத் தலைநகரம் கிடையாது. அப்போது வெறும் சாதாரண கிராமம. தாலுகா அந்தஸ்து உண்டு.

      பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கரூர் எல்லாமே திருச்சி மாவட்டைட்ச் சேர்ந்ததாக அப்போது இருந்தது,

      திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு மொஃபஸல் பஸ்ஸில் போனால் ரூபாய் 1.50 மட்டுமே டிக்கெட். இடையே பாடாலூர் என்ற இடத்தில் கால் மணி நேரம் பஸ் நிறுத்தப்படும். மொத்தப்பயண நேரம் 2 மணி நேரமாக இருந்தது.

      அன்று பெரம்பலூர் பஜாரில் இருந்தது ஒரே ஒரு ஹோட்டல் மட்டுமே உண்டு. அதன் பெயர் “வின்ஸ் கஃபே” அங்கே தாங்கள் சொல்வது போலவே வியாழக்கிழமை வியாழக்கிழமை மட்டும் மாலையில் சூடான அடை + அவியல் கிடைக்கும்.

      மதிய முழுச்சாப்பாடு [அளவு சாப்பாடு] விலை 50 பைசா மட்டுமே. இந்த அடை ஒன்றின் விலை மட்டும் 60 பைசா.

      2 அடைகளும், ஸ்ட்ராங்கான காஃபியும் [சர்க்கரை சற்றே தூக்கலாகப்போட்டு] சாப்பிடுவது வழக்கம். நான் அவியல் வேண்டாம் எனச்சொல்லி நெய்+ஜீனி வாங்கிக்கொள்வேன்.

      காஃபி விலை 0.25 பைசா மட்டுமே. SBI Clerk ஆன எனக்கு மாதச்சம்பளமே ரூ. 250 மட்டுமே. அது ஒரு பொற்காலம். ஒரு கிராம் தங்கம் வெறும் ரூபாய் 20 மட்டும விற்ற காலம்.

      இப்போது பெரம்பலூர் அப்படியே அடியோடு மாறி விட்டது.
      பெரிய தனி மாவட்ட அந்தஸ்தையும் பெற்று விட்டது. நான் சொல்லும் லாட்ஜோ, ஹோட்டலோ இப்போது அங்கு இல்லவே இல்லை. எவ்வளவோ பல்வேறு மாற்றங்கள்!

      திருச்சியிலும் இப்போது ஒருசில ஹோட்டல்களில் வாரம் ஒருமுறை அடை கிடைக்கிறது. விலை தான் ரூ. 40 முதல் 50 வரை ... அதுவும் ஒரே ஒரு அடை.

      >>>>>>

      நீக்கு
    4. VGK TO Advocate Mr. P R Jayarajan Sir [4]

      //நன்றி வை.கோ. சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நீண்ண்ண்ண்ட கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  68. Advocate P.R.Jayarajan December 23, 2012 7:28 PM
    //Thanks for your reply sir...//

    WELCOME Sir! Thanks for your Thanks Sir. Thanks a Lot, Sir.

    vgk

    பதிலளிநீக்கு
  69. அன்புள்ள வைகோ ஐயா,,

    வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவைக் காண வந்தால். வந்தவுடன் விருந்தோம்பல். சூடாக சுவையாக அடை, எனக்கு மிகவும் பிடித்த உணவு இது. என்னுடைய துணைவியார் அடைக்கு மாவை நான் சாப்பிடும்போது என் வசம் விட்டுவிடுவார்கள். ஏனென்றால் இன்னும் சிறிது சிறிய வெங்காயம் சங்க சக்கரம்போல நிறைய அரிந்து போட்டு ஒன்று அல்லது இரண்டு அடை முழுக்க வெங்காயத்தில் மிதக்கும். சாப்பிடுவேன். எதை சொன்னாலும் சுவையாக சொல்கிறீர்கள். அற்புதமான நடை. அடையின் சுவையோடு அதை பற்றிய இந்தப் பதிவு மேலும் சுவை. சுவைக்கச்சுவைக்க சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. anbalagangomathi December 25, 2012 12:51 AM
      //அன்புள்ள வைகோ ஐயா,,
      வணக்கம். //

      வாருங்கள். வணக்கம். தாங்கள் யார் என எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

      ஆனால் நம் மதிப்புகுரிய திரு. ஹரணி ஐயா அவர்களுக்கு வேண்டியப்பட்டவராகத்தான் இருப்பீர்கள் என நம்புகிறேன். அவருடைய கருத்தும் தங்களின் கருத்து மிகவும் ஒத்துப்போய் உள்ளன.

      ஐயாவின் மாணவராக இருப்பீர்கள் என்றும் தோன்றுகிறது.
      எது எப்படியோ தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். VGK

      நீக்கு
  70. அன்புள்ள வைகோ ஐயா..

    வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின வந்தாலும் சுவையான விருந்தோம்பல் பதிவு. எனக்குப் பிடித்தமான வெகு பிடித்தமான அடை தயாரிப்புப் பதிவு. நான் அடை சாப்பிடும்போது மாவை என் வசம் விட்டுவிடுவார்கள் என்னுடைய மனைவி. நான் சிறிய
    வெங்காயத்தை சங்கு சக்கரம்போல் அரிந்து நிறைய போட்டு வெங்காயம் மிதக்க ஒன்று அல்லது இரு அடைகள் சாப்பிடுவது வழக்கம். எதை செய்தாலும் அதை நேர்த்தியாகவும் சுவையாகவும் பதிவிடுகிறீர்கள். சுவைக்கச் சுவைக்கச் சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ ர ணிDecember 25, 2012 12:56 AM

      //அன்புள்ள வைகோ ஐயா..வணக்கம்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களை இங்கு காண்பது என் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

      //நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் சுவையான விருந்தோம்பல் பதிவு. எனக்குப் பிடித்தமான வெகு பிடித்தமான அடை தயாரிப்புப் பதிவு.//

      இதைக்கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, ஐயா. மிக்க நன்றி ஐயா.

      //நான் அடை சாப்பிடும்போது மாவை என் வசம் விட்டுவிடுவார்கள் என்னுடைய மனைவி.//

      அடடா, எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி இது. ;)

      //நான் சிறிய வெங்காயத்தை சங்கு சக்கரம்போல் அரிந்து நிறைய போட்டு வெங்காயம் மிதக்க ஒன்று அல்லது இரு அடைகள் சாப்பிடுவது வழக்கம்.//

      சங்குச்சக்ரம் [தீபாவளி தரைச்சக்கரம்] மிகவும் ரஸிக்கக்கூடிய உதாரணம் இது. சிரித்தேன். அவ்வாறு வெங்காயம் மிதக்க மிதக்க அடை சாப்பிடுவது எவ்வளவு ஜோராக இருக்கும்! ;) நம்மைப்போல நன்கு அனுபவித்தவர்களுக்கே அது தெரியும்.

      //எதை செய்தாலும் அதை நேர்த்தியாகவும் சுவையாகவும் பதிவிடுகிறீர்கள். சுவைக்கச் சுவைக்கச் சுவை.//

      ஐயா, தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  71. அப்பா!!! அடை வார்ப்பதில் இத்தனை விளக்கங்களா?.. மிகப் பொறுமையாக அடைச்சுவையோடு நகைச்சுவையும் கலந்து பதிந்திருக்கிறீர்கள் சார். நன்றி. அது சரி. என்ன அது அடுப்பை சிம்ரனில் வை ஜோதிகாவில் வை என்று பேச்சிலர்ஸை அடை வார்ப்பதில் இருந்து டைவர்ட் செய்கிறீர்களே? பாவம் இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. SOS December 26, 2012 11:35 PM

      வாருங்கள் Mrs. HEMA Madam. WELCOME! வணக்கம்.

      //அப்பா!!! அடை வார்ப்பதில் இத்தனை விளக்கங்களா?..//

      அப்பா, அடை வார்ப்பதால் தான் இத்தனை விளக்கங்கள்.

      அம்மா, அடை வார்த்தால் எந்த விளக்கங்களும் தேவைப்படாது! ;)))))

      //மிகப் பொறுமையாக அடைச்சுவையோடு நகைச்சுவையும் கலந்து பதிந்திருக்கிறீர்கள் சார். நன்றி.//

      செய்யச்சொல்வது ஆண்களை அல்லவா! அதனால் அவர்களுக்கு எந்த சந்தேகமும் வந்து, பெண்களைக் கேட்டு தொந்தரவு செய்ய்க்கூடாது என்பதால் பொறுமையான என் விளக்கங்கள்.

      கடுப்பு இல்லாமல் சந்தோஷமாக மட்டுமே செய்து சாப்பிட வேண்டும் என்பதால் நடுவில் நகைச்சுவைகள்.

      தங்கள் நன்றிக்கு நன்றி.

      //அது சரி. என்ன அது அடுப்பை சிம்ரனில் வை ஜோதிகாவில் வை என்று பேச்சிலர்ஸை அடை வார்ப்பதில் இருந்து டைவர்ட் செய்கிறீர்களே? பாவம் இல்லையோ?//

      தங்களின் இந்த நகைச்சுவை சூப்பரோ சூப்பர். சிரித்து மகிழ்ந்தேன்.

      பாவம் தான் ... மிகவும் கஷ்டம் தான்; இந்த பேச்சிலர்ஸ் பாடு. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இந்த என் அடைப்பதிவுக்குத் தங்களின் மஞ்சு அக்கா வருகை தரவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது.

      அவர்களுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். வருத்தமாக உள்ளது.

      என் அன்புத்தங்கை மஞ்சுவின் குட்டித்த்ங்கையான தாங்கள் வருகை தந்தது சந்தோஷமாக உள்ளது. நன்றியோ நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  72. 1] மிகவும் அலுத்துப்போய் விடக்கூடும்.
    2] அதிக பணச்செலவினை ஏற்படுத்தும்.
    3] சிலர் உடம்புக்கு ஒத்து வராது
    4] மன நிறைவு ஏற்படாமல் போகும்
    5] ருசியில்லாமல் பசிக்காக மட்டும் சாப்பிட வேண்டிய
    கட்டாயத்தினை ஏற்படுத்தும்.// இது எல்லாமே மொத்தமா இருக்கும் ஐயா...
    அன்புள்ள அறிவுள்ள ஆண்களே! // என்ன ஐயா வஞ்சப் புகழ்ச்சியா??? அந்த "பேச்சிலர் " ம்ம்ம் ரொம்ப அருமைதான்... அடை செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் அடி எதுவும் விழுந்துச்சான்னு:-) ...

    பதிலளிநீக்கு
  73. Robert December 27, 2012 4:50 AM

    வாருங்கள் Mr. ROBERT Sir,WELCOME! வணக்கம்.

    1] மிகவும் அலுத்துப்போய் விடக்கூடும்.
    2] அதிக பணச்செலவினை ஏற்படுத்தும்.
    3] சிலர் உடம்புக்கு ஒத்து வராது
    4] மன நிறைவு ஏற்படாமல் போகும்
    5] ருசியில்லாமல் பசிக்காக மட்டும் சாப்பிட வேண்டிய
    கட்டாயத்தினை ஏற்படுத்தும்.//

    இது எல்லாமே மொத்தமா இருக்கும் ஐயா... //

    ஆம் இது எல்லாமே மொத்தமாகத்தான் இருக்கும், இருக்கக்கூடும்.

    //அன்புள்ள அறிவுள்ள ஆண்களே! //

    என்ன ஐயா வஞ்சப் புகழ்ச்சியா???//

    இல்லை வஞ்சப்புகழ்ச்சி அல்ல. ஆண்கள் அன்புள்ளவர்கள், அறிவும் உள்ளவர்கள் தான். எதற்கும் ஒரு எச்சரிக்கை, அவசரத்தில் ஞாபக மறதியாக தவறேதும் நடந்து விடக்கூடாதே என்று.

    ஒரு வீட்டில் இது போல நடந்தது. மனைவி எங்கோ ஊருக்கு அவசரமாகப்புறப்பட வேண்டிய நிலைமை. தான் மாவு அரைத்த மிக்ஸி அருகே உள்ள எல்லாவற்றையும் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள், வேலைக்காரி வந்து சுத்தமாகத் தேய்த்துத் தருவாள் என்று தன் கணவரிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.

    கணவன் அதுபோலவே எல்லாவற்றையும் பாத் ரூமில் ஒரு பக்கெட் ஜலத்தில் ஊறப்போட்டு விட்டார். மிக்ஸியை அதன் ஒயருடன் சேர்த்து வேறு ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் ஒரே அமுக்காக அமுக்கி வைத்து விட்டார்.

    வேலைக்காரி வந்து “இது என்ன சாமி, இதைப்போய் இப்படித் தண்ணீரிலே ஊறப்போட்டு வெச்சிருக்கீங்க” என்றாள்.

    “அதில் நிறைய மாவு சிந்தியிருந்தது. அசிங்கமாக இருந்தது. அதனால் ஊறட்டுமே எனப் போட்டு வைத்துள்ளேன்” என்றார் நம்மாளு.

    இதுபோன்ற சில அப்பாவி ரங்கமணிகளும் ஆங்காங்கே உண்டு. அதனால் அவ்வாறு ஓர் எச்சரிக்கை கொடுத்துள்ளேன்.

    //அந்த "பேச்சிலர் " ம்ம்ம் ரொம்ப அருமைதான்... அடை செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் அடி எதுவும் விழுந்துச்சான்னு:-) ...//

    சொல்லியுள்ள முறைப்படி அடை செய்து கொடுத்தால் அடி எப்படி விழும்?

    மேலும் எப்போதுமே ’அடிக்கிற கை தான் அணைக்கும்’ என்பார்கள்.

    அதனால் தைர்யமாக அடிக்கும் கைக்கும் அடை செய்து கொடுங்கள். அணைத்தாலும் அணைக்கலாம்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
  74. இந்த அடை பதிவுல எங்க அம்மா சொல்லற ஒரு மினி கதையை சொல்லணும்ன்னு நினைச்சேன்.

    ஒரு மருமகள் ரெண்டு அடை வார்த்து வைத்தாளாம்.

    மாமியார் ரொம்ப சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்து “ஏம்மா எனக்கொண்ணு, என் புள்ளைக்கொண்ணுன்னு ரெண்டே ரெண்டு அடை வார்த்து வெச்சிருக்கியே, நீ என்னடீம்மா பண்ணுவ’ன்னு கேட்டாளாம்.

    அதுக்கு மாமியாரையும் விட சாமர்த்தியமான மருமகள் “அதனால என்னம்மா, நீங்க பாதி, உங்க புள்ள பாதி குடுத்தா என் பொழுது போயிடும்’ன்னு சொன்னாளாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ திருமதி ஜயந்தி ரமணி மேடம். வணக்கம்.

      தங்களின் மீண்டும் வருகை மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      தங்கள் தாயார் தங்களுச்சொன்ன கதை அதைவிட சந்தோஷமாக உள்ளது. சிரித்து மகிழ்ந்தேன்.

      என் மனைவியிடமும் பகிர்ந்து கொண்டேன். அவளும் சற்று நேரம் யோசித்துவிட்டு அதன் பிறகு சிரித்தாள்.

      சரியான மாமியார், அதற்கேற்ற மருமகள்.

      என் அப்பா இதுபோல நிறைய கதைகள் மிகவும் நகைச்சுவையாகச் சொல்வார். கேட்டுள்ளேன். எல்லாமே குட்டிக்குட்டியாக இருக்கும்.

      இது கூட நான் கேட்டு ரஸித்துள்ளேன். இருப்பினும் மீண்டும் நீங்கள் இதை இங்கு சொல்லி நினைவூட்டியதும் பலமாகச் சிரித்தேன்.


      >>>>>>>

      நீக்கு
    2. VGK To Mrs. Jayanthi Madam [2]

      இதே அடையைப்பற்றி என்னிடம் இன்னொரு குட்டிக்கதை நகைச்சுவையாக உள்ளது. இப்போது நேரம் இல்லாததால் இங்கு தெரிவிக்க முடியவில்லை. கட்டாயம் அதையும் உங்களுக்குச் சொல்வேன், ஓரிரு நாட்களுக்குப்பிறகு.

      புத்திசாலியான மருமகள் / மனைவி கதைகள் நான் இரண்டு வெளியிட்டுள்ளேன். தயவு செய்து படித்துவிட்டுக் கருத்துக் கூறுங்கள்.

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html

      [புத்திசாலியானதோர் மனைவியின் செயல்]


      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html

      சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]

      [புத்திசாலியானதோர் மருமகளின் செயல்]

      இவை இரண்டையும் படித்துவிட்டு உங்கள் அம்மாவிடமும்
      ப்கிர்ந்து கொள்ளுங்கள்.

      அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  75. VGK To Mrs. JAYANTHI Madam

    அன்புள்ள திருமதி ஜயந்தி மேடம். இதோ உங்களுக்கு நான் சொல்வதாகச் சொன்ன அடை பற்றிய மற்றொரு குட்டிக்கதை.
    ========================================================

    இது நடந்தது அந்தக்காலம். ரொம்பவும் பழைய காலம். பல வீடுகளில் மின்சார இணைப்பு கிடையாது. அதுவும் கிராமத்தில் சுத்தமாக மின் இணைப்புகளே இல்லாத காலக்கட்டம் அது.

    ஒரு மாப்பிள்ளை சாயங்காலம் அஸ்தமிக்கும் வேளையில் கிராமத்தில் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு ஏதோ ஒரு வேலையாகப் போகிறார்.

    வீட்டில் மாமியார் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

    தீடீரென்ற மாப்பிள்ளை வருகையினால் அந்த மாமியாருக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை.

    மாப்பிள்ளையை வரவேற்று கிராமத்து பட்டாசாலையில் [ஹாலில் ] ஒரு ஓலைத் தடுக்குப் பாயைப்போட்டு அமரச்சொல்லி உபசரித்து, குடிக்கத் தண்ணீர் ஒரு சின்ன சொம்பில் வைக்கிறாள்.

    சூடாக அடை வார்த்துத் தருவதாகச்சொல்லி கொல்லைப்புற கோட்டை அடுப்பில் அடைக்கல்லைப்போட்டு அவசரமாக அடுப்பை விறகு முதலியவற்றால் எரிய விட்டு அடை வார்த்து முதல் இரண்டு அடையை எடுத்து ஒரு கெட்டியான விராட்டியின் மேல் வைத்து எடுத்து வருகிறாள்.

    [வாழை இலை அல்லது இலைச்சரகு முதலியன இல்லாவிட்டால், தட்டில் வைக்காமல், ஒரு அவசர ஆத்திரத்திற்கு இது போல காய்ந்த விராட்டியின் மீது வைத்து சாப்பிடக்கொடுப்பது, அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் வழக்கமாம்]

    மாப்பிள்ளையிடம் வந்து விராட்டி மேல் வைத்துள்ள இரண்டு அடைகள் மேல் வெல்லப்பொடியை போட்டு நெய் ஊற்றி கொடுத்துவிட்டு, ஒரு சிறிய சிம்னி விளக்கையும் ஏற்றி அவர் அருகே வைத்துவிட்டு, தான் மற்றொரு சிம்னி விளக்குடன் அடுத்த அடையை வார்த்து எடுத்து வர அவசரமாகக் கொல்லைப்பக்கம் போனாளாம்.

    அதற்குள் தனக்கு இருந்த அகோரப்பசிக்கு மளமளவென்று அடையைச் சாப்பிட்ட மாப்பிள்ளை எழுந்து கை அலம்ப கொல்லைப்புறம் கிணற்றடிக்குச் சென்றாராம்.

    இதை கவனித்த மாமியார், ”இருங்கோ மாப்பிள்ளை! இன்னும் ஒரே ஒரு அடை சூடாகக் கொண்டு வந்து போடுகிறேன்” என்றாளாம்.

    ”போதும் போதும் இதுவே வயிறு முட்டி விட்டது” என்றாராம் மாப்பிள்ளை.

    சரியென்று மாமியாரும் சூடாகக் காஃபியைக் கலந்து டவரா டம்ளரில் ஆத்தி எடுத்து வந்து மாப்பிள்ளைக்குக் கொடுத்து விட்டு, அந்த விராட்டியை அப்புறப்படுத்தி, கொல்லைப்பக்கம் கொண்டுபோய்ப் போட வேண்டித் தேடினாளாம்.

    அதையே அங்குக் காணவில்லையாம்.

    மாப்பிள்ளையே ஒருவேளை, கொல்லைப்புறம் அதைத் தூக்கி எறிந்து விட்டு, கிணற்றடியில் கை அலம்பி வந்திருப்பாரோ என நினைத்த மாமியார், அது விஷயமாக மாப்பிள்ளையிடமே மெதுவாக தயங்கியபடி விசாரித்தாளாம்.

    ”அடடா! விராட்டி மேல் அடையை வைத்துக் கொடுத்திருந்தீர்களா?
    நான் கடைசியாக அந்த மூன்றாவது அடையைச் சாப்பிட்ட போதே நினைத்தேன். முதல் இரண்டு அடை போல இது ருசியாக இல்லையே, ஏதோ மாட்டுச்சாணி போல வாசனை அடிக்கிறதே என்று” எனச்சொன்னாராம்.

    இதைக்கேட்ட மாமியாருக்கு ஒரே வெட்கமாகிப்போனதாம்.

    பிறகு தன் பொண்ணு வந்த போது இதைச்சொல்லிச்சொல்லி வருத்தப்பட்டாளாம்.

    சரி விடும்மா ...... அவர் எப்போதுமே இப்படித்தான்,
    சமத்து போதாது, எல்லாம் என் தலையெழுத்து என்றாளாம்.

    இது எப்படி இருக்கு?

    தயவுசெய்து கருத்துக்கூறுங்கோ, ப்ளீஸ்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. [வாழை இலை அல்லது இலைச்சரகு முதலியன இல்லாவிட்டால், தட்டில் வைக்காமல், ஒரு அவசர ஆத்திரத்திற்கு இது போல காய்ந்த விராட்டியின் மீது வைத்து சாப்பிடக்கொடுப்பது, அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் வழக்கமாம்]

      புதுசு, புதுசா நிறைய தெரிஞ்சுக்கறோம் உங்க கிட்ட இருந்து.

      ஆனா இந்த காலத்துல இப்படி கொடுத்தா. அது சரி, வரட்டின்னா என்னன்னு கேப்பா முதல்ல.

      //சரி விடும்மா ...... அவர் எப்போதுமே இப்படித்தான்,
      சமத்து போதாது, எல்லாம் என் தலையெழுத்து என்றாளாம்.//

      இந்த காலத்துல தலையெழுத்தையெல்லாம் அவாவாளே மாத்திண்டுடுவா.

      நீக்கு
    2. கோபு >>>>> திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்.

      *****வாழை இலை அல்லது இலைச்சரகு முதலியன இல்லாவிட்டால், தட்டில் வைக்காமல், ஒரு அவசர ஆத்திரத்திற்கு இது போல காய்ந்த விராட்டியின் மீது வைத்து சாப்பிடக்கொடுப்பது, அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் வழக்கமாம்*****

      //புதுசு, புதுசா நிறைய தெரிஞ்சுக்கறோம் உங்க கிட்ட இருந்து.//

      எனக்கும் இதுபற்றி ஒன்றுமே தெரியாது மேடம். எங்க அப்பா என்னிடம் சொன்னது. ஒரு 100-120 வருடங்களுக்கு முன்பு வழக்கத்தில் இருந்திருக்குமோ என்னவோ.

      எங்க அப்பா பிறந்த வருஷம் 1901. இப்போ அவர் உயிரோடு இருந்தால் அவர் வயது 112 இருக்கும்.

      அவருக்கு அவரின் அப்பா [அதாவது என் தாத்தா] சொல்லியிருப்பாரோ என்னவோ.

      //ஆனா இந்த காலத்துல இப்படி கொடுத்தா. அது சரி, வரட்டின்னா என்னன்னு கேப்பா முதல்ல.//

      அதுசரி, ஆமாம்... அதுபோலத்தான் நம் குழந்தைகள் + பேரன் பேத்திகள் முதலியோர் கேட்கக்கூடும்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு

    3. கோபு >>>>> திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்.

      *****சரி விடும்மா ...... அவர் எப்போதுமே இப்படித்தான், சமத்து போதாது, எல்லாம் என் தலையெழுத்து என்றாளாம்.*****

      //இந்த காலத்துல தலையெழுத்தையெல்லாம்
      அவாவாளே மாத்திண்டுடுவா.//

      மிகச்சரியாகவே சொல்லிட்டேள் ... சந்தோஷம். ;)))))

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  76. அட..அட.. அடை.. செம ருசி.

    கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கி அதுலயே நறுக்கிய வெங்காயத்தை வதக்கி மாவில் சேர்த்து அடை வார்த்தா அருமையாயிருக்கும். தொட்டுக்க தேங்காத்துவையலும் இருந்தா சொர்க்கம்தான் :-)

    பதிலளிநீக்கு
  77. //அமைதிச்சாரல் December 29, 2012 10:28 AM

    வாருங்கள் மேடம். வணக்கம்.

    //அட..அட.. அடை.. செம ருசி.//

    மிகவும் சந்தோஷம்.

    //கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கி அதுலயே நறுக்கிய வெங்காயத்தை வதக்கி மாவில் சேர்த்து அடை வார்த்தா அருமையாயிருக்கும்.//

    ஆமாம். அந்த வதங்கிய வெங்காயம் ஒரு தனி டேஸ்ட் தான்.
    நானும் அவ்வாறு செய்து சாப்பிட்டுள்ளேன். பெரும்பாலும் ஹோட்டல்களில் வெங்காய ஊத்தப்பத்திற்கும் இது போலவே செய்கிறார்கள். வெங்காயம் லேசாக வதங்கியும் கருகியும் ஒரு மாதிரி ருசியாகத்தான் இருக்கும்.

    //தொட்டுக்க தேங்காத்துவையலும் இருந்தா சொர்க்கம்தான் :-)//

    ஹைய்யோ, நீங்கள் என்னைப்போலவே டேஸ்ட் உள்ளவர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக அடை என்பது காரசாரமாகவே இருக்கும். அதனால் வெல்லப்பொடி, வெண்ணேய், நெய் போன்றவை தொட்டுக்கொள்ள விரும்பப்படுகிறது.

    தேங்காய் துவையல் என்பதையும் எங்கள் வீட்டில் நல்ல காரசாரமாகவே செய்வோம். அந்தத்தேங்காய் துவையலை நினைத்து இப்போ டைப் அடிக்கும் போதே நாக்கில் நீர் ஏற்படுகிறது. உடனே இப்போதே தேங்காய்த்துவையல் அரைத்து ஒரு கரண்டி அளவு திங்கனும் போல ஆசையாக உள்ளது. கடுகு உளுத்தம்பருப்பெல்லாம் போட்டு தாளிச்சு பெருங்காய மணமாக துவையலே ஜோர் தான். அதனுடன் அடையும் என்றால் கேட்கவா வேண்டும். தாங்கள் சொல்வதுபோல சொர்க்கம் தான். ;)))))

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ருசியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  78. அசத்தலான பாடலுடன் அடை ரெடி. எனக்கும் என் அம்மா இட்லிக்கு மாவு தயார் செய்யும் போதே அந்த மாவிலும் எங்களுக்கு அடை செய்து கொடுத்தது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  79. Sasi Kala December 30, 2012 2:20 AM
    //அசத்தலான பாடலுடன் அடை ரெடி. எனக்கும் என் அம்மா இட்லிக்கு மாவு தயார் செய்யும் போதே அந்த மாவிலும் எங்களுக்கு அடை செய்து கொடுத்தது நினைவுக்கு வருகிறது.//

    வாங்கோ கவிதாயினி Ms. Sasi Kala Madam, வணக்கம்.

    தலைப்புப் பாடல் வரிகளை தாங்கள் ரஸித்து எழுதியுள்ளது அருமை. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள்.

    இந்த வாரம் 24-30/12/2012 வலைச்சரத்தில் திருமதி உஷா அன்பரசு என்பவர் [இந்த வலைச்சர ஆசிரியர்] தங்களைப் பாராட்டி தங்களின் சில படைப்புகளை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  80. MAIL MESSAGE FROM sury Siva Sir To me

    sury Siva has left a new comment on the post "SWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]":

    // சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.//

    இப்பதான் எனக்கு இதன் அர்த்தமே புரிகிறது.

    அடடே !! அடை பண்ணினாலும் அடடா !! என்ன அடை ,
    அதற்கு மோர்க்குழம்பு தொட்டுக்க இருந்தால் இன்னும் சுகம்.

    இருந்தாலும் வாய்க்கு ஒத்துக்கற சமாசாரங்கள் வயித்துக்கு சரிவருவதில்லை.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK TO Mr SURI SIVA Sir

      வாங்கோ உயர்திரு. சூரி சிவா அவர்களே, நமஸ்காரங்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      அன்புடன்
      VGK
      -=-=-=-=-=-=-=-=-=-


      பின் குறிப்பு:

      [உங்களின் இந்தப்பின்னூட்டம் என்னுடைய “ஸ்வீட் சிக்ஸ்டீன்” என்ற பதிவினில் உள்ளது. அதை இப்போது தான் கவனித்தேன். அதனால் இங்கு கொண்டுவந்து விட்டேன்.

      சுப்புத்தாத்தா அவருடையதை கொண்டுபோய் ஏன் ஸ்வீட் சிக்ஸ்டீனில் நுழைக்க நினைத்தார் என்பது தான் எனக்குப் புரியவே இல்லை. ;)))))

      மேலும் சுப்புத்தாத்தா அவர்கள் நுழைக்க நினைத்த இது நேரிடையாக ஸ்வீட் சிக்ஸ்டீனால் உள் வாங்கிக்கொள்ள விருப்பப்படாமல்,மறுக்கப்பட்டு SPAM இல் போய் உட்கார்ந்து விட்டது.

      தகவலுக்காக மட்டும்.]

      நீக்கு
  81. Vanakkam Gopu sir. Nalama? Sorry I could not check my mail due to personal priorities. gamagamakum crispy post. Enjoyed every bite of it Gopu sir. So forwarded your entry for the contest? Best wishes. Now looking forward to more of your aromatic posts from your kitchen :-)

    பதிலளிநீக்கு
  82. Mira December 30, 2012 9:03 PM
    Vanakkam Gopu sir. Nalama? Sorry I could not check my mail due to personal priorities. gamagamakum crispy post. Enjoyed every bite of it Gopu sir. So forwarded your entry for the contest? Best wishes. Now looking forward to more of your aromatic posts from your kitchen :-)

    //வணக்கம் கோபு சார், நலமா?
    - மீரா //

    வாங்கோ மீரா, வணக்கம். நான் நலம் தான்.

    நீங்க நல்லா இருக்கீங்களா? செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

    //கமகமக்கும் முறுகலான அடைப்பதிவு. ஒவ்வொரு துளியையும் மிகவும் ரஸித்துப்படித்தேன்.//

    மிக்க நன்றி, மீரா. மிகவும் சந்தோஷமாக உள்ளது, உங்களின் அன்பான வருகையும் கருத்துக்களும்.

    //இதைப்போட்டிக்கு அனுப்பினீர்களா? வாழ்த்துகள்.//

    நானாக அனுப்பவில்லை. எனக்கு அதை எப்படி அனுப்ப வேண்டும் என்றும் தெரியவில்லை.

    ஆனால் போட்டியைப்பற்றிய இணைப்பினை அனுப்பி வைத்து அவர்களாகவே என்னை அழைத்தார்கள். எழுதத்தூண்டினார்கள்.

    அதுபோல அவர்களாகவே போட்டிக்கு இதனை எடுத்துக் கொண்டுள்ளதாகவும், சேர்த்துக்கொண்டதாகவும் சொன்னார்கள். எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

    ஆனால் போட்டியில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இதை எழுதவில்லை.

    //இனி நாங்கள் உங்கள் சமையலறையிலிருந்து இது போன்ற மணமும் ருசியும் நிறைந்த பல பதிவுகளை மேலும் மேலும் எதிர்பார்க்கலாம் தானே? //

    எதிர்பார்ப்பதில் ஒன்றும் தப்பு இல்லை, மீரா. தாராளமாக எதிர் பாருங்கோ.

    நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மீரா.

    இனிய புத்தாண்டு [2013] நல்வாழ்த்துகள், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்.

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  83. வணக்கம் கோபு சார். நான் இன்றுதான் புதிதாக வலைப்பூ தொடங்கி இருக்கிரேன். வந்து ஆசிர்வதிக்கணும்.

    பதிலளிநீக்கு
  84. பூந்தளிர் January 1, 2013 5:00 AM
    வணக்கம் கோபு சார். நான் இன்றுதான் புதிதாக வலைப்பூ தொடங்கி இருக்கிறேன். வந்து ஆசிர்வதிக்கணும்.
    ====

    வாருங்கள், வணக்கம். தங்களின் புதிய வலைப்பூப் பக்கம் வருகை தந்து கருத்தும் கூறி ஆசிர்வதித்துள்ளேன். இதோ அது கீழேயும் உள்ளது:

    -=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புடையீர், வணக்கம். இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள். புதிதாகத் துவங்கியுள்ள இந்த தங்களின் வலைப்பூவுக்கும் வாழ்த்துகள்.

    தொடர்ந்து சிறப்பான பயனுள்ள படைப்புகளாகத் தாருங்கள்.

    ஓரளவு முடிந்தவரை தமிழில் எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுத முயற்சிக்கவும்.

    ’இருக்கிரேன்’ என்பது “இருக்கிறேன்” என்றும்

    ‘கொடுக்கிரேன்’ என்பது “கொடுக்கிறேன்”என்றும்

    எழுதப்பட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

    அன்புடன் VGK

    -=-=-=-=-=-=-=-=-=-=-

    பதிலளிநீக்கு

  85. சார்! நான் அடை சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் அதற்கு முன் இத்தனை வேலைகள் இருப்பதை நான் அறியவில்லை! படம் பார்த்தாலே சாப்பிட தூண்டுகிறது!

    தெளிவான விளக்கம் செய்து பார்க்க ஆசையை தூண்டுகிறது சார்! அம்மாவுக்கு ஒரு நாள் செய்து கொடுக்க வேண்டும்! அடுப்பு, மிக்சி, அடைக்கல்லை பயன்படுத்துகிற அடிப்படை நன்கே அற்வேன் அதனால் விரைவில் செய்து பார்த்துவிட்டு எனது அனுபவத்தை பகிர்கிறேன் சார்!

    புதிதாக சமையல் கலை பயில்பவர்களுக்கு (பேச்சலர்களுக்கு) மிகத்தெளிவாக அடுப்பு, மிக்சியை கையாளும் முறை, மாவை பக்குவமாக அறைப்பது பற்றிய விளக்கம் மிக அருமை சார்! பகிர்வுக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யுவராணி தமிழரசன் January 1, 2013 11:29 AM

      வாங்கோ யுவராணி, வணக்கம். செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? புத்தாண்டின் முதல் நாளில் தங்களை நான் இங்கு மீண்டும் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //சார்! நான் அடை சாப்பிட்டிருக்கிறேன்//

      மிகவும் சந்தோஷம்மா.

      //ஆனால் அதற்கு முன் இத்தனை வேலைகள் இருப்பதை நான் அறியவில்லை!//

      தங்களின் அன்புத்தாயார் செய்து கொடுத்ததை அழகாகச் சாப்பிட்டிருப்பீர்கள், இதுவரை.

      அதெல்லாம் ஒன்றும் பெரிய வேலைகளே அல்ல யுவராணி. மிகவும் சாதாரண வழக்கமான, சின்னச்சின்ன விஷயங்கள் தான், யுவராணி.

      முக்கியமாக ஆண்களுக்காகவும், உங்களைப்போன்று இதுவரை அதிகமாக சமையல் அறைப்பக்கமே செல்லாமல் செல்லமாக வளர்ந்துவிட்ட ஒரு சில பெண்களுக்காகவும், ஓர் முன்னெச்சரிக்கைக்காகவும், பாதுகாப்புக்காகவும், இங்கு ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களும், ஊதி ஊதி பெரியதாக்கப்பட்டு, சற்றே விளக்கமாக, சந்தேகத்துக்கு இடமில்லாமல் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

      இதுவரை படிப்பிலேயே முழுவதுமாக மூழ்கிவிட்ட உங்களைப் போன்ற இளம் வயது பெண்களுக்கும் இது நிச்சயமாகப் பயன்படக்கூடும்.

      //படம் பார்த்தாலே சாப்பிட தூண்டுகிறது!//

      ஆஹா, அழகாகச் சொல்லியுள்ளீர்கள், யுவராணி

      >>>>>>>

      நீக்கு
    2. VGK To யுவராணி [2]

      //தெளிவான விளக்கம் செய்து பார்க்க ஆசையை தூண்டுகிறது சார்! அம்மாவுக்கு ஒரு நாள் செய்து கொடுக்க வேண்டும்!//

      சந்தோஷம். தங்கள் கையால் தங்கள் அம்மாவுக்கு ஒருநாள் அடை செய்து கொடுத்து அசத்துங்கள்.

      அதனால் திருக்குறளில் சொன்னது போல ஊரே உங்களைப் பாராட்டலாம்; அம்மாவும் மகிழலாம் .....

      ”மகள் தாய்க்கு வார்க்கும் ’அடை’யுதவி
      இவள் தாய் என்னோற்றாள் கொள் எனும் சொல்”

      //அடுப்பு, மிக்சி, அடைக்கல்லை பயன்படுத்துகிற அடிப்படை நன்கே அறிவேன்.

      ஆஹா, பின்ன என்ன? பின்னி எடுத்து விடலாம் நீங்கள்.

      //அதனால் விரைவில் செய்து பார்த்துவிட்டு எனது அனுபவத்தை பகிர்கிறேன் சார்!//

      அனுபவத்தை மட்டுமல்ல அடையையும் எனக்குப்பகிர வழக்கம்போல் அலைபேசியில் அழைப்பு வர வேண்டும்.

      உங்கள் ஊரான ஈரோடு சத்தியமங்கலம் போன்ற பகுதிகளையெல்லாம் நானும் பார்க்க வேண்டாமா, யுவராணி? ;)))))

      >>>>>>>

      நீக்கு
    3. VGK To யுவராணி [3]

      //புதிதாக சமையல் கலை பயில்பவர்களுக்கு (பேச்சலர்களுக்கு) மிகத்தெளிவாக அடுப்பு, மிக்சியை கையாளும் முறை, மாவை பக்குவமாக அரைப்பது பற்றிய விளக்கம் மிக அருமை சார்! பகிர்வுக்கு நன்றி சார்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், யுவராணி.

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      இந்தப்புத்தாண்டில் தங்களின் மனவிருப்பம் போல ஓர் வங்கியின் அதிகாரியாகப் பணியில் அமர்ந்து, தங்களை அண்டியவர்களுக்கு, ‘அடை’ வார்க்கவே என்றாலும், வங்கி லோனை, அடைமழைபோல அள்ளி அள்ளி வழங்கிடுமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      தாங்கள் மனதில் நினைத்தது நினைத்தபடி சீக்கரமே நடக்க மனதார ஆசீர்வதிக்கிறேன், யுவராணி.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  86. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Avargal Unmaigal January 1, 2013 1:51 PM

      வாங்கோ என் அன்புத்தம்பி .. தங்கக்கம்பீ ..
      ‘மதுரைத்தமிழன்’ அவர்களே, வணக்கம்.

      //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

      தங்களின் இந்தப் புத்தாண்டு வாழ்த்துகள் என்னையும் என் குடும்பத்தாரையும் புல்லரிக்க வைத்துள்ளது.

      [நாங்கள் எல்லோரும் இப்போது சீப்பும் கையுமாக ! ;) ]

      //2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்.//

      ஆஹா, நம்பிக்கைகள் ஆசைகள் கனவுகள் ஏதும் இதுவரை இல்லாமல் தவித்துக்கொண்டல்லவா இருக்கிறேன், நான்.

      அவைகள் என்னை என்றும் அண்டாமல் இருக்க வேண்டும் என்பது வேண்டுமானால் கைகூடட்டும்.

      //அன்புடன் மதுரைத்தமிழன்//

      அன்புடன் தங்கள்
      குறும்புக்கார இளைஞன்

      நீக்கு

  87. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் கி. பாரதிதாசன் January 1, 2013 2:14 PM

      ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      கவிஞர் கி. பாரதிதாசன், பிரான்சு,
      01.01.2013, kambane2007@yahoo.fr //

      வாருங்கள் கவிஞர் ஐயா, அன்பு வணக்கங்கள்.

      தங்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள், அதுவும் பிரான்சு நாட்டிலிருந்து வந்திருப்பது, என்னை மிகவும் மகிழச்செய்கிறது. நன்றியோ நன்றிகள்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், தாங்கள் இப்போது உள்ள தங்கள் நாட்டினருக்கும், மேலும் உலகம் பூராவும் பரவியுள்ள நம் அனைத்து மக்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துக்ள்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  88. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Suresh Kumar January 1, 2013 7:50 PM
      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !

      வாருங்கள் Mr. Suresh Kumar Sir, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பதினர் மற்றும் நண்பர்களுக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  89. ##அவரவருக்கு வேண்டிய உணவினை அவரவர்களே தயாரித்து உண்ண பழகிக்கொண்டால் அதில் பல்வேறு நன்மைகள் உண்டு. இது சொல்வது மிகவும் சுலபம் தான்; ஆனால் இவ்வாறு செய்வதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளும் சிக்கல்களும் உண்டு தான்.தினமும் சாம்பார், ரஸம், அவியல், பொரியல் என செய்வதற்கெல்லாம் நிறைய பொறுமையும் நேரமும் தேவைப்படும். அதெல்லாம் சரிப்பட்டு வராது. நிறைய பாத்திரம் பண்டங்களைத் தேய்ப்பதும் மிகவும் கஷ்டமான வேலையாகிவிடும்.
    ##

    ** நீங்க சொல்றது நெசந்தான். தாயாரும் ,பொண்டாட்டியும் ஊருக்கு போயிருப்பதினால் ரெண்டு மாசமா சுய சமையல் தான் .

    என் தாயார் அடதோச அருமையா சுடுவாங்க . நீங்க எழுத்துலே அட சுட்டுடீங்களே ...அட அட....

    செஞ்சு பாக்க ஆச தான் ஆனா படிக்கவே இவ்ளோ நீளமா இருக்கே ன்னு மலப்பா இருக்குங்க ஐயா ...

    பதிலளிநீக்கு
  90. ஜீவன்சுப்பு January 1, 2013 9:53 PM

    வாருங்கள் திரு.ஜீவன்சுப்பு ஐயா, வணக்கம்.

    ##அவரவருக்கு வேண்டிய உணவினை அவரவர்களே தயாரித்து உண்ண பழகிக்கொண்டால் அதில் பல்வேறு நன்மைகள் உண்டு. இது சொல்வது மிகவும் சுலபம் தான்; ஆனால் இவ்வாறு செய்வதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளும் சிக்கல்களும் உண்டு தான்.தினமும் சாம்பார், ரஸம், அவியல், பொரியல் என செய்வதற்கெல்லாம் நிறைய பொறுமையும் நேரமும் தேவைப்படும். அதெல்லாம் சரிப்பட்டு வராது. நிறைய பாத்திரம் பண்டங்களைத் தேய்ப்பதும் மிகவும் கஷ்டமான வேலையாகிவிடும்.
    ##

    //நீங்க சொல்றது நெசந்தான். தாயாரும்,பொண்டாட்டியும் ஊருக்கு போயிருப்பதினால் ரெண்டு மாசமா சுய சமையல் தான்//

    அடடா, ரொம்பவும் கஷ்டமாச்சே! ;(

    //என் தாயார் அடதோச அருமையா சுடுவாங்க.//

    அப்படியா, என் தாயாரும் அப்படியே தான். ’அம்மா’ என்றும் ’அம்மா’தான். மற்றவர்கள் எல்லாம் ’சும்மா’தான்னு ஒரேயடியாகச் சொல்லிட முடியாது.

    அடுத்தபக்ஷம் தான் என்று வேண்டுமானால் சொல்லலாம், தன் குழந்தைக்கு வயிறு அறிந்து சாப்பாடு போடும் விஷயத்தில், மட்டும்.

    //நீங்க எழுத்துலே அட சுட்டுடீங்களே ...அட அட....//

    ஏதோ நம்மால் முடிஞ்சது;எழுத்திலே எதையும் கொண்டு வருவது.
    பாராட்டுக்கு நன்றிகள்.

    //செஞ்சு பாக்க ஆச தான் ஆனா படிக்கவே இவ்ளோ நீளமா இருக்கே ன்னு மலப்பா இருக்குங்க ஐயா ...//

    மலைப்பாக நினைக்காதீர்கள். மேட்டர் ரொம்பவும் கம்மி தான்.
    ஆண்கள் முதன் முதலாகச் செய்வதால், பாதுகாப்பாகச் செய்ய வேண்டுமே என சற்றே கூடுதலான விபரங்களுடன் நகைச்சுவையும் கலந்து எழுதியுள்ளேன்.

    முழுவதும் படித்தால் விறுவிறுப்பாகவே இருக்கும். தாங்கள் செய்வதும் மிகவும் சுலபம் தான்.

    அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  91. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி January 3, 2013 5:31 AM
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

      வாருங்கள் Ms. மாதேவி Madam. வணக்கம்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  92. தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டிக்கிறேன் சார்.

    அட ,அட என்று வரிக்கு வரி அட போட வைக்குது உங்க பதிவு. ஆண்களுக்கு மட்டும் இல்லாமல் பெண்களுக்கும் சுவையான அடை செய்ய உதவும் வகையில் மிகவும் விவரமாக கொடுத்துள்ளீர்கள்.

    என்னுடைய சித்தி இப்படிதான் அந்த காலத்தில் கல்லுரரில் அடைக்கு அறைத்து கரண்டியால் இல்லாமல் கையால் தட்டி அடை வார்த்துக்கொடுப்பார். அதன் சுவையோ சுவைதான்.உங்க படங்களைப் பார்த்ததும் எனக்கு அந்த நினைவுதான் வந்தது.


    பேச்சிலருக்கு விளக்கம் சுவை, அருமை....

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK To Mrs. RAMVI Madam >>>>

      //என்னுடைய சித்தி இப்படிதான் அந்த காலத்தில் கல்லுரரில் அடைக்கு அறைத்து கரண்டியால் இல்லாமல் கையால் தட்டி அடை வார்த்துக்கொடுப்பார்.//

      ஆமாம். கல்+உரல் = கல்லுரல்;

      அதை ஆட்டுக்கல் [மாவு ஆட்டும் கல்] என்றும் சொல்லுவோம்.

      //அதன் சுவையோ சுவைதான். உங்க படங்களைப் பார்த்ததும் எனக்கு அந்த நினைவுதான் வந்தது.//

      சுவையாகத்தான் இருக்கும். மிகவும் சந்தோஷமான ஆச்சர்யமான நினைவுகள் தான்.

      //பேச்சிலருக்கு விளக்கம் சுவை, அருமை....
      மிக்க நன்றி சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் சுவையான அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  93. RAMVI January 7, 2013 12:19 AM

    வாங்கோ நீண்டநாட்களுக்குப்பின் தங்கள் வருகை சந்தோஷம் அளிக்கிறது.

    //தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டிக்கிறேன் சார்.//

    அடடா, மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் எதற்கு? தாமதம் எல்லோருக்குமே மிகவும் சகஜம் தானே.

    //அட ,அட என்று வரிக்கு வரி அட போட வைக்குது உங்க பதிவு. ஆண்களுக்கு மட்டும் இல்லாமல் பெண்களுக்கும் சுவையான அடை செய்ய உதவும் வகையில் மிகவும் விவரமாக கொடுத்துள்ளீர்கள்.//

    அப்படியா, மிக்க நன்றி. சந்தோஷம்.

    >>>>>>

    பதிலளிநீக்கு
  94. ஐயா உங்களை வாழ்த்த வயதும் தகுதியும் இல்லை ..நான் வலைச்சரத்தில் உங்கள் வாழ்த்தை பெற ஆசைப்பட்டு பகிர்ந்துள்ளேன் நேரம் இருந்தால் வந்து பாருங்கள் நன்றி ... http://blogintamil.blogspot.com/2013/01/2516.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரியாஸ் அஹமது January 7, 2013 8:38 PM

      வாருங்கள் அருமை நண்பர் திரு. ரியாஸ் அஹமது அவர்களே! வணக்கம்.

      //ஐயா உங்களை வாழ்த்த வயதும் தகுதியும் இல்லை ..நான் வலைச்சரத்தில் உங்கள் வாழ்த்தை பெற ஆசைப்பட்டு பகிர்ந்துள்ளேன் நேரம் இருந்தால் வந்து பாருங்கள் நன்றி ... http://blogintamil.blogspot.com/2013/01/2516.html//

      மிகவும் சந்தோஷமாக உள்ளது. நன்றி.

      உடனே புறப்பட்டு வலைச்சரம் பக்கம் வருகை தருவேன்.

      என் வாழ்த்துகள் உங்களுக்கு என்றுமே, உண்டு தான்.

      அதுவும் முக்கியமாக இந்த வாரம் அது நிச்சயமாக உண்டு.

      இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று, திறமையாகச் செயல்படுவது கண்டு மகிழ்கிறேன்.

      மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள்.

      என்றும் அன்புடன்
      VGK

      நீக்கு


  95. Amudhavan has left a new comment on the post "16.12.2012 தேதியிட்ட கல்கியில் என் பெயர்":

    அடையை எப்படியெல்லாம் ரசித்துச் செய்யமுடியும் என்பதற்கு தங்களின் கட்டுரை நல்லதொரு சான்று. கல்கியில் இடம்பெற்றுள்ள வாசகம் நன்று. வெவ்வேறு பதிவுகளிலும் தங்களின் கண்ணியமிக்க கமெண்டுகளை எப்போதுமே படிப்பேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் Mr Amudhavan Sir வணக்கம்.

      வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறேன்.

      //அடையை எப்படியெல்லாம் ரசித்துச் செய்யமுடியும் என்பதற்கு தங்களின் கட்டுரை நல்லதொரு சான்று.//

      இதைக்கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //கல்கியில் இடம்பெற்றுள்ள வாசகம் நன்று.//

      மிகவும் சந்தோஷம், சார்.

      //வெவ்வேறு பதிவுகளிலும் தங்களின் கண்ணியமிக்க கமெண்டுகளை எப்போதுமே படிப்பேன்.நன்றி.//

      ஆஹா, என் கமெண்டுகளையும் ரஸிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதைக்கேட்க மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

      இருப்பினும், பல்வேறு காரணங்களால் அனைத்துப் பதிவர்களின் வலைத்தளங்களுக்கும் போய் அவர்களின் அனைத்துப்பதிவுகளையும் படித்து கருத்தளிக்க முடியாமல் உள்ளதே என்ற வருத்தமும் மனதினில் உண்டு.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  96. //2-3 நிமிடங்களுக்கு நன்றாக ஓட விட்டு, //

    அப்படியே விட்டால் தெரு வாசல் தாண்டி ஓடி விட்டால் என்ன செய்வது? சிறு கயிறு, சணல், நூல் ஏதாவது கொண்டு கட்டிவிடலாமா?

    பதிலளிநீக்கு
  97. NIZAMUDEEN January 10, 2013 6:09 AM
    ***2-3 நிமிடங்களுக்கு நன்றாக ஓட விட்டு,***

    //அப்படியே விட்டால் தெரு வாசல் தாண்டி ஓடி விட்டால் என்ன செய்வது? சிறு கயிறு, சணல், நூல் ஏதாவது கொண்டு கட்டிவிடலாமா?//

    வாருங்கள் நண்பரே. தங்களின் கூற்று நகைச்சுவையாக உள்ளது.

    மிக்ஸியை ஓடவிடுவது என்றால் சுழல விடுவது என்று பொருள்.

    மின்சாரத்துடன் இணைத்து சுழல விடும் எந்த உபகரணத்தையும், நாம் கயிறு சணல் போன்ற எதுவும் போட்டுக்கட்டக்கூடாது.

    அவை தங்கு தடை ஏதும் இல்லாமல் சுழல வேண்டும் [அதாவது ஓட வேண்டும்]

    தெருவாசல் தாண்டி ஓட அது என்ன சைட் அடிக்கச் செல்லும் சிறு வயது வாலிபப் பையனா?

    அடைக்கு அரைத்து தரும் அற்புதமான உபகரணம் ஸ்வாமீ.

    அன்பான வருகைக்கும் சிரிப்பான கருத்துக்களுக்கும் நன்றிகள்.vgk

    பதிலளிநீக்கு
  98. கோபால் சார் ஒவ்வொருவர் பக்கத்திலும் உங்க உற்சாகமும் ஊக்கமும் கொடுக்கும் பின்னூட்டங்களை ரசித்து படிச்சிருக்கிறேன் நீங்க என் பக்கம் ஏன் வரமாட்டிங்கறீங்க. ஒவ்வொரு பதிவும் போட்டதும் உங்க பின்னூட்டம் வந்திருக்கான்னு ஆவலுடன் எதிர் பாத்துகிட்டே இருப்பேன். உங்க பின்னூட்டம் பாத்தாதுமே மனதெல்லாம் உற்சாகமாகி பூஸ்ட் குடிச்ச தெம்பு கிடைச்சுடும். இன்னும் நல்ல விஷயங்கள் எழுதணும்னு தோணும். ஆனா நீங்க என் முதல் பதிவுக்கு மட்டும் வந்து பின்னூட்டம் போட்டீங்க அப்புரம் வரவே இல்லே. வாங்க சார்.

    பதிலளிநீக்கு
  99. பூந்தளிர் January 10, 2013 8:39 PM

    //கோபால் சார் ஒவ்வொருவர் பக்கத்திலும் உங்க உற்சாகமும் ஊக்கமும் கொடுக்கும் பின்னூட்டங்களை ரசித்து படிச்சிருக்கிறேன் நீங்க என் பக்கம் ஏன் வரமாட்டிங்கறீங்க.

    ஒவ்வொரு பதிவும் போட்டதும் உங்க பின்னூட்டம் வந்திருக்கான்னு ஆவலுடன் எதிர்பாத்துகிட்டே இருப்பேன். உங்க பின்னூட்டம் பார்த்ததுமே மனதெல்லாம் உற்சாகமாகி பூஸ்ட் குடிச்ச தெம்பு கிடைச்சுடும். இன்னும் நல்ல விஷயங்கள் எழுதணும்னு தோணும்.

    ஆனா நீங்க என் முதல் பதிவுக்கு மட்டும் வந்து பின்னூட்டம் போட்டீங்க அப்புறம் வரவே இல்லே. வாங்க சார்.//

    தங்களின் இத்தைகைய நேர்மறையான ஆவலுக்கும் எதிர்பார்ப்புக்கும் மிக்க நன்றிம்மா.

    நான் தங்களின் வலைப்பக்கம் தொடர்ந்து வராமல் இருப்பதற்கான பொதுவான காரணங்களை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    1] நான் ஒருவரின் பதிவுக்குச் செல்வதானால் எனக்கு அவர்களின் புதிய வெளியீடு பற்றி மெயில் மூலம் இணைப்புக்கொடுத்து தகவல் வர வேண்டும்.

    2] இவ்வாறு இணைப்பு மெயில் மூலம் கொடுப்பவர்கள் அனைவரின் பதிவுக்கும் என்னால் சென்று கருத்தளிக்க விருப்பம் இருப்பினும், என்னால் அது நடைமுறையில் சாத்தியமில்லாமல் தான் உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    3] என் உடல்நிலை, என் கணினியின் உடல்நிலை, என் குடும்ப சூழ்நிலை, என் சந்தோஷமான மனநிலை, மின்சார சப்ளை, சம்சார குறுக்கீடுகள் இல்லாத சமயம், நெட் கனெக்‌ஷனின் ஒத்துழைப்பு போன்ற எவ்வளவோ காரணிகள் இதில் அடங்கியுள்ளன. மேலும்
    நாளுக்கு நாள் வலையுலகில் என் நட்பு வட்டமும் மிகப்பெரியதாக அமைந்து போய்விட்டது.

    4] இவையெல்லாம் என்னுடன் நெருங்கிப்பழகி வரும் பதிவர்கள் எல்லோருக்குமே தெரிவித்துள்ளேன். அவர்களில் பலரும் என்னை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள்.

    இதைப்பற்றியெல்லாம் விரிவாக நான் என்னுடைய வெற்றிகரமான 200 ஆவது பதிவினில் ஓரளவு நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளேன்.

    தலைப்பு: “நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி”
    [இந்த வருடத்தில் நான் 2011 / 31.12.2011]

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    அதைப்போய் மிகவும் பொறுமையாக வாசித்துப்பாருங்கள். முடிந்தால் கருத்தும் கூறுங்கள். கருத்துக்கூறினால் மட்டுமே தாங்கள் முழுவதும் வாசித்துள்ளீர்கள் என என்னால் உணர முடியும்.
    உங்களைப்போன்ற வளரப்போகும் எழுத்தாளர்களுக்கு அதில் நான் எழுதியுள்ள அனுபவங்களும், அதற்கு வந்து குவிந்துள்ள பின்னூட்டங்களும் பயன்படக்கூடும்.

    5] மேலும் உங்களிடம் எனக்கு ஒரு சின்ன வருத்தம் உண்டு. அதாவது தங்களின் முதல் பதிவுக்கு அழைப்பிதழ் கொடுத்து அனைத்துப்பதிவர்களின் பின்னூட்டப்பெட்டி மூலம் தகவல் அளித்திருந்தீர்கள். என்னையும் அதுபோல அழைத்திருந்தீர்கள். நானும் வந்து வாழ்த்தினேன்.

    அந்தத்தங்களின் 4 வரிகள் மட்டுமே உள்ள முதல் பதிவினில் இரண்டு எழுத்துப்பிழைகள் இருந்தன. அதையும் நான் மிகவும் நாசூக்காக உங்களுக்குப் புரியும் விதமாக என் பின்னூட்டம் மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். நீங்கள் அதற்கு நன்றியும் கூறி, அந்தப் பிழைகளைத் திருத்தி விட்டதாகவும் பதில் கொடுத்திருந்தீர்கள்.

    ஆனால் இன்று இந்த நிமிடம் வரை அந்தப்பிழைகள் திருத்தப்படவே இல்லை என்பதை வருத்தத்துடன் தெர்வித்துக்கொள்கிறேன்.

    நாம் பிறருக்கு எழுதும் பின்னூட்டங்களில், சிலசமயம் ஓர் அவசரத்தில் சில எழுத்துப்பிழைகள் தவிர்க்க முடியாமல் நேரிடும்.
    அது எனக்கும் கூட நேரிடும்.

    ஆனால் நாம் வெளியிடும் பதிவுகளில் இதுபோல பிழைகள் இருக்கவே கூடாது என்பது எனது எண்ணமும், விருப்பமும் ஆகும்.

    நம்மை அறியாமல் ஏற்படும் இத்தகைய எழுத்துப்பிழைகளை பிறர் சுட்டிக்காட்டிய பிறகாவது நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.

    அதுவும் இது தங்களின் முதல் பதிவிலேயே, அதுவும் வெளியிட்டுள்ள நான்கே நான்கு வரிகளிலேயே ஏற்பட்டுள்ளதும், சுட்டிக்காட்டியும் அதை நீங்கள் இதுவரை திருத்திக் கொள்ளாமல், மேலும் மேலும் பதிவுகள் கொடுப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும், நீங்கள் என்னை உங்கள் வலைப்பக்கம் வருகை தருமாறு வற்புருத்திக் கேட்டுக்கொள்வதால் மட்டுமே இங்கு தெர்வித்துக்கொள்கிறேன்.

    இருப்பினும் தங்களின் கருத்துக்கும் ஸ்பெஷல் அழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    கோபு

    பதிலளிநீக்கு