முன் கதை முடிந்த இடம்:
அம்மாவும், அப்பாவும் தாங்கள் எடுத்துள்ள பட்டுப்புடவைக்கு மேட்ச் ஆக ரவிக்கைத்துணி எடுக்க அந்தக்கடையின் வேறு பகுதிக்குச் சென்றார்கள். நான் மட்டும் சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன்.
இறுதிப்பகுதி ........ இப்போது ஆரம்பம்:
அதே கடையில் வேறு ஒரு பக்கம் இருந்த புடவைகளை ஒருசில மாமிகள் புரட்டிக்கொண்டிருப்பதை கவனித்த நான், அவ்விடம் சென்றேன்.
அங்கே ஒரு மடிசார்புடவை மாமி மற்றொரு மாமியிடம்,”வரவர இந்தப்பட்டுப் புடவைகளைக் கண்டாலே பத்தி[பற்றி]க்கொண்டு வருகிறது; வெய்யில் காலத்தில் ஒரேயடியாக வியர்வை வழிந்து, கசகசன்னு ஆகி, எப்படா அவிழ்த்துவிட்டு வேறு சாதா புடவை கட்டுவோம்னு ஆகி விடுகிறது; சுலபமாக பாத் ரூம் கூட போய் வரமுடிவதில்லை; விலையும் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு; ஒரு தடவைக்கட்டி அவிழ்த்தால் கசங்கிப்போய் இஸ்திரி போட வேண்டியதுள்ளது. வருஷத்துல நாலு நாள் கூட கட்டிக்க மாட்டோம். சுளையா எட்டாயிரம், பத்தாயிரம்னு கொடுக்க வேண்டியிருக்கு” என்று புலம்பிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.
அந்த அம்மா என் அத்தை-கம்-மாமியார் வயதை ஒத்த மாமியாக இருந்ததால் அவர்கள் அருகில் சென்றேன். சில்க் காட்டான் என்று கூறப்பட்ட நாலு புடவைகளைப் புரட்டிப்புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தப்புடவைகள் எல்லாம் மிகவும் நன்றாகவே இருந்தன. வழவழப்பாகவும், பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும், அதிக கனமில்லாமல் லைட்-வெயிட் ஆகவும், அடக்கமாகவும், அழகாகவும் இருந்தன. விலையும் கிட்டத்தட்ட பட்டுப்புடவை போலவே இருந்தன.
”இவை லேட்டஸ்ட் ரன்னிங் ப்ளெளஸ் என்ற பெயரில் புடவையின் உள்பக்கமாக, மேட்ச் ரவிக்கைத்துணியுடன் கூடிய ஒன்பது கெஜப்புடவைகள். ப்ளெளஸ் பிட் புடவைத்தலைப்பில் இல்லாமல் உள்பக்கமாக இருப்பதில் ஒரு செளகர்யம்;
சாதாரண தேகவாகு உள்ளவர்கள், அதைத்தனியே கிழித்து ரவிக்கையாகத் தைத்துக்கொள்ளலாம். சற்றே ரெட்டைநாடியாக, வஞ்சகமின்றி வளர்ந்த, வாளிப்பான தேகம் உடையவர்கள், ரன்னிங் ப்ளெளஸ் துணியை கிழிக்காமல் அப்படியே தாராளமாக புடவையாகக் கட்டிக்கொள்ளலாம்;
அத்தகைய பெரிய பேர்வழிகள் மட்டும், ரவிக்கைக்கு தனியே துணியெடுத்து தைத்துக்கொள்ளலாம்” என்று அந்தக்கடையின் விற்பனையாளர் அந்த மாமியிடம் விளக்கிக்கொண்டிருந்தார்.
என்னைப்பார்த்த அந்த மாமி “அம்மாடி, இந்த நாலு புடவைகளில் என் உடம்புக்கு எது நன்றாக இருக்கும்னு நீ சொல்லேன்” என்றார்கள்.
”எல்லாமே சூப்பராகத்தான் இருக்கு மாமி, இந்தப்பொடிக்கலர் புடவை உங்கள் சிவத்த உடம்புக் கலருக்கு எடுப்பாக இருக்கும் போல எனக்குத் தோன்றுகிறது” என்று சொன்னேன்.
அவர்களும்,”நீ நல்லா இருப்பேடிக்கண்ணு, எனக்கு எதை எடுப்பதுன்னு ஒரே குழப்பமாக இருந்தது, நல்ல சமயத்தில் வந்து பளிச்சுன்னு தெளிவாகச் சொல்லிவிட்டாய்” என்று சந்தோஷமாகச் சொல்லிவிட்டு,அதையே எடுத்துக்கொண்டு பில் போடப்போனார்கள்.
மீதி மூன்று புடவைகளில் வெந்தயக்கலரில், ஆங்காங்கே உடம்பெல்லாம் புட்டாபோட்டு, அரக்குகலரில் பார்டரும் ஜரிகையுமாக, தகதகன்னு மின்னிய வண்ணம், அருமையாக இருந்த ஒன்றை நான் எனக்கு பில் போடச்சொன்னேன்.
அம்மா, அப்பா எடுத்த பட்டுப்புடவையுடன், இதையும் தனியே வாங்கிக்கொண்டு கடையை விட்டுப்புறப்பட்டோம்.
வீட்டுக்குப்போகும் வழியில், என் அத்தையும் வருங்கால மாமியாருமான அவர்கள் வீட்டில் புடவையைக் காட்டிவிட்டுப்போய் விடலாம் என்று, என் அம்மா, அங்கிருந்த பிள்ளையாரை வேண்டிக்கொண்டே சொன்னாள்.
அதன்படியே சரி என்று சம்மதித்த நாங்கள் அதற்கடுத்த ஆயத்த வேலைகளில் இறங்கினோம். அதாவது சம்பந்தியம்மாளைப் பார்க்கப் போகும்போது வெறும் கையுடன் போகமுடியுமா என்ன!
அங்கிருந்த பழக்கடைக்குப்போய் ஆப்பிள், ஆரஞ்சு, செவ்வாழைப்பழம், மாம்பழம் முதலியவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் தள்ளியிருந்த பூக்கடைக்குப்போய் குண்டு மல்லிகைச்சரம் ஒரு பந்து பார்ஸல் வாங்கிக் கொண்டு, எனக்கும் அம்மாவுக்கும் முல்லைப்பூ வாங்கி தலையில் சூடிக்கொண்டோம்.
ஜில்லுனு ஆளுக்கு ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே என்று, அம்மாவையும் அப்பாவையும் அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்தேன்,
அப்பா, அம்மாவைப்பார்த்தார். அம்மா என்னைப்பார்த்தாள். பிறகு சொன்னாள் “நீயும் அப்பாவும் வேண்டுமானால் போய் ஐஸ் கிரீம் சாப்பிடுங்கோ, நான் இப்போ வரக்கூடிய மனநிலையில் இல்லை” என்றாள்.
அம்மாவின் ஒரே கவலை இந்தப்புடவையை என் அத்தை நிராகரிக்காமல் பிடிச்சுருக்கு என்று சொல்லணும், அதுவே ஐஸ்கிரீம் சாப்பிட்டது போல அவளுக்கு.
”சரி அம்மா, இப்போ முதலில் நாம் நேராக அத்தை வீட்டுக்குப் போவோம், பிறகு நம் வீட்டுக்குப்போகும் போது நாம் எல்லோருமே சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், ஓ.கே.யா?“ என்றேன். சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள் அம்மா.
நேராக அத்தை வீட்டுக்கு ஆட்டோவில் பயணம் ஆனோம். அத்தை வீட்டில் நுழைந்ததும், ஹால் சோபாவில் அமர்ந்தபடியே எங்களை வரவேற்ற, அத்தையின் காலடியில் தரையில் என் அம்மா அமர்ந்து கொண்டாள்.
என் அம்மா நாத்தனாருக்கு சமமாக சோபாவில் அமர மாட்டாள். அவ்வளவு பயம் கலந்த மரியாதை. அப்படியே ஆரம்பத்திலிருந்து தன்னைப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டவள். இனி மாற்றுவது கஷ்டம். கேட்டால் ’ஜில்லுனு தரையிலே உட்காரத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு’ என்பாள்.
மெதுவாக பட்டுப்புடவையை எடுத்து, அத்தையிடம் அம்மா பெளவ்யமாகக் நீட்டினாள் - காட்டினாள்.
அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே தண்ணீர் குடிக்கச்செல்வது போல சமையல் ரூமுக்குள் நான் போய் விட்டேன். கதவு இடுக்கு வழியாக அவர்கள் பேசிக்கொள்வதை நான் கேட்டுக்கொண்டு நின்றேன்.
என் அத்தை அந்தப்பட்டுப்புடவை விஷயமாக என்ன அபிப்ராயம் சொல்லுவார்களோ, என என் அம்மாவின் நெஞ்சு, மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டி போல, என்னமாய்த் துடித்துக் கொண்டிருக்கும் என்பதைக் கற்பனை செய்துகொண்டு, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
”நன்னா இருக்கே” என்று சொல்லிக்கொண்டே புடவையைக்கையில் வாங்கிக்கொண்டு, அதில் போட்டிருந்த விலையை முதலில் நோட்டமிட்டார்கள் என் அத்தை.
“எனக்கு எதற்கு இவ்வளவு விலைபோட்டு பட்டுப்புடவை வாங்கணும்? ஏதோ சில்க் காட்டன்னு இப்போ சொல்றாளே!, அது போதாதோ?; என் பிள்ளையாண்டானும் தனியா அவன் வீதத்துக்கு ஒரு பட்டுப்புடவையே எடுத்திருக்கிறான்;
ஆனா ஒன்னு, நீ வாங்கியிருக்கும் இது, நான் இதுவரை கட்டிக்காத கலராயிருக்கு. சில்க் காட்டன் வாங்கிக்கட்டணும்னு தான் ஒரு ஆசை. பரவாயில்லை. வாங்கினது வாங்கிட்டேள். திரும்பப்போய் மாத்திண்டு வர வேண்டாம் “ என்றார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் ஜில் வாட்டர் எடுத்துக்கொண்டு, என் அத்தை முன் ஆஜரானேன்.
நான் வாங்கிவந்த சில்க் காட்டன் புடவையை பையிலிருந்து வெளியே எடுத்து என் அத்தையிடம் கொடுத்தேன்.
“இது ஏதுடீ இன்னொரு புடவை?” என்று என் அம்மா என்னைப்பார்த்து ஆச்சர்யமாகக் கேட்டாள். நான் ஏற்கனவே சொல்லிக்கொடுத்தபடி சரியாகவே என் அம்மா நடித்து விட்டதில் எனக்கும் சந்தோஷம் தான்.
“அத்தை உடம்புக்கு கட்டிண்டா ரொம்ப நன்னா இருக்கும் என்று நான் தான் தனியாக ஒன்று எடுத்து வந்தேன்” என்றேன்.
பிரித்துப்பார்த்த என் அத்தைக்கு வாயெல்லாம் பல்லாக ஒரே சந்தோஷம். “இதை......இதை.....இதைத்தான் நான் எதிர்பார்த்தேன், ஆசைப்பட்டேன்” என்றார்கள்.
உங்களுக்கு இது ரொம்பப்பிடிக்கும்னு நான் எதிர்பார்த்தேன், அத்தை; அதனால்தான் இந்தக்குறிப்பிட்ட புடவையை நான் செலெக்ட் பண்ணிண்டு வந்தேன். என் டேஸ்ட்டும், உங்க டேஸ்டும் ஒன்னாவே இருக்கு பாருங்கோ” என்றேன்.
இதைக்கேட்டதும் நிஜமாலுமே சந்தோஷப்பட்ட என் அத்தை “ஆனால், எனக்கு ஏதாவது ஒரு புடவை மட்டும் போதுமே” என்றார்கள்.
“உங்கள் பிள்ளை எடுத்துக்கொடுத்ததை கல்யாணத்தின் போது கட்டிக்கோங்கோ; அம்மா எடுத்த இந்தப்புடவையை முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது கட்டிக்கோங்கோ; நான் எடுத்த இந்த சில்க் காட்டனை நலங்கு நடக்கும்போது சாயங்காலமாக கட்டிக்கோங்கோ” என்று சொல்லிவிட்டு, அத்தையை நமஸ்காரம் செய்தேன்.
நான் இவ்வாறு சொன்னதில் அத்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகத்தில் எந்தவிதக்கோபமும் இல்லாமல்”நன்னா இரு மகராசியா” என்று வாழ்த்திவிட்டு, “இருந்து எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும்” என்று எங்கள் மூவருக்கும் உத்தரவு போட்டுவிட்டு, சமையல் அறை நோக்கி துள்ளிச்சென்றார்கள்.
நானும் என் தாயைப்பார்த்து புன்னகை செய்தபடி கண் சிமிட்டிவிட்டு, கூடமாட அத்தைக்கு உபகாரம் செய்ய சமையல்கட்டுக்குள் நுழைந்தேன்.
என் தாயும் தந்தையும் “இவள் இனி பிழைத்துக்கொள்வாள்; நாம் இவளைப்பற்றிய கவலையில்லாமல் இருக்கலாம்” என்ற நினைப்புடன் ஒருவித அர்தபுஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டதை என்னால் நன்றாகவே உணர முடிந்தது.
சற்று நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணத்துடன் கேசரி கிளறும் வாசனை எங்கள் எல்லோருடைய மனதையும் ரம்யமானதொரு சூழலுக்கு கொண்டு சென்றது.
என் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பாங்களா? என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே! அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன?
-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-
[ இந்தச்சிறுகதை ‘புடவை’ என்ற தலைப்பில்
29.07.2009 தேதியிட்ட “தேவி” வார இதழில் வெளியிடப்பட்டது ]
மூணு புடவையா... அடிச்சது நல்ல யோகம்... மாமியாருக்குப் பிடித்த மாதிரி மருமகள் இருந்துவிட்டால் தினம் தினம் நெய் மணக்கும், முந்திரி, பாதாம் போட்ட கேசரி தான் வீட்டில்....
பதிலளிநீக்குகதை நன்றாய் இருந்தது... புடவைகளில் தான் எத்தனை எத்தனை விதங்கள்... கடையில் உட்கார்ந்து பார்த்த மாதிரி இருந்தது உங்கள் வர்ணனை...
என் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பங்களா? என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே! அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன?
பதிலளிநீக்குஇரண்டு வீட்டு உறவுகளையும் பாலன்ஸ் பண்ணும் திற்மை வாய்ந்த பெண்ணுக்குப் பாராட்டுகள். வாழ்த்துக்கள்.
@நல்ல சமயத்தில் வந்து பளிச்சுன்னு தெளிவாகச் சொல்லிவிட்டாய்” என்று சந்தோஷமாகச் சொல்லிவிட்டு,//
பதிலளிநீக்குசற்று நேரத்தில் வரக்கூடிய சந்தோஷத்தை சிம்பாலிக்காக காட்டிய அருமையான வரிகள்.
பிறகு நம் வீட்டுக்குப்போகும் போது நாம் எல்லோருமே சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், ஓ.கே.யா?“ என்றேன். சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள் அம்மா. //
பதிலளிநீக்குஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டுத்தான் வீட்டுக்குப் போயிருப்பார்கள்
@”வரவர இந்தப்பட்டுப் புடவைகளைக் கண்டாலே பத்தி[பற்றி]க்கொண்டு வருகிறது; //
பதிலளிநீக்குஎத்தனை அசௌகரியமாக உண்ர்ந்திருப்பார்கள்.விலைக்கு வாங்கிய கஷ்டம்.பாவம்.
///என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே! அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன? /// அது சரி தான் :-)
பதிலளிநீக்கு//”சரி அம்மா, இப்போ முதலில் நாம் நேராக அத்தை வீட்டுக்குப் போவோம், பிறகு நம் வீட்டுக்குப்போகும் போது நாம் எல்லோருமே சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், ஓ.கே.யா?“ என்றேன். சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள் அம்மா.///
பதிலளிநீக்குதாயின் மனநிலை புரிந்த புத்திசாலி மகள்
வாழ்க பல்லாண்டு
///உங்களுக்கு இது ரொம்பப்பிடிக்கும்னு நான் எதிர்பார்த்தேன், அத்தை; அதனால்தான் இந்தக்குறிப்பிட்ட புடவையை நான் செலெக்ட் பண்ணிண்டு வந்தேன். என் டேஸ்ட்டும், உங்க டேஸ்டும் ஒன்னாவே இருக்கு பாருங்கோ” என்றேன்.///
பதிலளிநீக்குஜாடிக்கேத்த மூடி
மாமியாருக்கு ஏத்த மருமகள்
அசத்தல் தான்
//என்று சொல்லிவிட்டு, அத்தையை நமஸ்காரம் செய்தேன்.
பதிலளிநீக்குநான் இவ்வாறு சொன்னதில் அத்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகத்தில் எந்தவிதக்கோபமும் இல்லாமல்”நன்னா இரு மகராசியா” என்று வாழ்த்திவிட்டு, “இருந்து எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும்” என்று எங்கள் மூவருக்கும் உத்தரவு போட்டுவிட்டு, சமையல் அறை நோக்கி துள்ளிச்சென்றார்கள். //
எது எப்படி இருப்பினும் ஒரு வயதான மனுஷியை மனமெல்லாம் குளிரவைக்கும் சாதுர்யம் இன்றைய கால பெண்களுக்கு மிகவும் அவசியம்
என்று சொல்லிய விதம் அருமை ஐயா
//என் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பங்களா? என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே! அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன? //
பதிலளிநீக்குதிருமணமாகி வீட்டுக்குள் வரும் போதே குரோதத்துடன் வரும் சில பெண்களுக்கிடையில் இவள் ஒரு அதிசயமான அழகி தான்
நன்றி உங்களின் அறிவுரை கூடிய பதிவிற்கு
எல்லாம் சரி அவர்கள் போகும் போது ஐஸ் கிரீம் சாப்பிட்டார்களா இல்லையா ??
பதிலளிநீக்குஅதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே ஐயா
இனிமையான முடிவாக இருந்தது. சாதுர்யமான பெண்.
பதிலளிநீக்குமாமியார் தினம் தினம் மெச்சப் போகும் மாட்டுப்பெண் தான்.
கண்டிப்பாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு தான் போயிருப்பார்கள்.
நல்ல முடிவை தந்து இருக்கிறீர்கள்..
பதிலளிநீக்குசாதாரணமாகப் பருத்திதான் புடவையாய்க் காய்க்கும்.
பதிலளிநீக்குஆனா இப்பல்லாம் புடவையே இடுகையாய் மாறிட்டாப் போல இருக்கு கோபு சார்.
படு ஸ்வாரஸ்யமா ஒவ்வொரு பொம்மனாட்டிகளையும் கவனிச்சு வசனங்களைப் பின்னுவதால் உங்களுக்கு நாட்டி பிக் பாய் என்ற பட்டத்தை புதுச்சேரி நாட்டிபாய் சங்கத்தின் சார்பில் அளிக்கிறேன்.
புத்திசாலியான பெண்தான்.
பதிலளிநீக்குஇந்தக்காலக்குழந்தைகளுக்கு புத்திசாலித்
பதிலளிநீக்குதனத்தை சொல்லியா கொடுக்கனும்.
நல்லாவே சமாளிச்சுக்குவா. அப்பா
அம்மாவுடன் ஐஸ்க்ரீம்மும் சாப்பிட்டுதானே வீடு போனார்கள்.
நிறைவான மகிழ்ச்சியான முடிவு,.
ஆங்கிலத்தில் கொடுத்த பட்டத்தை ஆங்கிலத்திலேயே டைப் பண்ணினால் ப்ரச்சினையிலிருந்து தப்பலாம் என்று ஈசான்ய மூலையிலிருந்து கௌளி கொட்டுவதால் அதை ஆங்கிலத்தில் டைப் செய்திருக்கிறேன் குழப்பமில்லாமல்.
பதிலளிநீக்குNAUGHTY BIG BOY.
சந்தோஷமாக முடிந்ததில் மிக்க சந்தோஷம்
பதிலளிநீக்குமருமகள் இவ்வளவு கெட்டிக்காரியாக
இருந்தால் மாமியார்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
நாளையே மாமியராக ஆகப் போகும் ஒருவருடைய மனநிலையை நன்றாக புரிந்த கொண்ட ஒரு மருமகள்.இதுவும் ஒரு கலை தானே.கதை மிக அருமை.
பதிலளிநீக்குநல்ல கதை...
பதிலளிநீக்குஅற்புதமான நகர்வு ஒவ்வொரு சம்பவங்களும்...
நல்ல இருக்கு .ஐஸ் க்ரீம் சாப்பிட்ட மாதிரியே இந்த கதையும் .மனசை புரிந்த மருமகள் எந்த சூழ்நிலையிலும் அழகா குடும்பத்தை நடத்தி செல்வாள் .
பதிலளிநீக்குபெண்களின் மன ஆழத்தைக் காண முடியாது என்பார்கள். ஆனால் நீங்கள்
பதிலளிநீக்குஅவர்களின் ஆழ்மனசுக்குள் மூழ்கி முத்தெடுக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.
வாவ்.... சூப்பர் முடிவு... எல்லாரும் இப்படி உறவுக்கு முக்கியத்துவம் குடுத்து அனுசரித்து வாழ பழகி கொண்டால் எல்லாம் இன்ப மயமே...;)
பதிலளிநீக்குபுரிந்து கொள்ளுதல்கள் உறவுகளை வலுவாக்கும் உரம். கவுத்திட்டதா சொல்லுவாங்களே அது இதுதானா? நல்ல கதை VGK சார்.
பதிலளிநீக்குஅனுபவ கருத்துக்கள் ஆங்காங்கே அழகாய் தெளிக்கப்பட்டிருக்கிறன, கதைக்கும் மேலே சில விசயங்களை அழுந்தச் சொல்கிறது. நன்றி VGK சார்.
பதிலளிநீக்குகதையின் முடிவும் ஐஸ்கிரிம் சாப்பிட்டது மாதிரி ஜில்லுன்னு இருக்கு கோபால் சார்.. நான் வலைபதிவுக்கு புதியவள்.எனக்கும் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆசை. உஙகளைமாதிரி பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் தேவை.
பதிலளிநீக்குபெற்ற தாயின் மனமும் நோகாமல் வரப் போகும் மாமியாரையும் சும்மா ஐஸ் வைக்காமல் உண்மையாகவே மனதுக்குப் பிடித்து அன்புடன் புடைவை எடுத்து குளிர்விக்கும் இந்த மாதிரி பெண்கள் மருமகளாகக் கிடைக்க கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குபெண்ணின் மனசு எப்போதுமே அதிசயம்தான்.’அவாள்’பாஷையில் நகர்ந்த அற்புத படைப்பு.
பதிலளிநீக்குஅருமை சார்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
ice cream saappittarkalo illaiyo ice vaiththu vitterkal... vaalththukkal
பதிலளிநீக்குஉங்கள் சிறுகதைகள் மிக எதார்த்தமாக இருக்கின்றது,
பதிலளிநீக்குஉங்கள் எழுத்து நடை மிக அருமை,
வாழ்த்துக்கள் பாஸ்
சுந்தர்ஜி அண்ணாவின் இரு கமென்ட்டுகளையும் வழி மொழிகிறேன். ;-)))
பதிலளிநீக்குஇந்தக் கதை, திருமணமாகப் போகும் பெண்களுக்கு சிறந்த அன்பளிப்பு.
பதிலளிநீக்குரவிக்கை பிட் முந்தானையில் இருந்தால் நல்லதா உள்ளே ரன்னிங்கில் இருந்தால் நல்லதா என்று அழகாய் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் ஒரு பெண்ணாக இருந்து. :-௦௦)))
பதிலளிநீக்குமாமியார் மனம் தெரிந்து புரிந்து அதற்கேற்றபடி நடந்தால், பெற்றோருக்கு ஐஸ்கிரீம் தான்!!
பதிலளிநீக்குசுடிதார் கதை எழுதி மாமியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதற்கு பிராயச்சித்தம் தானே இந்த மடிசார் புடவை கதை ?.
பதிலளிநீக்குமருமகளின் சமயோசிதப் புத்தி வியக்க வைத்தது. உங்களிடம் தான் Family management கற்க வேண்டும்,
கோபால் சார் நான் உங்கள் blog ஜ ramaravi என்ற பெயரில் follow சைகிறேன். google friend connect பற்றி தெரியததால் blog பெயரில் follow சைய்ய முடியவில்லை. அது பற்றி விரைவில் தெரிந்து கொள்கிறேன்.
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குமிக்க நன்றி
@ இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குஅழகிய செந்தாமரையை நான்கு முறை மலரச்செய்துள்ளதற்கு 4 முறை நன்றிகள்.
//எத்தனை அசௌகரியமாக உண்ர்ந்திருப்பார்கள்.விலைக்கு வாங்கிய கஷ்டம்.பாவம்.//
கஷ்டத்தையே விலைக்கு வாங்குகிறார்களே! என்ற தங்களின் அழகிய கருத்து பாராட்டுக்குரியது.
@ கந்தசாமி.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
========================
@ A.R.ராஜகோபாலன்
அன்புடன் 5 முறை அசராமல் வந்து அரிய பெரிய கருத்துக்கள் கூறி அசர வைத்துள்ள தங்களின் அன்பும், ஈடுபாடும் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மனமார்ந்த நனறிகள்.
[இனி அடுத்தது ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுதான் அவர்களின் வேலையே.]
@ கோவை2தில்லி
பதிலளிநீக்குஇனிமையான முடிவு என்று தீர்ப்பு தந்திருக்கும் தங்களுக்கு மிக்க நன்றி, மேடம்.
----------------------------
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
நல்ல முடிவு தந்ததாகச் சொல்லும் தங்கள் தீர்ப்புக்கு மிகவும் நன்றிகள், சார்
----------------------------
@ மாதேவி said...
//புத்திசாலியான பெண்தான்.//
மிக்க நன்றி, மேடம்
============================
சுந்தர்ஜி said...
பதிலளிநீக்கு//சாதாரணமாகப் பருத்திதான் புடவையாய்க் காய்க்கும்.
ஆனா இப்பல்லாம் புடவையே இடுகையாய் மாறிட்டாப் போல இருக்கு கோபு சார்.//
அழகான கவிதைநடை எழுத்துக்களில் தங்களின் பேரெழுச்சி தெரிகிறது,சார்.
//படு ஸ்வாரஸ்யமா ஒவ்வொரு பொம்மனாட்டிகளையும் கவனிச்சு வசனங்களைப் பின்னுவதால்//
நீங்க வேற சார்; பொம்மனாட்டிகளைக் கண்டாலே மிகவும் கூச்சத்துடன் ஒதுங்கிச் செல்பவன், சார், நான்.
அவர்களையாவது, நானாவது கவனிக்கறதாவது!! எல்லாம் இப்படித்தான் வசனம் பேசுவார்கள் என்று ஒரு கற்பனையே!
//உங்களுக்கு நாட்டி பிக் பாய் என்ற பட்டத்தை புதுச்சேரி நாட்டிபாய் சங்கத்தின் சார்பில் அளிக்கிறேன்.//
நான் எவ்வளவு ஸாதுவான, மென்மையான, மேன்மையான குணங்கள் கொண்டவன் என்பது அந்த புதுச்சேரி நாட்டிபாய் சங்கத்தினருக்குத் தெரியாது போல இருக்கு.
மறுபரிசீலனை செய்யச்சொல்லி, இதுபோன்ற பட்டங்களுக்கெல்லாம் மிகவும் பொருத்தமானவராக எனக்குப்படும் தங்களுக்கே அது தரப்பட வேண்டும், என்பதே அடியேனின் விரும்பமும் தாழ்மையான வேண்டுகோளும் ஆகும்.
ஒரு சின்ன சந்தேகம்; தாங்கள் தான் அந்த சங்கத்தின் தலைவரோ?
மாறுபட்ட கருத்துக்களுடன் அழகிய நகைச்சுவையான பின்னூட்டத்திற்கு என் ஸ்பெஷல் நன்றிகள், சுந்தர்ஜி சார்.
Lakshmi said...
பதிலளிநீக்கு//இந்தக்காலக்குழந்தைகளுக்கு புத்திசாலித் தனத்தை சொல்லியா கொடுக்கனும். நல்லாவே சமாளிச்சுக்குவா. அப்பா
அம்மாவுடன் ஐஸ்க்ரீம்மும் சாப்பிட்டுதானே வீடு போனார்கள்.
நிறைவான மகிழ்ச்சியான முடிவு//
தங்கள் கருத்தில் எனக்கும் நிறைவான மகிழ்ச்சியே!
மிக்க நன்றிகள், மேடம்
சுந்தர்ஜி said...
பதிலளிநீக்கு//ஆங்கிலத்தில் கொடுத்த பட்டத்தை ஆங்கிலத்திலேயே டைப் பண்ணினால் ப்ரச்சினையிலிருந்து தப்பலாம் என்று ஈசான்ய மூலையிலிருந்து கௌளி கொட்டுவதால் அதை ஆங்கிலத்தில் டைப் செய்திருக்கிறேன் குழப்பமில்லாமல்.
NAUGHTY BIG BOY.//
NAUGHTY BIG BOY என்றால் உண்மையில் என்னவாக இருக்கும் என்ற குழப்பம் எனக்கு இப்போது தான் ஆரம்பித்துள்ளது.
[உங்களைவிட அந்த துக்ளக் ஆசிரியர் “சோ’ வும், திரைப்பட இயக்குனர் ‘விசு’ வும் தேவலாம் போல இருக்கு.]
Ramani said...
பதிலளிநீக்கு//சந்தோஷமாக முடிந்ததில் மிக்க சந்தோஷம்.
மருமகள் இவ்வளவு கெட்டிக்காரியாக
இருந்தால் மாமியார்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்//
சரியாகச்சொன்னீர்கள், ரமணி சார். எனக்கும் அதுதான் சற்றே கவலையாக உள்ளது.
@ முரளி நாராயண்
பதிலளிநீக்கு//கதை மிக அருமை.//
மிகவும் நன்றி
==========================
@ vidivelli
//நல்ல கதை...
அற்புதமான நகர்வு ஒவ்வொரு சம்பவங்களும்.//
மிக்க நன்றி
=========================
@ angelin
//நல்லா இருக்கு.ஐஸ் க்ரீம் சாப்பிட்ட மாதிரியே இந்த கதையும் //
மிகவும் நன்றி
=========================
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்கு//பெண்களின் மன ஆழத்தைக் காண முடியாது என்பார்கள். ஆனால் நீங்கள்
அவர்களின் ஆழ்மனசுக்குள் மூழ்கி முத்தெடுக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.//
வணக்கம் சார். உங்கள் பாராட்டு வித்யாசமானதாக, என்னை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.
மிக்க நன்றி, சார்.
அப்பாவி தங்கமணி said...
பதிலளிநீக்கு//வாவ்.... சூப்பர் முடிவு... எல்லாரும் இப்படி உறவுக்கு முக்கியத்துவம் குடுத்து அனுசரித்து வாழ பழகி கொண்டால் எல்லாம் இன்ப மயமே...;)//
தங்களின் அன்பான, அபூர்வமான வருகைக்கும், சூப்பர் முடிவு என்ற தீர்ப்புக்கும், தலை வணங்குகிறேன்.
மிக்க நன்றி, மேடம்.
சாகம்பரி said...
பதிலளிநீக்கு//புரிந்து கொள்ளுதல்கள் உறவுகளை வலுவாக்கும் உரம். கவுத்திட்டதா சொல்லுவாங்களே அது இதுதானா? நல்ல கதை VGK சார்.//
ஏதேதோ சொல்லி என்னை ஒரேயடியாகக் கவிழ்த்து விட்டீர்கள், தங்களது சிறப்பான, வித்யாசமான பாராட்டு வார்த்தைகளால். நன்றி, மேடம்.
சாகம்பரி said...
பதிலளிநீக்கு//அனுபவ கருத்துக்கள் ஆங்காங்கே அழகாய் தெளிக்கப்பட்டிருக்கிறன, கதைக்கும் மேலே சில விசயங்களை அழுந்தச் சொல்கிறது. நன்றி VGK சார்.//
மிகச்சிறப்பான வாழ்வியல் கட்டுரைகளைத்தரும் தங்கள் பார்வைக்கு, எல்லா விஷயங்களும் Positive ஆகவே, தெரியக்கூடும்.
நீருடன் கலந்த பாலில், பாலை மட்டுமே தனியாகப் பருகுமாம், அன்னபக்ஷி என்ற பறவை. உங்கள் கருத்துக்களைப் படித்ததும் அந்த அன்னபக்ஷிதான், எனக்கு நினைவுக்கு வந்தது.
தங்களின் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
@ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம் !
பதிலளிநீக்கு//பெற்ற தாயின் மனமும் நோகாமல் வரப் போகும் மாமியாரையும் சும்மா ஐஸ் வைக்காமல் உண்மையாகவே மனதுக்குப் பிடித்து அன்புடன் புடைவை எடுத்து குளிர்விக்கும் இந்த மாதிரி பெண்கள் மருமகளாகக் கிடைக்க கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்.//
ஆம், மிகச்சரியாகவே உணர்ந்து எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.
@ RAMVI
பதிலளிநீக்குநன்றி
==================
@ ellen
நன்றி
==================
@ மதுரை சரவணன்
மிக்க நன்றி. அவரவர்களுக்கு ஏற்ற ஐஸ் ஆகப்பார்த்து வைத்தால் தானே
காரியம் கச்சிதமாக முடிகிறது!
==================
@ துஷ்யந்தன்
// துஷ்யந்தன் said...
உங்கள் சிறுகதைகள் மிக எதார்த்தமாக இருக்கின்றது,
உங்கள் எழுத்து நடை மிக அருமை,
வாழ்த்துக்கள் பாஸ்//
மிக்க நன்றி
==================
@ RVS
மிக்க நன்றி, சார். நீங்கள் தனியாக ஏதும் சொல்லாததால் தப்பினேன்.
சுந்தர்ஜி ஏதோ பட்டத்தைக்கையில் வைத்துக்கொண்டு, தவியாய்த் தவிக்கிறார். உங்களுக்குத்தருமாறு பரிந்துரைக்கட்டுமா?
========================
விஜய் said...
//அருமை சார், வாழ்த்துக்கள் //
நம்ம ஊர் திருச்சிக்காரரான தங்களின் முதல் வருகைக்கும், அருமை என்ற அருமையான வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், சார்.
============================
கணேஷ் said...
//இந்தக் கதை, திருமணமாகப் போகும் பெண்களுக்கு சிறந்த அன்பளிப்பு.//
அன்புள்ள கணேஷ், உன்னுடைய இந்தப்பின்னூட்டம் எனக்கு இன்று கிடைத்த சிறந்த அன்பளிப்பு. நன்றி.
================================
வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
பதிலளிநீக்கு//ரவிக்கை பிட் முந்தானையில் இருந்தால் நல்லதா உள்ளே ரன்னிங்கில் இருந்தால் நல்லதா என்று அழகாய் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் ஒரு பெண்ணாக இருந்து. :-௦௦)))//
தங்களின் அன்பான + அபூர்வமான வருகைக்கும், கருத்துக்களுக்கும் முதற்கண் நன்றிகள், மேடம்.
என்னிடம் சற்றே ஒளிந்துள்ள பெண்மையை, உண்மையாக, மென்மையாக அழகாக ஆராய்ச்சி செய்தது போல, யாரும் நெருங்காத ஒரு பாயிண்டை கரெக்ட்டாகப் பிடித்துள்ளது உங்களின் தனித்தன்மையையும், சிறந்ததொரு படைப்பாளி என்ற தங்களின் புகழையும் பறை சாற்றுவதாக நான் உணர்கிறேன்.
மிகவும் சந்தோஷம், மேடம்.
middleclassmadhavi said...
பதிலளிநீக்கு//மாமியார் மனம் தெரிந்து புரிந்து அதற்கேற்றபடி நடந்தால், பெற்றோருக்கு ஐஸ்கிரீம் தான்!!//
மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள், மேடம். மிகவும் சந்தோஷம். நன்றிகள்.
சிவகுமாரன் said...
பதிலளிநீக்கு//சுடிதார் கதை எழுதி மாமியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதற்கு பிராயச்சித்தம் தானே இந்த மடிசார் புடவை கதை?//
ஆஹா, இந்த இரகசியம் உங்களுக்கு எப்படித்தெரிந்தது? தயவுசெய்து இனிமேல் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். இரகசியமாகவே நமக்குள் மட்டுமே இருக்கட்டும்.
//மருமகளின் சமயோசிதப் புத்தி வியக்க வைத்தது. உங்களிடம் தான் Family management கற்க வேண்டும்//
மிகவும் சந்தோஷம். நன்றிகள்.
//“அத்தை உடம்புக்கு கட்டிண்டா ரொம்ப நன்னா இருக்கும் என்று நான் தான் தனியாக ஒன்று எடுத்து வந்தேன்” என்றேன்//
பதிலளிநீக்குI AM OK, YOU ARE OK என்ற நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுதல்
அதனால் கிடைத்த வெற்றி
//சற்று நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணத்துடன் கேசரி கிளறும் வாசனை எங்கள் எல்லோருடைய மனதையும் ரம்யமானதொரு சூழலுக்கு கொண்டு சென்றது. //
மென்திறன் பயிற்சிக்கு நல்ல கதை.
ஒருபுடைவை போதுமென்று நாத்தனார் சொல்லமாட்டார்களா என்று ஆர்வத்துடன் கடைசி பத்திகளைப் படித்தேன். ஆனால் உங்கள் முடிவுதான் நடக்கக்கூடிய ஒன்று. சிறந்த முடிவும் அதுவே.
உளவியலை அழகாக புரிந்துவைத்திருப்பது மட்டுமல்லாமல் அதைக் கதையில் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது உங்களின் தனிச் சிறப்பு.
My Dear Mr. VENKAT Sir,
பதிலளிநீக்குWELCOME TO YOU, Sir.
//I AM OK, YOU ARE OK என்ற நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுதல் //
//மென்திறன் பயிற்சிக்கு நல்ல கதை.//
//உளவியலை அழகாக புரிந்துவைத்திருப்பது மட்டுமல்லாமல் அதைக் கதையில் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது உங்களின் தனிச் சிறப்பு.//
தாங்களும், தங்களது சிறப்பான, வித்யாசமான பாராட்டு வார்த்தைகளால், நம் திருமதி. சாகம்பரி மேடம் அவர்கள் போலவே ஏதேதோ சொல்லி என்னை ஒரேயடியாகக் கவிழ்த்து விட்டீர்கள்.
நான் ஒரு மிகச்சாதாரணமானவன்.
ஏதோ என் ஆத்ம திருப்திக்காக, என் மனதில் படுவதை, அவ்வப்போது சிறுகதைகளாகப் பதிவுசெய்து, வெளியிட்டு வருகிறேன்.
தங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து தந்துவரும் உற்சாகம் எனக்கு மேலும் பல நல்ல பதிவுகள் தரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக உள்ளது.
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன் vgk
இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன் தங்கள் vgk
ஒரு மருமகள் இப்படி அமைந்தால் ஒவ்வொரு மாமியாருக்கும் எத்தனை சந்தோஷமாக இருக்கும்? உறவுகளை அன்பாலும் புத்திசாலித்தனத்தாலும் அரவணைத்துச் செல்லும்போது அங்கு கிடைக்கும் ஆத்மார்த்தமான நிறைவும் இனிமையும் தனி தான்! எங்களையும் அதை உணர வைத்து விட்டீர்கள்! சிறிய புள்ளி தான், ஆனால் அதை வைத்து அழகான கோலம் போட்டு விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குமனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்கு//ஒரு மருமகள் இப்படி அமைந்தால் ஒவ்வொரு மாமியாருக்கும் எத்தனை சந்தோஷமாக இருக்கும்? உறவுகளை அன்பாலும் புத்திசாலித்தனத்தாலும் அரவணைத்துச் செல்லும்போது அங்கு கிடைக்கும் ஆத்மார்த்தமான நிறைவும் இனிமையும் தனி தான்! எங்களையும் அதை உணர வைத்து விட்டீர்கள்! சிறிய புள்ளி தான், ஆனால் அதை வைத்து அழகான கோலம் போட்டு விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!!//
அன்புச்சகோதரி அவர்களுக்கு,
வணக்கங்கள்.
தாங்கள் அன்புடன் வருகை தந்து, அழகிய கோலம் போட்டது போல ஆத்மார்த்தமான பின்னூட்டம் அளித்துள்ளது, என் மனதுக்கு நிறைவாகவும், மிகுந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளிப்பதாகவும் உள்ளது.
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள vgk
ஐயா
பதிலளிநீக்குநீங்க, வை கோ இல்லை-புட
வை கோ நல்ல
மடிசார் புடவை-இழுத்து
பிடிசாரொரு தடவை
படிசார் இதனை- எப்
படிசார் இருக்கு
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்கு//ஐயா
நீங்க, வை கோ இல்லை-புட
வை கோ நல்ல
மடிசார் புடவை-இழுத்து
பிடிசாரொரு தடவை
படிசார் இதனை- எப்
படிசார் இருக்கு
புலவர் சா இராமாநுசம்//
என் வலைப்பூவினில் இன்று புதிய பின்தொடர்பவராக இணைத்து, பின்னூட்டத்தை அழகிய கவிதை நடையில் தந்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.
அன்புள்ள,
vgk [புட வை கோ]
நன்றாக சுவையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டி போல,// அருமையான உவமை!! இரண்டு பகுதி கதையையும் நிதானமாக வாசித்தேன். இயல்பான சொல்லாடல்கள்! வாழ்த்துக்கள் சார்!
பதிலளிநீக்குviswam said...
பதிலளிநீக்கு//நன்றாக சுவையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி.
மீண்டும் அடிக்கடி வாங்க!
===================================
தக்குடு said...
//மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டி போல,// அருமையான உவமை!! இரண்டு பகுதி கதையையும் நிதானமாக வாசித்தேன். இயல்பான சொல்லாடல்கள்! வாழ்த்துக்கள் சார்!
தங்கள் அன்பான அபூர்வ வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள். மீண்டும் அடிக்கடி வாங்க!
உறவுகள் விட்டுக்கொடுக்கும் நேரத்திலும்,தட்டிக்கொடுக்கும் நேரத்திலும் பலம் பெறுகின்றன என்ற தங்கள் அனுபவத்தை பிடிவாதம் கொண்ட மாமியாரை தட்டிக் கொடுக்கும் மருமகள் மூலம் சொல்லி என்னைப் போன்ற சிறியவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி VGK சார்.
அய்யா உங்களுடைய கதை சுவாரசியமானது மிகவும் அற்புதம் ... இந்த காலத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இது பெரும் சான்று தான் .. அருமையான பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குnunmadhi said...
பதிலளிநீக்குஉறவுகள் விட்டுக்கொடுக்கும் நேரத்திலும்,தட்டிக்கொடுக்கும் நேரத்திலும் பலம் பெறுகின்றன என்ற தங்கள் அனுபவத்தை பிடிவாதம் கொண்ட மாமியாரை தட்டிக் கொடுக்கும் மருமகள் மூலம் சொல்லி என்னைப் போன்ற சிறியவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறீர்கள்.
நன்றி VGK சார்.//
அன்புள்ள கெளரி லக்ஷ்மி,
தங்கள் அன்பான வருகைக்கும், அழகாக மறுமொழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
vgk
VijiParthiban said...
பதிலளிநீக்குஅய்யா உங்களுடைய கதை சுவாரசியமானது மிகவும் அற்புதம் ... இந்த காலத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இது பெரும் சான்று தான் .. அருமையான பகிர்வுக்கு நன்றி//
அன்புடையீர்,
வணக்கம். தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ள்ன.
மிக்க நன்றி, மேடம்.
பிறந்த வீட்டையும் காப்பாத்திட்டு, புகப் போகும் வீட்டிலும் சந்தோஷத்தைக் கொண்டு வந்த பெண்ணரசிக்கு வாழ்த்துகள். இனிமையான இல்லறமே கிட்டி இருக்கும். நல்ல கதை.
பதிலளிநீக்குGeetha Sambasivam July 10, 2013 at 5:06 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//பிறந்த வீட்டையும் காப்பாத்திட்டு, புகப் போகும் வீட்டிலும் சந்தோஷத்தைக் கொண்டு வந்த பெண்ணரசிக்கு வாழ்த்துகள். இனிமையான இல்லறமே கிட்டி இருக்கும். நல்ல கதை.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
அருமையான கதை..
பதிலளிநீக்குஅமைதிச்சாரல் July 10, 2013 at 9:57 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//அருமையான கதை..//
தங்களின் அன்பான வருகைக்கும் *அருமையான கதை* என்ற இனிமையான கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும்னு சும்மாவா சொன்னார்கள்?
பதிலளிநீக்குபுடவை ப்ளவுஸ் பற்றி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க. எழுத்தாளர் அதான் பார்ப்பது கேட்பது எல்லாம் கவனத்தில் வச்சிருக்கீங்க
பதிலளிநீக்குஎல்லா பொண்ணுங்களுக்கும் இந்த மாதிரி அருமையான (!) மாமியார் கிடைச்சா நன்னாதான் இருக்கும்.
பதிலளிநீக்குஆனா என்னதான் பார்த்து, பார்த்து செய்தாலும், கனகாபிஷேகம் செய்தாலும் உச்சி குளிராத ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது.
ஆனா காலம் மாறிப் போச்சு. இன்னி தேதிக்கு மாட்டுப் பொண்ண பார்த்து பயப்படற மாமியார்களின் எண்ணிக்கு கூடிண்டே போறது.
மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
மடிசார் புடவை....:
உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் 'அவள்' எழுதிய சிறுகதை.. அதுதான் புடவைக் கடைக்குள்ளே அலசி, ஆராய்ந்து, அடடா......எத்தனை சூட்சுமம்...! கதை பிரமாதம்..
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
நல்ல பொண்ணுதான். அத்தையின்னா வரப்போர மாமியாக்காரியா? பொளச்சுப்பா.
பதிலளிநீக்குmru October 11, 2015 at 11:35 AM
நீக்கு//நல்ல பொண்ணுதான். அத்தையின்னா வரப்போர மாமியாக்காரியா? பொளச்சுப்பா.//
அத்தை = ஒருவரின் [ஆணோ/பெண்ணோ] தந்தையுடன் கூடப்பிறந்த சகோதரியாகும்.
இந்தக்கதையில் அந்த அத்தையே மாமியாராகவும் அமைய உள்ளார் அந்தக் கல்யாணப்பெண்ணுக்கு.
எனக்கு ஒரு டவுட்டு. இந்த கதையெல்லாம் எழுதுவது மிஸ்டர் திரு கோபால கிருஷ்ணன் சாரா அல்லது மிஸஸ் திருமதி கோபால கிருஷ்ணன் மேடமா.??????)))))))))) நகைக்கடை ஜவுளிக்கடல் அலசல் எல்லாம் அவ்வளவு தத்ரூபமா இருக்கு.
பதிலளிநீக்குஎன் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பாங்களா? என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே! அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன?// நம்ப பொண்ணு பொழச்சுக்குவா..சமத்த்த்து...ரொம்ப நல்லாருக்கு...
பதிலளிநீக்கு//சற்று நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணத்துடன் கேசரி கிளறும் வாசனை எங்கள் எல்லோருடைய மனதையும் ரம்யமானதொரு சூழலுக்கு கொண்டு சென்றது.
பதிலளிநீக்குஎன் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பாங்களா? என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே! அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன? //
இனிப்பான முடிவு!
//உங்கள் பிள்ளை எடுத்துக்கொடுத்ததை கல்யாணத்தின் போது கட்டிக்கோங்கோ; அம்மா எடுத்த இந்தப்புடவையை முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது கட்டிக்கோங்கோ; நான் எடுத்த இந்த சில்க் காட்டனை நலங்கு நடக்கும்போது சாயங்காலமாக கட்டிக்கோங்கோ” என்று சொல்லிவிட்டு, அத்தையை நமஸ்காரம் செய்தேன்.//
பதிலளிநீக்குநல்ல சாமர்த்தியமான பொண்ணுதான். நல்லா இருக்கட்டும்..
ஸ்ரத்தா, ஸபுரி... October 2, 2016 at 6:10 PM
நீக்கு**உங்கள் பிள்ளை எடுத்துக்கொடுத்ததை கல்யாணத்தின் போது கட்டிக்கோங்கோ; அம்மா எடுத்த இந்தப்புடவையை முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது கட்டிக்கோங்கோ; நான் எடுத்த இந்த சில்க் காட்டனை நலங்கு நடக்கும்போது சாயங்காலமாக கட்டிக்கோங்கோ” என்று சொல்லிவிட்டு, அத்தையை நமஸ்காரம் செய்தேன்.**
//நல்ல சாமர்த்தியமான பொண்ணுதான். நல்லா இருக்கட்டும்..//
வருகைக்கும் ’நல்ல இருக்கட்டும்’ எனச் சொல்லியுள்ள கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.