About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, June 19, 2011

மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 1 of 4]



மெரினா கடற்கரை. நானும் என் மனைவியும் கடற்கரையில் காத்திருக்கிறோம். கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன. 

இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம்,  அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ.

தூரத்தில் மிகப்பெரிய கார் ஒன்று பார்க் செய்யப்பட்டு, ஒரு பெண்ணும் அவளின் தந்தையும் இறங்கி வருவது தெரிகிறது. அந்தக்காரைத்தொடர்ந்து எங்கள் காரிலிருந்து எங்கள் மகன் இறங்கி வருவதும் தெரிகிறது. காத்திருந்த நாங்கள் அவர்களை நோக்கிப் புறப்படுகிறோம். 

நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன். கடல் அலைகளை விட என் எண்ண அலைகள் ஆகாய விமான வேகத்தில் என்னை என் சொந்த ஊரான திருச்சிக்கு அழைத்துப்போகிறது. 40 ஆண்டுகளுக்கு முந்திய சொந்தக்கதை; இன்று நினைத்தாலும் உடலும் உள்ளமும் உவகை கொள்கிறது.

அப்போது எனக்கு அலைபாயும் 21 வயது. மணி, ராம்கி, மாது, ரத்தினம், சேகர், பாபு, வெங்கிட்டு என பல நண்பர்கள். தெரு விளக்கடியில் இரவு 10 மணிக்குமேல் கூடி பல்வேறு விஷயங்களை விவாதித்துவிட்டு பிறகே படுக்கச்செல்வோம். 

டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம். வாசக சாலையில் வாங்கி வரும் புத்தகங்கள், மைதானம் சென்று விளையாட்டு, ரேடியோ, சினிமா, சிலசமயம் சீட்டுக்கச்சேரி தவிர, இது போன்ற ஆருயிர் நண்பர்களின் நேருக்கு நேர் சந்திப்பு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு. 

அவரவர் வீட்டின் ஆயிரம் சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றி அலசுதல், நடிகர்திலகம் சிவாஜி, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படங்கள் பற்றிய விமர்சனங்கள், இடையிடையே கட்டிளம் காளை வயதில் தானே வந்துபோகும் எங்களின் ஏக்கங்களும், ஒரு சிலரின் காதல் அனுபவங்களும் எனப்பேசப்பேச நள்ளிரவு வெகு நேரம் ஆகி பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று அவரவர் கூட்டை அடைவோம். 
.
எல்லோருமே படித்து, ஏதோ ஒரு கிடைத்த வேலையில் இருந்துகொண்டு, நிரந்தர வருவாய்க்கான வேலை வாய்ப்பைத்தேடி அலைந்த நேரம் அது. எல்லோருமே வறுமைக்கோட்டுக்கு கீழேயுமில்லாமல், மேலேயும் இல்லாமல் கோட்டை ஒட்டியேயுள்ள, ஓட்டு வீடுகளில் ஒண்டிக்குடித்தனமாக இருந்த நேரம் அது. 

எங்கள் குடியிருப்பில் மிகச்சிறியதாக சுமார் ஐம்பது ஓட்டு வீடுகள். அவ்வாறான குடியிருப்புப் பகுதிகள் ஸ்டோர் என்று அழைக்கப்படும். எங்கள் வீட்டின் உட்புறத்தை விட அதிகமான புழங்கும் இடங்கள் எங்கள் வீடுகளைச்சுற்றி இருக்கும்.

நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.

அதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு. 

பலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ்,  பம்ப் ஸ்டவ், கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள்.

ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.

அந்த ஸ்டோரில் இறைக்க இறைக்க நீர் ஊறக்கூடிய, என்றுமே வற்றாத ஒரு பெரிய பொதுக்கிணறு. அந்தக்கிணற்றைசுற்றி பாறாங்கற்கள் பதிக்கப்பட்ட ஜில்லென்ற சமதரை. இரவுப்பொழிதில் கிணற்றடியிலும், கிணற்றைச்சுற்றியுள்ள சிமெண்ட் தரையிலுமாக, நிறைய ஆண்கள் கையில் ஒரு விசிறியுடன், துண்டை விரித்துப்படுத்திருப்பார்கள். 

இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. திருடிச்செல்லும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்று எதுவும் யாரிடமும் கிடையாது. நிம்மதியான வாழ்க்கை. 

இரவு நேரத்தில் கடும் குளிரோ, மழையோ வந்தால் மட்டுமே வீட்டுலுள்ள பெண்களுடன் ஆண்களும் கோழிக்குஞ்சுகள் போல அட்ஜஸ்ட் செய்து தங்கும்படியாக நேரிடும்.

இவ்வாறு கிணற்றடி போன்ற பொது இடங்களில் படுப்பவர்கள், விடிவதற்கு முன்பாக அனைவரும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து விடுவார்கள். அவர்களில் பலரும், அதிகாலையில் கிணற்று நீரில் குளித்துவிட்டு அவரவர்கள் பிழைப்புக்குச் செல்ல வேண்டும்.

பால்காரர்கள் வருகையும், கீரை, காய்கறிகள், மண் சட்டிகளில் தயிர் என விற்பவர்கள் வருகையும், வாசல் தெளித்துக்கோலம் போடும் பெண்களுமாக அந்த மிகப்பெரிய குடியிருப்பே குதூகலமாகத் துவங்கும்.

மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும். 

இன்று அந்தக்கலகலப்பான, நாட்டு ஓடுகள் வேய்ந்த, ஏழைகளின் குடியிருப்பையே அங்கு காணோம். அந்த மிகப்பெரிய கிணற்றையும் காணோம். அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறிவிட்டது. யார் யாரோ புதுமுகங்கள் பயத்துடன் கதவைச் சாத்திக்கொண்டு, இன்று அங்கு வாழ்ந்து வருகின்றனர். 

ஓட்டு வீடுகளில் அன்று ஒண்டிக்குடுத்தனம் செய்தவர்கள் இன்று எந்த எந்த வெளியூர்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கிறார்களோ, எப்படி எப்படி வாழ்கிறார்களோ? அந்த உச்சிப்பிள்ளையாருக்கே வெளிச்சம். சரி என் கதைக்கு வருவோம்.

பள்ளிப்படிப்பை முடித்த என் நண்பர்களில் எனக்கே வெறும் ஐந்தாண்டுகளுக்குள் ஒரு நிரந்தர வேலை உள்ளூரிலேயே கிடைத்தது. மாதச்சம்பளம் வெறும் முன்னூறு ரூபாய்க்குள் தான். இன்றைய முப்பதாயிரம் ரூபாய்க்குச்சமம். ஒரு பவுன் தங்கம் விலை ரூபாய் 200க்குள் விற்ற காலம் அது.

நான் உண்டு என் வேலையுண்டு என்று மிகவும் சங்கோஜியான என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்கள். ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.

தொடரும்









68 comments:

  1. சுவாரசியமா போகுது தொடருங்கள் விரைவில்

    ReplyDelete
  2. நல்லா இருக்கு! நீங்கள் விவரிக்கும் விதத்தில் காட்சிகளை உருவாக்கிக் காண முடிகிறது! தொடர்வேன்! :-)

    ReplyDelete
  3. tamilmanam 2 to 3
    indli 4 to 5

    //இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. திருடிச்செல்லும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்று எதுவும் யாரிடமும் கிடையாது. நிம்மதியான வாழ்க்கை. //

    அந்தக் கால எதார்த்தத்தை அழகான வர்ணனையுடன் சொல்லிய விதம் அருமை ஐயா

    உங்களின் கதைகளில் வரும் சூழல்களை பற்றி நீங்கள் விவரிக்கும் விதம் அலாதியானது ஐயா

    //ஒருவள் ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருவள் என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.
    //

    காதலின் இரு வேறு நிலைகளை தொட்டு தொடரவிட்டிருகிரீகள் , தொடக்கமே அருமை தொடரக்காத்திருக்கிறோம் தொடருங்கள் ஐயா

    ReplyDelete
  4. ஒரு கிராமத்தின் வாழ்க்கை, அனுபவம், வசதி வாய்ப்புகள், சூழ்நிலைகள் அப்படியே கண் முண்ணே கொண்டு வந்துள்ளீர்...


    மெரீனாவில் ஆரம்பித்தவுடனே கதை பின்னோக்கி பாய்கிறது...

    தொடர்ந்து ப்பார்ப்போம்...

    ReplyDelete
  5. Ungaludan time machine-l !!
    Oruval- itharku pathilaaka oruththi enpathuthaane sariyaana vaarththai?

    ReplyDelete
  6. மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும். //

    உங்களின் கதைகள் அதே உற்சாகத்தைத் தருகின்றன. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.//

    இருதலைக்காதாலே கேள்விக்குறிதான். இதில் ஒருகை ஓசை.

    ReplyDelete
  8. இது உங்களின் சிறந்த கதையாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .. நல்ல துவக்கம்

    ReplyDelete
  9. ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ.//

    அருமையான உண்ர்வலைகளில் ந்னைந்த வரிகள்.

    ReplyDelete
  10. சரியான இடத்தில் கதை நிற்கிறது
    கல்யாணப் பரிசு ஜெமினி மாதிரித் தெரிகிறான்
    கதா நாயகன்.1/4 வேறு போட்டிருக்கிறீர்கள்
    அனேகமாக முடிச்சு3/4 ல்தான் அவிழும் என
    நினைக்கிறேன் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  11. இன்று அந்தக்கலகலப்பான, நாட்டு ஓடுகள் வேய்ந்த, ஏழைகளின் குடியிருப்பையே அங்கு காணோம். அந்த மிகப்பெரிய கிணற்றையும் காணோம். //

    காலம் தொலைத்த கோலம.

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா!

    கதையின் தொடக்கம் மிகப் பரபரப்பாக உள்ளது! ஏதோ ஒரு மர்மக் கதை படிப்பது போன்ற உணர்வு! காரில் இருந்து இறங்கி வந்தவர்கள் யார்? அந்தப் பெண்ணைப் பார்த்ததும் எதற்காக நீங்கள் திடுக்குற்றீர்கள்?

    அந்தப் பெண்ணின் தாயார் ஏன் வரவில்லை?

    அப்புறம் பழைய வாழ்க்கை முறையினை விபரித்த விதம், மிக அருமை!

    தொடருங்கள் கதையினை ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  13. கதையின் களத்தின் நடுவே நீங்கள் அமர்ந்து கொண்டு,அத்தனை திசையிலும் உங்கள் பார்வை பதிகிறது.. அருமையான துவக்கம்.
    சட்டுபுட்டுன்னு முடிக்காம ஒரு பெரிய இலையாய்ப் போடும் வை.கோ ஜி !

    ReplyDelete
  14. இடம் பற்றிய வர்ணனைகள் வர வர, அந்தக் காட்சி மனக்கண் முன்னே விரிகிறது. சூழல் முடிந்து கதைக்குள் நுழைந்தாயிற்று என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது.
    நகைச்சுவை!
    ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.
    சஸ்பென்ஸ்!
    நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன்.
    அதிர்ச்சி!
    பலதரப்பட்ட உணர்வுகளோடு விளையாடும் உங்கள் எழுத்துக் கப்பலில் நானும் ஏறியாச்சு..

    ReplyDelete
  16. ஆரம்பம் அழகு. அருமை. தொடருங்கள். தொடர்வேன்.

    ReplyDelete
  17. கடந்த காலத்தில் ஒரு கால். இன்றில் ஒருகால் எனக் கால்பாவி நிற்கிறேன்.

    மோகன்ஜி ஆர்டர் கொடுத்தா மாதிரி துளிரா ஒரு பெரிய பந்தி பார்சல்.

    ReplyDelete
  18. "கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன.

    இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம், அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ"

    ஆரம்பமே இயற்கை அழகும் அன்புமாக அமர்க்களமாக தொடங்குகிறது!
    அதன் பின் கதை ஸ்டோர் வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்டு ராஜபாட்டையில் பயணிக்கிறது!
    இளம் வயது வாலிபனின் உணர்வுகள், அவ‌னைச் சுற்றி தின‌ச‌ரி சுழ‌ன்ற‌ ய‌தார்த்த‌ நிக‌ழ்வுக‌ள் என்று ஒவ்வொரு வ‌ரியும் அனுப‌வித்து எழுதியிருக்கிறீர்க‌ள்!!
    ஒரு சின்ன‌ வ‌லியுட‌ன் தொட‌ரும் போட்டு விட்டீர்க‌ள்.. .. ...
    அடுத்த‌ ப‌குதியில் பார்க்க‌லாம்!!

    ReplyDelete
  19. அலை பாயும் வயது... அலை பாயும் கடலோரம்... நல்ல ஆரம்பம்.

    ReplyDelete
  20. மலைக்கோட்டை அருகே குடிநீர்க் கிணறும் ஓட்டு வீடுக் குடியிருப்புமா...சுமார் 40 வருடங்கள் முந்தைய கதை. விவரிப்பும் வர்ணனைகளும் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  21. உங்களின் ஒவ்வொருகதையும் விவரணை எங்களையும் அந்த இடத்திற்கே கூட்டிப்போகிரது. அருமையான ஆரம்பம். பழையஸ்டோர்
    குடி இருப்பைப்பற்றி படிக்கும்போது
    நாமும் அங்குஒரு குடித்தனக்கார்ரரா க
    இருக்கக்கூடாதான்னு தொனுது.

    இப்பதான் எனக்கு மார்ச் மாத கல்கி படிக்க கிடைத்தது, வித்யாசமாக யோசிக்கச்சொல்லி ஒரு பதிவில் உங்க
    பதிலும் பார்த்தேன். நமக்கு தெரிந்தவர்களின் பேரை பத்த்ரிகையில்
    பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா
    இருக்கு.

    ReplyDelete
  22. அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. திருடிச்செல்லும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்று எதுவும் யாரிடமும் கிடையாது. நிம்மதியான வாழ்க்கை//

    குடுத்து வச்சவங்கபா.....!!!

    ReplyDelete
  23. ம்ம்ம்ம் அசத்துங்க அசத்துங்க.....!!!

    ReplyDelete
  24. என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்கள். ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.//

    ஐயோ ஐயோ என்னை கொல்றாயிங்க கொல்றாயிங்க, என் பழைய காதல்களும் ஞயாபக படுத்துராயின்களே அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  25. என் இளைய வயதில் திருச்சி வடக்கு ஆண்டார் வீதி மணிவாசகம் ஸ்டோரில் வசித்த ஞாபகம் வருகிறது.அழகு வர்ணனைகள்...எப்போது வெளிவரும் அடுத்த பகுதி என்றெண்ணவைக்கும் சஸ்பென்ஸ் நடை.

    ReplyDelete
  26. ”ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.....”
    ”எல்லோருமே வறுமைக்கோட்டுக்கு கீழேயுமில்லாமல், மேலேயும் இல்லாமல் கோட்டை ஒட்டியேயுள்ள, ஓட்டு வீடுகளில் ஒண்டிக்குடித்தனமாக இருந்த நேரம் அது. ”
    அந்த நாள் ஞாபகம் வந்ததே. நண்பரே.. நண்பரே..இந்த நாள் அது போல் இல்லையே..அது ஏன்.. நண்பரே?

    ReplyDelete
  27. மிகவும் சுவாரசியமாக ஆரம்பித்து இருக்கிரீர்கள்.அந்த கால வாழ்க்கையை கண் முன்னால் கொண்டு வந்து விட்டீர்கள்.உஙகள் வர்ணனையை படிக்கும் போது அந்த காலத்து வழ்க்கையை ரொம்ப miss பண்ணுவதை உணர முடிகிறது.

    ReplyDelete
  28. எழுபதுகளில் இருந்த சூழ்நிலையை அழகாக விளக்குகிறது. களம் மிகவும் பழக்கப்பட்டுவிட்டது. இனி கதையை பின் தொடர்கிறேன். நன்றி சார்

    ReplyDelete
  29. கலக்கலாக போகுது , அடுத்தது எப்போ எண்ட ஆவல தூண்டுது உங்கள் எழுத்து

    ReplyDelete
  30. அருமையான வர்ணனை .
    //டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம்.// உண்மையில் அதுதான் பொற்காலம் !!!
    படிக்கும்போது அப்படியே நானும் ஒன்றிவிட்டேன் கதையோடு
    மார்கழி பனியினை நானும் அனுபவித்த மாதிரியே இருக்கு .
    தொடருங்கள் .

    ReplyDelete
  31. மிa அருமை ஐயா...இன்று தான் உங்கள் பதிவிற்கு முதல் முறையாக வந்தேன் ..இத்தனை நாள் மிஸ் பண்ணி விட்டேன் ...அந்த கால சூழல்கள் மனதில் ஏக்கத்தை வரவைத்தது ...உங்கள் எழுத்தின் சிறப்பு ...
    வாழ்த்த வயதில்லை நன்றி கூறி தொடர்கிறேன்

    ReplyDelete
  32. tamil manam 8to 9
    indli 18 to 19

    எனக்கேவான்னு நீங்க சொல்றது கேக்குது

    ReplyDelete
  33. நல்லா இருக்கு! நீங்கள் விவரிக்கும் விதத்தில் காட்சிகளை உருவாக்கிக் காண முடிகிறது!மெரீனாவில் ஆரம்பித்தவுடனே கதை பின்னோக்கி பாய்கிறது...

    ReplyDelete
  34. தொடக்கமே கடல் அலைகளுடன் சுவாரசியமாய் ஆரம்பித்து இருக்கிறது. ஸ்டோர் என்று சொல்லப்பட்ட இடங்களில் பெரும்பாலானவை இப்போது இல்லை என்று நினைக்கும்போதே வருத்தம் மிஞ்சுகிறது. என் சிறிய வயதில் நான் சென்று வந்த தண்ணீர் பந்தல் ஸ்டோர் கண் முன்னே விரிகிறது. இப்பவும் இந்த ஸ்டோர் இருக்கிறது என நினைக்கிறேன்....

    தொடருங்கள்.... தொடர்கிறேன்...

    ReplyDelete
  35. 1972 லவ் ஸ்டோரி? காதல் கை கூடியதா என்று பார்க்கலாம்.... ;-))

    ReplyDelete
  36. ஆவலை தூண்டி விட்டீர்கள்.அடுத்த பாகத்தை படிக்க ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
  37. இந்தக் கதையின் முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தொடர்ந்து வாருங்கள்.

    உற்சாகம் தாருங்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  38. வணக்கம். தாங்கள் விவரிக்கும் அந்தக் கால சூழ்நிலை என்னை மிகவும் பாதித்துவிட்டது. நானும் அந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து வந்தவந்தான். பழைய நினைவுகளை என்னுள் கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  39. மறக்க மனம்.....சுவாரஸ்யமாய் விரிகிறது.

    ReplyDelete
  40. @ விஸ்வம்
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
    தொடர்ந்து வாருங்கள்.

    =================================

    @ மாதேவி
    மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  41. வாசிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை என்பதை ஒரு சபதமாகவே வைத்திருக்கிறேன் என்பதால், ஒவ்வொரு பகுதியாக வாசித்துப்பின் கருத்துச் சொல்வதாய் உத்தேசம். :-)

    //டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம்.//

    பொற்காலம் என்று சொல்லுங்க! கிட்டத்தட்ட இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஒரு தலைமுறையைப் பற்றிய கதை, அதுவும் காதல் கதை என்பது ஆவலைத் தூண்டுகிறது.

    //நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு.//

    அக்காலத்து ஸ்டோர்வாசம் குறித்து சற்றும் ஆயாசமில்லாமல், விபரமாக வர்ணித்து கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள்!

    //ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.//

    இதை விட நறுக்கென்று சொல்ல முடியுமா தெரியவில்லை. அனுபவஸ்தர்களின் எழுத்து என்பதை விடவும் அனுபவித்து எழுதியிருப்பது தெரிகிறது.

    //மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும். //

    மற்றோரு சான்று! :-)

    பிரமாதமாக துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்

    அடுத்த பகுதியை பிறகு வாசித்து கருத்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  42. சேட்டைக்காரன் said...
    //வாசிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை என்பதை ஒரு சபதமாகவே வைத்திருக்கிறேன் என்பதால், ஒவ்வொரு பகுதியாக வாசித்துப்பின் கருத்துச் சொல்வதாய் உத்தேசம். :-)//

    தங்களின் பின்னூட்டம் எப்போதுமே
    தனித்தன்மை வாய்ந்தது. அதுவே எனக்கு எப்போதும் உற்சாகம் தரும் டானிக்.

    நான் சுடிதார் வாங்கப்போனபோது, என்னைத் தனியாக பஜாரில் விட்டுவிட்டு “இதோவந்துவிடுகிறேன்” என்று சொல்லிப்போனவர் தான் நீங்கள்.

    பிறகு மே, ஜூன் இரண்டு மாதமாகக் காணவே காணோம்.

    காதலியைக்காணாத காதலன் போல கலங்கிப்போய் தூங்காத இரவுகள் பலவுண்டு.

    என்னுடைய மே, ஜூன் 2011 படைப்புகளுக்கு பலபேர்கள் பின்னூட்டம் தந்து பாராட்டியுள்ளனர்.

    இருப்பினும் தாங்கள் வராமல் போனது என்னுடைய கதைகளின் துரதிஷ்டமே.

    முடிந்தால் நேர அவகாசம் இருந்தால் ஒரு ரவுண்ட் வர முயற்சிக்கவும்.

    தங்களின் பின்னூட்டம் கிடைத்தால் தான் “ராதா கல்யாண / சீதாக்கல்யாண உத்சவங்களில் கடைசியாக ஆஞ்சநேய உத்ஸவம்” போல நிறைவு பெற்றதாகும்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  43. மின்விளக்கே அதிகம் இல்லாத, அந்தக்கால திருச்சி வடக்கு ஆண்டார் தெரு.அங்கிருந்த பெரிய அரசமரம், எதிரில் உள்ள ராமா கபே, அருகில் உள்ள மதுரா லாட்ஜ் தொடங்கி, கீழ ஆண்டார் தெரு முடிய, மலைக்கோட்டை பகுதியில் நிறைய குடியிருப்புக்கள். எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்தவை. அங்கிருந்த ஒண்டு குடித்தனங்களை நினைவில் வைத்து இந்தக் கதையை VGK எழுதியுள்ளார்.

    // பலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள். //

    நீங்கள் கதையில் சொல்லும் அந்த நாட்களை இப்போதும் என்னால் மறக்க முடியாது.

    // நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.

    அதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு. //

    அப்போதைய அங்கிருந்த நடுத்தர மக்களது சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள், (அப்போதைய காலகட்டத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு சுலபமாகப் பேசிவிட முடியாது) இவற்றை இயல்பாகச் சொல்லி அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்.

    //இன்று அந்தக்கலகலப்பான, நாட்டு ஓடுகள் வேய்ந்த, ஏழைகளின் குடியிருப்பையே அங்கு காணோம். அந்த மிகப்பெரிய கிணற்றையும் காணோம். அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறிவிட்டது. யார் யாரோ புதுமுகங்கள் பயத்துடன் கதவைச் சாத்திக்கொண்டு, இன்று அங்கு வாழ்ந்து வருகின்றனர். //

    உண்மைதான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. செயற்கையான வாழ்க்கை, முகம் கொடுத்து பேசாத மனிதர்கள். நல்லவேளை மனிதர்களின் மனக்கோட்டை மாறினாலும், திருச்சி மலைக்கோட்டை இன்னும் மாறவில்லை

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திரு. தி.தமிழ் இளங்கோ, ஐயா,
      வாங்க, வணக்கம்.

      //மின்விளக்கே அதிகம் இல்லாத, அந்தக்கால திருச்சி வடக்கு ஆண்டார் தெரு.அங்கிருந்த பெரிய அரசமரம், எதிரில் உள்ள ராமா கபே, அருகில் உள்ள மதுரா லாட்ஜ் தொடங்கி, கீழ ஆண்டார் தெரு முடிய, மலைக்கோட்டை பகுதியில் நிறைய குடியிருப்புக்கள். எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்தவை. அங்கிருந்த ஒண்டு குடித்தனங்களை நினைவில் வைத்து இந்தக் கதையை VGK எழுதியுள்ளார்.//

      அழகான அந்தக்கால சூழலும், எங்கள் தெருவினைப்பற்றியும், மிகவும் துல்லியமாக தங்களுக்கும் தெரிந்திருப்பதால் தான், தங்களால் இது போல ஓர் பின்னூட்டம் கொடுக்க முடிந்துள்ளது.

      அதே அதே ... புரிதலுக்கு மிக்க மகிழ்ச்சி, ஐயா.

      தொடரும்....

      Delete
    2. ***** பலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள்.*****

      //நீங்கள் கதையில் சொல்லும் அந்த நாட்களை இப்போதும் என்னால் மறக்க முடியாது.//

      ஆம் ஐயா, நம்மைப்போன்றவர்களால், எதையும் அவ்வளவு சுலபமாக மறக்கவே முடியாது, தான்.

      Delete
    3. *****நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.

      அதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு. *****

      //அப்போதைய அங்கிருந்த நடுத்தர மக்களது சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள், (அப்போதைய காலகட்டத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு சுலபமாகப் பேசிவிட முடியாது) இவற்றை இயல்பாகச் சொல்லி அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்.//

      நான் கதையில் சொல்லிய உண்மைச் சம்பவங்களையும், அந்தக்கால கட்டுப்பாடுகளையும், நடுத்தர வர்க்க மக்களின் சமூக பொருளாதர நிலமைகளையும், மிக அழகாகப் புரிந்துகொண்டு, விமர்சனமாக வெளியிட்டுள்ளதில், நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் ஐயா.

      தாங்கள் இந்த மிகப்பெரிய விரிவான பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      Delete
  44. ஆஹா ஆட்டோகிராப் சுவாரஸ்யமா இருக்கே... மேற்கொண்டு படிச்சிடறேன்..

    ReplyDelete
  45. உஷா அன்பரசு November 21, 2012 1:21 AM
    //ஆஹா ஆட்டோகிராப் சுவாரஸ்யமா இருக்கே...//

    வாருங்கள் திருமதி உஷா அன்பரசு, மேடம்.

    வணக்கம். நல்லா இருக்கீங்களா!

    பிரபல தமிழ் பத்திரிகைகளில் எழுதிவரும் பிரபல எழுத்தாளராகிய தாங்கள் இன்று இந்த என் பதிவினைப்படிக்க வந்துள்ளது எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    த்ங்களின் அன்பான வருகைக்கும் ”சுவாரஸ்யமாக இருக்கே” என்ற அழகான கருத்துக்களுக்கும் என் நன்றியோ நன்றிகள்.

    //மேற்கொண்டு படிச்சிடறேன்..//

    படியுங்கோ ... படியுங்கோ ! ;)))))

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  46. பழைய நினைவுகளுடன் ஆரம்பித்திருக்கிற இந்தக் கதையை இப்போதுதான் படிக்கிறேன்.
    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஸ்டோர் குடியிருப்புகளில் நாங்களும் இருந்திருக்கிறோம் என்பதால் கதையின் சூழல் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது.
    அடுத்த பகுதியில் என்ன நடக்குமோ தெரியவில்லையே!
    உடனே படிக்கிறேன்.

    ReplyDelete
  47. Ranjani Narayanan December 15, 2012 12:20 AM

    வாங்கோ ரஞ்ஜு மேடம் வணக்கம்.

    //பழைய நினைவுகளுடன் ஆரம்பித்திருக்கிற இந்தக் கதையை இப்போதுதான் படிக்கிறேன்.//

    ஆஹா, தாங்களே வருகை தந்து படிக்க ஆரம்பித்துள்ளது ....
    அது என் பாக்யம். சந்தோஷம். ;)

    //நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஸ்டோர் குடியிருப்புகளில் நாங்களும் இருந்திருக்கிறோம் என்பதால் கதையின் சூழல் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது.//

    1961 முதல் 1980 வரை சுமார் 20 வருஷங்கள் [என் 10 வயது முதல் 30 வயது வரை] உலகத்திலேயே மிகப்பெரிய ஸ்டோரில் 52 குடுத்தனக்காரர்களுடன் சேர்ந்து குடியிருந்த அனுபவம் எனக்கு உண்டு. எங்களுக்குள் அவ்வளவு ஒரு ஒற்றுமை.

    இந்த அனுபவத்தால் மட்டுமே இந்தக்கதையை இவ்வளவு தத்ரூபமாக என்னால் படைக்க முடிந்தது. வாசகர்கள் அனைவரையுமே இந்தக்கதை சுண்டி இழுத்துள்ளது.

    அந்த உலகமஹா ஸ்டோரில் அன்று எங்களுடன் வசித்து வந்த பலரும் இன்று பல்வேறு இடத்தில் வசிக்கிறார்கள். இருந்தாலும் இன்றும் நாங்கள் சந்திக்கிறோம், பேசுகிறோம்.

    இப்போதும் உள்ளூரில் உள்ளவர்களை மட்டும், கல்யாணம் முதலிய நிகழ்ச்சிகளுக்கு ஒருவரை ஒருவர் மறக்காமல் நேரில் சென்று அழைக்கிறோம். வெளியூரில் இருப்பவர்களில் சிலரின் விலாசம் மட்டும் உள்ளன. சிலரைப்பற்றி ஒரு தகவலும் தெரியாமல் உள்ளது.

    //அடுத்த பகுதியில் என்ன நடக்குமோ தெரியவில்லையே!
    உடனே படிக்கிறேன்.//

    சந்தோஷம். அவசியமாகப் படியுங்கோ.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  48. வணக்கம்
    ஐயா

    இன்று 8,01,2013 மறக்க மனம்கூடுதில்லையே உங்களின் படைப்பு வலைச்சரத்தில் வெளிவந்துள்ளது அருமையான படைப்பு நேரம் கிடைக்கும் போது மின்சாரம் இருக்கும் போதும் நம்ம பக்கமும் வாருங்கள் ஐயா வாழ்த்துக்கள்
    உங்களின் ஒவ்வொரு படைப்புகளையும் ,இரசித்து படிப்பவன் நான் நீங்கள் எழுதிய மல்லிகைப்பூ சம்மந்தப்பட்ட சிறுகதை என்னை கவர்ந்து விட்டது நல்ல கற்பணை உயிர்ரோட்டம் கொடுத்து எழுதியுள்ளீர்கள் வேலையின் நிமிர்த்தம் செல்ல வேண்டியுள்ளது (மறக்க மனம் கூடுதில்லையே) என்ற ஆக்கம் 4 பிரிவுகள் உள்ளது அதை படித்தபின்பு கருத்துக்களை சொல்லுகிறேன் ஐயா,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. 2008rupanJanuary 7, 2013 9:16 PM
      //வணக்கம் ஐயா//

      வணக்கம், வாருங்கள்.

      //இன்று 08.01.2013 மறக்க மனம்கூடுதில்லையே உங்களின் படைப்பு வலைச்சரத்தில் வெளிவந்துள்ளது//

      அப்படியா, தகவலுக்கு நன்றிகள்.

      //அருமையான படைப்பு//

      நன்றி.

      //நேரம் கிடைக்கும் போது மின்சாரம் இருக்கும் போதும் நம்ம பக்கமும் வாருங்கள் ஐயா//

      ஆகட்டும், முயற்சிக்கிறேன்.

      //வாழ்த்துக்கள்//

      நன்றி.

      //உங்களின் ஒவ்வொரு படைப்புகளையும் ,இரசித்து படிப்பவன்//

      அப்படியா, சந்தோஷம். இருப்பினும் இன்று தான் முதன் முதலாக எனக்குக் கருத்தளித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

      //நான் நீங்கள் எழுதிய மல்லிகைப்பூ சம்மந்தப்பட்ட சிறுகதை என்னை கவர்ந்து விட்டது நல்ல கற்பணை உயிர்ரோட்டம் கொடுத்து எழுதியுள்ளீர்கள்//

      அது ஒருவேளை “ஜாதிப்பூ” ஆக இருக்கலாம்.

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_12.html

      //வேலையின் நிமிர்த்தம் செல்ல வேண்டியுள்ளது//

      "செய்யும் தொழிலே தெய்வம். அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்".

      அதனால் அதற்கே முன்னுரிமை கொடுக்கவும்.

      //(மறக்க மனம் கூடுதில்லையே) என்ற ஆக்கம் 4 பிரிவுகள் உள்ளது அதை படித்தபின்பு கருத்துக்களை சொல்லுகிறேன் ஐயா.//

      ஒவ்வொரு பகுதியாகப் படித்து முழுவதும் ரஸித்த பின்புதான் பின்னூட்டமே கொடுக்கப்பட வேண்டும்.

      அதையே தான் நானும் பிறரிடம் எதிர்பார்ப்பவன்.

      இது போன்ற என் கதைகளைப் படிக்கவோ, ரஸிக்கவோ, பின்னூட்டமிடவோ ஓர் கொடுப்பிணை வேண்டும் என்று நினைப்பவன் நான். உங்கள் அதிர்ஷ்டம் எப்படியோ?

      //-நன்றி--அன்புடன்--ரூபன்-//

      அன்பான முதல் வருகைக்கும், நீண்டதொரு முன்னுரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  49. அன்பின் வை.கோ

    மலரும் நினைவுகள் - அசை போட்டது நன்று - வாழ்வின் முக்கிய கட்டமான 21 வயதில் வாழ்வில் இரு பெண்கள் குறுக்கிட்டது பற்றிய பதிவு - நீண்ட வர்ணனைகள் - நடந்த நிகழ்வுகள் அத்தனையும் விளக்கமாக அளித்தது நன்று. தொடர்களையும் படிப்போம் - சஸ்பெண்ஸ் அடுத்த பகுதியில் உடைக்கபடுமா ? பார்ப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா)January 8, 2013 6:18 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      அன்பின் வை.கோ

      //மலரும் நினைவுகள் - அசை போட்டது நன்று - வாழ்வின் முக்கிய கட்டமான 21 வயதில் வாழ்வில் இரு பெண்கள் குறுக்கிட்டது பற்றிய பதிவு - நீண்ட வர்ணனைகள் - நடந்த நிகழ்வுகள் அத்தனையும் விளக்கமாக அளித்தது நன்று.//

      நான் எழுதிய எனக்கு மிகவும் பிடித்தமான முத்திரைப் படைப்புகளில் இதுவும் ஒன்று, ஐயா.

      இதைப்படிக்க தாங்களே இன்று வருகை தந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

      //தொடர்களையும் படிப்போம் - சஸ்பெண்ஸ் அடுத்த பகுதியில் உடைக்கபடுமா ? பார்ப்போம்//

      இரண்டாவது பகுதிக்குள் தாங்கள் நுழைந்து விட்டாலே போதும் ஐயா! உங்களை அதுவே கடைசிப்பகுதியின் கடைசி வரி வ்ரை விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் அழகாக வழுக்கிக்கொண்டு சென்று விடும் ஐயா. அல்வா சாப்பிட்டது போல ஓர் மன நிறைவையும் கொடுக்கும் ஐயா.

      //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      நன்றியுடன் .... பிரியமுள்ள,
      VGK

      Delete
  50. டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம். வாசக சாலையில் வாங்கி வரும் புத்தகங்கள், மைதானம் சென்று விளையாட்டு, ரேடியோ, சினிமா, சிலசமயம் சீட்டுக்கச்சேரி தவிர, இது போன்ற ஆருயிர் நண்பர்களின் நேருக்கு நேர் சந்திப்பு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு. //

    அப்படியே ஒரு 40 ஆண்டுகள் பின்னோக்கிப் போயிட்டேன். மைலாப்பூரில் குடி இருந்ததால் மேடை நாடகங்களுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. மத்தபடி ரேடியோ, தினமும் கபாலி கோவிலுக்குப் போய் விளையாட்டு, புத்தகங்கள்,லீவு விட்டா ஊருக்கு இப்படி போனது பொழுது. ஆனா நாம அனுபவிச்ச விஷயங்கள் இந்தக் காலக் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை. உண்மையில் அது ஒரு அருமையானகாலம்.

    சரி அடுத்த பகதிக்குப் போய் கதாநாயகனின் மனம் கவர்ந்த நாயகிகளை பார்க்கிறேன்.

    ReplyDelete
  51. வாங்கோ திருமதி ஜெயந்தி ரமணி அவர்களே!

    தங்களின் திடீர் வருகை மிகுந்த எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    //அப்படியே ஒரு 40 ஆண்டுகள் பின்னோக்கிப் போயிட்டேன்.//

    அடடா, நீங்களுமா? சந்தோஷம். ப்ளாஷ்பேக்கிலும் என்னுடன் போட்டியா? ;)))))

    //மைலாப்பூரில் குடி இருந்ததால் மேடை நாடகங்களுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது.//

    எனக்கும் மேடை நாடகங்கள் பார்ப்பது பிடிக்கும். நானே பல நாடகங்களுக்கு கதை வசனம் எழுதி இயக்கியும் உள்ளேன். நான் எழுதிய சமூக மேடை நாடகம், அகில இந்திய வானொலி நிலையம், திருச்சியால், பெண்கள் மட்டும் பங்குபெறும் ”பூவையர் பூங்கா” நிகழ்ச்சியில் ஒலிபரப்பப் பட்டதும் உண்டு.

    அதையும், அதைப்பற்றிய சுகமான தொடர் நிகழ்வுகளையும் பதிவிடுவதாகவும் உள்ளேன்.

    ஆனால் இப்போதைக்கு இல்லை. பிறகு ஒரு நாள் மட்டுமே.

    //தினமும் கபாலி கோவிலுக்குப் போய் விளையாட்டு//

    மைலாப்பூருக்கு பலமுறை வந்துள்ளேன். கபாலி கோயிலில் நான் உங்களையும் அன்று குழந்தையாகப் பார்த்திருப்பேனோ என்னவோ? இரட்டைப்பின்னல், காலில் கொலுசு, காதில் ஜிமிக்கியுடன் நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருந்ததால், அதில் நீங்கள் யார் என்று எனக்கு இப்போது நினைவுக்கு வரவில்லை. சும்மாவா! இதெல்லாம் நடந்தது 40 வருடங்கள் முன்பல்லவா? ;)))))

    //மத்தபடி ரேடியோ, புத்தகங்கள்,லீவு விட்டா ஊருக்கு இப்படி போனது பொழுது. ஆனா நாம அனுபவிச்ச விஷயங்கள் இந்தக் காலக் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை. உண்மையில் அது ஒரு அருமையான காலம்.//

    ஆம். இந்தக்கால குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பே இன்று இல்லை தான்.

    //சரி அடுத்த பகதிக்குப் போய் கதாநாயகனின் மனம் கவர்ந்த நாயகிகளை பார்க்கிறேன்.//

    அடடா .... நேக்கு பயமாக்கீதூஊஊஊஊ ! ;)))))

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
  52. வணக்கம்
    ஐயா
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட
    முகவரி http://blogintamil.blogspot.com/2014/08/v-behaviorurldefaultvmlo.html?showComment=1407971958042#c8319385501671425565
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  53. ஸ்டோர் குடியிருப்பு என்னும் வார்த்தையே காணாமல் போய்விட்ட காலம் இது. அபார்ட்மென்ட் என்பவை அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டன.

    ReplyDelete
  54. உங்க எழுத்து நடையில் எங்களையும் அந்த அருமையான கால வாழ்க்கையை உணற வச்சுடுடீங்க.

    ReplyDelete
  55. கடல் அலையில நாங்க கால் நனைக்கிரோமே. ஸ்டோர் குடி இருப்புகள் பற்றி வெவரமா சொல்லினிங்க. வெளங்கிகிட்டேன்.

    ReplyDelete
  56. முதலில் படிக்க ஆரம்பித்த போது ஆனந்தமாக கடல் அலைகளில் கால நனைத்த உணர்வு. அடுத்து பழையகால வாழ்க்கைமுறை பற்றிய யதார்த்தம் இரண்டு பெண்களைப்பற்றிய விவரணைகள் ஒரு கதையில் இவ்வளவு விஷயங்களையும் தெளிவாக சொல்ல முடிந்த எழுத்துத் திறமை. சான்சே இல்ல. இதுபோல எழுத நமக்கெல்லாம் முடியலியேன்னு பெருமூச்சுதான் விட முடிக்றது.

    ReplyDelete
  57. ஆஹா...என்ன ஒரு சமூகக் கட்டமைப்பு...அருமையாகக் கண் முன்னே நிறுத்தியுள்ளீர்கள்...அது போன்ற குடியிருப்பில் குடியிருக்கமாட்டோம என்றுகூட ஒரு ஆவல் ஏற்படுகிறது..தொடரும் போடுறதுக்கு முன்னால ஒரு புது நாட்...

    ReplyDelete
  58. அன்றும் இன்றும்! அருமையான துவக்கம்!

    ReplyDelete
  59. இந்த கதை எழுதியே எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது.. இப்போது கூட படிக்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கே. கடல் அலைகளில் நாமும் கால் நினைத்த பரவசம். ஸ்டோர் குடியிருப்புகள் பற்றி தெரியாதவர்களுக்கும் தெரிந்து கொள்ள வைத்த எழுத்தாள்மை..இள வயது பையன்களின் மன உணர்வுகள்....இந்தகால தலைமுறுகளுக்கு அந்த ஆனந்தமான வாழ்க்கை அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பே இல்லையே. அடுக்குமாடி புறாகூண்டில் அடைபட்டு கம்ப்யூட்டர் கேம்ஸுக்கு அடிமையாகி. நல்ல பல விஷயங்களை இழந்து விட்டார்களே..

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... October 4, 2016 at 10:09 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இந்த கதை எழுதியே எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது.. இப்போது கூட படிக்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கே.//

      இதில் பெரும்பாலும் பல உண்மைச் சம்பவங்கள் கலந்திருப்பதால், இதனை எப்போது படித்தாலும், எனக்கும் மிகவும் சுவாரஸ்யமானதாகவே உள்ளது.

      //கடல் அலைகளில் நாமும் கால் நினைத்த பரவசம். //

      :) மிக்க மகிழ்ச்சி.

      //ஸ்டோர் குடியிருப்புகள் பற்றி தெரியாதவர்களுக்கும் தெரிந்து கொள்ள வைத்த எழுத்தாள்மை..//

      மிகவும் சந்தோஷம். :)

      //இள வயது பையன்களின் மன உணர்வுகள்....இந்தகால தலைமுறைகளுக்கு அந்த ஆனந்தமான வாழ்க்கை அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பே இல்லையே. அடுக்குமாடி புறாகூண்டில் அடைபட்டு கம்ப்யூட்டர் கேம்ஸுக்கு அடிமையாகி. நல்ல பல விஷயங்களை இழந்து விட்டார்களே..//

      உண்மைதான். இன்று நம்முள் புகுந்துவிட்ட வியத்தகு விஞ்ஞான முன்னேற்றங்களால், பல பழைய விஷயங்களை நாம் இழந்துதான் விட்டோம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  60. Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட அநேக இளைஞர்களின் மனதை படம் எடுத்து காட்டுகிறது.👍👃✌

    - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour in that Store Life during 1965 to 1980)

    Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

    ReplyDelete
  61. Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.
    =====================================================

    அன்பின் கோபு ஸார்,

    சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும்.

    சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..."

    கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன்

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    ReplyDelete
  62. இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.

    அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:
    http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete