About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, March 23, 2013

3] பொக்கிஷமான ஒருசில நினைவலைகள் !


”பொக்கிஷம்”

தொடர்பதிவு 
By
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள்

ஒருசில நீங்காத இனிய நினைவலைகளை மட்டும்
இங்கே தங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்.



வென்ற முதல் பரிசு : 
’தங்க நெக்லஸ்’
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/3.html







தேசிய விருது - முதல் பரிசு
சான்றிதழும் தங்கப்பதக்கமும்
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/3.html


MY POSTER + SLOGAN ENTRY WHICH HAS WON 
THE ALL INDIA LEVEL FIRST PRIZE
OF 'I N S S A N' NATIONAL AWARD



 முதல் சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு
முதல் பரிசு 
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/4.html


ரொக்கப்பரிசுடன் அளிக்கப்பட்ட 
‘அற இலக்கியக் களஞ்சியம்’
என்ற நூல் பரிசு
[1008 பக்கங்கள் கொண்டது]








இரண்டாவது 
சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு
இரண்டாம்  பரிசு 
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/4.html









திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அளித்த 
’சிந்தனைப்பேரொளி’ 
என்ற விருது
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/4.html





மூன்றாவது 
சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு
முதல் பரிசு 
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/4.html





அகில இந்திய அளவில் நடைபெற்ற 
நாடக ஆக்கப் போட்டியில் 
மூன்றாம் பரிசு 
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/04/18.html




2009 ஆண்டு ‘அன்னையர் தினத்தை’ ஒட்டி தினமலர் - பெண்கள் மலரால் ஓர் சிறப்பு வாக்கியக் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.  

என் வீட்டிலும், என் சொந்தக்காரர்கள் வீட்டிலும் உள்ள அனைத்துப் பெண்களையும் கலந்து கொள்ளச்செய்தேன். சுமார் 10 படைப்புகள் எங்களால் அனுப்பப்பட்டன.  

கலந்து கொண்ட அனைவருமே, நான் அஞ்சல் அட்டைகளில் எழுதிய ஏதோ ஒரு வாசகத்தின் கீழ் கையெழுத்து மட்டும் போட்டுக்கொடுத்து விட்டுச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் இரண்டே வரிகளில் எழுதிய படைப்பு ஒன்று இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புது ’பஜாஜ் மிக்ஸி’ பரிசினை தட்டிக்கொண்டு வந்தது. 

இன்றும் நாங்கள் உபயோகிக்காமல் புத்தம் புதிதாகவே வைத்திருக்கும் பொக்கிஷம் இதோ இங்கே:  


போட்டியில் வென்ற வாசகம்:

”அம்மா ! 
நீ மட்டுமே எப்போதும் 
என் தொடர்பு எல்லைக்குள் !!”

போட்டியில் பரிசினை வென்ற அஞ்சல் அட்டை  
என் இரண்டாவது மருமகள்:
திருமதி. மீனாக்ஷி சங்கர், திருச்சி
என்ற பெயரில் என்னால் அனுப்பப்பட்டது.




’விளக்கேற்றி வைக்கிறேன் ..... 
விடிய விடிய எரியட்டும்’ 

என்று 
“சமையல் அட்டகாசங்கள் - 
திருமதி ஜலீலா கமால் அவர்கள்”

சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள
பொக்கிஷமான பரிசு.

விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_3629.html





எனக்குப் பலரிடமிருந்து அவ்வப்போது பாராட்டுக் கடிதங்கள், தபாலிலும் மின்னஞ்சல் மூலமும் வருவது உண்டு. அவற்றை நான் பொக்கிஷமாக சேகரித்து வைப்பதும் உண்டு. 

என் சிறுகதைத்தொகுப்பு நூல்களை, பலருக்கும் நான் அன்பளிப்பாக வழங்கியபோது, ஒவ்வொரு புத்தகத்திலும், என் சுயவிலாசமிட்ட ஒரு அஞ்சல் அட்டையையும் வைத்தே கொடுத்திருந்தேன். 

படித்தபின் குறை நிறைகளைச்சுட்டிக்காட்டி எழுதி, அவர்கள் அந்த அஞ்சல் அட்டையை தபால்பெட்டியில் சேர்த்தால் போதும் என்ற நோக்கத்தில். 

அதுபோல எனக்கு இதுவரை வந்துள்ள ஏராளமான கடிதங்களில் இங்கு ஒரேயொரு கடிதத்தை மட்டும் தங்கள் பார்வைக்காக காட்டியுள்ளேன். 

இதில் மட்டும் அப்படி என்ன சிறப்பு என்றால், இதை எழுதியவர் மிகவும் வயதான ஒரு அம்மாள். அவருக்கு அப்போதே வயது 95 க்கு மேல் ஆகிவிட்டது. 

அவர் பெயர்: ஜெயலக்ஷ்மி அம்மாள். [வயது 2010 இல் : 96 ]

விலாசம்: [கணவர் பெயர்: திரு.ஹாலாஸ்யம்] மேல அக்ரஹாரம், பிக்ஷாண்டார் கோயில் கிராமம், உத்தமர்கோயில் இரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில், திருச்சி மாவட்டம். PIN: 621 216.

இவர், தன் கடைசி காலம் வரை தேக ஆரோக்யத்துடன் நன்கு நடமாடிக்கொண்டும், கண்ணாடி ஏதும் அணியாமலேயே, எதையுமே ஆசையாகப்படிப்பதிலும், எழுதுவதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தவர். 

என்னுடைய மூன்றாவது  சிறுகதைத்தொகுப்பு நூலை முழுவதுமாக ரஸித்துப் படித்துவிட்டு, தானே தன் கைப்பட அதில் உள்ள 15 சிறுகதைகளைப் பற்றியும், தனித்தனியே பாராட்டி விமர்சித்து, ஒரே போஸ்ட் கார்டுக்குள் அவற்றை அழகாக மணிமணியாகக் கொண்டுவந்து,  சிரத்தையாக ஒழுங்காக திட்டமிட்டு எழுதியுள்ளது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. 


அவர்கள் இந்தக்கடிதம் எழுதியுள்ள நாள்: 31.01.2011

கடிதம் என் கைக்குக் கிடைத்த நாள்: 01.02.2011 

சமீபத்தில் தன் 98 ஆவது வயதில், அந்த அம்மாள் காலமாகி விட்டார்கள் எனக் கேள்விப்பட்டு நான் மிகவும் வருந்தினேன். 

இன்று அவர்கள் உயிருடன்  இல்லாவிட்டாலும், அவர்கள் எனக்கு எழுதிய கடிதம் உயிருடன் பொக்கிஷமாகவே என்னிடம் உள்ளது.


தொடரும்




’பொக்கிஷம்’ 

தொடரின் அடுத்த பகுதி

28.03.2013 வியாழக்கிழமையன்று 

வெளியிடப்படும்







என்றும் அன்புடன் தங்கள்,

வை. கோபாலகிருஷ்ணன்

121 comments:

  1. அழகான அருமையான பொக்கிஷங்கள் ..வைர நெக்லஸ் உங்கள் அருமை பேத்திக்கு அணிவித்து மகிழ்ந்த சம்பவத்தையும் வாசித்தேன் ..
    முதல் பரிசு பெற்ற ஸ்லோகன் !! மிகஅற்புதமான வாசகம் ..அதன் கீழே அனிமேஷனில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அழகு

    ReplyDelete
    Replies
    1. angelin March 23, 2013 at 8:18 AM

      வாருங்கள், நிர்மலா, வணக்கம். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

      //அழகான அருமையான பொக்கிஷங்கள் ..வைர நெக்லஸ் உங்கள் அருமை பேத்திக்கு அணிவித்து மகிழ்ந்த சம்பவத்தையும் வாசித்தேன் ..//

      மகிழ்ச்சி. அது வைர நெக்லஸ் அல்ல. தங்கநெக்லஸ் தான்.

      அதை முதன்முதலாக அணியும் பாக்யம் பெற்ற என் அருமைப்பேத்தி பவித்ரா தான் எங்களுக்கு என்றுமே ஜொலிக்கும் வைரம்.

      அவள் பிறந்த நாள்: 18.07.1999;

      தங்க நெக்லஸ் பரிசு எங்கள் கைக்குக்கிடைத்த நாள்: 27.07.1999;

      குழந்தையைத் தொட்டிலிட்ட நாள்: 28.07.1999.

      அவள் பிறந்து ‘புண்ணியாஹாவாசனம்’ செய்து, தொட்டிலிட்டு பெயர் சூட்டும் நாளுக்கு முதல் நாள் தான் இந்த தங்க நெக்லஸ் எங்கள் கைக்குக்கிடைத்தது.

      அதனால் அவளுக்கு நான் ஆசையாக வாங்கியிருந்த ஏராளமான நகைகளுடன், இதையும் அவளுக்கே முதன்முதலாகப் போட்டு ரஸித்து மகிழ நேர்ந்தது.

      //முதல் பரிசு பெற்ற ஸ்லோகன் !! மிகஅற்புதமான வாசகம் ..//

      மிகவும் ச்ந்தோஷமம்மா !

      //அதன் கீழே அனிமேஷனில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அழகு//

      அந்த ஊர்ந்து செல்லும் எறும்புகளை என்றோ ஒருநாள் நான், என் அன்புக்குரிய வேறொரு பதிவரிடமிருந்து திருடி பொக்கிஷமாக வைத்துக்கொண்டிருந்தேன்.

      அந்த எறும்புகளை இப்போது காத்தாட ஊர்ந்து செல்லட்டுமே என வெளியிட்டுள்ளேன்.

      நான் வெளியிட்டுவரும் எல்லா அனிமேஷன் படங்களுமே அவர்களிடமிருந்து உரிமையுடன் என்னால் திருடப்பட்டவைகள் மட்டுமே.

      இப்போதெல்லாம் என்னால் அதுபோல செய்ய முடியாதபடி செய்துள்ளார்கள்.

      அதாவது இப்போது அவர்களின் பதிவுகளிலிருந்து யாரும் எதையும் COPY + PASTE செய்யமுடியாமல் உள்ளது.

      இருப்பினும் நான் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு ஆசையாக விரும்பிக்கேட்டால், அவர்கள் மறுக்காமல் அனுப்பி வைப்பார்கள் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு..

      அதனால் நான் வெளியிட்டுள்ள எறும்பு ஊறும் படத்தின், எல்லாப்புகழும் அவர்களையே சேரும்.

      இந்தத் தங்களின் பாராட்டுக்குரிய [மூல காரணமான] அவர்களும், அதை இங்கு எடுத்துச்சொல்லி நினைவூட்டியுள்ள நீங்களும் என்றும் வாழ்க வாழ்கவே. ;)))))

      //அனிமேஷனில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அழகு//

      ஊர்ந்து செல்லும் எறும்புகள் உங்களுக்கு அழகாகத்தெரிவதில் எனக்கு ஆச்சர்யமே இல்லை.

      தங்களின் திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, திருமணத்திற்கு முன்பு நிகழ்ந்ததோர் மறக்க முடியாத இன்பகரமான நிகழ்ச்சியில் எறும்புகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனவே! ;)))))))))

      அதனால் தான் தங்களின் மெயில் ஐ.டி.யிலும் எறும்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்களோ என நான் கற்பனை செய்து பார்த்தேன். அதுவும் எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. ;)))))

      oooooo

      Delete
  2. வென்ற முதல் பரிசு :
    ’தங்க நெக்லஸ்’

    தங்கமான பொக்கிஷ பரிசுக்க்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரிMarch 23, 2013 at 8:22 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      *****வென்ற முதல் பரிசு : ’தங்க நெக்லஸ்’*****

      //தங்கமான பொக்கிஷ பரிசுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்//

      தங்கமான குணமுள்ள தங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களுமே, தங்கமான பொக்கிஷப் பரிசினை விட மிகவும் மதிப்பு வாயந்த பொக்கிஷமாக நான் எண்ணி மகிழ்கிறேன். ;)))))

      >>>>>>

      Delete
  3. என்னுடைய மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு நூலை முழுவதுமாக ரஸித்துப் படித்துவிட்டு, தானே தன் கைப்பட அதில் உள்ள 15 சிறுகதைகளைப் பற்றியும், தனித்தனியே பாராட்டி விமர்சித்து, ஒரே போஸ்ட் கார்டுக்குள் அவற்றை அழகாக மணிமணியாகக் கொண்டுவந்து, சிரத்தையாக ஒழுங்காக திட்டமிட்டு எழுதியுள்ளது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

    மிகவும் வியப்பளித்த திட்டமிட்ட தெவிட்டாத ஒரு போஸ்ட் கார்டு .. .
    மற்றவர்கள் கண்களுக்கு எப்படியோ .. உணர்வுப்பூர்வமான மதிக்கத்தெரிந்தவர்களுக்கு நிச்சயம் பொக்கிஷமான சேகரிப்புதான் ... ..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரிMarch 23, 2013 at 8:26 AM

      *****என்னுடைய மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு நூலை முழுவதுமாக ரஸித்துப் படித்துவிட்டு, தானே தன் கைப்பட அதில் உள்ள 15 சிறுகதைகளைப் பற்றியும், தனித்தனியே
      பாராட்டி விமர்சித்து, ஒரே போஸ்ட் கார்டுக்குள் அவற்றை அழகாக மணிமணியாகக் கொண்டுவந்து, சிரத்தையாக ஒழுங்காக திட்டமிட்டு எழுதியுள்ளது எனக்கு மிகவும்
      வியப்பாக இருந்தது.*****

      //மிகவும் வியப்பளித்த திட்டமிட்ட தெவிட்டாத ஒரு போஸ்ட் கார்டு .. .

      மற்றவர்கள் கண்களுக்கு எப்படியோ .. உணர்வுப்பூர்வமான மதிக்கத்தெரிந்தவர்களுக்கு நிச்சயம் பொக்கிஷமான சேகரிப்புதான் //

      மிகச்சரியாகச் சொன்னீர்கள். கண்வர் + மனைவி இருவருமே மிகவும் ஒற்றுமையாக 98-99 வயது வரை எளிமையாக வாழ்ந்தவர்கள்.

      இருவருக்குமே என்னிடம் அலாதியான பிரியம் உண்டு.

      அவர்கள் இருவரின் பேச்சிலும், அன்போடு பழகிடும் அணுகுமுறையிலும் மிகவும் எளிமையான வெள்ளந்தியான
      கிராமீய மணம் கமழும்.

      அங்கு பிக்ஷாண்டார்கோயிலில் உள்ள சிவன் கோயிலில், துர்க்கை அம்மன் பிரதிஷ்டை செய்வதற்கு முன், காஞ்சீபுரத்தில் இருந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் நேரில் சென்று, யந்திரம் வாங்கி வருமாறு பணிக்கப்பட்டிருந்தேன் அல்லவா.

      அது இந்த உத்தம தம்பதிகளின் வேண்டுகோளுக்காக மட்டுமே.

      அந்த ஊருக்கு நான் எப்போதாவது என் மாமனார்+மாமியாரைப் பார்க்கச் சென்றாலே, இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் அந்த கிராமத்தில் என்னை முதலில் வரவேற்பார்கள்.

      ”வாங்கோ, மாப்பிள்ளை” என்று வாய் நிறைய சந்தோஷமாக அழைப்பார்கள்.

      அந்தக்கிராமத்தில் இருந்த எல்லாப்பெரியவர்களும் என்னை இதுபோலத்தான் அழைப்பார்கள்.

      அவர்கள் வீட்டு மிகப்பெரிய குளுமையான பந்தல் போட்ட திண்ணையில் அமர்ந்து, நீண்ட நேரம் நான் அவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பேன்.

      என் மீது அலாதி பிரியம் கொண்டிருந்த, எப்போதும் என்னை மனதார வாழ்த்தி ஆசீர்வதித்து வந்த அந்த தம்பதியினர் இன்று அங்கு இல்லை. எனக்கும் இப்போதெல்லாம் அங்கு செல்வதில் ஆர்வம் இல்லை.

      >>>>> . ..

      Delete
  4. அண்ணா அந்த பரிசு பெறும்போது எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் laminate செய்து வைங்க ..
    எத்தனை பொக்கிஷங்கள் பார்க்க சந்தோஷமா இருக்கு .

    எல்லாவற்றிலும் எனக்கு மிக மிக பிடித்தது நீங்கள் அன்னையர் தின போட்டியில் பரிசு பெற்ற வாசகமும் ..அந்த வயதான அம்மாவின் கைப்பட எழுதிய அன்பான கடிதம் ..அதையும் லாமினேட் செய்து வையுங்க அண்ணா

    ReplyDelete
    Replies
    1. angelin March 23, 2013 at 8:28 AM

      //அண்ணா அந்த பரிசு பெறும்போது எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் laminate செய்து வைங்க .. எத்தனை பொக்கிஷங்கள் பார்க்க சந்தோஷமா இருக்கு.//

      ஆகட்டும். தங்கள் ஆலோசனைக்கு நன்றிகள், நிர்மலா.

      எல்லாவற்றிலும் எனக்கு மிக மிக பிடித்தது நீங்கள் அன்னையர் தின போட்டியில் பரிசு பெற்ற வாசகமும் ..அந்த வயதான அம்மாவின் கைப்பட எழுதிய அன்பான கடிதம் .. //

      மிகவும் சந்தோஷம்.

      //அதையும் லாமினேட் செய்து வையுங்க அண்ணா//

      ஆகட்டும்மா. நன்றி.

      Delete
  5. பதிவில் ஊறும் எறும்புகள் சிரத்தையாக துளித்துளியாக தாங்கள் சேகரித்த தேனான விலைமதிக்கமுடியாத , அள்ள அள்ளக் குறையாத அருமையான திகட்டாத அமிரதமான பொக்கிஷங்களைக் குறிக்கிறதோ !!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரிMarch 23, 2013 at 8:30 AM

      //பதிவில் ஊறும் எறும்புகள் சிரத்தையாக துளித்துளியாக தாங்கள் சேகரித்த தேனான விலைமதிக்கமுடியாத , அள்ள அள்ளக் குறையாத அருமையான திகட்டாத அமிரதமான பொக்கிஷங்களைக் குறிக்கிறதோ !!//

      ஆமாம். அதே அதே !

      உங்களைப்போலவே, சோம்பலின்றி சுறுசுறுப்பாக பதிவுலகில் உழைக்க வேண்டும் என்ற ஆவலில் தங்கள் தளத்திலிருந்து தங்களின் பழைய பதிவு ஒன்றிலிருந்து, தங்கள் அனுமதியில்லாமல், நான் மிகவும் உரிமையுடன் எடுத்துக்கொண்டுள்ள எறும்புகளே அவைக்ள்.

      எறும்புகளைப்பற்றி, கரும்பாக இனிக்கும் கருத்துக்களை தாங்கள் சொல்லியிருப்பது கண்டு, மிகவும் அகம் மகிழ்ந்து போனேன்.

      சேகரித்த தேன் போன்ற, விலைமதிக்கமுடியாத , அள்ள அள்ளக் குறையாத அருமையான திகட்டாத அமிரதமான பொக்கிஷங்களே, தங்களின் இந்தக் கருத்துக்களும். ;))))))

      தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றியோ நன்றிகள்.

      >>>>>>>

      Delete
  6. பொக்கிஷம் தொடர்கிறது மகிழ்ச்சி.பொறுமையாக படித்து விட்டு பின்னூட்டுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸாதிகா March 23, 2013 at 8:30 AM

      வாருங்கள், வணக்கம்.

      //பொக்கிஷம் தொடர்கிறது மகிழ்ச்சி. பொறுமையாக படித்து விட்டு பின்னூட்டுகின்றேன்.//

      OK மிக்க நன்றி. சந்தோஷம்.

      Delete
  7. தாயுமானவன் கதை எனக்கு மிகவும் பிடித்த கதை ..அதற்க்கு பொருத்தமான ஓவியம்அந்த அட்டையில் அதுவும் அருமை .அனைத்து பொக்கிஷங்களையும் எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. angelin March 23, 2013 at 8:31 AM

      நிர்மலா, தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //தாயுமானவன் கதை எனக்கு மிகவும் பிடித்த கதை ..அதற்கு பொருத்தமான ஓவியம் அந்த அட்டையில் அதுவும் அருமை. //

      மிகவும் சந்தோஷம்.

      //அனைத்து பொக்கிஷங்களையும் எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி//

      தங்களின் அன்பான வருகை + அருமையான கருத்துகள் + பாராட்டுக்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  8. பிரகாசிக்கும் ’சிந்தனைப்பேரொளி’ -- சிறப்புப்பட்டம் பொருத்தமான பொக்கிஷம் ..சந்தோஷம் அளிக்கிறது ... பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரிMarch 23, 2013 at 8:32 AM

      //பிரகாசிக்கும் ’சிந்தனைப்பேரொளி’ -- சிறப்புப்பட்டம் பொருத்தமான பொக்கிஷம் ..சந்தோஷம் அளிக்கிறது ... பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் //

      தங்களின் அன்பான வருகையாலும், அழகான பல்வேறு கருத்துக்களாலும் இந்த என் பதிவினை சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் சந்தோஷத்துடன் கூடிய பாராட்டுக்கள் + வாழ்த்துகள் என்கிற மாபெரும் பொக்கிஷத்திற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      -oOo-

      Delete
  9. மின் வெட்டு... ரசிக்க வருகிறேன் 1 மணி நேரம் கழித்து...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் March 23, 2013 at 8:33 AM

      வாருங்கள். வணக்கம்.

      //மின் வெட்டு... ரசிக்க வருகிறேன் 1 மணி நேரம் கழித்து...//

      இங்கும் அதே அதே .... சபாபதே! மீண்டும் வாருங்கள், மகிழ்ச்சி.

      Delete
  10. நிறை குடம் தளும்பாது என்பதற்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம் வைகோ சார்.
    எத்தனை பரிசுகள், பாராட்டுக்கள். விருதுகள்.இது எதுவும் என்னைப் போன்ற புது எழுத்தாளர்களை(?)
    நீங்கள் ஊக்குவிப்பதை தடை செய்யவில்லையே!
    அதற்கு என் நன்றி.
    பரிசுகள் எல்லாமே எப்பவுமே பொக்கிஷங்கள் தான்.
    உங்கள் பரிசுகளைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam March 23, 2013 at 8:45 AM

      வாருங்கள், வணக்கம்.

      //நிறை குடம் தளும்பாது என்பதற்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம் வைகோ சார்.//

      அடடா, தளும்ப வைத்து விட்டார்களே, என்னை, இந்தப் பொக்கிஷப்பதிவினைத் தொடரச்சொல்லி. ;)

      //எத்தனை பரிசுகள், பாராட்டுக்கள். விருதுகள்.இது எதுவும் என்னைப் போன்ற புது எழுத்தாளர்களை(?) நீங்கள் ஊக்குவிப்பதை தடை செய்யவில்லையே! அதற்கு என் நன்றி.//

      அது எப்படி தடைசெய்யும்? தங்கள் நன்றிக்கு நன்றி!

      [உங்கள் எழுத்துக்கள் எதுவும் ஓர் புது எழுத்தாளரின் எழுத்துக்கள் போல எனக்குத் தோன்றவில்லை. நல்லதொரு முதிர்ச்சியினைக் காணமுடிகிறது, தங்கள் எழுத்துக்களில். பாரட்டுக்கள் ;))))) ]

      //பரிசுகள் எல்லாமே எப்பவுமே பொக்கிஷங்கள் தான்.//

      ஆமாம். அவை என்றும் பொக்கிஷங்களே! ;)

      //உங்கள் பரிசுகளைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//

      தங்களின் அன்பான வருகை + அருமையான கருத்துகள் + பாராட்டுக்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  11. எவ்வளவு பரிசுகள் எவ்வளவு விருதுகள் ! அன்னையர் தினக் கவிதை அருமை.

    ஜெயலக்ஷ்மி அம்மாள் கடிதம் மனதை நெகிழ செய்து விட்டது.

    ஜலீலா தந்த பரிசுக்கு பாடல் அருமை.

    உயர்ந்த மனிதரின் பொக்கிஷ பகிர்வுகள் எல்லாம் உயர்ந்தவைகள் தான்.

    எல்லாவற்றையும் படித்துவிட்டு பின் கருத்து கூறுகிறேன்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், வணக்கங்கள்.
    வாழ்கவளமுடன்.
    இறைவன் அருளால் நீங்கள் நலமாய் இருக்க வேண்டும்.
    உங்கள் அனுபவங்களே சிறந்த பொக்கிஷங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு March 23, 2013 at 8:53 AM

      வாருங்கள், வணக்கம்.

      //எவ்வளவு பரிசுகள் எவ்வளவு விருதுகள் ! அன்னையர் தினக் கவிதை அருமை.//

      மிகவும் சந்தோஷம்.

      //ஜெயலக்ஷ்மி அம்மாள் கடிதம் மனதை நெகிழ செய்து விட்டது.//

      ஆம், என்னையும் மிகவும் நெகிழ வைத்த கடிதம் தான் அது.

      //ஜலீலா தந்த பரிசுக்கு பாடல் அருமை.//

      மகிழ்ச்சி.

      //உயர்ந்த மனிதரின் பொக்கிஷ பகிர்வுகள் எல்லாம் உயர்ந்தவைகள் தான். //

      ஹைய்யோ! யாருங்க உயர்ந்த மனிதன்?

      [6 அடிக்கு ஒரு அங்குலம் குறைவு தானுங்க நான்]

      //எல்லாவற்றையும் படித்துவிட்டு பின் கருத்து கூறுகிறேன்.
      வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், வணக்கங்கள். வாழ்கவளமுடன்.
      இறைவன் அருளால் நீங்கள் நலமாய் இருக்க வேண்டும்.
      உங்கள் அனுபவங்களே சிறந்த பொக்கிஷங்கள்.//

      சந்தோஷம். மீண்டும் வாருங்கள்.

      தங்களின் அன்பான வருகை + அருமையான கருத்துகள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  12. Ungalin pokkishagal ellamey Mihavum arumaiyaga iruku...

    ReplyDelete
    Replies
    1. faiza kader March 23, 2013 at 8:55 AM

      //Ungalin pokkishagal ellamey Mihavum arumaiyaga iruku...உங்களின் பொக்கிஷங்கள் எல்லாமே மிகவும் அருமையாக இருக்கு//

      உங்களின் அன்பான வருகையும் இந்தக் கருத்துக்களும் கூட எனக்கு மிகவும் அருமையாகத்தான் இருக்கு. மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  13. உங்கள் பொக்கிஷங்களுக்கு தனி அறையே தேவைப்படும் போல் உள்ளதே.. இவற்றை பாதுகாத்து நினைவு மலரும் உங்கள் மனமும் கூட மிகப் பெரிய பொக்கிஷம்தான்.

    ReplyDelete
    Replies
    1. உஷா அன்பரசு March 23, 2013 at 9:37 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் பொக்கிஷங்களுக்கு தனி அறையே தேவைப்படும் போல் உள்ளதே..//

      ஆமாங்க, பாதியை வேலூருக்கு, தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள அனுப்பிவிடலாமா என நினைக்கிறேன். BANK SAFETY LOCKER போல வாடகை ஏதும் கேட்பீங்களோ என்னவோ!
      பயமாக்கீதூஊஊஊ.

      //இவற்றை பாதுகாத்து நினைவு மலரும் உங்கள் மனமும் கூட மிகப் பெரிய பொக்கிஷம்தான்.//

      அடடா, என் மனமே ஓர் பொக்கிஷமா? நல்லாவே STUDY பண்ணிச் சொல்றீங்கோ.

      இது தெரியாமல் ஒருவர் “மனம் ஒரு குரங்கு; மனித மனம் ஒரு குரங்கு” என்று சினிமாப்பாட்டு எழுதியுள்ளார். ;)

      தங்களின் அன்பான வருகை + அருமையான கருத்துகள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  14. எத்தனை எத்தனை பொக்கிசங்கள்... தங்களின் Data Bank-யையும் அதற்கு சமமான ஞாபகத்திறனும் வியப்பூட்டுகிறது... வாழ்த்துக்கள் ஐயா...

    எல்லாவற்றையும் விட ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் கடிதம் மனதை உருக வைத்தது...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் March 23, 2013 at 9:42 AM

      வாருங்கள். வணக்கம். மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //எத்தனை எத்தனை பொக்கிசங்கள்... தங்களின் Data Bank-யையும் அதற்கு சமமான ஞாபகத்திறனும் வியப்பூட்டுகிறது... வாழ்த்துக்கள் ஐயா...//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      //எல்லாவற்றையும் விட ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் கடிதம் மனதை உருக வைத்தது...//

      அப்படியா? ஆம் அது என் மனதையும் உருக வைத்த கடிதம் தான்.

      தங்களின் அன்பான வருகை + அருமையான கருத்துகள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  15. எத்தனை எத்தனை பரிசுகள், சான்றிதகள்...

    அத்தனையும் அந்த ஊருகின்ற எறும்பினைப்போல அவ்வளவு அழகாக ஒன்றன்பின் ஒன்றாக உங்களுக்குக் கிடைத்ததைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாகவே இருக்கின்றது.

    அருமை!!!

    அருமை என்பது மிகவும் குறைந்த எழுத்து வார்த்தைகளே.. ஆனாலும் மிக அபூர்வமான ஆச்சரியமான பெறுமதியானவை என்று பொருள்கொள்ளலாம்.

    உண்மையில் சிறந்த சானையாளர்தான் நீங்கள்.
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. இளமதி March 23, 2013 at 9:47 AM

      வாங்கோ, வாங்கோ, வணக்கம்ம்மா.

      //எத்தனை எத்தனை பரிசுகள், சான்றிதகள்... அத்தனையும் அந்த ஊருகின்ற எறும்பினைப்போல அவ்வளவு அழகாக ஒன்றன்பின் ஒன்றாக உங்களுக்குக் கிடைத்ததைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாகவே இருக்கின்றது. அருமை!!!//

      உங்களுக்கு சந்தோஷம் என்பது தான் எனக்கும் சந்தோஷம்.

      //அருமை என்பது மிகவும் குறைந்த எழுத்து வார்த்தைகளே.. ஆனாலும் மிக அபூர்வமான ஆச்சரியமான பெறுமதியானவை என்று பொருள்கொள்ளலாம்.//

      எதுவும் நீங்கள் எடுத்துச்சொன்னால் தான் எனக்கு பொருளே விளங்குகிறது. ;) கவிதாயினி சொன்னால் அது கரெக்டாகத்தான் இருக்கும்.;)))))

      //உண்மையில் சிறந்த சானையாளர்தான் நீங்கள்.வாழ்த்துக்கள் ஐயா!//

      ஹைய்யோ ! தங்கள் வாயால் இதைக்கேட்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சி ஏற்படுகிறது. ;)

      தங்களின் அன்பான வருகை + அருமையான கருத்துகள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகளம்ம்ம்ம்ம்மா.

      Delete
  16. எனக்கு நேரம் கிடைக்கவில்லை ( எனது கிராமத்துக்கு சென்றிருந்தேன் நான்கு மாதங்கள்) அதனால் தான் வலைப்பக்கம் வரமுடியவில்லை ஐயா. இனி தொடர்வேன் .... நலம் ....

    ஐயா உங்களின் பொக்கிஷத்தைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . வாழ்த்துக்கள்............

    ஜெயலக்ஷ்மி அம்மாள் கடிதம் மனதை நெகிழ செய்து விட்டது.

    உங்கள் பரிசுகளைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. VijiParthiban March 23, 2013 at 9:53 AM

      வாருங்கள், வணக்கம்.

      //எனக்கு நேரம் கிடைக்கவில்லை ( எனது கிராமத்துக்கு சென்றிருந்தேன் நான்கு மாதங்கள்) அதனால் தான் வலைப்பக்கம் வரமுடியவில்லை ஐயா. இனி தொடர்வேன் .... நலம் ....//

      ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என நினைத்தேன். வெகு நாட்களுக்குப்பின் வருகை தந்து கருத்தளித்துள்ளது மகிழ்ச்சியாகவே உள்ளது. மிக்க நன்றி.

      //ஐயா உங்களின் பொக்கிஷத்தைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . வாழ்த்துக்கள்............//

      மிகவும் சந்தோஷம்.

      >>>>>>

      Delete
  17. எனக்கு நேரம் கிடைக்கவில்லை ( எனது கிராமத்துக்கு சென்றிருந்தேன் நான்கு மாதங்கள்) அதனால் தான் வலைப்பக்கம் வரமுடியவில்லை ஐயா. இனி தொடர்வேன் .... நலம் ....

    ஐயா உங்களின் பொக்கிஷத்தைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . வாழ்த்துக்கள்............

    ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் கடிதம் மனதை உருக வைத்தது...

    உங்கள் அனுபவங்களே சிறந்த பொக்கிஷங்கள்.

    ReplyDelete
    Replies
    1. VijiParthiban March 23, 2013 at 9:55 AM

      //ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் கடிதம் மனதை உருக வைத்தது...//

      ஆமாம். இந்த வயதிலும் இவ்வாறு அழகாக திட்டமிட்டு, ஒரு இடமும் வீணாக்காமல், அஞ்சல் அட்டையில் முழுவதுமாக எழுதியுள்ளது ஆச்சர்யமாகவே உள்ளது.

      //உங்கள் அனுபவங்களே சிறந்த பொக்கிஷங்கள்.//

      மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகை + அருமையான கருத்துகள் + வாழ்த்துகள் + பாராட்டுக்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  18. அடடா இத்தனை பொக்கிஷங்களும் உங்களுக்குள் அடங்கியிருக்கோ... சொன்னால்தானே தெரியுது. இனிக் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் கதைக்கோணும் உங்களோடு:).

    எவ்வளவோ பரிசுகளும் பாராட்டுக்களும் வாங்கியிருக்கிறீங்க கோபு அண்ணன்... இன்னும் பலபல பரிசுகளும் பாராட்டுக்களும் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. athira March 23, 2013 at 1:09 PM

      வாங்கோ அதிரா, வாங்கோ, வணக்கம்.

      //அடடா இத்தனை பொக்கிஷங்களும் உங்களுக்குள் அடங்கியிருக்கோ... சொன்னால்தானே தெரியுது.//

      சொல்ல வேண்டாம்ன்னு தான் பார்த்தேன். உங்கள் அஞ்சுவும், இன்னொரு மேடமும் சேர்ந்து என்னை, “பொக்கிஷம்” என்ற தலைப்பில் தொடர் பதிவிட அழைத்து சொல்ல வெச்சுட்டாங்கோ, அதிரா.

      //இனிக் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் கதைக்கோணும் உங்களோடு:).//

      நோ நோ ..... நீங்க எப்போதும் போலவே என்னோடு ஜாலியாக கலகலப்பாக கும்மி அடித்துக் கதைக்கணும்.

      நான் தான் ஜாக்கிரதையாக இருக்கணும் உங்களிடம். ;)))))

      //எவ்வளவோ பரிசுகளும் பாராட்டுக்களும் வாங்கியிருக்கிறீங்க கோபு அண்ணன்... இன்னும் பலபல பரிசுகளும் பாராட்டுக்களும் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.//

      அச்சா! பஹூத் அச்சா!! தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      Delete
  19. உந்த மிக்‌ஷி கிரைண்டரை மட்டும் எனக்கு அனுப்பி வைக்கமுடியுமோ? நானும் அதைப் பொக்கிஷமாக வைத்திருப்பேன்.... இங்கு நல்ல மிக்‌ஷி வாங்க முடியுதில்ல:(

    ReplyDelete
    Replies
    1. athira March 23, 2013 at 1:10 PM

      //உந்த மிக்‌ஷி கிரைண்டரை மட்டும் எனக்கு அனுப்பி வைக்கமுடியுமோ? நானும் அதைப் பொக்கிஷமாக வைத்திருப்பேன்.... இங்கு நல்ல மிக்‌ஷி வாங்க முடியுதில்ல:(//

      அது ’உந்த மிக்ஸி’ இல்லை. ’பஜாஜ் மிக்ஸி’யாக்கும்.

      நேரில் வந்து எடுத்துண்டு போங்கோ. ஒரு பிரச்சனையும் இல்லை.

      அதிராவுக்கு இல்லாத பொக்கிஷமா?

      இதெல்லாம் அன்புள்ள அதிராவுக்கு முன் பொக்கிஷமே இல்லை - வெறும் புடலங்காய் மாதிரி மட்டுமே! ;)

      Delete
  20. ///’பொக்கிஷம்’

    தொடரின் அடுத்த பகுதி

    28.03.2013 வியாழக்கிழமையன்று

    வெளியிடப்படும்
    ////

    அச்சச்சோ அடுத்த பதிவுக்கு மீ பிரெசண்ட் ஆக மாட்டேன்ன்... அண்டாட்டிக்கா பயணம்... அதனால தேடி களைச்சு உச்சிப் பிள்ளையாருக்கெல்லாம் முறையிட்டிடாதீங்கோ:)... புது வருடத்தின் பின் தான் இனி வருவேன்ன்... நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள்!

      Delete
    2. athira March 23, 2013 at 3:11 PM

      *****’பொக்கிஷம்’ தொடரின் அடுத்த பகுதி 28.03.2013 வியாழக்கிழமையன்று வெளியிடப்படும்*****

      //அச்சச்சோ அடுத்த பதிவுக்கு மீ பிரெசண்ட் ஆக மாட்டேன்ன்... //

      சந்தோஷம். வந்தால் ஒரு தேங்காய், வராவிட்டால் இரண்டு தேங்காய்கள் உடைக்கணும் - பிள்ளையாருக்கு. அந்த மற்றொரு தேங்காய்க்கான பணத்தை என் அக்கவுண்டில் கட்டிவிடவும்.

      //அண்டாட்டிக்கா பயணம்... //

      ஆஆஆ ஊஊஊஊ ன்னா, அண்டார்டிக்கா பயணமா? சந்தோஷம். பயணம் இனிமையாக, வெற்றிக்ரமான, பாதுகாப்பாக அமைய என் அன்பான நல்வாழ்த்துகள்.

      //அதனால தேடி களைச்சு உச்சிப் பிள்ளையாருக்கெல்லாம் முறையிட்டிடாதீங்கோ:)... //

      சேச்ச்சே, அப்படியெல்லாம் செய்யவே மாட்டேன். கவலை வேண்டாம். உச்சிப்பிள்ளையாரைப்போய் இதற்கெல்லாம் நாம் டிஸ்டர்ப் செய்யக்கூடாது.

      //புது வருடத்தின் பின் தான் இனி வருவேன்ன்... நன்றி வணக்கம்.//

      இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள், அட்வான்ஸாகவே.

      தங்கள் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + வாழ்த்துகள் + ஜோரான கும்மி எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      சீக்கரமாகத்திரும்பி வாங்கோ, ப்ளீஸ், அதிரா.

      Delete
  21. எவ்வளவு பரிசுகள் எவ்வளவு விருதுகள் ! அன்னையர் தினக் கவிதை அருமை.

    உங்க்கள் பொக்கிஷங்களி படிக்க ஒரு நாள் போதாது. மாபெரும் சாதனையாளராகி விட்டீர்கள். இதன் பின் நிற்கும் பெரிய உழைப்புதான் தெரிகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள். ஜெயலக்ஷ்மி அம்மாள் தவறியது வருத்தமே. அவரே ஒரு பொக்கிஷமாகிவிட்டார்.
    இனிமை நிறைந்த எழுத்துக்குச் சொந்தக்காரருக்குப் பொக்கிஷதார பதவி கொடுக்கிறேன். இன்னும் கருவூலத்தில் பொக்கிஷங்கள் சேரவேண்டும். மருமகளின் வாக்கியம் பொன்னானது.

    ReplyDelete
    Replies
    1. வல்லிசிம்ஹன் March 23, 2013 at 6:59 PM

      வாருங்கள், வணக்கம்.

      //எவ்வளவு பரிசுகள் எவ்வளவு விருதுகள் ! அன்னையர் தினக் கவிதை அருமை.//

      சந்தோஷம்.

      //உங்கள் பொக்கிஷங்களி படிக்க ஒரு நாள் போதாது. மாபெரும் சாதனையாளராகி விட்டீர்கள். இதன் பின் நிற்கும் பெரிய உழைப்புதான் தெரிகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      //ஜெயலக்ஷ்மி அம்மாள் தவறியது வருத்தமே. அவரே ஒரு பொக்கிஷமாகிவிட்டார்.//

      ஆம். மிகவும் நல்லவர்கள். அன்பானவர்கள். பண்பானவர்கள். அந்தக் கிராமத்திற்கே நல்ல வழிகாட்டியாக, கை வைத்தியம் சொல்பவர்களாக, அனுபவம் வாய்ந்த பெரிய மனுஷியாக இருந்து வந்தார்கள். அவர்களே ஒரு பொக்கிஷம் தான் சந்தேகமே இல்லை.

      //இனிமை நிறைந்த எழுத்துக்குச் சொந்தக்காரருக்குப் பொக்கிஷதார பதவி கொடுக்கிறேன். இன்னும் கருவூலத்தில் பொக்கிஷங்கள் சேரவேண்டும். //

      எல்லாம் உங்களைப்போன்றோர் ஆசீர்வாதங்கள்.

      //மருமகளின் வாக்கியம் பொன்னானது.// ;))))

      தங்களின் அன்பான வருகை + அருமையான கருத்துகள் + வாழ்த்துகள் + பாராட்டுக்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  22. பிரமிக்க வைத்தீர்கள்! அபார உழைப்பு! 

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை March 23, 2013 at 7:29 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //பிரமிக்க வைத்தீர்கள்! அபார உழைப்பு! //

      தங்களின் அன்பான வருகைக்கும். பிரமிக்க வைக்கும் அபாரமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      Delete
  23. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல், உங்கள் பொக்கிஷம் தொடருகின்றது. தொடரட்டும் அய்யா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஜெயக்குமார் March 23, 2013 at 7:33 PM

      வாருங்கள், வணக்கம்.

      //அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல், உங்கள் பொக்கிஷம் தொடருகின்றது. தொடரட்டும் ஐயா. நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும். அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      Delete
  24. தொடருங்கள்..அற்புதமான பொக்கிஷங்கள்..வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Asiya Omar March 23, 2013 at 11:30 PM

      வாருங்கள். வணக்கம்.

      //தொடருங்கள்..அற்புதமான பொக்கிஷங்கள்.. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.//

      தங்களின் அன்பான வருகை +. அழகான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  25. வார்த்தைகள் இல்லை பிரமிப்புக்கு நடுவே வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. poovizi March 24, 2013 at 1:13 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வார்த்தைகள் இல்லை பிரமிப்புக்கு நடுவே வாழ்த்துகள்//

      தங்களின் அன்பான வருகை + பிரமிப்பு + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  26. உங்கள் சாதனைகளை ஏற்கெனவே படித்து பிரமித்தவன் நான். எல்லாம் பொக்கிஷங்கள். 96 வயது ரசிகையின் கடிதம் மிகப் பெரிய பொக்கிஷம்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். March 24, 2013 at 1:49 AM

      வாருங்கள் ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //உங்கள் சாதனைகளை ஏற்கெனவே படித்து பிரமித்தவன் நான். எல்லாம் பொக்கிஷங்கள். 96 வயது ரசிகையின் கடிதம் மிகப் பெரிய பொக்கிஷம்.//

      ஆம் அந்த 96 வயது ரசிகையின் கடிதம் மிகப்பெரிய பொக்கிஷமே தான்.

      தங்களின் அன்பான வருகை +. அழகான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.

      Delete
  27. ஜெயலக்ஷ்மி அம்மாள் கடிதம் மனதில் பல்வேறு சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது .

    95 வயதிலும் கடிதம் எழுதும் ஆர்வம், படிக்கும் ஆர்வம், பொறுமை,எல்லாமே மிகவும் வியப்புக்குரியவை.
    விலை மதிப்பில்லாப் பொக்கிஷம் .

    ReplyDelete
    Replies
    1. கணேஷ் March 24, 2013 at 2:52 AM

      வாப்பா, கணேஷ். உன் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஜெயலக்ஷ்மி அம்மாள் கடிதம் மனதில் பல்வேறு சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது .95 வயதிலும் கடிதம் எழுதும் ஆர்வம், படிக்கும் ஆர்வம், பொறுமை, எல்லாமே மிகவும் வியப்புக்குரியவை. விலை மதிப்பில்லாப் பொக்கிஷம் .//

      ஆமாம் கணேஷ். நீ கூட அவர்களை ஒருவேளை பார்த்திருக்கலாம் என நினைக்கிறேன். பிக்ஷாண்டார் கோயில் தாடி ஹாலாஸ்யம் ஐயர் அவர்களின் சம்சாரம், ஜெயத்து மாமி தான் இது. உன் அம்மாவுக்கும், நம் பிரேமாவுக்கும், மாப்பிள்ளைக்கும் அவர்களை மிகவும் நன்றாகத்தெரியும்.

      உன் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  28. அதுபோல எனக்கு இதுவரை வந்துள்ள ஏராளமான கடிதங்களில் இங்கு ஒரேயொரு கடிதத்தை மட்டும் தங்கள் பார்வைக்காக காட்டியுள்ளேன்.

    இதில் மட்டும் அப்படி என்ன சிறப்பு என்றால், இதை எழுதியவர் மிகவும் வயதான ஒரு அம்மாள். அவருக்கு அப்போதே வயது 95 க்கு மேல் ஆகிவிட்டது. //

    இந்தக் கடிதம்தான் தங்கள் பொக்கிஷங்களின் HIGHLIGHT. ஜெயலட்சுமி அம்மாவுக்கு என் மானசீக நமஸ்காரங்கள்.

    //”அம்மா !
    நீ மட்டுமே எப்போதும்
    என் தொடர்பு எல்லைக்குள் !!”

    பொருத்தமான பரிசு.

    வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் கோபு அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANI March 24, 2013 at 4:54 AM

      வாங்கோ ... வாங்கோ, வணக்கம்.

      *****
      அதுபோல எனக்கு இதுவரை வந்துள்ள ஏராளமான கடிதங்களில் இங்கு ஒரேயொரு கடிதத்தை மட்டும் தங்கள் பார்வைக்காக காட்டியுள்ளேன். இதில் மட்டும் அப்படி என்ன சிறப்பு என்றால், இதை எழுதியவர் மிகவும் வயதான ஒரு அம்மாள். அவருக்கு அப்போதே வயது 95 க்கு மேல் ஆகிவிட்டது. *****

      //இந்தக் கடிதம்தான் தங்கள் பொக்கிஷங்களின் HIGHLIGHT. ஜெயலட்சுமி அம்மாவுக்கு என் மானசீக நமஸ்காரங்கள்.//

      சந்தோஷம். உங்களைப்போலவே ‘ஜெ’ ராசி கொண்டவர்கள். ;))

      *****”அம்மா !
      நீ மட்டுமே எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் !!”*****

      //பொருத்தமான பரிசு.//

      நீங்கள் சொன்னால் எதுவுமே பொருத்தமாக இருக்கும். ;)

      //வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் கோபு அண்ணா.//

      வாழ்த்துவோரும் வணங்குவோரும் எல்லோரும் வாழ்க ! வாழ்கவே!!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  29. தங்க நெக்லஸ் வென்ற செய்தி அடங்கிய இடுகையை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கட்டுரையையும் வலைப்பூவில் போட்டு இருக்கலாமே.

    உங்கள் எழுத்துக்கள் அடங்கிய ந்நுல்களை படிக்க வேண்டும்.இங்கு சென்னையில் எங்கு கிடைக்கும்.படங்களும் பகிர்வும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது /இன்னும் எல்லா வளங்களும் பெற்று சிறக்க எனது அன்பு வாழ்த்துகக்ள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஸாதிகா March 24, 2013 at 5:23 AM

      வாருங்கள், வணக்கம்.

      //தங்க நெக்லஸ் வென்ற செய்தி அடங்கிய இடுகையை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கட்டுரையையும் வலைப்பூவில் போட்டு இருக்கலாமே.//

      பொக்கிஷப்பதிவுகள் முடியட்டும். தனியாக பிறகு ஒரு நாள் போட முயற்சிக்கிறேன். தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

      //உங்கள் எழுத்துக்கள் அடங்கிய நூல்களை படிக்க வேண்டும். இங்கு சென்னையில் எங்கு கிடைக்கும்? //

      என் சிறுகதைத்தொகுப்பு நூல்களில் எழுதியுள்ள 75% கதைகளை என் வலைப்பதிவினில் ஏற்கனவே கொண்டு வந்துள்ளேன். மீதி 25% கதைகளும் பிறகு அவ்வப்போது வெளியிடுவேன். அதனால் அந்த நூல்களைத்தேடி எங்கும் நீங்கள் அலைய வேண்டாம். வலைத்தளத்திலேயே படித்து விடலாம். அதற்கான இணைப்புகள் மட்டும் பிறகு மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.

      //படங்களும் பகிர்வும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.இன்னும் எல்லா வளங்களும் பெற்று சிறக்க எனது அன்பு வாழ்த்துகக்ள் சார்.//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆர்வத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  30. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!
    உங்கள் பதிவிற்கு உடனே வர இயலவில்லை. மன்னிக்கவும். இப்போது தாங்கள் எழுதிய நீங்காத இனிய நினைவலைகள் எப்போதுமே மகிழ்ச்சியான அசைபோட வேண்டிய நினைவுகள்தாம். மேலும் பல பரிசுகள் பெற்றிட வாழ்த்துக்கள்.
    ( அடிக்கடி எனக்கு இப்போது வெளியூர் பயணம் வந்துவிடுகிறது. எனவே, உங்கள் பதிவை இன்றுதான் தமிழ்மணத்தில் என்னால் இணைக்க முடிந்தது! இது ஒரு தகவலுக்காக மட்டும்.)

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ March 24, 2013 at 8:56 AM

      //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //உங்கள் பதிவிற்கு உடனே வர இயலவில்லை. மன்னிக்கவும்.//

      அதனால் பரவாயில்லை ஐயா. மன்னிப்பதெல்லாம் எதற்கு?

      //இப்போது தாங்கள் எழுதிய நீங்காத இனிய நினைவலைகள் எப்போதுமே மகிழ்ச்சியான அசைபோட வேண்டிய நினைவுகள்தாம். மேலும் பல பரிசுகள் பெற்றிட வாழ்த்துக்கள்.//

      மிகவும் சந்தோஷம், ஐயா. நன்றி ஐயா.

      //(அடிக்கடி எனக்கு இப்போது வெளியூர் பயணம் வந்துவிடுகிறது. எனவே, உங்கள் பதிவை இன்றுதான் தமிழ்மணத்தில் என்னால் இணைக்க முடிந்தது! இது ஒரு தகவலுக்காக மட்டும்.)//

      பரவாயில்லை ஐயா, மிக்க நன்றி ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மீது கொண்ட அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      Delete
  31. என் சிறுகதைத்தொகுப்பு நூல்களை, பலருக்கும் நான் அன்பளிப்பாக வழங்கியபோது, ஒவ்வொரு புத்தகத்திலும், என் சுயவிலாசமிட்ட ஒரு அஞ்சல் அட்டையையும் வைத்தே கொடுத்திருந்தேன்.

    படித்தபின் குறை நிறைகளைச்சுட்டிக்காட்டி எழுதி, அவர்கள் அந்த அஞ்சல் அட்டையை தபால்பெட்டியில் சேர்த்தால் போதும் என்ற நோக்கத்தில்.
    வாழ்த்தும் அளவிற்கு வயசு இல்லை வணகுகின்றேன் ஐயா இவை அனைத்தும் உங்களது அயராத முயற்சிக்கும் தன் நம்பிக்கைக்கும் கிடைத்த பரசிசுகளாகவே பார்க்கின்றேன் !.தொடர்ந்தும் சிறந்த பரிசுகள் உங்களுக்கு கிட்ட வேண்டும் .மிக்க மகிழ்ச்சி ஐயா .

    ReplyDelete
    Replies
    1. அம்பாளடியாள் March 24, 2013 at 10:28 AM

      வாருங்கள், வணக்கம்.

      *****என் சிறுகதைத்தொகுப்பு நூல்களை, பலருக்கும் நான் அன்பளிப்பாக வழங்கியபோது, ஒவ்வொரு புத்தகத்திலும், என் சுயவிலாசமிட்ட ஒரு அஞ்சல் அட்டையையும் வைத்தே கொடுத்திருந்தேன். படித்தபின் குறை நிறைகளைச்சுட்டிக்காட்டி எழுதி, அவர்கள் அந்த அஞ்சல் அட்டையை தபால்பெட்டியில் சேர்த்தால் போதும் என்ற நோக்கத்தில்*****

      //வாழ்த்தும் அளவிற்கு வயசு இல்லை வணகுகின்றேன் ஐயா இவை அனைத்தும் உங்களது அயராத முயற்சிக்கும் தன் நம்பிக்கைக்கும் கிடைத்த பரசிசுகளாகவே பார்க்கின்றேன் !. தொடர்ந்தும் சிறந்த பரிசுகள் உங்களுக்கு கிட்ட வேண்டும் .மிக்க மகிழ்ச்சி ஐயா .//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  32. பொக்கிஷங்கள் அருமை...
    வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. சே. குமார் March 24, 2013 at 11:58 AM

      வாருங்கள், வணக்கம்.

      //பொக்கிஷங்கள் அருமை... வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன் ஐயா...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்,

      Delete

  33. விடாமுயற்சி, கடின உழைப்பு, அதற்கேற்ற அங்கீகாரம்....! பாராட்டுக்கள் கோபு சார்..!

    ReplyDelete
    Replies
    1. G.M Balasubramaniam March 24, 2013 at 8:11 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //விடாமுயற்சி, கடின உழைப்பு, அதற்கேற்ற அங்கீகாரம்....! பாராட்டுக்கள் கோபு சார்..!//

      எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்கள் + நலம் விரும்பிகள் தந்த உற்சாகம் மட்டுமே தான் அங்கீகாரத்தினைத் தேடித்தந்தன.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      Delete
  34. OMG ! Ivalo prizesssss ahhhhhhhhh ??? Semaiya kalaki irukeenga sir... Innum kalaka vazhthukkal....
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. Sangeetha Nambi March 24, 2013 at 10:27 PM

      வாங்கோ, வணக்கம்.

      //OMG ! Ivalo prizesssss ahhhhhhhhh ??? Semaiya kalaki irukeenga sir... Innum kalaka vazhthukkal.... http://recipe-excavator.blogspot.com//

      தங்களின் அன்பான வருகைக்கும், வியப்புடன் கூடிய கலக்கலான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  35. தங்களின் எழுத்துலக சாதனைகள் கண்டு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துகள். தொடரட்டும் தங்களின் சாதனை.

    ReplyDelete
    Replies
    1. Rukmani Seshasayee March 24, 2013 at 10:29 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்களின் எழுத்துலக சாதனைகள் கண்டு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துகள். தொடரட்டும் தங்களின் சாதனை.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  36. இத்தனை பரிசுகளும் பாராட்டுக்களும் இங்கே பொக்கிஷங்களாகக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். நாம் பெற்ற விருதுகளும் பாராட்டுக்களும் என்றுமே விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் தான்! அன்பான பாராட்டுக்கள்! இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. மனோ சாமிநாதன் March 25, 2013 at 12:41 AM

      வாருங்கள், வணக்கம்.

      //இத்தனை பரிசுகளும் பாராட்டுக்களும் இங்கே பொக்கிஷங்களாகக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். நாம் பெற்ற விருதுகளும் பாராட்டுக்களும் என்றுமே விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் தான்! அன்பான பாராட்டுக்கள்! இனிய வாழ்த்துக்கள்!!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  37. அனைத்துமே பொக்கிஷங்கள் தான் வை.கோ. ஜி!

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் March 25, 2013 at 12:54 AM

      வாங்கோ, வெங்கட்ஜி .. வணக்கம்.

      //அனைத்துமே பொக்கிஷங்கள் தான் வை.கோ. ஜி!//

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்ஹ நன்றிகள்.

      Delete
  38. Ungaludaiya pokkishangal super. Unga blogspot vandhu, ungalai pathi therinjikitadhula romba sandhoshama irruku. Beutiful and wonderful occasions in your life. These occasions are really and treasure. Vaazthukkal, Vaazthukkal, Vaazthukkal...

    ReplyDelete
    Replies
    1. Priya Anandakumar March 25, 2013 at 4:13 AM

      WELCOME ! வாருங்கள், வணக்கம். தங்களின் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. ;)

      //Ungaludaiya pokkishangal super. Unga blogspot vandhu, ungalai pathi therinjikitadhula romba sandhoshama irruku. Beutiful and wonderful occasions in your life. These occasions are really and treasure. Vaazthukkal, Vaazthukkal, Vaazthukkal... உங்களுடைய பொக்கிஷங்கள் சூப்பர். உங்கள் வலைத்தளத்திற்கு வந்து உங்களைப்பற்றி தெரிஞ்சுக் கிட்டதிலே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள் வாழ்க்கையில் அழகான ஆச்சர்யமான தருணங்கள் இவை யாவும். இந்தத் தருணங்கள் யாவுமே உண்மையான பொக்கிஷங்கள் தான். வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், சந்தோஷமான கருத்துப்பகிர்வுகளுக்கும், ஆத்மார்த்தமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  39. விடாமுயற்சியும் ஊக்கமும் பிரமிக்க வைக்கின்றன. பொக்கிஷங்கள் அனைத்துமே அருமையானவை. விலை மதிப்பு என்பதே கிடையாது. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam March 25, 2013 at 5:11 AM

      வாருங்கள், வணக்கம்.

      //விடாமுயற்சியும் ஊக்கமும் பிரமிக்க வைக்கின்றன. பொக்கிஷங்கள் அனைத்துமே அருமையானவை. விலை மதிப்பு என்பதே கிடையாது. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. வாழ்த்துகள்.//

      மிக்க சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், பிரமிப்புடன் கூடிய கருத்துப் பகிர்வுகளுக்கும், ஆத்மார்த்தமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  40. பொக்கிஷம் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது. முன்பே தெரிந்தவை தெரியாதவை என சேர்த்து வைத்து பார்க்கும் போது ஆனந்தமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ரிஷபன் March 25, 2013 at 6:00 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //பொக்கிஷம் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது. முன்பே தெரிந்தவை தெரியாதவை என சேர்த்து வைத்து பார்க்கும் போது ஆனந்தமாய் இருக்கிறது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சிலிர்க்க வைக்கும் ஆனந்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய + அன்பு நன்றிகள், சார்.

      Delete
    2. அன்புள்ள திரு. ரிஷ்பன் சார்,

      தாங்கள் எனக்கு அவ்வப்போது கொடுத்துள்ள உற்சாகம் + தூண்டுதல்களை விட மிகப்பெரிய பொக்கிஷமாக நான் எதனையும் நினைக்கவில்லை.

      தாங்களே எனக்குக்கிடைத்த மாபெரும் பொக்கிஷம், சார். மிக்க நன்றி, சார்.

      Delete
  41. விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள். பாதுகாப்பதும் கஷ்டம். ஆனைல் இவ்வளவு அழகாக, கோர்வையாக, ஞாபகமாக தேதி வாரியாக அளிப்பது ஒன்றே போதும். அவை எத்தனை உயர்வாக உங்களாலும்,மதிக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டதால் தான் அதன் மதிப்பும் எங்கள் யாவருக்கும் தெரிய வாய்ப்பளித்தது. உங்கள்
    ஒழுங்கு முறையும், செய்வன திருந்தச் செய்யும்,நல்ல குணமும்.
    எவ்வளவு தூரம், மற்றவர்களைப் பாராட்டும் குணமும், இன்னும் பல போற்றப்படும் குணங்களும் அமையப் பெற்றிருக்கிரீர்கள் என்பதை நினைக்கவே, எழுதவே பெருமையாக இருக்கிது. சிந்திக்க வைத்துள்ளீர்கள். அரசாங்கத்தின் பொக்கிஷமே உங்களிடம் லோன் கேட்கும் போல இருக்கிரது. மனமுவந்த பாராட்டுகள். ஆசிகளுடனும், அன்புடனும்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi March 25, 2013 at 6:29 AM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள். பாதுகாப்பதும் கஷ்டம். ஆனால் இவ்வளவு அழகாக, கோர்வையாக, ஞாபகமாக தேதி வாரியாக அளிப்பது ஒன்றே போதும். அவை எத்தனை உயர்வாக உங்களாலும்,மதிக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டதால் தான் அதன் மதிப்பும் எங்கள் யாவருக்கும் தெரிய வாய்ப்பளித்தது.//

      மிகவும் சந்தோஷம் மாமி.

      //உங்கள் ஒழுங்கு முறையும், செய்வன திருந்தச் செய்யும்,நல்ல குணமும்; எவ்வளவு தூரம், மற்றவர்களைப் பாராட்டும் குணமும், இன்னும் பல போற்றப்படும் குணங்களும் அமையப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை நினைக்கவே, எழுதவே பெருமையாக இருக்கிது. சிந்திக்க வைத்துள்ளீர்கள்.//

      எல்லாவற்றிற்கும் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள், மட்டுமே காரணம்.

      //அரசாங்கத்தின் பொக்கிஷமே உங்களிடம் லோன் கேட்கும் போல இருக்கிறது. //

      அடடா, அடிக்கும் காற்றில் தெருவில் சுழலும் குப்பை திடீரென கோபுரத்தில் உச்சிக்கே போய்விடும். அது போல என் மீது தங்களுக்குள்ள பிரியத்தினால், என்னைப் புகழ்ந்து எங்கேயோ உச்சியில் கொண்டுபோய் சேர்க்கப்பார்க்கிறீர்கள்.

      நான் மிகவும் சாதாரணமானவன் தான், மாமி.

      //மனமுவந்த பாராட்டுகள். ஆசிகளுடனும், அன்புடனும்//

      தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்விக்கும் ஆழமான கருத்துக்களுக்கும், மனமுவந்த பாராட்டுக்கள் + அன்பான ஆசிகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அநேக நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      Delete
  42. அனைத்துமே அரிய பொக்கிசங்கள். பாராட்டுகள்.
    எங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. மாதேவி March 25, 2013 at 6:39 AM

      வாருங்கள், வணக்கம்.

      //அனைத்துமே அரிய பொக்கிசங்கள். பாராட்டுக்கள். எங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  43. வை கோ சார் என்ன பின்னூட்டம் போடணும் என்று புரியவே இல்லே. பிரமிப்பிலிருந்து இன்னும் விடுபடவெ முடியல்லே. எப்படி சார் இவ்வளவு திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லி தரீங்களா. நானும் பூவோட சேர்ந்த நார் போல கொஞ்சம் மணம் வீசுரேனே. மேலோட்டமாகத்தான் படிச்சிருக்கேன் இன்னும் நிதானமாக எல்லா பதிவுகளையும் படிச்சுட்டு வரேன்.உண்மையிலேயே உங்களுக்குமட்டுமில்லே எங்களுக்கும் உங்க பதிவுகள் எல்லாமே மிகப்பெரிய பொக்கிஷங்கள்தான். நானும் உங்க நண்பின்னு பெருமை பட்டுட்டு இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் March 25, 2013 at 8:51 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வை கோ சார் என்ன பின்னூட்டம் போடணும் என்று புரியவே இல்லே.//

      புரியாவிட்டால் பேசாமல் விட்டுடுங்கோ. கஷ்டப்படாதீங்கோ. கஷ்டப்படுத்திக்காதீங்கோ. ;)

      //பிரமிப்பிலிருந்து இன்னும் விடுபடவே முடியல்லே.//

      ரொம்ப நாளா எங்கெங்கெல்லாமோ TOUR போய் விட்டு வந்திருக்கீங்க தானே. அந்த பிரமிப்பிலிருந்து இன்னும் விடுபடவே முடியாது தான். பேசாமல் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோங்க. பிரமிப்பெல்லாம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும். பிறகு இங்கு வரலாம். ;)

      //எப்படி சார் இவ்வளவு திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள்?//

      திறமையாவது வெங்காயமாவது! அதெல்லாம் என்னிடம் கொஞ்சம் கூட கிடையாது. ஏதேதோ இருப்பதாகப் பிறர் சொல்லுவார்கள், வெங்காயத்தை உரித்துப்பார்த்தால் ஒன்றுமே இருக்காதுன்னு உங்களுக்குத்தெரியாதோ!!

      //எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லி தரீங்களா. நானும் பூவோட சேர்ந்த நார் போல கொஞ்சம் மணம் வீசுரேனே.//

      என்னிடம் எந்த ரகசியமுமே கிடையாதும்மா. நம்புங்கோ. பூவோடு சேர்ந்த நாரா? ஏற்கனவே நீங்க பூந்தளிராக அழகாக எல்லோருடைய பதிவுகளிலும் சகட்டு மேனிக்கு, மணம் வீசிக்கொண்டு தானே இருக்கிறீர்கள். பிறகு என்ன Feeling?

      //மேலோட்டமாகத்தான் படிச்சிருக்கேன்.//

      பின்னூட்டத்தைப் பார்த்த உடனேயே புரிந்து கொண்டேன்.

      //இன்னும் நிதானமாக எல்லா பதிவுகளையும் படிச்சுட்டு வரேன்.//

      ஆஹா, வாங்கோ. கட்டாயம் வருவீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா எப்போ வருவீங்க, எப்படி வருவீங்கன்னு தான் எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. ;)

      //உண்மையிலேயே உங்களுக்குமட்டுமில்லே எங்களுக்கும் உங்க பதிவுகள் எல்லாமே மிகப்பெரிய பொக்கிஷங்கள்தான்.//

      நல்லா பேசக்கத்துக்கிட்டீங்க. அதனால் நிச்சயமாகப் பிழைத்துக்கொள்வீர்கள். ;)

      //நானும் உங்க நண்பின்னு பெருமை பட்டுட்டு இருக்கேன்.//

      அடடா, நானும் இதை நம்புகிறேன், நண்பியே. ;)

      நண்பியின் அன்பான அவசர வருகைக்கும், அழகாக அள்ளித் தெளித்துள்ள கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  44. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், உங்கள் ஞாபக சக்தி உங்களுக்கு ஒரு மிகப் பொக்கிஷம். அதற்குள் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து நீங்கள் (தேதி, மாதம் வருடங்கள் உட்பட எழுதுவது அருமை.

    ரொம்பவும் மனதை தொட்ட பொக்கிஷம் திருமதி ஜெயலக்ஷ்மி அம்மாள் எழுதிய அந்தக் கார்டு!

    பிறகு அம்மாவைப் பற்றி அந்த வரிகள் high light! //”அம்மா !
    நீ மட்டுமே எப்போதும்
    என் தொடர்பு எல்லைக்குள் !!”//

    பொக்கிஷமான பொக்கிஷப் பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. Ranjani Narayanan March 25, 2013 at 11:42 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்,//

      டக்குன்னு சொல்லுங்கோ ... அப்புறம் மறந்துடப்போகுது. ;)

      //உங்கள் ஞாபக சக்தி உங்களுக்கு ஒரு மிகப் பொக்கிஷம். //

      நல்லவேளையா ஞாபகப்படுத்திட்டீங்கோ. நாளைக்கு மறுநாள் ஒரு பதிவு வெளியிடணும். மறந்தே போயிட்டேன். இன்னும் அதற்கான எற்பாடுகளே செய்யவில்லை. இனிமேல் தான் எதாவது யோசிக்கணும்.

      //அதற்குள் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து நீங்கள் (தேதி, மாதம் வருடங்கள் உட்பட எழுதுவது அருமை.//

      தேதி, மாதம், வருடங்கள் எல்லாம் தட்டினால் சுலபமாக வந்து நிற்குமே ... இதில் என்ன பெரிய சிரமம்?

      அந்தக்காலமா! நம் பழைய டயரிகளையும், பழைய பஞ்சாங்கங்களையும் தூசி தட்டி நாம் எடுத்துப் பார்த்து ஆராய்ச்சிகள் செய்ய! ;)

      //ரொம்பவும் மனதை தொட்ட பொக்கிஷம் திருமதி ஜெயலக்ஷ்மி அம்மாள் எழுதிய அந்தக் கார்டு!//

      ஆம், மிகப்பெரிய பொக்கிஷமாகவே நானும் அதனைப் பாதுகாத்து வைத்துள்ளேன்.

      //பிறகு அம்மாவைப் பற்றி அந்த வரிகள் high light!

      ***** ”அம்மா !
      நீ மட்டுமே எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் !!”*****

      ஆம். நாம், நம் பெற்ற தாயாரை மட்டுமே எப்போதும் எதற்கும் மிகச்சுலபமாக அணுகி பேச முடியும்.

      மற்றவர்கள் எல்லோருமே எப்போதுமே நம் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருப்பார்கள்.

      அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள்.

      தொடர்பு கிடைத்தாலும் நிம்மதியாக மனம் விட்டு அந்தரங்கமாக, ஆத்மார்த்தமாக, பொறுமையாக பேச இயலாது.

      நேரமும் இருக்காது.

      அதுவும் பெண் குழந்தைகளுக்கு அவரவர்களின் தாயார் தான் மிக முக்கியமானவர்கள் .... இல்லையா?

      //பொக்கிஷமான பொக்கிஷப் பகிர்வு!//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.


      Delete
  45. அந்த ஜெயலக்ஷ்மி மாமியை எழுதாத விட்டு விட்டது ஸரியில்லை. மன்னிச்சுங்கோ மாமி என்று சொல்லத்தோன்றுகிறது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi March 26, 2013 at 6:49 AM

      வாங்கோ, நமஸ்காரம், மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //அந்த ஜெயலக்ஷ்மி மாமியை எழுதாத விட்டு விட்டது ஸரியில்லை. மன்னிச்சுங்கோ மாமி என்று சொல்லத்தோன்றுகிறது. அன்புடன்//

      அந்த மாமி மிகவும் நல்லவர்கள். அந்த மாமாவும் மாமியும் மிகவும் ஒற்றுமை இருவருமே 98-99 வயது வரை வாழ்ந்தார்கள். அந்த கிராமத்து ஜனங்கள் எல்லோருக்குமே இவர்கள் மீது நல்ல மரியாதை உண்டு. பொதுக்காரியங்கள், கோயில் காரியங்கள், ஸ்வாமி புறப்பாடு, தேர் முதலியன எது நடந்தாலும், இவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். தேர் இழுக்கும் ஆட்கள் எல்லோருக்கும் இவர்கள் வீட்டில் சாப்பாடு போடுவார்கள்.

      வீட்டில் நிறைய மாடு கன்னு உண்டு. ஆனாலும் இருவரும் காஃபியே சாப்பிட மாட்டார்கள். வருகிறவர்களுக்கும் மோர் மட்டுமே அன்புடன் தருவார்கள். அக்ரஹாரத்தில் இவர்கள் வீட்டுத்திண்ணை பெரியதாகவும், குளுமையாகவும் இருக்கும். எப்போதும் ஆத்து வாசலில் பந்தல் போட்டிருப்பார்கள்.

      நான் இவர்கள் ஆத்தைத்தாண்டிதான் என் மாமனார்/மாமியார் ஆத்துக்குப்போக வேண்டும். இவர்கள் என்னை வாங்கோ என்று சொல்லி, திண்ணையில் அமர வைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

      இப்போது இவர்களும் இல்லை, என் மாமியார் மாமனாரும் இல்லை. என் மச்சினர் குடும்பம் மட்டும் அங்கு உள்ளது. நான் இப்போதெல்லாம் அங்கே அதிகம் போவதே இல்லை. பொதுவாக மிகவும் அழகான கிராமம். நல்ல மனிதர்கள் பல இருந்த கிராமம் அது.

      பிக்ஷாண்டார் கோயில் பாலசுப்ரமணிய பாகவதர் என்று ஒருவர் இருந்தார். ரொம்பவும் ஃபேமஸ். ரேடியோவில் சங்கீத உபன்யாசம் செய்வார். காளிங்க நர்த்தனம் அவர் சொல்லிக் கேட்கணும். சுமார் கால் மணி நேரம், குட்டி கிருஷ்ணர், காளிங்கன் என்ற பாம்பின் மீது வழுக்கி வழுக்கி நர்த்தனம் ஆடியதை வெகு அழகாக மூச்சை தம் கட்டி பாடுவார். பிரமாதமாக இருக்கும்.

      அதெல்லாம் ஒரு காலம். நினைத்தால் ஏக்கமாகவும் துக்கமாகவும் உள்ளது.

      நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      Delete
  46. மிகவும் பெருமையாக இருக்கிறது சார். நீங்கள் வாழ்ந்து சாதித்துவிட்டீர்கள் . உங்கள் திறமை உங்கள் பொக்கிஷங்களின் அத்தாட்சி மட்டுமல்ல . உங்கள் வாசகர்களாகிய எங்களின் மனங்களிலும் அத்தாட்சியாக உள்ளது. அனைத்தும் வாசிக்க ஆசைதான் . வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. சந்திரகௌரி March 26, 2013 at 10:43 AM

      வாருங்கள், வணக்கம்.

      //மிகவும் பெருமையாக இருக்கிறது சார். நீங்கள் வாழ்ந்து சாதித்துவிட்டீர்கள் . உங்கள் திறமை உங்கள் பொக்கிஷங்களின் அத்தாட்சி மட்டுமல்ல . உங்கள் வாசகர்களாகிய எங்களின் மனங்களிலும் அத்தாட்சியாக உள்ளது. அனைத்தும் வாசிக்க ஆசைதான் . வாழ்த்துகள்//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  47. நானும் 23 ந்தேதியிலிருந்து ஏதாவது பின்னூட்டம் போடலாம் என்று பார்த்தால் எனக்கு முன்னாள் பின்னூட்டம் போட்டவர்கள் எல்லாம் ரொம்ப யோசிச்சு அருமையாக எழுதியிருக்கிறார்கள் , நம்மளுக்கு அந்த அளவு அறிவு இல்லை , இருந்தாலும் கண்ணாடி மாதிரி மனசு உங்களுக்கு அதனால்தான் எல்லாம் பகிர்ந்து கொள்கிறீர்கள் இதுக்கே எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு 150 வயது ஆயுசு தரணும்.

    ReplyDelete
    Replies
    1. அஜீமும்அற்புதவிளக்கும் March 27, 2013 at 5:06 AM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //நானும் 23 ந்தேதியிலிருந்து ஏதாவது பின்னூட்டம் போடலாம் என்று பார்த்தால் எனக்கு முன்னாள் பின்னூட்டம் போட்டவர்கள் எல்லாம் ரொம்ப யோசிச்சு அருமையாக எழுதியிருக்கிறார்கள் , நம்மளுக்கு அந்த அளவு அறிவு இல்லை.//

      ஆஹா, என்னே ஒரு தன்னடக்கம்!!!!! என்னை அப்படியே மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்.;)

      //இருந்தாலும் கண்ணாடி மாதிரி மனசு உங்களுக்கு//

      அடடா, நொறுங்கிவிடாமல் இருக்கணுமே எனக்கவலையாக உள்ளது எனக்கும். ;)

      //அதனால்தான் எல்லாம் பகிர்ந்து கொள்கிறீர்கள்//

      ஏதோ நமக்குத்தெரிந்தது, அறிந்தது, கைவசம் உள்ளது எல்லாவற்றையும் ஒளிவுமறைவு ஏதும் இன்றி பகிர்ந்துகொண்டு விடலாமே என்று தான்.

      //இதுக்கே எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு 150 வயது ஆயுசு தரணும்.//

      அதெல்லாம் ரொம்ப ஜாஸ்தியாச்சே!.

      மேலும் 150 நாட்கள் மட்டுமாவது இருப்பினும் ஆரோக்யமாக இருக்க வேண்டும். இந்தத்தொடர் பதிவினை அதற்குள் எப்படியாவது நான் முடித்தும் விடணும். அதுவே என் பிரார்த்தனை.

      எனினும் தங்களின் பிரார்த்தனைகளுக்கு என் நன்றிகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் ஆயுளை நீடிக்க விரும்பி தாங்கள் இறைவனிடம் வைத்துள்ள கோரிக்கைக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்

      Delete
  48. உங்கள் அனைத்து நினைவு பொருட்களுடன் நான் கொடுத்த நினைவு பொருளும் சேர்ந்தது மிக்க மகிழ்சி.
    நீங்க மிகப்பெரிய அனுபவசாலி

    ReplyDelete
    Replies
    1. Jaleela Kamal March 27, 2013 at 8:25 AM

      வாருங்கள், வணக்கம்.

      //உங்கள் அனைத்து நினைவு பொருட்களுடன் நான் கொடுத்த நினைவு பொருளும் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி. நீங்க மிகப்பெரிய அனுபவசாலி//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      [தாங்கள் அனுப்பிவைத்த பரிசுப்பொருள் எங்களுக்கு அன்றாட தேவைக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. தினமும் இங்கு திருச்சியில் சுமார் 8 மணி நேரங்களுக்கு மேல் மின்தடை ஏற்பட்டு வருகிறது. உண்மையிலேயே மிகச்சிறந்த பரிசாகவும், அதே சமயம், அடிக்கடி ஆபத்துக்கு உதவும் பொக்கிஷமாகவே உள்ளது. மிக்க நன்றி. ]

      Delete
  49. Appadiyoooooo!!!!!!!!!!!
    Romba romba santhosham Sir....
    evallavu pokishyankal, athellamme inniya anubavangal illaya?
    Ungal sirkathai thokkupoo enakku ungalal parisalikkapatthu.
    Nan athai pokishyamaka karuthi vaithrukkerkan.....
    viji

    ReplyDelete
    Replies
    1. viji March 28, 2013 at 5:53 AM

      வாங்கோ விஜி மேடம், செளக்யமா? வணக்கம்.

      உங்களுக்கு ஆயுஷு நூறு ! ;)))))

      பின்னூட்டப்பெட்டியின் எண்ணிக்கையை கவனியுங்கோ:

      உங்கள் பின்னூட்ட எண்: 100

      உங்களுக்கான என் பதில்: 101

      >>>>>>

      Delete
    2. viji March 28, 2013 at 5:53 AM

      //Appadiyoooooo!!!!!!!!!!!
      அ ப் பா டி யோஓஓஓஓஓஓ !!!!!!!!!!!!!//

      ஏன் ? என்ன ஆச்சு?
      [குழந்தை அழுதுது ;) ]

      //Romba romba santhosham Sir....
      ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார்....//

      எனக்கும் தங்கள் வருகையில் சந்தோஷமே!

      //evallavu pokishyankal, athellamme inniya anubavangal illaya?
      எவ்வளவு பொக்கிஷங்கள், அதெல்லாமே இனிய அனுபவங்கள் இல்லையா?

      ஆமாம். மிக மிக இனிமையான அனுபவங்களே தான். ;)

      //Ungal sirkathai thokkupoo enakku ungalal parisalikkapatthu.
      உங்களின் சிறுகதைத்தொகுப்பு நூல் எனக்கு உங்களால் பரிசளிக்கப்பட்டது.//

      ஆம். நினைவு இருக்கிறது. ஸ்ரீ ஹனுமன் மூலம் அதை நான் தங்களுக்குக் கொடுத்தனுப்பியிருந்தேன்.

      //Nan athai pokishyamaka karuthi vaithrukkerkan..... - Viji
      நான் அதை பொக்கிஷமாகக் கருதி வைத்திருக்கிறேன் - விஜி

      அப்படியா? கேட்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் கோபு

      Delete
  50. நெக்லஸ், புத்தகங்கள், கடிதங்கள் என அனைத்துமே அழகான பொக்கிஷங்கள் தான்.

    ReplyDelete
  51. கோவை2தில்லி April 1, 2013 at 7:18 AM

    வாங்கோ, வணக்கம்.

    //நெக்லஸ், புத்தகங்கள், கடிதங்கள் என அனைத்துமே அழகான பொக்கிஷங்கள் தான்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  52. Pokkisham thodar paddika romba nallairundhadhu. 1,2 paisa coins naan kooda vechirundhen. 1/2 anna, I have heard but not seen.Wonderful collection of coins. It is very nice to see... Edhu ellamey nija pokishangal. Thank you very much for sharing with us.

    ReplyDelete
    Replies
    1. Priya AnandakumarApril 1, 2013 at 2:56 PM

      WELCOME FOR YOUR RE-ENTRY HERE. வாங்கோ, வணக்கம்.

      Pokkisham thodar paddika romba nallairundhadhu. 1,2 paisa coins naan kooda vechirundhen. 1/2 anna, I have heard but not seen.Wonderful collection of coins. It is very nice to see... Edhu ellamey nija pokishangal. Thank you very much for sharing with us.

      இது என் வேறொரு பதிவுக்கு தாங்கள் எழுதிய கமெண்ட் ஆக இருக்கும் போலத்தெரிகிறது. பரவாயில்லை. அங்கும் மீண்டும் கருத்து எழுதியுள்ளீர்கள். பார்த்தேன். மிகவும் சந்தோஷம்.

      மிக்க நன்றி, நன்றி, நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete
  53. மிக அருமையான பொக்கிஷங்கள் இவைதான்.ஏனென்றால் இவைகள் உங்களின் திறமைக்கு கிடைத்தவைகள். எப்பேர்பட்ட திறமைகள் உங்களிடம். அன்னையர்தின வாசகம் அருமை.
    அம்மாளின் கடிதம் மிகவும் அருமையான பொக்கிஷம்தான் அவர் இந்தவயதிலும் எழுதியிருக்கிறார்களே. நிச்சயம் பாதுகாக்க வெண்டியதொன்றாகும். எறும்புகள் செல்வது அழகாகஇருக்கு.
    அவைகளைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் எவ்வளவு நல்லது. நிறைகுடம் ஒருபோதும் தளும்பாது.இந்த வாசகம்தான் ஞாபகம் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. ammulu April 4, 2013 at 11:21 PM

      வாங்கோ அம்முலு, வணக்கம்.

      //மிக அருமையான பொக்கிஷங்கள் இவைதான்.ஏனென்றால் இவைகள் உங்களின் திறமைக்கு கிடைத்தவைகள். எப்பேர்பட்ட திறமைகள் உங்களிடம்.//

      தஙகளின் பாராட்டுக் கருத்துக்கள் படிக்க ரொம்ப சந்தோஷமாக உள்ளது, அம்முலு.

      //அன்னையர்தின வாசகம் அருமை.//

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, அம்முலு,

      //அம்மாளின் கடிதம் மிகவும் அருமையான பொக்கிஷம்தான் அவர் இந்தவயதிலும் எழுதியிருக்கிறார்களே. நிச்சயம் பாதுகாக்க வெண்டியதொன்றாகும்.//

      ஆமாம் அம்முலு. நேற்று முன்தினம் அந்த ஊர் ஈஸம்பலத்தி அம்மனுக்கு பங்குனித்திருநாள். என் மனைவியுடன் காரில் சென்று வந்தேன். அந்த அம்மாளின் வீட்டைக்கடக்கும் போது என் கண் கலங்கியது. நேற்று இருப்பார் இன்று இல்லை என்பதை நினைக்க மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

      //எறும்புகள் செல்வது அழகாக இருக்கு. அவைகளைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் எவ்வளவு நல்லது.//

      சுறுசுறுப்புக்கும் எனக்கும் வெகு தூரம். பதிவுலகில் மட்டுமே நான் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருப்பதுண்டு. மற்றவற்றில் எல்லாம் உலக மஹா சோம்பேறி ஆகிவிட்டேன், இப்போதெல்லாம். ;)

      //நிறைகுடம் ஒருபோதும் தளும்பாது.இந்த வாசகம்தான் ஞாபகம் வந்தது.//

      நம் அஞ்சு [ஏஞ்சலின் நிர்மலா] வும், நம் திருமதி. ஆசியா ஓமர் அவர்களும் சேர்ந்து என்னை இந்தப் பொக்கிஷம் பற்றி பதிவிட அழைத்து, கொஞ்சம் தளும்ப வைத்து விட்டார்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அம்முலு.

      Delete
  54. அசந்துபோகிறேன் தங்கள் பன்முகத் திறமைகளைக் கண்டு வியந்து. இத்தனைத் திறமைகளும் ஏதாவது ஒரு வகையில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் பரிசுகளும் பாராட்டும் பெற்றிருப்பதையும் அறிந்து மிகவும் மகிழ்ச்சி. புகழேணியில் எத்தனை உயரம் ஏறினாலும் தலைக்கனம் மிகாத தங்கள் இனிய குணமும் பழகும் நேர்த்தியும் எழுத்தும் எப்போதுமே போற்றத்தக்கவை. பொக்கிஷங்கள் வரிசையில் எழுத்துலகப் பொக்கிஷங்கள் இவை. மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார்.

    ReplyDelete
    Replies
    1. கீதமஞ்சரி April 10, 2013 at 3:28 AM

      வாங்கோ மேடம்,. வணக்கம்.

      //அசந்துபோகிறேன் தங்கள் பன்முகத் திறமைகளைக் கண்டு வியந்து. இத்தனைத் திறமைகளும் ஏதாவது ஒரு வகையில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் பரிசுகளும் பாராட்டும் பெற்றிருப்பதையும் அறிந்து மிகவும் மகிழ்ச்சி.//

      மிகவும் சந்தோஷம் மேடம்.

      //புகழேணியில் எத்தனை உயரம் ஏறினாலும் தலைக்கனம் மிகாத தங்கள் இனிய குணமும் பழகும் நேர்த்தியும் எழுத்தும் எப்போதுமே போற்றத்தக்கவை. பொக்கிஷங்கள் வரிசையில் எழுத்துலகப் பொக்கிஷங்கள் இவை. மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார்.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களும், என் மனதுக்கு ஆறுதலாகவும் உற்சாகம் ஊட்டுவதாகவும் உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  55. Rathnavel Natarajan April 10, 2013 at 12:35 AM

    வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

    //அருமையான பதிவு.நன்றி ஐயா.//

    தங்களின் அன்பான வருகை + கருத்துக்கு மிக்க நன்றி, ஐயா.

    ReplyDelete
  56. கீதமஞ்சரி சொல்லியிருப்பதை ரிப்பிட் பன்ன விரும்புகிறேன்,

    எனக்கும் அம்மாவைப் பற்றின வாசகமும் அந்த வயதான பெண் (பாட்டி ) உங்களுக்கு (தாத்தாவிற்கு ) விமர்சன மடல் இட்டது பிடித்துள்ளது.அதைவிட நீங்கள் இன்னும் பத்திரமாக வைத்திருப்பது மிகவும் சிறப்பு.

    உங்க சுய சரிதைக்கு இந்த பொக்கிச பதிவுகளே அஸ்திவாரம் .

    ReplyDelete
  57. thirumathi bs sridhar April 22, 2013 at 4:47 AM

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //கீதமஞ்சரி சொல்லியிருப்பதை ரிப்பிட் பண்ண விரும்புகிறேன்,//

    ஆஹா, சந்தோஷம்.

    //எனக்கும் அம்மாவைப் பற்றின வாசகமும் அந்த வயதான பெண் (பாட்டி ) உங்களுக்கு (தாத்தாவிற்கு ) விமர்சன மடல் இட்டது பிடித்துள்ளது.//

    எனக்கு உங்கள் கிண்டல் பிடித்துள்ளது.

    உங்களுக்கே தாத்தாவா? OK OK ;)

    //அதைவிட நீங்கள் இன்னும் பத்திரமாக வைத்திருப்பது மிகவும் சிறப்பு.//

    மிக்க மகிழ்ச்சி.

    //உங்க சுய சரிதைக்கு இந்த பொக்கிச பதிவுகளே அஸ்திவாரம் .//

    சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், உரிமையுடன் கூறியுள்ள நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    ReplyDelete
  58. மிக அருமை சார். தங்க நெக்லஸ் மற்றும் மற்ற பரிசு விவரங்கள் ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும் 95 வயது ஜெயலெக்ஷ்மிம்மா எழுதிய கடிதம்தான் பொக்கிஷம். ஹைலைட்டும் கூட. வாழ்த்துகள் சார். தொடரட்டும் சாதனைகள். :)

    ReplyDelete
    Replies
    1. Thenammai Lakshmanan April 24, 2015 at 3:29 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மிக அருமை சார். தங்க நெக்லஸ் மற்றும் மற்ற பரிசு விவரங்கள் ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும் 95 வயது ஜெயலெக்ஷ்மிம்மா எழுதிய கடிதம்தான் பொக்கிஷம். ஹைலைட்டும் கூட. வாழ்த்துகள் சார். தொடரட்டும் சாதனைகள். :)//

      தங்களின் அன்பான வருகைக்கும், தேனினும் இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

      Delete
  59. உண்மையிலேயே இவைகள் விலை மதிக்க முடியாதவைதான்.

    ReplyDelete
  60. பூந்தளிர் August 16, 2015 at 8:41 AM

    :))))))))

    வாங்கோ,வணக்கம். OK OK OK :))))) THANKS A LOT !

    ReplyDelete
  61. வல ஒசந்த தங்க நெக்லசும் பொக்கிஷமா நெனக்கிறீங்க
    வெல மதிப்பில்லாத போஸ்ட் கார்டயும் பொக்கிஷமா பாதுகாத்துகரீங்க. அத்த கார்டுல பூரா பூரா அன்புலா நெறம்பி கெடக்குல?

    ReplyDelete
    Replies
    1. mru October 23, 2015 at 2:30 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //வல ஒசந்த தங்க நெக்லசும் பொக்கிஷமா நெனக்கிறீங்க
      வெல மதிப்பில்லாத போஸ்ட் கார்டயும் பொக்கிஷமா பாதுகாத்துகரீங்க. அத்த கார்டுல பூரா பூரா அன்புலா நெறம்பி கெடக்குல?//

      ஆமாம் முருகு. இரண்டுமே எனக்குப் பொக்கிஷம் தான். நெக்லஸ்ஸாவது நகைக் கடைக்குப்போய் இன்று ஒன்று புதிதாக நாம் வாங்கி வந்து விட முடியும். ஆனால் இன்று உயிருடன் இல்லாத, அந்த வயதான அம்மா எழுதிய அந்தக்கடிதம் ...... மீண்டும் கிடைக்காததோர் பொக்கிஷம் அல்லவா !

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  62. பொக்கிஷங்களில் மிகவும் உயர்வாக கருதும் அந்த ஜெயலஷ்மி அம்மாவின்கடிதம். நாங்களும் அதையே நினைக்கிறோம். ஒரு பின்னூட்டத்தில் நீங்க சொல்லி இருப்பது போல தங்க நகை எந்த கடையிலும் எப்ப வேணும்னாலும் வாங்கிக்கலாம்.

    ReplyDelete
  63. பொக்கிஷங்கள் பெற்றமைக்கு வாழ்த்துகள்!!! என்னிடம் இதுபோல உறவினர்கள் நண்பர்கள் பலர் எழுதிய கடிதங்கள் இன்றும் உள்ளன.

    ReplyDelete
  64. பாட்டியின் விமர்சனக் கடிதம் மிக பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் தான்! அனைத்தும் அருமை! வாழ்த்துகள்!

    ReplyDelete