என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 10 மார்ச், 2013

வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !!


இட்லி / தோசைக்குத் 
தொட்டுக்கொள்ளும் 
காரசாரமான 
மிளகாய்ப்பொடி

By வை. கோபாலகிருஷ்ணன்


இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த பிறகு அவற்றிற்கு தொட்டுக்கொள்ள வேண்டி தேங்காய்ச்சட்னி, தக்காளி காரச்சட்னி, வெங்காய சாம்பார் போன்றவைகள் ஏதாவது செய்ய வேண்டியுள்ளது. 

அதுபோல சப்பாத்தி செய்தால் ஏதாவது ஒரு கூட்டு,  தால், குருமா சென்னா போன்ற ஏதாவது ஒன்றும், பூரி செய்தால் மஸாலும் தொட்டுக்கொள்ள வேண்டி தனியே செய்ய வேண்டியுள்ளது.

இந்தத்தொட்டுக்கொள்ள என செய்யப்படும் பதார்த்தங்கள் செய்ய தனித்தனியே சில பொருட்கள் தேவைப்படுவதுடன், அதைப் பொறுமையாகச் செய்ய நேரமும் ஒதுக்க வேண்டியுள்ளது.

இதுபோல அவ்வபோது சிற்றுண்டிகள் செய்யும் போது, தொட்டுக்கொள்ள வேண்டி தனியே ஒன்று கஷ்டப்பட்டு செய்வதைத்தவிர்க்க, இரண்டு அல்லது மூன்று  மாதங்களுக்கு ஒருமுறை காரசாரமான “தோசை மிளகாய்ப்பொடி” என்பதை செய்து வைத்துக்கொண்டால், செளகர்யமாக இருக்கும். 

முறைப்படி பக்குவமாக செய்யப்படும் ’தோசை மிளகாய்ப்பொடி’, நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும்.  வாய்க்கும் எள்ளின் வாசனையுடன் மிகுந்த சுவையாகவும், ருசியோ ருசியாகவும் இருக்கும். 


எண்ணெயில் குழைத்த இந்த காரசாரமான மணம் மிகுந்த ’தோசை மிளகாய்ப்பொடி’ தொட்டுக்கொள்ள இருந்தால், இட்லியோ தோசையோ வாய்க்கு அலுத்துப்போகாமல், மேலும் இரண்டு தின்னலாம் போல ஓர் பேரெழுச்சியை ஏற்படுத்தும்.


 

பயணம் செல்வோர்,  மிளகாய்ப்பொடி + எண்ணெய் நன்றாகக் குழைத்த கலவையில், மிருதுவான இட்லிகளை இரண்டு பக்கமும் நன்றாகப் பதித்து தோய்த்து,  பார்ஸலாக எடுத்துச்சென்றால், நன்றாக அவை ஸ்பாஞ்ச் போல ஊறிக்கொண்டு மிகுந்த சுவையாக இருக்கும்.  


 

காரம் அதிகம் தேவைப்படாதவர்கள் ஒருசில இட்லிகளை மட்டும் மிளகாய்ப்பொடி தடவாமல் எடுத்துச்செல்ல வேண்டும். கூடவே கொஞ்சம் சர்க்கரையையும் எடுத்துச்செல்லலாம். 

காரம் அதிகம் தேவைப்படுபவர்கள், இட்லியின் இருபுறமும் தடவியது போக, தனியாகக் கொஞ்சம் மிளகாய்ப்பொடி + எண்ணெய் எடுத்துச்செல்வது பயணத்திற்கு மிகவும் ஏற்றது.      

அடிக்கடி வெறும் இட்லியை தின்று தின்று அலுத்துப்போனவர்களுக்கு, இதுபோன்ற மிளகாய்ப்பொடி + எண்ணெய்க்கலவையில் தோய்த்து ஊறவைத்த இட்லியை, சாப்பிட்டுப்பார்த்தால் மட்டுமே, அதிலுள்ள சுவர்க்கலோக சுகம் என்னவென்று தெரியவரும்.

இட்லிக்கு மட்டுமல்ல, தோசை, அடை, சப்பாத்தி, பூரி போன்ற எல்லா சிற்றுண்டிகளுக்குமே, தொட்டுக்கொள்ள இந்த மிளகாய்ப்பொடி என்பதன் ஜோடிப்பொருத்தம்  மிகவும் சிறப்பாக சுவையாக மணமாக இருக்கக்கூடும். 

இதைச் செய்வதும் எளிது. ஒருமுறை மட்டும் செய்து வைத்துக்கொண்டால், நீண்ட நாட்கள் சுமார் 2-3 மாதங்கள் ஆனாலும் கெடாமல் அப்படியே இருக்கும்.

அன்றாடம் தொட்டுக்கொள்ள என்று வேறு ஒரு சட்னியோ, சாம்பாரோ, கூட்டோ, மஸாலோ, குருமாவோ, சென்னாவோ செய்ய வேண்டிய தொல்லை இருக்காது 

இப்போது மிளகாய்ப்பொடி தயாரிக்கத் தேவையான பொருட்கள் பற்றிச் சொல்கிறேன். 

1] மிளகாய் வற்றல் 150 கிராம் 
    [காம்புகளை நீக்கி விடவும்]

2] கடலைப்பருப்பு    100 கிராம்

3] உடைத்த வெள்ளை 
    உளுத்தம்பருப்பு   100 கிராம்

4] வெள்ளை எள்ளு  150 கிராம்

5] கட்டிப்பெருங்காயம் 20 கிராம்

6] தரமான சமையல் எண்ணெய் 50 முதல் 100  கிராம் வரை

7] உப்பு  5 சிறிய ஸ்பூன் அளவு மட்டும் 

செய்முறை:

1] வறுத்தல்: 

வாணலியில் எண்ணெயை  ஊற்றி அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பெருங்காயக் கட்டியைப்போட்டு, துளைகள் உள்ள நீண்ட கரண்டியால் அதை அப்படியே புரட்டிப்புரட்டி விடவும். நன்கு பொறிந்து எலந்தவடை போல வரும் போது எடுத்துத்தனியே ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.


அடுப்பை சிம்ரனில் வைத்து [அதாவது அடுப்பை சிம்மில் ரன் செய்து] அதே எண்ணெயில், கொஞ்சம் கொஞ்சமாக மிளகாய் வற்றலை வறுத்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் சேமித்துக்கொள்ளவும். மிளகாய் வறுக்கப்பட வேண்டும் ஆனால் சிவப்பு நிறம் மாறி , கறுத்துக் கருகிப்போய்விடக்கூடாது.  


அடுத்ததாக [மிளகாய் வறுத்தபின் வாணலியில் உள்ள எண்ணெய் முழுவதையும் வடித்து விட்டு, துணியால் துடைத்துவிட்டு] எண்ணெய் ஏதும் இல்லாத காலியான வாணலியில் கடலைப்பருப்பையும் உளுத்தம்பருப்பையும் நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.  


அதே போல சுத்தமான வெள்ளை எள்ளையும் தனியே வறுத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, எள்ளு இவை சிவக்க வறுபட்டால் போதும். ஆனால் எதுவுமே ஒரேயடியாக கருகிவிடக்கூடாது. 

[கல் + மண் இல்லாத சுத்தமான வெள்ளை எள்ளோ அல்லது கருப்பு எள்ளோ பயன் படுத்தலாம். அது போல சுத்தமானதாகக் கிடைக்காவிட்டால், கிடைத்த எள்ளை நன்கு கழுவிவிட்டு, களைந்து விட்டு, துணியில் வடிகட்டிப் பிழிந்து விட்டு, அதன் பிறகு அவற்றைத் வறுத்துக்கொள்ளலாம். ]




எண்ணெயில் வறுக்கப்பட்ட மிளகாய்வற்றல் 


எண்ணெயில் வறுத்த மிளகாய் வற்றல் +
எண்ணெய் இல்லாமல் வறுக்கப்பட்ட
இருவித பருப்புகள் + வெள்ளை எள்ளு


வறுக்கப்பட்ட 
கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு


வறுக்கப்பட்ட வெள்ளை எள்ளு +
எண்ணெயில் பொறிக்கப்பட்ட பெருங்காயம்



2] அரைத்தல்:

A] 

வறுத்து வைத்துள்ள மிளகாய் வற்றலுடன் உப்பைச்சேர்த்து, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாகும் வரை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அந்த மிளகாய் வற்றல் + உப்பு சேர்ந்த கலவைப் பொடியினை தனியே எடுத்து வைக்கவும்.

B] 

இப்போது வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு + எள்ளு + எலந்தவடை போல பொறிந்துள்ள பெருங்காயம் இவற்றை, கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு, சற்றே கைக்கு நறநறப்பாக இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.  

அதாவது வறுத்த இரண்டு பருப்புக்கள், பொறித்த பெருங்காயம், வறுத்த எள்ளு  எல்லாமே அரைகுறையாக மிக்ஸியால் அரைக்கப்பட்டிருந்தால் போதுமானது. மிகவும் நைஸ் ஆக பவுடராக அரைபட வேண்டியது இல்லை.
  
இப்போது அரைத்து வைத்துள்ள [A] and [B] கலவைகளை ஒன்றாகச் சேர்த்து, ஈரம் படாமல் ஒரு சுத்தமான பாட்டிலில் போட்டு இறுக்கி மூடி வைத்தால், முடிந்தது வேலை.

[மேலும் கொஞ்சம் உப்பு தேவைப்படுபவர்கள் அவ்வப்போது ஒரு சிட்டிகை உப்பையும் இந்த தோசை மிளகாய்ப்பொடியுடன்  சேர்த்துக்கொள்ளலாம்.]

வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், மேலே கூறியுள்ள [A] + [B] கலவையை ஒன்றாக சேர்த்துக் கலக்கும் முன்பு, [B] கலவை அதிகமாகவும்  [A] கலவையைக் கொஞ்சமாகவும் தனியே எடுத்துக் கலந்து வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கென்று   தனியாக பரிமாறலாம். 

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பார்களேயானால் A : B கலவையை 1 : 5  என்ற விகிதத்தில் கலந்து குழந்தைகளுக்கென்று தனியாக வேறு ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். [அதாவது சின்னக்குழந்தைகளுக்கு அதிக காரம் வேண்டாம் என்பதற்காக]

பெரியவர்களுக்கு A : B கலவை சரிக்குச்சரி 1 : 1  என்ற விகிதத்திலேயே கலந்து வைத்துக்கொள்ளலாம். அதுதான் வாய்க்கு நல்ல விறுவிறுப்பாக காரசாரமாக இருக்கும்.  எண்ணெயுடன் குழைத்து சாப்பிடுவதால் நல்ல மணமாகவும் இருக்கும்.

பெரும்பாலான குழந்தைகள் இந்தப்பொடியை இட்லிக்குத் தோய்த்து சாப்பிட மிகவும் விரும்புவது உண்டு. எங்கள் வீட்டுக்குழந்தைகள், பேரன் பேத்தி போன்றவர்கள், 2 அல்லது 3 வயதிலிருந்தே, வெறும் இட்லி + சர்க்கரை + தயிர் என்றால் விரும்பி சாப்பிடவே வர மாட்டார்கள். 

”இட்லி, பொடி, ஆயில்” தரட்டுமா என்றால் உடனே ஓடி வந்து சாப்பிட உட்காருவார்கள். 

அவர்களுக்காகவே காரம் குறைவாக பருப்பு மேலிட தனி மிளகாய்ப்பொடி கலந்து வைத்து விடுவது உண்டு.







அவ்வப்போது  டிபன் ஐட்டம்ஸ்களுக்கு, ஒரிரு ஸ்பூன் எடுத்துப்போட்டு, எண்ணெயைக்கொஞ்சம் விட்டு குழைத்துக் கொண்டு, இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு  சாப்பிட வேண்டியது தான். சூப்பராக சுவையாக இருக்கும்.

 




oooooOooooo

பின்குறிப்பு

என் வீட்டில் தயாரிக்கும் தோசை மிளகாய்ப்பொடி பற்றிய செய்முறை விளக்கம் அளிக்குமாறு, இதுவரை பலர் தங்கள் பின்னூட்டங்கள் மூலமும் மெயில் மூலமும் என்னை வற்புருத்தி வந்துள்ளனர். 

இதோ ஒருசிலரின் வேண்டுகோள்கள்:

[1]



தோசைமிளகாய்ப்பொடி ரெஸிபி 

போஸ்ட் செய்ய மாட்டீர்களா?



[2]



ஒர் உதவி வேண்டும் சார்! 

தோசை மிளகாய் பொடி, 

உங்கள் வீட்டு ஸ்பெஷல் ரெசிபி, 

எப்போது பதிவிட உத்தேசம். ? 



[3]


http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

அடையைப் பற்றிய ஒவ்வொரு வரியும் 
அட அட என வியத்தகு வண்ணம் உள்ளது.

அடை மொழியுடன் கூடிய வர்ணனை
தங்களிடம் அடைக்கலம் ஆகி விட்டது .

அடைப் புளித்தால் ருசி.
உங்கள் எழுத்து புளிக்காமலேயே தனி ருசி.

மிளகாய் பொடியுடன் கூடிய படம்

ஒன்று இணைக்கவும்.


அவர்களுக்காகவே இந்த என் விறுவிறுப்பான காரசாரமான பதிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 

oooooOooooo


ஓர் முக்கிய அறிவிப்பு

”பொக்கிஷம்” 

என்ற தலைப்பில்
தொடர்பதிவு எழுத 
இதுவரை என்னை இருவர்
அழைத்துள்ளனர்.

அந்த என் பதிவு
வரும் 15.03.2013 
வெள்ளிக்கிழமையன்று 
வெளியிடப்பட உள்ளது.

என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்

189 கருத்துகள்:

  1. அடடா, ஐயாவின் பதிவில் காரசாரம் . மிகவும் அருமை ஐயா . எனக்கு ரொம்ப பிடித்தது இட்லி
    மிளகாய்பொடி. பதிவில் வண்ணபடங்கள் அனைத்தும் அருமை ஐயா. ம்ம்ம்ம் சூப்பர்........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VijiParthiban March 10, 2013 at 5:27 AM

      வாருங்கள், வணக்கம். நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

      இந்தப்பதிவுக்கு தாங்கள் முதல் வருகை தந்துள்ளது எனக்கு மேலும் மகிழ்சியளிக்கிறது.

      //அடடா, ஐயாவின் பதிவில் காரசாரம் . //

      இதற்கு முன்பு நான் வெளியிட்டுள்ள என் பதிவின் கடைசியில் சொல்லியுள்ளதைத் தாங்கள் பார்க்கவில்லையா?

      மிகவும் விறுவிறுப்பான காரசாரமான பதிவு என்று எச்சரிக்கையே கொடுத்திருக்கிறேனே! ;)

      //மிகவும் அருமை ஐயா . எனக்கு ரொம்ப பிடித்தது இட்லி மிளகாய்பொடி. //

      ரொம்ப சந்தோஷம்.

      //பதிவில் வண்ணபடங்கள் அனைத்தும் அருமை ஐயா. ம்ம்ம்ம் சூப்பர்........//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ’ம்ம்ம்ம் ... சூப்பர்’ என்ற சூப்பரான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.

      நீக்கு
  2. இட்லி பொடி இருந்தால் தோசை அடை இட்லி பருப்ப்டை , மைதா தோசை அனைத்துக்கும் பொருந்தும்

    நான் காரம் குறைத்து தான் செய்வது

    குழந்தைகளுக்கு சிவப்பு மிளகாய்க்கு பதில் , மிளகு + கொஞ்சம் பாதம் சேர்த்து கொண்டால் நல்லது
    நாம் வீட்டில் இட்லி பொடி தான் நான் விரும்புவது.

    உங்கள் செய்முறை + விளக்கம் அருமை.சூப்பரோ சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal March 10, 2013 at 5:43 AM

      வாருங்கள், வணக்கம்.

      ஆம், கோதுமை தோசை, மைதா தோசை போன்றவற்றிற்கு இந்த மிளகாய்ப்பொடி இருந்தால் தான், விறுவிறுப்பாக இருக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  3. வாவ்.... இந்த மிளகாய்ப் பொடி இருந்தால் ஒரு டசன் இட்லி சர்வ சாதாரணமாய் உள்ளே போகுமே! :)

    இங்கே மிளகாய்ப் பொடிக்கு ஒரு பெயர் உண்டு - Gun Powder! :)

    கார சாரமாய் ஒரு பதிவு. இப்பவே மிளகாய்ப் பொடி போட்டு தோய்த்த ஒரு டசன் இட்லி சாப்பிட ஆசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் March 10, 2013 at 5:58 AM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //இங்கே மிளகாய்ப் பொடிக்கு ஒரு பெயர் உண்டு - Gun Powder! :)//

      ஆஹ்ஹாஹ்ஹா அருமையான பெயர் தான். ;)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  4. சமையல் குறிப்பு மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Avargal Unmaigal March 10, 2013 at 6:07 AM

      வாங்கோ அன்புத்தம்பி, வணக்கம்.

      //சமையல் குறிப்பு மிக அருமை//

      அன்பான வருகை + அருமையான கருத்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. தலைப்பே மிளகாய்பொடியின் சுவையை சொல்லுகின்றதே.முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான ஐயராத்து இட்லிப்பொடி.கலரையும்,கொற கொரவென்று அரைத்து சாட்சாத் அசல் இட்லி பொடி இதுதான் என்று அடித்து கூறுகிரது.இனி எங்கள் வீட்டிலும் இந்த முறை இட்லி பொடிதான் .பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா March 10, 2013 at 7:39 AM

      தங்களின் அன்பான வருகைக்கும், சாக்ஷாத் அசல் ;))))) கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  7. பொடி பற்றி அருமையான பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

    வெள்ளரிக்காயில் வெறும் மிளகுப்பொடிக்குப்பதிலாக இந்த பொடியை தொட்டு சாப்பிடுவது வழக்கம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 10, 2013 at 7:45 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      //பொடி பற்றி அருமையான பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..//

      சந்தோஷம்.

      //வெள்ளரிக்காயில் வெறும் மிளகுப்பொடிக்குப்பதிலாக இந்த பொடியை தொட்டு சாப்பிடுவது வழக்கம் ..//

      அதுவும் ஜோராக ருசியாக நல்லாத்தான் இருக்கும். ;)))))

      நீக்கு
  8. ”இட்லி, பொடி, ஆயில்” தரட்டுமா என்றால் உடனே ஓடி வந்து சாப்பிட உட்காருவார்கள். //

    பொடியை விரும்பாத பொடியன்கள் உண்டா என்ன?

    இந்தபொடியை விரும்பிச்சாப்பிடுவதாலேயே அவர்களுக்குப் பொடியன்கள் என்று பெயர்வந்த்தோ என்னவோ ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 10, 2013 at 7:47 AM

      *****”இட்லி, பொடி, ஆயில்” தரட்டுமா என்றால் உடனே ஓடி வந்து சாப்பிட உட்காருவார்கள்.*****

      //பொடியை விரும்பாத பொடியன்கள் உண்டா என்ன?//

      என் பேரனை “சிவா, வா ... இட்லி சாப்பிடலாம்” என்று என்னவள் கூப்பிடுவாள். உடனே அவன் “யெஸ் பாட்டி, டோண்ட் ஸே இட்லி அலோன், ப்ளீஸ் டெல் மீ ’இட்லி பொடி ஆயில்’ ” என்பான்.’

      பொடி ஆயிலுக்காக மட்டுமே இட்லி சாப்பிடுபவன் அவன். ஒரே சிரிப்பு தான், அவனுடன்.

      //இந்தப்பொடியை விரும்பிச்சாப்பிடுவதாலேயே அவர்களுக்குப் பொடியன்கள் என்று பெயர்வந்ததோ என்னவோ ..!//

      இருக்கலாம். நல்ல நகைச்சுவை தான், இட்லி பொடி ஆயில் போலவே, தங்கள் ஸ்டைலில். ;)))))

      நீக்கு
  9. இட்லி மிளகாய் பொடி சூப்பரோ சூப்பர்..வத்தல் அதிகம் போல.. காரம் காதை பிடிக்குதுங்ணா..:p

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ராணி March 10, 2013 at 7:50 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இட்லி மிளகாய் பொடி சூப்பரோ சூப்பர்..//

      சந்தோஷம்.

      //வத்தல் அதிகம் போல.. காரம் காதை பிடிக்குதுங்ணா..:p//

      அப்படியாம்மா. அப்போ நீங்க கொஞ்சம் குறைவாகவே எடுத்துகோங்கோ ..... ப்ளீஸ்..

      வத்தலாக இருந்தாலும் குண்டாக இருந்தாலும் காது ரொம்ப முக்கியம் தான். ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நகைச்சுவையான கொஞ்சல் மொழிக் கருத்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்ம்மா.

      நீக்கு
  10. அடிக்கடி வெறும் இட்லியை தின்று தின்று அலுத்துப்போனவர்களுக்கு, இதுபோன்ற மிளகாய்ப்பொடி + எண்ணெய்க்கலவையில் தோய்த்து ஊறவைத்த இட்லியை, சாப்பிட்டுப்பார்த்தால் மட்டுமே, அதிலுள்ள சுவர்க்கலோக சுகம் என்னவென்று தெரியவரும்.

    வழக்கமாக செய்யும் பொடியில் சொக்குப்பொடியும் தூவி அருமையாக சுவையாக அளித்த ருசியான பொடிக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 10, 2013 at 7:50 AM

      *****அடிக்கடி வெறும் இட்லியை தின்று தின்று அலுத்துப்போனவர்களுக்கு, இதுபோன்ற மிளகாய்ப்பொடி + எண்ணெய்க்கலவையில் தோய்த்து ஊறவைத்த இட்லியை, சாப்பிட்டுப்பார்த்தால் மட்டுமே, அதிலுள்ள சுவர்க்கலோக சுகம் என்னவென்று தெரியவரும்.*****

      //வழக்கமாக செய்யும் பொடியில் சொக்குப்பொடியும் தூவி அருமையாக சுவையாக அளித்த ருசியான பொடிக்குப் பாராட்டுக்கள்.//

      சொக்குப்பொடி தூவிய அருமையான சுவையான ருசியான தங்களின் கருத்துக்களும், பாராட்டுக்களும் அப்படியே என்னைச் சொக்க வைத்துவிட்டதாக்கும். ;)))))

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் பொடியின் மணத்தைப் பரப்புகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 10, 2013 at 7:52 AM

      //படங்கள் அனைத்தும் பொடியின் மணத்தைப் பரப்புகின்றன..//

      தங்களின் அன்பான வருகையும், மிக அழகான தாமரை மணம் பரப்பும் நான்கு கருத்துரைகளும், இந்த என் பதிவினைப் பெருமைப் படுத்துவதாக உணர்கிறேன்.

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  12. ஆஹா!
    மிளகாய் பொடியில் தோய்த்த இட்லி, தோசை பசியைக் கிள்ளுகிறது, கோபு ஸார்!

    சிலர் இதில் எள்ளு சேர்ப்பதில்லை. ஆனால் சேர்த்தால்தான் ருசி.

    இதைதான் காரசாரமான பதிவு என்றீர்களா? பிரமாதம்.
    இட்லி, மிளகாய்பொடி, சுடச்சுட நுரை பொங்கும் எங்க ஊரு கோத்தாஸ் காபி... சூப்பர் காம்பினேஷன்!

    பொக்கிஷம் பதிவுக்குக் காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan March 10, 2013 at 8:06 AM


      வாங்கோ, மேடம். வணக்கம். செளக்யமா நல்லா இருக்கீங்களா?

      //ஆஹா! மிளகாய் பொடியில் தோய்த்த இட்லி, தோசை பசியைக் கிள்ளுகிறது, கோபு ஸார்!//

      எனக்கும் தான். பெங்களூர் விஜயநகர் இந்த்ரபிரஸ்தா ஏ.ஸி. ரெஸ்டாரண்ட் மாடி ஞாபகமாகவே இருக்கிறது. ;)

      //சிலர் இதில் எள்ளு சேர்ப்பதில்லை. ஆனால் சேர்த்தால்தான் ருசி.//

      எள்ளு சேர்க்கச்சொன்னால் எள்ளி நகையாடுகிறார்களோ?

      சிலர் எள்ளுக்கு பதிலாக பொட்டுக்கடலையைச் சேர்ப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

      யாரோ எதையோ அவரவர் விருப்பப்படி சேர்த்துக்கொள்ளட்டும்.
      நமக்கென்ன?

      நாம் காரசாரமாக இதே முறையில் செய்து சாப்பிடுவோம்.

      //இதைதான் காரசாரமான பதிவு என்றீர்களா?//

      இல்லையா பின்னே? பார்த்தாலே, படித்தாலே விறுவிறுப்பாகவும், காரசாரமாகவும், கண்ணிலும், நாக்கிலும் நீர் வரவழைப்பதாகவும் உள்ளதா? இல்லையா? நீங்களே சொல்லுங்கோ.

      //பிரமாதம்.//

      சந்தோஷம்.

      //இட்லி, மிளகாய்பொடி, சுடச்சுட நுரை பொங்கும் எங்க ஊரு கோத்தாஸ் காபி... சூப்பர் காம்பினேஷன்!//

      அடடா, நுரை பொங்கும் உங்க ஊரு கோத்தாஸ் காஃபி வேறா? ;) நான் எப்போ வரட்டும்?

      //பொக்கிஷம் பதிவுக்குக் காத்திருக்கிறேன்!//

      நிச்சயமாகவே அது மிகப்பெரிய பொக்கிஷமாகவே இருக்கும்.

      சும்மா ‘சோப்பு, சீப்பு, கண்ணாடி’ பற்றியாக்கும்ன்னு நினைத்து அலட்சியமாக இருந்துடாதீங்கோ.;)

      அந்த என் பதிவினை பார்க்கவும், படிக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

      பார்த்து படித்து மகிழப்போகிறவர்கள் மட்டுமே அதிர்ஷ்டசாலிகளாக்கும் ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  13. rombavum suvaiyaaga irukkum polirukku! Padangaludan koodiya varnanai seimuraikku sulabamaaga irukkum! Nandri!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sandhya March 10, 2013 at 8:09 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ரொம்பவும் சுவையாக இருக்கும் போலிருக்கு. படங்களுடன் கூடிய வர்ணனை செய்முறைக்கு சுலபமாக இருக்கும். நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  14. மிளகாய்பொடி ரெசிபிக்கு நன்றி ஐயா . இதை படித்தவுடன் எனக்கு பழைய நியாபகம் வந்து விட்டது , சாரதாஸ் பின்புறம் இருந்த சைக்கிள் கடை வாசலில் ஒரு கையந்தி பவன் இருந்தது அதை ஒரு ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் நடத்தி வந்தார் ,மாலை எட்டு மணிக்குதான் வருவார்.இட்லி அருமையாக இருக்கும்.
    சாம்பார் கிடையாது சட்னிகள் மட்டும் தான் , இட்லி பொடி அதிக காரத்துடன் இருக்கும் தனியாக 25 பைசா (நான் சொல்வது 1993 இல் ) கொடுத்தால் இட்லி பொடிக்கு என்னையும் கொடுப்பார்கள் .
    அந்த நாள் நியாபகம் வந்ததே , அது ஒரு அருமையான காலம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜீம்பாஷா March 10, 2013 at 8:14 AM

      வாருங்கள், வணக்கம்.

      தாங்கள் சொல்லும் கடையை நானும் திருச்சியில் பார்த்துள்ளேன். ஆனால் சாப்பிட்டது இல்லை.

      அதே காலக்கட்டத்தில் [ஆனால் 1998] மதுரையில் படிப்பு விஷயமாக [Contact Seminar Class] 2-3 நாட்கள் தங்க நேர்ந்தது.

      அங்கேயும் நான் தங்கிய ராஜேஸ்வரி லாட்ஜ் அருகே, இது போலவே ஓர் சூடான இட்லிக்கடை. இரவு மட்டுமே வியாபாரம்.

      குட்டியூண்டு இன்ஜெக்‌ஷன் பாட்டில்கள் ரப்பர் கார்க் மூடி போட்டவை - அதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி நிறைய அடுக்கி வைத்திருந்தார்கள்.

      அதில் ஒரே ஒரு பாட்டில் + மிளகாய்ப்பொடி ரூபாய் 5 தனியாகத்தர வேண்டும் என்றார்கள்.

      இட்லி+சட்னி+சாம்பார் முதலியன நன்றாக சூடாக சுவையாக மிருதுவாக இருந்தன.

      ரூபாய் 10 கொடுத்து இதில் 2 பாட்டில்களும் வாங்கி திருப்தியாக சாப்பிட்டேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  15. வீட்டில் மி.பொ அரைத்து மாளவில்லை! அது இல்லாமல் சரிப்படுவதில்லை. ஒவ்வொருத்தர் வீட்டில் ஒவ்வொரு சதிவிகித அளவினால் ஒவ்வொரு ருசி. நாங்கள் ஒருமுறை காரம் அதிகமாக ஒருமுறைக் குறைவாக, ஒருமுறை நைசாக, ஒருமுறை என்று அரைப்போம்!

    புதிய டெம்ப்ளேட் வகையினால் படிப்பது மிகச் சிரமமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். March 10, 2013 at 8:27 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      நீக்கு
  16. மன்னிக்கவும். Refresh செய்ததும் பின்னணியில் இருந்து எழுத்துகளை மறைத்த தென்னை மரங்களைக் காணோம். இப்போது சரியாக இருக்கிறது. என் கணினியில்தான் கோளாறு போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். March 10, 2013 at 8:30 AM

      //மன்னிக்கவும். Refresh செய்ததும் பின்னணியில் இருந்து எழுத்துகளை மறைத்த தென்னை மரங்களைக் காணோம். இப்போது சரியாக இருக்கிறது. என் கணினியில்தான் கோளாறு போலும்.//

      மிக்க நன்றி, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      நீக்கு
  17. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

    // எண்ணெயில் குழைத்த இந்த காரசாரமான மணம் மிகுந்த ’தோசை மிளகாய்ப்பொடி’ தொட்டுக்கொள்ள இருந்தால், இட்லியோ தோசையோ வாய்க்கு அலுத்துப்போகாமல், மேலும் இரண்டு தின்னலாம் போல ஓர் பேரெழுச்சியை ஏற்படுத்தும்.//

    ஆஹா! சொல்லும்போதே நாவில் சுவை ஊறுகிறது. தின்னத் தின்ன ஆசை! திகட்டாத தோசை!

    // இப்போது மிளகாய்ப்பொடி தயாரிக்கத் தேவையான பொருட்கள் பற்றிச் சொல்கிறேன். .... ...செய்முறை: //

    எனக்கு உங்களைப் போல பொறுமையாக செய்ய வராது. அடுத்தவர்கள் வாய்க்கு ருசியாக செய்து வைத்ததை சாப்பிட்டுத்தான் பழக்க்கம்.

    (உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். இது ஒரு தகவலுக்காக மட்டும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ March 10, 2013 at 8:58 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //ஆஹா! சொல்லும்போதே நாவில் சுவை ஊறுகிறது. தின்னத் தின்ன ஆசை! திகட்டாத தோசை!//

      சந்தோஷம்.

      //எனக்கு உங்களைப் போல பொறுமையாக செய்ய வராது. //

      ஐயா, நான் ஒரு சோம்பேறி. இதெல்லாம் நானும் செய்வது இல்லை.

      என் வீட்டில் செய்வதைப் பார்த்து பதிவு மட்டும் கொடுத்துள்ளேன்.

      மனது வைத்தால் எதுவும் செய்யமுடியும் என்னால்.

      ஆனால் லேஸில் மனது வைக்க மாட்டேன்.

      மனமெல்லாம் எப்போதும் கணினியிலும், பதிவுகளிலும் மட்டும் அல்லவா உள்ளது.

      //அடுத்தவர்கள் வாய்க்கு ருசியாக செய்து வைத்ததை சாப்பிட்டுத்தான் பழக்க்கம்.//

      அதே அதே ... சபாபதே தான், என் நிலைமையும் இன்று.

      (உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். இது ஒரு தகவலுக்காக மட்டும்)

      மிக்க நன்றி ஐயா. இது விஷயத்தில் எனக்காக ஏதும் சிரமப்படாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.



      நீக்கு
  18. செம விறுவிறுப்பு+ருசி= மிளகாய்ப்பொடி :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதிச்சாரல் March 10, 2013 at 10:28 AM

      வாருங்கள் மேடம். வணக்கம்.

      //.செம விறுவிறுப்பு+ருசி= மிளகாய்ப்பொடி :-)//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ருசியான விறுவிறுப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  19. எங்க வீட்டில் மகள் மிகவும் விரும்பி சாப்பிடுவா ..இந்த ரெசிபி குறித்துக்கொண்டேன் ..மிக்க நன்றி அண்ணா ..

    அந்த தட்டும் அதிலுள்ள இட்லியும் பொடியும் ...சூப்பர் !!!!
    மேலும் மிளகாய் பொடியை நான் இட்லி உப்புமா செய்யும்போது மற்றும் தோசை சுடும்போது ஓர் பக்கம் அப்படியே தடவியும் வார்த்து சாப்பிடுவேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin March 10, 2013 at 10:33 AM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      //எங்க வீட்டில் மகள் மிகவும் விரும்பி சாப்பிடுவா ..இந்த ரெசிபி குறித்துக்கொண்டேன் ..மிக்க நன்றி அண்ணா ..//

      சந்தோஷம்மா.

      //அந்த தட்டும் அதிலுள்ள இட்லியும் பொடியும் ...சூப்பர் !!!!//

      மிக்க மகிழ்ச்சி.

      //மேலும் மிளகாய் பொடியை நான் இட்லி உப்புமா செய்யும்போது மற்றும் தோசை சுடும்போது ஓர் பக்கம் அப்படியே தடவியும் வார்த்து சாப்பிடுவேன் ...//

      சபாஷ்! ;)

      நீக்கு
  20. என் மகளுக்கு இந்த //மிளகாய் பொடி // என்ற பெயர் சிறு வயதில் சொல்ல வராது:))இட்லியை பொடியுடன் தொட்டு தொட்டு சாப்பிடுவதால் என் மகள் இட்லி பொடியை தொட்டு தொட்டு சைட் டிஷ் என்பாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin March 10, 2013 at 10:53 AM

      //என் மகளுக்கு இந்த //மிளகாய் பொடி // என்ற பெயர் சிறு வயதில் சொல்ல வராது:))இட்லியை பொடியுடன் தொட்டு தொட்டு சாப்பிடுவதால் என் மகள் இட்லி பொடியை தொட்டு தொட்டு சைட் டிஷ் என்பாள்//

      குழந்தைகளில் மழலையே நமக்கு மிகவும் மகிழ்வளிக்கும் ! ;)

      என் பேரன் சிவா “இட்லி பொடி ஆயில்” வேண்டும் என்பான்.

      பொடி + ஆயிலை அவன் தன் தட்டுக்கு அருகிலேயே வைத்துக் கொள்வான். அவ்வப்போது அவனே அவற்றை ஆர்வமாக எடுத்து எடுத்து போட்டுக்கொள்வான். ஐ வாண்ட் ஒன் மோர் இட்லி என கேட்பான். வேடிக்கையாக இருக்கும்.;)

      நீக்கு
  21. உங்க வீட்டு இட்லி,தோசை மிளகாய்ப் பொடி பகிர்வுக்கு நன்றி.இதனை புக் மார்க் செய்து கொள்கிறேன்,நானும் இந்த பொருட்கள் தான் சேர்த்து பொடிப்பேன்,கொஞ்சம் கருவேப்பிலை,பூண்டும் வறுத்து சேர்த்துக் கொள்வேன்.ஆனால் உங்க வீட்டு மிளகாய்ப்பொடி கலரும் செய்முறையும் அசத்தலாக பாரம்பரியத்துடன் இருக்கு.உடன் டிப்ஸ் சூப்பர்..மிக்க நன்றி விரைவில் இனி எங்க வீட்டு ஜாரிலும் இந்த பொடி இடம் பிடித்து விடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar March 10, 2013 at 11:20 AM

      வாருங்கள் மேடம், வணக்கம்.

      //உங்க வீட்டு இட்லி,தோசை மிளகாய்ப் பொடி பகிர்வுக்கு நன்றி. இதனை புக் மார்க் செய்து கொள்கிறேன்.//

      சந்தோஷம்.

      //நானும் இந்த பொருட்கள் தான் சேர்த்து பொடிப்பேன்,கொஞ்சம் கருவேப்பிலை,பூண்டும் வறுத்து சேர்த்துக் கொள்வேன்.//

      ஆஹா, அப்படியா, அருமை தான். மகிழ்ச்சி.

      //ஆனால் உங்க வீட்டு மிளகாய்ப்பொடி கலரும் செய்முறையும் அசத்தலாக பாரம்பரியத்துடன் இருக்கு.//

      ஆம். பாரம்பரியமிக்கதோர் தயாரிப்பு தான், சந்தேகமே இல்லை.

      //உடன் டிப்ஸ் சூப்பர்.//

      சந்தோஷம்.

      //மிக்க நன்றி விரைவில் இனி எங்க வீட்டு ஜாரிலும் இந்த பொடி இடம் பிடித்து விடும்..//

      மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவம் வாய்ந்த கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  22. ஆஹா! பொக்கிஷம் பகிர்வுக்கு வெயிட்டிங்...அது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar March 10, 2013 at 11:22 AM

      தங்களின் மீண்டும் வருகைக்கு நன்றி, மேடம்.

      //ஆஹா! பொக்கிஷம் பகிர்வுக்கு வெயிட்டிங்...அது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?//

      “பொக்கிஷம்” என்ற தலைப்பில் நான் எழுதப்போவது தங்களுக்காகவும் அல்லவா!

      அதனால் அதை நான் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் எழுத வேண்டும் என எண்ணியுள்ளேன். பார்ப்போம்.

      தங்களின் ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புக்கு என் நன்றிகள்.

      நீக்கு
  23. ஆஹா..ஆஹா... இம்முறை சமையல் குறிப்போ... விடுங்கோ விடுங்கோ இனிமெல் நாங்க(பெண்கள்:)) கிச்சின் டிப்பார்ட்மெண்ட்டை ஏலத்தில விடப்போறோம்ம்..:)) இனி எமக்கு அங்கென்ன வேலை...:)..

    இன்று படங்கள் பார்த்தேன் நாளைதான் பாடம் படிப்பேன்ன்.. அதன்பின்னரே கருத்துக்கள் வெளிவரும்.

    ஆனாலும் எனக்கொரு டவுட்டு... உந்தப் படமெல்லாம் கோபு அண்ணன் வீட்டுக் கிச்சினில் எடுத்ததா?:)).. இல்ல அந்த 3 ஜன்னல்களுக்கும் கீழே இருக்கும் சாப்பாட்டுக் கடைக் கிச்சினில் எடுத்ததா???:))...

    முருகா !!!!! வள்ளிக்கு வைரத்தோடு கன்ஃபோமாப் போடுவேன்ன் என்னைக் காப்பாத்திடப்பாஆஆஆஆஆஆ.....:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 10, 2013 at 1:14 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //இன்று படங்கள் பார்த்தேன் நாளைதான் பாடம் படிப்பேன்ன்.. அதன்பின்னரே கருத்துக்கள் வெளிவரும்.//

      உங்கள் மற்ற கருத்துக்களும் வந்து சேரட்டும்.

      இதற்கிடையில் உங்களுக்கு நான் அவ்சரப்பட்டு ஏதும் இப்போது பதில் தருவதாக இல்லை.

      ஒரு நாள் தனியாக ஒதுக்க வேண்டும். யோசித்து உஷாராக பதில் எழுத வேண்டுமாக்கும். ஹூக்க்க்க்க்க்க்கும். ;)))))

      நீக்கு
    2. நோஓஓஓஓஓஒ என் சந்தேகக் கேள்விகளுக்குப் பதில் தராவிட்டால், நான் ஹை கோர்ட்டுக்குப் போவேன்ன்ன்:).

      நீக்கு
    3. athira March 13, 2013 at 1:44 PM

      வாங்கோ அதிரா, தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //நோஓஓஓஓஓஒ என் சந்தேகக் கேள்விகளுக்குப் பதில் தராவிட்டால், நான் ஹை கோர்ட்டுக்குப் போவேன்ன்ன்:).//

      ஆஹா, நான் அதிராவிடம் இன்று, நல்லா மாட்டீஈஈஈஈஈஈ ;)))))

      நீக்கு
  24. ஆஹா இட்லிப்பொடியை பார்க்கும்போதே பசியை கிளப்புகிறதே...அதனையும் விளக்கமா சொல்லிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga March 10, 2013 at 1:43 PM

      வாருங்கள், வணக்கம்.

      //ஆஹா இட்லிப்பொடியை பார்க்கும்போதே பசியை கிளப்புகிறதே...அதனையும் விளக்கமா சொல்லிருக்கீங்க...//

      மிக்க சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      நீக்கு
  25. வாவ் எங்க வீட்டில் இதே ஸ்டைலில் தான் செய்வாங்க. என் அப்பா இட்லியை இட்லி பொடியில் நன்றாக் தோய்த்து அப்படியே டிபன் டப்பாவில் போட்டு குடுப்பார் அவரும் அப்படியே தான் சாப்பிடுவார், அதை பார்த்தாலே சாப்பிடாதவங்க கூட ட்ரை செய்வாங்க அந்த ஸ்டைல் இங்க பார்த்ததும் எனக்கு என் அப்பா நினைவு வந்துவிட்டது. இப்பவும் இதே போல் தான் எங்க வீட்டில் செய்து சாப்பிடுவோம். எங்க எல்லோருக்கும் சட்னியைவிட இட்லி மிளாகாய் பொடி (நல்ல காரம் வேண்டி) +நல்லெண்னயோடு சேர்த்து நல்ல பஞ்சு போன்ற இட்லியோடு சாப்பிட சொல்லவே வேண்டாம். ( இங்கு என் குழந்தைகளுக்கு நிங்க சொல்வது போல் நிற்ய்ய பருப்புகளோடு சேர்த்து செய்வேன். எங்களுக்கு என்று தனியே காரமாக செய்வதும். உண்டு நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Vijiskitchencreations March 10, 2013 at 3:59 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வாவ் எங்க வீட்டில் இதே ஸ்டைலில் தான் செய்வாங்க. என் அப்பா இட்லியை இட்லி பொடியில் நன்றாக் தோய்த்து அப்படியே டிபன் டப்பாவில் போட்டு குடுப்பார் அவரும் அப்படியே தான் சாப்பிடுவார், அதை பார்த்தாலே சாப்பிடாதவங்க கூட ட்ரை செய்வாங்க அந்த ஸ்டைல் இங்க பார்த்ததும் எனக்கு என் அப்பா நினைவு வந்துவிட்டது. இப்பவும் இதே போல் தான் எங்க வீட்டில் செய்து சாப்பிடுவோம். எங்க எல்லோருக்கும் சட்னியைவிட இட்லி மிளாகாய் பொடி (நல்ல காரம் வேண்டி) +நல்லெண்னயோடு சேர்த்து நல்ல பஞ்சு போன்ற இட்லியோடு சாப்பிட சொல்லவே வேண்டாம். ( இங்கு என் குழந்தைகளுக்கு நிங்க சொல்வது போல் நிற்ய்ய பருப்புகளோடு சேர்த்து செய்வேன். எங்களுக்கு என்று தனியே காரமாக செய்வதும். உண்டு நல்ல பதிவு. //

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான, அனுபவபூர்வமான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  26. அன்பின் வை.கோ - அருமையான பதிவு - மொளகாய்ப் பொடி தயாரிப்பது எப்படி - புத்தக வெளீயீடு எப்போது ? 1000 பிரதிகள் - வெளீயிட்டவுடன் அள்ளிக் கொண்டு சென்றிடுவர். முயல்க

    வெண்ணீலவைத் தொட்டு முத்தமிட ஆசை - மிளகாய்ப்பொடி கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆசை - எது முதலில் ? முத்தமிட்ட பின்னர் மிளகாய்ப் பொடியா ? பொடியுடன் முத்த்மிட ஆசையா ? இதில் நடு நடுவே சிம்ரன் வேறு. கலக்கறீங்க போங்க ..

    செய்முறை இத்தனை விளக்கமாக - சிறு சிறு தகவல்களைக் கூட விடாமல் எழுதி அனுபவித்து ஆனந்தித்து நேயர் விருப்பம் நிறைவேற்றி இருக்கிறீர்கள்.

    பெர்ஃபெக்‌ஷன் - நுண்னீயமாக செய்முறை அளித்த்முறை நன்று.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) March 10, 2013 at 6:41 PM

      அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வாருங்கள், வணக்கம்.

      //அன்பின் வை.கோ - அருமையான பதிவு - மொளகாய்ப் பொடி தயாரிப்பது எப்படி - புத்தக வெளீயீடு எப்போது ? 1000 பிரதிகள் - வெளீயிட்டவுடன் அள்ளிக் கொண்டு சென்றிடுவர். முயல்க//

      புத்தக வெளியீடுகளில் எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது, ஐயா. ஏற்கனவே மூன்று புத்தக்ங்கள் வெளியிட்டு நிறைய அனுபவங்கள் உள்ளன.

      [எனக்கென்னவோ அது ஓர் வெட்டிவேலையாகத் தோன்ற ஆரம்பித்து விட்டது]

      //வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை - மிளகாய்ப்பொடி கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆசை - எது முதலில் ? முத்தமிட்ட பின்னர் மிளகாய்ப் பொடியா ? பொடியுடன் முத்த்மிட ஆசையா ? இதில் நடு நடுவே சிம்ரன் வேறு. கலக்கறீங்க போங்க ..//

      ;))))) இதெல்லாம் ஓர் ஜாலியான MOOD ஐப்பொருத்தது ஐயா! ;)))))

      //செய்முறை இத்தனை விளக்கமாக - சிறு சிறு தகவல்களைக் கூட விடாமல் எழுதி அனுபவித்து ஆனந்தித்து நேயர் விருப்பம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். //

      மிக்க மகிழ்ச்சி ஐயா.

      //பெர்ஃபெக்‌ஷன் - நுண்ணியமாக செய்முறை அளித்தமுறை நன்று.//

      எதிலும் அதிகமாக PERFECTION கொடுக்கத்தான் நான் எப்போதும் மிகவும் ஆசைப்படுவேன்.

      இருப்பினும் வரவர அதற்கெல்லாம் மனம் இருந்தும் உடல் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை, ஐயா..

      //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான, அனுபவபூர்வமான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  27. பதில்கள்
    1. cheena (சீனா) March 10, 2013 at 6:41 PM

      அன்பின் ஐயா, தங்களின் வாழ்த்துகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  28. அந்த நாள் ஞாபகம்
    நெஞ்சிலே வந்ததே
    நண்பனே நண்பனே...

    இந்த நாள் அன்றுபோல்
    இன்பமாய் இல்லையே
    அது ஏன் நண்பனே .....நண்பனே

    மல்லிகைபூ போல் வெண்ணிறம் கொண்டு
    (அந்த காலத்தில் இருந்த ஒரு இட்டிலியின் அளவு
    இந்த கால 4 இட்டிலிகளுக்கு சமம்)
    மிருதுவாக விளங்கும் மென்மையான இட்டிலிக்கு
    மங்கள குங்குமம் இடுவதுபோல்
    குங்கும நிறம் கொண்ட மிளகாய் பொடி
    தொட்டுக்கொண்டால் நான் சுமார்
    10 இட்லிகளை உள்ளே தள்ளுவேன்.

    கண்ணில் மிளகாய்பொடி
    தூவும் கயவர்கள் மத்தியில்
    அந்த மிளகா பொடியின் மகிமையை
    அதை சுவைத்து அறியாத சாப்பாட்டு
    பிரியர்களுக்கு கொண்டு சென்றமைக்கு நன்றி.

    அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன்
    நல்லெண்ணெய்(செக்கில் ஆடியது)
    (அதன் மணமே தனி)விட்டு மிளகாய் பொடியை
    அதில் கலந்து எண்ணையுடன் சேர்த்து சாப்பிட
    இன்னும் சுவையாய் இருக்கும்
    (பாவம் இந்த கால மக்களுக்கு அந்த பாக்கியம் இல்லை)

    அதுவும்மிளகாய் பொடியை
    நைசாக அரைக்காமல் அதில் பருப்புகள்
    ஒன்றும் பாதியுமாக இருந்தால்
    இன்னும் சூப்பராக இருக்கும்.

    பொடி இல்லாமல் வெறும் நெய் (அந்த காலத்தில் தயிரை மத்தைபோட்டு கடைந்து வெண்ணெய் எடுத்து மண் சட்டியில் முருங்கை இலைகளை போட்டு காய்ச்சி எடுத்த நெய்யாக இருக்க வேண்டும்.)இட்டிலிமேல்ஊற்றி அதை குளிப்பாட்டி விண்டு விண்டு வாயினுள்ளே தள்ளுவது ஒரு சுகம் அதன் மணமே அலாதி. .

    (இந்தக்கால டால்டா வாசனையுடைய
    வயிற்றை குமட்டும் நெய் அல்ல) அல்லது
    நல்லெண்ணெய் விட்டுக்கொண்டு
    சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்

    சாம்பாரில்இட்டிலியை போட்டவுடன் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலப்பதைபோல் இட்டிலி கலந்துவிடும்.

    (இந்த கால இட்டிலிகளை பிளக்க
    இரண்டு ஸ்பூன்கள் தேவைப்படுகிறது)
    அப்படியும் பிளக்கும்போது
    ஒன்றிரண்டு துண்டுகள் தட்டிலிருந்து
    தவளைபோல் எகிறி குதித்து ஓடிவிடும்.

    பிறகு அதில் 2 ஸ்பூன் நெய் விட்டு
    கலக்கி அடித்தால் அதன் மகிமையே தனி.

    என்ன செய்வது?

    போனது போனதுதான்.
    இனி மீண்டும் வராது.
    அந்த பசுமையான
    இனிமையானநினைவுகள் .

    வராத ஒன்றை மீண்டும்
    நினைவுக்கு கொண்டுவந்து
    அசைபோடுவதுதான்
    தற்போது என்னால் செய்ய இயலும்

    நான் கணினியை விட்டு எழும்போது
    தேவையற்றவற்றை delete செய்துவிட்டுதான்
    எழுந்திருப்பேன். ஆனால் என் மனதில்
    உள்ள இந்த இட்டிலிமிளகாய் பொடி
    நினைவுகள் அப்படியே இருக்கின்றன.
    அவைகளை அழிக்க மனம் வரவில்லை.

    பாராட்டுக்கள் -
    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman March 10, 2013 at 7:01 PM

      வணக்கம் சார், வாங்கோ வாங்கோ !

      பதிவைவிட மிகப்பெரிய பின்னூட்டங்கள் தர என்றே பிறவி எடுத்தவர்களாக நாங்கள் சிலர் இருக்கிறோம்.

      நீங்க எங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவீர்களோ, என அஞ்சி நடுங்கத்தான் வேண்டியுள்ளது.

      ”பரமாத்மாவான இட்லி தோசையுடன், ஜீவாத்மாவான இந்த மிளகாய்ப்பொடி சேர்ந்ததும், இதற்கும் காரசாரம் என்ற அகந்தை கொஞ்சம் கொஞ்சமாக அகன்று, ஸத்வ குணம் ஏற்பட்டு விடுகிறது” என்று ஏதாவது சொல்வீர்களோ என நான் எதிர் பார்ட்த்தேன்.

      இருப்பினும் அதையே வேறு மாதிரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

      மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

      என்னை என் படைப்புகளை உங்களுக்கு ’அழிக்க மனம் வரவில்லை’ என்பது நான் செய்த ஏதோ ஒரு பாக்யமாகவே நினைக்கிறேன்.

      //பாராட்டுக்கள் - VGK//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான, அனுபவபூர்வமான, ஆத்மார்த்தமான, அசத்தலான பல கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
    2. நீங்க எங்களையெல்லாம்
      தூக்கி சாப்பிட்டு விடுவீர்களோ,
      என அஞ்சி நடுங்கத்தான் வேண்டியுள்ளது.

      எதற்க்காக அஞ்ச வேண்டும்.?

      அய்யா நான் உங்கள் எதிரியல்ல
      நான் ஒரு உதிரிதான்

      என்னை எதிர்கொள்பவர்கள்
      எல்லாம் வாலிகளாக(இராமாயண வாலி)இருப்பதால்
      நான் இதுபோன்று வலைமூலம் தான்
      (இராமாயண ராமன் போல்) மறைந்து
      அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது
      வேறொன்றுமில்லை.

      உங்களின் திறமைக்கு முன்
      என்னால் நிற்க முடியாது

      ஏனென்றால் எழுத ஆரம்பித்தவுடன்.
      என் சிந்தனை வேலை செய்யாது.

      கட கடவென்று கொட்டி தீர்த்து விடும்.
      கோடை மழை போல.

      நீங்களும் ஆன்மீகத்தில் புலி.
      நான் வெறும் புளி

      அதை சுவையாக ஆக்க உங்களைபோன்ற
      தேர்ந்த சமையற்காரர்களுக்கு தான் முடியும்.

      உங்கள் பதிலே அதற்க்கு சான்று. .

      நீக்கு
    3. ;)))))

      எதிரி - உதிரி

      திரு. பட்டாபி ராமன் அவர்கள், இராமாயணத்தில் வாலியை எதிர்கொள்ள அஞ்சிய ஸ்ரீராமனைப்போல வலையுலகில் ஒளிந்து / மறந்து உள்ளார்.

      புலி - புளி

      அடடா, அழகிய சொல்லாடல்கள். மிகவும் ரஸித்தேன்.

      ஆனாலும் மிகிவும் சாதாரணமானவனான என்னால் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் இயலவில்லை

      தன்னடக்கம் மிகுந்த தங்களுக்கு முன்னால் நானெல்லாம் சும்மா!

      ;)))))

      //அதை சுவையாக ஆக்க உங்களைபோன்ற தேர்ந்த சமையற்காரர்களுக்கு தான் முடியும். உங்கள் பதிலே அதற்குச் சான்று. .//

      EMPTY VESSELS MAKE MUCH NOISE என்பார்கள்.

      ’குறைகுடம் கூத்தாடும்’ என்ற அது எனக்கு மட்டுமே பொருந்தும், ஸ்வாமீ.

      நிறைகுடம் தளும்பாது என்பதற்கு நீங்களே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்பேன்.

      நீக்கு
    4. ஆனாலும் மிகிவும் சாதாரணமானவனான என்னால் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் இயலவில்லை

      சாதாரணமானவர்களிடம்தான்
      அசாத்தியமான திறமைகள்
      ஒளிந்துகொண்டிருக்கும் என்பதை நான் அறிவேன்.

      தன்னடக்கம் மிகுந்த தங்களுக்கு முன்னால் நானெல்லாம் சும்மா!

      எல்லாம் வாழ்க்கையில்
      அனுபவங்கள் கற்றுக்கொடுத்த
      பாடங்கள்.
      யாரிடம் என்ன சரக்குள்ளது
      என்பது அவர்கள் வெளிப்படுத்தும்
      வரை தெரியாது .
      அதனால்தான் எச்சரிக்கையாக
      செயல்படவேண்டிய சூழ்நிலை
      உள்ளது இவ்வுலகில்.

      EMPTY VESSELS MAKE MUCH NOISE என்பார்கள்.

      noises will make a beautiful music
      at the hands of a good composer.

      ’குறைகுடம் கூத்தாடும்’ என்ற அது எனக்கு மட்டுமே பொருந்தும், ஸ்வாமீ.

      நான் எல்லாவற்றையும் ரசிப்பேன் .
      ஏனெனில் அதிலும் ஒரு அழகு இருக்கிறது.

      நிறைகுடம் தளும்பாது என்பதற்கு நீங்களே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்பேன்.

      நான் வெறும் காலி டப்பா .
      அதில் விழுபவைகளை அவ்வப்போது
      எடுத்து வலையில் போடுகிறேன்.
      அவ்வளவுதான்.

      நீக்கு
  29. வலைச்சரம் கமெண்ட்டில் பாராட்டியதற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bagawanjee KA March 10, 2013 at 8:39 PM

      வாருங்கள், வணக்கம்.

      //வலைச்சரம் கமெண்ட்டில் பாராட்டியதற்கு நன்றி !//

      தங்களின் அன்பான வருகைக்கும், நன்றிக்கும் என் இனிய நன்றிகள்.

      நீக்கு
  30. மிளகாய் பொடி ரெசிபி சூப்பர் .

    உங்கள் மிளகாய் போட்டியில் தோய்த்த இட்லிகள பார்த்தால் நாவில் எச்சில். ஊறுகிறதே..
    இந்த மிளகாய் பொடி தொட்டுக் கொள்ள இருந்தால் ஒரு அரை டசன் இட்லிக்கு குறைவில்லாமல் உள்ளே செல்லும் என் நினைக்கிறேன்.

    இந்த மிளகாய் பொடி ரெசெபியை இப்பொழுது தான் புதிதாக கற்றுக் கொள்வது போல் படித்துக் கொண்டே இருந்தேன்

    அத்தனை சுவாரஸ்யமாக இருந்தது வைகோ சார்.
    உங்கள் பொக்கிஷம் பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam March 10, 2013 at 8:45 PM

      வாருங்கள், வணக்கம்.

      //மிளகாய் பொடி ரெசிபி சூப்பர் .//

      சந்தோஷம்.

      //உங்கள் மிளகாய் போட்டியில் தோய்த்த இட்லிகள பார்த்தால் நாவில் எச்சில். ஊறுகிறதே..//

      அடடா, அப்படியா? மிக்க மகிழ்ச்சி.

      //இந்த மிளகாய் பொடி தொட்டுக் கொள்ள இருந்தால் ஒரு அரை டஜன் இட்லிக்கு குறைவில்லாமல் உள்ளே செல்லும் என் நினைக்கிறேன். //

      ஆமாம். வழக்கமாக நாம் சாப்பிடுவதைவிட, ஒரு அரை டஜன் கூடுதலாகவே .... ;)))))

      //இந்த மிளகாய் பொடி ரெசெபியை இப்பொழுது தான் புதிதாக கற்றுக் கொள்வது போல் படித்துக் கொண்டே இருந்தேன். அத்தனை சுவாரஸ்யமாக இருந்தது வைகோ சார். //

      ஹைய்ய்ய்ய்ய்ய்யோ ! ரொம்பத்தான் பாராட்டுகிறீங்கோ. ;) கேட்கவே எனக்குக் கொஞ்சம் கூச்சமாக உள்ளது.

      //உங்கள் பொக்கிஷம் பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். //

      அவசியம் படிக்க வேண்டியதோர் “பொக்கிஷப்பகிர்வாகவே” அது தங்களுக்கு இருக்ககூடும். தங்களின் ஆவலுக்கு என் நன்றிகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான, ஆத்மார்த்தமான, அசத்தலான பல கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  31. இட்லி பொடி குறிப்பு மிகவும் பிரமாதம். தஞ்சை, குடந்தை ஸ்பெஷலே இது தான்! மிருதுவான இட்லிகளுக்கு முதலில் சாம்பார், சட்னி, கடைசியில் இரண்டு இட்லிகளுக்காவது நல்லெண்ணெய் குழைத்து இந்த இட்லிப்பொடியைத் தொட்டு சாப்பிடாவிட்டால் நிறைய பேருக்கு சாப்பிட்ட திருப்தி வரவே வராது! இட்லிக்கு பொடியா அல்லது பொடிக்கு இட்லியா என்று சந்தேகம் வந்து விடும்!!

    இதைப்பற்றி ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம்!

    கப் அளவுகளில் இதைக் கொடுக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் March 10, 2013 at 8:45 PM

      வாருங்கள், வணக்கம்.

      //இட்லி பொடி குறிப்பு மிகவும் பிரமாதம். தஞ்சை, குடந்தை ஸ்பெஷலே இது தான்! //

      சந்தோஷம். மிகச்சரியாகவே சொல்லிவிட்டீர்கள்.

      //மிருதுவான இட்லிகளுக்கு முதலில் சாம்பார், சட்னி, கடைசியில் இரண்டு இட்லிகளுக்காவது நல்லெண்ணெய் குழைத்து இந்த இட்லிப்பொடியைத் தொட்டு சாப்பிடாவிட்டால் நிறைய பேருக்கு சாப்பிட்ட திருப்தி வரவே வராது! //

      ஆமாம். உண்மை தான். நானும் அத்தகைய ரஸிகர்களில் ஒருவன் தான்.

      //இட்லிக்கு பொடியா அல்லது பொடிக்கு இட்லியா என்று சந்தேகம் வந்து விடும்!!//

      கரெக்ட். சூப்பராச்சொல்லிட்டீங்க ;))))).

      //இதைப்பற்றி ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம்! //

      அவசியமாக எழுதுங்கோ. நீங்கள் எழுதினால் தான் சுவை மேலும் அதிகரிக்கக்கூடும்.

      //கப் அளவுகளில் இதைக் கொடுக்க முடியுமா?//

      முயற்சிக்கிறேன். முடிந்தால் மெயில் மூலமோ அல்லது அலைபேசி மூலமோ தகவல் தருகிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான, ஆத்மார்த்தமான, அசத்தலான பல கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

      நீக்கு
  32. அய்யா வணக்கம் , தங்கள் கூரியுள்ள பொருட்களுடன் கறிவேப்பிலை சேர்த்தால் சுவை இன்னும் கூடும் என்பது எனது அனுபவம் . நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Gnanam Sekar March 10, 2013 at 8:53 PM

      வாருங்கள், வணக்கம்.

      //ஐயா வணக்கம் , தாங்கள் கூறியுள்ள பொருட்களுடன் கறிவேப்பிலை சேர்த்தால் சுவை இன்னும் கூடும் என்பது எனது அனுபவம் . நன்றி//

      தாரளமாக ... அவரவர் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் தான்.

      ஆனால் நாங்கள் எங்கள் வீட்டில் வேறு எதுவும் சேர்ப்பது இல்லை.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      நீக்கு
  33. எண்ணெயில் குழைத்த இந்த காரசாரமான மணம் மிகுந்த ’தோசை மிளகாய்ப்பொடி’ தொட்டுக்கொள்ள இருந்தால், இட்லியோ தோசையோ வாய்க்கு அலுத்துப்போகாமல், மேலும் இரண்டு தின்னலாம் போல ஓர் பேரெழுச்சியை ஏற்படுத்தும்.//

    உண்மை நீங்கள் சொல்வது. கோதுமை தோசைக்கு பொடி நல்ல கூட்டு.


    எங்கள் ஊர் பக்கம்(திருநெல்வேலி) வீட்டில், ஓட்டல்களில், கல்யாணவீடுகளில் கண்டிப்பாய் சாம்பார், சட்னி என்று எத்தனை தொட்டுக் கொள்ள இருந்தாலும் ,எண்ணெய் குழைத்த மிளகாய் பொடி பரிமாறப்படும்.


    இப்போது வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு + எள்ளு + எலந்தவடை போல பொறிந்துள்ள பெருங்காயம் இவற்றை, கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு, சற்றே கைக்கு நறநறப்பாக இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும். //

    மிளகாய் பொடியின் முக்கிய குறிப்பு நற நறப்பாக இருப்பது.
    அருமையாக சொன்னீர்கள். பெருங்காய்ம் பொரியும் போது எப்படி இருக்கும் என்பதை அழகாய் சொன்னீர்கள்.


    எங்கள் வீட்டிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மிளகாய் பொடி தடவிய இட்லி எடுத்து செல்வார்கள். டெல்லி பேத்தி இட்லி கொண்டு போகும் நாளில் அவள் வகுப்பு ஆசிரியருக்கு சகதோழிகளுக்கு அதிகபடியாக மிளகாய் பொடி இட்லி எடுத்துப் போக வேண்டும்.
    பொடி எப்படி செய்கிறீர்கள் என்று ஆச்சிரியமாக கேட்பார்கள்.

    //பயணம் செல்வோர், மிளகாய்ப்பொடி + எண்ணெய் நன்றாகக் குழைத்த கலவையில், மிருதுவான இட்லிகளை இரண்டு பக்கமும் நன்றாகப் பதித்து தோய்த்து, பார்ஸலாக எடுத்துச்சென்றால், நன்றாக அவை ஸ்பாஞ்ச் போல ஊறிக்கொண்டு மிகுந்த சுவையாக இருக்கும். //

    ரயில் பயணங்கள் போகும் போது மிளகாய் பொடி தடவிய இட்லி நீங்கள் சொல்வது போல் சுவையாக இருக்கும்.
    நாங்கள் டெல்லி போகும் போது ஒருமுறை இப்படி கொண்டு போனபோது அயல் நாட்டு பெண்மணி ஒருவர் அவர் கணவருடன் உடன் பயணம் செய்தார் அவருக்கு எங்கள் இட்லியை பார்த்து ஆசை அதைப்ப்ற்றி கேட்டார்கள் அந்த பெண் குழந்தை உண்டாகி இருந்தார்கள், இலை கொண்டு போய் இருந்தோம், இலையில் இரண்டு இட்லியை வைத்து கொடுத்த போது அவர்கள் மகிழ்ந்து உண்டு மீண்டும் கேட்டு வாங்கி உண்டது நம் பராம்பரிய உணவு பழக்கத்திற்கு நன்றி சொல்ல தோன்றியது.

    எதைப் பற்றி எழுதினாலும் சுவைபட எழுதுவது உங்கள் திறமை.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு March 10, 2013 at 8:55 PM

      வாருங்கள், வணக்கம்.

      //கோதுமை தோசைக்கு பொடி நல்ல கூட்டு.//

      ஆமாம். முறுகலாக வார்க்க வராத கோதுமை தோசைக்கு இது மிகவும் சிறந்த ஜோடிப்பொருத்தம் தான்.

      //மிளகாய் பொடியின் முக்கிய குறிப்பு நற நறப்பாக இருப்பது.
      அருமையாக சொன்னீர்கள். பெருங்காய்ம் பொரியும் போது எப்படி இருக்கும் என்பதை அழகாய் சொன்னீர்கள்.//

      என் வீட்டில் செய்யப்படும் பொடியின் தேவ ரகசியமே இது தான். அதை தாங்கள் மிகச்சரியாகச் சுட்டிக்காட்டிச் சொல்லியுள்ளீர்கள்.

      அந்தப்பெருங்காயம் பொரிந்து பூரிப்புடன் எலந்தவடைபோல ஆகி வருவதை அருகில் நின்று ஆசையுடம் பார்த்து மகிழ்பவன் நான்.

      //பொடி எப்படி செய்கிறீர்கள் என்று ஆச்சிரியமாக கேட்பார்கள்.//

      என்னிடம் என் அலுவலகத்தில் இதை நிறைய பேர்கள் கேட்டதுண்டு. நானும் சொன்னதுண்டு.

      1980 இல் வேலு என்ற ஒருவர் அதற்கான எல்லாப் பொருட்களையும் என் வீட்டில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு,
      மறுநாள் வந்து ஒரு மிகப்பெரிய பாட்டில் நிறைய ஆசையுடன் வாங்கிக்கொண்டு சென்றார்.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> திருமதி கோமதி அரசு [2]


      //ரயில் பயணங்கள் போகும் போது மிளகாய் பொடி தடவிய இட்லி நீங்கள் சொல்வது போல் சுவையாக இருக்கும். நாங்கள் டெல்லி போகும் போது ஒருமுறை இப்படி கொண்டு போனபோது அயல் நாட்டு பெண்மணி ஒருவர் அவர் கணவருடன் உடன் பயணம் செய்தார் அவருக்கு எங்கள் இட்லியை பார்த்து ஆசை அதைப்ப்ற்றி கேட்டார்கள் அந்த பெண் குழந்தை உண்டாகி இருந்தார்கள், இலை கொண்டு போய் இருந்தோம், இலையில் இரண்டு இட்லியை வைத்து கொடுத்த போது அவர்கள் மகிழ்ந்து உண்டு மீண்டும் கேட்டு வாங்கி உண்டது நம் பராம்பரிய உணவு பழக்கத்திற்கு நன்றி சொல்ல தோன்றியது.//

      இதைப்போன்ற ஓர் நிகழ்ச்சியை, நகைச்சுவையாக I Q TABLETS என்ற தலைப்பில் நான் எழுதியுள்ளேன். நேரமிருந்தால் பாருங்கோ.

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2012/02/i-q-tablets.html

      //எதைப் பற்றி எழுதினாலும் சுவைபட எழுதுவது உங்கள் திறமை. //

      சந்தோஷம். நன்றி.

      ஏதோ திறமையாகவும் சுவைபடவும் சொல்லியுள்ளீர்கள் ;)))))

      வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான, ஆத்மார்த்தமான, அசத்தலான பல கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

      நீக்கு
  34. மிக்ஸி எல்லாம் வருமுன்னே உரலில் போட்டு உலக்கையால்
    இடித்துத்தான் செய்ய முடியும். நிறைய பொடி செய்யும் போது,
    துளி புளியும் பிய்த்துப்போட்டு இடிப்பார்கள். உப்பு காரத்தை ஸமனாக்கிவிடும். வெல்லமும் உண்டு. இது அவரவர்கள் விருப்பம். ஸிக்ஸி வந்தபின் வேலை ஸுலபமாகி விட்டது.
    நல்லெண்ணெயும்,பொடியுமாகக் குழைத்து, இட்லியை இருபக்கமும் ஒற்றி எடுத்து டிபன் அனுப்பும் போது, ஜெனிவாவில் இரண்டு பங்கு டிபன் அனுப்பினாலும் போதுவதில்லை. எள்,பெருங்காய மணத்துடன் இட்லி அழகோ அழகு. நல்ல கார ஸாரமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi March 10, 2013 at 10:57 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரம்.

      //மிக்ஸி எல்லாம் வருமுன்னே உரலில் போட்டு உலக்கையால்
      இடித்துத்தான் செய்ய முடியும். நிறைய பொடி செய்யும் போது,
      துளி புளியும் பிய்த்துப்போட்டு இடிப்பார்கள். உப்பு காரத்தை ஸமனாக்கிவிடும். வெல்லமும் உண்டு. இது அவரவர்கள் விருப்பம். ஸிக்ஸி வந்தபின் வேலை ஸுலபமாகி விட்டது.//

      ஆஹா, அழகாகச் சொல்லியிருக்கிறீகள். அந்தக்காலத்தில் தான் குடும்பப்பெண்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள்! ;(

      மிக்ஸி, கிரைண்டர், குக்கர், கேஸ் அடுப்பு, வாஷிங் மெஷின் போன்றவை இன்றைய நவநாகரீகப் பெண்களுக்குக் கிடைத்துள்ள வ்ரப்பிரஸாதங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

      //நல்லெண்ணெயும்,பொடியுமாகக் குழைத்து, இட்லியை இருபக்கமும் ஒற்றி எடுத்து டிபன் அனுப்பும் போது, ஜெனிவாவில் இரண்டு பங்கு டிபன் அனுப்பினாலும் போதுவதில்லை. எள்,பெருங்காய மணத்துடன் இட்லி அழகோ அழகு. //

      அனுபவித்துச்சொல்லியுள்ளீர்கள், மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

      //நல்ல கார ஸாரமான பதிவு.//

      மிகவும் சந்தோஷம், மாமி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான, ஆத்மார்த்தமான, அசத்தலான பல கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மாமி.

      அநேக நமஸ்காரங்களுடன்,
      கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  35. மிளகாய்ப் பொடி செய்முறை குறிப்பு அருமை. எள் போடாமலும் பண்ணலாம். ஆனால் எங்க வீட்டில் தோசைக்கும், இட்லிக்கும் அதிகமாய்ச் சட்னி தான். தோசை என்றால் தக்காளி சட்னி, இட்லி என்றால் தேங்காய் சட்னி. எப்போதேனும் பயணத்துக்கு எடுத்துச் சென்றால் தான் மிளகாய்ப் பொடி. :)))) ஆனால் கையில் இருக்கும் எப்போதும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா, நம்ம டைப்பு! சட்னியுடையார் சலிப்படையார்.

      நீக்கு
    2. Geetha Sambasivam March 10, 2013 at 11:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மிளகாய்ப் பொடி செய்முறை குறிப்பு அருமை.//

      சந்தோஷம்.

      //எள் போடாமலும் பண்ணலாம். //

      ஆம். சிலர் எள்ளுக்கு பதிலாக பொட்டுக்கடலைகூட சேர்ப்பதாகக் கேள்விப்பட்டேன். அதெல்லாம் அவரவர் விருப்பம்.

      //ஆனால் எங்க வீட்டில் தோசைக்கும், இட்லிக்கும் அதிகமாய்ச் சட்னி தான். தோசை என்றால் தக்காளி சட்னி, இட்லி என்றால் தேங்காய் சட்னி.//

      ’சட்னி’ இல்லாவிட்டால் ’பட்னி’ என்னும் கட்சி தான் நானும்.

      இருப்பினும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சாம்பார், மிளகாய்ப்பொடி என பலவகைகள் இருந்தால் வகைக்கு இரண்டாக சாப்பிட வாய்க்கு ஒரு அலுப்பு இல்லாமல் இருக்கும்.


      //எப்போதேனும் பயணத்துக்கு எடுத்துச் சென்றால் தான் மிளகாய்ப் பொடி. :)))) ஆனால் கையில் இருக்கும் எப்போதும். :)))))//

      கேட்கவே சந்தோஷமாக உள்ளது. அதே அதே ... சபாபதே !!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான, ஆத்மார்த்தமான, அசத்தலான பல கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

      நீக்கு
  36. //இந்தக்கால டால்டா வாசனையுடைய
    வயிற்றை குமட்டும் நெய் அல்ல) //

    எங்க வீட்டில் இப்போதும் வீட்டில் எடுக்கும் வெண்ணெயில் காய்ச்சிய நெய்தான். சுவையும், மணமும் அருமையாக இருக்கும். வெளியில் வாங்குவதே இல்லை. :))))


    //(இந்த கால இட்டிலிகளை பிளக்க
    இரண்டு ஸ்பூன்கள் தேவைப்படுகிறது)
    அப்படியும் பிளக்கும்போது
    ஒன்றிரண்டு துண்டுகள் தட்டிலிருந்து
    தவளைபோல் எகிறி குதித்து ஓடிவிடும்.//

    ஹாஹா, பெரும்பாலும் இப்போதெல்லாம் குக்கரில் தட்டுக்களை அடுக்கி இட்லி வார்த்து முடிஞ்சது வேலைனு முடிச்சுடறாங்க. அதனால் இட்லி பீரங்கி மாதிரி ஆயிடுறது. நான் ஒரு முறை கூடக் குக்கரில் வைத்தது இல்லை. வெளிநாடு போனால் மட்டும் அங்கே உள்ள பாத்திரங்களோடு சரிசமம் செய்துக்கணும். வேறு வழி இல்லை. ஆனால் இங்கேயோ எப்போதுமே துணி போட்டுத்தான் இட்லி வார்ப்பேன். இன்றும், என்றும், எப்போதும். :)))) சீனாச் சட்டியில் அதுக்குனு உள்ள இட்லித் தட்டு அல்லது இட்லிக் கொப்பரையில். எதுவா ஆனாலும் துணிபோட்டுத் தான் இட்லி. இந்த இட்லி நல்ல மிருதுவாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  37. //அந்த காலத்தில் தயிரை மத்தைபோட்டு கடைந்து வெண்ணெய் எடுத்து//

    இப்போதும் மத்தினால் தான் கடைந்து வெண்ணெய் எடுக்கிறேன்.:))))

    பதிலளிநீக்கு
  38. இட்லிக்கு மிளகாய்ப் பொடி என்பது :

    1. சிவாஜிக்கு பத்மினி போல் ;

    2. எம்.ஜி.ஆர்.க்கு சரோஜா தேவி போல் ;

    3. ஜெமினி கணேஷுக்கு சாவித்திரி போல் ;

    4. ஏ.வி.ஏம் ராஜனுக்கு புஷ்பலதா போல்;

    5. எஸ்.எஸ்.ஆருக்கு விஜயகுமாரி போல்;

    6. கமலுக்கு ஸ்ரீதேவி போல்

    அவ்வளவு பொருத்தமாக இருக்கும் !!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேங்கப்பா. மூவாரு பலேஜோரு.

      நீக்கு
    2. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 10, 2013 at 11:42 PM

      வாருங்கள் ஸ்வாமீ, வணக்கம்.

      //இட்லிக்கு மிளகாய்ப் பொடி என்பது :

      1. சிவாஜிக்கு பத்மினி போல் ;
      2. எம்.ஜி.ஆர்.க்கு சரோஜா தேவி போல் ;
      3. ஜெமினி கணேஷுக்கு சாவித்திரி போல் ;
      4. ஏ.வி.ஏம் ராஜனுக்கு புஷ்பலதா போல்;
      5. எஸ்.எஸ்.ஆருக்கு விஜயகுமாரி போல்;
      6. கமலுக்கு ஸ்ரீதேவி போல்

      அவ்வளவு பொருத்தமாக இருக்கும் !!!!!//

      ஆஹா, அருமையான ஜோடிப்பொருத்தங்கள் தான், இட்லிக்கு தோசை மிளகாய்ப்பொடி போலவே.

      ஏனோ,

      மீனா, குமாரி சச்சு, கோவை சரளா போன்ற எனக்கு மிகவும் பிடித்த மேலும் சில நடிகைகள் மட்டும் என் கண்முன் ஒரு நிமிடம் வந்துபோனார்கள் [வெறும் மிளகாய்ப்பொடி போலவே]

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஒப்பீட்டுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    3. குஸ்பூவுக்கு பிரபுபோல..
      விஜய்க்கு சிம்....ரன் போல:)
      கார்த்திக்குக்கு தமனா போல:)

      வாணாம் நான் இதுக்குமேல தொடர விரும்பவில்லையாக்கும்:)

      நீக்கு
    4. ;))))) சந்தோஷம், அதிரா; அதாவது தாங்கள் மேற்கொண்டு தொடர விரும்பாமல் விட்டதற்கு, மட்டுமே.

      நீக்கு
  39. குறிப்புகளை வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் March 10, 2013 at 11:55 PM

      வாருங்கள், வணக்கம்.

      //குறிப்புகளை வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி ஐயா...//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், நன்றிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  40. தங்கள் நகைச்சுவை கலந்த குறிப்பில் மிளகாய்ப்பொடி பிரமாதம்....

    எங்க வீட்டிலும் தோசை மிளகாய்ப்பொடி அரைத்து மாளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்....:)

    ரோஷ்ணி 3 வயதிலிருந்தே இட்லி, தோசை, சப்பாத்திக்கு தோசை மிளகாய்ப்பொடி தான்...:) சப்பாத்தியின் மேல் எண்ணெயில் குழைத்த மிளகாய்ப்பொடியை தடவி ரோல் செய்து சாப்பிடுவாள். தில்லியில் பள்ளிக்கும் எடுத்துச் செல்வாள்.

    இட்லியை நான்கு துண்டுகளாக நறுக்கி மிளகாய்ப்பொடி தூவி ஃபார்க்கால் குத்தி சாப்பிடுவாள் பள்ளியில். ஆசிரியர்களுக்கும் பங்கு தர வேண்டும்...:))

    எள்ளைத் தவிர மீதியெல்லாவற்றையுமே நான் எண்ணெய் விட்டு வறுத்து விடுவேன். சிலர் வெல்லம் துளியும் சேர்ப்பார்கள்.. நான் சேர்ப்பதில்லை.

    ஆனால் எங்கள் வீட்டு மிளகாய்ப்பொடி அவ்வளவாக காரம் இருக்காது. அப்பாவுக்கும் மகளுக்கும் காரமே ஆகாது...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆசிரியர்களுக்கும் பங்கு தர வேண்டும்...:))
      இதென்ன புதுசா இருக்குதே? தராட்டி மார்க் கம்மி பண்ணுவாங்களா?

      நீக்கு
    2. கோவை2தில்லி March 11, 2013 at 12:21 AM

      //தங்கள் நகைச்சுவை கலந்த குறிப்பில் மிளகாய்ப்பொடி பிரமாதம்....//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவகக் கருத்துப் பகிர்வுகளுக்கும், பிரமாதன் என்ற பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //ஆனால் எங்கள் வீட்டு மிளகாய்ப்பொடி அவ்வளவாக காரம் இருக்காது. அப்பாவுக்கும் மகளுக்கும் காரமே ஆகாது...:))//

      சத்வகுணம் நிறைந்த ஸாத்வீகக் கணவரையும், மகளையும் அடைந்துள்ளீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க!

      நீக்கு
  41. மிளகாய்ப்பொடி குறிப்பு இத்தனை சுவாரசியமாகமாக இருக்கிறதே....

    என்னிடமும் மிளகாய்ப்பொடி தீர்ந்துவிட்டது.... இதனையே செய்து பார்க்கிறேன். நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. enrenrum16 March 11, 2013 at 12:25 AM

      வாங்கோ, என்றென்றும் 16 பானு அவர்களே! வணக்கம்.

      //மிளகாய்ப்பொடி குறிப்பு இத்தனை சுவாரசியமாகமாக இருக்கிறதே....//

      தங்களின் அன்பான வருகைக்கும் சுவாரஸ்யமான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //என்னிடமும் மிளகாய்ப்பொடி தீர்ந்துவிட்டது.... இதனையே செய்து பார்க்கிறேன். நன்றி சார்.//

      சந்தோஷமம்மா. தங்களின் நன்றிக்கு என் நன்றிகள்.

      நீக்கு
  42. மிளகாய்ப்பொடிக்கு வறுத்து வைத்தாலோ அரைத்துவைத்தாலோ அது இத்தனை அழகாக இருக்கும் என்று தெரியாமல் போச்சே. இனி அதை போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறேன். எள்ளு சேர்க்க விரும்பாதவர்கள் கொள்ளு சேர்க்கலாம் வாசனை ஒன்றானாலும் கொள்ளு உடல் கொழுப்பைக் குறைக்கும் இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி.சுவையான பதிவு. வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rukmani Seshasayee March 11, 2013 at 2:11 AM

      வாங்கோ, வணக்கம். நமஸ்காரங்கள்.

      //மிளகாய்ப்பொடிக்கு வறுத்து வைத்தாலோ அரைத்துவைத்தாலோ அது இத்தனை அழகாக இருக்கும் என்று தெரியாமல் போச்சே. இனி அதை போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறேன்.//

      எல்லாமே அழகு தான். நாம் ரஸித்துப்பார்த்தால் மட்டுமே அவை நமக்குப் புலப்படக்கூடும்.

      //எள்ளு சேர்க்க விரும்பாதவர்கள் கொள்ளு சேர்க்கலாம் வாசனை ஒன்றானாலும் கொள்ளு உடல் கொழுப்பைக் குறைக்கும்//

      அதிக குதிரை சக்தியும் [Horse Power] நமக்குக் கிடைக்குமோ? ;)))))

      //இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி.//

      பழமொழி மிகவும் அழகாக உள்ளது. மகிழ்ச்சி.

      ஏற்கனவே நான் கொழுத்தவனாக இருக்கிறேனே! எனக்கு எள்ளா? கொள்ளா? கொள்ளாகத்தான் இருக்க வேண்டும்.

      உடம்பு இளைக்க, கொள்ளை வறுத்து தொகையலாக ஆக்கி சாப்பிடச்சொன்னார், ஒருவர்.

      //சுவையான பதிவு. வாழ்த்துகள் நண்பரே.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, சுவையான பதிவு என்று வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்புடன் கூடிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  43. நிறைய பேர் காரசாரமாத்தான் சாப்பிடறாங்கன்னு தெரியுது..
    //10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பார்களேயானால் A : B கலவையை 1 : 5 என்ற விகிதத்தில் கலந்து குழந்தைகளுக்கென்று தனியாக வேறு ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். [அதாவது சின்னக்குழந்தைகளுக்கு அதிக காரம் வேண்டாம் என்பதற்காக]//- எனக்கும் சேர்த்து இப்படியே அரைச்சு வைங்க சார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு March 11, 2013 at 2:54 AM

      வாங்கோ, வணக்கம். நல்லா இருக்கீங்களா? முன்புபோல அடிக்கடி இங்கு காட்சி தருவதில்லை. பத்திரிகைகளில் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன். ரொம்ப ரொம்ப பிஸி எனத் தெரிகிறது. சந்தோஷம்.

      //நிறைய பேர் காரசாரமாத்தான் சாப்பிடறாங்கன்னு தெரியுது..//

      வாழ்க்கையில் ஒரு காரசாரம் இல்லாவிட்டால் எப்படி?

      *****10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பார்களேயானால் A : B கலவையை 1 : 5 என்ற விகிதத்தில் கலந்து குழந்தைகளுக்கென்று தனியாக வேறு ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். [அதாவது சின்னக்குழந்தைகளுக்கு அதிக காரம் வேண்டாம் என்பதற்காக]*****

      //எனக்கும் சேர்த்து இப்படியே அரைச்சு வைங்க சார்..//

      ஆகட்டும் தாயே அது போல நீங்க நினைச்சது நடக்கும் மனம்போலே!

      சின்னப்பப்பாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

      ஒரு பழமொழி சொல்லலாம்ன்னு நினைச்சேன். வேண்டாம். என்னை விட்டுடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      தங்களின் அன்பான + அபூர்வமான வருகைக்கும், மகிழ்வளிக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  44. //எண்ணெயில் குழைத்த இந்த காரசாரமான மணம் மிகுந்த ’தோசை மிளகாய்ப்பொடி’ தொட்டுக்கொள்ள இருந்தால், இட்லியோ தோசையோ வாய்க்கு அலுத்துப்போகாமல், மேலும் இரண்டு தின்னலாம் போல ஓர் பேரெழுச்சியை ஏற்படுத்தும்.//

    உண்மைதான் சார். இதை படிக்கும் பொழுதே சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது.


    எங்க வீட்டில் மிளகாய் பொடி அரைத்து மாளாது. இட்லி,தோசைக்கு மட்டுமில்லை அரிசி உப்புமாவுக்கும் மிளகாய் பொடிதான்.

    மிகவும் அருமையான செய்முறை.மிக்க நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI March 11, 2013 at 6:46 AM

      வாங்கோ, வணக்கம்.

      *****எண்ணெயில் குழைத்த இந்த காரசாரமான மணம் மிகுந்த ’தோசை மிளகாய்ப்பொடி’ தொட்டுக்கொள்ள இருந்தால், இட்லியோ தோசையோ வாய்க்கு அலுத்துப்போகாமல், மேலும் இரண்டு தின்னலாம் போல ஓர் பேரெழுச்சியை ஏற்படுத்தும்.*****

      //உண்மைதான் சார். இதை படிக்கும் பொழுதே சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது.//

      மிகவும் சந்தோஷம்.

      //எங்க வீட்டில் மிளகாய் பொடி அரைத்து மாளாது. இட்லி, தோசைக்கு மட்டுமில்லை அரிசி உப்புமாவுக்கும் மிளகாய் பொடிதான்.//

      நாங்கள் அரிசி உப்புமாவையே மிகவும் காரசாரமான செய்து விடுவோம். தேங்காயும் துருவி அதன் தலையில் போட்டு வ்டுவோம்.

      தொட்டுக்கொள்ள அதிகம் எதுவும் தேவைப்படாது.

      அதற்கு தயிர் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

      அதுவும் முதல் நாள் இரவு அரிசி உப்புமா செய்து மறுநாள் காலையில் சாப்பிட்டால் ஜோராக இருக்கும்.

      முன்பெல்லாம் என் அம்மா காலத்தில், வெங்கலப்பானையில் செய்வார்கள். அதில் வரும் ஒட்டல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

      இப்போது குக்கர் என்பதால் அடி ஒட்டுவதும் இல்லை. ஒட்டலும் வருவதில்லை. ;(((((

      //மிகவும் அருமையான செய்முறை.மிக்க நன்றி பகிர்வுக்கு.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவம் வாய்ந்த கருத்துப்பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  45. மிளகாய்ப்பொடி ரெசிபி நல்ல தித்திப்பா இருந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... March 11, 2013 at 7:26 AM

      வாருங்கள், வணக்கம்.

      //மிளகாய்ப்பொடி ரெசிபி நல்ல தித்திப்பா இருந்தது!//

      தங்களின் கருத்துரையில் வெல்லம் கலந்துள்ளது. அதனால் மட்டுமே எனக்கும் அது மிகவும் தித்திப்பாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், தித்திப்பான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  46. சுவையான பதிவு. ஆண்களுக்கு மிகவும் தேவையான தகவல்கள்.
    நீங்கள் ஒரு நளச்சக்கரவர்த்தி என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. T.N.MURALIDHARAN March 11, 2013 at 8:04 AM

      வாருங்கள், வணக்கம்.

      //சுவையான பதிவு. ஆண்களுக்கு மிகவும் தேவையான தகவல்கள்.//

      சந்தோஷம்.

      //நீங்கள் ஒரு நளச்சக்கரவர்த்தி என்பதில் ஐயமில்லை.//

      அதெல்லாம் ஒன்றும் கிடையாது சார். சுவையான பதார்த்தங்களை ரஸித்து சாப்பிட மட்டுமே தெரிந்தவன். ஜன்மா எடுத்துள்ளதே நாக்குக்கு ருசியாக சாப்பிட மட்டுமே என நினைப்பவன்.

      மற்றபடி நான் மிகவும் சாதாரணமானவனே. சமையலிலெல்லாம் எனக்கு அதிக அனுபவம் ஏதும் கிடையாது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  47. வணக்கம் சார். உங்க மிளகாய் பொடி ரெசிபி என் மகளுக்கு ரொம்ப பிடித்துப் போச்சு. பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பவித்ரா நந்தகுமார் March 11, 2013 at 10:02 AM

      //வணக்கம் சார். //

      வாருங்கள், வணக்கம். தங்களைப்பற்றி தங்கள் தோழி திருமதி உஷா அன்பரசு [வேலூர்] அவர்கள் என்னிடம் மிகவும் உயர்வாக ஒருநாள் கூறி மகிழ்ந்தார்கள்.

      //உங்க மிளகாய் பொடி ரெசிபி என் மகளுக்கு ரொம்ப பிடித்துப் போச்சு. //

      சந்தோஷம். மகளுக்குப் பிடித்ததால் தாய்க்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

      //பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  48. நீங்க கொடுத்திருக்குற அளவுல செஞ்சா ஒரு வருஷ சப்ளை கிடைக்கும் போலிருக்கே?

    சார்.. ஒரு டீஸ்பூன் எண்ணை 80-120 கேலொரி (மொத்தமும் கொழுப்பு). இதுல எண்ணையைக் குழைச்சு அடிக்கச் சொல்றீங்களே சார்? :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை March 11, 2013 at 11:47 AM

      வாருங்கள், வணக்கம்.

      //நீங்க கொடுத்திருக்குற அளவுல செஞ்சா ஒரு வருஷ சப்ளை கிடைக்கும் போலிருக்கே?//

      வறுத்த மிளகாய் வற்றலைப்பார்த்ததும் பயந்துட்டீங்களோ என்னவோ!

      மிக்ஸியில் அரைத்ததும், அது கப்சிப்புன்னு, கையளவாக அடங்கிப்போய் விடும் சார்.

      எங்கள் வீட்டுக்கு இந்த அளவு ஒரு மாதத்திற்கு மட்டும் தான் வருகிறது.

      //சார்.. ஒரு டீஸ்பூன் எண்ணை 80-120 கேலொரி (மொத்தமும் கொழுப்பு). இதுல எண்ணையைக் குழைச்சு அடிக்கச் சொல்றீங்களே சார்? :-)//

      ஏதோ இதுபோல குழைச்சு அடிச்சுக்கிட்டு தான் இருக்கிறேன்.

      எனக்கும் விளையாட்டுபோல 63 வயது ஆச்சு. SUGAR + PRESSURE என எல்லாம் என்னோடு மிகுந்த வாத்ஸல்யத்துடன் உறவாட ஆரம்பித்து விட்டன. உடல் எடையும் கூடத்தான் உள்ளது. அது தான் நேரிலேயே என்னைப் பார்த்து விட்டுப்போய் விட்டீர்களே.

      என்ன செய்வது? ஏதோ இருக்கும்வரை வாய்க்கு ருசியாக ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான எச்சரிக்கையூட்டும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  49. என் நண்பன் வீட்டில் மிளகாய்ப்பொடியில் கொஞ்சம் தேங்காய் போட்டு அரைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை March 11, 2013 at 11:48 AM

      //என் நண்பன் வீட்டில் மிளகாய்ப்பொடியில் கொஞ்சம் தேங்காய் போட்டு அரைப்பார்கள்.//

      இங்கும் என் உறவினர்கள் சிலர் அதுபோல செய்வதுண்டு. நானும் விரும்பி சாப்பிட்டுள்ளேன். அதைக் கொஞ்சமாகச்செய்து, ஒரு வாரத்திற்குள் செலவழித்து விடவேண்டும்.

      நீண்ட நாட்கள்: வைத்துக்கொள்ள அது சரிப்பட்டு வராது.

      தேங்காய் அதில் கலந்து இருப்பதால், ஊசிப்போனது போல ஒருவித வாடை வந்துவிடும்.

      நீக்கு
  50. ரெசிப்பி பார்த்து செய்தாச்சு :)) மிளகாய்பொடிரெடி எங்க வீட்டில் ..நாளைக்கு இட்லியுடன் சாப்பிட போறோம் ..

    அப்பாதுரை அவர்கள் சொன்னாற்போல நானும் கொஞ்சம் கொப்பரை / dessicated தேங்காய் சேர்த்தும் அரைத்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin March 11, 2013 at 1:45 PM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      //ரெசிப்பி பார்த்து செய்தாச்சு :)) மிளகாய்பொடிரெடி எங்க வீட்டில் ..நாளைக்கு இட்லியுடன் சாப்பிட போறோம் ..//

      சந்தோஷம். எள்ளுன்னா எண்ணெயாக இருப்பது என்பது இது தான் போலிருக்கிறது ;))))) வாழ்த்துக்கள், நிர்மலா.

      //அப்பாதுரை அவர்கள் சொன்னாற்போல நானும் கொஞ்சம் கொப்பரை / dessicated தேங்காய் சேர்த்தும் அரைத்தேன்//

      அது ஒரு விதமான டேஸ்ட் ஆக இருக்குமே தவிர, நீண்ட நாட்கள் வைத்து உபயோகிக்க முடியாது. ஒரு வாரம் மட்டுமே தாங்கும். அதன் பிறகு 'NEEDLE GONE' ஆகிவிடும். அதாவது ஊசிப்போகிவிடும்.

      அதிகமாக தயாரித்திருந்தால், திரு.அப்பாதுரை சாருக்கு அனுப்பி விடுங்கள். ;)))))

      நீக்கு
    2. ஓசில கொஞ்சம் டேஸ்டி மிளகாய்ப் பொடி கிடைச்சா சரிதான் :)

      நீக்கு
    3. நோஓஓஓஓஓஓஓஒ அஞ்சு நேக்கு அனுப்புவதாக வாக்குக் கொடுத்திட்டா.... ஆருக்கும் பங்கு கொடுக்கமாட்டேன்ன்ன்:)

      நீக்கு
    4. athira March 13, 2013 at 1:28 PM

      //நோஓஓஓஓஓஓஓஒ அஞ்சு நேக்கு அனுப்புவதாக வாக்குக் கொடுத்திட்டா.... ஆருக்கும் பங்கு கொடுக்கமாட்டேன்ன்ன்:)//

      உங்களுக்காச்சு, உங்கள் அஞ்சுவுக்காச்சு, திரு. அப்பாதுரை சாருக்கும் ஆச்சு.

      எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      ஏதோ கொஞ்சம் அய்யம்பேட்டை வேலை மட்டும் செய்துள்ளேனாக்கும்.

      அய்யம்பேட்டை வேலை என்றால் என்ன? என்ற விளக்கமான விபரம் நான் திரு. அப்பாதுரை சார் அவர்கள் அளித்துள்ள ஓர் பின்னூட்டத்திற்கு, நான் கொடுத்துள்ள என் பதிலில் உள்ளது.

      போய்ப்படிச்சுங்கோங்கோ அதிரா. இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

      நீக்கு
  51. இதைவிட விளக்கமாக டிவி பார்த்தும் நாங்கள் அறியமுடியாது. அவ்வளவு விளக்கம் . அருமை. இனி செய்து பார்ப்பதுதான் மிச்சம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரகௌரி March 11, 2013 at 1:54 PM

      வாருங்கள், வணக்கம்.

      என்ன இந்த என் காரசாரமானப் பதிவைப்படித்ததுமே ஒரேயடியா சிவந்து மிளகாய்ப்பழம் மாதிரி ஆகிட்டீங்க? ;)))))

      [புதிய போட்டோவில் உள்ள மாற்றத்தைப்பார்த்து சொல்கிறேன்]

      //இதைவிட விளக்கமாக டிவி பார்த்தும் நாங்கள் அறியமுடியாது. அவ்வளவு விளக்கம் . அருமை. இனி செய்து பார்ப்பதுதான் மிச்சம்//

      சந்தோஷம் மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  52. பூந்து விளையாடிய காலமும் உண்டு,. எண்ணெயும் ஆவதில்லை . காரமும் ஆவதில்லை:)
    உங்கள் பதிவின் படங்கள் கவர்ந்திழுத்தாலும் பார்த்தே களிக்கிறேன்
    மிக நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் March 11, 2013 at 8:17 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பூந்து விளையாடிய காலமும் உண்டு,//

      புகுந்து விளையாடிய காலம் ;) இது எல்லோருக்குமே உணடு.

      // எண்ணெயும் ஆவதில்லை . காரமும் ஆவதில்லை:)//

      ஆமாம். வரவர ஒன்றுமே ஆவதில்லை தான்.

      //உங்கள் பதிவின் படங்கள் கவர்ந்திழுத்தாலும் பார்த்தே களிக்கிறேன்//

      இப்போதெல்லாம் எதையும் பார்த்தே களிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் நாம் இருக்கிறோம், என்பதே உண்மை.
      .
      //மிக நன்றி கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான நிதர்ஸனமான, உண்மையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  53. ரொம்ப அருமையான போஸ்ட் சார்... எனக்கு இட்லி அவ்வளவா பிடிக்காது ஆனா உங்க போஸ்ட் பார்த்துட்டு மிளகாய்பொடி தொட்டு சாப்டனும் போல இருக்கு.... மறுபடியும் கலக்கிடீங்க... வாழ்த்துக்கள் :)
    http://recipe-excavator.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sangeetha Nambi March 11, 2013 at 11:19 PM

      வாருங்கள், வணக்கம்.

      //ரொம்ப அருமையான போஸ்ட் சார்... எனக்கு இட்லி அவ்வளவா பிடிக்காது //

      எனக்கும் இட்லி அவ்வளவாகப்பிடிக்காது. அது நல்ல சாஃப்ட் ஆக, மிருதுவாக, கையில் எடுத்தாலே புட்டுக்கொள்ளும் பதத்தில், ருசியாகவும் சூடாகவும் இருந்தால் மட்டுமே சாப்பிடுவேன். ஆறிப்போய் கருங்கல் போல இருந்தால் யாரால் தான் சாப்பிடமுடியும்?

      //ஆனா உங்க போஸ்ட் பார்த்துட்டு மிளகாய்பொடி தொட்டு சாப்டனும் போல இருக்கு....//

      சாப்பிடுங்கோ, தோசைக்கும் அது மிக நன்றாக இருக்கும்.

      அதற்கு ஒரிஜினலாக ’தோசை மிளகாய்ப்பொடி’ என்றே பெயர்.

      நாளடைவில் சிலர் இட்லி மிளகாய்பொடி என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

      //மறுபடியும் கலக்கிடீங்க... வாழ்த்துக்கள் :)
      http://recipe-excavator.blogspot.com//

      RECIPE-EXCAVATOR வாயால், கலக்கலான இந்தச்ச்சொற்களைக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      சந்தோஷம் மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  54. மிளகாப்பொடி ரெசிப்பியே நாக்கில ஜலம் வரவழைக்குது வை கோ சார்///எனக்கும் இது நன்றாக வரும்//கொஞ்சம் புழுங்கரிசி கைப்பிடி வெறும் வாணலில சிவக்க வறுத்து பொடிச்சி இதுல சேர்த்தா கூடுதல் மணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷைலஜா March 12, 2013 at 2:07 AM

      வாங்கோ, வணக்கம். அபூர்வ வருகை மகிழ்வளிக்கிறது.

      //மிளகாப்பொடி ரெசிப்பியே நாக்கில ஜலம் வரவழைக்குது வை.கோ சார்//

      ரொம்பவும் சந்தோஷம்

      //எனக்கும் இது நன்றாக வரும்//

      உங்களுக்குத்தான் இது நன்றாக வரும் ;)))))

      //கொஞ்சம் புழுங்கரிசி கைப்பிடி வெறும் வாணலில சிவக்க வறுத்து பொடிச்சி இதுல சேர்த்தா கூடுதல் மணம்!//

      கூடுதல் தகவலுடன் கருத்துரை அளித்துள்ளதே மணமாக உள்ளது.

      சந்தோஷம் மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  55. என்னாச்சு என் மிளகாப்பொடி கமெண்ட் வந்துதா இல்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷைலஜா March 12, 2013 at 2:18 AM

      வாங்கோ மீண்டும் வருகைக்கு நன்றிகள்.

      //என்னாச்சு என் மிளகாப்பொடி கமெண்ட் வந்துதா இல்லையா//

      அப்போதே வந்திடுச்சு போலிருக்கு. நான் தான் தொடர்ச்சியாக பின்னூட்டங்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டே இருந்ததால், மெயில் பார்த்து, PUBLISH கொடுக்க தாமதம் செய்துள்ளேன், போலிருக்கு. மன்னிக்கவும்.

      தங்களின் இரண்டாவது கமெண்ட், அதாவது “ என் மிளகாய்ப்பொடி கமெண்ட் வந்ததா இல்லையா?” என்பது மிகவும் காரமாக உள்ளது. ;))))) எனினும் நன்றியோ நன்றிகள்.

      நீக்கு
  56. suvayana post Gopu Sir. Description and photos make me drool. Yeah it is a dish which goes with most of the tiffin items of southindia. each household brings their own taste and flavour into the stuff. Enjoyed it very much Gopu sir. Thank you

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mira March 13, 2013 at 4:58 AM

      WELCOME MIRA, வாங்கோ, வணக்கம்.

      //suvayana post Gopu Sir. Description and photos make me drool. Yeah it is a dish which goes with most of the tiffin items of southindia. each household brings their own taste and flavour into the stuff. Enjoyed it very much Gopu sir. Thank you//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்..



      நீக்கு
  57. காரசாரமான மிளகாய்பொடி சுவையாக தந்துள்ளீர்கள். சாப்பிட அழைக்கின்றது.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி March 13, 2013 at 6:47 AM

      வாருங்கள், வணக்கம்.

      //காரசாரமான மிளகாய்பொடி சுவையாக தந்துள்ளீர்கள். சாப்பிட அழைக்கின்றது. பாராட்டுகள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்..
      .

      நீக்கு
  58. இட்லிப் பொடி ஊரில் அம்மா செய்து சாப்பிட்டது... இந்தப் பொடியில் நல்லெண்ணெய் கலந்து இட்லி சாப்பிடும் போது ரெண்டு இட்லி கூடப் போகும்...

    ஐயாவின் செய்முறைப்படி இங்கும் முயற்சித்துப் பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சே. குமார் March 13, 2013 at 9:45 AM

      வாருங்கள், வணக்கம்.

      //இட்லிப் பொடி ஊரில் அம்மா செய்து சாப்பிட்டது... இந்தப் பொடியில் நல்லெண்ணெய் கலந்து இட்லி சாப்பிடும் போது ரெண்டு இட்லி கூடப் போகும்...//

      ஆமாம். ரொம்பவும் சந்தோஷம்.

      //ஐயாவின் செய்முறைப்படி இங்கும் முயற்சித்துப் பார்க்கலாம்//

      முதன் முதலாகத் தனியே செய்வதாக இருந்தால் எல்லாப்பொருட்களின் அளவுகளையும் கொஞ்சமாக 1/3 எடுத்து செய்து பாருங்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  59. //இட்லி / தோசைக்குத்
    தொட்டுக்கொள்ளும்
    காரசாரமான
    மிளகாய்ப்பொடி//

    ஆச்சூஊஊஊஊம்.. ஆச்சூஊஊஊம்ம்ம்... இங்கு வந்தாலே தும்முதே.. அதெப்பூடி கோபு அண்ணன்... இவ்ளோ பெரிய அளவில செய்து வச்சிருக்கிறீங்க.. கண்படப்போகுது:)..

    இங்கின பதில் சொல்லியே களைச்சிருப்பீங்க என நினைக்கிறேன், இனி நானும் அதிகம் கேள்வி கேட்டு உங்களை அதிகம் களைக்க வைக்கப்போவதில்லை:) எனும் முடிவோடுதான் வந்திருக்கிறேன்ன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 13, 2013 at 1:30 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //இட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி//

      //ஆச்சூஊஊஊஊம்.. ஆச்சூஊஊஊம்ம்ம்... இங்கு வந்தாலே தும்முதே..//

      இரட்டைத்தும்மல் என்றால் நல்லது தான் என்பார்கள், அதிரா. தீர்க்காயுசு என்றும் சொல்வார்கள்.

      அதனால் உங்களுக்கு என்றென்றும் ஸ்வீட் சிக்ஸ்டீன் தான். கவலையை விடுங்கோ.

      //அதெப்பூடி கோபு அண்ணன்... இவ்ளோ பெரிய அளவில செய்து வச்சிருக்கிறீங்க..//

      பார்க்க ரொம்பப்பெரிசூஊஊஊஊஊஊஊஊ ஆகத்தான் தெரியும்.

      வறுத்து அரைத்து கையாண்டு உபயோகிக்கும் போது, கச்சிதமா அடக்கமாத்தான் இருக்கும்.

      // கண்படப்போகுது:)..//

      கண்பட்டால் நீங்க சொன்ன திருஷ்டிப்பூசணிக்காய் இருக்கவே இருக்கு.

      இன்னொன்று பெரிசூஊஊஊஊ ஆக வாங்கி உடைத்து, அதில் இந்த மிளகாய்ப்பொடியையே தடவி, முச்சந்தியில் வீசிட்டாப்போச்சு. ;)

      //இங்கின பதில் சொல்லியே களைச்சிருப்பீங்க என நினைக்கிறேன்//

      பதில் சொல்லவே களைப்பா? பின், நாம் பதிவராக எப்படி இருப்பது? அப்படியெல்லாம் நினைக்காதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      //இனி நானும் அதிகம் கேள்வி கேட்டு உங்களை அதிகம் களைக்க வைக்கப்போவதில்லை:) எனும் முடிவோடுதான் வந்திருக்கிறேன்ன்.//

      இதைக்கேட்கவே சந்தோஷமாக இருக்குது. “நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் .........” என்று பாடத்தோன்றுகிறது. ;)

      நீக்கு
    2. எனக்கொரு பகிடி நினைவுக்கு வருது.. என் கணவர் அடிக்கடி சொல்லிச் சிரிக்கும் பகிடி:))...

      அதாவது ஆரையாவது அழைக்கிறதாம், ”எங்கட வீட்டில பார்ட்டி இருக்கு.. நீங்க வாங்கோ”.. என.., உடனேயே சொல்லோணுமாம்....

      நீங்க வந்தால் ”சந்தோசம்”... வராட்டில் ”அதைவிடச் சந்தோசம்”... எனச் சொல்லோணுமாம்ம்ம் ஹா..ஹா..ஹா...

      அப்படித்தான் இருக்கு உங்கட பதில்...:))).. கேள்வி கேட்டால் சந்தோசம் கேளாட்டில் அதைவிடச் சந்தோசம்:)))

      நீக்கு
    3. நீங்க உடையுங்க.. மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன்ன்.. ஹா..ஹா..ஹா...:)

      நீக்கு
    4. athira March 14, 2013 at 11:44 AM

      //எனக்கொரு பகிடி நினைவுக்கு வருது.. என் கணவர் அடிக்கடி சொல்லிச் சிரிக்கும் பகிடி:))//

      பகிடி என்ற சொல் மட்டும் எனக்குப் புதுசா இருக்கு.
      மற்றபடி இது இங்கும் நாங்களும் சொல்லும் ‘பகிடி’ தான், ஆனால் வேறு மாதிரியாக.அதை சொல்கிறேன்....

      //அதாவது ஆரையாவது அழைக்கிறதாம், ”எங்கட வீட்டில பார்ட்டி இருக்கு.. நீங்க வாங்கோ”.. என.., உடனேயே சொல்லோணுமாம்....

      நீங்க வந்தால் ”சந்தோசம்”... வராட்டில் ”அதைவிடச் சந்தோசம்”... எனச் சொல்லோணுமாம்ம்ம் ஹா..ஹா..ஹா...//

      அருமை. நாங்கள் அவர்களிடமே இதை நேரில் சொல்ல மாட்டோம். அது நல்லா இருக்காது. எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.

      அதாவது இந்த ஃபங்ஷனுக்கும் இவர்களையெல்லாம் அழைத்திருக்கிறோம். இதில் பலரும் வருவார்கள். சிலர் மட்டும் வருவது சந்தேகம்.

      யார் யார் வருகிறார்களோ அவர்களுக்காக் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் சதிர் தேங்காய் அடிச்சிடுவோம்.

      வராதவர்களுக்காக இரண்டு இரண்டு தேங்காய் உடைச்சுடுவோம்.

      அதாவது வந்தால் ஒரு தேங்காய் - வராவிட்டால் இரண்டு தேங்காய்.

      //அப்படித்தான் இருக்கு உங்கட பதில்...:))).. கேள்வி கேட்டால் சந்தோசம் கேளாட்டில் அதைவிடச் சந்தோசம்:)))//

      ஆஹா அப்படியெல்லாம் சொல்லி வராமல் இருந்துடாதீங்கோ அதிரா. அப்புறம் நான் அழுதுடுவேனாக்கும்.

      ஏற்கனவே உங்க க்ரூப்பில் ஒருத்தங்க இந்த என் பதிவுப்பக்கமே இதுவரை வரக்காணோம்.

      ஆனால் மற்ற எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் போய்க்கிட்டே இருக்காங்கோ.

      நான் பொறுத்துப் பொறுத்துப்பார்ப்பேன். அப்புறமா கடைசியில் இரட்டைத்தேங்காய் உடைச்சுடுவேன்னு சொல்லிபோடுங்கோ அவங்களிடம்..

      நீக்கு
    5. athira March 14, 2013 at 12:25 PM

      //நீங்க உடையுங்க.. மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன்ன்.. ஹா..ஹா..ஹா...:)//

      போயும் போயும் உங்களிடம் நான் பஞ்சாயத்துக்கு வந்தேனே!, எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

      அவங்களைக்காணோமே, என் மீது என்ன கோபமோன்னு, என் மனசு மிகவும் அங்கலாய்க்கிது .. அப்படீன்னும் அவங்களிடம் சொல்லிடுங்க. இந்த ‘அங்கலாய்க்கிது’ என்பது எங்கள் இருவரின் கொப்பி வலது வார்த்தை. உடனே டக்குனு. புரிஞ்சுப்பாங்கோ. ;)

      நீக்கு
  60. // பொறித்த பெருங்காயம்//

    றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடிவாங்கோ!!!! கோபு அண்ணன் ஸ்பில்லிங் மிசுரேக்கு விட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்கிட்டயேவா?:) விடமாட்டனில்ல:)).. எனக்கு தமிழில டி ஆக்கும்:).. ழ/ ள எல்லாம் அந்தமாதிரி பிழை விடாமல் எழுதுவனாக்கும்:) பொய் எண்டால் அஞ்சுவைக் கேட்டுப் பாருங்கோ:).. ஹையோ மீ இப்பவும் கட்டிலுக்குக் கீழயேதான்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 13, 2013 at 1:35 PM

      ***** பொறித்த பெருங்காயம்*****

      றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடிவாங்கோ!!!! கோபு அண்ணன் ஸ்பில்லிங் மிசுரேக்கு விட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்கிட்டயேவா?:) விடமாட்டனில்ல:)).. எனக்கு தமிழில டி ஆக்கும்:).. ழ/ ள எல்லாம் அந்தமாதிரி பிழை விடாமல் எழுதுவனாக்கும்:) பொய் எண்டால் அஞ்சுவைக் கேட்டுப் பாருங்கோ:).. ஹையோ மீ இப்பவும் கட்டிலுக்குக் கீழயேதான்ன்ன்:)..//

      “பொரித்த பெருங்காயம்” என்று தான் முதலில் நான் டைப் அடித்திருந்தேன்.

      சூடான எண்ணெயில் பொரிந்த அது தானாகவே “பொறித்த பெருங்காய்ம்” என ஆகிவிட்டது, அதிரா.

      நம்புங்கோ. இதற்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண யாரையும் கூப்பிட்டு தொந்தரவு செய்யாதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      முதலில் கட்டிலுக்குக் கீழேயிருந்து வெளியே வாங்கோ. வந்து இதையெல்லாம், அதாவது நான் இப்போது உங்களுக்காகவே கொடுத்துள்ள பதில்களையெல்லாம் படியுங்கோ.

      நீக்கு
    2. பொய் எண்டால் அஞ்சுவைக் கேட்டுப் பாருங்கோ//

      எல்லாம் சரி :))கசட தபர யரல வழள .வேகமா சொல்லிவிட்டு ஒளிஞ்சிக்கோங்க :))..

      நீக்கு
    3. angelin March 14, 2013 at 4:02 AM

      //பொய் எண்டால் அஞ்சுவைக் கேட்டுப் பாருங்கோ//

      எல்லாம் சரி :))கசட தபர யரல வழள .வேகமா சொல்லிவிட்டு ஒளிஞ்சிக்கோங்க :))..//

      ;))))) சபாஷ் நல்ல பனிஷ்மெண்ட்.

      யார் தச்ச சட்டை? தாத்தா தச்ச சட்டை. என 10 நிமிடங்களுக்குள் வேக வேகமாக 100 தடவை சொல்லச்சொல்லுங்கோ. ;)))))

      நீக்கு
    4. உஸ்ஸ்ஸ் ஸப்பா.. யவள தல கசட... ”கடற்கரையில உரல் உருளுது..கண்ட புலிக்குத் தொண்டை கறுக்குது”..

      இதுதான் எங்களூரில் சொல்லச் சொல்லுவினம் ஸ்பீட்டா:)).. சொன்னதில மீ ரொம்ப ரயேட் ஆகிட்டேன்ன்ன்... ஒரு அவகாடோ ஸ்மூதி பிளீஸ்ஸ்ஸ்.. அஞ்சுவைக் கேட்டேனாக்கும்:).

      நீக்கு
    5. //
      “பொரித்த பெருங்காயம்” என்று தான் முதலில் நான் டைப் அடித்திருந்தேன்.

      சூடான எண்ணெயில் பொரிந்த அது தானாகவே “பொறித்த பெருங்காய்ம்” என ஆகிவிட்டது, அதிரா.//

      ஹா..ஹா..ஹா.. நம்பிட்டேன்ன்:). ஆனாலும் எனக்கொரு டவுட்ட் கோபு அண்ணன்.. பொறித்தல் என்பதுதான் சரியாகுமோ????

      ஏனெனில் கறுப்பு என்பது தப்பாம்... கருப்பு என்பதுதான் சரியாம்.
      அதேபோல பறவாயில்லை என்பது தப்பாம், பரவாயில்லை என்பதுதான் சரியாம்.... ஸ்ஸ்ஸ் ஸாப்பா முடியல்ல:).. உதைவிடக் கட்டிலுக்குக் கீழ இருப்பதே மேல்:).

      நீக்கு
    6. கோபு >>>> அதிரா

      //ஆனாலும் எனக்கொரு டவுட்ட் கோபு அண்ணன்.. பொறித்தல் என்பதுதான் சரியாகுமோ????//

      ROAST என்பதற்கு ’சுடு’ அல்லது ’வறு’ என ஆங்கிலம் >>> த்மிழ் அகராதியில் போட்டுள்ளார்கள்.

      ANYTHING ROASTED என்பதற்கு அதே ஆங்கிலம் >>>> தமிழ் அகராதியில் ’சுடப்பட்டபொருள்’ அல்லது ’பொரியல்’ என்று போட்டுள்ளார்கள்.

      இந்த ‘ரி’ ’றி’ இல் கொஞ்சம் எனக்கும் குழப்பமாகவே உள்ளது.

      //ஏனெனில் கறுப்பு என்பது தப்பாம்... கருப்பு என்பதுதான் சரியாம்//

      ஆம் நிறம் என வரும்போது கருப்பு என்பதே சரியாகும் [BLACK]
      .
      //அதேபோல பறவாயில்லை என்பது தப்பாம், பரவாயில்லை//

      ஆம். ’பறவாயில்லை’ என்பது : தவறு
      ’ப்ரவாயில்லை’ என்பது தான் சரியான சொல்லாகும்.

      //ஸ்ஸ்ஸ் ஸாப்பா முடியல்ல:).. உதைவிடக் கட்டிலுக்குக் கீழ இருப்பதே மேல்:).//

      ’உதைவிட’ தவறாகும். ’அதைவிட’ என்று சொல்ல வேண்டும்.

      உதைவிட என்றால் காலால் உதைப்பது. ;)))))

      நீக்கு
  61. உண்மையிலயே அழகான விளக்கத்தோடு கூடிய படங்களும் குறிப்பும். நானும் செய்து ரின் ல போட்டு வைக்கப் போறன், ஆனா கொஞ்சம் தேங்காய்ப்பூவோடு குழைத்து, புட்டு இடியப்பத்துக்கு சாப்பிடப்போறேன்ன்ன்.. வீட்டில் இப்போ எல்லாம் இருக்கு, எள்ளு மட்டும் வாங்கோணும்.. வாங்கிவிட்டுச் செய்வனாக்கும்.

    ஆனா முன்பு ஒரு தடவை செய்திருக்கிறேன், இதிலுள்ள எள்ளுக்குப் பதிலாக வறுத்த கச்சான் போட்டு அரைத்தெடுத்தது.. அதுவும் குறிப்பொன்றைப் பார்த்துச் செய்ததுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 13, 2013 at 1:38 PM

      //உண்மையிலயே அழகான விளக்கத்தோடு கூடிய படங்களும் குறிப்பும்.//

      மிக்க மகிழ்ச்சி, அதிரா. நன்றி.

      //நானும் செய்து ரின் ல போட்டு வைக்கப் போறன்//

      ” ரின் ல “ என்றால் டின்னிலே {TIN] என்று அர்த்தமா?

      கிளிகொஞ்சும் சுந்தரத்தமிழ் உங்களுடையது. ;)

      //ஆனா கொஞ்சம் தேங்காய்ப்பூவோடு குழைத்து, புட்டு இடியப்பத்துக்கு சாப்பிடப்போறேன்ன்ன்.. //

      எதையோ போட்டு, எப்படியோ குழைத்து, எதனோடோ சாப்பிட்டுக்கோங்கோ.

      செய்யப்போவதும் சாப்பிடப்போவதும் நீங்க தானே! Thank God !! ;)

      //வீட்டில் இப்போ எல்லாம் இருக்கு, எள்ளு மட்டும் வாங்கோணும்.. வாங்கிவிட்டுச் செய்வனாக்கும்.//

      அடடா, எள்ளுன்னா எண்ணெயா இருக்கீங்கோ. சமத்தூஊஊஊஊ.

      //ஆனா முன்பு ஒரு தடவை செய்திருக்கிறேன், இதிலுள்ள எள்ளுக்குப் பதிலாக வறுத்த கச்சான் போட்டு அரைத்தெடுத்தது.. அதுவும் குறிப்பொன்றைப் பார்த்துச் செய்ததுதான்.//

      வறுத்த கச்சான்???????? அப்படின்னா என்ன அதிரா?

      வெஜிடேரியன் ஐட்டமா இருந்தாச் சொல்லுங்கோ, இல்லாட்டி விட்டுடுங்கோ.

      எங்களில் திருமணம் ஆனவர்கள், சிலர், வேட்டி கட்டுவதைத்தான் கச்சம் என்போம். அதாவது ’பஞ்சக்கச்சம்’ என்று அதற்குப்பெயர். ;)

      நீக்கு
    2. அண்ணா கச்சான் என்றால் வேர்கடலை ..அதிராவிடம் கற்ற தமிழ்

      நீக்கு
    3. angelin March 14, 2013 at 4:03 AM

      வாங்கோ நிர்மலா! வணக்கம்.

      //அண்ணா கச்சான் என்றால் வேர்கடலை ..அதிராவிடம் கற்ற தமிழ்//

      அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி நிர்மலா. சந்தோஷம்.

      தாங்கள் தொடர்பதிவுக்கு என்னை அழைத்திருந்தீர்கள். நாளை அதை வெளியிடுவதாக உள்ளேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் கோபு அண்ணா.

      நீக்கு
    4. தாங்ஸ் கோல்ட் ஃபிஸ்:)... அஞ்சுவுக்கு ரெயினிங் கொடுத்து வச்சிருக்கிறதால:)) (எங்கட தமிழ்) அப்பப்ப எனக்கு கைகொடுக்கிறா:).

      நீக்கு
    5. athira March 14, 2013 at 11:32 AM

      //தாங்ஸ் கோல்ட் ஃபிஸ்:)... அஞ்சுவுக்கு ரெயினிங் கொடுத்து வச்சிருக்கிறதால:)) (எங்கட தமிழ்) அப்பப்ப எனக்கு கைகொடுக்கிறா:)//

      ரெயினிங் = TRAINING ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      உங்கள் அஞ்சு, முழுகோதுமையிலே தோசை சுட்டு வெச்சுக்கிட்டு, உங்களின் வருகைக்காகக் ஆசையாகக் காத்துக்கிட்டு இருக்காங்கோ!. தெரியுமா?

      நீக்கு
  62. /ஓர் முக்கிய அறிவிப்பு

    ”பொக்கிஷம்”

    என்ற தலைப்பில்
    தொடர்பதிவு எழுத
    இதுவரை என்னை இருவர்
    அழைத்துள்ளனர்.

    அந்த என் பதிவு
    வரும் 15.03.2013
    வெள்ளிக்கிழமையன்று
    வெளியிடப்பட உள்ளது.//

    ஆஹா ஆஹா... வெள்ளிக்கிழமை 15ம் திகதி அமிர்தசித்தம்.. கல்யாண நாளாம்ம்.. அந்த நந்நாளில் பொக்கிஷப் பதிவோ சூப்பர்ர்... போடுங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 13, 2013 at 1:46 PM

      *****ஓர் முக்கிய அறிவிப்பு

      ”பொக்கிஷம்” என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத இதுவரை என்னை இருவர் அழைத்துள்ளனர். அந்த என் பதிவு வரும் 15.03.2013 வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட உள்ளது.*****

      //ஆஹா ஆஹா... வெள்ளிக்கிழமை 15ம் திகதி //

      15ம் திகதி என்றால் 15ம் தேதி! எப்பூடீஈஈஈஈஈ கரெக்டாக் கண்டு புடிசுட்டேன் பார்த்தீங்களா?

      இதை நான் ஏற்கனவே பல பதிவுகளில் படித்துள்ளேனாக்கும்.

      //அமிர்தசித்தம்..//

      ஆஹா, அமிர்த + ஸித்த யோகம் என்று கரெக்டாச்சொல்லிட்டீங்க. நான் இப்போது தான் அதை சரி பார்த்தேன்.

      அதிராவுக்கு ஜோஸ்யம் எல்லாம் கூட தெரிந்துள்ளதே! எனக்கு வியப்போ வியப்பாக உள்ளதூஊஊஊஊஊ.

      //கல்யாண நாளாம்ம்.. //

      உங்களுக்குக்கல்யாணம் ஆன நாளோ? என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள், அதிரா.

      //அந்த நந்நாளில் பொக்கிஷப் பதிவோ சூப்பர்ர்... போடுங்கோ..//

      தங்களின் ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புக்கு நன்றியோ நன்றிகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான பல கருத்துப்பகிர்வுகளுக்கும், தங்களின் பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், பதிவினை கலகலப்பாக்கி உதவியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், அதிரா.

      நீக்கு
    2. ஹையோ வைரவா இது என்ன பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் ஜோஓதனை.... அன்று எங்கட கல்யாண நாள் அல்ல. கல்யாணம் வைக்கக்கூடியநாளாம்ம்.. அதாவது விஷேஷமான நல்ல நாள் அதைச் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      நீக்கு
  63. athira March 14, 2013 at 11:30 AM

    வாங்கோ அதிரா, வணக்கம்.

    //ஹையோ வைரவா இது என்ன பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் ஜோஓதனை.... //

    ”ஜோஓதனை” என்றால் ”சோதனை” யோ ஓகே ஓகே ! ஏதோ கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிற்து.

    //அன்று எங்கட கல்யாண நாள் அல்ல. //

    அடடா, அப்படியா? அப்போ உங்கட கல்யாண நாள் என்னிக்கோ?

    சரி அதை இப்போ விடுங்கோ. அது என்னிக்கோ அன்னிக்கு 2 நாள் முன்னாடி சொல்லுங்கோ. வாழ்த்தணும்.

    //கல்யாணம் வைக்கக்கூடியநாளாம்ம்.. அதாவது விஷேஷமான நல்ல நாள் அதைச் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

    ஓஹோ, நானும் அப்படித்தான் இருக்கும்ன்னு நினைச்சேன். பிறகு காலண்டரிலும், பஞ்சாங்கத்திலும் பார்த்தேன். அது போல முஹூர்த்தநாள் என்று ஒன்றும் போடக்காணோம். மறந்துட்டானுங்க போலிருக்கு. ;)

    அதனால் தான் உங்கட [உங்களின்] கல்யாணநாளா இருக்கும்ன்னு முடிவுக்கு வந்தேனாக்கும். ஹுக்க்க்க்க்க்கும். ;))))).

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேறு இலவச இணைப்பு போல !

    பதிலளிநீக்கு
  64. அடுப்பை சிம்ரனில் வைத்து [அதாவது அடுப்பை சிம்மில் ரன் செய்து]//

    இது குசும்பு

    10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பார்களேயானால் A : B கலவையை 1 : 5 என்ற விகிதத்தில் கலந்து குழந்தைகளுக்கென்று தனியாக வேறு ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். [அதாவது சின்னக்குழந்தைகளுக்கு அதிக காரம் வேண்டாம் என்பதற்காக]//

    இது அக்கறை

    இந்தப் பதிவைப் படிக்கும் போது, ஞாபகம் வருது.

    சந்தியாவுக்கு ஒரு 2 - 21/2 வயசு இருக்கும் போது ஒரு நாள் மிளகாய்ப் பொடி தீர்ந்து போயிடுத்து. அவளுக்கு இட்லியோட தேங்காய்ப் பொடி போட்டுக் குடுத்தேன். ஒரு வாய் சாப்பிட்டதுமே அவள் ‘இது மொளகாப் பொடி இல்ல. இருந்தாலும் பரவாயில்ல. நான் சாப்பிட்டுடறேன்னு’ சொன்னாள். என்ன பண்ண. எல்லாம் ஒரிஜினல் தஞ்சாவூர் நாக்கு நீண்ட தேவதையாச்சே.

    அப்புறம் அரிசி உப்புமாவுக்குக் கூட இந்த மிளகாய்ப் பொடி சூப்பரா இருக்கும்.

    இந்தப் பதிவை படிச்சு முடிச்சதுமே (என்னிக்கோ படிச்சாச்சு) சூடா இட்லி மிளமாய்ப் பொடியோட சாப்பிட்டுட்டு, நாக்கில காரம் இருக்கும் போதே சூடா ஒரு தஞ்சாவூர் டிகிரி காபி குடிச்ச EFFECT வந்துடுத்து.

    பதிலளிநீக்கு
  65. JAYANTHI RAMANI March 21, 2013 at 4:27 AM

    வாங்கோ, வணக்கம்.

    //இது குசும்பு// இது உங்களிடம் நான் கற்றது.

    //இது அக்கறை// இது என்னிடமே உள்ளது.

    //என்ன பண்ண. எல்லாம் ஒரிஜினல் தஞ்சாவூர் நாக்கு நீண்ட தேவதையாச்சே.//

    குழந்தை பாவம். நீங்களே அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ. நாக்கு நீண்ட தேவதையா இருப்பதனால் தான் இவ்வளவு நன்னாப்படிச்சு, கெட்டிக்காரியா வந்திருக்காங்கோ ;)

    //அப்புறம் அரிசி உப்புமாவுக்குக் கூட இந்த மிளகாய்ப் பொடி சூப்பரா இருக்கும்.//

    அரிசி உப்புமா சாதுவாக இருந்தால் OK.

    எங்காத்திலே நிறைய காரம் போட்டு, அரிசி உப்புமாவையே காரசாரமாப் பண்ணிடுவா. அதனால் தொட்டுக்க ஒன்றும் தேவைப்படாது.

    நெய் + சர்க்கரையுடன் முதல் ரவுண்ட், பிறகு ரஸம் அல்லது சாம்பாருடன் இரண்டாவது ரவுண்ட், பிறகு கெட்டித் தயிருடன் மூன்றாவது ரவுண்ட் என, அரிசி உப்புமாவை நான் அடிப்பதுண்டு.

    //இந்தப் பதிவை படிச்சு முடிச்சதுமே (என்னிக்கோ படிச்சாச்சு) சூடா இட்லி மிளமாய்ப் பொடியோட சாப்பிட்டுட்டு, நாக்கில காரம் இருக்கும் போதே சூடா ஒரு தஞ்சாவூர் டிகிரி காபி குடிச்ச EFFECT வந்துடுத்து.//

    ;))))) நன்னா வக்கணையாத்தான் எல்லாமே சொல்றேள்! சந்தோஷம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  66. மிளகாப்பொடி செய்முறை விளக்கமும் கூடவே பொருத்தமான படங்களும் இப்பவே சாப்பிடணும்போல இருக்கு. உங்களுக்கு த்தெரியாத விஷயங்களே கிடையாதா? அஷ்டாவதானி, தசாவதானின்னெல்லாம் இருப்பாங்க நீங்க சதாவதானியா இருக்கீங்களே. சதம்னா 100 இல்லியா? ஏற்கனவே கூட நான் இப்படி சதாவதானின்னு உங்களைச்சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்.

    நான்லாம் தயிர் சாதம் கூட மொள்காப்பொடிதான் தொட்டுகிடுவேன்.அவ்வளவு இஷ்டம். ஆனா வீட்ல அவருக்கு அலர்ஜி. திரும்பிக்கூட பார்க்க மாட்டாரு.ஒவ்வொருவர் டேஸ்ட் ஒவ்வொரு மாதிரி இல்லியா?அதுபோல டிஃபன் சாப்பிட்டு முடிச்ச்துமே எனக்கு பில்டர் காபி வேணும் அவர் டீ விரும்பி.இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் 7-ம் பொருத்தம் தான் ஹஹஹ.

    பதிலளிநீக்கு
  67. பூந்தளிர் March 26, 2013 at 8:48 AM

    வாங்கோ, வணக்கம்.

    //மிளகாப்பொடி செய்முறை விளக்கமும் கூடவே பொருத்தமான படங்களும் இப்பவே சாப்பிடணும்போல இருக்கு.//

    இப்பவே செய்து நீங்களே சாப்பிடுங்கோ. எனக்கு அனுப்பிவைக்க வேண்டாம். .

    //உங்களுக்கு த்தெரியாத விஷயங்களே கிடையாதா?//

    எனக்கு ஒன்றுமே தெரியாதுங்க. எதைப்பற்றி வேண்டுமானாலும் ஏதோ சுமாராக சுவையாக எழுதுவேன்.என்று மற்றவர்கள் சொல்லுகிறார்கள். அம்புட்டுத்தான்.

    //அஷ்டாவதானி, தசாவதானின்னெல்லாம் இருப்பாங்க நீங்க சதாவதானியா இருக்கீங்களே. சதம்னா 100 இல்லியா? ஏற்கனவே கூட நான் இப்படி சதாவதானின்னு உங்களைச்சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்.//

    நீங்க இதுபோல 100 சமாசாரங்கள் என்னைப்பற்றி சொல்லியிருக்கீங்க. அதனால் நீங்கதான் சதாவதானியாக்கும். ;)))))

    //நான்லாம் தயிர் சாதம் கூட மொள்காப்பொடிதான் தொட்டுகிடுவேன். அவ்வளவு இஷ்டம்.//

    ஆஹா, எனக்கு இப்போ தயிர்சாதம் + மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிடணும்போல நாக்கு நமநமங்குது, போங்கோ! ;(

    //ஆனா வீட்ல அவருக்கு அலர்ஜி.//

    எதில் அலர்ஜி? மிளகாய்ப்பொடி மீதா? அல்லது உங்கள் மீதா? ;;)))))

    //திரும்பிக்கூட பார்க்க மாட்டாரு.//

    அடப்பாவமே! நீங்க கொஞ்சம் திரும்பிப்பார்ப்பதுபோல அட்ஜஸ்ட் செய்து நடந்து கொள்ளுங்கோளேன், ப்ளீஸ்.

    //ஒவ்வொருவர் டேஸ்ட் ஒவ்வொரு மாதிரி இல்லியா?//

    கரெக்ட். ஒவ்வொருவர் டேஸ்ட் ஒவ்வொரு மாதிரி தான். அதைத்தான் நான் என் ‘பொக்கிஷம் பகுதி-1’ இல் சொல்லியிருக்கிறேன்.

    //அதுபோல டிஃபன் சாப்பிட்டு முடிச்ச்துமே எனக்கு பில்டர் காபி வேணும்//

    என்னைப்போலவே இருக்கீங்கோ. எனக்கு காலை 6 மணி, மதியம் 11 மணி, மாலை 6 மணி + இரவு 10 மணி ஆக மொத்தம் குறைந்தது தினம் 4 முறை ஃபில்டர் காஃபி வெண்டும்.

    டீயெல்லாம் என் பக்கமே வரக்கூடாது. டீத்தூளே வாங்க மாட்டோம்,

    //அவர் ’டீ’ விரும்பி//

    அப்போ உங்களைப் போ’டீ’ வா’டீ’ன்னு தான் கூப்பிடுவார் என்று நினைக்கிறேன். அதனால் பரவாயில்லைங்கோ.;)))))

    //இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் 7-ம் பொருத்தம் தான் ஹஹஹ.//

    இதை இப்படியெல்லாம் ஓபனாகச் சொல்லணுமாக்கும்? பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் 7-ம் பொருத்தமே தான். ஆனால் வெளியே யாரும் ஓபனாக நம்மைப்போல சொல்லிக்க மாட்டாங்கோ..

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான அனுபவக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  68. Priya Anandakumar
    September 22, 2013 at 1:31 PM

    வாங்கோ, வணக்கம்.

    //arumaiyaana idli milagai podi, super.... love it...//

    ஆஹா, ’வஸிஷ்டர் வாயால் பிரும்மரிஷி’ பட்டம் கிடைத்தது போல உள்ளது, சமையல் மஹாராணியாகிய ’பிரியா ஆனந்தகுமார்’ அவர்களின் வாயால் இந்தப்பாராட்டு எனக்குக் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.

    தங்களின் அன்பான வருகைக்கும், என்னுடைய இந்த இட்லி மிளகாய்ப்பொடியை ஒரு சிட்டிகை வாயில் போட்டு ருசித்து விட்டு, அழகான கருத்தளித்துள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    -=-=-=-=-

    மற்ற அனைவரின் கவனத்திற்கும்:

    தோசை மிளகாய்ப்பொடி தயாரிப்பு பற்றி அழகான படங்களுடன், செய்முறைகளை ஆங்கிலத்தில் படித்து மகிழ இதோ இந்த இவர்களின் இணைப்புக்குச் செல்லவும்.

    http://priyas-virundhu.blogspot.in/2013/09/idli-milagai-podiidli-podi.html

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  69. Romba nandri sir, you have called samayal maharani very exciting thank you very much sir...no words for me to say... unga allavukku nalla ezhutha theriyathu... Nandri...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. Priya Anandakumar September 23, 2013 at 2:51 AM

      வாங்கோ, வணக்கம், மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //Romba nandri sir, you have called samayal maharani very exciting thank you very much sir...no words for me to say...//

      உங்களுக்கு நான் “சமையல் மஹாராணி” என்ற பட்டம் கொடுத்து ரொம்ப நாட்கள் ஆச்சு. ஆனால் அந்த பட்டமளிப்பு விழா பதிவுக்கு மட்டும் ஏனோ தாங்கள் வருகை தந்து கருத்தளிக்கவில்லை. ;(

      இதோ அதன் இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2013/09/45-3-6.html

      //unga allavukku nalla ezhutha theriyathu... Nandri..//

      நானும் உங்களைப்போலத்தான் இருந்து வந்தேன், ஒரு காலத்தில். நாம் தொடர்ந்து ஆர்வத்துடன் கற்பனை செய்து, சுவை சேர்த்து எழுத எழுதத்தான், நம் எழுத்து திருத்தமாகி நாளடைவில் மெருகேறி, பலரும் ரஸிக்கும்படியாக வரக்கூடும்.

      எனவே கவலைப்படாமல் தொடர்ந்து ஆர்வமாகவும் சிரத்தையாகவும் எழுதிக்கொண்டே இருங்கோ.

      இப்போதே நல்ல நல்ல பதிவாகத்தான் அடிக்கடி கொடுத்து அசத்தி வருகிறீர்கள். அன்பான வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  70. அஹா ! இட்லி மிளகாய் போடி சூபர் !பார்த்தாலே வா வா என்று அழைக்கிறதே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Usha Srikumar April 17, 2014 at 11:17 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா ! இட்லி மிளகாய் பொடி சூபர் ! பார்த்தாலே வா வா என்று அழைக்கிறதே !//

      ;))))) மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  71. நல்ல பதிவு. நான் சேவையிலும் (இடியாப்பம்) கலந்து சாப்பிடுவேன். சிறு வயதில் ரயில் பிரயாணத்தின்போது அப்பா விண்டு கொடுத்த மிளகாய்ப்பொடி இட்லி நினைவு வந்தது. எங்கு டிராவல் செய்தாலும் மிளகாய்ப்பொடி தடவிய இட்லிதான் என் ஃபேவரைட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் February 18, 2015 at 5:41 PM

      வாருங்கள், வணக்கம்.

      //நல்ல பதிவு. நான் சேவையிலும் (இடியாப்பம்) கலந்து சாப்பிடுவேன். சிறு வயதில் ரயில் பிரயாணத்தின்போது அப்பா விண்டு கொடுத்த மிளகாய்ப்பொடி இட்லி நினைவு வந்தது. எங்கு டிராவல் செய்தாலும் மிளகாய்ப்பொடி தடவிய இட்லிதான் என் ஃபேவரைட்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். VGK

      நீக்கு
  72. யம்மாடியோவ்!! இந்தப் பின்னூட்டங்களைப் பார்த்தா தெரியுது உங்கள் வீட்டு இட்லி பொடிக்கு செம டிமான்ட் மட்டுமல்ல செம பின்னூட்டங்கள்.....நாங்கள் கப் அள்வில் செய்வது.....இப்போது இந்த கிராம் கணக்கும் குறித்துக் கொண்டோம்.....இதுவரை போட்ட கப் அளவும், இந்த கிராம் அளவும் அதே தானா என்றும் பார்த்து சரி செய்து பொடி செய்து பார்க்க வேண்டும்....மிகவும் பிடித்த ஒன்று வீட்டில் இதற்கு டிமான்ட் உண்டு....

    கீதா...

    பதிலளிநீக்கு
  73. Thulasidharan V Thillaiakathu March 24, 2015 at 2:35 PM

    வாங்கோ, வணக்கம்.

    //யம்மாடியோவ்!! இந்தப் பின்னூட்டங்களைப் பார்த்தா தெரியுது உங்கள் வீட்டு இட்லி பொடிக்கு செம டிமான்ட் மட்டுமல்ல செம பின்னூட்டங்கள்.....நாங்கள் கப் அள்வில் செய்வது.....இப்போது இந்த கிராம் கணக்கும் குறித்துக் கொண்டோம்.....இதுவரை போட்ட கப் அளவும், இந்த கிராம் அளவும் அதே தானா என்றும் பார்த்து சரி செய்து பொடி செய்து பார்க்க வேண்டும்....மிகவும் பிடித்த ஒன்று வீட்டில் இதற்கு டிமான்ட் உண்டு....

    கீதா...//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    VGK

    பதிலளிநீக்கு
  74. சொர்க்க லோகத்தில் இட்லி மிளகாய்ப் பொடி, நல்லெண்ணை கிடைக்குமோ? அது இல்லாவிட்டால் அங்கு எனக்குப் போக விருப்பமில்லை.

    பதிலளிநீக்கு
  75. ஆஹா இந்த பதிவு முத தபா பாத்திருந்தா அடைக்கு தொட்டுகிட செய்திருக்கலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru September 8, 2015 at 6:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா இந்த பதிவு முத தபா பாத்திருந்தா அடைக்கு தொட்டுகிட செய்திருக்கலாமே.//

      அதனால் என்ன, இப்போ செய்திடுங்கோ. அடுத்த தபா அடை செய்தால் தொட்டுக்கொள்ள வசதியா இருக்கும். :)

      நீக்கு
  76. நா என்ன சொல்ல நெனச்சனோ அத சொல்ல மறந்தேன். வரிசயா எல்லாருட பின்னூட்டம்லாம் படிச்சு ரசிச்சு சிரிச்சு ஸ்ஸ்ஸ் பாடா தாங்கல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru September 8, 2015 at 6:14 PM

      வாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றி.

      //நா என்ன சொல்ல நெனச்சனோ அத சொல்ல மறந்தேன். வரிசயா எல்லாருட பின்னூட்டம்லாம் படிச்சு ரசிச்சு சிரிச்சு ஸ்ஸ்ஸ் பாடா தாங்கல.//

      வரிசையா எல்லோரோட பின்னூட்டமெல்லாம் படிச்சு ரசிச்சு சிரிச்சு ரொம்பவே களைச்சுப்போய்ட்டீங்களாக்கும், பாவம் ... நீங்க. :)

      கடைசியிலே நீங்க சொல்ல நினைத்ததையே சொல்லாம மறந்துட்டீங்களே, இப்போதும்கூட. என்னவோ போங்கோ.

      நீக்கு
  77. இங்கன நேத்து ஒரு பின்னூட்டம் போட்டுதுல எங்க போச்??????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru September 9, 2015 at 9:59 AM

      //இங்கன நேத்து ஒரு பின்னூட்டம் போட்டுதுல எங்க போச்??????????//

      ’காக்கா ஊஷ்’ ஆயிடுத்தோ என்னவோ? எனக்கு அது வந்து சேரவே இல்லை. மீண்டும் எழுதி அனுப்புங்கோ. பின்னூட்டம் அனுப்பும் முன், காணாமல் போனால் மீண்டும் அனுப்ப வசதியாக அதை எங்காவது ஒரு இடத்தில் ஸேவ் (SAVE) செய்துகொண்டு அனுப்புங்கோ. சமயத்தில் இதுபோலக் காணாமல் போய்விடுவது உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஸேவ் செய்துள்ள அதனை மீண்டும் அனுப்பி வைக்க வசதியாக இருக்கும். நான் எப்போதுமே அப்படித்தான் செய்துகொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
    2. mru September 9, 2015 at 9:59 AM

      //இங்கன நேத்து ஒரு பின்னூட்டம் போட்டுதுல எங்க போச்??????????//

      ’காக்கா ஊஷ்’ ஆயிடுத்தோ என்னவோ? எனக்கு அது வந்து சேரவே இல்லை. மீண்டும் எழுதி அனுப்புங்கோ. பின்னூட்டம் அனுப்பும் முன், காணாமல் போனால் மீண்டும் அனுப்ப வசதியாக அதை எங்காவது ஒரு இடத்தில் ஸேவ் (SAVE) செய்துகொண்டு அனுப்புங்கோ. சமயத்தில் இதுபோலக் காணாமல் போய்விடுவது உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஸேவ் செய்துள்ள அதனை மீண்டும் அனுப்பி வைக்க வசதியாக இருக்கும். நான் எப்போதுமே அப்படித்தான் செய்துகொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  78. அடடா மருக்கா வந்துபிட்ட்டனா. ஆரண்ய நவாஸ் சார் கமண்டு சிரிப்பாணி பொத்துகிச்சி. இடடளி பொடி எண்ண பார்சல் கெடைக்குமா.அலப்பரை க்வீன் ( பரியுதா குருஜி) பட்டம் கொடுத்து டுங்க அவங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 1:53 PM

      வாங்கோ முருகு. வணக்கம்மா.

      //அடடா மருக்கா வந்துபிட்ட்டனா. //

      இந்தப்பதிவுக்குத் தங்களின் மீண்டும் மீண்டும் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

      //ஆரண்ய நவாஸ் சார் கமண்டு சிரிப்பாணி பொத்துகிச்சி.//

      அடிக்கடி உங்களுக்கு அது பொத்துக்கிட்டுத்தான் இருக்கு.
      மிக்க மகிழ்ச்சி. :)

      //இடடளி பொடி எண்ண பார்சல் கெடைக்குமா.//

      பார்சல் அனுப்பினால், அந்தப்பார்சல் பூராவும் எண்ணெய் வடிந்துபோய் விடுமேம்மா !!!!!

      //அலப்பரை க்வீன் ( புரியுதா குருஜி) பட்டம் கொடுத்து டுங்க அவங்களுக்கு.//

      அவங்க (அலப்பரை குயின்) இதைப்பார்த்தால் போச்சு. பிச்சுடுவாங்க பிச்சு .... என்னை மட்டுமல்ல .... உங்களையும் சேர்த்தே ! :)

      மீண்டும் வருகைக்கு மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  79. காரசாரமான பதிவு மட்டுமில்லை. கன ஜோர் ருசியான பதிவும் கூட. இட்லி பொடிக்கு கூட இவ்வளவு அமர்க்களமா பதிவு போட்டுட்டீங்களே. ஏதாவது சமையல் போட்டிக்கு அனுப்பினா முதல் பரிசு கதறிண்டு ஓடி வந்திருக்குமே.

    பதிலளிநீக்கு
  80. கல்லூரி நாட்களில் பல சமயம் இட்லி மிளகாய்ப்பொடிதான்...சும்மா பின்னி எடுத்தோம்ல...

    பதிலளிநீக்கு
  81. ஆஹா! இந்த மிளகாய்ப்பொடி வழுவட்டையாய் இருப்பவர்களையும் எழுச்சி பெற வைத்துவிடும் போலிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  82. ஹப்பா...... என்ன காரசாரமான பதிவு.. அதைவிட காரசார சுவையான சுவாரசியமான கமெண்ட்ஸ்+ ரிப்ளை கமெண்ட்ஸ் கலக்கல்ஜி..பொதுவா எங்க சாப்பாட்டுல காரமே இருக்காது.. எல்லா ஐட்டங்களிலுமே இனிப்புசுவை எடுப்பாக இருக்கும். நாங்க நல்லெண்ணை யூஸ் பண்றதேல்ல.. ஆலிவ் ஆயில்& கடுகெண்ணைதான். அதுவும் மிளகா பொடில எண்ணை ஊத்தி தொட்டுக்க எப்படி...??????
    ஒவ்வொருவர் டேஸ்ட்... ஒவ்வொரு மாதிரி.....பதிவு நகைச்சுவையாக சுவாரசயமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. shamaine bosco August 26, 2016 at 1:01 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஹப்பா...... என்ன காரசாரமான பதிவு.. அதைவிட காரசார சுவையான சுவாரசியமான கமெண்ட்ஸ் + ரிப்ளை கமெண்ட்ஸ் கலக்கல்ஜி..//

      :) மிக்க மகிழ்ச்சி. என் பதிவுகளின் ஸ்பெஷாலிடியே பிறர் தரும் பின்னூட்டங்களும், அதற்கு நான் பொறுமையாக, அருமையாக, யோசித்து அவர்களுக்கு அளிக்கும் பதில்களுமேயாகும். ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் என் எழுத்துக்களுக்கான ஸ்பெஷல் ரஸிகர்கள் + ரஸிகைகள் என ஒரு மிகப்பெரிய பட்டாளமே எனக்கு உண்டு. இதில் மற்ற பதிவர்கள் பலருக்கும் என் மீது பொறாமையே உண்டு.

      அதுவும் என்னிடம் தனிப்பிரியம் வைத்திருந்த பூந்தளிர், அதிரா, ஜெயந்தி ஜெயா போன்றவர்கள் என்னைத் தங்கள் பின்னூட்டங்கள் மூலம் தொடர்ந்து வம்பு இழுத்துக்கொண்டே இருப்பார்கள். நான் அவர்கள் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த வேண்டி சலைக்காமல் விடிய விடிய பதில்களைக் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

      //பொதுவா எங்க சாப்பாட்டுல காரமே இருக்காது.. எல்லா ஐட்டங்களிலுமே இனிப்புசுவை எடுப்பாக இருக்கும்.//

      தெரியும். பொதுவாக வட இந்தியாவில் உள்ளவர்களே இனிப்புப் பிரியர்கள்தான். காலையில் தூங்கி எழுந்ததுமே ‘ஜாங்கிரி’ போன்ற இனிப்புகளை சாப்பிடுபவர்கள். நேரிலேயே நான் இவற்றைப் பார்த்துள்ளேன்.

      தென்னிந்தியாவில் ஆஞ்சநேயருக்கு நாங்கள் உப்பு + மிளகு + உளுந்து சேர்த்த வடைகளை மாலையாகப் போட்டு வணங்கி மகிழ்வோம். வட இந்தியாவில் அதே ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலையைப் போட்டு வணங்கி மகிழ்கிறார்கள். இதோ அது பற்றி இந்த என் ஆன்மீகப் பதிவினில்கூட விளக்கமாக எழுதியுள்ளேன்.

      http://gopu1949.blogspot.com/2014/01/108.html

      //நாங்க நல்லெண்ணை யூஸ் பண்றதேல்ல.. ஆலிவ் ஆயில் & கடுகெண்ணைதான்.//

      ஓஹோ.

      //அதுவும் மிளகா பொடில எண்ணை ஊத்தி தொட்டுக்க எப்படி...??????//

      சுத்தமான எள்ளிலிருந்து செக்கில் ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் தான் மிளகாய் பொடிக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். குழைத்து தொட்டுக்கொண்டு ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்கோ... அப்போதுதான் அதன் தனிச்சுவையைத் தாங்களும் உணர முடியும்.

      //ஒவ்வொருவர் டேஸ்ட்... ஒவ்வொரு மாதிரி.....//

      கரெக்ட். அதையே தான் நானும் மேலே ‘பூந்தளிர்’ என்பவருக்கும் என் பதிலில் சற்றே நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறேன். :)

      //பதிவு நகைச்சுவையாக சுவாரஸ்யமாக இருந்தது.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  83. முன்னா பார்க்லயும் வாரங்களே அந்த பூந்தளிர் இவங்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முன்னா பார்க்லயும் வாரங்களே அந்த பூந்தளிர் இவங்களா//

      சாக்ஷாத் அவங்களே தான். என்னுடைய மிகவும் டியரஸ்ட் வெரி க்ளோஸ் ஃப்ரண்ட் - தோஸ்த்.

      இவர்களை நான் ராஜாத்தி, ரோஜாப்பூ, டீச்சர்-1 என்பதுபோன்ற பல செல்லப்பெயர்களில் அவ்வப்போது முன்னா பார்க்கில் அழைப்பது உண்டு.

      இவர்களுக்கு தாய் மொழி தமிழே தவிர, பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாம் வட இந்தியாவில் என்பதால், தமிழ் படிக்கவே வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

      உங்களைப்போலவே மிகுந்த ஆர்வத்துடன் தமிழில் எழுதக் கற்றுக்கொண்டு, பதிவுகளும் கொடுத்து, பின்னூட்டமும் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். :)

      நீக்கு
  84. சார்.பகிர்விற்கு நன்றி.இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த பதிவை படித்தறிந்ததில் மகிழ்ச்சி .செய்து பார்ப்பேன் நிச்சயம்.சிம்ரனை படிக்கும்போது சிரித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு