”பொக்கிஷம்”
தொடர்பதிவு
By
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
-oOo-
[1] BHEL நிர்வாகம்
எனக்கு அளித்த
சில பொக்கிஷங்கள்
BHEL பற்றி நான் எழுதிய பாடலுக்கு
BHEL நிர்வாகம் எனக்கு அளித்துள்ள
மிகப்பெரிய அங்கீகாரம்.
மேலும் விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/3.html
நான் எழுதிக்கொடுத்த கீழ்க்கண்ட பாடல் அழகாக இசையமைக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளிலும், அது தவிர தனியாக புல்லாங்குழல் இசையிலும் BHEL நிர்வாகத்தால் CD யாக வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழிலோ அல்லது ஹிந்தியிலோ இசையைக்கேட்டு மகிழ விருப்பம் உள்ளவர்களுக்காக மட்டுமே கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது: @@@@@
BHEL Song | Muziboo
நம் ஆலை ஓர் ஆலயம்
[பாடல்]
பாரத மிகுமின் தொழிலகமே
பாரினில் நல்ல எழிலகமே
இதில் உழைப்பவர் நாங்கள் அரை லட்சம்
பலனில் பிழைப்பவர் உலகில் பல லட்சம்
தரத்தினில் நாங்கள் தங்கமென்று
தரணியில் புகழை எட்டிவிட்டோம்
இந்தியத் திருநாட்டின் ஆலை இது
நெஞ்சில் நவரத்தினம் பதித்த மாலை இது
ஜாதி மத இன மொழி நிற பேதமின்றி
அனைவரும் பழகிடும் பசுஞ்சோலை இது
சோதனை பலவும் பார்த்து விட்டோம்
சாதனை பலவும் புரிந்து விட்டோம்
வேதனை என்றும் பட்டதில்லை
வெற்றிகள் எட்டாமல் விட்டதில்லை
அனுதினமும் திட்டங்கள் பல தீட்டிடுவோம்
அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றிடுவோம்
உழைப்பினில் கவனம் செலுத்திடுவோம்
உற்பத்தி இலக்கினை எட்டிடுவோம்
உலகச்சந்தையில் போட்டியிட்டு
உன்னத ஆணைகள் பெற்றுவிட்டோம்
மின்னொளிச் சாதனச் சந்தையிலே
என்றும் முன்னனியாகத் திகழ்கின்றோம்
நம் நிறுவனத்தின் நல்ல வளர்ச்சி போலவே
நாமும் இன்று வளர்ந்து விட்டோம்
வி சா ல மா ன ஆலையில் உழைத்தே, நாம்
வி லா ச மு ள் ள வ ர் ஆகி உள்ளோம்
வளரட்டும் நம் ஆலை - வாழட்டும் நம் மக்கள்
மலரட்டும் நம் வாழ்வு - மகிழட்டும் நம் மனது
இன்றுபோல் என்றும் நாம்
இன்புற்று வாழ்ந்திடுவோம்
தாய்போல் நம்மை வளர்த்த
நம் ஆலையை
தலையால் வணங்கிடுவோம்
ஓர் ஆலயமாய்.
-oOo-
BHEL துவங்கி வெற்றிகரமாக
50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி
[ 1956-2006 ]
BHEL நிர்வாகம் எனக்களித்த
10 கிராம் எடையுள்ள சுத்தத்தங்க நாணயம்
நான் பணி ஓய்வு பெற்ற அன்று
BHEL நிர்வாகம்
எனக்களித்த நினைவுப்பரிசு.
மேலும் விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/2.html
தொழிலகப்பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில்
தமிழ் சிறப்பு வாக்யத்திற்கு (SLOGAN)
முதல் பரிசு
மற்றும்
தமிழ் கவிதைக்கு
இரண்டாம் பரிசு.
26.05.2008 அன்று நடைபெற்ற
மிகப்பெரிய விழாவில்
மிகப்பெரிய விழாவில்
Mr.S.Rathinam,
Dy. Chief Inspector of Factories
அவர்களால் வழங்கப்பட்டது
அவசர மருத்துவ சிகிச்சை பெற
'BHEL' HOSPITAL OUT-PATIENT BOOKS.
[இன்றைய காலக்கட்டத்தில் அடிக்கடி
அவசியமாகத் தேவைப்படும்
பொக்கிஷங்களாகவே இவைகளும் உள்ளன.]
[2] நாணயமான சில செய்திகள்
ஒருசில பழங்கால நாணயங்களைச் சேர்ப்பது என் வழக்கமாக இருந்து வந்தது. அதில் பலவற்றை யார் யாருக்கோ கொடுத்து விட்டேன். கைவசம் உள்ளதில் மிகப்பழமையான ஓர் நாணயம் இதோ:
இது 1835 இல் EAST INDIA COMPANY காரர்களால்
வெளியிடப்பட்டுள்ள அரை அணா நாணயம்.
நல்ல வெயிட்டாக சுமார் 50 கிராம் எடை உள்ளது.
அதன் விட்டம் [3 CMs Dia.] மூன்று செண்டிமீட்டர் உள்ளது.
தாமிரத்தால் செய்யப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள்.
இந்த அரை அணா என்பது
ஒரு முழு ரூபாயில் 32 இல் ஒரு பாகமாகும்.
THIS WAS EQUAL TO
OUR PRESENT 3.125 PAISE, ONLY !
178 YEARS OLD COIN !! ;)
OUR PRESENT 3.125 PAISE, ONLY !
178 YEARS OLD COIN !! ;)
அந்த அரை அணா
நாணயத்தின் மறுபக்கம்
மேலே காட்டப்பட்டுள்ளது இந்திய அரசாங்கத்தால் 1972 இல் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயம். நல்ல வெயிட் ஆக இதன் எடை சுமார் 100 கிராம் உள்ளது. இதன் விட்டம் நான்கு செண்டிமீட்டர் [ 4 CMs Dia.] உள்ளது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 25 ஆண்டுகள் ஆனதை உத்தேசித்து 1947-1972 என்று சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ளார்கள்.
1972 எனக்கு திருமணம் நடந்த ஆண்டு. அப்போது எனக்கு 22 வயது. இந்தக்காசில் ஒன்றும் என்னிடம் பொக்கிஷமாகவே 1972 முதல் இருந்து வருகிறது.
அந்த 10 ரூபாய் நாணயத்தின் பின்புறம் டெல்லி செங்கோட்டையும், நமது தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு ஒரு ஆணும், அருகில் ஒரு பெண்ணும் 1947-1972 என்ற வருஷமும் குறிக்கப்பட்டுள்ளன.
இன்று வெளியிடப்படும் ஐந்து ரூபாய் நாணயங்களுக்கும் ஐம்பது பைசா நாணயங்களுக்கும் உருவத்தில் வித்யாசமே தெரியாமல், தேய்ந்து போய் மிகச்சிறியதாக உள்ளது என்பது, மிகவும் வேத்னை அளிக்கும் ஓர் விஷயமாகும்.
[3] என்னிடம் சிக்கினார்
ஓர் ஸ்ரீ ஹனுமார்
இந்த நூறு ரூபாய் நோட்டின் [Water Mark]
வெள்ளைப்பகுதியை கவனியுங்கள்.
அதில் ஓர் பறக்கும் ஹனுமார்
ரப்பர் ஸ்டம்ப் ஆக வைக்கப்பட்டுள்ளது.
என்னிடம் சிக்கிய இந்த ரூபாய் நோட்டை
பல வருடங்களாகக் கட்டிக்காத்து வருகிறேன்.
4] துபாயில் ஒருவர் வீட்டில் அளித்த
மாபெரும் விருந்தும் அன்பளிப்பும்
துபாய் சென்றிருந்தபோது அங்குள்ள
திருமதி: ஜனகாசுதா ஸ்ரீநிவாஸன் என்பவர்
21.10.2004 அன்று எனக்களித்த
ஸ்பெஷல் விருந்துடன் கூடிய
அன்பளிப்புப் பொக்கிஷம்
4] துபாயில் ஒருவர் வீட்டில் அளித்த
மாபெரும் விருந்தும் அன்பளிப்பும்
துபாய் சென்றிருந்தபோது அங்குள்ள
திருமதி: ஜனகாசுதா ஸ்ரீநிவாஸன் என்பவர்
21.10.2004 அன்று எனக்களித்த
ஸ்பெஷல் விருந்துடன் கூடிய
அன்பளிப்புப் பொக்கிஷம்
[5] பொக்கிஷங்களைவிட
பொக்கிஷமாய் உணரப்படும்
இன்றைய நம்
இன்றைய நம்
அத்யாவஸ்ய தேவைகள்
காசே தான் கடவுளப்பா!
”பணம் என்னடா பணம் பணம்
குணம்தானடா நிரந்தரம்”
எனப் பாட்டுப்பாடலாம்!
ஆனால் பணம் இல்லாதவன்
இன்று பிணம் அல்லவா !
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே!!
அது தான் இன்றைய உண்மையான நிலை.
அன்றாடத்தேவைகள்
அனைத்துக்கும்
துட்டு மட்டுமே
பிரதானத் தேவையாய் உள்ளது.
துட்டைவிட பெரிய
பொக்கிஷமும் உண்டோ?
தொடரும்
இந்தப் ’பொக்கிஷம்’ தொடரின்
மிகவும் விறுவிறுப்பான அடுத்த பகுதி
01.04.2013 திங்கட்கிழமையன்று
வெளியிடப்படும்.
என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்
@@@@@
24.03.2013 ஞாயிறு அன்று, குழந்தை செல்வி ரோஷ்ணி அவர்கள் முதன் முதலாக எங்கள் இல்லத்திற்கு வருகை தந்தது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
செல்வி ரோஷ்ணி தன் பெற்றோர்களுடன் வந்திருந்ததால், இசையுடன் கூடிய பாடலை இந்தப்பதிவினில் இணைக்க எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது.
திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள், காலத்தினால் செய்த இந்த உதவிக்கு, என் மனமார்ந்த இனிய நன்றிகளை இங்கு பதிவுசெய்து கொள்கிறேன்.
பல திறமைகள் கொண்ட உங்களது numismatics (பழைய நாணய சேமிப்பு) வியக்க வைத்தது.
பதிலளிநீக்குஎல்லாவற்றையும் போட்டுவிட்டு காசேதான் கடவுளடா என்று பாட்டும் பாடிவிட்டீர்கள்!
Ranjani Narayanan March 27, 2013 at 7:54 AM
நீக்குவாங்கோ, வணக்கம். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
//பல திறமைகள் கொண்ட உங்களது numismatics (பழைய நாணய சேமிப்பு) வியக்க வைத்தது.//
நிறைய சேர்த்து வைத்திருந்தேன். நடுவில் விரும்பிக்கேட்ட ப்ல குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டேன். இப்போது என்னிடம் மிகக்குறைவாகவே உள்ளன.
//எல்லாவற்றையும் போட்டுவிட்டு காசேதான் கடவுளடா என்று பாட்டும் பாடிவிட்டீர்கள்!//
ஆமாம். காசு இல்லாமல் பொக்கிஷங்கள் மட்டும் இருந்து என்ன பயன்? பொக்கிஷங்களைப்பற்றி பதிவிடவே காசுதானே வேண்டியதாக உள்ளது. [Electric Bill, Telephone Bill, Internet Broad Band Bill முதலியன கட்டவே பணம் தானே வேண்டியதாக உள்ளது.]
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
ஹையாஆஆஅ இன்னக்கு நான் தான் ஃபஸ்டூஊஊஊஊ
பதிலளிநீக்குB H E Lபாடல் அழகு, நம் ஆலை ஓர் ஆலயம்.கருத்துள்ள வரிகள்.50 ஆண்டு10 கிராம் தங்க நாணயம்,பணி ஓய்வு நினைவுப்பரிசு,தமிழ் சிறப்பு வார்த்தை, தமிழ்க்கவிதை,அவசர மருத்துவசிகிச்சை கார்டு,பழைய அரை அணா நாணயம்,10 ரூபாய் நாணயம்100 ரூபாய் நோட்டில் பறக்கும் அனுமார் ,துபாய் வீட்டில் கிடைத்த பரிசு, பணக்கட்டுகள், செக் புக்,. இந்தவாட்டி பொக்கிஷங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு.ஆமா ஒரு சந்தேகம் பழைய அரை அணா சதுரமா இருக்கும் இல்லியா வெள்ளைகலர், மற்றும் மஞ்சக்கலரில். காலணாதானே வட்டமாக செப்பு கலரில் இருக்கும் இல்லியா? ஏதானும் தப்பா கேட்டிருந்தா சாரி. என் அம்மா பழைய நாணயங்கள் சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவங்க அதான் .
பூந்தளிர் March 27, 2013 at 8:20 AM
நீக்குவாங்கோ பூந்தளிர், வணக்கம்.
//ஹையாஆஆஅ இன்னக்கு நான் தான் ஃபஸ்டூஊஊஊஊ//
ஆமாம் நீங்க தான் ஃபஸ்டூஊஊஊஊ [அதிரடி அதிராவுக்கு அக்காவா இருப்பீங்க போலிருக்கு ;) ]
//இந்தவாட்டி பொக்கிஷங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு.//
சந்தோஷம்.
//ஆமா ஒரு சந்தேகம் பழைய அரை அணா சதுரமா இருக்கும் இல்லியா வெள்ளைகலர், மற்றும் மஞ்சக்கலரில். காலணாதானே வட்டமாக செப்பு கலரில் இருக்கும் இல்லியா? //
நீங்க சொல்வதெல்லாம் 1900 முதல் 1960 வரை புழக்கத்தில் இருந்த நாணயங்கள். காலணாவில் கூட ஓட்டைக்கலணாவும் உண்டு, இங்கு நான் காட்டியுள்ள் அரை அணா மாதிரியே முழு வடிவ காலணாவும் உண்டு காலணாவுக்கும் கீழே தம்படி என்ற ஒரு மிக்ச்சிறிய ரவுண்ட் நாணயமும் இருந்தது. காலணாவுக்கு 3 தம்படிகள். ஒரு ரூபாய்க்கு 192 தம்படிக்கள். என் 5 வயது முதல் 10 வயது வரை 1955 முதல் 1960 வரை இந்த தம்படி உள்ப்ட எல்லாக்காசுகளையும் நானே உபயோகித்துள்ளேன்.
1957 இல் நான் ஒரு ஓட்டைக்காலணாவைக் கடையில் கொடுத்து 2 கம்பர்கட்டுகள் வாங்கிக்கொண்டு, மீதி ஒரு தம்படி காசையும் பெற்றுள்ளேன்.
1960 இல் தான் நயாபைசா அறிமுகம் செய்தார்கள். ஒரு ரூபாய்க்கு 100 நயாபைசா என நிர்ணயித்தார்கள்.
அதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா, 25 பைசா, 50 பைசா என புழக்கத்தில் நாணயங்கள் கொண்டு வரப்பட்டன. பிறகு படிப்படியாக ஒவ்வொன்றாக மதிப்பேதும் இல்லாமல் செல்லாது என அறிவித்து விட்டர்கள். இப்போது 50பைசா நாணயம் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
1965 வரை இந்த எல்லா நயாபைசாக்களுடனும், அணாக்களும் புழக்கத்தில் இருந்து வந்த்ன. பிறகு தான் அவைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
நான் காட்டியுள்ளது 1835-1900 வரையில் புழக்கத்தில் இருந்துள்ள அரை அணா காசு.
//ஏதானும் தப்பா கேட்டிருந்தா சாரி.//
இதில் தப்பேதும் இல்லை. இதெல்லாம் மாறிவரும் சரித்திரம் தான். சுவாரஸ்யமான விஷயங்களே. ஒரு காலத்தில் என்னிடம் நான் சொன்ன எல்லாவிதமான காசுகளும் நிறைய இருந்தன. பிறகு எல்லாவற்றையும் யார் யாருக்கோ கொடுத்து விட்டேன்.
ஏதோ ஒருசில மட்டுமே இப்போது என்னிடம் உள்ளன.
//என் அம்மா பழைய நாணயங்கள் சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவங்க அதான் //
சந்தோஷம். அவர்களிடம் உள்ளவற்றை நீங்கள் வாங்கிப் போட்டோ எடுத்து பதிவாகப்போடுங்கோ..
தங்களின் அன்பான் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடேங்கப்பா எப்படி இவ்வளவு நுனுக்கமாகவும், எதையும் மறக்காமல் ஓவ்வொர் அசைவையும் எழுதி இருக்கிங்க
பதிலளிநீக்குJaleela Kamal March 27, 2013 at 8:20 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அடேங்கப்பா எப்படி இவ்வளவு நுனுக்கமாகவும், எதையும் மறக்காமல் ஓவ்வொர் அசைவையும் எழுதி இருக்கிங்க//
தோண்டத்தோண்ட கிடைக்கும் புதையல் போல் கையில் அகப்படும் பொக்கிஷங்களை எல்லாம் எடுத்து ஏதோ எழுதி வருகிறேன்.
நாணயங்கள் முன்பு நானும் சேர்த்து வைத்திருந்தேன். பிறகு இடமாற்றம் ஊர் மாற்றம். எல்லாம் ஓவ்வொரு இடத்தில் இருக்கு
பதிலளிநீக்குJaleela Kamal March 27, 2013 at 8:21 AM
நீக்கு//நாணயங்கள் முன்பு நானும் சேர்த்து வைத்திருந்தேன். பிறகு இடமாற்றம் ஊர் மாற்றம். எல்லாம் ஓவ்வொரு இடத்தில் இருக்கு//
எல்லாவற்றையும் தேடி ஒருங்கிணைத்துக் கொண்டுவந்து அழகாக ஓர் பதிவாக வெளியிடுங்கோ.
பாடல் வரிகள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குஅனைத்து விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்.
Jaleela Kamal March 27, 2013 at 8:23 AM
நீக்கு//பாடல் வரிகள் எல்லாம் மிக அருமை. அனைத்து விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்.//
மிக்க சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அந்த நாள் ஞாபகம் பகிர்வுகள் அருமை.பகிர்ந்தவைகள் சுவாரசியமானவைகளே!..
பதிலளிநீக்குAsiya Omar March 27, 2013 at 8:38 AM
நீக்கு//அந்த நாள் ஞாபகம் பகிர்வுகள் அருமை. பகிர்ந்தவைகள் சுவாரசியமானவைகளே!..//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான சுவாரஸ்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
BHEL துவங்கி வெற்றிகரமாக
பதிலளிநீக்கு50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி
[ 1956-2006 ]
BHEL நிர்வாகம் எனக்களித்த
10 கிராம் எடையுள்ள சுத்தத்தங்க நாணயம்
தங்கமான பொக்கிஷப் பரிசுக்கு
சந்தோஷமான வாழ்த்துகள் ..பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி March 27, 2013 at 8:38 AM
நீக்குவாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ.
தங்களுக்கு என் வந்தனங்கள்.
*****BHEL துவங்கி வெற்றிகரமாக 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி [ 1956-2006 ] BHEL நிர்வாகம் எனக்களித்த
10 கிராம் எடையுள்ள சுத்தத்தங்க நாணயம்*****
//தங்கமான பொக்கிஷப் பரிசுக்கு சந்தோஷமான வாழ்த்துகள் பாராட்டுக்கள்..//
தங்கமான பொக்கிஷம் போன்ற தங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
இன்று வெளியிடப்படும் ஐந்து ரூபாய் நாணயங்களுக்கும் ஐம்பது பைசா நாணயங்களுக்கும் உருவத்தில் வித்யாசமே தெரியாமல், தேய்ந்து போய் மிகச்சிறியதாக உள்ளது என்பது, மிகவும் வேத்னை அளிக்கும் ஓர் விஷயமாகும்.//
பதிலளிநீக்குமதிப்பே காணாமல் போய்விட்டதற்குத்தானே
வருத்தப்பட வேண்டும் ..??!!
இராஜராஜேஸ்வரி March 27, 2013 at 8:40 AM
நீக்கு*****இன்று வெளியிடப்படும் ஐந்து ரூபாய் நாணயங்களுக்கும் ஐம்பது பைசா நாணயங்களுக்கும் உருவத்தில் வித்யாசமே தெரியாமல், தேய்ந்து போய் மிகச்சிறியதாக உள்ளது என்பது, மிகவும் வேத்னை அளிக்கும் ஓர் விஷயமாகும்.*****
//மதிப்பே காணாமல் போய்விட்டதற்குத்தானே வருத்தப்பட வேண்டும் ..??!!//
ஆமாம். உருவம் சிறுத்துப்போனது மட்டுமல்லாமல், பணத்தின் மதிப்பும் காணாமல் போய் விட்டது என்பது தான் உண்மை. நீங்கள் சொல்லுவது மிகவும் மதிப்பு வாய்ந்ததும், கருத்தில் கொள்ளவேண்டியதுமான பொருளாதார விஷயமே தான்.
178 YEARS OLD COIN !! ;)
பதிலளிநீக்குவியப்பளிக்கும் மதிப்பு மிக்க நாணயம் ...
இராஜராஜேஸ்வரி March 27, 2013 at 8:43 AM
நீக்கு***** 178 YEARS OLD COIN !! ;) *****
//வியப்பளிக்கும் மதிப்பு மிக்க நாணயம் //
OLD is GOLD என்கிறீர்களோ! ;) மகிழ்ச்சி.
விருதுகளுக்கு வாழ்த்துகள். அரையணா பார்க்கத் தந்தமைக்கு நன்றி. பத்து ரூபாய் நாணயம் நினைவில் இருக்கிறது.
பதிலளிநீக்குராமலக்ஷ்மி March 27, 2013 at 8:44 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//விருதுகளுக்கு வாழ்த்துகள். அரையணா பார்க்கத் தந்தமைக்கு நன்றி. பத்து ரூபாய் நாணயம் நினைவில் இருக்கிறது.//
சந்தோஷம். தங்களின் அன்பான வருகை + வாழ்த்துகள் + கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
”பணம் என்னடா பணம் பணம்
பதிலளிநீக்குகுணம்தானடா நிரந்தரம்”
எனப் பாட்டுப்பாடலாம்!
ஆனால் பணம் இல்லாதவன்
இன்று பிணம் அல்லவா !
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே!!
அது தான் இன்றைய உண்மையான நிலை.//
அன்றிலிருந்து இன்றுவரை என்று பழைய கதையையே சொல்லி பெருமை பேசிக்கொண்டிராமல் காலத்திற்கேற்ப பரிணாம வளர்ச்சியடைந்த பொக்கிஷங்களைய்ம் காட்சிப்படுத்தி அப் -டேட் ஆக இருப்பதற்குப் பாராட்டுக்கள்...
இராஜராஜேஸ்வரி March 27, 2013 at 8:47 AM
நீக்கு*****
”பணம் என்னடா பணம் பணம்
குணம்தானடா நிரந்தரம்”
எனப் பாட்டுப்பாடலாம்!
ஆனால் பணம் இல்லாதவன்
இன்று பிணம் அல்லவா !
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே!!
அது தான் இன்றைய உண்மையான நிலை.//
*****
//அன்றிலிருந்து இன்றுவரை என்று பழைய கதையையே சொல்லி பெருமை பேசிக்கொண்டிராமல் காலத்திற்கேற்ப பரிணாம வளர்ச்சியடைந்த பொக்கிஷங்களையும் காட்சிப்படுத்தி அப் -டேட் ஆக இருப்பதற்குப் பாராட்டுக்கள்...//
;)))))
ஒரு கீரைக்கட்டு ரூ. 15, ஒரு நீளமான சதைப்பத்தான முருங்கைக்காய் ரூ. 10, ஒரு பனைஓலை விசிறி ரூ. 10 என விற்கப்படுகிறது.
நிறைவாக ஓர் 2 நாட்களுக்குத் தேவையான காய்கறிகள், தேங்காய், தக்காளி, பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி முதலியன வாங்கிவரவே ரூ. 200க்கு குறையாமல் எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. அரிசி, பருப்பு எண்ணெய் என எல்லா மளிகை சாமான்களுமே ராக்கெட் வேகத்தில் தினமும் உயர்ந்து வருகின்றன.
காப்பித்தூள் + ஜீனி + பால் இவைகளுக்கு மட்டும், சாப்பாட்டுப் பொருட்களை விட அதிகம் ஒதுக்க வேண்டியுள்ளது.
கட்டுக்கட்டாக பணம் எடுத்துச்சென்றால் தான், எதையும் கணக்குப் பார்க்காமல் வாங்கிவர முடிகிறது.
Gas Cylinder, Electric Bill, Telephone Bill, Internet connection Bill, Mobile Recharge, வீட்டு வரி, சொத்துவரி என எவ்வளவோ செலவுகள் வேறு சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே தான் அன்றாடம் நமக்குப் பலவழிகளில் தேவைப்படும் பணமே மிகச்சிறந்த பொக்கிஷம் எனச்சொல்லியுள்ளேன்.
நீங்கள் வாங்கிய விருதுகளுக்கு என் வாழ்த்துக்கள். இவ்வளவு பழங்கால நாணயங்களை எப்படித்தான் பத்திரமாக வைத்திருன்திர்களோ?
பதிலளிநீக்குஉங்கள் பொக்கிஷங்களிலேயே கவர்ச்சியானது " கட்டு கட்டான நோட்டு "தான் .
உங்கள் பாடல் வரிகள் அருமை.
வாழ்த்துக்கள்....
rajalakshmi paramasivam March 27, 2013 at 9:00 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//நீங்கள் வாங்கிய விருதுகளுக்கு என் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி, சந்தோஷம்.
//இவ்வளவு பழங்கால நாணயங்களை எப்படித்தான் பத்திரமாக வைத்திருந்தீர்களோ? //
பரம்பரையாக பலதலைமுறைகளாக எங்கள் வீட்டில் அந்த அரை அணா நாணயம் இருந்திருக்கும். என்னால் அது இப்போதும் ஒரு ஓரமாக என் பணப்பெட்டியில் பாதுகாத்து வரப்படுகிறது.
//உங்கள் பொக்கிஷங்களிலேயே கவர்ச்சியானது " கட்டு கட்டான நோட்டு "தான் .//
படத்தில் காட்டியுள்ள தொகை ஒரு சுண்டைக்காய் அளவு தான். மொத்தமாக எண்ணினால் அதில் அரை லட்சம் கூட இருக்காது.
நான் பணியில் கருவூலப் பொறுப்பதிகாரியாக இருந்தபோது, ஒருமுறை என் இருக்கையைச் சுற்றிலுமாக 8 கோடியே 75 லட்சம் ரூபாய் கரன்ஸி நோட்டுக்கள், வீடு கட்டும்போது செங்கற்களை அடுக்குவது போக அடுக்கி வைத்திருந்து, நான் மறுநாள் பொறுப்பாக பட்டுவாடா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. விடிய விடிய அதற்கான முன் ஏற்பாடுகளில் மூழ்கினேன்.
அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் வேலை நிறுத்தம் மேற்கொண்டதால், எங்கள் ஊழியர்கள் சுமார் 10000 பேர்களுக்கு, என் அலுவலகம் மூலம், என் மேற்பார்வையில் பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அது ஒரு மிகப்பெரிய கல்யாணம் போல 2-3 நாட்களுக்குத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.
அப்போதெல்லாம் ATM போன்ற வசதிகளோ, கம்ப்யூட்டர்களோ, கேஷ் கவுண்டிங் மெஷின்களோ இல்லாத காலக்கட்டம் அது.
அப்போது கையில் கேமரா இல்லாததால் அதை என்னால் படமாக்கி வைக்க முடியாமல் போய் விட்டது.
.
//உங்கள் பாடல் வரிகள் அருமை. வாழ்த்துக்கள்....//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள்.
பாடல் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநீங்கள் எழுதிய பாடல் பல மொழிகளில் மொழி பெயர்த்து பாடி குறுந்தகடு வெளியிட்டது
BHEL நிர்வாகம் உங்களுக்கு அளித்துள்ள
மிகப்பெரிய அங்கீகாரம் தான்.
உங்கள் சேமிப்புகள் நன்றாக இருக்கிறது.
ரீ எங்கள் கல்யாணத்தில் 10 ரூபாய் நாணயம் என் சின்ன மாமானார் கொடுத்தார்கள் அதை பத்திரமாக நாங்களும் வைத்து இருக்கிறோம். அம்மாவின் நாணய சேமிப்புகளில் உள்ள நாண்யங்கள் என்னிடம் இருக்கிறது.
ரூபாய் நோட்டில் அனுமன் வந்து உங்களுக்கு நல்ல பலத்தையும், நலத்தையும் அருளி இருக்கிறார்.
அன்றாட தேவைக்கு பணம் இல்லையென்றால் கஷ்டம் தான்.
விலைவாசி உயர்ந்து கொண்டு போகும் இந்த நாளில் ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் நம்மைவிட கஷ்டபடுபவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி என் மனதை வாட்டும்.
உங்கள் பொக்கிஷ் பகிர்வுகள் அனைத்தும் அருமை.
கோமதி அரசு March 27, 2013 at 9:18 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//பாடல் நன்றாக இருக்கிறது. நீங்கள் எழுதிய பாடல் பல மொழிகளில் மொழி பெயர்த்து பாடி குறுந்தகடு வெளியிட்டது
BHEL நிர்வாகம் உங்களுக்கு அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் தான்.//
மிகவும் சந்தோஷம், மேடம்.
//உங்கள் சேமிப்புகள் நன்றாக இருக்கிறது.//
மகிழ்ச்சி.
//எங்கள் கல்யாணத்தில் 10 ரூபாய் நாணயம் என் சின்ன மாமானார் கொடுத்தார்கள் அதை பத்திரமாக நாங்களும் வைத்து இருக்கிறோம். அம்மாவின் நாணய சேமிப்புகளில் உள்ள நாணயங்கள் என்னிடம் இருக்கிறது.//
எல்லாவற்றையும் சேர்த்து போட்டோ எடுத்து ஒரு பதிவாகப் போடுங்கோ.
//ரூபாய் நோட்டில் அனுமன் வந்து உங்களுக்கு நல்ல பலத்தையும், நலத்தையும் அருளி இருக்கிறார்.//
ஆமாம். அந்த நோட்டு என்னிடம் வந்ததும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. செல்வழிக்காமல் பத்திரப்படுத்தி விட்டேன்.
//அன்றாட தேவைக்கு பணம் இல்லையென்றால் கஷ்டம் தான்.
விலைவாசி உயர்ந்து கொண்டு போகும் இந்த நாளில் ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் நம்மைவிட கஷ்டபடுபவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி என் மனதை வாட்டும்.//
ஆமாம் மேடம். மிகவும் கஷ்டம் தான். எல்லாப்பொருட்களின் விலைகளும் ஒரேயடியாக ஏறிக்கொண்டே போகின்றன.
//உங்கள் பொக்கிஷ் பகிர்வுகள் அனைத்தும் அருமை//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
ஆலய மணி பாடல் அழகாய் இசைத்தது. பிடிச்ச பொக்கிஷ பொருள் 178 வயசான அண்ணா...! ஆமா பதிவுக்கு நடுவில எறும்பு ஓடுதே.. ஓ இந்த பொக்கிஷமெல்லாம் எறும்பு போல் சுறு சுறுப்பா உழைச்சி சேமிச்சதுன்னு சொல்கிறது. மகிழ்ச்சி...மிக்க நன்றி!
பதிலளிநீக்குஉஷா அன்பரசு March 27, 2013 at 9:21 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஆலய மணி பாடல் அழகாய் இசைத்தது.//
கேட்டீங்களா? மிக்க மகிழ்ச்சி.
//பிடிச்ச பொக்கிஷ பொருள் 178 வயசான அணா...!//
சந்தோஷம்.
//ஆமா பதிவுக்கு நடுவில எறும்பு ஓடுதே.. ஓ இந்த பொக்கிஷமெல்லாம் எறும்பு போல் சுறு சுறுப்பா உழைச்சி சேமிச்சதுன்னு சொல்கிறது.//
அதே அதே ! அந்த எறும்பெல்லாம் வேறொரு மிகச்சுறுசுறுப்பான உழைப்பாளி பதிவரின் [மேம்] வலைத்தளத்திலிருந்து, என் இந்தப்பதிவுக்கு இடம் பெயர்ந்தவையாக்கும்.. ;)))))
// மகிழ்ச்சி...மிக்க நன்றி!//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்
பாடல் வரிகள் மிகவும் அருமை... ஸ்ரீ ஹனுமார் உட்பட அனைத்தும் அருமையான பொக்கிசங்கள்...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் March 27, 2013 at 9:35 AM
நீக்குவாருங்கள், சார். வணக்கம்.
//பாடல் வரிகள் மிகவும் அருமை... ஸ்ரீ ஹனுமார் உட்பட அனைத்தும் அருமையான பொக்கிசங்கள்...//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள்.
வாழ்த்துக்கள் ஐயா,பொக்கிஷங்கள் அனைத்தும் சூப்பர்..நாணயங்களை பார்க்கதந்தமைக்கு மிக்க நன்றி!!
பதிலளிநீக்குS.Menaga March 27, 2013 at 9:53 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//வாழ்த்துக்கள் ஐயா,பொக்கிஷங்கள் அனைத்தும் சூப்பர்.. நாணயங்களை பார்க்கதந்தமைக்கு மிக்க நன்றி!!//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள்.
மிகமிக அருமை. உங்கள் கவிதையும் இசையோடுகூடிய பாடலாகி அற்புதமாக இருக்கிறது.
பதிலளிநீக்குகதை கவிதைன்னு மிகவும் அருமையாக பொருள்நயமுடன் எழுதுகிறீர்கள்.
இன்னும் சேர்த்துவைத்திருக்கும் பழைய அருகிப்போன நாணயங்கள், மற்றும் நினைவுப் பொருட்கள் எல்லாமே அற்புதம். ஆச்சரியப்படும் வகையில் உங்கள் பொக்கிஷப் பொருட்கள் யாவும் இருக்கின்றன.
இப்படிக் கையில் இருக்கின்ற அத்தனை பொருட்களுடன் சேமித்துவைத்திருக்கும் கட்டுக்கட்டான நோட்டையுமா காட்டுவார்கள்....:)
பத்திரம் இரவு திருடன் உள்ளே வர வாய்ப்பு இருக்கிறது...:)
அயராத முயற்சியும் அதன் பலன்களும் பெற்றுக்கொண்ட பெருமை மிக்கவர் நீங்கள் ஐயா!
பகிர்வுக்கு மிக்கநன்றி. வாழ்த்துக்கள்!
இளமதி March 27, 2013 at 10:35 AM
நீக்குவாங்கோம்மா வாங்கோ, வணக்கம்.
//மிகமிக அருமை. உங்கள் கவிதையும் இசையோடுகூடிய பாடலாகி அற்புதமாக இருக்கிறது.//
எனக்கு மிகவும் பிடித்தமான கவிதாயினி வாயால் இதனைக்கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
//கதை கவிதைன்னு மிகவும் அருமையாக பொருள்நயமுடன் எழுதுகிறீர்கள்.//
ஏதோ எனக்குத்தெரிந்ததைக் கிறுக்குகிறேன். நீங்க ஏதேதோ உயர்வாச்சொல்லுகிறீர்கள். அவைகள் உண்மையாயின் எனக்கும் மகிழ்ச்சியே..
//இன்னும் சேர்த்துவைத்திருக்கும் பழைய அருகிப்போன நாணயங்கள், மற்றும் நினைவுப் பொருட்கள் எல்லாமே அற்புதம். ஆச்சரியப்படும் வகையில் உங்கள் பொக்கிஷப் பொருட்கள் யாவும் இருக்கின்றன.//
பொக்கிஷங்களை நான் பொக்கிஷங்களாக நினைத்து மதித்து எப்போதுமே என்னுடன் பாதுகாக்கவே நினைத்தாலும், பொக்கிஷங்கள் சில என்னைவிட்டு எங்கோ விலகிப் போய்விடுகின்றன. ஏதோ அகப்பட்டவற்றில் சிலவற்றை மட்டுமே என்னால் இங்கு காட்டமுடிகிறது. நினைவலைகளில் உள்ள பொக்கிஷங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை தகுந்த போட்டோக்கள் மூலம் வெளியிட முடியாத நிலைமையில் நான். என்ன செய்வது சொல்லுங்கோ. ;(
//இப்படிக் கையில் இருக்கின்ற அத்தனை பொருட்களுடன் சேமித்துவைத்திருக்கும் கட்டுக்கட்டான நோட்டையுமா காட்டுவார்கள்....:) பத்திரம் இரவு திருடன் உள்ளே வர வாய்ப்பு இருக்கிறது...:)//
அதெல்லாம் திருடன் யாரும் வரமாட்டான். ஏதாவது பயமுறுத்தாதீங்கோ. மேலும் இரவெல்லாம் நான் விழித்துக்கொண்டு தானே இருக்கிறேன். அப்படி எவனாவது வந்தால் நானே எடுத்துக்கொடுத்து விடுவேன். இல்லாதவன் தானே திருட வரப்போகிறான். ஏதோ நம்மிடம் இருப்பதைக் கொஞ்சம் கொடுப்போமே ;)
//அயராத முயற்சியும் அதன் பலன்களும் பெற்றுக்கொண்ட பெருமை மிக்கவர் நீங்கள் ஐயா!//
பலன்கள் எதையும் நான் இன்னும் பெறவே இல்லையாக்கும். அதனால் அயராத முயற்சிகள் இனியும் தொடர்கிறதாக்கும். ;)
//பகிர்வுக்கு மிக்கநன்றி. வாழ்த்துக்கள்!//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகளம்மா..
பொக்கிஷங்களை மிக அருமையாக பாதுகாத்து வந்திருக்கிறீர்கள். கவிதையும் அருமை! நாணயங்கள் அனைத்தும் அருமை!!
பதிலளிநீக்குமனோ சாமிநாதன் March 27, 2013 at 12:39 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//பொக்கிஷங்களை மிக அருமையாக பாதுகாத்து வந்திருக்கிறீர்கள். கவிதையும் அருமை! நாணயங்கள் அனைத்தும் அருமை!!//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
விருதுகள் சில சமயங்களில்தான்
பதிலளிநீக்குஇது போன்று மிகச் சரியான இடத்தில் சேர்கின்றன
அதனால் பெருமையும் கொள்கின்றன
மனம் கவர்ந்த அருமையான பகிர்வு
தொடர வாழ்த்துக்கள்
Ramani S March 27, 2013 at 2:58 PM
நீக்குவருங்கள் சார், வணக்கம் சார்.
//விருதுகள் சில சமயங்களில்தான் இது போன்று மிகச் சரியான இடத்தில் சேர்கின்றன. அதனால் பெருமையும் கொள்கின்றன. மனம் கவர்ந்த அருமையான பகிர்வு. தொடர வாழ்த்துக்கள்//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள்
வாழ்த்துக்கள் அய்யா.
பதிலளிநீக்குகரந்தை ஜெயக்குமார் March 27, 2013 at 4:59 PM
நீக்கு//வாழ்த்துக்கள் ஐயா.//
வாருங்கள், வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
மிக சுவாரஸ்யமான பகுதி. நாணய விவரங்கள் சுவாரச்யத்துக்குக் காரணம். இப்போது அந்தக் கால மூன்று பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, வளைவுகள் கொண்ட பத்து பைசா, தாமரை அச்சு பொறிக்கப் பட்ட தங்க நிற இருபது பைசா எல்லாம் கூடப் பொக்கிஷங்கள்! தபால்தலை சேகரித்திருப்பீர்களே... அவை அடுத்த பகுதியிலா?
பதிலளிநீக்குஇந்தப் பாடலைப் பாடியது யார் என்று குறிப்பிடவில்லையே...
ஸ்ரீராம். March 27, 2013 at 5:53 PM
நீக்குவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.
//மிக சுவாரஸ்யமான பகுதி. நாணய விவரங்கள் சுவாரச்யத்துக்குக் காரணம்.//
சந்தோஷம்.
//இப்போது அந்தக் கால மூன்று பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, வளைவுகள் கொண்ட பத்து பைசா, தாமரை அச்சு பொறிக்கப் பட்ட தங்க நிற இருபது பைசா எல்லாம் கூடப் பொக்கிஷங்கள்!//
ஆமாம். முன்பு அவைகளெல்லாம் நிறைய நான் பெரிய டின் டின்னாகச் சேர்த்து வைத்திருந்தேன். ஒருநாள் கொண்டுபோய் எல்லாவற்றையும் அப்படியே கோயில் உண்டியலில் போட்டு விட்டேன். இப்போது மாதிரிக்குக்கூட என்னிடம் ஏதும் இல்லை.
//தபால்தலை சேகரித்திருப்பீர்களே... அவை அடுத்த பகுதியிலா?//
இல்லை. இதுவரை தபால்தலைகள் ஏதும் நான் சேர்த்தது இல்லை. பள்ளியில் படிக்கும் போது கொஞ்சம் சேர்த்தது உண்டு.
//இந்தப் பாடலைப் பாடியது யார் என்று குறிப்பிடவில்லையே...//
அது BHEL இல் உள்ள ஒரு MUSIC TEAM .
Producer: Mr. M.Balasubramanian
Dy. General Manager/Production [Tubular Products] BHEL Tiruchi-14
[Now he is also retired from BHEL]
Mobile Phone 94426270141 / 9894068582
Music: Mr. A. DENIS, BHEL, TIRUCHI-14
Flute & Co-ordination: Mr, J. FRANCIS, BHEL, TIRUCHI-14
Lyric: V.GOPALAKRISHNAN [myself]
[Retd. ACCOUNTS OFFICER/CASH, BHEL, TIRUCHI-14]
CD ஆக்கப்பட்டு, 2009 இல் Mr. B. PRASADA RAO, BHEL Chairman & Managing Director அவர்கள் திருச்சிக்கு விஜயம் செய்தபோது, MD Hall என்ற மிகப்பெரிய விழா மண்டபத்தில் குறுந்தகடு BHEL CMD அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
BHEL இல் நடைபெறும் பொது விழாக்களிலும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பப்படுகிறது.
முதல் மூன்று மாதங்களுக்கு, ஊழியர்கள் பெரும்பாலும் கூடும் கேண்டீனில் ஒலிபரப்பியுள்ளனர்.
அதுபோல முதல் ஒரு மாதத்திற்கு, BHEL திருச்சியில் உள்ள ஆயிரக்கணக்கான லோக்கல் டெலிபோனில் டயல் டோனுக்கு பதிலாக இந்தப்பாடலை இசையுடன் வெளியிட்டுள்ளார்கள்.
இதன் குறுந்தகடுகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து BHEL அலுவலக LIBRARY களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,
இந்த என் கவிதை BHEL KIRAN என்ற BHEL HOUSE JOURNAL இல் 2008 ஆண்டு வெளியிடப்பட்டு, எனக்கு ஓர் பரிசும் அளிக்கப்பட்டது.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆர்வத்துடன் கேட்டுள்ள ‘பாடியவர் யார்?’ என்ற கேள்விக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்.
நாணயமான மனிதரின் நாணயமான வாழ்க்கையே ஒரு பொக்கிஷம். அதிலும் எதையும் மதித்துப் பாதுகாப்பவரிடம்தான் பொக்கிஷங்கள் தங்கும்.
பதிலளிநீக்குபொறுமையும் உங்களிடம் உள்ள இன்னோரு பொக்கிஷம் என்று புரிய வைத்திருக்கிறீர்கள்.
மனம் நிறைந்த வாழ்த்துகள். ரோஷ்ணி செல்லம் அழகாப் போஸ் கொடுத்திருகிறாள்.
வல்லிசிம்ஹன் March 27, 2013 at 5:58 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நாணயமான மனிதரின் நாணயமான வாழ்க்கையே ஒரு பொக்கிஷம். அதிலும் எதையும் மதித்துப் பாதுகாப்பவரிடம்தான் பொக்கிஷங்கள் தங்கும்.
பொறுமையும் உங்களிடம் உள்ள இன்னோரு பொக்கிஷம் என்று புரிய வைத்திருக்கிறீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.//
மிகவும் சந்தோஷம்,.
//ரோஷ்ணி செல்லம் அழகாப் போஸ் கொடுத்திருகிறாள்.//
ஆமாம். அந்தக்குழந்தையை நான் 4-5 போட்டோக்கள் எடுத்தேன். அவற்றில் இது மிகச்சிறப்பாக அமைந்து விட்டது. அதனால் இதையே வெளியிட்டுள்ளேன்.
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள்.
இன்று லயாக்குட்டிக்கு சோறூட்ட குருவாயூர் கிளம்புகிறோம்.
பதிலளிநீக்குபடித்து விட்டேன். வந்து மீண்டும் பின்னூட்டம் கொடுக்கிறேன்.
அப்படியே இந்த ரூபாய் எல்லாம் வீட்டில் வைக்காதீர்கள். எல்லா பொக்கிஷங்களையும் பாங்க் லாக்கர்ல கொண்டு வெச்சுடுங்கோ.
ஆத்துக்கும், உங்களுக்கும் ஒரு பெரிய பூசணிக்காய் வாங்கி சுத்திப் போட்டுடுங்கோ.
JAYANTHI RAMANI March 27, 2013 at 7:42 PM
நீக்குவாங்கோ ... வணக்கம் ;)
//இன்று லயாக்குட்டிக்கு சோறூட்ட குருவாயூர் கிளம்புகிறோம். //
அழகாக முறைப்படி ’ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நதியில் லயாக்குட்டிக்கு அன்னப்பிராஸனம் செய்ய’ என்று சொல்லக்கூடாதா?
லயாக்குட்டிக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
நல்லபடியாகப் போய்விட்டு, எனக்காகவும் கொஞ்சூண்டு வேண்டிக்கொண்டு, நல்லபடியாக வந்து சேரவும்.
//படித்து விட்டேன். வந்து மீண்டும் பின்னூட்டம் கொடுக்கிறேன்.//
ஆஹா, ரொம்பவும் சந்தோஷம்.
//அப்படியே இந்த ரூபாய் எல்லாம் வீட்டில் வைக்காதீர்கள். எல்லா பொக்கிஷங்களையும் பாங்க் லாக்கர்ல கொண்டு வெச்சுடுங்கோ. //
சரி, தங்கள் உத்தரவுப்படியே உடனே கிளம்பிட்டேன்.
//ஆத்துக்கும், உங்களுக்கும் ஒரு பெரிய பூசணிக்காய் வாங்கி சுத்திப் போட்டுடுங்கோ.//
சரி, செஞ்சுடறேன்.
எனக்கு பெர்சனல் செக்ரெடரியாக வருவதற்கு முன்பே, இப்படி ஒரேயடியாக அதிகாரம் பண்ணுகிறீர்களே! ;)))))
ஆனால் எல்லாமே நல்லதுக்குத்தான் சொல்றேள். சந்தோஷமே.
மிகவும் மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், எச்சரிக்கைகள் கொடுத்துள்ளதற்கும், என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள்.
செல்வி ரோஷ்ணி தன் பெற்றோர்களுடன் வந்திருந்ததால், இசையுடன் கூடிய பாடலை இந்தப்பதிவினில் இணைக்க எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது.
பதிலளிநீக்குதிரு. வெங்கட் நாகராஜ் அவர்கள், காலத்தினால் செய்த இந்த உதவிக்கு, என் மனமார்ந்த இனிய நன்றிகளை இங்கு பதிவுசெய்து கொள்கிறேன்.//
செல்வி ரோஷ்ணியின் உதவியால் பாடல்
அருமையாக கேட்க முடிந்தது ..
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
இராஜராஜேஸ்வரி March 27, 2013 at 8:05 PM
நீக்குவாங்கோ, மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
//செல்வி ரோஷ்ணியின் உதவியால் பாடல் அருமையாக கேட்க முடிந்தது. மனம் நிறைந்த இனிய நன்றிகள்.//
பாடலை அருமையாகக் கேட்க முடிந்ததாகச் சொல்வது மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிக்க நன்றி.
பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷமாக
பதிலளிநீக்குஅருமை
K.s.s.Rajh March 27, 2013 at 8:29 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷமாக அருமை//
அன்பான வருகைக்கும், அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
என்னாச்சு. உடனுக்குடனே பதில் வந்துடுமே? என்ன பதில் போட்டிருக்கீங்கன்னு வந்துபாத்தா ஒரே ஏமாத்தமாயிட்டு.
பதிலளிநீக்கு//பூந்தளிர் March 27, 2013 at 9:06 PM//
நீக்குவாங்கோ பூந்தளிர், மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது,
//என்னாச்சு. உடனுக்குடனே பதில் வந்துடுமே? என்ன பதில் போட்டிருக்கீங்கன்னு வந்துபாத்தா ஒரே ஏமாத்தமாயிட்டு.//
இப்போதெல்லாம் பதிவு வெளியிட்டு 24 மணி நேரங்கள் கழித்தோ அல்லது ஒரு 40 பேர்களின் கருத்துகள் வந்த பிறகோ மட்டுமே, பதில் கொடுப்பது என என் வழக்கத்தை சற்றே நான் மாற்றிக்கொண்டுள்ளேன். அதனால் தன் இந்த தாமதம்.
நீங்கள் 2 மாதங்களாக ஊரில் இல்லாததால், உங்களுக்கு இதுபற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் இனி ஏமாறாதீங்கோ.
இப்போ எல்லோருக்கும் வரிசையாக பதில் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்.
எல்லாமே விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்தான். பத்து ரூபாய் நாணயங்கள் சமீபத்திலும் வெளியிடப்பட்டதைப் பார்த்திருக்கேன். பழைய நாணயத்தையும் கண்ணுல காமிச்சதுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅமைதிச்சாரல் March 27, 2013 at 9:13 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//எல்லாமே விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்தான்.//
சந்தோஷம்.
//பத்து ரூபாய் நாணயங்கள் சமீபத்திலும் வெளியிடப்பட்டதைப் பார்த்திருக்கேன்.//
அது என்னிடம் இப்போது கூட உள்ளது. அதையும் கூட நான் பதிவில் காண்பித்திருக்கலாம் தான். ஏனோ தோன்றவில்லை.
//பழைய நாணயத்தையும் கண்ணுல காமிச்சதுக்கு நன்றி.//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
பாடலின் கருத்துகளும் இசையமைப்பும் குரலிசையும் அருமையாய் ரசிக்கவைத்தது..
பதிலளிநீக்குபாரத் மிகுமின் தொழிலகத்தின் பெருமையை
பாரெங்கும் பறைசாற்றும் வகையில் உணர்த்தி மலர்ந்து
பாங்காய் மணம் பரப்புகிறது ..பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி March 27, 2013 at 10:10 PM
நீக்குவாங்கோ, மீண்டும் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
//பாடலின் கருத்துகளும் இசையமைப்பும் குரலிசையும் அருமையாய் ரசிக்கவைத்தது.//
பாடலைப்பொறுமையாகக் கேட்டு ரஸித்துள்ளதற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். .
//பாரத மிகுமின் தொழிலகத்தின் பெருமையை பாரெங்கும் பறைசாற்றும் வகையில் உணர்த்தி மலர்ந்து பாங்காய் மணம் பரப்புகிறது ..பாராட்டுக்கள்..//
பாங்காய் மணம் பரப்பும் கருத்தினைக்கூறியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளதுங்க.
தங்களின் இந்தப் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
வாங்கிய அத்தனை நினைவு பரிசுகளுக்கும் பாராட்டுக்கள்..!வாழ்த்துக்கள்.! கதை, கட்டுரை,பாட்டு,நகைசுவை எல்லாவற்றிலும் வல்லவர் ஆக உள்ளீர்கள்..கடந்த பதிவில் பொக்கிஷமாக நகைகளை போட்டிருந்தீர்கள்..இந்த பதிவில் பணக்கட்டுகளை போட்டிருக்கீங்க.பாத்து அண்ணே..எல்லாவற்றையும் பத்திரமா வையுங்க. இசையோடு கூடிய பாட்டு முழுவதும் கேட்டேன்.ஆலையின் மேல் உங்களுக்கிருந்த ஈடுபாடு தெளிவாக தெரிகிறது. உழைப்பின் மேல் உள்ள நம்பிக்கை புரிகிறது.
பதிலளிநீக்குராதா ராணி March 27, 2013 at 10:50 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//வாங்கிய அத்தனை நினைவு பரிசுகளுக்கும் பாராட்டுக்கள்..!வாழ்த்துக்கள்.! கதை, கட்டுரை, பாட்டு, நகைசுவை எல்லாவற்றிலும் வல்லவர் ஆக உள்ளீர்கள்..//
சந்தோஷம். மிக்க நன்றி.
//கடந்த பதிவில் பொக்கிஷமாக நகைகளை போட்டிருந்தீர்கள்..இந்த பதிவில் பணக்கட்டுகளை போட்டிருக்கீங்க.பாத்து அண்ணே..எல்லாவற்றையும் பத்திரமா வையுங்க.//
ஆகட்டும். எல்லாம் பத்திரமாகவே உள்ளன. நானே நினைத்தாலும் உடனே எடுக்க முடியாதபடி பத்திரமான இடத்திலேயே அவைகளை இப்போது நான் வைத்துள்ளேன். தங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி.
>>>>>>>>
VGK >>>> திருமதி ராதா ராணி அவர்கள் [2]
நீக்கு//இசையோடு கூடிய பாட்டு முழுவதும் கேட்டேன்.//
மிகவும் சந்தோஷம். நன்றி.
.
//ஆலையின் மேல் உங்களுக்கிருந்த ஈடுபாடு தெளிவாக தெரிகிறது. உழைப்பின் மேல் உள்ள நம்பிக்கை புரிகிறது.//
ஆம். எனக்கு நான் பணியாற்றிய ஆலையின் மேல் அளவு கடந்த பிரியங்கள் உண்டு. நான் அங்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்தேன். என் உழைப்பிற்கான பலனும், அங்கீகாரங்களும் அவ்வப்போது கிடைக்கப்பெற்றேன்.
நான் 04.11.1970 இல் இங்கு BHEL திருச்சியில் வேலையில் சேர்ந்தேன்.
அதே மாதம் எனக்கு, Life Insurance Corporation of India [L.I.C.,] State Bank of India [S.B.I.,] Central Space Research Institute [CSRC] Karaikkudi, Postal & Telegraphs [P&T] ஆகிய இடங்களிலிருந்து வேலைக்கான பணி நியமன உத்தரவுகள் கிடைத்தன.
நான் என் வயதான் தாயார் தகப்பனாரை கவனித்துக்கொண்டு, உள்ளூரிலேயே அதாவது திருச்சியிலேயே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே, இந்த BHEL வேலையில் போய்ச்சேர்ந்தேன்.
நான் BHEL இல் பணியில் சேரும் போது என் பதவியின் பெயர் Lower Division Clerk [LDC]. அடிப்படைச் சம்பளம் ரூ. 140 வருட இங்கிரிமெண்ட் வெறும் 4 ரூபாய் மட்டுமே. பஞ்சப்படி இதர படிகள் எல்லாம் சேர்த்து முதல் மாத சம்பளம் ரூ. 250 மட்டுமே.
ஆனால் அப்போது ஒரு பவுன் அதாவது எட்டு கிராம் தங்கத்தின் விலை ரூ. 200 மட்டுமே.
அதே ஆலையில் கடுமையாகப்பணியாற்றி, என் தனித்தன்மைகளை வெளிக்காட்டி, பல பதவி உய்ர்வுகள் [மொத்தம் 8 பிரமோஷன்ஸ்] பெற்று சூப்பர்வைசராகவும், பிறகு அதிகாரியாகவும் ஆக்கப்பட்டேன்.
நான் பணி ஓய்வு பெறும்போது, ஆரம்ப சம்பளமான ரூ 250 போல 200 மடங்கு சம்பளம் வாங்கினேன். இன்றும் அங்கு நான் நீடித்திருந்தால், சமீபத்திய WAGE REVISION படி என் சம்பளம் 400 மடங்காக ஆகியிருக்கும்.
ஆறு ஸ்தான இலக்க ஊதியம் வாங்க முடியாமல் வெளியேறி விட்டோமோ என்ற ஒரு சிறு குறை மட்டும் என் மனதில் இப்போதும் உண்டு.
>>>>>>
VGK >>>> திருமதி ராதா ராணி அவர்கள் [3]
நீக்குஒரு அலுவலகம் என்றால் எப்படி இருக்கப்பட வேண்டும் என நான் கற்பனை செய்து வைத்திருந்தேனோ அதைவிட மிக்வும் பிரமிப்புடன் நான் பணியாற்றிய அலுவலகம் அமைந்திருந்ததில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
நான் பணியில் சேர்ந்தபோது அங்கு சுமார் 8000 தொழிலாளிகள் பணி புரிந்து வந்தனர்.அதன் பிறகு அந்த எண்ணிக்கை ஒரு காலகட்டத்தில் 15000 ஆக உயர்ந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டது.
லஞ்ச லாவண்யம் என்றால் என்னவென்றே தெரியத அலுவலகமாகத் திகழ்ந்ததில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
ஸ்டேஷனரி பொருட்களுக்குப் பஞ்சமில்லாத அலுவலகம். நாம் கேட்கமலேயே தொடர்ச்சியாக எது வேண்டுமானாலும் சுலபமாகக் கிடைக்கும்..
செக்யூரிடி செக்-அப் கெடுபிடிகள் அதிகமாக இருந்ததால், எந்த ஒரு ஸ்டேஷனரி பொருட்களும் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச்செல்லும் அவல நிலை இல்லாமல் இருந்ததும் எனக்கு மிகவும் மகிழ்வளித்தது.
ஊழியர்க்ளுக்கு பசியாற்றும் கேண்டீன் மிகச்சிறப்பாகவும், மிகவும் சுத்தமாகவும், ஒரு மிகப்பெரிய கல்யாண மண்ட்பம் போல செயல்பட்டு வந்ததில் மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
ஆங்காங்கே இது போல 5-6 கேண்டீன்கள். காலை 7 மணி முதல் 8 மணி வரை டிபன் கிடைக்கும். மதியம் 12 மணி முதல் 1 மணி வரை சாப்பாடும் டிபனும் கிடைக்கும். மாலை வேளையில் ஒருசில கேண்டீன்கள் மட்டும் செயல்படும். ஸ்நாக்ஸ் வழங்கப்படும். காஃபி டீ முதலியன ஒவ்வொரு அலுவலகக் கட்டடங்களிலும் காலை 9.30 க்கும் பிற்பகல் 2.30 க்கும் வழங்கப்படும்.
கேண்டீனில் வழங்கப்பட்டு வந்த அனைத்து உணவுகளும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்.
விலை மலிவோ ம்லிவு. அன்று முதல் இன்று வரை சுமார் 40 வருடங்களாக ஒரே விலையில் உள்ளன.
தொழிலாளர் நலம் கருதி காண்டீனை வெற்றிகரமாக நடத்த மட்டுமே வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் கம்பெனியால் மான்யமாக [SUBSIDY] வழங்கப்பட்டு வருகிறது.
>>>>>>>
VGK >>>> திருமதி ராதா ராணி அவர்கள் [4]
நீக்குகாலையில் தினமும் வழக்கமாக வெண்பொங்கல் சூடான சாம்பார் + சட்னியுடன் கிடைக்கும் : விலை 10 பைசா மட்டுமே
அத்துடன் காலையிலும் மதியமும் கீழ்க்கண்டவற்றில் ஏதாவது இரண்டு மூன்று ஐட்டம்ஸ்களும் கிடைக்கும்
ஊத்தப்பம் [கெட்டியான தோசை] விலை 15 பைசா மட்டுமே
மெது வடை. விலை 5 பைசா மட்டுமே
மஸால் வ்டை விலை 5 பைசா மட்டுமே
பஜ்ஜி விலை 5 பைசா மட்டுமே
இட்லி விலை 5 பைசா மட்டுமே
ரவா உப்புமா விலை 10 பைசா மட்டுமே
பூரி + உருளைக்கிழங்கு மஸால் 1 செட் விலை 15 பைசா மட்டுமே
சப்பாத்தி விலை 20 பைசா மட்டுமே
வெஜிட்பிள் பிரியாணி + வெங்காய பச்ச்டி விலை 25 பைசா மட்டுமே
சூடான சாம்பர் சாதம் விலை 15 பைசா மட்டுமே
சுவையான் தயிர் சாதம் விலை 15 பைசா மட்டுமே
நில்க்கடலை / கொத்துக்கடலை / பட்டாணி / பாசிப்பயறு போன்ற ஏதாவது ஒரு சுண்ட்ல் விலை 10 பைசா மட்டுமே
மிக்ஸர் ./ தூள் பக்கோடா / காராச்சேவ் போன்றவை ஏதாவது ஒன்று - ஒரு ப்ளேட் விலை 10 பைசா மட்டுமே
டீ ஒரு கப் விலை 6 பைசா மட்டுமே
காஃபி ஒரு கப் விலை 12 பைசா மட்டுமே
முழுச்சாப்பாடு:
சாதம், ஒரு கறி அல்லது கூட்டு, நல்ல சாம்பார், நல்ல ரஸம், கெட்டி மோர், ஊறுகாய் + பொரித்த அப்பளம்
புழுங்கல் அரிசிசாதம் என்றால் இவை அனைத்தும் சேர்த்து: முழுச் சாப்பாட்டு விலை 50 பைசா மட்டுமே
பச்சரிசி சாதம் என்றால் இவை அனைத்தும் சேர்த்து: முழுச் சாப்பாட்டுவிலை 60 பைசா மட்டுமே
இவ்வாறு மிகவும் ருசியாக, பசிவேளைக்கு, மிகக்குறைந்த விலையில், பெற்ற தாயார் போன்று அன்புடன் அன்னமிட்ட கேண்டீனை என் நாக்கும், வயிறும் என்றுமே மறக்காது.
அது ஒரு பொற்காலம். ;)))))
இது போன்று வேளாவேளைக்கு தினமும் தொடர்ச்சியாக அன்னதானம் செய்துவரும் புண்ணியத்தினாலேயே BHEL ஒவ்வொரு ஆண்டும் கோடிகோடியாக லாபம் ஈட்டி வருகிறது என்று நான் விளையாட்டாக மற்ற தொழிலாளிகளிடம் சொல்லி மகிழ்வது உண்டு.
என் பாடலின் கடைசி வரிகளும் அதையே தான் சொல்லுகின்றன:
”தாய்போல் நம்மை வளர்த்த நம் ஆலையைத்
தலையால் வணங்கிடுவோம் ஓர் ஆலயமாய்.”
oooooo
பாடல் மிக அருமையாக உள்ளது!
பதிலளிநீக்குகே. பி. ஜனா... March 27, 2013 at 11:34 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//பாடல் மிக அருமையாக உள்ளது!//
மிக்க மகிழ்ச்சி சார். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
woowwwaww!! gr8 efforts u have taken to update all these..n happy to knw that u r a numismatist like me..its nice and energetic to listen to d bhel song after a long time..now a days only very few people recognize d amenities and facilities given to them by their org..and i am proud that u r one among such handfuls..hats off to u
பதிலளிநீக்குgirijasridhar March 28, 2013 at 1:10 AM
நீக்குவா .... கிரிஜா. இங்கு உன் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
//woowwwaww!! gr8 efforts u have taken to update all these..n happy to knw that u r a numismatist like me..its nice and energetic to listen to d bhel song after a long time..//
மிகவும் சந்தோஷம்.
//now a days only very few people recognize d amenities and facilities given to them by their org..and i am proud that u r one among such handfuls..hats off to u//
நன்றி மறப்பது நல்லது இல்லை, அல்லவா!
நான் மேலே திருமதி ராதா ராணி அவர்களுக்குச் சொல்லியுள்ள பதில்களையெல்லாம் பொறுமையாகப்படித்துப் பார். தயவுசெய்து உன் ஆத்துக்காரருக்கும் அவற்றையெல்லாம் படித்துக்காமி.
அன்புடன் VGK
Perfectionist ...i have also learnt from u as to how to b perfect and how to plan up before starting up a task..
பதிலளிநீக்குgirijasridhar March 28, 2013 at 1:39 AM
நீக்குவா ... கிரிஜா. உன் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.
//Perfectionist ...i have also learnt from u as to how to b perfect and how to plan up before starting up a task..//
ஆம், நாம் செய்யும் எந்த வேலையும் முழுமையாகவும், நம் மனதுக்கே திருப்தியாகவும் அமைய, நாம் நன்கு திட்டமிடல் வேண்டும்.
முதலில் நாம் செய்யும் வேலையில் நமக்கு ஓர் முழு ஈடுபாடும் ஆசையும் வேண்டும்.
அதை செய்வதற்கு முன் மனதில் அதைப்பற்றிய ஒரு சிறிய கற்பனையில் படமாக நாம் வரைந்து கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால், எதுவும் மறந்து போகாமல் இருக்க சிறுசிறு குறிப்புகளை ஒரு தாளின் எழுதி வைத்துக்கொள்வதும் நல்லது.
இவ்வாறு தெளிவாக மனதில் கற்பனைசெய்து, படம் வரைந்து கொண்டு, முழு ஈடுபாட்டுடன் ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் போது, அது திருப்தியாக PERFECT ஆகத்தான் முடியும்.
நம் மனதுக்கு முழுத்திருப்தி ஏற்படும்வரை, அதில் தேவைப்படும் சிறுசிறு மாற்றங்களைக் கொண்டுவந்து, பிறகே அதற்கு நாம் இறுதி வடிவம் கொடுக்க வேண்டும்.
வீட்டின் குப்பைகளைக் கூட்டுவதாக இருந்தாலும், ஒட்டடை அடிப்பதாக இருந்தாலும், ஓவியம் வரைவதாக இருந்தாலும், நல்லதொரு சமையல் செய்வதாக இருந்தாலும், எல்லாவற்றிற்குமே இந்தத்திட்டமிடல் மிகவும் அவசியமே.
சரிவரத் திட்டமிடாமல் அவசரத்தில் அள்ளித்தெளிக்கும் எந்த செயலிலும் PERFECTNESS என்பதே இருக்க முடியாது.
திட்டமிட சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், செயலை செய்து முடிக்க மிகக் குறைந்த நேரமே போதுமானதாக இருக்கும்.
அவ்வாறு இல்லாவிட்டால் REWORK + REJECTION களை மட்டுமே, நாம் சந்திக்க நேரிடும். அது கடைசியில் ஒருவேலைக்கு இருவேலையாகி விடும்.
இதனால் நம் பொன்னான நேரம், பொருள், உழைப்பு, அடக்கவிலை என எல்லாமே அதிகரிக்கும். கடைசியில் மன உளைச்சலும், திருப்தியின்மையுமே மிஞ்சும்.
திட்டமிட்ட செயலே எப்போதும் தெவிட்டாத இன்பம் தரும்.
அது நமக்கும் மனதுக்கு முழுத் திருப்தியாக இருக்கும்.
பிறரும் நம்மைப் பாராட்டி மகிழ்விப்பார்கள்.
ALL THE BEST GIRIJA !
உங்களின் அனைத்து அங்கீகாரங்களுக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசிறு வயதில் என்னிடம் கூட ஒரு பத்து ரூபாய் நாணயம் இருந்தது... அம்மா,அப்பா வெளியூர் செல்லும்போது என்னை ஏமாற்றிச் செல்ல கொடுத்துச் சென்றது.. ரொம்ம நாள் பெருமையாக வைத்திருந்தேன்.. நினைவுகளை ஞாபகப்படுத்தியது உங்கள் பதிவு... நன்றி ஐயா...
ezhil March 28, 2013 at 2:17 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//உங்களின் அனைத்து அங்கீகாரங்களுக்கும் வாழ்த்துக்கள்...//
சந்தோஷம். மிக்க நன்றி.
//சிறு வயதில் என்னிடம் கூட ஒரு பத்து ரூபாய் நாணயம் இருந்தது... அம்மா,அப்பா வெளியூர் செல்லும்போது என்னை ஏமாற்றிச் செல்ல கொடுத்துச் சென்றது.. ரொம்ம நாள் பெருமையாக வைத்திருந்தேன்.. நினைவுகளை ஞாபகப்படுத்தியது உங்கள் பதிவு... நன்றி ஐயா...//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகை + வாழ்த்துகள் + பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது போன்ற எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
ஆளாக்கிய அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய
பதிலளிநீக்குசரியான நன்றியை பாடலாய் பாடிடிங்க. சூப்பர்.
(1987 ல் உங்களது மின் சாதனங்களை (நீண்ட குழாய்கள்) மலேசிய அரசின் மின்சாரத்துறைக்கு வான் வழியாய் ஏரற்றுமதி செய்ய உங்களது ஏஜெண்டால் இயலாது
போக, நான் வேளை செய்த கம்பனி மூலம், ஏர் இந்தியா அலுவலகத்தினரின் அலோசணைப் படி
மலேசியன் ஏர்லயன் மூலமாக அனுப்பி வைத்திருக்கிறேன்)
vasan March 28, 2013 at 4:17 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்! ;)
//ஆளாக்கிய அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய சரியான நன்றியை பாடலாய் பாடிட்டீங்க. சூப்பர்.//
சந்தோஷம் ... சார்.
//(1987 ல் உங்களது மின் சாதனங்களை (நீண்ட குழாய்கள்) மலேசிய அரசின் மின்சாரத்துறைக்கு வான் வழியாய் ஏரற்றுமதி செய்ய உங்களது ஏஜெண்டால் இயலாது போக, நான் வேலை செய்த கம்பனி மூலம், ஏர் இந்தியா அலுவலகத்தினரின் அலோசணைப் படி மலேசியன் ஏர்லயன் மூலமாக அனுப்பி வைத்திருக்கிறேன்)//
ஆஹா, இது ஒரு சுவையானத் தகவலாக உள்ளது. பொருட்கள் உற்பத்தி செய்யும் அடக்கவிலையைவிட, அதிகமாகவே இந்த TRANSPORTATION னுக்குத்தான் செலவு செய்ய வேண்டியதாக உள்ளது.
போக்குவரத்து இல்லாமல் உற்பத்தி செய்த பொருட்கள் எது தான் எங்குதான் நகர முடியும்?
எல்லாம் சேர்ந்தது தான் உலகம். நாட்டின் நாடி நரம்புகளே உங்களின் போக்குவரத்துத்துறை தான். மகிழ்ச்சி.
அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Dear Sir,
பதிலளிநீக்குI am amazing having seen your continuous work and contributions.. Keep it up....
PRJ
Advocate P.R.Jayarajan March 28, 2013 at 5:11 AM
நீக்குவாருங்கள் சார், வணக்கம் சார்.
//Dear Sir,
I am amazing having seen your continuous work and contributions.. Keep it up.... - PRJ//
தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
Thanks for the reply sir....
நீக்குOK Sir ;)
நீக்குAmazing.................
பதிலளிநீக்குWhat a person you Sir...........
The collections of coins....very interesting......
The awards....Worth presented to you Sir....
Really very interesting....
viji
viji March 28, 2013 at 5:49 AM
நீக்குவாங்கோ விஜி மேடம், வணக்கம்.
//Amazing.................
What a person you Sir...........
The collections of coins....very interesting......
The awards....Worth presented to you Sir....
Really very interesting....
viji //
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வியப்பளிக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!
பதிலளிநீக்குபொக்கிஷம் – நான்காம் அத்தியாயம், தாங்கள் பணிபுரிந்த BHEL நிறுவனத்தின் மீது நீங்கள் வைத்து இருக்கும் விசுவாசத்தினையும், உங்கள் உழைப்பிற்கு அவர்கள் தந்த கௌரவத்தினை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
// செல்வி ரோஷ்ணி தன் பெற்றோர்களுடன் வந்திருந்ததால், இசையுடன் கூடிய பாடலை இந்தப்பதிவினில் இணைக்க எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள், காலத்தினால் செய்த இந்த உதவிக்கு, என் மனமார்ந்த இனிய நன்றிகளை இங்கு பதிவுசெய்து கொள்கிறேன். //
செல்வி ரோஷிணிக்கும், அவர் பெற்றோர் வெங்கட்நாகராஜ் தம்பதியினருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்!
(உங்கள் பதிவினை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். இது ஒரு தகவலுக்காக மட்டும்)
தி.தமிழ் இளங்கோ March 28, 2013 at 6:10 AM
நீக்குஅன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!//
வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//பொக்கிஷம் – நான்காம் அத்தியாயம், தாங்கள் பணிபுரிந்த BHEL நிறுவனத்தின் மீது நீங்கள் வைத்து இருக்கும் விசுவாசத்தினையும், உங்கள் உழைப்பிற்கு அவர்கள் தந்த கௌரவத்தினை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.//
மிகவும் சந்தோஷம் ஐயா. அதே அதே!
//செல்வி ரோஷிணிக்கும், அவர் பெற்றோர் வெங்கட்நாகராஜ் தம்பதியினருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்!//
அவர்களையும் இங்கு வாழ்த்தியுள்ளதற்கு மிக்க நன்றி ஐயா.
//(உங்கள் பதிவினை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். இது ஒரு தகவலுக்காக மட்டும்)//
மிக்க நன்றி ஐயா.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.
வாழ்த்துகள்...
பதிலளிநீக்குபாதுகாக்கப்பட வேண்டிய தகவல்
சேக்கனா M. நிஜாம் March 28, 2013 at 6:57 AM
நீக்கு//வாழ்த்துகள்... பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்//
வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
எதைப் பிடித்துக்கொள்வது,எப்படி பாராட்டினால் நன்றாக இருக்கும்
பதிலளிநீக்குஇப்படி ஒரு நிமிஷத்தில் பல யோசனைகள் வந்து விட்டதெனக்கு
அந்த ப்யூர் வெள்ளி மொட்டைதலை ராஜான்னு சொல்வாளே, எட்டாம் எட்வர்டோ என்னவோ,அப்புரம், ஐந்தாம் ஜார்ஜ் அவாளுடயதெல்லாம் உங்களுக்கு கிடைக்கலியா? அதெல்லாம் சேத்து வைத்து உருக்கி வெள்ளிப்பாத்திரமெல்லாம் எங்கஊரில் செய்தார்கள். கவர்மென்டுக்கு தெரியக்கூடாது. அழகழகா அப்புரம்,நிக்கல்காயின்கள், பொத்த காலணா, முன்னாடி தம்படிகள்,
எல்லாம் அடுக்கடுக்காய் ஞாபகம் வருகிறது. ஆனால் இந்த அரையணா மறந்து போச்சு. உங்கள் பொக்கிஷம் மிகவும் அருமை. பாடல் அருமை. ஆர்வமான பொக்கிஷங்களை சேர்க்கும் போது இந்த ப்ளாக் வகையராக்களில்லை. இப்போது இந்த உங்கள் ப்ளாகும், எல்லோருக்கும் உங்கள் பொக்கிஷங்களை அழகாக எடுத்துரைக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்தது குறித்து
உங்கள் ப்ளாகும் ஒரு பொக்கிஷமாகி விட்டது. ஒரு ரூபாய் ஓதியிட்டு, வாத்தியார் பதினாயிரம்கட்டி வராகன் என்றுதான் ஓதியிடுவார். பதினாயிரம் கட்டி வராகன் கொடுத்து ஓதியிடச் சொன்னால் என்ன கணக்கை அவர் சொல்லி ஓதியிடுவார்.? அந்த மாதிரி பொக்கிஷங்களைப் பாராட்ட அகராதியில் வார்த்தைகள் இருக்கிரதா பார்க்கணும். பொக்கிஷம் என்பது பொக்கிஷமே.
இப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆசிகளுடனும், அன்புடனும்
KamatchiMarch 28, 2013 at 8:32 AM
நீக்குவாங்கோ மாமி, நமஸ்காரம்.
//எதைப் பிடித்துக்கொள்வது,எப்படி பாராட்டினால் நன்றாக இருக்கும்? இப்படி ஒரு நிமிஷத்தில் பல யோசனைகள் வந்து விட்டதெனக்கு//
மிகவும் சந்தோஷம் மாமி.
ராஜாத்தலை போட்ட காசுகள் நிறைய நானும் அந்தக்காலத்தில் கையாண்டுள்ளேன். அதில் நிறைய வெள்ளி இருந்ததால் அரசாங்கத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டு செல்லாது என அறிவித்து விட்டார்கள். நினைவுள்ளது. நானே ஸ்டேட் பேங்கில் போய் நிறைய காசுகளைக் கொடுத்து நோட்டாக மாற்றி வந்ததும் ஞாபகத்தில் உள்ளது.
>>>>>
VGK >>>>> திருமதி காமாக்ஷி மாமி [2]
நீக்குஆமாம் மாமி, பிற்காலத்தில் கணினி என்று ஒன்று கண்டு பிடிப்பார்கள். அதில் வலைத்தளம் என்று ஒன்று இருக்கும். அதில் தமிழில் நாம் எழுதுவோம் என தெரியாமல் போய் விட்டது தான் எனக்கும். கனவில் கூட நினைக்காத அதிசயம் தான் இது.
இது முன்பே தெரிந்திருந்தால், நான் இதுவரை சேர்த்து வைத்திருந்த ஏராளமான இந்தப்பழங்காலக் காசுகளை இழந்திருக்கவே மாட்டேன்.
அவற்றை மட்டும் வைத்தே ஒரு பத்து பதிவுகளாவது போட்டிருப்பேன்.
அவ்ளோ காசுகள் என்னிடம் இருந்தன. காசிக்குப்போனபோது வாராணசியிலும், அலஹாபாத்திலும் கங்கையில் நிறைய காசுகளை வீசி எறிந்தோம். போட்டோ கூட எடுத்து வைக்கத் தோன்றாமல் போய்விட்டது நினைத்தால் வருத்தமாகத்தான் உள்ளது.
>>>>>>
VGK >>>>> திருமதி காமாக்ஷி மாமி [3]
நீக்கு//இப்போது இந்த உங்கள் ப்ளாகும், எல்லோருக்கும் உங்கள் பொக்கிஷங்களை அழகாக எடுத்துரைக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்தது குறித்து, உங்கள் ப்ளாகும் ஒரு பொக்கிஷமாகி விட்டது.//
நீங்கள் சொல்வதைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
//ஒரு ரூபாய் ஓதியிட்டு, வாத்தியார் பதினாயிரம்கட்டி வராகன் என்றுதான் ஓதியிடுவார். பதினாயிரம் கட்டி வராகன் கொடுத்து ஓதியிடச் சொன்னால் என்ன கணக்கை அவர் சொல்லி ஓதியிடுவார்.? //
நல்ல நகைச்சுவை தான் இது. எங்கள் ஊர் எங்காத்து வாத்யார் கல்யாண சீர் வகையறாக்களை ஓதியிட்டுச்சொல்லும் போது, நாலு லாரி நிறைய குஞ்சாலாடு, மூணு லாரி நிறைய முறுக்கு, எட்டு லாரி தேன்குழல், பத்து லாரி பருப்புத்தேங்காய்கள், அண்டா அண்டாவா திரட்டுப்பால் அது இதுன்னு அடிச்சு விடுவார்.
ஒரே சிரிப்பாக இருக்கும்.
//அந்த மாதிரி பொக்கிஷங்களைப் பாராட்ட அகராதியில் வார்த்தைகள் இருக்கிறதான்னு பார்க்கணும். பொக்கிஷம் என்பது பொக்கிஷமே. இப்படித்தான் நான் நினைக்கிறேன்.//
ஆமாம். மிக்க மகிழ்ச்சி மாமி.
// ஆசிகளுடனும், அன்புடனும்//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக நேரில் பேசுவது போலவே மிக நீ....ண்.....ட கருத்துக்களுக்கும், ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + ஆசிகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
அநேக நமஸ்காரங்களுடன்,
கோபாலகிருஷ்ணன்
உங்களை நினைக்கப் பெருமையாக இருக்கிறது சார் .பாடல் கேட்டேன் . விருதுகள் கண்டேன் . அப்பப்பா எத்தனை பொக்கிஷங்கள். உங்கள் அளவு கடந்த மகிழ்ச்சியின் அடையாளங்கள்
பதிலளிநீக்குசந்திரகௌரி March 28, 2013 at 9:48 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//உங்களை நினைக்கப் பெருமையாக இருக்கிறது சார் .பாடல் கேட்டேன் . விருதுகள் கண்டேன் . அப்பப்பா எத்தனை பொக்கிஷங்கள். உங்கள் அளவு கடந்த மகிழ்ச்சியின் அடையாளங்கள்//
மிகவும் சந்தோஷம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மகிழ்ச்சியுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
அத்தனை பொக்கிசங்களும் அருமை. ரசித்து வாசித்தேன்.
பதிலளிநீக்குஇனிய நன்றி. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
kovaikkaviMarch 28, 2013 at 10:32 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
அத்தனை பொக்கிசங்களும் அருமை. ரசித்து வாசித்தேன்.
இனிய நன்றி. பாராட்டுகள். ---- வேதா. இலங்காதிலகம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான , கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், ரசித்து வாசித்ததற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
பொக்கிஷங்கள் அனைத்தும் வியக்கவைத்தன. அதிலும் அவை யாவற்றையும் இன்றும் மிக அழகாகப் பேணிக்காக்கும் தங்கள் பண்பு இன்னும் மெச்சவேண்டிய விஷயம். பாராட்டுகள் வை.கோ.சார். பாரதமிகுமின் நிலையம் பற்றிய தங்கள் பாடல் எழுச்சிபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருந்தது. அதை இசையுடன் கேட்கும்வண்ணம் இணைப்பு தந்தமைக்கு மிகவும் நன்றி. மனம் நிறைந்த பாராட்டுகள் சார்.
பதிலளிநீக்குகீதமஞ்சரிMarch 28, 2013 at 4:50 PM
நீக்குவாருங்கள் மேடம். வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பின் உங்களை இங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நலம் தானே?
//பொக்கிஷங்கள் அனைத்தும் வியக்கவைத்தன. அதிலும் அவை யாவற்றையும் இன்றும் மிக அழகாகப் பேணிக்காக்கும் தங்கள் பண்பு இன்னும் மெச்சவேண்டிய விஷயம். பாராட்டுகள் வை.கோ.சார்.//
தங்களின் பாராட்டுக்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
//பாரதமிகுமின் நிலையம் பற்றிய தங்கள் பாடல் எழுச்சிபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருந்தது. அதை இசையுடன் கேட்கும்வண்ணம் இணைப்பு தந்தமைக்கு மிகவும் நன்றி. மனம் நிறைந்த பாராட்டுகள் சார்.//
பாடலை ரஸித்துக்கேட்டிருப்பீர்கள் எனத்தோன்றுகிறது. மகிழ்ச்சி.
நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கும், வியந்து அளித்துள்ள அருமையான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், ரசிப்புக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
ரோஷ்ணியை இப்போது தான் பார்த்தேன். வெங்கட், ஆதி, ரோஷ்ணி வருகையும், பாடல் பதிவுக்கு அவர்கள் உதவியதற்கும் வெங்கட் அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குரோஷ்ணியை டெல்லியில் இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன், அருமையான குழந்தை. படம் வரைவதில் ஆர்வம் அதிகம். எனக்கு பூ படம் வரைந்து தந்தாள் குழந்தை.
கோமதி அரசு March 28, 2013 at 7:09 PM
நீக்குவாருங்கள் மேடம். வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.
//ரோஷ்ணியை இப்போது தான் பார்த்தேன். வெங்கட், ஆதி, ரோஷ்ணி வருகையும், பாடல் பதிவுக்கு அவர்கள் உதவியதற்கும் வெங்கட் அவர்களுக்கு நன்றி.//
அமாம் மேடம். அவர்களின் வருகையினால் மட்டுமே என்னால் இந்தப்பாடலை இந்தப்பதிவினில் இணைக்க முடிந்தது.
ஒவ்வொரு முறை இங்கு அவர் வரும் போதும் நான் வெங்கட்ஜியை நன்கு பயன் படுத்திக்கொள்கிறேன். ஏற்கனவே சில உதவிகள் எனக்கு இதுபோல அவர் செய்து கொடுத்துள்ளார்.
//ரோஷ்ணியை டெல்லியில் இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன், அருமையான குழந்தை.//
அப்படிய! சந்தோஷம்.
//படம் வரைவதில் ஆர்வம் அதிகம். எனக்கு பூ படம் வரைந்து தந்தாள் குழந்தை.//
அடடா, இதை நான் ஏனோ மறந்தே போனேன். எனக்கும் படம் வரையும் குழந்தைகளை மிகவும் பிடிக்கும்.
இருப்பினும் படம் வரைவதில் ஆர்வம் உள்ள அந்தக்குழந்தைக்கு மிகவும் பயன்படக்கூடிய பொருளாகத்தான் நான் அகஸ்மாத்தாகக் கொடுத்தனுப்பியுள்ளேன்.
தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அழகான புதிய தகவல்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
நயா பைசாவில் இ 2, 5, 10,20, 25, 50 இதெல்லாம் ஓகே, 3 பைசா இருந்துச்சா. நினைவில் இல்லே. நீங்க சொல்லும் கால கட்டத்தில் 192 காசுக்கு ஒரு ரூபா மதிப்பு இருந்துச்சு இல்லியா? நயா பைசா வந்ததும் அதுவே 100 காசுக்கு ஒரு ரூபா மதிப்பா சரிஞ்சுட்டுது இல்லியா? காத்துட்டுன்னு ஒன்னு கூட அம்மா கலெக்ஷனில் வச்சிருக்காங்க. நயா பைசாவிலும் 20 பைசா இருந்துச்சி அதிலும் தாமரைப்பூ ப்போட்ட காசுல கொஞ்சூண்டு தங்கம் கலந்திருப்பதாக நம்பி சாமிக்கு அந்த 20 பைசா பூ, குங்குமத்துடன் அர்ச்சனைகள் கூட செய்வாங்க. பார்த்திருக்கீங்களா?
பதிலளிநீக்குபூந்தளிர் March 28, 2013 at 9:32 PM
நீக்குவாங்கோ பூந்தளிர், வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.
//நயா பைசாவில் 2, 5, 10, 20, 25, 50 இதெல்லாம் ஓகே, 3 பைசா இருந்துச்சா. நினைவில் இல்லே.//
3 பைசாவும் உண்டும்மா, உண்டு.
ஒரு பைசா ரவுண்டாக காப்பரிலும், பிறகு சதுரமாக குட்டியூண்டாக நிக்கலிலும் வந்தது.
2 பைசா வளைவாக விளிம்பில் நெளிநெளியாக 10 பைசாவுக்கு பிறந்த குட்டிக் குழந்தை போல இருக்கும்.
3 பைசா என்பது அறுகோணம் போல இருக்கும். இதே அறுகோண வடிவத்தில் பிறகு 20 பைசா வெளியிடப்பட்டது. 3 பைசாவின் தாய்/தந்தை போல இருக்கும் இந்த அறுகோண 20 பைசாக்கள்.
இந்த எல்லாக்காசுகளுமே என்னிடம் எக்கச்சக்கமாக இருந்தது ஒரு காலத்தில்.
ப்ளாக்கில் பிற்காலத்தில் எழுதப்போறோம், பூந்தளிர் என்று ஒருத்தங்க பல சந்தேகங்கள் கேட்பாங்கோ என்றெல்லாம் தெரியாமல் போச்சு, எனக்கு.
அதனால் அவற்றை சேமிக்கவோ போட்டோ பிடிச்சு வைக்கவோ தவறி விட்டேன் நான் ;)
//நீங்க சொல்லும் கால கட்டத்தில் 192 காசுக்கு ஒரு ரூபா மதிப்பு இருந்துச்சு இல்லியா? நயா பைசா வந்ததும் அதுவே 100 காசுக்கு ஒரு ரூபா மதிப்பா சரிஞ்சுட்டுது இல்லியா?//
அப்படிச்சொல்ல முடியாது.192 என்பது பழைய பைசா அல்ல. அதற்கு தம்படி என்று பெயர்.
அதாவது ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். ஒரு அணாவுக்கு கீழே அரை அணா, கால் அணா என நாணயங்கள் உண்டு. அந்தக்காலணாவுக்கும் கீழே உள்ள மதிப்பு தான் தம்படி என்ற நாணயம்.
அதாவது ஒரு காலணா = 3 தம்படிகள்.
அதனால் 192 தம்படிகள் சேர்ந்தால் ஒரு முழு ரூபாய்க்கு சமம்.
64 காலணாக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய்க்கு சமம்.
16 முழு அணாக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய்க்கு சமம்.
1955 முதல் 1960 வரை பழைய தம்படிகளும், அணாக்களும், புதிய நயாபைசாக்களும் புழக்கத்தில் இருந்தன.
எல்லோரையும் குழப்போ குழப்பென்று குழப்பி வந்தன.
பஸ்ஸில் ஒரணா டிக்கெட் என்றால் ஒரணாவாகத் தந்தால் தான் கண்டக்டர் வாங்குவார்.
அதற்கு பதில் 6 நயா பைசா கொடுத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார். பஸ்ஸிலிருந்து நம்மை கீழே இறக்கி விடுவார்.
ஏனென்றால் ஒரு அணா என்பது ஆறேகால் நயாபைசாவுக்குச் சமம். ஒரு அணாவுக்கு பதில் 7 நயா பைசா கொடுக்க பயணிகள் யாருக்குமே அந்தக்காலக்கட்டத்தில் மனசு வராது.
4 பேர்களுக்கு சேர்த்து டிக்கெட் எடுத்தால் 25 நயாபைசா நாணயம் கொடுக்கலாம். கண்டக்டரும் பிரச்சனையின்றி வாங்கிக்கொள்வார்.
1960க்குப் பிறகு தான் இந்த அணாக்களையும், ரூபாய்க்கு 192 தம்படி என்பதையும் செல்லாது என எடுத்துவிட்டார்கள்.
மெட்ரிக் முறையான ஒரு ரூபாய்க்கு 100 நயா பைசாக்கள் என்ற எளிதில் அனைவருக்கும் புரியும் முறை மட்டும் அமுல் படுத்தப்பட்டது.
இதிலிருந்து வந்த குழப்பமும் ஒருவகையாகத் தீர்ந்தது.
1,2,3,5,10,20,25,50 ஆகிய பைசா அதாவது நயாபைசா நாணயங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.
25 பைசாவை கால் ரூபாய் என்றும், 50 பைசாவை அரை ரூபாய் என்றும், 50+25 சேர்ந்ததை முக்கால் ரூபாய் என்றும் சொல்லி வரும் வழக்கமும் இன்றும் வயதானவ்ர்களிடம் உள்ளது.
அதுபோல ஆரம்பத்தில் 1/2 ரூபாய் எனவும் 1/4 ரூபாய் எனவும் போடப்பட்ட நாணயங்களும் நம் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட்ன.
பிறகு தான் அவை முறையே 50 நயாபைசா என்றும் 25 நயாபைசா என்றும் போடப்பட்டு வெளியிடப்பட்டன.
ஓரளவு ஒரு பைசா முதல் 50 பைசா வரை இதுவரை பல வடிவங்களில் வெளியிடப்பட்ட நாணயங்கள் அனைத்தையும் உங்களுக்கு மெயில் மூலம் அனுப்பியுள்ளேன்.
அதில் உங்களுக்கே மறந்து போன 3 பைசாவும் உள்ளது. பாருங்கோ.
இப்போது சமீபத்தில் 50 பைசாவுக்குக் கீழ் உள்ள அனைத்து நாணயங்களும் செல்லாது என அறிவித்து விட்டார்கள்.
//காத்துட்டுன்னு ஒன்னு கூட அம்மா கலெக்ஷனில் வச்சிருக்காங்க.//
எனக்குத் தெரிந்தவரை ’துட்டு’ அல்லது ‘பணம்’ என்றால் 2 அணாவையே குறிக்கும். அதனால் கால்துட்டு என்றால் அரை அணாவாகத்தான் இருக்கக்கூடும். அதை வாங்கிப்பார்த்துவிட்டு, அதில் என்ன போட்டுள்ளது என எனக்கும் மெயில் மூலம் சொல்லுங்கோ.
//நயா பைசாவிலும் 20 பைசா இருந்துச்சி அதிலும் தாமரைப்பூப் போட்ட காசுல கொஞ்சூண்டு தங்கம் கலந்திருப்பதாக நம்பி சாமிக்கு அந்த 20 பைசா பூ, குங்குமத்துடன் அர்ச்சனைகள் கூட செய்வாங்க. பார்த்திருக்கீங்களா?//
நன்றாகத்தெரியும். நானே நிறைய வைத்திருந்தேன். அதில் தங்கமெல்லாம் ஒன்றும் கிடையாது. அதில் தாமரைப்பூ போட்டது, தாமரைப்பூ போடாதது என இரண்டு மட்டுமே உண்டு. மஞ்சள் கலராக பித்தளை போல இருக்கும். தாமரைப்பூ போட்டதை எல்லோரும் பதிக்கி வைத்துக்கொள்வார்கள். பூஜிக்கும் பயன் படுத்துவார்கள்.
அதன் பிறகு இதே 20 பைசா வட்டவடிவமாக இல்லாமல் அறுகோண வடிவத்தில் நிக்கலில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
அன்பான மீண்டும் வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், பூந்தளிர்.
ரோஷ்ணி அங்கே வந்திருந்தாளா? :))) இங்கேயும் வந்தாள். ஆனால் அவள் பேசியே நான் பார்த்ததில்லை. :))) இங்கே பேசக் கூச்சமாய் இருந்ததோ என்னமோ!
பதிலளிநீக்குஉங்கள் பொக்கிஷ நினைவுகளுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் பற்பல பொக்கிஷங்கள் சேர்க்கவும் வாழ்த்துகள். எல்லாமே அருமையான பொக்கிஷங்கள். அந்தக் காலத்து ஓட்டைக்காலணா, மஞ்சள் அரையணாவெல்லாம் கிடைக்கலையா?
Geetha Sambasivam March 29, 2013 at 1:00 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ரோஷ்ணி அங்கே வந்திருந்தாளா? :))) இங்கேயும் வந்தாள். ஆனால் அவள் பேசியே நான் பார்த்ததில்லை. :))) இங்கே பேசக் கூச்சமாய் இருந்ததோ என்னமோ!//
இங்கும் அந்தக்குழந்தை மிகவும் கூச்சமாகத்தான் இருந்தா. நானாகக் கொஞ்சம் பேச்சுக்கொடுத்தேன். போட்டோ எடுத்தேன்.
அடிக்கடி ஒருவரையொருவர் சந்தித்துப் பார்த்துப் பேசி பழகினால், குழந்தைகளின் கூச்சமெல்லாம் நாளடைவில் சரியாகிவிடும்.
//உங்கள் பொக்கிஷ நினைவுகளுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் பற்பல பொக்கிஷங்கள் சேர்க்கவும் வாழ்த்துகள். எல்லாமே அருமையான பொக்கிஷங்கள்.//
மிகவும் சந்தோஷம். நன்றி.
//அந்தக் காலத்து ஓட்டைக்காலணா, மஞ்சள் அரையணாவெல்லாம் கிடைக்கலையா?//
நான் பார்க்காத கையாளாத ரூபாய் நோட்டுக்களோ, நாணயங்களோ கிடையவே கிடையாது என்று சொல்லலாம்.
அவைகளைப் பத்திரப்படுத்தத் தான் நான் தவறிவிட்டேன். பிற்காலத்தில் ப்ளாக்கில் எழுதுவோம் என சொப்பணத்திலும் நினைக்கவில்லையே. ;)
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள், மேடம்.
வாழ்த்துக்கள் ஒவ்வொன்றாக ரசித்து மகிழ்ந்தேன் .முதலில்
பதிலளிநீக்குஉங்கள் திறமை அதற்க்கு என் பாராட்டுக்கள் .அடுத்து உங்கள்
நற் குணத்திற்கு சான்றாக ஞாபகப் பொருட்களை சேகரிக்கும்
தன்மை வியப்பாக இருக்கின்றது ஐயா ஒவ்வொருத்தரும் பழசை மறந்து புதியன தேடி அலையும் இக் காலத்திலும் உங்களைப் போன்றவர்களிடம் உள்ள இந்த நற் பழக்கமே வளர்ந்து வரும் எம் சமூகத்தினர் ஒரு சமயம் பார்க்க ஆவல் கொண்டால் பார்த்து மகிழக் கூடி பொக்கிசங்கள் அடங்கிய இடமாக இருக்கும் !! மிக்க மகிழ்ச்சி .பகிர்வுக்கு என் நன்றிகள் ஐயா .
அம்பாளடியாள் March 29, 2013 at 3:11 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//வாழ்த்துக்கள் ஒவ்வொன்றாக ரசித்து மகிழ்ந்தேன்.//
மிக்க மகிழ்ச்சி.
//முதலில் உங்கள் திறமை அதற்க்கு என் பாராட்டுக்கள்.அடுத்து உங்கள் நற் குணத்திற்கு சான்றாக ஞாபகப் பொருட்களை சேகரிக்கும் தன்மை வியப்பாக இருக்கின்றது ஐயா//
சந்தோஷம்.
//ஒவ்வொருத்தரும் பழசை மறந்து புதியன தேடி அலையும் இக் காலத்திலும் உங்களைப் போன்றவர்களிடம் உள்ள இந்த நற் பழக்கமே வளர்ந்து வரும் எம் சமூகத்தினர் ஒரு சமயம் பார்க்க ஆவல் கொண்டால் பார்த்து மகிழக் கூடி பொக்கிசங்கள் அடங்கிய இடமாக இருக்கும் !! மிக்க மகிழ்ச்சி .பகிர்வுக்கு என் நன்றிகள் ஐயா.//
தங்களின் அன்பான வருகைக்கும், மனம்திறந்து பேசியுள்ள அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
Congrats Sir! ungal surusuruppaana velaikalukku uthaaranamai erumbukalai Oda vitturukkeenga! enthap paniyaiyum virupaththodu seithal uyaralam-enpatharku neengale munnuthraranam. nanrikal pala.
பதிலளிநீக்குmiddleclassmadhavi March 29, 2013 at 4:22 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//Congrats Sir! வாழ்த்துகள் சார்//
ரொம்பவும் சந்தோஷம்.
//ungal surusuruppaana velaikalukku uthaaranamai erumbukalai Oda vitturukkeenga! உங்கள் சுறுசுறுப்பான வேலைகளுக்கு உதாரணமாக எறும்புகளை ஓட விட்டுருக்கீங்க !//
என்னைவிட மிக மிக சுறுசுறுப்பான [எனக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து, என்னையே அவ்வப்போது வியப்பளிக்கச்செய்து அசத்திவரும்] வேறொரு கோவைப் பதிவரின் தளத்திலிருந்து, அவர்களின் ஏதோவொரு பழைய பதிவிலிருந்து, இறக்குமதி செய்யப்பட்ட எறும்புகள் இவை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை அந்தப்பதிவரோ அல்லது இந்த எறும்புகளோ என்னைக் கடிக்கவில்லை என்பது மற்றொரு ஆச்சர்யமானத்தகவல். ;)))))
//enthap paniyaiyum virupaththodu seithal uyaralam-enpatharku neengale munnuthraranam. nanrikal pala. எந்தப்பணியையும் விருப்பத்தோடு செய்தால் உயரலாம் என்பதற்கு நீங்களே முன்னுதாரணம். நன்றிகள் பல.//
தங்களின் அன்பான அதிசயமான வருகைக்கும், அழகான முன்னுதாரணக் கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
ஒவ்வொன்றாக ரசித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் .முதலில்
பதிலளிநீக்குஉங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் .அடுத்து உங்கள்
நற் குணத்திற்கு சான்றாக பொருட்களை சேகரிக்கும்
தன்மை இருக்கின்றது ஐயா.....
இசையுடன் கேட்கும்வண்ணம் இணைப்பு தந்தமைக்கு மிகவும் நன்றி. மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா....
VijiParthiban March 29, 2013 at 6:44 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
உங்களைக்காணுமே என இப்போதுதான் நான் நினைத்தேன்.
உங்களுக்கு ஆயுஷூ நூறு.
எப்படிச்சொல்கிறேன் என்றால் உங்களின் வருகை என் இந்தப் பின்னூட்டப்பட்டியலில் [என் பதில்கள் உள்பட] 100 எனக்காட்டுகிறது, பாருங்கோ. ;))))) மகிழ்ச்சியாக உள்ளது.
//ஒவ்வொன்றாக ரசித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் .முதலில்
உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் .அடுத்து உங்கள் நற்குணத்திற்கு சான்றாக பொருட்களை சேகரிக்கும் தன்மை இருக்கின்றது ஐயா.....
இசையுடன் கேட்கும்வண்ணம் இணைப்பு தந்தமைக்கு மிகவும் நன்றி. மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா....//
தங்களின் அன்பான வருகைக்கும், மனம்திறந்து பேசியுள்ள அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
அனைத்தும் அருமையான பொக்கிசங்கள்.
பதிலளிநீக்குபகிர்ந்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
மாதேவி March 29, 2013 at 6:52 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//அனைத்தும் அருமையான பொக்கிசங்கள். பகிர்ந்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.//
தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்வான கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்கள் ஒவ்வொன்றாக ரசித்து மகிழ்ந்தேன் .
பதிலளிநீக்குVijiParthiban March 29, 2013 at 6:57 AM
நீக்கு;)))))
//வாழ்த்துக்கள் ஒவ்வொன்றாக ரசித்து மகிழ்ந்தேன் .//
மிக்க நன்றி.
இப்போது உங்களுக்கு ஆயுஷூ 104 ;)))))
ஐயா வணக்கம் நலம் நலமறிய ஆவல். எதையும் மறவாது பகிர்ந்த தங்கள் பொக்கிஷங்கள் கண்டு நாங்களும் நினைவுகளை பொக்கிஷமாக சேமிக்கிறோம். பாடல் வரிகள் சிறப்பு. விருது கண்ணைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி ஐயா.
Sasi Kala March 29, 2013 at 7:34 AM
நீக்கு//ஐயா வணக்கம் நலம் நலமறிய ஆவல்.//
வாருங்கள் கவிதாயினி அவர்களே, வணக்கம். நான் நலமே.
//எதையும் மறவாது பகிர்ந்த தங்கள் பொக்கிஷங்கள் கண்டு நாங்களும் நினைவுகளை பொக்கிஷமாக சேமிக்கிறோம். பாடல் வரிகள் சிறப்பு. விருது கண்ணைக் கவர்ந்தது. பகிர்வுக்கு நன்றி ஐயா.//
தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான கருத்துக்களுக்கும், குறிப்பாக பாடல் வரிகளைப்பாராட்டியதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
பொக்கிஷங்கள் அருமை. பாடல் அருமையாக இருந்தது. மிகப்பெரிய அங்கீகாரம் தான் உங்களுக்கு.
பதிலளிநீக்குகோவை2தில்லி April 1, 2013 at 7:13 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//பொக்கிஷங்கள் அருமை. பாடல் அருமையாக இருந்தது. மிகப்பெரிய அங்கீகாரம் தான் உங்களுக்கு//
தங்கள் வருகையாலும், குழந்தை செல்வி. ரோஷ்ணி வருகையாலும், குழந்தை ரோஷ்ணியின் அப்பா திரு.வெங்கட்ஜி அவர்கள், கணினியில் அன்று எனக்குச் செய்துகொடுத்த உதவியாலும் மட்டுமே, இந்தப்பாடலை பதிவேற்ற முடிந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும்
என் மனமார்ந்த இனிய நன்றிகள்..
BHEL நிர்வாகத்திற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம்
பதிலளிநீக்குகணேஷ் April 2, 2013 at 3:56 AM
நீக்குஅன்புள்ள கணேஷ், சென்ற வாரம் உன்னை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நல்லபடியாக நீ செளதி போய்ச்சேர்ந்தது பற்றி உன் அம்மா மூலம் அறிந்து கொண்டேன். இந்த பின்னூட்டம் மூலமும் இப்போது அறிந்து கொண்டேன். மிகவும் சந்தோஷம்.
//BHEL நிர்வாகத்திற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம்//
;))))) அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், கணேஷ்.
[PRINGLES [HOT & SPICY "BURSTING with FLAVOUR" சாப்பிட்டோம். தக்காளிச்சாறு கலந்தது போல Different Taste ஆக இருந்தது.
TROPICANA SLIM Sugar free tablets களும் தினமும் உபயோகமாக உள்ளது.
தினமும் காஃபி குடிக்கும்போதெல்லாம் உன் நினைவுட்னேயே அருந்தி வருகிறேன். ;))))) மிக்க நன்றி, கணேஷ்]
The song that you have written for bhel is very nice. It is very amazing you are really multi talented. Ungaludaiya vu our thiramaiyumey pokishangal thaan. Néengal indha anubavagalai pakirdhadhil migavum magizchi. Vanakkam iyyah,, nandri.
பதிலளிநீக்குPriya Anandakumar April 2, 2013 at 1:44 PM
நீக்குWELCOME TO YOU, Madam. வாங்கோ வணக்கம்.
The song that you have written for bhel is very nice. It is very amazing you are really multi talented. Ungaludaiya vu our thiramaiyumey pokishangal thaan. Néengal indha anubavagalai pakirdhadhil migavum magizchi. Vanakkam iyyah,, nandri.
BHEL பற்றி தாங்கள் எழுதியுள்ள கவிதை நன்றாக உள்ளது.
பல்வேறு திறமைகள் கொண்ட தங்களைக்காண வியப்பாக உள்ளது. உங்களுடைய ஒவ்வொரு திறமைகளுமே பொக்கிஷங்கள் தான். நீங்கள் இந்த அனுபவங்களை பகிர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. வணக்கம் ஐயா, நன்றி.//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகையும், அழகான பலகருத்துக்களும் எனக்கு மிகவும் உற்சாகம் தருவதாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள். தொடர்ந்து வருகை தாருங்கள். அன்புடன் VGK.
Intha post naan anaike padichiten sir... Comment poda maranthuten pola.... Romba nalla iruku neen ezhuthina song... ivalo talent ah ungaluku... Admiring !!! Super sir neenga...
பதிலளிநீக்குSangeetha Nambi April 3, 2013 at 11:01 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//Intha post naan anaike padichiten sir... Comment poda maranthuten pola.... Romba nalla iruku neen ezhuthina song... ivalo talent ah ungaluku... Admiring !!! Super sir neenga...
//இந்தப்பதிவினை நான் அன்றைக்கே படித்து விட்டேன் சார். பின்னூட்டமிட மறந்துட்டேன் போலிருக்கு. //
அதனால் பரவாயில்லை, மேடம்.
//நீங்க எழுதின பாடல் ரொம்ப் நல்லா இருக்கு.//
மிக்க மகிழ்ச்சி.
//உங்களிடம் இவ்வளவு திறமைகளா! வியப்பாகவும் பிரமிப்பாகவும் உள்ளது!!! சூப்பர் சார் நீங்க...//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
மிக நன்றாக எழுதியிருக்கின்றீங்க பாடலை. பாடியவ்ர்,இசை நன்றாக இருக்கு. செய்யும் தொழிலே தெய்வம். அதற்கேற்ப மிக விசுவாசமாக,நன்றியுடையவராக,தொழில்மேல்பற்றுள்ளவராக,உண்மையானவராக உழைத்திருக்கின்றீர்கள்.அதற்குரிய பலன்கள் கிடைத்திருக்கு . வேலை செய்யுமிடத்தில் நற்பெயரை தக்கவைத்துகொள்வதே
பதிலளிநீக்குபெரும்பொக்கிஷம். அப்பொக்கிஷம் உங்களிடத்தில் இருக்கிறது.எத்தனைபேர்
உண்மையாக உழைக்கிறார்கள்.
அரிய பழமையான காணமுடியாத காசுகள். இந்திய நாணயங்கள்
பற்றி தெரியாது. நீங்க குறிப்பிட்டதகவல்களின்படி இவைகள் விலை மதிப்பில்லாதவைகள். இத்தனையும் சேகரித்து,அதன் விபரங்கள் மூலம் அறியமுடிந்தது. அனுமார்படநாணயத்தாள்,துபாய்பரிசு,கிரெடிட் கார்ட்(இது உண்மையாலுமே பொக்கிஷமாகதான் இப்போதைய காலத்தில் வைத்திருக்கவேண்டும்)மிக அருமையான பொக்கிஷபகிர்வு. உங்களை பாராட்ட வார்த்தைகளில்லை அண்ணா.
ammulu April 5, 2013 at 12:04 AM
நீக்குவாங்கோ அம்முலு, வணக்கம்.
//மிக நன்றாக எழுதியிருக்கின்றீங்க பாடலை.//
மிகவும் சந்தோஷம் அம்முலு.
//பாடியவ்ர், இசை நன்றாக இருக்கு. செய்யும் தொழிலே தெய்வம். அதற்கேற்ப மிக விசுவாசமாக, நன்றியுடையவராக, தொழில்மேல்பற்றுள்ளவராக,உண்மையானவராக உழைத்திருக்கின்றீர்கள். அதற்குரிய பலன்கள் கிடைத்திருக்கு . வேலை செய்யுமிடத்தில் நற்பெயரை தக்கவைத்துகொள்வதே பெரும்பொக்கிஷம். அப்பொக்கிஷம் உங்களிடத்தில் இருக்கிறது.//
”செய்யும் தொழிலே தெய்வம். அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று சொல்லுவார்கள். எனக்கு நான் பணியாற்றிய தொழிலகமான பொக்கிஷத்தின் மேல் எப்போதுமே பிரியம் உண்டு.
என்னைப்பொறுத்தவரை, நான் ஆபீஸுக்குச் சென்று விட்டால், வீடு, மனைவி, மக்கள் எல்லாவற்றையுமே மறந்து விடுவேன்.
மிகவும் பொறுப்புள்ள பதவியில் இருந்ததால் எப்போதும் மிகவும் அலெர்ட் ஆகவே இருந்துகொண்டு, அலுவலகப்பணிகளிலேயே மூழ்கிப் போய்விடுவேன்.
வீட்டிலிருந்து அனாவஸ்யமாக போன் ஏதும் வரக்கூடாது என்றும் என் மனைவியிடம் சொல்லிவிடுவேன். மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே போன் செய்து வீட்டிலிருந்து பேசுவார்கள்.
//எத்தனைபேர் உண்மையாக உழைக்கிறார்கள்.//
ஆம். இப்போது உண்மையாக உழைப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டனர். பலபேரை கட்டி மேய்த்து வேலை வாங்கும் போது நானே இதை பலமுறை உணர்ந்து வருந்தியதும் உண்டு.
//அரிய பழமையான காணமுடியாத காசுகள். இந்திய நாணயங்கள் பற்றி தெரியாது. நீங்க குறிப்பிட்டதகவல்களின்படி இவைகள் விலை மதிப்பில்லாதவைகள். இத்தனையும் சேகரித்து,அதன் விபரங்கள் மூலம் அறியமுடிந்தது.//
மிக்க மகிழ்ச்சி.
//அனுமார்பட நாணயத்தாள், துபாய்பரிசு, கிரெடிட் கார்ட் (இது உண்மையாலுமே பொக்கிஷமாகதான் இப்போதைய காலத்தில் வைத்திருக்கவேண்டும்) மிக அருமையான பொக்கிஷபகிர்வு. உங்களை பாராட்ட வார்த்தைகளில்லை அண்ணா. //
ரொம்பவும் சந்தோஷம் .. அம்முலு.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்க்ளுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், அம்முலு.
ஆஹா மிக அற்புதமான பொக்கிஷங்கள் அனைத்துமே ..
பதிலளிநீக்குஉங்கள் அலுவலகம் சார்பாக அளிக்கப்பட்ட தங்க நாணயம் ,நினைவு பரிசு ..அந்த காலத்து பத்து ரூபாய் நாணயம் ..எல்லாமே எனை வியப்பில் ஆழ்த்துகிறது ..
..நான் கூட நாணயம் ரூபாய் தாள் எல்லாம் சேமிப்பேன் ..ஒன்லி லேட்டஸ்ட் பவுண்ட்ஸ் :))
.....ரோஷனி குட்டி வருகை ...துபாய் விருந்து தந்த இல்லத்தில் கொடுத்த பரிசு அனைத்தையும் நுணுக்கமாக பகிர்ந்ததது வியந்து போகிறேன் ....
அந்த ஹனுமார் ஸ்டாம்ப் நோட்டு ...!!!!! மிக அருமை ..ஒவ்வோர் பதிவிலும் இன்னமும் அதிகமாக உங்களிடமிருந்து கற்று கொள்கிறோம்
angelin April 14, 2013 at 10:39 AM
நீக்குவாங்கோ, நிர்மலா. வணக்கம்.
//ஆஹா மிக அற்புதமான பொக்கிஷங்கள் அனைத்துமே உங்கள் அலுவலகம் சார்பாக அளிக்கப்பட்ட தங்க நாணயம், நினைவு பரிசு, அந்த காலத்து பத்து ரூபாய் நாணயம், எல்லாமே என்னை வியப்பில் ஆழ்த்துகிறது ..//
சந்தோஷம்,
//நான் கூட நாணயம் ரூபாய் தாள் எல்லாம் சேமிப்பேன் ..ஒன்லி லேட்டஸ்ட் பவுண்ட்ஸ் :))//
ஆஹா, இது எல்லோருமே செய்வது அல்லவா! சேமிப்பில் பலே கில்லாடிகளாகத்தான் இருப்பீங்கோ. அது தான் நல்லதும் கூட. வாழ்த்துகள்.
//ரோஷனி குட்டி வருகை ... துபாய் விருந்து தந்த இல்லத்தில் கொடுத்த பரிசு அனைத்தையும் நுணுக்கமாக பகிர்ந்ததது வியந்து போகிறேன் ....//
மிக்க மகிழ்ச்சி.
//அந்த ஹனுமார் ஸ்டாம்ப் நோட்டு ...!!!!! மிக அருமை .. ஒவ்வோர் பதிவிலும் இன்னமும் அதிகமாக உங்களிடமிருந்து கற்று கொள்கிறோம்//
அச்சா, பஹூத் அச்சா! நீங்கள் வந்த பிறகே இந்தப்பதிவு ஒரு புத்துணர்ச்சி பெறுகிறது. ;)
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
சார் உங்கள் பொக்கிஷங்கள் பிரம்மிக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குநீங்கள் வேலை செய்த நிருவனத்தில் நீங்கள் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் விஸ்வாசமும் கவிதை வரிகளில் அப்பட்டமாக தெரிகிறது சார்.இறுதிவரை மிகவும் நாணயமான அலுவலராக வேலை செய்து இருக்கின்றீர்கள்.
துபயில் கிடைத்த கப்பல் பரிசு வெகுன் அழகு
ஏடிஎம் கார்டை போட்டொவில் போட்டு பணத்தை பற்றிய வரிகளினைப்படித்து ரசித்து சிரித்தேன்.
ஸாதிகா April 15, 2013 at 12:04 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//சார் உங்கள் பொக்கிஷங்கள் பிரமிக்க வைக்கின்றன.
நீங்கள் வேலை செய்த நிறுவனத்தில் நீங்கள் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் விஸ்வாசமும் கவிதை வரிகளில் அப்பட்டமாக தெரிகிறது சார்.இறுதிவரை மிகவும் நாணயமான அலுவலராக வேலை செய்து இருக்கின்றீர்கள்.//
மிகவும் சந்தோஷம், நன்றி மேடம்.
//துபாயில் கிடைத்த கப்பல் பரிசு வெகு அழகு//
ஆமாம் மேடம். 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது பளபளப்பாக புத்தம் புதியது போலவே உள்ளது.
//ஏடிஎம் கார்டை போட்டோவில் போட்டு பணத்தை பற்றிய வரிகளினைப்படித்து ரசித்து சிரித்தேன்.//
மிக்க மகிழ்ச்சி. அது தானே இன்றைய மிக முக்கிய அன்றாட அத்யாவஸ்ய தேவையான பொக்கிஷமாக உள்ளது!
தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
ஆவ்வ்வ்வ் இன்றைய நன்னாளில் 4ம் பகுதியில் கால் எடுத்து... நோ.. அது டப்பு:) கை எடுத்து வைக்கிறேன்ன்.. இது 124 ஆவது பின்னூட்டம்... முடிவில 4 என வருவதால.... ஐ ஆம் ஓகே:).
பதிலளிநீக்குதிருநீற்றுப் பூச்சோடிருக்கும் கோபு அண்ணனையும் பார்த்திட்டேன்ன். என்னா தைரியம் உங்களுக்கு:) இப்பூடி பப்ளிக்கில படமெல்லாம் போடுறீங்க:).
athira April 22, 2013 at 5:28 AM
நீக்குவாங்கோ அதிரா வாங்கோ, வணக்கம்.
//ஆவ்வ்வ்வ் இன்றைய நன்னாளில் 4ம் பகுதியில் கால் எடுத்து... நோ.. அது டப்பு:) கை எடுத்து வைக்கிறேன்ன்.. இது 124 ஆவது பின்னூட்டம்... முடிவில 4 என வருவதால.... ஐ ஆம் ஓகே:). //
ஆஹா, சொன்னால் சொன்னபடியே நடப்பது நம் அதிராவின் நற்குணம் என்பதை அறிய முடிகிறதூஊஊஊ.
நீங்க கால் எடுத்து வைத்தாலும் சரி, கை எடுத்து வைத்தாலும் சரி, எப்படியோ எதையோ வைத்தவரை சந்தோஷமே.
இதன் மூலம் தாங்கள் இந்தத்தொடரில் இதுவரை வெளியாகியுள்ள பத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள்.என என்னிடம் உள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
“பத்துப்பதிவுக்கும் வருகை தந்துள்ள பத்ரகாளி” என சிறப்புப்பட்டம் தரலாமா என யோசித்தேன்.
ஆனால் அது சரியாக வராது, ஸ்வீட் சிக்ஸ்டீன் என்று சொல்லிக் கொண்டுவரும் தங்களைப்போய் “பத்ரகாளி” என்று சொன்னால் அது உங்களுக்குக் கோபமூட்டக்கூடும் என்பதால் விட்டு விட்டேன்.
//திருநீற்றுப் பூச்சோடிருக்கும் கோபு அண்ணனையும் பார்த்திட்டேன்ன். //
ஆஹா, பார்த்துட்டீங்களா? போச்சு, போச்சு. என் இமேஜே போச்சு. ;)
//என்னா தைரியம் உங்களுக்கு:) இப்பூடி பப்ளிக்கில படமெல்லாம் போடுறீங்க:).//
என்னா தைரியம் உங்களுக்கு! அதைப்பார்த்ததோடு மட்டுமல்லாமல் கமெண்டு வேறு போட்டு கலக்குறீங்கோ!! ;)))))
நான் ரொம்பக் கோபமா இருக்கிறேனாக்கும்:) ஆரைப் பார்த்து என்னா பேச்சுப் பேசிட்டீங்கோ.... அப்பூடின்னு சொல்ல வந்தேன் ஆனா சொல்ல மாட்டேன்:)).. ஆனா இதுக்கெல்லாம் சேர்த்து உங்களின் பொக்கிஷம் நிறைவுப்பகுதியில் உங்களுக்கு வைக்கப்போறேன் ஆப்பு:) பூஸோ கொக்கோ?:) வெயிட் அண்ட் சீ.... மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:),
நீக்குathira April 22, 2013 at 7:07 AM
நீக்கு//நான் ரொம்பக் கோபமா இருக்கிறேனாக்கும்:) ஆரைப் பார்த்து என்னா பேச்சுப் பேசிட்டீங்கோ....//
ஆஆஆஆஆஆஆ பயந்தே போய் அழுதே விட்டேனாக்கும்.
//அப்பூடின்னு சொல்ல வந்தேன் ஆனா சொல்ல மாட்டேன்:)).//
ஆஹா, அதிரா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு, எவ்ளோ நல்லவங்கன்னு நேக்குத்தெரியும்.
//ஆனா இதுக்கெல்லாம் சேர்த்து உங்களின் பொக்கிஷம் நிறைவுப்பகுதியில் உங்களுக்கு வைக்கப்போறேன் ஆப்பு:)
அச்சச்ச்ச்ச்ச்ச்சோஓஓஓஓஓஓ ! ஆப்பா? ஆப்பமா? பயமாக்கீதூஊஊஊஊஊஊஊ.
//பூஸோ கொக்கோ?:) //
பூஸ் என்றால் பூனைக்குட்டி [இதற்கு வால் உண்டு - அடிக்கடி வால்தனம் செய்யக்கூடியது]
கொக்கு என்றால் வெண்மையான கலரில் உயரமான நீண்ட மூக்குடைய நீர்ப்பறவை. ஒன்றைக்காலில் தவமிருக்கும், மீனின் வருகைக்காகக் காத்திருக்கும். ஒரே போட்டில் டக்குன்னு மீனை தன் அரிவாள் மூக்கால் கவ்விவிடும்.
அதிரா பூனையா .... கொக்கா தெரியவில்லையே ! நான் என் செய்வேன். ஆண்டவாஆஆஆஆஆஆ.
//வெயிட் அண்ட் சீ.... //
அதற்குள் என் தலை வெடித்து விடும், நோ வெயிட்டிங், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா.
//மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:),//
இப்போதைக்கு நானும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப் -- ஜாமீஈஈஈஈஈஈ ;) நல்ல ஆளிடம் இப்படி மாட்டினேனே ! சிவ சிவா !!
///நான் எழுதிக்கொடுத்த கீழ்க்கண்ட பாடல் அழகாக இசையமைக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளிலும், அது தவிர தனியாக புல்லாங்குழல் இசையிலும் BHEL நிர்வாகத்தால் CD யாக வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.///
பதிலளிநீக்குவாவ்வ்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.
athira April 22, 2013 at 5:29 AM
நீக்கு*****நான் எழுதிக்கொடுத்த கீழ்க்கண்ட பாடல் அழகாக இசையமைக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளிலும், அது தவிர தனியாக புல்லாங்குழல் இசையிலும் BHEL நிர்வாகத்தால் CD யாக வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.*****
வாவ்வ்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.
தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி, அதிரா.
என்ன சொல்ல.... காசா லேசா.. ஒரே காசு மயமான பொக்கிஷங்க|ள் 4ம் பகுதியில்:) இடம்பெற்றிருக்கு.
பதிலளிநீக்குடுபாயில் கிடைத்த பாய்மரக் கப்பல் .. ஜொட் ... மிக அழகு. இங்கும் இப்படியான கப்பல் சம்பந்தப்பட்ட பொருட்களை மக்கள் விரும்பி சேகரிப்பது வழக்கமாக இருக்கு.
athira April 22, 2013 at 5:33 AM
நீக்கு//என்ன சொல்ல.... காசா லேசா.. ஒரே காசு மயமான பொக்கிஷங்கள் 4ம் பகுதியில்:) இடம்பெற்றிருக்கு.//
மிக்க மகிழ்ச்சி. காசே தான் கடவுளடா என்று தானே நம்மையும் நினைக்க வைக்கிறது.
//டுபாயில் கிடைத்த பாய்மரக் கப்பல் .. ஜொட் ... மிக அழகு. இங்கும் இப்படியான கப்பல் சம்பந்தப்பட்ட பொருட்களை மக்கள் விரும்பி சேகரிப்பது வழக்கமாக இருக்கு.//
அப்படியா, சந்தோஷம். ;)
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.
நீங்கள் எழுதிய பாடலை கேட்டுக்கொண்டே பதிவை படித்தேன் ,அம்மாடி பொக்கிஷம் நிறைந்த மனிதர்தான் நீங்க,
பதிலளிநீக்குஏதாவது கிறுக்கினது,கணக்கு போட்டு பார்த்தது ,காதல் சின்னம் போட்டது இப்படியான நோட்டுதான் பாத்துருக்கேன் ,உங்களைத் தேடி ஹனுமான் வந்திருப்பது வியப்புதான்.
அப்படியே நீங்க வாங்கி வச்சிருக்கும் நகைகளில் பொக்கிஷம் இருக்குமே அதையும் போட்டுடுங்க,தென் உடுப்புகள் ....
உங்கள கின்னசுக்கு பரிந்துரைக்கனும் ,யாராவது ஏற்பாடு பன்னுங்கப்பா
thirumathi bs sridhar April 23, 2013 at 4:32 AM
நீக்குவாங்கோ ஆச்சி மேடம், வணக்கம்.
//நீங்கள் எழுதிய பாடலை கேட்டுக்கொண்டே பதிவை படித்தேன், அம்மாடி பொக்கிஷம் நிறைந்த மனிதர்தான் நீங்க,//
பாடலைக்கேட்டுக்கொண்டே பதிவைப்படித்தீர்களா? ஆஹா, இதைக் கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
இதுபோல உங்களால் மட்டுமே செய்ய முடியும். என்னால் சத்தியமாக முடியவே முடியாது.
என்னால் ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே முழுக்கவனமும் செலுத்த முடியும்.
ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் என்றால் இரண்டுமே அரைகுறையாகத்தான், நிறைவு இல்லாமல், முழு மனத்திருப்தி இல்லாமல் போய்விடும்.
//ஏதாவது கிறுக்கினது,கணக்கு போட்டு பார்த்தது ,காதல் சின்னம் போட்டது இப்படியான நோட்டுதான் பாத்துருக்கிறேன்// ,
அதெல்லாம் நானும் நிறையவே பார்த்திருக்கிறேன். நான் பார்க்காத நோட்டுக்களா?
//உங்களைத் தேடி ஹனுமான் வந்திருப்பது வியப்புதான்.//
எனக்கும் அது வியப்பு தான். அதனால் அதை மட்டும் தனியாக ஒதுக்கி வைத்துக்கொண்டு விட்டேன்.
//அப்படியே நீங்க வாங்கி வச்சிருக்கும் நகைகளில் பொக்கிஷம் இருக்குமே அதையும் போட்டுடுங்க,தென் உடுப்புகள் ....
உங்கள கின்னசுக்கு பரிந்துரைக்கனும் ,யாராவது ஏற்பாடு பன்னுங்கப்பா//
அதானே பார்த்தேன், ஆச்சி அவர்களின் கிண்டலும் கேலியும் இன்னும் வரக்காணோமே என்று! ;)))))
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். வாழ்க! வாழ்க!!
ரூபாய் நோட்டுகளை கொள்ளையடிக்க வரலாமா?
பதிலளிநீக்கு:))))))))))
பதிலளிநீக்குபடங்க பதிவு அல்லாம் சூப்பராகீது. ஒங்கட ஆபீசு கேண்டீனிலா இத்தர மலிவா பலகாரங்க கெடச்சிச்சி. யாரெல்லா எதபத்திலாம் கேட்டாக நானு சரியான தீனிபண்டாரம். தீனிலயே கண்ணு போகுது.
பதிலளிநீக்குவயசு அப்பூடி.. விதவிதமா திங்க ஆசபடுது
mru October 23, 2015 at 2:45 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்.
//படங்க பதிவு அல்லாம் சூப்பராகீது.//
மிக்க மகிழ்ச்சி.
//ஒங்கட ஆபீசு கேண்டீனிலா இத்தர மலிவா பலகாரங்க கெடச்சிச்சி.//
ஆமாம். இன்றும் அங்கு அதே மலிவு விலைகளிலேயே தொடர்ந்து தரமாக எல்லாமே கிடைக்கின்றன. நான் அங்கிருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டதால், இதுபோன்ற என் பதிவுகளிலும், மனதிலும் அந்தப் பழசையெல்லாம் அசைபோட்டுப் பார்த்து மகிழ்வதோடு சரி.
//யாரெல்லா எதபத்திலாம் கேட்டாக நானு சரியான தீனிபண்டாரம். தீனிலயே கண்ணு போகுது. வயசு அப்பூடி.. விதவிதமா திங்க ஆசபடுது//
அதனால் பரவாயில்லையம்மா. இந்த தங்களின் இளம் வயதில் விதம் விதமாக ஆசைதீரத் தின்னாமல் பிறகு எப்போதுதான் இவற்றையெல்லாம் தின்ன முடியும்? நானும் உங்க கேஸேதான், அதுவும் இந்த வயதிலும்கூட :)))))
அலுவலக அனுபவங்கள் பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துகள். நீங்க ராதாராணி அவர்களுக்கும் பூந்தளிர் அவர்களுக்கும் எழுதியுள்ள ரிப்ளை கமெண்ட் மூலம் பழைய நாணய வகைகள் விலைவாசிகள் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்ப எல்லாமே ஒன்ஸ் அப் ஆன் எ டைம் என்று ஆகிவிட்டதே.
பதிலளிநீக்குஅருமையான பதிவு...நான் சேமித்த பல பழைய நாணயங்களும், தபால்தலைகளும் இன்னும் என்னிடமும் உள்ளன.
பதிலளிநீக்குபாடல் அருமை! வளர்க நின் பெருமை!
பதிலளிநீக்குமூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கு வணக்கம். என்னுடைய வலைப்பதிவிற்கான, ஒரு பின்னூட்டம் மூலம் மீண்டும் இங்கே வந்து இந்த பதிவை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. அந்நாளைய முன்னணி வலைப்பதிவர்கள் பலரது பின்னூட்டங்களை மீண்டும் படித்தபோது, வலைப்பக்கம் அப்போதுதான் வந்து சேர்ந்த எனது நினைவுகளும் வந்தன. நானும் பின்னூட்டம் ஒன்றை அப்போது எழுதி இருக்கிறேன். ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களைப் படித்தபோது மனதில் ஒரு நெருடல்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ January 11, 2017 at 9:56 PM
நீக்கு//மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கு வணக்கம்.//
வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.
//என்னுடைய வலைப்பதிவிற்கான, ஒரு பின்னூட்டம் மூலம் மீண்டும் இங்கே வந்து இந்த பதிவை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.//
எனக்கும் மகிழ்ச்சியே.
//அந்நாளைய முன்னணி வலைப்பதிவர்கள் பலரது பின்னூட்டங்களை மீண்டும் படித்தபோது, வலைப்பக்கம் அப்போதுதான் வந்து சேர்ந்த எனது நினைவுகளும் வந்தன. நானும் பின்னூட்டம் ஒன்றை அப்போது எழுதி இருக்கிறேன்.//
ஆம். தாங்களும் ஏற்கனவே 28.03.2013 அன்று ஓர் பின்னூட்டமிட்டுள்ளீர்கள்.
//ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களைப் படித்தபோது மனதில் ஒரு நெருடல்.//
ஆமாம் ஸார். அவர்கள் இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே ஆறு முறைகள் வருகை தந்து சிறப்பித்துள்ளார்கள். அவர்கள் மறைந்தாலும் அவர்களின் இதுபோன்ற பின்னூட்டங்கள் நான் 2011 முதல் 2015 வரை வெளியிட்டுள்ள என் முதல் 806 பதிவுகள் அனைத்திலுமே இடம் பெற்றுள்ளன என்பதில் மனதுக்கு ஓர் ஆறுதலாக உள்ளது.
https://gopu1949.blogspot.in/2015/12/blog-post_16.html
https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html
தங்களின் இன்றைய அன்பான மீண்டும் வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.