About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, March 20, 2013

2] பிள்ளைகள் கொடுத்துள்ள ஒருசில அன்புத்தொல்லைகள்!
”பொக்கிஷம்”

தொடர்பதிவு 

By

வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

பொதுவாகக் குழந்தைகள் என்றாலே இன்பம்!

அதுவும் நமக்குப்பிறந்த குழந்தைகள் என்றால், 

அது பேரின்பம்!!

அதுவே நம் குழந்தைகளுக்குப் பிறந்த 

குழந்தைகள் என்றால் 
அதுதான் உச்சக்கட்ட இன்பம்!!!

“மழலைகள் உலகம் மகத்தானது”
என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையைப்படிக்க இணைப்பு இதோ: 
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html 

 
                             
பொக்கிஷமான என் அருமை பேத்தி பவித்ரா  
மற்றும் பேரன்கள் ஷிவா + அநிருத் 

நம் தாய், தந்தை, வாழ்க்கைத்துணை, மக்கட்செல்வங்கள், பேரன் பேத்திகள், உடன் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவருமே நமக்குள்ள பொக்கிஷங்கள் தான். 

வலையுலகின் மூலம் இன்று நமக்குக்கிடைத்துள்ள முகம் தெரியா நட்புக்களும் மாபெரும் பொக்கிஷங்களே.

நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம் !

நம் வாழ்க்கையில் நம்மால் நிறைவேற்றப்பட முடியாத ஒருசில ஆசைகளும், சாதனைகளும், விட்டகுறை தொட்டகுறைகளும், நம் மக்கட்செல்வங்களால் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.  

அந்த நம் பிள்ளைகள், நம்மைப்பிரிந்து எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் செளகர்யமாக, செளக்யமாக, சந்தோஷமாக இருந்தால் போதும்; அவ்வப்போது தொடர்புகொண்டு, ’நல்லா இருக்கிறோம்’ என்று சொன்னாலே போதும் என்று நினைப்பவன் நான். வேறு எதுவும் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பவன் அல்ல. 

இருப்பினும் நாம் பணமாகக்கொடுத்தால் இவர் நிச்சயமாக வாங்கிக்கொள்ளவே மாட்டார், என்பதை நன்கு உணர்ந்த என் பிள்ளைகள் ஒருசில பொருட்களை எனக்கு பிரியமாகக் கொடுத்துள்ளனர்.

என் கைக்குழந்தை [வயது 30] எனக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிக்கொடுத்துள்ள 'ACER' மடிக்கணனி + 'NOKIA' கைபேசி இதோ:
 

இந்த என் பிள்ளை பெங்களூரில் வேலை பார்த்த நாட்களில்
அடிக்கடி வாங்கி வரும் KUNDA என்ற திரட்டுப்பால் இதோ:


இது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அழகாக சுருள்சுருளாக நல்ல சிவந்த நிறமாக 
கையில் ஒட்டாதபடி, முறுகலாக 
சூப்பரான சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும்.

எனக்கென்று மட்டும் பிரத்யேகமாக 
ஒரு டப்பா ஒவ்வொரு முறையும் 
நான் தனியாக வாங்கி வைத்துக்கொள்வேன்.

-oooooo-

என் பெரிய பிள்ளையும் மருமகளும், பேரன் பேத்தியும் வெளிநாட்டில் இருப்பவர்கள். வருடம் ஒருமுறை இங்கு வந்து செல்வார்கள். அவர்கள் இங்கு வந்து செல்லும் போதெல்லாம் விட்டுச்செல்லும் பொருட்கள் ஏராளம். 

சிலவற்றை என்ன செய்ய வேண்டும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களுக்குத் தெரியாமல் இருக்கும்.  

ஒவ்வொரு முறையும் அவ்விடமிருந்து புறப்பட்டு வரும்போது "என்ன வாங்கி வரட்டும்" என அன்புடன் கேட்பார்கள்.  

பெரும்பாலும் நான் ”ஒன்றுமே வேண்டாம். நீங்களும் குழந்தைகளும் நல்லபடியாக இங்கு வந்து விட்டுச்சென்றால் அதுவே போதும்” எனச்சொல்லி விடுவேன். அப்படியும் ஏதாவது புதுமையாக சிலவற்றை அன்புடன் வாங்கி வருவார்கள்.   

இங்கு நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி வெட்டும் கத்திகள் முதல் கேமராக்கள் வரை பல பொருட்கள் அவர்களால் வாங்கிவந்து இங்கு விட்டுச்செல்லப்பட்டவைகளே. 

வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களை நாங்கள் கையாளும் போதும் அவர்களையும் குழந்தைகளையும் கொஞ்சமும் மறக்கவே முடியாதபடி ஒவ்வொன்றிலும் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளார்கள். 

எதுவும் அளவுக்கு மிஞ்சினால் அவஸ்தை தானே. வீட்டில் வைக்கவும் இடமில்லாமல், விட்டெறியவும் மனமில்லாமல், பயன் படுத்தவும் தெரியாமல் தர்ம சங்கடப்பட வேண்டிவரும். 

அதனால் இப்போதெல்லாம் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆகவே சொல்லியுள்ளேன். ”நான் கேட்காமல் எந்தப்பொருளும் வாங்கி வந்து இங்கு குவிக்கக்கூடாது” என்று.

ஏற்கனவே இங்கு வந்து சேர்ந்துள்ள ஒருசில பொருட்களில் மிகவும் பயனுள்ள பொருட்களாக நான் நினைப்பது  இதோ இங்கே:ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை அளவை 
நாமே கண்டுபிடிக்க உதவும் கருவிதொலைகாட்சிப்பெட்டிபுதிய கைபேசிPANASONIC 'LUMIX' CAMERAEMERGENCY CHARGEABLE LAMPPOWERFUL CHARGEABLE TORCH LIGHT

மேற்படி பொருட்களைவிட 
அவர்கள் ஒவ்வொரு முறையும் வாங்கி வருவதில் 
எனக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டம்
PRINGLES எனப்படும் உருளைகிழங்கு சிப்ஸ்.
அதை எப்படித்தான் அழகாக ஸ்டைலாக 
ஒரே மாதிரியாக வடிவமைத்துத் 
தயாரிக்கிறார்களோ என வியந்து கொண்டே 
சாப்பிடுவது வழக்கம்.

இது தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் 
ஏதாவது ஒரு உத்யோகம் கிடைத்தால் 
எப்படியிருக்கும் என நான் எனக்குள்
கற்பனை செய்து பார்த்து மகிழ்வதுண்டு


நானும் என் மனைவியும் முதன்முதலாக [SEPTEMBER / OCTOBER  2004]
விமானப்பயணம் அதுவும் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்ட விமான டிக்கெட்டுகள் மற்றும் எங்களின் பாஸ்போர்ட் இன்றும் பொக்கிஷமாக. 
-oooooOooooo-

பின் குறிப்பாக ஒரு குட்டியூண்டு கதை:ஓர் மனநோய்க்காப்பகத்திற்கு நிறைய நன்கொடை அளிப்பதற்காக ஓர் பிரபலம் செல்கிறார். அந்தக் காப்பகம் செயல்படும் விதத்தை அறிந்துகொள்ள, ஒருசில நோயாளிகளையும் நேரில் சந்தித்துப்பார்க்க வேண்டி, தலைமை மருத்துவர் ஒருவருடன் ஒவ்வொரு அறைக்காகச் செல்கிறார்.  முதல் அறையில் ஓர் இளைஞன் சோகத்தில் அமர்ந்த நிலையில் ஏதோ ஓர் சுவற்றின் மூலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். “இவன் இந்த நிலைமைக்கு வந்த காரணம் என்ன?” என தலைமை மருத்துவரை அந்த பிரபலம்  கேட்கிறார், 


“இவன் மிகவும் அழகான ஓர் பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்துள்ளான். ஆனால் இவன் காதல் நிறைவேறவில்லை. அதிலிருந்து இப்படி ஆகிவிட்டான்” என்கிறார் மருத்துவர்.

பிறகு பல்வேறு நோயாளிகளைப்பற்றி ஓரளவு அந்த மருத்துவர் மூலம் அறிந்து கொண்ட அந்தப்பிரபலம், கடைசியாக மற்றொரு இளைஞனை சந்திக்க நேரிடுகிறது. 

“இவனுக்கு என்ன ஆச்சு? இவனுக்கும் ஏதாவது காதலில் தோல்வியா?” எனக் கேட்கிறார், அந்தப்பிரபலம்.

”இல்லை இல்லை. இவனுக்குக் காதலில் தோல்வியெல்லாம் இல்லை. இவன் யாரையும் காதலிக்கவும் இல்லை. ஆனால் அவன் காதலித்த அதே மிகவும் அழகான பெண்ணை தான் இவன் திருமணம் செய்துகொண்டான். அவளைத் திருமணம் செய்து கொண்ட பிறகே இப்படி ஆகிவிட்டான்” என்றார் அந்த மருத்துவர்.

அதாவது முதலாவது இளைஞன், தான் பொக்கிஷமாக தன் மனதில் நினைத்த தன் காதலியை, வாழ்க்கையில் கைநழுவவிட்டு, அவளை இழந்த சோகத்தினால் மட்டுமே இந்த நிலைமைக்கு வந்துள்ளான்.

அதே பொக்கிஷம் தனக்கு சுலபமாகக் கிடைத்தும், அதை முறைப்படி பயன்படுத்தி, அனுபவிக்கக்கொடுத்து வைக்காமல்,  இந்தப் பரிதாப நிலையை அடைந்துள்ளான் அந்த இரண்டாவது இளைஞன். 

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நான் இந்தப் பொக்கிஷத் தொடரின் முதல் பகுதியில்  http://gopu1949.blogspot.in/2013/03/1.html சொல்லியுள்ளது போலவே, எனக்குப் பொக்கிஷமாகத் தோன்றுபவையெல்லாம் உங்களுக்கும் பொக்கிஷமாகத் தோன்றும் என நான் நினைக்கவே முடியாது. 

பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே! 

இருந்தாலும் நான் இந்த என் ”பொக்கிஷம்” என்ற தொடரைத் மேலும் தொடரத்தான் போகிறேன். 

மீண்டும் இதன் அடுத்த பகுதியில் நாம் சந்திப்போம்..

.  


தொடரும்இந்தப் பொக்கிஷப் பதிவின் தொடர்ச்சி 

24.03.2013 ஞாயிறு வெளியிடப்படும்


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

144 comments:

 1. நம் வாழ்க்கையில் நம்மால் நிறைவேற்றப்பட முடியாத ஒருசில ஆசைகளும், சாதனைகளும், விட்டகுறை தொட்டகுறைகளும், நம் மக்கட்செல்வங்களால் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

  மறுக்கமுடியாத நிதர்சனமான உண்மைதான் ...

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி March 19, 2013 at 8:58 PM

   நினைத்தேன் வந்[தீர்கள்]தாய் ..... நூறு வயது ! ;)))))

   நீ....ண்....ட நாட்களுக்குப்பின் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுபோல தாங்கள் என் பதிவுக்கு முதல் வருகை கொடுத்து, என்னை மகிழ்வித்து, நேற்றுடன் 330 நாட்கள் ஆகிவிட்டன.

   கடைசியாக தாங்கள் இது போல முதல் வருகை தந்த நாள் : 23.04.2012 இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/04/13.html

   *****நம் வாழ்க்கையில் நம்மால் நிறைவேற்றப்பட முடியாத ஒருசில ஆசைகளும், சாதனைகளும், விட்டகுறை தொட்டகுறைகளும், நம் மக்கட்செல்வங்களால் நிச்சயமாக நிறைவேற்றப்படும்*****

   //மறுக்கமுடியாத நிதர்சனமான உண்மைதான் ...//

   என் அன்புக்குரிய அம்பாளின், அன்பான, அதிசயமான, அகஸ்மாத்தான, முதல் வருகைக்கும், மறக்கமுடியாத நிதர்சனமான உண்மைக் கருத்துக்களுக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 2. அந்த நம் பிள்ளைகள், நம்மைப்பிரிந்து எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் செளகர்யமாக, செளக்யமாக, சந்தோஷமாக இருந்தால் போதும்; அவ்வப்போது தொடர்புகொண்டு, ’நல்லா இருக்கிறோம்’ என்று சொன்னாலே போதும் என்று நினைப்பவன் நான். வேறு எதுவும் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பவன் அல்ல. //
  நன்றாக சொன்னீர்கள் சார்.

  எங்கள் கருத்தும் அதுவே சார், ஒவ்வொரு பெற்றோர்களும் நினைப்பதை அழகாய் சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 19, 2013 at 9:01 PM

   வாங்கோ, வணக்கம்.

   *****அந்த நம் பிள்ளைகள், நம்மைப்பிரிந்து எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் செளகர்யமாக, செளக்யமாக, சந்தோஷமாக இருந்தால் போதும்; அவ்வப்போது தொடர்புகொண்டு, ’நல்லா இருக்கிறோம்’ என்று சொன்னாலே போதும் என்று நினைப்பவன் நான். வேறு எதுவும் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பவன் அல்ல.*****

   //நன்றாக சொன்னீர்கள் சார். எங்கள் கருத்தும் அதுவே சார், ஒவ்வொரு பெற்றோர்களும் நினைப்பதை அழகாய் சொன்னீர்கள்.//

   ஆமாங்க, நம் காலம் வேறு. இவர்கள் காலம் வேறு.

   எப்போதுமே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு, எதற்குமே நேரமில்லாமல், மிகுந்த டென்ஷனுடன், உலகம் சுற்றிவரும் வேலைகளிலும், ஏராளமான பொறுப்புக்களிலும் இருப்பதால், அவர்கள் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்கணுமே, நல்ல செய்தி கேட்கணுமே என்பது மட்டுமே என் கவலையாக இருக்கிறது என்பதே உண்மை.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகாகப் புரிந்துகொண்டு ஆறுதலாக எழுதியுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 3. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

  நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!
  நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!
  அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க! வாழ்க!
  - பாடல்: கண்ணதாசன் (படம்: தங்கப் பதக்கம்)

  ( உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்! இது ஒரு தகவலுக்காக மட்டும்.)

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ March 19, 2013 at 9:12 PM

   //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!//

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!
   நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!
   அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க! வாழ்க!
   - பாடல்: கண்ணதாசன் (படம்: தங்கப் பதக்கம்)//

   அந்தப்படம் நானும் பார்த்துள்ளேன். இந்தப்பாட்டு மட்டும் கேட்க மிகவும் இனிமையாகத்தான் இருக்கும்.

   //( உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்! இது ஒரு தகவலுக்காக மட்டும்.)//

   மிக்க நன்றி.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

   Delete
 4. வலையுலகின் மூலம் இன்று நமக்குக்கிடைத்துள்ள முகம் தெரியா நட்புக்களும் மாபெரும் பொக்கிஷங்களே.

  நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம் !

  நம் வாழ்க்கையில் நம்மால் நிறைவேற்றப்பட முடியாத ஒருசில ஆசைகளும், சாதனைகளும், விட்டகுறை தொட்டகுறைகளும், நம் மக்கட்செல்வங்களால் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.//

  வலை உலகத்தில் நமக்கு கிடைத்த நட்புக்களும் நீங்கள் சொன்னது போல் பொக்கிஷ்ங்கள் தான்.

  நீங்கள் சொன்னது போல் நம் குழந்தைகளும் பொக்கிஷங்கள் தான். நம்மால் நிறைவேற்றப்பட முடியாத ஆசைகளும் சாதனைகளும் குழந்தைகள் சாதித்துக் கொண்டு இருப்பதை நாம் மனங்குளிர ரசித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை சார்.

  உங்கள் குட்டியூண்டு கதையும் மிக நன்றாக இருக்கிறது.


  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 19, 2013 at 9:13 PM

   தங்களின் மீண்டும் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

   //வலை உலகத்தில் நமக்கு கிடைத்த நட்புக்களும் நீங்கள் சொன்னது போல் பொக்கிஷ்ங்கள் தான்.//

   சந்தோஷம்.

   //நீங்கள் சொன்னது போல் நம் குழந்தைகளும் பொக்கிஷங்கள் தான். நம்மால் நிறைவேற்றப்பட முடியாத ஆசைகளும் சாதனைகளும் குழந்தைகள் சாதித்துக் கொண்டு இருப்பதை நாம் மனங்குளிர ரசித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை சார். //

   இறைவன் படைப்பினில் இரகசியங்களில், குறிப்பாக நமக்களிக்கும் குழந்தைச் செல்வங்களில், இந்த அவனது அருள் நிரம்பியுள்ளது.

   அவரவர்களின் அதிர்ஷ்டம் + அவரவர்கள் செய்த பாவ புண்ணியம் முதலியவற்றிற்கு ஏற்ப, இது ஒரு வெகுமதியாகவோ அல்லது தண்டனையாகவோ நிர்ணயிக்கப்படுகிறது, என்பதையும் நாம் மறுக்க முடியாமல் உள்ளது.

   //உங்கள் குட்டியூண்டு கதையும் மிக நன்றாக இருக்கிறது.//

   மகிழ்ச்சி. ;)

   Delete
 5. ரொம்ப இண்ட்ரெஸ்டாக போகுது இந்த பொக்கிஷம் தொடர்..தொடர்ந்து அசத்துங்க,அனைத்துப் பொருட்களுமே அசத்தலானவை.என்னைக் கவர்ந்து விட்டது..

  ReplyDelete
  Replies
  1. Asiya Omar March 19, 2013 at 9:59 PM

   வாருங்கள், வணக்கம்.

   //ரொம்ப இண்ட்ரெஸ்டாக போகுது இந்த பொக்கிஷம் தொடர்.. தொடர்ந்து அசத்துங்க, அனைத்துப் பொருட்களுமே அசத்தலானவை.என்னைக் கவர்ந்து விட்டது..//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 6. உங்கள் பொக்கிஷங்களை கண்டு மகிழ்ச்சி! குட்டி கதையும்,பொக்கிஷமாய் கருதப்படுபவை எல்லாம் அவரவர் பார்வை என்பதும் நல்ல விளக்கம்! இனிய பொக்கிஷ நினைவுகளை...தொடருங்க சார்... உங்க மகிழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. உஷா அன்பரசு March 19, 2013 at 10:18 PM

   வாருங்கள், வணக்கம்.

   //உங்கள் பொக்கிஷங்களை கண்டு மகிழ்ச்சி! குட்டி கதையும்.//

   சந்தோஷம்.

   //பொக்கிஷமாய் கருதப்படுபவை எல்லாம் அவரவர் பார்வை என்பதும் நல்ல விளக்கம்!//

   மிக்க மகிழ்ச்சி.

   //இனிய பொக்கிஷ நினைவுகளை... தொடருங்க சார்... உங்க மகிழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்கிறோம்.//

   ஆஹா, இதைக் கேட்கவே மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 7. எதுவும் அளவுக்கு மிஞ்சினால் அவஸ்தை தானே. வீட்டில் வைக்கவும் இடமில்லாமல், விட்டெறியவும் மனமில்லாமல், பயன் படுத்தவும் தெரியாமல் தர்ம சங்கடப்பட வேண்டிவரும். //மிகவும் உண்மைதான் சார்.எனக்குக்கூட வீட்டில் அதிகம் பொருட்களை வாங்கி அடைத்து வைப்பது பிடிக்காது.உங்கள் பொக்கிஷங்கள் அனைத்தும் அருமை.அதை உங்கள் எழுத்து நடையில் வாசிக்கும் பொழுது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஸாதிகா March 19, 2013 at 10:19 PM

   வாருங்கள், வணக்கம்.

   *****எதுவும் அளவுக்கு மிஞ்சினால் அவஸ்தை தானே. வீட்டில் வைக்கவும் இடமில்லாமல், விட்டெறியவும் மனமில்லாமல், பயன் படுத்தவும் தெரியாமல் தர்ம சங்கடப்பட வேண்டிவரும்.*****

   //மிகவும் உண்மைதான் சார். எனக்குக்கூட வீட்டில் அதிகம் பொருட்களை வாங்கி அடைத்து வைப்பது பிடிக்காது. உங்கள் பொக்கிஷங்கள் அனைத்தும் அருமை. அதை உங்கள் எழுத்து நடையில் வாசிக்கும் பொழுது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ’என் எழுத்து நடையில் வாசிக்கும் பொழுது உள்ள மிகவும் சுவாரஸ்யத்தைப் பற்றியும்’ குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டி எழுதியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 8. Very nice and interesting post sir !! Looking forward ur next post...
  http://recipe-excavator.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. Sangeetha Nambi March 19, 2013 at 10:20 PM

   வாருங்கள், வணக்கம்.

   //Very nice and interesting post sir !! Looking forward ur next post...
   http://recipe-excavator.blogspot.com//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 9. ஓவ்வொரு வரியும் ரசித்து எழுதி இருக்கீஙக்.

  எல்லாத்தையும் ஞாபகம் வைத்து அழகாக போட்டோவும் எடுத்து வைத்து இருக்கீங்க

  அந்த ஏர் டிக்கட் அதை கூட நீங்க தூக்கி கிழிச்சி போடாமல் போட்டோ எடுத்து ஞ்பகமாக எழுதி இருக்கீங்க.


  நீங்க சொல்வதை போல் தான் என் அப்பாவும்.. சொல்வார்கள்
  //நான் ஓவ்வொரு முறை ஊருக்கு போகும் போது என் டாடி யிடம் ஏதாவது வேணுமா டாடின்னு கேட்டால் ஒன்றும் வேண்டாம்
  நீங்களும் பிள்ளைகளும் நல்ல படியாகவந்து சேருங்கள் அது போதும் என்பார்கள்.//

  ReplyDelete
  Replies
  1. Jaleela Kamal March 19, 2013 at 10:25 PM

   வாருங்கள், வணக்கம்.

   //ஒவ்வொரு வரியும் ரசித்து எழுதி இருக்கீங்க.//

   அப்படியா, சந்தோஷம்.

   //எல்லாத்தையும் ஞாபகம் வைத்து அழகாக போட்டோவும் எடுத்து வைத்து இருக்கீங்க//

   நிறைய ஞாபகம் உள்ளது. தேடத்தேட ஒவ்வொரு பொக்கிஷமாக கையில் கிடைக்கின்றன. அவைகளை இப்போது தான் இந்தப்பதிவுக்காக மட்டுமே போட்டோவாக எடுத்து வருகிறேன்.

   //அந்த ஏர் டிக்கட் அதை கூட நீங்க தூக்கி கிழிச்சி போடாமல் போட்டோ எடுத்து ஞாபகமாக எழுதி இருக்கீங்க.//

   ஆமாம். அது என் முதல் விமானப்பயணம். மறக்க முடியாத மிகவும் இனிமையான அனுபவம். அதனால் மட்டுமே பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.

   //நீங்க சொல்வதை போல் தான் என் அப்பாவும்.. சொல்வார்கள்
   நான் ஓவ்வொரு முறை ஊருக்கு போகும் போது என் டாடி யிடம் ஏதாவது வேணுமா டாடின்னு கேட்டால் ஒன்றும் வேண்டாம்
   நீங்களும் பிள்ளைகளும் நல்ல படியாகவந்து சேருங்கள் அது போதும் என்பார்கள்.//

   மிகுந்த பாசமுள்ள பெற்றோர்கள் அதை மட்டுமே தான் விரும்புவார்கள் / எதிர்பார்ப்பார்கள்.

   Delete
 10. அந்த பவள வளையல் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு

  சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. Jaleela Kamal March 19, 2013 at 10:28 PM

   //அந்த பவள வளையல் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. சூப்பர்.//

   பவழ வளையல்கள் மட்டுமல்ல, அனைத்து நகைகளையுமே எடுத்து உங்களுக்கு அனுப்பி விட்டேன். இப்போது பாருங்கள் அவைகள் இங்கு இந்தப்பதிவினில் இல்லை என்பது உங்களுக்கே தெரியவரும். ;)

   Delete
 11. பவித்ராவும் ஷிவாவும் சமத்து போல உட்கார்ந்து இருக்கிறார்கள்

  அநிருத் படு சுட்டி போல.....

  ReplyDelete
  Replies
  1. Jaleela Kamal March 19, 2013 at 10:29 PM

   //பவித்ராவும் ஷிவாவும் சமத்து போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.
   அநிருத் படு சுட்டி போல.....//

   எல்லோருமே படுசுட்டி + சமத்து தான். அநிருத்துக்கு இன்னும் இரண்டு வயது கூட முடியவில்லை. அதனால் தான் அவன் படுசுட்டியாகத் தோற்றமளிக்கிறான். ;)

   Delete
 12. நீங்கள் சொல்வது சரியே உலகில் நமக்கு பொக்கிஷம் என்பது நம் குழந்தைகளே..

  ReplyDelete
  Replies
  1. Jaleela Kamal March 19, 2013 at 10:29 PM

   //நீங்கள் சொல்வது சரியே உலகில் நமக்கு பொக்கிஷம் என்பது நம் குழந்தைகளே..//

   மிக்க மகிழ்ச்சி. ;)

   Delete
 13. பொக்கிஷம் பற்றின குட்டி யூண்டு கதையும் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. Jaleela Kamal March 19, 2013 at 10:31 PM

   //பொக்கிஷம் பற்றின குட்டியூண்டு கதையும் மிக அருமை//

   சந்தோஷம்.

   அந்தக்கதையின் கரு மட்டும், நகைச்சுவை பேச்சாளர் திரு. அறிவொளி என்ற பெரியவர் சொல்லி நான் கேட்டது. அதை அப்படியே ஒரு குட்டியூண்டு கதையாக மாற்றி, இங்கு நான் கொண்டுவந்து உங்களுடன் JUST பகிர்ந்து கொண்டுள்ளேன்.

   அதைப் புரிந்துகொண்டு ரஸித்துக் கருத்துக் கூறியிருப்பதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   Delete
 14. தினகரன் வசந்தம் இதழில் என் பிளாக் அறிமுகத்தை தெரிவித்து வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. Jaleela Kamal March 19, 2013 at 10:33 PM

   //தினகரன் வசந்தம் இதழில் என் பிளாக் அறிமுகத்தை தெரிவித்து வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோபு சார்.//

   நானும் எப்போதும் தினகரன் வாசிப்பவன் அல்ல. நான் அன்று 17/03/13 ஞாயிறு அன்று, முடி திருத்தும் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கு அது என் கண்களில் பட்டது. உங்கள் எல்லோருக்கும் தகவல் கொடுத்து வாழ்த்த முடிந்தது.

   மீண்டும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   Delete
 15. இங்கும் ஸ்பிரிங்கில்ஸ் சிப்ஸ் அனைவருக்கும் பிடிக்கும்.

  அதை அடுக்காக வைத்து சாப்பிடும் போது ரொம்ப நல்ல இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Jaleela Kamal March 19, 2013 at 10:34 PM

   //இங்கும் ஸ்பிரிங்கில்ஸ் சிப்ஸ் அனைவருக்கும் பிடிக்கும். அதை அடுக்காக வைத்து சாப்பிடும் போது ரொம்ப நல்ல இருக்கும்.//

   ஒரே மாதிரியான வளைவான, ஸ்டைலான அதன் வடிவமைப்பு, அதன் ருசியோ ருசி, அந்த காற்று புகாத டப்பா [PACKING MATERIALS] எல்லாவற்றையும் முதன் முறையாகப் பார்த்தபோது நான் மிகவும் வியந்து போனேன். தின்றபிறகு, அந்த காலிடப்பாக்கள் கூட மிகவும் பயன் படுகின்றன. தூக்கியெறிய எனக்கு மனது வருவது இல்லை.

   சந்தோஷம். தாங்கள் அன்புடன் மீண்டும் மீண்டும் ஏழுமுறைகள் வருகை தந்து சிறப்பித்துள்ளதற்கும், அழகான பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.


   Delete
 16. //பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே! //

  true sir.
  very nice post.

  ReplyDelete
  Replies
  1. RAMVI March 19, 2013 at 10:42 PM

   வாங்கோ, வணக்கம்.

   *****பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே!*****

   //true sir. very nice post.//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான TRUE கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 17. பொக்கிஷங்களும் அவர்கள் அளித்த பொக்கிஷங்களும்... நல்ல இனிமையான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. கே. பி. ஜனா... March 19, 2013 at 11:43 PM

   வாருங்கள், வணக்கம்.

   //பொக்கிஷங்களும் அவர்கள் அளித்த பொக்கிஷங்களும்... நல்ல இனிமையான பதிவு!//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 18. ஒவ்வொரு பொருளும் ரசிக்க வைத்தது...

  அதை விட KUNDA மிகவும் பிடித்தது...

  அதைவிட தினமும் பயமுறுத்தும் பிடிக்காத முக்கியமான சர்க்கரை கருவி பிடித்தது...

  அதை விட PRINGLES மொரு மொரு பிடித்தது...

  அதை விட மயில்கண் வெண்பட்டு வஸ்திரம் பிடித்தது...

  அதை விட உண்மை பொக்கிஷமான குழந்தைகள் சிறப்பாக பிடித்தது...

  அதை விட குட்டியூண்டு கதை நன்றாக பிடித்தது...

  அதை விட ஒரு பதிவுக்காக ஏற்கிற சிரத்தையும், வலையுக பொக்கிஷமாக, எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களை மிகவும் பிடித்தது...

  தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் March 19, 2013 at 11:59 PM

   வாருங்கள், வணக்கம்.

   //ஒவ்வொரு பொருளும் ரசிக்க வைத்தது...//

   ஒவ்வொரு பொருளாகப் பட்டியலிட்டு ரஸித்துச் சொன்னது மிகவும் பிடிததது எனக்கும்.

   //அதை விட உண்மை பொக்கிஷமான குழந்தைகள் சிறப்பாக பிடித்தது... அதை விட குட்டியூண்டு கதை நன்றாக பிடித்தது...
   அதை விட ஒரு பதிவுக்காக ஏற்கிற சிரத்தையும், வலையுக பொக்கிஷமாக, எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களை மிகவும் பிடித்தது...//

   மிகவும் சந்தோஷம் நண்பரே.

   //தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 19. பொக்கிஷங்கள் அழகாக உள்ளன. அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பது நல்ல விஷயம் தான்.

  தொடருங்கள் சார். நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. கோவை2தில்லி March 20, 2013 at 12:07 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பொக்கிஷங்கள் அழகாக உள்ளன. அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பது நல்ல விஷயம் தான். தொடருங்கள் சார். நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அடுத்தப்பதிவுக்காக ஆவலுடன் காத்திருப்பதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 20. அன்பான குடும்பம் அழகான கோயில் ! நெகிழ்வான உள்ளம் முகிழ்வான வாழ்க்கை.. இத்தகைய அன்பான வாழ்வை அனுபவிக்கும் பாக்யம் எனக்கு இதுவரை கிடைத்ததே இல்லை, உங்கள் பதிவை வாசிக்கும் போது அப் பேரவா எனக்குள் எழுகின்றது .. :)

  ReplyDelete
  Replies
  1. இக்பால் செல்வன் March 20, 2013 at 12:13 AM

   வாருங்கள், வணக்கம். இது தங்களின் முதல் வருகையோ என நினைக்கிறேன். சந்தோஷம்.

   //அன்பான குடும்பம் அழகான கோயில் ! நெகிழ்வான உள்ளம் முகிழ்வான வாழ்க்கை.. //

   இவையெல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் மட்டுமே உள்ளன.

   POSITIVE ஆன விஷயங்களை மட்டுமே நாம் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் அதிலுள்ள இனிமையை நாமும் உணர முடியும்.

   //இத்தகைய அன்பான வாழ்வை அனுபவிக்கும் பாக்யம் எனக்கு இதுவரை கிடைத்ததே இல்லை.//

   நிச்சயமாகக் கிடைக்கும். நம்மைச்சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் உள்ள ஏதாவது ஒரு நல்லவிஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மகிழுங்கள். மற்றவற்றை நினைத்து மனதில் மறுகாமல் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். நான் என் அன்றாட அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். புரிந்து கொள்ளுங்கள்.

   தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

   //உங்கள் பதிவை வாசிக்கும் போது அப் பேரவா எனக்குள் எழுகின்றது .. :)//

   மிகவும் சந்தோஷம். பேரவாவை வளர்த்துக்கொள்வதில் தவறேதும் இல்லை. நியாயமான எல்லாவற்றிற்கும் நாம் ஆசைப்படுவதில் தப்பேதும் இல்லை. நாம் நியாயமாக ஆசைப்படுவதை ஒருநாள் நிச்சயமாக அடைந்தே தீருவோம். கவலை வேண்டாம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   தங்கள் ஆவலும் விரைவில் பூர்த்தியாக என் அன்பான நல்வாழ்த்துகள்..

   Delete
 21. அருமையான பொக்கிஷப் பகிர்வுக்கு வாழ்த்துகள். தொடரக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam March 20, 2013 at 12:14 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான பொக்கிஷப் பகிர்வுக்கு வாழ்த்துகள். தொடரக் காத்திருக்கிறேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 22. நீங்கள் வைத்திருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி படங்களுடன்
  எழுதியிருப்பது மிகவும் சுவாரஸ்யம்.
  பிள்ளைகள் கொடுக்கும் அன்புத்தொல்லைகள் சுகமான சுமைகள் தான்.சுமப்பதும் இன்பம் தானே!
  நான் இந்தப் பதிவில் பார்த்தது, ஒரு பெருமைமிகு தந்தையை ,
  பேரின்பமிக்க தாத்தாவை.

  தொடருட்டும் உங்கள் பொக்கிஷப் பகிர்வுகள்.......

  ReplyDelete
  Replies
  1. rajalakshmi paramasivam March 20, 2013 at 1:00 AM

   வாருங்கள், வணக்கம்.

   //நீங்கள் வைத்திருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி படங்களுடன்
   எழுதியிருப்பது மிகவும் சுவாரஸ்யம்.//

   சந்தோஷம்.

   //பிள்ளைகள் கொடுக்கும் அன்புத்தொல்லைகள் சுகமான சுமைகள் தான். சுமப்பதும் இன்பம் தானே!//

   ஆம். சுகமான சுமைகள் எல்லாமே சுமப்பதில் இன்பம் தான்.;)

   //நான் இந்தப் பதிவில் பார்த்தது, ஒரு பெருமைமிகு தந்தையை ,
   பேரின்பமிக்க தாத்தாவை.//

   அச்சா! பஹூத் அச்சா!! மிக்க மகிழ்ச்சி. ;)))))

   //தொடருட்டும் உங்கள் பொக்கிஷப் பகிர்வுகள்.......//

   ஆகட்டும். தொடர்கிறேன். தொடர்ந்து வாருங்கள், நீங்களும்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 23. ஆம் உண்மை இது தான் இறைவனால் கொடுக்கபட்ட பொக்கிஷங்கள் பல நீங்க முடியா பொக்கிஷ நினைவுகளை கொடுத்து விடு கின்றன தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. malar balan March 20, 2013 at 2:48 AM

   வாருங்கள், வணக்கம்.

   //ஆம் உண்மை இது தான் இறைவனால் கொடுக்கபட்ட பொக்கிஷங்கள் பல நீங்க முடியா பொக்கிஷ நினைவுகளை கொடுத்து விடுகின்றன தொடருங்கள்//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 24. தமக்குப் பிடித்தவை எல்லாம் சவரணையாக பாதுகாத்து வருவதற்கு ஒரு ஆர்வம் இருக்க வேண்டும் . பார்ப்பவர்கள் வியக்கும் உங்களிடம் உள்ள அந்த ஆர்வமே ஒரு அரிய
  பொக்கிஷம்.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் March 20, 2013 at 2:51 AM

   வாப்பா, கணேஷ்! செளக்யமா?

   உன்னைப்பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. சந்தோஷம்,

   //தமக்குப் பிடித்தவை எல்லாம் சவரணையாக பாதுகாத்து வருவதற்கு ஒரு ஆர்வம் இருக்க வேண்டும் . பார்ப்பவர்கள் வியக்கும் உங்களிடம் உள்ள அந்த ஆர்வமே ஒரு அரிய பொக்கிஷம்.//

   மிக்க மகிழ்ச்சி கணேஷ்.

   வருகைக்கும் பொக்கிஷமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நீங்கள் எல்லோருமே எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷங்கள் தான், கணேஷ்.

   ஆனந்தக் கண்ணீருடன் .... உன் மீது அன்புள்ள ....

   கோபு மாமா.

   Delete


 25. /
  நம் வாழ்க்கையில் நம்மால் நிறைவேற்றப்பட முடியாத ஒருசில ஆசைகளும், சாதனைகளும், விட்டகுறை தொட்டகுறைகளும், நம் மக்கட்செல்வங்களால் நிச்சயமாக நிறைவேற்றப்படும். / நம் நிறைவேறாத ஆசைகளை நம் பொக்கிஷங்கள் மேல் திணிக்கக் கூடாது. என் மாமனார் அவருடைய சொத்தாக ஏழு கோடிகள் என்பார்...!கேட்டால் ஏழு மக்கட்செல்வங்களைக் குறிப்பிடுவார்...! பொக்கிஷங்களுடன் இனிமையாய் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. G.M Balasubramaniam March 20, 2013 at 4:54 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   *****நம் வாழ்க்கையில் நம்மால் நிறைவேற்றப்பட முடியாத ஒருசில ஆசைகளும், சாதனைகளும், விட்டகுறை தொட்டகுறைகளும், நம் மக்கட்செல்வங்களால் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.*****

   //நம் நிறைவேறாத ஆசைகளை நம் பொக்கிஷங்கள் மேல் திணிக்கக் கூடாது.//

   ஆம் ஐயா, அழகாகவே சொல்லியுள்ளீர்கள். இந்தக்காலப் பிள்ளைகள் எதையும் அவர்கள் மேல் [நம் கருத்துக்களையும், நம் எதிர்பார்ப்புகளையும்] திணிக்கவும் விடுவது இல்லை. ஓரளவு தானே சுயமாக முடிவெடுப்பவர்களாகவே உள்ளனர்

   //என் மாமனார் அவருடைய சொத்தாக ஏழு கோடிகள் என்பார்...!கேட்டால் ஏழு மக்கட்செல்வங்களைக் குறிப்பிடுவார்...!//

   ஆம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோடிக்கும் மேல் தான். ;)

   //பொக்கிஷங்களுடன் இனிமையாய் வாழ்ந்திட வாழ்த்துக்கள். //

   சந்தோஷம். நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

   Delete
 26. "எனக்குப் பொக்கிஷமாகத் தோன்றுபவையெல்லாம் உங்களுக்கும் பொக்கிஷமாகத் தோன்றும் என நான் நினைக்கவே முடியாது.

  பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே! "
  என்ன இப்படி சொல்லிட்டிங்க சார், ஏறக்குறைய நாங்க எல்லாம் உங்களை மாதிரிதான் சார்,உங்க பதிவை படித்து நாங்க எழுதியதாக நினைத்து சந்தோசப்படுகிறோம் .
  எங்களை உங்கள் குடும்ப அங்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

  ReplyDelete
  Replies
  1. அஜீமும்அற்புதவிளக்கும் March 20, 2013 at 4:57 AM

   ஆஹா ... அலாவுதீனும் அற்புத விளக்கும் போலல்லவா பெயர் கொண்டுள்ளீர்கள்!!!!! மிக்க மகிழ்ச்சி.

   வருக ! இந்தப்பெயரில் தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

   ஏற்கனவே அஜீம்பாஷா என்றொரு நண்பர் அவ்வப்போது வருகை தந்து மகிழ்வித்துக்கொண்டிருந்தார்.

   அவரை ஏனோ காணவில்லையே என நான் சற்றே கவலைப்பட்டேன்.

   ஒருசமயம் அவரே தான் புதுப்பெயரில் / புனைப்பெயரில் தாங்களோ என ஒரு சிறு சந்தேகமும் எனக்கு உள்ளது.

   எப்படியிருந்தாலும் வாருங்கள், வணக்கம்.

   *****"எனக்குப் பொக்கிஷமாகத் தோன்றுபவையெல்லாம் உங்களுக்கும் பொக்கிஷமாகத் தோன்றும் என நான் நினைக்கவே முடியாது. பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே!*****

   //என்ன இப்படி சொல்லிட்டிங்க சார், ஏறக்குறைய நாங்க எல்லாம் உங்களை மாதிரிதான் சார்,உங்க பதிவை படித்து நாங்க எழுதியதாக நினைத்து சந்தோசப்படுகிறோம் //

   அடடா, அப்படியா! இதைக்கேட்க எனக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது..;)))))

   //எங்களை உங்கள் குடும்ப அங்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் குடும்ப அங்கமாக நான் இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சியடைந்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே.

   தொடர்ந்து வருகை தாருங்கள்.

   அற்புத விளக்கின் உதவியால் தாங்கள் ஒருவேளை அந்த அஜீம்பாஷாவைச் சந்திக்க நேர்ந்தால் நான் அவரை மிகவும் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

   Delete
  2. சார் அவரும் நான்தான் இவரும் நான்தான்.
   ஒரு ஜாலிக்கு அற்புத விளக்கோட வந்தேன்.

   Delete
  3. அஜீம்பாஷா March 21, 2013 at 2:36 PM

   வாருங்கள் நண்பரே, வணக்கம்.

   //சார் அவரும் நான்தான் இவரும் நான்தான்.
   ஒரு ஜாலிக்கு அற்புத விளக்கோட வந்தேன்.//

   சந்தோஷம். நானும் இதை சந்தேகப்பட்டேன். அற்புத விளக்கும் ஜாலியாகத்தான் உள்ளது. ;)))))

   விளக்கத்திற்கு நன்றி!

   Delete
 27. சரியாகச் சொன்னீர்கள். போற்றவும் பாதுகாக்கவும் தூண்டும் எதுவும் பொக்கிஷமே. அத்தனை பொக்கிஷங்களுக்கும் (விலை)மதிப்பு ஒன்றே தான்.
  பொக்கிஷமாக எந்த ஒரு பொருளையும் கொண்டாட எனக்குத் தோன்றியதில்லை.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை March 20, 2013 at 5:09 AM

   வாங்கோ சார், வாங்கோ, வணக்கம்.

   //சரியாகச் சொன்னீர்கள். போற்றவும் பாதுகாக்கவும் தூண்டும் எதுவும் பொக்கிஷமே. அத்தனை பொக்கிஷங்களுக்கும் (விலை) மதிப்பு ஒன்றே தான்.//

   ஆம். ஒரு பொருளோ அல்லது ஒரு நபரோ, நாம் போற்றிப் பாதுகாக்கும் வரையில் மட்டும் தான் பொக்கிஷமாகத் தெரிகிறது.

   அடைப்படையில் ஏதோ ஒரு ஈர்ப்பும், தூண்டுதலும் மட்டுமே இதற்குக்காரணமாக அமைந்து விடுகிறது.

   இந்த ஈர்ப்பும், தூண்டுதலும் என்றும் குறையாத வண்ணம் கவனமாகப் பார்த்துக்கொள்வது மட்டுமே, அதன் மீது / அவர் மீது, நமக்குள்ள பிரியத்தை தொடர்ந்து வளர்க்க முடியும்.

   ’நேற்றுவரை நீ யாரோ ........ நான் யாரோ?

   இன்று முதல் நீ வேறோ ..... நான் வேறோ?”

   என்றொரு அழகான சினிமாப்பாடல் உள்ளது. அது ஏனோ இப்போது என் நினைவுக்கு வருகிறது. ;)))))

   //பொக்கிஷமாக எந்த ஒரு பொருளையும் கொண்டாட எனக்குத் தோன்றியதில்லை.//

   நீங்கள் தான் உண்மையில் ஒரு ஞானி. உங்களைப்போல ஞான பெற்ற ஒருசிலருக்கே எந்தப்பொருளையும், கொண்டாடத் தோன்றாது.

   இந்தப்பதிவின் இறுதிவரை தயவுசெய்து வருகை தாருங்கள்.

   இப்போது லெளகீக விஷயங்களைப்பற்றி மட்டும் நான், பொக்கிஷமாக நினைத்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

   இந்தத்தொடரில் திடீர் திருப்பங்கள் வரக்கூடும். அப்போது உங்களைப்போலவே எல்லோருக்கும் திடீரென ஞானம் ஏற்படக்கூடும்.

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான, மனம் திறந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 28. ந‌ம் குழ‌ந்தைக‌ள் : ஆன‌ந்த‌ம்
  ந‌ம் பேர‌க்குழ‌ந்தைக‌ள் : பேரானாந்த‌ம்.
  "ஒருவ‌ருக்கு பொக்கிஷ‌ம் அடுத்த‌வ‌ருக்கு பொக்கு"
  ஒருவ‌ருக்கு அமிர்த‌ம் அதே அடுத்தவ‌ருக்கு விஷ‌ம்
  அதுதானே வாழ்வின் சார‌ம்

  ReplyDelete
  Replies
  1. vasan March 20, 2013 at 5:23 AM

   வாருங்கள் சார், வணக்கம்.

   //ந‌ம் குழ‌ந்தைக‌ள் : ஆன‌ந்த‌ம்
   ந‌ம் பேர‌க்குழ‌ந்தைக‌ள் : பேரானாந்த‌ம்.
   "ஒருவ‌ருக்கு பொக்கிஷ‌ம் அடுத்த‌வ‌ருக்கு பொக்கு"
   ஒருவ‌ருக்கு அமிர்த‌ம் அதே அடுத்தவ‌ருக்கு விஷ‌ம்
   அதுதானே வாழ்வின் சார‌ம்//

   ஆஹா, வாழ்வின் சாரத்தை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

   ’SOME சாரம்’ இருப்பதனாலேயே ‘சம்சாரம்’ என அழைக்கப்படுகிறாள் மனைவி என்பவள்.

   அவளே ‘மின்சாரம்’ போல ஓர் அதிர்ச்சியையும் தருகின்றாள், அவ்வப்போது.

   மின்சாரம் இல்லாவிட்டாலோ சம்சாரம் இல்லாவிட்டாலோ மனிதனின் வாழ்க்கையே இருண்டு விடுகிறது.

   மின்சாரமோ, சம்சாரமோ முறையாக அவற்றைக் கையாண்டால் மட்டுமே நம் வாழ்க்கையில் பாதுகாப்புடன் கூடிய ஓர் பிரகாஸம் கிடைக்ககூடும்.

   தொடர்ந்து வருகை தாருங்கள். தங்களின் அன்பான வருகைக்கும் அதிசயமான, சற்றே மாறுபட்ட கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 29. அட! எங்கள் ஊர் குந்தாவும், ப்ரிங்கிள்ஸ் உருளைக்கிழங்கு வறுவலும் கூட பொக்கிஷமா?

  எதை எழுத? எதை விட? எல்லாமே ரசிக்க வைத்த பொக்கிஷங்கள்.

  பொக்கிஷங்களைப் பற்றி எழுதி அவற்றை காப்பதும் நம் கடமை என்பதை ஒரு சிறு கதை மூலம் சொல்லியிருக்கும் விதம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. Ranjani Narayanan March 20, 2013 at 5:31 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அட! எங்கள் ஊர் குந்தாவும், ப்ரிங்கிள்ஸ் உருளைக்கிழங்கு வறுவலும் கூட பொக்கிஷமா? எதை எழுத? எதை விட? எல்லாமே ரசிக்க வைத்த பொக்கிஷங்கள். //

   நாக்கிற்கும், வாய்க்கும் மிகவும் ருசியான அதே சமயம் வயிறு வாழ்த்தும் KUNDA + PRINGLES இரண்டுமே என்னைப் பொறுத்தவரை மாபெரும் பொக்கிஷங்களே!

   தங்க மெடலே என்றாலும் நாம் அதை ருசித்து சாப்பிடவா முடியும்? அதனால் நமக்கு என்ன பிரயோசனம் சொல்லுங்கோ?

   //பொக்கிஷங்களைப் பற்றி எழுதி அவற்றை காப்பதும் நம் கடமை என்பதை ஒரு சிறு கதை மூலம் சொல்லியிருக்கும் விதம் அருமை! //

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 30. Replies
  1. middleclassmadhavi March 20, 2013 at 7:17 AM

   WELCOME Madam. வாங்கோ, வணக்கம்.

   //Interesting!//

   Thanks for your kind entry here & for your 'Interesting' Comments too.

   Delete
 31. நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், அவர்கள் கொடுத்த செல்வம் அருமையான செல்வம் என்று நீங்கள் மனதார நினைத்து வாழ்த்துவதே அவர்களுடைய செல்வம். மிகவும் அருமையான பகிர்வுகள். அவர்கள் எதைக் கொடுத்தாலும் அன்பாக ஏற்றுக்கொண்டு
  அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதம் ஒரு அருமையான பொக்கிஷம். நான் மனதார மநதால் பிடிசுற்றிப் போடுகிறேன். ஆசிகளும், அன்புடனும்.

  ReplyDelete
  Replies
  1. Kamatchi March 20, 2013 at 7:19 AM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், அவர்கள் கொடுத்த செல்வம் அருமையான செல்வம் என்று நீங்கள் மனதார நினைத்து வாழ்த்துவதே அவர்களுடைய செல்வம். மிகவும் அருமையான பகிர்வுகள். அவர்கள் எதைக் கொடுத்தாலும் அன்பாக ஏற்றுக்கொண்டு, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதம் ஒரு அருமையான பொக்கிஷம். நான் மனதார மனதால் பிடிசுற்றிப் போடுகிறேன். ஆசிகளும், அன்புடனும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான ஆசீர்வாதங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   மனதால் பிடிசுற்றிப் போடுகிறேன் என்று வாஞ்சையுடன் சொல்லும் பெரியவாளான தாங்களும், வலையுலகின் மூலம் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷமே.

   அநேக நமஸ்காரங்களுடன்,
   கோபாலகிருஷ்ணன்

   Delete
 32. பொக்கிஷங்கள் பற்றிய பதிவும் ஒரு பொக்கிஷம்தான்! பகிர்விற்கு நன்றி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. March 20, 2013 at 8:46 AM

   வாருங்கள், வணக்கம்.

   //பொக்கிஷங்கள் பற்றிய பதிவும் ஒரு பொக்கிஷம்தான்! பகிர்விற்கு நன்றி ஐயா!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், சார்.

   Delete
 33. பொக்கிஷமான என் அருமை பேத்தி பவித்ரா
  மற்றும் பேரன்கள் ஷிவா + அநிருத்//
  அருமையான பொக்கிஷங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 20, 2013 at 9:02 AM

   வாருங்கள், தங்களின் மீண்டும் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

   *****பொக்கிஷமான என் அருமை பேத்தி பவித்ரா மற்றும் பேரன்கள் ஷிவா + அநிருத்*****

   //அருமையான பொக்கிஷங்கள்.//

   ஆம் மேடம், எல்லாம் இறைவன் அளித்த வரம் தான். பெண் குழந்தையே இல்லாத எங்களுக்கு எங்கள் பேத்தி ’பவித்ரா’ மிக மிக அருமை தான். She is so intelligent also. Always school First. சமத்தோ சமத்து. எப்போதுமே புத்தகப்புழுவாக இருப்பாள். டான்ஸ், பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, ஸ்லோகங்கள், Drawing Art Work என எல்லாவற்றிலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவள். ;)

   Delete
 34. பொக்கிஷமான என் அருமை பேத்தி பவித்ரா
  மற்றும் பேரன்கள் ஷிவா + அநிருத்

  மின்னிடும் வைரங்களாய்
  அருமையான பொக்கிஷங்கள்..வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி March 20, 2013 at 9:09 AM

   வாங்கோ, தங்களின் தங்கமான மீண்டும் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

   *****பொக்கிஷமான என் அருமை பேத்தி பவித்ரா மற்றும் பேரன்கள் ஷிவா + அநிருத்*****

   //மின்னிடும் வைரங்களாய் அருமையான பொக்கிஷங்கள்.. வாழ்த்துகள்..//

   தெய்வீகப்பதிவரும், வாக்தேவியும், என் நலம் விரும்பியுமான தங்களின் வாழ்த்துகளை மின்னிடும் வைரங்களாகவும், அருமையான பொக்கிஷங்களாகவும் நான் எண்ணி மகிழ்கிறேன். . மிக்க மகிழ்ச்சி. ;)

   Delete
 35. வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களை நாங்கள் கையாளும் போதும் அவர்களையும் குழந்தைகளையும் கொஞ்சமும் மறக்கவே முடியாதபடி ஒவ்வொன்றிலும் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளார்கள். //

  முத்திரை பதித்த முத்துகள்...

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி March 20, 2013 at 9:10 AM

   மீண்டும் வருகைக்கு நன்றி, வாங்கோ, வணக்கம்.

   *****வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களை நாங்கள் கையாளும் போதும் அவர்களையும் குழந்தைகளையும் கொஞ்சமும் மறக்கவே முடியாதபடி ஒவ்வொன்றிலும் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளார்கள்.*****

   //முத்திரை பதித்த முத்துகள்...//

   தங்களின் அன்பான வருகைக்கும், முத்திரை பதித்த முத்தான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 36. ரசித்த பொக்கிஷங்கள். குந்தா - எனக்கும் இதன் தமிழ் வெர்ஷன், அதான் ஆவின் வழங்கும் பால்கோவா மிகவும் பிடிக்கும்! :)

  தொடரும் பொக்கிஷங்களைப் படிக்க ஆர்வத்துடன்.....

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் March 20, 2013 at 6:57 PM

   வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

   //ரசித்த பொக்கிஷங்கள். குந்தா - எனக்கும் இதன் தமிழ் வெர்ஷன், அதான் ஆவின் வழங்கும் பால்கோவா மிகவும் பிடிக்கும்! :)//

   ஆவின் பால்கோவாவை விட இந்த KUNDA மிகச்சுவையாக இருக்கு வெங்கட்ஜி. ஒருமுறை வாங்கி சாப்பிட்டுப்பாருங்கள்.

   //தொடரும் பொக்கிஷங்களைப் படிக்க ஆர்வத்துடன்.....//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அடுத்தப் பதிவினைப் படிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 37. உண்மைதான். குழந்தைகளே நம் பொக்கிஷம். அவர்களின் குழந்தைகள் இன்னும் பெரிய பொக்கிஷம், துபாயில் இன்னும் ஏதாவது பாக்கிவைத்திருக்கிறார்களா தெரியாது. அத்தனையும் இங்கே வந்துவிடும். நானும் நம் குடும்பதுக்கு உதவிக்கு இருப்பவர்களுக்குச் சேலையும், மணிமாலைகள்,ரெயின் கோட்,செருப்புகள் என்று கொடுத்துவிடுவேன்.உங்கள் பொக்கிஷங்கள் அருமை கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. வல்லிசிம்ஹன் March 20, 2013 at 8:03 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உண்மைதான். குழந்தைகளே நம் பொக்கிஷம். அவர்களின் குழந்தைகள் இன்னும் பெரிய பொக்கிஷம்//

   சந்தோஷம்.

   //துபாயில் இன்னும் ஏதாவது பாக்கிவைத்திருக்கிறார்களா தெரியாது. அத்தனையும் இங்கே வந்துவிடும். நானும் நம் குடும்பதுக்கு உதவிக்கு இருப்பவர்களுக்குச் சேலையும், மணிமாலைகள்,ரெயின் கோட்,செருப்புகள் என்று கொடுத்துவிடுவேன்.//

   ஆமாம். அவர்களெல்லாம் அப்படித்தான். PASSPORT, ATM CARD, CREDIT CARD, DEBIT CARD, PLANE TICKETS, LAPTOP, MOBILE PHONE தவிர எதையுமே பொக்கிஷமாகக் கருத மாட்டார்கள். ஆங்காங்கே விட்டுச்சென்று விடுவார்கள். எதுவாக இருந்தாலும் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் என்ற தைர்யம் தான். ;)))))

   //உங்கள் பொக்கிஷங்கள் அருமை கோபு சார்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   Delete
 38. கிடைத்தவை எல்லாம் பொக்கிஷங்களே என்கிறீர்கள். உண்மை.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். March 21, 2013 at 2:35 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் ! வணக்கம்.

   //கிடைத்தவை எல்லாம் பொக்கிஷங்களே என்கிறீர்கள். உண்மை.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்..

   Delete
 39. அழகான அருமையான பொக்கிஷங்கள் ஐயா.

  உண்மை! ஒருத்தருக்கு பொக்கிஷமானது அடுத்தவருக்கு சுத்த போரா பேத்தலாக இருக்கும்.

  உங்கள் எழுத்துக்களை ரசித்தேன். அருமை. சிறப்பு. வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. இளமதி March 21, 2013 at 3:03 AM

   வாங்கோ, வணக்கம்.

   இன்று [21.03.2013] உங்களையும் உங்கள் வலைத்தளத்தினையும் வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்திருந்தார்கள்.

   பொக்கிஷமாக நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

   அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

   என்னுடைய சமீபத்திய பதிவுகள் சிலவற்றில் உங்களை நான் பார்க்கவே முடியவில்லை.

   பிரபலமாகி வருவதால் பாராமுகமாக இருக்கிறீர்களோ என்னவோ? ;(

   //அழகான அருமையான பொக்கிஷங்கள் ஐயா.//

   சந்தோஷம். பொக்கிஷங்களாக நான் நினைப்பவை எல்லாமே எனக்கும் அழகாகவும் அருமையாகவும் இருப்பதாகவே நானும் உணர்கிறேன்.

   //உண்மை! ஒருத்தருக்கு பொக்கிஷமானது அடுத்தவருக்கு சுத்த போரா பேத்தலாக இருக்கும்.//

   யாருக்கு எப்படி இருந்தால் நமக்கென்ன? நம்மைப்பொறுத்தவரை பொக்கிஷம் என்றுமே பொக்கிஷம் தான்.

   //உங்கள் எழுத்துக்களை ரசித்தேன். அருமை. சிறப்பு. வாழ்த்துக்கள்!!!//

   இதைக்கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளதம்மா! ;)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
  2. ஐயா!...

   இன்றைய வலைத்தள அறிமுகச் சிறப்பில் என்னையும் அங்கு குறிப்பிட்டமை நான் எதிர்பார்க்காத ஒன்று. அதிர்ச்சி + ஆனந்தம்.
   உங்கள் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!

   என்னைப் பிரபலமென்னுமளவிற்கு நான் இன்னும் ஒன்றும் அப்படிச் செய்யவுமில்லை ஆகவுமில்லை. நானும் மிகமிக சாதாரனமானவளே. உங்கள் சமீபத்திய பதிவுகளில் நான் இத்தகைய காரணங்களால் வரவில்லையோ என நீங்கள் கேட்பது வருந்தத்தக்கது.
   அப்படி ஏதுமில்லை. சாதாரண குடும்பப் பெண், பல சிக்கல்கள், நேரமின்மை இப்படி இன்னோரன்ன காரணங்கள் உண்டு. வேண்டுமென உங்கள் பதிவுகளை நான் தவிர்க்கவில்லை என்பதை மிகத் தாழ்மையாகக் கூறிக்கொள்கின்றேன்.

   உங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!
   இயன்றவரை இங்கும் வந்து படித்து கருத்துரை எழுதுகிறேன். எழுதுவேன்.

   Delete
  3. இளமதி March 21, 2013 at 3:58 AM

   //ஐயா! இன்றைய வலைத்தள அறிமுகச் சிறப்பில் என்னையும் அங்கு குறிப்பிட்டமை நான் எதிர்பார்க்காத ஒன்று. அதிர்ச்சி + ஆனந்தம். //

   நீங்கள் ஒருவேளை எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம். எந்த ஒரு பதிவரும் இதை எதிர்பார்க்கவும் மாட்டார்கள் தான். அந்த இனிய அனுபவம் ஆரம்பத்தில் ஆனந்தமாகத்தான் இருக்கும். ;)

   அதிர்ச்சியடையத் தேவையே இல்லை.உங்களிடம் ஏராளமானத் திறமைகள் புதைந்துள்ளன. இப்போது தான் அவைகள் ஒவ்வொன்றாக வலைத்தளத்தின் மூலம் வெளிவரத் தொடங்கியுள்ளன.

   நான் வெகுநாட்களுக்கு முன்பே உங்களிடம் சொன்னேன், வலைத்தளம் ஒன்று தொடங்கி எழுதுங்கள் என்று. நல்லவேளை இப்போதாவது என் சொல்படி கேட்டுள்ளீர்கள். [இது விஷயத்தில் நம் அதிராவுக்கும் என் நன்றிகள்]

   //உங்கள் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!//

   என் வாழ்த்துகள் உங்களுக்கு எப்போதுமே உண்டு தானே!

   //என்னைப் பிரபலமென்னுமளவிற்கு நான் இன்னும் ஒன்றும் அப்படிச் செய்யவுமில்லை ஆகவுமில்லை. //

   யாருமே பிறக்கும்போதே பிரபலமாகப் பிறந்து விடுவது இல்லை.நிச்சயமாக உங்களுக்குள் உள்ள திறமைகள் யாவும் வெளிப்பட்டு உங்களைப் பிரபலமாக்கிவிடும். கவலையே வேண்டாம்.

   நீங்கள் ஒரு 50 பதிவுகளாவது கொடுத்த பிறகு, நீங்களே ஒரு நாள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க வாய்ப்பு உங்களைத்தேடி வரும்.

   //நானும் மிகமிக சாதாரணமானவளே. //

   ஆஹா, இது என்னிடமிருந்து தாங்கள் கற்றதோர் பாடமாக்கும்.;) அந்தப் பாடத்தை என்னிடமேவா?

   //உங்கள் சமீபத்திய பதிவுகளில் நான் இத்தகைய காரணங்களால் வரவில்லையோ என நீங்கள் கேட்பது வருந்தத்தக்கது. அப்படி ஏதுமில்லை. சாதாரண குடும்பப் பெண், பல சிக்கல்கள், நேரமின்மை இப்படி இன்னோரன்ன காரணங்கள் உண்டு. வேண்டுமென உங்கள் பதிவுகளை நான் தவிர்க்கவில்லை என்பதை மிகத் தாழ்மையாகக் கூறிக்கொள்கின்றேன்.//

   சரி, சரி, சரி, அதை விடுங்கோ. என்னால் எல்லாமே புரிந்துகொள்ள முடியும்..

   // உங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!//

   ஆதங்கமெல்லாம் ஒன்றும் இல்லை. உங்கள் பாக்ஷையில் சொல்வதென்றால் என் மனது மிகவும் அங்கலாய்த்தது. உங்கள் தோழியிடம் கூட இதைச்சொல்லியிருந்தேன்.

   //இயன்றவரை இங்கும் வந்து படித்து கருத்துரை எழுதுகிறேன். எழுதுவேன்.//

   அதெல்லாம் ஒன்றும் சிரமப்படவே வேண்டாம். முடிந்தபோது வாருங்கள் போதும். தங்களால் வர இயலாவிட்டாலும், ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லாவிட்டாலும், வேறு ஏதும் நிர்பந்தங்கள் இருந்தாலும் வரவேண்டாம்.

   ஏதோ ஒரு உரிமையில் தான் உங்களை கொஞ்சம் வம்பிழுத்தேன். கோச்சுக்காதீங்கோ..

   வாழ்க ! வளர்க !! மேன்மேலும் தங்கள் வெற்றிகளுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.

   [இப்போதும் அங்கு பனி காலமா? போர்வை பத்திரம்]

   Delete
 40. நல்ல பகிர்வு ஐயா....

  நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்...

  சந்தோஷங்கள் தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. சே. குமார் March 21, 2013 at 1:00 PM

   வாருங்கள், வணக்கம்.

   //நல்ல பகிர்வு ஐயா.... நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்...
   சந்தோஷங்கள் தொடரட்டும்...//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 41. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நான் இந்தப் பொக்கிஷத் தொடரின் முதல் பகுதியில் http://gopu1949.blogspot.in/2013/03/1.html சொல்லியுள்ளது போலவே, எனக்குப் பொக்கிஷமாகத் தோன்றுபவையெல்லாம் உங்களுக்கும் பொக்கிஷமாகத் தோன்றும் என நான் நினைக்கவே முடியாது. //

  உண்மையோ உண்மை.

  உங்க கல்யாண இன்விடேஷன் இருக்குமே பொக்கிஷ பட்டியலில் முக்கியமாக.

  உங்க பதிவுகள படிக்கும் போது அடடா இப்படி இவ்ளோ தாமதமா வலை உலகத்துக்குள்ள வந்திருக்கோமே. நிறைய நல்ல விஷயங்கள தவற விட்டுட்டோமேன்னு வருத்தமா இருக்கு.

  ReplyDelete
 42. JAYANTHI RAMANI March 21, 2013 at 11:34 PM

  *****இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நான் இந்தப் பொக்கிஷத் தொடரின் முதல் பகுதியில் http://gopu1949.blogspot.in/2013/03/1.html சொல்லியுள்ளது போலவே, எனக்குப் பொக்கிஷமாகத் தோன்றுபவையெல்லாம் உங்களுக்கும் பொக்கிஷமாகத் தோன்றும் என நான் நினைக்கவே முடியாது.*****

  //உண்மையோ உண்மை. //

  சந்தோஷம்.

  //உங்க கல்யாண இன்விடேஷன் இருக்குமே பொக்கிஷ பட்டியலில் முக்கியமாக.//

  நல்லாவே உரிமையோடு என்னைக் கிண்டல் பண்றீங்கோ ! ;)

  //உங்க பதிவுகள படிக்கும் போது அடடா இப்படி இவ்ளோ தாமதமா வலை உலகத்துக்குள்ள வந்திருக்கோமே. நிறைய நல்ல விஷயங்கள தவற விட்டுட்டோமேன்னு வருத்தமா இருக்கு.//

  ஆஹா, அவ்வப்போது ஏதாவது இப்படி அள்ளித்தெரிக்கிறீங்கோ ;)

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

  ReplyDelete
 43. பொக்கிஷம் என சிறப்பான இனிய செய்திகளை பிறந்து கொண்டு உள்ளீர்ர்கள் உண்மையில் வாழ்வில் இன்பம் என்பது குரல் இனிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலைசொல் கேளாதவர் என்பர் வள்ளுவர் மிகசிறந்த கருத்தாக்கத்தை வழங்கியமைக்கு பாராட்டுகள் ,....

  ReplyDelete
  Replies
  1. மாலதி March 22, 2013 at 3:24 AM

   வாருங்கள், வணக்கம்.

   //பொக்கிஷம் என சிறப்பான இனிய செய்திகளை பிறந்து கொண்டு உள்ளீர்ர்கள். உண்மையில் வாழ்வில் இன்பம் என்பது குரல் இனிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலைசொல் கேளாதவர் என்பர் வள்ளுவர் மிகசிறந்த கருத்தாக்கத்தை வழங்கியமைக்கு பாராட்டுகள் ,....//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 44. /// பிள்ளைகள் கொடுத்துள்ள ஒருசில அன்புத்தொல்லைகள்!//

  ஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:).. தலைப்பிலேயே தப்பு நடக்கிறதே:) இதைத் தட்டிக் கேட்க ஆருமே இல்லையோ?:) இதுக்குத்தான் அப்பப்ப அதிரா வரோணும் என்கிறது.. சரி சரி முறைக்கக்கூடாது:) முறைச்சால் செந்தளிப்பு குறைஞ்சுபோகும் என அம்மம்மா சொல்லுறவ அதுதான் நான் முறைக்கிறேல்லை:)) சரி அது போகட்டும்...

  ........................... அன்புப் பொக்கிஷங்கள் எண்டுதான் வரோணும்:). லேட்டா வந்தாலும் கற்பூரமாக் கண்டுபிடிச்சிட்டனெல்லோ:)..

  ReplyDelete
  Replies
  1. athira March 22, 2013 at 3:14 PM

   வாங்கோ அதிரா, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   [ஏழு தடவை வந்து அசத்தியிருக்கீங்கோ ... அதனால் ஏழு வாங்கோ போட்டிருக்கிறேனாக்கும் .. ஹூக்க்கும் ;))))))) ]

   அதிராவைக்காணோமே, அடுத்த பதிவு வேறு நாளைக்கு வெளியிடுவதாகச் சொல்லிவிட்டோமே, என மிக்வும் கவலைப்பட்டேன். நல்லவேளையா வந்துட்டீங்கோ. அதுவும் பாருங்கோ பின்னூட்ட எண்ணிக்கை 89 to 95 உங்களுக்கு அமைஞ்சிருக்கு. என் பதில்களையும் சேர்த்தாக 96 to 102 அப்போ பாருங்கோ 100க்கு 100 அதிராவுக்கே.

   100க்கு 100 வாங்கின அதிராவுக்கு முதலில் ஒரு ஜே!

   *****பிள்ளைகள் கொடுத்துள்ள ஒருசில அன்புத்தொல்லைகள்!*****

   //ஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:).. தலைப்பிலேயே தப்பு நடக்கிறதே:) இதைத் தட்டிக் கேட்க ஆருமே இல்லையோ?:) இதுக்குத்தான் அப்பப்ப அதிரா வரோணும் என்கிறது.. சரி சரி முறைக்கக்கூடாது:)//

   முறைக்கவே இல்லை. சிரிக்கிறேனாக்கும்.

   //முறைச்சால் செந்தளிப்பு குறைஞ்சுபோகும் என அம்மம்மா சொல்லுறவ அதுதான் நான் முறைக்கிறேல்லை:))//

   அது யாரு அடிக்கடி, அம்மம்மா? அம்மாவின் அம்மாவோ? நாங்க அவங்களைப் பாட்டி என்போம்.

   //சரி அது போகட்டும்...//

   OK பாட்டியோ அம்மம்மாவோ .... சரி அது போகட்டும். ;)

   //........................... அன்புப் பொக்கிஷங்கள் எண்டுதான் வரோணும்:). லேட்டா வந்தாலும் கற்பூரமாக் கண்டுபிடிச்சிட்டனெல்லோ:)..//

   ’கற்பூர நாயகியே கனகவல்லி’ன்னு பாட்டுப்பாடிட்டேன். போதுமா? ;)

   Delete
 45. //என் கைக்குழந்தை [வயது 30]//

  எங்கேயோ இடிக்குதே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்.. ச்சும்மாவே நேரமில்லாமல் ஓடித்திரிகிறேனாம்ம்.. அந்த அழகில இந்த ஆராச்சியெல்லாம் நேக்குத் தேவையோ?:) இல்ல தேவையோ கேட்கிறேன்ன்?:))..

  ReplyDelete
  Replies
  1. athira March 22, 2013 at 3:16 PM

   *****என் கைக்குழந்தை [வயது 30]*****

   //எங்கேயோ இடிக்குதே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்.. ச்சும்மாவே நேரமில்லாமல் ஓடித்திரிகிறேனாம்ம்.. அந்த அழகில இந்த ஆராச்சியெல்லாம் நேக்குத் தேவையோ?:) இல்ல தேவையோ கேட்கிறேன்ன்?:))..//

   அதெல்லாம் ஒன்றும் இடிக்காது. BIRTH CERTIFICATE எல்லாம் பத்திரமா பொக்கிஷமா வெச்சிருக்கேனாக்கும்.

   நீங்க அவசரமா வரும்போது எங்கேயும் இடிச்சுக்காம இருக்கணுமேன்னு நேக்கு ரொம்ப கவலைக்கீதூஊஊஊஊ. ;)

   Delete
 46. அதென்ன குண்டா?
  கொண்டென்ஸ்ட் மில்க்கோ?.... இப்பத்தான் புரியுது நீங்க ஏன் குண்டு என:) ஹையோ இதை நான் சொல்லல்ல அஞ்சுதான் சொல்லச்சொன்னவவாக்கும்:)).. சரி சரி படிச்சதும் கிழிச்சு தாமிரபரணி ஆத்தில புதைச்சிடுங்க பிளீஸ்ஸ்.. என் வாய்தேன் நேக்கு எடிரி:))..

  ReplyDelete
  Replies
  1. athira March 22, 2013 at 3:18 PM

   //அதென்ன குண்டா? கொண்டென்ஸ்ட் மில்க்கோ?.... இப்பத்தான் புரியுது நீங்க ஏன் குண்டு என:) //

   அந்தக் கர்நாடகா கம்பெனிக்காரங்க என்னவோ அப்படிப்பெயர் வெச்சிருக்காங்கோ. அதுக்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை. அதை எதில் தயார் பண்றாங்களோ? அதுவும் தெரியவில்லை.

   ஆனாக்க ’ஐ ட் ட ம்’ சூப்பரா டேஸ்ட்டா சுவைக்க படா ஜோரா இருக்குதூஊஊஊ.

   //ஹையோ இதை நான் சொல்லல்ல அஞ்சுதான் சொல்லச்சொன்னவவாக்கும்:))..//

   அஞ்சுவைப்பற்றி எனக்கு உங்களைவிட நல்லாவேத் தெரியும்.

   ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க. கட்டித்தங்கமாக்கும்.

   நீங்க ஏதாவது சொல்லிவிட்டு, அஞ்சாமல் அஞ்சு மேலே, பழியைப் போடுறீங்கோ.

   இதைத்தான் பாவம் ஓரிடம், பழி ஓரிடம்ன்னு எங்க அம்மம்மா சொல்லுவாங்கோ.

   அப்பப்பா! உங்களோட பழகினா உடனே அம்மம்மா வந்து என்னோட ஒட்டிக்கிட்டாங்களே ! ;)

   என்னை இந்தத்தொடர் எழுதச்சொன்னதே உங்க அஞ்சு தான், தெரியுமோ?

   ஆனாக்க அவங்க ஏனோ இன்னும் இந்தப்பதிவு பக்கமே வரவில்லை. ;(

   போன பதிவுலேயே ஏதோ ஒரு கதை சொல்றேன்னு சொல்லியிருந்தாங்கோ, அதையும் இன்னும் சொல்லவே இல்லை.

   என்னவோ போங்கோ, எல்லோருமே ஒரே பிஸியா இருக்காங்கோ; கடவுளே, கடவுளே!! ;)

   //சரி சரி படிச்சதும் கிழிச்சு தாமிரபரணி ஆத்தில புதைச்சிடுங்க பிளீஸ்ஸ்.. என் வாய்தேன் நேக்கு எடிரி:))..//

   ஆகட்டும், உங்க அஞ்சுவும் வந்து இதைப்படிச்சுரட்டும். அதன் பிறகு கிழிச்சு தாமிரபரணி ஆத்தில புதைச்சிடுவோம்.

   அது என்ன ‘எடிரி’ ?

   ஓ ......... எதிரியோ! நானும் கற்பூரமாப் புரிஞ்சுக்கிட்டேன். ;)

   எல்லாம் அந்த அதிரா என்னும் கற்பூர நாயகியே கனகவல்லியின் அருளோ?

   உடனே நேர்த்திக்கடன் வைத்திருப்பதாகச்சொல்லி ஏதாவது வசூல் செய்ய நினைக்காதீங்கோ; முறைக்காதீங்கோ! ;)

   Delete
 47. //இது தயாரிக்கப்படும் தொழிற்சாலையில்
  ஏதாவது ஒரு உத்யோகம் கிடைத்தால்
  எப்படியிருக்கும் என நான் எனக்குள்
  கற்பனை செய்து பார்த்து மகிழ்வதுண்டு///

  கொஞ்ச நாளிலேயே அலுத்திடும்... நாமெல்லாம் இதை திரும்பியும் பார்ப்பதில்லை இப்போ...

  ReplyDelete
  Replies
  1. athira March 22, 2013 at 3:20 PM

   *****இது தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் ஏதாவது ஒரு உத்யோகம் கிடைத்தால் எப்படியிருக்கும் என நான் எனக்குள் கற்பனை செய்து பார்த்து மகிழ்வதுண்டு*****

   //கொஞ்ச நாளிலேயே அலுத்திடும்... //

   ஆமாம்ம்ங்க ! கரெக்ட். எ து வா க இருந்தாலுமே கொஞ்ச நாளிலேயே அலுத்துப் போய்விடும் தான்.

   //நாமெல்லாம் இதை திரும்பியும் பார்ப்பதில்லை இப்போ...//

   நீங்களெல்லாம் பிரித்தானியா மஹாராணியார் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. இதையெல்லாம் எப்படித் திரும்பிப்பார்ப்பீங்கோ? தினமும் வகைவகையாக புதுப்புது ஐட்டம்ஸ் அல்லவோ உங்களுக்குப்படைக்கப்படும் !!!!! .

   நான் கூட கற்பனைதான் செய்து பார்த்து மகிழ்ந்தேன். நிஜமாவே இது தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் நிர்வாக இயக்குனர் பதவியே அளித்தாலும் கூட, நான் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லையாக்கும். ;)

   Delete
 48. //
  நானும் என் மனைவியும் முதன்முதலாக [SEPTEMBER / OCTOBER 2004]
  விமானப்பயணம் அதுவும் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்ட விமான டிக்கெட்டுகள் மற்றும் எங்களின் பாஸ்போர்ட் இன்றும் பொக்கிஷமாக. //

  ரிக்கெட் எடுத்தீங்க சரி.. ஆனா பிரயாணம் பண்ணினனீங்களோ? எங்க போனனீங்க எண்டெல்லாம் சொல்லவே இல்லயே... ஹையோ இண்டைக்கு எனக்கு என்னமோ ஆச்சுது.. இருட்டடி வாங்கப்போறனாக்கும்...:).

  ReplyDelete
  Replies
  1. athira March 22, 2013 at 3:21 PM

   *****நானும் என் மனைவியும் முதன்முதலாக [SEPTEMBER / OCTOBER 2004] விமானப்பயணம் அதுவும் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்ட விமான டிக்கெட்டுகள் மற்றும் எங்களின் பாஸ்போர்ட் இன்றும் பொக்கிஷமாக.*****

   //ரிக்கெட் எடுத்தீங்க சரி.. ஆனா பிரயாணம் பண்ணினனீங்களோ? எங்க போனனீங்க எண்டெல்லாம் சொல்லவே இல்லயே... //

   ஐக்கிய அரபு எமிரேட்ஸ் [U A E] ஷார்ஜா, துபாய், அபுதாபி முதலிய இடங்களுக்கு 45 நாட்கள் பயணம் மேற்கொண்டோம்.

   அதைப்பற்றி சுவாரஸ்யமான புகைப்படங்களும், வீடியோக்களும், பயணக்குறிப்புகளும் வைத்துள்ளேன்.

   எழுதினால் ஒரு 100 பதிவுகள் வரை சுவாரஸ்யமாக எழுத முடியும். ஏதோ ஒரு சோம்பலில், அந்தப்பயணக்கட்டுரை அன்று முதல் இன்று வரை அரைகுறையாகவே நிற்கிறது.

   மேலும் நான் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அங்கு ஒருமுறை செல்லும் வாய்ப்பு உள்ளது.

   2004 க்கும் 2013க்கும் இடையே அங்கு நிறைய அசுர வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

   அதனால் இனி மீண்டும் பயணம் சென்று அதை புதிதாக என் பார்வையில் ரஸித்து எழுதினால் தான் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களுக்கு பதில் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் வரக்கூடும். ;)))))

   ஏற்கனவே நான் போய்விட்டு வந்தேனா இல்லையா என்ற சந்தேகம் இருந்தால் இந்த என் பதிவுக்கு தயவுசெய்து போய்ப் பாருங்கோ. மறக்காமல் அங்கு ஒரு பின்னூட்டம் கொடுங்கோ, ப்ளீஸ்: http://gopu1949.blogspot.in/2011/07/5.html

   அந்த என் பதிவினில் வெறும் ஒருசில படங்கள் மட்டுமே இருக்கும். கதைகளெல்லாம் கிடையாது. அதனால் தைர்யமாகப்போய்ப்பாருங்கோ, ப்ளீஸ்.

   //ஹையோ இண்டைக்கு எனக்கு என்னமோ ஆச்சுது.. இருட்டடி வாங்கப்போறனாக்கும்...:).//

   அதென்ன இருட்டடி?????? இருட்டில் வாங்கும் அடியோ?
   அதெல்லாம் கவலையே படாதீங்கோ.

   உங்களுடைய ஸ்பெஷாலிடியே தனிதான். உங்கள் கேள்விகள் சுவாரஸ்யமாகவும், சந்தேகங்கள் நியாயமானதாகவுமே தான் உள்ளன.

   Delete
 49. அழகிய பொக்கிஷங்கள்.... அருமையான நினைவுப்பகிரல்கள்... இன்னும் தொடருதுபோல தொடருங்கோ...

  குட்டிக் கதை அருமை. அது உண்மையேதான், பொக்கிஷம் மட்டுமில்லை.... ஒருவருக்கு மிக அழகாகத் தெரியும் ஒன்று இன்னொருவருக்கு அசிங்கமாகத் தெரியும்.. சிலருக்கு அதிராவை நன்கு பிடிக்கலாம், சிலருக்கு என் பெயரைப் பார்த்தாலே அலர்ஜிபோலவும் இருக்கலாம், இது மனித சுபாவமே... ஒருவருக்கு பிடிப்பது எல்லோருக்கும் பிடிக்குமென்றில்லை.

  ஆனா ஒத்த மன அதிர்வுகள், ஒத்த எண்ணம் கொண்டோருக்கு.. ஒரே விதமான விருப்பு வெறுப்புக்கள் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. athira March 22, 2013 at 3:25 PM

   //அழகிய பொக்கிஷங்கள்.... அருமையான நினைவுப்பகிரல்கள்... இன்னும் தொடருதுபோல தொடருங்கோ.//

   மிகவும் சந்தோஷம் அதிரா. என்னிடம் அருமையான நினைவுகள் நிறையவே உள்ளன. பொக்கிஷம் பற்றி நிறையவே எழுத முடியும். இருப்பினும் எல்லாவற்றையும் பற்றி எழுதி
   எல்லோரையும் போரடிக்க விரும்பாமல், ஓரளவு பொக்கிஷங்களைப்ப்ற்றி மட்டும் எடுத்துக்கொண்டு
   மிகச்சுருக்கமான முறையில் எழுதி எப்படியும் ஒரு பத்துப்பகுதிகளுக்குள் முடித்து விடவேண்டும் என
   நினைத்துள்ளேன். போகப்போகத்தான் தெரியும். இப்போ ஒன்றும் திட்டவட்டமாகச் சொல்வதற்கு இல்லை.

   //குட்டிக் கதை அருமை. அது உண்மையேதான், பொக்கிஷம் மட்டுமில்லை.... ஒருவருக்கு மிக அழகாகத் தெரியும் ஒன்று இன்னொருவருக்கு அசிங்கமாகத் தெரியும்..//

   ஆமாம் அதிரா. அதுவும் உண்மை தான். எங்கள் பக்கம் பெரிசுகள் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

   அதாவது “கிளி போல ஒரு பொண்டாட்டி இருந்தாலும், குரங்கு போல ஒரு வப்பாட்டி வேண்டும்” என்பார்கள்.

   அது எதற்கு இப்படிச்சொல்கிறார்கள் என நான் முன்பெல்லாம் நினைப்பதும் / யோசிப்பதும் உண்டு.

   யோசித்துப்பார்த்தால், நீங்கள் சொல்வது போலத்தான் உள்ளது.
   அதாவது பொதுவாகக் கிளிபோல மற்றவர்களுக்குத் தோற்றமளிக்கும் அவன் மனைவியை விட குரங்குபோல மற்றவர்களுக்குத் தோற்றமளிக்கும் வேறு ஒருத்தி, அவனுக்குக் கிளியாகத் தோன்றமளிக்கிறாள் போலிருக்கு.

   இதெல்லாம் அவரவர் பார்வைகளைப்பொறுத்தது தான். நீங்கள்
   அடிக்கடி சொல்வது போல நமக்கு எதற்கு ஊர்வம்ப்ஸ்ஸ் !!!!! ;) அதனால் அதை இத்தோடு விட்டு விடுவோம். மேலும் இதுபற்றி நாம் விவாதிக்க வேண்டாம்.

   // சிலருக்கு அதிராவை நன்கு பிடிக்கலாம். சிலருக்கு என் பெயரைப் பார்த்தாலே அலர்ஜி போலவும் இருக்கலாம்.//

   கரெக்ட்டூஊஊஊஊ. எனக்கே வெவ்வேறு காலகட்டங்களில் நீங்கள் சொல்லும் இந்த இரண்டு அனுபவங்களும் உண்டு தான். நான் எதையுமே வெளிப்படையாகச் சொல்லி விடுவேனாக்கும்.

   இப்போதெல்லாம் அந்த அலர்ஜி ஏதும் எனக்கு இல்லை. ஓரளவு பிடித்துப்போய் விட்டதாக்கும்.

   சில மருந்துகள் ஆரம்பத்தில் கசப்பது போல இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதுவே பழகிப்போய் விடும்.

   அதுபோல சில கஷ்டங்கள் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாகத்தோன்றும். பழகிப்போனால் கஷ்டமே சுகமாக மாறிப்போகும். பழகி விடும்.

   ஒரு ஜோஸ்யன் சொன்னான்:

   “முதல் நாற்பது ஆண்டுகள் வரை, நீ நாய் படாத பாடு படுவாய்” என்று.

   நம்மாளு அந்த ஜோஸ்யரிடம் கேட்டான்

   “அதன் பிறகு?”

   “அதுவே பழகிப்போகும்” என்றார் அந்த ஜோஸ்யன்.. .

   அதுபோலவே தான் எல்லாமும். ;)))))

   //இது மனித சுபாவமே. ஒருவருக்கு பிடிப்பது எல்லோருக்கும் பிடிக்குமென்றில்லை.//

   கரெக்டூஊஊஊஊ.

   //ஆனா ஒத்த மன அதிர்வுகள், ஒத்த எண்ணம் கொண்டோருக்கு.. ஒரே விதமான விருப்பு வெறுப்புக்கள் இருக்கும்.//

   சூப்பர் அதிரா! ;))))) அதே அதே சபாபதே ......... நமக்குள்ளும்.!!!! கேட்கவே சந்தோஷமாக உள்ளதூஊஊஊ.

   Delete
 50. அடடா முதலில் சொல்ல வேண்டியதை முடிவில் சொல்கிறேன்ன்...

  உங்கள் பேத்தியும் பேரன்களும் அழகான குட்டிகள்... குட்டிப்பேரனில் உங்கள் சாயல் அப்படியே இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. athira March 22, 2013 at 3:26 PM

   //அடடா முதலில் சொல்ல வேண்டியதை முடிவில் சொல்கிறேன்ன்...

   உங்கள் பேத்தியும் பேரன்களும் அழகான குட்டிகள்... குட்டிப்பேரனில் உங்கள் சாயல் அப்படியே இருக்கு.//

   மிகவும் சந்தோஷம் அதிரா. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான மனம் திறந்து பேசியுள்ள பல கருத்துக்களுக்கும், இந்தப்பதிவினை சற்றே மேலும் கலகலப்பாக்கியுள்ள தங்களின் அருந்தொண்டுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   [நாளை பொழுது விடிந்தால் இந்தப்பதிவின் தொடர்ச்சியை நான் வெளியிட வேண்டும். அதற்குள் உங்கள் அஞ்சு, அம்முலு மற்றும் திருமதி ஆச்சி மேடம், திருமதி விஜி மேடம் போன்ற என் வாடிக்கையாளர்களில் சிலர் கருத்துச்சொல்ல வருவார்களோ மாட்டார்களோ?

   இதே கவலையில் எனக்கு இப்போ கையும் ஓடலை லெக்கும் ஆடலை .... ;)))))) ]

   Delete
 51. 103rd comment.
  எப்போதுமே மிக மிகப் பிந்தி வருகிறேன். ஆனால் வருகிறேன் என்ற திருப்தி உண்டு.
  எனது நேரம் இப்படி உள்ளது.
  பொக்கிசம் பொக்கிசமாக உள்ளது. மிக மிக நன்று.
  தொடருவேன். இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. kovaikkavi March 23, 2013 at 2:33 AM

   வாருங்கள், வணக்கம்.

   //103rd comment.// சந்தோஷம்.

   //எப்போதுமே மிக மிகப் பிந்தி வருகிறேன். ஆனால் வருகிறேன் என்ற திருப்தி உண்டு.//

   எனக்கும் திருப்தியே.

   //எனது நேரம் இப்படி உள்ளது.//

   இங்கும் அப்படித்தான். மீண்டும் தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

   //பொக்கிசம் பொக்கிசமாக உள்ளது. மிக மிக நன்று.
   தொடருவேன். இனிய வாழ்த்து. - வேதா. இலங்காதிலகம்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 52. //அஞ்சுவைப்பற்றி எனக்கு உங்களைவிட நல்லாவேத் தெரியும். //


  அதிரா நீங்க இதை ஆயிரம் முறைவாசிக்கணும் :)))

  ReplyDelete
  Replies
  1. CORRECT ! VERY GOOD IMPOSITION TO ATHIRA !! ;)))))

   THANKS TO NIRMALA !!!

   Delete
 53. அண்ணா மூன்று குட்டி ஜூனியர் பொக்கிஷங்களுக்கும் உங்கள் முக சாயல் இருக்கு அதிலும் ஷிவாவுக்கு அதிகம் இருக்கு .அனிருத் :)இவர்தானா so sweeeeet ..அந்த kunda ஸ்வீட் போல ..
  நான் ஒரேயொருமுறைதான் அதை டேஸ்ட் செய்திருக்கேன்.எங்க வீட்டில் அப்பாவும் தங்கையும் தான் இதை விரும்பி சாப்பிடுவாங்க
  ஒவ்வொருவருக்கும் அவரவர் குழந்தைகள் பொக்கிஷங்கள் மிக உண்மை.

  ReplyDelete
  Replies
  1. angelin March 23, 2013 at 8:50 AM

   வாங்கோ, நிர்மலா, வணக்கம்.

   //அண்ணா மூன்று குட்டி ஜூனியர் பொக்கிஷங்களுக்கும் உங்கள் முக சாயல் இருக்கு. அதிலும் ஷிவாவுக்கு அதிகம் இருக்கு.//

   சந்தோஷம்.

   //அனிருத் :) இவர்தானா so sweeeeet ..அந்த kunda ஸ்வீட் போல //

   ;))))) மிக்க மகிழ்ச்சி. 24.04.2011 இல் பிறந்தவன். குடும்பத்தில் இப்போதைக்கு குட்டியூண்டு CUTE BABY அவன் தான். இன்னும் அவனுக்கு 2 வயது பூர்த்தியாகவில்லை.

   //நான் ஒரேயொருமுறைதான் அதை டேஸ்ட் செய்திருக்கேன். எங்க வீட்டில் அப்பாவும் தங்கையும் தான் இதை விரும்பி சாப்பிடுவாங்க//

   ஓஹோ, எனக்கென்னவோ அதன் டேஸ்ட் மிகவும் பிடித்துள்ளது.

   இனிப்பு அதிகம் சாப்பிடாமல் தான் கட்டுப்பாடாக இருப்பேன். ஆனால் இதுபோல ருசியானது கிடைத்தால், கட்டுப்பாட்டை சற்றே தளர்த்தி விட்டு முழுவதும் FINISH செய்து விடுவது தான் என் வழக்கம்.

   //ஒவ்வொருவருக்கும் அவரவர் குழந்தைகள் பொக்கிஷங்கள் மிக உண்மை.//

   ஆமாம். நிர்மலா. நிச்சயமாக அவரவர் குழந்தைகள் அவரவருக்கு மிகப்பெரிய பொக்கிஷம் தான்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 54. அந்த ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ் கிழங்கை அரைத்து ..காயவைத்து bakeநான் தொலைகாட்சியில் ஒருமுறை பார்த்தேன் ..என் மகளும் விரும்பி சாபிடுவா .

  டிக்கட்சையும் பத்திரமாக வைச்சிருக்கீங்க ..என் கணவரின் அலமாரியில் ஒரு பெரிய file முழுதும் இவாறுபயண சீட்டுகளும் போர்டிங் பாஸ் கிழித்த அறைபகுதியும் நிறைய இருக்கு :))

  ReplyDelete
  Replies
  1. angelin March 23, 2013 at 8:55 AM

   //அந்த ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ் கிழங்கை அரைத்து .. காயவைத்து bakeநான் தொலைகாட்சியில் ஒருமுறை பார்த்தேன் ..என் மகளும் விரும்பி சாபிடுவா.//

   முதன்முதலாக அதன் ஸ்டைலான வடிவமைப்பைப்பார்த்ததும் அசந்து போனேன். அதுவும் அதிக காரமோ, அதிக உப்போ இல்லாமல் ருசியாக உள்ளது. எல்லாக்குழந்தைகளுக்குமே அது மிகவும் பிடித்துள்ளது.

   //டிக்கட்சையும் பத்திரமாக வைச்சிருக்கீங்க ..//

   முதன்முதலாக விமானப்பயணம் செய்ததால் ஒருவித சந்தோஷம், த்ரில்லிங் அனுபவம். அதனால் மட்டுமே அதனை அப்படியே பத்திரமாக பாஸ்போர்ட்டுடன் சேர்த்து வைத்துள்ளேன்.

   //என் கணவரின் அலமாரியில் ஒரு பெரிய file முழுதும் இவாறுபயண சீட்டுகளும் போர்டிங் பாஸ் கிழித்த அறைபகுதியும் நிறைய இருக்கு :))//

   ;))))) அடிக்கடி பயணம் செய்பவராக இருக்கும். கொஞ்ச நாட்கள் பாதுகாத்தால் எதற்காவது Reference க்கு அது பயன்படக்கூடும்.

   மீண்டும் வ்ருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

   Delete
  2. இந்த ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ் ...நீங்க உங்கள் வீட்டு ஜன்னலோர அறையில் வைத்திருக்கும் கொறிப்பான்களுக்கு ஈடாகுமா :))..

   Delete
  3. angelin March 23, 2013 at 1:38 PM

   //இந்த ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ் ...நீங்க உங்கள் வீட்டு ஜன்னலோர அறையில் வைத்திருக்கும் கொறிப்பான்களுக்கு ஈடாகுமா :)).//

   ஒவ்வொன்றும் ஒவ்வொரு டேஸ்ட் தான். என்ன இருந்தாலும் இவைகள் [ஜன்னலோர கொறிப்பான்கள்] லோக்கல் சரக்குகள். நினைத்தபோது ஈஸியாக அருகிலேயே கிடைக்கக்கூடியவை.

   ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ் .... ஃபாரின் சரக்கு. அதாவது சீமைச்சரக்கு என்பார்கள். அதில் ஏற்படும் ’கிக்’ தனி தானே! ;)))))

   மேலும் நம் குழந்தைகளால் வெளிநாட்டிலிருந்து அன்புடன் வாங்கிவந்து தரப்படும் தின்பண்டங்கள் என்றால் அதன் சுவையே தனிதானே.

   அதுபோலவே சாக்லேட் பார்கள் + உதிரி சாக்லேட்கள் வாங்கி வருவார்கள். அடடா ... எவ்வளவு சுவையாக இருக்கும் அவை.

   நினைத்தாலே நாக்கில் ஜலம் ஊறுகிறது. அவ்வளவு சூப்பர் குவாலிடி ... வாயில் போட்டால் அப்படியே கரையும். நீண்ட நெரம் வரை நாக்கே ருசியாக இருக்கும். ;)))))

   ஒருசில விசேஷ தயாரிப்புக்களில், அதுவும் குவாலிடியில், எப்போதுமே ஃபாரின் ஃபாரின் தான். இதை நம்மால் மறுக்கவே முடியாது.

   Delete
 55. மழலை உலகம் மகத்தானது வாழ்த்துகள்.

  பொக்கிசங்களை கண்டு மகிழ்ந்தோம். அடுத்து படிக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. மாதேவி March 25, 2013 at 5:36 AM

   வாருங்கள், வணக்கம்.

   //மழலை உலகம் மகத்தானது வாழ்த்துகள். பொக்கிசங்களை கண்டு மகிழ்ந்தோம். அடுத்து படிக்கின்றேன்.//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

   Delete
 56. வைகோ சார் ஒரே நாளில் பல பதிவுகளைப்படிக்கும்போது என்ன பின்னூட்டம் போடணுனே குழப்பமாகுது மெதுவா ஒவ்வொரு நாளுக்கு ஒன்னொன்னா படிச்சுட்டு வரேன் உங்க பதிவுகளுக்கு போட்டி போடுவது போல பின்னூட்டங்களும் கலக்கலா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் March 25, 2013 at 9:13 AM


   ஹலோ! வாங்க, வணக்கம். திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போய்ட்டீங்க? ஆளையே காணுமேன்னு எல்லோரும் ரொம்பவும் கவலைப்பட்டாங்கோ.

   //வைகோ சார் ஒரே நாளில் பல பதிவுகளைப்படிக்கும்போது என்ன பின்னூட்டம் போடணுனே குழப்பமாகுது மெதுவா ஒவ்வொரு நாளுக்கு ஒன்னொன்னா படிச்சுட்டு வரேன்.//

   ஆமாம். நிறைய அரியர்ஸ் வெச்சிருக்கீங்க. ஞாபகம் இருக்கட்டும். தினமும் ஒவ்வொன்றாய் படிச்சுட்டு வந்து கருத்துச்சொல்லுங்கோ. அவசரமே இல்லை.

   //உங்க பதிவுகளுக்கு போட்டி போடுவது போல பின்னூட்டங்களும் கலக்கலா இருக்கு.//

   ஆமாம் நீங்க இல்லாததனால் மற்ற நிறைய பேர்கள் வந்து கலக்கியிருக்காங்கோ.

   தங்களின் அன்பான வருகைக்கும், அவசர அடியாக கொடுத்துள்ள சுருக்கமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். பொறுமையாப்படிச்சுட்டு மீண்டும் வாங்கோ.

   Delete
 57. எதையும் மறந்து எறிந்து விட விரும்பாதஉங்கள் மனநிலை . உங்கள் பொக்கிஷங்களின் சேமிப்பில் இருந்தே தெரிகிறது. பிள்ளைகள் மதிப்பிட முடியாத பொக்கிஷங்களே. அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வருடா வருடம் உங்களைத் தேடி வருவது உங்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கு எடுத்துக்காட்டு

  ReplyDelete
 58. சந்திரகௌரி March 26, 2013 at 10:57 AM

  வாருங்கள், வணக்கம்.

  //எதையும் மறந்து எறிந்து விட விரும்பாத உங்கள் மனநிலை . உங்கள் பொக்கிஷங்களின் சேமிப்பில் இருந்தே தெரிகிறது. பிள்ளைகள் மதிப்பிட முடியாத பொக்கிஷங்களே. அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வருடா வருடம் உங்களைத் தேடி வருவது உங்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கு எடுத்துக்காட்டு//

  மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

  ReplyDelete
 59. ”ஆமாம் நீங்க இல்லாததனால் மற்ற நிறைய பேர்கள் வந்து கலக்கியிருக்காங்கோ.”

  அப்படினா நான் வரலைன்னாதான் மத்தவங்க உங்க பக்கம் வருவாங்கன்னு சொல்ரீங்களா? புரியல்லே.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் March 27, 2013 at 9:09 PM

   வாங்கோ, வ்ணக்கம். மீண்டும் வருகை சந்தோஷமாக உள்ளது.

   *****ஆமாம் நீங்க இல்லாததனால் மற்ற நிறைய பேர்கள் வந்து கலக்கியிருக்காங்கோ*****

   //அப்படினா நான் வரலைன்னாதான் மத்தவங்க உங்க பக்கம் வருவாங்கன்னு சொல்ரீங்களா?//

   ஆஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! நல்ல ஜோக் இது.

   ”யாரை நம்பி நான் பொறந்தேன் ..... போங்கடாப்போங்க .....
   என் காலம் வெல்லும் .... வென்ற பின்னே வாங்கடா வாங்க”ன்னு
   ”எங்க ஊர் ராஜா” என்ற தமிழ் சினிமா படத்தில் சிவாஜி பாடுவார்.

   அதுபோலத்தான் இதுவும். ஏதோ உங்களுக்கு ஒரு குஷி ஏற்படட்டுமே என அவ்வாறு எழுதியிருந்தேனாக்கும்! ஹுக்க்கும்.

   உடனே பெரிய அல்டி பண்ணிக்காதீங்கோ ;)

   ”பூனைக்கண் மூடினால் பூலோகமே இருண்டு விடுமா”ன்னு ஒரு பழமொழியும் சொல்லுவாங்கோ.

   என்னுடைய எழுத்தின் தீவிர ரஸிகர்களில் பலர் இப்போது இங்கு வந்து பின்னூட்டம் தருவது இல்லை. ஆனால் மெயில் / சாட்டிங் / டெலிபோன் மூலம் என் தொடர்பு எல்லைக்குள் தான் உள்ளனர்.

   வர இயலாமைக்கு ஏதேதோ ஆயிரம் காரணங்கள் கதையாகச் சொல்லுவார்கள். எனக்குத்தான் கதை கேட்கவும், கதை சொல்லவும் மிகவும் பிடிக்குமே. கேட்டுக்கொள்வேன். யாரையும் வாங்கோ வாங்கோ என வற்புருத்துவதும் கிடையாது.

   ஏதோ கடந்த ஒரு வருஷமாக ஒரு 40 பேர்கள் முதல் 50 பேர்கள் வரை, யார் யாரோ அவர்களாகவே முன்வந்து பின்னூட்டம் தந்து உற்சாகப் படுத்தி வருகிறார்கள் என்பது சந்தோஷமாக உள்ளது.

   இதில் கூட சிலருடன் மட்டுமே எனக்குப்பழக்கம் உண்டு. பலருடன் எந்தவிதமான தொடர்புகளும் எனக்குக் கிடையாது.

   இந்த எண்ணிக்கை இதே போல நீடிக்கும் வரை, உற்சாகம் அளிக்கும் வரை, நான் தொடர்ந்து எழுதுவேன். அதன் பிறகு நானும் காணாமல் போகிவிடுவேன்.

   //புரியல்லே.//

   நீங்க புதுசு கண்ணா புதுசு. அதனால் ஒன்னுமே புரியாது உங்களுக்கு.

   ”போகப்போகத்தெரியும், இந்தப்பூவின் வாஸம் புரியும்”

   Delete
 60. நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம்
  100% correct Sir.
  என் கைக்குழந்தை [வயது 30]
  jokeadikarenkala?Sir, enke neengal chonna ellame pokishayanakal than. Santhekame illa.
  Engalutan ungal pokishyangalai pakirthu kondathukku thanks sir.
  By the by ella comments padithu mudhual oru kalanthu urayadal pol irrukku.
  viji  ReplyDelete
  Replies
  1. viji March 28, 2013 at 6:02 AM

   வாங்கோ விஜி மேடம், வணக்கம்.

   *****நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம்*****

   //100% correct Sir.//

   மிக்க மகிழ்ச்சி.

   *****என் கைக்குழந்தை [வயது 30]*****

   //jokeadikarenkala?Sir,//
   ஜோக் அடிக்கிறீங்களா, சார்?

   ஜோக் இல்லம்மா. அவன் தான் என் கடைசி பிள்ளை. அதன் பிறகு, அவனுக்குப்பிறகு எங்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை. அதனால் அவனுக்கு எவ்வளவு வயதானாலும்
   அவன் தானே எங்களுக்குக் கைக்குழந்தை?

   //enke neengal chonna ellame pokishayanakal than. Santhekame illa.
   எனக்கே நீங்கள் சொன்ன எல்லாமே பொக்கிஷங்கள் தான். சந்தேகமே இல்லை//

   சந்தோஷம்.

   //Engalutan ungal pokishyangalai pakirthu kondathukku thanks sir.
   எங்களுடன் உங்கள் பொக்கிஷங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள், சார்.//

   மகிழ்ச்சி.

   //By the by ella comments padithu mudhual oru kalanthu urayadal pol irrukku.//
   அப்புறம், வந்திருக்கும் எல்லா கமெண்ட்ஸ்களையும் படித்து முடித்தாலே, ஒரு கலந்துரையாடல் போல இருக்குது//

   ஆமாம். என் பதிவுகளில் இப்போதெல்லாம், வரும் கருத்துக்கள், என் பதிவை விட அதிக சந்தோஷம் தருவதாக என்னாலும் உணர முடிகிறது.

   // viji //

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.

   அன்புடன்
   கோபு

   Delete
 61. இப்படி அனைத்தையும் வைத்திருப்பது நீங்கள் அந்த பொருட்களின் மீதான ரசனையும்,வாங்கி கொடுத்தவரின் மீது வைத்திருக்கும் அன்பையும் பொக்கிசமாய் தெரிகின்றது .

  அதிரடியாக அடுத்த பகுதியை தொடருவேனு சொல்லியிருப்பது மிகவும் ரசனைக்குரியது .அடுத்த பகுதி எனக்கு எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கின்றது

  ReplyDelete
  Replies
  1. thirumathi bs sridharMarch 30, 2013 at 10:38 AM

   வாங்கோ மேடம், வணக்கம். 123 என்ற அதிசய எண்ணிக்கையில் வந்துள்ளீர்கள் [123 = ONE TWO THREE] சந்தோஷம்.

   //இப்படி அனைத்தையும் வைத்திருப்பது நீங்கள் அந்த பொருட்களின் மீதான ரசனையும்,வாங்கி கொடுத்தவரின் மீது வைத்திருக்கும் அன்பையும் பொக்கிசமாய் தெரிகின்றது.//

   ஆமாம். அதே அதே ..... மகிழ்ச்சியாகச் சொல்லியுள்ளீர்கள்.

   //அதிரடியாக அடுத்த பகுதியை தொடருவேனு சொல்லியிருப்பது மிகவும் ரசனைக்குரியது.//

   அடாடா, அப்படியா! சந்தோஷம். தொடர்ந்து வாருங்கள்.

   //அடுத்த பகுதி எனக்கு எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கின்றது //

   நீங்க கருத்துச்சொல்ல வருவீங்களோ மாட்டீங்களோ என்ற எதிர்பார்ப்பு எனக்கும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகின்றது.

   பலவேலைக்களுக்கு இடைய, மிகுந்த சிரமத்துடன், இங்கு அன்புடன் வருகைதந்து, அழகான கருத்துக்கள் சொல்லி, சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   தங்களுக்கு என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.

   Delete
 62. //நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம் //இந்த பொக்கிஷ்ங்களுக்கு முன் மற்றவைகள் எல்லாம் எம்மாத்திரம்.
  உங்க பேரக்குழந்தைகள் மிக அழகாக இருக்கிறார்கள். நீங்க சிறுவயதில் அநிருத் மாதிரியே இருந்திருப்பீங்க.(அச்சு அசல் நீங்கதான்)
  நீங்க நினைப்பது மாதிரித்தான் என் தந்தையும்.ஒன்றுமே கொண்டு வர‌வேண்டாம். நீங்க எந்தவித தடைகளும் இல்லாமல் வரவேண்டும் என்பார்.(அப்பாவை பார்க்க போகும் காலம் பிரச்சனையான காலகட்டம்.)ஆனாலும் அவருக்கு இங்கு ஒருவகை இனிப்பு(மிட்டாய்) ரெம்ப பிடிக்கும்.அதுமட்டும் தயங்கி சொல்வார்.( அவர் இறந்தபின் நான் அதை சாப்பிடுவதில்லை)

  ReplyDelete
  Replies
  1. ammulu April 4, 2013 at 10:25 PM

   வாங்கோ அம்முலு, வணக்கம். தாமதமானாலும் தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவுமே உள்ளது. தவறாமல் வருகை தந்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி.;).

   *****நன்றாக யோசித்துப்பார்த்தால், நம் குழந்தைகளே நமக்கு இறைவன் அளித்துள்ள மிகச்சிறந்த பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம் *****

   //இந்த பொக்கிஷங்களுக்கு முன் மற்றவைகள் எல்லாம் எம்மாத்திரம்.//

   அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

   //உங்க பேரக்குழந்தைகள் மிக அழகாக இருக்கிறார்கள். நீங்க சிறுவயதில் அநிருத் மாதிரியே இருந்திருப்பீங்க.(அச்சு அசல் நீங்கதான்)//

   ஹைய்யோ! இருக்கலாம். இன்னும் மிக அழகாக குண்டாக கஷ்குமுஷ்குன்னு ஜோராக இருந்ததாக என் பெரிய அக்கா சொல்லியிருக்காங்க. போட்டோ பிடித்து வைக்கவில்லையே என்பது தான் அவளின் மிகப்பெரிய குறை. இதை அடிக்கடி சொல்லிச்சொல்லி பூரித்துப்போவார்கள்.

   //நீங்க நினைப்பது மாதிரித்தான் என் தந்தையும்.ஒன்றுமே கொண்டு வர‌வேண்டாம். நீங்க எந்தவித தடைகளும் இல்லாமல் வரவேண்டும் என்பார்.(அப்பாவை பார்க்க போகும் காலம் பிரச்சனையான காலகட்டம்.)//

   ஏதேதோ நினைவுகளை நான் கிளறிவிட்டு விட்டேனா, அம்முலு. வருத்தப்படாதீங்கோ, ப்ளீஸ்.

   //ஆனாலும் அவருக்கு இங்கு ஒருவகை இனிப்பு(மிட்டாய்) ரெம்ப பிடிக்கும்.அதுமட்டும் தயங்கி சொல்வார்.( அவர் இறந்தபின் நான் அதை சாப்பிடுவதில்லை)//

   //தயங்கி// இதைக்கேட்கவே மனசுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.

   //( அவர் இறந்தபின் நான் அதை சாப்பிடுவதில்லை)//

   Very Very Sorry .... Ammulu அதையே நினைத்து வருத்தப்படாதீங்கோ.

   எல்லோரும் ஒருநாள் இந்த உலகை விட்டுப்போகத்தான் போகிறோம். அதுவரை எல்லோரும் ஒருவருக்கொருவ்ர் அன்புடனும் பாசத்துடனும் பழகி வருவோம்.

   >>>>>

   Delete
 63. ஆனாலும் சிலபேர் விதிவிலக்காக இருக்கிறார்கள். அதைகொண்டுவா(தேவையிருக்கோ,இல்லியோ) இதைக்கொண்டுவா என சொல்வதும் உண்டு. பின் கேட்டால் அது எங்கே இருக்கோ தெரியாது என்பார்கள்.அப்போ மனது வலியை சொல்லமுடியாது.
  உங்க பிள்ளைகள் மிக பொருத்தமான,உபயோகமான பொருட்களைத்தான் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.இவைகள் இக்காலத்திற்கு+உங்களிற்கு அவசியமான பொருட்கள்.
  என்னவரும் நிறைய பொக்கிஷப்பொருட்கள் வைத்திருக்கிறார்.அதில் சென்ற‌
  நாடுகளின் விமான,ரயில்பயணச்சீட்டுகள் அடக்கம்.
  //பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே! // அருமையான,உண்மையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. ammulu April 4, 2013 at 10:26 PM

   //ஆனாலும் சிலபேர் விதிவிலக்காக இருக்கிறார்கள். அதைகொண்டுவா (தேவையிருக்கோ,இல்லியோ) இதைக்கொண்டுவா என சொல்வதும் உண்டு. பின் கேட்டால் அது எங்கே இருக்கோ தெரியாது என்பார்கள்.அப்போ மனது வலியை சொல்லமுடியாது.//

   இதில் பெற்றோர்களைவிட, சொந்தக்காரர்களும் நண்பர்களும் படுத்தும்பாடு சகிக்கவே முடியாது.

   வெளிநாட்டிலிருந்து ஒருபொருள் கொண்டு வருவதில் என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்பதே புரியாமல் ஏதேதோ வாங்கிவரச் சொல்லி படுத்துவார்கள்.

   இப்போது எல்லாப்பொருட்களும் எல்லா ஊர்களிலுமே கிடைக்கின்றன என்பதை உணரவும் மாட்டார்கள்.

   அதெல்லாம் மிகப்பெரிய அனுபவக்கதைகள் என்னிடம் உள்ளன.

   நகைச்சுவை கலந்து நான் எழுதினால் ஒரு 10 பதிவுகள் தேறும் தான். ;)

   //உங்க பிள்ளைகள் மிக பொருத்தமான,உபயோகமான பொருட்களைத்தான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இவைகள் இக்காலத்திற்கு + உங்களிற்கு அவசியமான பொருட்கள்.//

   ஆமாம். அவற்றை மட்டுமே நானும் உபயோகித்து வருகிறேன். அதனால் அவைகளை மட்டுமே என் பதிவிலும் கொண்டு வந்துள்ளேன். இன்னும் என்னவெல்லாமோ வீட்டில் இடத்தை ஆக்ரமித்துக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றன. ;)

   //என்னவரும் நிறைய பொக்கிஷப்பொருட்கள் வைத்திருக்கிறார். அதில் சென்ற‌ நாடுகளின் விமான, ரயில் பயணச்சீட்டுகள் அடக்கம்.//

   அப்படியா! எதற்காவது பிற்காலத்தில் ஒரு Back Reference க்குப் பயன்படக்கூடும்.

   *****பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே!*****

   //அருமையான, உண்மையான கருத்து.//

   மிகவும் சந்தோஷம் அம்முலு.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், அம்முலு.

   Delete
 64. ”ஒன்றுமே வேண்டாம். நீங்களும் குழந்தைகளும் நல்லபடியாக இங்கு வந்து விட்டுச்சென்றால் அதுவே போதும்”

  அருமையான வார்த்தைகள். நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. Rathnavel Natarajan April 10, 2013 at 12:33 AM

   வணக்கம் ஐயா, வாருங்கள் ஐயா.

   *****”ஒன்றுமே வேண்டாம். நீங்களும் குழந்தைகளும் நல்லபடியாக இங்கு வந்து விட்டுச்சென்றால் அதுவே போதும்” *****

   //அருமையான வார்த்தைகள். நன்றி ஐயா.//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா..

   Delete
 65. பெற்றோரைப் போற்றும் பண்புமிக்கத் தங்களைப் பிள்ளைகள் கொண்டாடுவதில் ஆச்சர்யம் என்ன? பெற்றோருக்கு என்னென்ன தேவை என்று பார்த்துப் பார்த்து பொருட்களை வாங்கித்தந்து வசதியாய் வைத்திருக்க விரும்பும் பிள்ளைகளின் அன்பு நெகிழ்த்துகிறது. அப்பொருட்களை பொக்கிஷமாய்ப் பாதுகாக்கும் தங்கள் பண்பு இன்னும் நெகிழ்த்துகிறது.

  பொக்கிஷம் பற்றிய கருத்துக்கான குட்டிக்கதை ரசிக்கவைத்தது. பாராட்டுகள் வை.கோ.சார்.

  ReplyDelete
  Replies
  1. கீதமஞ்சரி April 10, 2013 at 3:55 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.
   ,.
   //பெற்றோரைப் போற்றும் பண்புமிக்கத் தங்களைப் பிள்ளைகள் கொண்டாடுவதில் ஆச்சர்யம் என்ன? பெற்றோருக்கு என்னென்ன தேவை என்று பார்த்துப் பார்த்து பொருட்களை வாங்கித்தந்து வசதியாய் வைத்திருக்க விரும்பும் பிள்ளைகளின் அன்பு நெகிழ்த்துகிறது. அப்பொருட்களை பொக்கிஷமாய்ப் பாதுகாக்கும் தங்கள் பண்பு இன்னும் நெகிழ்த்துகிறது. //

   மிகவும் சந்தோஷம், மேடம்.

   //பொக்கிஷம் பற்றிய கருத்துக்கான குட்டிக்கதை ரசிக்கவைத்தது. //

   மிக்க மகிழ்ச்சி. ;)))))

   //பாராட்டுகள் வை.கோ.சார்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   Delete
 66. நானும் இது மாதிரி பல பொருட்களைச் சேர்த்து வைத்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவைகளின் மேல் இருந்த ஈர்ப்பு குறைந்து போய் அவைகளை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி May 7, 2015 at 7:06 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //நானும் இது மாதிரி பல பொருட்களைச் சேர்த்து வைத்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவைகளின் மேல் இருந்த ஈர்ப்பு குறைந்து போய் அவைகளை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டேன்.//

   சபாஷ். எல்லாமே நமக்கு ஓர் ஈர்ப்பு இருக்கும்வரை மட்டுமே தான் நம்மிடம் வைத்துக்கொள்ள முடியும். நமக்கு ஓர் ஞானம் வந்த பிறகு .... ஈர்ப்பு குறையும் போது குப்பையில் போடுவதே மிகவும் நல்லது. :)

   தங்களின் அன்பான வருகைக்கும் யதார்த்தமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

   Delete
 67. அடடா...அடடா....அடடா.......இப்படி ஒரே இணைய ஊரே கூடித் தேர் இழுக்கும் ஒரு பொக்கிஷ வலைப்பூவை இத்தனை நாட்கள் எங்கு என் கண்ணில் படாமல் ஒளித்து வைத்தாய்? அவரவர் மனசுக்குப் பிடித்த விஷயங்களும் பொருட்களும் பொக்கிஷமாக வைத்திருந்தாலும் சொல்லத் தெரியாமல் பத்திரமாய் வைத்திருப்பார்.....இதோ.....இவரோ அதற்கு தலைப்பிட்டு பிட்டுப் பிட்டு எழுதி அந்த பதிவையே பொக்கிஷமாக்கி அதையும் பொருட்காட்சியாக்கி அதிலும்........அதிலும்.....அதிலும்.....! இந்த வலைப்பூ பெட்டகத்தில் இன்னும் இது போல எத்தனை பொக்கிஷங்களோ ...! (திருவனந்தபுரத்தான் மன்னிக்க வேண்டும்....இவரை)

  ReplyDelete
  Replies
  1. ஜெயஸ்ரீ ஷங்கர் July 4, 2015 at 6:35 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான அபூர்வமான வருகையே எனக்கு இன்று கிடைத்துள்ள மிகப்பெரிய பொக்கிஷமாக நினைத்து மகிழ்கிறேன். :)

   //அடடா...அடடா....அடடா.......இப்படி ஒரே இணைய ஊரே கூடித் தேர் இழுக்கும் ஒரு பொக்கிஷ வலைப்பூவை இத்தனை நாட்கள் எங்கு என் கண்ணில் படாமல் ஒளித்து வைத்தாய்? //

   ஊர்கூடித் தேர் இழுத்தாலும் இழுத்த அனைவரும், தேரின் உள்ளே வீற்றிருக்கும் ஸ்வாமியையும் அம்பாளையும் நன்கு தரிஸித்தாளர்களா எனச் சொல்லவே முடியாது. :) தேர் வடத்தை மட்டுமே கொஞ்சம் தொட்டு தரிஸித்துவிட்டு, பக்தி சிரத்தையுடன் சற்றே இழுப்பதுபோல நடித்துவிட்டு, நகர்ந்துகொண்டு விடுவதும் உண்டு. தாங்கள் இன்று இங்கு இந்தப்பதிவுக்கு எழுந்தருளி தரிஸனம் கொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

   //அவரவர் மனசுக்குப் பிடித்த விஷயங்களும் பொருட்களும் பொக்கிஷமாக வைத்திருந்தாலும் சொல்லத் தெரியாமல் பத்திரமாய் வைத்திருப்பார் ..... இதோ..... இவரோ அதற்கு தலைப்பிட்டு பிட்டுப் பிட்டு எழுதி அந்த பதிவையே பொக்கிஷமாக்கி அதையும் பொருட்காட்சியாக்கி அதிலும் ..... அதிலும் ..... அதிலும்.....! இந்த வலைப்பூ பெட்டகத்தில் இன்னும் இது போல எத்தனை பொக்கிஷங்களோ ...! //

   :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   //(திருவனந்தபுரத்தான் மன்னிக்க வேண்டும்....இவரை)//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நல்லாவே நகைச்சுவையாகவே [வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலவே] ஜோராகச் சொல்லியுள்ளீர்கள். ரஸித்தேன். பலக்கச் சிரித்தேன். மிக்க நன்றி !

   Delete
 68. .பொககிஷங்கள பத்தி ஷ்டையில் வெவரமா சொல்லினது நல்லாருந்திச்சி

  ReplyDelete
  Replies
  1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா. :)

   Delete
 69. குழந்தைகள் ஆசை ஆசையாக வாங்கி கொடுத்திருக்கும் பொருட்கள் எல்லாமே பொக்கிஷங்கள்தான். அதை படங்களுடன் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

  ReplyDelete
 70. உண்மையிலேயே அவை பொக்கிஷங்கள் வாங்கி அன்பளித்த பொக்கிஷங்கள்தான்...என்னிடமும் இதுபோல ஒரு சிறிய லிஸ்ட் உண்டு...

  ReplyDelete
 71. //பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே! // உண்மைதான்! அனைத்தையும் இரசித்தேன்!

  ReplyDelete
 72. "இது தயாரிக்கப்படும் தொழிற்சாலையில்
  ஏதாவது ஒரு உத்யோகம் கிடைத்தால்
  எப்படியிருக்கும்" - உண்மையாகவே இதைப்படித்துச் சிரித்துவிட்டேன். இதைச் செய்யும் தொழிற்சாலையில், லைனில் சிப்ஸ் வரும்போதே அதை அவ்வப்போது எடுத்துப்பார்த்து டேஸ்ட் செய்யும், கருகினவற்றைத் தள்ளிவிடும் (தூரப்போடும்) பணி உண்டு. நிச்சயம் அவர்களுக்கு (தமிழர்களாயிருந்தால்) வெறும் மோர்சாதமே போதும் என்றிருக்கும். சிப்ஸை நினைத்தாலே வெறுப்பாயிருக்கும். (பெரும்பாலும், கல்யாணத் தளிகை பண்ணுபவர்கள், அவர்கள் சாப்பிடும்போது வெறும் சாத்துமது சாதம் மட்டும் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதேபோல் பெரிய ஹோட்டல்களில் செஃப் ஆக இருப்பவர்கள், வீட்டில், மனைவி கையால் மோர் சாதமோ, சாத்துமது சாதமோ மட்டும் சாப்பிட ஆசைப்படுவார்கள். எப்போதும் இக்கரைக்கு அக்கரை பச்சைதானே)

  'நீங்கள் எழுதியுள்ளவற்றைத் தவிர, உபயோகமான பொருட்கள் என்று நான் கருதுவது, பேட்டரி பேங்க் (கரண்ட் இல்லாதபோது மொபைலை சார்ஜ் செய்துகொள்ள உபயோகமானது, போட்டோக்களைச் சேமித்துவைக்க யூ எஸ் பி ஹார்ட் டிஸ்க், கேரட் போன்றவற்றை அழகாகச் சீவ அழகிய கட்டர் பெட்டி). மற்ற எல்லாமே இடத்தை அடைப்பவைதான்.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் September 26, 2016 at 3:58 PM

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அனைத்தையும் விரிவாக அலசி, அழகாக எழுதியுள்ள அனைத்துக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)

   Delete
  2. 'நெல்லைத் தமிழன் September 26, 2016 at 3:58 PM

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அனைத்தையும் விரிவாக அலசி, அழகாக எழுதியுள்ள அனைத்துக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)

   Delete