என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 7 மார்ச், 2013

தீர்க்க சுமங்கலி பவ !



2
ஸ்ரீராமஜயம்

மாசியும் பங்குனியும் கூடும் 

விசேஷமான நாள்
காரடையார் நோன்பு 

14.03.2013 வியாழக்கிழமை 
[ஸாவித்ரி கெளரி விரதம்]





காரடையார் நோன்பு 
14.03.2013 வியாழக்கிழமை

நோன்பு சரடு கட்டிக்கொள்ள 
நல்ல நேரம்
மாலை 03.25 முதல் 03.45 வரை

 மஞ்சள் சரடு 
கழுத்தில் கட்டும் போது 
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

தோ3ரம் க்3ருஹ்ணாமி ஸுப4கே3 

ஸஹாரித்3ரம் த4ராம்யஹம்

ப4ர்த்து: ஆயுஷ்ய ஸித்4யர்த்த2ம் 

ஸுப்ரீதா ப4வ ஸர்வதா3

ஸ்லோகத்தின் அர்த்தம்:

ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும். 

கார் அரிசியை மாவாக்கி புதிய துவரம்பருப்புடன் சேர்த்து அடையாகத் தட்டி தெய்வங்களுக்கு நிவேதனம் செய்து நோன்பு செய்யப்படுவதால் காரடையார் நோன்பு என்று இதற்குப் பெயர்.

பெண்களுக்கும் அவர்களது கணவர்களுக்கும் நீண்ட ஆயுளையும் அன்பையும் வளர்க்கும் இந்த விரதத்தை முதன் முதலாக செய்து காட்டி, தனது கணவன் ஸத்யவானை யமனிடமிருந்து மீட்டாள் பதிவ்ருதையான ஸாவித்ரீ தேவி.



மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்க இருக்கும் நேரத்திற்கு சற்று முன்பாகவே, அதாவது மாசியிலேயே ஸுமங்கலிப் பெண்கள் நியமத்துடன் இருந்து இந்த விரதத்தைச் செய்ய வேண்டும்.

மாசி மாதத்தில் உபநயனம் செய்துகொள்வதும், நோன்புக்கயிறு கட்டிக்கொள்வதும், புதிய திருமங்கல்யச் சரடு மாற்றிக்கொள்வதும் அனைத்து நன்மைகளையும் தரும்.  

”மாசிக்கயிறு பாசி படரும்” [விருத்தியாகும் / நீடிக்கும் ] என்பது பழமொழி.

வீட்டில் தெய்வ ஸந்நதியில் அரிசி மாவினால் கோலம் போட்டு, குத்துவிளக்கேற்ற வேண்டும். வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலை வீதம் எண்ணி நுனி வாழை இலைகளாகக் கோலத்தின் மீது [நுனிப்பகுதி வடக்கு நோக்கி இருக்குமாறு] போட வேண்டும். இலையில் லேஸாக தண்ணீர்  தெளிக்க வேண்டும்.

அந்த இலைகளின் நுனிப்பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நடுவில் பூ கட்டிய மஞ்சள் சரடு ஆகியவற்றை வைத்து, இலையில் நடுப்பகுதியில் இரண்டு வெல்ல அடைகளும்** வெண்ணெயும் வைக்க வேண்டும். [** இதை வெல்லக் கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்] 

குடும்பத்தில் வயதான பெண்களில் ஒருவர் மட்டும், தங்கள் இலையில் மட்டும், அம்மனுக்குக் கட்ட என்று ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.  

மொத்தம் போடப்பட்டுள்ள நுனி இலைகள் 1,3,5,7,9 என ஒற்றைப்படையில் வருமேயானால், ஒரு இலையை அதிகமாகப்போட்டு 2,4,6,8,10 என இரட்டைப்படையில் வருமாறு இலைகளைப் போட வேண்டும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு இலைக்கு முன்பாகவும் நின்று கொண்டு ஜலத்தினால் மும்முறை இலையைச்சுற்றி விட்டு,  

“உருக்காத வெண்ணெயும் 
ஓரடையும் நான் தருவேன், 
ஒருக்காலும் என்னை விட்டு, 
என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்” 

ன்னும் வாக்கியங்களைச் சொல்ல வேண்டும்.  

பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் தெய்வ ஸந்நதியில் அமர்ந்து கொண்டு, ஒரு சரட்டினை அம்மனுக்குக் கட்டிவிட்டு, மற்றொரு சரட்டினை 

தோ3ரம் க்3ருஹ்ணாமி ஸுப4கே3 ஸஹாரித்3ரம் த4ராம்யஹம்
ப4ர்த்து: ஆயுஷ்ய ஸித்4யர்த்த2ம் ஸுப்ரீதா ப4வ ஸர்வதா3


என்ற ஸ்லோகம் சொல்லியபடி தானும் கழுத்தில் கட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கும் அதே போல கட்டி விட வேண்டும். 

பிறகு அடையில் ஒன்றை தனது கணவருக்கு என்று தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, கணவரிடம் அதைக் கொடுத்து சாப்பிடச்சொல்ல வேண்டும்.  தானும் மற்றொரு அடையைச் சாப்பிட வேண்டும்.

தயார் செய்த அடையில் [கொழுக்கட்டைகளில்] இரண்டு அடைகளை [கொழுக்கட்டைகளை] மறுநாள் காலையில் பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும். 



இவ்விதம் காரடையான் நோன்பைச் செய்வதால், நோன்பு செய்யும் பெண்களுக்கும், அவர்களது கணவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அன்பு பெருகும்.


[இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள பல தகவல்கள் 
ஒரு சில ஆன்மிக மாத இதழ்களில் 
நான் சமீபத்தில் படித்து அறிந்து கொண்டவை vgk]




பின் குறிப்பு : 

இந்த வெல்லக்கொழுக்கட்டை மற்றும் உப்புக்கொழுக்கட்டையை புதிதாகச் செய்பவர்கள், அவற்றை எப்படிச்செய்ய வேண்டும் என்ற பக்குவத்தை, இதை நன்றாக செய்து அனுபவமுள்ளவர்களிடம், தயவுசெய்து கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யவும். 

அப்போது தான் அது பூப்போல மிருதுவாகவும். வாய்க்கு ருசியாகவும், சாப்பிடத் திருப்தியாகவும் அமையும்.

இல்லாவிட்டால் ஒரேயடியாக ரப்பர் பேப்பர் வெயிட் [RUBBER PAPER WEIGHT] போல கடினமாக அமைந்து விடும். 

கையினால் புட்டுச் சாப்பிட முடியாமல் காய்ந்து போன கோந்துக்கட்டி போல [GUM]  கெட்டியாகி வாய்க்கு ருசிப்படாமல், பற்களில் ஈஷிக்கொண்டு படாதபாடு படுத்திவிடும். 


ஆசையாக சாப்பிட வாயில் போடும் போது,  தப்பித்தவறி காலில் விழுந்து விட்டால் கால் நகத்தையே பெயர்த்து விடும். 

மறுநாள் பசு மாட்டுக்குக் கொடுக்கும் போது அதுவும் அசை போட்டு சாப்பிட மிகவும் கஷ்டப்படும். அல்லது ’எனக்கு இது வேண்டவே வேண்டாம்’ என மறுத்து விடவும் கூடும். 

இது நகைச்சுவைக்காக மட்டும் நான் எழுதவில்லை. 

எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும். 

அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை செய்ய நாம் உபயோகித்த மூலப்பொருட்கள், நம் கஷ்டமான உழைப்பு, பொன்னான நேரம், அதற்கான எரிபொருள் எல்லாமே வீணாகிவிடும் அல்லவா! 

அதனால் தான் சொல்கிறேன்.  தயவுசெய்து யாரும் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்.   

நல்லபடியாக வாய்க்கு ருசியாக, பூப்போல மிருதுவாக கொழுக்கட்டைகள் அமைய என் அன்பான வாழ்த்துகள்.  

    

தீர்க்க சுமங்கலி பவ !

    





ஓர் முக்கிய அறிவிப்பு



என் அடுத்த பதிவு வரும் 


10.03.2013 ஞாயிறு இரவு

 வெளியிடப்படும்.



எச்சரிக்கை


அது மிகவும் விறுவிறுப்பான 


காரசாரங்கள் நிறைந்த பதிவு !


ஜாக்கிரதை !!


இருப்பினும் காணத்தவறாதீர்கள் !!!







என்றும் அன்புடன் தங்கள்,

வை. கோபாலகிருஷ்ணன்

07.03.2013






118 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றாக... விளக்கங்கள் அருமை ஐயா...

    அதை விட பின் குறிப்பு மிகவும் முக்கியம்...

    உங்கள் வாழ்த்துக்கள் போல் எல்லோருக்கும் அமைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் March 6, 2013 at 10:56 PM

      வாருங்கள், வணக்கம். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை மகிழ்வளிக்கிறது.

      //ஒவ்வொன்றாக... விளக்கங்கள் அருமை ஐயா...
      அதை விட பின் குறிப்பு மிகவும் முக்கியம்...
      உங்கள் வாழ்த்துக்கள் போல் எல்லோருக்கும் அமைய வாழ்த்துக்கள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அனைவரையும் வாழ்த்தியுள்ள அரிய பண்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  2. ரப்பர் பேப்பர் வெயிட்

    காய்ந்து போன கோந்துக்கட்டி

    உவமானக்கள் எல்லாம் சிரிக்க,ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா March 6, 2013 at 11:10 PM

      வாருங்கள், வணக்கம்.

      //ரப்பர் பேப்பர் வெயிட் .... காய்ந்து போன கோந்துக்கட்டி
      உவமானக்கள் எல்லாம் சிரிக்க, ரசிக்க வைத்தன.//

      தங்களின் அன்பான வருகைக்கும், உவமானங்களைக் கண்டு சிரித்து ரசித்து மகிழ்ந்ததாகச்சொல்லும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  3. அருமையான விளக்கங்கள்,படங்களுடன் நல்லதொரு பகிர்வு. பின்குறிப்பு சிந்தித்து செயல்படவேண்டி எழுதியிருக்கிறீங்க அண்ணா.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu March 6, 2013 at 11:51 PM

      வாங்கோ அம்முலு. வணக்கம்.

      //அருமையான விளக்கங்கள்,படங்களுடன் நல்லதொரு பகிர்வு. பின்குறிப்பு சிந்தித்து செயல்படவேண்டி எழுதியிருக்கிறீங்க அண்ணா. நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்ம்மா.

      நீக்கு
  4. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

    // கார் அரிசியை மாவாக்கி புதிய துவரம்பருப்புடன் சேர்த்து அடையாகத் தட்டி தெய்வங்களுக்கு நிவேதனம் செய்து நோன்பு செய்யப்படுவதால் காரடையார் நோன்பு என்று இதற்குப் பெயர். //

    காரடையார் நோன்பு காரணப் பெயர் தெரிந்து கொண்டேன். சத்யவான் – சாவித்திரி புராணம் தொடங்கி ,நோன்புக் கயிறு, சரடு கட்டுதல் முதல் காராம் பசு வரை அருமையான விளக்கங்கள். இடையிடையே வழக்கம்போல உங்களுக்கே உரிய நகைச்சுவை! அருமை!
    தீர்க்க சுமங்கலி பவ !
    ” என் அடுத்த பதிவு வரும் 10.03.2013 ஞாயிறு இரவு வெளியிடப்படும். என்ற உங்கள் அறிவிப்பைப் பார்த்ததும் பழைய மலரும் நினைவு ஒன்று......
    ஒரு காலத்தில் (உங்கள் வீதிக்கு அடுத்து உள்ள ) கீழ ஆண்டார் வீதியில், வரிசையாக சினிமா விநியோகஸ்தர்கள்அலுவலகங்கள் அதிகம் இருந்தன. அவர்கள் ” பொங்கல் முதல்”, ” தீபாவளி முதல்”, “ எமது அடுத்த வெளியீடு ” என்று சிறிய விளம்பர போஸ்டர் தட்டிகளை வைத்து இருப்பார்கள். இந்த போஸ்டர்கள் ஞாபகம் வந்தன..
    அடுத்து வரும் சஸ்பென்ஸ் பதிவு! ஞாயிறு வரை சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்! வாழ்த்துக்கள்!

    ( உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்! )


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ March 7, 2013 at 12:54 AM

      //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      *****கார் அரிசியை மாவாக்கி புதிய துவரம்பருப்புடன் சேர்த்து அடையாகத் தட்டி தெய்வங்களுக்கு நிவேதனம் செய்து நோன்பு செய்யப்படுவதால் காரடையார் நோன்பு என்று இதற்குப் பெயர்.*****

      //காரடையார் நோன்பு காரணப் பெயர் தெரிந்து கொண்டேன். சத்யவான் – சாவித்திரி புராணம் தொடங்கி ,நோன்புக் கயிறு, சரடு கட்டுதல் முதல் காராம் பசு வரை அருமையான விளக்கங்கள். இடையிடையே வழக்கம்போல உங்களுக்கே உரிய நகைச்சுவை! அருமை! தீர்க்க சுமங்கலி பவ !//

      மிகவும் சந்தோஷம் ஐயா.

      //” என் அடுத்த பதிவு வரும் 10.03.2013 ஞாயிறு இரவு வெளியிடப்படும். என்ற உங்கள் அறிவிப்பைப் பார்த்ததும் பழைய மலரும் நினைவு ஒன்று......

      ஒரு காலத்தில் (உங்கள் வீதிக்கு அடுத்து உள்ள ) கீழ ஆண்டார் வீதியில், வரிசையாக சினிமா விநியோகஸ்தர்கள்அலுவலகங்கள் அதிகம் இருந்தன. அவர்கள் ” பொங்கல் முதல்”, ” தீபாவளி முதல்”, “ எமது அடுத்த வெளியீடு ” என்று சிறிய விளம்பர போஸ்டர் தட்டிகளை வைத்து இருப்பார்கள். இந்த போஸ்டர்கள் ஞாபகம் வந்தன..//

      ஆமாம், ஐயா, இதை நானும் நிறைய தடவைகள் பார்த்திருக்கிறேன்.

      விளம்பரம் இல்லாமல் எந்த வியாபாரமும் வெற்றிகரமாக நடப்பது இல்லையே.

      நம் பதிவினில், முடிந்தவரை அடுத்த பதிவினைப்பற்றி ஒரு தகவல் .. விளம்பரம் போலக் கொடுத்து விட்டால், அது சிலருக்காவது பயன்படக்கூடும் என்ற எண்ணம் தான், ஐயா.

      எப்போதுமே இதுபோல திட்டமிட்டு செய்வது என்பதும் இயலாததோர் விஷயம் தான், ஐயா.

      ஏதோ இயன்றவரை மட்டுமே செய்ய முடிகிறது.

      //அடுத்து வரும் சஸ்பென்ஸ் பதிவு! ஞாயிறு வரை சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்! வாழ்த்துக்கள்!//

      அது உண்மையிலேயே “மிகவும் விறுவிறுப்பான மற்றும் காரசாரமான பதிவு தான்” ஐயா.

      உண்டா இல்லையா என நீங்களே பிறகு சொல்லுவீர்கள்.

      பதிவுக்குத் தகுந்த தலைப்பு மட்டும் இன்னும் என்னால் தேர்ந்தெடுந்து Finalise செய்யப்படவில்லை.

      // உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்! //

      மிக்க நன்றி, ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  5. naanum padithen...amma appavurukkum ithai kaanbithen..nalla thellivana vilakkngal,slokam plus kozhukkattai recipe..post script in humourous way us adding colour to d page..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. girijasridhar March 7, 2013 at 1:15 AM

      அன்புள்ள கிரிஜாஸ்ரீதர், வாம்மா, செளக்யமா?

      //naanum padithen...amma appavurukkum ithai kaanbithen..nalla thellivana vilakkngal,slokam plus kozhukkattai recipe..post script in humourous way us adding colour to d page..//

      நீயும் படித்துவிட்டு உங்க அம்மா + அப்பாவுக்கும் காண்பித்தது சந்தோஷம்.

      எப்படி வாய்க்கு ருசியான மிருதுவான நோன்பு கொழுக்கட்டைகள் செய்ய வேண்டும் என்பதை உன் அம்மாவிடமிருந்து நீ ஆர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அது தான் மிகவும் முக்கியம்.

      நிறைய பேர்கள் இங்கு அதன் ரெஸிபியைக் கேட்கிறார்கள், பார்.

      நீ முதலில் அதை உன் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டு எனக்கும் சொன்னால், அடுத்த நோன்புக்காவது அதை வெளியிட செளகர்யமாக இருக்கும். ;))))

      நீக்கு
  6. Very good post.
    Advance namaskaram from your younger sister.
    Waiting to see nextpost by Sunday. (Ennum evalavu nall errukku?2 days....... o.k.)
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji March 7, 2013 at 1:17 AM

      வாங்கோ, வணக்கம்.

      //Very good post.//

      சந்தோஷம்.

      //Advance namaskaram from your younger sister.//

      மனமார்ந்த ஆசிகள்,. தீர்க்க சுமங்கலி பவ ! ;)))))

      //Waiting to see next post by Sunday. (Ennum evalavu nall errukku?
      2 days....... o.k.) - viji//

      ரொம்ப சந்தோஷம்மா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்ம்மா.

      நீக்கு
  7. வாழ்த்துக்கள் கிடைக்கப் பெற்றோம். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு March 7, 2013 at 1:31 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வாழ்த்துக்கள் கிடைக்கப் பெற்றோம். நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீடூழி வாழ்க! நன்றிக்கு நன்றிகள்.

      நீக்கு
  8. நல்ல உபயோகமான பதிவு. நோன்பு செய்யுமுன் காரணத்தையும் தெரிந்து கொண்டதற்கு எல்லோருமே உங்களை நினைத்துக்கொண்டு வாழ்த்துவார்கள். அடைக்கும் பதம் சொல்லிவிட்டீர்கள். எல்லோருடய நன்றிகளும் உங்களுக்குக் கிடைக்கும். பதிவு ஸந்தோஷமாக இருக்கிரது. அன்புடன் மாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi March 7, 2013 at 1:54 AM

      அநேக நமஸ்காரங்கள், மாமி.

      //நல்ல உபயோகமான பதிவு. நோன்பு செய்யுமுன் காரணத்தையும் தெரிந்து கொண்டதற்கு எல்லோருமே உங்களை நினைத்துக்கொண்டு வாழ்த்துவார்கள். அடைக்கும் பதம் சொல்லிவிட்டீர்கள். எல்லோருடைய நன்றிகளும் உங்களுக்குக் கிடைக்கும். பதிவு ஸந்தோஷமாக இருக்கிறது. அன்புடன் மாமி//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மாமி..

      உங்கள் ஆசீவாதத்தில் அனைவரும் நல்லபடியாக அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழட்டும்.

      நமஸ்காரங்களுடன் கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  9. காரடையான் நோன்பு குறித்த தகவல்கள் அருமை!அதைவிட பின்குறிப்பும் சுவாரஸ்யம்! அடை செய்யும் செய்முறையினையும் பதிவிட்டு இருக்கலாம்! இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும்! பதிவிற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. காரடையான் நோன்பு ஸ்பெஷல் பதிவு மிகவும் விசேஷம்.

    அருமையான விளக்கங்கள் .சத்தியவான் சாவித்திரி கதையிருக்கும், படிக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் இல்லை....

    ஞாயிற்றுக் கிழமைப் பதிவை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam March 7, 2013 at 2:17 AM

      வாருங்கள், வணக்கம்.

      //காரடையான் நோன்பு ஸ்பெஷல் பதிவு மிகவும் விசேஷம். அருமையான விளக்கங்கள் //

      சந்தோஷம்.

      //சத்தியவான் சாவித்திரி கதையிருக்கும், படிக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் இல்லை....//

      விரைவில் வேறு ஒரு பதிவர் இதைப்பற்றி வெகு அழகாக வெளியிடுவார்கள் என நானும் எதிர்பார்க்கிறேன்.

      //ஞாயிற்றுக் கிழமைப் பதிவை எதிர்பார்க்கிறேன்.//

      மிகவும் மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
    2. rajalakshmi paramasivamMarch 7, 2013 at 2:17 AM

      //சத்தியவான் சாவித்திரி கதையிருக்கும், படிக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் இல்லை....//

      தயவுசெய்து இந்தக்கீழ்க்கண்ட பதிவினைப்போய்ப் பாருங்கள். வெகு அழகான பதிவு கொடுத்து அசத்தியுள்ளார்கள். அதில் சத்யவான் சாவித்திரி கதையும் உள்ளது...

      http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_1119.html

      ”மாசிக்கயிறு பாசி படரும்”

      நீக்கு
  11. சுலோகம் பற்றிய குறிப்புக்கு நன்றி பூஜை பற்றிய குறிப்புகளும் அருமை கொழுகட்டை பற்றிய நகைசுவை அருமை உண்மையும் கடைசி குறிப்பு மிக அருமை நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. malar balan March 7, 2013 at 2:36 AM

      வாருங்கள், வணக்கம்.

      //சுலோகம் பற்றிய குறிப்புக்கு நன்றி பூஜை பற்றிய குறிப்புகளும் அருமை கொழுகட்டை பற்றிய நகைசுவை அருமை உண்மையும் கடைசி குறிப்பு மிக அருமை நல்ல பதிவு//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  12. சிறப்பான தகவல்கள் நோம்பைப் பற்றி.படங்களும் அற்புதமாக இருக்கு.

    எங்கள் வீட்டில் பெருமாள் இலை என்று பூஜை அறையில் தனியாக இலையில் வெண்ணை, கொழுக்கட்டை, வெற்றிலை பாக்கு வைத்து அதனுடன் மஞ்சள் கயிற்றையும் வைத்து பூஜை செய்வோம்.

    வெல்ல கொழுக்கட்டை மட்டும்தான் உப்பு கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI March 7, 2013 at 3:27 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சிறப்பான தகவல்கள் நோம்பைப் பற்றி.படங்களும் அற்புதமாக இருக்கு.//

      சந்தோஷம்.

      //எங்கள் வீட்டில் பெருமாள் இலை என்று பூஜை அறையில் தனியாக இலையில் வெண்ணை, கொழுக்கட்டை, வெற்றிலை பாக்கு வைத்து அதனுடன் மஞ்சள் கயிற்றையும் வைத்து பூஜை செய்வோம்.//

      ”பெருமாள் இலை” பற்றி கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //வெல்ல கொழுக்கட்டை மட்டும்தான் உப்பு கிடையாது.//

      சிலரின் சம்ப்ரதாயங்கள் அதுபோல இருக்கும் தான்.

      வாழ்க்கையும் எப்போதும் வெல்லமாக இனிக்கட்டும். ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், தங்களின் சம்ப்ரதாய வழக்கங்களைச் சொல்லி, விளக்கியதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  13. காரடையார் நோன்பு விவரம் மிகவும் நன்றாக இருக்கிறது.
    உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி. நல்லோர் வாழ்த்து நலம் பல தரும்.

    எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும்.

    //அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை செய்ய நாம் உபயோகித்த மூலப்பொருட்கள், நம் கஷ்டமான உழைப்பு, பொன்னான நேரம், அதற்கான எரிபொருள் எல்லாமே வீணாகிவிடும் அல்லவா! //

    உண்மை. தாய் சொல்லும் அறிவுரை போல் உள்ளது மகிழ்ச்சி.

    அடுத்த விறுவிறுப்பான காரசாரங்கள் நிறைந்த பதிவை படிக்க ஆவலாய் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு March 7, 2013 at 3:30 AM

      வாருங்கள், வணக்கம்.

      //காரடையார் நோன்பு விவரம் மிகவும் நன்றாக இருக்கிறது.
      உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி. நல்லோர் வாழ்த்து நலம் பல தரும்.//

      சந்தோஷம்.

      *****எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும்.

      அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை செய்ய நாம் உபயோகித்த மூலப்பொருட்கள், நம் கஷ்டமான உழைப்பு, பொன்னான நேரம், அதற்கான எரிபொருள் எல்லாமே வீணாகிவிடும் அல்லவா! *****

      //உண்மை. தாய் சொல்லும் அறிவுரை போல் உள்ளது மகிழ்ச்சி.//

      தங்களின் மகிழ்ச்சி எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.

      //அடுத்த விறுவிறுப்பான காரசாரங்கள் நிறைந்த பதிவை படிக்க ஆவலாய் இருக்கிறோம்.//

      சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  14. மாசி மாதத்தில் உபநயனம் செய்துகொள்வதும், நோன்புக்கயிறு கட்டிக்கொள்வதும், புதிய திருமங்கல்யச் சரடு மாற்றிக்கொள்வதும் அனைத்து நன்மைகளையும் தரும்.

    நன்மைதரும் நாள் பற்றி சிறப்பான பகிர்வுக்கு மனம்
    நிறைந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 7, 2013 at 4:40 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      *****மாசி மாதத்தில் உபநயனம் செய்துகொள்வதும், நோன்புக்கயிறு கட்டிக்கொள்வதும், புதிய திருமங்கல்யச் சரடு மாற்றிக்கொள்வதும் அனைத்து நன்மைகளையும் தரும். *****

      //நன்மைதரும் நாள் பற்றி சிறப்பான பகிர்வுக்கு மனம்
      நிறைந்த நன்றிகள்..//

      அன்பான தங்களின் வருகைக்கும், அழகான மனம் நிறைந்த ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நன்றிகளுக்கும் என் இனிய மனமார்ந்த நன்றிகள்.

      மேலே திருமதி: rajalakshmi paramasivam அவர்கள் கீழ்க்கண்டவாறு தன் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார்கள்:

      **சத்தியவான் சாவித்திரி கதையிருக்கும், படிக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் இல்லை...**

      தங்களை மனதில் நினைத்து, அதற்கு நான் அளித்துள்ள பதில்:

      *****விரைவில் வேறு ஒரு பதிவர் இதைப்பற்றி வெகு அழகாக வெளியிடுவார்கள் என நானும் எதிர்பார்க்கிறேன். *****

      தங்கள் செளகர்யப்படி, முடிந்தால் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்றபடி ஏதாவது பார்த்து ஆவன செய்ய வேண்டுகிறேன்.

      நீக்கு
    2. http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_1119.html

      ”மாசிக்கயிறு பாசி படரும்”

      என்கிற பதிவில் விளக்கம் கிடைக்கும் ....

      நீக்கு
    3. மிக்க நன்றி. இப்போது நான் மீண்டும் ஒருமுறை போய் படித்து மகிழ்ந்தேன்.

      நீக்கு
  15. ”மாசிக்கயிறு பாசி படரும்” [விருத்தியாகும் / நீடிக்கும் ] என்பது பழமொழி.

    காலம் காலமாக்ச்சொல்லப்படும்
    அனுபவ மொழிப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 7, 2013 at 4:42 AM

      *****மாசிக்கயிறு பாசி படரும்” [விருத்தியாகும் / நீடிக்கும் ] என்பது பழமொழி.*****

      //காலம் காலமாக்ச்சொல்லப்படும் அனுபவ மொழிப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

      தங்கள் பாராட்டுக்களால் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் அனுபவ மொழி மேலும் புதுமையான முறையில் சிறப்படைகிறது.

      மிகவும் சந்தோஷம்.

      நீக்கு
  16. ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்.

    அருமையான ஸ்லோகத்தை பொருளுடன் பகிர்ந்தது விரத்தை அர்த்தமுடன் நோற்க உதவிபுரியும் ..உளம் நிறைந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 7, 2013 at 4:45 AM

      *****ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும். *****

      //அருமையான ஸ்லோகத்தை பொருளுடன் பகிர்ந்தது விரத்தை அர்த்தமுடன் நோற்க உதவிபுரியும் ..உளம் நிறைந்த நன்றிகள்..//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  17. அருமையான விளக்கங்களுடன்... பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... March 7, 2013 at 4:56 AM

      வாருங்கள், வணக்கம்.

      //அருமையான விளக்கங்களுடன்... பகிர்வுக்கு நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  18. //ஆசையாக சாப்பிட வாயில் போடும் போது, தப்பித்தவறி காலில் விழுந்து விட்டால் கால் நகத்தையே பெயர்த்து விடும். // ஹா ஹா எவ்வள்வு நகைச்சுவையா சொல்லிருக்கீங்க..

    இந்த விரதத்தைப் பர்றி மேலும் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா...அடை செய்முறையும் பகிர்ந்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga March 7, 2013 at 5:04 AM

      வாருங்கள், வணக்கம்.

      *****ஆசையாக சாப்பிட வாயில் போடும் போது, தப்பித்தவறி காலில் விழுந்து விட்டால் கால் நகத்தையே பெயர்த்து விடும்.*****

      //ஹா ஹா எவ்வள்வு நகைச்சுவையா சொல்லிருக்கீங்க..//

      ;))))) அனைவரின் கால் நகங்களும், நாளும் கிழமையுமாக, நல்லபடியாக இருக்க வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில் மட்டுமே தான். ;)))))

      //இந்த விரதத்தைப் பற்றி மேலும் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா...//

      எனக்கும் மகிழ்ச்சியே.

      //அடை செய்முறையும் பகிர்ந்திருக்கலாம்...//

      இப்போதைக்கு மிருதுவாக ருசியாக சூடாக சுவையாகத் தந்தால் சாப்பிட மட்டுமே எனக்குத் தெரியும்.

      நன்றாக இருந்தால் கையோடு பாராட்டி விடுவேன்.

      கோளாறாக இருந்தாலும் கையோடு அதைச் சுட்டிக்காட்டி விடுவேன். [அதுவும் என் வீட்டுக்காரியிடம் மட்டுமே]

      மற்றபடி இதன் செய்முறையெல்லாம் எனக்குத் தெரியாது. அதனால் நான் அதைப்பற்றி பகிர்ந்து கொள்ள இயலவில்லை.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், ஆர்வத்திற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  19. சுவையான பதிவுதான். பக்திபூர்வமானதும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். March 7, 2013 at 5:54 AM

      வாங்கோ ...... ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      //சுவையான பதிவுதான். பக்திபூர்வமானதும் கூட.//

      தங்களின் அன்பான வருகைக்கும், சுவையான பக்திபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்.

      நீக்கு
  20. காரடையார் நோன்பு விரதம் அறிந்திருந்தும் இவ்வளவு விரிவாக நானறிந்திருக்கவில்லை. நல்ல விளக்கமுடன் விஷயங்களைப் அழகாகப் பதிவுசெய்துள்ளீர்கள்.

    பின்குறிப்பாக காரடையைப்பற்றி நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளது ரசிக்கவைத்தது. செய்யும் செயல் எதுவாகிலும் சிரத்தையுடன் செய்யாவிட்டால் விபரீதம்தானே. நல்ல பதிவு. அருமை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி March 7, 2013 at 7:20 AM

      வாங்கோ என் அன்புக்குரிய இளமதி அவர்களே, வணக்கம்.

      நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சு.

      அபூர்வமாக இன்று நீங்கள் இங்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //காரடையார் நோன்பு விரதம் அறிந்திருந்தும் இவ்வளவு விரிவாக நானறிந்திருக்கவில்லை. நல்ல விளக்கமுடன் விஷயங்களைப் அழகாகப் பதிவுசெய்துள்ளீர்கள்.//

      ரொம்பவும் சந்தோஷமம்மா !

      //பின்குறிப்பாக காரடையைப்பற்றி நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளது ரசிக்கவைத்தது. //

      நகைச்சுவையுணர்வுடன் ரஸித்துச்சொல்லியுள்ளது எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறதும்மா.

      //செய்யும் செயல் எதுவாகிலும் சிரத்தையுடன் செய்யாவிட்டால் விபரீதம்தானே.//

      கரெக்டூஊஊஊ. எதையும் மிகவும் சிரத்தையாக மட்டுமே பார்த்துப்பார்த்து மிகவும் கவனமாகவே செய்ய வேண்டியுள்ளது. [விபரீதங்களைத் தடுக்கத்தான்.]

      // நல்ல பதிவு. அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி! //

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      தீர்க்க சுமங்கலி பவ !

      நீக்கு
  21. காரடையார் நோன்பு பற்றிய விரிவான பகிர்வு ஐயா!அன்று யாராவது நோன்பு அடை கொடுப்பார்கள் என நாக்கைத் தீட்டிக் கொண்டு காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை பித்தன் March 7, 2013 at 7:38 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //காரடையார் நோன்பு பற்றிய விரிவான பகிர்வு ஐயா!//

      மிகவும் சந்தோஷம்.

      //அன்று யாராவது நோன்பு அடை கொடுப்பார்கள் என நாக்கைத் தீட்டிக் கொண்டு காத்திருக்கிறேன்!//

      காதைத்தீட்டிக்கொண்டு என்பார்கள். நாக்கை நீட்டிக்கொண்டு என்பார்கள்.

      நீங்கள் நாக்கைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறேன் என்கிறீர்கள்.

      எப்படியும் தங்களுக்கு நோன்பு கொழுக்கட்டையை யாராவது கொண்டுவந்து அன்று அளித்து மகிழ்விக்க வேண்டுகிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  22. இந்தமுறை நோன்பு அன்று உங்கள் ஆசிகளுடனே எல்லோரும் சரடு கட்டிக் கொள்ளுவோம்.
    எல்லோருக்கும் நினைவில் நிற்கும் பதிவாக போட்டுவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan March 7, 2013 at 8:37 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இந்தமுறை நோன்பு அன்று உங்கள் ஆசிகளுடனே எல்லோரும் சரடு கட்டிக் கொள்ளுவோம்.//

      ஆஹா, என்னே என் பாக்யம்!! கொழுக்கட்டைகளையும் என்னை நினைத்துக்கொண்டே சாப்பிட்டு விடுவீர்கள், தானே!!!!!

      //எல்லோருக்கும் நினைவில் நிற்கும் பதிவாக போட்டுவிட்டீர்கள்.//

      சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  23. அதிரபதே!! அதிரபதே!!!... ஏற்கனவே திருஷ்டிப் பூசணி உடைக்கச் சொல்லி உடைச்சீங்களோ தெரியேல்லை.... இப்போ இன்னும் திருஷ்டியாகிடப்போகுதே கோபு அண்ணன்... ஒழுங்கா டேட் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பதிவுகள் போடுறீங்க டெல்லி எக்ஸ்பிரெஸ் போல... மிக நல்ல விஷயம்.. கீப் இட் மேல.

    அச்சச்சோஒ... மறந்துபோய்க் கதைச்சிட்டனே:) ... மீயும் கோபு அண்ணனும் கோவமாக்கும்:)... அவ்வ்வ்வ் படிச்சதும் கிழிச்சு காவேரி ஆத்தில எறிஞ்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்..:) கோபமெண்டால் கதைக்கப்பூடாதென அம்மம்மா சொல்லியிருக்கிறா:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 7, 2013 at 1:28 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //அதிரபதே!! அதிரபதே!!!... ஏற்கனவே திருஷ்டிப் பூசணி உடைக்கச் சொல்லி உடைச்சீங்களோ தெரியேல்லை.... இப்போ இன்னும் திருஷ்டியாகிடப்போகுதே கோபு அண்ணன்... //

      நீங்கள் வருகை தந்து ஏதேதோ கலக்கலாகச் சொல்வதனால் மட்டுமே, பதிவைப்பார்ப்பவர்களுக்கு, திருஷ்டியாகக்கூடும்.

      அவ்வாறு திருஷ்டி பட்டுவிடக்கூடாதே என்ற நல்ல எண்ணத்திலோ என்னவோ என்னுடைய கடந்த மூன்று பதிவுகளுக்கு தாங்கள் வருகை தரவே இல்லை. ;(((((

      //ஒழுங்கா டேட் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பதிவுகள் போடுறீங்க டெல்லி எக்ஸ்பிரெஸ் போல... மிக நல்ல விஷயம்.. கீப் இட் மேல.//

      ஒழுங்கா டேட் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பதிவுகள் போட்டும் என்ன பிரயோசனம். நீங்கள் தான் கடந்த மூன்று பதிவுகளாக வரவே இல்லையே. நீங்கள் மட்டுமா உங்கள் க்ரூப் கம்பெனியில் வேறு சிலரும் வரவே இல்லையே. ;(((((

      //அச்சச்சோஒ... மறந்துபோய்க் கதைச்சிட்டனே:) ... மீயும் கோபு அண்ணனும் கோவமாக்கும்:)... //

      கோபம் என்றால் என்னவென்றே எனக்குத்தெரியாது அதிரா. நீங்க இப்படி எழுதியபிறகு தான், பிறரிடம் நான் இதைப்பற்றி [கோபத்தைப்பற்றி] கேட்டுத்தெரிந்து கொண்டேனாக்கும்.

      பிறகு தான், நீங்க என் மீது இப்போ ஒரே கோபமாக இருக்கிறீர்கள் என்றும் புரிந்துகொண்டேன்.

      //அவ்வ்வ்வ் படிச்சதும் கிழிச்சு காவேரி ஆத்தில எறிஞ்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்..:) //

      OK OK அப்படியே செய்து விடுகிறேன்.

      //கோபமெண்டால் கதைக்கப்பூடாதென அம்மம்மா சொல்லியிருக்கிறா:)...//

      அம்மம்மா சொல்லிருப்பதை மறந்துட்டு, என் மீது உங்களுக்குக் கோபம்ன்னு இப்போ கதைச்சுட்டீங்களே!

      தங்களுக்கு என் மீது இப்போது புதிதாக ஏற்பட்டுள்ள கோபம் தணிய நான் என்ன செய்யணும்ன்னும் சொல்லிடுங்கோ, ப்ளீஸ்.

      நீக்கு
    2. ///ஒழுங்கா டேட் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பதிவுகள் போட்டும் என்ன பிரயோசனம். நீங்கள் தான் கடந்த மூன்று பதிவுகளாக வரவே இல்லையே. நீங்கள் மட்டுமா உங்கள் க்ரூப் கம்பெனியில் வேறு சிலரும் வரவே இல்லையே. ;(((((///

      அச்சச்சோ கோபு அண்ணன் என்னைத்தான் உங்களுக்குத் தெரியுமே மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்:))... நான் இங்கு வர வெளிக்கிட வெளிக்கிட.. இளமதி என் வலதுகையை இழுக்க:), அஞ்சு என் இடது கையை இழுக்க:).. இப்பூடியே திண்டாடி முடிவில கேட்டேன்ன்ன் ஏன் என்னாச்சு என?:))..

      அதுக்கு சொல்லிச்சினம்:)... கோபு அண்ணன் உங்கமேல கோபமாம்ம்:)) அதான் போயிடாதீங்க என:)))... பாருங்க மீ ரொம்ப நல்ல பொண்ணல்லோ?:).. ஏதும் அவர்களைக் கேட்பதாயின் மெயில்ல கேழுங்க... அதிலயே எழுதிடுங்க.. அதிரா ஊரிலில்லை அண்டாட்டிகா போயிட்டா என...:)))

      நீக்கு
    3. athiraMarch 8, 2013 at 12:01 PM

      *****ஒழுங்கா டேட் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பதிவுகள் போட்டும் என்ன பிரயோசனம். நீங்கள் தான் கடந்த மூன்று பதிவுகளாக வரவே இல்லையே.

      நீங்கள் மட்டுமா உங்கள் க்ரூப் கம்பெனியில் வேறு சிலரும் வரவே இல்லையே. ;(((((*****

      //அச்சச்சோ கோபு அண்ணன் என்னைத்தான் உங்களுக்குத் தெரியுமே மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்:))... நான் இங்கு வர வெளிக்கிட வெளிக்கிட.. இளமதி என் வலதுகையை இழுக்க:), அஞ்சு என் இடது கையை இழுக்க:).. இப்பூடியே திண்டாடி முடிவில கேட்டேன்ன்ன் ஏன் என்னாச்சு என?:)) அதுக்கு சொல்லிச்சினம்:)... கோபு அண்ணன் உங்கமேல கோபமாம்ம்:)) அதான் போயிடாதீங்க என:)))... //

      எனக்குப்பின்னூட்டம் மூலம் இதுவரை பழக்கமானவரை, நீங்க சொல்லும் இருவரில் ஒருவர் குட்டி நிலா போல மிகவும் குளுமையானவங்க . மற்றொருவர் டாலடிக்கும் தங்க மீன்குட்டி போல மிகவும் தங்கமானவங்க ..... அதுவும் அவர்கள் இருவரும் பிறந்த முதல் நாள், முதல் நிமிஷம், முதல் வினாடியிலிருந்தே ரொம்ப நல்லவங்களாக்கும் ! ;))))).

      அவங்க இருவருமே என்னைப்பற்றி அப்படியெல்லாம் உங்களிடம் சொல்லியிருக்கவே மாட்டாங்கோ. .சான்ஸே இல்லையாக்கும்.

      //பாருங்க மீ ரொம்ப நல்ல பொண்ணல்லோ?:).. ஏதும் அவர்களைக் கேட்பதாயின் மெயில்ல கேழுங்க... அதிலயே எழுதிடுங்க.. அதிரா ஊரிலில்லை அண்டாட்டிகா போயிட்டா என...:)))//

      நான் அவர்களை மெயிலிலே கேட்கணுமா?

      முடியாது. இதற்கான சாத்தியமே இல்லை.

      அதிரபதே, இது என்ன புது சோதனை!

      எனக்கு யாருடனும் மெயில் தொடர்புகளே கிடையாதுங்க. மெயில் ஐ.டி. யும் தெரியாதுங்க. நம்புங்கோ ப்ளீஸ்.

      நமக்கு எதுக்குங்க ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?

      >>>>>>>

      நீக்கு
    4. கோபு >>>> அதிரா [2]

      அதனால் நீங்க கீழ்க்கணட் என் மூன்று சமீபத்திய பதிவுகளுக்கு மட்டுமாவது வருகை தந்து ஏதாவது ஒரு நாலு வரியாவது அல்லது இரண்டு வரியாவது பின்னூட்டம் கொடுத்துட்டுப் போங்க.

      நான் [தங்களிடமிருந்து தகவலே வராவிட்டாலும் கூட] உங்களின் சமீபத்திய் பதிவுகள் அத்தனைக்கும் வந்து ஒரு நாலு வரியாவது அல்லது இரண்டு வரியாவது பின்னூட்டம் கொடுத்து விட்டுப்போயிருக்கேனாக்கும்.

      உங்க சினேகிதிகள் இருவரில் என் பதிவுகள் சிலவற்றிற்கு வராதவங்க, வந்தா வரட்டும், வராவிட்டால் போகட்டும்.. அது அவங்க இஷ்டம்.

      >>>>>>>>

      நீக்கு
    5. கோபு >>>>> அதிரா [3]

      மீ. அதிரா உட்ப்ட யாரையுமே என் பதிவுக்கு ’வாங்க வாங்க’ என்று இம்சிப்பது இல்லையாக்கும்.

      இப்போதும் இம்சிக்கவில்லை.

      இதோ இணைப்புகள் ஒரு தகவலுக்காக மட்டுமே.

      மேன்மை தாங்கிய பிரித்தானியா மஹாராணியாரின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் அவர்கள் ஒருவேளை அண்டார்டிக்கா போவதற்கு முன்போ அல்லது அண்டார்டிக்காவிலிருந்தே கூடவோ, என் தளத்திற்கு வருகைதர விரும்பினால் சுலபமாக இருக்கக்கூடுமே என்பதற்காக மட்டுமே.

      ஒரு தகவலுக்காக மட்டுமே .

      http://gopu1949.blogspot.in/2013/03/blog-post.html

      [பின்னூடங்களின் எண்ணிக்கை 94 எனக்காட்டுகிறது. நீங்க நினைத்தல் அதில் 100 ஐ அடையவும் வாய்ப்பு உள்ளதூஊஊஊஊஊ]

      http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_3629.html

      [பின்னூட்ட எண்ணிக்கை108 இல் நிற்கிறதூஊஊஊ]

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html

      [பின்னூட்ட எண்ணிக்கை118 இல் நிற்கிறதூஊஊஊ]

      மஹாராணியார் பேத்தி தவிர வேறு யாரும் இதைப்பயன்படுத்தி என் தளத்திற்கு வருகை தரணும் என்ற அவசியம் இல்லையாக்கும்.

      அவங்களாகவே ஒருவேளை வந்தா வந்துட்டுப்போகட்டும். அவங்களும் பாவம் தானே, போனாப்போறாங்க.

      மறப்போம், மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம். . ;)))))

      ooooooo

      நீக்கு
    6. இது பதில் ஒண்டாக்கும்:)..

      கோபு அண்ணன் உங்க\ளுக்கு ஒரு உண்மை தெரியுமோ?.. மீ உங்கட பதிவுகள் 3 உம் வெளிவந்தபோது சத்தியமா காணவேயில்லை.... பின்பு இப்பதிவு வந்தபோதுதான் அவற்றையும் பார்த்தேன் +படிச்சேன்ன்...

      என்னில ஒரு குணம், புதுப்பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டமிடுவேன், பழசை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி எனும் ரேஞ்சில விட்டிடுவேன். ஆனால் பழய பதிவெனினும் பின்னூட்டம் போடுமிடத்து அது உங்களுக்கு மகிழ்வைத் தருகிறது என்பது இப்போது புரிந்துகொண்டேன்ன்ன்...

      புதுப்பதிவுக\ளுக்கே.. பந்தியாகப் பின்னூட்டினால்கூட , “நன்றி “ என ஒரு வார்த்தையில் பதில் போடுவினம் சிலர், சில இடங்களில் பதிலே வராது(இப்போ இந்த லிஸ்ட்டில நானும் சேர்ந்திடுவேனோ எனப் பயம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:)) இப்படியாக வலையுலகம் இருக்கும் நிலைமையில், நீங்க.. ஒரு வார்த்தை சொன்னாலே அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் போடுறீங்க, பாராட்டுகிறேன்.

      நிட்சயம் கடந்த 3 பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுறேன்ன்.. மீ தான் அங்கின 100 ஆக்கும்..:) அதுக்குள் ஆரும் ஓடிப்போய்ப் பின்னூட்டம் போட்டிடக்கூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      நீக்கு
    7. ///நான் [தங்களிடமிருந்து தகவலே வராவிட்டாலும் கூட] உங்களின் சமீபத்திய் பதிவுகள் அத்தனைக்கும் வந்து ஒரு நாலு வரியாவது அல்லது இரண்டு வரியாவது பின்னூட்டம் கொடுத்து விட்டுப்போயிருக்கேனாக்கும்.///

      நோ இது தப்பு கோபு அண்ணன்... மீ எப்பவுமே என்பக்கம் வந்து பினூட்டம் போடுவோரிடம் கணக்குப் பார்ப்பதில்லை. நீங்க போட்டால்தான் நானும் போடுவேன் என்றெல்லாம் நினைப்பதில்லை.

      நான் பதிவுகள் போடாவிட்டாலும் கூட.. என் பக்கம் வருவோரிடம் போவேன்.. ஆனா சில நேரங்களில் மனதுக்கு படும், ஏதோ அவர்கள் என்பக்கம் வரவிரும்பவில்லையோ என, அப்படியானால் கூட எடுத்தோம் கவிழ்த்தோம் என விடமாட்டேன், ஓரிரண்டு பதிவுகள் போய்ப் பார்ப்பேன், தொடர்ந்து வராவிட்டால்தான் போகமாட்டேன்ன்:)))...

      உங்கள் பதிவு பழயதாகிட்டுது(நான் பார்க்கும்போது:)).. எனும் ஒரே காரணத்தால்தான் பின்னூட்டமிடவில்லை. வேறு எந்தக் காரணமும் இல்லை.

      ஊசிக்குறிப்பு...
      அண்டாட்டிக்கா இப்ப போகவில்லையாக்கும்... அது ச்ச்ச்சும்மா சொன்னனான்:))

      நீக்கு
    8. athira March 9, 2013 at 9:23 AM

      வாங்கோ வாங்கோ ... அதிரா வாங்கோ! வணக்கம்.

      //இது பதில் ஒண்டாக்கும்:)..//

      ” ஒண்டாக்கும்;) “ ????? என்னவென்றே புரியவில்லை. அதனால் பராவாயில்லை. ஏதோ எப்படியோ பதில் ஒண்டினால் சரிதான்.

      //கோபு அண்ணன் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமோ?.. மீ உங்கட பதிவுகள் 3 உம் வெளிவந்தபோது சத்தியமா காணவேயில்லை.... பின்பு இப்பதிவு வந்தபோதுதான் அவற்றையும் பார்த்தேன் +படிச்சேன்ன்... //

      அப்படியா? எப்படியோ பிறகு பார்த்து படித்ததில் சந்தோஷமே. ;)

      >>>>>

      நீக்கு
    9. கோபு >>>>> அதிரா [2]

      //என்னில ஒரு குணம், புதுப்பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டமிடுவேன், பழசை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி எனும் ரேஞ்சில விட்டிடுவேன். //

      மிகவும் நல்ல குணம் தான். பெரும்பாலானவர்களிடம் உள்ள் குணமும் இதுவே தான். அதில் ஒன்றும் தப்பில்லை.

      //ஆனால் பழைய பதிவெனினும் பின்னூட்டம் போடுமிடத்து அது உங்களுக்கு மகிழ்வைத் தருகிறது என்பது இப்போது புரிந்துகொண்டேன்ன்ன்...//

      ஆஹா, இப்போதாவது புரிந்துகொண்ட, புரிதலுக்கு நன்றியோ நன்றிகள். [அதிரா சமத்தூஊஊஊஊஊ கற்பூரம் போல டக்குனு புரிஞ்சுக்கிட்டாங்கோ ;) ]

      நான் என்ன வோட்டுப்போடுங்க என்றா கேட்கிறேன்?

      படிச்ச பதிவுகளுக்கு ஒரு சின்ன கமெண்ட் மட்டும் தானே கேட்கிறேன். அது குறையோ நிறையோ ஏதாவது ஒரு கருத்துச்சொன்னா நல்லாயிருக்கும் தானே? ஏதாவது குறையிருந்தாலும் திருத்திக்கொள்ள அது உதவும் அல்லவா!

      படிச்சீங்களா படிக்கலையா, பிடிச்சிருந்ததா பிடிக்கவில்லையா
      என்பதை என்னால் எப்படி அறிய முடியும்? அதற்காகத்தானே பின்னூட்டம் கேட்கப்படுகிறது.

      சிலபேர் பதிவைப் படிக்கவே மாட்டாங்கோ, சிலபேர் படித்தாலும் முழுவதும் படிக்க மாட்டாங்கோ, அப்படியே படித்தாலும் ஏதும் எழுதவே மாட்டாங்கோ, ஆனால் சிலபேர் படிக்காமலேயே ஏதாவது எழுதுவாங்கோ, பிறர் எழுதிய பின்னூட்டங்களை மட்டும் படிப்பாங்கோ, அதிலிருந்து ஏதாவது கொஞ்சம் எடுத்து Copy அடிச்சு எழுதுவாங்கோ, அல்லது அதையே copy + paste பண்ணுவாங்கோ. உலகம் பலவிதம். அது போன்றவர்களின் வருகையை நான் விரும்புவதே கிடையாது.

      அதிரா அப்படியல்ல. எல்லாவற்றையும் முழுவதுமாகப்படித்து விட்டு, பூசணிக்காய் உடைப்பது போல ஏதாவது பளிச்சுன்னு சொல்லிட்டு, ஒரு கலக்குக்கலக்கிட்டு போய் விடுவாங்கோ ;)))))
      அதில் எப்போதுமே ஒரு கிக் இருக்குமாக்கும்.

      >>>>>

      நீக்கு
    10. கோபு >>>>> அதிரா [3]

      //புதுப்பதிவுகளுக்கே.. பந்தியாகப் பின்னூட்டினால்கூட , “நன்றி “ என ஒரு வார்த்தையில் பதில் போடுவினம் சிலர், சில இடங்களில் பதிலே வராது (இப்போ இந்த லிஸ்ட்டில நானும் சேர்ந்திடுவேனோ எனப் பயம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:))//

      உங்களால், உங்களின் மேன்மையான குணத்தால் அந்த லிஸ்டில் சேரவே முடியாதூஊஊஊ. ப்யப்படவே வேண்டாம்.

      //இப்படியாக வலையுலகம் இருக்கும் நிலைமையில், நீங்க.. ஒரு வார்த்தை சொன்னாலே அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் போடுறீங்க, பாராட்டுகிறேன்.//

      எல்லாம் உங்கள் வலைத்தளத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடமாக்கும். நான் தொழில் ரகசியம் கற்றுக்கொண்டதே உங்களிடமிருந்து தானாக்கும்.

      நீங்களும் பெரும்பலும் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழகாக பொறுமையாக நகைச்சுவையாக, பின்னூட்டங்களுக்கு பதில் கொடுத்துத்தான் வருகிறீர்கள்.
      அதற்காக உங்களையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

      >>>>>

      நீக்கு
    11. கோபு >>>>> அதிரா [4]

      //நிட்சயம் கடந்த 3 பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுறேன்ன்..//

      மிக்க நன்றி.

      //மீ தான் அங்கின 100 ஆக்கும்..:) அதுக்குள் ஆரும் ஓடிப்போய்ப் பின்னூட்டம் போட்டிடக்கூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//

      உங்களுக்கு 100க்கு 100 கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, உங்கள் தோழி ஏதேதோ, எழுதி நான் அதற்கு ஏதேதோ பதில் எழுதி 94 ஐ 98 ஆக ஆக்கி வைத்துள்ளோம்.

      யார் குறுக்கே வந்தாலும் அதிரா தான் ஃபர்ஸ்டூஊஊஊ, அதிரா தான் எப்போதுமே 100 க்கு 100. ;))))) போதுமா?

      நீக்கு
    12. athira March 9, 2013 at 9:29 AM

      வாங்கோ அதிரா, வாங்கோ. மீண்டும் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      இந்தப்பதிவிலேயே 100 க்கு 100 வாங்கிடுவீங்க போலிருக்குது. ச்பாஷ் ;)

      *****நான் [தங்களிடமிருந்து தகவலே வராவிட்டாலும் கூட] உங்களின் சமீபத்திய பதிவுகள் அத்தனைக்கும் வந்து ஒரு நாலு வரியாவது அல்லது இரண்டு வரியாவது பின்னூட்டம் கொடுத்து விட்டுப்போயிருக்கேனாக்கும்.*****

      //நோ இது தப்பு கோபு அண்ணன்... மீ எப்பவுமே என்பக்கம் வந்து பின்னூட்டம் போடுவோரிடம் கணக்குப் பார்ப்பதில்லை. நீங்க போட்டால்தான் நானும் போடுவேன் என்றெல்லாம் நினைப்பதில்லை.//

      நான், நம் அதிரா ஏதோ நம் மீது கோபமாக இருக்காங்களே என நினைத்து இவ்வாறு எழுதினேனாக்கும்.

      நானும் எதையுமே கணக்குப்பார்ப்பவன் கிடையாது.

      உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் பதிவுக்குக் கருத்தளிக்கும் எல்லோருடைய பதிவுகள் பக்கமும்
      நானும் போவதே கிடையாது.

      40 பேர்கள் கருத்தளிக்கிறார்கள் என்றால் ஒரு நாலோ ஐந்தோ மட்டுமே நான் செல்லும் பதிவர்களாக இருப்பார்கள்.

      மீதி அனைவரும் அவர்களாகவே விரும்பி என் பக்கம் வந்து கருத்துச்சொல்லிப் போகிறவர்களாகவே தான் இருக்கிறார்கள்.

      சிலர் மெயில் மூலமோ பின்னூட்டம் மூலமோ என்னை அவர்களின் தளத்துப்பக்கம் அழைத்தால் கூட, என்னால் தற்சமயம் உள்ள சூழ்நிலையில் வர இயலாது, பிறகு முயற்சிக்கிறேன் என்று என் பதிலிலேயே சொல்லி விடுவேன். .

      >>>>>>>>>

      நீக்கு
    13. கோபு >>>>>> அதிரா [202]

      //நான் பதிவுகள் போடாவிட்டாலும் கூட.. என் பக்கம் வருவோரிடம் போவேன்.. ஆனா சில நேரங்களில் மனதுக்கு படும், ஏதோ அவர்கள் என்பக்கம் வரவிரும்பவில்லையோ என, அப்படியானால் கூட எடுத்தோம் கவிழ்த்தோம் என விடமாட்டேன், ஓரிரண்டு பதிவுகள் போய்ப் பார்ப்பேன், தொடர்ந்து வராவிட்டால்தான் போகமாட்டேன்ன்:))).//

      அதுபோலவே நான் விரும்பி சிலர் தளங்களுக்குச் செல்வேன். அவர்களின் ஒரு பதிவு கூட விடாமல் கருத்தும் அளிப்பேன். அவர்கள் என் பக்கம் சுத்தமாக வரவே மாட்டார்கள்.

      இதற்கெல்லாம் பல்வேறு காரணங்கள் மெயில் மூலமும்,
      தொலைபேசி மூலமும் சொல்லுவார்கள். நான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு ’OK அதனால் பரவாயில்லை’ என்று சொல்லி விடுவேன்.

      அவர்களெல்லாம், பதிவுகளையும் தாண்டி, என்னிடம் மிகவும் பாசமாக பழகி வருபவர்கள்.

      அதனால் நான் எல்லோருடைய பிரச்சனைகளையும் ஓரளவு அறிந்து கொண்டுள்ளதால், யாரையும் வரச்சொல்லி வற்புருத்துவதும் இல்லை.

      அவர்கள் வரவில்லையே என வருத்தப்படுவதும் இல்லை.

      >>>>>>>

      நீக்கு
    14. கோபு >>>>> அதிர [203]

      //உங்கள் பதிவு பழயதாகிட்டுது(நான் பார்க்கும்போது:)).. எனும் ஒரே காரணத்தால்தான் பின்னூட்டமிடவில்லை. வேறு எந்தக் காரணமும் இல்லை.//

      OK OK OK OK அதனால் பரவாயில்லை, அதிரா.

      அதை விட்டுடுங்கோ.

      நான் யாரையும் ஒன்றும் தப்பாகவே நினைக்கவே மாட்டேன்.

      >>>>>>

      நீக்கு
    15. கோபு >>>>>> அதிரா [204]

      //ஊசிக்குறிப்பு... அண்டாட்டிக்கா இப்ப போகவில்லையாக்கும்... அது ச்ச்ச்சும்மா சொன்னனான்:))//

      அடடா, நானும் அண்டார்டிக்காவுக்கு வரலாமா, அங்கு உங்களை நேரில் சந்திக்கலாமா என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்.

      அப்புறம் இன்று லண்டன் தேம்ஸ் கரையை ஒரு பதிவினில் பார்த்தேன்.

      இங்கே தான் எங்கேயோ நம் அதிரா இருப்பாங்கோ என நினைத்துக் கொண்டு மகிழ்ந்தேன்.

      அந்தப் பதிவினில் லண்டன் மாநகரம் பூராவும் சூப்பராகக் காட்டப்பட்டுள்ளது.

      இணைப்பு இதோ:

      http://jaghamani.blogspot.com/2012/09/blog-post_24.html

      அவசியம் பாருங்கோ. அதில் இன்னொரு விஷயம் பாருங்கோ. 2012 செப்டெம்பர் மாதம் வெளியிட்ட பதிவு, நான் இப்போ ஒரு ஆறு மாதம் கழித்துப்போய் படித்து விட்டு, இன்று பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.

      பார்த்ததைப் படித்ததை ரஸித்ததை பின்னூட்டம் கொடுத்து பாராட்டினால் தானே, சம்பந்தப்பட்ட பதிவருக்கும் ஒரு உற்சாகமாக இருக்கும், என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்கவே இதை ஒரு உதாரணமாகச் சொல்லியுள்ளேன். மேலும் அது லண்டனைப்பற்றியும், நீங்கள் அடிக்கடி குதிக்கப்போவதாகச் சொல்லும் தேம்ஸ் நதிக்கரையைப்பற்றியுமாக இருப்பதால் சுட்டிக்காட்டியுள்ளேன்.

      ooooo

      நீக்கு
    16. //இது பதில் ஒண்டாக்கும்:)..//

      ” ஒண்டாக்கும்;) “ ????? என்னவென்றே புரியவில்லை. அதனால் பராவாயில்லை///////

      ஒன்று + ஆக்கும் = ஒன்(ண்டா:))றாக்கும்:)

      எப்பூடி என் தமிழ்?:)..

      நீக்கு
    17. athira March 9, 2013 at 2:47 PM

      வாங்கோ அதிரா, இனிய காலை வணக்கங்கள்.

      //இது பதில் ஒண்டாக்கும்:)..//

      ” ஒண்டாக்கும்;) “ ????? என்னவென்றே புரியவில்லை. அதனால் பராவாயில்லை///////

      ஒன்று + ஆக்கும் = ஒன்(ண்டா:))றாக்கும்:)

      எப்பூடி என் தமிழ்?:)..//

      சூப்பர். கிளி கொஞ்சும் தமிழ் தான். உங்களிடமிருந்து புதிது புதிதாக நிறைய வார்த்தைகளைக்கற்க முடிகிறதூஊஊஊ.

      மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      கொச்சைத்தமிழை இச்சையுடன் பரப்பி ’தமிழ் இடியாப்பம்’ செய்துவரும் அதிரா வாழ்க வாழ்கவே!!;)

      [இடியாப்பத்தை நாங்கள் சேவை என்று சொல்லுவோம். அதனால் ’தமிழ்ச்சேவை’ என்பதை ’தமிழ் இடியாப்பம்’ என்று எழுதியுள்ளேனாக்கும். ;))))) ]

      நீக்கு
    18. athira has left a new comment on your post "தீர்க்க சுமங்கலி பவ !":

      அன்புள்ள அதிரா,

      உங்களின் இந்தக்கருத்தினை நான் பப்ளிஷ் கொடுத்தும் அது வெளியாகாமல் ஏதோ படுத்தி வருகிறது. அதனால் வேறு வழியின்றி அதை இங்கு copy + paste போட்டுவிட்டேன்.

      *****http://jaghamani.blogspot.com/2012/09/blog-post_24.html*****

      //போய்ப் பார்க்கிறேன் மிக்க நன்றி.//

      அவசியமாகப்போய் பாருங்கோ, ஒரு கமெண்டும் கொடுத்துடுங்கோ. நான் தான் அனுப்பினேன் என்றும் மறக்காமல் சொல்லிடுங்கோ.

      //என்னில் உள்ள ஒரு கெட்ட பழக்கம், என்பக்கம் வருவோர் தவிர வேறு எந்த புளொக்கும் எட்டியும் பார்ப்பதில்லை.//

      தப்பு, தப்பு. அந்தக்காலக்கட்டத்தில் ஒருவேளை அவர்கள் உங்கள் புளொக்கு [BLOG] பக்கம் வராமல் இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் எனக்கு முன்பாகவே அவர்கள் அங்கு பிரஸன்னமாகி விடுகிறார்கள். தெரிஞ்சிக்கோங்கோ. புரிஞ்சிக்கோங்கோ.

      யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிப்புட்டீங்கோ? ;(((((

      தப்பு தப்புன்னு கன்னத்திலே போட்டுக்கோங்கோ. இல்லாவிட்டால் ஸ்வாமி கண்ணைக்குத்திடும். எனக்கு மிகவும் பிடித்த தெய்வீகப்பதிவராக்கும், ஹுக்க்க்க்கும் ! ;))))))

      //இப்படி ஆரும் லிங் அனுப்பினால் மட்டுமே போய்ப் பார்ப்பேன் //

      அச்சா, பஹூத் அச்சா. இப்போ தான் நான் அனுப்பிட்டேனே! உடனே போய்ப்பாருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      நீக்கு
  24. தீர்க்க சுமங்கலி பவ....

    காருடையார் நோன்பு ..பெயரே அழகா இருக்கு... ஆனா இப்படி ஒரு விரதம் நான் கேள்விப்படவில்லை.... நல்ல நோன்பாக இருக்கு, அழகாகச் சொல்லிட்டீங்க.. வெல்லக் கொழுக்கட்டை + உப்புக் கொழுக்கட்டை... அனைவருக்கும் மிருதுவாக வர அதிராவின் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 7, 2013 at 1:31 PM


      //தீர்க்க சுமங்கலி பவ....

      காருடையார் நோன்பு ..பெயரே அழகா இருக்கு... ஆனா இப்படி ஒரு விரதம் நான் கேள்விப்படவில்லை.... நல்ல நோன்பாக இருக்கு, அழகாகச் சொல்லிட்டீங்க.. வெல்லக் கொழுக்கட்டை + உப்புக் கொழுக்கட்டை... அனைவருக்கும் மிருதுவாக வர அதிராவின் வாழ்த்துக்கள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும்,

      ”வெல்லக் கொழுக்கட்டை + உப்புக் கொழுக்கட்டை... அனைவருக்கும் மிருதுவாக வர அதிராவின் வாழ்த்துக்கள்...”

      என்ற பொதுநலம் கொண்ட வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா..

      நீக்கு
  25. //ஓர் முக்கிய அறிவிப்பு

    என் அடுத்த பதிவு வரும்
    10.03.2013 ஞாயிறு இரவு
    வெளியிடப்படும்.

    எச்சரிக்கை
    அது மிகவும் விறுவிறுப்பான
    காரசாரங்கள் நிறைந்த பதிவு !
    ஜாக்கிரதை !!////

    ஆவ்வ்வ்வ் நல்லவேளை முன்னெச்சரிக்கை பண்ணிட்டீங்க:).. நாங்க 9 ஆம் திகதி நைட் 9 மணி 9 நிமிடத்தில் அண்டாட்டிக்கா போகிறோம்ம்.. என்பதை மிகவும் ஏழ்மையாக மன்னிக்கவும் டங்கு ஸ்லிப்... தாழ்மையாகச் சொல்லிக் கொள்கிறேன்ன்ன்:)... சபாபதே!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 7, 2013 at 1:34 PM


      *****ஓர் முக்கிய அறிவிப்பு

      என் அடுத்த பதிவு வரும்
      10.03.2013 ஞாயிறு இரவு
      வெளியிடப்படும்.

      எச்சரிக்கை
      அது மிகவும் விறுவிறுப்பான
      காரசாரங்கள் நிறைந்த பதிவு !
      ஜாக்கிரதை !!*****

      //ஆவ்வ்வ்வ் நல்லவேளை முன்னெச்சரிக்கை பண்ணிட்டீங்க:).. நாங்க 9 ஆம் திகதி நைட் 9 மணி 9 நிமிடத்தில் அண்டாட்டிக்கா போகிறோம்ம்.. என்பதை மிகவும் ஏழ்மையாக மன்னிக்கவும் டங்கு ஸ்லிப்... தாழ்மையாகச் சொல்லிக் கொள்கிறேன்ன்ன்:)... சபாபதே!!!!!//

      நல்லவேளையாப்போச்சு. நானும் அதிராவக்காணோமே எனக் கவலைப்படாமல் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம். ;)))))

      மஹாராணியாரின் அண்டார்டிக்காப்பயணம் இனிமையாகவும், வெற்றிகரமாகவும் நிகழ என் அன்பான இனிய நல் வாழ்த்துகள்.

      நீக்கு
  26. காரடையான் நோன்பு பற்றிய விளக்கங்கள் அருமை ..
    பகிர்வுக்கு நன்றி அண்ணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin March 7, 2013 at 1:35 PM

      வாங்கோ, நிர்மலா. வணக்கம்.

      //காரடையான் நோன்பு பற்றிய விளக்கங்கள் அருமை ..
      பகிர்வுக்கு நன்றி அண்ணா .//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்,

      நீக்கு
  27. அருமையாக வீட்டில் நடப்பது போலவே பதிவிட்டதற்கு மிகவும் நன்றி கோபு சார்.
    அனைவருக்கும் நோம்பு நந்நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் March 7, 2013 at 6:07 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையாக வீட்டில் நடப்பது போலவே பதிவிட்டதற்கு மிகவும் நன்றி கோபு சார்.//

      சந்தோஷம்.

      //அனைவருக்கும் நோம்பு நன்நாள் வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், அனைவரையும் அன்புடன் நோன்புக்காக வாழ்த்தியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  28. முன்னமே கிடைத்த தங்கள் மேலான ஆசியும் நினைவூட்டலும் மகிழ்வைப் பெருக்குகிறது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் March 7, 2013 at 6:58 PM

      வாருங்கள், வணக்கம்.

      //முன்னமே கிடைத்த தங்கள் மேலான ஆசியும் நினைவூட்டலும் மகிழ்வைப் பெருக்குகிறது ஐயா.//

      சந்தோஷம்.

      வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள நம் குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கும் உதவட்டுமே என்று தான்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  29. மறுநாள் பசு மாட்டுக்குக் கொடுக்கும் போது அதுவும் அசை போட்டு சாப்பிட மிகவும் கஷ்டப்படும். அல்லது ’எனக்கு இது வேண்டவே வேண்டாம்’ என மறுத்து விடவும் கூடும்.
    ஹா ஹா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் March 7, 2013 at 11:36 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //மறுநாள் பசு மாட்டுக்குக் கொடுக்கும் போது அதுவும் அசை போட்டு சாப்பிட மிகவும் கஷ்டப்படும். அல்லது ’எனக்கு இது வேண்டவே வேண்டாம்’ என மறுத்து விடவும் கூடும்.
      ஹா ஹா....//

      சொன்னால் நம்ப மாட்டீர்கள் சார். எங்கள் தெருவில் உள்ள ஒருசில பசுமாடுகள், வாழைப்பழம் கொடுத்தாலே, ஏற்க மறுக்கின்றன.

      அன்றொருநாள் மலைக்கோட்டை யானைக்கு நானும் என் பெரிய பையனுமாகச் சேர்ந்து ஆறு டஜன் முரட்டு ரஸ்தாளிப்பழமாக வாங்கிக்கொண்டு, கொடுக்கப்போனோம்.

      அந்த யானைப்பாகன் எங்களைக் கொடுக்கக்கூடாது என்று தடுத்து விட்டார். ஏன் என்று நாங்கள் கேட்டோம்.

      “கோயிலுக்கு வரும் எல்லோருமே வாழைப்பழமே தருகிறார்கள். அதற்கு வயிறு சரியில்லை. மருத்துவரும் வாழைப்பழம் மட்டும் கொடுக்க வேண்டாம் எனச்சொல்லியிருக்கிறார்” என எங்களிடம் சொன்னார்..

      பிறகு அங்கு அருகிலேயே தர்பூசணிப்பழங்கள் விற்கப்பட்டன. . பாகனிடம் கேட்டு பர்மிஷன் வாங்கிக்கொண்டு, நான்கு தர்பூசணிகளை வாங்கி அதை 16 துண்டுகளாக ஆக்கி, ஒவ்வொன்றாகக் கொடுத்து விட்டு வந்தோம்.

      எங்களுடன் வந்திருந்த பேரன் பேத்தி இருவருக்கும் ஒரே சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.



      நீக்கு
  30. thangal aasirvathathirkku nandri...en namaskarangal..saavithri gowri vratham patri...naanum padiythen..amma appavirkum kaanbithen..mikka makizhchi avargalukkum...very articulate writer u r ..!!!clarity in ur article gives us clarity in our thoughts..:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. girijasridhar March 8, 2013 at 12:41 AM

      மீண்டும் வருகைக்கு சந்தோஷம்மா கிரிஜா!

      //thangal aasirvathathirkku nandri...en namaskarangal..//

      மீண்டும் மீண்டும் நல்லாசிகள். தீர்க்க சுமங்கலி பவ !.

      //saavithri gowri vratham patri...naanum padiythen..amma appavirkum kaanbithen..mikka makizhchi avargalukkum...//

      இதற்கு ஏற்கனவே மேலே பதில் அளித்துள்ளேன்.

      //very articulate writer u r ..!!!//

      Thanks a Lot ...... Girija !

      //clarity in ur article gives us clarity in our thoughts..:-)//

      காரடையான் நோன்புக் கொழுக்கட்டை செய்வது பற்றி உன் அம்மாவிடம் கேட்டு, நீ கற்றுக்கொண்டாயா இல்லையா?

      உன் கருத்துக்களில், என் மேற்படி கேள்விக்கு மட்டும், CLARITY யான பதிலே இல்லையே! ;))))))

      நீக்கு
  31. very articulate writer....asirvathangalukku nandri..en namaskarangal....got the clarity abt savithri gowri vratham..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. girijasridhar March 8, 2013 at 12:50 AM

      //very articulate writer....asirvathangalukku nandri..en namaskarangal....got the clarity abt savithri gowri vratham..//

      மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் எங்களின் அன்பான ஆசிகள்.

      நீக்கு
  32. hahaha..!! within no minute u have written so many pages.I am a slow learner eppadium kattru kondu viduven. ..next yr namba aathulayee seithu kamikiren..:-)

    பதிலளிநீக்கு
  33. girijasridhar March 8, 2013 at 3:08 AM

    //hahaha..!! within no minute u have written so many pages.//

    எழுத்து அமைந்ததெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

    //I am a slow learner//

    SLOW & STUDY IS ALWAYS BETTER. WITH THIS SPECIAL QUALITY ONLY, WE LEARN THINGS SAFELY, CORRECTLY & IN SUCH A WAY TO TEACH WHAT WE LEARNED TO OTHERS. WE MAY ALSO REACH THE DEPTH OF THE PROBLEM.

    YOU HAVE TO UTILIZE THE THOROUGH KNOWLEDGE OF YOUR MOTHER WHO IS VERY GREAT IN ALL RESPECT OF DOING ANYTHING IN KITCHEN & AT THE SAME TIME SHE IS CAPABLE OF TEACHING HOW TO DO - SEQUENCE WISE CORRECTLY.

    //eppadium kattru kondu viduven. ..next yr namba aathulayee seithu kamikiren..:-)//

    நீ இதுபோல தடாலடியாகச் சொல்வதே, நீ தனியாக சூப்பராக மிருதுவாக வாய்க்கு ருசியாக சூடாக சுவையாக நோன்புக்கொழுக்கட்டைகள், செய்து மடிசார் புடவையுடன் நோன்பு பூஜை செய்துவிட்டு, பரிமாறியது போலவும், நாங்கள் அவற்றை சாப்பிட்டு மகிழ்ந்து பாராட்டியது போலவும், மிகவும் இனிமையான கற்பனையாக உள்ளது.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  34. சிறப்பான பகிர்வு. பூரணமான தகவல்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் March 8, 2013 at 5:45 AM

      வாருங்கள், வெங்கட்ஜி

      //சிறப்பான பகிர்வு. பூரணமான தகவல்கள்....//

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  35. சரியான நேரத்தில் விளக்கமான பதிவு. தாமதமாக வந்திருக்கிறேன். இன்று தான் உங்கள் மெயிலைப் பார்த்தேன். நன்றி. அடுத்த சஸ்பென்ஸ் பதிவுக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam March 8, 2013 at 9:43 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சரியான நேரத்தில் விளக்கமான பதிவு. தாமதமாக வந்திருக்கிறேன். இன்று தான் உங்கள் மெயிலைப் பார்த்தேன். நன்றி. அடுத்த சஸ்பென்ஸ் பதிவுக்குக் காத்திருக்கேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.


      நீக்கு
  36. நல்ல பகிர்வு. உபயோகமான தகவல்கள். எல்லோருக்கும் விரத வாழ்த்துக்கள். காரசார பதிவு என்னவோ? மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha March 8, 2013 at 10:04 PM

      வாங்கோ ஷக்தி, வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      நீண்ட இடைவேளைக்குப்பின் தங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //நல்ல பகிர்வு. உபயோகமான தகவல்கள். எல்லோருக்கும் விரத வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விரத வாழ்த்துகள் எல்லோருக்கும் தெரிவித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  37. நல்ல பகிர்வு. உபயோகமான தகவல்கள். எல்லோருக்கும் விரத வாழ்த்துக்கள். காரசார பதிவு என்னவோ? மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha March 8, 2013 at 10:05 PM

      //காரசார பதிவு என்னவோ? //

      இன்னும் அது இறுதி வடிவத்தை எட்டவில்லை. தலைப்பும் வைக்கப்படவில்லை.

      நாளை [10.03.2013] ஞாயிறு இரவு ஏழு மணி சுமாருக்கு சிசேரியன் மூலம் பிரஸவம் நிகழ்த்திட நல்ல நேரம் மட்டும் குறிக்கப்பட்டு விட்டது.

      ஷக்திமிக்க, ஆரோக்யமான, அறிவாளியான, அழகான பெண் குழந்தையாகப் பிறக்க வேண்டுமே என மனதில் ஓர் ஆதங்கம் மட்டும் உள்ளது.

      நாளைய பொழுது நல்லபடியாக விடிந்து நல்ல செய்தி கேட்கணும்.

      அதுவரை கொஞ்ச்ம் சஸ்பென்ஸ் நீடிக்கட்டுமே.

      The announcement of Scan Result is Strictly Prohibited ....... ;)))))

      நீக்கு
  38. நல்ல பகிர்வு மற்றும் தகவல்கள். மிக்க நன்றி. அடுத்து என்ன காரசார பதிவோ!?!?

    பதிலளிநீக்கு
  39. காரடையான் நோன்பு பற்றிய தகவல்களுக்கு நன்றி சார்.

    தாங்கள் சொல்லியுள்ள அடை பக்குவங்கள் பிரமாதம்....:)

    விள்ளாம, வேர்த்து விடாமல் அடை வந்ததா என என் அம்மா கேட்பார்...:)

    இம்முறை என் மாமியாருடன் சேர்ந்து காரடையான் நோன்பு கொண்டாடப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி March 9, 2013 at 5:03 AM

      வாங்கோ, வணக்கம்.

      //காரடையான் நோன்பு பற்றிய தகவல்களுக்கு நன்றி சார்.
      தாங்கள் சொல்லியுள்ள அடை பக்குவங்கள் பிரமாதம்....:)//

      மகிழ்ச்சி. பக்குவங்கள் ஏதும் நான் சொல்லவில்லை.

      பக்குவப்பட்டவர்களிடம் கேட்டு பக்குவமாகச் செய்யச்சொல்லி மட்டும் சொல்லியிருக்கிறேன்.

      பக்குவமாக அது அமைவதற்கான செய்முறை விளக்கங்கள் கொடுத்து, அழகாக எப்படி அதனைச் செய்ய வேண்டும் என தாங்கள் ஒரு தனிப்பதிவாகப்போட்டு அசத்துங்கோ.

      //விள்ளாம, வேர்த்து விடாமல் அடை வந்ததா என என் அம்மா கேட்பார்...:)//

      அடடா, எல்லோருக்குமே, நோன்பு வந்தாலே அம்மா ஞாபகமும் கூடவே வந்து விடுகிறது, பாருங்கோ.

      //இம்முறை என் மாமியாருடன் சேர்ந்து காரடையான் நோன்பு கொண்டாடப் போகிறேன்.//

      மிகவும் சந்தோஷம். வாழ்த்துகள்.

      நீக்கு
  40. மிக நன்றி ஐயா. தங்களிற்கு இது
    எனது 96வது கருத்தாம் .
    மிகத் தெளிவாக அனைத்தும் விளக்கியுள்ளீர்கள் அருமை.
    இறையவனின் அருள் நிறையட்டும்.
    அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi March 10, 2013 at 1:17 AM

      வாருங்கள், வணக்கம்.

      //மிக நன்றி ஐயா. தங்களிற்கு இது எனது 96வது கருத்தாம் .
      மிகத் தெளிவாக அனைத்தும் விளக்கியுள்ளீர்கள் அருமை.
      இறையவனின் அருள் நிறையட்டும்.
      அன்புடன் வேதா. இலங்காதிலகம்.//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், தெளிவான கருத்துக்களுக்கும், ‘இறை அருள் நிறையட்டும்’ என்ற வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  41. காரடையா நோன்பு பற்றிய விளக்கங்கள் தற்காலத்திற்குத் தேவையான விளக்கம்.நேரமேயில்லை என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடும் இளசுகளுக்கு நோன்பின் பெருமையை எடுத்துச் சொன்ன விதம் மனதில் நன்கு பதியும்படி இருந்தது..நம் பாரம்பரிய பூஜைகளை விடாமல் செய்வதன் அருமை பெருமை
    களை சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rukmani Seshasayee March 10, 2013 at 3:11 AM

      வாங்கோ, வணக்கம்.

      //காரடையா நோன்பு பற்றிய விளக்கங்கள் தற்காலத்திற்குத் தேவையான விளக்கம்.நேரமேயில்லை என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடும் இளசுகளுக்கு நோன்பின் பெருமையை எடுத்துச் சொன்ன விதம் மனதில் நன்கு பதியும்படி இருந்தது..நம் பாரம்பரிய பூஜைகளை விடாமல் செய்வதன் அருமை பெருமை
      களை சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்.பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நல்ல உற்சாகப்படுத்தும் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.

      நீக்கு
  42. காரடையார் நோன்பு பற்றிய முறைகள்,விளக்கங்கள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி March 13, 2013 at 6:30 AM

      வாருங்கள், வணக்கம்.

      //காரடையார் நோன்பு பற்றிய முறைகள்,விளக்கங்கள் மிகவும் அருமை.//

      தங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் அருமை என்ற் அழகான் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      நீக்கு
  43. அப்படியே எங்க அம்மா வந்து சொல்லற மாதிரி இருந்தது.

    இந்த முறை காரடையான் நோன்பன்றுதான் DHANALAKSHMI SRINIVASAN ENGINEERING COLLEGE ல் SPEECH COMPETITIONக்கு JUDGE ஆ கூட்டிப்பிட்டிருந்தா. நான் வரதுக்குள்ள விஷ்ணுப்பிரியா (மாட்டுப்பெண்) எல்லாம் ரெடியா செய்து வெச்சிருந்தா. ரொம்ப நன்னா இருந்தது.

    அப்படியே நீங்க தீர்க்க சுமங்கலி பவன்னு எங்களை ஆசீர்வாதம் பண்ணினதையும் ஏத்துண்டுட்டோம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா.

    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI March 21, 2013 at 3:56 AM

      வாங்கோ, வணக்கம். தாமதமாக வருகை தந்தால், இவர் நம்மைக் கொழுக்கட்டை கேட்கமாட்டார் என்ற எண்ணமா?

      //அப்படியே எங்க அம்மா வந்து சொல்லற மாதிரி இருந்தது.//

      இது லயாக்குட்டி பேசுவது போலவே அழகாக உள்ளது.

      //இந்த முறை காரடையான் நோன்பன்றுதான் DHANALAKSHMI SRINIVASAN ENGINEERING COLLEGE ல் SPEECH COMPETITIONக்கு JUDGE ஆ கூட்டிப்பிட்டிருந்தா. நான் வரதுக்குள்ள விஷ்ணுப்பிரியா (மாட்டுப்பெண்) எல்லாம் ரெடியா செய்து வெச்சிருந்தா. ரொம்ப நன்னா இருந்தது. //

      மாமியார் மெச்சிய மாட்டுப்பெண் [மருமகள்] வாழ்க! ;)

      //அப்படியே நீங்க தீர்க்க சுமங்கலி பவன்னு எங்களை ஆசீர்வாதம் பண்ணினதையும் ஏத்துண்டுட்டோம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா.
      நன்றியுடன் ஜெயந்தி ரமணி//

      ரொம்ப ரொம்ப சந்தோஷம்ம்மா!

      நீக்கு
  44. சார் இந்த நோன்பு அன்று நான் எங்க இருந்தேன் தெரியுமா உங்க பக்கத்தில் தான். அதாவது அரவங்காடு என்னுமிடத்தில்.இந்த ஊரு எங்க இருக்குன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லே. நோன்பு பற்றி இவ்வள்வு விஷயங்கள் முதல்ல எனக்கு தெரிஞ்சிருக்கல்லே. உங்க பதிவு மூலமா தெரிஞ்சுக்க முடிந்தது. நோம்படை படங்களும் சிறப்பா இருக்கு. ஆனா இந்தவாட்டி அடைலாம் பண்ண முடியல்லே. வெரும் மஞ்சக்கயிறுமட்டும்தான் கட்டிக்க முடிஞ்சது. இருந்த இடம் அப்படி.
    இப்பதால் எல்லாம் எப்படி நடக்குதோ அதுக்கு தகுந்தாப்ல அட்ஜஸ்ட் பண்ணிக்க கத்துக்கிட்டேனே. எதையுமே டேக் இட் ஈசியா தான் எடுத்துகிட்டேன்.முக்கியமா அந்த நேரம் நான் உங்க பக்கத்து ஊரில் இருந்ததால உங்க ஆசீர்வாதங்கள் எனக்குதான் முதல்ல கிடைச்சிருக்கும் இல்லியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 26, 2013 at 9:03 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சார் இந்த நோன்பு அன்று நான் எங்க இருந்தேன் தெரியுமா//

      தெரியாதே! சொன்னால் தானே தெரியும்.

      // உங்க பக்கத்தில் தான்.//

      நிச்சயமாக இல்லை. என் பக்கத்தில் என்னவள் மட்டுமே அன்று இருந்தாளாக்கும். ;)))))

      //அதாவது அரவங்காடு என்னுமிடத்தில்...//

      அதானே பார்த்தேன். தமிழ்நாட்டு பார்டரில் எங்கோ இருந்திருக்கீங்கோ. சந்தோஷம்.

      //இந்த ஊரு எங்க இருக்குன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லே//

      தெரியும் தெரியும். நான் அங்கு போனது இல்லை. இருப்பினும் என் சொந்தக்காரர் ஒருவர் அங்கு முன்பு இருந்தார் அங்கு ஒரு ORDNANCE FACTORY கூட இருப்பதாக நினைக்கிறேன்..அங்கும் எனக்குத்தெரிந்த ஒரு பெண்மணி முன்பு வேலை பார்த்தாங்க. இப்போ இங்கே திருச்சிக்கே மாறி வந்து விட்டார்கள்.

      அரவங்காடு அருகே குந்தா என்றும் ஒரு ஊர் உள்ளது என நினைக்கிறேன்..

      // நோன்பு பற்றி இவ்வள்வு விஷயங்கள் முதல்ல எனக்கு
      தெரிஞ்சிருக்கல்லே. உங்க பதிவு மூலமா தெரிஞ்சுக்க முடிந்தது.
      நோம்படை படங்களும் சிறப்பா இருக்கு//

      சந்தோஷம்.

      //ஆனா இந்தவாட்டி அடைலாம் பண்ண முடியல்லே. வெறும்
      மஞ்சக்கயிறுமட்டும்தான் கட்டிக்க முடிஞ்சது. இருந்த இடம் அப்படி இருப்பதால் எல்லாம் எப்படி நடக்குதோ அதுக்கு தகுந்தாப்ல அட்ஜஸ்ட் பண்ணிக்க கத்துக்கிட்டேனே. எதையுமே டேக் இட் ஈசியா தான் எடுத்துகிட்டேன்//

      அதனால் பரவாயில்லை. நோன்புச்சரடு கட்டிக்கொண்டதாகச் சொல்வதே எனக்குக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      நீங்கள் மட்டுமல்ல, பெண்கள் எல்லோருமே இப்போ ரொம்பவும் மாறித்தான் வருகிறார்கள். யாரும் எதுவும் அந்தக்காலம் போலெல்லாம் அலட்டிக்கொள்வதே கிடையாது.

      ஸத்யவான் சாவித்திரி போன்றவர்களைக் காண்பது இப்போது மிகவும் அரிதாகி விட்டது. ;)))))

      //முக்கியமா அந்த நேரம் நான் உங்க பக்கத்து ஊரில் இருந்ததால உங்க ஆசீர்வாதங்கள் எனக்குதான் முதல்ல கிடைச்சிருக்கும் இல்லியா?//

      கண்டிப்பாக. நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், என் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்போதுமே உண்டு தான். கவலையே வேண்டாம்..

      தங்களின் அன்பான வருக்கைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த ஆசிகள், வாழ்த்துகள். நன்றிகள்.

      “தீர்க்க சுமங்கலி பவ! ;)))))

      நீக்கு
  45. கணவன்கள் தங்கள் மனைவி நன்றாக இருக்க அனுசரிக்க ஒரு நோன்பும் இல்லையோ?

    பதிலளிநீக்கு
  46. அளகான வாள எலயில வச்சிருக்க பலகாரங்க மட்டும் என கண்ணுல பட்டிச்சி. அலப்பர கமண்ட்ஸும்கூட. வேரெதும் நா பாத்துக்கிடவேல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 1:41 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //அளகான வாள எலயில வச்சிருக்க பலகாரங்க மட்டும் என கண்ணுல பட்டிச்சி. அலப்பர கமண்ட்ஸும்கூட. வேரெதும் நா பாத்துக்கிடவேல்ல//

      ஓக்கே. பரவாயில்லை. முக்கியமாகப் பலகாரங்களைக் கண்ணாலேயே பார்த்து மகிழ்ந்து ருசித்ததில் எனக்கும் ஒரே மகிழ்ச்சியே. :)

      நீக்கு
  47. காரடையான் நோன்பு பற்றிய விஷயங்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் சத்தியவான் சாவித்திரி கதை எல்லாமும் நல்லா இருக்கு. நோன்பு அடையில் எங்காத்துல துவரம் பருப்பு சேர்ப்பதில்லை. கூராமணி( பெரும்பயறு) சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  48. ஏற்கனவே ஒரு இடுகையில் படித்துள்ளேன்...கொழுக்கட்டை சுவையாக அமைந்ததா???

    பதிலளிநீக்கு
  49. காரடையான் நோன்பு குறித்த தகவல்கள் மற்றும் வாழ்த்தும் அருமை!

    பதிலளிநீக்கு
  50. காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் உப்பு) படங்கள் அருமை. என் அம்மா பண்ணிய கொழுக்கட்டைகளை நினைவுபடுத்திற்று.

    என் ஹஸ்பண்ட், பிடி கொழுக்கட்டையாகத்தான் பொதுவாகப் பண்ணுவார். சில சமயம் நான் சொல்லி தட்டை வடிவிலும் பண்ணுவார். ஆனால் அது வெகு சில சமயம்தான்.


    எப்படிப் பண்ணக்கூடாது என்று நீங்கள் எழுதியது நகைச்சுவையுடன் ரசனையோடு எழுதப்பட்டுள்ளது. அதுவும், 'பேப்பர் வெயிட் போலவும்', 'கோந்துக்கட்டி போலவும்' - சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நான் ஒரு வருடத்துக்கு முன்பு செய்துபார்த்தபோது கொஞ்சம் ஈஷிக்கும்படி வந்தது. என் ஹஸ்பண்ட் செய்வது புட்டுப்போல் மிருதுவாகத்தான் வரும். உங்கள் பதிவு எனக்குக் கொடுத்த உத்வேகத்தினால் மீண்டும் விரைவில் செய்துபார்க்க எண்ணியிருக்கிறேன்.

    எப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று சொல்லிய நீங்கள் எப்படிப் பண்ணுவது என்ற செய்முறையை மட்டும் அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்ளச் சொல்லிவிட்டீர்களே.. அடை செய்வதுபோல, இதற்கும் உங்கள் பாணியில் செய்முறை எழுதியிருக்கலாமே (ஒருவேளை எழுதியிருக்கிறீர்களோ?)

    'பசு மாட்டுக்கு..... மறுத்துவிடக்கூடும்' - நிறைய தடவை நான் நினைத்துக்கொள்வேன்.. வாயில்லா ஜீவன்'களுக்கு மட்டும் பேசத் தெரிந்திருந்தால், நாம் அதற்குப் பிடிக்கும் என்று நினைத்து வைக்கிற எத்தனையோ உணவுகளை, அவைகள் 'வெறுக்கின்றனவா அல்லது வேண்டா வெறுப்பாக உள்ளே தள்ளுகின்றனவா' என்று தெரிந்துகொள்ள ஏதுவாயிருக்கும் (நாம நல்லது செய்யறோம்னு நினைத்துப்போம். புண்ணியம் படிக் கணக்குல நம்ம அக்கௌண்டுல ஏறுகிறது என்று நம்பிக்கொண்டிருப்போம். அது வாயில்லா ஜீவனுக்குப் பெரும் அவஸ்தையாயிருந்து நம் பாவக்கணக்குதான் விறு விறுவென்று ஏறுகிறதோ.. யாருக்குத் தெரியும்). நிறைய பேர் புறாவுக்கும், பறவைகளுக்கும், பிராணிகளுக்கும், மிஞ்சின பிரியாணி, பழைய breadஐ உதிர்த்துவைப்பது, அரிசியை வைப்பது என்றெல்லாம் பார்த்திருக்கிறேன். நான், சோளம் (மக்காச்சோளம் இல்லை, வெண்மையாக அல்லது சிவப்பாக, உருண்டை உருண்டையாக இருப்பது. ஜாவர்னு ஹிந்தில சொல்றாங்க. ஜோவராகவும் இருக்கலாம் ), கம்பு, கோதுமை, அரிசி இவைகளை வைக்கும்போது, அரிசி புறாக்களுக்கு கடைசி சாய்சாகவும், மற்றவை அதே வரிசையிலும் அவைகளின் விருப்பமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். பூனைகளுக்கு மாத்திரை மாத்திரையான உணவும், அவைகளுக்கு நிஜமாகப் பிடிக்குமா என்பதிலும் எனக்குச் சந்தேகம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் January 16, 2017 at 12:07 PM

      வாங்கோ, வணக்கம்.

      //எப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று சொல்லிய நீங்கள் எப்படிப் பண்ணுவது என்ற செய்முறையை மட்டும் அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்ளச் சொல்லிவிட்டீர்களே.. அடை செய்வதுபோல, இதற்கும் உங்கள் பாணியில் செய்முறை எழுதியிருக்கலாமே (ஒருவேளை எழுதியிருக்கிறீர்களோ?)//

      இல்லை. நான் இதுவரை எழுதியது இல்லை.

      இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தமான பல ரிச்சான சமையல் குறிப்புகள் தருபவர் ஒருவரே ஒருவர் மட்டுமே இந்த உலகில் (அதுவும் திருச்சியிலேயே) இருக்கிறார்.

      அவர் சமையல் குறிப்புகள் மட்டுமல்லாமல், அனைத்து விஷயங்களிலுமே (தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதுவது, வீட்டை படு சுத்தமாகப் பராமரிப்பது, A1 ஆக சமைப்பது, வெளிநாடு + உள்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது, பயணக்கட்டுரைகள் + ஆன்மிக தகவல்கள் அளிப்பது etc., etc.,) ஓர் மிகப்பெரிய சகலகலாவல்லி ஆவார்கள்.

      அவரைப்பற்றியும், அவரின் தனித்திறமைகள் பற்றியும் என் பதிவுகள் பலவற்றில் நான் புகழ்ந்து இதுவரை எழுதியுள்ளேன்.

      அவற்றில் உதாரணமாக ஒன்றே ஒன்றின் இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2015/02/3.html

      இந்த காரடையான் நோன்பு கொழுக்கட்டை செய்ய தாங்கள், அவர்களின் இதோ இந்தப் பதிவினை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

      http://arusuvaikkalanjiyam.blogspot.com/2015/03/blog-post.html

      அங்கு போய் நீங்கள் பின்னூட்டமிட வேண்டும் என்ற அவசியமோ, நிர்பந்தமோ உங்களுக்குக் கிடையவே கிடையாது. அதையெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. நான் அளித்துள்ள பல நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களையே அவர்கள் இன்னும் வெளியிடாமல் உள்ளார்கள். அவ்வளவு பிஸியானவர்கள் என்று நான் நினைத்துக்கொண்டு சமாதானம் அடைந்துள்ளேன்.

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், மிக நீண்ட கருத்துக்களுக்கும் என் அன்பான இனிய நன்றிகள்.

      நீக்கு
  51. Good info on kaaradaiyan nonbu, sir
    Uppu kaaradai and vella kaaradai are my all time favorites. This nonbu is a bit similar to 'karva chouth' celebrated by women folk across North India for the well being and long life of their husbands.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ MDMT, வணக்கம்.

      இந்த என் பதிவுக்கு, சுமார் ஏழு ஆண்டுகளுக்குப்பின் அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் ஆத்தில் இந்தக் காரடையான் நோன்பு கொண்டாடும் வழக்கம் உண்டுதானே!

      எங்காத்துக்கு உடனே வந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான வெல்லக் கொழுக்கட்டை + உப்புக்கொழுக்கட்டைகள் (காரடைகள்), சுடச்சுடச் செய்து வெண்ணெயுடன் அளித்து மகிழ்வோம்.

      கணவரின் ஆயுள் ஆரோக்யத்திற்காக, வட இந்தியாவில் ’கர்வா செளத்’ என்ற பெயரில், இதே போல ஒரு பண்டிகை கொண்டாடப்படுவதாகச் சொல்லியுள்ளீர்கள். இருக்கலாம். அது எனக்கு ஓர் புதிய செய்தியாகும்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  52. Good info on kaaradaiyan nonbu. Uppu kaaradai and vella kaaradai are my all time favorites. It is a bit similar to 'karva chouth' celebrated by women folk across North India for the well being and long life of their husbands.

    பதிலளிநீக்கு