என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 28 நவம்பர், 2013

87] உண்மையான பரிகாரம்.

2
ஸ்ரீராமஜயம்




உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மனுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.

ஆதி காரணம் நம் கர்மம் தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது. 

மழை ஒன்றுதான் ... ஆனால் அதிலிருந்து எத்தனை விளைவுகள் உண்டாகின்றன? 

பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது. ஈசல் உண்டாகிறது. தவளை கத்துகிறது. சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன. வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள்.

நமக்கு ஒரு கெடுதல் வந்தால், அது நம் சத்குருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.

ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக்கொள்ளலாம். நம் கர்மா தீரும் போதுதான் அவை பலன் தரும். 

’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் எல்லாவற்றையும் விட அது சிலாக்கியம்.

அதுவே பெரிய பரிகாரம். உண்மையான பரிகாரம்.

oooooOooooo

[ 1 ]

அஹம்பாவம் பற்றி  

ஸ்ரீ மஹாபெரியவா சொல்லியுள்ளது


நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம் என்று அஹம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. 

நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?

இந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. 

அது இல்லாவிட்டால் நம்மிடம் ஒரு சுவாசம்கூட இருக்கமுடியுமா. 

ஒருநாள், இதனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. 

கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அஹம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும். 

எத்தனைக்கெத்தனை இந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் நமக்குக் கிடைக்கும்.

நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். 

அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அஹம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக் குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். 

பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். 

நமக்கு அஹம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அஹம்பாவம்தான். எனவே அஹம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளேயே வேண்டி நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.

[எங்கோ எதிலோ எப்பவோ நான் படித்தது]


oooooOooooo

[ 2 ]

ஐம்பது கோடி பெறும்

ஆந்திர அரசின் ஆலோசகராக இருந்த Dr S V நரஸிம்மன் பெரியவாளை தரிஸிக்க வந்தார். 

“கல்கத்தால நல்ல சென்டரான எடத்ல, நல்ல விசாலமா ஒரு வீட்டை வாங்கு. மண்டபம் வெச்ச மாதிரி வீடு. அதுல வங்காள புள்ளை கொழந்தேளுக்குன்னு தனியா ஒரு ஸாமவேத பாடசாலை ஒண்ணை ஆரம்பி ! ஏதாவது வீடு இருக்கா?”

“அங்க தென் இந்திய பஜனை ஸமாஜ் இப்போ ஒரு வாடகைக் கட்டடத்ல இருக்கு. அது நல்ல சென்டரான எடம்..”

“ரொம்ப நல்லதாப் போச்சு! அந்த கட்டடத்தை வாங்கிடு ! பஜனை ஸமாஜ்காரா அவா பாட்டுக்கு அதுல இருக்கட்டும்.”

“அதை வாங்கணும்ன்னா நெறைய ஆகும் பெரியவா….எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லியே! “

“எவ்ளோவ் ஆகும்?”

“கிட்டத்தட்ட அம்பது கோடி வேண்டியிருக்குமே!..” பெரியவா உத்தரவிட்டதை நிறைவேற்றவும் ஆசையாக இருந்தது. அதே சமயம் பணத்துக்கு என்ன செய்வது? என்ற கவலையும் சேர்ந்தது.

“நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ ! அது அம்பது கோடி பெறும்!…” புன்னகைத்தார். 

ஐம்பது கோடிக்கு ஐம்பது ரூபாயா? பெரியவா சொல்லிவிட்டார் என்பதால் உடனே மெட்ராஸ் வந்தார். அண்ணாத்துரை ஐயங்காரிடம் விஷயத்தை சொல்லி அவரிடமிருந்து முதல் பணமாக ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அன்றே கல்கத்தா போய்ச் சேர்ந்தார். 

பஜனை ஸமாஜ் இருந்த கட்டடத்தின் சொந்தக்காரர் ஆஸுடோஷ் முகர்ஜி, பெரிய்..ய கோடீஸ்வரர். அவரை நேரில் சந்தித்து இது பற்றிப் பேசுவதற்காக அவருடைய பங்களாவுக்குச் சென்றார் நரஸிம்மன்.

இவர் உள்ளே நுழைந்ததும் “வாருங்கள் ! வாருங்கள் ! உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்!…” என்றார் ஆஸுடோஷ் முகர்ஜி. 

இவருக்கோ ஒரே ஆச்சர்யம்!

“நேற்று இரவு என்னுடைய கனவில் அன்னை மஹா காளி வந்தாள்! நீங்கள் குடுக்கும் பணம் எதுவானாலும் வாங்கிக்கொண்டு, அந்தக் கட்டடத்தை குடுத்து விடும்படி எனக்கு உத்தரவிட்டாள். அன்னையோட உத்தரவை நிறைவேற்ற, உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பெங்காலியில் மிகுந்த நெகிழ்வோடு கூறினார். 

திரு.நரஸிம்மன் மானசீகமாக பெரியவாளின் திருவடிகளை நமஸ்கரித்தார். 

என்ன லீலை இது? “நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ ! அது அம்பது கோடி பெறும் !” என்று கூறிவிட்டு, ஆஸுடோஷ் கனவில் மஹாகாளியாக வந்து உத்தரவையும் போட்டு, இதோ…..ஐம்பது ரூபாயில் ஐம்பது கோடி அந்தர்த்தானமானது ! 

பகவான் அலகிலா விளையாட்டுடையான் என்று மஹான்கள் கொண்டாடுவார்கள். தனியாக “செஸ்” விளையாடுவது போல், பகவான் நம்மையெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கீதையில் “உனக்குண்டான கர்மத்தை செய். பலனை எங்கிட்ட விட்டுடு” என்று சொன்னதை பெரியவா ப்ரூவ் பண்ணிக் காட்டினார். 

உடனேயே மளமளவென்று காரியங்கள் நடந்தன. மூன்றே மாசத்தில் பஜனை சமாஜ் புதுப்பிக்கப்பட்டு, “வேத பவன்” என்ற பெயரில் பெரியவா சொன்னமாதிரி ஸாம வேத பாடசாலையும் தொடங்கப்பட்டு, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

[Thanks to sage of kanchi 19.10.2013]

oooooOooooo

[ 3 ]

A divine Experience
Sri Chandrasekharendra Saraswati of Kanchi Kamakoti Mutt was camping in Kalahasti.  

When Narasimhan came there, many activities were going there like Puja, Veda Parayanam etc.  In the midst of his heavy engagements, Narasimhan had come to meet His Holiness, pay obeisance to him and return to Calcutta by the train leaving at 6.30 PM for which reservation was already made.   

When he enquired whether he can meet Swamigal, he was told that that Swamigal was taking rest.  Though he was in a hurry, he decided to wait.

Sri Narasimhan was a Great Industrialist in Calcutta and also a Great Devotee of Paramacharya of Kanchi.  I was an ordinary employee in his office at that time Narasimhan moved very closely with Kanchi Acharya and was implementing many projects visualized by Acharya.  At the command of Acharya, he established a Veda Patasala at Calcutta which still functions successfully, imparting knowledge on Vedas and Upanishads.   

Whenever he came to South, he made it a practice to visit Paramacharya and this time also he decided to make a hurried trip to Kalahasti where Acharya was camping, pay obeisance and then return.

When Acharya came out of his room, he cast a glance over all assembled devotees.  Narasimhan had sent a word through someone that he wanted to Acharya but Acharya was engaged in his own duties very calmly, quietly and peacefully.   

Time was trickling and it appeared there was no immediate prospect of meeting Acharya.  Narasimhan was worried that if he missed the train, he would be forced to stay in Ashram premises for the night and think alternative modes of reaching Calcutta.  

At last, when the needle of the clock reached 6, Swamigal called Narasimhan to him and said:  

"I observed that you were very tense from the beginning.  Probably, you are returning today evening itself.  Do not worry.  Go to the station now and you would be able to board your train.  Here is the Prasad."  

Narasimhan bowed before Swamigal, received the Prasad and left.  When he reached the station, it was 9.30 PM, three hours after the scheduled departure time of the train.

Surprisingly, Narasimhan found that his train for Calcutta was slowly grinding to a halt in the station.  The train was late by three hours.   

It is a baffling question how Swamigal knew  it.  

We seek to know things from our sense instruments but Great Saints like Acharya know things through their spiritual vision. 

Thanks to Mr. RISHABAN Srinivasan Sir
for sharing this message on 21.11.2013

oooooOooooo

[ 4 ]


ஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் ‘தாயாரை விற்கலாமா? வயதாகிவிட்டால், தாயாரை விற்கலாமா?‘ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.



தொண்டர்களுக்கு புரியவேயில்லை.


தாயாரை-வயதான தாயாரை-ஏன் விற்கணும்? விற்றாலும் யார் வாங்குவார்கள்? தாயாரை விற்றதாக கேள்விப்பட்டதில்லையே?’தாயாரை விற்க கூடாது‘ என்று எல்லோரும் ஒருமுகமாக கூறினார்கள்.

அப்படி ஓர் அநியாயம் நம்ம தேசத்திலே நடந்துண்டு இருக்கு. எந்த மாநிலத்தில்? ஹிமாச்சல் பிரதேசத்திலா? அருணாச்சல் பிரதேசத்திலா? நம்ம தமிழ் நாட்டில் தான்…... 

தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனை ஆகிறது. வாங்குகிறவன் எங்கோ கொண்டு போய் விடுகிறான்…’

பெரியவாள் இவ்வளவு வருத்தப்பட்டு பேசியதை, ஆண்டாண்டு காலமாக உடனிருந்து பணி செய்யும் சீடர்கள் கேட்டதில்லை.



‘கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம். குங்குமம் வெக்கறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம் (ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுக்கறதில்லே), ஆனா, வயசாகி போய் பால் மரத்து போச்சுன்னா, வீட்டில் வெச்சுக்கறதில்லே. கசாப்பு கடைக்காரன் கிட்டே வித்துடறோம்… அநியாயம்… சகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படி கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார்? வசதிப்பட்டவர்கள் கோசாலை வைத்து வயதான பசுக்களை சம்ரக்ஷிக்கணும்.’

பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் – பஞ்சகவ்யம் ஈஸ்வர பூஜைக்கு தேவையானவை.

பசுக்களிடம் எல்லை இல்லாத பாசம் பெரியவாளுக்கு… அவற்றை கண்டால், கோகுலத்து கண்ணனாகவே மாறி விடுவார்கள்.

[Amrutha Vahini 27.11.2013]

oooooOooooo

[ 5 ]

எது உயர்வு ?


மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனிவர்
வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும்  போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார்



ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம். பேசமாட்டார்கள்.


வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்து வரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.



வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். 


மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார். அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகம்  செய்தார்கள்.

ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்  "என்ன சங்கரா சௌக்கியமா; மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா; இன்னும் விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா""  என்று கேட்டார்.

சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று.

மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.

அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?

ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

"எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான். ஆனால் அவனால் என்னைப் பார்க்க முடியாது.


நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. 


அவனுக்கு வருத்தமாக இருக்கும், நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா .... என்று.

இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன்


அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. 



அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல "



இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள் -  என்னே காஞ்சி மாமுனியின் கருணை!

[Thanks to Sri. G.Ganesh [Now at Soudi Arabia] 
for sharing this message on 24.11.2013]

oooooOooooo oooooOooooo oooooOooooo oooooOooooo


தங்களின் அன்பான கவனத்திற்கு !
மிகவும் முக்கியமான விஷயம்.

அவரவர் வாழ்க்கையில் 
ஆயிரம் பிரச்சனைகள் இருக்கக்கூடும்.

மிக எளிய முறையில் 
நம் பிரச்சனைகளுக்கெல்லாம் நாமே தீர்வு காண
அனைவரும் தவறால் படிக்க வேண்டியது.

அடுத்த பகுதி-88 

-=-=-=-=-=-=-=-

[உண்மைச் சம்பவம்  ... முன்கதைச் சுருக்கம் போல ....]

அவரிடம் துளியும் உற்சாகம் இல்லை. முகமும் இருளடைந்து போய் இருந்தது. வாயைத்திறந்து தன் துன்பங்களைப்பற்றி கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்திலேயே அவரின் துன்பம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு விளங்கி விட்டது.
இருந்தும் அந்த விவசாயி, சாமீ ... ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூடத் தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.  

அந்த விவசாயிக்கு மட்டுமல்லாமல், 
நம் ஒவ்வொருவருக்காகவுமே
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா
வெகு அழகாக பதில் சொல்லியிருக்கிறார்.

-=-=-=-=-=-=-=-


இதன் தொடர்ச்சி - பகுதி-88ல் 
வரும் சனிக்கிழமை மதியம் வெளியிடப்படும்.

எனவே காணத்தவறாதீர்கள்



oooooOooooo oooooOooooo oooooOooooo oooooOooooo



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

55 கருத்துகள்:

  1. கண் தெரியாத சங்கரனுக்காக பெரியவர் தன் மௌனத்தைக் கலைத்து விசாரித்து ஆசி கூறியது நெகிழ்ச்சியான சம்பவம் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இதிலேயும் சஸ்பென்ஸா? :)) நல்லா இருக்கு எல்லாமும். பசுக்களை வடமாநிலங்கள் ரக்ஷிப்பது மாதிரி நம் பக்கத்தில் இல்லை. அங்கே வீட்டுக்கு நாலு பசுக்கள் இருந்தாலும் எல்லாமும் புஷ்டியாகக் கொழு, கொழுனு இருக்கின்றன. பாலும் நிறையக் கறக்கிறது. நல்ல ஆகாரமும் போடறாங்க. கன்னா, பின்னானு போஸ்டர், பேப்பர், ப்ளாஸ்டிக் பைகளைச் சாப்பிடறதில்லை. இங்கே தான் எல்லாமும்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு
    உள்ளிருந்து அவன் செயல்பட
    ஒத்துழைப்பு கொடு

    அகந்தையை அடியோடு விட்டுவிடு
    அரங்கனின் திருவடிகளில்
    சரணடைந்துவிடு

    மகான்களின் உபதேசம் செவி மடு
    அவர்கள் காட்டிய வழியில் பயணித்திடு

    ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும்
    இறைவனின் லீலை

    அது என்று நீ ஆராய்வது வீண் வேலை

    பசித்தோர்க்கு உணவளித்தால்
    மகிழ்ந்திடுவான் பகவான் உன்னை
    பக்கத்தில் இருந்து காத்திடுவான்.

    கடமையை கருத்தாய் செய்திடுவாய்
    கடவுளின் நினைவாய் இருந்திடுவாய்
    இன்பமும் துன்பமும் இறைவனின்
    பிரசாதம் என்று எண்ணிடுவாய்
    இவ்வுலக வாழ்வை இனிதாய் கடந்திடுவாய்

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வை.கோ - உண்மையான பரிகாரம் - பதிவு நன்று

    மஹாப் பெரியவா சொல்கிறார் : சாதித்து விட்டோம் எனக் கூறுவது அகம்பாவம். சாதிப்பதற்கான புத்தியும் தேக பலமும் மகா சக்தியிடம் இருந்து வருகின்றன. அப்படி இருக்க நாம் சாதித்து விட்டோம் எனக் கூறுவது ஏன் - அகமபாவத்தின் அடிப்படை இது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. ’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் எல்லாவற்றையும் விட அது சிலாக்கியம்.

    அதுவே பெரிய பரிகாரம். உண்மையான பரிகாரம்.


    அருமையான சிலாக்கியமான பரிகாரம்..
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  7. ஒரு நாள் தரிசனத்திற்கு வந்தவர்களை எல்லாம் - வயதான தாயாரை விற்று விடலாமா என்று பெரியவா கேட்டுக் கொண்டே இருந்தார். கூடாது கூடாது - தேவை இல்லாத செயல் என அனைவரும் கூறிக் கொண்டே இருந்தார்கள் .

    நம் தமிழ் நாட்டில் தான் இப்படி நடக்கிறது - நூற்றுக் கண்ககில் விற்பனை ஆகிறது - வாங்குகிறவன் எங்கோ கொண்டு போய் விடுகிறான்.

    கோ மாதா கோ மாதா எனப் பூஜிக்கப் படும் பசு மாட்டினைத்தான் இது மாதிரி விற்கிறோம். எப்பொழுது ? - பால் மரத்து விட்டால் - கசாப்புக்கடைக்காரனிடம் விற்கிறோம். அவன் கொன்று விடுகிறான். கோசாலை வைத்து பசுக்களை சம்ரக்‌க்ஷிக்க வேண்டும். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா மாதிரி பசுக்களிடம் எல்லை இலலாத பாசம் காட்டுபவர்கள் யாரும் கிடையாது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும்.

    நமக்கு அஹம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அஹம்பாவம்தான். எனவே அஹம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    பரம சௌக்கியமான அகம்பாவத்தை அகற்ற வேண்டியதன் அவசித்தை உணர்த்தும் பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வைகோ - 88லேயெ படித்துக் கொள்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. பகவான் அலகிலா விளையாட்டுடையான் என்று மஹான்கள் கொண்டாடுவார்கள். தனியாக “செஸ்” விளையாடுவது போல், பகவான் நம்மையெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கீதையில் “உனக்குண்டான கர்மத்தை செய். பலனை எங்கிட்ட விட்டுடு” என்று சொன்னதை பெரியவா ப்ரூவ் பண்ணிக் காட்டினார்.

    வேத பவன் ஆரம்பமான சம்பவம் சிலிர்க்கவைக்கிறது..!

    பதிலளிநீக்கு
  11. பசுக்களிடம் எல்லை இல்லாத பாசம் பெரியவாளுக்கு… அவற்றை கண்டால், கோகுலத்து கண்ணனாகவே மாறி விடுவார்கள்.

    கோமாதா மீது பாசம் கொண்டு ரட்சிக்க வைக்கும்
    மஹா பெரியவா -- அருமையான வரிகள்.!!

    பதிலளிநீக்கு
  12. இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன்


    அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது.

    மனிதாபிமான சிந்தனை கொண்ட உயர்ந்த உள்ளம்..!

    பதிலளிநீக்கு
  13. உண்மையான பரிகார விளக்கம் மிகவும் அருமை... மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவமும் அருமை...

    ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  14. வாசிக்க வாசிக்க மனசு மெருகேறிக் கொண்டே போகிறது

    பதிலளிநீக்கு
  15. ஆத்ம தரிசனம் கிட்டுகிறது ஒவ்வொன்றும் படிக்கையில்

    பதிலளிநீக்கு
  16. /// ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீரும் போதுதான் அவை பலன் தரும்.

    ’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் எல்லாவற்றையும் விட அது சிலாக்கியம்.///

    மஹாகுருவின் உபதேசம்!..

    மனதில் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை!..

    பதிலளிநீக்கு
  17. இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன் அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது.
    அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல "// நெஞ்சைத் தொட்ட வரிகள்! பசுவின் பெருமை, அகம்பாவம் கூடாது என்பதை உரைத்த விதம் மொத்தத்தில் இப்பதிவு மிக மிக அருமை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  18. ’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் எல்லாவற்றையும் விட அது சிலாக்கியம்.

    அதுவே பெரிய பரிகாரம். உண்மையான பரிகாரம்.///

    உண்மையான இந்த பரிகாரத்தை கடை பிடித்தால் வாழ்வில் நலம் பெறலாம்.



    அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. //





    அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல "//

    ஸ்வாமிகளின் மனிதாபிமானம் அவர் கருணை உள்ளத்தை காட்டுகிறது.

    வாழ்க்கையை நல்லபடியாக நடத்தி செல்ல நல் உபதேசம் செய்து இருப்பார் விவசாயிக்கு. அனைவருக்கும் பொருந்தும் நல் உபதேசம். அடுத்து படிக்க காத்து இருக்கிறோம்.
    நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  19. எல்லாவற்றையும் படித்து மனம் நெகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  20. ஒவ்வொரு பகுதியையும் படித்து முடித்தபின் மனதுக்குள் ஒரு வித அமைதி நிலவும்..... இப்பகுதியும் அப்படியே.....

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்
    ஐயா

    அருமையான கருத்து நிறைந்த பதிவு.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  22. பசுவையும் தாயாக எண்ணி அதன் வயதான காலத்திலும் காக்க வேண்டும் என்ற பெரியவாளின் பேச்சில் நிறைந்திருக்கும் கருணையைக் கண்டு உள்ளம் வியந்தது !! மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  23. இங்கு 5 பகுதி உள்ளது. மிக்க நன்றி.
    ஒன்றும் வாசிக்க வில்லை.
    சேரத்துடன் சண்டையிட முடியவில்லை ஐயா.
    சேமிருக்கும் போது வாசித்து கருத்திடுகிறேன். மிக மிக நீண்டுவிட்டதால்.
    இனிய வாழ்த்து. தங்கள் ஆர்வத்திற்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kavithai (kovaikkavi) November 29, 2013 at 1:43 AM

      வாருங்கள், வணக்கம்.

      //இங்கு 5 பகுதி உள்ளது. மிக்க நன்றி. ஒன்றும் வாசிக்க வில்லை. //

      சந்தோஷம். அதனால் பரவாயில்லை.

      //நேரத்துடன் சண்டையிட முடியவில்லை ஐயா.
      நேரமிருக்கும் போது வாசித்து கருத்திடுகிறேன். மிக மிக நீண்டுவிட்டதால்.//

      ”காலம் பொன் போன்றது - கடமை கண் போன்றது” என்று சொல்லுவார்கள். அதனால் வாசித்துத்தான் ஆகணும், கருத்துச்சொல்லித்தான் தீரணும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை.

      இவற்றையெல்லாம் எல்லோருக்கும் படிக்க வாய்ப்போ பிராப்தமோ இருக்காது என்பதே இதில் உள்ள பேருண்மை.

      மேலும், இங்கு கருத்திடும் அனைவரும் அனைத்தையும் படித்து விட்டே கருத்திடுகிறார்கள் என்று நானும் எப்போதும் நினைப்பது இல்லை. அதுபோலெல்லாம் தப்புக்கணக்கும் போடுவது இல்லை.

      //இனிய வாழ்த்து. தங்கள் ஆர்வத்திற்கு.
      வேதா. இலங்காதிலகம்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  24. வடக்கே ஒரு மடம் வாங்குவதற்கு இங்கிருந்து ஐம்பதே ருபாய்கள் பெற்று அங்கே அதை வாங்க வைத்து விட்டது அவருடைய பெருமைக்கு சான்று.
    பசுவின் மேலுள்ள பிரியமும் பக்தியும் எல்லோருக்கும் புரியும்படியாக சொல்லிவிட்டார் மகா பெரியவர்.
    விவசாயிக்கு என்ன தீர்வு சொன்னார். அது நமக்கும் உதவும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. அந்தத் தீர்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. வடக்கில் ஒரு மடம் ஸ்தாபிக்க இங்கிருந்து பணம் பெற்று அதை ஆரம்பிக்க வைத்தது ஆச்சர்யம் அளிக்கிறது.
    கோமாதா மேல் அப்படி ஒரு பிரியமும் பக்தியும் மகா பெரியவர் வைத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அது அவருடைய கருணையைக் காட்டுகிறது.
    விவசாயிக்கு என்ன தீர்வு சொன்னார் என்று தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  26. ஆஹா ஆஹா எவ்ளோ அழகா சொல்லிட்டீங்க.. மழை ஒன்றுதான் ஆனால் அதிலிருந்து கிடைக்கும் விளைவுகள் எத்தனை.. எத்தனை...

    இப்போ புரியுதோ..:) அதிராவும் ஒண்ணே ஒண்ணுதான்ன்.. ஆனா அதில இருந்து கிடைக்கும் விளைவுகள்... வாணாம்ம் மீ ஒண்ணுமே சொல்லமாட்டன் சாமீஈஈஈஈஈஈஈஈ:) ஏனெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்.. சின்ஸ்ஸ்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  27. 1]
    [எங்கோ எதிலோ எப்பவோ நீங்க படித்தது.... இப்போ எங்களுக்கு பயன்படுது... அகம்பாவம் எப்பூடி உருவாகிறது என்பதை முதல்ல கண்டு பிடிக்கோணும்.. அகம்பாவம் எண்டால் ஆணவம்.. தற்பெருமை இவைகள்தானே??? ரெண்டு நாள் பட்டினி போட்டால்ல் எல்லாம் தானா ஓடி ஒளிச்சிடும்.. ஹா..ஹா..ஹா.. எங்கிட்டயேவா?:))

    பதிலளிநீக்கு
  28. Thanks to sage of kanchi 19.10.2013]//// மீ ரூஊஊஊஊஊஊ

    எதுக்கு ஆங்கிலத்தை கொண்டுவந்து தமிழுக்குள் இரண்டறக் கலக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    பதிலளிநீக்கு
  29. ஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் ‘தாயாரை விற்கலாமா? வயதாகிவிட்டால், தாயாரை விற்கலாமா?‘ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.///

    அச்சச்சோ என்னாயிட்டு பெரியாவாளுக்கு???:) இப்பூடி ஒரு கேள்வியைக் கேட்கலாமா முதல்ல?:))... விடமாட்டேன்ன்ன்.. பொயிங்குறேன்ன் நான்ன்ன்ன்:))..

    அவ்வ்வ்வ்வ்வ்வ் பசுவைப் பற்றியா பேசுறார்ர்?:) நானும் என்னமொ ஏதோ என நினைச்சுட்டேன்ன்ன்ன்...
    அது தப்புத்தான்ன்.. மகா தப்பு... பசு மட்டுமல்ல எந்த உயிரினத்தையும்.. உணவுக்காக அழிப்பது தப்புத்தான்ன்ன்...

    பதிலளிநீக்கு
  30. தங்களின் அன்பான கவனத்திற்கு !
    மிகவும் முக்கியமான விஷயம்.

    அவரவர் வாழ்க்கையில்
    ஆயிரம் பிரச்சனைகள் இருக்கக்கூடும்.

    மிக எளிய முறையில்
    நம் பிரச்சனைகளுக்கெல்லாம் நாமே தீர்வு காண
    அனைவரும் தவறால் படிக்க வேண்டியது.///

    என்னாது???? கோபு அண்ணன் எப்போ “கோபாலகிருஸ்னானந்தா” வா மாறினீங்க?:)) .. சே..சே... வர வர ஆரை நம்புறதெண்டே புரியுதில்ல:)))

    பதிலளிநீக்கு
  31. வேதபவன் வரலாறு, கோமாதா மீது பெரியவரின் பாசம், சங்கரனுக்கு கிடைத்த ஆசீர்வாதம் படிக்க சுவையான செய்திகள்.

    பதிலளிநீக்கு
  32. நம்மகையிலே என்ன இருக்கு? எல்லாம் கடவுள் விட்ட வழி,என்று
    தன்னடக்கமாக பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
    அகம்பாவமில்லாத பேச்சு அது. இதனுடைய ஸாரமாக பரிகாரம்.மிக்க அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  33. பெரியவாளின் அர்த்தமுள்ள வரிகள். பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  34. ’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் எல்லாவற்றையும் விட அது சிலாக்கியம்.// படிக்க மிகவும் சுலபமாக இருக்கிறது. ஆனால் செய்வது எத்தனை கஷ்டம்!
    ஐம்பது ருபாய், ஐம்பது கோடியான அதிசயம், மஹா பெரியவாளால் மட்டுமே முடிந்த ஒன்று.

    ஐந்தும் ஐந்து வைரங்கள்.

    பதிலளிநீக்கு
  35. தன்னடக்கம் ,அஹம்பாவமில்லாதிருத்தல் வயதானபசுமாடுகளை ஸம்ரட்சித்தல் ,மஹத்தான உபதேசம் ,மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தால் ஒரு ரூபாய் ஒருகோடிக்கு சமமானது தேச தியாகிக்கு தன் மௌனத்தை விட்டுக்கொடுத்தல் என்ன ஒரு கருணை பக்தர்களுக்காக ரயில் தாமதமாக வந்தது போலும் எல்லாம் பிரமாதம் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் அய்யா
    வாழ்க்கையின் கர்ம விளைவுகள் பற்றியும், பெரியாவாளின் சொற்பொழிவையும், அற்புதத்தையும் பகிர்ந்த விதம் மனதை வருடிச் செல்கிறது அய்யா,. வழக்கமான அம்சங்களுடன் அழகான பதிவிற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  37. நெகிழ்சியான சம்பவம்..பகிர்விற்கு நன்றி ஐயா!!!

    பதிலளிநீக்கு
  38. " ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி".

    பதிலளிநீக்கு
  39. எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளேயே வேண்டி நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.

    ஆஹா எத்தனைஅருமையான வார்த்தைகள்.
    நிதானமாக முழு பதிவையும் படித்தேன்.
    அருமை என்பதை தவிர ஒன்றும் தோன்றவில்லை
    விஜி

    பதிலளிநீக்கு
  40. அனைத்தையும் அறிந்த பரம்பொருளின் வடிவே பெரியவா என்று சம்பவங்களின் மூலம் உறுதியாகிறது!!

    //மேலும், இங்கு கருத்திடும் அனைவரும் அனைத்தையும் படித்து விட்டே கருத்திடுகிறார்கள் என்று நானும் எப்போதும் நினைப்பது இல்லை. அதுபோலெல்லாம் தப்புக்கணக்கும் போடுவது இல்லை.// :-))))

    பதிலளிநீக்கு
  41. பகவான் (பெரியவா) மனசு வச்சா நடக்காதது ஒன்று உண்டோ?

    பதிலளிநீக்கு
  42. ஈஸ்வரார்ப்பணம்னு பூரண சரணாகதி அடைஞுசா துன்பமில்ல

    பதிலளிநீக்கு
  43. // ’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் எல்லாவற்றையும் விட அது சிலாக்கியம்.//

    எல்லாம் நன்மைக்கே தத்துவம்.

    //எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளேயே வேண்டி நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.//

    ஆமாம் கட்டிடத்தின் கூரை இடுக்கில் காக்கை போட்ட அரசு, ஆல விதை செடியாக முளைப்பதைப் போல அகம்பாவமும் முளைத்துவிடும். முளையில் கிள்ளாவிட்டால் ......என்ன செய்ய ஆடினா அடங்கணும்ன்னாவது புரிஞ்சுக்கணும்.

    பதிலளிநீக்கு
  44. //தனியாக “செஸ்” விளையாடுவது போல், பகவான் நம்மையெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். //

    ஆனா நாம என்னமோ நான் செஞ்சேன், நான் குடுத்தேன், நான் சம்பாதிச்சேன்னு சொல்லிண்டிருக்கோம். ஏதாவது நல்லது நடந்தா கூட அது கடவுளாலன்னு ஒத்துக்க மனசு வராதே.

    // Surprisingly, Narasimhan found that his train for Calcutta was slowly grinding to a halt in the station. The train was late by three hours. //

    இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு. எல்லாம் மகா பெரியவாளின் அருள்.

    ஏதாவது நல்லது நடந்தா கூட அது கடவுளாலன்னு ஒத்துக்க மனசு வராதே.

    பதிலளிநீக்கு
  45. // ‘கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம். குங்குமம் வெக்கறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம் (ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுக்கறதில்லே), ஆனா, வயசாகி போய் பால் மரத்து போச்சுன்னா, வீட்டில் வெச்சுக்கறதில்லே. கசாப்பு கடைக்காரன் கிட்டே வித்துடறோம்… அநியாயம்… சகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படி கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார்? வசதிப்பட்டவர்கள் கோசாலை வைத்து வயதான பசுக்களை சம்ரக்ஷிக்கணும்.’//

    பெத்த தாயை கொண்டு முதியோர் இல்லத்தின் விடுபவன் பசுக்களையா பராமரிக்கப் போகிறான். அதனால் தான் கோசாலைகள் ஏற்படுத்தணும்ன்னு சொல்லி இருப்பாரோ?

    // அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. //

    ஒரு சாதாரண மனிதனுக்காகத் தன் ஆச்சாரத்தையே விட்டுக் கொடுக்கும் மகா பெரியவாளை என்னவென்று சொல்ல. SIMPLY GREAT.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான ஆத்மார்த்தமான விரிவான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  46. கரீட்டுதா கண்ணு தெரியாதவங்களுக்கு பேச்சுலதான் வெளங்கிகிட ஏலும்

    பதிலளிநீக்கு
  47. எல்லாம் அவன் பாத்துப்பான்னு விட்டேத்தியா இருக்கமுடியலியே. நாம எல்ஸாம் ஆசா பாசங்கள் நிறைந்த மனிதரகள் அவதாரம் கிடையாது. நமக்கும் ஏதாவது நல்லது நடந்தால்தானே நம்பிக்கையே வரது.

    பதிலளிநீக்கு
  48. கோடியில் ஒருத்தர்...சொல்லிவிட்டா 50 ரூபாய் 50 கோடியா மாறும்...அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  49. கோடியில் ஒருத்தர்...சொல்லி அனுப்புனா 50 ரூபாய் 50 கோடியாமாறிடும்..அருமை.

    பதிலளிநீக்கு