என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 29 மார்ச், 2011

உனக்கே உனக்காக !
எனக்கே என்னைப் பார்த்தால் 
பிடிப்பதில்லை அப்போதெல்லாம்.

நிறைமாத கர்ப்பிணிபோல
எப்போதும் என் வயிறு

வேக நடைப் பயிற்சியுடன்
வேகத்தில் ஓடியும் விட்டேன்

மஃப்டியில் போலீஸோ 
என்று என்னை எண்ணி

எனக்கு முன்னே ஓடி 
ஒளிந்தனர் ஒருசிலர் ஒருநாள்.

நாடாத வைத்தியம் இல்லை, மனம் 
வாடாத நாட்களும் இல்லை.

காசு பணம் கரைந்ததேயன்றி, என்
தொந்தி மட்டும் கரையக்காணோம்

இஷ்ட தெய்வம் விநாயகரிடம்
இது பற்றி விண்ணப்பிக்க நான்

அவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார், நொந்து போனேன்.

”பட்டினி கிட, விரதம் இரு” எனப்
படுத்தி வந்தனர் பார்த்தவர் என்னை.

”பணத்தொந்தி” எனப் பரிகசித்தனர்
ஒட்டிய வயிற்று எரிச்சலில் சிலரும்.

எதிலும் ஒரு பயனுமுண்டு தானே
உணர்ந்து கொண்டேன் நானும் இன்று.

பேரக்குழந்தை ஓடி வந்தான் 
செல்லமாகப் படுக்கவேண்டி

”தாத்தா, கதையொன்று 
சொல்ல வேணும்” என்றான்.

”பக்கத்து தலையணியில் 
படுத்துக்கோ சொல்வேன்” என்றேன்

”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி
என் தொந்தி மேல் தலையை வைத்தான்

ஒய்யாரமாகச் சாய்ந்தவாறே
உன்னிப்பாகக் கதையைக் கேட்டான்

உவகையுடன் நானும் சொன்னேன்
"என் தொந்தி என்றும் உனக்கே" என்று.

105 கருத்துகள்:

 1. எதையும் ஒரு மகிழ்ச்சி கலந்த
  நகைச்சுவை கண்ணோட்டத்தில் பார்க்கும்
  தங்கள் நோக்கு, அதை சுவையாகவும் சுவாரசியமாகவும்
  பகிரும் விதம்!!!!!!!!!!

  வியப்புடனும் பிரமிப்புடனும் வணங்குகிறேன்

  பதிலளிநீக்கு
 2. //"என் தொந்தி என்றும் உனக்கே" // பேரனுக்கு மட்டுமா உதவுகிறது? ஒரு கவிதையுமல்லவா தந்திருக்கிறது?!!

  பதிலளிநீக்கு
 3. ஆஹா ...தொந்தி போட்டவர்களுக்குக் கிடைத்த ஊக்க மருந்து இந்த கவிதை . நல்லதொரு படைப்பு.

  கூடிய விரைவில் தொ .போ .மு. க (தொந்தி போடுவோர் முன்னேற்றக் கழகம்) ..நகைச்சுவை கதையையும் எதிர் பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. ஆஹா...

  தொந்தியை இவ்வளவு அழகாக கூட வர்ணிக்க முடியுமா என்ன?

  உங்கள் தொந்தி உங்கள் பேரன் விளையாட மட்டுமல்ல.. உங்களுக்கு கவிதை எழுதக்கூட....

  பதிலளிநீக்கு
 5. மஃப்டியில் போலீஸோ
  என்று என்னை எண்ணி//
  எவ்வளவு வசதி!!
  ஒய்யாரமாகச் சாய்ந்தவாறே
  உன்னிப்பாகக் கதையைக் கேட்டான்//
  கவிதை தந்த தொந்திக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. தொந்தி கணபதி பக்தரா நீங்களும்?
  நானும் தான்!

  பதிலளிநீக்கு
 7. இங்கே கதை தலைகீழாக இருக்கிறது. உடம்பு மிகவும் ஒல்லியாக இருப்பதால், ஒருமுறை எக்ஸ்-ரே எடுக்கப்போனபோது டாக்டர் “உனக்கு எதுக்கு எக்ஸ்-ரே? டார்ச் அடித்துப் பார்த்தாலே போதும்,” என்று சொல்லி விட்டார்!

  பதிலளிநீக்கு
 8. வயதாகிறதே என்று வருத்தப்படாதே..
  அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை..
  என்ற அனுபவ மொழி நினைவுக்கு வந்தது..

  அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 9. ”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி
  என் தொந்தி மேல் தலையை வைத்தான்

  ஒய்யாரமாகச் சாய்ந்தவாறே
  உன்னிப்பாகக் கதையைக் கேட்டான்


  .....That is lovely!!! :-)

  பதிலளிநீக்கு
 10. கவிதை நடையிலும் யோசிக்கவும்,சிரிக்கவும்,ரசிக்கவும் வைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 11. யாதோவை மிகச் சரியாக புரிந்து
  தங்கள் பாணியில் எழுதப்பட்ட
  மிகச் சிறந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. தொந்தி குலுங்க சிரித்தேன் என்று சொல்ல ஆசை தான். ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை.
  நகைச்சுவை வெகு இயல்பாய் கையாள்கிறீர்கள். "மப்டியில் போலீஸோ" மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 13. தொந்திக்கு பின்னால் இவ்வளவா?!

  பதிலளிநீக்கு
 14. நானும் சின்னதா.. தொந்தி வைச்சிருக்கேன்..என் பேரப் புள்ளைங்க வர வரைக்கும் அதை ஜாக்கிரதையாய் பாதுகாக்கணும்கற கவலையிலேயே, தொந்தி கரைஞ்சு போயிடுமோன்னு பயமாயிருக்கு...

  பதிலளிநீக்கு
 15. ஹெ ஹெ ... அருமை. உபயோகமில்லாமல் எதையுமே இறைவன் படைக்கவில்லையே!!!

  பதிலளிநீக்கு
 16. தொந்தி கவிதை நன்றாக இருக்கிறது! சிறு வயதில் என் பெரியப்பாவின் பெரிய தொந்தியில் குத்தி விளையாடுவது தான் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு! இப்போது என் பெண் என்னிடம் விளையாடுகிறாள் :) நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வை.கோ சார்! தொந்திக்கு இப்படி ஒரு உபயோகம் இருக்கா.. எனக்கே கூட உங்க தொந்தியில சாஞ்சிகிட்டு உங்க வாயார இந்தக் கவிதையை கேட்கணும் போலிருக்கே! அருமை உங்கள் நகைச்சுவை உணர்வு..

  பதிலளிநீக்கு
 18. பேருந்து நெரிசலில் தொப்பையுள்ள இருவரின் உடலும் நேருக்கு நேர் இடிபடும்போது, குப்புற படுக்கையில் தொப்பை தவிர மீத உடல் ரெண்டு இன்ச் உயரே மிதக்கும்போது, செம போர் அடிக்கையில் தொப்பையில் இரு கை வைத்து ஒரு குலுக்கு குலுக்கும்போது...!! தொப்பை தொப்பைதான். இல்லாதவங்க வெரி அன்லக்கி!!

  பதிலளிநீக்கு
 19. இன்னொரு தொந்தி உபயோகம்...தனியாக டைனிங் டேபிள் தேவை இல்லை!!

  பதிலளிநீக்கு
 20. எல் கே said...
  //ஹாஹா தொந்தி சூப்பர்//

  அதுவும் ஒரு கவிஞர் வாயால்! மிக்க நன்றி, எல்.கே.

  பதிலளிநீக்கு
 21. raji said...
  //எதையும் ஒரு மகிழ்ச்சி கலந்த
  நகைச்சுவை கண்ணோட்டத்தில் பார்க்கும்
  தங்கள் நோக்கு, அதை சுவையாகவும் சுவாரசியமாகவும்
  பகிரும் விதம்!!!!!!!!!!

  வியப்புடனும் பிரமிப்புடனும் வணங்குகிறேன்//

  இது என் ஆசைப்பேத்தி + அருமைப்பேரனுடன் எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தில், நான் அகம் மகிழ்ந்து போய், எனக்கு அன்று ஏற்பட்ட உணர்ச்சிகளின் வடிகாலாய், என்றோ ஒருநாள், அதை முழுவதும் விவரிக்க முடியாததொரு சுகானுபவத்தில் எழுதி வைத்த வரிகள் இவை.

  வியப்புடனும், பிரமிப்புடனும் வணங்குவதாகச் சொல்லும் உங்களை, “தீர்க்க சுமங்கலி பவ!” என்று
  என் மனம் குளிர்ந்து நானும் நெஞ்சார ஆசீர்வதிக்கிறேன்.

  நோயற்ற நீண்ட வாழ்வு, கல்வியறிவு முதலான குறைவற்ற செல்வம் பெற்று செளக்யமாக வாழ்ந்து புகழ் பெற்று விளங்குவீர்க்ளாக! அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 22. கவிதை நன்றாக இருக்கிறது அய்யா. தங்கள் பேரன் பேத்திகள் கொடுத்து வைத்தவர்கள். நான் ஒன்றைப் பகிர விழைகிறேன். இரண்டு வயது குழந்தையை பெற்றோர்களிடம் விட்டு விட்டு மனைவியை மருத்துவரிடம் அழைத்து செல்ல முற்பட்ட பொழுது அவர்கள் சொன்னது "இங்கு என்ன குழந்தைகள் காப்பகமா நடத்துகிறோம்?"

  பதிலளிநீக்கு
 23. middleclassmadhavi said...
  //"என் தொந்தி என்றும் உனக்கே" //

  /பேரனுக்கு மட்டுமா உதவுகிறது? ஒரு கவிதையுமல்லவா தந்திருக்கிறது?!!/

  ஆமாம் மேடம். அழகாகவே சொல்லி விட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 24. கணேஷ் said...
  //ஆஹா ...தொந்தி போட்டவர்களுக்குக் கிடைத்த ஊக்க மருந்து இந்த கவிதை. நல்லதொரு படைப்பு.//

  உன் பின்னூட்டமும் நல்ல ஊக்க மருந்தாகவே உள்ளது. மிக்க நன்றி, கணேஷ்.

  //கூடிய விரைவில் தொ .போ .மு. க (தொந்தி போடுவோர் முன்னேற்றக் கழகம்) ..நகைச்சுவை கதையையும் எதிர் பார்க்கிறோம்.//

  ஹா ஹா ஹா ஹா !!!!
  [டெபாஸிட் காலியாகி விடும்]

  பதிலளிநீக்கு
 25. R.Gopi said...
  //ஆஹா... தொந்தியை இவ்வளவு அழகாக கூட வர்ணிக்க முடியுமா என்ன? உங்கள் தொந்தி உங்கள் பேரன் விளையாட மட்டுமல்ல.. உங்களுக்கு கவிதை எழுதக்கூட....//

  மிக்க நன்றி, கோபி சார்.

  தொந்தி கொடுத்தது மட்டுமல்ல, பேரன் பேத்தி என்ற சுகானுபவம் கொடுத்து, இவ்வாறு ஒரு கவிதை எழுதத்தூண்டியது உள்பட, எல்லாம் அவன் அருளே!

  பதிலளிநீக்கு
 26. இராஜராஜேஸ்வரி said...
  //மஃப்டியில் போலீஸோ என்று என்னை எண்ணி//

  /எவ்வளவு வசதி!!/

  ஆமாங்க, என் நண்பர்கள் சிலர், சம்மர் கிராப் வெட்டிக்கொண்டு, ஒரே தொந்திமயமாக முக்கொம்பு (மேல் அணை என்று அழைக்கப்படும் திருச்சியில் உள்ள சுற்றுலாத்தளம்) வரை செல்ல டவுன் பஸ்ஸில் ஏறினர். கண்டக்டர் டிக்கெட்டுக்கு காசு வாங்க மறுத்து விட்டார். இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

  முக்கொம்பு போக பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டிய இடம் ’வாத்தலை’ என்னும் இடம்.

  அங்கு இறங்கிய உடன், ரோட்டின் மேல் இவர்கள் கண்ணில் பட்டது ”வாத்தலை காவல் நிலையம் - உங்களுக்கு சேவை செய்ய அன்புடன் வரவேற்கிறது”.

  பிறகு தான் அவர்களுக்குத் தெரிந்தது, அந்தக் கண்டக்டர் இவர்களை அந்தப்போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் போலீஸ்காரர்கள் என்று நினைத்துத்தான், டிக்கெட்டுக்கு பணம் வாங்க மறுத்துள்ளார் என்பது.

  இந்த நிகழ்ச்சியை கேட்ட எனக்கு ஒரே சிரிப்பு தான் போங்க!

  //ஒய்யாரமாகச் சாய்ந்தவாறே
  உன்னிப்பாகக் கதையைக் கேட்டான்//

  /கவிதை தந்த தொந்திக்கு வாழ்த்துக்கள்/

  தொந்தி குலுங்கச் சிரிக்கிறேன், உங்கள் பின்னூட்டத்தைப்படித்து. மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 27. சேட்டைக்காரன் said...
  //தொந்தி கணபதி பக்தரா நீங்களும்? நானும் தான்!//

  அப்போ உங்கள் வேண்டுதல்: ”தொந்தி தந்து அருள்வாய் கணபதியே” என்று இருக்குமே, சரியா?

  //இங்கே கதை தலைகீழாக இருக்கிறது. உடம்பு மிகவும் ஒல்லியாக இருப்பதால், ஒருமுறை எக்ஸ்-ரே எடுக்கப்போனபோது டாக்டர் “உனக்கு எதுக்கு எக்ஸ்-ரே? டார்ச் அடித்துப் பார்த்தாலே போதும்,” என்று சொல்லி விட்டார்!//

  நல்ல நகைச்சுவையாகத்தான் உள்ளது. அதுவும் நன்மைக்கே! எக்ஸ்-ரே எடுக்க செலவழிக்க வேண்டிய
  ரூபாய் 200 ஆவது மிச்சமாகியிருக்கும். நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 28. முனைவர்.இரா.குணசீலன் said...
  //வயதாகிறதே என்று வருத்தப்படாதே..
  அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை..
  என்ற அனுபவ மொழி நினைவுக்கு வந்தது..

  அருமையான பகிர்வு.//

  தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள், முனைவர் சார்.

  ஆமாம்; வயதாகும் வாய்ப்பு கிடைக்கவும், [நீண்ட ஆயுள் வாய்க்கவும்] கொடுப்பிணை வேண்டுமே!!

  பதிலளிநீக்கு
 29. Chitra said...
  //”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி
  என் தொந்தி மேல் தலையை வைத்தான்

  ஒய்யாரமாகச் சாய்ந்தவாறே
  உன்னிப்பாகக் கதையைக் கேட்டான்//

  .....That is lovely!!! :-)

  Thank you very much Chithra,
  for your lovely comments,
  to your Gopu Mama.

  பதிலளிநீக்கு
 30. thirumathi bs sridhar said...
  //கவிதை நடையிலும் யோசிக்கவும்,சிரிக்கவும்,ரசிக்கவும் வைத்துவிட்டீர்கள்.//

  அப்படியா, மிக்க மகிழ்ச்சி சகோதரியே!
  யோசித்து, சிரித்து, ரசித்து, பின்னூட்டம் கொடுத்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 31. Ramani said...
  //யாதோவை மிகச் சரியாக புரிந்து தங்கள் பாணியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த படைப்பு. தொடர வாழ்த்துக்கள்.//

  எல்லாப்புகழும் தங்களுக்கும், தங்கள் யாதோ பற்றிய விளக்கவுரைக்குமே.

  ராஜி அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தாங்கள் ’யாதோ’ பற்றி எழுதியதைப் படித்த பிறகு தான் எனக்கு இதை வெளியிட துணிவே வந்தது.

  உங்களுக்கும் ராஜி அவர்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

  எனக்கு மிகவும் பிடித்த ஒரு மாபெரும் கவிஞராகிய தங்களின் பாராட்டு, மேலும் பல யாதோக்கள் வெளியிட, எனக்கு நல்லதொரு உற்சாகம் கொடுப்பதாக உள்ளது.

  உங்களுக்கு என் ரொம்ப ரொம்ப நன்றிகள், ஐயா.

  பதிலளிநீக்கு
 32. சிவகுமாரன் said...
  //தொந்தி குலுங்க சிரித்தேன் என்று சொல்ல ஆசை தான். ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை.//

  நல்ல நகைச்சுவையாகச் சொல்லுகிறீர்கள். எதற்கும்
  அந்தத் தொந்திப்பிள்ளையாரை மட்டும் வணங்கிப்பாருங்கள். கொடுப்பினை கொடுத்தாலும் கொடுப்பார்.

  //நகைச்சுவை வெகு இயல்பாய் கையாள்கிறீர்கள். "மப்டியில் போலீஸோ" மிகவும் ரசித்தேன்.//

  எனக்குப் பிடித்த அருட்கவியாகிய தங்கள் வாயால் இப்படியொரு பாராட்டுக்கிடைக்க என் தொந்தி என்ன தவம் செய்ததோ, யாம் அறியோம் பராபரமே!

  பதிலளிநீக்கு
 33. ரிஷபன் said...
  //தொந்திக்கு பின்னால் இவ்வளவா?!//

  தொந்திக்கு முன்னால் தான் இவ்வளவும்.
  [நம்ம கேப்டன் கூட பம்பரம் சுற்றினாரே! அங்கு தான்]

  பின்னால் என்னென்ன அடசல்கள் உள்ளனவோ! ஸ்கேன் செய்தால் தான் தெரியும்.

  பதிலளிநீக்கு
 34. padma hari nandan said...
  //Neenga Romba Comedy ah eluthureenga
  [நீங்க ரொம்ப காமெடியா எழுதுறீங்க]//

  அப்படியா, மிக்க மகிழ்ச்சி+நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 35. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //நானும் சின்னதா.. தொந்தி வைச்சிருக்கேன்..என் பேரப் புள்ளைங்க வர வரைக்கும் அதை ஜாக்கிரதையாய் பாதுகாக்கணும்கற கவலையிலேயே, தொந்தி கரைஞ்சு போயிடுமோன்னு பயமாயிருக்கு...//

  கவலையே படதீங்க! தொந்தி கரையவே கரையாது.

  அது என்ன ஐஸ்கிரீமா, சூடமா, அந்துருண்டையா, சோப்பா அல்லது காசு பணமா, உடனடியாக் கரைவதற்கு?

  சின்னதொந்தியே வைச்சிருப்பதே பெரிய தொந்தி அடைவதற்கு அறிகுறி. [தோல்வியே வெற்றிக்கு அறிகுறி போல]

  அப்படியே ஒரு வேளை கரைந்தாலும், உடனடியாக மாபெரும் தொந்தி ஏற்பட, நம்மிடம் தொழில் ரகசியம் இருக்கு.

  இந்த தொந்திக்கு முன்பு போடப்பட்டுள்ள ”உணவே வா, உயிரே போ” என்ற பதிவிலும், அடுத்து வரப்போகும், “எங்கெங்கும்..எப்போதும்..என்னோடு” என்ற சிறுகதைத்தொடரிலும் ஒளிந்துள்ளன, அந்தத்தொழில் ரகசியங்கள்.

  எனவே தங்களுக்கு பயம் வேண்டாம், நண்பரே!
  [யாம் இருக்க பயமேன்!]

  பதிலளிநீக்கு
 36. அன்னு said...
  //ஹெ ஹெ ... அருமை. உபயோகமில்லாமல் எதையுமே இறைவன் படைக்கவில்லையே!!!//

  அழகாகத் தேங்காய் உடைத்தது போல பளிச்சுன்னு வெட்டு ஒன்று துண்டு ரெண்டுன்னு, சொல்லி விட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 37. வெங்கட் நாகராஜ் said...
  //தொந்தி கவிதை நன்றாக இருக்கிறது!//
  பாராட்டுக்கு நன்றி, வெங்கட்.

  //சிறு வயதில் என் பெரியப்பாவின் பெரிய தொந்தியில் குத்தி விளையாடுவது தான் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு!//

  என் பேத்தியும் பேரனும் ஓரளவு இதுபோல குத்திக்குத்தி இப்போது தான் ஓய்ந்துள்ளார்கள்.

  //இப்போது என் பெண் என்னிடம் விளையாடுகிறாள்//

  அடுத்த பேரனோ அல்லது பேத்தியோ இந்த ஏப்ரில் 2011 மாதத்திற்குள் புத்தம் புதிய வெளியீடு ஒன்று [சமீபத்தில் வளைகாப்பு, சீமந்தம் கூட நடைபெற்றதே] எதிர்பார்க்கப்படுகிறது.

  அவனால் அல்லது அவளால் என் தொந்தி மேலும் என்னபாடு படப்போகிறதோ!

  // நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.//

  மிகவும் சந்தோஷம், வெங்கட். [தங்கள் மனைவியும் படித்தார்களா?]

  பதிலளிநீக்கு
 38. மோகன்ஜி said...
  //வை.கோ சார்! தொந்திக்கு இப்படி ஒரு உபயோகம் இருக்கா.. எனக்கே கூட உங்க தொந்தியில சாஞ்சிகிட்டு உங்க வாயார இந்தக் கவிதையை கேட்கணும் போலிருக்கே! அருமை உங்கள் நகைச்சுவை உணர்வு..//

  ஆஹா .... வித்யாசமானதொரு ஆசைதான்.
  தங்கள் வருகை+பாராட்டுக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 39. கே.ஆர்.பி.செந்தில் said...
  //ஆஹா...//

  3 எழுத்துக்கள் உள்ள ‘தொந்தி’யை, 2 எழுத்துக்களே உள்ள ‘ஆஹா’வால், அப்படியே சாய்த்து விட்டீர்களே.
  நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 40. ! சிவகுமார் ! said...
  //பேருந்து நெரிசலில் தொப்பையுள்ள இருவரின் உடலும் நேருக்கு நேர் இடிபடும்போது, குப்புற படுக்கையில் தொப்பை தவிர மீத உடல் ரெண்டு இன்ச் உயரே மிதக்கும்போது, செம போர் அடிக்கையில் தொப்பையில் இரு கை வைத்து ஒரு குலுக்கு குலுக்கும்போது...!!//

  அருமையான அனலைசிஸ்.
  உங்களுக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.

  என்னையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அருமையான உதாரணங்கள் இவை. நன்றி.

  //தொப்பை தொப்பைதான். இல்லாதவங்க வெரி அன்லக்கி!!//

  அனுபவம் பேசுகிறதோ? வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 41. ஸ்ரீராம். said...
  //இன்னொரு தொந்தி உபயோகம்...தனியாக டைனிங் டேபிள் தேவை இல்லை!!//

  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்,
  This is too much.
  நமக்கு அவ்வளவு பெரிய தொந்தி கிடையாது.

  தாங்கள் சொல்லுவதுபோல கூட, சிலபேர்களுக்கு டைனிங் டேபிள் தேவைப்படாத அளவுக்கு, மிகப்பெரிய தொந்தியாக இருக்கலாம். எதற்கும் ஒரு கொடுப்பிணை வேண்டும் போலிருக்கு.

  பதிலளிநீக்கு
 42. அமர பாரதி said...
  //கவிதை நன்றாக இருக்கிறது அய்யா. தங்கள் பேரன் பேத்திகள் கொடுத்து வைத்தவர்கள்.//

  மிக்க நன்றி. என் பேரன் பேத்தி மட்டுமல்ல, அவர்களால் நானும் கூடத்தான் கொடுத்து வைத்தவன்.

  //நான் ஒன்றைப் பகிர விழைகிறேன். இரண்டு வயது குழந்தையை பெற்றோர்களிடம் விட்டு விட்டு மனைவியை மருத்துவரிடம் அழைத்து செல்ல முற்பட்ட பொழுது அவர்கள் சொன்னது "இங்கு என்ன குழந்தைகள் காப்பகமா நடத்துகிறோம்?"//

  உங்களின் ஆதங்கம் எனக்கும் புரிகிறது. அவர்கள் அவ்வாறு சொல்லக்கூடாது தான்.

  ஆனால் ஒன்று சார், ஒவ்வொருவரின் சந்தர்ப்ப சூழ்நிலை, எண்ணங்கள், அனுபவங்கள், உடல்நிலைக் கோளாறுகள், சக்தியின்மை, பொறுமையின்மை, வயதானதால் ஏற்படும் சிரமங்கள், நிறைய பேரன் பேத்திகளுடன் இதுவரைப்பழகி ஏற்பட்ட சலிப்புகள்.

  அவர்களால் இந்தப்பெரியவர்களின், அமைதி குலைக்கப்பட்டு, குழந்தைகள் பெரியவர்களைப் பாடாய்ப்படுத்தி, அந்தக்குழந்தைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருந்த ஒருசில கசப்பான அனுபவங்கள் போன்ற எவ்வளவோ காரணங்களும், பொருளாதார நெருக்கடிகள், நம்மை நாம் பெற்ற பிள்ளைகளே சரிவர மரியாதை கொடுத்து கவனிப்பதில்லையே என்ற ஒரு சில மன வருத்தங்கள் என்று எவ்வளவோ விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

  அது போலவே சில குழந்தைகள் மிகவும் விஷமத்தனமாக, மிகவும் வால்தனமாக, ஒரு நிமிடம் கூட சும்மா ஒரு இடத்தில் இல்லாமல் ஏதாவது, விஷமம் செய்வதாகவும், பொருட்களை சேதப்படுத்துவதாகவும், ஊர்வம்பை விலைக்கு வாங்கி வருவதாகவும், தனக்கே கூட ஏதாவது காயம்பட்டுக்கொள்ளும் அளவுக்கு, ஆபத்து விளைவித்துக்கொள்ளும் அளவுக்கு, பயமறியாதவைகளாகவும் இருக்கக்கூடும்.

  அதுபோன்ற குழந்தைகளை கையாள்வதற்கு இந்தப்பெரியவர்களால் முடியாமலும் போகலாம்.

  ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். சமத்தான புரிந்து கொள்ளக்கூடிய குழந்தைகள் என்றால் கஷ்டமில்லை.

  இதற்கு மேல் எனக்கு விளக்க முடியவில்லை. வீட்டுக்கு வீடு வாசல்படி. ஒவ்வொருவர் பிரச்சனை ஒவ்வொரு விதம்.

  நீங்கள் உங்களை அவர்கள் நிலையில் வைத்துப்பார்த்து அதுபோன்ற சூழ்நிலையில் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்தால் தான் நியாயம் புரியக்கூடும்.

  நான் இவ்வாறு அடிக்கடி சிந்தித்துப்பார்த்து, பிறகு தான், பிறரைப்பற்றி தவறான முடிவுக்கு வருவேன்.

  நான் இவ்வாறெல்லாம் எழுதியிருப்பதை தாங்கள் தப்பாக நினைக்கக்கூடாது. எது வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், பிறருக்கு உபதேசம் செய்யலாம், ஆனால் In practical life, there is a Limit for each & everything. அதுதான் இதில் உள்ள முக்கியமான விஷயம். சகிப்புத்தன்மையும் ஒருவருக்கொருவர் பலவித காரணிகளால் மாறுபடக்கூடும். Take it easy.

  அன்பான வாழ்த்துக்களுடன், vgk

  பதிலளிநீக்கு
 43. அருமையான கற்பனை! அர்த்தம் பொதிந்த வரிகள்! வரிகளினூடே மிளிர்ந்த நகைச்சுவை! சிறு புன்னகையுடன் படித்தேன். பட்டை தீட்ட தீட்ட வைரம் மின்னுமாம்! அப்படித்தான் நாளுக்கு நாள் உங்கள் எழுத்தின் வள‌மை அதிகரிக்கிறது! குறையையே நிறையாக்கி முழுமையடைந்த கவிதை!

  பதிலளிநீக்கு
 44. மனோ சாமிநாதன் said...
  //அருமையான கற்பனை! அர்த்தம் பொதிந்த வரிகள்! வரிகளினூடே மிளிர்ந்த நகைச்சுவை! சிறு புன்னகையுடன் படித்தேன். பட்டை தீட்ட தீட்ட வைரம் மின்னுமாம்! அப்படித்தான் நாளுக்கு நாள் உங்கள் எழுத்தின் வள‌மை அதிகரிக்கிறது! குறையையே நிறையாக்கி முழுமையடைந்த கவிதை!//

  எழுத்துலகில் மிகச்சிறந்ததொரு அஷ்டாவதானியான* தங்களின் வருகைக்கும், உற்சாகமளிக்கும் விதமான நல்ல பல நல்ல கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  [*அஷ்டாவதானி = ஒரே நேரத்தில் வெவ்வேறுவிதமான 8 பொறுப்புக்களை ஏற்று, எல்லாவற்றிலும் முழுக்கவனம் செலுத்தி, அனைத்துக்கார்யங்களையும் வெற்றியுடன் முடிக்கும் தனித்திறமை பெற்றவர் - அதிசயத்தக்க நினைவாற்றல் உடையவர் - பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி, அசந்து போகச்செய்பவர் ]

  பதிலளிநீக்கு
 45. ந‌ம்மை வ‌ளர்த்த‌ வ‌யிறுக்கு நன்றி சொல்ல‌,
  நாம் வ‌ளர்க்கிறோம் தொந்தியை.

  பதிலளிநீக்கு
 46. vasan said...
  //ந‌ம்மை வ‌ளர்த்த‌ வ‌யிறுக்கு நன்றி சொல்ல‌,
  நாம் வ‌ளர்க்கிறோம் தொந்தியை.//

  தாங்கள் கூறும் இந்தக்கருத்து மிகவும் நியாயமாகவே உள்ளது, சார். I fully accept with you, Sir.

  நீண்ட நாட்களுக்குப்பின் அத்திப்பூத்தால் போல வந்து அருமையானதொரு விஷ்யம் கூறியுள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ”வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க உதயம்”, மொத்தம் எட்டு பகுதிகளில் கடைசி பகுதி (பகுதி-8) மட்டுமாவது படித்தீர்களா?

  அரசியல் விஷயங்கள் நகைச்சுவையுடன் அள்ளித் தெரித்திருப்பதால் உங்களுக்கு அது நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

  தயவுசெய்து படித்துவிட்டு அதற்கு மட்டும் பின்னூட்டம் அளிக்கவும். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 47. வீடு மாற்றிய படலத்தில் அழகான தொந்தி கவிதையை இன்று தான் படிக்க முடிந்தது.
  நானும் சிறுவயதில் என் அப்பாவின் தொந்தியில் குத்தி விளையாடியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 48. கோவை2தில்லி said...
  //வீடு மாற்றிய படலத்தில் அழகான தொந்தி கவிதையை இன்று தான் படிக்க முடிந்தது.
  நானும் சிறுவயதில் என் அப்பாவின் தொந்தியில் குத்தி விளையாடியிருக்கிறேன்.//

  நீங்கள் பின்னூட்டம் கொடுக்க வரும் வரை, எவ்வளவு நாளானாலும், மேற்கொண்டு புதிய பதிவுகள் வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். நல்லவேளையாக வந்து விட்டீர்கள்.

  சென்ற என்னுடைய பதிவான “உணவே வா, உயிரே போ” படித்துவிட்டு தயவுசெய்து பின்னூட்டம் கொடுக்கவும். அதன் பிறகு தான் என் புதிய வெளியீடு ஆரம்பமாகும்.

  உங்கள் வீட்டுக்காரருக்கு அவரின் பெரியப்பாவின் பெரிய தொந்தி, உங்களுக்கு உங்கள் அப்பாவின் தொந்தி, இன்று உங்கள் மகளுக்கு அவள் அப்பாவின் தொந்தி, குத்திக்குத்தி விளையாட! நல்ல ஜோடிப்பொருத்தம் தான்.

  ”தொந்தியுடையார் குத்துக்கு அஞ்சார்!” என்று சொல்லலாமா?

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 49. தொந்தியின் உபயோகம் சரி, விஜிகெ சார்.குனிந்து செருப்பு பார்த்துப் போட முடியுமா,? ஜஸ்ட் எ ஜோக் ப்ளீஸ். ஸரளமான எழுத்து நடை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 50. G.M Balasubramaniam said...
  //தொந்தியின் உபயோகம் சரி, விஜிகெ சார்.குனிந்து செருப்பு பார்த்துப் போட முடியுமா,? ஜஸ்ட் எ ஜோக் ப்ளீஸ். ஸரளமான எழுத்து நடை. வாழ்த்துக்கள்//

  சார், தங்கள் வருகைக்கும், நல்லதொரு அருமையான ஜோக் சொல்லி என்னையே சிரிக்க வைத்ததற்கும், அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுதல்களுக்கும் மிகவும் நன்றி.

  கடும் வெய்யில் காலமாதலால், உடல்நிலை சற்றே சரியில்லாமல் இருப்பதால், வலைப்பூப்பக்கம் அதிகமாக வராமல் உள்ளேன். கூடிய சீக்கிரம் வந்து விடுவேன். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 51. தங்களுடைய விரிவான பதிலுக்கு நன்றி அய்யா. உங்களுடன் உடன் படுகிறேன். ஆனா நான் குறிப்பிட்ட அந்த நிகழ்வு, தாங்கள் கூறிய எந்த வரை முறைகளுக்குள்ளும் அடங்காது. மேலும் இது 13 வருடங்களுக்கு முன்னால்தான் ஆதங்கம். இப்போது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத செய்தி மட்டுமே.

  பதிலளிநீக்கு
 52. அமர பாரதி said...
  //தங்களுடைய விரிவான பதிலுக்கு நன்றி அய்யா. உங்களுடன் உடன் படுகிறேன். ஆனா நான் குறிப்பிட்ட அந்த நிகழ்வு, தாங்கள் கூறிய எந்த வரை முறைகளுக்குள்ளும் அடங்காது. மேலும் இது 13 வருடங்களுக்கு முன்னால்தான் ஆதங்கம். இப்போது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத செய்தி மட்டுமே.//

  தாங்கள் மீண்டும் வருகை தந்து, விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி. 13 வருடங்கள் முன்பு நடந்ததொரு நிகழ்ச்சியென்றாலும் இன்னும் உங்கள் மனதில் அது ஆழமாகப் பதிந்துள்ளது என்பதிலிருந்தே அதன் தாக்கம் புரிந்து கொள்ள முடிகிறது.

  ஏதோ ஒருவருக்கொருவர் அவ்வப்போது ஏற்படும் கோபதாபத்தில் இதுபோல ஒரு சில சொற்கள் வெளிப்பட்டு விடுகிறது. அதை தாங்களும் மறந்துவிடவும்.

  மனதில் யாருக்குமே பாசம் தனியாக இருக்கவே செய்யும். சிலர் வெளிக்காட்டுவார்கள். சிலர் மனதிலேயே பூட்டி வைத்து விடுவார்கள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 53. இந்த இன்ப கவிதையை படித்தவுடன் , என் அன்னையின் வாக்கியம் ஒன்று நினைவில்
  மகன்/ மகள் இன்பம்
  பேத்தி /பேரன் பேரின்பம்
  பாசம் பகிர்ந்த பதிவு
  நன்றி

  பதிலளிநீக்கு
 54. தொல்லை கொடுக்கும் தொந்தியையும் நகைச்சுவையாகச் சொன்னது அருமை VGK சார்...!

  அன்புடன்,
  ராணி கிருஷ்ணன்.

  பதிலளிநீக்கு
 55. இதை படித்ததும் அப்பா நினைவு .சிறு வயதில் அப்பாவின் தொப்பையில் நானும் தங்கையும் குத்து சண்டை போடுவதைப்போல விளையாடுவோம்
  //இஷ்ட தெய்வம் விநாயகரிடம்இது பற்றி விண்ணப்பிக்க நான்
  அவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார்//

  தொப்பை கணபதியிடமே போய் உங்க குறையை சொல்லலாமா .
  but அவருக்கும் அதுதானே அழகு

  பதிலளிநீக்கு
 56. A.R.RAJAGOPALAN said...
  //இந்த இன்ப கவிதையை படித்தவுடன் , என் அன்னையின் வாக்கியம் ஒன்று நினைவில்
  மகன்/ மகள் இன்பம்
  பேத்தி /பேரன் பேரின்பம்
  பாசம் பகிர்ந்த பதிவு
  நன்றி//

  Thank you Mr Rajagopalan Sir.

  With Love ........... vgk

  பதிலளிநீக்கு
 57. nunmadhi said...
  தொல்லை கொடுக்கும் தொந்தியையும் நகைச்சுவையாகச் சொன்னது அருமை VGK சார்...!

  அன்புடன்,
  ராணி கிருஷ்ணன்.

  Thank you Miss: Gowri Lakshmi.

  Sorry for my delayed reply to my beloved daughter.

  Affectionately yours,
  vgk

  பதிலளிநீக்கு
 58. angelin said...
  //இதை படித்ததும் அப்பா நினைவு.சிறு வயதில் அப்பாவின் தொப்பையில் நானும் தங்கையும் குத்து சண்டை போடுவதைப்போல விளையாடுவோம்//

  மகிச்சியான தருணங்கள் நினைவுக்கு வந்ததா! வருத்தப்படாதீர்கள்.
  நினைத்து மகிழ வேண்டியது தான். என்ன செய்வது?

  //இஷ்ட தெய்வம் விநாயகரிடம்இது பற்றி விண்ணப்பிக்க நான்
  அவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார்//

  தொப்பை கணபதியிடமே போய் உங்க குறையை சொல்லலாமா .
  but அவருக்கும் அதுதானே அழகு.

  ;))))) நீங்கள் இதுபோலச் சொல்வதால் என் தொப்பையை ஒரு முறை தடவிக்கொடுத்துக் கொள்கிறேன்.

  மிக்க மகிழ்ச்சி நிர்மலா! நன்றி.

  பதிலளிநீக்கு
 59. உனக்கே உனக்காக என்ற தலைப்பை பார்த்ததும் என்னவோ என்று படிக்க ஆரம்பித்தேன்.. ம்ம்ம்ம் அசத்திட்டீங்க.. தொந்தியினால் தொல்லை என்ற நிலை போய் தொந்தியினால் என்னென்ன அட்வாண்டேஜ் இருக்குன்னு சொல்லாமல் சொல்லிட்டீங்க.. என்ன ஒரு பாசிட்டிவ் த்தாட் அண்ணா உங்களுக்கு???

  தொப்பை ஒரு பெரிய அவஸ்தை.... உவமை ரசித்தேன் நிறைமாத கர்ப்பிணி போல.... வாக்கிங் போயும் ஏன் குறையலை??? சாப்பாடு கம்மி பண்ணாம வெறுமனே நடையை மட்டும் ஜோரா அதிகப்படுத்தினா போறுமா?? அதான் குறையலை....

  மஃப்டி போலிசாருக்கு நீங்க கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் படித்து எனக்கு செம்ம சிரிப்பு வந்துவிட்டது அண்ணா... கண்டக்டருக்கு நிஜமான விஷயம் தெரிய வந்திருந்தால் ” ஙே “ ந்னு முழிச்சிருப்பார்....

  வைத்தியம் எல்லாமும் முயற்சி பண்ணி இருக்கீங்க.. உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, விரதம் என்னென்னவோ... அதுல கூடவே நகைச்சுவை இழையோட உங்க வரிகள் நீங்க பதித்தது உங்களுக்கே உரிய ஸ்டைல் அண்ணா... ரசித்தேன்... ” பணத்தொந்தி “ பணம் கிடைக்காத எரிச்சலில் சிலர்....

  தொந்தி கரைய செய்த எல்லா முயற்சிகளும் தோத்து போய் கணபதி கிட்ட போய் ரெக்வெஸ்டா? ( அவரே அரச மரத்துக்கு அடியில நிலையா நிம்மதியா உட்கார்ந்துக்கிட்டு கொழுக்கட்டை சுண்டல் சாப்பிட்டுக்கிட்டு அதான் தொப்பையே போட்ருச்சு எங்க பிள்ளையாராப்பாவுக்கு) நீங்க உங்க குறையை அவர் கிட்ட சொல்லி அழ, பதிலுக்கு பிள்ளையார் அவருக்கும் அதே தான் குறை என்று சொல்லி நாளையில இருந்து ஜாகிங் வாக்கிங்குக்கு என்னை மறக்காம அழைச்சிட்டு போன்னு சொல்லாம இருந்ததே பெரிய விஷயம் அண்ணா :)

  உங்க தொந்திக்கு கடைசில ஒரு விடிவு காலம் பிறந்துட்டுது பேரன் பேத்திகளின் உபயத்தால.... குழந்தைகளுக்கு தலையணையை விட சாஃப்டா இருக்கும் தொப்பை தான் ரொம்ப பிடிச்சிருந்திருக்கு.... குழந்தையை கீழ போட்டால் அழுமாம்.. அதையே தூக்கி மடில வெச்சுக்கிட்டால் சிரிக்குமாம். அதுபோல தலையணை மேல் படுப்பதற்கும் தாத்தாவின் ஆசைத்தொப்பை மேல் படுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. தொப்பை மேல் படுக்க பேரன் பேத்திக்கு ஆசை. அந்த பேரன் பேத்திகளின் அன்பை நம் அணைப்பால் அன்பை தெரிவிக்க நமக்கு ஆசை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி மஞ்சு அவர்களே, வாருங்கள், வணக்கம்.

   //”உனக்கே உனக்காக” என்ற தலைப்பை பார்த்ததும் என்னவோ என்று படிக்க ஆரம்பித்தேன்..//

   ”உங்களுக்கே உங்களுக்காக” என தாங்கள் தலைப்பை மாற்றிக்கொண்டாலும் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ;)))))

   //தொந்தியினால் தொல்லை என்ற நிலை போய் தொந்தியினால் என்னென்ன அட்வாண்டேஜ் இருக்குன்னு சொல்லாமல் சொல்லிட்டீங்க.. என்ன ஒரு பாசிட்டிவ் த்தாட் அண்ணா உங்களுக்கு???//

   அடடா, தங்கச்சிக்கும் இதில் ஏதோ அட்வாண்டேஜ் இருக்கும் போல இருக்கே!! சொல்லாமல் சொல்லிட்டீங்க .. அதிலும் ஓர் பாஸிடிவ் த்தாட், எனக்கு மட்டுமே தெரிகிறது, சகோ.

   தொடரும் .....

   நீக்கு
  2. VGK To மஞ்சு [2] தொடர்ச்சி...

   //தொப்பை ஒரு பெரிய அவஸ்தை.... உவமை ரசித்தேன் நிறைமாத கர்ப்பிணி போல.... வாக்கிங் போயும் ஏன் குறையலை??? சாப்பாடு கம்மி பண்ணாம வெறுமனே நடையை மட்டும் ஜோரா அதிகப்படுத்தினா போறுமா?? அதான் குறையலை....//

   இதற்கான என் விரிவான பதில்
   “எங்கெங்கும் .. எப்போதும் .. என்னோடு”
   ”உணவே வா ... உயிரே போ”
   என்ற இரு பதிவுகளிலும் உள்ளது.

   இணைப்பு இதோ:
   http://gopu1949.blogspot.in/2011/05/1-of-3.html

   http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

   தொடரும் .....

   நீக்கு
  3. VGK To மஞ்சு [3] தொடர்ச்சி...

   //மஃப்டி போலிசாருக்கு நீங்க கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் படித்து எனக்கு செம்ம சிரிப்பு வந்துவிட்டது அண்ணா...//

   அது நிஜமாகவே நடந்த கதை தான் மஞ்சு.

   //நகைச்சுவை இழையோட உங்க வரிகள் நீங்க பதித்தது உங்களுக்கே உரிய ஸ்டைல் அண்ணா... ரசித்தேன்... ” பணத்தொந்தி “ பணம் கிடைக்காத எரிச்சலில் சிலர்.... //

   தங்களின் ரசனைக்கு மிக்க நன்றி.

   //குழந்தையை கீழ போட்டால் அழுமாம்.. அதையே தூக்கி மடியிலே வெச்சுக்கிட்டால் சிரிக்குமாம்.//

   ஆஹா! குழந்தையாகிப்போன நானும் இப்போ அழுகிறேன்.
   ஆறுதலாக யாரேனும் தூக்கி என்னையும் மடியிலே வெச்சுக்க மாட்டாங்களான்னு ... [90-92 Kgs. ? ;)) ]

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிகப்பெரிய பிள்ளையார் தொந்தி போன்ற கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மஞ்சு.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 60. தொந்தியப்பாவை பார்த்து யாரும் கன்னத்தில் போட்டுக்கிடலையே?? உங்களை பார்த்ததும் யாரும் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடாம வரை சரிதான்...

  ரசித்து வாசித்தேன் அண்ணா... உங்க அனுபவங்களை கதையாக்கி.... கவிதையாக்கி... எங்களுக்கு அதை நகைச்சுவையுடன் பரிமாறும் உங்கள் ஸ்டைல் ரொம்ப பிடித்திருக்கிறது அண்ணா....

  ஆகமொத்தம் உங்க தொந்தி இப்ப பேரன் பேத்திகளின் சொத்தாகிவிட்டது.... அதான் சொல்லி இருக்கீங்களே “ என் தொந்தி உனக்கே உனக்கு தான் என்று “ மிகவும் ரசித்த வரிகள் அண்ணா இவை...

  உங்க பேரக்குழந்தைகள் ரொம்ப சமர்த்து குழந்தைகள் தாத்தா தொப்பை மேல் படுக்க தான் இஷ்டப்பட்டாங்க...

  என்னை திட்டாதீங்க... நானும் என் மகனும் என் அப்பா படுத்துட்டு இருக்கும்போது அஞ்சான் ஓடி போய் முதலில் அப்பாவின் தொப்பை மீது ஏறி குதித்து இறங்குவான் ( ஒன்னரை வயது குழந்தை கனம் அதிகம் இல்லாத குழந்தை) பின்னாடியே நானும் ஓடி போய் என் அப்பாவின் தொப்பை மேல் ஏறி ஒரு குதி குதிச்சுட்டு இறங்கி அப்பா கத்தும் ஓடிடுவேன். அப்பா திட்டமாட்டார்... ஆனால் என் கணவர் திட்டுவார். கொஞ்சமாவது எதாவது மண்டைல இருக்கா உனக்கு?? உன்னோட வெயிட் என்ன அப்டியே அப்பா மேலே குதிச்சு ஓடறியே பாவம் அப்பா என்று சொல்லுவார்... அதெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது அண்ணா....

  ரசிக்க வைத்த நகைச்சுவை இழையோடிய சூப்பர் பதிவு அண்ணா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VGK to மஞ்சு

   //தொந்தியப்பாவை பார்த்து யாரும் கன்னத்தில் போட்டுக்கிடலையே?? உங்களை பார்த்ததும் யாரும் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடாம வரை சரிதான்...//

   மஞ்சுவின் இந்தக்கிண்டலும் மகிழ்ச்சியளிக்கிறது. ;)

   நீங்க தான் வினாயகர் பக்தை என்று சொல்லியிருக்கீங்களே!

   நீங்களே முதலில் கன்னத்தில் போட்டுக்கொண்டு, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட ஆரம்பிக்கவும்.

   மறக்காமல் கொழுக்கட்டைக்குள் வைப்பார்களே வெல்லம்+தேங்காய் துருவல்+ஏலக்காய் போட்ட பூர்ணம் அது ஒரு அடுக்கு நிறையாக் கொண்டு வந்துக் கொடுத்துடணும். இப்போதே அட்வான்ஸாகச் சொல்லிட்டேன்

   //என்னை திட்டாதீங்க... நானும் என் மகனும் என் அப்பா படுத்துட்டு இருக்கும்போது அஞ்சான் ஓடி போய் முதலில் அப்பாவின் தொப்பை மீது ஏறி குதித்து இறங்குவான் ( ஒன்னரை வயது குழந்தை கனம் அதிகம் இல்லாத குழந்தை)

   பின்னாடியே நானும் ஓடி போய் என் அப்பாவின் தொப்பை மேல் ஏறி ஒரு குதி குதிச்சுட்டு இறங்கி அப்பா கத்தும் ஓடிடுவேன். அப்பா திட்டமாட்டார்... ஆனால் என் கணவர் திட்டுவார். கொஞ்சமாவது எதாவது மண்டைல இருக்கா உனக்கு?? உன்னோட வெயிட் என்ன அப்டியே அப்பா மேலே குதிச்சு ஓடறியே பாவம் அப்பா என்று சொல்லுவார்... அதெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது அண்ணா....//

   நல்லவேளை நீங்க என் பெண் குழந்தையாக இல்லாமல் போனீங்க. இல்லாவிட்டால் என் தொப்பை மஞ்சுவின் வெயிட்டைத் தாங்காமல் எப்பவோப் பஞ்சர் ஆகியிருக்கும்.;)))))

   //ரசிக்க வைத்த நகைச்சுவை இழையோடிய சூப்பர் பதிவு அண்ணா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.//

   மிக்க மகிழ்ச்சி மஞ்சு.

   பிரியமுள்ள
   கோபு அண்ணா

   நீக்கு
 61. கவிதையில் கூட நகைச்சுவையுடன் கூடிய மனநிறைவு..அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Asiya Omar October 2, 2012 11:42 AM
   கவிதையில் கூட நகைச்சுவையுடன் கூடிய மனநிறைவு..அருமை..//

   அன்பான தங்களின் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 62. ஆஹா.. சூப்பர் அருமையான கவிதை..
  நகைச்சுவையோடு கூடவே முடிவில், தொந்தியும் நல்லதுக்கே எனச் சொல்லி முடிச்சிட்டீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira October 5, 2012 10:46 AM
   //ஆஹா.. சூப்பர் அருமையான கவிதை..
   நகைச்சுவையோடு கூடவே முடிவில், தொந்தியும் நல்லதுக்கே எனச் சொல்லி முடிச்சிட்டீங்க...//

   தங்களின் அன்பான் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள
   கோபு

   நீக்கு
 63. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் கோபு அண்ணன், 2011 இல போட்டிருக்கிறீங்க, ஆனா இப்பவும் பின்னூட்டங்கள் தொடருதே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira October 5, 2012 10:52 AM
   //எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் கோபு அண்ணன், 2011 இல போட்டிருக்கிறீங்க, ஆனா இப்பவும் பின்னூட்டங்கள் தொடருதே......//

   அது ஒரு தங்கமலை இரகசியம். தேவ இரகசியம்.
   தங்கள் காதை என் வாய்கிட்டக்கொடுங்க. சொல்றேன்.
   சும்மா பயப்படாமக் கொடுங்க. காதைக் கடிக்க மாட்டேன், கம்மல் ஜிமிக்கையைக் கழட்டவும் மாட்டேன்.

   இரகசியத்தை வேறு யாரிடமும் சொல்லிடாதீங்க.....

   என் பெயர் கோபியர் கொஞ்சும் ரமணா கோபாலகிருஷ்ணா தெரியுமோ! அதையும் ஒரு பக்கமா ஒரு காதிலே வாங்கிப் போட்டு வைச்சுக்குங்க. இப்போ இன்னொரு காதைக் கொடுங்க... சொல்றேன்

   மஞ்சு மஞ்சு ன்னு இரண்டு பேரு இல்லே, ஒருத்தங்க இருக்காங்க தெரியுமா? குவைத்துலே இருக்காங்க. இந்த வாரம் கூட வலைச்சர ஆசிரியராக இருக்காங்களே, அவங்க தாங்க ..... அவங்களைத் தனியா இப்போதைக்கு ம்னஸுலே ஒரு பக்கமா போடு வைச்சுக்குங்க ...... சொல்றேன்.

   தொடரும்.....

   நீக்கு
  2. கோபு அண்ணா ...... அதிராவுக்கு [2]

   நானு 02 01 2011 அன்னிக்கு தாங்க என் முதல் பதிவை வலையில் ஏத்தினேன். அதிலிருந்து 03.05.2012 வ்ரை சுமாரா 300 பதிவுகள் கொடுத்தேனுங்க. பிறகு நானாகவே விருப்ப ஓய்வு [V R S] வாங்கிட்டுப்பேசாமல் தாங்க இருந்து வந்தேன். திடீர்ன்னு நம்ம பதிவர்களில் சிலபேரு எனக்கு அடுத்தடுத்து விருதுகள் கொடுத்தாங்க. ஒன்னு ரெண்டு இல்லை. மொத்தம் பன்னிரெண்டு விருதுங்க.

   நான் விருப்ப ஓய்வு பெற்ற் முழு ஓய்வில் இருந்தாலும் இதுபோல தொடர்ந்து விருதுகள் கொடுத்து, தூங்கும் புலியை இடறிப்புட்டுப் போய்ட்டாங்களா? உடனே சிலிர்த்து எழுந்து கடைசியாக எனக்குக் கொடுக்கப்பட்ட 10th 11th + 12th Award களை, கொடுத்தவங்களுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு அவை ஒவ்வொன்றையும் ஒரு 108 பேர்கள் வீதம் ஒரு 324 பேர்களுடன் பகிர்ந்து கொண்டு ஒரு புரட்சி செய்தேனுங்க. அது என்ன புரட்சின்னு நீங்க போய்ப்பார்த்தால் தான் புரியும். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பார்களே! அதுபோல நீங்க போய் முன்னாடி அதைப் பார்த்துட்டு அப்புறம் உங்க காதைக்கொண்டுவந்து என் வாய்கிட்ட வையுங்க. மத்த கதையெல்லாம் சொல்றேங்க:

   இந்தாங்க இணைப்பு:
   http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

   தொடரும்......

   நீக்கு
  3. கோபு அண்ணா ...... அதிராவுக்கு [3]

   இப்போ தொடரட்டுங்களா ?

   இந்த மஞ்சுத்தங்கச்சியப்[என் தங்கச்சியை - உங்களுக்கு ஒரு வேளை அக்காவாக இருக்கலாம். பக்காவாக எனக்குத் தெரியவில்லை] பத்திச்சொன்னேன் இல்லையா?

   அந்த மஞ்சுவை இந்த வாரம் 01.10.2012 முதல் வலைச்சர ஆசிரியர்ன்னு ஒரு மாபெரும் பொறுப்பினைக் கொடுத்து [வலையுலகில்] உலகப்பிரஸித்தி பெற்றவராக ஆக்கிட்டாங்க. உலக அழகி பட்டம் போலவே அவங்களும் இதைப் பெருமையாக ஏற்றுக்கொண்டு முதல் நாள் அதாவது 01.10.2012 அன்று த்ன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டாங்க. அதுவரை ஒன்றும் பிரச்சனையே இல்லை.

   மறுநாள் அதாவது 02.10.2012 மஹாத்மா காந்தி பிறந்த தினம். வலைச்சரத்துக்குப் போய் பார்த்த எனக்கு மயக்கமே வந்திடுச்சு. [நீங்க கூட எனக்கு மயக்கம் வந்ததைப்பற்றி அங்கு பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க]
   இதோ இங்கே அதையே Copy & Paste போட்டிருக்கேன்.
   ===============
   athira said ...

   கோபு அண்ணாவே மயங்கி விழுந்திட்டாராம்ம்.. அப்போ நாங்கள் எம்மாத்திரம்.. உண்மையில் வியந்துதான் போனேன். நான் இதுவரை அவரின் ஒரு சில பதிவுகள் மட்டும்தான் படித்திருக்கிறேன், உங்களின் இந்த அனுபவித்து எழுதியிருக்கும் விதமும், அவரின் தலைப்புக்களையும் பார்க்கும்போது.. அனைத்தையும் படிக்க மனம் தூண்டுது...

   நானும் இந்த லிங்கை குறித்து வைத்திட்டேன்ன்.. நேரமுள்ளபோது ஒவ்வொன்றாகப் படிப்பேன்.

   இப்படி ஒரு புதுமையான அறிமுகத்துக்கும்.... அவரின் இத்தனை விதமான பதிவுகளுக்கும் என் வாழ்த்துக்கள். மிக்க நன்றி. உண்மையில் உள்ளம் சிலிர்க்குது... பதிவு படிக்க.

   கோபு அண்ணன் தொடர்ந்து இப்படியே பதிவுகள் போட்டு எம்மோடு கலகலப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

   ஊசிக்குறிப்பு:
   அஞ்சு சொல்லித்தான், கோபு அண்ணனின் பின்னூட்டம் பார்த்து, அதைத் தொடர்ந்து பஸ், ரெயின் எடுத்து இங்கு வந்தேன். மியாவும் நன்றி அஞ்சுவுக்கும்.
   October 3, 2012 3:13:00 AM GMT+05:30
   =============

   தொடரும்.....

   நீக்கு
  4. கோபு அண்ணா ...... அதிராவுக்கு [4]

   மஞ்சுவின் இந்தச்செயலால் மயக்கம் போட்டு விழுந்து விட்ட என்னை வெகு நேரம் கழித்து எழுப்பினாங்க!

   எழுந்து பார்த்தாக்க ஏகப்பட்ட பேர்கள், மஞ்சுவுக்கு ஆதரவாக பின்னூட்டம் கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் ஒவ்வொன்னாப் படிச்சுப் பார்த்தேன். மீண்டும் மயக்கம் வரும் போல இருந்தது.

   பின்ன என்னங்க? மஞ்சு பாட்டுக்கு என் ஒருவனுக்கு மட்டுமே அன்றைய முழுநாளும் வலைச்சரத்தில் ஒதுக்கி ஏகப்பட்ட லிங்குகள் கொடுத்துப்புட்டாங்களா? கடைசியில் கட்டக்கடைசியில் கீழ்க்கண்ட ஒரு கோரிக்கையும் வெச்சுப்புட்டாங்களா?

   =======

   இந்தப் பதிவினைப் பார்க்கும் படிக்கும் அன்பர்கள், நண்பர்கள், பதிவர்கள் அனைவருக்கும் ஓர் மிகசிறிய வேண்டுகோள்

   மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணைப்புகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒன்றினைப் போய்ப் படியுங்கள். தங்களின் கருத்துக்களை பதிவு செய்து பின்னூட்டம் அளியுங்கள். அதுவே என் அன்பின் அண்ணா திரு. VGK அவர்களை மிகவும் மகிழ்விக்கும். அவருக்கு உற்சாகமும் அளிக்கும்.

   அதுபோன்ற தங்களின் கருத்துக்களும், பாராட்டுக்களும் மட்டுமே அவரை திரும்ப உற்சாகத்துடன் நம் வலையுலகில் வலம் வர வழிவகுக்கும்.

   செய்வீர்கள் தானே? ........

   - மஞ்சுபாஷிணி.

   =================

   அதைப் பார்த்தவங்க சும்மா இருப்பாங்களா?

   வரிசையாக என் பதிவைத் தேடித்தேடி ஓடிஓடி வர ஆரம்பிச்சுட்டாங்க. என் மெயில் இன் பாக்ஸ் நிரம்பி வழிய ஆரம்பிச்சிருச்சு.

   தொடரும்......

   நீக்கு
 64. கோபு அண்ணா ...... அதிராவுக்கு [5]

  இப்போ உங்களுக்கு ஓரளவுக்கு விஷயம் புரிஞ்சுபோயிருக்குமே!

  இப்போ நீங்க கேட்டக் கேள்விக்கு மீண்டும் வருவோம்:
  =======
  athira October 5, 2012 10:52 AM
  //எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் கோபு அண்ணன், 2011 இல போட்டிருக்கிறீங்க, ஆனா இப்பவும் பின்னூட்டங்கள் தொடருதே......//
  ========

  இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், அதிரா!

  அதாவது இவ்வளவு நேரம் உங்கள் காதைப்பிடித்து இரகசியம் சொல்லியுள்ளேனே, உங்கள் காதுல ரத்தம் வருதா இல்லையா?

  தொடரும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபு அண்ணா ...... அதிராவுக்கு [6]

   கடைசியா, எனக்கும் என் அன்புத்தங்கச்சி மஞ்சுவுக்கும் எப்படி இவ்வளவு ஸ்நேகிதம் ஆச்சுன்னு தானே நினைக்கிறீங்க?

   எனக்கும் என் அன்புத்தங்கச்சி மஞ்சுவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்குதுங்கோ. நாங்க ரெண்டு பேருமே எல்லாப் பதிவர்களின் எல்லாப்பதிவுகளையும் போய்ப் படிப்பதில்லை.

   எங்களுக்கு மனதுக்குப்பிடித்த ஒரு சிலரின் பதிவுகளுக்கு மட்டுமே செல்வோம். அங்கு போய் மேம்புல் மேய்வதில்லை. ஒரு எழுத்துவிடாம ரஸித்துப் படிப்போம். படிச்சுட்டு சும்மா அப்படியே போய் விடமாட்டோம். ஏதாவது கருத்து எழுத்ணும்னு ஆசைப்படுவோம்.

   எங்கள் இருவருக்குமே ஏதோ ஓர் இருவரிகளில் “அருமை” “வடை” “பஜ்ஜி” ”போண்டா” ”பக்கோடா” “பார்த்தேன்” ”படித்தேன்” ”ரஸித்தேன்” அப்படீனெல்லாம் எழுதத் தெரியாதுங்கோ. எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே இருப்போம்.

   இரண்டு வரிகளில் ஏதேனும் எழுதணும் தான் நினைப்பேன். அது கடைசியில் இருநூறு வரிகளில் போய் முடியும்.

   நானாவது பரவாயில்லை என் தங்கச்சி மஞ்சு இருக்காகளே .. நாலு வரி எழுத நினைத்து நாலாயிரம் வரிகள் எழுதுவா.

   ’மஞ்சு’வின் ’பிஞ்சு’க்கைகளும் விரல்களும் வலிக்கும் வரை எழுதுவாள். பின்னூட்டம் தருவதில் அண்ணனுக்குத் தங்கை சளைத்தவளே அல்ல. இந்தப் பகுதியிலேயே பாருங்களேன்.

   நான் எழுதிய இந்தக் கவிதையில் உள்ள வரிகள் மொத்தமே 18 தான்.

   ஆனால் என் மஞ்சு எனக்கு இருமுறை எழுதியுள்ள பின்னூட்ட வரிகளின் எண்ணிக்கை மொத்தம்: 61

   தாராள மனஸு என் மஞ்சுவுக்கு. சும்மா பஞ்சு மிட்டாய் போல ஏதேதோ இனிப்பாகக் கருத்துக்கூறி, PIN SELLING பண்ணிவிடுவாள்.

   அதாவது ஊக்குவித்து உற்சாகப் படுத்தி உசிப்பி விட்டு விடுவாள்.

   சரிங்க .... நானும் ஏதேதோ எழுதிக்கொண்டே வந்ததில் என் இந்த மறுமொழிகளும் மஞ்சுவோடது போலவே சற்றே நீ....ண்....டு பெருசாப்போயிடுச்சுங்க.

   அதிரா, இது விஷயங்கள் நமக்குள்ளேயே இரகசியமாக இருக்கட்டும். யாரிடமும் சொல்லிடாதீங்க ... ப்ளீஸ்.

   முக்கியமா என் தங்கை மஞ்சுவுக்குத் தெரிய வேண்டாம்.
   அப்புறம் கோபத்தில் என்னை அடிக்க வந்திடுவாள். நான் இத்துடன் எ..ஸ்..கே..ப்.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 65. அன்பின் வை.கோ

  வலைச்சரம் மூலம் வந்தேன்

  நல்லதொரு நகைச்சுவை - தொந்திக்கணபதி தொந்தியிலேயே ஏறி விளையடலாம் பக்த கோடிகள் - தவறில்லை - பேரன் கதை கேட்பதற்கு - சிம்மாசனமாகத் தொந்தியினைக் கொடுத்தமை நன்று. ஒய்யாரமாக அமர்ந்து பொறுமையாகக் கதை கேட்ட பேரனும் கதை சொன்ன தாத்தாவும் வாழ்க. மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //cheena (சீனா)December 29, 2012 10:19 PM
   அன்பின் வை.கோ

   வலைச்சரம் மூலம் வந்தேன்//

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ ! வணக்கம் ஐயா.

   //நல்லதொரு நகைச்சுவை - தொந்திக்கணபதி தொந்தியிலேயே ஏறி விளையடலாம் பக்த கோடிகள் - தவறில்லை - பேரன் கதை கேட்பதற்கு - சிம்மாசனமாகத் தொந்தியினைக் கொடுத்தமை நன்று. ஒய்யாரமாக அமர்ந்து பொறுமையாகக் கதை கேட்ட பேரனும் கதை சொன்ன தாத்தாவும் வாழ்க. மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா//

   வலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்கள் மூலம் இன்று [30.12.2012] இந்தக்கவிதை வலைச்சரத்தில் அன்புடன் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அதைப்பார்த்து வலைச்சர தலைமை ஆசிரியர் ஆன தாங்களே அன்புடன் இங்கு வருகை தந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

   தொந்தியே சிம்மாசனம் என்ற உங்கள் நகைச்சுவையும் மிகவும் ரஸிக்கத்தக்கதாக உள்ளது.

   மிக்க நன்றி, ஐயா, தங்களின் அன்பான வாழ்த்துக்கும், பாராட்டுக்களுக்கும்.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 66. பதில்கள்
  1. //cheena (சீனா)December 29, 2012 10:20 PM
   பின் தொடர்பதற்காக//

   அடடா, இந்த “பின்தொடர்பதற்காக” என்பதைத் தாங்கள் எழுதும் போதெல்லாம் எனக்கு ஒரு நினைவு வந்து சிரிப்பு வந்து மகிழ்ச்சியளிக்கிறது.

   பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு தெரிந்த பையனுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்து, நானே திருமணம் செய்து வைத்தேன்.

   புது மனைவியுடன் இல்வாழ்க்கை smoothly going ஆ, என அடிக்கடி கேட்பேன். அவனும் பலவிஷயங்களை என்னிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வான்.

   அவன் மனைவியின் சேலையை ஜாக்கெட்டுடன், பின்புறம் பின் செய்து விடுவதில் அவனுக்கு பல சந்தேகங்கள். அதை இழுத்துப் பிடித்து அழகாக பின் தெரியாதவாறு, சேலையும் நழுவாதவாறும் அவனுக்குப் பின் பண்ணத்தெரியவில்லை.

   நான் எவ்வளவு தூரம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்தும் அவன் மண்டையில் அது ஏறவில்லை. அவன் மனைவிக்கும் அவன் செய்வதில் ஒரு திருப்தி இல்லை.

   ஒவ்வொரு முறையும் என்னிடம் வந்து கேட்டுக்கொண்டே இருந்தானே தவிர, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

   ஒருமுறை அவன் மனைவி அவனைக் கடிந்து கொண்டாள், அதுவும் என் எதிரிலேயே.

   “பேசாமல் சாரை விட்டு பின் பண்ணி விடச்சொல்லட்டுமா” என்றாள்.

   அதற்கும் அவன் உடனே “சரி” என்று சொல்லுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு ஒரு நல்ல பையன் அவன்.

   நான் சொன்னேன் “தம்பி, இதை நீ நன்றாகக் கற்றுக்கொண்டு அழகாகச் செய்யலாம். சேலை தோளிலிருந்து நழுவக்கூடாது. குத்தும் போது உன் மனைவியில் தோள்பக்கம் பின் குத்தி விடக்கூடாது. பின் செய்த பின்னும் வெளியே அசிங்கமாகத் தெரியக்கூடாது. அவ்வளவு தானப்பா .. ரொம்பவும் சுலபம்” என்றேன்.

   நீங்க ரொம்ப சுலபமாச்சொல்லிட்டீங்க, சார். எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வரவில்லை” என்றான், அவன்.

   பிறகு அந்தப்பெண் என் மனைவியிடம் வந்து, பல நாட்கள் பின் குத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.

   ஒவ்வொரு முறை இவர்கள் புடவை மாற்றி, பின் குத்தும் போதெல்லாம், நானும் என் மனைவியும், இவர்களைப் பின் தொடர்ந்து போக முடியுமா என்ன?

   ஏனோ உங்களின் இந்தப்பின்னூட்டத்தை படித்ததும் எனக்கு அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.

   பின் பேசுவோம் ஐயா. இப்போ நான் எஸ்கேப் ......

   அன்புடன்
   VGK

   நீக்கு
 67. தொந்திக் கவிதை அற்புதம்.
  நானும் ஒரு ‘தொந்தித் தாத்தா’ என்று ஒரு தொந்திக்கதை PLOT வைத்திருக்கிறேன்.
  ஆஹா என்ன ஒரு ஒற்றுமை.

  பதிலளிநீக்கு
 68. தொந்திக் கவிதை அற்புதம்

  நானும் ஒரு ‘தொந்தித் தாத்தா’ என்ற தலைப்பில் ஒரு தொந்திக் கதை PLOT வைத்திருக்கிறேன்.

  என்ன ஒரு ஒற்றுமை

  பதிலளிநீக்கு
 69. JAYANTHI RAMANI January 4, 2013 1:35 AM

  //தொந்திக் கவிதை அற்புதம்//

  வாங்கோ, என் பேரன்புக்குரிய திருமதி ஜயந்தி ரமணி மேடம், வணக்கம்.

  செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

  உங்களுக்கென்ன தொந்தியா தொப்பையா; காற்றடித்தால் மிதந்து பறப்பது போல ஓர் உடல்வாகு. பிறகு செள்க்யத்திற்கும் சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்! ;)))))

  உங்களைப்போய் ”செளக்யமா, சந்தோஷமா இருக்கீங்களா”ன்னு கேட்டு விட்டேன். நான் ஒரு மக்கு.

  //நானும் ஒரு ‘தொந்தித் தாத்தா’ என்று ஒரு தொந்திக்கதை PLOT வைத்திருக்கிறேன்//

  சபாஷ். வெளியிடுங்கோ. படிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்,. மறக்காமல் எனக்கு மெயில் மூலம் இணைப்பு அனுப்பணும்; இப்பவே சொல்லிப்புட்டேன். .

  //ஆஹா என்ன ஒரு ஒற்றுமை.//

  ஒற்றுமை என்றும் பலமாம். நம் ஒற்றுமை ஓங்கட்டும். சந்தோஷமாக உள்ளது. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  அன்புடன்
  கோபு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கென்ன தொந்தியா தொப்பையா; காற்றடித்தால் மிதந்து பறப்பது போல ஓர் உடல்வாகு. பிறகு செள்க்யத்திற்கும் சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்! ;))))) //

   உங்கள் ஆசியில் கண்டிப்பாக சந்தோஷத்திற்கும் சௌக்கியத்திற்கும் குறைச்சலே இல்லை.

   ஆனால் என் பெண் இதைக் கேட்டால் சிரிப்பாள். ஏன்னா அவ என்னை கூப்பிடறதே, ‘குண்டு மாமி’ன்னுதான்.

   நீக்கு
  2. JAYANTHI RAMANI January 7, 2013 12:43 AM
   *****உங்களுக்கென்ன தொந்தியா தொப்பையா; காற்றடித்தால் மிதந்து பறப்பது போல ஓர் உடல்வாகு. பிறகு செள்க்யத்திற்கும் சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்! ;)))))*****

   //உங்கள் ஆசியில் கண்டிப்பாக சந்தோஷத்திற்கும் சௌக்கியத்திற்கும் குறைச்சலே இல்லை.//

   கேட்கவே எனக்கு சந்தோஷமாக உள்ளது.

   தீர்க்க சுமங்கலி பவ: [ததாஸ்தூஊஊஊஊ.]

   //ஆனால் என் பெண் இதைக் கேட்டால் சிரிப்பாள். ஏன்னா அவ என்னை கூப்பிடறதே, ‘குண்டு மாமி’ன்னுதான்.//

   அப்போ அவள் இப்போ [எங்கள் ஊர் திருச்சி மலைவாசல் அருகே உள்ள “சூர்யா” ரெஸ்டாரண்டில் விற்கும் ஓமப்பொடி போல] ஸ்லிம்மாக இருப்பாள் என்று நினைக்கிறேன்.

   அவளுக்கு விவாஹம் ஆகி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் ஆகி, உங்கள் வயதில் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்போம், எனச்சொல்லுங்கோ.

   பிரியமுள்ள
   கோபு

   நீக்கு
 70. தொந்தியுடையார்
  வாழ்வில் தொய்வு அடையார்

  ருசியாய் கிடைக்கும்
  தின்பண்டம் கிடைக்கும் இடம்
  தேடி சென்றும் ருசித்து
  தின்று மகிழ்ந்திடுவார்

  ஜீரணிக்க சில பேர்
  சீரகத் தண்ணீரை குடிப்பார்

  சிலர் உண்ட உணவுக்கேற்றவாறு
  பாட்டில் பாட்டிலாக செலுசில் குடிப்பார்.

  சிலர் ஹாஜ்முல்லா
  மாத்திரைகளை முழுங்குவார்

  நன்றாக உறங்குவார்.
  நெடுநேரம் கதை பேசுவார்

  அளவின்றி உண்பார்
  நாவின் ருசிக்கு ஆசைப்பட்டு

  அதேபோல் அளவின்றி துன்பப்படுவார்
  அணைத்து நோய்களுக்கும்
  தன்னை ஆட்படுத்திக்கொண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //Pattabi Raman October 14, 2013 at 3:17 AM

   வாங்கோ அண்ணா, நமஸ்காரம். [சாஷ்டாங்கமாக அல்ல. -பாவனையாக மட்டுமே - ஏனெனில் தொந்திப்பிரச்சனை மட்டுமே ;)))))) ]

   //தொந்தியுடையார் வாழ்வில் தொய்வு அடையார் ..............................................................................................//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான 89வது பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   - கோபு

   நீக்கு
 71. உங்களுக்கு கவிதை எழுதவும் தெரியும் என்று நிரூபித்து விட்டீர்கள். கவிதை நன்றாகவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

   அன்புடையீர்,

   வணக்கம்.

   31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு, ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி + மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 72. சூபுபர் தொந்திதான் அது குறைய பிள்ளையாரிடமா போவீங்க.
  " தொந்தி கணபதி திபணக திநதொ. " இதை திரப்பி படித்தாலும் அதுவே வருமு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள பூந்தளிர் அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   நட்புடன் கோபு

   நீக்கு
 73. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

  அன்புள்ள ஜெயா,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி + மார்ச் ஆகிய மூன்று மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 74. பக்கத்து தலையணியில்
  படுத்துக்கோ சொல்வேன்” என்றேன்

  ”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி
  என் தொந்தி மேல் தலையை வைத்தான்

  தொந்திக்கு சரியான வேல கொடுத்த பேரப்பிள்ளைக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

   அன்புள்ள (mru) முருகு,

   வணக்கம்மா !

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 மார்ச் வரை, முதல் மூன்று மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

   நீக்கு
 75. எந்தக்காலத்திலும் தொந்தி என்றால் போலீஸ்காரங்கதான் நினைவில் வருவாங்களா? தொந்தி குறைய தொந்தி கணபதியிடமே வேண்டுதலா. உங்க தொந்தி கரைந்து விட்டால் பேரக் குழந்தைகள் எப்படி விளையாடுவார்கள். குழந்தைகள் சந்தோஷத்திற்காகவாவது தொந்தி குறையாம கவனமா இருங்க.

  பதிலளிநீக்கு
 76. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மார்ச் மாதம் முடிய, என்னால் முதல் 3 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 77. //மஃப்டியில் போலீஸோ
  என்று என்னை எண்ணி

  எனக்கு முன்னே ஓடி
  ஒளிந்தனர் ஒருசிலர் ஒருநாள்.// மிகவும்
  ரசித்தேன். தொந்தி என்றால், வினாயகர், போலீஸ்...எத்தனை விஷயங்களை ஞாபகப்படுத்துகிறது. ரன் ஆனாலும் கடைசியில பே-ரன் விரும்புறதுதானே 'நின்னு' பேசுது...!!! நன்றி வாத்யாரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI November 25, 2015 at 11:57 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மஃப்டியில் போலீஸோ
   என்று என்னை எண்ணி

   எனக்கு முன்னே ஓடி
   ஒளிந்தனர் ஒருசிலர் ஒருநாள்.// மிகவும்
   ரசித்தேன். தொந்தி என்றால், வினாயகர், போலீஸ்...எத்தனை விஷயங்களை ஞாபகப்படுத்துகிறது. ரன் ஆனாலும் கடைசியில பே-ரன் விரும்புறதுதானே 'நின்னு' பேசுது...!!! நன்றி வாத்யாரே!//

   இந்தப்பதிவுக்குத் தங்களின் பின்னூட்ட எண்ணிக்கை: 100

   எப்போதுமே தாங்கள் 100க்கு 100 தான். :)

   பொதுவாக உங்க மனசுத் த ங் க ம் .....
   ஒரு போட்டியினு வந்து விட்டால் சி ங் க ம். :)

   வாழ்த்துகள். நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 78. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மார்ச் மாதம் வரை, என்னால் முதல் 3 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 79. //
  ”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி
  என் தொந்தி மேல் தலையை வைத்தான்
  ஒய்யாரமாகச் சாய்ந்தவாறே
  உன்னிப்பாகக் கதையைக் கேட்டான்
  உவகையுடன் நானும் சொன்னேன்
  "என் தொந்தி என்றும் உனக்கே" என்று.// அருமை! இரசித்தேன்! பெருமைதானே!

  பதிலளிநீக்கு
 80. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மார்ச் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, 3 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 81. //இஷ்ட தெய்வம் விநாயகரிடம்
  இது பற்றி விண்ணப்பிக்க நான்

  அவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார், நொந்து போனேன்.//

  அடடா பிள்ளையாருக்கும் அதே ப்ராப்ளமா... ஆனா ஒன்னு அவர் கட்டை பிரம்மச்சாரி ஆயிற்றே.. அவர் தொந்தியில் விளையாடி மகிழ பேரக்குழந்தைகள் இல்லையே இதுபோல தொந்தில ஏறி விளையாடுற சந்தோஷம் கிடைக்குதுன்னா நான் கூட குட்டி குழந்தையாக ஆகி விட ஆசைதான்..... அப்புறம் பின்னூட்டங்கள் எல்லாமே ஜாலி ஜாலி.. அதுவும் அதிரடியா பல பின்னூட்டங்கள் போட்டிருக்கும் அதிரா அவங்க பின்னூட்டமும் தங்களின் ரிப்ளை பின்னூட்டங்களும் செம செம......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... June 15, 2016 at 9:13 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அப்புறம் பின்னூட்டங்கள் எல்லாமே ஜாலி ஜாலி.. அதுவும் அதிரடியா பல பின்னூட்டங்கள் போட்டிருக்கும் அதிரா அவங்க பின்னூட்டமும் தங்களின் ரிப்ளை பின்னூட்டங்களும் செம செம......//

   :))))) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)))))

   நீக்கு