மறுநாள் காலை நான் என் சீட்டுக்கு வந்து அமரும் போதே, வ.வ.ஸ்ரீ. அவர்கள், மேனேஜர் ரூமுக்குள் அவசரமாக நுழைந்து கொண்டிருந்தார். அவர் இவரிடம் மாட்டினாரோ அல்லது இவர் அவரிடம் மாட்டினாரோ தெரியவில்லை, சுமார் ஒரு மணி நேரம் ஏதோ காரசார விவாதம் நடைபெற்று வருவதாகவும் என் பெயரும் அதில் அடிபடுவதாகவும், மேனேஜருக்குத் தண்ணி காட்டிவிட்டு# [#குடிக்க குளிர்ந்த ஜில் வாட்டர் கொடுத்துவிட்டு] வெளியே வந்த அட்டெண்டர் ஆறுமுகம், தன் வெற்றிலைபாக்குப் பன்னீர்ப்புகையிலை போட்ட வாயைக் குதப்பிக்கொண்டே, ஏதேதோ சொல்லிப்போனதில், என் விசாரம் அதிகமாகி விட்டது.
இனி இந்த வ.வ.ஸ்ரீ. அவர்களுடன் அனாவஸ்யமாக ஆபீஸ் நேரத்தில் அரட்டைப்பேச்சுகள் எதுவும் பேசக்கூடாது என்று மனதில் நினைக்கும் போதே, வ.வ.ஸ்ரீ. பேரெழுச்சியுடன் மேனேஜர் ரூமை விட்டு வெளியே, பிரஸ்ஸன்னமானதுடன், என்னைப்பார்த்து அவர் சீட்டுக்கு உடனே வருமாறு கைஜாடை காட்டினார்.
என்னை அவர் சீட் அருகே அமரச்செய்து விட்டு, ஒரு சிட்டிகைப்பொடியுடன் பாத் ரூம் சென்று விட்டு உடனடியாக வருவதாகச் சொல்லிப்போனார். என்னவோ ஏதோ என்ற சஸ்பென்ஸில் என் தலையே வெடித்து விடும் போல இருந்தது.
சொன்னபடியே 2 நிமிடத்தில் தன் இருக்கையில் அமர்ந்த அவர் என் கையைப்பிடித்து குலுக்கினார். ”CONGRATULATIONS” என்றார்.
”என்னாச்சு, எதற்கு சார்?” என்றேன் நான் மிகவும் பதட்டத்தில்.
”நான் ரிடயர்ட் ஆன பிறகு நீ தான் என் சீட் வேலைகளையும் சேர்த்து செய்யணும், இன்னிக்கு மத்யானமே ஆர்டர் வந்துடும். நான் தான் உன் பெயரை ரெகமெண்ட் செய்தேன், இதனால் உனக்கு சீக்கரமே அடுத்த பிரமோஷன் வர மிகவும் ப்ளஸ் பாயிண்ட் ஆக, அது அமையும்” என்றார்.
“சார், இது குருவி தலையிலே பனங்காயை வைத்தாற்போல எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்குமே, சார்,” என்றேன்.
“அதெல்லாம் ஒன்னும் கஷ்டமில்லேப்பா, நான் அந்தக்காலத்தில் பார்க்காத வேலையா? In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய். சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன். இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள்! நான் தான் இந்தக் கம்ப்யூட்டர் கன்றாவியெல்லாம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதிங்கி ஒரு எட்டு வருஷத்துக்கு மேல் இருக்குமே” என்றார்.
சார், உங்கள் டேபிள், சைடு ராக், ஃபைலிங் கேபினெட், கப்போர்டு எல்லாம் ஏகப்பட்ட ஃபைல்ஸ், பேப்பர்ஸ், ரிஜிஸ்டர்ஸ் என்று ஏராளமாக பழைய பஞ்சாங்கங்களாக வைச்சுருக்கீங்களே சார், அது தான் எனக்கு ஒரே பயமா இருக்கு சார்” என்றேன்.
அதெல்லாம் ஒரு மாமாங்கமா என்னிடம் தான் இருக்குதப்பா; அதெல்லாம் இந்தக் கம்ப்யூட்டரைஸ் பண்ணுவதற்கு முன்பு நான் கையால் எழுதிவைத்த ஓல்ட் எஸ்டாபிளிஷ்மெண்ட் ரிகார்ட்ஸ். எவனாவது ஏதாவது கேட்டுக்கிட்டு எப்போதாவது சிலசமயம் வருவான். பார்த்துத் தேடித்தருவதாகவோ அல்லது நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும், அதில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் என் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான். இதெல்லாம் நானும் இந்த ஆபீஸில் ஏதோ வேலை செய்கிறேன் என்று ஒரு பாவ்லா காட்ட மட்டும் தான் வைத்திருக்கிறேன்” என்று உள்ளதை உள்ளபடிச் சொல்லி, எனக்கு ஒரு உற்சாகம் அளித்தார்.
”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.
”ரிஷி மூலம், நதி மூலம் கேட்கக்கூடாதப்பா, இருந்தாலும் உனக்குச் சொல்கிறேன். நல்ல ஒஸ்தியான புகையிலையைப் பதமாக வறுத்து, பக்குவமாக அரைத்து, சுண்ணாம்பு (கால்ஷியம் சத்து), மற்றும் ஒருசில கெமிக்கல்ஸ் சேர்த்து, காரம், மணம், குணம் நிறைந்ததாக அவ்வப்போது உள்நாட்டு, வெளிநாட்டுத் தேவைகளுக்குத் தகுந்தாற்போல, உற்பத்தி செய்து, உடனுக்குடன் வினியோகிக்கிறார்கள்.
இதில் வாசனைப்பொடி என்று ஒரு வகையறா உண்டு. காரசாரமே இல்லாமல் சுத்த வழுவட்டையாக இருக்கும். மூக்கினுள் செண்ட் அடித்தால் போல கமகமன்னு ஒரு வாசனை இருக்கும். போடுபவர்களுக்கு ஒருவித எழுச்சியை ஏற்படுத்தாது. முத்தம் கொடுக்கும்போது ஒருவேளைப் பயன்படுமோ என்று நினைத்து, நான் அந்தநாளில், ஒரு நாள் அதைப் பயன்படுத்தப்போக என் மூக்கையே கெடுத்து விட்டது அது. என் மனைவி வேறு “இதென்ன கண்ட்றாவியா ஒரு பொண நாத்தம் அடிக்குது உங்கள் மூக்குப்பக்கம், ஏதாவது குடிச்சுட்டு வந்தீங்களா” என்று சண்டைக்கே வந்து விட்டாள். பழையபடி மூக்கை எழுச்சியாக்கிக் கொண்டுவர மூன்று நாட்கள் ஆனது, எனக்கு.
நாசிகாச்சூர்ணம் என்று ஒரு ஆயுர்வேதிக் மூலிகைப்பொடி உள்ளது. வெந்தயத்தை லேசாக வறுத்து அரைத்தாற்போல ஒரு வித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அது எல்லாவற்றையும் விட பேரெழுச்சி கொடுக்கக்கூடியது. லேசா ஒரு சிட்டிகை எடுத்து இழுத்தால் போதும். மண்டையில் உள்ள எல்லா நரம்புகளும் கட் ஆகிப் போவது போல, ஒரு அரைமணி நேரத்திற்குக் குறையாமல் தொடர்ச்சியான தும்மலையும், நம்மைச்சுற்றியுள்ள பகுதிகளில் தூரலையும் வரவழைத்து விடும். மண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.
ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.
முன்பெல்லாம் காய்ந்த வாழைப்பட்டையில் மடித்து பொடி வியாபாரம் செய்தனர். அதில் கொஞ்சம் சுகாதாரக்குறைவு உண்டு. பொடியுடன் கூடவே, அந்த வாழைப்பட்டையின் தூள்களும், நார்களும் மூக்கினுள் போய்விடக்கூடிய பேராபத்து இருந்து வந்தது. இப்போது அழகிய வழவழப்பான ஒட்டவே ஒட்டாத ப்ளாஸ்டிக் பெளச்சுகள் வந்து விட்டன. பேக்கிங் ஹைஜீனிக்காக இருப்பதால், நீ கூட தைர்யமாக பொடி போடலாம்” என்றார்.
“அதெல்லாம் இப்போது வேண்டாம், சார். என் இல்வாழ்க்கை முதலில் நல் வாழ்க்கையாய் ஆரம்பிக்கட்டும். ஏதும் பிரச்சனைகள் ஏற்படும்போது கட்டாயம் உங்களிடம் வந்து, ’பொண்டாட்டி’யின் சுருக்கமான ’பொ.........டி’யை, தீட்க்ஷையாகப்பெற்றுக்கொள்கிறேன். ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும் நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே” என்றேன்.
தொடரும்
அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வழுவட்டை போல பணியைக் கவனிக்கப்போகாமல், முதல் வேலையாக கணினியை முடுக்கி உங்களது இடுகைக்கு வந்து விட்டேனே! :-)
பதிலளிநீக்கு//எவனாவது ஏதாவது கேட்டுக்கிட்டு எப்போதாவது சிலசமயம் வருவான். பார்த்துத் தேடித்தருவதாகவோ அல்லது நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும்//
பதிலளிநீக்குநல்ல டெக்னிக்! குறித்து வைத்துக் கொள்கிறேன்!
//பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//
பதிலளிநீக்குவ.வ.ஸ்ரீயின் கற்பனையே அலாதிதான் போலிருக்குது!
தொடருங்கள், காத்திருக்கிறேன்!
பதிலளிநீக்குவ.வ.ஸ்ரீ புகழ் ஓங்குக!!
என் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான். //
பதிலளிநீக்குமண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.//
”CONGRATULATIONS” Extremely enjoyment???/
'பொடி' ஆராய்ச்சி பொடியாக இல்லாமல் பெரிசாக உள்ளதே! அடுத்த பகுதிகளைத் தவறாமல் காண ரெடி!
பதிலளிநீக்கு//ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//
பதிலளிநீக்குநல்ல காமெடிதான்.நல்லா சிரிச்சேன்
இதற்கு காப்பிரைட் போட்டு விடுங்கள்.இல்லேன்னா இந்த சீனை சினிமாக்கு
யாராச்சும் சுட்டாலும் சுட்டுருவாங்க.
அதே மாதிரி விளம்பர பாணில(புகை உடலுக்கு கெடுதல்னு வருமே அப்படி)
பொடி உடலுக்கு கெடுதல்னு கீழே குட்டியா போட்டுடுங்க.நாளைக்கு இதைப்
படிச்சப்பறம்தான் நான் பழகினேன்னு யாரும் கை காமிக்க முடியாது இல்லையா!! :-)
//தீட்க்ஷையாகப்பெற்றுக்கொள்கிறேன்.//
பதிலளிநீக்குபொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தை.
//ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும்
பதிலளிநீக்குநேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே”//
காலை முதல் மாலை வரை வெட்டி பேச்சு பேசுவதை அழகாக சொல்லியுள்ளீர்கள் .
நல்ல ஓபி ..
இந்த புது ஆள் வ .வ .ஸ்ரீ யின் பதவிக்கு பொருத்தமானவரே.
பொடி தயாரிப்பதை புகையிலையை வறுத்து அரைத்து என்று சமையல் குறிப்பு போல வ.வ.ஸ்ரீ சொல்கிறாரே !
பதிலளிநீக்குஅடுத்த பகுதிக்காக வெயிட்டிங்………
சகோ ராஜி சொல்வது போல பொடி உடல்நலத்துக்குக் கெடுதல் ஒரு வரி கடைசியில சேர்த்துடுங்க! மக்கள் டீவியில இருந்து யாரோ ஆள் அனுப்பறதா நம்பத்தக்க இடத்திலிருந்து செய்தி வந்தது :) எழுச்சியாக போய்க்கொண்டு இருக்கிறது வ.வ.ஸ்ரீ தொடர்.
பதிலளிநீக்குஒருத்தர் பொடி போட்டா பத்து பேர் தும்முவதுபோல நீங்க ஒருத்தர் பதிவு போடறீங்க. நாங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்:-)
பதிலளிநீக்குநல்லாவே பொடி வைச்சு எளுதறீங்க, சார்!
பதிலளிநீக்கு"பொடி " விஷயம் என நினைத்தது
பதிலளிநீக்குஎவ்வளவு தவறு என உங்கள்
பொடித்தயாரிப்பு விளக்கங்களைப்
படித்த பின்புதான் தெரிந்தது
பொடித் தயாரிப்பு மட்டும் இல்லை
பதிவுக்காகவும் எவ்வளவு தெரிந்து கொண்டு
எழுதவேண்டியுள்ளது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..
பதிலளிநீக்குhttp://amaithicchaaral.blogspot.com/2011/03/blog-post_22.html
பொடிக் கதை கேட்டே ப்ர்மோசனுக்கு ரெக்கமெண்டேசனும் கிடைச்சுட்டு.
பதிலளிநீக்கு//ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும் நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே” என்றேன்//.
பொடிக் கதை கேட்டாலும் காரியத்தில் கண்ணாக இருந்துள்ளீர்க்ள்.
அடுத்த பதிவிற்கு எதிர்பார்ப்புடன்....
சேட்டைக்காரன் said...
பதிலளிநீக்கு//அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வழுவட்டை போல பணியைக் கவனிக்கப்போகாமல், முதல் வேலையாக கணினியை முடுக்கி உங்களது இடுகைக்கு வந்து விட்டேனே! :-)//
ஆஹா, என் மீது நீங்கள் காட்டிடும் எழுச்சியுடன் கூடிய பாசம் என்னைப் புல்லரிக்கச்செய்து விட்டது.
என்னால் தங்கள், பணிகள் பாதித்து, உற்பத்தி ஏதும் பாதிக்காமல் இருந்தால் சரி. OVERTIME பார்த்தாவது இழப்பை ஈடு கட்டிவிடுங்கள்.
சேட்டைக்காரன் said...
பதிலளிநீக்கு//எவனாவது ஏதாவது கேட்டுக்கிட்டு எப்போதாவது சிலசமயம் வருவான். பார்த்துத் தேடித்தருவதாகவோ அல்லது நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும்//
/நல்ல டெக்னிக்! குறித்து வைத்துக் கொள்கிறேன்!/
மறக்காமல் அனைத்து தஸ்தாவேஜ்களிலும், பொடியைத்தூவி வைத்து விடுங்கள். அது தான் ரொம்ப முக்கியம், என்கிறார் அந்த வ.வ.ஸ்ரீ.
சேட்டைக்காரன் said...
பதிலளிநீக்கு//பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//
/வ.வ.ஸ்ரீயின் கற்பனையே அலாதிதான் போலிருக்குது!/
நான் வேலை பார்த்த அலுவலகத்தின் வாசலில், எங்கள் கஜானா பாதுகாப்புக்காக, துப்பாக்கி ஏந்திய காவலர்கள், நிறைய பேர்கள், மதியம் சாப்பாட்டுக்குப்பிறகு, சற்று தூக்கக்கலக்கமாக அமர்ந்து இருப்பார்கள்.
அது சமயம் ராகவன் என்ற ஒருவர் (இந்த ஆயிர்வேதிக் நாஸிகாசூர்னம் உபயோகிப்பவர்) அடிக்கடி வருவார்.
அவர் இந்த காவலர்கள் அனைவரிடமும், ”பாதுகாவலுக்காக வந்துள்ள நீங்கள் இப்படி கோஜா வாங்கலாமா, எழுச்சியுடன் இதை ஒரு சிட்டிகை இழுங்கள்” என்று கொடுப்பார்.
அவர்களும் ஒரு ஜாலிக்காக, ஒரு நாள், மொத்தம் ஒரு பத்து பேர்கள் ஒரே நேரத்தில் இழுக்கப்போய், அடுத்த அரை மணி நேரத்திற்கு மேல் ஒரே அச், அச், அச், அச் மிருதங்கக்கச்சேரி தான்.
நான் நேரில் பார்த்து ரசித்த காட்சி இது.
முற்றிலும் ஓய ஒரு மணிநேரம் ஆனது.
அந்த அனுபவத்தைத்தான் எழுதினேன்.
அவர்கள் எப்போதும் கையில் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய அந்த பெரிய துப்பாக்கிகள் கூட ஓரமாக தரையில் வீசப்பட்டன.
இவர்களின் தொடர் தும்மலில் அந்தத்துப்பாக்கிகளே நடுநடுங்கிப் போய்விட்டன.
சேட்டைக்காரன் said...
பதிலளிநீக்கு//தொடருங்கள், காத்திருக்கிறேன்!
வ.வ.ஸ்ரீ புகழ் ஓங்குக!!//
தங்களின் இன்றைய நான்கு முறை வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள். கருத்துக்களை அள்ளித்தாருங்கள். நானும் உங்கள் வருகைக்காகவே எப்போதும் ஆவலுடன் காத்திருப்பவன். அன்புடன் vgk
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குஎன் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான். //
மண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.//
///”CONGRATULATIONS” Extremely enjoyment???///
I too extremely enjoyed your enjoyment on these few lines of my story. Thank you very much, Madam.
middleclassmadhavi said...
பதிலளிநீக்கு//'பொடி' ஆராய்ச்சி பொடியாக இல்லாமல் பெரிசாக உள்ளதே!
’பொடி’ என்றால் என்ன உங்களுக்கு மிகச்சாதாரண விஷயமாகத் தோன்றுகிறதா? கீழ்க்கண்ட ஏதாவது ஒருபொடி கூட இல்லாமல் உங்களால் ஒரு நாளாவது ஓட்டமுடியுமா? நீங்களே நினைத்துப்பாருங்கள்:
கோலப்பொடி, பல்பொடி, காப்பிப்பொடி, டீப்பொடி, ஹார்லிக்ஸ்பொடி, பூஸ்டுபொடி, மஞ்சள்பொடி,
மூக்குப்பொடி, சாம்பார்பொடி, ரஸப்பொடி, மசாலாப்பொடி, மிளகுபொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, சுக்குபொடி, வெந்தயப்பொடி, அரப்புப்பொடி, சீயக்காய்ப்பொடி, சாம்பிராணிப்பொடி, கேசரிப்பொடி, வரட்டு மிளகாய்ப்பொடி, உப்புப்பொடி, பெருங்காயப்பொடி, பருப்புப்பொடி, பயத்தம்பொடி, பச்சமாவுப்பொடி, சபீனாப்பொடி, சோப்புப்பொடி இன்னும் என்னென்ன பொடிகள் விட்டுப்போச்சோ!
//அடுத்த பகுதிகளைத் தவறாமல் காண ரெடி!//
அப்படியா, OK. நானும் ஏதாவது யோசனை செய்து, எப்படியாவது வெளியிட ரெடியாகி விடுகிறேன்.
raji said...
பதிலளிநீக்கு//ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//
///நல்ல காமெடிதான்.நல்லா சிரிச்சேன்///
நன்றி. உங்கள் சிரிப்பொலியை கற்பனை செய்து பார்த்து நானும் மகிழ்ந்தேன்.
//இதற்கு காப்பிரைட் போட்டு விடுங்கள்.இல்லேன்னா இந்த சீனை சினிமாக்கு யாராச்சும் சுட்டாலும் சுட்டுருவாங்க.//
அதனால் பரவாயில்லை. யாராச்சும் சுட்டாலாவது நமது படைப்பான சீன் ஒன்று வெள்ளித்திரைக்குச் சென்றால், அதிலும் நமக்கு ஓர் சந்தோஷமே. நேரிடையாக அங்கெல்லாம் என்னால் நெருங்கவா முடியப்போகிறது? எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.
raji said...
பதிலளிநீக்கு//அதே மாதிரி விளம்பர பாணில(புகை உடலுக்கு கெடுதல்னு வருமே அப்படி) பொடி உடலுக்கு கெடுதல்னு கீழே குட்டியா போட்டுடுங்க.நாளைக்கு இதைப்படிச்சப்பறம்தான் நான் பழகினேன்னு யாரும் கை காமிக்க முடியாது இல்லையா!! :-)//
ஓஹோ, இப்படியெல்லாம் கூட ஏதாவது பிரச்சனைகள் வருமோ? ஒவ்வொன்னாச் சொல்லி பயமுறுத்தினீங்கன்னா, வலைப்பூவிலிருந்தே ஓடிப் போய் விடுவேனாக்கும்.
{அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயமுங்க...
எனக்குக் குட்டியாப்போட்டுப்பழக்கமில்லீங்க! மூணுமே பிள்ளைங்கதானுங்க, என்னைப்போய் குட்டியாப் போடச்சொல்றீங்களே, நான் என்னங்க பண்ணுவேன்?}
கணேஷ் said...
பதிலளிநீக்கு//தீட்க்ஷையாகப்பெற்றுக்கொள்கிறேன்.//
/பொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தை./
இதுவும் திடீரென்று கடைசியாக உதித்ததொரு வார்த்தை தான், கணேஷ்.
குரு-சிஷ்யன்-தீட்க்ஷை என்று இருக்கட்டுமே என்று பிரயோகித்தேன். அது உன்னைக்கவர்ந்தது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.
கணேஷ் said...
பதிலளிநீக்கு//ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும்
நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே”//
/காலை முதல் மாலை வரை வெட்டி பேச்சு பேசுவதை அழகாக சொல்லியுள்ளீர்கள்./
ஆமாம், கணேஷ். என் நீண்டகால சர்வீஸ் இல் இதுபோல பலபேர்கள் வெட்டிப்பேச்சு பேசியே பொழுதைக்கழித்து வந்ததைக்கண்டு பலமுறை நொந்து போய் இருக்கிறேன்.
நமக்கு வேலையில் புகுந்து விட்டால் உள்ள நேரமே பத்தாமல் படுபிஸியாக இருக்கும்போது, நம்மைச்சுற்றி இது போல சிலர்.
நல்ல ஓபி ..
இந்த புது ஆள் வ .வ .ஸ்ரீ யின் பதவிக்கு பொருத்தமானவரே./
The Right Man for the Right Job - Concept தான் என்று சொல்லுகிறாய். உன் கூற்று மிகச்சரியே.
Perfect Substitute என்று நீ புரிந்துகொண்டு அழகாகச் சொன்னதற்கு என் பாராட்டுக்கள்.
கோவை2தில்லி said...
பதிலளிநீக்கு//பொடி தயாரிப்பதை புகையிலையை வறுத்து அரைத்து என்று சமையல் குறிப்பு போல வ.வ.ஸ்ரீ சொல்கிறாரே !//
ஆமாம், மேடம். இந்த மல்லிகா பத்ரிநாத் நிகழ்ச்சிகளை டி.வி.யில் வ.வ.ஸ்ரீ. அடிக்கடி கேட்டிருப்பாரோ என்னவோ!
/அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்………/
மிக்க நன்றிகள். அடுத்த பகுதி நாளைக்கு புதன்கிழமை 23.03.2011 வெளியிட முயற்சிக்கிறேன்.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குசகோ ராஜி சொல்வது போல பொடி உடல்நலத்துக்குக் கெடுதல் ஒரு வரி கடைசியில சேர்த்துடுங்க! மக்கள் டீவியில இருந்து யாரோ ஆள் அனுப்பறதா நம்பத்தக்க இடத்திலிருந்து செய்தி வந்தது :)
ஆஹா, அப்படியா செய்தி. வரட்டும், வரட்டும், வ.வ.ஸ்ரீ. அவர்கள் தொடங்கவிருக்கும் மூ.பொ.போ.மு.க. பற்றியும் செய்தி தர வேண்டியுள்ளது.
//எழுச்சியாக போய்க்கொண்டு இருக்கிறது வ.வ.ஸ்ரீ தொடர்.//
மிகவும் சந்தோஷம், வெங்கட். நன்றிகள்.
Gopi Ramamoorthy said...
பதிலளிநீக்கு//ஒருத்தர் பொடி போட்டா பத்து பேர் தும்முவதுபோல நீங்க ஒருத்தர் பதிவு போடறீங்க. நாங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்:-)//
அப்படியா கோபி சார். நீங்கள் சொல்லுவது உண்மையானால், அது தான் என் எழுத்துக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக நான் நினைக்கிறேன்.
தங்களின் அபூர்வ வருகைக்கு என் நன்றிகள்.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
பதிலளிநீக்கு//நல்லாவே பொடி வைச்சு எளுதறீங்க, சார்!//
எல்லாம் உங்களோட கொஞ்சநாள் ஆபீஸ் முடிஞ்சு வரும்போது பஸ்ஸில் பக்கத்தில் அமர்ந்து வந்ததால் ஏற்பட்ட கோளாறு சார்.
ஆமாம் நாம, அந்தக்கொழக்கட்டைப் பூர்ணத்தை எப்போது கிளறலாம்? அதைப்பற்றி ஏதோ தாங்கள் சொல்லப்போய் 4 நாளா எனக்கு சுத்தமா தூக்கம் போச்சு, சார். போங்க .. நீங்க ரொம்ப மோசம், சார்.
Ramani said...
பதிலளிநீக்கு//"பொடி " விஷயம் என நினைத்தது எவ்வளவு தவறு என உங்கள் பொடித்தயாரிப்பு விளக்கங்களைப்படித்த பின்புதான் தெரிந்தது.பொடித் தயாரிப்பு மட்டும் இல்லை
பதிவுக்காகவும் எவ்வளவு தெரிந்து கொண்டு எழுத வேண்டியுள்ளது? அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...//
ரமணி சார். உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.
முதல் பகுதியிலிருந்து தொடர்ந்து பின்னூட்டம் தந்து வந்த நீங்கள், மிகவும் பிரச்சனைகளைக்கிளப்பி விட்ட பகுதி-5 க்கு மட்டும், பின்னூட்டம் (இந்த பின்னூட்டம் என்பதை ’இனிமா’ என்றும் சொல்லலாமோ? என்று எனக்கொரு சந்தேகம் உள்ளது) தராதது எனக்கு வருத்தமாக உள்ளது.
தாங்கள் வேறு ஏதாவது தவிர்க்க முடியாத வேலைகளில் சென்றிருக்கலாம். அதனால் பரவாயில்லை. இப்போதாவது தயவுசெய்து பகுதி-5 க்கு மட்டும் ஒரு பின்னூட்டம் கொடுத்து விடவும்.
ஆவலுடன் தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..//
http://amaithicchaaral.blogspot.com/2011/03/blog-post_22.html
பெயர்க்காரணம் பற்றி என்னையும் எழுதச்சொல்லி தாங்கள் அழைப்புக் கொடுத்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
ஆனால் ஏற்கனவே திருமதி ராஜி அவர்கள் என்னை இதுபோல அழைத்ததால் நான் சமீபத்தில் தான் என் பெயர்க்காரணம் பற்றி எழுதி வெளியிட்டுள்ளேன்.
அதற்கான இணைப்பு இவ்விடம் கொடுத்துள்ளேன். தாங்களும் படித்துவிட்டு கருத்துக்கள் கூறவும்.
http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_09.html
அன்புடன்
வை கோபாலகிருஷ்ணன்
thirumathi bs sridhar said...
பதிலளிநீக்கு//பொடிக் கதை கேட்டே ப்ரமோஷனுக்கு ரெக்கமெண்டேஷனும் கிடைச்சுடுத்து.//
ஆமாம், மேடம். ரொம்ப அநியாயமா இருக்குது பாருங்க. மாங்குமாங்குன்னு வேலை பார்ப்பவனுக்கு எந்த ஆபீஸிலும் ப்ரமோஷனே தரமாட்டாங்க போலிருக்கு. இப்படிக் கதை பண்றவங்க காட்டுல தான் மழையே பெய்யுது, பாருங்க.
//ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும் நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே” என்றேன்//.
/பொடிக் கதை கேட்டாலும் காரியத்தில் கண்ணாக இருந்துள்ளீர்கள்./
அய்யய்யோ அது நான் இல்லை, மேடம். அந்த வ.வ.ஸ்ரீ யின் சிஷ்யப்பிள்ளை, அந்த ஓர் இளைஞன். புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளானே அவன்.
/அடுத்த பதிவிற்கு எதிர்பார்ப்புடன்..../
நன்றி. அடுத்த பதிவு நாளை புதன்கிழமை 23.03.2011 வெளியிட முயற்சிக்கிறேன்.
//கணேஷ் said...
பதிலளிநீக்கு//தீட்க்ஷையாகப்பெற்றுக்கொள்கிறேன்.//
/பொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தை./
இதுவும் திடீரென்று கடைசியாக உதித்ததொரு வார்த்தை தான், கணேஷ்.
குரு-சிஷ்யன்-தீட்க்ஷை என்று இருக்கட்டுமே என்று பிரயோகித்தேன். அது உன்னைக்கவர்ந்தது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.//
இல்லற பிரச்சினையை சமாளிக்க முடியாமல் சன்யாசம் போக தீட்க்ஷை வாங்காமல் இருந்தால் சரி.
கணேஷ் said...
பதிலளிநீக்கு//இல்லற பிரச்சினையை சமாளிக்க முடியாமல் சன்யாசம் போக தீட்க்ஷை வாங்காமல் இருந்தால் சரி.//
ஆமாம். அதுபோலப்போக வ.வ.ஸ்ரீ.யே அனுமதிக்க மாட்டார். இது சாதாரண பொடி தீட்க்ஷை மட்டுமே.
பொடி குருநாதர் தான் வ.வ.ஸ்ரீ.
//என் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான்.
பதிலளிநீக்குமண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.//
நல்ல நுணுக்கத்துடன் அதேசமயம் காமெடியோடும் சொல்லியுள்ளீர்கள் நல்லாவே சிரிச்சேன்
நாசிகா சூரணத்தைப் பற்றி தாங்கள் எழுதியதைப் படித்தவுடன், என்னுள் உதித்த பாடல் இதோ:
பதிலளிநீக்குஇதம் தரும் நாசிகா சூரணத்தை,மனிதர்
நிதம் ஒரு துளி இழுத்து விட்டால்,
அதம் செய்யும் மூக்கை,அது பதம் செய்யும்,
சதம் அடிப்பர் அவர்தம் வாழ்வில் துணிந்து!
அன்புடன் மலிக்கா said...
பதிலளிநீக்கு//என் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான்.
மண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று,குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.//
/நல்ல நுணுக்கத்துடன் அதேசமயம் காமெடியோடும் சொல்லியுள்ளீர்கள் நல்லாவே சிரிச்சேன்/
தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.
நீங்கள் நல்லாவே சிரித்தேன் என்று சொல்லுவது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.
அடுத்த இரண்டு பகுதிகளும்கூட இன்னும் சற்று நகைச்சுவை மிகுந்தவைகளாகவே இருக்கும். தொடர்ந்து படித்து, பின்னூட்டம் இடுமாறு வேண்டுகிறேன்.
அன்புடன் vgk
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
பதிலளிநீக்குநாசிகா சூரணத்தைப் பற்றி தாங்கள் எழுதியதைப் படித்தவுடன், என்னுள் உதித்த பாடல் இதோ:
இதம் தரும் நாசிகா சூரணத்தை,மனிதர்
நிதம் ஒரு துளி இழுத்து விட்டால்,
அதம் செய்யும் மூக்கை,அது பதம் செய்யும்,
சதம் அடிப்பர் அவர்தம் வாழ்வில் துணிந்து!
March 22, 2011 7:45 AM
அருமையான பாடல் தான். இதைப்படித்தாலே நாசிகா சூர்ணத்தை இழுத்தது போல ஓர் பேரின்பம் ஏற்படுகிறது. மிருதங்க ஒலி கேட்காதது தான் ஒரு சின்ன குறை. மீண்டும் வருகை தந்ததற்கு மீண்டும் நன்றி.
ஹா ஹா:}}
பதிலளிநீக்குஇது நாள் வரையிலும் பொடி எதிலிருந்து தயாராகிறது என்று தெரியாது
உங்கள் பதிவு நல்லா விளக்கபடுத்திவிட்டது .
பொடி என்று சொல்றோம் .அதில் இவ்ளோ மேட்டர் இருக்குதா
இனிமே பொடி மேட்டர் சமாச்சாரம்னு சொல்லவே கூடாது :}}
”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.//வழுவட்டை சாருக்கு கோபாலகிருஷ்ணன் சாரே எழுச்சியை அவ்வப்போ இலவசமாக கொடுத்துடுவார் போல் இருக்கு.பதிவு படித்து சிரித்து முடியலே சார்
பதிலளிநீக்குangelin said...
பதிலளிநீக்குஹா ஹா:}}
இது நாள் வரையிலும் பொடி எதிலிருந்து தயாராகிறது என்று தெரியாது
உங்கள் பதிவு நல்லா விளக்கபடுத்திவிட்டது .
பொடி என்று சொல்றோம் .அதில் இவ்ளோ மேட்டர் இருக்குதா
இனிமே பொடி மேட்டர் சமாச்சாரம்னு சொல்லவே கூடாது :}}//
ஆமாம் நிர்மலா!
ஒவ்வொன்றிலும் தயாரிப்பதில் இதுபோல பல மேட்டர்கள் உள்ளன.
அன்புடன் vgk
ஸாதிகா said...
பதிலளிநீக்கு”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.//வழுவட்டை சாருக்கு கோபாலகிருஷ்ணன் சாரே எழுச்சியை அவ்வப்போ இலவசமாக கொடுத்துடுவார் போல் இருக்கு.பதிவு படித்து சிரித்து முடியலே சார்//
ஆமாம் மேடம். நான் எழுதி இந்தக் கதையை நானே திரும்பத்திரும்ப படிக்கும் போது எனக்கே சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாமல் போனதுண்டு.
தாங்களும் அதுபோலவே சிரித்ததாகச் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக்கதையின் நோக்கமே ப்டிப்பவர்கள் சிரித்து மகிழ வேண்டும் என்பதே.
அன்புடன் vgk
ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும். //
பதிலளிநீக்குநேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது!-மிக அருமை!
ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும். //
பதிலளிநீக்குநேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது!-மிக அருமை!
Seshadri e.s. said...
பதிலளிநீக்குஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும். //
நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது!-மிக அருமை!//
தங்களின் அன்பான வருகைக்கும், மிருதங்கக் கச்சேரி சீனை படித்து ரஸித்து சிரித்து மகிழ்ந்து கூறியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அந்த காலத்தில் 'பொடி' இருந்த இடத்தில் இந்த காலத்தில் 'குடி' வந்திருக்கிறது அதில்தான் மாற்றம் மற்றதில் மாற்றம் இல்லை.
பதிலளிநீக்குசார் உங்களுக்கு புரோமோஷன் கிடைத்து இருக்கிறதே எங்களுக்கு எல்லாம் ட்ரீட் கிடையாதா?
ஆமாம் அப்போ பொடி மக்கள் .... இப்போ ’குடி’மக்கள்.
பதிலளிநீக்குபிரமோஷனா? எனக்கா? கதையில் வரும் ஓர் கதாபாத்ரமான அந்த இளைஞனுக்குத் தான், அதுகூட அடிஷனல் ஃபோர்ட்போலியோ தான் இப்போதைக்கு. பிரமோஷன் ஒருவேளை பிறகு கிடைக்கலாம். வ.வ.ஸ்ரீ வேலையையும் சேர்த்து இவரே பார்ப்பதாக நிர்வாகம் நினைத்து ஏமாந்தால்.
திருச்சிக்கு வந்தால் உங்களுக்கு ட்ரீட் எப்போது வேண்டுமானாலும் நான் கொடுக்கத்தயார். NO PROBLEM AT ALL.
வ.வ.ஸ்ரீ போன்று சிலர் எல்லா அலுவலகங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். வேலையும் சொல்லித் தருவார்கள். சில சமயம் நமது வேலையையும் கெடுத்து விடுவார்கள்.
பதிலளிநீக்குஆமாம். ஐயா. இதேபோல ஒருவர் 1976-1980 என்னுடன் வேலை பார்த்து வந்தார். அவருடைய விசித்திர குணாதிசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, என்னுடைய கற்பனைகளையும் நிறைய சேர்த்து இந்தக்கதையை எழுதினேன்.
நீக்குதங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஐயா.
ப்ரமோஷனுக்கு வாழ்த்துகள். வாழ்க்கையிலும் கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். நல்ல குரு, நல்ல சீடர்.
பதிலளிநீக்குGeetha Sambasivam July 23, 2013 at 12:30 AM
நீக்குவாங்கோ ... வணக்கம்.
//ப்ரமோஷனுக்கு வாழ்த்துகள். வாழ்க்கையிலும் கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். நல்ல குரு, நல்ல சீடர்.//
பரமார்த்த குரு போலவா?
தங்களின் அன்பான வருகை + கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.
பொடி வியாபாரம் செய்திருந்தால் ஒழிய ஒருவருக்கு பொடியைப் பற்றி இவ்வளவு விவரங்களை தெரிய வாய்ப்பில்லை.
பதிலளிநீக்குபொடி தயாரிப்பு நாசிகா சீரண மகிமை எல்லாத்துக்கும் காப்பிரைட் உரிமை வாங்கிட்டாங்களா யாராச்சும் காப்பி அடிக்க போராங்க.
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க மேடை நாடகம் பார்ப்பது போலதான் தோன்றுகிறது. என் கற்பனையில் பூர்ணம் விசுவநாதன் தான் வ.வ.ஸ்ரீ.
பதிலளிநீக்குபொடி மகாத்மியத்த இவ்வளவு விளக்கமா, நகைச்சுவையா யாராவது எழுதி இருக்காளான்னு தெரியல. HATS OFF GOPU ANNA.
சூப்பரப்பா.
Jayanthi Jaya May 16, 2015 at 7:27 PM
நீக்கு//படிக்கப் படிக்க மேடை நாடகம் பார்ப்பது போலதான் தோன்றுகிறது. என் கற்பனையில் பூர்ணம் விசுவநாதன் தான் வ.வ.ஸ்ரீ. //
பூர்ணம் விஸ்வநாதன் .... பொருத்தமான தேர்வு தான். அவர் பெயரிலேயே கொழுக்கட்டைப் பூர்ணமும் அடங்கி இருக்கு பாருங்கோ, ஜயா :))))))
//பொடி மகாத்மியத்த இவ்வளவு விளக்கமா, நகைச்சுவையா யாராவது எழுதி இருக்காளான்னு தெரியல. HATS OFF GOPU ANNA. சூப்பரப்பா.//
மிக்க நன்றி, ஜயா :) மிகவும் சந்தோஷமாக உள்ளது :) சூப்பரப்பா !
மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.
அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.
அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.
'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .
மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.
முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.
இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
னல்லா பொடிக்கதயா இருக்குதே. காமெடி கலந்து எளுதுவது படிக்க நல்லா இருக்குது
பதிலளிநீக்குபொடி பத்தி சமையல் குறிப்புக்கு மல்லிகா பத்ரிநாத்தான் குருவோ. பாவம் அவங்கமட்டும் இதப்படிச்சா நொந்து போயிடுவாங்க.
பதிலளிநீக்கு//In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய். சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன். இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள்! நான் தான் இந்தக் கம்ப்யூட்டர் கன்றாவியெல்லாம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதிங்கி ஒரு எட்டு வருஷத்துக்கு மேல் இருக்குமே” என்றார்.// இத மாதிரி ஆபீஸ்க்கு ஒருத்தர் ரெண்டு பேராவது இருக்கத்தானே செய்யுறாங்க...
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குபரவால்லயே.. வ.வ.ஸ்ரீ. கூட பழகினதுக்கு கைமேல பலன் கிடைச்சுதே.. பிரமோஷன்தான்... எல்லாமே கம்ப்யூட்டர் மயமானதில் மனுஷர் ரொம்பவே நொந்து போயிட்டாங்கபோல...... பொடி எதிலிருந்து தயாரிக்கறாங்கற சந்தேகம் எல்லாருக்குமே தீந்து போயிருக்கும்.. ஸென்டு போட்டமாதிரி வாசனை வரும் வழுவட்டை பொடி போட்டா கூட வ . வ. ஸ்ரீ. தர்ம பத்தினி பொணநாத்தம்னு சொன்னதுமல்லாம குடிச்சுட்டு வந்திங்களான்னு வேற கேட்டுட்டாங்களே. சே.... எவ்வளவு பெரிய சோகம்.......
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... May 25, 2016 at 11:10 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பரவால்லயே.. வ.வ.ஸ்ரீ. கூட பழகினதுக்கு கைமேல பலன் கிடைச்சுதே.. பிரமோஷன்தான்...//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ஆமாம். கைமேல் பலன்.
//எல்லாமே கம்ப்யூட்டர் மயமானதில் மனுஷர் ரொம்பவே நொந்து போயிட்டாங்கபோல......//
அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஜாலியாக அவர் ஆபீஸ் நேரத்தில் க்ரூப் டிஸ்கஷன் என்ற பெயரில் சும்மா அரட்டைக்கச்சேரிகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்.
//பொடி எதிலிருந்து தயாரிக்கறாங்கற சந்தேகம் எல்லாருக்குமே தீந்து போயிருக்கும்..//
ஆமாம். ஆமாம்.
//ஸென்டு போட்டமாதிரி வாசனை வரும் வழுவட்டை பொடி போட்டா கூட வ . வ. ஸ்ரீ. தர்ம பத்தினி பொணநாத்தம்னு சொன்னதுமல்லாம குடிச்சுட்டு வந்திங்களான்னு வேற கேட்டுட்டாங்களே. சே.... எவ்வளவு பெரிய சோகம்.......//
:))))))))))))))))))
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குறிப்பாக சில நகைச்சுவைக் காட்சிகளை ரசித்துச் சொல்லி பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.