ஒரு முக்கிய அறிவிப்பு: நேற்று முதன் முதலாக என் வலைப் பூவுக்கு “இன்ட்லி” மற்றும் “தமிழ்மணம்” இணைப்புகள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன. இவை பற்றி ஏதும் அறியாமலேயே இருந்து வந்த என்னை இவற்றில் இணைத்துக் கொள்ளுமாறு அன்புக் கட்டளையிட்ட திருமதி ராஜி அவர்களுக்கும், இணைப்புக்கு தானே முன்வந்து உதவிய திருமதி Thirumathi BS Sridhar அவர்களுக்கும் மற்றும் சிஸ்டத்தில் இருந்த பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்து பேருதவி செய்து கொடுத்த திரு. K R P செந்தில் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்புக் கொடுத்த முதல் நாளாகிய
நேற்றே என்னுடைய சமீபத்திய வெளியீடான “எலிஸபத் டவர்ஸ் நகைச்சுவைச் சிறுகதை [பகுதி-3] இன்ட்லியில் பிரபலப் படுத்தப் பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இப்போது இந்தத் தொடரின் பகுதி 5 தொடர்கிறது:
சமையல் அறையின் எல்லாச் சாமான்களையும் கீழே தள்ளி விட்டு போர்க்களம் போல பரப்பிய கோவிந்தன் ஒரு குச்சியால் நெடுக லாஃப்ட் பூராவும் தட்டிப் பார்த்தான். எலி மட்டும் அவன் கண்களுக்குத் தட்டுப்படவே இல்லை.
வெறுத்துப் போன அவன் “அக்கா, சமையல் ரூமில் அது இல்லை. வேறு எங்கேயாவது தான் இருக்கணும். நீ பஜ்ஜி, சட்னி, காஃபி தயார் பண்ணு. நான் படுக்கை அறையில் பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி ராமசுப்பு இருந்த அறைக்குள் புகுந்தான்.
ராமசுப்பு அப்போது தான் உடைந்த சிரப் பாட்டிலைப் பொறுமையாக திரட்டி ஒத்தி எடுத்து, அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து, துணியால் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, தன் கைகளில் க்ளவுஸ் அணிந்து கொண்டு, அங்கிருந்த அட்டாச்டு பாத் ரூமில், தான் இரவல் வாங்கி வந்திருந்த அழுக்கடைந்த எலிக்கூட்டை நன்றாக ஒட்டடைபோகத் துடைத்து, சோப்பு போட்டு நுரை பொங்க தேய்த்து, குழாய் நீருக்கு அடியில் பிடித்த வண்ணம், துணி துவைக்கும் போது சட்டைக் காலர் அழுக்கெடுக்க உபயோகிக்கும் நைலான் ப்ரெஷ் கட்டையால் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்தார்.
அவருடைய கெட்ட நேரமோ என்னவோ, மிகவும் வயதான அந்த எலிக்கூடு தண்ணீர் பட்டதும், ஒருவித உற்சாகம் அடைந்ததில், பட் ... பட் ... என்று அதிரஸம் போல தனித் தனியாகப் புட்டுக் கொண்டது. கம்பிகள் தனியாகவும், உளுத்துப்போன கட்டைகள் தனியாகவும் உடைந்ததும், நம் ராமசுப்புவுக்கு அழுகையே வந்து விட்டது.
“அத்திம்பேர் .... இந்த உடைந்து போன பாடாவதி எலிக்கூட்டைத் தலையைச் சுற்றி குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு, பெரிய மார்க்கெட்டுக்குப் போய் நல்லதாகப் பார்த்து, புதுசா வேறு எலிக்கூடு வாங்கிட்டு வாங்க” என்று உத்தரவு போட்டான் கோவிந்தன்.
சமையல் அறையில் சிதறிக் கிடந்த சாமான்களை குனிந்து நிமிர்ந்து சரி செய்வதற்குள் இடுப்புப் பிடித்தாற்போல ஆகிவிட்டது, அம்புஜத்திற்கு.
அமர்க்களப்படும் இந்த வீட்டில் இனியும் இருந்தால், நம்மையும் ஏதாவது வேலை ஏவிக்கொண்டே இருப்பார்கள் என்று யூகித்த ராஜூ ட்யூஷன் படிக்கப் போவதாகச் சொல்லி, தன் சைக்கிளில், எங்கேயோ கிளம்பி விட்டான்.
இந்த கோவிந்தன் முகத்திலும், எங்கேயோ ஒளிந்துள்ள அந்த எலி முகத்திலும் மேற்கொண்டு விழிக்கப் பிடிக்காமலும், அமர்க்களப்படும் அந்த வீட்டிலேயே அடைந்து கிடக்கப் பிடிக்காமலும், எலிக்கூடு புதிதாக வாங்கி வரும் சாக்கில், ராமசுப்புவும், எஸ்கேப் ஆகி பெரிய மார்க்கெட்டுக்குப் போகக் கிளம்பி, ஒரு வழியாக பஸ் ஏறி விட்டார்.
உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்க மார்க்கெட் முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்துக் கடைசியில் எலிக்கூடுகள் விற்கும் கடையொன்றைக் கண்டு பிடித்து விட்டார், ராமசுப்பு.
“நல்லதா ஒரு எலிக்கூடு கொடுப்பா” என்றார்.
“சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?” என்றான் அந்தக் கடைக்காரன்.
“இதில் இவ்வளவு வகையறாக்கள் உள்ளனவா!” எலியைக் கண்ணால் கூடப் பார்க்காமல் எலிக்கூடு வாங்க புறப்பட்டது எவ்வளவு ஒரு முட்டாள் தனம் என்பதை நினைத்து வருந்தினார், ராமசுப்பு.
தொடரும்
“இதில் இவ்வளவு வகையறாக்கள் உள்ளனவா!” எலியைக் கண்ணால் கூடப் பார்க்காமல் எலிக்கூடு வாங்க புறப்பட்டது எவ்வளவு ஒரு முட்டாள் தனம் என்பதை நினைத்து வருந்தினார், ராமசுப்பு.
பதிலளிநீக்கு......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... எப்படியெல்லாம் கவலைப்பட வேண்டியது இருக்கிறது!
இன்ட்லி - தமிழ்மணத்தில் இணைந்து - உங்கள் படைப்புகள் பிரபலம் ஆவது குறித்து மகிழ்ச்சி. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇன்ட்லி - தமிழ்மணத்தில் இணைந்து - உங்கள் படைப்புகள் பிரபலம் ஆவது குறித்து மகிழ்ச்சி. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு’எலி’ ஸபெத் பிரமாதம் ..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசிரிப்பில் கலக்குகிறீர்கள்...
பதிலளிநீக்குசாமான்களை போர்க்களம் போல் பரப்பி வைத்து விட்டு திரும்ப எடுத்து வைக்க வேண்டும் என்ற ஸ்மரணை இல்லாமல் பஜ்ஜி தேங்கா சட்னிக்கு ஆர்டர் செய்யும் கோவிந்தன் நல்ல பாத்திரம்
பதிலளிநீக்குஎலிக்கூடில் கூட சைஸ்வாரியா இருக்கா ! :)
பதிலளிநீக்குஇண்ட்லி, தமிழ்மணத்தில் இணைத்தது குறித்து மகிழ்ச்சி சார். உங்கள் பதிவுகள் பிரபலமடையட்டும்.
விதவிதமா எலிக்கூண்டு – எலிக்குத் தகுந்த மாதிரியா? இல்லை எலி பிடிக்கற ஆசாமிக்குத் தகுந்த மாதிரியா? :) பாவம் எலிய பார்க்க இன்னும் appointment அவருக்குக் கிடைக்கலியா! இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் இணைத்தமைக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு//சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?” என்றான் அந்தக் கடைக்காரன்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா!!
எலி பத்தி பல விதமான ஆராய்ச்சி
பண்ணனும் போலருக்கே
உங்களோட "எலிசபெத் டவர்ஸ்" க்கு
மூன்றாம் பகுதில நான் போட்ட கமென்ட்டால
என் கம்ப்யூட்டர் மௌஸ் க்கு கோபம் வந்திருக்கும் போல.உடனே
என் கணிணி பழுதாய்டுத்து.சரி பண்ணி எலியை பார்க்க
சே சே எலிசபெத் டவர்ஸ் படிக்க வந்துருக்கேன்
ஒரிஜினல் நகைச்சுவை என்பார்களே ! அது உம்முடயதுதான் சார்! வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎலிக்கூண்டில் சைஸ் வித்யாசம் இருக்கா ?? இப்பதான் கேள்விப் படறேன்..
பதிலளிநீக்குChitra said...
பதிலளிநீக்கு//......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... எப்படியெல்லாம் கவலைப்பட வேண்டியது இருக்கிறது! //
ஆமாம் மேடம், பலவிதத்தில் கவலைப்பட வேண்டியுள்ளது. அமெரிக்காவில் இது போல எலிப்பிரச்சனைகள் ஏதும் உண்டா?
//இன்ட்லி - தமிழ்மணத்தில் இணைந்து - உங்கள் படைப்புகள் பிரபலம் ஆவது குறித்து மகிழ்ச்சி. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மேடம். என்னைப் பொருத்தவரை இதெல்லாம் மிகவும் புது அனுபவம்.
அதனால் ஒரு வியப்பில் ஒரு குழந்தை போல எழுதி விட்டேன்.
ஏற்கனவே பலமுறை பிரபலமாகியிருக்கும் தங்களைப் போன்ற பிரபலமான எழுத்தாளர்களுக்கெல்லாம் இந்த என் கூற்று ”சும்மா ஒரு ஜுஜுபி” யாகத் தோன்றக்கூடும்.
However, Thanks for your encouraging comments. vgk
இராஜராஜேஸ்வரி said... // ..................... //
பதிலளிநீக்குmiddleclassmadhavi said... // .................. //
கோவை2தில்லி said... //.....................//
வெங்கட் நாகராஜ் said... //................//
இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் மிகவும் தாமதமாக இணைந்து, இணைந்த உடனேயே முதன் முதலாக ஒரு படைப்பு பிரபலம் ஆனதாக நான் எழுதியதற்கு வாழ்த்துக்கள் கூறியுள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
என்னைப் பொருத்தவரை இதெல்லாம் மிகவும் புது அனுபவம். அதனால் ஒரு வியப்பில், ஒரு குழந்தை போல எழுதி விட்டேன்.
ஏற்கனவே பலமுறை பிரபலமாகியிருக்கும் தங்களைப் போன்ற பிரபலமான எழுத்தாளர்களுக்கெல்லாம் இந்த என் கூற்று ”சும்மா ஒரு ஜுஜுபி” யாகத் தோன்றக்கூடும்.
However, Thanks for your encouraging comments. vgk
கே.ஆர்.பி.செந்தில் said...
பதிலளிநீக்கு// ’எலி’ ஸபெத் பிரமாதம் ..//
தங்களின் முதல் வருகைக்கும், ‘பிரமாதம்’ என்ற பாராட்டுக்கும், மிக்க நன்றி.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வாங்க!
WELCOME
"குறட்டை " புலி said...
பதிலளிநீக்கு//சிரிப்பில் கலக்குகிறீர்கள்...//
தங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும், மிக்க நன்றி.
இன்றைய மிகவும் டென்ஷனான வாழ்க்கையில் எல்லோருமே சிறிது நேரமாவது, சிரித்து மகிழ வேண்டும், என்பதே என் இதுபோன்ற எழுத்துக்களின் எதிர்பார்ப்பு. அது நிறைவேறியுள்ளதாக தாங்கள் சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வாங்க!
WELCOME
Ganesh said...
பதிலளிநீக்கு// சாமான்களை போர்க்களம் போல் பரப்பி வைத்து விட்டு திரும்ப எடுத்து வைக்க வேண்டும் என்ற ஸ்மரணை இல்லாமல் பஜ்ஜி தேங்கா சட்னிக்கு ஆர்டர் செய்யும் கோவிந்தன் நல்ல பாத்திரம் //
ஆம், நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு சில விசித்திர மனிதர்களில், இந்த கோவிந்தனும் ஒருவர்.
ராமசுப்பு, அம்புஜம், ராஜூ மூவரும் மூக்கைப் பிடிக்க ஹோட்டலில் சாப்பிட்டு வந்து விட்டனர்.
மணச்சநல்லூரிலிருந்து கிளம்பிய நம் கோவிந்தன் எப்போ சாப்பிட்டானோ என்ன சாப்பிட்டானோ பாவம்; அவனுக்கு நல்ல பசி; அக்கா எப்படியும் வழக்கம் போல ஏதாவது தருவாள் என்று ஆசையாக நம்பி வந்துள்ளான். வந்த இடத்தில் கொலைப் பட்டினியுடன் இந்த எலி வேட்டை வேறு!
கோவை2தில்லி said...
பதிலளிநீக்கு//எலிக்கூடில் கூட சைஸ்வாரியா இருக்கா ! :)//
இருக்கு மேடம். அடுத்த பகுதியில் இதற்கு விளக்கம் வருகிறது. நாளை வெளியிடப்படுகிறது.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//விதவிதமா எலிக்கூண்டு – எலிக்குத் தகுந்த மாதிரியா? இல்லை எலி பிடிக்கற ஆசாமிக்குத் தகுந்த மாதிரியா? :) பாவம் எலிய பார்க்க இன்னும் appointment அவருக்குக் கிடைக்கலியா!//
உங்கள் கேள்விகளும் நகைச்சுவையாக நல்லாவே இருக்கு. இதற்கான விளக்கங்கள் அடுத்த பகுதியில் வருகிறது.
எலி அவருக்கு appointment கொடுக்க ரெடி தான். இவர் தான் அதைக் கண்டு நம் மேலதிகாரிகள், HOD, CMD, CM, PM, PRESIDENT முதலிய VIP க்களைப் பார்க்க போகும் போது ஒருவித நடுக்கம் ஏற்படுமே அது போல பயந்து நடுங்குகின்றாரே.
raji said...
பதிலளிநீக்கு//சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?” என்றான் அந்தக் கடைக்காரன்.//
ஹா ஹா ஹா!!
எலி பத்தி பல விதமான ஆராய்ச்சி
பண்ணனும் போலருக்கே
உங்களோட "எலிசபெத் டவர்ஸ்" க்கு
மூன்றாம் பகுதில நான் போட்ட கமென்ட்டால
என் கம்ப்யூட்டர் மௌஸ் க்கு கோபம்
வந்திருக்கும் போல.உடனே
என் கணிணி பழுதாய்டுத்து.சரி பண்ணி எலியைப் பார்க்க சே சே எலிசபெத் டவர்ஸ் படிக்க வந்துருக்கேன் //
உங்களுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு சற்றே தூக்கலாகத் தான் உள்ளது மேடம்.
மூன்றாம் பகுதிக்கு நீங்கள் எழுதிய கமெண்ட்டை நான் வெகுவாக பலமுறை படித்து ரஸித்து மகிழ்ந்தேன். உடனே உங்களைத் தொடர்பு கொண்டு பாராட்ட வேண்டும் என்றும் கூட ஆசைப்பட்டேன்.
ஆனால் நீங்கள் என் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தீர்கள்.
உங்கள் கமெண்ட் பார்த்து உங்கள் கம்ப்யூட்டர் மெளஸ் வேறு கோபம் கொண்டு அந்தத் தொடர்பையும் துண்டித்து விட்டது.
எது எப்படியோ நீங்கள் மீண்டும் வந்து இந்தக் கமெண்ட் கொடுத்த பிறகு தான், எனக்கு நிம்மதியாக மூச்சு விட முடிகிறது.
அவ்வளவு ஒரு விசாரப்பட்டேன் உங்கள் தொடர்புகள் துண்டித்ததில்.
எப்படியோ உங்கள் மெளஸின் கோபம் இப்போது தணிந்ததில், சிஸ்டம் சரிசெய்யப் பட்டதில், எனக்குக் கொள்ளை மகிழ்ச்சியே. அதை எழுத்தில் எடுத்துரைக்க எனக்கு திறமை பத்தாது.
அடிக்கடி வாங்க! வாங்க!! வாங்க!!! என்று வரவேற்கிறேன் கையில் பன்னீர்க் கூஜாவுடன்.
மோகன்ஜி said...
பதிலளிநீக்கு//ஒரிஜினல் நகைச்சுவை என்பார்களே ! அது உம்முடயதுதான் சார்! வாழ்த்துக்கள்.//
ஆஹா.....பேஷ் பேஷ்.....ரொம்ப நன்னாயிருக்கே!
காஃபி சுவை போல உள்ளதா இந்த என் ஒரிஜினல் நகைச்சுவை?
உண்மையாகத் தான் சொல்லுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு நகைச்சுவைக்குத் தான் சொல்லுகிறீர்களா?
ANY HOW, MY SINCERE THANKS FOR YOUR VALUABLE COMMENTS, SIR. WELCOME.
எல் கே said...
பதிலளிநீக்கு//எலிக்கூண்டில் சைஸ் வித்யாசம் இருக்கா ?? இப்பதான் கேள்விப் படறேன்..//
முன்னொரு காலத்தில், ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு, நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த ஒரு பாடாவதி வீட்டிலேயே, நாங்களே கூட இது போல பல சைஸ்களில் எலிக்கூடுகள் பயன் படுத்தியுள்ளோம்.
மிகச் சிறியதாக இருந்த அந்தக் கூட்டில், ஒரு நாள் ஒரே நேரத்தில் 8 சுண்டலிகள் கூட மாட்டிக் கொண்டன. அது பற்றி இன்றும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் உள்ளது. 4 அல்லது 5 அடிக்கடி சுண்டலிகள் அடிக்கடி மாட்டுவது சகஜம்.
அமர்க்களப்படும் வீட்டில் இருந்தால் வேலைக்கு ஏவிக் கொண்டே இருப்பார்கள் என்று ராஜு ட்யூஷன் போய்விட்டான். -நகைச்சுவைக்கு இடையிலயும் கொஞ்சம் சைககாலஜி கலந்து எழுதியிருக்கீங்க. உங்ககிட்ட நி்றையக் கத்துக்க வேணடியிருக்கு நான்!
பதிலளிநீக்குஒரே கூண்டில 4 அல்லது 5 சுண்டெலிகள் மாட்டுவது சகஜம்னு பின்னூட்டத்துல சொல்லியிருக்கீங்களே... வியப்பான தகவல் எனக்கு இது!
மிகவும் வயதான அந்த எலிக்கூடு தண்ணீர் பட்டதும், ஒருவித உற்சாகம் அடைந்ததில், பட் ... பட் ... என்று அதிரஸம் போல தனித் தனியாகப் புட்டுக் கொண்டது. கம்பிகள் தனியாகவும், உளுத்துப்போன கட்டைகள் தனியாகவும் உடைந்தது
பதிலளிநீக்குஅத்தனை சாப்ட்டான -மென்மையான எலிக்கூடு !
படிக்க இனிமை !
கோவிந்தன் முகத்திலும், எங்கேயோ ஒளிந்துள்ள அந்த எலி முகத்திலும் மேற்கொண்டு விழிக்கப் பிடிக்காமலும், அமர்க்களப்படும் அந்த வீட்டிலேயே அடைந்து கிடக்கப் பிடிக்காமலும், எலிக்கூடு புதிதாக வாங்கி வரும் சாக்கில், ராமசுப்புவும், எஸ்கேப் ஆகி
பதிலளிநீக்குஆளாளுக்கு எஸ்கேப் !
வாசகர்கள்தான் பாவம் வந்து அதிகளவில் மாட்டிக்கொண்டுவிட்டார்கள் ரச்னை மிகுந்த பதிவில் !
“சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?”
பதிலளிநீக்குஎதையுமே கடைசிவரை யாரும் பார்க்கவில்லை !
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குமிகவும் வயதான அந்த எலிக்கூடு தண்ணீர் பட்டதும், ஒருவித உற்சாகம் அடைந்ததில், பட் ... பட் ... என்று அதிரஸம் போல தனித் தனியாகப் புட்டுக் கொண்டது. கம்பிகள் தனியாகவும், உளுத்துப்போன கட்டைகள் தனியாகவும் உடைந்தது
//அத்தனை சாப்ட்டான -மென்மையான எலிக்கூடு !
படிக்க இனிமை !//
அதிரஸம் போன்ற சுவையான கருத்துக்கள் - சாப்ட்டான மென்மையான நபரிடமிருந்து ;)
மிக்க நன்றி!
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குகோவிந்தன் முகத்திலும், எங்கேயோ ஒளிந்துள்ள அந்த எலி முகத்திலும் மேற்கொண்டு விழிக்கப் பிடிக்காமலும், அமர்க்களப்படும் அந்த வீட்டிலேயே அடைந்து கிடக்கப் பிடிக்காமலும், எலிக்கூடு புதிதாக வாங்கி வரும் சாக்கில், ராமசுப்புவும், எஸ்கேப் ஆகி
//ஆளாளுக்கு எஸ்கேப் !
வாசகர்கள்தான் பாவம் வந்து அதிகளவில் மாட்டிக்கொண்டு விட்டார்கள் ரச்னை மிகுந்த பதிவில் !//
ஆஹா!
இந்தப்பதிவினை நான் வெளியிடும்போது, ஒரு நாள் நீங்க எவ்ளோ முறை வந்து என்னென்னவோ சொல்லிப்புட்டு எஸ்கேப் ஆகிப்போய்க்கொண்டே இருந்தீர்கள்!
ஊரில் உள்ள அத்தனை ஆயிரம் பதிவர்களுக்கும் Follower ஆன நீங்கள், எனக்கு மட்டும் Follower ஆவது எப்படி என்றே தெரியாது என்றல்லாவா சொல்லி எஸ்கேப் ஆகி பாடாய்ப் படுத்தினீர்கள்!!
அவை என்றும் பசுமையான நினைவலைகள்...........
மறக்க மனம் கூடுதில்லையே!!!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றியோ நன்றிகள், மேடம்.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு“சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?”
//எதையுமே கடைசிவரை யாரும் பார்க்கவில்லை !//
அதுதானே நம்ம கதைகளில் உள்ள டெக்னிக். எட்டுபகுதிகளில் அந்த எலியை இங்குமங்கும் ஓடவிட்டு, அது யார் கண்ணிலுமே கடைசிவரை படாமல், கதையையே முடித்து விட்டேனே!
”வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம்” என்று சொல்லி, கடைசிவரை அதுபோன்ற ஒரு கட்சியே ஆரம்பிக்கப்படாமல் 8 பகுதிகளை ஓட்டவில்லையா!!
/எதையுமே கடைசிவரை யாருமே பார்க்கவில்லை!/ என்று ஆகிவிடுமோ என்ற விசாரம் எனக்குள்ளும் உள்ளது.
அன்பான வருகைக்கும் அழகான ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் நன்றி, மேடம்.
“சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?”//
பதிலளிநீக்குஅதுதானே இதுவரையிலும் எந்த எலி என்றே தெரியாம நானும் படித்துக்கொண்டு சென்றேனே :)
angelin October 3, 2012 2:52 AM
பதிலளிநீக்கு****“சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?”****
//அதுதானே இதுவரையிலும் எந்த எலி என்றே தெரியாம நானும் படித்துக்கொண்டு சென்றேனே :)//
நீங்களுமா இன்னும் பார்க்கவில்லை ? அடடா ! ;)))))
ஆட்டுக்கார அலமேலு என்ற சினிமாப்படத்தில் ஓர் பாட்டு வரும்:
அவள்:
“பருத்தி எடுக்கையிலே ...
என்னைப் பலநாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே
ஓடி வந்தாள் ஆகாதோ?
அவன்:
ஓடித்தான் வந்திருப்பேன் .....
நா[ன்] உன்னை மட்டும் பார்த்திருந்தால்
தேடித்தான் வந்திருப்பேன் .....
தெரியலையே முன்னாடி ......
அந்தப்பாட்டுத் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது
தாங்கள் எழுதிருப்பதைப் பார்த்ததும். ;)))))
பிரியமுள்ள
கோபு
கோவிந்தன் பண்ணும் அமர்க்களத்தில் எலியைப் பிடிக்காவிட்டாலும் தேவலை என்று ஆகப்போகிறது. நடுவில் நடக்கும் களேபரங்கள்தான் மிச்சம்.
பதிலளிநீக்குஎலிக்கு மசால்வடை மீது ஆசை. மச்சினனுக்கு பஜ்ஜி, கெட்டிச் சட்னி மேல ஆசை. மச்சினனுக்குக் கொண்டாட்டம். அத்திம்பேருக்குத் திண்டாட்டம்.
பதிலளிநீக்குஎலி கிட்டயும், அம்புஜம் மாமி கிட்டயும், மச்சினன் கிட்டயும் மாட்டிண்டு ராமசுப்பு ‘ஙே’ன்னு முழிக்குப் போறார்.
புலியைக் கூட வேட்டையாடிடலாம் போல இருக்கு. இந்த எலி இந்தப் பாடு படுத்துதே. எலிக்கூண்டு கிடைத்ததா? அடுத்து எப்படில்லாம் வேட்டை தொடரப் போகுதுன்னு ஆவலுடன் வெயிட்டிங்கு.
பதிலளிநீக்குஅடுத்து எப்பூடில்லா எலி வேட்ட நடக்க போவுது.
பதிலளிநீக்குஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
நீக்குஅன்புள்ள (mru) முருகு,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்கள் என்னால் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன்
குருஜி கோபு
அடுத்து எப்பூடில்லா எலி வேட்ட நடக்க போவுது.
பதிலளிநீக்குஇவாள்லாம் எலிய இன்னமும் கண்ணுல பார்க்கவே இல்லை. அப்புறம் எப்படி சுணடெலியா பெருச்சாளியான்னு எலி கூண்டு விற்பவரிடம் சொல்ல முடியும் அங்க போயும் திரு திரு முழிப்புதானே. வீடு இருக்கும் அமர்க்களத்தில் அவருக்கு பஜ்ஜியும் சட்னியுமா கேக்குதுன்னு அந்த்ம்மா புலம்புவது இங்கயே கேக்கறதே.
பதிலளிநீக்கு//“சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?” என்றான் அந்தக் கடைக்காரன்.
பதிலளிநீக்கு“இதில் இவ்வளவு வகையறாக்கள் உள்ளனவா!” எலியைக் கண்ணால் கூடப் பார்க்காமல் எலிக்கூடு வாங்க புறப்பட்டது எவ்வளவு ஒரு முட்டாள் தனம் என்பதை நினைத்து வருந்தினார், ராமசுப்பு.// சரிதான்!! எல்லாத்துக்குமே எவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு...
எலிகளில் இத்தனை வகைகளா? என வகையாக மாட்டிக்கொண்டு முழிப்பது அருமை!
பதிலளிநீக்குஎலி வேட்டைக்கு தொடர்ந்து வரமுடியாம பிரபல எழுத்தாளர்கள் பிடிச்சு இழுக்கறா.......ராம சுப்பு பாதுகாப்புக்காக கைகளில் க்ளவுஸ் போட்டுக்கொண்டு எலிக்கூண்டை சோப்பு நுரை பொங்க க்ளீன் பண்ணும்போது வயசான அந்தக்கூண்டு அதிரசம் போல தூள் தூளாக நொறுங்கிச்சா????????? எப்படில்லாம் உதாரணம் சொல்றீங்க. எலிய கண்ணால பாக்காமலே எலிக்கூண்டு வாங்க வந்தது தப்போ.????? தமிழ்மணம் இண்டலி பத்தி எதுவும் தெரியல...
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... April 12, 2016 at 10:33 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//எலி வேட்டைக்கு தொடர்ந்து வரமுடியாம பிரபல எழுத்தாளர்கள் பிடிச்சு இழுக்கறா.......//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! வரும் 21.04.2016 வரை அப்படித்தான் இருக்கும். அதன்பிறகு ஜாலிதான். நானும் கொஞ்சம் ஃப்ரீ தான். நிம்மதிதான்.
//ராம சுப்பு பாதுகாப்புக்காக கைகளில் க்ளவுஸ் போட்டுக்கொண்டு எலிக்கூண்டை சோப்பு நுரை பொங்க க்ளீன் பண்ணும்போது வயசான அந்தக்கூண்டு அதிரசம் போல தூள் தூளாக நொறுங்கிச்சா????????? எப்படில்லாம் உதாரணம் சொல்றீங்க.//
ஆஹா, ரஸித்துப் படித்துள்ளீர்கள். நன்றி.
//எலிய கண்ணால பாக்காமலே எலிக்கூண்டு வாங்க வந்தது தப்போ.?????//
:) அது ஏதோ சாதாரணமானதோர் விஷயம் என நினைத்து அவர் மிகவும் அசால்டாக எலிக்கூடு வாங்கப் புறப்பட்டு விட்டார். :)
//தமிழ்மணம் இண்டலி பத்தி எதுவும் தெரியல...//
அவைபற்றியெல்லாம் தெரியாமல் இருப்பதே மிகவும் நல்லது. எனக்கும் ஒன்றும் தெரியாது.
என் மீதும் என் எழுத்துகள் மீதும் பிரியமுள்ளதோர் வாசகத் தோழி என்னை வற்புருத்தி, என் பாஸ்வேட் முதலியவற்றை வாங்கிக்கொண்டு, அவளாகவே என்னை இவற்றில் இணைத்துக் கொடுத்திருந்தாள். 2011-ம் ஆண்டு ஒரு 7-8 மாதம் மட்டும் இந்த இரு சக்களத்திகளுடன் நானும் வாழ்க்கை நடத்தினேன். பிறகு 01.01.2012 முதல் டைவோர்ஸ் செய்து விட்டேன். இப்போ மிகவும் நிம்மதியாக உள்ளேன். :) - VGK
அச்சச்சோ ஏன் டைவர்ஸ் ளண்ணினீங்க.
பதிலளிநீக்குஸோ...... ஸேட்....
ஸ்ரத்தா, ஸபுரி... April 12, 2016 at 11:40 AM
நீக்கு//அச்சச்சோ ஏன் டைவர்ஸ் ளண்ணினீங்க.
ஸோ...... ஸேட்....//
எல்லாம்
’ஆசை அறுபது நாள் ... மோகம் முப்பது நாள்’ கதைதான். :)
இங்க வந்து நாலுவாட்டி பின்னூட்டம் போட்டேன் எரர் வருது.... அந்த எலி பொழச்சு போகட்டும். கதைதான் சிரிக்க வைக்குதுன்னா பின்னூட்டம்.... ரிப்ளை பின்னூட்டம் எல்லாம் போட்டி போடுதே...
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... April 17, 2016 at 7:33 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இங்க வந்து நாலுவாட்டி பின்னூட்டம் போட்டேன் எரர் வருது.... அந்த எலி பொழச்சு போகட்டும். கதைதான் சிரிக்க வைக்குதுன்னா பின்னூட்டம்.... ரிப்ளை பின்னூட்டம் எல்லாம் போட்டி போடுதே...//
:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
இந்தத்தொடர் வெளியீட்டின் போதுதான் ஒருவர் எனக்கு முதன்முதலாக பின்னூட்டங்கள் போட ஆரம்பித்து, அதன்பின் நாளடைவில், மிக நெருங்கிய ஆத்மார்த்தமான நட்பாகவும் ஆனார்கள்.
எங்களின் ஒவ்வொரு பதிவுக்கும் நாங்கள் ஒருவருக்கொருவர் பஞ்சமில்லாமல் ஏராளமான பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டே இருப்போம்.
இன்று அவர்கள் இல்லை என்பதை நினைக்க நினைக்க அழ மட்டுமே முடிகிறது, என்னால். :(