என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 23 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 7]



மறுநாள் காலையில், நேற்று வ.வ.ஸ்ரீ. அவர்கள் சொன்னது போலவே, நான் அவர் சீட் வேலைகளையும் சேர்த்துப்பார்க்க வேண்டும் என்றும், அவர் பணி ஓய்வு பெறுவதற்கு மூன்றே மூன்று மாதங்கள் மட்டும் இருப்பதால் இப்போதே அதற்கான Responsibilities Handing over - Taking over முதலியன மேற்கொள்ள வேண்டும் என்று ஆபீஸ் ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டதால், வ.வ.ஸ்ரீ. அவர்களுடைய சீட் அருகிலேயே அமர்ந்து தொடர்ந்து அரட்டை அடிப்பதற்கு [Official Discussions என்ற பெயரில்] அனுமதி வழங்கப்பட்டு விட்டது, என்று இருவருமே நினைத்து எங்களுக்குள் மகிழ்ந்து கொண்டோம்.

“பல வருஷங்களாக பொடி போட்டுவரும் தங்களுக்கு இதுவரை எந்தப்பிரச்சனையும் வந்தது இல்லையா, சார்” என்று நைஸாக என் இன்றையப் பேட்டியைத் தொடங்கலாலேன்.  

“ஒரு தடவை மூக்கினுள் ஏதோ ஒரு சிறிய கொப்பளம் போல் ஏற்பட்டு, பொடி போடும் போதெல்லாம் வலியும் எரிச்சலுமாக இருந்ததப்பா.  மூக்கு இரண்டையும் சுத்தமாகக் கழுவிவிட்டு “காது மூக்கு தொண்டை” [E.N.T] டாக்டரிடம் போனேன்.  எனக்கு டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.

மிகவும் பொறுத்துப்பொறுத்துப்பார்த்த நான், கடைசியில் சகிக்க முடியாததால், அங்கிருந்த வெண்புறா போன்ற நர்ஸ்ஸிடம் என் பிரத்யேகப் பிரச்சனையை எடுத்துரைத்து, அவள் என்மீது காட்டிய கடைக்கண் பார்வையால், முன்னுரிமை அடிப்படையில், உள்ளே அந்த டாக்டரிடம் சென்று விட்டேன். 

என் சிறிய மூக்குத்துவாரங்களுக்குள் ஏதோவொரு தொலைநோக்குக் கருவியை பொருத்தி, வெளிச்சம் அடித்துப் பார்த்துவிட்டு, அவர் நான் பல்லாண்டு காலமாக பொடி போடும் ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து வன்மையாகக் கண்டித்து விட்டார்.  

காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி, என் மூச்சுக்குழல் முழுவதும் ஒரே இருட்டாக ஒன்றுமே தெரியாமல் வழுவட்டையாக இருப்பதாகக்கூறி, இது மிகவும் ஆபத்து என பயமுறுத்தி, இனி பொடிப்பக்கமே தலை வைத்துப்படுக்கக்கூடாது, கண்ணாலும் பார்க்கக்கூடாது என்று இறுதி எச்சரிக்கையும் கொடுத்து விட்டார்.

டாக்டர் சொன்ன எச்சரிக்கையை என்னுடனேயே அருகில் இருந்து கேட்ட என் மனைவி என்னை, அப்போது ஒரு விதக் கொலைவெறியுடன் பார்த்தாள். வெளியே வந்த நான், அன்று இறுதியாக ஒரே ஒரு முறை மட்டும் பொடியை இழுத்துவிட்டு, ஒரு பேரெழுச்சியுடன் ஞாபகமாக அந்த வெண்புறாவுக்கும் நன்றி சொல்லிவிட்டு, என் மனைவியை நேருக்கு நேர் பார்க்க விரும்பாதவனாக, அவளுடனேயே ஆட்டோவில் ஏறி என் வீட்டை அடைந்தேன்.

பொடிட்டின்னை என் வீட்டுப்பரணையில் என் மனைவி பார்க்கும் போதே விட்டெறிந்து விட்டேன்.   இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.

ஒரு அரை மணியோ ஒரு மணியோ, ஒரு மாதிரி தாக்குப்பிடித்து விட்டேன். அதன் பிறகு எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.  நடுவில் என் மனைவி சாப்பிடக்கூப்பிட்டு இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.   ஆனால் யார் பேசுவதும் என் காதிலேயே விழவில்லை.  உடல் பூராவும் ஒரு மாதிரி சோர்ந்துபோய், கண்கள் சொருக, சுத்த வழுவட்டையாகி விட்டேன். அப்படியே விட்டால், எனக்கு மூச்சே நின்றுவிடும் போல ஆனது, என்னால் மட்டுமே உணர முடிந்தது.    

நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.   

இவ்வாறு பொடியுடன் ஒன்றிப்போய்விட்ட அவரின் வாழ்க்கையை எண்ணி, ஆச்சர்யப்பட்டுப்போன நான் ”சமீபத்தில் நீங்கள் துபாய்க்குப்போய் வந்ததாகக் கேள்விப்பட்டேனே,  சார்; அங்கு நம்மூர் போல பொடிக்கடைகள் உண்டா? அந்த அனுபவத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ சார்”, என்றேன்.

“அது ஒரு மிகப்பெரிய கதையப்பா,  லஞ்ச்டயம் ஆவதற்குள் சுருக்கமாகச் சொல்கிறேன்.   துபாயிலிருக்கும் என் பெரிய பையன், ரொம்ப நாட்களாகவே என்னை அங்கு வரும்படி கூப்பிட்டும், இந்தப்பொடி விஷயமாகத்தான், அந்தப்பயணத்தையே ஒத்திப்போட்டு வந்தேன்.  பிறகு அவன் பிடிவாதம் தாங்கமுடியாமல், அவனது அழைப்பை ஏற்று, நான் புறப்பட்டுச்செல்லும்படி ஆனது.




விமானம் ஏறும் முன்பு என்னைப் பரிசோதித்த அதிகாரிகள், என் சட்டைப்பையிலிருந்த பொடிட்டின்னைத் திறக்கச்சொல்லி, அதில் நான் புதுசாக வாங்கி அடைந்திருந்த மூன்று ரூபாய்ப்பொடியையும் ஒரு ஓரமாக தரையில் என்னை விட்டே கொட்டிவிடச்சொல்லிவிட்டனர்.  

காலிட்டின்னை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதியளித்தனர்.  எனக்கு அழுகையே வந்து விட்டது.  கைவசம் பொடி இல்லாத இந்த வெளிநாட்டுப்பயணம் தேவை தானா என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டேன்.   

செக்-இன் முடிந்த என்னையும், மற்ற பயணிகளையும் வெளியே வரமுடியாதபடி (ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பது போல) ஓரிடத்தில் அடைத்து விட்டனர். நாம் செல்ல வேண்டிய விமானம் வந்து விட்டது என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் க்யூவில் நிற்க, நானும் வேறு வழியில்லாததால் அவர்களுடன் சேர்ந்து நிற்கும்படி ஆகி விட்டது. 

முதன் முதலாக விமானத்தில் ஏறும் நான், அந்த ஐந்து மணி நேர விமானப்பயணத்தில் நொந்து நூலாகிப்போனேன்.      எழுச்சியுடன் பொடிபோட்டுக்கொண்டு ஜாலியாகப் பயணிக்க வேண்டிய நான், வழுவட்டையாக காலியான பொடிட்டின்னை மோப்பம் பிடித்தவாறே பறந்து கொண்டிருந்தேன்.  

அழகழகான இளம்வயது குட்டிகளான விமானப் பணிப்பெண்கள் அவ்வப்போது என்னருகே வருகிறார்கள், பயணம் இனிமையாகட்டும் என்று சொல்லி வாழ்த்துகிறார்கள்.  





எனக்குத் தின்ன, சுவைக்க, குடிக்க, சாப்பிட, படிக்க என்று ஏதேதோ தந்துதான் அந்தப்பெண்கள் என்னை அவ்வப்போது கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருத்தியாவது என் அவசர மற்றும் அவசியத் தேவையாகிய பொடியை மட்டும் தராதது, எனக்கு என் பொடிபோடாத மூக்குக்குமேல் கோபத்தை வரவழைத்து, அந்த அழகிய பெண்கள் மேல் ஒரு வித, எரிச்சலையே ஏற்படுத்தியது.  

நல்லவேளையாக 50 கிராமில் இரண்டு பாக்கெட்களும், 10 கிராமில் 50 பாக்கெட்டுகளும், என்னுடைய வெவ்வேறு லக்கேஜ்களுடன் துணிமணிகளில் சுற்றியவாறு கடத்திச்சென்றதை, பறிமுதல் செய்யாமல் விட்டுவிட்டனர்.                                   

அந்தப்பொடியின் காரம், மணம், குணம் குறையும் வரை மட்டும், ஒரு 40 நாட்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் தங்கி ஷார்ஜா, துபாய், அபுதாபி என எழுச்சியுடன் அனைத்து இடங்களையும் என் மகனுடன் தினமும் காரில் சுற்றிப்பார்த்தேன். 

நம்மூர், திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயத்தை, நடு ரோட்டில் மலைபோல குவித்து வைத்திருப்பார்களே, அதே போல அங்குள்ள “இண்டர் நேஷனல் கோல்டு பஜார்” என்ற இடத்தில், ஒரு பெரிய தங்கநகைக் கடையில் ஜொலிக்கும் புத்தம்புதிய தங்க மோதிரங்களைக் குவித்து வைத்திருப்பதைப்பார்த்து நான் அசந்து போனேன்.

அதுபோல ’சிட்டிசென்டர்’ என்று ஒரு இடத்திற்கு என் மகன் காரில் கூட்டிச் சென்றான்.  அங்கு ”என்ன விசேஷம்”  என்று போகும் போது அவனிடம் நான் கேட்டேன்.   

“நீ அங்கு வந்து பாருப்பா;  அங்கு கிடைக்காத ஒரு சாமான் இந்த உலகிலேயே எதுவும் இருக்க முடியாது.  அவ்வளவு ஒரு மிகப்பெரிய ப்ரும்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது” என்றான்.

“அப்படியா! என்று கேட்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன். அப்படியானால் எப்படியும் இந்த மூக்குப்பொடி கிடைக்காமல் போகாது என்ற எண்ணத்தில்.  

”அங்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்கள் காரைப்பார்க் செய்யவே பலமாடிகள் கொண்ட மிகப்பிரும்மாண்டமான கட்டடம், கட்டியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 5000 கார்கள் வரை பார்க் செய்ய முடியும்.  எந்த மாடியில் எந்த ஸ்லாட்டில் நம் காரை பார்க் செய்திருக்கிறோம் என்பதை மட்டும் நாம் ஞாபகமாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் நம் காரை நாம் கண்டுபிடிக்கவே ஒரு வாரம் ஆகிவிடும்.   நாம் கார் நிறுத்தும் எந்தத்தளத்திலிருந்தும் அப்படியே நேராக அந்த மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்குள் நுழைந்து விடவும், அங்கிருந்து நாம் விரும்பும் தளத்திற்கு லிஃப்ட்டில் சுலபமாகச் செல்ல வசதிகளும்,  நகரும் படிக்கட்டுகளுமான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்திருகிறார்கள்” என்றான். 

அங்கு போய்ப்பார்த்தபின்புதான் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முழுவதுமாக பொறுமையாக ஒவ்வொரு பிரிவாக சுற்றி வரவே, சுத்தமாக ஒருமாதம் ஆனாலும் ஆகலாம் என்பது எனக்குத் தெரிய வந்தது.

உலகப்பிரசித்தி பெற்ற எல்லா நிறுவனங்களும் அங்கே ஏராளமான ஸ்டால்கள் அமைத்து, அனைத்துப்பொருட்களும் அங்கு கிடைத்தும், அதனால் எனக்கு என்ன பயன் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றியது. 

எனக்கு முக்கியமாகத் தேவைப்படும் மூக்குப்பொடி அங்கு கிடைக்குமா என்பது எனது சந்தேகம். அதுபற்றிய விபரம் எனக்குத் தெரியவில்லை. நான் பொடிபோடுவதே என் மகனுக்குப்பிடிக்காது.   அதனால் அவன் கண்ணெதிரில் நேருக்குநேர் நான் பொடி போடுவதும் கிடையாது. இது இவ்வாறு இருக்க, என் மகனிடம் போய், இந்த உலகச்சந்தையில் மூக்குப்பொடி கிடைக்குமா என்று நான் கேட்டால், என் ரசனை இவ்வளவு கேவலமானதா என்பது போல,  அவன் ஒரு வேளை, என்மேல் கோபப்பட்டாலும் படுவான்.   அதனால் அவனிடம் இதுபற்றி ஏதும் கேட்காமல் வாயையும், முக்கியமாக மூக்கையும் பொத்திக்கொண்டு சுற்றி வரலானேன். 

அங்குள்ள வேறு யாரிடமாவது கேட்டால் அவர்களால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். அல்லது லாகிரி வஸ்துவொன்றை உபயோகிக்கத்துடிப்பதாக, ஏதாவது தவறாக நினைத்து என்னைக் கைது செய்யவும் முயற்சிக்கலாம்.   

இதுபோல ஏதும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவனாக,  உலகச்சந்தையை உற்று நோக்குவது போல, ஒரு மணி நேரம் ஏதோ ஒருசில கடைகளை மட்டும் பார்த்துவிட்டு, சூடான கார்ன் (நம்மூர் சோளக்கருதை, நல்லா வேகவைத்து, உப்பு, எலுமிச்சை, மிளகுத்தூள் முதலியன தூவியது) ஒரு பேப்பர் டம்ளர் நிறைய வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்குள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து கொண்டேன். 

அதற்குள் என் மகனும், மருமகளும் ஏகப்பட்ட மளிகை சாமான்கள், காய்கறிகள், எண்ணெய் டின்கள், பால், தயிர், ஜூஸ் வகைகள், தீனி வகையறாக்கள் என்று வீட்டுக்குத்தேவையான அனைத்துப் பொருட்களையும் அள்ளி அள்ளி ஆங்காங்கே தயாராக இருக்கும் தள்ளுவண்டி ஒன்றை தரதரவென்று இழுத்து, பொருட்களை அந்த வண்டி நிறைய ரொப்பி, பில் போடும் இடத்திற்கு வண்டியை இழுத்து வந்து, கிரெடிட் கார்டை நீட்டினர்.   

ஐந்தே நிமிடங்களில் ஒவ்வொரு சாமான்களையும், அப்படிஅப்படியே ஒரு மிஷினில் தீபாராதனை போலக் காட்டியவுடன், அது கடகடவென்று பில் போட்டுக்கக்கி விட்டது.  பிறகு கிரெடிட் கார்டைப் பெற்றுகொண்டு, தள்ளுவண்டியுடன் லிஃப்டில் ஏறி, எங்கள் கார் நிறுத்தப்பட்டிருந்த நாலாவது தளத்திற்கு சமமான பகுதியில், லிஃப்டிலிருந்து வெளியே வந்து,  எங்கள் கார் வரை அந்த தள்ளு வண்டியைத்தள்ளிக்கொண்டு,  பிறகு தள்ளுவண்டியிலிருந்த அத்தனைப்பொருட்களையும், கார் டிக்கியில் அடைத்துக்கொண்டு, தள்ளுவண்டியை அங்கேயே ஓரம்கட்டி விட்டு,  எங்கள் வீடு நோக்கித் திரும்பலானோம். 

“எப்படிப்பா இருந்தது இந்த சிட்டி சென்டர் ஷாப்பிங் ஏரியா?” என்றான் என் மகன்.

“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான்.   ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.

என் கைவசம் வைத்திருந்த நம் நாட்டுப்பொடியின் காரம், மணம், குணம் குறையும் வரை ஒரு 40 நாட்கள் மட்டும்  துபாயில் எழுச்சியுடன் தங்கிவிட்டு, இதுபோல தினமும், ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டு ஒருவழியாக ஊருக்கு வந்து சேர்ந்தேன்.   

வரும் போது ஞாபகமாக ஒரு பெளச் பொடியை மட்டும், அண்டர்வேர் பையில் அடக்கமாக வைத்துக்கொண்டு, கைப்பைக்குள் (Hand Luggage) தனியே கொஞ்சமாக ஒரு விபூதி குங்குமப்பிரஸாதம் போல மடித்துப் போட்டுக்கொண்டு விமானம் ஏறிவிட்டேன்.   ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக ஓடினேன் நேராக நம்மூர் பொடிக்கடைக்கு - புதுப்பொடி வாங்க” என்று தன் பயணக்கட்டுரையை புட்டுப்புட்டு புரியும் படியாக எடுத்துரைத்து அசத்தி விட்டார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.    

லஞ்ச் முடிந்ததும் தனக்கு ஏதோ முக்கியமான கட்சிப்பணிகள் இருப்பதாகவும், அதனால் மத்யானம் என்னைத் தேடாதே என்றும் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.

இனியும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு முக்கியமான விஷயம், இந்தக் கட்சிப்பணிகள் என்று அடிக்கடி இவர் எஸ்கேப் ஆவது பற்றி மட்டுமே என்பதால்,  அதைப்பற்றிய என் பேட்டியை நாளைக்கே அவர் நம்மிடம் சிக்கும்போது ஞாபகமாகக் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.  







தொடரும்

80 கருத்துகள்:

  1. அட நடுவே வவஸ்ரீ அவர்களின் பயணக்கட்டுரை வேறா! பேஷ்.. பேஷ்… பொடி போடுபவர்களால் 5 நிமிடம் கூட பொடி போடாமல் இருக்கமுடியாது என்பது தெரிகிறது. கட்சிப் பணி என்ன என்பதை எனக்கும் தெரிந்து கொள்ள ஆவல் வந்து விட்டது. தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  2. லஞ்சுக்குள் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு
    அவசர வேளையாக சென்று விட்டஸ்ரீ மான் வ.வ.ஸ்ரீயை
    அரசு அலுவலங்களில் ஓய்வு பெரும் வயதில்
    இடை நிலைய்ப் பணிகளில் பணியாற்றும்
    அதிகார்களின் ஒட்டுமொத்த பிரதி நிதிபோல
    மிக அழகாகச் சித்தரித்துப் போகிறீகள்
    தொடர் மிகச் சிறப்பாகப் போகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பல அரசு அலுவலகங்களில் இப்படிதான் விவாதம் போகுதா ?

    பதிலளிநீக்கு
  4. சந்தடி சாக்குல துபாய் பயணத்தை ஒரு இடுகையாவே உள்ளே நுழைச்ச சாமர்த்தியம் பொடி விஷயம் இல்லை கோபு சார், படா விஷயம்.

    பதிலளிநீக்கு
  5. உலகப்பிரசித்தி பெற்ற எல்லா நிறுவனங்களும் அங்கே ஏராளமான ஸ்டால்கள் அமைத்து, அனைத்துப்பொருட்களும் அங்கு கிடைத்தும், அதனால் எனக்கு என்ன பயன் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றியது. //
    Very Impressive.

    பதிலளிநீக்கு
  6. //அவர் நான் பல்லாண்டு காலமாக பொடி போடும் ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து வன்மையாகக் கண்டித்து விட்டார்.// நல்ல டாக்டராயிருக்காரே!
    //பயணக்கட்டுரையை புட்டுப்புட்டு புரியும் படியாக எடுத்துரைத்து அசத்தி விட்டார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.// கூடவே ஷாப்பிங் போனா மாதிரி ஒரு ஃபீலிங்!
    :-))

    பதிலளிநீக்கு
  7. டும்டும்..டும்டும்...
    பயணக்கட்டுரை
    நடுவே!
    களைப்பு தீர்த்தது.

    பதிலளிநீக்கு
  8. விமான நிலையத்தில் //காலிடின்னை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதியளித்தனர். எனக்கு அழுகையே வந்து விட்டது.//

    பரிதாபம்தான்.

    துபாயும் கொஞ்சம் சுற்றி காமித்துவிட்டீர்கள்,பதிவு சிற்ப்பாக இருக்கு சார். மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. எப்படியோ எல்லார் கண்லயும் பொடி தூவி துபாய்க்கும் பொடி
    ஏற்றுமதி பண்ணிண்டு போயிட்டார் வ வ ஸ்ரீ

    ஆமாம்.பையனுக்கு பொடி போடறது பிடிக்காதுனா
    அவர் பையன் இந்த ப்ளாக் படிக்க மாட்டாரோ?

    //“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான். ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.//

    இதைப் படித்து விட்டு சிரித்தேன்

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?
    எந்நாடு என்றாலும் அது இந்நாட்டுற்கு ஈடாகுமா?

    பதிலளிநீக்கு
  10. கட்சிப் பணி பற்றி அறிய ஆவலாக உள்ளது.விரைவில் எதிர்பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  11. சார்....

    பொடி என்ன ப்ராண்ட்?

    //“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான். ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.//

    ஹா...ஹா...ஹா... ஊர்ல இப்படி தான் பல பேர் சொல்றாங்க... இங்க எங்கள கேட்டா தானே துபாய் பத்தி தெரியும்!!

    நிஜமாவே சொர்க்கமே என்றாலும் நம்மூர போல வருமா என்று பாடியது மிக பொருத்தமே!!

    பதிலளிநீக்கு
  12. துபாய் சுற்றிக் காட்டியதற்கு நன்றி வ.வ.ஸ்ரீ அவர்களே!
    கட்சிப் பணிகள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  13. //காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி..//

    பத்தாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே தோன்றக் கூடிய நகைச்சுவை ...

    விமானப் பணிப்பெண்கள் ஒருவருக்கு கூட பொடி பழக்கம் இல்லாதது வருத்தமே ..

    இருந்திருந்தால் அந்த சேவையும் செய்திருப்பார்கள் ..

    பதிலளிநீக்கு
  14. //விமானம் ஏறும் முன்பு என்னைப் பரிசோதித்த அதிகாரிகள், என் சட்டைப்பையிலிருந்த பொடிட்டின்னைத் திறக்கச்சொல்லி, அதில் நான் புதுசாக வாங்கி அடைந்திருந்த மூன்று ரூபாய்ப்பொடியையும் ஒரு ஓரமாக தரையில் என்னை விட்டே கொட்டிவிடச்சொல்லிவிட்டனர். //

    பொடியை அவர்களே கொட்டிருந்தால் கூட அவ்வளவு வருத்தம் தந்திருக்காது.
    ச்சே ..என்ன ஒரு அராஜகம் .

    பதிலளிநீக்கு
  15. பணிப்பளு காரணமாக வழுவட்டையாக இருந்துவிட்டேன். இன்று இரவு முழுவதும் வாசித்து விட்டு எனது பின்னூட்டங்களுடன் சந்திக்கிறேன் ஐயா. :-)

    பதிலளிநீக்கு
  16. நல்லா பொடி வெச்சு எழுதுறீங்க. தொடர் முடிஞ்சாலும் நாங்க பொடி பொடின்னு தும்மிக்கிட்டே இல்லை இல்லை சொல்லிக்கிட்டே இருப்போம்னு நினைக்கிறேன்:-)

    பதிலளிநீக்கு
  17. //என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.//

    மூக்கிற்கும் நாக்கு உள்ளது போல. அட்ரார்ரா நாக்கு மூக்கு..சும்மாவா எழுதி இருக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  18. வெங்கட் நாகராஜ் said...
    //அட நடுவே வவஸ்ரீ அவர்களின் பயணக்கட்டுரை வேறா! பேஷ்.. பேஷ்… //

    **நான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு UAE சென்று வந்தபோது எழுத ஆரம்பித்த பயணக்கட்டுரை முடிவடையாமல் வழுவட்டையாக பாதியில் நின்றவாறு இருந்தது. ஏராளமாக நான் ரசித்த விஷயங்கள் சிறுசிறு குறிப்புகளாக இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளன. கோர்வையாகக் கொண்டு வரவேண்டும் என்று எழுச்சியாக நினைத்த போதெல்லாம் பலவித குறுக்கீடுகள் வந்தன. அதில் ஓரிரண்டு விஷயங்களை மட்டும் எடுத்து, இந்தத் தொடரில் நம் வ.வ.ஸ்ரீ. அவர்களின் கதாபாத்திரம் வாயிலாகக் கொண்டுவந்து விட்டேன். அவ்வளவுதான் விஷயம், வெங்கட்**

    //பொடி போடுபவர்களால் 5 நிமிடம் கூட பொடி போடாமல் இருக்கமுடியாது என்பது தெரிகிறது//

    **அப்படியா, இருக்கலாம் என்று நானும் நினைக்கிறேன்**

    //கட்சிப் பணி என்ன என்பதை எனக்கும் தெரிந்து கொள்ள ஆவல் வந்து விட்டது. தொடரட்டும்!//

    **நேற்று திருவாரூரிலும், இன்று ஸ்ரீரங்கத்திலும் வேட்புமனு தாக்கல் அமர்க்களம் முடியட்டும். நாளை 25.03.2011 வெள்ளிக்கிழமை, நம் வ.வ.ஸ்ரீ. இன் அமர்க்களம் தெரிந்துவிடும்**

    பதிலளிநீக்கு
  19. Ramani said...
    //லஞ்சுக்குள் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு
    அவசர வேலையாக சென்று விட்டஸ்ரீ மான் வ.வ.ஸ்ரீயை அரசு அலுவலங்களில் ஓய்வு பெரும் வயதில் இடை நிலைய்ப் பணிகளில் பணியாற்றும்
    அதிகாரிகளின் ஒட்டுமொத்த பிரதி நிதிபோல மிக அழகாகச் சித்தரித்துப் போகிறீகள் தொடர் மிகச் சிறப்பாகப் போகிறது. தொடர வாழ்த்துக்கள்//

    **தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும், ஊக்குவிப்புக்கும், மிக்க நன்றிகள், ஐயா. அன்புடன் vgk**

    பதிலளிநீக்கு
  20. எல் கே said...
    //பல அரசு அலுவலகங்களில் இப்படிதான் விவாதம் போகுதா ?//

    **இப்படியும் சில இடங்களில் இருக்கலாம் என்ற கற்பனை மட்டுமே. அரசு ஊழியர்கள் நமது நண்பர்கள். சேவை மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் சேவை (தயவு) என்றும் நமக்குத்தேவை**

    பதிலளிநீக்கு
  21. சுந்தர்ஜி said...
    //சந்தடி சாக்குல துபாய் பயணத்தை ஒரு இடுகையாவே உள்ளே நுழைச்ச சாமர்த்தியம் பொடி விஷயம் இல்லை கோபு சார், படா விஷயம்.//

    **முடிவடையாமல் வழுவட்டையாக இருக்கும் என் UAE பயணக்கட்டுரையிலிருந்து, ஒரே ஒரு சதவீதம் மட்டும் இந்த வ.வ.ஸ்ரீ. க்கு என ஒதிக்கீடு செய்தேன். (அரசியல் தொகுதி ஒதிக்கீடு போல)அவ்வளவு தான். அதுவே படா விஷ்யமாகப் பட்டுள்ளது, தங்களுக்கு. மகிழ்ச்சியே !**

    பதிலளிநீக்கு
  22. இராஜராஜேஸ்வரி said...
    //உலகப்பிரசித்தி பெற்ற எல்லா நிறுவனங்களும் அங்கே ஏராளமான ஸ்டால்கள் அமைத்து, அனைத்துப்பொருட்களும் அங்கு கிடைத்தும், அதனால் எனக்கு என்ன பயன் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றியது. //

    /Very Impressive./

    **Thank you very much, Madam. I have also been IMPRESSED with your Impressive Comments.**

    பதிலளிநீக்கு
  23. middleclassmadhavi said...
    //அவர் நான் பல்லாண்டு காலமாக பொடி போடும் ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து வன்மையாகக் கண்டித்து விட்டார்.//

    /நல்ல டாக்டராயிருக்காரே!/

    **நீங்கள் என்ன அவரைப்போலி டாக்டர் என்றா நினைத்தீர்கள் !**

    //பயணக்கட்டுரையை புட்டுப்புட்டு புரியும் படியாக எடுத்துரைத்து அசத்தி விட்டார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.//

    /கூடவே ஷாப்பிங் போனா மாதிரி ஒரு ஃபீலிங்!/
    :-))

    **அப்படியே, மிகவும் சந்தோஷம்.**

    பதிலளிநீக்கு
  24. நையாண்டி மேளம் said...
    //டும்டும்..டும்டும்... பயணக்கட்டுரை நடுவே! களைப்பு தீர்த்தது.//

    **முதன் முதலாக வருகைதந்து மேளம் கொட்டி வரவேற்ற உங்களுக்கு என் நன்றிகள்.

    ஒரு சின்ன சந்தேகம் எனக்கு..... அதாவது:

    நீங்கள் என் கதையை ஆரம்பத்திலிருந்து படித்து விட்டு பாராட்டுகிறீர்களா அல்லது நடுவில் வந்து இந்தப்பகுதியை மட்டும் ஏதோ அவசரமாகப் படித்துவிட்டு, நையாண்டி செய்கிறீர்களா? என்று.

    எப்படியிருந்தாலும் சரி, உங்களுக்கு என் வாழ்த்துக்கள்**

    பதிலளிநீக்கு
  25. raji said...
    //எப்படியோ எல்லார் கண்லயும் பொடி தூவி துபாய்க்கும் பொடி ஏற்றுமதி பண்ணிண்டு போயிட்டார் வ வ ஸ்ரீ//

    **ஆமாங்க, சரியாகவே கண்டுபிடித்து சொல்லிட்டீங்க**

    //ஆமாம்.பையனுக்கு பொடி போடறது பிடிக்காதுனா
    அவர் பையன் இந்த ப்ளாக் படிக்க மாட்டாரோ?//

    **வ.வ.ஸ்ரீ. ஒரு கற்பனைக்கதாபாத்திரம் தானே. அவருக்கு ஏது மனைவியோ மகனோ?

    மேலும் துபாயிலிருப்பவர்களுக்கு (நம் கோபி சார் தவிர) ப்ளாக் படிக்க எங்க நேரம் இருக்கும். உழைப்பு உழைப்பு உழைப்பு அதுவே பிழைப்பு பிழைப்பு பிழைப்பு. பணம் பத்தும் செய்யுதுங்க!**

    //“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான். ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.//

    /இதைப் படித்து விட்டு சிரித்தேன்/

    **உங்களைக் கொஞ்சமேனும் சிரிக்க வைத்ததில் தான் என் ஜன்மா சாபல்யம் அடைவதாக நான் நினைக்கிறேன்.**

    //சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? எந்நாடு என்றாலும் அது இந்நாட்டுற்கு ஈடாகுமா?//

    **அருமையாகத்தான் அனுபவித்துப்பாடி இருக்கிறார்கள். இங்கு அதை நீங்கள் நினைவூட்டியது, தங்களின் தனித்திறமையை பெள்ர்ணமி நிலவுபோல பளிச்சென்று காட்டுகிறது.**

    நன்றியுடன் ... என்றும் உங்கள் பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  26. raji said...
    //கட்சிப் பணி பற்றி அறிய ஆவலாக உள்ளது.விரைவில் எதிர்பார்க்கிறோம்//

    **ஹச், ஹச், ஹச் என்று எல்லோருக்குமே ஒரு 15 நாட்களாகப்படுத்தி வந்த ஜலதோஷம் நாளையுடன் பரிபூரண குணமாக உள்ளது.

    நேற்று திருவாரூரிலும், இன்று இங்கு ஸ்ரீரங்கத்திலும் வேட்பு மனு தாக்கல் அமர்க்களப்படுகிறது. நாளை 25.03.2011 வ.வ.ஸ்ரீ. யின் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. அவர் என்னென்ன அமர்க்களப்படுத்தப் போகிறாரோ. பார்ப்போம். நீங்க இப்பவே சிரிக்கத் தயாராகிவிடலாம்.**

    பதிலளிநீக்கு
  27. வழுவட்டை,எழுச்சி, பொடி மட்டை இவற்றினூடே துபாய் பயண இடைசெருகல்கள் ரியலி இண்டெரஸ்டிங்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. R.Gopi said...
    //சார்.... பொடி என்ன ப்ராண்ட்?//

    **அதெல்லாம் நமக்கொன்றும் தெரியாது சார், நீங்க வேற ... ஏதாவது கற்பனை செய்யாதீங்கோ**

    //“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான். ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.//

    /ஹா...ஹா...ஹா... ஊர்ல இப்படி தான் பல பேர் சொல்றாங்க... இங்க எங்கள கேட்டா தானே துபாய் பத்தி தெரியும்!!/

    **நான் நேரில் பார்த்து உணர்ந்தவன் தான், நீங்களெல்லாம் அங்கு அனுபவிக்கும் ஒரு சில சுகங்களையும் அதேசமயம் ஏற்படும் பல சோகங்களையும்**

    /நிஜமாவே சொர்க்கமே என்றாலும் நம்மூர போல வருமா என்று பாடியது மிக பொருத்தமே!!/

    **திருமதி ராஜி அவர்களுக்குக்கொடுத்த பதிலே தங்களுக்கும் பொருந்தும்**

    பதிலளிநீக்கு
  29. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //அட ..பொடி விஷயம் துபாய் வரை போயிடுச்சா?//

    **ஆமாம் சார், போயிடுச்சு, ஆனா திரும்ப வந்துடுச்சு.
    ஏதோ ஐதர்காலத்து சமாசாரத்தை வ.வ.ஸ்ரீ. விவரிக்கிறார்**

    பதிலளிநீக்கு
  30. ! சிவகுமார் ! said...
    //என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.//

    /மூக்கிற்கும் நாக்கு உள்ளது போல. அட்ரார்ரா நாக்கு மூக்கு..சும்மாவா எழுதி இருக்கிறார்கள்../

    **தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

    தங்களின் கற்பனையில், இந்த வரிகளை அந்தப்பாடலுடன் இணைத்ததை நான் மிகவும் ரசித்தேன்

    நேரம் கிடைத்தால் மீண்டும் வாருங்கள். அன்புடன் vgk**

    பதிலளிநீக்கு
  31. கோவை2தில்லி said...
    //துபாய் சுற்றிக் காட்டியதற்கு நன்றி வ.வ.ஸ்ரீ அவர்களே! கட்சிப் பணிகள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்.//

    **வ.வ.ஸ்ரீ. சார்பில் உங்களுக்கு நன்றிகள். நாளைக்கு 25.03.2011 தெரிந்து கொள்வீர்கள், மேடம்.**

    பதிலளிநீக்கு
  32. போடி விஷயம் தான் - ஆனால் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  33. கணேஷ் said...
    //காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி..//

    /பத்தாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே தோன்றக் கூடிய நகைச்சுவை .../

    **தினமும் (இரவு படுக்கப்போகும்போது கூட)குறைந்தது 4 நல்ல காஃபியும், நள்ளிரவில் துளியூண்டு கள்ளிச்சொட்டு போன்ற வெறும் டிகாக்‌ஷனும் அருந்தும் லட்சத்தில் ஒருவனாக இருப்பதாலும், அடிக்கடி இந்த பிஃல்டர் காப்பிப்பொடி சக்கை முகத்தில் விழிக்க வேண்டியிருப்பதாலும், இந்த உதாரணத்தை சுலபமாகக்கையாள முடிந்தது.

    இதைக்குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ள உனக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்**

    /விமானப் பணிப்பெண்கள் ஒருவருக்கு கூட பொடி பழக்கம் இல்லாதது வருத்தமே .. இருந்திருந்தால் அந்த சேவையும் செய்திருப்பார்கள் ../

    **குடிக்க (Drinks) உற்சாகபானம் கூடத்தரும் இவர்கள், இந்தப்பொடி விஷயத்தில் ஓரவஞ்சகமாக இருப்பது ஏனோ என்பது தான் வ.வ.ஸ்ரீ. க்கு வந்த எரிச்சல். விமான சேவை வழங்கிவரும் நிறுவனங்கள் இதையும் பரிவுடன் பரிசீலிப்பார்களாக!**

    பதிலளிநீக்கு
  34. கணேஷ் said...
    //விமானம் ஏறும் முன்பு என்னைப் பரிசோதித்த அதிகாரிகள், என் சட்டைப்பையிலிருந்த பொடிட்டின்னைத் திறக்கச்சொல்லி, அதில் நான் புதுசாக வாங்கி அடைந்திருந்த மூன்று ரூபாய்ப்பொடியையும் ஒரு ஓரமாக தரையில் என்னை விட்டே கொட்டிவிடச்சொல்லிவிட்டனர். //

    /பொடியை அவர்களே கொட்டிருந்தால் கூட அவ்வளவு வருத்தம் தந்திருக்காது. ச்சே ..என்ன ஒரு அராஜகம்/

    **என் கண்ணெதிரிலில் இந்த சம்பவம் திருச்சி ஏர்போர்ட்டில் உண்மையாக நடந்தது.

    **அதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால், அந்த அதிகாரியும் பொடிபோடுபவர் போலிருக்கு. தான் ஒரு சிட்டிகை அதில் வாங்கி இழுத்துவிட்டு, அந்த பொடிட்டின் சொந்தக்காரரையும் கடைசியாக ஒரு இழுப்பு இழுக்கச்சொல்லி அனுமதி கொடுத்துவிட்டு, பிறகு தான் தரையில் ஒரு ஓரமாகக் கொட்டச்சொல்லி சொன்னார்.

    விமானக்கடத்தல் போன்ற தீவிரவாதங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நிகழ்வதால், அனுமதிக்க இயலவில்லை என்பதுதானே தவிர, எல்லா இடங்களிலும் சற்று மனிதாபிமானம் உள்ளது என்பதையும் மறப்பதற்கில்லை.

    இதை அராஜகம் என்று ஒரேயடியாகச் சொல்லவும் முடியாது.**

    பதிலளிநீக்கு
  35. சேட்டைக்காரன் said...
    //பணிப்பளு காரணமாக வழுவட்டையாக இருந்துவிட்டேன். இன்று இரவு முழுவதும் வாசித்து விட்டு எனது பின்னூட்டங்களுடன் சந்திக்கிறேன் ஐயா. :-)//

    **நேற்று இரவு முழுவதும் விழித்திருந்தும், தாங்கள் வராததால் வ.வ.ஸ்ரீ. தனது எட்டாவது பகுதியை எட்டமுடியாமல் தவிக்கிறார். உடனே வாங்க**.

    பதிலளிநீக்கு
  36. Gopi Ramamoorthy said...
    //நல்லா பொடி வெச்சு எழுதுறீங்க. தொடர் முடிஞ்சாலும் நாங்க பொடி பொடின்னு தும்மிக்கிட்டே இல்லை இல்லை சொல்லிக்கிட்டே இருப்போம்னு நினைக்கிறேன்:-)//

    **அப்படிப்போடு அரிவாளை!

    எப்போதாவது வந்து எட்டிப்பார்த்தாலும், கும்பகோணத்துக்காரருக்கு குறும்பு ஜாஸ்தியாகவே உள்ளது என்பது நல்லாவே தெரியுது**

    பதிலளிநீக்கு
  37. G.M Balasubramaniam said...
    //வழுவட்டை,எழுச்சி, பொடி மட்டை இவற்றினூடே துபாய் பயண இடைசெருகல்கள் ரியலி இண்டெரஸ்டிங்.வாழ்த்துக்கள்.//

    **ஐயா, வணக்கம். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    இழுத்துவிட்டுக்கொண்ட, என் இந்தத்தொடரை தொடர்ந்து கொண்டுபோவதில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தி வருவதால், உங்கள் வலைப்பூப்பக்கம் கொஞ்ச நாட்களாக வரமுடியாத சூழ்நிலை. மன்னிக்கவும். பிறகு ஒரு நாள் வந்து பொறுமையாகப்படித்து எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் தருகிறேன்.**

    பதிலளிநீக்கு
  38. Rathnavel said...
    //பொடி விஷயம் தான் - ஆனால் சுவாரஸ்யம்.//

    **ஐயா, வணக்கம். தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்கள் முதல் பதிவு போலவே உங்கள் இந்தப்பின்னூடமும் எனக்கு சுவாரஸ்யமாகவே உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வருக!**

    பதிலளிநீக்கு
  39. thirumathi bs sridhar said...
    //விமான நிலையத்தில்,காலிடின்னை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதியளித்தனர். எனக்கு அழுகையே வந்து விட்டது.//

    /பரிதாபம்தான்/

    **நல்ல தங்கமான மனஸு உங்களுக்கு. கற்பனையாகக் கதையில் வரும் யார் யாருக்கோ கூட பரிதாபப்படுகிறீர்கள். உங்கள் இந்த தங்கமான இரக்க குணம் கோடியில் ஒருவருக்கே கிடைக்கும் அபூர்வமானது. என் அன்பு சகோதரிக்கு இதுபோல மனஸு இருப்பதில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியே.**

    //துபாயும் கொஞ்சம் சுற்றி காமித்துவிட்டீர்கள்//

    **ஏதோ கொஞ்சூண்டு மட்டும் தான் காண்பிக்க முடிந்தது. காண்பிக்க இன்னும் பல விஷயங்கள் கைவசம் உள்ளன. நேரம் வரட்டும், காத்திருங்கள்**

    //பதிவு சிறப்பாக இருக்கு சார். மிக ரசித்தேன்//

    மிகவும் மகிழ்ச்சி சகோதரியே. தங்கள் ரசனைக்குக் கேட்கவா வேண்டும்? உங்கள் ப்ளாக்குக்கு வந்தாலே தெரிகிறதே! எவ்வளவு அழகான குழந்தைகள், பூக்கள், பறவைகள், என அனைத்தும் தினமும் ஒருமுறையாவது வருகை தந்து ரசிப்பவன் நான்.

    பதிலளிநீக்கு
  40. அடுத்தடுத்து வங்கி விடுமுறைகள் வருவதால், கொஞ்சம் பணிப்பளு அதிகமானதால் நகர முடியாத சூழல். இதோ வந்திட்டோமில்லே...?

    //எனக்கு டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது.//

    மணமணக்கும் பொடியில்லாமல் போனால் நொணநொணப்பு, முணுமுணுப்பு, தொணதொணப்பு எல்லாம் வரத்தானே செய்யும்? :-)

    பதிலளிநீக்கு
  41. //அவள் என்மீது காட்டிய கடைக்கண் பார்வையால், முன்னுரிமை அடிப்படையில்//

    அந்த ஆஸ்பத்திரி எங்கே சார் இருக்கு? சும்மா, நானும் சீக்கிரமா டாக்டரைப் பார்த்திட்டுப் போகலாமேன்னுதான்.

    பதிலளிநீக்கு
  42. //இனி பொடிப்பக்கமே தலை வைத்துப்படுக்கக்கூடாது, கண்ணாலும் பார்க்கக்கூடாது என்று இறுதி எச்சரிக்கையும் கொடுத்து விட்டார்.//

    இதைக் கேட்டதும் உங்களுக்கு மூக்குக்கு மேலே கோபம் வரவில்லையா?

    பதிலளிநீக்கு
  43. //இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.//

    ஹிஹி! :-))

    பதிலளிநீக்கு
  44. //நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.//

    அவர்கள் பெண்தெய்வம்!

    பதிலளிநீக்கு
  45. //கைவசம் பொடி இல்லாத இந்த வெளிநாட்டுப்பயணம் தேவை தானா என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டேன்.//

    இதயம் பொடிப்பொடியாகி விட்டதோ?

    வழக்கம்போல சுவாரசியமாக எழுதி, அசத்தியிருக்கிறீர்கள். கலக்கல்தான் போங்க!

    பதிலளிநீக்கு
  46. சார், முடிந்தால் pop-up window-வில் கமெண்ட்ஸ் போடுகிறா மாதிரி பண்ணுங்க! இன்னும் எளிதாக கருத்துப் போட முடியும். மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  47. சேட்டைக்காரன் said...
    //சார், முடிந்தால் pop-up window-வில் கமெண்ட்ஸ் போடுகிறா மாதிரி பண்ணுங்க! இன்னும் எளிதாக கருத்துப் போட முடியும். மிக்க நன்றி ஐயா!//

    **சார், எனக்கு இந்தத்தொழில்நுட்பங்கள் அவ்வளவாகத் தெரியாதுங்க.

    என் ஐம்பதாவது பிரஸவத்திலேயே எழுதியிருந்தேனே.

    ஏதோ இந்த ”மை டியர் பிளாக்கி” இப்போதான் கொஞ்சமாக ஒத்துழைப்பு தருகிறாள்.

    பதிவு வெளியிடவும், பின்னூட்டம் கொடுக்கவும் மட்டும் என்னால் இப்போது முடிகிறது.

    நான் ஏதாவது அவளை, மேலும் தொந்தரவு செய்யப்போய் இப்போது தரும் இன்பமும் கிடைக்காமல் செய்து விடுவாளோ என்ற பயமும் உள்ளது.

    போகப்போக அவளை ஏதாவது தாஜா செய்து பார்க்கிறேன்.**

    பதிலளிநீக்கு
  48. சேட்டைக்காரன் said...
    //கைவசம் பொடி இல்லாத இந்த வெளிநாட்டுப்பயணம் தேவை தானா என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டேன்.//

    /இதயம் பொடிப்பொடியாகி விட்டதோ?/

    **ஆமாம் வ.வ.ஸ்ரீ. யின் இதயம் பொடிப்பொடியாக
    உடைந்துத்தான் இருந்திருக்கும்**

    வழக்கம்போல சுவாரசியமாக எழுதி, அசத்தியிருக்கிறீர்கள். கலக்கல்தான் போங்க!/

    **மிக்க நன்றி, நாளை 25/03/2011 இறுதிப்பகுதி வெளியிட உள்ளேன். அவசியம் படியுங்கள். கருத்து கூறுங்கள்**

    பதிலளிநீக்கு
  49. சேட்டைக்காரன் said...
    //நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.//

    /அவர்கள் பெண்தெய்வம்!/

    **கல்லானாலும், புல்லானாலும் போல பொடியானாலும் போலிருக்கு**

    பதிலளிநீக்கு
  50. சேட்டைக்காரன் said...
    //இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.//

    ஹிஹி! :-))

    **சிலபேர், சில மணி நேரங்கள் மட்டும் (அடுத்து பசிக்கும் வரை அல்லது உணவு கிடைக்கும் வரை)உண்ணாவிரதம் இருப்பது போல, இவரும் ஒருமுறை பொடி போட்டால் அடுத்தமுறை போடுவதற்கு நடுவில் பொடியே போடாதவர் தான்**

    பதிலளிநீக்கு
  51. சேட்டைக்காரன் said...
    //இனி பொடிப்பக்கமே தலை வைத்துப்படுக்கக்கூடாது, கண்ணாலும் பார்க்கக்கூடாது என்று இறுதி எச்சரிக்கையும் கொடுத்து விட்டார்.//

    /இதைக் கேட்டதும் உங்களுக்கு மூக்குக்கு மேலே கோபம் வரவில்லையா?/

    **பொடியைப்பற்றி இந்த டாக்டர்பயலுக்கு என்ன தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்திருப்பார் வ.வ.ஸ்ரீ. அவர்கள்.

    வந்த கோபத்தில் டாக்டரை இழுப்பதற்கு பதிலாக வெளியே வந்ததும் ஒருமுறை நன்றாகப் பொடியை இழுத்துவிட்டுத்தானே, அந்த வெண்புறாவுக்கு நன்றி கூற எழுச்சியுடன் ஓடினார்.**

    பதிலளிநீக்கு
  52. சேட்டைக்காரன் said...
    //அவள் என்மீது காட்டிய கடைக்கண் பார்வையால், முன்னுரிமை அடிப்படையில்//

    /அந்த ஆஸ்பத்திரி எங்கே சார் இருக்கு? சும்மா, நானும் சீக்கிரமா டாக்டரைப் பார்த்திட்டுப் போகலாமேன்னுதான்./

    **அந்த ஆஸ்பத்திரி பற்றிய மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணைப்புக்குச்செல்லுங்கள். வெண்புறாக்கள் கூட்டமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளும்.
    http://gopu1949.blogspot.com/2011/02/blog-post_6123.html “வாய் விட்டுச் சிரித்தால் ....”**

    பதிலளிநீக்கு
  53. சேட்டைக்காரன் said...
    //அடுத்தடுத்து வங்கி விடுமுறைகள் வருவதால், கொஞ்சம் பணிப்பளு அதிகமானதால் நகர முடியாத சூழல். இதோ வந்திட்டோமில்லே...?//

    **மிக்க நன்றி, சார். நீங்க வந்தால் தான் எனக்கு ஒருவித எழுச்சியே ஏற்படுகிறது. அதனால் தான் நிறைய நினைவூட்டுகள் அனுப்பியிருந்தேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்**

    //எனக்கு டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது.//

    மணமணக்கும் பொடியில்லாமல் போனால் நொணநொணப்பு, முணுமுணுப்பு, தொணதொணப்பு எல்லாம் வரத்தானே செய்யும்? :-)

    **உங்கள் வருகையும், கருத்துக்களும் கூட மணமணக்கும் பொடிபோலவே அருமை தான்.

    நன்றிகள் ... அன்புடன் vgk**

    பதிலளிநீக்கு
  54. ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.
    கொஞ்சங்கூட மணம் குறையாமல் வளர்கிறதே.. நகைச்சுவை டப்பா!

    பதிலளிநீக்கு
  55. ரிஷபன் said...
    //’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.
    கொஞ்சங்கூட மணம் குறையாமல் வளர்கிறதே.. நகைச்சுவை டப்பா!//

    சார், நல்ல வேளையா இன்னிக்கு வந்துட்டீங்க.
    மிகவும் நன்றி. நாளைக்கு இந்த கதையின் நிறைவுப்பகுதி வெளியிட உள்ளேன். உங்கள் வாழ்த்துக்களுடன் நல்லபடியாக நிறைவேற வேண்டும். நாளைய தினமும் அவசியம் வாங்கோ.
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  56. மிஸ்டர் பொடிமட்டை நோ :)))வழுவட்டை சிறந்த கலாரசிகர் என்று நினைக்கிறேன் .வெண் புறா நர்ஸ் /விமான பணிப்பெண்கள் என்று நல்லா வர்ணனைகள் .
    இங்கே ஒரு ஏசியன் கடையில் பங்களாதேஷ் நாட்டு பொடி பார்த்தேன் /புகையிலை கொட்டை பாக்கு எல்லாம் கிடைக்குது :)))

    பதிலளிநீக்கு
  57. பொடி நடையாக பள்ளி சென்று மகளை கூட்டிட்டு வந்திடறேன் அப்புறம் லாஸ்ட் பார்ட் கமென்ட் எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
  58. வழுவட்டை சார் துபை போய் வந்த நிகழ்வு சுவாரஸ்யம்.சிட்டி செண்டரில் பொடி தேடியது சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
  59. angelin said...
    மிஸ்டர் பொடிமட்டை நோ :)))வழுவட்டை சிறந்த கலாரசிகர் என்று நினைக்கிறேன் .வெண் புறா நர்ஸ் /விமான பணிப்பெண்கள் என்று நல்லா வர்ணனைகள் .
    இங்கே ஒரு ஏசியன் கடையில் பங்களாதேஷ் நாட்டு பொடி பார்த்தேன் /புகையிலை கொட்டை பாக்கு எல்லாம் கிடைக்குது :)))//

    அன்புள்ள நிர்மலா,

    மிக்க நன்றி. சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  60. angelin said...
    //பொடி நடையாக பள்ளி சென்று மகளை கூட்டிட்டு வந்திடறேன் அப்புறம் லாஸ்ட் பார்ட் கமென்ட் எழுதுகிறேன்//


    அன்புள்ள நிர்மலா,

    ;))))) பொடி நடையாக எழுச்சியுடன் போய் மகிழ்ச்சியுடன் மகளைக் கூட்டி வாருங்கள். வழுவட்டையை வந்து பார்த்துக்கொள்ளலாம். ;)))))

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  61. ஸாதிகா said...
    வழுவட்டை சார் துபை போய் வந்த நிகழ்வு சுவாரஸ்யம்.சிட்டி செண்டரில் பொடி தேடியது சிரிப்பை வரவழைத்தது.//

    மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  62. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  63. டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.
    காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி, என் மூச்சுக்குழல் முழுவதும் ஒரே இருட்டாக ஒன்றுமே தெரியாமல் வழுவட்டையாக இருப்பதாகக்கூறி,
    இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.

    நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.
    இதுபோல ஏதும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவனாக, உலகச்சந்தையை உற்று நோக்குவது போல, ஒரு மணி நேரம் ஏதோ ஒருசில கடைகளை மட்டும் பார்த்துவிட்டு,
    ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.
    //

    -மிகவும் இரசித்த வரிகள் ! நகைச்சுவை தங்களுக்கு மிக இயல்பாக வருகிறது! ஒரு புதிய நகைச்சுவைத் தொடரை எழுத வேண்டுகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  64. Seshadri e.s. said...
    டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.

    காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி, என் மூச்சுக்குழல் முழுவதும் ஒரே இருட்டாக ஒன்றுமே தெரியாமல் வழுவட்டையாக இருப்பதாகக்கூறி,
    இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.

    நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.

    இதுபோல ஏதும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவனாக, உலகச்சந்தையை உற்று நோக்குவது போல, ஒரு மணி நேரம் ஏதோ ஒருசில கடைகளை மட்டும் பார்த்துவிட்டு,
    ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.
    //

    -மிகவும் இரசித்த வரிகள் ! நகைச்சுவை தங்களுக்கு மிக இயல்பாக வருகிறது!

    ஒரு புதிய நகைச்சுவைத் தொடரை எழுத வேண்டுகிறேன்! நன்றி!//


    தாங்கள் மிகவும் ரஸித்து சிரித்து மகிழ்ந்து சந்தோஷப்பட்டப்பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    என்னுடைய பெரும்பாலான படைப்புகளில் நகைச்சுவைக்குத்தான் முதலிடம் கொடுத்திருப்பேன்.

    பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

    ’எலி’ஸபத் டவர்ஸ்

    போன்றவைகளும், சென்ற ஆண்டு 2011 ஜனவரி முதல் ஜூன் வரை வெளியிடப்பட்டுள்ள பல சிறுகதைகளும், இதே போல மிகவும் நகைச்சுவையாகவே இருக்கும்.

    முடிந்தால் எல்லாவற்றையும் மேலும் அதிகம் பேர் படிக்க வசதியாக மீள் பதிவாக வேண்டுமானால் கொடுக்க முயற்சிக்கிறேன்.

    அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்களுக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  65. // நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார். //

    ஒரு பழக்கத்தை தொடர்ந்தவர்கள் திடீரென்று அதை நிறுத்தினால் படும் அவஸ்தையை பார்க்கும்போது, உண்மையில் அவர்கள் மீது பரிதாபம்தான் உண்டாகிறது. பொடி போடும் பழக்கம் உள்ளவர்கள் அதை விட்டுவிட மனம் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  66. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாங்க, வணக்கம்.

    கதையிலிருந்து எனக்கும் மிகவும் பிடித்த ஓர் பகுதியைச் சுட்டிக்காட்டி கருத்துக்கள் கூறியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  67. பழக்கம்னு ஆரம்பிச்சு நிறுத்த முடியாமல் தவிப்பதை அழகாகச் சொல்லி இருக்கீங்க. பலருக்கும் இந்த அவஸ்தை இருக்கும். :(

    துபாயின் முக்கியமான இடங்களைச் சுற்றிக் காட்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam July 23, 2013 at 12:36 AM

      வாங்கோ ..... வணக்கம்.

      //பழக்கம்னு ஆரம்பிச்சு நிறுத்த முடியாமல் தவிப்பதை அழகாகச் சொல்லி இருக்கீங்க. பலருக்கும் இந்த அவஸ்தை இருக்கும். :( //

      நிச்சயமாக இருக்கலாம் தான். எதையும் பழக ஆரம்பித்து விட்டால் பிறகு நிறுத்துவது மிகவும் கஷ்டம் தான். என்ன செய்வது?

      //துபாயின் முக்கியமான இடங்களைச் சுற்றிக் காட்டி விட்டீர்கள்.//

      இந்தக்கதை எழுதுவதற்கு ஒரு ஆறு மாதம் முன்பு தான் நான் துபாய் பயணம் மேற்கொண்டிருந்தேன். [2004] அது பற்றி நிறைய குறிப்புகள் எழுதி வைத்திருந்தேன்.

      அப்போதெல்லாம் BLOG பற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. பய்ணக்கட்டுரை போல எழுத நினைத்திருந்தேன். ஆனால் அதையும் என்னால் செய்ய முடியாமல் போனது.

      அந்தக்குறையை கொஞ்சம் நிவர்த்தி செய்தால் போல, இந்தக்கதையுடன் கொஞ்சம் துபாய் சுற்றுப் பயணத்தையும் முடித்துப்போட்டு எழுதி விட்டேன். நகைச்சுவைக்காக மட்டுமே.

      நீக்கு
  68. ஸ்கேனிங்க் செய்வதற்குப் பெயர் தீபாராதனையா? நல்ல உதாரணம்தான்.

    பதிலளிநீக்கு
  69. துபாய் மால் களில் மத்தவங்க எதையெல்லாமோ தேடுவாங்க நம்ம ஆளோ பொடி இருக்கான்னு தேடி இருக்கார்

    பதிலளிநீக்கு
  70. பின்னாளில் அருமையான துபாய் பயணக் கட்டுரை எழுதப் போறோம்ன்னு தெரிஞ்சிருந்தா இந்த கதையில் துபாய் பயணத்தை புகுத்தி இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

    ஒரு மேடை நாடகத்துல ஒரு வசனம் வரும் ‘ஏஷியானிக் ஹோட்டல்ல போய் பூஷிணிக்காய் மோர்க்குழம்பி கேட்டானான்’ அப்படீன்னு. அந்த மாதிரி உங்க பொடி கதாநாயகர் (அதான் பொடி போடும் கதாநாயகர்) துபாய்ல போய் மூக்குப் பொடி கிடைக்குமான்னு பார்க்கறாரே.

    நல்ல வேளை யார் கிட்டயும் கேக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 17, 2015 at 9:40 PM

      வாங்கோ ஜயா, வணக்கம்மா.

      //பின்னாளில் அருமையான துபாய் பயணக் கட்டுரை எழுதப் போறோம்ன்னு தெரிஞ்சிருந்தா இந்த கதையில் துபாய் பயணத்தை புகுத்தி இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.//

      கரெக்டா சொல்லிட்டீங்க ஜயா. இது என் முதல் துபாய் பயணம் 2004இல் முடித்த பிறகு எழுதியதோர் கதை. இரண்டாம் முறைப்பயணம் இப்போ சமீபத்தில் 2014இல் .. பத்தாண்டுகளுக்குப்பிறகு ... அதுவும் சற்றும் எதிர்பாராதது. :)

      நீக்கு
  71. மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

    அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

    அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

    'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

    மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

    முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

    இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  72. பொடி கத துபைய சுத்தி பாக்க போச்சா. படிக்குரவங்களுக்கெல்லாம் செம காமெடி விருந்துதா,

    பதிலளிநீக்கு
  73. டாக்டர பாக்க போன இடத்துல அந்த இடைவேளை நேரத்தில் கூட பொடிய விட முடியலை இனி பொடியே போடுவதில்லை என்கிற பிரசவ வைராக்கியம்மட்டும் எப்படி. முதல்லயே பொடி கிடைக்காதுன்னு தெரிஞ்சிருந்தா துபாய் பயணத்தையே கேன்சல் பண்ணியிருப்பார்போல.

    பதிலளிநீக்கு
  74. //“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான். ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.// அப்பால என்ன நைனா...மூக்கு நமநமங்குதே...பொடிபோடத்தாவல...

    பதிலளிநீக்கு
  75. ஆஸ்பிடலில் நர்ஸை வெண்புறாவுக்கு உவமை கூறியது சிறப்பு.. தீபாராதனை காட்டியது அதைவிட சிரி(ற)ப்பு..))) துபாய் போய்க்கூட ரசிச்சு சுத்தி பார்க்கலாம் பொடிகிடைக்குமான்னு தேடி இருக்கிறாரே.. நம்ம ஹீரோ.... அப்படியே கிடைத்திருந்தாலும் மகன் வாங்கி கொடுத்திருக்க மாட்டாங்க. இவரே போயி தெரியாம வாங்க முயற்சித்தாலும் நம்ம ஊரு பொடி போல காரம் மணம் குணம் இல்லையேன்னு புலம்புவாங்க.... துபாயை இன்னும் சுற்றி காட்டியிருக்கலாமே..நம்ம வ .வ. ஸ்ரீ.. பார்வையில்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... May 26, 2016 at 11:33 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஸ்பிடலில் நர்ஸை வெண்புறாவுக்கு உவமை கூறியது சிறப்பு..//

      மகிழ்ச்சி. :)

      //தீபாராதனை காட்டியது அதைவிட சிரி(ற)ப்பு..)))//

      மிக்க மகிழ்ச்சி. :))

      //துபாய் போய்க்கூட ரசிச்சு சுத்தி பார்க்கலாம் பொடிகிடைக்குமான்னு தேடி இருக்கிறாரே.. நம்ம ஹீரோ.... அப்படியே கிடைத்திருந்தாலும் மகன் வாங்கி கொடுத்திருக்க மாட்டாங்க. இவரே போயி தெரியாம வாங்க முயற்சித்தாலும் நம்ம ஊரு பொடி போல காரம் மணம் குணம் இல்லையேன்னு புலம்புவாங்க....//

      ஆமாம். நீங்க சொல்வதுதான் கரெக்ட்டூஊஊஊஊ. :)))

      //துபாயை இன்னும் சுற்றி காட்டியிருக்கலாமே..நம்ம வ .வ. ஸ்ரீ.. பார்வையில்.....//

      துபாயை என் பார்வையில் (நானும் ஒரு வழுவட்டைதான் என்பதால்) சுமார் 20 பகுதிகளாக வெளியிட்டுள்ளேன்.

      ஆரம்பப் பகுதி-1
      http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html

      நிறைவுப்பகுதி-20
      http://gopu1949.blogspot.in/2015/01/20.html

      அதிலுள்ள படங்களை மட்டுமாவது இன்றே பார்த்து மகிழுங்கள். பிறகு பொறுமையாக ஒவ்வொன்றாகப் படித்துக்கொள்ளலாம்.

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி. - VGK

      நீக்கு