”பாத் ரூமிலிருந்து எழுச்சியுடன் வந்து தன் சீட்டில் அமர்ந்த வ.வ.ஸ்ரீ, நான் வந்து அவர் அருகே அமர்ந்திருப்பது கூடத் தெரியாமல், ஒரு பெரிய டர்க்கி டவலால், தனது பளபளக்கும் தலை முதல், முகம், கழுத்து, முழங்கை, கை விரல்கள் வரை சுத்தமாகத் துடைத்துக் கொண்டுவிட்டு, ஒரு சிட்டிகைப் பொடியை கை விரல்களால் எடுத்துக்கொண்டு, தரையில் ஒரு உதறு உதறிவிட்டு, பொடிட்டின்னையும் கையோடு மூடிவிட்டு, என்னை எழுச்சியுடன் ஒரு பார்வை பார்த்தார், என் அடுத்தடுத்தத் தொடர்த்தும்மல்கள் எப்படி இருந்தன? என்று கேட்பது போல!.
இங்கேயே உட்கார், எழுந்து போய் விடாதே, என்பது போல கைஜாடை காட்டி என்னை அமர வைத்தார்.
சற்றே கீழே குனிந்தவர், தன் கைவிரல்களில் இடுக்கியிருந்த பொடியை சர்ரென்று ஒரே இழுப்பாக மூக்கினுள் இழுத்து விட்டு, கையைக் கர்சீப்பால் துடைத்துக்கொண்டு, பிறகு அந்தக் கர்சீப்பையே, ஹோட்டல்களில் தோசையைச் சுருட்டி பார்சலாகத்தருவார்களே, அதே போலச் சுருட்டி மூக்குத் துவாரங்களுக்கு அருகில், அதாவது மீசை இருக்க வேண்டிய இடத்தில் நீளவாக்கில் தன் இரு கைகளாலும் வயலின் அல்லது ஃபிடில் வாசிப்பது போலப் பிடித்தவாறே, தன் தலையையும் மூக்கையும் ஒரே ஆட்டாக ஆட்டினார்.
அதாவது இவர் தன் மூளையை நோக்கிச் செலுத்திய அந்த ஒரு சிட்டிகைப்பொடியில், சில துகள்கள் மட்டும் நாம் இவர் மூளைக்குள் போய்ப் பார்ப்பதற்குப் பெரிதாக என்ன இருக்ககூடும் என்ற எண்ணத்தில், தங்கள் பயணத்தை ஒரு வித எழுச்சியுடன் தொடராமல், இடையே, மூக்கினுள் உள்ள முடிகளில் படிந்து விட்டிருக்கும் போல. அந்த வழுவட்டையானத் துகள்களைத்தான் இப்போது ஒட்டடை அடிப்பது போல ஏதோ செய்து வெளியேற்றி வருகிறார், என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
ஸ்டெடியாக நிமிர்ந்து உடகார்ந்து என்னை நோக்கிய அவரிடம், ”ஒரு நாளைக்குப் பொடிக்கு மட்டும் எவ்வளவு சார், செலவு செய்கிறீர்கள்?” என்று மெதுவாக என் பேட்டியை ஆரம்பித்தேன்.
“ஐந்து பைசா மட்டையில் ஆரம்பித்தேன் 1966 இல். இப்போ தினமும் நாலு ரூபாய் செலவாகிறது. அதில் எனக்கு மட்டும் மூன்று ரூபாய், நண்பர்களுக்காக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே. அவனவன் சத்திரம் கட்டுகிறான், சாவடி கட்டுகிறான், ஆஃப்டர் ஆல் நம்மால் முடிந்தது இந்த சிறிய பொடி தர்மமாவது தினமும் செய்யலாமே என்று தான்” என்றார்.
”தினமும் நாலு ரூபாய்க்கு மூக்குப்பொடியா, என்ன சார் இப்படி, ரொம்பவும் அநியாயமாக உள்ளதே!” என்றேன்.
”விலைவாசியெல்லாமே ஏறிப்போயிடுத்துப்பா; உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ! ஒரு கிலோ ப்யூர் காஃபிப்பொடியை விட, ஒரு கிலோ மூக்குப்பொடி விலை அதிகம்” என்றார் வ.வ.ஸ்ரீ.
”தொடர்ந்து பொடி போடுவதனால் உடம்புக்குக் கெடுதல் இல்லையா, சார்” என்றேன்.
“இது எங்கப்பரம்பரை வழக்கமப்பா, நான் என்ன செய்வது?; எங்க தாத்தா (அப்பாவோட அப்பா) தவறிப்போகும் போது அவருக்கு வயது 108. அவர் தன் 12 ஆவது வயதிலிருந்து பொடிபோடப் பழகியவர்ன்னு கேள்வி.
என் அப்பாவும் பொடி போடுவார். அவர் என் தாத்தாபோல செஞ்சுரி போடாவிட்டாலும் பொடி போட்டே 99 வயதுக்கு மேல் ஒரு மூணு மாதமும் வாழ்ந்தவர். சொல்லப்போனால் அவரின் அந்த இறுதி மூச்சு நின்ற நாள் காலையிலிருந்தே அவர் பொடி போடவில்லை.
சுற்றி நின்ற எங்களுக்கெல்லாம் அது தான் மிகப்பெரிய கவலையாக இருந்தது. எது சாப்பிட்டாலும் நன்றாக முடிந்தவரை வயிறு முட்ட சாப்பிடுபவர். விரத நாட்களில் பட்டினி இருந்தாலும் சுத்தமாக இரண்டு நாட்கள் வரை எதுவுமே சாப்பிடாமல் முழுப்பட்டினி இருந்து விடுபவர். ஆனால் பொடி மட்டும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை வீதம் மூக்கில் இழுத்துக்கொண்டே இருக்கனும் அவருக்கு.
அந்த அவரின் கடைசி நாள் அன்று, பொழுது விடிந்தது முதல் அந்தப்பொடியைத் திரும்பியே பார்க்கவில்லை என்றதுமே, எங்களுக்கு விசாரம் அதிகமாகி, ஓடிப்போய் நாட்டுவைத்தியரை கூட்டிவந்து காட்டி, அவரும் நாங்களுமாக வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போட்டும், மனுஷன் வைராக்கியமாக அதை மூக்கில் இழுத்துக்கொள்ளாமல், இறுதி மூச்சையே விட்டுவிட்டார்” எனச் சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார், வ.வ.ஸ்ரீ.
99 வயது வரை வாழ்ந்து முடிந்து, அதன்பிறகு, அதுவும் என்றைக்கோ இறந்துபோன, தன் தந்தையை நினைத்து இன்றைக்குப்போய் இவர் கண்ணீர் விட, நான் காரணமாகி விட்டேனே என எனக்கே சற்று சங்கடமாக இருந்தது.
அன்றைய அலுவலக நேரம் இத்துடன் முடிந்து விட்டதால், நாங்கள் ஆற்ற வேண்டிய அரும் பணியை இவ்விதமாகப் பேசிப்பேசியே (Group Discussions)கழித்து விட்ட நாங்களும் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானோம்.
தொடரும்
பொடி மகாத்மியம் ப்ரமாதம்
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்....
ஸ்ரீமான் வழுவட்டையாரின் ஃபிளாஷ்பேக் உருக்கம்.
பதிலளிநீக்குவழமைபோலவே படுசுவாரசியமாகச் சொல்லியிருக்கிறீர்கள். :-)
பொடி மூக்கினுள் போவதில் எத்தனை விளக்கமான காமெடி என்றாலும்,அப்பாவிற்காக இந்த வயதிலும் கண்ணீர் விட்டது சோகம்தான்
பதிலளிநீக்கு/அவரும் நாங்களுமாக வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போட்டும்,/ ட்ராஜிகல் காமெடி!
பதிலளிநீக்குஎந்த வயதில் இறந்திருந்தாலும் இறந்து எத்தனை வருடங்கள்
பதிலளிநீக்குஆகியிருந்தாலும் தந்தையின் இறப்பு ஒரு சோகம்தான்
அடுத்து என்ன நடந்தது?
பதிலளிநீக்குஎழுத்துலக பொடியன்கள் எல்லாம் நகைச்சுவையாய் எழுத உங்களை ஃபாலோ பண்ணனும்..
பதிலளிநீக்கு(Group Discussions சூப்பர்.மலரும் பொடி நினைவுகள்
பதிலளிநீக்குஅருமை.
கதையைப் படிக்கும் போதே பொடி வாசனை வருகிறது
பதிலளிநீக்குபொடி போடும் ஆசாமியோட நிறைய காலம் பழகி இருந்தால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும்.
பதிலளிநீக்குதோசை பார்சல் ,பிடில் ..நகைச்சுவையின் உச்சக்கட்டம்.
Ramani said...
பதிலளிநீக்கு//பொடி மகாத்மியம் ப்ரமாதம்
தொடர வாழ்த்துக்கள்....//
தங்களில் முதல் வருகைக்கும் ப்ரமாதமான வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்,ஐயா. அடுத்தடுத்த பகுதிகள் 17, 19, 21, 23 & 25 ஆகிய தேதிகளில் வெளியிட உள்ளேன். தொடர்ந்து வாருங்கள்.
சேட்டைக்காரன் said...
பதிலளிநீக்கு// ஸ்ரீமான் வழுவட்டையாரின் ஃபிளாஷ்பேக் உருக்கம்.
வழமைபோலவே படுசுவாரசியமாகச் சொல்லியிருக்கிறீர்கள். :-) //
மிக்க நன்றி சார்.
நீங்களே தொடர்ந்து வந்து பின்னூட்டம் இடுகிறீர்கள் என்ற ஒரே காரணத்தால் தான், நானும் என்னால் முடிந்தவரை படுசுவாரஸ்யமாகக் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.
கடைசிவரை எல்லாப்பகுதிகளுக்கும் தாங்கள் அவசியமாக வருகை புரிந்தருள வேண்டும்.
முக்கியமாக பின்னூட்டம் அளிக்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளுடன் உங்கள் ரசிகன்: vgk
thirumathi bs sridhar said...
பதிலளிநீக்கு//பொடி மூக்கினுள் போவதில் எத்தனை விளக்கமான காமெடி என்றாலும்,அப்பாவிற்காக இந்த வயதிலும் கண்ணீர் விட்டது சோகம்தான்.//
மிகவும் ரசித்துப்படித்துள்ளீர்கள் என்பது புரிகிறது, சகோதரியே. தொடர்ந்து வாருங்கள், கருத்துக்களைக் கூறுங்கள்.
middleclassmadhavi said...
பதிலளிநீக்கு// /அவரும் நாங்களுமாக வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போட்டும்,/ ட்ராஜிகல் காமெடி! //
ட்ராஜடியையும் காமெடியையும் கலந்து கொடுத்துள்ள தங்களின் பின்னூட்டம், சற்றே சிக்கரி கலந்த காஃபி போல, ஃப்ளேவர் தூக்கலாக உள்ளது. நன்றி.
raji said...
பதிலளிநீக்கு//எந்த வயதில் இறந்திருந்தாலும் இறந்து எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும் தந்தையின் இறப்பு ஒரு சோகம் தான்.//
மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். நான் கருவில் உருவான நாள் முதல், தனது வாழ்வின் இறுதி நாள் வரை (On 23.05.1997 at her age of 87)என்னுடனேயே இருந்து வந்த என் அன்புத்தாயின் இழப்பை இன்று நினைத்தாலும் எனக்கு அழுகை வருவதுண்டு.
பொடிக்காக மூக்குகள் காத்துக் கொண்டிருப்பது போல்,
பதிலளிநீக்குஎங்கள் கண்களும் காத்துக் கொண்டிருக்கின்றன,’அடுத்து என்ன நடக்கப் போகிறதோ’ என்கிற ஆவலுடன்
Gopi Ramamoorthy said...
பதிலளிநீக்கு//அடுத்து என்ன நடந்தது?//
நாளை 17.03.2011 தெரிந்து விடுமே!
தொடர்ந்து வாருங்கள். பின்னூட்டம் தாருங்கள். பகுதிக்குப்பகுதி விறுவிறுப்பும், நகைச்சுவையும் அதிகமாகவே இருக்கும்.
ரிஷபன் said...
பதிலளிநீக்கு//எழுத்துலக பொடியன்கள் எல்லாம் நகைச்சுவையாய் எழுத உங்களை ஃபாலோ பண்ணனும்..//
சார், அடியேனே, நகைச்சுவையில் இந்த ’சேட்டைக்காரன்’ போன்றவர்களுக்கு முன்பு, ஒரு பொடியன் என்பதை நிரூபிக்கவே போயும் போயும் இந்தப்பொடிக்கதையை எழுத ஆரம்பித்துள்ளேன்.
நீங்க வேறு என்னென்னவோ பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்லுகிறீர்களே!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, சார்.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//(Group Discussions சூப்பர்.மலரும் பொடி நினைவுகள் அருமை.//
எப்போது வந்தாலும் ஏதாவது வித்யாசமான முறையில், பேரெழுச்சியுடன் பின்னூட்டம் தருவதே உங்கள் வழக்கமாக இருந்து வந்தது.
இப்போது சற்று எழுச்சி குறைவதாகத் தோன்றுகிறது எனக்கு.
நான் அவ்வாறு நினைப்பது தான் வழுவட்டைத்தனமாகத் தோன்றுகிறதோ உங்களுக்கு?
Any how, Thanks a lot to you, Madam.
Girija said...
பதிலளிநீக்குகதையைப் படிக்கும் போதே பொடி வாசனை வருகிறது
பொடி, மணம் மட்டும், கமழ்ந்தால் OK தான்.
ஆனால் ஜாக்கிரதையாக உடம்பைப்பார்த்துக்கோ!
தொடர்த்தும்மல் வந்து படுத்திவிடப்போகிறது.
அன்புடன் vgk
கணேஷ் said...
பதிலளிநீக்கு//பொடி போடும் ஆசாமியோட நிறைய காலம் பழகி இருந்தால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும்.//
உன் கணிப்பு 100க்கு 100 சரி, தான்.
//தோசை பார்சல் ,பிடில் ..நகைச்சுவையின் உச்சக்கட்டம்.//
ஆஹா அப்படியா நன்றி கணேஷ்.
அது என் கற்பனையில், கட்டக்கடைசியாகத் தோன்றி, நான் இந்தப்பகுதியை வெளியிடுவதற்கு Just முன்பாக Edit போய் சேர்த்து விட்ட ஒன்று.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
பதிலளிநீக்கு// பொடிக்காக மூக்குகள் காத்துக் கொண்டிருப்பது போல், எங்கள் கண்களும் காத்துக் கொண்டிருக்கின்றன,’அடுத்து என்ன நடக்கப் போகிறதோ’ என்கிற ஆவலுடன் //
உங்கள் மூக்கும், உங்கள் மனதைப்போலவே மிகச் சுத்தமானது என்பது எனக்குத்தெரியாதா!
உங்களின், என் மீதான கருணைக் கண்களுக்கும், ஆவலுக்கும் என் நன்றிகள்.
தொடர்ந்து வந்து அருள் புரியுங்கள் ஸ்வாமி !
அன்புடன் vgk
சார்...தொடர் கொஞ்சம் வழுவட்டையாகுது...பாத்துக்குங்க.
பதிலளிநீக்குகலாநேசன் said...
பதிலளிநீக்கு//சார்...தொடர் கொஞ்சம் வழுவட்டையாகுது...பாத்துக்குங்க.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சார்.
பாத்துக்கறேன்.
ஆனால் தொடர்ந்து வாருங்கள்.
கருத்துக்களை அள்ளித் தாருங்கள்.
கடைசியில் நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.
அட நகைச்சுவை கதையில் திடீர்னு சோகம்
பதிலளிநீக்குஎல் கே said...
பதிலளிநீக்கு//அட நகைச்சுவை கதையில் திடீர்னு சோகம்//
கடந்த 2 பகுதிகளுக்கு முதன் முதலாக நீங்கள் வருகை தந்ததும் இந்தப்பகுதிக்கு கடைசியாக வருகை தந்திருப்பதும் போலவே தான் போலிருக்கு, இந்த சுகமும் சோகமும். However Thank you very much,Sir.
Please do come for the remaining 4th to 8th issues also & offer your comments, then & there.
வழுவட்டையாரின் பொடி மகாத்மியம் நகைச்சுவையாக போய்க்கொண்டு இருக்கும்போது நடுவே அப்பா இறந்தது பற்றி சோகமாய் சொன்னது வருத்தமாகிவிட்டது. எத்தனை வயதானாலும் அம்மா அப்பா இழப்பு என்பது தாங்க முடியது தானே. எழுச்சியுடன் தொடருங்கள்.
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//வழுவட்டையாரின் பொடி மகாத்மியம் நகைச்சுவையாக போய்க்கொண்டு இருக்கும்போது நடுவே அப்பா இறந்தது பற்றி சோகமாய் சொன்னது வருத்தமாகிவிட்டது. எத்தனை வயதானாலும் அம்மா அப்பா இழப்பு என்பது தாங்க முடியது தானே. //
ஆம். மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள் வெங்கட்.
நான் கருவில் உருவான நாள் முதல், தனது வாழ்வின் இறுதி நாள் வரை (On 23.05.1997 at her age of 87)என்னுடனேயே இருந்து வந்த என் அன்புத்தாயின் இழப்பை இன்று நினைத்தாலும் எனக்கு அழுகை வருவதுண்டு.
//எழுச்சியுடன் தொடருங்கள்.//
இதோ இப்போதே இன்றே அடுத்த பகுதி எழுச்சியுடன் தொடர்கிறது.
தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
பொடி மணத்திலே இப்போ அப்பாவின் இழப்பு என்கிற சோகம் வந்துடுத்தே!
பதிலளிநீக்குகோவை2தில்லி said...
பதிலளிநீக்கு//பொடி மணத்திலே இப்போ அப்பாவின் இழப்பு என்கிற சோகம் வந்துடுத்தே!//
வாங்கோ! வாங்கோ!! வாங்கோ !!!
தங்கள் வருகையால் சோகமெல்லாம் போய் இனி வரப்போவதெல்லாம் சுகம் தான், மேடம்.
வருகைக்கு நன்றி.
வ.வ.ஸ்ரீ, ///மனம் கனக்க வைத்துவிட்டாரே:(
பதிலளிநீக்குஸாதிகா said...
பதிலளிநீக்குவ.வ.ஸ்ரீ, ///மனம் கனக்க வைத்துவிட்டாரே:(//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஹா ஹா ஹா :))) this is not group discussion ...ofcourse podi discussion .
பதிலளிநீக்குபொடிக்கு பின்னால் இப்படி ஒரு flashback
angelin said...
பதிலளிநீக்குஹா ஹா ஹா :))) this is not group discussion ...ofcourse podi discussion .
பொடிக்கு பின்னால் இப்படி ஒரு flashback//
மிக்க நன்றி, நிர்மலா. நன்கு ரசித்து எழுதியுள்ளீர்கள்.
அன்புடன் vgk
பொழுது விடிந்தது முதல் அந்தப்பொடியைத் திரும்பியே பார்க்கவில்லை என்றதுமே, எங்களுக்கு விசாரம் அதிகமாகி, ஓடிப்போய் நாட்டுவைத்தியரை கூட்டிவந்து காட்டி, அவரும் நாங்களுமாக வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போட்டும், மனுஷன் வைராக்கியமாக அதை மூக்கில் இழுத்துக்கொள்ளாமல், இறுதி மூச்சையே விட்டுவிட்டார்” எனச் சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார், வ.வ.ஸ்ரீ.
பதிலளிநீக்குஅருமை! நகைசசுவையாக ஒரு வருத்த நிகழ்வையும் சேர்த்த விதம்!
Seshadri e.s. said...
பதிலளிநீக்குபொழுது விடிந்தது முதல் அந்தப்பொடியைத் திரும்பியே பார்க்கவில்லை என்றதுமே, எங்களுக்கு விசாரம் அதிகமாகி, ஓடிப்போய் நாட்டுவைத்தியரை கூட்டிவந்து காட்டி, அவரும் நாங்களுமாக வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போட்டும், மனுஷன் வைராக்கியமாக அதை மூக்கில் இழுத்துக்கொள்ளாமல், இறுதி மூச்சையே விட்டுவிட்டார்” எனச் சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார், வ.வ.ஸ்ரீ.
அருமை! நகைசசுவையாக ஒரு வருத்த நிகழ்வையும் சேர்த்த விதம்!//
மிகவும் நகைச்சுவையான அந்தப்பகுதியை ரசித்து தாங்கள் எழுதியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
மிக்க நன்றி.
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஅலுவலகத்தில் வேலையே பார்க்க மாட்டீர்களா - வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியினைக் கண்டு, கேட்டு, முகர்ந்து ( பக்க்த்திலேயே இருக்கும் போது முகராமல் இருக்க இயலுமா என்ன ), உணர்ந்து, மகிழ்ந்து, ( பொடி சுவைக்க இயலாதோ )- நகைச்சுவை நிறைந்த பதிவு அருமை. . நட்புடன் சீனா
cheena (சீனா) said...
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
அலுவலகத்தில் வேலையே பார்க்க மாட்டீர்களா - வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியினைக் கண்டு, கேட்டு, முகர்ந்து ( பக்க்த்திலேயே இருக்கும் போது முகராமல் இருக்க இயலுமா என்ன ), உணர்ந்து, மகிழ்ந்து, ( பொடி சுவைக்க இயலாதோ )- நகைச்சுவை நிறைந்த பதிவு அருமை. நட்புடன் சீனா//
அன்பின் ஐயா,
வணக்கம்.
தங்களின் அன்பான வருகையும் அருமையான கருத்துக்களும் வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.
மிக்க நன்றி ஐயா.
அன்பின் வை.கோ - வ.வ. டர்க்கி டவல் மற்றும் கர்சீஃப் பயன் படுத்தும் முறையினை சிரத்தையுடன் பார்த்து - அப்படியே விவரிக்கும் விதம் நன்று. கைக்குட்டையைத் தோசைப்பார்சல் போல முறுக்கி - மீசை இருக்கும் இடத்தில் வயலின் வாசிப்பது போல நீளமாக நீட்டிப் பிடித்து தலை - மூக்கு ஆட்டுதல் அவருக்கு பரம சுகம் - கண்டு இரசித்த தங்களுக்கு மெத்த மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு66ல் ஐந்து பைசா - இப்பொழுது 3 ரூபா - 45 ஆண்டுகளில் 60 மடங்கு விலை உயர்ந்திருக்கிறது. 74ல் 3 ரூபா கொடுத்து ஆட்டோவில் அலுவலகம் போனது - இப்ப 70 ரூபா கேக்குறாஙக. அதுல ஒரு ரூபா பொடி தர்மத்துக்கு.
அடேஙப்பா - 12 வயசுல ஆரம்பிச்சு 108 வயசு வரைக்கும் பொடி போட்டாரா வ்.வ்.வின் தாத்தா - பலே -பலே. அப்பா 99 1/4 வயது வரைக்கும் பொடி போட்டார். ஆனா சட்டுன்னு நிப்பாட்டிட்டார் - மூச்சு நின்னதுலே இருந்து அவர் பொடியே போடறதில்ல - நல்ல நகைச்சுவை.
வ.வின் 99 வயது தந்தைக்கு அவர்கள் எல்லோரும் வாக்கரிசி .... இல்லை இல்லை .... மூக்கரிசி .... அதுவும் இல்லை .... மூக்குப்பொடி போட்டும், அவர் வைராக்கியத்துடன், அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் இறுதி மூச்சை விட்டதில், வ.விற்கும் மற்ரவர்களுக்கும் வருத்தம். கண்ணீர் மல்குகிறது வை.கோ.
நட்புடன் சீனா
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் வை.கோ - வ.வ. டர்க்கி டவல் மற்றும் கர்சீஃப் பயன் படுத்தும் முறையினை சிரத்தையுடன் பார்த்து - அப்படியே விவரிக்கும் விதம் நன்று. கைக்குட்டையைத் தோசைப்பார்சல் போல முறுக்கி - மீசை இருக்கும் இடத்தில் வயலின் வாசிப்பது போல நீளமாக நீட்டிப் பிடித்து தலை - மூக்கு ஆட்டுதல் அவருக்கு பரம சுகம் - கண்டு இரசித்த தங்களுக்கு மெத்த மகிழ்ச்சி.
66ல் ஐந்து பைசா - இப்பொழுது 3 ரூபா - 45 ஆண்டுகளில் 60 மடங்கு விலை உயர்ந்திருக்கிறது. 74ல் 3 ரூபா கொடுத்து ஆட்டோவில் அலுவலகம் போனது - இப்ப 70 ரூபா கேக்குறாஙக. அதுல ஒரு ரூபா பொடி தர்மத்துக்கு.
அடேஙப்பா - 12 வயசுல ஆரம்பிச்சு 108 வயசு வரைக்கும் பொடி போட்டாரா வ்.வ்.வின் தாத்தா - பலே -பலே. அப்பா 99 1/4 வயது வரைக்கும் பொடி போட்டார். ஆனா சட்டுன்னு நிப்பாட்டிட்டார் - மூச்சு நின்னதுலே இருந்து அவர் பொடியே போடறதில்ல - நல்ல நகைச்சுவை.
வ.வின் 99 வயது தந்தைக்கு அவர்கள் எல்லோரும் வாக்கரிசி .... இல்லை இல்லை .... மூக்கரிசி .... அதுவும் இல்லை .... மூக்குப்பொடி போட்டும், அவர் வைராக்கியத்துடன், அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் இறுதி மூச்சை விட்டதில், வ.விற்கும் மற்ரவர்களுக்கும் வருத்தம். கண்ணீர் மல்குகிறது வை.கோ.
நட்புடன் சீனா//
அன்பின் ஐயா,
வணக்கம்.
ஒவ்வொரு பகுதியில் நான் தூவியுள்ள நகைச்சுவைப்பொடிகளை அருமையாக உள்ளிழுத்து முகர்ந்து பார்த்து, அனைத்து நகைச்சுவைகளையும் பொறுமையாகப் படித்து ரஸித்து, கருத்துரை கூறியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மனமார்ந்த நன்றிகள், ஐயா.
பொடி பரம்பரையை பார்த்து பொடி நடையாக அடுத்த பகுதிக்கு நடை போடுகிறேன்
பதிலளிநீக்குஅருமை. பொடிநடையாக அடுத்தடுத்த பகுதிகளுக்குத்தாவி ஒரே இரவினில் முழுக்கதையையும் எழுச்சியுடன் படித்து முடித்து விடவேண்டும் என தங்க்ளைத் தூண்டியுள்ளதே, அதுவே எனக்கு வெற்றி தானே, நண்பரே. ;)
பதிலளிநீக்கு// அந்த அவரின் கடைசி நாள் அன்று, பொழுது விடிந்தது முதல் அந்தப்பொடியைத் திரும்பியே பார்க்கவில்லை என்றதுமே, எங்களுக்கு விசாரம் அதிகமாகி, ஓடிப்போய் நாட்டுவைத்தியரை கூட்டிவந்து காட்டி, அவரும் நாங்களுமாக வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போட்டும், மனுஷன் வைராக்கியமாக அதை மூக்கில் இழுத்துக்கொள்ளாமல், இறுதி மூச்சையே விட்டுவிட்டார்” எனச் சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார், வ.வ.ஸ்ரீ. //
பதிலளிநீக்குவ.வ.ஸ்ரீ அழுது கொண்டே சொன்னாலும் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல நகைச்சுவை காட்சியை தந்துள்ளீர்கள்
நான் மிகவும் ரஸித்து சிரித்து மகிழ்ந்து எழுதியப்பகுதியையே தாங்களும் ரஸித்து சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பதிலளிநீக்குநன்றி, ஐயா.
ஹாஹா, பேசிப் பேசி அரும்பணி ஆற்றும் அலுவலர்களைப் பற்றி அருமையாச் சொல்லி இருக்கீங்க. :)))
பதிலளிநீக்குGeetha Sambasivam July 23, 2013 at 12:20 AM
நீக்குவாங்கோ ... வணக்கம்.
//ஹாஹா, பேசிப் பேசி அரும்பணி ஆற்றும் அலுவலர்களைப் பற்றி அருமையாச் சொல்லி இருக்கீங்க. :)))//
அரும்பணியே தான். அழகாகச் சொல்லிட்டீங்கோ.
தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
மூக்குப் பொடி போட்டு ஒருவர் 99 வயது வரை வாழ்ந்திருக்கிறார் என்றால் மூக்குப் பொடியில் ஏதோ சூட்சமம் இருக்கவேண்டும். யாராவது இதை ஆராய்ச்சி பண்ணினால் தேவலை.
பதிலளிநீக்குஅப்ப பொடி போட்டா 108 வயசு வரை இருக்கலாமா?
பதிலளிநீக்குஅண்ணா எனக்கு ஒரு டவுட்டு
பதிலளிநீக்குஅதேதான். ஒரு வேளை நீங்களும் பொடி போட்டிருப்பீங்களோன்னு.
இப்படி விலாவாரியா பொடி போடறதை பத்தி எழுதினா வேற எப்படி நினைக்கிறதாம்.
Jayanthi Jaya May 16, 2015 at 7:00 PM
நீக்கு//அண்ணா எனக்கு ஒரு டவுட்டு
அதேதான். ஒரு வேளை நீங்களும் பொடி போட்டிருப்பீங்களோன்னு.
இப்படி விலாவாரியா பொடி போடறதை பத்தி எழுதினா வேற எப்படி நினைக்கிறதாம். //
தங்கள் டவுட்டு மிகவும் நியாயமானதே. பொடி போடும் பலருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். லேசா கொஞ்சூண்டு சாம்பிள் போல எப்போதாவது போட்டுப் பார்த்ததும் உண்டு. அப்போதுதானே, அதைப்பற்றி நன்கு உணர்ந்து எழுச்சியுடன் எழுத்துக்களில் கொண்டுவர முடியும் !!!!! :)
மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.
அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.
அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.
'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .
மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.
முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.
இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
பொடி போட்டாதா இப்பூடில்லா வெலா வாரியா எளுத வருமாஙகாட்டியும்?
பதிலளிநீக்குபரம்பரை விஷயங்களில் பொடி விஷயத்தையும் சேர்த்துக்கிட்டாரா ஒருகிலோ காபி பொடிய விட பொடி விலை அதிகமா. நல்ல வேளை காபி பொடிய எடுத்து மூக்குல உறிஞ்சாம விட்டாரே நம்ம ஹீரோ.
பதிலளிநீக்கு// ”விலைவாசியெல்லாமே ஏறிப்போயிடுத்துப்பா; உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ! ஒரு கிலோ ப்யூர் காஃபிப்பொடியை விட, ஒரு கிலோ மூக்குப்பொடி விலை அதிகம்” என்றார் வ.வ.ஸ்ரீ. // அதெல்லாம் பாத்தா கத எப்புடி கதகளி ஆடுறது...
பதிலளிநீக்குகர்சீப்ப மஸால் தோசை பார்ஸல் போல சுருட்டி மூக்கு கிட்ட வச்சுண்டு வயலின் வாசிப்பது போல அப்படியும் இப்படியும் இழுத்தார்.. என்னம்மா உதாரணங்கள் என்னம்மா கற்பனைகள்.....குட்...குட்....
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... May 10, 2016 at 4:50 PM
நீக்கு//கர்சீப்ப மஸால் தோசை பார்ஸல் போல சுருட்டி மூக்கு கிட்ட வச்சுண்டு வயலின் வாசிப்பது போல அப்படியும் இப்படியும் இழுத்தார்.. என்னம்மா உதாரணங்கள் என்னம்மா கற்பனைகள்..... குட்..... குட்....//
வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பு வருகைக்கும் குட்.. குட்..வெரி குட்.. கருத்துக்களுக்கும் என் அன்பு நன்றிகள்.