About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, April 24, 2013

11] தெய்வம் இருப்பது எங்கே ?



                                                                   




”பொக்கிஷம்”

தொடர்பதிவு

[ நிறைவுப்பகுதி ]

By
வை. கோபாலகிருஷ்ணன்
                                                                 
-oOo-

                          
 



தினந்தோறும் எங்கள் குடும்பத்தில் நடைபெற்று வரும் சிவபூஜை:

                                         



என் தகப்பானாரிடமிருந்து எனக்குக் கிடைத்த 
பொக்கிஷமான பஞ்சாயதன பூஜை விக்ரஹங்களுக்கு  
10.03.2013 ஞாயிறு சிவராத்திரி அன்று இரவு, 
எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற 
சிறப்பான சிவபூஜையில் சில படங்கள்.









ஸ்ரீருத்ரம் மஹன்யாசம் போன்ற ஜபங்கள் வேதவித்துக்களால் ஜபிக்கப்பட்டு, முறைப்படி 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை + நைவேத்யம் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நான்கு மணி நேரங்களுக்கு மேல் பூஜை நடைபெற்றது.

சிவராத்திரியன்று நடைபெற்ற சிறப்பான அபிஷேகங்கள்:

[1] வாசனைத் தைலம்
[2] பஞ்சகவ்யம்
[3] பஞ்சாமிர்தம்
[4] நெய்
[5] பால்
[6] தயிர்
[7] தேன்
[8] கரும்புச்சாறு
[9] எல்லாவிதமான பழச்சாறுகளும்
[10] இளநீர்
[11] சந்தனம்
[12] ஜபம் செய்யப்பட்ட கும்ப தீர்த்தம்


-oooo சுபம் oooo -








அன்று சிவராத்திரி இரவு பூஜை முடிந்து 
நான் வீடு திரும்புகையில் 
தெருவில் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற 
சமயபுரம் ஸ்ரீ மஹமாயீ பூச்சொரிதலுக்கு 
புஷ்பங்கள் வசூல் செய்ய வந்த 
ஸ்ரீ மாரியம்மன் ரதம் 
அலங்கார மின் விளக்குகளுடன்






 



நேற்று 23.04.2013 செவ்வாய்க்கிழமை
மதியம் 12.15க்கு எங்கள் வீட்டருகே 
தேரில் பவனி வந்த திருச்சி தெப்பக்குளம் 
வாணப்பட்டரை மஹமாயீ [மாரியம்மன்]
சித்திரைத் தேர்திருவிழா படங்கள்.





 


2
=


1961-1965  ஸ்ரீ மஹாபெரியவா 
அவர்கள் செய்து வந்த 
ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரீ ஸமேத 
ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் பூஜை


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் கருணைக்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த ஓர் உண்மைச்சம்பவத்தை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.. அதை இங்கு தங்களுடன் பகிர்ந்து கொண்டு, என் இந்த “பொக்கிஷம்” தொடரை நிறைவு செய்து கொள்கிறேன்.


2


ஸ்ரீராமஜயம்


பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை, லேசாக மழை
பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மஹாபெரியவா.


தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச்
செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள்.

அப்போது வயதான பாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேகவேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சந்தோஷம் தவழ, “அடடே, மீனாக்ஷி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே? பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா…

பேரென்ன?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

மீனாக்ஷி பாட்டி.. ”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.

இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே … அதுக்கான சந்தர்ப்பம் வரலே..

ஆனா, இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே.. இவ எம் பொண் வயத்துப் பேத்தி. இந்த ஊர்ல பொறந்ததால காமாக்ஷின்னு பேரு வெச்சுருக்கு. நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.

“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன். படிப்பு ஏறலே.
அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு. வயசு பதினஞ்சு ஆறது..

இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா
எங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன்.

சரி..என்ன சமாசாரம்?” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாக்ஷி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.

“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு. பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார். அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம், பிக்கல் புடுங்கல் இல்லே. ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.

எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது? கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.

அடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே?” என்றார்.

பாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடுவேன்.

ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி, நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரெட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா.

பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.

தலா ஒரு பவுன்ல இவ ரெண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி
வெச்சுருக்கேன்… அதான் என்னால முடிஞ்சது.

நா எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று முடிப்பதற்குள்…

ஸ்வாமிகள், “ரெட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு?” என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.

உடனே மீனாக்ஷி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, “அபசாரம்..அபசாரம் பெரியவா, நா அப்டி சொல்ல வரலே.

ஒங்களை தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம் வராளே.. அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது? அப்டியெல்லாம் கேக்கற வழக்கமில்லே.

நீ வேணும்னா ஒன் சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு.. பத்து பவுன் கேக்காத எடமா பார்த்துக்கோ. அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார் ஸ்வாமிகள்.

உடனே மீனாக்ஷி பாட்டி பதற்றத்தோடு, “பெரியவா அப்டி சொல்லிப்டு
போகக்கூடாதுனு பிரார்த்திக்கிறேன்.

இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம், அவாத்துல ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரெட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.

அதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரெட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா.. வேறு ஒண்ணுமில்லே

பெரியவா, நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.

எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்
யோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார், “நா ஒரு கார்யம் சொல்றேன்…. பண்றயா?”

“கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு
காமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, “எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.

இப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரஹித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மஹா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.

அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.




 

 



“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?” என்று பிரார்த்திதாள் பாட்டி.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.

ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா. அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார். பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பேத்தியுடன் காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி.
வெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.

அன்னை காமாக்ஷி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர். 

பேத்தியின் நக்ஷத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக்கொண்டாள், பாட்டி.

பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், “எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி’ யையே பிரார்த்தித்தபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர். 

ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நமஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.

சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்ட மீனாட்சி பாட்டி, பாரிஜாத புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி விரைந்தாள். மடத்தில்
ஏகக் கூட்டம். மீனாக்ஷி பாட்டி இருபது முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.

பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம்
சொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.

அவர், “இன்னிக்கு அனுஷ நக்ஷத்ரம். பெரியவாளோட நக்ஷத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னிக்கி மௌன விரதம்.

யாரோடயும் பேசமாட்டாராம். முக தரிசனம் மட்டும்தான்” என்று விசாரப்பட்டுக் கொண்டார்.

மீனாக்ஷி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரெட்ட வடச் சங்கிலியைப்பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனச்சுண்டிருந்தேனே, அது இப்ப முடியாது போலருக்கே?” என்று கவலைப்பட்டாள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றி அப்படியே அமர்ந்திருந்தது, அந்த பரப்பிரம்மம். 

”எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி. 

மஹாஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர் சற்றுக் கடுமையாக, பாட்டி, நகருங்கோ… நகருங்கோ... பெரியவா இன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார். பின்னாலே எத்தனை பேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.

காமாக்ஷியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக் கட்டினாள்.


அன்றைக்கும் காமாக்ஷியம்மன் சந்நிதியில் பெரியவா கூறியபடி ‘பஞ்ச
ஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும். 

அடுத்தடுத்து ஞாயிறு, திங்கள் இரு நாட்களும் மஹா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார். இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.

பாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள். ”பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே, ஒண்ணுமே நடக்கலியே…

அம்மா காமாக்ஷி கண் திறந்து பார்ப்பாளா, மாட்டாளா?” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி

செவ்வாய்க்கிழமை விடிந்தது. அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும்
கலகலப்பாக இருந்தது. ஆரணியிலிருந்து வந்திருந்த பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரபாவத்தில் ஆழ்த்திக்கொண்டு இருந்தது.

ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்! 
இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக்கூட்டம். 


வரிசையில் வந்த நடுத்தர வயது மாமி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம்.

தான் கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத் தேங்காய்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, பூசணி, மொந்தன் வாழைக்காய் வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.

எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம் விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார்.

பிறகு கண்களை இடுக்கிக்கொண்டு அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர், நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே?

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே.. ஏதோ சொல்லி
துக்கப்பட்டுண்டே.. இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட
நீ வந்துருக்கறதைப் பாத்தா காமாக்ஷி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது. சரிதானே!” என்று கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, ”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்த அவலத்தைச் சொல்லி அழுதேன். நீங்கதான் இந்த ஊர் காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி, அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி.. அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.

“சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன். என்ன ஆச்சரியம் பாருங்கோ.. பதினஞ்சு நாளக்கி முன்னாடி, ஜாம்ஷெட்பூர் டாடா
ஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார்.

எல்லாம் அந்த காமாக்ஷி கிருபையும், ஒங்க அனுக்கிரஹமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.

உடனே பெரியவா, “பேஷ்..பேஷ்.. ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா… இவ்வளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.

அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே, ”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா. அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.

ஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி.. ஒம் பொண்ணு, மாப்ளய திருப்பியும் அம்மா காமாக்ஷிதான் சேத்து வெச்சிருக்கா, அதனால் நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.

உடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா… இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன். 


பெரியவா….  நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.

“பேஷா, பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல
சாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்.. ஞாபகம் வெச்சுக்கோ” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.

அன்று காமாக்ஷியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால் பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாட்சி பாட்டி. 


கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், “அடியே காமாக்ஷி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம். நீ என்ன பண்றே.. அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு
ஜோடி வாழப்பழம், வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா, பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.

பாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

பாட்டி: “அம்மா காமாக்ஷி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லேடிம்மா. நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட
சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”

பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி 

பின்தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.

நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம் 

வந்துகொண்டு இருந்தனர் இருவரும்.

“பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!” பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத்
திரும்பிப் பார்த்த பாட்டி, ஆத்திரத்தோடு,  “ஏன் இப்டி கத்றே? என்ன
பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.

“ஒண்ணும் பறிபோகலே பாட்டி, கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!” என்று சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள். பேத்தி.  அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி!

“ஏதுடி இது?” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள். 

பேத்தி, “நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா..
அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே! இது அறுந்துருக்கே பாட்டி.. பவுனா.. முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.

அதைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி, காமாக்ஷி, எட்டு.. எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.

இது பெரியவா கிருபைல காமாக்ஷியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா. சரி…சரி….வா, வெளியே போவோம், மொதல்லே” என்று சொல்லியபடி அதைத்தன் புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியே வந்துவிட்டாள்.

அன்று பிரதட்சிணத்தில், “பஞ்ச ஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள். 
மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர். பேத்தியுடன் வந்த மீனாக்ஷி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.

பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா என்று குழம்பினாள்.

அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்கு காமாக்ஷியம்மன் கோயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம் கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்…..  ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து! 
அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே…  என்ன நான் சொல்றது சரிதானே?”என யதார்த்தமாகக் கேட்டார்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால்
ஓடவில்லை. “ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது.

பேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச் சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்…. அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்”

என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.

உடனே பெரியவா, “அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ
எடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ…. அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு, “அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.

கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். “நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.

ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்?”

“அம்பாள் காமாக்ஷிக்கு.”

“நீயே சொல்லு… அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்பிலே முடிஞ்சிக்கலாமா?”

“தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து, கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.

இப்போது மணி இரண்டு, மீனாக்ஷி பாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச்சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது, காலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம் அம்மாள், சோகமே உருவாகத் திரும்பி வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.

பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,


“அடடா…எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.

உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே, “வேற ஒண்ணுமில்லே பெரியவா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க உத்தரவுபடி காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே, ”பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்”னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.

தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரெட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப் போனேன்.  அந்த 
செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன

எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். ஒரு எடத்லயும் கிடைக்கலே… இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்வாமிகள் மீனாக்ஷி பாட்டியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி,
அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.

பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரெட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா அம்புஜம்… நீ தவறவிட்ட ரெட்ட வடம் இதுவா பாரு?” என்று காண்பித்தாள்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்.

“இதேதான்….இதேதான்…..பாட்டி.. இது எப்படி இங்கே வந்தது?

ஆச்சரியமா இருக்கே!” என்று வியந்தாள். நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.

மீனாக்ஷிப் பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள் “பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ.

ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன். 

எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரெட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும்,

நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரெட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு
அர்ப்பணிக்கறதா வேண்டிண்டு இருக்கேன்.

இன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாக்ஷியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய், எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள்.

ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து
பார்த்துக்கொண்டு இருந்தார்.

அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.

ஆச்சார்யாள், மீனாக்ஷி பாட்டியைப் பார்த்து, ”இன்னிக்கு நீயும் ஒம்
பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.

மீனாக்ஷி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடைந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. !





 



-o- சுபம் -o- 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOO


என்னை இந்தப் ”பொக்கிஷம்” தொடர்பதிவு வெளியிடுமாறு அழைப்புக்கொடுத்திருந்த  


[1] அன்புச்சகோதரி திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா [02 02 2013]


வலைத்தளம்: காகிதப்பூக்கள் 





அவர்களுக்கும்

[2] அன்புச்சகோதரி திருமதி ஆசியா ஓமர் அவர்கள். [05.02.2013]

Reference: http://asiya-omar.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81  

வலைத்தளம்: மணித்துளி  





அவர்களுக்கும் 

மீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகளைக் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.



அரிய பொக்கிஷங்களைக் கைவசம் வைத்திருந்து,
பதிவிட விருப்பமும் உள்ள தோழர்களும் தோழிகளும் 
 யார் வேண்டுமானாலும் இதே தலைப்பில் தங்களின்
தொடர்பதிவினை வெளியிட்டு அசத்தலாம்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


                     

118 comments:

  1. தெய்வீகமாக மணக்கிறது பதிவு. பெரியவா குறித்த சம்பவம் ஆச்சர்யமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். April 24, 2013 at 7:19 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      இந்தப்பதிவுக்கு தங்களின் முதல் வருகை மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //தெய்வீகமாக மணக்கிறது பதிவு.//

      மிக்க மகிழ்ச்சி.

      //பெரியவா குறித்த சம்பவம் ஆச்சர்யமாக இருந்தது.//

      அவர்கள் முக்காலமும் உணர்ந்த மஹாஞானி. அவர்களுக்குத் தெரியாத விஷயங்களே எதுவும் கிடையாது. அவர்களை நேரில் தரிஸிக்கச்சென்ற பலருக்கும் ஏற்பட்டுள்ள அனுபவங்களில் பல்வேறு ஆச்சர்யமான சம்பவங்கள் நிறைந்துள்ளன.

      அவை பற்றி நிறையவே நான் படித்துள்ளேன். சிலவற்றைப் படித்ததும் கண்கலங்கி அழுது ஆனந்தக்கண்ணீர் விட்டதும் உண்டு. அவற்றில் இந்த நிகழ்ச்சியும் ஒன்று.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.

      Delete
  2. என்ன தவம் செய்தனை?
    VGKஇதுபோன்ற
    அனுபவங்களை பெற (என்ன)

    ReplyDelete
    Replies
    1. Pattabi Raman April 24, 2013 at 7:32 AM

      ஆஹா, ஸ்ரீராமனுக்குப்பிறகு ஸ்ரீ பட்டாபி ராமன் அவர்களே வந்து பாட்டுப்பாடியுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      ஸ்ரீகிருஷ்ணனைக் கொஞ்சிக்கொஞ்சி வளர்க்கும் பாக்யம் பெற்ற யசோதை எங்கே? இந்த மிகச்சாதாரணமான VGK எங்கே?

      எனினும் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அண்ணா.

      Delete
  3. பொக்கிஷப் பகிர்வினை இத்தனை சிரத்தையோடு 11 பகுதிகளாக எழுதி பகிந்தமைக்கு மகிழ்ச்சி.அந்த 8 பவுன் ரெட்டை வடச் செயின் பாட்டி,பேத்திக்கு கிடைத்து விட்டது,அப்பாடா!

    ReplyDelete
    Replies
    1. Asiya OmarApril 24, 2013 at 8:59 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பொக்கிஷப் பகிர்வினை இத்தனை சிரத்தையோடு 11 பகுதிகளாக எழுதி பகிந்தமைக்கு மகிழ்ச்சி.//

      எழுதத் தூண்டுதலாக இருந்து வாய்ப்பளித்தமைக்கு என் மகிழ்ச்சிகள்.

      //அந்த 8 பவுன் ரெட்டை வடச் செயின் பாட்டி,பேத்திக்கு கிடைத்து விட்டது, அப்பாடா!//

      அது தான் எல்லோருக்குமே சந்தோஷமாக ’அப்பாடா’ என்று உள்ளது.

      பாவம் அந்த ஏழைப்பாட்டியும் பேத்தியும். அவரவர்கள் கவலை அவரவர்களுக்கு. சராசரியான மனிதர்கள் எல்லோருமே இப்படித்தான் நடந்து கொள்வார்கள். அதில் ஒன்றும் தவறே இல்லை. ஆச்சர்யமும் இல்லை.

      எப்படியோ அந்த ஏழைப் பாட்டியின் பேத்திக்கு கல்யாணம் நல்லபடியாக நடந்து சந்தோஷமாக இருந்தால் சரி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      Delete
  4. பொக்கிஷப் பகிர்வு மிகவும் தெய்வாம்சம் பொருந்தியதாக உள்ளது.
    மாரியம்மன் பூச்சொரிதலும்,சிவபூஜையும் பக்தி பரவசப் படுத்துகின்றன. நீங்கள் ஒரு மிகச் சிறந்த பக்திமான் என்பதை உங்கள் பொக்கிஷப் பகிர்வு சொல்கிறது.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam April 24, 2013 at 9:08 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பொக்கிஷப் பகிர்வு மிகவும் தெய்வாம்சம் பொருந்தியதாக உள்ளது.மாரியம்மன் பூச்சொரிதலும்,சிவபூஜையும் பக்தி பரவசப் படுத்துகின்றன.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நீங்கள் ஒரு மிகச் சிறந்த பக்திமான் என்பதை உங்கள் பொக்கிஷப் பகிர்வு சொல்கிறது. நன்றி பகிர்விற்கு.//

      பொக்கிஷப்பகிர்வு என்பது அப்படித்தான் சொல்ல வேண்டும்.

      ஆனால் நான் அப்படி ஒன்றும் மிகச்சிறந்த பக்திமான் அல்ல.

      மிகச்சாதாரண மான்+இடன் = மானிடன் மட்டுமே.

      எல்லாவித ஆசாபாசங்களுடன், சம்சார சாஹரத்தில் சிக்குண்டு தவிப்பவன் மட்டுமே. எதையும் என்னால் தவிர்க்கவோ துறக்கவோ முடியவில்லை. ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் வைத்துள்ளவன் என்று தான் வைத்துக்கொள்ளலாம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  5. நித்தம் செய்யும் சிவபூஜை அருமை.
    மகமாயி தரிசனம் சித்திரை தேர் தரிசனம் எல்லாம் அழகு, தெய்வீகம்.

    “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு
    காமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, //“எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.//


    நம்பினோர் கைவிடபாடார் என்பதற்கு எடுத்துக் காட்டு.

    உங்கள் பொக்கிஷபகிர்வு அருமையான பொக்கிஷம்.
    வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து நல்ல விஷ்யங்களும் இருக்கிறது.
    நிறைவாய் பொக்கிஷப் பகிர்வை நிறைவு செய்து இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு April 24, 2013 at 9:20 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நித்தம் செய்யும் சிவபூஜை அருமை. மகமாயி தரிசனம் சித்திரை தேர் தரிசனம் எல்லாம் அழகு, தெய்வீகம்.//

      மிக்க மகிழ்ச்சி.

      **“ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு
      காமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, “எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.**

      //நம்பினோர் கைவிடபாடார் என்பதற்கு எடுத்துக் காட்டு.//

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்லியுள்ளது அந்தப்பாட்டிக்கு மட்டுமல்ல, நமக்கும் தான் என நாம் எடுத்துக்கொள்ளலாம்.
      இனி அம்பாள் கோயில்களுக்குச் சென்றால் முடிந்தவரை ஐந்து பிரதக்ஷணங்களும், ஐந்து நமஸ்காரங்களும் செய்வோம். செளகர்யப்பட்டால் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்குச் செய்வோம்.

      //உங்கள் பொக்கிஷப்பகிர்வு அருமையான பொக்கிஷம். வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து நல்ல விஷயங்களும் இருக்கிறது. நிறைவாய் பொக்கிஷப் பகிர்வை நிறைவு செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகள் + பாராட்டுக்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.


      Delete
  6. அந்த காமாட்ஷி அம்மனின் கருணையோ கருணை. உண்மையாக,மனமுருக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால்கைமேல் பல்ன்கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு பாட்டியும்,பேத்தியும்.
    சுவாமி தரிசனங்களை எங்களுக்கும் காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா.
    அருமையான ஒரு பொக்கிஷத்தொடர் தந்தமைக்கு ரெம்ப நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. ammulu April 24, 2013 at 10:27 AM

      வாங்கோ அம்முலு, வணக்கம்.

      //அந்த காமாட்ஷி அம்மனின் கருணையோ கருணை. உண்மையாக, மனமுருக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு பாட்டியும்,பேத்தியும்.//

      மிக்க மகிழ்ச்சிம்மா.

      //சுவாமி தரிசனங்களை எங்களுக்கும் காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா.//

      மிகவும் சந்தோஷம்மா.

      //அருமையான ஒரு பொக்கிஷத்தொடர் தந்தமைக்கு ரெம்ப நன்றிகள் அண்ணா.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.

      Delete
  7. பொக்கிஷப் பகிர்வுகளின் முத்தாய்ப்பாக இந்தப் பதிவு அமைந்தது பெரிய பாக்கியம். மஹா பெரியவாளின் கருணை; கண்டிப்பு எல்லாமே அழகாக வெளியாகியிருக்கிறது இந்தப் பதிவில்.

    உங்களின் வாழ்வில் எல்லா கஷ்ட நஷ்டங்களிலும் பங்கு கொண்டு இன்றுவரை உங்களுடன் இனிய தாம்பத்தியம் நடத்தி வரும் திருமதி வாலாம்பா மாமியைப் பற்றிச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்திருக்கலாம் என்பது என் பணிவான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. Ranjani Narayanan April 24, 2013 at 10:44 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பொக்கிஷப் பகிர்வுகளின் முத்தாய்ப்பாக இந்தப் பதிவு அமைந்தது பெரிய பாக்கியம். மஹா பெரியவாளின் கருணை; கண்டிப்பு எல்லாமே அழகாக வெளியாகியிருக்கிறது இந்தப் பதிவில்.//

      மிக்க மகிழ்ச்சி, சந்தோஷம்.

      //உங்களின் வாழ்வில் எல்லா கஷ்ட நஷ்டங்களிலும் பங்கு கொண்டு இன்றுவரை உங்களுடன் இனிய தாம்பத்தியம் நடத்தி வரும் திருமதி வாலாம்பா மாமியைப் பற்றிச் சொல்லி இந்தப் பதிவை நிறைவு செய்திருக்கலாம் என்பது என் பணிவான கருத்து. //

      தங்களின் பணிவான கருத்தினைக் கேட்க எனக்கும் கரும்பாய் தான் இனிக்கிறது. இப்போது என்ன செய்ய?

      ஏதோ ஒரு குறையுடன், நிறைவு செய்துவிட்டது போல, இப்போது தாங்கள் சொல்லியபிறகே உணரமுடிகிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  8. பூஜா படங்கள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. கே. பி. ஜனா... April 24, 2013 at 10:55 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பூஜா படங்கள் அருமை!//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      Delete
  9. பெரியவாளின் கதை புல்லரிக்க வைத்து விட்டது. இருவரின் விருப்பமும் நிறைவேறியதில் சந்தோஷம்...

    பதினோரு பகுதிகளாக தொடர்பதிவை சிறப்பாக செய்த தங்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கோவை2தில்லி April 24, 2013 at 11:11 PM

      வாங்கோ வணக்கம்.

      //பெரியவாளின் கதை புல்லரிக்க வைத்து விட்டது. இருவரின் விருப்பமும் நிறைவேறியதில் சந்தோஷம்...//

      மிக்க மகிழ்ச்சி. ஆமாம், சுபமான முடிவாக அமைந்துள்ளது. ;)

      //பதினோரு பகுதிகளாக தொடர்பதிவை சிறப்பாக செய்த தங்களுக்கு பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  10. பொக்கிஷங்கள் மஹாப் பெரியவரின் ஆசீர்வாதங்களும், கருணை உள்ளத்தின் இயல்புகளும், அதிசயங்களுடன் ததும்பி வழிகிறது.
    உங்கள் பொக்கிஷங்களும் பூர்ணமாக நிரம்பி வழிகிறது. நல்லபடி,
    இவ்வளவு தூரம் யாவருடனும் பங்கு பெறவும் வைத்துள்ளீர்கள்.

    பூஜை.அபிஷேகம்,ஆராதனை, கோயில்கள்,தெய்வங்கள்,நல்ல விஷயங்கள் என எல்லாவற்றையும் அநுபவிக்கவும் கொடுத்த இந்தத் தொடர் இனிதே முடிவுறுகிறது. எண்ணங்கள் விஷயங்கள்
    யாவும் மனதில் நிலைபெற்று நிற்கும். நல்லதொரு படைப்பு. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi April 24, 2013 at 11:54 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //பொக்கிஷங்கள் மஹாப் பெரியவரின் ஆசீர்வாதங்களும், கருணை உள்ளத்தின் இயல்புகளும், அதிசயங்களுடன் ததும்பி வழிகிறது.//

      ரொம்ப சந்தோஷம்.

      //உங்கள் பொக்கிஷங்களும் பூர்ணமாக நிரம்பி வழிகிறது. நல்லபடி, இவ்வளவு தூரம் யாவருடனும் பங்கு பெறவும் வைத்துள்ளீர்கள். பூஜை.அபிஷேகம்,ஆராதனை, கோயில்கள், தெய்வங்கள், நல்ல விஷயங்கள் என எல்லாவற்றையும் அநுபவிக்கவும் கொடுத்த இந்தத் தொடர் இனிதே முடிவுறுகிறது. எண்ணங்கள் விஷயங்கள் யாவும் மனதில் நிலைபெற்று நிற்கும். நல்லதொரு படைப்பு. அன்புடன்//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மாமி.

      Delete
  11. மஹாப் பெரியவரின் கதை படித்துக்கொண்டே வரும்போது எவ்வளவு நல்ல சிந்தனையுடன் பக்தியையும் கலந்து புரியவைத்தது உணர்ச்சிக் குவியலாக இருந்தது. உங்கள் பொக்கிஷத்தில் இல்லாத விஷயங்களில்லை. பொக்கிஷம் பக்தி,சிரத்தை,மற்றும் எவ்வளவோ
    விஷயங்களைப் புரிந்து அனுபவிக்க முடிந்தது. பொக்கிஷம் நிரம்பி வழிகிரது. எடுக்க,எடுக்கக் குறையாதது. இனிய நினைவுகளாக உங்களின் பொக்கிஷம் மேன்மேலும் நிரம்பட்டும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi April 25, 2013 at 12:42 AM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள். தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //மஹாப் பெரியவரின் கதை படித்துக்கொண்டே வரும்போது எவ்வளவு நல்ல சிந்தனையுடன் பக்தியையும் கலந்து புரியவைத்தது உணர்ச்சிக் குவியலாக இருந்தது.//

      ஆம். நான் முதன்முறை படிக்கும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டேன். இதுபோலவே மேலும் சில சம்பவங்கள் படிக்கும் போதே என்னை மிகவும் வியப்படையச் செய்தவைகள் உள்ளன.

      //உங்கள் பொக்கிஷத்தில் இல்லாத விஷயங்களில்லை. பொக்கிஷம் பக்தி,சிரத்தை,மற்றும் எவ்வளவோ
      விஷயங்களைப் புரிந்து அனுபவிக்க முடிந்தது. பொக்கிஷம் நிரம்பி வழிகிறது. எடுக்க,எடுக்கக் குறையாதது. இனிய நினைவுகளாக உங்களின் பொக்கிஷம் மேன்மேலும் நிரம்பட்டும். அன்புடன்//

      எல்லாம் உங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதங்களால் மட்டுமே நல்லவைகள் யாவும் நம்மிடம் தொடர்ந்து பொக்கிஷங்களாகச் சேர வேண்டும் என நினைக்கிறேன்.

      Delete
  12. மூன்று முறை எழுதி ஏதோ தவறுகளால் போகாத என் சிறு குறிப்பு
    இந்த முறையாவது போக வேண்டும் என நினைத்து போஸ்ட் செய்தது போய்ச் சேர்ந்தது. நன்றி. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi April 25, 2013 at 12:47 AM

      //மூன்று முறை எழுதி ஏதோ தவறுகளால் போகாத என் சிறு குறிப்பு இந்த முறையாவது போக வேண்டும் என நினைத்து போஸ்ட் செய்தது போய்ச் சேர்ந்தது. நன்றி. அன்புடன்//

      அடடா, இதில் எவ்வளவு சிரமம் பாருங்கோ, உங்களுக்கு.

      தங்களின் அன்பான வருகை + சிரமப்பட்டாவது மீண்டும் மீண்டும் கருத்துக்கள் எழுதி எப்படியாவது அனுப்பிவிடணும் என்ற ஆர்வம் முதலியன என் மீது தங்களுக்கு உள்ள பாசத்துடன் கூடிய அன்பினையும், பதிவின் மீது தங்களுக்குள்ள மிகுந்த ஈடுபாட்டினையும் காட்டுகிறது.

      மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம் + மனமார்ந்த இனிய நன்றிகள் மாமி.

      அநேக நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      Delete
  13. பெரியவா அவர்களின் சம்பவம் வியக்க வைக்கிறது...

    சித்திரைத் தேர்திருவிழா படங்களும் அருமை ஐயா...

    தங்களின் நட்பு பெற, தங்களின் பகிர்வுகளை வாசிக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்...

    வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் April 25, 2013 at 1:46 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பெரியவா அவர்களின் சம்பவம் வியக்க வைக்கிறது...
      சித்திரைத் தேர்திருவிழா படங்களும் அருமை ஐயா...//

      மிக்க மகிழ்ச்சி.

      //தங்களின் நட்பு பெற, தங்களின் பகிர்வுகளை வாசிக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல.//

      ரொம்பவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  14. கமென்ட் போய்ச் சேரவில்லை. :( மஹாபெரியவாள் குறித்த இந்த நிகழ்ச்சியை ஏற்கெனவே சக்தி விகடனில் "அண்ணா" என்னும் பெயரில் பெரியவாளின் அணுக்கத் தொண்டர் ஒருவர் எழுதிப் படிச்சிருக்கேன். அருமையான நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பொக்கிஷத் தொடரை முடித்ததற்கு வாழ்த்துகள். நன்றி. உங்கள் வாழ்க்கையில் பொக்கிஷமான நினைவுகள் மட்டுமல்லாமல் பல பொக்கிஷ நிகழ்வுகளும் நடந்துள்ளது. அத்தனையும் உங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம்.

    மஹா சிவராத்திரி வழிபாடும் அதிசயிக்கத் தக்க வகையில் இருக்கிறது. தொடர்ந்து இதே ஈடுபாட்டுடனும் வழிபாடு நடைபெறவும் பிரார்த்தனைகள். சமயபுரம் மாரியம்மன் தேரும், சித்திரைத் தேர் கண்ட திருச்சி தெப்பக்குளம் மாரியம்மனையும் தரிசிக்கவும் கொடுத்து வைத்தது. இவற்றை எல்லாம் உங்கள் வீட்டருகிலேயே கண்டு களிக்கும் பாக்கியமும் உங்களுக்குக் கிடைத்துள்ளது குறித்துக் கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam April 25, 2013 at 2:44 AM

      வாங்கோ, வணக்கம்.

      //கமென்ட் போய்ச் சேரவில்லை. ;(//

      அடடா, சில சமயங்களில் இப்படி ஆகி விடுகின்றது. ;(

      //மஹாபெரியவாள் குறித்த இந்த நிகழ்ச்சியை ஏற்கெனவே சக்தி விகடனில் "அண்ணா" என்னும் பெயரில் பெரியவாளின் அணுக்கத் தொண்டர் ஒருவர் எழுதிப் படிச்சிருக்கேன்.//

      இருக்கலாம். நானும் வேறு ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது தான் இந்த நிகழ்ச்சி.

      //அருமையான நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பொக்கிஷத் தொடரை முடித்ததற்கு வாழ்த்துகள். நன்றி. //

      மிக்க மகிழ்ச்சி.

      //உங்கள் வாழ்க்கையில் பொக்கிஷமான நினைவுகள் மட்டுமல்லாமல் பல பொக்கிஷ நிகழ்வுகளும் நடந்துள்ளது. அத்தனையும் உங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம்.//

      மிகவும் சந்தோஷம். எல்லாவற்றிற்கும் தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் சிலரின் ஆசீர்வாதங்களும் கூட காரணம்.

      >>>>

      Delete
  15. Replies
    1. Geetha Sambasivam April 25, 2013 at 2:45 AM

      //தொடர// OK

      //மஹா சிவராத்திரி வழிபாடும் அதிசயிக்கத் தக்க வகையில் இருக்கிறது. தொடர்ந்து இதே ஈடுபாட்டுடனும் வழிபாடு நடைபெறவும் பிரார்த்தனைகள்.//

      ஆஹா! மிகவும் சந்தோஷம்.

      //சமயபுரம் மாரியம்மன் தேரும், சித்திரைத் தேர் கண்ட திருச்சி தெப்பக்குளம் மாரியம்மனையும் தரிசிக்கவும் கொடுத்து வைத்தது.//

      மிக்க மகிழ்ச்சி.

      //இவற்றை எல்லாம் உங்கள் வீட்டருகிலேயே கண்டு களிக்கும் பாக்கியமும் உங்களுக்குக் கிடைத்துள்ளது குறித்துக் கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது.//

      ;))))) அடிக்கடி மேளம், தாளம், வேட்டுச்சப்தம், கரகம் காவடி சப்தங்கள், லெளட் ஸ்பீக்கர் என ஏதாவது சப்தங்கள் ரோட்டிலும் வீட்டிலும் ஜன்னல் வழியாகக் கேட்டுக்கொண்டே இருக்கும்.

      அந்த சமயங்களில் டெலிஃபோனில் வரும் அவசர முக்கிய அழைப்புக்களுடன் பேசக்கூட கஷ்டமாக இருக்கும்.

      அப்போதெல்லாம் நானும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீடு கட்டிக்கொண்டு சப்தம் இல்லாமல் இருப்பவர்களைக்கண்டு கொஞ்சம் பொறாமை கொள்வதும் உண்டு ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  16. VGK அவர்களுக்கு வணக்கம்!
    தங்கள் பதிவைப் படித்து முடிந்ததும் “ தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே “ என்றே பாடத் தோன்றியது.
    (இந்த பதிவை தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன்)

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ April 25, 2013 at 4:28 AM
      //VGK அவர்களுக்கு வணக்கம்!//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //தங்கள் பதிவைப் படித்து முடிந்ததும் “ தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே “ என்றே பாடத் தோன்றியது.//

      சந்தோஷம் ஐயா.

      //(இந்த பதிவை தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன்)//

      மிக்க நன்றி, ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      Delete
  17. மகாபெரியவரின் மகிமையோடு நிறைவாக பொக்கிஷம் தொடரை முடித்திருப்பது மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. தங்கள் இல்லத்தில் நடைபெற்ற சிவபூஜை பற்றிய பகிர்வும் படங்களும் மனத்துக்கு இதம். மாரியம்மன் வீதியுலாக் காட்சிகளும் நேரில் கண்ட உணர்வைத் தருகின்றன. மதிப்பிட இயலாதவையும், மனத்துக்கு நெருக்கமானவர்களின் நினைவாக பாதுகாப்பவையும், பரிசாகத் தேடிவந்தவையும், மகாபெரியவரின் அனுக்கிரகமும் என தாங்கள் பெற்ற எண்ணற்ற பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மனமார்ந்த நன்றி வை.கோ.சார். பொக்கிஷங்களைப் பெருமையுடன் பேணிக்காக்கும் தங்கள் பண்புக்குப் பாராட்டுகள் பல.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி April 25, 2013 at 5:09 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மகாபெரியவரின் மகிமையோடு நிறைவாக பொக்கிஷம் தொடரை முடித்திருப்பது மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. தங்கள் இல்லத்தில் நடைபெற்ற சிவபூஜை பற்றிய பகிர்வும் படங்களும் மனத்துக்கு இதம். மாரியம்மன் வீதியுலாக் காட்சிகளும் நேரில் கண்ட உணர்வைத் தருகின்றன.//

      மிகவும் சந்தோஷம்.

      //மதிப்பிட இயலாதவையும், மனத்துக்கு நெருக்கமானவர்களின் நினைவாக பாதுகாப்பவையும், பரிசாகத் தேடிவந்தவையும், மகாபெரியவரின் அனுக்கிரகமும் என தாங்கள் பெற்ற எண்ணற்ற பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //பொக்கிஷங்களைப் பெருமையுடன் பேணிக்காக்கும் தங்கள் பண்புக்குப் பாராட்டுகள் பல.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  18. இத்த சிரத்தையுடன் தொடராய்ப் பொக்கிஷப் பதிவுகள் தந்து பக்தி மணம் கமழும் இவ் இறுதிப் பதிவும் தந்து அசத்தி விட்டீர்கள். சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. சந்திரகௌரி April 25, 2013 at 10:38 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இத்த சிரத்தையுடன் தொடராய்ப் பொக்கிஷப் பதிவுகள் தந்து பக்தி மணம் கமழும் இவ் இறுதிப் பதிவும் தந்து அசத்தி விட்டீர்கள். சிறப்பு.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அசத்தலான பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  19. Bakthi niraindha indha pokkisham padikka romba sandhoshamagavum, thirupthiyagavum irundhadhu. Reading all the pokisham post was very informative and nice. Thank you very much for sharing it with us.

    ReplyDelete
    Replies
    1. Priya Anandakumar April 25, 2013 at 2:11 PM

      வாங்கோ வணக்கம்.

      //Bakthi niraindha indha pokkisham padikka romba sandhoshamagavum, thirupthiyagavum irundhadhu.//

      மிகவும் சந்தோஷம்.

      //Reading all the pokisham post was very informative and nice. Thank you very much for sharing it with us. //

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  20. அற்புத நிகழ்வுகள். உண்மையிலே இந்தப்ப் பதிவுகள் அத்தனையும் பொக்கிஷம்தான்

    ReplyDelete
    Replies
    1. T.N.MURALIDHARAN April 25, 2013 at 6:01 PM

      வாருங்கள், வணக்கம்.

      //அற்புத நிகழ்வுகள். உண்மையிலே இந்தப்ப் பதிவுகள் அத்தனையும் பொக்கிஷம்தான்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  21. “பொக்கிஷம்” தொடர்பதிவின் இறுதிப்பகுதியான ”தெய்வம் இருப்பது எங்கே ?” என்று எழுதி
    பொக்கிஷ பதிவை முடித்த திருச்சிகாரர் உயர்திரு. வை.கோ அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம்
    திருச்சிகாரர்கள் பார்த்து பரவசம் அடைய திருச்சியின் பொக்கிஷம் http://avargal-unmaigal.blogspot.com/2013/04/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. Avargal Unmaigal April 25, 2013 at 7:37 PM

      வாங்கோ என் அன்புத்தம்பி, தங்கக்கம்பி, வணக்கம்.

      //“பொக்கிஷம்” தொடர்பதிவின் இறுதிப்பகுதியான ”தெய்வம் இருப்பது எங்கே ?” என்று எழுதி பொக்கிஷ பதிவை முடித்த திருச்சிகாரர் உயர்திரு. வை.கோ அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம். திருச்சிகாரர்கள் பார்த்து பரவசம் அடைய திருச்சியின் பொக்கிஷம் http://avargalunmaigal.blogspot.com/2013/04/blog-post_25.html//

      பார்த்தேன், படித்தேன், ரஸித்தேன், பின்னூடமும் கொடுத்துள்ளேன். அதற்குள் 5-6 பதிவர்கள் இதுவிஷயமாக மெயில் மூலம் எனக்குத் தகவல் கொடுத்து அசத்தி விட்டனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை இங்கும் பதிவு செய்துகொள்கிறேன்.

      தம்பி ஏனோ இதன் அடுத்த பகுதிக்கு இதுவ்ரை வருகை தரவில்லை. அங்கும் தம்பிக்காகவே சில ஸ்பெஷல் செய்திகள் காத்துள்ளன.

      தலைப்பு: “அன்றும் இன்றும்”

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/04/12.html

      அன்புத்தம்பியின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், எனக்காகவே ஒரு தனிப்பதிவு வெளியிட்டு சிறப்பித்ததற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  22. அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.//

    அவற்றை விளக்கும் வகையில் ஐந்து விளக்குகள், ஐந்து பூக்கள், ஐந்து பழங்கள்! அற்புதம் ஐயா! இந்தப் பதிவுகள் அனைத்தும் பொக்கிஷங்கள்! படங்கள் மிக அருமை! நல்லதொரு தொடர்பதிவிற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. April 25, 2013 at 8:12 PM

      வாங்கோ, வணக்கம்.

      **அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.**

      //அவற்றை விளக்கும் வகையில் ஐந்து விளக்குகள், ஐந்து பூக்கள், ஐந்து பழங்கள்! அற்புதம் ஐயா! இந்தப் பதிவுகள் அனைத்தும் பொக்கிஷங்கள்! படங்கள் மிக அருமை! நல்லதொரு தொடர்பதிவிற்கு நன்றி ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குறிப்பாக அஞ்சஞ்சா உள்ள பட விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  23. பெரியவரின் சம்பவம் படித்ததும் மெய் சிலிர்க்கிறது..மனநிறைவாக இருந்தது உங்க அனைத்து பொக்கிஷபதிவுகளை படிக்கும்போது.....

    உங்களின் இந்த பதிவு ஏனோ தெரியவில்லை டாஷ்போர்டில் தெரியவில்லை ஐயா,நீங்கள் சொல்லியபிறகுதான் இந்த பதிவை படித்தேன்.மிக்க நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. S.Menaga April 25, 2013 at 10:20 PM

      வாங்கோ மேனகா, வணக்கம்.

      //பெரியவரின் சம்பவம் படித்ததும் மெய் சிலிர்க்கிறது.. மனநிறைவாக இருந்தது உங்க அனைத்து பொக்கிஷபதிவுகளை படிக்கும்போது.....//

      ரொம்ப ரொம்ப சந்தோஷமம்மா ;)

      //உங்களின் இந்த பதிவு ஏனோ தெரியவில்லை டாஷ்போர்டில் தெரியவில்லை ஐயா//

      ஆமாம்மா, இந்தப்பதிவு மட்டும் ஏனோ டேஷ்போர்டில் தெரியவில்லை, இதுபோல சில சமயங்களில் ஆகி விடுகிறது. அதனால் மட்டுமே தங்களைப்போன்ற ஒருசிலருக்கு மட்டுமே மெயில் மூலமும், பின்னூட்டப்பெட்டி மூலமும் நான் தகவல் கொடுக்க நேர்ந்தது.

      //நீங்கள் சொல்லியபிறகுதான் இந்த பதிவை படித்தேன்.மிக்க நன்றி!!//

      பகுதி-4 முதல் பகுதி-10 வரை தொடர்ச்சியாக தாங்கள் வருகை தந்து கருத்துக்கூறி வந்துள்ளதால், டேஷ்போர்டில் தெரியாத பகுதி-11 பற்றி தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேனகா.

      Delete
  24. உங்கள் பொக்கிஷப் பதிவுகள் பக்தியை வளர்ப்பதுடன்
    தேசிய ஒற்றுமையையும் வளர்க்கிறது.

    எப்படி என்றால் உங்களை தொடர் பதிவிட அழைத்தவர்கள்
    திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா மற்றும்
    திருமதி ஆசியா உமர்.

    இரண்டு திருமதிகளுக்கும் வெகுமதியாக என் மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுக்களும்.

    இல்லை என்றால் இவ்வளவு அரிய விஷயங்களை தெரிந்து கொண்டிருக்க முடியுமா?

    உங்க வீட்டில் நடக்கிற பூஜை, புனஸ்காரங்களைப் பார்த்து சமயபுரம் மாரியம்மனும், தெப்பக்குள மகமாயியும் உங்க வீட்டு வாசலுக்கு வந்ததில் ஆச்சரியமே இல்லை.

    அருமையான பொக்கிஷங்களை உங்களுடன் இருந்து கட்டிக்காக்கும் வாலாம்பா மன்னிக்கும் என் நமஸ்காரங்களும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANI April 25, 2013 at 11:03 PM

      வாங்கோ வாங்கோ வணக்கம். செளக்யம் தானே! வெற்றிகரமான 30வது திருமண நாள் கொண்டாடிய களைப்பில் இருப்பீர்கள். ;)))))

      //உங்கள் பொக்கிஷப் பதிவுகள் பக்தியை வளர்ப்பதுடன்
      தேசிய ஒற்றுமையையும் வளர்க்கிறது. எப்படி என்றால் உங்களை தொடர் பதிவிட அழைத்தவர்கள் திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா மற்றும் திருமதி ஆசியா உமர். இரண்டு திருமதிகளுக்கும் வெகுமதியாக என் மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுக்களும்.//

      ஆஹா! என் அன்புக்குரிய சகோதரிகள் இருவரையும் வணங்கிப் பாராட்டியுள்ள தங்களின் செயல் பாராட்டுக்குரியது. மிக்க நன்றி.
      ‘திருமதி ஒரு வெகுமதி’ எனக்கு மிகவும் பிடித்தமான ‘விசு’வின் படம். பலமுறை பார்த்து ரஸித்துள்ளேன். அதை இங்கு ஞாபகப் ப-டு-த்-தி யுள்ளதற்கு என் நன்றிகள்.

      //இல்லை என்றால் இவ்வளவு அரிய விஷயங்களை தெரிந்து கொண்டிருக்க முடியுமா?//

      முடியாது தான். ஏற்கனவே நம் நிர்மலா [ஏஞ்ஜலின்] வுக்காக நான் “ஊரைச்சொல்லவா .... பேரைச்சொல்லவா” என்று ஓர் தொடர்பதிவு எழுதி, பலரின் ஏகோபித்த பாராட்டுக்களை எனக்குப் பெற்றுத்தந்தது. நீங்கள் கூட கடைசியாகப் படித்து கருத்துச்சொல்லியுள்ளீர்கள்.

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

      //உங்க வீட்டில் நடக்கிற பூஜை, புனஸ்காரங்களைப் பார்த்து சமயபுரம் மாரியம்மனும், தெப்பக்குள மகமாயியும் உங்க வீட்டு வாசலுக்கு வந்ததில் ஆச்சரியமே இல்லை.//

      அடாடா, அடிக்கும் 106-108 டிகிரி வெயிலுக்கு, மிகப்பெரியதோர் ஐஸ்கட்டியை ஜில்லுன்னு என் தலையிலே வெச்சுட்டீங்கோ. ;)

      //அருமையான பொக்கிஷங்களை உங்களுடன் இருந்து கட்டிக்காக்கும் வாலாம்பா மன்னிக்கும் என் நமஸ்காரங்களும், வாழ்த்துக்களும்.//

      நல்ல நேரம் பார்த்து, HAPPY MOOD பார்த்து, இடம் பொருள் ஏவல் பார்த்து இந்த விஷயத்தை உங்கள் மன்னி அவர்களின் கவனத்திற்கு எப்படியாவது நான் கொண்டுசெல்ல முயற்சிக்கிறேன். ;)))))

      இப்போதைக்கு அவள் சார்பாகவும் என் சார்பாகவும் உங்களுக்கான ஆசிகளையும் வாழ்த்துகளையும் நானே சொல்லிக்கொள்கிறேன். “தீர்க்க சுமங்கலி பவ!” ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும். அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      - பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  25. Replies
    1. middleclassmadhavi April 26, 2013 at 12:45 AM

      வாங்கோ, வணக்கம்.

      //Superb!//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், Superb ஆன கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  26. ஸ்ரீருத்ரம் மஹன்யாசம் போன்ற ஜபங்கள் வேதவித்துக்களால் ஜபிக்கப்பட்டு, முறைப்படி 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை + நைவேத்யம் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நான்கு மணி நேரங்களுக்கு மேல் பூஜை நடைபெற்றது.

    சிவராத்திரியன்று நடைபெற்ற சிறப்பான அபிஷேகங்கள்:

    சுபமான சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 26, 2013 at 2:09 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ,
      வாங்கோ, வாங்கோ, வாங்கோ!

      தங்களுக்கு என் இனிய வந்தனங்கள் !!.

      *****ஸ்ரீருத்ரம் மஹன்யாசம் போன்ற ஜபங்கள் வேதவித்துக்களால் ஜபிக்கப்பட்டு, முறைப்படி 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை + நைவேத்யம் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நான்கு மணி நேரங்களுக்கு மேல் பூஜை நடைபெற்றது*****

      //சிவராத்திரியன்று நடைபெற்ற சிறப்பான அபிஷேகங்கள்:
      சுபமான சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//

      மிக்க மகிழ்ச்சி, சந்தோஷம். பாராட்டுக்களுக்கு நன்றி.

      Delete
  27. தெய்வம் இருப்பது எங்கே ?”

    அது இங்கே ..வேறெங்கே ...! என்று அருமையான நிகழ்ச்சிகளை தொகுத்து சிறப்பாக அறிவித்தமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 26, 2013 at 2:11 AM

      //தெய்வம் இருப்பது எங்கே ?” அது இங்கே ..வேறெங்கே ...! என்று அருமையான நிகழ்ச்சிகளை தொகுத்து சிறப்பாக அறிவித்தமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  28. ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து
    பார்த்துக்கொண்டு இருந்தார்.

    பிரத்யட்ச காமாக்ஷி அம்பாளுக்கு நமஸ்காரங்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 26, 2013 at 2:13 AM

      *****ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து
      பார்த்துக்கொண்டு இருந்தார்*****

      //பிரத்யட்ச காமாக்ஷி அம்பாளுக்கு நமஸ்காரங்கள்..//

      பிரத்யட்ச காமாக்ஷி அம்பாளுக்கு, பிரத்யட்ச இராஜராஜேஸ்வரி அம்பாளின் நமஸ்காரங்களா!! இனிமை + சந்தோஷம். ;)

      Delete
  29. தேரில் பவனி வந்த திருச்சி தெப்பக்குளம்
    வாணப்பட்டரை மஹமாயீ [மாரியம்மன்]
    சித்திரைத் தேர்திருவிழா படங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 26, 2013 at 2:14 AM

      //தேரில் பவனி வந்த திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரை மஹமாயீ [மாரியம்மன்] சித்திரைத் தேர்திருவிழா படங்கள் அருமை...//

      தங்களின் அருமையான கருத்துரைக்கு மகிழ்ச்சி.

      இந்தத்தேர்த்திருவிழா சமயம் எங்கள் தெருவே அல்லோல கல்லோலப்படும்.

      ராமா கஃபே ஹோட்டலுக்கு எதிர்புறம் உள்ள அரசரமரப் பிள்ளையார் கோயில் வாசலில் பெரிய பெரிய கிணறு போன்ற அண்டாக்களில் சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் முதலியன மிகப்பெரிய கோட்டை அடுப்புகளில் தயாரிக்கப்பட்டு, ஏழை பாழைகள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்படும்.

      ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் வைத்து, நீர்மோர் பானகம் முதலியன வேறு விநியோகம் செய்வார்கள்.

      இந்தக்காட்சிகளைத்தான் என் முதல் சிறுகதையான “தாயுமானவள்” கதையில் அப்படியே வர்ணித்து எழுதியிருந்தேன்.

      Delete
  30. “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.

    நிறைவான நிறை நாளில் கருணா கடாட்சியான அம்பாளின் அனுக்க்கிரஹத்தை அறியத்தந்த பகிர்வுகள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 26, 2013 at 2:16 AM

      ***** “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.******

      //நிறைவான நிறை நாளில் கருணா கடாட்சியான அம்பாளின் அனுக்க்கிரஹத்தை அறியத்தந்த பகிர்வுகள்.. வாழ்த்துகள்..//

      ;))))) அதே அதே ... ”சுபஸ்ய சீக்ரஹ” .. மிகவும் சந்தோஷம் ;)

      தங்களின் அன்பான வாழ்த்துகள் மகிழ்வளிக்கின்றன.

      Delete
  31. பஞ்சஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து அம்பாளின் கருணாசாகரத்தை உணர்த்திய அற்புதமான நிகழ்வுகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 26, 2013 at 2:22 AM

      //பஞ்சஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து அம்பாளின் கருணாசாகரத்தை உணர்த்திய அற்புதமான நிகழ்வுகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.//

      அம்பாளுக்கு எல்லாமே ஐந்து ஐந்து .... 4 + 1 = 5 எவ்வளவு பொருத்தமாக இருக்கு பாருங்கோ !!!!! ;)))))

      அம்பாளுக்கு ஐந்து கொடுத்தால் நமக்கு ஆறு திரும்பக் கிடைக்கும் என்பதையும் இங்கு நிரூபித்துள்ளீர்கள்.

      தங்களின் ஆறாவதுக்கு ஆறு கிடைத்ததில் ஆற்று நீர் பொங்கி வந்தது போன்றதோர் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. ;))))))

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  32. பொக்கிஷ பகுதியின் இறுதி பகுதி மனதை விட்டு அகலாத பொக்கிஷங்களை சொல்லியிருக்கிறது. சிவ பூஜைகள் அற்புத காட்சி. சித்திரை தேர்த்திருவிழா கண் கொள்ளா காட்சி. எங்கள் ஊரிலும் களைகட்டும். மஹா பெரியவரின் அற்புதத்தையும் காமாக்ஷி அம்மனின் அருளையும் உணர்த்திய நிகழ்ச்சி பிரமிப்பாக இருந்தது. உங்க பொக்கிஷ நினைவுகள் எல்லாமே இப்போது எல்லார் மனதிலும் பொக்கிஷமா மறக்காம இருக்கும் என்பது உறுதி. இப்படி ஒரு அழகான தொடரை பகிர அழைத்த திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா மற்றும்திருமதி ஆசியா உமர் ஆகியவர்களுக்கு என் நன்றிகள்! வை.கோ சார் பொக்கிஷமான உங்க எழுத்துக்களை தொடருங்க...!

    ReplyDelete
    Replies
    1. உஷா அன்பரசு April 26, 2013 at 3:16 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பொக்கிஷ பகுதியின் இறுதி பகுதி மனதை விட்டு அகலாத பொக்கிஷங்களை சொல்லியிருக்கிறது. சிவ பூஜைகள் அற்புத காட்சி. சித்திரை தேர்த்திருவிழா கண் கொள்ளா காட்சி.//

      மிக்க மகிழ்ச்சி.

      //எங்கள் ஊரிலும் களைகட்டும்.//

      வேலூர் கோட்டை அல்லவா! களைகட்டாமலா இருக்கும்!!

      //மஹா பெரியவரின் அற்புதத்தையும் காமாக்ஷி அம்மனின் அருளையும் உணர்த்திய நிகழ்ச்சி பிரமிப்பாக இருந்தது.//

      மிகவும் சந்தோஷம். தன் தபோ வலிமையாலும், ஞான திருஷ்டியாலும் எங்கு என்ன நடந்தாலும் மிகச்சுலபமாக அறியக்கூடிய Extra-ordinary Power அவரிடம் இருந்தது. அவற்றை ஒருபோதும் அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ளவே மாட்டார்கள். அடிக்கடி அவர்களைப்போய் தரிஸித்து வருபவர்களுக்கு மட்டுமே இவற்றை உணர முடியும்.

      //உங்க பொக்கிஷ நினைவுகள் எல்லாமே இப்போது எல்லார் மனதிலும் பொக்கிஷமா மறக்காம இருக்கும் என்பது உறுதி.//

      ஆஹா, எனக்கே கொஞ்ச நாட்களில் மறந்து போனாலும் போகலாம். ஞாபகப் ப-டு-த்-த த்தான் நீங்கள் இருக்கிறீர்களே! அதனால் எனக்குக் கவலையே இல்லை. ;)))))

      //இப்படி ஒரு அழகான தொடரை பகிர அழைத்த திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா மற்றும் திருமதி ஆசியா உமர் ஆகியவர்களுக்கு என் நன்றிகள்!//

      அழைத்த இருவருக்கும் அழகாக ஞாபகமாக நன்றி கூறியுள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

      //வை.கோ சார் பொக்கிஷமான உங்க எழுத்துக்களை தொடருங்க...!//

      ஆஹா, தொடர்ந்துடுவோம் ! ;)

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான மிக நீளமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  33. நோஓஓஓஓஒ இது அநீதி:) அழிச்சாட்டியம்:) இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்.. :) வியாழக்கிழமைதான் பதிவு வெளிவரும் எனச் சொல்லிப்போட்டு புதன் கிழமையே வெளியிட்டு விட்டீங்களே!! கோபு அண்ணன்..:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பாருங்கோ அதனால எனக்கு மீ த 1ஸ்ட்டா வர முடியல்ல:) விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்:)..

    ReplyDelete
    Replies
    1. athira April 26, 2013 at 3:23 AM

      வாங்கோ அதிரா, வாங்கோ வணக்கம்.

      //நோஓஓஓஓஒ இது அநீதி:) அழிச்சாட்டியம்:) இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்.. :) வியாழக்கிழமைதான் பதிவு வெளிவரும் எனச் சொல்லிப்போட்டு புதன் கிழமையே வெளியிட்டு விட்டீங்களே!! கோபு அண்ணன்..:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//

      வியாழக்கிழமையன்று வருகை தந்து இதைக்கூறியிருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும். வருகை தந்துள்ளதோ வெள்ளிக்கிழமை. அதனால் பரவாயில்லை. அதிராவைத் திருப்தி செய்வது மிகவும் கஷ்டம் தான்.

      ஆனால் ஒரு விஷ்யம் அதிரா .. இந்தத்தொடரின் எல்லா பகுதிகளையும் நான் குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பே வெளியிட்டுள்ளேன். 25th வெளியிட்டாலும் என் சிஸ்டத்தில் தேதி 24th என்று தான் காட்டுகிறது. அதில் ஏதோ ஒரே குயப்பம் உள்ளது. சரி அதை விட்டுடுவோம்.

      //பாருங்கோ அதனால எனக்கு மீ த 1ஸ்ட்டா வர முடியல்ல:)//

      For me "YOU ARE THE FIRST" always! So Don't worry Athira.

      ஆனால் For me "YOU ARE THE BEST" வேறு ஒருத்தங்களாக்கும் !

      //விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்:).//

      அதெல்லாம் விட முடியாது அதிரா.

      நானும் தேம்ஸ்க்கு கூடவே வருவேனாக்கும். ஹூக்க்க்க்கும். ;)

      Delete
  34. ///
    ”பொக்கிஷம்”

    தொடர்பதிவு

    [ இறுதிப்பகுதி ]///

    ஆஆஆஆ முடிஞ்சிடுச்சா? முடிஞ்சிடிச்சாஆஆஆஆஆ?:) தொடர்ப்பதிவு முடிஞ்சிடுச்சா எனக் கேட்டேன்ன்:)..

    உஸ்ஸ்ஸ் அப்பாடா அப்போ நேர்த்திக்கடனை நிறைவேத்திட வேண்டியதுதான்.

    அது கோபு அண்ணன், இத்தொடர் நல்ல படி முடிஞ்சால் “உச்சிப் பிள்ளையாரின் வசந்தமண்டப வாசலில் நின்று ஒன்பது தரம்.. கோபுஅண்ணன் தோப்புக்கரணம் போடுவார் என வேண்டினனான்”... தப்பாமல் நிறைவேத்திடுங்கோ...

    ஊசிக்குறிப்பு:
    இதுதான் பகுதி 4 இல் நான் சொன்ன விஷயமாக்கும்:).. மீ எஸ்கேப்ப்ப்:)..

    ReplyDelete
    Replies
    1. athira April 26, 2013 at 3:29 AM


      *****”பொக்கிஷம்” தொடர்பதிவு [ நிறைவுப்பகுதி ]*****

      //ஆஆஆஆ முடிஞ்சிடுச்சா? முடிஞ்சிடிச்சாஆஆஆஆஆ?:) தொடர்ப்பதிவு முடிஞ்சிடுச்சா எனக் கேட்டேன்ன்:).. //

      உண்மையில் அது முடியவில்லை. தொடர்கதை தான். இருந்தாலும் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. [அதிராவிடமிருந்து தப்பிக்கத்தான் ;) ]

      //உஸ்ஸ்ஸ் அப்பாடா அப்போ நேர்த்திக்கடனை நிறைவேத்திட வேண்டியதுதான். //

      உடனே நிறைவேத்திடுங்கோ. தாமதிக்க வேண்டாம்.

      //அது கோபு அண்ணன், இத்தொடர் நல்ல படி முடிஞ்சால் “உச்சிப் பிள்ளையாரின் வசந்தமண்டப வாசலில் நின்று ஒன்பது தரம்.. கோபு அண்ணன் தோப்புக்கரணம் போடுவார் என வேண்டினனான்”... தப்பாமல் நிறைவேத்திடுங்கோ...//

      அதானே பார்த்தேன். நல்லதொரு கடுமையான வேலை தான் கொடுத்திருக்கீங்கோ. சந்தோஷம்.

      //ஊசிக்குறிப்பு:

      இதுதான் பகுதி 4 இல் நான் சொன்ன விஷயமாக்கும்:).. மீ எஸ்கேப்ப்ப்:)..//

      நான் என்னவோ ஏதோவென்று பயந்தே பூட்டேனாக்கும். ஆனால் இதற்காகப் போய் எஸ்கேப்ப்ப் ஆகாதீங்கோ..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      Delete
  35. இது முடிவுப் பகுதி எண்டதாலயோ என்னவோ “சுண்டெலியை”.. உருட்டுறேன்ன் உருட்டுறேன்ன்ன்ன் முடிவே இல்லாமல் கீழ போயிட்டே இருக்கு... அதனால இப்ப படிச்சு முடிச்சு பின்னூட்டம் போட நோ ரைம்.. ஈவினிங் வாறேன்ன்ன்:)..

    ReplyDelete
    Replies
    1. athira April 26, 2013 at 3:30 AM

      //இது முடிவுப் பகுதி எண்டதாலயோ என்னவோ சுண்டெலியை”.. உருட்டுறேன்ன் உருட்டுறேன்ன்ன்ன் முடிவே இல்லாமல் கீழ போயிட்டே இருக்கு... //

      பூனையாரால் சுண்டலியைக்கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையா? ஆச்சர்யமாக உள்ளதூஊஊஊ.

      //அதனால இப்ப படிச்சு முடிச்சு பின்னூட்டம் போட நோ ரைம்.. ஈவினிங் வாறேன்ன்ன்:)..//

      வாங்கோ, வாங்கோ, மிகவும் சந்தோஷம். குல்பி குடிச்சுட்டு தெம்பாக வாங்கோ.

      Delete
  36. தெய்வம் இருப்பது எங்கே
    எனக் கேள்வியெழுப்பிவிட்டு
    அது இங்கே வேறெங்கே என
    உணரச் செய்தது மிக்க மகிழ்வளித்தது
    முடிவுப் பதிவுயெனச் சொல்லாமல்
    நிறைவுப்பதிவு எனச் சொல்லியிருக்கலாமோ
    எனப் பட்டது.பொக்கிஷமதற்கு நிஜமான
    பொருள் அறிந்து கொண்டோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani S April 26, 2013 at 4:08 AM

      வாங்கோ ரமணி சார், வாங்கோ, வணக்கம்.

      //தெய்வம் இருப்பது எங்கே எனக் கேள்வியெழுப்பிவிட்டு அது இங்கே வேறெங்கே என உணரச் செய்தது மிக்க மகிழ்வளித்தது//

      மிக்க மகிழ்ச்சி.

      //முடிவுப் பதிவுயெனச் சொல்லாமல் நிறைவுப்பதிவு எனச் சொல்லியிருக்கலாமோ எனப் பட்டது.//

      ’முடிவுப்பகுதி’ என நான் எழுதவில்லை. ’இறுதிப்பகுதி’ என எழுதியிருந்தேன். இருப்பினும் அதுவும் தவறு தான். தாங்கள் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

      உடனே அதை ’நிறைவுப்பகுதி’ என மாற்றி விட்டேன், சார். மீண்டும் என் நன்றிகள், சார்.

      //பொக்கிஷமதற்கு நிஜமான பொருள் அறிந்து கொண்டோம்//

      மிகவும் சந்தோஷம்.

      //பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி. தொடர வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும், தவறினைச் சுட்டிக்காட்டி திருத்தியதற்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      Delete
  37. சிவராத்திரி ப+சை, சித்திரைத்திருவிழா என காணக்கிடைக்காத தர்சனங்கள்பெற்று மகிழ்ந்தோம்.

    பொக்கிச நிகழ்வையும் கேட்டு இன்புற்றோம்.
    நன்றிகள். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மாதேவி April 26, 2013 at 5:15 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சிவராத்திரி பூஜை, சித்திரைத்திருவிழா என காணக்கிடைக்காத தர்சனங்கள்பெற்று மகிழ்ந்தோம். பொக்கிச நிகழ்வையும் கேட்டு இன்புற்றோம். நன்றிகள். தொடருங்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  38. என்ன சார் இது, நிறைவு பகுதின்னு இப்படி முடிச்சிடீங்களே :( நல்ல அம்மன் படங்கள்... நீங்க இது வரை போஸ்ட் பண்ண அனைத்து தொடர் பதிவு போஸ்டுகளும் அற்புதம். நிறைய கத்துகிட்டேன். ரொம்ப தேங்க்ஸ் சார் !

    ReplyDelete
    Replies
    1. Sangeetha Nambi April 26, 2013 at 5:15 AM

      வாங்கோ, வணக்கம்.

      //என்ன சார் இது, நிறைவு பகுதின்னு இப்படி முடிச்சிடீங்களே :(//

      ஆரம்பித்ததை எப்படியும் முடிக்கத்தானே வேண்டும்.

      //நல்ல அம்மன் படங்கள்... நீங்க இது வரை போஸ்ட் பண்ண அனைத்து தொடர் பதிவு போஸ்டுகளும் அற்புதம். நிறைய கத்துகிட்டேன். ரொம்ப தேங்க்ஸ் சார் !//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  39. உங்கள் பொக்கிஷமான பதிவும் பகிர்வும் அருமை.

    பதினோரு பகுதிகளாக தொடர்பதிவை சிறப்பாக எழுதிமுடித்து அத்தனையையும் எல்லோருடனும் பகிர்ந்தது மிகப்பெரிய சாதனதான்.
    படங்களும் சிறப்பு. இறுதியில் மஹா பெரியவரின் மகிமை அதுவும் மனநிறைவாகவே உள்ளது.

    அனைத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. இளமதி April 26, 2013 at 5:33 AM

      வாங்கோ இளமதி மேடம், வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் பொக்கிஷமான பதிவும் பகிர்வும் அருமை.//

      மிகவும் சந்தோஷமம்மா!

      //பதினோரு பகுதிகளாக தொடர்பதிவை சிறப்பாக எழுதிமுடித்து அத்தனையையும் எல்லோருடனும் பகிர்ந்தது மிகப்பெரிய சாதனைதான். படங்களும் சிறப்பு. இறுதியில் மஹா பெரியவரின் மகிமை அதுவும் மனநிறைவாகவே உள்ளது.//

      மிக்க மகிழ்ச்சியம்மா!!

      //அனைத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!//

      கவிதாயினியின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  40. படங்களும் , பாட்டி கதையும் மனதில் பதிந்துவிட்டது.காஞ்சி காமாட்சியை நினைவு படுத்தியதில் பல வருடங்களுக்கு பிறகு ஒன்று நினைவுக்கு வந்தது ,2006 ஆம் ஆண்டு ஒரு நாள் காஞ்சிபுரம் பஸ்டாண்டு வரை சென்றுவிட்டோம்,சின்ன பிரச்சனையால் கோவிலுக்கு செல்லாமல் அப்படியே திரும்பிவிட்டோம். இன்று வரை மீண்டும் அம்மனை தரிசிக்க போகணும்னு தோணலை.இப்ப தோணுது வாய்ப்பு வந்தால் தரிசனம் செய்யவேண்டுமென்று.

    ஆனால் இந்த பொக்கிஷப் பகுதியை உங்கள் மனது நிறைவு செய்திருக்காது,இன்னும் நிறைய இருக்கும்,பதிவு நீள்வதால் சுபம் போட்ருப்பிங்க .

    ரஞ்சனி மேடம் நல்லா சொன்னிங்க வாலாம்பாள் மாமீ பற்றி.

    இப்ப மாமிதான் என் மிகப் பெரிய போக்கிசம்னு பல்டி அடிச்சிடுவாரு பாருங்க......

    வாங்க .....நாம் மாமிகிட்ட சொல்வோம் ===== "நீங்க பேணி பாதுகாக்கும் பொக்கிஷம் (vgk sir தான் ) உங்க வீட்ல உங்களைத்தவிர எல்லா பொக்கிஷத்தையும் பற்றி எழுத்தால் வடிச்சிபுட்டாரு .இனி எப்படி கவனிக்கனுமோ கவனிங்க " னு சொல்லிடுவோம்.(சில பதிவுகளில் மாமிய பற்றி சொல்லிருக்னேனு சொல்வாரு பாருங்க)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆச்சி! நீங்கள் ஒருத்தராவது எனக்கு துணைக்கு வந்தீங்களே!நன்றி!
      என்ன சொல்றாரோ, பார்க்கலாம்!

      Delete
    2. thirumathi bs sridhar April 26, 2013 at 7:43 AM

      வாங்கோ ஆச்சி மேடம், வாங்கோ .... வணக்கம்.

      //படங்களும் , பாட்டி கதையும் மனதில் பதிந்துவிட்டது.//

      அப்படியா, ரொம்ப சந்தோஷம்.

      //காஞ்சி காமாட்சியை நினைவு படுத்தியதில் பல வருடங்களுக்கு பிறகு ஒன்று நினைவுக்கு வந்தது ,2006 ஆம் ஆண்டு ஒரு நாள் காஞ்சிபுரம் பஸ்டாண்டு வரை சென்றுவிட்டோம்; சின்ன பிரச்சனையால் கோவிலுக்கு செல்லாமல் அப்படியே திரும்பிவிட்டோம்.//

      அடடா, என்ன பிரச்சனையோ! ரெட்டை வடம் சங்கிலியாக இருக்காது என்று நம்புகிறேன்.

      //இன்று வரை மீண்டும் அம்மனை தரிசிக்க போகணும்னு தோணலை.இப்ப தோணுது வாய்ப்பு வந்தால் தரிசனம் செய்யவேண்டுமென்று//

      மிக்க மகிழ்ச்சி. சீக்கிரமாக அந்த வாய்ப்புக்கிடைக்கட்டும்.

      //ஆனால் இந்த பொக்கிஷப் பகுதியை உங்கள் மனது நிறைவு செய்திருக்காது, //

      ஆஹா, என் மனதை எவ்வளவு தூரம் ஆழம் பார்த்து வைத்துள்ளீர்கள்!!!!! மனோதத்துவம் படிச்சிருப்பீங்களோ ! ;)

      //இன்னும் நிறைய இருக்கும்; பதிவு நீள்வதால் சுபம் போட்ருப்பிங்க .//

      மிகச்சரியாகவே சொல்லிட்டீங்கோ.

      //ரஞ்சனி மேடம் நல்லா சொன்னிங்க வாலாம்பாள் மாமீ பற்றி.இப்ப மாமிதான் என் மிகப் பெரிய போக்கிசம்னு பல்டி அடிச்சிடுவாரு பாருங்க...... //

      ஆஹா, இதையும் அப்படியே நீங்களே என் சார்பில் சொல்லிட்டீங்கோ. அதே அதே ! சபாபதே !!;))))) அச்சா, பஹூத் அச்சா! மிக்க நன்றி.

      //வாங்க .....நாம் மாமிகிட்ட சொல்வோம் ===== "நீங்க பேணி பாதுகாக்கும் பொக்கிஷம் (vgk sir தான் ) உங்க வீட்ல உங்களைத்தவிர எல்லா பொக்கிஷத்தையும் பற்றி எழுத்தால் வடிச்சிபுட்டாரு .இனி எப்படி கவனிக்கனுமோ கவனிங்க " னு சொல்லிடுவோம்//

      ஆஹா, ”சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” ன்னு இங்கே ஒரு பழமொழி சொல்லுவாங்கோ.

      “பச்சை விளக்கு” என்ற சிவாஜி படத்தில் கூட இது ஒரு நகைச்சுவைக்காட்சியாகக் காட்டப்பட்டிருக்கும்.

      அதுபோலவே இருக்குது நீங்க செய்ய விரும்புவதும்.

      //.(சில பதிவுகளில் மாமிய பற்றி சொல்லிருக்னேனு சொல்வாரு பாருங்க)//

      ஆஹா, இதை உள்பட ஞாபகமாச் சொல்லிட்டீங்கோ. நான் சொல்லுவதற்கே இனி ஒன்றும் இல்லை.

      ஆச்சியோ கொக்கோ !!!!! ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், என்னை வம்பு இழுக்கும் அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஆச்சி மேடம்.

      Delete
  41. முதற்க்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .எனது அழைப்பு ஏற்று பல பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா .
    இபதிவில் உள்ள படங்கள் அனைத்தும் அழகாக ஜொலிக்கின்றன .
    ...மெய்சிலிர்க்கவைக்கும்உண்மை சம்பவம் ..
    நாம் நினைப்பதற்கும் மேலாக இறைவன் நமக்கு அருளுவார் அவரையே நம்பி பின்பற்றும்போது என்பதற்கு இச்சம்பவம் மிக சிறந்த உதாரணம் .
    ..வாசிக்கும்போது அப்படியே கண்முன் காட்சிகள் தோன்ற்வதுபோல இருந்தது ..பகிர்வுக்கு நன்றி அண்ணா .

    ReplyDelete
    Replies
    1. angelin April 26, 2013 at 8:27 AM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      //முதற்க்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .எனது அழைப்பு ஏற்று பல பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா//

      ஏதோ ஒரு வாய்ப்பு அளித்தீர்கள். இந்தப்பதிவினை நான் எழுத ஆரம்பித்த அன்று என்னிடம் எந்த ஒரு specific idea வும் இல்லை. என்ன எழுதப்போகிறோம், எதைப்பற்றியெல்லாம் எழுதப்போகிறோம், எவ்வளவு பகுதிகள் எழுதப்போகிறோம் என்று எதுவுமே திட்டமிடாமல் தான் ஆரம்பித்தேன்.

      ஏதோ அது 11 பகுதிகளாக நீண்டு ஒரு மாதிரி வெற்றிகரமாக இனிதே முடிந்தது. எனக்கும் சந்தோஷம் தான், நிர்மலா.
      .
      //இப்பதிவில் உள்ள படங்கள் அனைத்தும் அழகாக ஜொலிக்கின்றன. ... மெய்சிலிர்க்கவைக்கும் உண்மை சம்பவம் ..
      நாம் நினைப்பதற்கும் மேலாக இறைவன் நமக்கு அருளுவார் அவரையே நம்பி பின்பற்றும்போது என்பதற்கு இச்சம்பவம் மிக சிறந்த உதாரணம்.//

      ஆமாம் நிர்மலா. அது மெய்சிலிரிக்க வைக்கும் உண்மை சம்பவம் தான். முதல் தடவை படிக்கும் போது நான் அழுதே விட்டேன்.

      //வாசிக்கும்போது அப்படியே கண்முன் காட்சிகள் தோன்றுவதுபோல இருந்தது .. பகிர்வுக்கு நன்றி அண்ணா.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நிர்மலா.

      Delete
  42. தினமும் இப்படி பூஜை உங்கள் வீட்டிலேயே செய்வீங்களோ? பார்க்க கோயில்போலவே உள்ளது.

    சமயபுரத்து மாரியம்மன் வீதி உலா சூப்பராக இருக்கு.

    மீனாட்சிப் பாட்டி + பேத்தி கதை படிச்சு முடிச்சுட்டேன்ன் கதையும், அதில் வரும் சொற்களும் அருமை.

    சரி சரி எதை மறந்தாலும் என் நேர்த்திக்கடனை மட்டும் மறந்திடாதீங்கோ.....

    ReplyDelete
    Replies
    1. athira April 26, 2013 at 10:32 AM

      வாங்கோ அதிரா, மாலை வணக்கம். குல்பி சாப்பிட்டீங்களா அல்லது ரீ மட்டும் குடிச்சுட்டு வாரீகளா ?

      //தினமும் இப்படி பூஜை உங்கள் வீட்டிலேயே செய்வீங்களோ? பார்க்க கோயில்போலவே உள்ளது.//

      என் அப்பா இருந்தவரை என் வீட்டிலும், இப்போ என் பெரிய் அண்ணா பிள்ளை வீட்டிலும் நடைபெற்று வருகிறது. பூஜை நடக்கும் இடம் கோயில் போலத்தான் இருக்கும்.

      //சமயபுரத்து மாரியம்மன் வீதி உலா சூப்பராக இருக்கு.//

      ஆமாம். அதை நேரில் பார்த்த நான் சொக்கிப்போனேன், அந்த அம்மன் நல்ல அழகோ அழகாகத்தான் இருந்திச்சு.

      //மீனாட்சிப் பாட்டி + பேத்தி கதை படிச்சு முடிச்சுட்டேன்ன் கதையும், அதில் வரும் சொற்களும் அருமை. //

      அது கதை அல்ல. உண்மைச்சம்பவம். பேசும் மொழியிலேயே எழுதியிருப்பதால் சொற்கள் ஒரு மாதிரி அருமையாகத்தான் இருக்கும். [நீங்கள் அடிக்கடி எழுதுவது போல]

      //சரி சரி எதை மறந்தாலும் என் நேர்த்திக்கடனை மட்டும் மறந்திடாதீங்கோ..... //

      அடடா, அதுவேறு பாக்கியுள்ளதே ! நினைவூட்டலுக்கு நன்றி. ;)

      Delete
  43. தெய்வம் இருப்பது எங்கே.. என எல்லோரும் கேட்கினம்.. முடிவிலயாவது சொல்லியிருக்கலாமில்ல.. பிரித்தானியாவில.... வீட்டில என:).. ஹையோ வாணாம் நா ஒண்ணுமே சொல்லல்ல.. நேக்கு எதிரி என் வாய்தேன்:)..

    மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுபவர் அதிராமிய. ஹையோ பழக்கதோசத்தில அப்பூடியே கதைச்சிட்டேன்.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ.:).

    ReplyDelete
    Replies
    1. athira April 26, 2013 at 10:34 AM

      //தெய்வம் இருப்பது எங்கே.. என எல்லோரும் கேட்கினம்.. முடிவிலயாவது சொல்லியிருக்கலாமில்ல.. பிரித்தானியாவில.... வீட்டில என:).. //

      சொல்லியிருப்பேன் அதிரா. எனக்குத்தெரியும். ஆனால் மற்ற எல்லோரும் அதை ஒத்துக்கொள்ள வேண்டாமா?

      ”திருவிளையாடல்” என்ற படத்தில் தருமி [நாகேஷ்] சிவபெருமானைப் [சிவாஜியை] பார்த்து ஒன்று கேட்பார்.

      ”இந்த நீர் எழுதிய பாடலுக்குப் பரிசு கிடைத்தால் OK நான் வாங்கிக்கொள்கிறேன். வேறு ஏதாவது கிடைத்தால்?????”

      ஏனோ இப்போது எனக்கு அந்த ஞாபகம் வருகிறது. ;)))))

      >>>>>

      Delete
    2. கோபு >>>> அதிரா [2]

      /ஹையோ வாணாம் நா ஒண்ணுமே சொல்லல்ல..//

      சும்மா தைர்யமாச் சொல்லுங்கோ.

      //நேக்கு எதிரி என் வாய்தேன்:).//

      அது தான் உலகறிந்த விஷயமாச்சே. ;)))))

      >>>>>

      Delete
    3. கோபு >>>>> அதிரா [3]

      //மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுபவர் அதிராமியா.//

      ஆஹா, சந்தோஷம்.

      //ஹையோ பழக்கதோசத்தில அப்பூடியே கதைச்சிட்டேன்..//

      பரவாயில்லை. நீங்க கதைச்சது தான் அய்ய்கோ அய்ய்கா இருக்கீதூஊஊஊ ;)

      //மன்னிச்சுக்கொள்ளுங்கோ.:)//

      மன்னிப்பெல்லாம் எதற்கு?

      யார் வேண்டிக்கொண்டார்களோ அவர்களே தான் தோப்பிக்கரணம் போட வேண்டுமாம். நான் போடக்கூடாதாம். நேற்று உச்சிப்பிள்ளையாரே என் கனவில் வந்து சொல்லிப்பூட்டார்.

      அதனால் நீங்க அங்கேயே எங்கேயாவது தோப்பிக்கரணம் போட்டுடுங்கோ. பிள்ளையார் மன்னிச்சிடுவார். ;)

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவைக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.

      Delete
  44. பொக்கிஷத்திலேயே பெரிய பொக்கிஷம் மஹா பெரியவா பிரசாதம்.


    பூஜைப் படங்களும்,சமயபுரம் மாரியம்மன் படங்களும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அழகு. மிக மிக நன்றி கோபு சார்.

    ReplyDelete
    Replies
    1. வல்லிசிம்ஹன் April 27, 2013 at 3:39 AM

      வாங்கோ வணக்கம்.

      //பொக்கிஷத்திலேயே பெரிய பொக்கிஷம் மஹா பெரியவா பிரசாதம். பூஜைப் படங்களும்,சமயபுரம் மாரியம்மன் படங்களும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அழகு. மிக மிக நன்றி கோபு சார்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  45. தெய்வம் இருப்பது எங்கே எனக் கேட்டு, அதற்கு உங்கள் பதிவின் மூலம் பதிலும் சொல்லி இருப்பது நன்று.

    பெரியவா வாழ்வில் நடத்திய பல விஷயங்கள் வேறு யாராலும் செய்ய முடியாத விஷயங்கள்.

    பொக்கிஷம் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. விடுபட்ட மற்ற பகுதிகளையும் விரைவில் படிக்க முயல்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் April 27, 2013 at 5:52 AM

      வாங்கோ வெங்கட்ஜி ... வணக்கம்.

      //தெய்வம் இருப்பது எங்கே எனக் கேட்டு, அதற்கு உங்கள் பதிவின் மூலம் பதிலும் சொல்லி இருப்பது நன்று. //

      சந்தோஷம்.

      //பெரியவா வாழ்வில் நடத்திய பல விஷயங்கள் வேறு யாராலும் செய்ய முடியாத விஷயங்கள்.//

      ;))))) ஆமாம். சரியாகச்சொன்னீர்கள்.

      //பொக்கிஷம் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. விடுபட்ட மற்ற பகுதிகளையும் விரைவில் படிக்க முயல்கிறேன்.....//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், வெங்கட்ஜி.

      Delete
  46. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம்.

    இந்தப் பொக்கிஷம் பகுதி-11க்கு மட்டும் நான் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளிக்க சில நாட்கள் ஆகக்கூடும்.

    ஆனால் கட்டாயமாக ஒரு நாள் பதில் அளிப்பேன்.

    இதுவரை இந்தத்தொடருக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி கூறி இன்று 27.04.2013 சனிக்கிழமை ஓர் தனிப்பதிவு கொடுத்துள்ளேன்.

    தலைப்பு: “அன்றும் இன்றும்”

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/04/12.html

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    ReplyDelete
  47. உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை

    ReplyDelete
    Replies
    1. Jaleela Kamal April 28, 2013 at 5:12 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை//

      தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  48. ஐயா!

    தங்களின் தொடரினை முழுவதும் படித்து கருத்துரை இட்டிருந்தேன்! பொக்கிஷம் தொடர் மிக அருமை! பெரியவாளின்
    அற்புதங்கள் மெய்சிலிர்க்க வைத்தது! நல்லதொரு தொடர் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. April 28, 2013 at 7:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஐயா! தங்களின் தொடரினை முழுவதும் படித்து கருத்துரை இட்டிருந்தேன்! //

      அனைத்துப்பகுதிகளையும் படித்திருப்பீர்கள் என்று தான் நானும் நினைக்கிறேன். ஆனாலும் பகுதி 1, 3 and 4 ஆகிய மூன்று பகுதிகளில் மட்டும் தங்களின் பொக்கிஷமான கருத்துக்களைக் காணோம். அதனால் பரவாயில்லை. ஏதோ விட்டுப்போய் இருக்கலாம். No Problem at all.

      //பொக்கிஷம் தொடர் மிக அருமை! பெரியவாளின்
      அற்புதங்கள் மெய்சிலிர்க்க வைத்தது! //

      மிக்க மகிழ்ச்சி.

      //நல்லதொரு தொடர் பதிவிற்கு நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      Delete
  49. உண்மையில் பொக்கிஷம்தான்.ஓரிரு முறை திருச்சி வந்தபோது, மலைக்கோட்டை, வயலூர்,ஸ்ரீஇரங்கம்,திருவானைக்கா,சமயபுரம் போனதெல்லாம் மறக்க முடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. குட்டன் May 3, 2013 at 7:18 AM

      வாருங்கள், வணக்கம்.

      //உண்மையில் பொக்கிஷம்தான்.ஓரிரு முறை திருச்சி வந்தபோது, மலைக்கோட்டை, வயலூர்,ஸ்ரீஇரங்கம்,திருவானைக்கா,சமயபுரம் போனதெல்லாம் மறக்க முடியவில்லை!//

      மிக்க மகிழ்ச்சி. தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  50. Appa appappa.........
    Ethanai deiveegam......
    Manasu nekilnthu...
    elathave varalai......
    Oneu mattum cholren....
    Thanks Thanks for the post, pictures.
    Vera onnum chola therialai.
    viji

    ReplyDelete
  51. viji May 5, 2013 at 12:41 AM

    வாங்கோ விஜி மேடம், வணக்கம்.

    //Appa appappa......... அப்பா அப்பப்பா
    Ethanai deiveegam...... எத்தனை தெய்வீகம்
    Manasu nekilnthu... மனது நெகிழ்ந்தது
    elathave varalai...... எழுதவே வரலை
    Oneu mattum cholren.. ஒன்று மட்டும் சொல்றேன்
    Thanks Thanks for the post, pictures.
    படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி, நன்றி
    Vera onnum chola therialai. viji
    வேறு ஒன்றும் சொல்லத்தெரியலை - விஜி//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், விஜி மேடம்.

    ReplyDelete
  52. வணக்கம்
    ஐயா

    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  53. வணக்கம்
    ஐயா

    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. //2008rupan July 22, 2013 at 6:28 PM
      வணக்கம் ஐயா

      இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-//

      வ்ணக்கம். தங்கள் தகவலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
  54. பாட்டியும் பேத்தியும் கதை பெரியவாளின் அபூர்வமான லீலை.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி May 8, 2015 at 6:45 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பாட்டியும் பேத்தியும் கதை பெரியவாளின் அபூர்வமான லீலை.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார்.

      Delete
  55. நித்ய சிவபூஜை தெய்வீகம். ஆத்மார்த்தமான பூஜை காணக் காண பக்தி மேலிட வைக்கிறது.பெரியவாளின் கருணையே கருணை.
    இப்படி ஒரு பேசும் தெய்வம் எத்தனையோ ஜீவன்களுக்கு கருணைக் கடலாக தக்க சமயத்தில் அருள் பாலித்து ஆட்கொண்டிருப்பதை படிக்கும் போது சித்தம் சிலிர்க்கிறது. ஜீவ நக்ஷத்திரமாக 'பெரியவா' என்றென்றும் நமக்கு ஒரு வரப்ரசாதி. நீங்கள் வாழ்வது போன்ற வாழ்வு யாருக்கும் எளிதில் அமைந்து விடாது. அவரின் அருட்கடாக்ஷம்.

    ReplyDelete
    Replies
    1. ஜெயஸ்ரீ ஷங்கர் July 4, 2015 at 6:59 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நித்ய சிவபூஜை தெய்வீகம். ஆத்மார்த்தமான பூஜை காணக் காண பக்தி மேலிட வைக்கிறது.பெரியவாளின் கருணையே கருணை. இப்படி ஒரு பேசும் தெய்வம் எத்தனையோ ஜீவன்களுக்கு கருணைக் கடலாக தக்க சமயத்தில் அருள் பாலித்து ஆட்கொண்டிருப்பதை படிக்கும் போது சித்தம் சிலிர்க்கிறது. ஜீவ நக்ஷத்திரமாக 'பெரியவா' என்றென்றும் நமக்கு ஒரு வரப்ரசாதி. நீங்கள் வாழ்வது போன்ற வாழ்வு யாருக்கும் எளிதில் அமைந்து விடாது. அவரின் அருட்கடாக்ஷம். //

      தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள். எல்லாவற்றிற்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருட்கடாக்ஷம் மட்டுமே காரணம்.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அவர்களின் Miracle Incidents பலவற்றை ஒரு மெகா தொடராக 108+17=125 பகுதிகளாக வெளியிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது முடிந்தால் படியுங்கோ. ஆரம்ப அறிமுக இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html
      ஜயந்தி வரட்டும் ... ஜயம் தரட்டும்

      http://gopu1949.blogspot.in/2013/05/1.html - பகுதி-1
      வெயிட்லெஸ் விநாயகர்

      http://gopu1949.blogspot.in/2014/01/108.html - பகுதி-108
      ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை

      http://gopu1949.blogspot.in/2014/01/108108.html
      பச்சை மரம் ஒன்று! ... இச்சைக்கிளி ... ரெண்டு!!
      (வருகை தந்து கருத்தளித்துள்ள வாசகர்களுக்கு என் நன்றி அறிவிப்பு)

      மீண்டும் மிக்க நன்றி. :)

      Delete
  56. பஞ்சாயதன பூஜை படங்கள் அற்புதமா இருக்கு. பெரியவாளோட கருணையை உண்மை சம்பவம் மூலமாக புரிஞ்சுக்க வச்சுட்டூங்க. பெரியவா பெரியவா தான்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 17, 2015 at 3:49 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பஞ்சாயதன பூஜை படங்கள் அற்புதமா இருக்கு. பெரியவாளோட கருணையை உண்மை சம்பவம் மூலமாக புரிஞ்சுக்க வச்சுட்டீங்க. பெரியவா பெரியவா தான்//

      மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
  57. பூஜா படங்க தேரோட்டம் படங்கலா நல்லாருக்குது

    ReplyDelete
    Replies
    1. mru October 25, 2015 at 9:58 AM

      //பூஜா படங்க தேரோட்டம் படங்கலா நல்லாருக்குது//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      Delete
  58. பூஜை படங்கள் பிரத்யட்சமா இருக்கு. பாட்டியின் பேத்திக்கு அருள் செய் பெரியவாளின் கருணை உள்ளம் அறிந்து மனசே சிலிர்த்து போறது.

    ReplyDelete
  59. மகான்கள் மனது வைத்தால் எதையும் நடத்திக்காட்டமுடியும்..இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்???

    ReplyDelete
  60. எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்த அனுபவத்தைப் படிக்கலாம். மனித மனங்களின் விசித்திரம், ஆசார்யரிடத்திடம் பக்தி விசுவாசம் இருந்தபோதிலும் உலகியலில் ஆசைவைப்பதால் செய்யும் தவறு, ஆசாரியர் அதைச் சரியாக சுட்டிக் காட்டுவது, நிஜமான பக்தி உள்ளவர்கள் (பண்ணையாரின் சகதர்மிணி) செய்வது.. எத்தனை முறை படித்தாலும் பக்தி விசுவாசத்தின் மேன்மையையும் ஆசாரியர் தனது சிஷ்யர்களை நல் வழிப்படுத்தும் முறையையும் அதே சமயம் குற்றங்களை மன்னித்து அவர்களின் நன்மைக்காக செய்பவைகளையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டுகிறது இந்தச் சம்பவம். 'நம்பிக்கை' மற்றும் 'விசுவாசம்' இதைத் தவிர மேன்மையானது ஒன்றுமேயில்லை. கோபுர தரிசனம் கோடி புண்யம். ஆசாரிய தரிசனம் ஆகாய அளவு புண்ணியம்.

    ReplyDelete
    Replies
    1. 'நெல்லைத் தமிழன் September 26, 2016 at 4:50 PM

      வாங்கோ, வணக்கம்.

      //எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்த அனுபவத்தைப் படிக்கலாம்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //மனித மனங்களின் விசித்திரம், ஆசார்யரிடத்திடம் பக்தி விசுவாசம் இருந்தபோதிலும் உலகியலில் ஆசைவைப்பதால் செய்யும் தவறு, ஆசாரியர் அதைச் சரியாக சுட்டிக் காட்டுவது, நிஜமான பக்தி உள்ளவர்கள் (பண்ணையாரின் சகதர்மிணி) செய்வது.. எத்தனை முறை படித்தாலும் பக்தி விசுவாசத்தின் மேன்மையையும் ஆசாரியர் தனது சிஷ்யர்களை நல் வழிப்படுத்தும் முறையையும் அதே சமயம் குற்றங்களை மன்னித்து அவர்களின் நன்மைக்காக செய்பவைகளையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டுகிறது இந்தச் சம்பவம். 'நம்பிக்கை' மற்றும் 'விசுவாசம்' இதைத் தவிர மேன்மையானது ஒன்றுமேயில்லை.//

      மிகவும் அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

      //கோபுர தரிசனம் கோடி புண்யம். ஆசாரிய தரிசனம் ஆகாய அளவு புண்ணியம்.//

      ஆஹா ! சூப்பர் !!

      தங்களின் அன்பான வருகைக்கும், மிகத் தெளிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  61. Mail message received on 4th May 2017 at 11.43 AM

    எனது அன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய, உயர்திரு. கோபு ஸார் அவர்களுக்கு,

    ஆச்சரியமாக இருக்குமே. எனக்குள்ளும் ஆச்சரியம் தாண்டவமாடுகிறது.

    இன்று உங்களின் பொக்கிஷம் என்ற தாங்கள் எனக்கு அளித்த பரிசு புத்தகத்தைப் படித்தேன்.

    ஆஹா... புத்தகமே பொக்கிஷம் தான். அதில் இருக்கும் தங்களது அத்தனை பொக்கிஷங்களும் எனக்குப் பொக்கிஷமாகவே தெரிந்தது.

    மஹா பெரியவரின் அருகில் நீங்கள் நிற்கும், குளிக்கும், பண்டரிபுர அனுபவம்... அவருக்கு மிக சமீபத்தில் ஆற்றில் குளித்த அனுபவங்கள் அனைத்தையும் படித்ததும், மனதுக்குள் ஒரு இதமான நெகிழ்ச்சி.

    இது போன்ற பாக்கியங்கள் தான் பூர்வஜென்ம புண்ணியங்கள். தங்களது எழுத்துக்களில் நிறைய ஹாஸ்யங்கள், குறும்புகள் எனப் படித்திருந்தாலும்.... இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது கண்களில் நீர் தாரையாகி வழிந்தது என்பது தான் நிஜம்.

    பெரியவாளின் பாதுகைகள்..... கண்ணில் கண்டதற்கே நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன்.

    குடும்ப உறுப்பினராகவே இருந்தாலுமே, எத்தனை பேர்களுக்கு தங்களது பொக்கிஷத்தையும் தாண்டிய இது போன்ற உயர்ந்த புதையலை அவருக்குத் தரும் மனம் வரும்? நீங்கள் செய்திருக்கிறீர்கள். இது மஹா விந்தையிலும் விந்தை.

    பூஜை படங்கள் அற்புதக் காட்சியெனக் கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.... என்று காதினுள் ஒலித்ததை மனம் உணர்ந்து கொண்டது.

    நீங்கள் ஒரு அற்புத மாமனிதர்.

    அன்னை காமாக்ஷியின் தாங்கள் வரைந்த படம் இப்போதும் அந்தக் கோயிலில் இருக்கும் அல்லவா? வரங்கள் பல பெற்ற பேறு பெற்றவர். பொக்கிஷம் என்ற அனுபவக் குவியல்..... அபாரம்.

    இப்படிக்குத் தங்கள்
    எழுத்துக்களின் பரம ரஸிகை

    ReplyDelete