என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 27 ஏப்ரல், 2013

12] அன்றும் இன்றும் !
திருச்சி மலைக்கோட்டை
அன்றும் இன்றும்

By
வை.கோபாலகிருஷ்ணன்


திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. தா. சவுண்டையா I.A.S., அவர்கள் 2010 ஆகஸ்டு மாதம் “முத்தமிழ்” என்ற கலை, பண்பாட்டுச் சிறப்பிதழ் ஒன்றில் எழுதியுள்ள படைப்பு ஒன்றினில் திருச்சி மலைக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை பற்றி  குறிப்பிட்டுள்ளார்கள். 
அதில் மேற்படி படமும் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னொரு காலத்தில் .... என்று காட்டியுள்ள இந்தப்படம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ள திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலாகும். அதன் அருகே திருச்சி ஸ்ரீ தாயுமானவர் கோயில் இல்லை என்பதை கவனிக்கவும்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இன்று உள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் என்பவரால் பாறைகளுக்கு மத்தியில் கட்டப்பட்டதாக, தமிழக வரலாறு குறிப்பிடுகிறது, என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள்.உச்சிப்பிள்ளையார் + ஸ்ரீ தாயுமானவர் 
கோயில்களின் இன்றைய தோற்றம் 
இதோ இங்கே


அதுபோல திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் என புவி இயல் வல்லுனர்களின் ஆய்வு மதிப்பிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.  ஒரு மில்லியன் என்றால் பத்து இலட்சம் ஆகும். 3,500 x 10,00,000 = 350,00,00,000 திருச்சி மலைக்கோட்டையின் வயது 350 கோடி ஆண்டுகளுக்கு மேல் என்பது தெரியவருகிறது. மிகவும் ஆச்சர்யமான தகவலாக உள்ளது அல்லவா!
திருச்சியைப்பற்றியும் அதன் பெருமைகளைப்பற்றியும் மேலும் பல்வேறு படங்களுடன் காண நான் ஏற்கனவே எழுதி வெளியிட்டுள்ள “ஊரைச்சொல்லவா ..... பேரைச்சொல்லவா” என்ற பதிவினில் பார்க்கவும். இணைப்பு http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

-oOo-


”பொக்கிஷம்”
தொடர்பதிவுக்கு
வருகை தந்தோருக்கு
நன்றி அறிவிப்பு


”பொக்கிஷம்” என்ற தொடர்பதிவினை வெவ்வேறு தலைப்புகளில் 14.03.2013 முதல் 24.04.2013 வரை 11 பகுதிகளாக எழுதி வெளியிட்டிருந்தேன்.


பகுதி-01 க்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/03/1.html

பகுதி-11 க்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html


அதற்கு மொத்தமாக 53 பெண்களும்  35 ஆண்களுமாக ஆக மொத்தம் 88 நபர்கள் அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியிருந்தார்கள். 


அவர்கள் அனைவருக்குமே, முதல் 10 பகுதிகளிலும், ஆங்காங்கே தனித்தனியே அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகூறி பதில் அளித்துள்ளேன். 

இதோ அவர்களின் பட்டியல்:


திருமதிகள்:


01] அதிரா அவர்கள் 11/11


02] அம்முலு [பிரியசகி[ அவர்கள் 11/11

03] ஆச்சி [thirumathi bs sridhar] அவர்கள் 11/11

04] ஆசியா ஓமர் அவர்கள் 11/11

05] இராஜராஜேஸ்வரி அவர்கள் 11/11

06] இளமதி அவர்கள் 11/11

07] உஷா அன்பரசு அவர்கள் 11/11

08] ஏஞ்ஜலின் [நிர்மலா] அவர்கள் 11/11

09] காமாக்ஷி  அவர்கள் 11/11

10] கீத மஞ்சரி அவர்கள் 11/11

11] கீதா சாம்பசிவம் அவர்கள் 11/11

12] கோமதி அரசு அவர்கள் 11/11

13] கோவை2தில்லி அவர்கள் 11/11

14] சங்கீதா நம்பி அவர்கள் 11/11

15] மாதேவி அவர்கள் 11/11

16] ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் 11/11

17] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 11/11

18] வல்லிசிம்ஹன் அவர்கள் 11/11

19] ஜெயந்தி ரமணி அவர்கள் 11/11

20] ப்ரியா ஆனந்தகுமார் அவர்கள் 9/11

21] ஜலீலா கமால் அவர்கள் 8/11
22] விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள் 8/11
23] ஸாதிகா அவர்கள் 8/11
24] மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள் 8/11
25] S. மேனகா அவர்கள் 8/11


26] விஜி பார்த்திபன் அவர்கள் 7/11


27] சந்திரகெளரி அவர்கள் 6/11
28] மனோ சுவாமிநாதன் அவர்கள் 6/11
29] பூவிழி அவர்கள் 6/11


30] கோவைக்கவி வேதா இலங்காதிலகம் அவர்கள் 5/11
31] பூந்தளிர் அவர்கள் 5/11


32] சந்தியா அவர்கள் 4/11
33] ராமலக்ஷ்மி அவர்கள் 4/11
34] அமைதிச்சாரல் அவர்கள் 4/11

35] ருக்மணி சேஷசாயீ அவர்கள் 3/11
36] அம்பாளடியாள் அவர்கள் 3/11
37] சசிகலா [தென்றல்] அவர்கள் 3/11
38] நிலாமகள் அவர்கள் 3/11

39] ராம்வி அவர்கள் 2/11
40] ஃபைசா காதர் அவர்கள் 2/11
41] மாலதி அவர்கள் 2/11
42] ராதாராணி அவர்கள் 2/11
43] கிரிஜா ஸ்ரீதர் அவர்கள் 2/11


44] அருணா செல்வம் அவர்கள் 1/11
45] விஜிகிச்சன் கிரியேஷன் அவர்கள் 1/11
46] அன்புடன் அருணா அவர்கள் 1/11
47] எழில் அவர்கள் 1/11
48] புனிதா அவர்கள் 1/11
49] மீரா அவர்கள் 1/11
50] அப்பாவி தங்கமணி அவர்கள் 1/11
51] நீலா ரூஃபஸ் அவர்கள் 1/11
52] அருணா அவர்கள் 1/11
53] ஷைலஜா அவர்கள் 1/11

திருவாளர்கள்:54] திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 11/11


55] ஸ்ரீராம் அவர்கள் 11/11

56] தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் 11/1157] கே.பி. ஜனா அவர்கள் 9/11


58] E.S.. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் 8/11

59] S. ரமணி அவர்கள் 6/11

60] பட்டாபிராமன் ஐயா அவர்கள் 5/11
61] வெங்கட் நாகராஜ் அவர்கள் 5/11
62] அப்பாதுரை அவர்கள் 5/11

63] அஜீம்பாஷா அவர்கள் 4/11
64] சே. குமார் அவர்கள் 4/11
65] ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள் 4/11
66] T.N. முரளிதரன் அவர்கள் 4/11

67] ரிஷபன் அவர்கள் 3/11
68] G. கணேஷ் [செளதி] அவர்கள் 3/11
69] G.M. பாலசுப்ரமணிய ஐயா அவர்கள் 3/11
70] வாஸன் அவர்கள் 3/11
71] கரந்தை ஜயகுமார் அவர்கள் 3/11
72] கவியாழி கண்ணதாசன் அவர்கள் 3/11

73] ஆரண்யநிவாஸ் R. ராமமூர்த்தி அவர்கள் 2/11
74] சூரி சிவா சுப்புத்தாத்தா அவர்கள் 2/11
75] மணக்கால் ஐயா அவர்கள் 2/11
76] மலர் பாலன் அவர்கள் 2/11
77] ’அவர்கள் உண்மைகள்’ அவர்கள் 2/11

78] S. சுரேஷ் அவர்கள் 1/11
79] இக்பால் செல்வன் அவர்கள் 1/11
80] Advocate P.R. ஜயராஜன் அவர்கள் 1/11
81] சேக்கனா M நிஜாம் அவர்கள் 1/11
82] K.S.S. ராஜ் அவர்கள் 1/11
83] விமலன் அவர்கள் 1/11
84] D. சந்திரமெளலி அவர்கள் 1/11
85] பழனி கந்தசாமி ஐயா அவர்கள் 1/11
86] லதிகார் அவர்கள் 1/11
87] கிருஷ்ணா ரவி [அட்சயா] அவர்கள் 1/11
88] மகேந்திரன் அவர்கள் 1/11

அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதோ அனைவருக்கும் பூங்கொத்து.


 


 மஞ்சள் பூசப்பட்டுள்ள 19 பெண்களும், சந்தனம் பூசப்பட்டுள்ள 3 ஆண்களும்   [ஆக மொத்தம்  22 பேர்கள்] இந்தத்தொடரின் அனைத்துப் பதினொன்று பகுதிகளுக்கும் வருகை புரிந்து தங்களின் கருத்துக்களைப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் வம்புத்தங்கை ..... ஸாரி ..... என் அன்புத்தங்கை, பிரித்தானியா இளவரசி  அலம்பல், அலட்டல், அட்டகாச, அதிரடி ”அதிரா” ஸ்வீட் சிக்ஸ்டீன்  அவர்கள், இந்த என் தொடருக்கு, ஏராளமான பின்னூட்டங்களை தாராளமாக வழங்கியுள்ளார்கள். 


அதிரா அவர்கள் இந்த என் “பொக்கிஷம்” தொடரின் 11 பகுதிகளுக்கும் சேர்த்து இதுவரை கொடுத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை: 47 ஆகும்.  இது வழக்கத்துக்கு மாறான அதிசயமாகக் கருதப்படுகிறது. அதிரா அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.

அதிராவுக்கு மிகவும் பிடித்த பூனை மூலம் பூ கொடுத்தனுப்பப்பட்டுள்ளது. 


வழக்கம்போலவே மிக அதிகமான பின்னூட்டங்களை, மிகவும் அமைதியாகவும், ஸாத்வீகமான முறையிலும், மிக அழகாகவும், தெளிவாகவும் அள்ளி அள்ளிக்கொடுத்து அசத்தியுள்ளவர், என்ற  முதலிடத்தினைத் தக்க வைத்துக்கொண்டுள்ளவர்கள், நம் அன்புக்கும், பாசத்திற்கும் உரிய, தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்கள் தான். 


திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இந்தப் “பொக்கிஷம்” தொடரின் 11 பகுதிகளுக்கும் சேர்த்து இந்த நிமிடம் வரை கொடுத்துள்ள மொத்தப்பின்னூட்டங்களின் எண்ணிக்கை: 61 ஆகும். அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

ஞானத்தலைவியான இவருக்கு, ஞானத்தின் அடையாளமான  யானை மூலம் பூங்கொத்து கொடுத்தனுப்பி ராஜமரியாதை செய்யப்பட்டுள்ளது.

என்னிடமிருந்த, நான் இதுவரை பொக்கிஷமாக நினைத்து மகிழ்ந்த, பல விஷயங்களைப்பற்றி மட்டும், என் இந்தத்தொடரின் 11 பகுதிகளிலும் எடுத்துச்சொல்லியிருந்தேன். 


அவை எல்லாவற்றையும் விட மாபெரும் பொக்கிஷமாக நான் நினைப்பது, என் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள் எழுதி உற்சாகப்படுத்தி வரும் விலைமதிப்பில்லாத பெரும் பொக்கிஷமான தங்களின் பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை மட்டுமே.


இந்தத்தொடரின் 11 பகுதிகளுக்கும் [என் பதில்கள் உள்பட] இந்த நிமிடம்வரை கிடைத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை: 


125+132+114+133+107+119+114+113+118+93= 1168 + [44 * 2 assumed =88] = 1256


பின்னூட்டங்களின் எண்ணிக்கை [என் பதில்கள் உள்பட] பெரும்பாலான பகுதிகளில் 100ஐத் தாண்டி, இந்தத்தொடரின் மொத்தப் பின்னூட்ட எண்ணிக்கை 1250ஐத் தாண்டியுள்ளது, மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும்,  சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது. 


இந்த மகிழ்ச்சியினைக் கொண்டாட இந்தாங்கோ விருந்து:    

 

 

 

 

 


ooooooOooooooமாறுதலுக்கு உட்பட்ட மேற்படி 
புள்ளி விபரங்கள் 27.04.2013 சனிக்கிழமை
மிகச்சரியாக 16.45 மணிக்கு [I.S.T] எடுக்கப்பட்டுள்ளது.என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

இன்று 27.07.2015 
புதிதாக இணைக்கப்பட்டுள்ள 
சில படங்களும் செய்திகளும்


திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயில்களில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் வளாகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 

உச்சிப்பிள்ளையார் கோயில் தங்க நிற விமானத்திற்கும், தாயுமானவர் கோயிலின் தங்கநிற விமானத்திற்கும் இடையே மிகப்பெரிய அளவில் ‘ஓம்’ என்ற மின்விளக்கு இந்த மாதம் [ஜூலை 2015] பொருத்தியுள்ளார்கள். 

இந்த ‘ஓம்’ என்ற விளக்கின் அமைப்பு, வடக்கு நோக்கி அமைந்துள்ளதால், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திருச்சிக்கு வருபவர்கள் திருவானைக்கோயில் அருகேயுள்ள மாம்பழச்சாலை + காவிரிப்பாலம் போன்ற தொலைவிலிருந்து இதனைத்தங்கள் கண்களால் கண்டு களிக்கலாம்.  

இந்தப்புகைப்படங்கள் என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியே இன்று 27.07.2015 எடுக்கப்பட்டு இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

126 கருத்துகள்:

 1. திருச்சி மலைக்கோட்டை பற்றிய செய்திப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.இத்தனை பொறுமையாய் பின்னூட்டங்களை ரசித்து பாராட்டி பதிவிட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது,கடின உழைப்பின் மறு பெயர் தாங்கள் என்று எல்லோருக்கும் தெரியும்,அதனாலேயே பின்னூட்டத்தால் தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.தொடர்ந்து அசத்துங்கள்,மகிழ்ச்சியுடன் அளித்த விருந்து சூப்பர்.நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Asiya Omar April 27, 2013 at 4:45 AM

   வாங்கோ, வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டை பற்றிய செய்திப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //இத்தனை பொறுமையாய் பின்னூட்டங்களை ரசித்து பாராட்டி பதிவிட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது,கடின உழைப்பின் மறு பெயர் தாங்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே பின்னூட்டத்தால் தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.//

   ;))))) அனைவரின் அன்புக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் மனமார்ந்த நன்றிகளும் உரித்தாகுக.

   //தொடர்ந்து அசத்துங்கள்.//

   தொடர்பதிவு எழுத தாங்களும், ஏஞஜலின் அவர்களும் எனக்கு ஏதோ ஒரு வாய்ப்பு அளித்து அழைத்தீர்கள்.

   இந்தப்பதிவினை நான் எழுத ஆரம்பித்த அன்று என்னிடம் எந்த ஒரு SPECIFIC IDEA வும் இல்லை. என்ன எழுதப்போகிறோம், எதைப்பற்றியெல்லாம் எழுதப்போகிறோம், எவ்வளவு பகுதிகள் எழுதப்போகிறோம் என்று எதுவுமே திட்டமிடாமல் தான் ஆரம்பித்தேன்.

   ஏதோ அது 11 பகுதிகளாக நீண்டு ஒரு மாதிரி வெற்றிகரமாக இனிதே முடிந்தது. எனக்கும் சந்தோஷம் தான்.

   //மகிழ்ச்சியுடன் அளித்த விருந்து சூப்பர். நல்வாழ்த்துக்கள்.//

   இந்தப்பதிவுக்கு தங்களின் முதல் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

   தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் ஊட்டும் விதமான அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 2. ஞானத்தலைவியான இவருக்கு, ஞானத்தின் அடையாளமான யானை மூலம் பூங்கொத்து கொடுத்தனுப்பி ராஜமரியாதை செய்யப்பட்டுள்ளது.

  மிக்க நன்றி ஐயா.. யானை மாலையோடு வருவதாக கனவுகண்டேன் ..

  தங்கள் பதிவில் பூங்கொத்தோடு வந்து மகிழ்ச்சி அளித்தது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி April 27, 2013 at 5:01 AM

   வாங்கோ! வாங்கோ! வாங்கோ! வாங்கோ! வாங்கோ!

   தங்களின் வருகைக்கு என் வந்தனங்கள்.;

   *****ஞானத்தலைவியான இவருக்கு, ஞானத்தின் அடையாளமான யானை மூலம் பூங்கொத்து கொடுத்தனுப்பி ராஜமரியாதை செய்யப்பட்டுள்ளது.*****

   //மிக்க நன்றி ஐயா.. யானை மாலையோடு வருவதாக கனவுகண்டேன் .. தங்கள் பதிவில் பூங்கொத்தோடு வந்து மகிழ்ச்சி அளித்தது ..//

   அப்படியா ! மிக்க மகிழ்ச்சி.

   நானும் ஒன்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.

   ஸ்பெஷலாகப் பூக்கள் வரவழைத்து தொடுத்து வைத்திருந்த ஆளுயர மாலையையும் காணோம் ..... கட்டிப்போட்டிருந்த யானையையும் காணோம் எனத்தேடுவது போல நானும் கனாக்கண்டேன் தோழி.! ;)

   பிறகு தான் அறிந்து கொண்டேன் .........

   மாலையுடன் புறப்பட்ட அதே யானை தான், அவ்விடம் தங்கள் கனவினிலும் வந்துள்ளது என்பதை.

   இதுதான் ”TELEPATHY” என்று சொல்லப்படும் MIRACLE ஆக இருக்கக்கூடுமோ என்னவோ..;)))))

   நீக்கு
 3. அன்றும் இன்றும் ! எத்தனை எத்தனை மாற்றங்கள்...!

  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி April 27, 2013 at 5:03 AM

   //அன்றும் இன்றும் ! எத்தனை எத்தனை மாற்றங்கள்...! //

   ;)))))

   அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...//

   மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்களுக்கு நன்றி.

   நீக்கு
 4. எல்லாவற்றையும் விட மாபெரும் பொக்கிஷமாக நான் நினைப்பது, என் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள் எழுதி உற்சாகப்படுத்தி வரும் விலைமதிப்பில்லாத பெரும் பொக்கிஷமான தங்களின் பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை மட்டுமே.

  உற்சாகமான பொக்கிஷங்களுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி April 27, 2013 at 5:04 AM

   *****எல்லாவற்றையும் விட மாபெரும் பொக்கிஷமாக நான் நினைப்பது, என் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள் எழுதி உற்சாகப்படுத்தி வரும் விலைமதிப்பில்லாத பெரும் பொக்கிஷமான தங்களின் பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை மட்டுமே.*****

   //உற்சாகமான பொக்கிஷங்களுக்கு வாழ்த்துகள்.//

   அதிக உற்சாகம் தந்துவரும் பொக்கிஷமான ஊற்றிடமிருந்து வாழ்த்துகள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அசத்தலான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்க்ள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 5. ஐயா தங்களின் பொக்கிஷம் பதிவுக்கு கிடைத்த பின்னூட்டமும் , வருகையும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி தெரிவிப்பதற்கு என்றே தனி பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஐயா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VijiParthiban April 27, 2013 at 5:10 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஐயா தங்களின் பொக்கிஷம் பதிவுக்கு கிடைத்த பின்னூட்டமும் வருகையும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி தெரிவிப்பதற்கு என்றே தனி பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஐயா....//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 6. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்.! நம்ம ஊர் திருச்சி மலைக்கோட்டை பற்றிய அன்றும் இன்றும் தகவல் படங்களுடன் படிக்க சுவாரசியமாய் இருந்தது. தங்களின் பொக்கிஷம் தொடர் பதிவுகளில் வந்த, பதிவர்களின் அட்டவணையும், அவர்களுக்கு தாங்கள் தந்த மறுமொழி விவரங்களும், தாங்கள் பதிவர்களிடம் காட்டும் அன்பையும் மதிப்பையும் விளக்குவன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ April 27, 2013 at 5:12 AM

   //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்.!//

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //நம்ம ஊர் திருச்சி மலைக்கோட்டை பற்றிய அன்றும் இன்றும் தகவல் படங்களுடன் படிக்க சுவாரசியமாய் இருந்தது.//

   இது நம் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்ட கட்டுரை. அந்தப்புத்தகத்தில் அவரே தன் கையொப்பமிட்டு, திருச்சி கலையரங்கம் A/C Conference Hall இல் நடைபெற்ற திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கக்கூட்டம் ஒன்றில், என்னிடம் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். அவர் அதில் கையொப்பமிட்ட தேதி: 31.08.2010. அதை நான் பத்திரமாக பொக்கிஷமாக என்னிடம் வைத்துள்ளேன்.

   //தங்களின் பொக்கிஷம் தொடர் பதிவுகளில் வந்த, பதிவர்களின் அட்டவணையும், அவர்களுக்கு தாங்கள் தந்த மறுமொழி விவரங்களும், தாங்கள் பதிவர்களிடம் காட்டும் அன்பையும் மதிப்பையும் விளக்குவன.//

   ஆம் ஐயா. Manual ஆக அட்டவணை தயாரிப்பது சற்று கடினமான வேலையாகத்தான் இருந்தது. இருப்பினும் அதில் ஓர் ஆத்ம திருப்தி இருந்தது.

   100% Perfect ஆக புள்ளிவிபரங்களை Tally செய்து விட்ட பிறகே இந்தப்பதிவினை நான் வெளியிட்டுள்ளேன்.

   27.04.2013 சனிக்கிழமை மாலை 4.45 மணி நிலவரப்படி இந்தப்புள்ளி விபரங்களில், ஒரு சிறு தவறு கூட இருக்க வாய்ப்பு ஏதும் இல்லை.

   இதுபோன்ற வேலைகளிலெல்லாம் எனக்கு எப்போதுமே மிகவும் ஆர்வம் உண்டு.

   பதிவினை முழுவதுமாகப் படித்துப் பார்த்து, அதன்பின் அக்கறையுடன் பின்னூட்டமிடுபவர்கள் யார் யார் என்பதை நாம் நம் அனுபவத்தில் மிகச்சுலபமாகக் கண்டுபிடித்து அறிய முடியும்.

   அவ்வாறான அனைவரிடமும் எப்போதுமே எனக்கு ஓர் தனி பிரியமும் மதிப்பும் உண்டு தான்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

   நீக்கு
 7. Very very interesting information about Trichy. Romba aachariyamana niraya vishayangal ungaludaiya post la therinchikum podhu romba sandhoshama irruku. It improves our knowledge also.
  You have mentioned each and everybody's name of who all visited and commented in the post which is absolutely awesome. Thank you very much for that.
  Ungaludaiya pokkishangal annaithumey mile stones and has to be read by everybody.
  Thank you very much for sharing it with all of us.
  Nandri Iyyah.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Priya Anandakumar April 27, 2013 at 5:36 AM

   வாங்கோ வணக்கம்.

   Very very interesting information about Trichy. Romba aachariyamana niraya vishayangal ungaludaiya post la therinchikum podhu romba sandhoshama irruku. It improves our knowledge also.

   மிக்க மகிழ்ச்சி.

   You have mentioned each and everybody's name of who all visited and commented in the post which is absolutely awesome. Thank you very much for that.

   என்னை உற்சாகப்படுத்தி மேலும் மேலும் எழுத வைத்த அனைவருக்குமே நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.

   Ungaludaiya pokkishangal annaithumey mile stones and has to be read by everybody.

   ரொம்ப சந்தோஷம்.

   //Thank you very much for sharing it with all of us. Nandri Iyyah.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 8. திருச்சி மலைக்கோட்டை பற்றி அறிந்திராத செய்திகள் சொல்லிய பகிர்வு.

  தொடரின அனைத்து பகுதிகளையும் படிக்க முடியவில்லை. சில நாட்களாகவே வேலை அதிகம். பதிவுலகம் பக்கம் வருவது குறைவு வந்தாலும் கவிதைத் தொடரை வெளியிட்டு திரும்புவதோடு சரி. அதனால் எல்லா பகுதிகளையும் படிக்க வில்லை. முடியும் போது படித்து விடுகிறேன்.

  சிறப்பான தொடருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் April 27, 2013 at 5:37 AM

   வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டை பற்றி அறிந்திராத செய்திகள் சொல்லிய பகிர்வு. //

   மிக்க மகிழ்ச்சி.

   //தொடரின அனைத்து பகுதிகளையும் படிக்க முடியவில்லை. சில நாட்களாகவே வேலை அதிகம். பதிவுலகம் பக்கம் வருவது குறைவு வந்தாலும் கவிதைத் தொடரை வெளியிட்டு திரும்புவதோடு சரி. அதனால் எல்லா பகுதிகளையும் படிக்க வில்லை. முடியும் போது படித்து விடுகிறேன்.//

   அதனால் பரவாயில்லை. இங்கு எனக்கும் அப்படித்தான் உள்ளது. அடிக்கும் வெயிலில் ஒரு வேலையும் ஆர்வத்துடன் செய்ய முடியாமல் மிகவும் வெறுப்பாக உள்ளது. அக்னி நக்ஷத்திரம் ஆரம்பித்ததுமே திருச்சியில் 107 டிகிரி கொளுத்துகிறது. ;(

   //சிறப்பான தொடருக்கு வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், வெங்கட்ஜி.

   நீக்கு
 9. பொக்கிஷங்களுக்கு மரியாதை தெரிவித்தோம். பதில் மரியாதை நீங்களும் சொல்லிவிட்டிர்கள் பழைய புதிய மலைக்கோட்டைகள் அற்புதம். திருமதி ராஜராஜேஸ்வரி நிஜமாகவே அம்பாள்தான்.

  நட்புகள் நலமாக வாழ இறைவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிசிம்ஹன் April 27, 2013 at 5:45 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பொக்கிஷங்களுக்கு மரியாதை தெரிவித்தோம். பதில் மரியாதை நீங்களும் சொல்லிவிட்டிர்கள்//

   மிகவும் சந்தோஷம்.

   //பழைய புதிய மலைக்கோட்டைகள் அற்புதம்.//

   மிக்க மகிழ்ச்சிகள்.

   //திருமதி ராஜராஜேஸ்வரி நிஜமாகவே அம்பாள்தான்.//

   ;))))) அசரீரி போலச்சொல்றீங்களே ;))))), மிக்க நன்றி.

   //நட்புகள் நலமாக வாழ இறைவன் அருளட்டும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 10. முதல் படம் இத்தன வருசத்துக்கு முன்பே படக்கருவி இருந்துச்சா!ஆச்சர்யமா இருக்கு .பகிர்விற்கு நன்றி.

  ஸ்ப்பா !! இப்படியா கணக்காளியா இருப்பிங்க,பெரும் விஷயம் சார் இது.பல சுவை விருந்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. thirumathi bs sridhar April 27, 2013 at 5:48 AM

   வாங்கோ ஆச்சி மேடம். சந்தோஷம். வணக்கம்.

   //முதல் படம் இத்தன வருசத்துக்கு முன்பே படக்கருவி இருந்துச்சா! ஆச்சர்யமா இருக்கு .பகிர்விற்கு நன்றி.//

   நிச்சயமாக படக்கருவிகளெல்லாம் ஒன்றுமே இருந்திருக்காது. யாராவது ஓர் ஓவியர் அந்தக்காலத்தில் வரைந்திருக்கலாம். அதை பிற்காலத்தில் புகைப்படமாக மாற்றி சேமித்திருக்கலாம்.

   அல்லது சமீபத்தில் யாராவது ஓர் ஓவியர் தன் கற்பனையில் கூட வரைந்திருக்கலாம்.

   //ஸ்ப்பா !! இப்படியா கணக்காளியா இருப்பிங்க,பெரும் விஷயம் சார் இது.பல //

   என்னைப்பொறுத்தவரை கணக்குப்போடுவது என்றால் கரும்பு ஜூஸ் சாப்பிடுவது போலவாக்கும்.

   எத்தனை பேர்களை + எத்தனை விஷயங்களை இதுவரை கணக்குப்போட்டுப்பார்த்திருப்பேன் ;)))))

   //சுவை விருந்திற்கு நன்றி.//

   மிக்க மகிழ்ச்சிம்மா. ;)

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஆச்சி மேடம்.

   நீக்கு
 11. அசத்திட்டீங்க அண்ணா ..!!!!!!!
  மலைகோட்டை படங்கள் பிரமாதம் .

  ஒவ்வோர் விஷயத்தையும் நுணுக்கமாக கவனித்து ...பட்டியலிட்டிருக்கிறீர்கள் .
  எனக்கு மிகவும் பிடித்த அந்த snacks எடுத்துக்கொள்கிறேன் :))
  மிக்க நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. angelin April 27, 2013 at 7:07 AM

   வாங்கோ நிர்மலா, வணக்கம்.

   //அசத்திட்டீங்க அண்ணா ..!!!!!!!//

   மிக்க மகிழ்ச்சி, நிர்மலா.

   //மலைகோட்டை படங்கள் பிரமாதம் .//

   சந்தோஷம்.

   //ஒவ்வோர் விஷயத்தையும் நுணுக்கமாக கவனித்து பட்டியலிட்டிருக்கிறீர்கள்.//

   ;))))) அவ்வாறு நுணுக்கமாக கவனித்து பட்டியலிடாவிட்டால் நம் அதிராவிடம் நான் மாட்டிக்கொண்டு முழிக்கணும்.

   ஏற்கனவே என்னைப் பாடாய்ப்படுத்தி பம்பரமாய் ஆட்டி வருகிறாங்கோ, உங்க அதிரா.

   //எனக்கு மிகவும் பிடித்த அந்த snacks எடுத்துக்கொள்கிறேன் :))
   மிக்க நன்றி அண்ணா//

   நேத்திரங்கா சிப்ஸ் தானே, அது உங்களுக்கு மட்டுமே. முழுவதும் எடுத்துக்கோங்கோ.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நிர்மலா.

   நீக்கு
 12. அருமை ஐயா! அனைத்து பதிவுகளுக்கும் வர இயலாமைக்கு வருந்துகிறேன்! நேரம் கிடைக்கையில் படித்து மகிழ்கிறேன்! திருச்சி மலைக்கோட்டை பற்றிய தகவல்கள் ஆச்சர்யம் அளித்தது. பதிவுகளுக்கு வந்து கருத்திடுவோருக்கு தாங்கள் தரும் முக்கியத்துவம் மகிழ்ச்சி அளித்தது. இந்த விசயத்தில் உங்களை பின்பற்ற முயல்கிறேன்! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 13. அன்றும், இன்றும் மலைக்கோட்டை படங்கள் ,அதன் மாற்றங்கள் எல்லாம் காட்டும் படங்கள் பகிர்வுக்கு நன்றி.

  //அவை எல்லாவற்றையும் விட மாபெரும் பொக்கிஷமாக நான் நினைப்பது, என் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள் எழுதி உற்சாகப்படுத்தி வரும் விலைமதிப்பில்லாத பெரும் பொக்கிஷமான தங்களின் பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை மட்டுமே. //


  நீங்கள் எழுதிய பொக்கிஷபகிர்வுகள் எவ்வளவு உயர்ந்தவையே அது போல் இப்போது நீங்கள் சொன்ன இந்த வாக்கியங்களும் உயர்ந்த பொக்கிஷ்ங்கள் தான். உற்சாக பொக்கிஷங்கள் வாழ்க!

  உங்கள் பூங்கொத்துக்கள் , மற்றும் சுவையான விருந்துக்கு நன்றி.
  வாழ்கவளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு April 27, 2013 at 8:32 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அன்றும், இன்றும் மலைக்கோட்டை படங்கள் ,அதன் மாற்றங்கள் எல்லாம் காட்டும் படங்கள் பகிர்வுக்கு நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி.

   *****அவை எல்லாவற்றையும் விட மாபெரும் பொக்கிஷமாக நான் நினைப்பது, என் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள் எழுதி உற்சாகப்படுத்தி வரும் விலைமதிப்பில்லாத பெரும் பொக்கிஷமான தங்களின் பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை மட்டுமே.*****

   //நீங்கள் எழுதிய பொக்கிஷபகிர்வுகள் எவ்வளவு உயர்ந்தவையே அது போல் இப்போது நீங்கள் சொன்ன இந்த வாக்கியங்களும் உயர்ந்த பொக்கிஷ்ங்கள் தான். உற்சாக பொக்கிஷங்கள் வாழ்க!//

   ரொம்ப ரொம்ப சந்தோஷம். ;)))))

   //உங்கள் பூங்கொத்துக்கள் , மற்றும் சுவையான விருந்துக்கு நன்றி.
   வாழ்கவளமுடன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 14. திருச்சி மலைக்கோட்டை பற்றிய செய்திகள் அறிந்திராத த்கவல்கள்..

  நிஜமாவே உங்களுக்கு பொறுமை அதிகம் ஐயா!! நன்றி தெரிவிப்பதற்க்காகவே ஒரு பதிவு போட்டு அசத்திட்டீங்க..உங்கள் கடின உழைப்புதான் ஐயா.ஸ்நாக்ஸ்+ஸ்வீட்ஸ் எடுத்துகிட்டேன்,மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. S.Menaga April 27, 2013 at 11:39 AM

   வாங்கோ மேனகா, வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டை பற்றிய செய்திகள் அறிந்திராத த்கவல்கள்..//

   யாருமே அறிந்திருக்க நியாயம் இல்லையே. எல்லாம் நான் ஒரு புத்தகத்தில் படித்தது. அதுவும் தமிழ் மீதும், திருச்சி மீதும் பற்றுதல் கொண்ட திருச்சி ஜில்லா கலெக்டர் ஒருவரால் அதிகாரபூர்வமாக எழுதப்பட்டுள்ளதால், நம்பகத்தன்மை அதிகமாக உள்ளது.

   //நிஜமாவே உங்களுக்கு பொறுமை அதிகம் ஐயா!! //

   சந்தோஷம். “பொறுமை கடலினும் பெரிது” என்று சொல்வார்கள்.

   //நன்றி தெரிவிப்பதற்க்காகவே ஒரு பதிவு போட்டு அசத்திட்டீங்க..உங்கள் கடின உழைப்புதான் ஐயா.//

   நன்றி மறப்பது நன்றன்று என்றல்லவா சொல்லியிருக்கிறார்கள் !

   //ஸ்நாக்ஸ்+ஸ்வீட்ஸ் எடுத்துகிட்டேன்,மிக்க நன்றி!!//

   மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேனகா.

   நீக்கு
 15. Thank you. நன்றி. தன்யவாத்! ஷுக்ரியா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். April 27, 2013 at 6:20 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //Thank you. நன்றி. தன்யவாத்! ஷுக்ரியா!//

   ஆஹா நன்றி தெரிவிப்பதில் .... அதுவும் 3 மொழிகளில் 4 விதமாக! ;)
   சந்தோஷம் ஸ்ரீராம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், பலவித நன்றிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்.

   நீக்கு
 16. திருச்சி மலைக்கோட்டை பற்றிய செய்திகள் இதுவரை அறிந்திராதவை அய்யா. நன்றி சொல்வதற்காகவே ஒரு பதிவு , பெயர் பட்டியலுடன், தங்களின் செயல்பாடு வியக்க வைக்கின்றது அய்யா. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரந்தை ஜெயக்குமார் April 27, 2013 at 6:52 PM

   வாருங்கள், வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டை பற்றிய செய்திகள் இதுவரை அறிந்திராதவை ஐயா. நன்றி சொல்வதற்காகவே ஒரு பதிவு , பெயர் பட்டியலுடன், தங்களின் செயல்பாடு வியக்க வைக்கின்றது ஐயா. நன்றி//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், நன்றிக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 17. திருச்சியின் பெருமையும் பொக்கிஷமும் மலைக்கோட்டை. அம்மலைக்கோட்டையின் பெருமையோடு பொக்கிஷம் தொடரை நிறைவுசெய்தது மிக்க மகிழ்ச்சி. பதிவுக்குக் கருத்திட்ட அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக இங்கே பட்டியலிட்டு நன்றி கூறி மகிழ்ந்தது பாராட்டுக்குரியது. எப்படித்தான் இப்படி ஒருவர் விடாமல் எல்லோருடைய கருத்துரைகளையும் கணக்கில் வைத்துக் கொள்கிறீர்களோ? மிகவும் பொறுமை வேண்டும் இதற்கெல்லாம். இறுதியில் அளித்த விருந்துக்கும் மனப்பூர்வ நன்றி வை.கோ.சார். இனியும் தொடரட்டும் எங்களுக்குப் பொக்கிஷமான உங்கள் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி April 27, 2013 at 7:30 PM

   வாங்கோ, வணக்கம்.

   //திருச்சியின் பெருமையும் பொக்கிஷமும் மலைக்கோட்டை. அம்மலைக்கோட்டையின் பெருமையோடு பொக்கிஷம் தொடரை நிறைவுசெய்தது மிக்க மகிழ்ச்சி.//

   மிகவும் சந்தோஷம்.

   //பதிவுக்குக் கருத்திட்ட அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக இங்கே பட்டியலிட்டு நன்றி கூறி மகிழ்ந்தது பாராட்டுக்குரியது. எப்படித்தான் இப்படி ஒருவர் விடாமல் எல்லோருடைய கருத்துரைகளையும் கணக்கில் வைத்துக் கொள்கிறீர்களோ? மிகவும் பொறுமை வேண்டும் இதற்கெல்லாம்.//

   இவ்வாறான புள்ளிவிபரங்கள் சேகரிப்பதில் எனக்கு ஓர் தனி இன்பம் + ஆர்வம் உண்டு.

   //இறுதியில் அளித்த விருந்துக்கும் மனப்பூர்வ நன்றி வை.கோ.சார். இனியும் தொடரட்டும் எங்களுக்குப் பொக்கிஷமான உங்கள் பதிவுகள்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 18. இந்தத்தொடரின் மொத்தப் பின்னூட்ட எண்ணிக்கை 1250ஐத் தாண்டியுள்ளது, மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது. //

  இதில் ஆச்சிரியபட என்ன இருக்கிறது சார்? நீங்கள் மற்றவர்களின் பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் அளித்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள்.
  எத்தனைப்பேரை உங்களின் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் மேலும் மேலும் எழுத தூண்டி இருக்கும்! அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இந்த பின்னூட்டங்கள். இந்த பதிவும் ஒரு பொக்கிஷம் தான் சார்.
  வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு April 27, 2013 at 8:12 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி..

   *****இந்தத்தொடரின் மொத்தப் பின்னூட்ட எண்ணிக்கை 1250ஐத் தாண்டியுள்ளது, மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது.*****

   //இதில் ஆச்சிரியபட என்ன இருக்கிறது சார்? நீங்கள் மற்றவர்களின் பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் அளித்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள்.
   எத்தனைப்பேரை உங்களின் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் மேலும் மேலும் எழுத தூண்டி இருக்கும்! அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இந்த பின்னூட்டங்கள்.//

   தங்களின் இந்த விளக்கம் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

   // இந்த பதிவும் ஒரு பொக்கிஷம் தான் சார்.//

   ந்ன்றியோ நன்றிகள். ;)))))

   //வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.//

   மீண்டும் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 19. அதுபோல திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் என புவி இயல் வல்லுனர்களின் ஆய்வு மதிப்பிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு மில்லியன் என்றால் பத்து இலட்சம் ஆகும். 3,500 x 10,00,000 = 350,00,00,000 திருச்சி மலைக்கோட்டையின் வயது 350 கோடி ஆண்டுகளுக்கு மேல் என்பது தெரியவருகிறது. மிகவும் ஆச்சர்யமான தகவலாக உள்ளது அல்லவா!//

  சாதாரண ஆச்சரியம் இல்லை. உலக மகா ஆச்சரியம்.
  தகவல்களுக்கு நன்றி.

  பூங்கொத்துக்கு நன்றி. (எனக்கும் உண்டு தானே)

  அப்புறம் அந்த செடியோடு பூத்த ரோஜா மலர்களை எடுத்து அன்னைக்கு (பாண்டிச்சேரி) சமர்ப்பித்து விட்டேன்.

  இந்தத்தொடரின் மொத்தப் பின்னூட்ட எண்ணிக்கை 1250ஐத் தாண்டியுள்ளது, மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது. //

  அனைவரையும் மனமார ஊக்குவிக்கும் உங்களுக்கு இவ்வளவு பின்னூட்டங்கள் வருவது ஆச்சரியமே இல்லை. இதற்கு மேலும் வந்திருந்தாலும் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்.

  அலுவலக வேலை, வீட்டு வேலை, எல்லாம் சேர்ந்து அழுத்த, ம், பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் எப்படியோ அந்த பூங்கொத்தையாவது பெற்றுக் கொண்டேனே. இல்லைன்னா ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்.

  அப்படியே உங்க வீட்டுக்கு வந்து எல்லா பொக்கிஷங்களையும் பார்த்த ஒரு திருப்தி (கொஞ்சம்தான், முழுக்க இல்லை) கிடைத்தது.

  SOMETHING IS BETTER THAN NOTHING. ன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

  உங்களை மாதிரி இல்லாவிட்டாலும், ஒழுங்கா பதிவுகளாவது போடணும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்கோ, இல்லைன்னா அந்த மோதிர விரலால ஒரு குட்டாவது பட்டுனு என் தலையில
  வெச்சுடுங்கோ.

  //சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.//

  இது ஒரு டுபாக்கூர் STATEMENT. உங்களுடைய எல்லா ரசிகர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதை எடுத்து விடுங்கள்.

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI April 27, 2013 at 9:33 PM

   வாங்கோ ... வாங்கோ, வணக்கம்.

   *****அதுபோல திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் என புவி இயல் வல்லுனர்களின் ஆய்வு மதிப்பிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு மில்லியன் என்றால் பத்து இலட்சம் ஆகும். 3,500 x 10,00,000 = 350,00,00,000. திருச்சி மலைக்கோட்டையின் வயது 350 கோடி ஆண்டுகளுக்கு மேல் என்பது தெரியவருகிறது. மிகவும் ஆச்சர்யமான தகவலாக உள்ளது அல்லவா!*****

   //சாதாரண ஆச்சரியம் இல்லை. உலக மகா ஆச்சரியம். தகவல்களுக்கு நன்றி.//

   எல்லாம் நான் ஒரு புத்தகத்தில் படித்தது. அதுவும் தமிழ் மீதும், திருச்சி மீதும் பற்றுதல் கொண்ட திருச்சி ஜில்லா கலெக்டர் ஒருவரால் அதிகாரபூர்வமாக எழுதப்பட்டுள்ளதால், இதில் நம்பகத்தன்மை அதிகமாக உள்ளது.

   //பூங்கொத்துக்கு நன்றி. (எனக்கும் உண்டு தானே)//

   என்ன இப்படிக்கேட்டுட்டீங்கோ!

   உங்களுக்கு இல்லாததா?

   “பூவே பூச்சூடவா” என்று ஆசையாகப் பாட்டுப்பாடிக்கொண்டே சூடிக்கொள்ளுங்கள். ;)

   //அப்புறம் அந்த செடியோடு பூத்த ரோஜா மலர்களை எடுத்து அன்னைக்கு (பாண்டிச்சேரி) சமர்ப்பித்து விட்டேன்.//

   தங்களின் தங்கமான மனத்தில் உள்ள நல்ல எண்ணங்களின் பிரதிபலிப்பாக இதை நான் நினைத்து மகிழ்கிறேன்.

   கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
   \
   ”எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் ” - இது நான் சொல்லவில்லை. என் அன்புத்தங்கை ”அதிரடி அதிரா” அடிக்கடி சொல்லுவா! ;)

   >>>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் [2]

   *****இந்தத்தொடரின் மொத்தப் பின்னூட்ட எண்ணிக்கை 1250ஐத் தாண்டியுள்ளது, மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது.*****

   //அனைவரையும் மனமார ஊக்குவிக்கும் உங்களுக்கு இவ்வளவு பின்னூட்டங்கள் வருவது ஆச்சரியமே இல்லை. இதற்கு மேலும் வந்திருந்தாலும் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்.//

   அடாடா! அடிக்கும் வெயிலுக்கு [திருச்சியில் நேற்று அக்னி நக்ஷத்திர ஆரம்பத்திலேயே 107 டிகிரி] ஜில்லுன்னு மிகப்பெரிய ஐஸ் கட்டியாக என் தலையில் இப்படி வெச்சுட்டேளே ;)))))

   //அலுவலக வேலை, வீட்டு வேலை, எல்லாம் சேர்ந்து அழுத்த, ம்ம்ம்ம், பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் எப்படியோ அந்த பூங்கொத்தையாவது பெற்றுக் கொண்டேனே. இல்லைன்னா ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்.//

   ஆக்ச்சுவலா, பூங்கொத்து உங்களுக்காக கொடுக்கப்பட்ட அல்ல. எப்போதும் எனக்கு சப்போர்ட் செய்யும் தங்கள் அருமை மகள் செல்வி. சந்தியா அவர்க்ளுக்கும், அருமைப்பேத்தி ’லயாக்குட்டி’க்கும் தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஞாபகம் இருக்கட்டும். ;)

   //அப்படியே உங்க வீட்டுக்கு வந்து எல்லா பொக்கிஷங்களையும் பார்த்த ஒரு திருப்தி (கொஞ்சம்தான், முழுக்க இல்லை) கிடைத்தது. //

   ஹைய்யோ, இதைக் கேட்கவே சந்தோஷமாக உள்ளது..

   //SOMETHING IS BETTER THAN NOTHING. ன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். //

   இந்தத்தொடருக்கான தங்களின் பின்னூட்டங்களைப்பார்த்து, நானும் அப்படியே தான், SOMETHING IS BETTER THAN NOTHING ன்னு நினைச்சிண்டேனாக்கும். ஹுக்க்க்க்கும் !.

   //உங்களை மாதிரி இல்லாவிட்டாலும், ஒழுங்கா பதிவுகளாவது போடணும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்கோ, //

   என் ஆசிகளும் வாழ்த்துகளும் எப்போதுமே தங்களுக்கு உண்டு.

   உங்களுடைய பதிவுகளில் என் பின்னூட்டம் இல்லாத ஏதாவது ஒரு பதிவினை உங்களால் காட்டமுடியுமா? சவால் விடுகிறேன்.

   //இல்லைன்னா அந்த மோதிர விரலால ஒரு குட்டாவது பட்டுனு என் தலையில வெச்சுடுங்கோ.//

   என் மோதிரம் பயங்கர டைட் ஆக உள்ளது. உங்கள் தலையில் குட்டுவது போல லேஸாக நான் பாவனை செய்தாலும் கூட அது உங்கள் தலையில் நழுவி விழவே விழாது. அதனால் உங்களுக்கு ஒரு இலாபமும் இருக்காது.

   மேலும் நான் யாரையுமே குட்டவோ, யாரிடமும் குட்டுப்படவோ விரும்ப மாட்டேனாக்கும்.

   மிகவும் ஸாத்வீக குணமுள்ளவனாக்கும். ;)))))

   *****சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.*****

   //இது ஒரு டுபாக்கூர் STATEMENT. உங்களுடைய எல்லா ரசிகர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதை எடுத்து விடுங்கள்.//

   அடடா, சுத்தியடித்து என் தலையிலே [என் வலைப்பூவின் தலைப்பிலே] இப்படிக் கை வெச்சுட்டீங்களே, நியாயமா?

   இப்போதும் நான் மிகச் சாதாரணமானவன் தான். ஏதாவது சாதிக்க வேண்டும் என என் மனதில் எப்போதும் [இப்போதும்] நினைப்பவன் தான்.

   கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு மைனஸ் கைமண் அளவு, தெரியுமோ?.

   //வாழ்க வளமுடன்//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - அன்புடன் கோபு

   நீக்கு
  3. ”எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் ” - இது நான் சொல்லவில்லை. என் அன்புத்தங்கை ”அதிரடி அதிரா” அடிக்கடி சொல்லுவா! ;)

   அந்த அதிரா ‘அறுசுவையில்’ என்னுடன் கதைத்த அதே அதிரா தானான்னு கேட்டு சொல்லுங்கோ.

   உங்களுடைய பதிவுகளில் என் பின்னூட்டம் இல்லாத ஏதாவது ஒரு பதிவினை உங்களால் காட்டமுடியுமா? சவால் விடுகிறேன்.//

   ஆமாம், நான் போட்டதே 58 பதிவுதான். இது எல்லாத்துக்கும் பின்னூட்டம் குடுக்கறதுங்கறது உங்களுக்கு ஜுஜுபி. இதுக்கு சவால் வேற தேவையா? (சவாலே சமாளி)

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - அன்புடன் கோபு//

   உங்கள் நன்றிகளை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் வரவேற்கிறேன்.

   நீக்கு
  4. JAYANTHI RAMANI May 6, 2013 at 4:10 AM

   வாங்கோ வாங்கோ ..... வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்வளிக்கிறது.

   *****”எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் ” - இது நான் சொல்லவில்லை. என் அன்புத்தங்கை ”அதிரடி அதிரா” அடிக்கடி சொல்லுவா! ;)*****

   //அந்த அதிரா ‘அறுசுவையில்’ என்னுடன் கதைத்த அதே அதிரா தானான்னு கேட்டு சொல்லுங்கோ.//

   அவர்கள் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் தற்சமயம் வெகுநாட்களாக இருப்பது லண்டனில் என நினைக்கிறேன். அவர்களுடன் எனக்கு மெயில் காண்டாக்ட் ஏதும் கிடையாது. பின்னூட்டம் மூலம் தான் கேட்டுச்சொல்ல வேண்டும்.

   உங்களைப்போலவே என்னிடம் மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு, பின்னூட்டம் மூலம் மட்டும் தொடர்பில் இருப்பவர்கள். மிகவும் ஜாலி டைப். ;)))))

   அவர்களின் BLOG: ”என் பக்கம்” gokisha.blogspot.com

   நீங்களே கூட அவர்கள் ப்ளாக் பக்கம் ஒருமுறை போய், நான் [கோபு அண்ணன்] அனுப்பியதாகச்சொல்லி, அறிமுகம் செய்துகொண்டு, உங்கள் சந்தேகத்தைக் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.

   >>>>>>

   நீக்கு
  5. கோபு >>>>> திருமதி ஜெயந்தி மேடம் [2]

   *****உங்களுடைய பதிவுகளில் என் பின்னூட்டம் இல்லாத ஏதாவது ஒரு பதிவினை உங்களால் காட்டமுடியுமா? சவால் விடுகிறேன்.*****

   //ஆமாம், நான் போட்டதே 58 பதிவுதான். இது எல்லாத்துக்கும் பின்னூட்டம் குடுக்கறதுங்கறது உங்களுக்கு ஜுஜுபி. இதுக்கு சவால் வேற தேவையா? (சவாலே சமாளி)//

   என்ன அப்படி சொல்லிப்புட்டீங்க. டைப்ரைட்டரைப்பற்றி ஒரு பதிவு போட்டீங்களே, அதற்கே நான் ஒரு 58 கமெண்ட் கொடுத்ததாக ஞாபகம். ஆனால் நீங்க எனக்கு ஒரு பதிலும் அதற்குத்தரவே இல்லை தெரியுமா ? ;(((((

   *****மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - அன்புடன் கோபு*****

   //உங்கள் நன்றிகளை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் வரவேற்கிறேன்.//

   ரொம்ப சந்தோஷம்மா.

   [லயாக்குட்டியை நான் மிகவும் கேட்டதாகச் சொல்லுங்கோ.;)]

   நீக்கு
 20. ஆச்சரியமான விஷயங்கள். அது சரி இந்தப்படம் எப்போது எடுக்கப்பட்டது? அல்லது வரைந்ததா? பொக்கிஷங்களைப்பகிர்ந்து கொண்டதோடு மாபெரும் விருந்தும் கொடுத்துவிட்டீர்கள். எல்லாமே நன்றாக அமைந்தது.

  திருமதி ராஜராஜேஸ்வரிக்கும், அதிராவுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரைந்தது. வரைந்ததை படமெடுத்திருக்கிறார்கள். அனியாயத்துக்கு கற்பனை வரைந்தவருக்கு. 2000 வருடங்களுக்கு முன் இத்தனை சீராகத் தண்ணீர் பாய்ந்து வருவதும் இன்ன பிற கட்டிட அமைப்புகளும் சாத்தியமேயில்லை.

   நீக்கு
  2. Geetha Sambasivam April 28, 2013 at 12:15 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆச்சரியமான விஷயங்கள். அது சரி இந்தப்படம் எப்போது எடுக்கப்பட்டது? அல்லது வரைந்ததா?//

   நிச்சயமாக அந்தக்காலக்கட்டத்தில் புகைப்படம் எடுக்கும் படக்கருவிகளெல்லாம் ஒன்றுமே இருந்திருக்காது. யாராவது ஓர் ஓவியர் அந்தக்காலத்தில் வரைந்திருக்கலாம். அதை பிற்காலத்தில் புகைப்படமாக மாற்றி சேமித்திருக்கலாம்.

   அல்லது சமீபத்தில் யாராவது ஓர் ஓவியர் தன் கற்பனையில் கூட இதை வரைந்திருக்கலாம்.

   எல்லாம் நான் ஒரு புத்தகத்தில் படித்தது. அந்தப்படத்துடன் கூடிய புத்தகம் என்னிடம் பத்திரமாக பொக்கிஷமாக உள்ளது.

   அதுவும் தமிழ் மீதும், திருச்சி மீதும் பற்றுதல் கொண்ட திருச்சி ஜில்லா கலெக்டர் ஒருவரால் அதிகாரபூர்வமாக 2010ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளதால், இதில் நம்பகத்தன்மை அதிகமாக உள்ளது.

   //பொக்கிஷங்களைப்பகிர்ந்து கொண்டதோடு மாபெரும் விருந்தும் கொடுத்துவிட்டீர்கள். எல்லாமே நன்றாக அமைந்தது.//

   மிகவும் சந்தோஷம்.

   //திருமதி ராஜராஜேஸ்வரிக்கும், அதிராவுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 21. திருச்சி மலைக்கோட்டைப்பிள்ளையார் பற்றி அன்றும் இன்றும் படத்துடனான அருமையான பதிவு.
  உங்கள் கணிப்பினைப்பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை சிறப்புமிக்க தலம்.

  பொக்கிஷப்பதிவில் தொகுத்த விஷயங்களும் கருத்துப் பகிர்வாளர்கள் பட்டியலும் மிகமிகச்சிறப்பு ஐயா! எத்தனை பொறுமையாய் அவதானமாய் இதனைச்செய்திருக்கின்றீர்கள். வியப்புத்தான். வாழ்த்துக்கள் உங்களுக்கு....

  இங்கு அதிக கருத்துப்பகிர்வுகளைத்தந்து உங்களின் நன்மதிப்புக்குளாகிப் பூங்கொத்தினைப்பெற்ற தோழிகள் அதிரா, இராஜராஜேஸ்வரி இருவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!

  பகிர்விற்கு உங்களுக்கும் நன்றிகள் பல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோஓஓஓஓஓஒ இருவருக்கும் ஒரு வாழ்த்தோ?:) அது எப்பூடி? தனித்தனியே சொல்லோணும்:)

   நீக்கு
  2. இளமதி April 28, 2013 at 1:23 AM

   வாங்கோ, இளமதி மேடம், வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டைப்பிள்ளையார் பற்றி அன்றும் இன்றும் படத்துடனான அருமையான பதிவு.//

   மிக்க மகிழ்ச்சி.

   //உங்கள் கணிப்பினைப்பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை சிறப்புமிக்க தலம்.//

   இது என் கணிப்பு அல்ல. திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்களால் 2010ம் ஆண்டு, ஓர் தமிழ் இலக்கிய இதழில், படத்துடன் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் ஆகும்.

   //பொக்கிஷப்பதிவில் தொகுத்த விஷயங்களும் கருத்துப் பகிர்வாளர்கள் பட்டியலும் மிகமிகச்சிறப்பு ஐயா! எத்தனை பொறுமையாய் அவதானமாய் இதனைச்செய்திருக்கின்றீர்கள். வியப்புத்தான். வாழ்த்துக்கள் உங்களுக்கு....//

   தங்களின் கருத்துக்களையும் இப்போது பொறுமையாய் நான் அவதானித்துக்கொண்டேன். ’அவதானித்தல்’ என்ற தங்களின் வார்த்தையும் எனக்கு வியப்பளிப்பதாக உள்ளது.

   //இங்கு அதிக கருத்துப்பகிர்வுகளைத்தந்து உங்களின் நன்மதிப்புக்குளாகிப் பூங்கொத்தினைப்பெற்ற தோழிகள் அதிரா, இராஜராஜேஸ்வரி இருவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!//

   நியாயமாக நீங்கள் பிடித்திருக்க வேண்டிய இடமாக்கும் இது. ;)
   இடத்தைத்தக்க வைத்துக்கொள்ள தவறியது ஏனோ? ;(

   பூங்கொத்துகள் அவர்கள் இருவருக்கும் மட்டுமல்ல. உங்களையும் சேர்த்து கருத்திட்ட 88 பேர்களுக்கும் தான்.

   //பகிர்விற்கு உங்களுக்கும் நன்றிகள் பல!//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், இளமதி மேடம்.

   நீக்கு
 22. திருச்சி மலைக்கோட்டை அன்றும் இன்றும் வணங்கினேன்.
  உங்கள் நன்றி நவிலல் பதிவு ஆச்சரயப்படுத்துகிறது.
  உங்களுக்கு பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கு நன்றிக்கே ஒரு பதிவா!!நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் அவர்கள் கருத்துக்கு எவ்வளவு மரியாதை தருகிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. rajalakshmi paramasivam April 28, 2013 at 3:47 AM

   வாங்கோ, வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டை அன்றும் இன்றும் வணங்கினேன்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //உங்கள் நன்றி நவிலல் பதிவு ஆச்சரயப்படுத்துகிறது. உங்களுக்கு பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கு நன்றிக்கே ஒரு பதிவா!!//

   ஆம். இதுபோல ஏற்கனவே சிலசமயங்களிலும் நான் செய்துள்ளேன்.

   //நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் அவர்கள் கருத்துக்கு எவ்வளவு மரியாதை தருகிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது.//

   நிச்சயமாக. நம் பதிவுகளுக்கு / எழுத்துக்களுக்கு கருத்துக்கூறி உற்சாகம் அளிப்பவர்களே, ஒரு எழுத்தாளரின் உண்மையான எஜமான் என்பது என் அபிப்ராயம்.

   தாங்கள் நான் ஏற்கனவே எழுதியுள்ள “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற 7 பகுதிகள் கொண்ட தொடரையும், “ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” என்ற 18 பகுதிகள் கொண்ட தொடர் நாடகத்தையும் அவசியம் படிக்க வேண்டும். அதிலுள்ள படங்களைப் பார்க்க வேண்டும். அவை இரண்டுக்கும் கூட பலர் வருகை தந்து மிகவும் உற்சாகப்படுத்தியிருந்தனர்.

   அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்து தனிப்பதிவாகவே கொடுத்திருந்தேன்.அவற்றின் இணைப்புகள் மட்டும் இதோ இங்கே கொடுத்துள்ளேன்.

   -=-=-=-=-
   [1]

   http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

   இயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா

   “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” தொடர்பதிவுக்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி கூறும் பதிவு

   [2]

   http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

   நாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு

   ”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” தொடர் நாடகத்திற்கு வருகை புரிந்தோருக்கு நன்றி கூறும் பதிவு.

   -=-=-=-=-

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 23. Romba naalaayitru ungal pakkatthirku vanthu. malaik kottai patriya apoorva padam matrum thagavalgal pagirnthu kondamaikku nanri.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) April 28, 2013 at 4:16 AM

   வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

   //Romba naalaayitru ungal pakkatthirku vanthu.//

   ஆமாம் மேடம். நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சந்தோஷம். ;)

   //malaik kottai patriya apoorva padam matrum thagavalgal pagirnthu kondamaikku nanri.//

   “முத்தமிழ்” என்ற தலைப்பில் ஓர் ’கலை, பண்பாட்டுச் சிறப்பிதழ்’ ஆகஸ்டு 2010 இல் திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்தவரும், தமிழ் மீதும், தமிழ் எழுத்தாளர்கள் மீதும், திருச்சி நகரின் மீதும் மிகவும் பற்று வைத்திருந்த திரு. தா. சவுண்டையா I.A.S., அவர்களால் வெளியிடப்பட்டது.

   அதில் இந்த ‘அன்றைய மலைக்கோட்டை’ ப்படத்தையும் வெளியிட்டு, ஓர் அருமையான கட்டுரையும் எழுதியுள்ளார்கள். அதில் பல தகவல்கள் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளன.

   31.08.2010 அன்று திருச்சி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கக்கூட்டம், திருச்சி கலையரங்கம் மாடியில் ஓர் A.C. Hall இல் நடைபெற்றது. அப்போது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பங்கு கொண்டார்கள். அவர் கையொப்பமிட்டு இந்த சிறப்பிதழை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அது என்னிடம் இன்றும் பத்திரமாக பொக்கிஷமாக உள்ளது.

   அதன் அடிப்படையில் தான் நான் இந்தப்பதிவில் அந்தப்படத்தையும் சில தகவல்களையும் மட்டும் வெளியிட்டுள்ளேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 24. இருந்த இடத்திலிருந்தே 12 வாரங்களாக எத்தெத்தனையோ விஷயங்ரள் அரிய முடிந்தது.. இதில் உங்களுக்கு எத்தனை சிவராத்ரி
  கண் விழித்த புண்ணியமோ? மலைக்கோட்டை விஷயங்கள் ,கோட்டை,கோட்டையாக பிரமிப்புதான். பின்னூட்டம் கொடுத்ததற்கு
  நன்றியுடன் மலர்கள். ஸந்தோஷமாகப் பெற்றுக் கொள்கிறோம். நன்றி
  உங்களுக்கு. எல்லோருடைய பின்னூட்டங்களும் படிக்க ஒரு வரப்ரஸாதமாக உங்கள் பதிவுகள் அமைந்திருந்தது. எல்லோருக்கும்
  நல்லதே நடக்க உங்கள் நிஜ உரைகள் வழி செய்யட்டும்.. ஆசிகளுடனும், அன்புடனும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kamatchi April 28, 2013 at 5:00 AM

   வாங்கோ மாமி, நமஸ்காரம். வாங்கோ.

   //இருந்த இடத்திலிருந்தே 12 வாரங்களாக எத்தெத்தனையோ விஷயங்கள் அறிய முடிந்தது.. இதில் உங்களுக்கு எத்தனை சிவராத்ரி கண் விழித்த புண்ணியமோ? மலைக்கோட்டை விஷயங்கள் ,கோட்டை,கோட்டையாக பிரமிப்புதான். //

   எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களிம் ஆசீர்வாதங்களால் மட்டுமே, மாமி.

   //பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றியுடன் மலர்கள். ஸந்தோஷமாகப் பெற்றுக் கொள்கிறோம். நன்றி//

   மிக்க மகிழ்ச்சி மாமி.

   //உங்களுக்கு. எல்லோருடைய பின்னூட்டங்களும் படிக்க ஒரு வரப்ரஸாதமாக உங்கள் பதிவுகள் அமைந்திருந்தது.//

   நாம் பதிவிடுவதன் சந்தோஷமே, நமக்கு வரும் பின்னூட்டங்களைப் படிப்பதில் தான் அடங்கியுள்ளது, மாமி.
   Feedback is very very important & valuable என நினைப்பவன் நான்.

   //எல்லோருக்கும் நல்லதே நடக்க உங்கள் நிஜ உரைகள் வழி செய்யட்டும்.. ஆசிகளுடனும், அன்புடனும்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், ஆசிகளுக்கும், அன்புக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். நமஸ்காரங்களுடன் கோபாலகிருஷ்ணன்.

   நீக்கு
 25. கமெண்ட் இட்டவர்களையும் வரிசை படுத்தி உள்ளீர்கள்.நீங்க மிக்கப்பெரிய கணக்கர். இப்படி எங்களால் கணக்கெடுக்க முடியாது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jaleela Kamal April 28, 2013 at 5:23 AM

   வாங்கோ, வணக்கம்.

   //கமெண்ட் இட்டவர்களையும் வரிசை படுத்தி உள்ளீர்கள்.நீங்க மிகப்பெரிய கணக்கர்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //இப்படி எங்களால் கணக்கெடுக்க முடியாது..//

   ஏன் மேடம்? இதுபோலச்சொல்கிறீர்கள்.

   இதனால் என்ன பெரிய இலாபம் என கணக்குப்பார்ப்பீர்களோ என்னவோ? ;))))) மிகப்பெரிய பிஸிநெஸ் மேக்னெட் அல்லவா! ;)

   சரி, இந்த நிமிடம் வரை [As at 15.20 Hrs. IST On 05.05.2013] உங்களைப்பற்றிய கணக்கினைச் சொல்கிறேன். கேட்டுக்கொள்ளுங்கள்:

   இந்தத்தொடரின் அனைத்து 12 பகுதிகளுக்கும் வருகை தந்துள்ளீர்கள். மொத்தம் அனைத்துப்பகுதிகளுக்கும் சேர்த்து தாங்கள் கொடுத்துள்ள மொத்தப்பின்னூட்டங்கள்: 24.

   போதுமா? மகிழ்ச்சியா? எனக்கும் மகிழ்ச்சி தான்.

   [இருப்பினும் தங்களின் பெயர் மேல் என்னால் அன்று மஞ்சள் பூச முடியவில்லையே என்பதில் மட்டும் சற்றே வருத்தம் உண்டு]

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 26. Learnt a new page from history today about Tiruchi uchipillayar kovil & thayumanavar kovil. Thanks Gopu Sir.

  You have kept a good track of everything. best wishes.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mira April 28, 2013 at 5:31 AM

   WELCOME MIRA !

   //Learnt a new page from history today about Tiruchi uchipillayar kovil & thayumanavar kovil. Thanks Gopu Sir.

   You have kept a good track of everything. best wishes.//

   Thanks a Lot Mira for your kind visit here & for your valuable comments. All the Best .... Mira.

   நீக்கு
 27. அப்பாப்பா எவ்வளவு மென கட்டு இருகீங்க ஐயா நினவு கூர்ந்தற்கு நன்றி திருச்சி மலை கோட்டையின் விளக்கதிறக்கும் படபகிர்வுக்கும் அதுவும் 350 கோடி ஆண்டுகளுக்குமேல் என்றாதகவல் வியப்புடன் பெருமையாகவும்முள்ளது நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. poovizi April 28, 2013 at 6:54 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அப்பாப்பா எவ்வளவு மெனகட்டு இருகீங்க ஐயா நினவு கூர்ந்தற்கு நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி.

   //திருச்சி மலை கோட்டையின் விளக்கதிறக்கும் படபகிர்வுக்கும் அதுவும் 350 கோடி ஆண்டுகளுக்குமேல் என்ற தகவல் வியப்புடன் பெருமையாகவும் உள்ளது நன்றி நன்றி//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.


   நீக்கு
 28. உங்கள் முனைப்பு வியக்க வைக்கிறது.

  அப்புறம்.. மலைக்கோட்டைக்கெல்லாம் அத்தனை வயசிருக்க வாய்ப்பே இல்லை சார். மலைக்கு வேண்டுமானால் இருக்கலாம். மனித நாகரீகத்துக்கே 30000 வயசு தான் ஆகுது.. கோட்டையெல்லாம் எங்கிருந்து கட்ட? ஒருவேளை மலைக்குப் பெயர் தான் மலைக்கோட்டையா? (அதாவது கோட்டை போன்ற மலை?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாதுரை April 28, 2013 at 7:41 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //உங்கள் முனைப்பு வியக்க வைக்கிறது.//

   மிக்க மகிழ்ச்சி சார்.

   //அப்புறம்.. மலைக்கோட்டைக்கெல்லாம் அத்தனை வயசிருக்க வாய்ப்பே இல்லை சார். மலைக்கு வேண்டுமானால் இருக்கலாம். மனித நாகரீகத்துக்கே 30000 வயசு தான் ஆகுது.. கோட்டையெல்லாம் எங்கிருந்து கட்ட? ஒருவேளை மலைக்குப் பெயர் தான் மலைக்கோட்டையா? (அதாவது கோட்டை போன்ற மலை?)//

   தாங்கள் சொல்வதை நானும் அப்படியே ஒத்துக்கொள்கிறேன், சார். ‘மலைக்கற்களின் வயது’ என்று தான் இருக்க வேண்டும்.

   ஆனால் என்னிடம் கைவசம் உள்ள “முத்தமிழ்” கலை, பண்பாட்டுச் சிறப்பிதழ் - ஆகஸ்டு 2010 - இதழில், அப்போது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக [District Collector] இருந்த திரு. தா. சவுண்டையா I.A.S., அவர்கள் வெளியிட்டுள்ள மிக நீண்ட கட்டுரையில் [கட்டுரையின் தலைப்பும்: ”மலைக்கோட்டையின் வயது என்ன?” என்பது தான்.] எழுதியுள்ள அந்தக்குறிப்பிட்ட பகுதியை மட்டும் கீழே அப்படியே கொடுத்துள்ளேன்.

   -=-=-=-=-=-=-
   திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் என புவி இயல் ஆய்வு மதிப்பிடுகிறது. தமிழகக் கட்டிடக்கலையின் தனிச்சிறப்புக்குச் சான்றாக நிற்கும் இந்த ஆலயத்தை கட்டுவதற்கு கொடும்பலூரிலிருந்து கற்களைக் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது .............
   -=-=-=-=-=-=-

   தங்களின் அன்பான வருகைக்கும், யோசித்துப்பார்க்க வேண்டிய அழகான அறிவியல் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

   நீக்கு
 29. மலைக்கோட்டை பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா... ஏற்கனவே சொன்னது போல் தகவல்கள் (பதிவுகள், இணைப்பு கொடுத்தல், பின்னூட்டங்கள், etc) சேமிப்பு செய்வதில் தாங்கள் ஒரு நிபுணர்... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் April 28, 2013 at 8:42 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மலைக்கோட்டை பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா...//

   சந்தோஷம்.

   //ஏற்கனவே சொன்னது போல் தகவல்கள் (பதிவுகள், இணைப்பு கொடுத்தல், பின்னூட்டங்கள், etc) சேமிப்பு செய்வதில் தாங்கள் ஒரு நிபுணர்... வாழ்த்துக்கள் ஐயா...//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 30. பின்னூட்டுங்களை படித்து எண்ணிக்கை வைத்து இத்தனை ரசித்து அவர்கள் எல்லோரது பெயர்களையும் குறிப்பிட்டு பின்னூட்டுபவர்களுக்கே உற்சாகம் ஏற்படுத்துகின்றீர்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸாதிகா April 28, 2013 at 8:33 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பின்னூட்டுங்களை படித்து எண்ணிக்கை வைத்து இத்தனை ரசித்து அவர்கள் எல்லோரது பெயர்களையும் குறிப்பிட்டு பின்னூட்டுபவர்களுக்கே உற்சாகம் ஏற்படுத்துகின்றீர்கள். வாழ்த்துக்கள்.//

   **பின்னூட்டுபவர்களுக்கே உற்சாகம் ஏற்படுத்துதல்** இதை நான் மிகவும் ரஸித்தேன். ஸ்பெஷல் நன்றிகள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 31. மிக அழகாக பின்னூட்டமிட்டவர்களை எல்லாம் ஞாபகபடுத்தி, அவர்களை வாழ்த்தி, மலர்க்கொத்து கொடுத்து, பாராட்டியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி. இப்படியெல்லாம் உங்களால் மட்டுமே முடியும்.
  மலைக்கோட்டைபற்றிய தகவல்கள் சுவாரசியம். படங்கள் அழகாக இருக்கு.ரெம்ப நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ammulu April 28, 2013 at 9:38 PM

   வாங்கோ அம்முலு வாங்கோ, வணக்கம்.

   //மிக அழகாக பின்னூட்டமிட்டவர்களை எல்லாம் ஞாபகபடுத்தி, அவர்களை வாழ்த்தி, மலர்க்கொத்து கொடுத்து, பாராட்டியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.//

   ரொம்ப சந்தோஷம் அம்முலு.

   //இப்படியெல்லாம் உங்களால் மட்டுமே முடியும்.//

   அம்முலூஊஊஊஊஊஊஊ ;)))))

   //மலைக்கோட்டைபற்றிய தகவல்கள் சுவாரசியம். படங்கள் அழகாக இருக்கு. ரெம்ப நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி அம்முலு.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.

   நீக்கு
 32. நல்லதோர் பகிர்வு சார்.

  மலைக்கோட்டை பற்றிய செய்தி ஆச்சரியப்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவை2தில்லி April 29, 2013 at 1:39 AM

   வாங்கோ வணக்கம்.

   //நல்லதோர் பகிர்வு சார். மலைக்கோட்டை பற்றிய செய்தி ஆச்சரியப்படுத்துகிறது. //

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்,

   நீக்கு
 33. திருச்சி மலைக்கோட்டை பற்றி தெரியாத தகவல்கள். நன்றி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாலா April 29, 2013 at 1:50 AM

   வாருங்கள், வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டை பற்றி தெரியாத தகவல்கள். நன்றி சார்//

   மிக்க மகிழ்ச்சி.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், பாலா Sir.

   நீக்கு
 34. நான் வந்திட்டேன்ன்ன்ன்.. ஹையையோ எனக்காராவது மருந்துகட்டி விடுங்கோ:)... 88 பேருக்கும் அஞ்சு [இது வேற அஞ்சு] பொக்கேயை வச்சால்ல்.. அதை எப்படி எடுப்பது?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பறந்து பாய்ஞ்சு.. அடிபட்டு எடுத்ததில கை கால் எல்லாம் ரோசா முள்ளுக் குத்திட்டுது:) அங்க பாருங்கோ.. எத்தனைபேர் கால்ல அடிபட்டுப் போய் நிக்கினம்....:) இது உங்களுக்கே ஞாயமா இருக்கோ கோபு அண்ணன்?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 29, 2013 at 4:59 AM

   வாங்கோ அதிரா வாங்கோ, வணக்கம்.

   //நான் வந்திட்டேன்ன்ன்ன்.. ஹையையோ எனக்காராவது மருந்துகட்டி விடுங்கோ:)... 88 பேருக்கும் அஞ்சு [இது வேற அஞ்சு] பொக்கேயை வச்சால்ல்.. அதை எப்படி எடுப்பது?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பறந்து பாய்ஞ்சு.. அடிபட்டு எடுத்ததில கை கால் எல்லாம் ரோசா முள்ளுக் குத்திட்டுது:) அங்க பாருங்கோ.. எத்தனைபேர் கால்ல அடிபட்டுப் போய் நிக்கினம்....:) இது உங்களுக்கே ஞாயமா இருக்கோ கோபு அண்ணன்?:)//

   அமைதி அதிரா, அமைதி. வரும்போதே சண்டைக் கோழியாட்டமா சத்தம் போட்டுக்கிட்டே வரீங்களே, அதிரா,
   பூனை மாதிரி அமைதியாக வரக்கூடாதா? பாருங்கோ, நீங்க போடும் சத்தத்திலே, காலிலே அடிபட்ட / முள்ளுக் குத்தின வலி கூடத் தெரியாமல் எல்லோரும் சிரிக்கிறாங்கோ. ;)))))

   [இது வேற அஞ்சு] அப்படியா, நான் அதே அஞ்சுவாக்கும்ன்னு நினைச்சுப்புட்டேனாக்கும். ;)))))

   நீக்கு
 35. //

  இந்த மகிழ்ச்சியினைக் கொண்டாட இந்தாங்கோ விருந்து: ////

  நோஓஓஓஓ இது அநீதி அநியாயம்..:) தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடிச்ச கதையாவெல்லோ இருக்குதூஊஊஊஊஊ:).. நீங்களே உங்கட கையால செய்து தந்திருக்கோணும்:) அதுவும் 88 ஐட்டம்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 29, 2013 at 5:01 AM

   *****இந்த மகிழ்ச்சியினைக் கொண்டாட இந்தாங்கோ விருந்து:*****

   //நோஓஓஓஓ இது அநீதி அநியாயம்..:) தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடிச்ச கதையாவெல்லோ இருக்குதூஊஊஊஊஊ:).. நீங்களே உங்கட கையால செய்து தந்திருக்கோணும்:) அதுவும் 88 ஐட்டம்:)//

   ஆளுக்கு 88 ஐட்டமா? ;))))) தாங்காது அதிரா. தாங்காது. உடம்புக்கு ஆகாதும்ம்மா.

   நீக்கு
 36. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இத்தனை அருமையாக மினக்கெட்டு கணப்பெடுப்பு செய்து... முடிவுகள் வெளிட்டமை வியக்க வைக்குது கோபு அண்ணன் வாழ்த்துக்கள்..

  உஸ்ஸ்ஸ் அப்பாடா அஞ்சுவை அடிச்சுட்டேன்ன்:) பின்னூட்டத்திலதான்:).

  எனக்கு பூங்கொத்து தந்தமைக்கும் நன்றி. இராஜேஸ்வரி அக்காவுக்கு பூங்கொத்து கொடுத்தபோது யானையார் காண்ட் சேக் பண்ணினவராம்ம்:) அதால அவவுக்கு கை உழுக்கிட்டுதாம் எனக் கேள்விப்பட்டேன்ன்:)ஹையையோ என் வாய்தேன் நேக்கு எதிரி:) நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன் சாமி மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:).

  இனியும் இப்படி போட்டி வையுங்கோ.. பரிசும் தாங்கோ ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜேஸ்வரி அக்காவுக்கு பூங்கொத்து கொடுத்தபோது யானையார் காண்ட் சேக் பண்ணினவராம்ம்:) அதால அவவுக்கு கை உழுக்கிட்டுதாம் எனக் கேள்விப்பட்டேன்ன்:)

   யானையாருக்கு தும்பிக்கை சுளுக்கா ..!

   நீக்கு
  2. அச்சச்சோ ஹா..ஹா..ஹா.. இப்படியும் ஒண்டிருக்கோ?:) மாத்தி ஓசிக்காமல் விட்டிட்டனே:).. அப்போ யானையின் சுழுக்கெடுக்க, கோபு அண்ணனின் திருச்சி வீடு வாசல் வித்தாலும் போதாதாக்கும்:).. ஸ்டைலா யானையைப் பிடிச்சு பூக்குடுக்க வச்சார்ர்.. இப்போ என்ன பண்ணப்போறாரோ:)... .. சமயபுர மாரியம்மா.. நீதான் காப்பாத்துங்கோ:)..

   நீக்கு
  3. யானைக்குச் சுளுக்கெடுக்க
   அதிராமியாவின் பூனையார் இருக்க கவலை ஏன் ..?

   அதிரடி அதிராவின் பூனையா கொக்கா ..!

   யானைக்கும் பூனைக்கும் சரியாகப் போயிற்றே.. !

   நீக்கு
  4. ஹா.. ஹா...ஹா... அப்படீங்கறீங்க:) நீங்க சொன்னால் சரிதான்...

   இதுக்கு ஒரு முடிவு வராமல் தான் எப்படி வெளில தலை காட்டுவது என, கோபு அண்ணன் புகைக்கூட்டுக்குக் கீழ ஒளிச்சிருக்கிறார்:)... சரி சரி இனி பயப்பிடாமல் வந்து பதில்கள் போடுங்கோ கோபு அண்ணன்:).. உங்கட வீட்டைச் சேவ் பண்ணியாச்சு:).

   நீக்கு
  5. athira April 29, 2013 at 5:09 AM

   //அனைவருக்கும் வாழ்த்துக்கள். இத்தனை அருமையாக மினக்கெட்டு கணப்பெடுப்பு செய்து... முடிவுகள் வெளிட்டமை வியக்க வைக்குது கோபு அண்ணன் வாழ்த்துக்கள்..//

   ரொம்ப சந்தோஷம் அதிரா. அனைவரையும் வாழ்த்தியுள்ள அதிராவின் நல்ல மனஸுக்கு ஜே ! அன்பான வாழ்த்துகள்.

   நீக்கு
  6. கோபு >>>> அதிரா

   //உஸ்ஸ்ஸ் அப்பாடா அஞ்சுவை அடிச்சுட்டேன்ன்:) //

   இதைப்படித்ததும் நான் உடனே அழுதே விட்டேன், தெரியுமா?. ;(((((

   //பின்னூட்டத்திலதான்:).//

   நல்லவேளையாப்போச்சு. அப்பாடா! நிம்மதி, ;)))))

   //எனக்கு பூங்கொத்து தந்தமைக்கும் நன்றி.//

   நன்றிக்கு நன்றி, அதிரா. மிக்க மகிழ்ச்சி. ;)))))

   நீக்கு
  7. கோபு >>>> அதிரா

   //இனியும் இப்படி போட்டி வையுங்கோ.. பரிசும் தாங்கோ //

   ;))))) சந்தோஷம்மா. நல்ல ஐடியா. பார்ப்போம். செய்வோம். ஏதாவது பரிசும் தர முயற்சிப்போம். ;)))))

   நீக்கு
 37. திருச்சிமலைக் கோட்டை.. அழகிய பதிவு.

  அதுசரி சந்தடி சாக்கில நேர்த்திக்கடனை நிறைவேத்த மறந்திடாதீங்க அது ரொம்ப முக்கியமாக்கும்:) பிறகு சாமிக்குத்தமாகிடப்போகுதே முருகா .. வள்ளிக்கு வைரத் தோடு போடுவேன்ன்.. நேர்த்திக்கடனை நிறைவேத்திடச் சொல்லுங்கோ:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 29, 2013 at 5:11 AM

   //திருச்சிமலைக் கோட்டை.. அழகிய பதிவு.//

   மிக்க மகிழ்ச்சி, அதிரா. நன்றி.

   நீக்கு
  2. கோபு >>>> அதிரா [100 க்கு 100]

   //அதுசரி சந்தடி சாக்கில நேர்த்திக்கடனை நிறைவேத்த மறந்திடாதீங்க அது ரொம்ப முக்கியமாக்கும்:) //

   ஆமாம் அதிரா, நேர்த்திக்கடனை நிறைவேத்த மறந்திடாதீங்க அது ரொம்ப முக்கியமாக்கும்:)

   //பிறகு சாமிக்குத்தமாகிடப்போகுதே முருகா .. வள்ளிக்கு வைரத் தோடு போடுவேன்ன்.. நேர்த்திக்கடனை நிறைவேத்திடச் சொல்லுங்கோ:)//

   ஆமாம். சாமிக்குத்தமாகிடும் அதிரா. போன பதிவில் தங்களுக்கான என் பதிலில் விபரமெல்லாம் எழுதியிருக்கிறேன். மறந்துடாதீங்கோ. ;)))))
   .

   நீக்கு
 38. திருச்சி மலைக்கோட்டை அன்றும் இன்றும் காணக்கிடைத்து மகிழ்ந்தோம்.

  வாழ்த்துக்களுடன் அறுசுவை உணவுகளும் உண்டு களித்தோம் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதேவி April 30, 2013 at 5:18 AM

   வாங்கோ, வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டை அன்றும் இன்றும் காணக்கிடைத்து மகிழ்ந்தோம்.//

   சந்தோஷம்.

   //வாழ்த்துக்களுடன் அறுசுவை உணவுகளும் உண்டு களித்தோம் நன்றிகள்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்,

   நீக்கு
 39. வை.கோ சார்! நலம் தானே? இந்த பதிவிற்கு மிகவும் மெனக்கெட்டிருப்பீர்கள் போல. பொறுமைய்டனும் பொறுப்புடனும் பின்னூட்டங்களை அலசி ஒரு மூத்த பதிவாளராய் வழிகாட்டியிருக்கிறீர்கள். கொஞ்ச நாள் அஞ்ஞாத வாசத்திற்குப் பின் இன்றே வலைக்கு வந்தேன்.. ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோகன்ஜி May 1, 2013 at 3:13 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வை.கோ சார்! நலம் தானே? இந்த பதிவிற்கு மிகவும் மெனக்கெட்டிருப்பீர்கள் போல. பொறுமைய்டனும் பொறுப்புடனும் பின்னூட்டங்களை அலசி ஒரு மூத்த பதிவாளராய் வழிகாட்டியிருக்கிறீர்கள். கொஞ்ச நாள் அஞ்ஞாத வாசத்திற்குப் பின் இன்றே வலைக்கு வந்தேன்.. ரசித்தேன்//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்,

   நீக்கு
 40. //திருச்சி மலைக்கோட்டையின் வயது 350 கோடி ஆண்டுகளுக்கு மேல்//- அட ஆச்சரியமாகிவிட்டது.

  கருத்து சொன்னவங்களை கருத்தா நினைவுகூர்ந்து அழகாய் சொன்னது உங்கள் தனித்தன்மை!

  உங்கள் விருந்தில் காபியை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். எனக்கு ப்ரூட்ஸ்தான் ரொம்ப பிடிக்கும். வாழை தவிர மற்ற எல்லா பழங்களையும் நான் எடுத்து கொள்வேன். யாரும் சண்டைக்கு வரக்கூடாது ஆமாம்.

  மிக்க நன்றி சார்! லீவ் நாள் ஆனால் வலைப்பக்கத்துக்கும் லீவு விட்டுட்டு ஊர் சுற்றிவிட்டு இப்பத்தான் வந்ததால கொஞ்சம் தாமதமாயிடுச்சி.. உங்க பதிவுக்கு கமெண்ட் போட. மவுசை scroll பண்ணி பண்ணி.... அப்பப்பா.. ரொம்ப மவுஸ்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உஷா அன்பரசு May 3, 2013 at 4:26 AM

   வாங்கோ, வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டையின் வயது 350 கோடி ஆண்டுகளுக்கு மேல்//- அட ஆச்சரியமாகிவிட்டது.

   ஏதோ அதுபோலச் சொல்றாங்கோ. நாம் நம்ப வேண்டியதாக உள்ளது. நம் வயதே நமக்கு சமயத்தில் மறந்து போய் விடுகிறது. மலைக்கோட்டை வயதை நாம் எப்படிக்கண்டு பிடிக்க முடியும்? ;)

   //கருத்து சொன்னவங்களை கருத்தா நினைவுகூர்ந்து அழகாய் சொன்னது உங்கள் தனித்தன்மை! //

   கருத்து .... கருத்தா !!!!! சபாஷ் ;)))))

   என் தனித்தன்மையை உணர்ந்துள்ள ஒருசிலரில் இப்போ நீங்களும் ஒருவர் ஆகிவிட்டீர்களே, வெரிகுட் ;)))))

   //உங்கள் விருந்தில் காபியை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். எனக்கு ப்ரூட்ஸ்தான் ரொம்ப பிடிக்கும். வாழை தவிர மற்ற எல்லா பழங்களையும் நான் எடுத்து கொள்வேன். யாரும் சண்டைக்கு வரக்கூடாது ஆமாம்.//

   ஆஹா, தாராளமாக எடுத்துச் சாப்பிடுங்கோ. இன்னும் வேண்டுமானாலும் கேளுங்கோ, நிறைய அனுப்பி வைக்கிறேன். யாரும் சண்டைக்கோ போட்டிக்கோ வரமாட்டார்கள். கவலையே படாதீங்கோ. ;)

   //மிக்க நன்றி சார்! லீவ் நாள் ஆனால் வலைப்பக்கத்துக்கும் லீவு விட்டுட்டு ஊர் சுற்றிவிட்டு இப்பத்தான் வந்ததால கொஞ்சம் தாமதமாயிடுச்சி.. //

   அதனால் என்ன? பரவாயில்லை. லீவில் ஜாலியாக சுற்றிவிட்டு வந்தது கேட்க சந்தோஷமே. அந்த அனுபவங்களைப்பற்றி ஓர் அழகான பதிவாகப் போடுங்கோ.

   //உங்க பதிவுக்கு கமெண்ட் போட. மவுசை scroll பண்ணி பண்ணி.... அப்பப்பா.. ரொம்ப மவுஸ்..!//

   மவுசு .... மவுஸ் !!!! சூப்பர் ;)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்,

   நீக்கு
 41. வைகோ சார்!ஒரு காலத்தில் உங்கள் ஊரில் மாயவரம் லாட்ஜிலும்,அம்பி ஐயர் ஓட்டலிலும்,தெருவோர ஐயங்கர் கடையிலும் சாப்பிட்ட உணவின் ருசி இன்னும் நாக்கில் நிற்கிறது!!மறக்க முடியாத திருச்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை பித்தன் May 3, 2013 at 7:13 AM

   வாங்கோ ஐயா, வணக்கம் ஐயா.

   //வைகோ சார்! ஒரு காலத்தில் உங்கள் ஊரில் மாயவரம் லாட்ஜிலும், அம்பி ஐயர் ஓட்டலிலும், தெருவோர ஐயங்கர் கடையிலும் சாப்பிட்ட உணவின் ருசி இன்னும் நாக்கில் நிற்கிறது!!மறக்க முடியாத திருச்சி!//

   நீங்கள் சொல்லும் மூன்றில், மாயவரம் லாட்ஜ் மட்டும் இன்றும் அப்படியே மாறாமல் பிராச்சீன ஸம்ப்ரதாயங்களுடன் உள்ளது.

   என் வீட்டுக்கு மிக அருகில் தான் உள்ளது. 3 வருடங்கள் முன்பு என் சின்னப்பிள்ளைக்குக் கல்யாணம் என்று, எல்லோரும் கூடி, ஒரு மாதம் என் வீடே ஒரே அமர்க்களமாக இருந்தது.

   மொத்தம் 10 டிக்கெட்டுகளுக்கு மேல் என்பதால், வீட்டில் படுக்கை + AC + பாத் ரூம் பிரச்சனைகளை சமாளிக்க, இதே மாயவரம் லாட்ஜில் தான் ஒரு மாதம் Double Bed AC Room எடுத்து, நானும் என் மனைவியும் இரவு நேரங்களில் மட்டும் தங்கி வந்தோம். பகலில் பேரன் பேத்திகளுடன் அதே ரூமில் TV பார்த்துக்கொண்டும் இருப்போம்.

   தினம் ரூபாய் 1000 வீதம் அந்த மாதம் ரூ. 30000 செலவானது. இருப்பினும் மிகவும் செளகர்யமாகவே இருந்தது.

   அம்பி ஐயர் ஹோட்டல் போய் ரொம்ப நாள் ஆச்சு.

   தெருவோரக்கடைகள் இப்போது உண்டு. ஆனால் அப்போதைய ஐயங்கார் கடைகளெல்லாம் இப்போது இல்லை.

   >>>>>

   நீக்கு
 42. வைகோ சார்!ஒரு காலத்தில் உங்கள் ஊரில் மாயவரம் லாட்ஜிலும்,அம்பி ஐயர் ஓட்டலிலும்,தெருவோர ஐயங்கர் கடையிலும் சாப்பிட்ட உணவின் ருசி இன்னும் நாக்கில் நிற்கிறது!செவிக்குணவுக்கோ என் சக விரிவுரையாளர் புலவர் கீரன்!மறக்க முடியாத திருச்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை பித்தன் May 3, 2013 at 7:13 AM

   //செவிக்குணவுக்கோ என் சக விரிவுரையாளர் புலவர் கீரன்!//

   ஆஹா, புலவர் கீரன் உங்களுடன் பணியாற்றியவரா? மகிழ்ச்சி.

   அவர் கதைசொல்லி நான் நிறைய கேட்டுள்ளேன்.

   அவர் மட்டுமல்ல, நான் படித்த திருச்சி தேசியக்கல்லூரி உயர்நிலைப்பள்ளியின் [அந்த இடம் தற்சமயம் ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியாகிவிட்டது] மைதானத்தில், கொட்டகை போட்டு கோடைகாலங்களில் பலரும் வந்து இரவு அருமையாக கதை சொல்வார்கள், சொற்பொழிவு ஆற்றுவார்கள்.

   கையில் விசிறி, கீழே மணலில் விரிக்க ஓர் துண்டு, குடிக்க தீர்த்தம் முதலியவைகளுடன் காத்தாட ஆனந்தமாகக் கேட்டதுண்டு.

   சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷதர், தூப்புல் லக்ஷ்மி நரசிம்மன், சிவானந்த விஜயலக்ஷ்மி, கிருபானந்த வாரியார், புலவர் கீரன், திருமலாச்சாரியார் என்று இன்னும் யார் யாரோ பிரபலங்கள் சொன்ன நல்ல ஸத் விஷயங்களை, சிறு வயதில் ஆர்வத்துடன் கேட்கும் பாக்யம் கிடைக்கப்பெற்றேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், திருச்சியைப்பற்றிய அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

   நீக்கு
 43. பதில்கள்
  1. நிலாமகள் May 3, 2013 at 9:55 AM

   //அபூர்வமான தகவல்.//

   வாங்கோ மேடம், வணக்கம்.

   தங்களின் அபூர்வமான வருகைக்கும், அபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 44. மலைக்கோட்டை பற்றிய செய்திகள் அருமை. அந்த ரயில்வே ட்ராக்கும் காவிரியும் தூரத்தில் மலைக்கோட்டையும் தெரியும் பழைய கருப்பு வெள்ளை புகைப்படம் மிக மிக நன்றாக இருக்கிறது.

  'ஞானத் தலைவி' விருது பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரிக்கும்,
  உங்கள் வம்புத்தங்கை ..... ஸாரி ..... அன்புத்தங்கை, பிரித்தானியா இளவரசி அலம்பல், அலட்டல், அட்டகாச, அதிரடி ”அதிரா” ஸ்வீட் சிக்ஸ்டீன் அவர்களுக்கும் பாராட்டுகள்.

  ஒருவர் அடக்கம்; ஒருவர் அலம்பல் சரியான ஜோடிதான்!

  பின்னூட்டங்களின் எண்ணிக்கை வியக்க வைக்கிறது.கின்னஸ் புத்தகத்தில் வருமா?
  வாழ்த்துக்கள் கோபு ஸார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ranjani Narayanan May 3, 2013 at 10:14 AM

   வாங்கோ மேடம், வாங்கோ, வணக்கம்.

   //மலைக்கோட்டை பற்றிய செய்திகள் அருமை.//

   சந்தோஷம்.

   //அந்த ரயில்வே ட்ராக்கும் காவிரியும் தூரத்தில் மலைக்கோட்டையும் தெரியும் பழைய கருப்பு வெள்ளை புகைப்படம் மிக மிக நன்றாக இருக்கிறது.//

   அது திருச்சி காவிரிப்பாலம் தாண்டி, திருவானைக்கோயில் பக்கம் உள்ள மாம்பழச்சாலையிலிருந்து எடுக்கப்பட்டுள்ள படம்.
   வடக்கே நின்று தெற்கில் உள்ள மலைக்கோயிலின் VIEW வை படமாக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டு ஜன்னலைத்திறந்தாலும் இதே VIEW தான் CLOSE-UP இல் பிரும்மாண்டமாகத் தெரியும்.

   //'ஞானத் தலைவி' விருது பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரிக்கும், உங்கள் வம்புத்தங்கை ..... ஸாரி ..... அன்புத்தங்கை, பிரித்தானியா இளவரசி அலம்பல், அலட்டல், அட்டகாச, அதிரடி ”அதிரா” ஸ்வீட் சிக்ஸ்டீன் அவர்களுக்கும் பாராட்டுகள்.//

   மிகவும் சந்தோஷம், மேடம்.

   //ஒருவர் அடக்கம்; ஒருவர் அலம்பல் சரியான ஜோடிதான்!//

   இதற்கு நான் ஏதாவது சொல்லி வீண் வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ;))))) ஏற்கனவே எனக்கு போதாத காலமாக உள்ளது.

   //பின்னூட்டங்களின் எண்ணிக்கை வியக்க வைக்கிறது.கின்னஸ் புத்தகத்தில் வருமா? வாழ்த்துக்கள் கோபு ஸார்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 45. Aha.... Anthnalil nan Trichiyai parthathillai. Eppodu ungal pathivoo moolam parthu rasithen.
  Appppaaaappa egapatta virunthu..
  eathai eduppathu eathai thinpathu theriavillai.
  Sir, ungal paranthamanathai mathriya palavakai palakaram.
  besssh besssh romba nana irrukku.
  viji

  பதிலளிநீக்கு
 46. viji May 5, 2013 at 12:37 AM

  வாங்கோ விஜி மேடம், வணக்கம்.

  //Aha.... Anthnalil nan Trichiyai parthathillai. ஆஹா, அந்த நாளில் நான் திருச்சியைப் பார்த்தது இல்லை//

  நீங்கள் மட்டுமல்ல, இன்று உயிருடன் உள்ள யாருமே பார்த்திருக்க முடியாதே! அது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த திருச்சி மலைக்கோட்டையாமே! ;)

  //Eppodu ungal pathivoo moolam parthu rasithen. இப்போது உங்கள் பதிவு மூலம் பார்த்து ரசித்தேன்//

  மிக்க மகிழ்ச்சி.

  //Appppaaaappa egapatta virunthu..eathai eduppathu eathai thinpathu theriavillai. அப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ ஏகப்பட்ட விருந்து. எதை எடுப்பது எதை தின்பதுன்னு தெரியவில்லை//

  ;)))))

  //Sir, ungal paranthamanathai mathriya palavakai palakaram. besssh besssh romba nana irrukku. - viji ஸார், உங்கள் பரந்த மனதை மாதிரியே பலவகைப் பலகாரம். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு - விஜி//

  ;)))))

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், விஜி மேடம்.

  பதிலளிநீக்கு
 47. அன்பின் வை.கோ

  மலைக்கோட்டை அன்றும் இன்றும் - பழைய படமும் - 2000 ஆண்டுகட்கு முன்னர் இருந்த உச்சிப் பிள்ளையார் கோவில் படம் - இன்றைய உச்சிப் பிள்ளையார் கோவில் படம் - இரண்டினையும் இணைத்து விளக்கம் கொடுத்தமை நன்று.

  திருச்சி மலைக் கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் - 350 கோடி ஆண்டுகள் - பழைய தகவல்களை எல்லாம் தேடிப் பிடித்து இங்கு பகிர்ந்தது நன்று.

  தங்களின் அயரா உழைப்பும், ஆர்வமும், தனக்குத் தெரிந்த அனைத்து அரிய தகவல்களையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற தீராத ஆசையும் பாராட்டத் தக்கது - பாராட்டத்தான் சொற்கள் இல்லை.

  ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா என்ற பதிவினிற்கும் சென்று பார்த்து படித்து இரசித்து மகிழ்ந்து மறுமொழியும் இட்டு வந்தேன்,

  பொக்கிஷம் பதிவின் - தொடர் பதிவின் 12 பகுதிகளையும் படிக்க அளவிலா ஆசை - முயல்கிறேன்.

  தங்களின் 12 பகுதிகளையும் படித்து மறும்ழொஇ இட்டவர்களின்
  பெயர்ப் பட்டியல் பல்வேறு வண்ண்ங்களில் - ஆண் பெண் எனத் தனித்தனியாக வெளியிட்டமை நன்று. தங்களின் உழைப்பு பாராட்டத் தக்கது - இவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்கி - புள்ளி விபரங்கள் சேகரித்து - அனைத்தையும் வெளியிட்டமை பாராட்டுக்குரியது.

  இயன்ற வரை அனைவரின் மறுமொழிகளுக்கும் நன்றி கூறி பதில் மறுமொழி இட்டமையும் நன்று.

  தன்களின் நட்புகளைப் பாராட்டி மறுமொழிகளுக்கு நீண்ட மறுமொழி இட்டு - மகிழ்ந்ததும் தங்களின் அயராத உழைப்பினைக் காட்டுகிறது.

  11 பதிவுகளுக்கும் 1250 மறுமொழிகள் - நம்ப முடிய வில்லை - தங்கள் வாசகர் வட்டம் பெரிது - இவ்வளவுக்கும் தங்களுக்கு நேரம் எப்படிக் கிடைக்கிறது ?

  பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா)May 9, 2013 at 7:14 PM

   //அன்பின் வை.கோ,//

   வாருங்கள் என் அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா.

   //மலைக்கோட்டை அன்றும் இன்றும் - பழைய படமும் - 2000 ஆண்டுகட்கு முன்னர் இருந்த உச்சிப் பிள்ளையார் கோவில் படம் - இன்றைய உச்சிப் பிள்ளையார் கோவில் படம் - இரண்டினையும் இணைத்து விளக்கம் கொடுத்தமை நன்று.

   திருச்சி மலைக் கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் - 350 கோடி ஆண்டுகள் - பழைய தகவல்களை எல்லாம் தேடிப் பிடித்து இங்கு பகிர்ந்தது நன்று.

   தங்களின் அயரா உழைப்பும், ஆர்வமும், தனக்குத் தெரிந்த அனைத்து அரிய தகவல்களையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற தீராத ஆசையும் பாராட்டத் தக்கது - பாராட்டத்தான் சொற்கள் இல்லை. //

   மிக்க மகிழ்ச்சி ஐயா.

   //ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா என்ற பதிவினிற்கும் சென்று பார்த்து படித்து இரசித்து மகிழ்ந்து மறுமொழியும் இட்டு வந்தேன்,//

   ரொம்ப சந்தோஷம் ஐயா. ஏற்கனவே படித்திருப்பீர்கள். மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா.

   >>>>>>

   நீக்கு
  2. கோபு >>> அன்பின் சீனா ஐயா [2]

   //பொக்கிஷம் பதிவின் - தொடர் பதிவின் 12 பகுதிகளையும் படிக்க அளவிலா ஆசை - முயல்கிறேன். //

   நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாகப் பாருங்கள் + படியுங்கள் ஐயா.

   படித்த பகுதிகளுக்கு, மிகவும் விலையுயர்ந்த பொக்கிஷமாக நான் நினைக்கும், தங்களின் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யுங்கள், ஐயா.

   >>>>>>

   நீக்கு
  3. கோபு >>> அன்பின் சீனா ஐயா [3]

   //தங்களின் 12 பகுதிகளையும் படித்து மறும்ழொஇ இட்டவர்களின் பெயர்ப் பட்டியல் பல்வேறு வண்ண்ங்களில் - ஆண் பெண் எனத் தனித்தனியாக வெளியிட்டமை நன்று. தங்களின் உழைப்பு பாராட்டத் தக்கது - இவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்கி - புள்ளி விபரங்கள் சேகரித்து - அனைத்தையும் வெளியிட்டமை பாராட்டுக்குரியது.

   இயன்ற வரை அனைவரின் மறுமொழிகளுக்கும் நன்றி கூறி பதில் மறுமொழி இட்டமையும் நன்று.

   தங்களின் நட்புகளைப் பாராட்டி மறுமொழிகளுக்கு நீண்ட மறுமொழி இட்டு - மகிழ்ந்ததும் தங்களின் அயராத உழைப்பினைக் காட்டுகிறது.//

   எல்லோருமாகச் சேர்ந்து பின்னூட்டங்கள் என்ற தேர் வடத்தை கெட்டியாகப்பிடித்து இழுத்து, உற்சாகம் கொடுத்து இந்த “பொக்கிஷம்” என்ற தேரினை 12 நிலைகளில் வெகு அழகாக இழுத்து வந்துள்ளார்கள், ஐயா.

   அவர்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்புகளும் இதில் அடங்கியுள்ளது ஐயா.

   அவர்கள் அனைவருக்கும் நான் இங்கு என் நன்றிகளைப்பதிவு செய்துகொள்கிறேன் ஐயா.

   >>>>>

   நீக்கு
  4. கோபு >>> அன்பின் சீனா ஐயா [4]

   //11 பதிவுகளுக்கும் 1250 மறுமொழிகள் - நம்ப முடிய வில்லை//

   1256 மறுமொழிகள் என்பது 27.04.2013 மாலை 4.45 மணி நிலவரம் ஐயா.

   இன்று 10.05.2013 காலை 10.00 மணி நிலவரப்படி என் பதில்கள் உள்பட பின்னூட்டங்களின் எண்ணிக்கை 1394.

   109+102+100+124+113+116+119+107+133+114+132+125= 1394 ;)

   கிட்டத்தட்ட 1400ஐ நெருங்கி விட்டது ஐயா.

   தங்களைப்போன்ற என் ஒருசில வாடிக்கையாளர்கள் பல்வேறு காரணங்களால் வெளியூர் சென்றிருக்கிறார்கள் ஐயா. அவர்கள் எப்போது திரும்பி வந்தாலும் இந்த எண்ணிக்கையை மிகச்சுலபமாக 1500க்கு கொண்டுவந்து விடுவார்கள் ஐயா.

   >>>>>

   நீக்கு
  5. கோபு >>> அன்பின் சீனா ஐயா [5]

   // - தங்கள் வாசகர் வட்டம் பெரிது - இவ்வளவுக்கும் தங்களுக்கு நேரம் எப்படிக் கிடைக்கிறது ? பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   எல்லாம் தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் தந்து வரும் தொடர் ஒத்துழைப்பினால் மட்டுமே, என் தேரை நான் நகர்த்த முடிகிறது, ஐயா.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், ஐயா.

   பிரியமுள்ள தங்கள்
   VGK

   ooooo

   நீக்கு
 48. அருமையான பதிவு.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Rathnavel NatarajanMay 21, 2013 at 4:13 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //அருமையான பதிவு. நன்றி ஐயா.//

   மிக்க மிகழிச்சி + மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 49. Aasai May 27, 2013 at 9:45 AM

  //தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.//

  தகவலுக்கு மிக்க நன்றி. தற்சமயம் என் பதிவுகளை எந்தத் திரட்டியிலும் இணைக்க நான் விரும்பவில்லை.

  பதிலளிநீக்கு
 50. பொக்கிஷங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கவும்.

  பதிலளிநீக்கு
 51. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

  அன்புள்ள ஜெயா,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஏப்ரல் வரையுள்ள முதல் 28 மாதத்தில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 52. அனைவருக்கும் வணக்கம்.

  இந்தப்பதிவின் இறுதியில் ஒருசில புகைப்படங்களும் செய்திகளும் இன்று (27.07.2015) என்னால் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
 53. திருச்சி மலைக்கோட்டை அன்றும் இன்றும் படங்கள் பகிர்வு நல்லா இருக்கு. அதிரா அவர்களின வித்தியாசமான தமிழும் நூங்களும் அவங்க தமிழ் மாதிரியே தமிழ் பதிஉ போடுவதும் வெகு சுவாரசியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் August 17, 2015 at 3:59 PM

   வாங்கோ, வணக்கம்.

   //திருச்சி மலைக்கோட்டை அன்றும் இன்றும் படங்கள் பகிர்வு நல்லா இருக்கு.//

   மிகவும் சந்தோஷம்.

   //அதிரா அவர்களின வித்தியாசமான தமிழும், தாங்களும் அவங்க தமிழ் மாதிரியே பதில் போடுவதும், வெகு சுவாரசியம்.//

   அதிரா மிகவும் சுவாரஸ்யமானவர்கள் தான். அவர்கள் பின்னூட்டமிட வந்தாலே .... பதிவே அப்படியே .... சும்மா அதிருமில்லே ! :)))))

   ஏனோ இப்போதெல்லாம் அதிகமாகக் காணோம் !

   நீக்கு
  2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஏப்ரல் வரை முதல் 28 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   நீக்கு
 54. படங்க கமண்டுக அல்லாம் படிச்சிகிட்டன் நல்லா இருக்குது

  பதிலளிநீக்கு
 55. mru October 25, 2015 at 10:05 AM

  //படங்க கமண்டுக அல்லாம் படிச்சிகிட்டன் நல்லா இருக்குது//

  :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 56. திருச்சி அன்றும் இன்றும். நிறயவே மாறிவிட்டதுதான். அனைவருக்கும் நன்றி தெரிவித்திருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 57. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
  திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஏப்ரல் மாதம் முடிய, என்னால் முதல் 28 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  As it is, at this moment, You have secured 337 Marks out of 750 that too within just 13 days. Very Great Achievement. My Heartiest Congratulations !

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 58. தேரோட் படங்களும் வர்ணனைகளும் சூப்பர் இவ்வளவு துல்லியமான அழகு கொஞ்சும் படங்களை உங்க வீட்டு ஜன்னலிலேந்தே எடுத்து எங்க எல்லாரையும் தேரோட்டத்தில் கலக்க வச்சுட்டீங்களே.

  பதிலளிநீக்கு
 59. இவ்வளவு புராதனமான கோயிலா? ஆச்சர்யப்பட வைக்கும் பதிவு!!!

  பதிலளிநீக்கு
 60. புதிதாக இணைத்த படத்தையும் பார்த்து இரசித்தேன்! அருமை!

  பதிலளிநீக்கு
 61. Mail message received on 4th May 2017 at 11.43 AM

  எனது அன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய, உயர்திரு. கோபு ஸார் அவர்களுக்கு,

  ஆச்சரியமாக இருக்குமே. எனக்குள்ளும் ஆச்சரியம் தாண்டவமாடுகிறது.

  இன்று உங்களின் பொக்கிஷம் என்ற தாங்கள் எனக்கு அளித்த பரிசு புத்தகத்தைப் படித்தேன்.

  ஆஹா... புத்தகமே பொக்கிஷம் தான். அதில் இருக்கும் தங்களது அத்தனை பொக்கிஷங்களும் எனக்குப் பொக்கிஷமாகவே தெரிந்தது.

  மஹா பெரியவரின் அருகில் நீங்கள் நிற்கும், குளிக்கும், பண்டரிபுர அனுபவம்... அவருக்கு மிக சமீபத்தில் ஆற்றில் குளித்த அனுபவங்கள் அனைத்தையும் படித்ததும், மனதுக்குள் ஒரு இதமான நெகிழ்ச்சி.

  இது போன்ற பாக்கியங்கள் தான் பூர்வஜென்ம புண்ணியங்கள். தங்களது எழுத்துக்களில் நிறைய ஹாஸ்யங்கள், குறும்புகள் எனப் படித்திருந்தாலும்.... இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது கண்களில் நீர் தாரையாகி வழிந்தது என்பது தான் நிஜம்.

  பெரியவாளின் பாதுகைகள்..... கண்ணில் கண்டதற்கே நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன்.

  குடும்ப உறுப்பினராகவே இருந்தாலுமே, எத்தனை பேர்களுக்கு தங்களது பொக்கிஷத்தையும் தாண்டிய இது போன்ற உயர்ந்த புதையலை அவருக்குத் தரும் மனம் வரும்? நீங்கள் செய்திருக்கிறீர்கள். இது மஹா விந்தையிலும் விந்தை.

  பூஜை படங்கள் அற்புதக் காட்சியெனக் கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.... என்று காதினுள் ஒலித்ததை மனம் உணர்ந்து கொண்டது.

  நீங்கள் ஒரு அற்புத மாமனிதர்.

  அன்னை காமாக்ஷியின் தாங்கள் வரைந்த படம் இப்போதும் அந்தக் கோயிலில் இருக்கும் அல்லவா? வரங்கள் பல பெற்ற பேறு பெற்றவர். பொக்கிஷம் என்ற அனுபவக் குவியல்..... அபாரம்.

  இப்படிக்குத் தங்கள்
  எழுத்துக்களின் பரம ரஸிகை

  பதிலளிநீக்கு