என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 9 மே, 2013

சித்திரை மாதம்.... பெளர்ணமி நேரம் .... முத்து ரதங்கள் .... ஊர்வலம் போகும் ... !



By 
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-

திருச்சி மாநகரில் 25.03.2013 திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மலைக்கோட்டை ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவ ஸ்வாமிக்கு தெப்ப உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.   

அப்போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் இதோ தங்கள் பார்வைக்காக.

இந்தத் திருக்குளம் கி.பி. 1ம் நூற்றாண்டில் கரிகால் சோழன் அவர்களால் கட்டப்பட்டது. பிரம்ம தீர்த்தம் என்றும் சோமரோகணி என்றும் அழைக்கப்பட்டது. 

611 அடி நீளமும், 330 அடி அகலமும், 30 அடி ஆழமும் கொண்ட இந்த தெப்பக்குளம், திருச்சி மாநகருக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது.



இந்தத்தெப்பக்குளத்தின் மையத்தில் நிரந்தரமாக அமைந்துள்ள நீராழி மண்டபம் கி.பி. 16ம் நூற்றாண்டில், விஸ்வநாத நாயக்கர் அவர்களால் கட்டப்பட்டது.  



தெப்பத்திருவிழாவின்போது மட்டும் தற்காலிகமாக மிதக்கும் தெப்பம் உருவாக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மையத்தில் நிரந்தரமாக அமைந்துள்ள நீராழி மண்டபத்தை பிரதக்ஷணமாகச் சுற்றி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  





தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள தெப்பத்தில் ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் எனவும் அழைக்கப்படும் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை ஸமேத ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ தாயுமானவ ஸ்வாமி, சோமாஸ்கந்த மூர்த்தியாக எழுந்தருளியுள்ள அற்புதமான காட்சிகள் இவை.








மையப்பகுதியில் உள்ள நிரந்தரமான நீராழி மண்டபத்தை, ஸ்வாமியும் அம்பாளும் எழுந்தருளியுள்ள தற்காலிகத்தெப்பம், இன்னிசைக் கச்சேரிகளுடன் சுற்றி வரும் அற்புதமான அழகியக்காட்சி.



திருச்சி உச்சிப்பிள்ளையார் + 
ஸ்ரீ தாயுமானவர் கோயில்





திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் பற்றிய பெயர்காரணம் முதலிய தகவல்கள் மேலும் அறிய இதோ இணைப்பு:

 http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_27.html

தலைப்பு: 

காது கொடுத்துக் கேட்டேன் ..... 
ஆஹா ........ குவா குவா சப்தம்!









24.04.2013 புதன்கிழமை நடைபெற்ற
திருச்சி மலைக்கோட்டைத் 
தேர்த்திருவிழாவில்
எடுக்கப்பட்ட படங்கள் இதோ




பிள்ளையார் தேர்
மேலே உள்ள படம்





ஸ்ரீ தாயுமானவர் ஸ்வாமி தேர்
மேலும் கீழும் உள்ள படங்கள்








ஸ்ரீ மட்டுவர் குழலம்மை 
அம்பாள் தேர்
மேலும் கீழும் உள்ள படங்கள்












அன்றாடம் பல பயனுள்ள ஸத் விஷயங்களை தன் பிரபல வலைத்தளமான http://tamilbloggersunit.blogspot.in மூலம் வெளியிட்டு வருபவரான  திரு. பட்டாபிராமன் அவர்கள், அன்புடன் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள படம்:


திரு. பட்டாபிராமன் அவர்களுக்கு அடியேனின் மனமார்ந்த இனிய நன்றிகள் / நமஸ்காரங்கள்.
 

 Mr. Pattabi Raman Sir.






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்






118 கருத்துகள்:

  1. நிறையப் படங்கள் உங்க வீட்டில் இருந்தே.. நல்லா வந்திருக்கு. வசதி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை May 9, 2013 at 10:11 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //நிறையப் படங்கள் உங்க வீட்டில் இருந்தே.. நல்லா வந்திருக்கு. வசதி :)//

      ஆமாம். சார். மலைக்கோட்டைத்தேர் படங்கள் யாவும் என் வீட்டிலிருந்து ஜன்னல்கள் வழியாக எடுக்கப்பட்டவைகள் தான்.

      கீழே போய், கும்பலில் முண்டியடித்து, ஒருமுறை ஸ்வாமி / அம்பாள் தரிஸனம் செய்துவிட்டு வந்து விடுவேன். பிறகு வீட்டிலிருந்து படம் எடுப்பது தான் என் வழக்கம்.

      தேர் இழுக்கப்படும் கும்பலில் கேமராவுடன் போய் படம் எடுப்பதெல்லாம் சரிப்பட்டு வராது. அவ்வாறு செய்தால் நமக்கும் கேமராவுக்குமே அங்கு பாதுகாப்பு இருக்காது.

      ஆனால் இந்த கீழ்க்கண்ட பதிவினில் திருச்சி வாணப்பட்டரை மஹமாயீ [மாரியம்மன்] தேரை அருகில் சென்று படம் எடுக்க என்னால் முடிந்தது. http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html.

      கும்பல் ஓரளவுக்கு இருப்பினும், எங்கள் கட்டட வாசலில் வெகு நேரம் [More than an Hour] அந்தச் சிறியதேர், இழுக்கப்படாமல் நின்றுகொண்டே இருந்தது. அதனால் என்னால் அருகே போய் அம்பாளை படம் எடுக்க முடிந்தது.

      மலைக்கோட்டைத்தேர்கள் அதுபோல அல்ல. அவைகள் உருவத்திலும் உயரத்திலும் மிகவும் பெரியது. தேர்வடத்தின் நீளமும் அதிகம், கும்பலும் அதிகம். தேர் இழுப்போரும் மிகவும் அதிகம். போலீஸ் கட்டுப்பாடுகளும் மிகவும் அதிகம். மலைக்கோட்டைத் தேர்களை நெருங்கி ஸ்வாமி அம்பாளை போட்டோ பிடிப்பதெல்லாம் சரிப்பட்டு வராது.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த் இனிய நன்றிகள், சார்.

      நீக்கு
    2. வீட்டு வாசலில் ஒரு மணி நேரம் நிற்குமா? வசதின்னா வசதி போங்கோ!

      நீக்கு
    3. அப்பாதுரை May 17, 2013 at 7:41 PM

      வாங்கோ, மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //வீட்டு வாசலில் ஒரு மணி நேரம் நிற்குமா? வசதின்னா வசதி போங்கோ!//

      சில தேர்கள் அதுபோல மணிக்கணக்காக நிற்கக்கூடும்.

      ஒரேயடியாக வசதி என்று சொல்லிவிட முடியாது.

      அந்த நேரத்தில் காது கிழிந்து விடும் அளவுக்கு மேளச்சத்தம் இருக்கும். தேர்கள் எங்கள் தெருவைக்கடக்கும் வரை, அன்று முழுவதுமே மின்சார இணைப்பு துண்டிக்கப்படும்.

      ஏற்கனவே தமிழ்நாட்டில் மின்சாரம் அவ்வப்போது போய்க்கொண்டும் வந்துகொண்டும் தொல்லை அதிகமாக உள்ளது.

      இந்தத்தேர்களினால் மேலும் நிறையவே அனுக்ரஹம் ! ;)))))

      நீக்கு
    4. அப்ப ரொம்பத் தொல்லை தான். நிதானமா நல்லா பார்க்க வசதின்னு நினைக்குறப்ப இப்படி ஒரு சிக்கலா?  தேர் எல்லாம் ஜெனரேட்டர் வச்சு ஓட்டமாட்டாங்களோ ?

      நீக்கு
    5. அப்பாதுரை May 18, 2013 at 10:11 PM

      வாங்கோ வணக்கம்.

      //அப்ப ரொம்பத் தொல்லை தான். நிதானமா நல்லா பார்க்க வசதின்னு நினைக்குறப்ப இப்படி ஒரு சிக்கலா?//

      ஒரு வசதி இருக்கும் இடத்தில் மற்றொரு சிக்கலும் இருக்கத்தான் செய்யும். அது தான் இயற்கை.

      நாம் மிகவும் நேசிக்கும் மனிதர்களிடமே கூட, நம்மை வெறுக்கச்செய்யும், நம்மால் சகித்துக்கொள்ளவே முடியாத, ஒருசில குணங்களும், நடவடிக்கைகளும் சேர்ந்தே இருக்கும். அதுபோலவே தான் இதுவும்.

      //தேர் எல்லாம் ஜெனரேட்டர் வச்சு ஓட்டமாட்டாங்களோ ?//

      தேர் + சாதாரண ஸ்வாமி புறப்பாடுகள் எல்லாவற்றிற்கும் பொதுவாக ஜெனரேட்டர் செட்கள் வைத்திருப்பார்கள்.

      இருப்பினும் தேரின் உயரம் மிகவும் அதிகம் அல்லவா!

      தெருவெங்கும் மின்சாரக்கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாக நிறைய தொங்கிக்கொண்டிருக்கும் அல்லவா!!

      அந்த மின்கம்பிகளில் உயரமான தேர்களின் கும்பம் முதலியன உரசியோ அல்லது அந்த மின்கம்பிகளை அறுந்து கீழே விழச்செய்தோ, ஜனங்களுக்கு மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சார இணைப்புகளை முற்றிலுமாக துண்டித்து விடுகிறார்கள். vgk

      நீக்கு
  2. திருவிழா படங்கள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் May 9, 2013 at 10:22 AM

      வாங்கோ, வணக்கம்.

      //திருவிழா படங்கள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி...//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த் இனிய நன்றிகள், சார்.

      நீக்கு
  3. 611 அடி நீளமும், 330 அடி அகலமும், 30 அடி ஆழமும் கொண்ட இந்த தெப்பக்குளம், திருச்சி மாநகருக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது...

    அழகான பகிர்வுகள் ..சிறப்பான படங்கள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி May 9, 2013 at 11:07 AM

      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!! இனிய வந்தனங்கள்.

      *****611 அடி நீளமும், 330 அடி அகலமும், 30 அடி ஆழமும் கொண்ட இந்த தெப்பக்குளம், திருச்சி மாநகருக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது...*****

      //அழகான பகிர்வுகள் ..சிறப்பான படங்கள்..பாராட்டுக்கள்..//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சிறப்பான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  4. மையப்பகுதியில் உள்ள நிரந்தரமான நீராழி மண்டபத்தை, ஸ்வாமியும் அம்பாளும் எழுந்தருளியுள்ள தற்காலிகத்தெப்பம், இன்னிசைக் கச்சேரிகளுடன் சுற்றி வரும் அற்புதமான அழகியக்காட்சி.

    சிரத்தையான படப்பிடிப்பிற்கும் காட்சிப்படுத்தியதற்கும் இனிய நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரிMay 9, 2013 at 11:12 AM

      *****மையப்பகுதியில் உள்ள நிரந்தரமான நீராழி மண்டபத்தை, ஸ்வாமியும் அம்பாளும் எழுந்தருளியுள்ள தற்காலிகத்தெப்பம், இன்னிசைக் கச்சேரிகளுடன் சுற்றி வரும் அற்புதமான அழகியக்காட்சி.*****

      //சிரத்தையான படப்பிடிப்பிற்கும் காட்சிப்படுத்தியதற்கும் இனிய நன்றிகள்..//

      சிரத்தையான கருத்துக்களுக்கும் இனிய நன்றிகளுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.

      நீக்கு
  5. சித்திரை மாதம்.... பெளர்ணமி நேரம் .... முத்து ரதங்கள் .... ஊர்வலம் போகும் ... !
    தேரில் வந்த தெய்வங்களை நேரில் காட்சிதரவைத்த சிறப்பான பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி May 9, 2013 at 11:14 AM

      *****சித்திரை மாதம்.... பெளர்ணமி நேரம் .... முத்து ரதங்கள் .... ஊர்வலம் போகும் ... !*****

      //தேரில் வந்த தெய்வங்களை நேரில் காட்சிதரவைத்த சிறப்பான பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்...//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் சிறப்பான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  6. அன்பின் வை.கோ

    அருமையான படங்களுடன் தெப்பத் திருவிழா - தேர்த் திருவிழா - விளக்கங்களுடன் கூடிய பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) May 9, 2013 at 11:18 AM
      //அன்பின் வை.கோ //

      அன்பின் திரு. சீனா ஐயா, வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //அருமையான படங்களுடன் தெப்பத் திருவிழா - தேர்த் திருவிழா - விளக்கங்களுடன் கூடிய பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  7. சித்திரை மாதம் பெளரணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் தலைப்பபே அருமை.
    தெப்பத்திருவிழா, தேர்திருவிழா படங்கள், தாயுமானவர் கதை படம் எல்லாம் அருமை.
    சிட்டுகுருவியும் தேர்திருவிழா பார்க்க வந்து விட்டதோ!
    பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு May 9, 2013 at 4:38 PM

      வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

      //சித்திரை மாதம் பெளர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் தலைப்பே அருமை.//

      மிக்க மகிழ்ச்சி. ஏதோ கடைசி நிமிடம் என் மனதில் தோன்றிய தலைப்பு.

      //தெப்பத்திருவிழா, தேர்திருவிழா படங்கள், தாயுமானவர் கதை படம் எல்லாம் அருமை.//

      மிகவும் சந்தோஷம்.

      //சிட்டுகுருவியும் தேர்திருவிழா பார்க்க வந்து விட்டதோ!//

      ’சிட்டுக்குருவி’ ஏற்கனவே நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பழைய பதிவு ஒன்றினில் வெளியிடப்பட்டிருந்தது.

      எனக்கு மிகவும் பிடித்தமான இதுபோன்ற ஒருசில அனிமேஷன் படங்களை மட்டும், நான் அப்போதெல்லாம் COPY & PASTE செய்து சேமித்து வைத்து, அவ்வப்போது பார்த்து மகிழ்வதுண்டு.

      அதில் சேமித்து வைத்திருந்த அதே குருவி தான் இது. அதுவும் தெப்பம் + தேர்த்திருவிழா பார்க்கட்டுமே என அதனை வெளியே அனுமதித்துள்ளேன். ;)))))

      //பகிர்வுக்கு நன்றி சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  8. காட்சியும் தகவல்களும்
    அருமை.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman May 9, 2013 at 4:49 PM

      வாங்கோ அண்ணா, வணக்கம்/நமஸ்காரம்.

      //காட்சியும் தகவல்களும் அருமை.பாராட்டுக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அண்ணா.

      நீக்கு
  9. எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை
    எதுவும் தெரியாதவர் எவரும் இல்லை

    உங்களுக்கு தெரிந்த சில சாதாரண
    விஷயங்களை கூட
    அறியாதவன் இந்த மூடன்.

    ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை அளித்திருக்கிறான் அந்த இறைவன்

    சிலர் குன்றிலிட்ட விளக்குபோல்
    ஒளி வீசுகிறார்கள்

    பலர் மலையினுள் மறைந்து
    கிடக்கும் மாணிக்கம் போல்
    மங்கி கிடக்கிறார்கள்

    எல்லாம் முன்வினைப்பயன்.
    அவ்வளவே


    பிறவிதோறும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டுதாம் இருக்கிறோம்.
    ஆனால் பிறந்து பிறந்து மீண்டும்
    இந்த இன்ப துன்ப சூழலில் சிக்கிக்கொண்டு
    அல்லல்படுவதிலிருந்து விடுபடும்
    வழியை கற்றுக்கொள்ள மட்டும்
    மனம் நாட மறுக்கிறது.

    ஏதோ சிலவற்றை அவன் அருளால்
    இவன் முயற்சியால் கற்றுக்கொண்டான்

    கற்றுக்கொள்ள வேண்டியது
    இருக்கிறது கோடி கோடி

    நேரமும் இல்லை,
    உடலில் சக்தியும் இல்லை
    கடமைகளிடையே உள்ள
    இடைவேளையில்
    கற்றுகொண்டதுதான்
    இதுபோன்றவை

    இவன் அனுப்பிய படத்தை உங்கள் பதிவில்
    இணைத்துகொள்ளுங்கள். நான் பார்க்கிறேன்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman May 9, 2013 at 5:45 PM

      வாங்கோ அண்ணா! நமஸ்காரங்கள் அண்ணா!!

      //இவன் அனுப்பிய படத்தை உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள். நான் பார்க்கிறேன் //

      தங்கள் விருப்பத்திற்கு இணங்க, இதே பதிவினில் கடைசியாக இணைத்துள்ளேன், அண்ணா.

      என் மீது தாங்கள் காட்டிவரும் அன்புக்கும் பிரியத்திற்கும் அடியேனின் மனமார்ந்த இனிய நன்றிகள் அண்ணா.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. யாரும் கேட்பாரற்று எங்கோ ஒதுங்கி
      கிடந்தவன் இவன்.

      உங்களை திருச்சி மலைக்கோட்டை
      தெப்ப குளத்தின் கீழ் நிற்க வைத்த என்னை
      நீங்கள் மீது திருச்சி மலைக்கோட்டை மீது
      உட்காரவைத்து விட்டீர்கள்.

      என்னே உங்கள் பெருந்தன்மை !

      நன்றி.

      நீக்கு
    3. Pattabi Raman May 10, 2013 at 9:57 PM

      //யாரும் கேட்பாரற்று எங்கோ ஒதுங்கி கிடந்தவன் இவன்.//

      நானும் தங்களைப்போலவே இருந்தவன் தான், ஸ்வாமீ.

      என்னுடைய ஐம்பதாவது பதிவினையும், நூறாவது பதிவினையும் தயவுசெய்து படித்துப்பாருங்கோ. உங்களுக்கே விஷயம் தெரிய வரும். இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html [பதிவு எண்:50]
      http://gopu1949.blogspot.in/2011/07/of-2011.html [பதிவு எண் 100]

      அப்போதெல்லாம் எனக்கு படங்களை பதிவினில் இணைக்கவே தெரியாது. என் முதல் 100 பதிவுகளில் படங்கள் ஏதுமே இல்லாமல் ‘ஏப்ரில் மே யிலே பசுமையே இல்லே’ பாட்டுப்போலவே தான் வரண்டு இருக்கும்.

      //உங்களை திருச்சி மலைக்கோட்டை தெப்ப குளத்தின் கீழ் நிற்க வைத்த என்னை நீங்கள் திருச்சி மலைக்கோட்டை மீது
      உட்காரவைத்து விட்டீர்கள். என்னே உங்கள் பெருந்தன்மை !
      நன்றி.//

      ;))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சந்தோஷம். தாங்கள் புகழின் உச்சியில் ஏற்றப்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும். அதனால் மட்டுமே அந்த உச்சிப்பிள்ளையார் என்னை இவ்வாறு செய்ய வைத்துள்ளார். You are well deserved, Sir. ;)

      நீக்கு
  10. பதில்கள்
    1. கே. பி. ஜனா... May 9, 2013 at 5:50 PM

      வாங்கோ, சார், வணக்கம்.

      //கண்டு களித்தோம். நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, சார்.

      நீக்கு
  11. விஸ்வநாத நாயக்கர் பற்றி சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற, மதுரைக்காரர் எழுதிய நூலில் படித்திருக்கிறேன்.
    நீராழி மண்டபம் என்ற உடன் எஸ் பி பி - சுசீலா பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!
    தேர்த்திருவிழா படங்களும் தேடும் குருவியும் ஜோர் ஜோர்! வண்ண மயில்களும் வாடாமலர்களும் ஜோர் ஜோர் ஜோர்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். May 9, 2013 at 5:58 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //விஸ்வநாத நாயக்கர் பற்றி சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற, மதுரைக்காரர் எழுதிய நூலில் படித்திருக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நீராழி மண்டபம் என்ற உடன் எஸ் பி பி - சுசீலா பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!//

      மிகவும் சந்தோஷம் ;)

      //தேர்த்திருவிழா படங்களும்//

      மிக்க நன்றி.

      //தேடும் குருவியும் ஜோர் ஜோர்! வண்ண மயில்களும் வாடாமலர்களும் ஜோர் ஜோர் ஜோர்!!!//

      இவை எல்லாமே நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்கள் காட்டிய கருணை மட்டுமே.

      எல்லாப்புகழும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கே ! ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஜோர் ஜோர் ஜோர் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.

      நீக்கு
  12. நேரடியாகக் கண்டு ரசிப்பதைப் போலிருந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S May 9, 2013 at 6:12 PM

      வாங்கோ திரு.. ரமணி சார், வணக்கம்.

      //நேரடியாகக் கண்டு ரசிப்பதைப் போலிருந்தது பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ரசிப்புக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      நீக்கு
  13. இசையும் தெய்வமும் இசை பட வாழும் தமிழர்களும் கொண்டாடும்
    தேர்த்திருவிழாப் படங்களும் தெப்பத் திருவிழாவும் அற்புதம்.

    இப்படித் திருவிழா செய்திகளைத் தொகுத்து வழங்கும் உங்களுக்கு,வெங்கட்,திருமதி ராஜராஜேஸ்வரி ,திருமதி கோமதி அரசு, நம் கீதா எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் May 9, 2013 at 6:34 PM

      வாங்கோ வாங்கோ .... வணக்கம்.

      //இசையும் தெய்வமும் இசை பட வாழும் தமிழர்களும் கொண்டாடும் தேர்த்திருவிழாப் படங்களும் தெப்பத்திருவிழாவும் அற்புதம்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //இப்படித் திருவிழா செய்திகளைத் தொகுத்து வழங்கும் உங்களுக்கு, வெங்கட், திருமதி ராஜராஜேஸ்வரி, திருமதி கோமதி அரசு, நம் கீதா எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.//

      சந்தோஷம். தாங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற பதிவர்களையெல்லாம் ஒப்பிடும்போது நான் தொகுத்துக்கொடுத்துள்ளது மிக மிக சொற்பமே.

      என்னுடைய மொத்தப்பதிவுகளில் 5-10% கூட ஆன்மிக விஷயங்கள் தேறாது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  14. சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி
    சேதி தெரியுமா

    கோபு அண்ணா பதிவுகள்
    ரொம்ப சூப்பர் தெரியுமா?

    சூப்பர் பதிவு பார்த்து மயங்கிப்போய்
    நீயும் வந்தியா?

    இல்ல திருவிழா பார்க்க
    நீயும் போனியா?

    சுற்றுமுற்றும் பார்த்து
    என்ன தேடற?

    பின்னூட்டங்களை எண்ண
    வந்தியா?

    எண்ணி எண்ணி முடியாமல்
    களைச்சுப் போனியா?

    கவலையில்லாமல் அண்ணன்
    வீட்டுக்குள்ள போ,

    அங்க நீ கொத்தித் தின்ன பல தினுசு
    பட்சணங்கள் காத்துக்கிடக்குது.

    திருப்தியாக தின்று விட்டு
    எங்கள் வணக்கத்தையும்,
    வாழ்த்துக்களையும்
    சொல்லிவிட்டுப் போ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. சூப்பர் கவிதை..

      ///அங்க நீ கொத்தித் தின்ன பல தினுசு
      பட்சணங்கள் காத்துக்கிடக்குது.

      திருப்தியாக தின்று விட்டு///

      நோ..நோஒ சான்ஸ்ஸ்.. மிச்சம் மீதி ஏதும் இருந்தால்தானே சிட்டுக்குருவி தின்னும்?:)).. கோபு அண்ணனைப் பார்த்தால் மிச்சம் வைப்பவர்போலவா தெரியுது?:)) ஹையோ நானில்ல நானில்ல.. என் வாய்தேன் எப்பவும் நேக்கு எதிரி:))

      நீக்கு
    2. JAYANTHI RAMANI May 9, 2013 at 10:19 PM

      வாங்கோ திருமதி ஜெயந்தி ரமணி மேடம், வாங்கோ! வணக்கம்.

      //சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா//

      மிக அழகான பாடல். ;)

      //கோபு அண்ணா பதிவுகள் ரொம்ப சூப்பர் தெரியுமா?//

      ஹைய்யோ ! ;)))))

      //சூப்பர் பதிவு பார்த்து மயங்கிப்போய் நீயும் வந்தியா?//

      ஆஹா! ”மயக்கம் என்ன .... இந்த மெளனம் என்ன .... மணி மாளிகை தான் கண்ணே!!” எனச் சிட்டுக்குருவி பாடுகிறது. ;)

      //இல்ல.... திருவிழா பார்க்க நீயும் போனியா?//

      சிட்டுக்குருவி:

      ”என்னை உங்க கோபு அண்ணா கோவையிலிருந்து திருடி வந்து, சிறை வைத்துக்கூண்டில் அடைத்து விட்டு, இப்போ தான் வெளியே அனுப்பியுள்ளாராக்கும்!”

      //சுற்றுமுற்றும் பார்த்து என்ன தேடற?//

      ”யார் யார் வந்திருக்காங்கோன்னு பட்டியலைத் தேடறேன். முக்கியமா, அடிக்கடி கடுக்காய் கொடுக்கும், இந்த ‘ஜெ’ மாமி வந்திருக்காங்களா இல்லையான்னு பார்க்கிறேனாக்கும்”

      //பின்னூட்டங்களை எண்ண வந்தியா?//

      ;))))) ”அப்படித்தான்னு வெச்சுக்கோங்கோளேன்.” ;)))))

      //எண்ணி எண்ணி முடியாமல் களைச்சுப் போனியா?//

      ”ஆமாம். களைச்சுத்தான் போனேன்ன்னு வெச்சுக்கோங்கோ”

      //கவலையில்லாமல் அண்ணன் வீட்டுக்குள்ள போ//

      ”OK OK இவ்வளவு நேரமும் அண்ணாவின் வீட்டுக்குள்ளேயே தானே நான் இருந்தேன்.”

      //அங்க நீ கொத்தித் தின்ன பல தினுசு பட்சணங்கள் காத்துக்கிடக்குது.//

      ”ஆமாம். ஆமாம். அவரின் படுக்கையையும், கட்டிலையும் சுற்றி ஏராளமான தீனி ஐட்டங்கள் தாராளமாகவே உள்ளன. ஆமாம்..... இந்தப்படுக்கை உள் பக்ஷண ரகசியம் உங்களுக்கு எப்படித்தெரியும்?” ;)

      //திருப்தியாக தின்று விட்டு எங்கள் வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் சொல்லிவிட்டுப் போ.//

      ”சரிம்மா, சரி, ’ஆகட்டும் தாயே அது போல நீங்கள் நினைச்சது நடக்கும் மனம்போலே!’ அப்படியே அவரிடம் சொல்லி விடுகிறேன்ன்ம்மா ;)))))”

      -=-=-=-=-

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாடலுடன் கூடிய கருத்துக்களுக்கும், வணக்கத்தையும், வாழ்த்துகளையும் நம் சிட்டுக்குருவி மூலம் ’சிட்டுக்குருவி லேகியம் போல உற்சாகம் தருமாறு’ எழுதியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      சூப்பரோ சூப்பர் ஐடியா ! ;))))) ஸ்பெஷல் நன்றிகள்.

      நீக்கு
    3. athira May 10, 2013 at 5:54 AM >>>>> ‘ஜெ’ மேடம்

      ஹா..ஹா..ஹா.. சூப்பர் கவிதை..

      ///அங்க நீ கொத்தித் தின்ன பல தினுசு பட்சணங்கள் காத்துக்கிடக்குது.... திருப்தியாக தின்று விட்டு///

      நோ..நோஒ சான்ஸ்ஸ்.. மிச்சம் மீதி ஏதும் இருந்தால்தானே சிட்டுக்குருவி தின்னும்?:)).. கோபு அண்ணனைப் பார்த்தால் மிச்சம் வைப்பவர்போலவா தெரியுது?:)) ஹையோ நானில்ல நானில்ல.. என் வாய்தேன் எப்பவும் நேக்கு எதிரி:)) //

      -=-=-=-=-=-=-

      பாவம் அந்தச்சிட்டுக்குருவி!

      பூனை கண்ணில் படாமல் தப்பிக்க வேண்டுமே என நினைத்துக் கவலைப்பட்டேன். ஆனாலும் இப்படி அநியாயமாக மாட்டிக்கிச்சு. ;(

      -=-=-=-=-=-=-

      ‘எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகு தான்’ அடிக்கடிச் சொல்லும் பூஸாரைப்பற்றி, மேலும் விபரங்கள் அறிய, இந்த திருமதி ஜெயந்திரமணி மேடம் விரும்பறாங்கோ.

      என் அன்புச்சகோதரி திருமதி ஜெயந்திரமணி அவர்களின் வலைத்தளம்: manammanamvisum.blogspot.in இது அதிராவின் தகவலுக்காக மட்டுமே.

      -=-=-=-=-=-=-

      அதிராவின் வலைத்தளம்: gokisha.blogspot.in “என் பக்கம்”

      ”கோகிஷா” தான். கோபாலகிருஷ்ணா இல்லை.

      அது போல அதிரா ’என் பக்கம்’ திருச்சியில் இல்லை. லண்டனில் பிரித்தானியா மஹாராணியின் பேத்தி எனக்கேள்வி. தேம்ஸ் நதிக்கரையில் பங்களாவில் இருப்பதாகவும் வயது எப்போதுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் என்றும் ஏதேதோ கதை சொல்லியுள்ளார்கள். [புருடா விட்டுள்ளார்கள்]

      இது திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின் தகவலுக்காக மட்டுமே.

      -=-=-=-=-=-

      இனி நீங்கள் இருவரும் பேசிக்கொள்ள வேண்டியது. நான் எஸ்கேப். - அன்புடன் கோபு ;)

      நீக்கு
  15. Nice pictures of the malaikkottai! We visit Trichy every year and often visit this temple too!

    The pictures are great! I love the picture of the sparrow! thank you

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sandhya May 9, 2013 at 10:36 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //Nice pictures of the malaikkottai! We visit Trichy every year and often visit this temple too! The pictures are great! I love the picture of the sparrow! thank you//

      தங்களின் அன்பான வருகைக்கும், குருவி உள்பட அனைத்துப் படங்களை ரஸித்ததாகச் சொல்லியுள்ள அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  16. By sitting at Chennai, Sir, you made me view all Ther thiruvila and theppa ther held at Trichi. Thanks a lot. Really so nice to see. (You are lucky viewing all in person)
    Nice pictures. I enjoyed every bit of the pictures Sir.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji May 9, 2013 at 10:46 PM

      வாங்கோ விஜி மேடம். வணக்கம்.

      //By sitting at Chennai, Sir, you made me view all Ther thiruvila and theppa ther held at Trichi. Thanks a lot. Really so nice to see. (You are lucky viewing all in person) Nice pictures. I enjoyed every bit of the pictures Sir.- viji//

      தங்களின் அன்பான வருகைக்கும், அனுபவித்து ஆத்மார்த்தமாகச் சொல்லியுள்ள அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  17. தெப்பக்குளக்காட்சிகள்,தேர்த்திருவிழாப்படங்கள் நன்றாக இருக்கு. அனிமேஷன் படங்கள் அழகாக இருக்கு. அதிலும் சிட்டுக்குருவி மிக நன்றாக‌ இருக்கு. யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது நீங்களோ?? முத்து ரதம் என்று தலைப்பு போட்டிருக்கீங்கோ? ஆனா முத்தைக்காணலியே அண்ணா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu May 9, 2013 at 11:41 PM

      அம்முலூஊஊஊஊ, வாங்கோ, வணக்கம்.

      //தெப்பக்குளக்காட்சிகள், தேர்த்திருவிழாப்படங்கள் நன்றாக இருக்கு.//

      மிக்க மகிழ்ச்சி அம்முலு.

      //அனிமேஷன் படங்கள் அழகாக இருக்கு. அதிலும் சிட்டுக்குருவி மிக நன்றாக‌ இருக்கு.//

      என் பதிவினில் நான் அவ்வப்போது வெளியிட்டு வரும் அனைத்து அனிமேஷன் படங்களும், நம் அன்புக்குரிய தெய்வீகப் பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாளின் உபயம் மட்டுமே. எல்லோருடைய பாராட்டுக்களும் அவர்களுக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும்.

      சந்தேகமானால் இன்று நான் காட்டியுள்ள ஒரு ஜோடி மயிலகள் அவர்களின் இன்றைய பதிவினிலும் இருக்கும் பாருங்கோ.

      இதோ இணைப்பு:

      http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_3888.html

      //யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது நீங்களோ??//

      இல்லை அம்முலு. அது நான் இல்லை. வேறு யாரோ ஒருவர்.

      //முத்து ரதம் என்று தலைப்பு போட்டிருக்கீங்கோ? ஆனா முத்தைக்காணலியே அண்ணா!?//

      என் பதிவுகளுக்குப் பின்னூட்டம் தந்துவரும் அனைவருமே முத்துக்கள் தான் அம்முலு.

      எண்ணிக்கையில் அம்முலு 17வது முத்தாக்கும். ;)))))))))))))))))

      முத்தான முத்தல்லவோ.... முதிர்ந்து வந்த முத்தல்லவோ ..
      கட்டான மலரல்லவோ .... கடவுள் தந்த பொருளல்லவோ ! ;)

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நியாயமான கேள்விகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், அம்முலு.

      நீக்கு
  18. தேர்திருவிழா, தெப்பக்குளம் கண்கொள்ளா காட்சிகள். மலைக்கோட்டை அழகை பார்க்க பார்க்க நேரில் திருச்சி வரனும்னு தோணுது. சிட்டுக்குருவி படமும் சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு May 10, 2013 at 12:48 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //தேர்திருவிழா, தெப்பக்குளம் கண்கொள்ளா காட்சிகள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //மலைக்கோட்டை அழகை பார்க்க பார்க்க நேரில் திருச்சி வரணும்னு தோணுது.//

      வேலூர் கோட்டையின் வருகைக்காக மலைக்கோட்டை மாநகரமே தவமாய்த் தவமிருந்து காத்துக்கிடக்கிறது. ;)))))

      //சிட்டுக்குருவி படமும் சூப்பர்!//

      தாங்கள் எனக்களித்த ’பின்னூட்டப்புயல்’ என்ற பட்டத்தினைச் சிறப்பித்து அவர்களால் கொடுக்கப்பட்டுள்ள அன்புப்பரிசாக்கும் இந்தச்சிட்டுக்குருவி. ;)))))

      -=-=-=-=-

      25.12.2012 வலைச்சர ஆசிரியராக இருந்த தாங்கள் சொல்லியுள்ள கருத்துக்களை நினைவூட்ட விரும்புகிறேன்:

      Ref: http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_7102.html

      1) இராஜராஜேஸ்வரி

      வலைத்தளம்: “மணிராஜ்” தினம் ஒரு பதிவுக்குக் குறையாமல் மிகச்சிறந்த படங்களுடன் ஆன்மிக விஷயங்களை அள்ளித்தரும் பதிவர் 705 நாட்களுக்குள் 768 பதிவுகளுக்கு மேல் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

      இவரின் பெரும்பாலான பதிவுகளில் நம் பதிவுலகின் பின்னூட்டப்புயலான வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் ஏராளமான கருத்துக்களை தாராளமாகக் காணமுடிகிறது. ஏற்கனவே தங்கமாக ஜொலிக்கும் இந்தப் பதிவரின் பதிவுகள், வை.கோ ஐயாவின் பல்வேறு கருத்துக்களால் வைரமாக ஜொலிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.

      அன்பென்ற மழையிலே
      http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_24.html

      கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்
      http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_25.html

      -=-=-=-=-=-

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான + அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  19. திருச்சி தெப்போற்சவத்தைவும் தேர்த்திருவிழாவையும் அழகாகக் கண்முன் காட்டிய படங்கள்! தெப்பக்குளம் மற்றும் நீராழி மண்டபம் பற்றிய செய்திகள் புதியவையாகவும் வியப்பளிப்பனவாகவும் உள்ளன. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

    அழிந்துவரும் சிட்டுக்குருவியை இங்கே துறுதுறுவென்று காண மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. நன்றியும் பாராட்டும் தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி May 10, 2013 at 1:09 AM

      வாங்கோ, வணக்கம்.

      //திருச்சி தெப்போற்சவத்தைவும் தேர்த்திருவிழாவையும் அழகாகக் கண்முன் காட்டிய படங்கள்! தெப்பக்குளம் மற்றும் நீராழி மண்டபம் பற்றிய செய்திகள் புதியவையாகவும் வியப்பளிப்பனவாகவும் உள்ளன. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார். //

      மிக்க மகிழ்ச்சி மேடம்.

      //அழிந்துவரும் சிட்டுக்குருவியை இங்கே துறுதுறுவென்று காண மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. நன்றியும் பாராட்டும் தங்களுக்கு.//

      துறுதுறுவென்று இங்கு தோன்றும் ’சிட்டுக்குருவி’ சம்பந்தமான எல்லாப்புகழும், சுறுசுறுப்புக்குப்பேர்போன நம் அன்புக்குரிய பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கே.!

      சிட்டுக்குருவிக்கான தங்களின் நன்றியும் பாராட்டும் அவர்களையே சேரட்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், மன மகிழ்ச்சியில் துள்ளி எழுதியுள்ள அழகான + அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  20. கோவில் உத்சவங்களில் எனக்கு மிகவும் பிடித்த உத்சவம் இந்த தெப்பத் திருவிழா. போன வருடம் ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா சேவித்தோம் இன்று இந்த வருடம் நீங்கள் தாயுமானவ ஸ்வாமி தெப்பத் திரு விழா காட்சிகளை புகைபடமாகப் போட்டு புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
    அடுத்ததாக பிள்ளையார் தேர், மட்டுவார்குழலி அம்மையின் தேர், தாயுமானவ சுவாமியின் தேர் படங்கள் கண்ணைக் கட்டி நிறுத்துகின்றன.
    அங்கும் இங்கும் பார்க்கும் சிட்டுக் குருவி 'அதை பார்த்தியா? இதை பார்த்தியா? கோபு ஸார் போட்டிருக்கும் படங்களை என்று கேட்பதுபோல இருக்கிறது.

    அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan May 10, 2013 at 1:22 AM

      வாங்கோ, வணக்கம்.

      //கோவில் உத்சவங்களில் எனக்கு மிகவும் பிடித்த உத்சவம் இந்த தெப்பத் திருவிழா. போன வருடம் ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா சேவித்தோம் இன்று இந்த வருடம் நீங்கள் தாயுமானவ ஸ்வாமி தெப்பத் திரு விழா காட்சிகளை புகைபடமாகப் போட்டு புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். //

      மிக்க மகிழ்ச்சி.

      //அடுத்ததாக பிள்ளையார் தேர், மட்டுவார்குழலி அம்மையின் தேர், தாயுமானவ சுவாமியின் தேர் படங்கள் கண்ணைக் கட்டி நிறுத்துகின்றன. //

      ரொம்பவும் சந்தோஷம்.

      //அங்கும் இங்கும் பார்க்கும் சிட்டுக் குருவி 'அதை பார்த்தியா? இதை பார்த்தியா? கோபு ஸார் போட்டிருக்கும் படங்களை என்று கேட்பதுபோல இருக்கிறது.//

      சிட்டுக்குருவிக்கான தங்களின் இந்தப்பாராட்டுக்களை, அந்தச்சிட்டுக்குருவியை எனக்குப் பிடித்துக்கொடுத்து உதவியுள்ள பதிவருக்கு இதன் மூலம் சேர்த்துக்கொள்கிறேன்.

      //அருமை! வாழ்த்துக்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அருமையான வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  21. தெப்பக் குளமும் கண்டேன்,சுற்றி தேரோடும் வீதி கண்டேன்.
    தேவாதி தேவனையும் தேடிக் கண்டு கொண்டேன். அழகான காட்சிகள். நேரில் பார்க்கப் போக முடியாவிட்டாலும், அழகாகப் பார்க்க முடிந்ததில் ஒரு திருப்தி. நன்றி. அழகான போட்டோக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi May 10, 2013 at 1:45 AM

      வாங்கோ காமாக்ஷி மாமி, வாங்கோ வணக்கம் + நமஸ்காரங்கள்.
      ]
      //தெப்பக் குளமும் கண்டேன்,சுற்றி தேரோடும் வீதி கண்டேன்.
      தேவாதி தேவனையும் தேடிக் கண்டு கொண்டேன். அழகான காட்சிகள். நேரில் பார்க்கப் போக முடியாவிட்டாலும், அழகாகப் பார்க்க முடிந்ததில் ஒரு திருப்தி. நன்றி. அழகான போட்டோக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான திருப்தியான கருத்துக்களுக்கும் என் மன்மார்ந்த இனிய நன்றிகள், மாமி.

      நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  22. ஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்ன்ன்.. ஜஸ்ட்டு மிஸ்ட்டாகிட்டுது:) என்ன ? எது? எண்டெல்லாம் ஆரும் கேள்விகேட்டு என்னை பொல்லாதவர் ஆக்கிடக்கூடா சொல்லிட்டேன்ன்:))...

    ஆஹா கோபு அண்ணன் எப்போ கமெராமான் ஆனார்ர்?.. இன்று ஒரே படம் படமாப் போட்டுக் கலக்குறார்ர்..:) அதிராவின் படம் போட்டு பதிவை ஓட்டும் ரகசிய வித்தையைக் கற்றுக் கொண்டார்போலும்:) எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:) சின்ஸ் சிக் ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 10, 2013 at 4:00 AM

      வாங்கோ அதிரா, வாங்கோ, வணக்கம்.

      //ஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்ன்ன்.. ஜஸ்ட்டு மிஸ்ட்டாகிட்டுது:) என்ன ? எது? எண்டெல்லாம் ஆரும் கேள்விகேட்டு என்னை பொல்லாதவர் ஆக்கிடக்கூடா சொல்லிட்டேன்ன்:))...//

      சரி, என்ன? ஏது? எண்டெல்லாம் ஆரும் கேள்விகேட்டு உங்களைப் பொல்லாதவர் ஆக்கிட மாட்டாங்கோ.

      பேசாமல் நீங்களே என்ன? ஏது? எண்டு சொல்லிடுங்கோ ! ;)

      //ஆஹா கோபு அண்ணன் எப்போ கமெராமான் ஆனார்ர்?.. இன்று ஒரே படம் படமாப் போட்டுக் கலக்குறார்ர்..:) அதிராவின் படம் போட்டு பதிவை ஓட்டும் ரகசிய வித்தையைக் கற்றுக் கொண்டார்போலும்:) //

      அதே அதே !! சபாபதே !!! அதிரபதே !!!!

      //எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:) சின்ஸ் சிக் ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:)).//

      இதைக்கேட்டுக்கேட்டு காது புளித்துப்போய் விட்டதாக சிலர் பேசிக்கொள்கிறார்கள். அது நான் இல்லை. வேறு யாரோ. உங்க சினேகிதிகள் தான். ஆனால் என் காதில் நன்றாக விழுகிறதூஊஊஊ. ;) எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்..

      நீக்கு
  23. தெப்பங் குளமும் திருவிளாவும் சூப்பர்ர்.. மின் விளக்குகளில் தெப்பைக் குளம் பளபளக்குது. எடுத்த விதமும் நன்றாக இருக்கு.இது வருடம் ஒரு முறையா? மாதம் ஒரு முறையா? இல்ல ஒவ்வொரு திங்களும் நடக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 10, 2013 at 4:01 AM

      //தெப்பங் குளமும் திருவிழாவும் சூப்பர்ர்.. மின் விளக்குகளில் தெப்பக் குளம் பளபளக்குது. எடுத்த விதமும் நன்றாக இருக்கு.//

      மிக்க மகிழ்ச்சி, அதிரா.

      //இது வருடம் ஒரு முறையா? மாதம் ஒரு முறையா? இல்ல ஒவ்வொரு திங்களும் நடக்குமோ?//

      தெப்பம் வருஷம் ஒரு முறை மட்டுமே பங்குனி மாதம் [அதாவது மார்ச் 13 முதல் ஏப்ரில் 16 க்குள்] நடைபெறும்.

      அதுபோல தேர்த்திருவிழா வருஷம் ஒரு முறை மட்டுமே, சித்திரை மாதம் [அதாவது ஏப்ரில் 12 முதல் மே 16க்குள்] நடைபெறும்.

      நீக்கு
  24. //காது கொடுத்துக் கேட்டேன் .....
    ஆஹா ........ குவா குவா சப்தம்!// நிஜமாவோ?:) மீயும் காதை நன்கு கொடுத்து இந்த பக்கத்தை பெரிசா ஓபின் பண்ணி வச்சு, மைக்கை பெரிய சத்தமாக ஓன் பண்ணியும் .. எந்தச் சத்தமும் கேட்கலியேஏஏஏஏஏஏஏஏஏஏஏ :))). ஏதோ சதி நடக்குதுபோலும்.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 10, 2013 at 4:04 AM

      //காது கொடுத்துக் கேட்டேன் .....
      ஆஹா ........ குவா குவா சப்தம்!//

      நிஜமாவோ?:)

      எம்.ஜி. ஆரே பாடியிருக்கிறார். பொய்யாக இருக்க முடியாதூஊ.;)

      //மீயும் காதை நன்கு கொடுத்து இந்த பக்கத்தை பெரிசா ஓபின் பண்ணி வச்சு, மைக்கை பெரிய சத்தமாக ஓன் பண்ணியும் .. எந்தச் சத்தமும் கேட்கலியேஏஏஏஏஏஏஏஏஏஏஏ :))).//

      அப்படியா, காது ஏதாவது ரிப்பேரா இருக்குமோ. எதற்கு ஒரு ENT Specialist இடம் Check-up க்குப்போய் வாருங்கோ.

      நான் இதைச்சொல்வதாவது உங்கள் காதில் விழுகிறதாஆஆஆஆஆஆ?

      சுத்தமாகக் கேட்கவில்லை போலிருக்கிறது ..... பாவம் அதிரா! ;)

      //ஏதோ சதி நடக்குதுபோலும்.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)//

      இதெல்லாம் சதி பதி வேலைகள் மட்டுமே. அதனால் அந்த சதி பதி ஜோடி இருவரால் மட்டுமே இந்த சப்தத்தை உணர முடியும், அதிரா. நமக்கு எதற்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்.;)

      நீக்கு
  25. அம்பாள் தேர் கொள்ளை அழகு, மிகவும் உயரமாக இருக்கிறது. எனக்கொரு கேள்வி கோபு அண்ணன், நீங்கள் எப்பவாவது இப்படி பெரிய தேரில் ஏறி இருந்ததுண்டா? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது. ஊரில் சிலநேரம் தேர் ஆடி அசைந்து வரும்போது.. அதில் இருக்கும் ஐயரை நினைபேன் பயமில்லாமல் இருக்குமோ.. இல்ல பயமாக இருக்குமோ என.. ஏனெனில் உயரமான தேர்கள் பார்க்க சரிந்திடுமோ எனப் பயமாகவும் இருக்கும்(எமக்கு).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 10, 2013 at 4:07 AM

      //அம்பாள் தேர் கொள்ளை அழகு, மிகவும் உயரமாக இருக்கிறது.//

      சந்தோஷம்.

      //எனக்கொரு கேள்வி கோபு அண்ணன், நீங்கள் எப்பவாவது இப்படி பெரிய தேரில் ஏறி இருந்ததுண்டா? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது.//

      இல்லை அதிரா. நான் இதுவரை தேரில் எல்லாம் ஏறி அமர்ந்தது கிடையாது. தெப்பத்தில் ஏறி மிதந்து செல்ல எவ்வளவோ முறை எனக்கு ஸ்பெஷல் அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் அதையும் நான் பயன் படுத்திக்கொள்ளவில்லை.

      //ஊரில் சிலநேரம் தேர் ஆடி அசைந்து வரும்போது.. அதில் இருக்கும் ஐயரை நினைபேன் பயமில்லாமல் இருக்குமோ.. இல்ல பயமாக இருக்குமோ என.. ஏனெனில் உயரமான தேர்கள் பார்க்க சரிந்திடுமோ எனப் பயமாகவும் இருக்கும்(எமக்கு).//

      தேர் ’நிறை மாத கர்ப்பணி போல’ ஆடி அசைந்து வரும் தான். அதில் நிறைய ரிஸ்க் உண்டு தான். அதனால் தான் கர்ப்பணிப்பெண்கள் தேரைப்பார்க்க வேண்டாம், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எங்கள் பக்கத்துப்பெரியவர்கள் சொல்லுவார்கள்.

      அதுபோல சூரிய கிரஹணம் நடைபெறும் போது, மாதமாக இருக்கும் கர்ப்பணிப்பெண்கள், ஓர் இருட்டு அறையில் தான் இருக்க வேண்டும். சுத்தமாக வெளி வெளிச்சத்தையே துளியும் அவர்கள் பார்க்கக்கூடாது என்றும் சொல்லுவார்கள்.

      நீக்கு
  26. ///மிக்க மகிழ்ச்சி அம்முலு.

    //அனிமேஷன் படங்கள் அழகாக இருக்கு. அதிலும் சிட்டுக்குருவி மிக நன்றாக‌ இருக்கு.//

    என் பதிவினில் நான் அவ்வப்போது வெளியிட்டு வரும் அனைத்து அனிமேஷன் படங்களும், நம் அன்புக்குரிய தெய்வீகப் பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாளின் உபயம் மட்டுமே. எல்லோருடைய பாராட்டுக்களும் அவர்களுக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும்.///// மீயும் படிச்சிட்டேன்ன் பூஸோ கொக்கோ..:)..



    ராஜேஸ்வரி அக்கா.. ராஜேஸ்வரி அக்கா... குருவிப் படம் சூப்பரோ சூப்பர்ர். இரு ஆண்மயில்களும் அழகு... அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 10, 2013 at 4:10 AM

      *****என் பதிவினில் நான் அவ்வப்போது வெளியிட்டு வரும் அனைத்து அனிமேஷன் படங்களும், நம் அன்புக்குரிய தெய்வீகப் பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாளின் உபயம் மட்டுமே. எல்லோருடைய பாராட்டுக்களும் அவர்களுக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும்.*****

      //மீயும் படிச்சிட்டேன்ன் பூஸோ கொக்கோ..:)..//

      ;))))) பூஸ் என்றால் பூஸ் அல்லது கொக் என்றால் கொக்கு. எதுவோ நீங்க என்ன சொல்றீங்களோ அதுவே தான் அதிரா.

      -=-=-=-=-

      //ராஜேஸ்வரி அக்கா.. ராஜேஸ்வரி அக்கா... குருவிப் படம் சூப்பரோ சூப்பர்ர். இரு ஆண்மயில்களும் அழகு... அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.//

      அக்காவைப் பாராட்டி வாழ்த்தியுள்ள அதிராவும் வாழ்க! வாழ்க!!

      அக்காவுக்கு ஜே ! அதிராவுக்கும் ஜே !

      -=-=-=-=-=-

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.

      நீக்கு
  27. அருமையான படங்களுடன் தெப்பத் திருவிழா - தேர்த் திருவிழா - விளக்கங்களுடன் கூடிய பதிவு . அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் May 10, 2013 at 6:00 AM

      வாருங்கள், வணக்கம் ஐயா.

      //அருமையான படங்களுடன் தெப்பத் திருவிழா - தேர்த் திருவிழா - விளக்கங்களுடன் கூடிய பதிவு . அருமை//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  28. தேரில் வந்த தெய்வங்களை நேரில் காட்சிதரவைத்த சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துகள்... தெப்பத் திருவிழா, தேர்த் திருவிழா அருமையான படங்களுடன் அற்புதம் ஐயா ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VijiParthiban May 10, 2013 at 6:07 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தேரில் வந்த தெய்வங்களை நேரில் காட்சிதரவைத்த சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துகள்... தெப்பத் திருவிழா, தேர்த் திருவிழா அருமையான படங்களுடன் அற்புதம் ஐயா ....//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, அற்புதமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்

      நீக்கு
  29. தெப்பக்குளக்காட்சியும் தகவலும் மிகவும் அருமை .நேரில் பார்க்க முடியாத காட்சிகளை எங்களுடன் பகிர்ந்தற்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் May 10, 2013 at 6:15 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //தெப்பக்குளக்காட்சியும் தகவலும் மிகவும் அருமை .நேரில் பார்க்க முடியாத காட்சிகளை எங்களுடன் பகிர்ந்தற்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, அருமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  30. தெப்பத்திருவிழா, முத்துரதங்களின் ஊர்வலங்கள் கண்டு களிப்புற்றோம்.

    யானையார்,சிட்டுக்குருவி,மயிலு, என்னைப்பார் என்அழகைப்பார் என அசைந்தாடி நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி May 10, 2013 at 6:26 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தெப்பத்திருவிழா, முத்துரதங்களின் ஊர்வலங்கள் கண்டு களிப்புற்றோம்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //யானையார், சிட்டுக்குருவி, மயிலு, என்னைப்பார் என் அழகைப்பார் என அசைந்தாடி நிற்கின்றன.//

      யானையார் தவிர, சிட்டுக்குருவி + மயில்கள் பதிவிட உதவியவர் நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்.

      அதனால், எல்லப்புகழும் அவர்களுக்கே!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.




      நீக்கு
  31. theru thiruvizha pictures miga supera irruku. Enga ooru nagapattinam thula kooda varum sunday theru thiruvizha nadai pera ulladhu. I am missing it this year, I am so happy Iam seeing malakotai theru thiruvizha...
    Thank you very much for sharing...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Priya Anandakumar May 10, 2013 at 8:38 AM

      வாங்கோ, வணக்கம்.

      //theru thiruvizha pictures miga supera irruku. Enga ooru nagapattinam thula kooda varum sunday theru thiruvizha nadai pera ulladhu. I am missing it this year, I am so happy Iam seeing malakotai theru thiruvizha... Thank you very much for sharing...தேர் திருவிழாப் படங்கள் மிகவும் சூப்பராக இருக்கு. எங்க ஊர் நாகப்பட்டினத்தில் கூட வரும் ஞாயிறு தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நான் அதைப்பார்க்க முடியாமல் உள்ளது. ம்லைக்கோட்டை தேர்த்திருவிழாவையாவது பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.//

      தங்களின் ’பிரிய’மான வருகைக்கும், ’ஆனந்த [குமார்’] மான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  32. காணக்கிடைக்காத அழகான புகைப்படங்கள்,இதுவரை மலைக்கோட்டை தேர்த்திருவிழாவை பார்த்ததில்லை,அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டீர்கள்,மிக்க நன்றி ஐயா!!

    தலைப்பார்த்ததும் சினிமா பாடல் நினைவுக்கு வருது,ஆனா முழுமையாக தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள மேனகா, வாங்கோ, வணக்கம்.

      //காணக்கிடைக்காத அழகான புகைப்படங்கள்,இதுவரை மலைக்கோட்டை தேர்த்திருவிழாவை பார்த்ததில்லை,அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டீர்கள்,மிக்க நன்றி ஐயா!!//

      மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம்.

      //தலைப்பைப் பார்த்ததும் சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது. ஆனால் முழுமையாகத் தெரியவில்லை...//

      1970ல் வெளிவந்த சிவாஜி, கே.ஆர்.விஜயா நடித்த “ராமன் எத்தனை ராமனடி” என்ற படத்தில் வரும் அழகான பாடல்.

      பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
      இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
      பாடியவர்: பி. சுசிலா

      படிக்காத சாப்பாட்டு ராமனாக கிராமத்தில் வாழும் சிவாஜியை, படித்து பெரிய ஆளாக மாறி, கை நிறைய பல லட்சங்கள் பணம் சம்பாதித்து வந்தால் மட்டுமே, பணக்கார பண்ணையார் மகளான கே. ஆர். விஜயாவைக் கட்டிக்கொடுக்க முடியும் என்று சொல்லி, மாட்டை அடிப்பதுபோல அடிஅடியென அடித்துத் துரத்தி விடுவார்கள், பண்ணையாரின் ஆட்கள்.

      அதையே ஒரு சவாலாக ஏற்று, பட்டணத்துக்குப்போய், பலவேலைகள் செய்து கஷ்டப்பட்டபின், சினிமாவில் நடிகராகச் சேர்ந்து ‘நடிகர் திலகம்’ ஆகி கோடிக்கணக்கணக்கான பணம் சம்பாதித்து, கே. ஆர். விஜயாவின் நினைவாகவே பட்டணத்திலிருந்து அதே கிராமத்திற்கு இரயிலில் வருவார் சிவாஜி.

      அப்போது இரயிலில் கே.ஆர்.விஜயா சிவாஜிக்கு மாலைபோட்டு பாடுவது போன்ற கனவுக்காட்சி பாடல் இது.

      இதோ இதில் கேட்டு ரஸியுங்கள்:

      http://www.youtube.com/watch?v=w02bYPyi2rs

      [ஆனால் இதற்கிடையே. சிவாஜி ஒருமுகமாகக் காதலித்துள்ள கே.ஆர். விஜயாவுக்கும், ஏழையான முத்துராமனுக்கும் திருமணம் ஆகி ஓர் பெண் குழந்தையே பிறந்திருக்கும்.

      சந்தர்ப்பவசத்தால் அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருப்பார்கள்.

      மிகவும் அருமையான கதை.

      அந்தக்காலக்கட்டத்தில் [என் வயது அப்போது: 20 மட்டுமே] தீவிர சிவாஜி ரஸிகரான நான் இந்தப்படத்தை பலமுறை விரும்பிப் பார்த்துள்ளேன்.

      மற்றவைகளை வெள்ளித்திரையில் காண்க] .

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேனகா.

      நீக்கு
  33. புகைப்படங்கள் யாவும் அழகு! மலைக்கோட்டையின் முன்னால் நீங்கள் நிற்கும் புகைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கு நன்றி
      எனக்கல்ல
      VGK அவர்களுக்குதான்

      நீக்கு
    2. மனோ சாமிநாதன் May 10, 2013 at 11:43 AM

      வாங்கோ, வணக்கம்.

      //புகைப்படங்கள் யாவும் அழகு!//

      மிகவும் சந்தோஷம்

      //மலைக்கோட்டையின் முன்னால் நீங்கள் நிற்கும் புகைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது!!//

      மிக்க மகிழ்ச்சி மேடம்.

      அது என் மீது அளவுகடந்த பிரியம் வைத்துள்ள திரு. பட்டாபிராமன் என்ற சகோதரர் செய்து அனுப்பியுள்ள தொழில்நுட்ப வேலை, மேடம்.

      அதற்கான புகைப்படமும் அவர் என்னிடம் கேட்கவே இல்லை.

      http://gopu1949.blogspot.in/2011/07/4.html என்ற என்னுடைய பதிவிலிருந்து எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.

      அதிலும் என் வலது கை மட்டுமே காட்சியளிக்கிறது. இடது கையை எங்கிருந்து பிடித்து, எப்படிக்கொண்டுவந்து இப்படிச்செய்தார் என்பது சற்றே வியப்பாகத்தான் உள்ளது.

      நானும் யோசித்து யோசித்து என் மண்டை காய்ந்தது தான் மிச்சம்.

      எல்லாம் கணினி தொழில்நுட்ப வேலைகளால் எது வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறது.

      சற்றே பயமாகவும் உள்ளது ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    3. Pattabi Raman May 10, 2013 at 10:00 PM

      //பாராட்டிற்கு நன்றி. எனக்கல்ல.VGK அவர்களுக்குதான்.//

      தங்களின் தன்னடக்கம் வியப்பளிக்கிறது. ;)))))

      நீக்கு
  34. அருமையான தலைப்பு! அதற்கேற்ப அருமையான படங்கள்! சிட்டுக்குருவி சிந்தை கவர்ந்தது! காணாமற்போகும் நீர்நிலைகளைப் போலன்றி கண்கவரும் வண்ணம் காட்சியளிக்கும் தெப்பக்குளம் ஓர் அதிசயம்தான்! பட்டாபி சாரின் கைவண்ணம் அசத்தல்! நல்லதொரு பகிர்விற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s.May 10, 2013 at 6:23 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //அருமையான தலைப்பு! அதற்கேற்ப அருமையான படங்கள்!//

      மிக்க மகிழ்ச்சி.

      //சிட்டுக்குருவி சிந்தை கவர்ந்தது!//

      நம் சிந்தையைக் கவர்ந்துள்ள சிட்டுக்குருவியினைப் பிடித்து எனக்கு அளித்துள்ளவர்களுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

      //காணாமற்போகும் நீர்நிலைகளைப் போலன்றி கண்கவரும் வண்ணம் காட்சியளிக்கும் தெப்பக்குளம் ஓர் அதிசயம்தான்!//

      ஆம். திருச்சி டவுன் தெப்பக்குளத்தையும், அந்தத் தெப்பக்குளத்தினில் நீரையும் பார்க்க மனதுக்கு ஒரே மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அதிசயம் ஆனால் உண்மை.

      //பட்டாபி சாரின் கைவண்ணம் அசத்தல்!//

      திரு. பட்டாபிராமன் சாருக்கு நன்றிகள்.

      //நல்லதொரு பகிர்விற்கு மிக்க நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  35. திருச்சி மலைக்கோட்டை விநாயகரை நினைக்கும் போது இனி வை,கோபாலகிருஷ்ணன் சாரும் மனகண்ணில் தோன்றுவார்.
    பாட்டாபி சாருக்கு நன்றி வாழ்த்துக்கள்.
    முன்பே திருச்சி என்றதும் சார்தான் நினைவுக்கு வருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு May 10, 2013 at 7:38 PM

      வாங்கோ மேடம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்வளிக்கிறது.

      //திருச்சி மலைக்கோட்டை விநாயகரை நினைக்கும் போது இனி வை,கோபாலகிருஷ்ணன் சாரும் மனகண்ணில் தோன்றுவார். முன்பே திருச்சி என்றதும் சார்தான் நினைவுக்கு வருவார்.//

      ஆஹா, அப்படியா! இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //பாட்டாபி சாருக்கு நன்றி வாழ்த்துக்கள்.//

      திரு. பட்டாபிராமன் அவர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துகளையும் உங்களுடன் கூடவே நானும் இங்கு மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      மிக்க மகிழ்ச்சி + நன்றிகள் மேடம்.

      நீக்கு
  36. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமிகள் கோயிலின் தெப்பத் திருவிழா மற்றும் சித்திரைத் தேர்விழா பற்றிய படங்களும் கட்டுரையும் சிறப்பாக உள்ளன.

    திருச்சி தெப்பக்குளம் முன்னர் நீங்கள் இருக்கும் வண்ணப்படம் அருமை. இதனை வடிவமைத்த திரு பட்டாபிராமன் அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ May 10, 2013 at 11:11 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமிகள் கோயிலின் தெப்பத் திருவிழா மற்றும் சித்திரைத் தேர்விழா பற்றிய படங்களும் கட்டுரையும் சிறப்பாக உள்ளன. //

      மிக்க மகிழ்ச்சி, ஐயா.

      //திருச்சி தெப்பக்குளம் முன்னர் நீங்கள் இருக்கும் வண்ணப்படம் அருமை. இதனை வடிவமைத்த திரு பட்டாபிராமன் அவர்களுக்கு நன்றி!//

      சந்தோஷம் ஐயா.

      திரு. பட்டாபிராமன் அவர்களுக்கு என் நன்றிகளையும் உங்களுடன் கூடவே நானும் இங்கு மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  37. super sir.. i enjoyed your likes.. trichy ku poittu vantha mathiri irukku... en oora romba miss pandrean.. and again i started bloging uncle... need your support.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Riya May 10, 2013 at 11:28 PM

      அன்புள்ள ரியா, வாங்கோ, வணக்கம்.

      சுமார் எட்டு முழு மாதங்களுக்குப்பிறகு தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. WELCOME TO YOU !

      //super sir.. i enjoyed your likes.. trichy ku poittu vantha mathiri irukku... en oora romba miss pandrean.. and again i started bloging uncle... need your support.. :)//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், மீண்டும் வலைப்பதிவுப்பக்கம் வந்துள்ளதாகச் சொல்வதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      ஒருசில கணினி தொழில் நுட்பக்கோளாறுகளால் என் டேஷ் போர்டில் தெரியவேண்டிய பிறரின் புது வெளியீடுகள் எனக்கு பெரும்பாலான நேரங்களில் தெரியாமல் உள்ளது.

      எனவே புதிய வெளியீடுகள் ஏதாவது தாங்கள் கொடுக்கும்போது எனக்கு மெயில் மூலம் லிங்க் அனுப்பி வைத்தால் நல்லது. என் மெயில் ID : valambal@gmail.com

      அன்புடன் கோபு

      நீக்கு
  38. உங்கள் பதிவில் திருச்சி தெப்பகுளம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், தெப்பத் திருவிழா வண்ணப்படங்கள் பார்த்ததும் பழைய நினைவுகள்தான் ஞாபகம் வந்தன.தெப்பம் தொடங்குவதற்கு முன்பு ஒரு அதிர்வேட்டு போடுவார்கள். பெரும்பாலும் வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் முக்கிலும், தெப்பக்குளத்தின் தெற்குக் கரையிலும் கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கும். எனது அப்பா, அவரது தோளில் என்னை வைத்து, எனக்கு தெப்பஉற்சவத்தை காட்டிய நாள் ஞாபகம் உள்ளது.

    முன்பு தெப்பக்குளம் சுற்றுச் சுவர்கள் உயரமாக இருக்கும். சுற்றிலுமுள்ள சாலைகள் அடிமட்டத்தில் இருக்கும். இப்போதுள்ள பர்மாபஜார் கடைகள் அப்போது கிடையாது. தெப்பகுளத்தின் மேற்கிலிருந்து பார்க்கும் போது மலைக்கோட்டையும் தெப்பகுளமும் சேர்ந்து அழகான காட்சி கிடைக்கும். அதேபோல் கிழக்கிலிருந்து பார்க்கும்போது தெப்பக் குளமும் எதிரில் உள்ள லூர்துமாதா ஆலயமும் இணைந்து நல்லிணக்கத்தைக் காட்டும். இப்போது ரோடுமேல் ரோடுபோட்டு சுற்றுச் சுவர்கள் உயரம் குறைந்து விட்டன. மேலும் இங்கும் அங்கும் போஸ்ட் கம்பங்கள், ஒயர்கள், குப்பைகள் என்று தெப்பக்குளம் அழகையே குறைத்து விட்டன.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ May 11, 2013 at 1:49 AM

      வாருங்கள் ஐயா. தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //உங்கள் பதிவில் திருச்சி தெப்பகுளம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், தெப்பத் திருவிழா வண்ணப்படங்கள் பார்த்ததும் பழைய நினைவுகள்தான் ஞாபகம் வந்தன.தெப்பம் தொடங்குவதற்கு முன்பு ஒரு அதிர்வேட்டு போடுவார்கள்.//

      இப்போதும் அதிர்வேட்டு போடுகிறார்கள் ஐயா. மொத்தம் 3 சுற்று. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு கார்னரில் தெப்பம் திரும்பும் போதும், முதன் முதலாக தெற்குக்கரையோரமிருந்து தெப்பம் புறப்படும் போதும், கடைசியாக தெற்குக்கரைக்கு தெப்பம் வந்தடைந்து பூர்த்தியாகும் போதும் அதிர்வேட்டு போடுகிறார்கள். மொத்தமாக ஒரு 14 அல்லது 15 தடவை, அதிர்வேட்டு போட்டு ஜனங்களுக்கு அறிவிக்கிறார்கள். அது சமயத்தில் என் வீடு வரைகூட சப்தம் கேட்பதுண்டு.

      >>>>>>

      நீக்கு
    2. VGK >>>> திரு, தமிழ் இளங்கோ ஐயா [2]

      //பெரும்பாலும் வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் முக்கிலும், தெப்பக்குளத்தின் தெற்குக் கரையிலும் கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கும்.//

      ஆமாம் இப்போதும் அங்கு தான் கூட்ட நெரிசல் அதிகம்.
      அதற்குக்காரணம் [1] தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள நான்கு ரோடுகளில் தெற்குக்கரையிலிருந்து தான் தெப்பம் புறப்பாடு நடைபெறுகிறது. [2] அந்த மிகச்சிறிய சந்தினில் 3 சக்கர + 4 சக்கர வாகனங்கள் ஏதும் செல்லமுடியாது. அவ்வளவு குறுகளான சந்தாக அது உள்ளது. [3] தெப்பம் நடைபெறும் நாளில் 2 சக்கர வாகனங்களும் அந்த சந்தில் செல்ல முடியாதபடி தடை செய்து விடுகிறார்கள்.

      அதனால் மக்கள் கூட்டம் வாகன பயம் ஏதும் இல்லாமல் இந்தத்தெற்குக்கரையோரம் கூடிவிடுகிறது.

      //எனது அப்பா, அவரது தோளில் என்னை வைத்து, எனக்கு தெப்பஉற்சவத்தை காட்டிய நாள் ஞாபகம் உள்ளது. //

      இனிய நினைவலைகள். நான் என் பிள்ளைகளை அதுபோல தோளில் தூக்கிச்சென்று தெப்ப உற்சவத்தை பலமுறை காட்டியுள்ளேன். ஒரே ஒருமுறை பேரன் பேத்தியையும் அதே போல தோளில் சுமந்துகொண்டு காட்டியுள்ளேன்.

      இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டதாலும், வெளியூர் வெளிநாடுகளில் இருப்பதாலும், நமக்கும் அவர்களை சுமக்க இனி தெம்பில்லாமல் போய்விட்டதாலும், பழைய நினைவுகளை அசைபோடுவதோடு சரி. ;)

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>> திரு, தமிழ் இளங்கோ ஐயா [3]

      //முன்பு தெப்பக்குளம் சுற்றுச் சுவர்கள் உயரமாக இருக்கும். சுற்றிலுமுள்ள சாலைகள் அடிமட்டத்தில் இருக்கும். //

      ஆமாம். நினைவுள்ளது.

      //இப்போதுள்ள பர்மாபஜார் கடைகள் அப்போது கிடையாது.//

      அதுவும் எனக்கு நினைவுள்ளது. 16-20 வயது வரை, நைட் ஷோ சினிமா பார்த்து விட்டு [நள்ளிரவு 1 மணி 2 மணிக்கு] இப்போது பர்மா பஜார் உள்ள ரோட்டின் வழியாகத்தான் வீட்டுக்கு வருவேன். ரோட்டில் ஈ காக்கா இருக்காது.

      சமயத்தில் நண்பர்கள் யாரும் இல்லாமல் தனியாக வரும்போது எனக்கு பயமாகக்கூட இருக்கும். 1970-1975 வரை அப்படித்தான் இருந்தது.

      //தெப்பகுளத்தின் மேற்கிலிருந்து பார்க்கும் போது மலைக்கோட்டையும் தெப்பகுளமும் சேர்ந்து அழகான காட்சி கிடைக்கும். //

      இப்போது எங்கு பார்த்தாலும் மிக உயரமாக கட்டடங்கள் + வணிக வளாகங்கள் வந்து எல்லா இயற்கை அழகுகளையும் மறைத்துவிட்டன என நினைக்கிறேன் ஐயா.

      நான் அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன். [கற்பனை என்றுகூட சொல்ல முடியாது. உண்மையும் அதுவாகவே தான் இருக்க முடியும். ]

      அதாவது ராபர்ட் க்ளைவ் இங்கு வந்து ஒளிந்துகொண்டதாகச் சொல்லும் இன்றைய க்ளைவ்ஸ் ஹாஸ்டல் கட்டப்படுவதற்கு முன்பு, இன்றைய மிகப்பெரிய வணிக வளாகங்கள் எழுப்பப்படுவதற்கு முன்பு, அதாவது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிப்பார்ப்பேன்.

      உச்சிப்பிள்ளையார், அருகே தாயுமானவர் கோயில், நந்தி கோயில் தெருவில் இப்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய நந்தி, இந்தத்தெப்பக்குளம் எல்லாமே ஒன்றை ஒன்று பார்க்கும் விதமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

      நடுவில் எந்த ஒரு கட்டடமும் இருந்திருக்காது. சிவன் கோயில், சிவன் கோயிலுக்கான குளம், நடுவில் நந்தி என்று தான் அன்று இருந்திருக்கும். இப்போது உள்ள அனைத்துமே இடையில் ஏற்பட்டுள்ள ஆக்ரமிப்புகள் என்று தான் சொல்ல வேண்டும். ;(

      >>>>>>

      நீக்கு
    4. VGK >>>> திரு, தமிழ் இளங்கோ ஐயா [4]

      //அதேபோல் கிழக்கிலிருந்து பார்க்கும்போது தெப்பக் குளமும் எதிரில் உள்ள லூர்துமாதா ஆலயமும் இணைந்து நல்லிணக்கத்தைக் காட்டும்.//

      இப்போதும் அந்த அழகிய காட்சியை சமீபத்தில் ஒரு நாள் கண்டேன் ஐயா. அதாவது கிளைவ்ஸ் ஹாஸ்டல் நுழைவாயிலில் நுழைந்து ஒரு பத்தடி உள்ளே போனதும், வலதுபுறம் ஒரு மாடிப்படி வரும் ஐயா. 10+10 ஆக, ஒரு 20 படிகள் இருக்கும். அதில் ஏறி மேலே சென்றால் அங்கு BHE ECB LIMITED என்று எங்கள் BHEL தொழிலாளர் கூட்டுறவு வங்கி உள்ளது, ஐயா.

      அந்த வங்கியின் காசாளர் அமரும் இடத்தைத்தாண்டி ஒரு வராண்டா உள்ளது ஐயா. அங்கிருந்து பார்த்தால் தெப்பக்குளம் மட்டும் அல்லாமல் நீங்கள் சொல்லும் லூர்துமாதா ஆலயத்தின் நுழைவாயில் மிக அருமையாகக் காட்சியளிக்கிறது ஐயா.

      அன்று என் கையில் கேமரா இல்லை. அடுத்த முறை நீங்கள் சென்று பாருங்கள் ஐயா. BHARAT HEAVY ELECTRICALS EMPLOYEES CO-OP. BANK LIMITED க்குப்போய், அங்குள்ள காசாளரின் இருக்கைக்கு அருகில் உள்ள கதவு வழியே வராண்டாவுக்குப்போய்ப் பாருங்கள், ஐயா.

      யார் வேண்டுமானாலும் தாராளமாகப் போகலாம், ஐயா.
      மாலை 6 மணி ஆனால் கதவைப்பூட்டி விடுவார்கள்.

      காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தாராளமாக யார் வேண்டுமானாலும் போய்ப்பார்க்கலாம். தடையேதும் இல்லை.

      //இப்போது ரோடுமேல் ரோடுபோட்டு சுற்றுச் சுவர்கள் உயரம் குறைந்து விட்டன. மேலும் இங்கும் அங்கும் போஸ்ட் கம்பங்கள், ஒயர்கள், குப்பைகள் என்று தெப்பக்குளம் அழகையே குறைத்து விட்டன.//

      சுவர்களின் உயரம் குறைந்து விட்டன என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதன் மேல் கம்பிவலைகள் போட்டு நல்ல உயரமாகத்தான் ஆக்கியுள்ளார்கள். அதனால் தெப்பக்குளத்தில் குப்பைகளை வீசுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் பாராட்டத்தான் வேண்டும்.

      முன்பெல்லாம் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள 4 தெருக்களிலும் செல்வோரும், சுற்றி கடை போடும் பழ வியாபாரி, காய்கறி வியாபாரி போன்றவர்களும், தங்களிடமுள்ள கழிவுப்பொருட்களையெல்லாம் ஆங்காங்கே தெப்பக்குளத்தில் வீசி வந்தனர்.

      குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு. இப்போது அதெல்லாம் சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது ஐயா.

      இப்போது கடந்த 7-8 ஆண்டுகளாக குளத்தின் நீர் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சோப்புப்போட்டு துணி துவைப்பதும், குளிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

      தெற்குக்கரையில் உள்ள ஒரே ஒரு படிக்கட்டு தவிர குளத்தில் இறங்கவே இப்போது வேறு எந்தப் பாதைகளும் சுத்தமாகக் கிடையாது. எல்லா இடமும் சுத்தமாக அடைத்து விட்டார்கள்.

      கம்பி வேலி மிக உயரமாகவும் போட்டு விட்டார்கள். குளத்தில் குப்பையை எறிவது முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது.

      தெற்குக்கரையில் உள்ள படிக்கட்டுகளில் மட்டும் தினமும் மாலை 6.30 முதல் 7.30 வரை, வடலூர் வள்ளலார் க்ரூப் ஆசாமிகள் வந்து அழகாக ஒரு 100 ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்கிறார்கள். அதுவும் எவர்சில்வர் தட்டுக்களில்.

      அவர்கள் அனைவரும் குளத்தின் படிக்கட்டுகளில் சாப்பிட்டு விட்டு மீதியை குளத்தில் மீன்களுக்கு ஆகாரமாகப் போட்டு விட்டு, அந்தத்தட்டுகளை மட்டும் குளத்தின் கரையில் கழுவிக்கொள்கிறார்கள். மற்றபடி இன்று அந்தக்குளம் மிகவும் சுத்தமாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

      >>>>>

      நீக்கு
    5. // பெரும்பாலும் வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் முக்கிலும், தெப்பக்குளத்தின் தெற்குக் கரையிலும் //

      கடைசியில் வடக்குக் கரையிலும் என்று திருத்திக் கொள்ளவும்.

      நீக்கு
    6. தி.தமிழ் இளங்கோ May 12, 2013 at 10:49 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      // பெரும்பாலும் வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் முக்கிலும், தெப்பக்குளத்தின் தெற்குக் கரையிலும் //

      கடைசியில் வடக்குக் கரையிலும் என்று திருத்திக் கொள்ளவும்.//

      சரி ஐயா, புரிகிறது ஐயா. பொதுவாக தெப்பம் நகர்ந்து செல்லும் போது எந்தப்பக்கம் மிதக்கும் தெப்பம் உள்ளதோ அந்தக்கரையில் கும்பல் அதிகமாகத்த்தான் இருக்கும்.

      புறப்படும் இடம் தெற்குக்கரை. அதன் பிறகு கிழக்குக்கரை, அதன்பிறகு வடக்குக்கரை, அதன் பிறகு மேற்குக்கரை, மறுபடியும் திரும்பி புறப்பட்ட தெற்குக்கரைக்கே வந்து சேரும்.

      புறப்படும் இடமாக இருப்பதால் தெற்குக்கரை முக்கியத்துவம் பெறுகிறது.

      அதுபோல மலைவாசல் >>>> சாரதாஸ் >>>> மங்கள் மங்கள் >>>> ரத்னா ஸ்டோர் >>>> சிந்தாமணி பல்பொருள் அங்காடி >>>> மெயின் கார்டு கேட் கோட்டைக்கதவுகள் வரை, எப்போதுமே, சாதாரண நாட்களில் கூட, மிகவும் ஜனநடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகள்.

      தெப்பக்குளத்தின் வடகரையும் இதிலேயே அடங்கி விடுவதால், தெப்ப உற்சவத்தின் போது, வடக்குக்கரையிலும் கும்பல் அதிகமாகவே தோன்றுகிறது.

      மேலும் சில கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கு, மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு
  39. மேலும் தெப்பக்குள சுற்றுச் சுவர்களில் உயரமான இரும்பு கிராதிகளைப் போட்டு முன்புபோல் திருச்சி தெப்பகுளம் அழகாக இல்லை. அழ்காக புகைப்படமும் எடுக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ May 11, 2013 at 3:59 AM

      //மேலும் தெப்பக்குள சுற்றுச் சுவர்களில் உயரமான இரும்பு கிராதிகளைப் போட்டு முன்புபோல் திருச்சி தெப்பகுளம் அழகாக இல்லை.//

      ஆமாம் ஐயா. முன்பு போல தெப்பக்குளத்தின் முழு அழகினை சுலபமாக, எங்கிருந்தும் பார்த்து ரஸிக்கத்தான் முடியவில்லை.
      கம்பிவலைகளின் ஊடே கண்ணை வைத்து உற்றுப் பார்க்க வேண்டியதாகத்தான் உள்ளது.

      //அழகாக புகைப்படமும் எடுக்க முடிவதில்லை.//

      தெற்குக்கரையில் உள்ள படிக்கட்டுகளில் நின்று மட்டுமே புகைப்படம் எடுக்க வேண்டியதாக உள்ளது. அதுவும் நான் சென்ற தினம், தெப்ப தினமாக இருந்ததால் அங்கு மிகப்பெரிய கொட்டகை [பந்தல்] போட்டு விட்டார்கள். அதனால் நான் கடைசி படிவரை இறங்கி புகைப்பட எடுக்க வேண்டி ஆனது.

      முன்பு ஒரு காலத்தில் நான்கு கரைகளிலுமே படிக்கட்டுகள் இருந்திருக்கும் போல உள்ளது.

      எனக்குத்தெரிந்தே இப்போது பர்மா பஜார் உள்ள மேற்குக்கரையில் ஓர் படிக்கட்டு இருந்தது. இப்போ ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் அதை மூடி விட்டார்கள்.

      கிழக்குக்கரையில் படிக்கட்டு இருந்ததற்காக ஆதாரம் இன்று நம் திரு. பட்டாபிராமன் அவர்கள் கொடுத்துள்ள படத்திலேயே தெரிகிறது பாருங்கள்.

      இப்போது உபயோகத்தில் இருப்பது தெற்குக்கரை படிக்கட்டு ஒன்றே ஒன்று மட்டுமே. அதாவது வாணப்பட்டறை மாரியம்மன் கோயிலுக்கும், நந்திகோயிலுக்கும் இடைப்பட்ட குறுகிய சந்துக்கு நடுவே இருப்பது மட்டுமே.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மிக நீண்ட வி8ஸ்தாரமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் ஐயா.;

      நீக்கு
  40. அழகான பாடலுடன் கூடிய தலைப்பு .சித்திரை திருவிழா நேரில் பார்த்தது போல இருக்கிறது ..


    எல்லா படங்களும் உள்ளத்தை கொள்ளையடித்தன .
    அந்த சின்ன சிட்டு சோ ஸ்வீட் :))
    உங்களை சேர்த்து கோவிலுடன் தெப்பகுளத்தில் அருகில் நிற்கிராற்போல் இணைத்த படம் மிக அருமை
    தேங்க்ஸ் பட்டாபி சார் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin May 11, 2013 at 4:07 AM

      வாங்கோ நிர்மலா, வாங்கோ, வணக்கம்.

      //அழகான பாடலுடன் கூடிய தலைப்பு .சித்திரை திருவிழா நேரில் பார்த்தது போல இருக்கிறது .//

      மிக்க மகிழ்ச்சி..

      //எல்லா படங்களும் உள்ளத்தை கொள்ளையடித்தன //

      சந்தோஷம்.

      //அந்த சின்ன சிட்டு சோ ஸ்வீட் :))//

      அந்த சின்னச்சிட்டு திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் உபயம். அதனால் தான் அது ஸோஓஓஓஒ ஸ்வீஈஈஈத்தாக உள்ளதூஊஊஊஊ. ;))))))

      //உங்களை சேர்த்து கோவிலுடன் தெப்பகுளத்தில் அருகில் நிற்கிறாப்போல் இணைத்த படம் மிக அருமை //

      மிக்க மகிழ்ச்சி நிர்மலா,

      //தேங்க்ஸ் பட்டாபி சார் ..//

      திரு. பட்டாபிராமன் அவர்களுக்கு என் நன்றிகளையும் உங்களுடன் கூடவே நானும் இங்கு மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன், நிர்மலா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நிர்மலா.

      நீக்கு
  41. சிறப்பான தகவல்கள் - அழகான படங்கள்.....

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் May 11, 2013 at 8:14 AM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //சிறப்பான தகவல்கள் - அழகான படங்கள்.....ரசித்தேன்.//

      அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  42. பெயரில்லா12 மே, 2013 அன்று 1:28 PM

    அப்பப்பா என்ன அழகான படங்கள் குருவி சுப்பர்!
    இனிய பதிவு. பாராட்டகள் ஐயா!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi May 12, 2013 at 12:58 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அப்பப்பா என்ன அழகான படங்கள் குருவி சூப்பர்! இனிய பதிவு. பாராட்டகள் ஐயா! வேதா. இலங்காதிலகம்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் + இனிய பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  43. அட நம்ம தெப்பகுளம் அவ்வளவு பழைய பராம்பரியம் உள்ளதா , ரொம்ப நன்றி சார், பகிர்ந்து கொண்டதற்கு . ஒரு 20 வருஷம் முன்னாடி வரைக்கும் என் அன்றாட வாழ்க்கை அதை சுற்றிதான் இருந்தது என்பதை நினைக்கும் பொது பெருமையாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  44. அஜீமும்அற்புதவிளக்கும் May 13, 2013 at 9:06 AM

    வாருங்கள் அலாவுதீனும் [அஜீம்பாஷாவும்] அற்புத விளக்கும், வணக்கம்.

    //அட நம்ம தெப்பகுளம் அவ்வளவு பழைய பராம்பரியம் உள்ளதா , ரொம்ப நன்றி சார், பகிர்ந்து கொண்டதற்கு.//

    மிக்க மகிழ்ச்சி.

    //ஒரு 20 வருஷம் முன்னாடி வரைக்கும் என் அன்றாட வாழ்க்கை அதை சுற்றிதான் இருந்தது என்பதை நினைக்கும் பொது பெருமையாக இருக்கிறது.//

    அப்படியா சந்தோஷம். இன்றும் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை அதே தெப்பக்குளத்தைச்சுற்றித்தான் இருக்கிறது.

    பொக்கிஷம் பகுதி-8க்கு 13.04.2013 அன்று வருகை தந்து கருத்துக்கூறி இருந்தீர்கள். அதன் பிறகு ஒரு மாதமாகக் காணவில்லை.

    இன்று 13.05.2013 தான் இங்கு இந்த புதியப்பதிவுக்கு வருகை தந்துள்ளீர்கள்.

    இதற்கிடையில் பொக்கிஷம் பகுதி-1, 2, 3 மற்றும் 8 க்கு தாங்கள் வருகை தந்து சிறப்பித்துள்ளதற்கு நன்றிகூறி, தங்களுக்குப் பூங்கொத்து + SKC கொடுக்கப்பட்டுள்ளது. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    அதற்கான தலைப்பு: “அன்றும் இன்றும்”

    அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/04/12.html

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  45. நீராழி மண்டபத்து உச்சிக்கம்ப விளக்கொளி நீரில் பட்டு பிரதிபலிக்கும் அழகோ அழகு.

    அசைந்து வரும் தேரழகு
    இரை தேடும் குருவியழகு

    புள்ளி விவரங்கள் அருமை.
    நட்பின் பரிசு இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் May 13, 2013 at 6:41 PM

      வாங்கோ .. வணக்கம்.

      //நீராழி மண்டபத்து உச்சிக்கம்ப விளக்கொளி நீரில் பட்டு பிரதிபலிக்கும் அழகோ அழகு.//

      தங்களின் கூரிய பார்வையும், வித்யாசமான மிகச்சிறந்த ரஸனையும் எனக்கு மிகுந்த வியப்பளித்தது. ;))))) ஸ்பெஷல் நன்றிகள்.

      //அசைந்து வரும் தேரழகு//

      மிக்க மகிழ்ச்சி.

      //இரை தேடும் குருவியழகு//

      அந்தமிகச்சிறிய சிட்டுக்குருவியின் அழகினில், இந்த மிகப்பெரிய தேர்கள் + தெப்பப் பதிவே அடிபட்டுப் போய் விட்டது.

      ஒட்டுமொத்தமாகப் பலரும் பாராட்டியுள்ள சிட்டுக்குருவியின் சொந்தக்காரருக்கு மீண்டும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

      //புள்ளி விவரங்கள் அருமை.//

      சந்தோஷம். ;)

      //நட்பின் பரிசு இனிமை.//

      மீண்டும் உங்களுடன் சேர்ந்து அந்த இனிய நண்பருக்கு மீண்டும் என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், சும்மா தந்தி அடிப்பதுபோல ’நச்’சென்று தங்கள் கருத்துக்களைக் கவிதைபோல அழகோ அழகாக எழுதி அனுப்பியுள்ளதற்கும், அனைத்துப்பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  46. கண்கொள்ளாக்காட்சியாக மனம் நிறைந்த அருமையான பகிர்வுகள்..

    பாராட்டுக்கள்.. இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  47. இராஜராஜேஸ்வரி May 14, 2013 at 4:38 AM

    வாங்கோ வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

    நூறாவதாக மீண்டும் வருகை தந்துள்ள, தங்களைத்தான் நூற்றுக்கு நூறு நான் எதற்குமே நம்பிக்கொண்டு உள்ளேன்.

    //கண்கொள்ளாக்காட்சியாக மனம் நிறைந்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. இனிய வாழ்த்துகள்..!//

    ;))))) மிகவும் சந்தோஷம். தங்களின் தங்கமான பாராட்டுக்களும், இனிய வாழ்த்துகளும் என் மனதில் ஏதோ ஓர் நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது. பார்ப்போம். நன்றி.

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் ஐயா.

    படங்களும் பதிவும் சூப்பர்.

    நான் உங்களின் தளத்தில் இணைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
    அதனால் பல தகவல்களை அறிய முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் வந்து வந்து பார்த்துவிட்டுச் செல்வேன்.
    இனி தொடர்ந்து வருவேன்.
    நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா. உங்களின் பணி தொடர்ந்து சிறக்கட்டும். வணக்கத்துடன் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருணா செல்வம் May 15, 2013 at 2:13 PM

      //வணக்கம் ஐயா.//

      வாங்கோ வணக்கம் மேடம்.

      //படங்களும் பதிவும் சூப்பர்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நான் உங்களின் தளத்தில் இணைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் பல தகவல்களை அறிய முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் வந்து வந்து பார்த்துவிட்டுச் செல்வேன். இனி தொடர்ந்து வருவேன்.//

      இப்போது 298வது Follower ஆக இணைத்துக்கொண்டுள்ளீர்கள் என அறிகிறேன். மிகவும் சந்தோஷம்.

      //நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா. உங்களின் பணி தொடர்ந்து சிறக்கட்டும். வணக்கத்துடன் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      [இதற்கு முந்திய பதிவினில் தங்களுக்கு பூங்கொத்தும், SKC யும் அளிக்கப்பட்டுள்ளன. ;) இது Just உங்கள் தகவலுக்காக மட்டும்.]

      நீக்கு
  49. எப்படியோ உங்களின் இந்த அருமையான உற்சவத்தை பார்க்க படிக்கத் தவறியிருக்கிறேன். இந்தப் பதிவை என்னைவிட திருச்சி வாசியான என் கணவர் தான் சிலாகித்துப் படிப்பார் என்று நினைக்கிறேன்.அவர் ஊராயிற்றே!

    மைலாப்பூரில் நடக்கும் கபாலீஸ்வரர் தெப்ப உற்சவம் நினைவிற்கு வருகிறது.தெப்ப உற்சவம் கண்ணிற்கும், கருத்திற்கும் மகிழ்ச்சியளிக்கும்.
    உங்கள் பதிவைப் படிக்கும் போது அங்கேயே வந்து பார்த்த திருப்தி வருகிறது. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியும் சென்று படிக்க வேண்டும்.
    நன்றி தாயுமானவர் தெப்ப உற்சவத்திற்கு அழைத்து சென்றதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam May 17, 2013 at 8:34 AM

      வாங்கோ, வணக்கம்.

      //எப்படியோ உங்களின் இந்த அருமையான உற்சவத்தை பார்க்க படிக்கத் தவறியிருக்கிறேன்.//

      அதனால் பரவாயில்லை. உங்களின் வருகைக்காகவே உற்சவத்தில் தேர் நகராமல் அப்படியே இருக்கிறது பாருங்கோ.

      [அதாவது நானும் அடுத்த பதிவு இன்னும் வெளியிடவில்லை ... பாருங்கோ. இன்னொரு முக்கியமான நபரும் இதுவரை வரக்காணோம். அவர்கள் வரும்வரை இந்தத்தேர்கள் நிற்குமோ, நகருமோ எனக்கே தெரியவில்லை. வெளிநாட்டில் இருப்பதால் மிகவும் தாமதமாகத்தான் வருவார்கள் போலிருக்கு.]

      //இந்தப் பதிவை என்னைவிட திருச்சி வாசியான என் கணவர் தான் சிலாகித்துப் படிப்பார் என்று நினைக்கிறேன்//.

      ஆஹா, மிகவும் சந்தோஷம். படிக்கட்டும்.

      //அவர் ஊராயிற்றே! //

      ஆமாம். ஏற்கனவே சொல்லியுள்ளீர்கள். ”இலால்குடி என்று”, நினைவுள்ளது. தங்களின் புகுந்த வீட்டு ஊர் ஆயிற்றே !

      //மைலாப்பூரில் நடக்கும் கபாலீஸ்வரர் தெப்ப உற்சவம் நினைவிற்கு வருகிறது. தெப்ப உற்சவம் கண்ணிற்கும், கருத்திற்கும் மகிழ்ச்சியளிக்கும். உங்கள் பதிவைப் படிக்கும் போது அங்கேயே வந்து பார்த்த திருப்தி வருகிறது. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியும் சென்று படிக்க வேண்டும். நன்றி தாயுமானவர் தெப்ப உற்சவத்திற்கு அழைத்து சென்றதற்கு.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  50. இந்தப் பதிவு போட்டதே எனக்குத் தெரியலை. தாமதமாய் இன்று தான் பார்க்கிறேன். அருமையான பகிர்வு. சிட்டுக்குருவியை எங்கே பிடிச்சீங்க?? ரொம்ப அழகு! படம் எடுக்க அழகாய் போஸ் கொடுத்திருக்கே! பறந்து போகலையா? தேரை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவின் மூலம் பார்க்க முடிந்தது. நன்றி. இரண்டு, மூன்று தரம் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  51. Geetha SambasivamMay 19, 2013 at 1:51 AM

    வாங்கோ, வணக்கம்.

    //இந்தப் பதிவு போட்டதே எனக்குத் தெரியலை.//

    அதனால் பரவாயில்லை மேடம். இப்போதாவது தெரிந்துள்ளதே!

    // தாமதமாய் இன்று தான் பார்க்கிறேன்.//

    தங்கள் வருகைக்காகவே தேர் இன்னும் நின்றுகொண்டே இருக்குது பாருங்கோ.;)

    //அருமையான பகிர்வு.//

    மிக்க மகிழ்ச்சி.

    //சிட்டுக்குருவியை எங்கே பிடிச்சீங்க?? ரொம்ப அழகு! படம் எடுக்க அழகாய் போஸ் கொடுத்திருக்கே! பறந்து போகலையா?//

    எனக்கு மிகவும் பிடித்தமான அந்த “ஸோஓஓஒ .... ஸ்வீத்த்த்த்” சிட்டுக்குருவியை மிகவும் கஷ்டப்பட்டு எனக்காகவே பிடித்துக்கொடுத்து உதவியுள்ளவர்கள் நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களே.

    அதனால், எல்லாப்புகழும், பாராட்டுக்களும், வாழ்த்துகளும் அவர்களுக்கே உரியதாகும்.

    இந்தச் சிட்டுக்குருவியைப்பற்றி ஏற்கனவே பாராட்டிப்பேசியுள்ள திருமதிகள் [1] கோமதி அரசு [2] ஜெயந்தி ரமணி [3] சந்தியா [4] அம்முலு [5] உஷா அன்பரசு [6] கீதமஞ்சரி [7] ரஞ்ஜனி நாராயணன் [8] மாதேவி [9] ஏஞ்ஜலின் நிர்மலா [10] நிலாமகள் மற்றும் திருவாளர்கள் [11] ஸ்ரீராம் [12] ஈ.எஸ். சேஷாத்ரி ஆகியோருக்கு நான் அளித்துள்ள பதில்களை தயவுசெய்து படித்துப்பாருங்கோ.

    //தேரை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவின் மூலம் பார்க்க முடிந்தது. நன்றி. இரண்டு, மூன்று தரம் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்ந்தேன்.//

    மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் .... அதுவும் இரண்டு மூன்று தரம் திரும்பத்திரும்ப நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  52. சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா? திருச்சி தெப்பக்குளம் நீளம், அகலம், ஆழம் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  53. தூப்பக்குளமும் தேரோட்ட படங்களும் கண் கொள்ளா காட்சிகள். தேர் கிளம்பும் முன் நிலையில நிற்கும் போது நிறய பேர் ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்ய தேருக்குள்ள போவாங்க. எனக்கும் அந்த நினைப்பு இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 17, 2015 at 6:04 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தெப்பக்குளமும் தேரோட்ட படங்களும் கண் கொள்ளா காட்சிகள். தேர் கிளம்பும் முன் நிலையில் நிற்கும் போது நிறைய பேர் ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்ய தேருக்குள்ள போவாங்க. எனக்கும் அந்த நினைப்பு இருக்கு.//

      அழகாக அசைந்து ஆடி வரும் தேர் போன்ற தங்களின் அன்பு வருகைக்கும், ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்வது போன்ற இனிய நினைவுகளுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  54. தெப்ப கொளம்& லைட்டு அலங்காரம் டிரஸ்ஸு போட்ட தேரு அல்லா நல்லாகீது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2015 at 10:13 AM

      //தெப்ப கொளம் & லைட்டு அலங்காரம் டிரஸ்ஸு போட்ட தேரு அல்லா நல்லாகீது//

      ஆஹா ! டிரஸ்ஸு போட்டத் தேர் !!!!!

      சூப்பரா சொல்லிட்டீங்கோ. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  55. The following Comment is wrongly routed & recorded in my previous Post.
    Hence it is reproduced & shown here for my own records. - vgk

    சரணாகதி. November 27, 2015 at 1:24 PM
    தேரோட் படங்களும் வர்ணனைகளும் சூப்பர் இவ்வளவு துல்லியமான அழகு கொஞ்சும் படங்களை உங்க வீட்டு ஜன்னலிலேந்தே எடுத்து எங்க எல்லாரையும் தேரோட்டத்தில் கலக்க வச்சுட்டீங்களே.

    பதிலளிநீக்கு
  56. தெப்பக்குளத்தின் அளவு. அதற்கும் புள்ளிவிவரமா?? தேரை இவ்வளவு அருகினில் காட்டும் ஜன்னல்...ஆர்வம் இன்னும் அதிகரிக்கிறது!!!

    பதிலளிநீக்கு