என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 20 ஏப்ரல், 2013

10] பூஜைக்கு வந்த மலரே வா !


”பொக்கிஷம்”

தொடர்பதிவு 
By
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-ஸ்ரீ பாதுகைகள் 

என்ற பாத மலரே வா !

அந்த கிடைத்தற்கரிய பாதுகைகளை ஓர் புது வெள்ளித்தட்டில் வைத்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரமான அனுஷ நக்ஷத்திரத்தில், ஒவ்வொரு மாதமும் சிறப்பான பூஜைகள் செய்து வந்தேன். 

அவர்களின் பாத பூஜைக்கென்றே 108 நாமாவளிகள் கொண்ட அஷ்டோத்திர மந்திரங்கள் உள்ளன.  

அவற்றில் முதல் ஐந்தும் கடைசி ஐந்தும் இதோ:

001. ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர அஸ்மத் ஆசார்யாய நமோ நம:

002. ஸ்ரீ சந்த்ரமெளலி பாதாப்ஜ மதுபாய நமோ நம:

003. ஆசார்ய பாதாதிஷ்டாநாபிஷிக்தாய நமோ நம:

004. ஸர்வக்ஞாசார்ய பகவத் ஸ்வரூபாய நமோ நம:

005. அஷ்டாங்க யோக நிஷ்டா கரிஷ்டாய நமோ நம;

.... 
......... 
................

104. தேசகாலாபரிச்சின்ன த்ருக்ரூபாயன நமோ நம:

105. நிர்மான சாந்திமஹித நிஸ்சலாய நமோ நம:

106. நிர்லக்ஷ்ய லக்ஷ்ய ஸம்லக்ஷ்ய நிர்லேபாய நமோ நம:

107. ஸ்ரீ ஷோடசாந்த கமல ஸூஸ்திதாய நமோ நம:

108. ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸ்ரீ சரஸ்வத்யை நமோ நம:


அதே போல ஸ்ரீ சந்த்ர சேகர யதீந்த்ரர் ஸ்ரீ தோடகாஷ்டகம் என்றே தனியாக நமஸ்கார ஸ்லோகங்கள் உள்ளன..

இந்தப்புனிதமான பாதுகைகள் எங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரித்தபின், வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல நல்ல திருப்புமுனைகள் ஏற்பட்டன. 

சுமார் 10 வருடங்கள் [1994 To 2004] இவற்றை நானே பூஜித்து வந்தேன். பிறகு என் தேக அசெளகர்யங்கள் காரணமாக, இந்த என்னிடமிருந்த பொக்கிஷத்தை, என் குடும்பத்தைச் சார்ந்த என் பெரிய அண்ணா பிள்ளையிடம் ஒப்படைத்து விட்டேன். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் உத்தரவு கேட்டு, உத்தரவு கிடைத்த பின்னரே ஒப்படைத்தேன்.

அவன், என் சொந்த பெரிய அண்ணாவின் பிள்ளை. வேத சாஸ்திரங்கள் முறைப்படி கற்றவன். சிகாவானும் கூட. தினமும் சிரத்தையாக மடியாக பசி பட்டினி இருந்து சிவபூஜை முதலியன செய்பவன். சமஸ்கிருதம், கிரந்தம் முதலியன தெரிந்தவனாகையால் மந்திரங்களை மிகவும் ஸ்பஷ்டமாக உச்சரிக்கக்கூடியவன். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளைப்பற்றியும் அவரின் மஹிமைகள் பற்றியும் நன்கு உணர்ந்தவன். அவனே இதை மேலும் பல்லாண்டுகள் பூஜிக்க தகுதியானவன் என்ற முடிவுக்கு வந்து ஒப்படைத்து விட்டேன். 

அப்படியே என் தகப்பனார் செய்து வந்த பஞ்சாயதன சிவபூஜை செட்டையும் என் தந்தையின் பேரனான [தாத்தா சொத்து பேரனுக்குத்தானே செல்ல வேண்டும்] அவனிடமே ஒப்படைத்து விட்டு, மறைமுகமாக அவனுக்கு என்னாலான  ஆதரவுகள் அளித்து வருகிறேன்.

கடந்த ஒன்பது ஆண்டு காலமாக மேற்படி பாதுகைகளும், சிவபூஜையும் அவனால் நன்கு பராமரிக்கப்பட்டு, நித்யப்படி பூஜைகள் வெகு சிரத்தையாக செய்யப்பட்டு வருகின்றன. 

என் தந்தை இறந்த ஓர் ஆண்டுக்குள் [In between 01.05.1975 and  30.04.1976] அவரின் வாரிசுகளான 2 பிள்ளைகளுக்கும், 2 பெண்களுக்கும் ஆளுக்கு ஒன்று வீதம் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இது மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயம். அவரே திரும்ப வந்து பிறந்துள்ளதாக அனைவரும் கூறி மகிழ்ந்தனர்.

என் தந்தையின் மறைவுக்குப்பின், அதுவும் முதல் ஓராண்டுக்குள், பிறந்த நான்கு பேரன்கள் தவிர என் பெற்றோருக்கு ஏற்கனவே ஒன்பது பேரன்களும், மூன்று பேத்திகளும் பிறந்திருந்தனர். அதில் 2 பெளத்ரன் [பிள்ளை வழிப்பேரன்கள்],  7 தெளஹித்ரன் [பெண் வழிப்பேரன்கள்], 1 பெளத்ரி [பிள்ளைவழிப்பேத்தி], 2 தெளஹித்ரி [பெண்வழிப்பேத்திகள்].

என் தந்தை காலமான ஓராண்டுக்குள் பிறந்த இந்த நான்கு பேரன்களில்,  கடைசியாகப் பிறந்தவன் தான் சிரஞ்சீவி சுந்தரேசன் என்கிற இந்த [என் பெரிய அண்ணாவின்] பிள்ளை. 

அதுவும் இவன் மட்டும் தான், என் தந்தையின் வருஷ ஆப்தீகத்தன்று [முதலாண்டு நிறைவு திதியன்று] மிகச்சரியாக விடியற்காலம் பிறந்தவன். முதலாம் ஆண்டு வருஷ திதிக்கான அனைத்து ஏற்பாடுகளுடன் நாங்கள் தயாராக இருந்தும், அன்றைய தினம் பார்த்து இவனின் எதிர்பாராத ஜனனத்தினால், பிறகு பத்து நாட்கள் விருத்தி [பிரஸவத் தீட்டு] கழிந்தபின் தான் வருஷாப்தீகம் [வருஷ திதி] நடைபெற்றது. 

இவன் பிறந்த ஜன்ம நக்ஷத்திரமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரமான அனுஷம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என் தந்தையின் முதலாம் ஆண்டு வருஷ திதியன்று பிறந்துள்ள இவனிடம் என் தந்தைபோலவே, பூஜை செய்வதற்குரிய அனைத்துத் தகுதிகளும் அமைந்துள்ளன. கோபத்திலும், குணத்திலும், வேதத்திலும், சாஸ்திரங்களிலும், சிரத்தையிலும், ஈடுபாட்டிலும், யோக்யதையிலும் என் தந்தையின் குணம் யாவும் கொண்டவனாகவே இருக்கிறான். ஆனால் அவரைப்போல ஸ்தூல சரீரமாக இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பானவனாக ஒல்லியாகவே இருக்கிறான். அதனால் எல்லாப்பொறுப்புக்களையும் அவனிடம் நான் ஒப்படைத்து விட்டேன். மேற்பார்வைகள் மட்டும் செய்து அவ்வப்போது ஆதரவுகளும் ஆலோசனைகளும் அளித்து வருகிறேன்.அந்த மரப்பாதுகைகளுக்கு அபிஷேகம் முதலியன செய்வதால் ஏதும் பாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், அந்த மரப்பாதுகைகளுக்கு இப்போது வெள்ளிக்கவசம் போட்டு விட்டோம். மரப்பாதுகைகளில் இருந்த அதே கோல டிசைன்களையே அப்படியே, இந்த வெள்ளித்தகட்டின் மேல் பகுதியில் வருமாறு செய்துள்ளோம். 
ஒவ்வொரு மாதமும் அனுஷ நக்ஷத்திரத்தன்று, அவர்கள் வீட்டில் [என் வீட்டருகே ஒரே தெருவில் தான் உள்ளது] அனைவரும் ஸத்சங்கம் போல கூடுவோம். 

சுமார் 20 நபர்களிலிருந்து 50 நபர்கள் வரை அவர்களாகவே வருவார்கள். அமர்க்களமாக அனுஷ பூஜை நடைபெறும். லோக க்ஷேமத்திற்கான சங்கல்ப்பங்களுடன், கூடைகூடையாக புஷ்பங்களால் பாதுகைகளுக்கு அஷ்டோத்ரமும், பூஜைகளும்  நடைபெறும். அதன் பிறகு எல்லோருமாகச் சேர்ந்து ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வோம். 

பால், பழம், கல்கண்டு, திராக்ஷை, முந்திரி, பாதாம், பானகம், பாயஸம் போன்றவைகள் நைவேத்யம் செய்து, எல்லோருக்கும் விநியோகிக்கப்படும். சுமார் 10 வேதவித்துக்கள் வரை கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு சம்பாவணையும் அளிக்கப்படும். 

யாரிடமும் பணம் ஏதும் வசூலிப்பது கிடையாது. புஷ்பம், பழங்கள் போன்றவைகள் வருபவர்கள் அவர்களாகவே கொண்டு வந்து கொடுத்தால் ஏற்றுக்கொள்வது உண்டு. 

இந்த பூஜை நிகழ்ச்சிக்கு மாதாமாதம் அனுஷத்தன்று வருபவர்கள், ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர். இதனால் மிக அழகான ஸத் ஸங்கம் உருவாகியுள்ளது. 

இதுபற்றிய விளம்பரமோ, நோட்டீஸோ, பண வசூலோ ஏதும் கிடையாது. சிரத்தையுள்ள பல குழந்தைகள், இளம் வயது ஆண்கள், பெண்கள், நடுத்தர வயதினர், வயதான முதியோர்  என அவரவர்களாகவே ஒருவருக்கொருவர் கேள்விப்பட்டு வருகை புரிகின்றனர். 

ஒவ்வொரு மார்கழி மாதமும், தினமும் விடியற்காலம் மிகச்சரியாக நான்கு மணிக்குப்புறப்பட்டு, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் சொல்லிக்கொண்டு, திருச்சி மலைக்கோட்டையை கிரிவலமாகச் சுற்றி, ஸ்ரீமாணிக்க விநாயகரையும் தரிஸித்து விட்டு, வந்துகொண்டிருக்கும், எங்கள் கோஷ்டிக்கும், என் பெரிய அண்ணா அவர்களின் இந்தப்பிள்ளை சிரஞ்சீவி. சுந்தரேசனே, தலைமை வகித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பாதுகைகளுக்கு உள்ள சக்தியும், மஹிமையும் இங்கு எழுத்தில் எடுத்துரைக்க முடியாதவை. நாம் நியாயமாக எதை மனதில் வைத்து பிரார்த்தித்துக்கொண்டாலும் அவைகள் உடனடியாக நிறைவேறி வருகின்றன. 

இந்தப் பாதுகைகளில் ஒவ்வொரு அனுஷத்தன்றும், திருமண வயதில் உள்ள   பல பிள்ளைகள் + பெண்கள் ஜாதகங்கள் வைக்கப்படுகின்றன. மூன்று அல்லது ஆறு அனுஷத்திற்குள் அவர்களுக்கு கல்யாணத்திற்கான வாய்ப்பு  நல்லபடியாக குதிர்ந்து வந்து பத்திரிகை அடிக்கப்பட்டு, அந்த முஹூத்தப்ப பத்திரிகைகள் முதன் முதலாக பாதுகையில் வைக்கப்பட்டு அதன் பிறகே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன என்பது கண்கூடாகத் தெரிகின்றது. 

இதுபோல இன்னும் பல அதிசயங்கள் நிகழ்கின்றன என சுகானுபவம் பெற்றவர்கள் அனுபவித்து அழகாகச் சொல்வதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. 

அந்த மஹான் ஸ்ரீ பாதுகைகள் ரூபத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்துகொண்டு நல்வழி காட்டி வருகிறார்கள். புண்ணிய கார்யங்கள் தொடர்ந்து நடைபெற ஸத் ஸங்கம் அமைத்துக்கொடுத்தும் எல்லோரையும் நல்வழியில் செல்ல வழிகாட்டியும் வருகிறார்கள்.

எங்களுக்குக்கிடைத்த இந்த பொக்கிஷமான பாதுகைகள் சுயநலமாக எங்கள் குடும்பத்தை மட்டும் ரக்ஷிப்பதோடு மட்டுமல்லாமல், பொது நலமாக ஓர் ஸத் ஸங்கம் அமையக் காரணமாகவும் ஆகி, இன்று சமுதாயத்தில் பலரையும், பலகுடும்பங்களையும் நல்வழிப்படுத்தி ரக்ஷித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.  

04.03.2013 திங்கட்கிழமை 
அநுராதா [அனுஷம்]  நக்ஷத்திரத்தன்று 
பாதுகைகளுக்கு பூஜை நடந்தபோது
எடுக்கப்பட்ட படங்கள்தொடரும்


இந்தப் ‘பொக்கிஷம்’
தொடரின்  இறுதிப்பகுதி
25.04.2013 வியாழக்கிழமையன்று
வெளியிடப்படும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


112 கருத்துகள்:

 1. நல்லது நடக்கட்டும்
  நன்மைகள் தொடரட்டும்
  அனைவரும் நலமாய்
  வளமாய் வாழட்டும்
  மகானின் ஆசியுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Pattabi Raman April 20, 2013 at 5:23 AM

   வாங்கோ, சார், வணக்கம். ஸ்ரீராமநவமியை ஒட்டிய இந்தப்பதிவுக்கு ஸ்ரீ பட்டாபி ராமன் அவர்களின் முதல் வருகை ஆச்சர்யம் அளிப்பதாக அமைந்துள்ளது. மிகவும் சந்தோஷம்.

   //நல்லது நடக்கட்டும், நன்மைகள் தொடரட்டும். அனைவரும் நலமாய் வளமாய் வாழட்டும், மகானின் ஆசியுடன்.//

   ததாஸ்து ! அப்படியே ஆகட்டும்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

   நீக்கு
 2. அனுபவித்துப் படித்தேன். மஹாபெரியவா அநுக்கிரஹமா இந்தப் பாதுகைகளைப் பார்க்கும் தரிசிக்கும் அனுபவம் எனக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிசிம்ஹன் April 20, 2013 at 5:31 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அனுபவித்துப் படித்தேன்.//

   சந்தோஷம்.

   //மஹாபெரியவா அநுக்கிரஹமா இந்தப் பாதுகைகளைப் பார்க்கும் தரிசிக்கும் அனுபவம் எனக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.//

   திருச்சி பக்கம் வந்தால் சொல்லுங்கோ. தரிஸிக்க ஏற்பாடு செய்கிறேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 3. படித்து முடித்தவுடன் ஒரு ஆன்மீக மலரை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படித்தாற்போல ஒரு உணர்வு.
  உங்களுக்கு கிடைத்த மஹா பெரியவாளின் பாதுகை பற்றிய வர்ணனைகளும், அதற்கு பிரதி அனுஷ நட்சத்திரத்தன்று பூஜை செய்யும் நேர்த்தியும் மிக விளக்கமாக நீங்கள் எழுதி இருப்பது அந்தப் பூஜையில் நாங்களும் கலந்து கொண்டு அந்த மஹானின் அருளாசியை பெற்றது போன்ற மன நிறைவைக் கொடுத்தது.

  பெரியவர்கள் இருக்கும்போதே சிறியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர்கள் தங்கள் பொறுப்புக்களை சரிவரச் செய்கிறார்களா என்று மேற்பார்வை பார்க்க வேண்டும். அப்போதுதான் நம் குடும்ப நலன் ஓங்கும் என்று சொல்வார்கள். அதை நீங்கள் முறைப்படி செய்திருப்பது ரொம்பவும் நல்ல காரியம்.

  மஹா பெரியவாளின் அனுக்ரஹம் பெற்ற உங்கள் அண்ணா பிள்ளையையும், அவருக்கு அனுசரணையாக இருக்கும் உங்கள் குடும்பத்தையும்,மாதம்தோறும் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களையும் உங்கள் பொக்கிஷப் பதிவு மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்ததற்கு கோடானுகோடி நன்றி!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ranjani Narayanan April 20, 2013 at 5:53 AM

   வாங்கோ, வணக்கம்.

   படித்து முடித்தவுடன் ஒரு ஆன்மீக மலரை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படித்தாற்போல ஒரு உணர்வு............................ ...........................................................................................................................

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீளமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

   நீக்கு
 4. மஹா பெரிய தொடராக இருக்கே! வை.கோ சார்.தொடருங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Asiya Omar April 20, 2013 at 6:31 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மஹா பெரிய தொடராக இருக்கே!//

   மஹாபெரியவாளைப்பற்றி இருப்பதால், அது அப்படித்தான் இருக்கும்.

   //வை.கோ சார்.தொடருங்க.//

   ஆஹா உத்தரவு.;)

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

   நீக்கு
 5. எல்லாம் நம்பிக்கையே. இதுவும் ஒரு அற்புதமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திரகௌரி April 20, 2013 at 7:11 AM

   வாங்கோ, வணக்கம். பகுதி-5 க்குபின் நீண்ட இடைவெளி விட்டு விட்டு பகுதி-10க்குத் தாவி வந்துள்ளது பார்க்க மகிழ்ச்சியே!

   //எல்லாம் நம்பிக்கையே. இதுவும் ஒரு அற்புதமே//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

   நீக்கு
 6. சிறப்பான பூஜையின் விளக்கங்கள்... நன்றி ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் April 20, 2013 at 8:20 AM

   வாருங்கள் ”நட்சத்திர கருத்துரையாளர்” என்று இன்று சிறப்புப்பட்டம் பெற்றுள்ள திரு தனபாலன்” சார். வணக்கம்.

   //சிறப்பான பூஜையின் விளக்கங்கள்... நன்றி ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் DD Sir.

   நீக்கு
 7. //மஹான் ஸ்ரீ பாதுகைகள் ரூபத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்துகொண்டு நல்வழி காட்டி வருகிறார்கள். புண்ணிய கார்யங்கள் தொடர்ந்து நடைபெற ஸத் ஸங்கம் அமைத்துக்கொடுத்தும் எல்லோரையும் நல்வழியில் செல்ல வழிகாட்டியும் வருகிறார்கள்.//

  குருவின் வழிகாட்டல் இருந்தால் நலம் பல விளையும் என்பதில் ஐயம் இல்லை.  //எங்களுக்குக்கிடைத்த இந்த பொக்கிஷமான பாதுகைகள் சுயநலமாக எங்கள் குடும்பத்தை மட்டும் ரக்ஷிப்பதோடு மட்டுமல்லாமல், பொது நலமாக ஓர் ஸத் ஸங்கம் அமையக் காரணமாகவும் ஆகி, இன்று சமுதாயத்தில் பலரையும், பலகுடும்பங்களையும் நல்வழிப்படுத்தி ரக்ஷித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. //

  தங்கள் குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் சமுதாயத்திற்கும் குருவின் அருள் கிடைப்பது மகிழ்ச்சி.

  பொக்கிஷம் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசுApril 20, 2013 at 8:41 AM

   வாருங்கள் மேடம், வணக்கம்..

   //குருவின் வழிகாட்டல் இருந்தால் நலம் பல விளையும் என்பதில் ஐயம் இல்லை.தங்கள் குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் சமுதாயத்திற்கும் குருவின் அருள் கிடைப்பது மகிழ்ச்சி பொக்கிஷம் பகிர்வு அருமை. //

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

   நீக்கு
 8. (My Tamil font is not functional since the shell notification is temporarily absent)
  Dear Gopu,
  Amazed and surprised that so many good/noble/pious/productive things are happening at your house. Though we are very close by relationship, we have been far away by distance for so many years. Really happy that PERIYAVAL has bestowed HIS full blessings to you, which you are generous enough to pass on to others.
  Manakkal J.Raman, Vashi.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Manakkal April 20, 2013 at 9:25 AM

   WELCOME to you Sir. நமஸ்காரம். வாங்கோ;

   //(My Tamil font is not functional since the shell notification is temporarily absent)// OK That is all right, Sir. No Problem.

   //Dear Gopu, Amazed and surprised that so many good/noble/pious/productive things are happening at your house. Though we are very close by relationship, we have been far away by distance for so many years. Really happy that PERIYAVAL has bestowed HIS full blessings to you, which you are generous enough to pass on to others. Manakkal J.Raman, Vashi.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான உணர்வுபூர்வமான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 9. மனம் நெகிழ வைத்த பதிவிற்கு நன்றி! நேரில் தரிசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Seshadri e.s. April 20, 2013 at 9:28 AM

   வாங்கோ சார், வணக்கம்.

   //மனம் நெகிழ வைத்த பதிவிற்கு நன்றி! நேரில் தரிசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது! நன்றி ஐயா!//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள் Sir.

   நீக்கு
 10. Miga arumaiyana poojai villakkam, very fantastic explanation. I felt I like I was there and felt the same experience.
  Thank you very much for sharing...
  Nandri Iyyah.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Priya Anandakumar April 20, 2013 at 11:56 AM

   வாங்கோ, வணக்கம்.

   //Miga arumaiyana poojai villakkam, very fantastic explanation. I felt I like I was there and felt the same experience. Thank you very much for sharing...Nandri Iyyah.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்..

   நீக்கு
 11. சிறப்பான பூஜைப் பற்றிய விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா...நேரில் தரிசித்து ஆசிர்வாதம் வாங்கியதுபோல் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. S.Menaga April 20, 2013 at 12:20 PM

   வாங்கோ மேனகா, வணக்கம்.

   //சிறப்பான பூஜைப் பற்றிய விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா...நேரில் தரிசித்து ஆசிர்வாதம் வாங்கியதுபோல் இருக்கு.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேனகா.

   நீக்கு
 12. திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் நான் படித்தபோது காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளைப் பார்த்து இருக்கிறேன். உங்கள் பதிவுகள் மூன்றும் ( 8, 9, 10 ) நீங்கள் அவர் மீது கொண்ட சிறந்த பக்தியை எடுத்துக் காட்டுகின்றன.

  (இந்த பதிவை தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ April 20, 2013 at 5:34 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் நான் படித்தபோது காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளைப் பார்த்து இருக்கிறேன்.//

   அந்தக்காலக்கட்டத்தில் அங்கு படித்த நாம் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறோம் ஐயா. அவர்களில் ஸ்ரீ பாதங்கள் பட்ட பள்ளியில் படித்தவர்கள் நாம் என்பதால் நம்மால் ஓரளவு வாழ்க்கையிலும் முன்னேற முடிந்துள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது, ஐயா.

   //உங்கள் பதிவுகள் மூன்றும் ( 8, 9, 10 ) நீங்கள் அவர் மீது கொண்ட சிறந்த பக்தியை எடுத்துக் காட்டுகின்றன.//

   மிக்க மகிழ்ச்சி ஐயா.

   //(இந்த பதிவை தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன்)//

   மிக்க நன்றி, ஐயா.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

   நீக்கு
 13. குடும்பத்துடன் பாத ரட்க்ஷையினை தரிசித்து
  பெரும் மகிழ்வு கொண்டோம்
  பதிவின் மூலம் எங்கள் வீட்டிற்குள்ளும்
  பெரியவாளின் பாத ரட்ஷை தரிசன கிடைத்தது கூட
  எங்கள் அதிர்ஷ்டம் எனவே கருதுகிறோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ramani S April 20, 2013 at 6:03 PM

   வாருங்கள் திரு. ரமணி சார், வணக்கம்.

   //குடும்பத்துடன் பாத ரட்க்ஷையினை தரிசித்து பெரும் மகிழ்வு கொண்டோம். பதிவின் மூலம் எங்கள் வீட்டிற்குள்ளும் பெரியவாளின் பாத ரட்ஷை தரிசன கிடைத்தது கூட எங்கள் அதிர்ஷ்டம் எனவே கருதுகிறோம். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வுபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

   நீக்கு
 14. சுயநலமாக எங்கள் குடும்பத்தை மட்டும் ரக்ஷிப்பதோடு மட்டுமல்லாமல், பொது நலமாக ஓர் ஸத் ஸங்கம் அமையக் காரணமாகவும் ஆகி, இன்று சமுதாயத்தில் பலரையும், பலகுடும்பங்களையும் நல்வழிப்படுத்தி ரக்ஷித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

  மனம் நெகிழ வைத்த மகானின் ஆசி ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி April 20, 2013 at 7:04 PM

   வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!! வாங்கோ!!!!
   தங்களுக்கு என் அன்பான வந்தனங்கள்.

   *****சுயநலமாக எங்கள் குடும்பத்தை மட்டும் ரக்ஷிப்பதோடு மட்டுமல்லாமல், பொது நலமாக ஓர் ஸத் ஸங்கம் அமையக் காரணமாகவும் ஆகி, இன்று சமுதாயத்தில் பலரையும், பலகுடும்பங்களையும் நல்வழிப்படுத்தி ரக்ஷித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. *****

   //மனம் நெகிழ வைத்த மகானின் ஆசி ..!//

   மிகவும் சந்தோஷம். ;)

   நீக்கு
 15. இந்தப்புனிதமான பாதுகைகள் எங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரித்தபின், வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல நல்ல திருப்புமுனைகள் ஏற்பட்டன. //

  மகான்களின் அனுகிரஹங்களை நிறைவாக ஆத்மார்த்தமாக உணரவைத்த பொக்க்கிஷம் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி April 20, 2013 at 7:16 PM

   *****இந்தப்புனிதமான பாதுகைகள் எங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரித்தபின், வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல நல்ல திருப்புமுனைகள் ஏற்பட்டன.*****

   //மகான்களின் அனுகிரஹங்களை நிறைவாக ஆத்மார்த்தமாக உணரவைத்த பொக்க்கிஷம் ...//

   தங்களின் ஆத்மார்த்தமான பொக்கிஷமானக் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ;)

   நீக்கு
 16. அந்த மஹான் ஸ்ரீ பாதுகைகள் ரூபத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்துகொண்டு நல்வழி காட்டி வருகிறார்கள். புண்ணிய கார்யங்கள் தொடர்ந்து நடைபெற ஸத் ஸங்கம் அமைத்துக்கொடுத்தும் எல்லோரையும் நல்வழியில் செல்ல வழிகாட்டியும் வருகிறார்கள்.

  உணர்வுப்பூர்வமாக நல்வழிகாட்டும்
  மஹானின் பாதுகைகளுக்கு நம்ஸ்காரங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி April 20, 2013 at 7:18 PM

   *****அந்த மஹான் ஸ்ரீ பாதுகைகள் ரூபத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்துகொண்டு நல்வழி காட்டி வருகிறார்கள். புண்ணிய கார்யங்கள் தொடர்ந்து நடைபெற ஸத் ஸங்கம் அமைத்துக்கொடுத்தும் எல்லோரையும் நல்வழியில் செல்ல வழிகாட்டியும் வருகிறார்கள்.*****

   //உணர்வுப்பூர்வமாக நல்வழிகாட்டும் மஹானின் பாதுகைகளுக்கு நமஸ்காரங்கள்..//

   அந்த பாதகமலங்களுக்கு ’கமலம்' [LOTUS] சார்பில் நானும் அவ்வப்போது நமஸ்கரித்துக்கொள்கிறேன்.

   ‘லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து!’ என்ற வாக்கியப்படி எல்லோரும் செளக்யமாக க்ஷேமமாக இருக்கட்டும்.;)

   நீக்கு
 17. இந்தப் பாதுகைகளுக்கு உள்ள சக்தியும், மஹிமையும் இங்கு எழுத்தில் எடுத்துரைக்க முடியாதவை. நாம் நியாயமாக எதை மனதில் வைத்து பிரார்த்தித்துக்கொண்டாலும் அவைகள் உடனடியாக நிறைவேறி வருகின்றன.

  எண்ணமுடியாத ,
  எண்ணங்கங்களுக்கும் அப்பாற்பட்ட சக்திமிக்க பாதுகைகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி April 20, 2013 at 7:21 PM

   *****இந்தப் பாதுகைகளுக்கு உள்ள சக்தியும், மஹிமையும் இங்கு எழுத்தில் எடுத்துரைக்க முடியாதவை. நாம் நியாயமாக எதை மனதில் வைத்து பிரார்த்தித்துக்கொண்டாலும் அவைகள் உடனடியாக நிறைவேறி வருகின்றன. *****

   //எண்ணமுடியாத, எண்ணங்கங்களுக்கும் அப்பாற்பட்ட சக்திமிக்க பாதுகைகள்...//

   அதே, அதே! தங்களின் மூலம் இதை அசரீரி போலக் கேட்பதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் அருள் வாக்கு தொடர்ந்து பலிக்கட்டும். தொடர்ச்சியான பூஜாபலன்களால் மேலும் பல நன்மைகள் எல்லோருக்குமே நடக்கட்டும்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களை ஆத்மார்த்தமாகப் பகிர்ந்து கொண்டு, இந்தப்பதிவினைச் சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். ;).

   நீக்கு
 18. நாங்களும் நேரில் தரிசித்த உணர்வு.....

  தொடரட்டும் உங்கள் அனுபவங்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் April 20, 2013 at 7:51 PM

   வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

   //நாங்களும் நேரில் தரிசித்த உணர்வு..... தொடரட்டும் உங்கள் அனுபவங்கள்.....//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், வெங்கட்ஜி.

   நீக்கு
 19. பாத காணிக்கை கண்களில் பக்தியினால் நீர் வர வைத்து விட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி April 20, 2013 at 8:12 PM

   வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

   //பாத காணிக்கை கண்களில் பக்தியினால் நீர் வர வைத்து விட்டது!//

   ஆஹா, அப்படியா?

   தாங்கள் எட்டையும் பத்தையும் மட்டுமே எட்டிப்பிடித்து கருத்தளித்துள்ளதும், மற்றவற்றை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளதும் கூட, என் கண்களில் நீர் வர வைத்து விட்டது.

   எனினும் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்வாமீ! ;)

   நீக்கு
 20. பத்துக்குள்ள இடத்தை பிடிச்சுடணும்ன்னு பதிவு போட்டிருக்கேன். பெரியவா அனுக்ரஹன் பண்ணணும்.
  நேத்து திடீர்ன்னு திருப்பதி செல்லும் பாக்கியம் கிடைத்தது.
  திருப்பதி, திருச்சானூர், ஸ்ரீகாளஹஸ்தி மூன்று இடத்துக்கும் சென்று வந்டோம். (நான், அவர், சந்தியா 3 பேரும்)

  மீண்டும் பதிவு கண்டிப்பா போடறேன்.

  நீங்க என் நகைச்சுவையான பின்னூட்டத்தை கேப்பேள்.

  நான் இப்ப மஹா பெரியவாளின் நகைச்சுவையை இங்க கொடுத்திருக்கேன். (உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமாகக் கூட இருக்கலாம்).

  அநேக ராகங்களின் பெயரைச் சொல்லாமலே அவர்
  நகைச்சுவை ததும்ப சங்கேதமாகச் சொன்னவையே
  சங்கீதமாக இனிப்பவை"

  ஒரே ஓர் உதாரணத்துடன்,'விரிவஞ்சி விடுத்தனம்'
  செய்வோம்.

  ஒரு பாடகர்; ஏகப்பட்ட தொல்லை.ரொம்ப விசாரமாயிருக்கு
  மீள்றதுக்கு பெரியவாதான் வழி சொல்லணும்.ஆ

  பெரியவா; நீதான் ஸங்கீதக்காரானாச்சே,ஒங்கிட்டயே
  வழி இருக்கே! தன்னை மறந்து பாடிக்கிண்டிரு! அதைவிட
  வழி,மருந்து வேண்டாம். இப்பவே பாடு.ஸூர்ய சந்திராள்
  ராகத்துல ஐயர்வாள் கிருதி இருக்கே! அதைப்பாடு.

  பாடகர்; ஸூர்ய சந்திராள் ராகமா? பெரியவா எதைச்
  சொல்றான்னு தெரியலியே!

  பெரியவா; ஸூர்யனுக்கு இன்னும் என்ன பேரெல்லாம் உண்டு?

  பாடகர்; ஆதித்யன்,பாஸ்கரன்,ரவி.

  பெரியவா; அதுதான்.

  பாடகர்;[சிரிப்பை அடக்க முடியாமல்] ஓ! ரவிசந்திரிகாவா?

  பெரியவா; ஆமாம். அதுல ஐயர்வாள் பாட்டு தெரியோமோன்னோ?
  'நிரவதி ஸுகத" இல்லே; இன்னூணு அதைப்பாடு.

  விசாரம் என்று விண்ணப்பித்த வித்வான் பாடிய அப்பாடல்
  'மாகேலரா விசாரமு?' தான்! 'நமெக்கென்ன விசாரம்?
  ராமனொருத்தன் இருக்கிறானே!" என்று தெம்பூட்டும் பாடல்.

  நகைச்சுவை,இசையறிவுடன் இங்கே மனசு ஒட்டும்
  ஸிம்பதியும்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI April 20, 2013 at 8:35 PM

   வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   //பத்துக்குள்ள இடத்தை பிடிச்சுடணும்ன்னு பதிவு போட்டிருக்கேன்.//

   அதன் பெயர் பதிவு அல்ல. நான் வெளியிட்டிருப்பது தான் பதிவு. தாங்கள் கருத்துச்சொல்லியிருப்பதன் பெயர் பின்னூட்டம், கருத்துக்கள், மறுமொழி என்று ஏதேதோ சொல்லுவார்கள்.

   [POST = ப்திவு ;

   COMMENTS = பின்னூட்டம், கருத்து, மறுமொழி Etc., OK யா?]

   //பெரியவா அனுக்ரஹம் பண்ணணும். //

   நீங்க பத்துக்குள் போதும் என்று தான் வேண்டினீர்கள். பத்துக்கு பதிலாக இருபதாகவே அனுக்கிரஹம் செய்துள்ளார்கள். பாருங்கோ. உங்களுக்கு இரட்டிப்பு அதிர்ஷ்டம் பாருங்கோ. ;)

   //நேத்து திடீர்ன்னு திருப்பதி செல்லும் பாக்கியம் கிடைத்தது. திருப்பதி, திருச்சானூர், ஸ்ரீகாளஹஸ்தி மூன்று இடத்துக்கும் சென்று வந்தோம். (நான், அவர், சந்தியா 3 பேரும்)//

   ஆஹா, மிகவும் சந்தோஷம். எனக்காகவும் வேண்டிண்டேளா?

   நீங்க போய்வந்த அதே மூன்று இடங்களுக்கும் நாங்கள் ஒரு மூன்று பேர்கள் [மூவரும் ஆண்கள்] போய் வந்தோம். 1983 இல். அது நினைவுக்கு வந்தது. சிரிப்பும் வந்தது. அது ஒரு மிகப்பெரிய கதை.

   //மீண்டும் பதிவு கண்டிப்பா போடறேன்.//

   [ பதிவு = பின்னூட்டம் ]

   இதை நான் வழக்கம்போல கட்டாயம் நம்புகிறேன். ;)

   //நீங்க என் நகைச்சுவையான பின்னூட்டத்தை கேப்பேள்.//

   ஆஹா, பேஷா ! கேட்கக் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

   >>>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> திருமதி ஜெயந்தி மேடம் [2]

   //நான் இப்ப மஹா பெரியவாளின் நகைச்சுவையை இங்க கொடுத்திருக்கேன். (உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமாகக் கூட இருக்கலாம்).//

   சொல்லுங்கோ, காதைக்கழட்டி உங்க பக்கம் வெச்சுட்டேன். ;)

   //அநேக ராகங்களின் பெயரைச் சொல்லாமலே அவர் நகைச்சுவை ததும்ப சங்கேதமாகச் சொன்னவையே சங்கீதமாக இனிப்பவை" ஒரே ஓர் உதாரணத்துடன்,'விரிவஞ்சி விடுத்தனம்' செய்வோம்.//

   ”விரிவஞ்சி விடுத்தனம்” என்பது கிளிகொஞ்சும் பேச்சாக இருக்கே ;)))))

   ஒரு பாடகர்:- ஏகப்பட்ட தொல்லை.ரொம்ப விசாரமாயிருக்கு மீள்றதுக்கு பெரியவாதான் வழி சொல்லணும்.

   பெரியவா:- நீதான் ஸங்கீதக்காரானாச்சே,ஒங்கிட்டயே வழி இருக்கே! தன்னை மறந்து பாடிக்கிண்டிரு! அதைவிட
   வழி, மருந்து வேண்டாம். இப்பவே பாடு.ஸூர்ய சந்திராள் ராகத்துல ஐயர்வாள் கிருதி இருக்கே! அதைப்பாடு.

   பாடகர்:- ஸூர்ய சந்திராள் ராகமா? பெரியவா எதைச்சொல்றான்னு தெரியலியே!

   பெரியவா:- ஸூர்யனுக்கு இன்னும் என்ன பேரெல்லாம் உண்டு?

   பாடகர்:- ஆதித்யன், பாஸ்கரன், ரவி.

   பெரியவா:- அதுதான்.

   பாடகர்:- [சிரிப்பை அடக்க முடியாமல்] ஓ! ரவிசந்திரிகாவா?

   பெரியவா:- ஆமாம். அதுல ஐயர்வாள் பாட்டு தெரியோமோன்னோ? 'நிரவதி ஸுகத" இல்லே; இன்னூணு அதைப்பாடு.

   விசாரம் என்று விண்ணப்பித்த வித்வான் பாடிய அப்பாடல் 'மாகேலரா விசாரமு?' தான்! 'நமெக்கென்ன விசாரம்? ராமனொருத்தன் இருக்கிறானே!" என்று தெம்பூட்டும் பாடல்.

   நகைச்சுவை,இசையறிவுடன் இங்கே மனசு ஒட்டும் ஸிம்பதியும்தான்!//

   மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள், மேடம்.

   அனைத்தும் அறிந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இப்படித்தான் ஏதாவது ஜாலியாகப் பொடிவைத்துச் சொல்வார்கள். கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கும். நமக்குப் புரிந்துகொள்ளத்தான் கொஞ்சம் நேரம் ஆகும். ;)

   ooooo

   நீக்கு
 21. //எங்களுக்குக்கிடைத்த இந்த பொக்கிஷமான பாதுகைகள் சுயநலமாக எங்கள் குடும்பத்தை மட்டும் ரக்ஷிப்பதோடு மட்டுமல்லாமல், பொது நலமாக ஓர் ஸத் ஸங்கம் அமையக் காரணமாகவும் ஆகி, இன்று சமுதாயத்தில் பலரையும், பலகுடும்பங்களையும் நல்வழிப்படுத்தி ரக்ஷித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. //
  அப்படியே தொடரட்டும்.
  அனுக்கிரஹம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. T.N.MURALIDHARAN April 20, 2013 at 11:55 PM

   வாருங்கள், வணக்கம்.

   *****எங்களுக்குக்கிடைத்த இந்த பொக்கிஷமான பாதுகைகள் சுயநலமாக எங்கள் குடும்பத்தை மட்டும் ரக்ஷிப்பதோடு மட்டுமல்லாமல், பொது நலமாக ஓர் ஸத் ஸங்கம் அமையக் காரணமாகவும் ஆகி, இன்று சமுதாயத்தில் பலரையும், பலகுடும்பங்களையும் நல்வழிப்படுத்தி ரக்ஷித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.*****

   //அப்படியே தொடரட்டும். அனுக்கிரஹம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் //

   மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்,

   நீக்கு
 22. கோபத்திலும், குணத்திலும், வேதத்திலும், சாஸ்திரங்களிலும், சிரத்தையிலும், ஈடுபாட்டிலும், யோக்யதையிலும் என் தந்தையின் குணம் யாவும் கொண்டவனாகவே இருக்கிறான். ஆனால் அவரைப்போல ஸ்தூல சரீரமாக இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பானவனாக ஒல்லியாகவே இருக்கிறான். அதனால் எல்லாப்பொறுப்புக்களையும் அவனிடம் நான் ஒப்படைத்து விட்டேன். மேற்பார்வைகள் மட்டும் செய்து அவ்வப்போது ஆதரவுகளும் ஆலோசனைகளும் அளித்து வருகிறேன்.
  உங்களின் ஈடுபாட்டுடனான வழிபாடு பிரம்மிக்க வைக்கிறது ஐயா. நல்ல படங்களுடனான பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sasi Kala April 21, 2013 at 12:38 AM

   வாங்கோ கவிதாயினி அவர்களே, வணக்கம்.

   *****கோபத்திலும், குணத்திலும், வேதத்திலும், சாஸ்திரங்களிலும், சிரத்தையிலும், ஈடுபாட்டிலும், யோக்யதையிலும் என் தந்தையின் குணம் யாவும் கொண்டவனாகவே இருக்கிறான். ஆனால் அவரைப்போல ஸ்தூல சரீரமாக இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பானவனாக ஒல்லியாகவே இருக்கிறான். அதனால் எல்லாப்பொறுப்புக்களையும் அவனிடம் நான் ஒப்படைத்து விட்டேன். மேற்பார்வைகள் மட்டும் செய்து அவ்வப்போது ஆதரவுகளும் ஆலோசனைகளும் அளித்து வருகிறேன்.*****

   //உங்களின் ஈடுபாட்டுடனான வழிபாடு பிரம்மிக்க வைக்கிறது ஐயா. நல்ல படங்களுடனான பகிர்வுக்கு நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், தென்றல் போன்ற இனிய கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 23. பாதுகைகள் பூஜிக்கப்படுவது குறித்து மனம் மிகவும் சந்தோஷம் அடைகிறது. இது உங்களிடம் எப்படி வந்து சேர்ந்தது என்பது சொல்லவில்லையே? மஹாபெரியவாளே பாதுகை ரூபமாக வந்து குடி இருக்கிறார் என்பதும் புரிகிறது. எல்லாம் அவர் அருள். ரொம்பவே கொடுத்து வைச்சவர் நீங்க. அருமையான சத்சங்கம். தொடர்ந்து நல்லபடியாக நடக்கப் பிரார்த்தனைகள். பெரியவா அருளால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam April 21, 2013 at 1:13 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இது உங்களிடம் எப்படி வந்து சேர்ந்தது என்பது சொல்லவில்லையே?//

   அதுவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹம் தான். அதிலும் சில Miracles நிகழ்ந்துள்ளன. தங்களைச் சந்திக்கும் போது அதைப்பற்றி விபரமாகச் சொல்கிறேன்.

   //பாதுகைகள் பூஜிக்கப்படுவது குறித்து மனம் மிகவும் சந்தோஷம் அடைகிறது. மஹாபெரியவாளே பாதுகை ரூபமாக வந்து குடி இருக்கிறார் என்பதும் புரிகிறது. எல்லாம் அவர் அருள். ரொம்பவே கொடுத்து வைச்சவர் நீங்க. அருமையான சத்சங்கம். தொடர்ந்து நல்லபடியாக நடக்கப் பிரார்த்தனைகள். பெரியவா அருளால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 24. சிறப்பான பூஜையின் விளக்கங்கள்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VijiParthiban April 21, 2013 at 1:18 AM

   வாங்கோ, வணக்கம்.

   //சிறப்பான பூஜையின் விளக்கங்கள்... நன்றி ஐயா...//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 25. மிகவும் அருமையாக இருக்கிறது பாத பூசை . நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொண்டு வைத்திருக்கிறது உங்கள் பதிவு.
  எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பதில்லையே. அது தானே உண்மை,
  திருமதி ரஞ்சனி சொல்லியிருப்பது போல் ஒரு ஆன்மிக மலரைப்
  படிப்பது போலவே உள்ளது.
  நீங்கள் ஒரு பக்தி பரவசத்துடனேயே எழுதியிருப்பதை உணர முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. rajalakshmi paramasivam April 21, 2013 at 3:15 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மிகவும் அருமையாக இருக்கிறது பாத பூசை . நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொண்டு வைத்திருக்கிறது உங்கள் பதிவு.
   எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பதில்லையே. அது தானே உண்மை, திருமதி ரஞ்சனி சொல்லியிருப்பது போல் ஒரு ஆன்மிக மலரைப் படிப்பது போலவே உள்ளது. நீங்கள் ஒரு பக்தி பரவசத்துடனேயே எழுதியிருப்பதை உணர முடிகிறது.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 26. பாதுகையே,பரகதி தருவதும், குருவருள் தெரிவதும்மிப்பாதுகையே. பாதுகை பூஜை மனதை நெகிழ்விக்கிரது. சேரிடமரிந்து சேர் என்பதற்கிணங்க, சிரத்தையோடு செய்பவருக்கு, அதைக் கொடுத்திருப்பதும், அவ்விடம்,நடக்கும் பக்திப் பரவச பூஜையும்,பூஜைக்கு வரும் மலர்களும், பக்திமான்களும்,கேட்கவே இனிப்பாக இருக்கிரது. ஆசார சீலமாக பூசிப்பது என்பது பார்த்து அனுபவித்தவர்களுக்குத் தெரியும். எல்லோராலும் இயலமுடியாத காரியம். இதெல்லாம் படிக்கும் போது எங்கேயோ ஒரு உலகத்தில் ஸஞ்சரிப்பது போன்ற உணர்ச்சியை உண்டாக்குகின்றது. லோகாஸ்ஸமஸ்த்தாஸ் ஸுகிநோ பவந்து. எல்லோரும் நன்ராக இருக்க வேண்டும்். நன்மையே அருள்வாய்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kamatchi April 21, 2013 at 3:46 AM

   வாங்கோ மாமி, அநேக நமஸ்காரங்கள்.

   //பாதுகையே, பரகதி தருவதும், குருவருள் தெரிவதும் இப்பாதுகையே. பாதுகை பூஜை மனதை நெகிழ்விக்கிறது. சேரிடமரிந்து சேர் என்பதற்கிணங்க, சிரத்தையோடு செய்பவருக்கு, அதைக் கொடுத்திருப்பதும், அவ்விடம்,நடக்கும் பக்திப் பரவச பூஜையும், பூஜைக்கு வரும் மலர்களும், பக்திமான்களும், கேட்கவே இனிப்பாக இருக்கிறது.

   ஆசார சீலமாக பூசிப்பது என்பது பார்த்து அனுபவித்தவர்களுக்குத் தெரியும். எல்லோராலும் இயலமுடியாத காரியம்.

   இதெல்லாம் படிக்கும் போது எங்கேயோ ஒரு உலகத்தில் ஸஞ்சரிப்பது போன்ற உணர்ச்சியை உண்டாக்குகின்றது. லோகாஸ் ஸமஸ்த்தாஸ் ஸுகிநோ பவந்து. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். நன்மையே அருள்வாய்.//

   தங்களின் அன்பான வருகைக்கும்,. அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், மனம் நிறைந்த ஆசிகளுக்கும், அடியேனின் மனமார்ந்த அன்பு நன்றிகளுடன் கூடிய நமஸ்காரங்கள், மாமி.

   நீக்கு
 27. வணங்கி நிற்கின்றோம். பாத பூசை பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர்.

  சற்சங்கம் , சங்கீர்த்தனம் நடைபெறுவது மகிழ்ச்சியைத்தருகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதேவி April 21, 2013 at 4:54 AM

   வாங்கோ, வணக்கம். இந்தத்தொடரில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள [பகுதி-1 முதல் பகுதி-10 வரை] அனைத்துப் பகுதிகளுக்கும் விடாமல் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களில் [இந்த நிமிடம் வரை 20 பேர்கள்] தாங்களும் ஒருவராக உள்ளீர்கள் என்பதை நினைக்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   //வணங்கி நிற்கின்றோம். பாத பூசை பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர். சற்சங்கம் , சங்கீர்த்தனம் நடைபெறுவது மகிழ்ச்சியைத்தருகின்றது.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான ரம்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 28. பெரியவரின் அனுக்கிரகம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருக்கிறது. நீங்களும் உங்களுக்கு கிடைத்த மஹா பெரியவரின் பாதுகை பற்றிய விபரங்களும், அதற்கு பூஜை செய்யும் விதத்தையும் மிக விளக்கமாக எழுதி,எங்களுக்கும்(வாசித்ததால்) மஹானின் அருளைப் பெற்றுத் தந்துவிட்டீங்க.
  உண்மையிலே உங்க தகப்பனார்தான் உங்க அண்ணாவின் பிள்ளையாக பிறந்திருக்கிறார். பெரியவரின் அருளால் அனைத்தும் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ammulu April 21, 2013 at 7:31 AM

   வாங்கோ அம்முலு, வாங்கோ .... வணக்கம்.

   //பெரியவரின் அனுக்கிரகம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருக்கிறது. நீங்களும் உங்களுக்கு கிடைத்த மஹா பெரியவரின் பாதுகை பற்றிய விபரங்களும், அதற்கு பூஜை செய்யும் விதத்தையும் மிக விளக்கமாக எழுதி, எங்களுக்கும் (வாசித்ததால்) மஹானின் அருளைப் பெற்றுத் தந்துவிட்டீங்க. //

   மிக்க் மகிழ்ச்சி, அம்முலு. எல்லோருக்கும் அவர்களின் அருள் கிடைத்து, எல்லோரும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், ஒருவருக்கொருவர் அன்புடனும் இருக்கப் பிரார்த்திப்போம்.

   //உண்மையிலே உங்க தகப்பனார்தான் உங்க அண்ணாவின் பிள்ளையாக பிறந்திருக்கிறார்.//

   ஆமாம் அம்முலு. அவனிடம் என் தந்தையின் வேதத்துடன் கூட இன்னும் அவரின் பல குணாதியங்களும் அமைந்துள்ளன.

   மேலும் அவனின் ஜன்ம நக்ஷத்திரமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரமாகிய “அனுஷம்” தான் என்பதும் ஆச்சர்யமாகவே உள்ளது.

   //பெரியவரின் அருளால் அனைத்தும் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.

   நீக்கு
 29. நன்றி ஐயா சிறப்பான பூஜை பற்றியும் அதன் தொடர்புடைய அனைத்து விஷயங்களும் பகிர்ந்து கொண்டதற்கு நாங்களும் கண்டு களித்தோம் நல்லவைகள் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. poovizi April 21, 2013 at 7:43 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நன்றி ஐயா சிறப்பான பூஜை பற்றியும் அதன் தொடர்புடைய அனைத்து விஷயங்களும் பகிர்ந்து கொண்டதற்கு நாங்களும் கண்டு களித்தோம் நல்லவைகள் தொடரட்டும்//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 30. பாதுகைகளை நமஸ்கரிக்கின்றேன்,இங்கு நீங்கள் பகிர்ந்துள்ள விசியங்கள் எனக்கு பிரமிப்பாக உள்ளது,பாதுகைக்கு வெள்ளி கவசம் இட்டது மிகிவும் சிறப்பு . கிடைத்த வரலாறு சொல்லியாச்சா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. thirumathi bs sridhar April 21, 2013 at 3:45 PM

   வாங்கோ ஆச்சி மேடம், வணக்கம்.

   //பாதுகைகளை நமஸ்கரிக்கின்றேன். இங்கு நீங்கள் பகிர்ந்துள்ள விஷ்யங்கள் எனக்கு பிரமிப்பாக உள்ளன.//

   சந்தோஷம். நீங்கள் எல்லாவற்றையும் [பலரின் பின்னூட்டங்கள், அதற்கான என் பதில்கள் போன்ற எல்லாவற்றையும்] பொறுமையாகப்படித்து விட்டு அதன்பின் கருத்தளிப்பது எனக்கும் பிரமிப்பாகவே உள்ளது.

   //பாதுகைக்கு வெள்ளி கவசம் இட்டது மிகவும் சிறப்பு//

   ஆமாம் அப்போது தான் (1) அதை நாம் பத்திரமாக பொக்கிஷமாகப் பாதுகாக்கும் எண்ணம் ஏற்படும். மேலும் (2) பால் அபிஷேகம் முதலியன செய்யும் போது, உள்ளே உள்ள மரப்பாதுகைகள், நாளடைவில் அதனால் சேதமடையாமல் காக்கப்படும்.

   //கிடைத்த வரலாறு சொல்லியாச்சா ?//

   தங்களின் பின்னூட்டம் கிடைத்த வரலாறா? ;)))))

   ஒருவழியா இந்தத்தொடரின் முதல் பத்து பகுதிகளுக்கும் கருத்துக்கள் சொல்லி அசத்தியுள்ளீர்கள் எனத்தெரிகிறது. மிக்க நன்றி + சந்தோஷம்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 31. மகானின் ஆசியும் பாதுகையும் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வணங்குகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உஷா அன்பரசு April 21, 2013 at 9:58 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மகானின் ஆசியும் பாதுகையும் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வணங்குகிறேன்!//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 32. இந்தக் காலத்தில் இப்படி ஒரு சிரத்தையுடன் கூடிய நிகழ்வுகளா... பிரமிப்பாக இருக்கிறது. வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். April 22, 2013 at 1:52 AM

   வாங்கோ ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

   //இந்தக் காலத்தில் இப்படி ஒரு சிரத்தையுடன் கூடிய நிகழ்வுகளா... பிரமிப்பாக இருக்கிறது. வணங்குகிறேன்.//

   ஆமாம் ஸ்ரீராம். இந்தக்காலத்திலும் இதுபோல சிரத்தையுடன் கூடிய நிகழ்வுகள் ஆங்காங்காங்கே ஊருக்குக்கொஞ்சமாவது நடந்துகொண்டே தான் உள்ளன. பிரமிப்பாகத்தான் உள்ளன.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்.

   நீக்கு
 33. உஸ்ஸ்ஸ் அப்பாடா பின்னூட்டம் 50 ஐத் தொடுமுன் கால் பதித்திட்டேன்ன்.... வைரவர் என்னைக் கைவிடேல்லை:) பூஸோ கொக்கோ...:).. நில்லுங்கோ படிச்சிட்டு வாறன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 22, 2013 at 5:38 AM

   வாங்கோ அதிரா, வாங்கோ, வணக்கம்.

   //உஸ்ஸ்ஸ் அப்பாடா பின்னூட்டம் 50 ஐத் தொடுமுன் கால் பதித்திட்டேன்ன்.... வைரவர் என்னைக் கைவிடேல்லை:) பூஸோ கொக்கோ...:)..//

   ;))))) மிக்க மகிழ்ச்சி அதிரா.

   //நில்லுங்கோ படிச்சிட்டு வாறன்...//

   ரொம்ப நேரம் என்னால் நிற்க முடியாது. கால் வலிக்கும். சீக்கரமா வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ;)

   நீக்கு
 34. //
  10] பூஜைக்கு வந்த மலரே வா !
  //

  நோஓஓஓஓஓஒ மலரெனச் சொன்னால் மலரைப் பற்றிய பதிவாக இருக்கோணும்:).. என்னை மாதிரி சுவீட் 16 பிள்ளைகளை ஏமாத்தக் கூடாது...:).. சரி சரி .. “பூஜை ஆகமுன்னம் சன்னதம் கொள்ளாதே” என அம்மம்மா சொல்றவ:) அதனால மேலே படிச்சிட்டுக் கதைக்கிறன்:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 22, 2013 at 5:41 AM
   ***** 10] பூஜைக்கு வந்த மலரே வா !*****

   //நோஓஓஓஓஓஒ மலரெனச் சொன்னால் மலரைப் பற்றிய பதிவாக இருக்கோணும்:).. என்னை மாதிரி சுவீட் 16 பிள்ளைகளை ஏமாத்தக் கூடாது...:)..//

   உங்களை யாராவது ஏமாற்ற முடியுமா? நீங்க தான் சுவீட் 16 என்று கிட்டத்தட்ட 24 வருஷங்களுக்கு மேலாகவே சொல்லிட்டு இருக்கீங்க, எல்லோரையும் ஏமாத்திக்கிட்டு இருக்கீங்கன்னு, யாரோ வந்து என் கனவுலே சொன்னாங்கோ. [அப்போ 16+24=40 ஆஆஆ என நினைத்தேன்.] ஆனாக்க நான் அதை நம்பவே இல்லை அதிரா. நீங்க சொல்லும் சுவீட் 16 என்பதை மட்டும் தான் நம்பறேன். நீங்களும் நம்புங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   //சரி சரி .. “பூஜை ஆகமுன்னம் சன்னதம் கொள்ளாதே” என அம்மம்மா சொல்றவ:) அதனால மேலே படிச்சிட்டுக் கதைக்கிறன்:)...//

   கதையுங்கோ கதையுங்கோ. அம்மம்மா வாழ்க!

   நீக்கு
 35. //அந்த கிடைத்தற்கரிய பாதுகைகளை ஓர் புது வெள்ளித்தட்டில் வைத்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரமான அனுஷ நக்ஷத்திரத்தில், ஒவ்வொரு மாதமும் சிறப்பான பூஜைகள் செய்து வந்தேன்.//

  ஓ விலைமதிப்பற்ற பொக்கிஷம்... என்ன சொல்வதென்றே தெரியவில்லை... வார்த்தைகள் வருகுதில்லை.

  ///அவர்களின் பாத பூஜைக்கென்றே 108 நாமாவளிகள் கொண்ட அஷ்டோத்திர மந்திரங்கள் உள்ளன. /// எனக்கு எல்லாமே புதுத்தகவல்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 22, 2013 at 5:43 AM
   *****அந்த கிடைத்தற்கரிய பாதுகைகளை ஓர் புது வெள்ளித்தட்டில் வைத்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரமான அனுஷ நக்ஷத்திரத்தில், ஒவ்வொரு மாதமும் சிறப்பான பூஜைகள் செய்து வந்தேன்.*****

   //ஓ விலைமதிப்பற்ற பொக்கிஷம்... என்ன சொல்வதென்றே தெரியவில்லை... வார்த்தைகள் வருகுதில்லை.//

   ;))))) மிக்க மகிழ்ச்சி.

   *****அவர்களின் பாத பூஜைக்கென்றே 108 நாமாவளிகள் கொண்ட அஷ்டோத்திர மந்திரங்கள் உள்ளன.*****

   //எனக்கு எல்லாமே புதுத்தகவல்கள்...//

   எனக்கும் அன்று இதெல்லாம் புதுத்தகவல்களாகவே இருந்தன. எல்லாம் பழகப்பழகத்தான் புரியவரும்.

   [’பழகப்பழக பாலும் புளிக்கும்’ என்று இங்கே ஓர் பழமொழி கூட சொல்லுவாங்கோ, அதிரா ;) ]

   நீக்கு
 36. ///இந்தப்புனிதமான பாதுகைகள் எங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரித்தபின், வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல நல்ல திருப்புமுனைகள் ஏற்பட்டன. //

  மிக நல்ல விஷயம், நம்பிக்கைதானே வாழ்க்கை... நம்பிக்கைதானே கடவுள். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 22, 2013 at 5:44 AM

   *****இந்தப்புனிதமான பாதுகைகள் எங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரித்தபின், வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல நல்ல திருப்புமுனைகள் ஏற்பட்டன.*****

   //மிக நல்ல விஷயம், நம்பிக்கைதானே வாழ்க்கை... நம்பிக்கைதானே கடவுள். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.//

   இதை அழகாக, மிக அழகாக அருமையாகச் சொல்லியுள்ள அதிராவின் வாய்க்கு ஒரு ஸ்பூனாவது சர்க்கரை போட வேண்டும் என என் மனம் துடிக்குது.

   அதிரா, என்னால் இங்கிருந்தோ அல்லது அங்கு வந்தோ போட முடியாத நிலை. எனவே நீங்களே ஜீனி டப்பாவை எடுத்து, எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு போட்டுக்கொள்ளவும். ;)

   ”எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்” என்ற தங்களின் வலைப்பதிவு வாசகம் எனக்கு எப்போதுமே மிகவும் பிடிக்கும். சந்தோஷமான வாழ்த்துகள். நீடூழி சந்தோஷமாக வாழ்க!

   நீக்கு
 37. //அவனே இதை மேலும் பல்லாண்டுகள் பூஜிக்க தகுதியானவன் என்ற முடிவுக்கு வந்து ஒப்படைத்து விட்டேன். //

  ஏன் கோபு அண்ணன்? உங்களுக்கு என்ன ஆச்சு? நீங்க நலமாகத்தானே இருக்கிறீங்க?.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 22, 2013 at 5:46 AM

   *****அவனே இதை மேலும் பல்லாண்டுகள் பூஜிக்க தகுதியானவன் என்ற முடிவுக்கு வந்து ஒப்படைத்து விட்டேன்.*****

   //ஏன் கோபு அண்ணன்? உங்களுக்கு என்ன ஆச்சு? நீங்க நலமாகத்தானே இருக்கிறீங்க?.//

   எனக்கு ஒன்றும் ஆகவில்லை அதிரா. நலமாக இருப்பது என்பது வேறு. பூஜை முதலியன செய்வதற்குத் தகுந்தவாறு, உடலையும் உள்ளத்தையும் FIT ஆக வைத்துக்கொள்வது என்பது வேறு.

   இதைப்பற்றியெல்லாம் விரிவாகச்சொல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி பதிவே போடவேண்டும்.

   உதாரணமாக ஒரு கோயில் உள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு அர்ச்சகர், மணி அடிப்பவர், மேளம் அடிப்பவர், ஸ்வாமிக்கு பிரஸாதம் தயாரிப்பவர், காவல் காப்பவர் என பலரும் இருப்பார்கள்.

   தினமும் வருஷத்தின் 365 நாட்களும் அதிகாலை 5 மணிக்குள் கோயில் திறக்கப்பட வேண்டும். நாலு வேளைகள் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள், நைவேத்யம் முதலியன செய்யப்பட வேண்டும் என வைத்துக் கொள்ளுங்கள்.

   இது எவ்வளவு ஒரு கஷ்டமான வேலை தெரியுமா? அந்த அர்ச்சகர் தினமும் 4 மணிக்குள் விழித்துக்கொள்ள வேண்டும். காலைக்கடன்களை முடித்து விட்டு, பல்துலக்கிவிட்டு, தலை முழுகிக்குளிக்க வேண்டும்.

   சுத்தமான மடியான வேஷ்டியாக அணிய வேண்டும். பிறகு அவர் செய்ய வேண்டிய சில நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொள்ள வேண்டும்.

   இதன் பிறகே அவர் அந்த சிவனையோ பெருமாளையோ பூஜிக்க தகுதியானவர் ஆகிறார். மிகச்சரியாக அதிகாலை 5 மணிக்கு, அந்த சிவனுக்கோ, பெருமாளுக்கோ, அம்பாளுக்கோ அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனைகள் நைவேத்யங்கள் முதலியனவற்றை அவர் பொறுப்பாக செய்ய வேண்டும்.

   பொதுமக்களும் ஸ்வாமியை வணங்க வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காகவும் அர்ச்சனை தீபாராதனை முதலிய அனைத்தும் திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். இதையெல்லாம் நினைத்துப்பாருங்கோ. எவ்வளவு கஷ்டம் என உங்களுக்கே புரியும்.

   இதையெல்லாம் உத்தேசித்துத் தான், என்னைவிட, சிரத்தையாகச் செய்யக்கூடியவனும், ஓரளவு பால்ய வயதாக உள்ளவனுமான ஒரு குடும்ப வாரிசிடம் ஒப்படைத்துள்ளேன்.

   நீக்கு
 38. //என் தந்தை இறந்த ஓர் ஆண்டுக்குள் [In between 01.05.1975 and 30.04.1976] அவரின் வாரிசுகளான 2 பிள்ளைகளுக்கும், 2 பெண்களுக்கும் ஆளுக்கு ஒன்று வீதம் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.///

  ஆச்சரியம்தான். எங்கள் அப்பாவுக்கு இரு அக்காக்கள் மொத்தம் மூவர் அப்பா குடும்பத்தில்... மூவருக்கும் ஒரே ஆண்டு ஒரே மாதத்தில் குழந்தைகள் கிடைத்தன. அதில் ஒன்று நான்:) மற்ற இருவரும் ஆண்கள்... அதனாலதான் எனக்கு லெவல் அதிகம்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 22, 2013 at 5:49 AM

   *****என் தந்தை இறந்த ஓர் ஆண்டுக்குள் [In between 01.05.1975 and 30.04.1976] அவரின் வாரிசுகளான 2 பிள்ளைகளுக்கும், 2 பெண்களுக்கும் ஆளுக்கு ஒன்று வீதம் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.*****

   //ஆச்சரியம்தான். எங்கள் அப்பாவுக்கு இரு அக்காக்கள் மொத்தம் மூவர் அப்பா குடும்பத்தில்... மூவருக்கும் ஒரே ஆண்டு ஒரே மாதத்தில் குழந்தைகள் கிடைத்தன. அதில் ஒன்று நான்:) மற்ற இருவரும் ஆண்கள்... அதனாலதான் எனக்கு லெவல் அதிகம்:).//

   கேட்கவே சந்தோஷமாக உள்ளது. அதில் ஒன்று நீங்கள் ;)))))
   மூவரில் நீங்களே பெண் குழந்தை. அதனால் உங்கள் லெவல் அதிகம். உங்கள் லெவலுக்கு அவர்கள் யாருமே வரமுடியாது என்பது உண்மை தான். ஒத்துக்கொள்கிறேன். மிகவும் மகிழ்ச்சி.

   [எல்லாக்கதையும் சொன்னீங்கோ. பிறந்த ஆண்டு மட்டும் சொல்லாமல் விட்டுட்டீங்களே, அதிரா. ;( ]

   நீக்கு
 39. ///இந்தப் பாதுகைகளுக்கு உள்ள சக்தியும், மஹிமையும் இங்கு எழுத்தில் எடுத்துரைக்க முடியாதவை. நாம் நியாயமாக எதை மனதில் வைத்து பிரார்த்தித்துக்கொண்டாலும் அவைகள் உடனடியாக நிறைவேறி வருகின்றன. ///

  மிக அருமை. ஆனா இப்படியானவற்றை வெளியே சொல்லகூடாதெனச் சொல்லுவினம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 22, 2013 at 6:01 AM
   *****இந்தப் பாதுகைகளுக்கு உள்ள சக்தியும், மஹிமையும் இங்கு எழுத்தில் எடுத்துரைக்க முடியாதவை. நாம் நியாயமாக எதை மனதில் வைத்து பிரார்த்தித்துக்கொண்டாலும் அவைகள் உடனடியாக நிறைவேறி வருகின்றன.*****

   //மிக அருமை. ஆனா இப்படியானவற்றை வெளியே சொல்லகூடாதெனச் சொல்லுவினம்...//

   ஆஹா, அப்படியா அதிரா. ஓ.கே. அதிரா, இனி இதைப்பற்றி மூச்சே விடமாட்டேன். அடுத்த இறுதிப்பகுதியில் இதைப்பற்றியே ஒன்றுமே வர வாய்ப்பில்லை.

   ’சொல்லுவினம்’ அழகோ அழகு, கிளிகொஞ்சும் வார்த்தை. ;)))))

   நீக்கு
 40. மலர்களால் பூஜிக்கப்பட்ட பாத அணிகள் பார்க்க மிகவும் நன்றாக இருக்கு... சுபம்!!!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 22, 2013 at 6:03 AM

   //மலர்களால் பூஜிக்கப்பட்ட பாத அணிகள் பார்க்க மிகவும் நன்றாக இருக்கு... சுபம்!!!.//

   ரொம்ப ரொம்ப சந்தோஷம் அதிரா. புயலெனப்புறப்பட்டு வந்து ஒரேயடியாக எட்டு முறை பின்னூட்டமிட்டு, அசத்திட்டீங்கோ.

   தங்களின் அன்பான தொடர்வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.

   அன்புள்ள கோபு அண்ணன்

   நீக்கு
 41. சிலிர்ப்பூட்டும் அனுபவப் பகிர்வு... பாதுகைகளுக்கு அழகிய வெள்ளிக் கவசமிட்டுப் பாதுகாப்பது... அனுஷ நட்சத்திர நாளன்று சிறப்பு பூஜை செய்வது என்று எல்லாமே மனதுக்கு இதம் தரும் செய்திகள். தனிப்பட்ட ஒருவருக்கல்லாமல் தலைமுறைகள் தாண்டியும் பொக்கிஷமாய் பேண வேண்டிய பொக்கிஷம் இவை. தங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் எம்மோடு பகிர்ந்துகொண்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி April 22, 2013 at 11:51 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //சிலிர்ப்பூட்டும் அனுபவப் பகிர்வு... பாதுகைகளுக்கு அழகிய வெள்ளிக் கவசமிட்டுப் பாதுகாப்பது... அனுஷ நட்சத்திர நாளன்று சிறப்பு பூஜை செய்வது என்று எல்லாமே மனதுக்கு இதம் தரும் செய்திகள். தனிப்பட்ட ஒருவருக்கல்லாமல் தலைமுறைகள் தாண்டியும் பொக்கிஷமாய் பேண வேண்டிய பொக்கிஷம் இவை. தங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் எம்மோடு பகிர்ந்துகொண்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.//

   தங்களின் அன்பான தொடர் வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதாக உள்ளது, மேடம்.

   தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 42. பாத அணிகள் பார்க்க ரொம்ப அழகா இருக்கு சார் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sangeetha Nambi April 23, 2013 at 1:49 AM

   வாங்கோ வணக்கம்.

   //பாத அணிகள் பார்க்க ரொம்ப அழகா இருக்கு சார் !!!//

   அவை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா என்ற மிகப்பெரிய மஹான் அணிந்த ஸ்ரீபாத அணிகள் அல்லவா! அதனால் அவைகளைப் பார்க்க கூடுதல் அழகாகத்தான் இருக்கும்.

   தங்களின் அன்பான தொடர்வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 43. //அவனே இதை மேலும் பல்லாண்டுகள் பூஜிக்க தகுதியானவன் என்ற முடிவுக்கு வந்து ஒப்படைத்து விட்டேன். //


  உங்களை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை ..
  இப்படியான குணம் எல்லாருக்கும் வராது அண்ணா .
  சகலவிதத்திலும் பொருத்தமானவரிடம் தான் பொக்கிஷத்தை ஒப்படைத்து இருக்கீங்க .
  ..பொக்கிஷத்துக்கு மணி மகுடம் இப்பதிவு ..


  அண்ணா ஒரு அன்பு வேண்டுகோள்

  பொக்கிஷம் தொடரின் அனைத்து பகுதிகளையும் நூலாக வெளியிடுங்கள் .
  ..பல வாழ்க்கைதத்துவங்களை உள்ளடிக்கியிருக்கு உங்கள் பொக்கிஷ பதிவு .

  வணங்குகின்றேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. angelin April 23, 2013 at 2:41 AM

   வாங்கோ, நிர்மலா, வணக்கம்.

   *****அவனே இதை மேலும் பல்லாண்டுகள் பூஜிக்க தகுதியானவன் என்ற முடிவுக்கு வந்து ஒப்படைத்து விட்டேன்.****/

   //உங்களை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை .. இப்படியான குணம் எல்லாருக்கும் வராது அண்ணா. சகலவிதத்திலும் பொருத்தமானவரிடம் தான் பொக்கிஷத்தை ஒப்படைத்து இருக்கீங்க . ..//

   ஆமாம்ம்ம்ம்மா, அதையெல்லாம் கட்டிக்காத்து பூஜிக்க நிறைய பொறுமை வேண்டும். மிகவும் சுத்தமாக ஆச்சாரமாக எல்லாவித அனுஷ்டானங்களையும் தினமும் கடைபிடிக்க வேண்டியதாக இருக்கும்.

   மாதம் ஒருமுறை வீதம் சுமார் 10 வருஷங்கள் மட்டுமே என்னால் செய்ய முடிந்தது. அவனிடம் சென்ற பிறகு தினமுமே அவை பூஜிக்கப்படுகின்றன. மாதம் ஒரு நாள் மட்டும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

   //பொக்கிஷத்துக்கு மணி மகுடம் இப்பதிவு ..//

   மிக்க மகிழ்ச்சி, நிர்மலா.

   //அண்ணா ஒரு அன்பு வேண்டுகோள் : பொக்கிஷம் தொடரின் அனைத்து பகுதிகளையும் நூலாக வெளியிடுங்கள். ..பல வாழ்க்கைதத்துவங்களை உள்ளடிக்கியிருக்கு உங்கள் பொக்கிஷ பதிவு. வணங்குகின்றேன்.//

   தங்களின் ஆர்வம் + ஈடுபாடு + ஆத்மார்த்தமான ஆலோசனைகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், நிர்மலா.

   பார்ப்போம். எதுவும் நம் கையில் இல்லை. எது எது எப்போ எப்போ எங்கெங்கே எப்படி எப்படி யார் யார் மூலம் நடக்கணும் என்று இருக்கிறதோ, அதுபோல அவர்கள் அருளால் நடத்தி வைக்கப்படும்.

   தங்களின் தொடர் வருகைக்கும், மாசற்ற அன்புக்கும், ஆலோசனைகளுக்கும், அழகான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், நிர்மலா,

   நான் ஸ்ரீபாதுகைகளை வணங்கும் போதெல்லாம் நம் பதிவர்கள் அனைவரையும் என் மனதில் நினைத்துக்கொள்வேன். எல்லோருமே செளக்யமாக சந்தோஷமாக மன நிம்மதியுடன் க்ஷேமமாகத்தான் இருப்பீர்கள். கவலை வேண்டாம்.

   அன்புடன் கோபு அண்ணா

   நீக்கு
  2. angelin April 23, 2013 at 3:11 PM

   //அண்ணா ஒரு அன்பு வேண்டுகோள். பொக்கிஷம் தொடரின் அனைத்து பகுதிகளையும் நூலாக வெளியிடுங்கள். பல வாழ்க்கைதத்துவங்களை உள்ளடிக்கியிருக்கு உங்கள் பொக்கிஷ பதிவு.
   வணங்குகின்றேன்.//

   மின்னூல் வடிவில் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:

   http://www.pustaka.co.in/home/ebook/tamil/gopuwin-pokishangal

   நீக்கு
 44. வணக்கம் ஐயா!
  வருவதற்கு காலதாமதமானதிற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.

  இங்கு உங்கள் பதிவு வந்தது இன்று உங்கள் ஞாபகமூட்டலின்பின்பே எனக்குத்தெரிய வந்தது. அதுவரை தெரிந்திருக்கவில்லை.

  அங்கு என் வலைப்பூவில் நீங்கள் ஏகப்பட்ட கருத்துப்பதிவுகளை இட்டிருப்பதை படிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. ஏனைய பதிவர்களுக்கும் பதில்கருத்துப்பதிவு செய்ய வேண்டி இருந்தது.....

  இங்கு உங்கள் நினைவலைகளுடனான பொக்கிஷப்பகிர்வு மிகச்சிறப்பு.

  எதைக்கொண்டு வந்தோம் எதைக்கொண்டுபோகிறோம் இடையில்மட்டும் இது என்னுடையது என்னும் நிலைப்பாடெதற்கு என்பதே என் கொள்கை. அது எதுவாயினும்...

  அவ்வகையில் உங்களுக்குக் கிடைத்த பொக்கிஷத்தை உரியகாலத்திற்கு வைத்திருந்து வேண்டியவரை வழிபாடு பூஜைகளைச்செய்து பின் முழுமனத்துடன் இன்னொருவரிடம் ஒப்படைத்த பண்பு மகிழ்ச்சியே.

  அனைத்தும் படித்தேன். நல்ல பகிர்வு ஐயா! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளமதி April 24, 2013 at 1:42 AM

   வணக்கம் ஐயா!

   வாங்கோ இளமதி மேடம், வணக்கம். நல்லா இருக்கீங்களா?

   //வருவதற்கு காலதாமதமானதிற்கு மன்னிக்கவேண்டுகிறேன். //

   அதனால் பரவாயில்லைம்ம்மா. யாரை யார் எதற்காக மன்னிக்கணும்?

   //இங்கு உங்கள் பதிவு வந்தது இன்று உங்கள் ஞாபகமூட்டலின் பின்பே எனக்குத்தெரிய வந்தது. அதுவரை தெரிந்திருக்கவில்லை.//

   நம்புகிறேன். எப்படியோ தாங்கள் இங்கு வருகை தந்துள்ளவரை எனக்கு சந்தோஷமே.

   இந்தத்தொடரின் முதல் ஒன்பது பகுதிக்கும் தவறாமல் தாங்கள் வருகை தந்து, தங்களின் பொக்கிஷமான கருத்துக்களை வாரி வாரி வழங்கியிருந்தீர்கள்.

   அப்படியிருக்க பத்தாம் பகுதிக்கு மட்டும் இதுவரை வரக்காணோமே என்ற ஆதங்கத்துடன் என் மனது சற்றே அங்கலாய்த்தது. அதனால் மட்டுமே நினைவூட்ட விரும்பினேன். பிறகு தாங்கள் வருகை தராமல் இருப்பதற்கு வேறு ஏதாவது முக்கிய வேலைகளோ அல்லது வேறு எதாவது முக்கியக் காரணங்களோ இருக்கக்கூடும் என நினைத்து, அந்த என் நினைவூட்டலையும் நானே நீக்கி விட்டேன்.

   //அங்கு என் வலைப்பூவில் நீங்கள் ஏகப்பட்ட கருத்துப்பதிவுகளை இட்டிருப்பதை படிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. ஏனைய பதிவர்களுக்கும் பதில்கருத்துப்பதிவு செய்ய வேண்டி இருந்தது.....//

   நியாயம் தான். பிரபலமாகிவரும் கவிதாயினி என்றால் சும்மாவா? ;) எதற்குமே நேரம் போதாது தான். நானும் ஒத்துக்கொள்கிறேன்.

   எனக்கே அப்படித்தான் உள்ளது. தாங்கள் ஒரு பொறுப்புள்ள இல்லத் தலைவியாகவும் இருந்துகொண்டு, பிரபலமாகிவரும் பதிவராகவும், கவிதாயினியாகவும் இருந்து வருபவர் என்றால் கேட்கவே வேண்டாம். நேரமே போதவே போதாதுதான்.

   தாங்கள் மேலும் மேலும் வெற்றியடைய, வெற்றியின் உச்சத்தினை எட்ட என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   //இங்கு உங்கள் நினைவலைகளுடனான பொக்கிஷப்பகிர்வு மிகச்சிறப்பு.//

   ரொம்பவும் சந்தோஷம்மா.

   ”நினைவலைகள்” அவை என்றுமே இனிமையானவைகளே.
   அழகிய சொல்லாடல் தங்களுடையது. ;)))))

   //எதைக்கொண்டு வந்தோம் எதைக்கொண்டுபோகிறோம்?
   இடையில்மட்டும் இது என்னுடையது என்னும் நிலைப்பாடெதற்கு என்பதே என் கொள்கை. அது எதுவாயினும்... //

   தங்கள் வாயால் ‘கீதா உபதேசம்’ கேட்க மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அதைப்படிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு ஞானம் ஏற்படுவது போலத்தான் எனக்கும் தோன்றும்.

   ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எல்லா நேரமும் எல்லாவற்றையும் நம்மால் உதறிவிட மனம் வருவது இல்லை என்பதே உண்மை. ஞான வைராக்யம் எல்லோருக்கும் வந்து விடும் எனச்சொல்லவே முடியாது தானே!

   ஆசாபாசங்களுக்கு அடிமையாகும் சாதாரணமனிதர்கள் தானே நம்மில் பெரும்பாலோரும். அதில் ஒன்றும் தவறே இல்லை. நம்மை நாமே வருத்திக்கொண்டு ஏமாற்றிக்கொள்ளவே வேண்டாம், என்று தான் நானும் நினைக்கிறேன்.

   //அவ்வகையில் உங்களுக்குக் கிடைத்த பொக்கிஷத்தை உரியகாலத்திற்கு வைத்திருந்து வேண்டியவரை வழிபாடு பூஜைகளைச்செய்து பின் முழுமனத்துடன் இன்னொருவரிடம் ஒப்படைத்த பண்பு மகிழ்ச்சியே.//

   பலம் + பலகீனம், எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்து தான் பொக்கிஷமான அவற்றை பொறுப்பான வேறொருவரிடம் ஒப்படைத்தும் விட்டேன்.

   //அனைத்தும் படித்தேன். நல்ல பகிர்வு ஐயா! மிக்க நன்றி!//

   மிகவும் சந்தோஷம்ம்மா. எவ்வளவோ பிஸி ஷெட்யூல்களுக்கு இடையேயும், ம்றக்காமல் நினைவு வைத்துக்கொண்டு, இங்கு என் தளம் நோக்கிய தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்ம்ம்மா.

   நீக்கு
 45. வணக்கம் ஐயா!”பொக்கிஷம்” மனம் நெகிழச் செய்தது!
  உங்களின் அட்சயா! (http://www.krishnaalaya.com )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. krishna ravi April 24, 2013 at 4:48 AM

   //வணக்கம் ஐயா!//

   வாருங்கள், வணக்கம்.

   //”பொக்கிஷம்” மனம் நெகிழச் செய்தது!
   உங்களின் அட்சயா! (http://www.krishnaalaya.com )//

   மிக்க மகிழ்ச்சி.

   தங்களின் அன்பான வருகைக்கும் நெகிழ்ச்சியான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
 46. பூஜைகளும் பாராயணமும் என நல்லதோர் விஷயம். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 47. கோவை2தில்லி April 25, 2013 at 12:19 AM

  வாங்கோ, வணக்கம்.

  //பூஜைகளும் பாராயணமும் என நல்லதோர் விஷயம். தொடருங்கள்.//

  மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். தங்களின் அன்பான தொடர்வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,

  பதிலளிநீக்கு
 48. பதில்கள்
  1. Jaleela Kamal April 28, 2013 at 5:10 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மிக சிறப்பான பகிர்வு//

   தங்களின் அன்பான வருகைக்கும் மிகச் சிறப்பான பகிர்வு என்ற சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 49. Very glad to know about all the good happenings Gopu Sir. Your faith on Mahaperiyava brings the blessings in the form of good happenings. Through your post, I could also seek mahaperiyava's blessings. The pooja photos are so divine. May god bless you with a healthy & happy life.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mira April 28, 2013 at 5:40 AM

   வாங்கோ மீரா, வணக்கம்.

   //Very glad to know about all the good happenings Gopu Sir. Your faith on Mahaperiyava brings the blessings in the form of good happenings. Through your post, I could also seek mahaperiyava's blessings. The pooja photos are so divine. May god bless you with a healthy & happy life.//

   தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான, அழகிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மீரா.

   நீக்கு
 50. Appa enna poonium......
  Thoddu kannil otthikonden.
  Really very divine Sir,
  That too i am now only return from one pilgrimage programme and Guru Padukai seems tobe blessing me i suppose.
  Thanks Sir for the photos.
  Its not mear words......you know.....
  viji

  பதிலளிநீக்கு
 51. viji May 5, 2013 at 1:10 AM

  வாங்கோ விஜி மேடம், வணக்கம்.

  //Appa enna poonium......
  Thoddu kannil otthikonden.
  Really very divine Sir,

  அப்பா, என்ன புண்ணியம். தொட்டுக்கண்ணில் ஒத்திக்கொண்டேன். உண்மையிலேயே மிகவும் தெய்வீகம் சார்.//

  மிகவும் சந்தோஷம் விஜி மேடம் ....


  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபு >>>>> விஜி மேடம் [2] [100க்கு 100]

   //That too i am now only return from one pilgrimage programme and Guru Padukai seems tobe blessing me i suppose. Thanks Sir for the photos. Its not mear words......you know..... viji

   அதுவும் இப்போது தான் நான் ஒரு க்ஷேத்ரத்திற்கு ஒரு முக்கிய நிகழ்ச்சிக்காகச் சென்று வந்த உடனே, இந்தப்பதிவினில் ஸ்ரீபாதுகைகளை படங்களில் தரிஸித்தது எனக்கு ஓர் ஆசீர்வாதமாக நினைக்கத்தோன்றுகிறது. ஸ்ரீ பாதுகைகளை படங்களாகக் காட்டியதற்கு நன்றிகள் சார். இது வெறும் நன்றி என்ற சாதாரண வார்த்தைகள் அல்ல என்பது உங்களுக்கே தெரியும். - விஜி//

   அனைத்தும் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான உணர்வுபூர்வமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், விஜி மேடம்.

   நீக்கு
 52. அருமையான பதிவு.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 53. Rathnavel NatarajanMay 21, 2013 at 4:43 AM

  வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

  //அருமையான பதிவு. நன்றி ஐயா.//

  மிக்க ம்கிழ்ச்சி + இனிய நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 54. வயதான பிறகு நம் உடம்பு நாம் சொன்னதைக் கேட்க மாட்டேனென்கிறது.

  பதிலளிநீக்கு
 55. இந்த பதிவு படித்ததும் மனசெல்லாம் ஒரு பரவச நிலைல இருக்கு.மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட பாதுகலகளின் மகிமைதான் கண்முன்னால நிக்குது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் August 17, 2015 at 3:38 PM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

   //இந்த பதிவு படித்ததும் மனசெல்லாம் ஒரு பரவச நிலையிலே இருக்கு. மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட பாதுகைகளின் மகிமைதான் கண்முன்னால நிக்குது//

   இருக்கலாம். அதனால் தான் மலர்களைப்போன்ற மென்மையான தங்களின் பெயரே ’பூந்தளிர்’ என அழகாக உள்ளது. :)

   தங்களின் அன்பான வருகைக்கும், மனசெல்லாம் பரவச நிலையை ஏற்படுத்தும் அழகான மணம் வீசும் மகிமை வாய்ந்த கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 56. மரத்தால இருக்குற பாதுகைகளுக்கு வெள்ளில பட்டயம் பண்ணி போட்டீகளா. நல்லாருக்குது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 25, 2015 at 9:54 AM

   //மரத்தால இருக்குற பாதுகைகளுக்கு வெள்ளில பட்டயம் பண்ணி போட்டீகளா. நல்லாருக்குது//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   நீக்கு
 57. அர்ச்சிக்கப்பட்ட மலர்க்குவியலுக்கு நடுவில் பாதுகைகளின் தரிசனம் மெய் சிலிர்க்கிறது.

  பதிலளிநீக்கு
 58. பொக்கிஷங்கள் பொருத்தமானவரையே சென்று சேர்கின்றன. சுவையான பதிவு..நன்றி.

  பதிலளிநீக்கு
 59. Mail message received on 4th May 2017 at 11.43 AM

  எனது அன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய, உயர்திரு. கோபு ஸார் அவர்களுக்கு,

  ஆச்சரியமாக இருக்குமே. எனக்குள்ளும் ஆச்சரியம் தாண்டவமாடுகிறது.

  இன்று உங்களின் பொக்கிஷம் என்ற தாங்கள் எனக்கு அளித்த பரிசு புத்தகத்தைப் படித்தேன்.

  ஆஹா... புத்தகமே பொக்கிஷம் தான். அதில் இருக்கும் தங்களது அத்தனை பொக்கிஷங்களும் எனக்குப் பொக்கிஷமாகவே தெரிந்தது.

  மஹா பெரியவரின் அருகில் நீங்கள் நிற்கும், குளிக்கும், பண்டரிபுர அனுபவம்... அவருக்கு மிக சமீபத்தில் ஆற்றில் குளித்த அனுபவங்கள் அனைத்தையும் படித்ததும், மனதுக்குள் ஒரு இதமான நெகிழ்ச்சி.

  இது போன்ற பாக்கியங்கள் தான் பூர்வஜென்ம புண்ணியங்கள். தங்களது எழுத்துக்களில் நிறைய ஹாஸ்யங்கள், குறும்புகள் எனப் படித்திருந்தாலும்.... இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது கண்களில் நீர் தாரையாகி வழிந்தது என்பது தான் நிஜம்.

  பெரியவாளின் பாதுகைகள்..... கண்ணில் கண்டதற்கே நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன்.

  குடும்ப உறுப்பினராகவே இருந்தாலுமே, எத்தனை பேர்களுக்கு தங்களது பொக்கிஷத்தையும் தாண்டிய இது போன்ற உயர்ந்த புதையலை அவருக்குத் தரும் மனம் வரும்? நீங்கள் செய்திருக்கிறீர்கள். இது மஹா விந்தையிலும் விந்தை.

  பூஜை படங்கள் அற்புதக் காட்சியெனக் கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.... என்று காதினுள் ஒலித்ததை மனம் உணர்ந்து கொண்டது.

  நீங்கள் ஒரு அற்புத மாமனிதர்.

  அன்னை காமாக்ஷியின் தாங்கள் வரைந்த படம் இப்போதும் அந்தக் கோயிலில் இருக்கும் அல்லவா? வரங்கள் பல பெற்ற பேறு பெற்றவர். பொக்கிஷம் என்ற அனுபவக் குவியல்..... அபாரம்.

  இப்படிக்குத் தங்கள்
  எழுத்துக்களின் பரம ரஸிகை

  பதிலளிநீக்கு