”பொக்கிஷம்”
தொடர்பதிவு
By
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
என் தாயார் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.
அவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த பல அனுபவங்களை என் கீழ்க்கண்ட மிகப்பெரிய பதிவினில் ஓரளவு விளக்கியுள்ளேன்.
அதுபோல நான் பிறந்த அன்று அவர்கள் பட்ட கஷ்டங்களையும், மிகவும் நகைச்சுவையாக இந்த கீழ்க்கண்ட மிகச்சிறிய பதிவினில் விவரித்துள்ளேன்.
என் தாயார் அவர்கள், சுகமாக நிம்மதியாக எந்த மனக்கவலையும் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் என்று சொல்ல வேண்டுமானால் அவர்களின் வாழ்நாளின் கடைசி 20 வருடங்கள், என்னுடன் BHEL QUARTERS இல் வாழ்ந்த நாட்கள் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும்.
எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.
எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.
என் தாயார் 23.05.1997 இல் தன் 87 ஆவது வயதில் காலமானார்கள். கடைசி வரை தன் காரியங்களைத் தானே செய்து கொண்டும், குடும்பத்திற்கு தன்னால் ஆன உபகாரங்கள் அத்தனையும் செய்து தந்தும் வந்தார்கள்.
மிகவும் ஆச்சாரமாக இருப்பார்கள். நான் பிறந்தது முதல் என் தாய் இறக்கும் வரை [அதாவது என் 47 வயது வரை] என் அம்மாவை என்றுமே நான் பிரிந்து இருந்தது இல்லை.
நான் சம்பாதிக்க ஆரம்பித்து என் அம்மாவுக்காக, நான் ஆசையாக வாங்கிக்கொடுத்த பொருட்கள் இரண்டே இரண்டு மட்டுமே.
[1] கழுத்தில் அணிய ஒரு தங்க செயின்.
குடும்பக்கஷ்டங்களுக்காக தன் நகைகள் பலவற்றையும் இழந்து, ஏதோ ஒரு பவழம் + துளசி மாலையும் அணிந்துகொண்டிருந்த, என் தாயாருக்கு நான் வாங்கிக்கொடுத்த இந்தத் தங்கச்செயின் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
இது என் அம்மா அணிந்து கொண்டிருந்த பொக்கிஷ தங்கச்செயின் என்பதால் இன்றும் என்னிடம் பத்திரமாகவே உள்ளது.
சுமார் 20 கிராம் எடை [2.5 பவுன்] உள்ள இதை நான் 1972 இல் வாங்கும் போது அதன் விலை கூலி, சேதாரம், வரி எல்லாம் உள்பட வெறும் ரூபாய் 600 மட்டுமே.
இன்று ஒரு கிராம் தங்கமே ரூ. 3000ஐ நெருங்கி வருகிறது. இன்று இதே எடையுள்ள செயின் வாங்க ரூ 60000 தேவைப்படலாம்.
இன்று ஒரு கிராம் தங்கமே ரூ. 3000ஐ நெருங்கி வருகிறது. இன்று இதே எடையுள்ள செயின் வாங்க ரூ 60000 தேவைப்படலாம்.
[2] சாப்பிடுவதற்கு ஓர் வெள்ளித்தட்டு.
1981 முதல் BHEL குடியிருப்பில் நாங்கள் இருந்தபோது தினமும் போய் இலை வாங்கி வருவது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்து வந்தது.
அதில் தினமும் மதியம் ஒரே ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுவிட்டு, நன்றாக அலம்பி துடைத்து விட்டு, மிகவும் ஜாக்கிரதையாக ஒரு குறிப்பிட்ட கெட்டியான ப்ளாஸ்டிக் பையில் போட்டு, சமையல் அறை மேடைக்கு அடியில் கேஸ் சிலிண்டர் அருகே, சுவற்றில் சாய்த்து வைத்திருப்பார்கள்.
இரவு ஒரு வேளை மட்டும் பலகாரமாக இருப்பதால், வேறு ஏதாவது எவர்சில்வர் தட்டிலேயே வைத்துக்கொண்டு புட்டுப்போட்டுக் கொள்வார்கள்.
1988ல் ஒரு நாள் இந்த வெள்ளித்தட்டு என் வீட்டில் திருட்டுப்போய் விட்டது.
அது சமயம் என் அம்மா BHEL லிருந்து திருச்சி டவுனில் இருந்த என் அக்கா வீட்டுக்கு ஏதோ ஒரு விசேஷத்திற்காகச் சென்றிருந்தார்கள். அதனால் வெள்ளித்தட்டு திருட்டுப்போன விஷயமே அவர்களுக்குத் தெரியாது.
அது ஒரு பெரிய சுவாரஸ்யமான கதை.
பாண்டிச்சேரியிலிருந்து என் BHEL வீட்டுக்கு, தங்களின் 2 வயதே ஆன குழந்தையுடன், விருந்தாளியாக வந்திருந்த ஒரு தம்பதியினர் செய்த வேலை.
அதிகாலையிலேயே வந்திருந்த அவர்கள் மாலைவரை எங்களுடனேயே பேசிக்கொண்டு சகஜமாகத்தான் இருந்து வந்தனர். அந்தப்பெண்ணும் சமையல் அறையில் கொஞ்சம் கூடமாட ஒத்தாசையாக இருந்து எல்லோருக்கும் உணவு பரிமாறுதல், சாப்பிட்ட பாத்திரங்களை திரும்ப எடுத்துச்சென்று மூடி வைத்தல் என ஏதோ ஈடுபாடாகத்தான் செய்து வந்தாள்.
மொத்தம் இருந்த என் வீட்டு மூன்று அறைகளில் புதிய BPL கலர் டி.வி. வைக்கப்பட்டிருந்த ஓர் ஒதுக்குப்புற அறையில் எல்லோரும் மையம் கொண்டிருந்த வேளையில், சமையல் கட்டில் இருந்த, அந்த வெள்ளித்தட்டை மட்டும் திருடி, ஒரு துண்டில் சுருட்டி தங்கள் பையில் வைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அந்த வெள்ளித்தட்டு வைக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் பையை மட்டும். என் வீட்டிற்குள்ளேயே வேறு ஒரு அறையில் இருந்த அலமாரியில் விட்டெறிந்து விட்டுப்போய் இருந்தனர்.
அவர்கள் எங்கள் BHEL திருச்சி வீட்டை விட்டு புறப்பட்ட நேரம், அன்று மாலை சுமார் 5 மணி இருக்கும்.
வீட்டின் அலமாரியில் பிளாஸ்டிக் பை மட்டும் தனியாகக் கிடப்பதைப் பார்த்துவிட்ட என் மனைவி, அம்மா எப்போதும் வெள்ளித்தட்டு வைக்கும் பை அல்லவா அது என்று தோன்றி பொரிதட்டியதில், வெள்ளித்தட்டு எப்போதும் வைக்கப்படும் சமையல் அறை மேடைக்கு அருகே உள்ள இடத்தில் அது இல்லாததையும் கண்டு பதறிப்போய் விட்டாள்.
இந்த வெள்ளித்தட்டு ஒருவேளை இங்கு இன்று வருகை தந்த விருந்தாளிகளால் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை என் கவனத்திற்கு என் மனைவி கொண்டுவந்த நேரம், அன்று இரவு சுமார் 10 மணிக்கு.
இந்த வெள்ளித்தட்டு ஒருவேளை இங்கு இன்று வருகை தந்த விருந்தாளிகளால் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை என் கவனத்திற்கு என் மனைவி கொண்டுவந்த நேரம், அன்று இரவு சுமார் 10 மணிக்கு.
இரவோடு இரவாக நான் மட்டும் பாண்டிச்சேரிக்குப் பயணம் ஆனேன்.
என் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளிப் பையன் மிகவும் நல்லவன் தான். அவன் சிறு குழந்தையாய் திருச்சியில் இருந்ததிலிருந்தே அவனை எனக்கு ஓரளவுக்குப் பழக்கம் உண்டு.
நான் காலை ஏழு மணிக்குள், பாண்டிச்சேரியில் அவன் வீட்டைத்தேடி கண்டு பிடித்து உள்ளே நுழைவதற்குள், அவன் தன் வேலைக்கு ஷிப்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டான். அவனுக்கு இது பற்றி எதுவுமே தெரியாமல் இருந்துள்ளது என்பதே உண்மை.
அவனுக்கு மனைவியாய் வாய்த்தவள் தான் சரியில்லை.
அவளிடமும் கூட நான் இரக்கம் காட்டி, நல்லவிதமாகப்பேசி, அவள் எடுத்துச்சென்ற வெள்ளித்தட்டை, அவள் எங்கள் வீட்டுக்கு வரும்போது எடுத்து வந்திருந்த ஒயர் கூடையிலிருந்து, கையும் களவுமாக மீட்டு விட்டேன்.
நல்லவேளையாக நான் மிகச்சரியான நேரத்தில், அவர்களைத் துரத்திக்கொண்டு பாண்டிச்சேரிக்குப் போனதால், அந்த வெள்ளித்தட்டு, விற்பனைக்கோ அல்லது அடகுக்கடைக்கோ செல்லாமல் தப்பி என் கைக்கே திரும்பக்கிடைத்து விட்டது.
அவர்கள் வீட்டில் நான் இருந்தது சுமார் கால் மணி நேரம் மட்டுமே. அவளால் என்னிடம் எதுவுமே பேச முடியவில்லை. திருடனுக்குத்தேள் கொட்டியது போல திருதிருவென்று விழித்தாள்.
பெரிய பிரச்சனைகள் ஏதும் நானும் செய்யாமல், அவளை மன்னித்து, அவர்கள் வீட்டிலிருந்து உடனடியாக நானும் புறப்பட்டு விட்டேன். அப்போது, அவர்களின் அந்த இரண்டு வயது குழந்தை அன்புடன் என்னுடன் ஓடி வர எத்தனித்தது.
அந்தக்குழந்தையின் கையில், நான் ஒரு நூறு ரூபாய் நோட்டைக்கொடுத்து ”அம்மாவிடம் கொடுத்து, பிஸ்கெட் சாக்லேட் ஏதாவது வாங்கிக்கொடுக்கச்சொல்லு” என்று சொல்லிவிட்டு, குழந்தைக்கு மட்டும் டாட்டா சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.
அந்தக் காலக்கட்டத்தில் என் பெரிய அக்கா பிள்ளைகளில் ஒருவர் பாண்டிச்சேரியில் வேறு ஒரு பகுதியில் வசித்து வந்தார். அவரைப்போய் சந்தித்து விட்டு, அவருடன் பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரைக்கும், பிரபலமான மணக்குள விநாயகர் ஆலயம் + ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற இடங்களுக்கும் சென்று விட்டு, அதன்பின் திருச்சி திரும்பினேன்.
1988 என் வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு கொடுக்கப்படாத நாட்களாக இருந்ததாலும், கைபேசி என்பதே கண்டுபிடிக்கப்படாத காலமாக இருந்ததாலும், பாண்டிச்சேரியிலிருந்த STD BOOTH மூலம் என் திருச்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, என் ஜீப் டிரைவராக அது சமயம் பணியாற்றிய திரு. இராஜகோபால் என்பவரிடம், பாண்டிச்சேரிக்கு நான் சென்ற வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக, என் வீட்டுக்குப்போய் என் மனைவியிடம் சொல்லிவிட்வும், என நான் கேட்டுக்கொண்டேன்.
அவரும் உடனடியாக என் வீட்டுக்குப்போய் தகவல்சொல்லியுள்ளார். அதைக்கேட்ட பிறகே என் மனைவியும் நிம்மதி ஆகியிருக்கிறாள்.
சுமார் ஒரு மாதம் கழித்து இந்த விஷயம் அந்தப்பாண்டிச்சேரி [திருட்டு குணமுள்ள] பெண்ணின் கணவனுக்கும் எப்படியோ தெரிந்துள்ளது.
நடந்துவிட்ட செயலுக்கு மிகவும் வருத்தம் தெரிவித்து எனக்கு, அவன் ஓர் கடிதம் எழுதியிருந்தான். தன் மனைவிடம் இதுபோன்ற ஒரு கெட்டப்பழக்கம் சிறு வயது முதல் ஏற்பட்டு உள்ளது. என்னாலும் அவளைத் திருத்த முடியாமல் உள்ளது என வருத்தப்பட்டு எழுதியிருந்தான்.
இது நடந்து சுமார் 25 வருடங்கள் ஆகிறது. அதன் பிறகு நாங்கள் இதுவரை ஒருவரையொருவர் நேரில் சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
இந்த வெள்ளித் தட்டு திருட்டுப்போன விஷயம் கடைசிவரை என் தாயாருக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டேன். கேள்விப்பட்டால் வயதான அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது.
அந்த 350 கிராம் எடை கொண்ட வெள்ளித்தட்டின் அன்றைய விலை [1985] சுமார் ரூபாய் 1000 மட்டுமே. இன்றைக்கு வாங்கப்போனால் சுமார் ரூ.20000 தேவைப்படலாம்.
என் தாயார் அவர்கள் செண்டிமெண்டாக, ஆசையாக, பெருமையாகச் சாப்பிட உபயோகித்து வந்த வெள்ளித் தட்டு என்பதனால், அதை எப்படியும் மீட்டு வரவேண்டும் என்பதற்காகவே, நான் அன்று நள்ளிரவில் புறப்பட்டு பாண்டிச்சேரிக்குப் பயணம் ஆனேன்.
இன்றும் அந்த வெள்ளித்தட்டு என் வீட்டில் என் அம்மாவின் ஞாபகார்த்தமாக பொக்கிஷமாக உள்ளது.
தொடரும்
இந்த ’பொக்கிஷம்’
தொடரின்
அடுத்த பகுதி
09.04.2013 செவ்வாய்க்கிழமை
வெளியிடப்படும்
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
Nice recollections - touching.
பதிலளிநீக்குD. Chandramouli April 4, 2013 at 7:34 AM
நீக்குDear Sir, WELCOME to you Sir.
//Nice recollections - touching.//
Thanks for your kind entry to this post & touching comments, Sir.
தயவுசெய்து தொடர்ந்து வருகை தாருங்கள் சார். உங்களுக்கு மிகவும் பிடித்தமான பல உண்மையான பொக்கிஷங்கள் இனிமேல் தான் வெளியிடப்பட உள்ளன.
அன்புடன்
VGK
வைகோ சார்,
பதிலளிநீக்குஒரு மகனுக்கு தாயார் தான் மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை சொல்கிறது உங்கள் பதிவு.
வெள்ளித்தட்டு காணாமல் போய் விட்டது என்றவுடன் ஏற்பட்ட பதைபதைப்பு அதை நீங்கள் தேடிப் பிடித்தவுடன் தான் நின்றது.
அம்மாவே ஒரு பொக்கிஷம் தான். இன்னும் எதோ பொக்கிஷம் வைத்திருக்கிறிர்கள் போலிருக்கிறதே.
படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
rajalakshmi paramasivam April 4, 2013 at 7:54 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//வைகோ சார்,
ஒரு மகனுக்கு தாயார் தான் மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை சொல்கிறது உங்கள் பதிவு.//
இதில் சந்தேகமே இல்லை. மிகவும் சந்தோஷம்.
பிறந்ததும் இன்று குழந்தையைக் குப்பைத்தொட்டியில் கொண்டு போய் போட்டுவிடும் சிலருக்கு மத்தியில், நம்மைப்பெற்று, ந்மக்காக பல இரவுகள் கண்விழித்து, பாலூட்டி, சீராட்டி, வளர்த்து, ஆளாக்கியுள்ள நம் தாயைவிட மிகப்பெரிய பொக்கிஷம் இல்லை தான்.
//வெள்ளித்தட்டு காணாமல் போய் விட்டது என்றவுடன் ஏற்பட்ட பதைபதைப்பு அதை நீங்கள் தேடிப் பிடித்தவுடன் தான் நின்றது.//
எனக்கும் மறுநாள் காலை 7 மணிவரை, அதே பதைபதைப்புத்தான் இருந்தது. என் மனைவிக்கும் தகவல் கிடைக்கும் 10 மணி வரை அதே பதைபதைப்புத்தான் நீடித்ததாம்.
//அம்மாவே ஒரு பொக்கிஷம் தான். இன்னும் எதோ பொக்கிஷம் வைத்திருக்கிறிர்கள் போலிருக்கிறதே.//
”மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று சொல்வார்கள் அல்லவா! அதனால் இன்னும் சில பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன.
//படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தாருங்கள்.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
எங்கள் வீட்டில் இதே போன்றதொரு சம்பவம் உண்டு. அதை அலுவலக அனுபவமாக சற்றே மாற்றி எங்கள் பதிவில் கூட எழுதியிருந்தேன். நான் மீட்டது வேறு ஒரு வகையில். எனக்கு யார் என்று தெரியும். இன்று வரை கேட்டுக் கொள்ளவில்லை. பொருள் கைக்கு வந்து விட்டது. அவ்வளவுதான்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவு மனதை நெகிழ வைத்தது.
ஸ்ரீராம். April 4, 2013 at 8:04 AM
நீக்குவாங்கோ ஸ்ரீராம், ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
//எங்கள் வீட்டில் இதே போன்றதொரு சம்பவம் உண்டு. அதை அலுவலக அனுபவமாக சற்றே மாற்றி எங்கள் பதிவில் கூட எழுதியிருந்தேன். நான் மீட்டது வேறு ஒரு வகையில். எனக்கு யார் என்று தெரியும். இன்று வரை கேட்டுக் கொள்ளவில்லை.//
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிச்சயமாக இதுபோல சில எதிர்பாராத இழப்புகள் நிச்சயமாக நடைபெற்றுத்தான் இருக்கும்.
உறவு, நட்பு முதலியன முற்றிலும் முறிந்துவிடாமல் இருக்க, இதில் மிகவும் ஜாக்கிரதையான அணுகுமுறையை நாம் கவனமாகக் கையாள வேண்டியதாக உள்ளது.
//பொருள் கைக்கு வந்து விட்டது. அவ்வளவுதான்.//
அதே, அதே !! ;)
//உங்கள் பதிவு மனதை நெகிழ வைத்தது.//
சந்தோஷம்.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்.
நல்லவேளையாக மிகச்சரியான நேரத்தில் நீங்கள் சென்று மீட்டுவிட்டீர்கள்... அம்மாவின் நினைவாக உள்ள பொக்கிஷங்கள் மிகவும் அருமை..... உங்கள் பொக்கிஷம் தொடரட்டும்...
பதிலளிநீக்குவிலைமதிக்க முடியாத பொக்கிஷம்..... வாழ்த்துக்கள்.....
VijiParthiban April 4, 2013 at 8:08 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//நல்லவேளையாக மிகச்சரியான நேரத்தில் நீங்கள் சென்று மீட்டுவிட்டீர்கள்... அம்மாவின் நினைவாக உள்ள பொக்கிஷங்கள் மிகவும் அருமை..... உங்கள் பொக்கிஷம் தொடரட்டும்...
விலைமதிக்க முடியாத பொக்கிஷம்..... வாழ்த்துக்கள்.....//
இந்தப்பதிவின் மூன்றாம் பகுதியிலிருந்து தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
இதன் முதல் இரண்டு பகுதிகளையும் நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். இணைப்புகள் இதோ:
http://gopu1949.blogspot.in/2013/03/1.html
http://gopu1949.blogspot.in/2013/03/2.html
//எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.//
பதிலளிநீக்குபெற்ற அன்னையை மகிழ்வுடன் உங்களுடன் வைத்துக் காப்பாற்றியது பெரும் புண்ணியம். மிகவும் ஒத்துப்போகும் மருமகள் கிடைத்தது அவரின் பாக்கியம். ஆக நீங்கள் இருவருமே புண்ணியம் செய்தவர்கள். நிகழ்வுகள் சுவாரஸ்யமாகவும் ஆச்சர்ய மூட்டும் வகையிலும் அமைந்தன. மனம் கவர்ந்த பதிவிற்கு நன்றி ஐயா!
Seshadri e.s. April 4, 2013 at 8:08 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
*****எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.*****
//பெற்ற அன்னையை மகிழ்வுடன் உங்களுடன் வைத்துக் காப்பாற்றியது பெரும் புண்ணியம். //
அது நம் கடமை சார்.
என்னிடம் சிலர் கேட்பார்கள் “உன் அம்மா உன்னிடம் தான் இருக்கிறார்களா?” என்று.
நான் சொல்வேன்: “இல்லை, அவர்கள் ஒன்றும் என்னிடம் இல்லை. நான் தான் பிறந்தது முதல் அவர்களுடன் உள்ளேன்” என்று.
//மிகவும் ஒத்துப்போகும் மருமகள் கிடைத்தது அவரின் பாக்கியம்.//
ஆம். நாங்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் பாக்யம் செய்தவர்களே தான்.
//ஆக நீங்கள் இருவருமே புண்ணியம் செய்தவர்கள்.//
சந்தோஷம்.
//நிகழ்வுகள் சுவாரஸ்யமாகவும் ஆச்சர்ய மூட்டும் வகையிலும் அமைந்தன. மனம் கவர்ந்த பதிவிற்கு நன்றி ஐயா!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
[நேரம் கிடைத்தால் இந்தத்தொடரின் பகுதி-1 + 3 + 4 படித்துப்பாருங்கள்]
படித்துவிட்டேன் ஐயா! மிக அருமையாக உள்ளன! நன்றி! தொடர்கிறேன்.
நீக்கு*****நேரம் கிடைத்தால் இந்தத்தொடரின் பகுதி-1 + 3 + 4 படித்துப்பாருங்கள்*****
நீக்குSeshadri e.s. April 9, 2013 at 12:21 AM
//படித்துவிட்டேன் ஐயா! மிக அருமையாக உள்ளன! நன்றி! தொடர்கிறேன்.//
வாங்கோ, வணக்கம், ச்ந்தோஷம். மிக்க நன்றி.
Nekizha vaithathu.
பதிலளிநீக்குEn kaivalaiyalkalai naan izhanthirukkiren, antha uravu mel appothu santhakame varavillai!:-(
middleclassmadhavi April 4, 2013 at 8:21 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//Nekizha vaithathu.//
//நெகிழ வைத்தது. //
மிக்க நன்றி, சந்தோஷம்.
//En kaivalaiyalkalai naan izhanthirukkiren, antha uravu mel appothu santhakame varavillai!:-(
என் கை வளையல்களை நான் இழந்திருக்கிறேன். அந்த உறவு மேல் அப்போது சந்தேகம் வரவில்லை ;( //
கேட்கவே மனதுக்கு சங்கடமாக உள்ளது. ;(((((
தங்களின் அன்பான வருகைக்கும், தங்களின் சோக அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
[இந்த என் தொடரில் இதுவரை தாங்கள் பொக்கிஷமான கருத்துக்களை எனக்குச் சொல்லாத பகுதிகள் : 1 மற்றும் 3]
ஏனோ தெரியவில்லை ஐயா இந்த பதிவை படிக்கும் போது என்னையும் அறியாமல் அப்பாவை நினைத்து அழுதுவிட்டேன்..ஒரு மனிதனுக்கு தாயார் தான் பொக்கிஷம் என்பதை இந்த பதிவு சொல்கிறது...
பதிலளிநீக்குS.Menaga April 4, 2013 at 8:46 AM
நீக்குவாங்கோ வணக்கம்.
//ஏனோ தெரியவில்லை ஐயா இந்த பதிவை படிக்கும் போது என்னையும் அறியாமல் அப்பாவை நினைத்து அழுதுவிட்டேன்.//
I feel so Sorry Madam.
//ஒரு மனிதனுக்கு தாயார் தான் பொக்கிஷம் என்பதை இந்த பதிவு சொல்கிறது...//
மிகவும் சந்தோஷம்.
இந்தப்பதிவின் நான்காம் பகுதியிலிருந்து தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
அருமையான மகன் அருமையான தாய்.
பதிலளிநீக்குஅம்மாவின் ஆசிகள் உங்களை வாழவைக்கும். வாழவைத்து கொண்டு இருக்கிறது.
உங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் படிப்பினை.
புத்திமதி சொல்லி யாரையும் திருத்த முடியாது ஆனால் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டினால் அதைவிட வேறு சிறப்பு கிடையாது.
நல்ல மனிதனாய் வாழ்ந்து காட்டிருக்கிறீர்கள்.
உங்கள் குழந்தைகளும் உங்கள் வழி நடப்பார்கள்.
வெள்ளித்தட்டை மீட்டு வந்தது பெரிய சாதனை தான். உறவினர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி கொள்ள சொல்லி பணம் கொடுத்து வந்தது நீங்கள் உயர்ந்த பண்பாளர் என்பதைக் காட்டுகிறது.
பொக்கிஷபகிர்வு அருமை.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சார்.
கோமதி அரசு April 4, 2013 at 8:47 AM
நீக்குவாங்கோ மேடம்,. வணக்கம்.
//அருமையான மகன் அருமையான தாய். அம்மாவின் ஆசிகள் உங்களை வாழவைக்கும். வாழவைத்து கொண்டு இருக்கிறது.
உங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் படிப்பினை.
புத்திமதி சொல்லி யாரையும் திருத்த முடியாது ஆனால் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டினால் அதைவிட வேறு சிறப்பு கிடையாது. நல்ல மனிதனாய் வாழ்ந்து காட்டிருக்கிறீர்கள்.
உங்கள் குழந்தைகளும் உங்கள் வழி நடப்பார்கள்.//
பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் சந்தோஷம் மேடம்.
//வெள்ளித்தட்டை மீட்டு வந்தது பெரிய சாதனை தான். உறவினர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி கொள்ள சொல்லி பணம் கொடுத்து வந்தது நீங்கள் உயர்ந்த பண்பாளர் என்பதைக் காட்டுகிறது.//
எங்கள் வீட்டுக்கு வந்த அந்தக்குழந்தையை நான் மிகவும் கொஞ்சினேன். வெளியே பல இடங்களுக்குத் தூக்கிச்சென்றேன். அந்தக்குழந்தை பல மணி நேரங்கள் என்னுடனேயே பிரியமாக ஒட்டிக்கொண்டு இருந்தது. அதன் முகம் இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது. [இப்போது நிச்சயம் 27 வயதாவது இருக்கும்]
//பொக்கிஷபகிர்வு அருமை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சார்.//
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
பொருளைத் திருடிச் சென்ற அந்தப் பெண்மணியிடம் நீங்கள்
பதிலளிநீக்குகாட்டிய கருணையைப் பாராட்ட வேண்டும் .உங்கள் நல்ல
மனதிற்கு அம்மா மட்டும் அல்ல உங்கள் இல்லத்தரசியும்
அமைந்த விதம் இது இறைவன் கொடுத்த வரம் என்றுதான்
சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .
அம்பாளடியாள் April 4, 2013 at 8:49 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//பொருளைத் திருடிச் சென்ற அந்தப் பெண்மணியிடம் நீங்கள்
காட்டிய கருணையைப் பாராட்ட வேண்டும் //
சந்தோஷம்.
//உங்கள் நல்ல மனதிற்கு அம்மா மட்டும் அல்ல உங்கள் இல்லத்தரசியும் அமைந்த விதம் இது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும் //
ஆமாம். எல்லாமே ஓர் வரம் தான்.
//வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .//
தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
Ippadiyum janangal irukkiraargal! Nalla vazhiyil sambaadiththu vaangina saamaan yengeyum pogaadu, Gopalakrishnan Sir!
பதிலளிநீக்குYezhudiya vitham, thriller padippathu pol irundadu! Nandri!
Sandhya April 4, 2013 at 8:57 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//Ippadiyum janangal irukkiraargal! Nalla vazhiyil sambaadiththu vaangina saamaan yengeyum pogaadu, Gopalakrishnan Sir!
இப்படியும் ஜனங்கள் இருக்கிறார்கள்! நல்ல வழியில் சம்பாதித்து வாங்கின சாமான் எங்கேயும் போகாது, கோபாலகிருஷ்ணன் , சார்!//
மிகவும் சந்தோஷம்.
//Yezhudiya vitham, thriller padippathu pol irundadu! Nandri!
எழுதியவிதம் ‘த்ரில்லர்’ படிப்பதுபோல இருந்தது. நன்றி//
தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + என் எழுத்தினை பாராட்டிய விதம் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
[இந்தத்தொடரின் முதல் பகுதிக்குப்பிறகு ஆறாம் பகுதிக்குத்தான் வந்துள்ளீர்கள். நேரமின்மையாக இருக்கலாம். பரவாயில்லை. எனினும் தங்களுக்கு என் நன்றியோ நன்றிகள்]
தாயாரின் நினைவுகளே பொக்கிஷம் தான்,அவர்கள் உபயோகித்த இரு பொருட்களைப் பற்றி நல்ல விரிவான சுவாரசியமான பகிர்வுக்கு நன்றி சார்.வெள்ளித்ததட்டு விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.நல்லவிதமாய் திரும்ப கிடைத்து விட்டதே !
பதிலளிநீக்குAsiya Omar April 4, 2013 at 9:14 AM
நீக்குவாருங்கள் மேடம். வணக்கம்.
//தாயாரின் நினைவுகளே பொக்கிஷம் தான்,அவர்கள் உபயோகித்த இரு பொருட்களைப் பற்றி நல்ல விரிவான சுவாரசியமான பகிர்வுக்கு நன்றி சார்.//
மிக்க மகிழ்ச்சி.
//வெள்ளித்ததட்டு விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.நல்லவிதமாய் திரும்ப கிடைத்து விட்டதே !//
என்னை இந்தத்தொடர்பதிவு எழுதச்சொல்லி தட்டிவிட்டதோடு மட்டும் ஒதுங்கிக்கொள்ளாமல், ஒவ்வொரு பகுதிக்கும் தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
வெள்ளி தட்டு திருடு போனதும், நீங்கள் மீட்டு வந்ததும் ஆச்சரியமாய் இருந்தது. சில சமயம் தெரிந்தவர்களே இப்படி செய்யும் போது என்ன செய்வது? என் மகள் குழந்தையாய் இருந்த போது கழுத்தில் போட்டிருந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியை கூட இப்படி யாரோ தெரிந்தவர்கள்தான் சுருட்டி கொண்டார்கள். யாரை கேட்பது போனது போனதுதான்.
பதிலளிநீக்குஉஷா அன்பரசு April 4, 2013 at 9:19 AM
நீக்குவாங்கோ வணக்கம்.
//வெள்ளி தட்டு திருடு போனதும், நீங்கள் மீட்டு வந்ததும் ஆச்சரியமாய் இருந்தது.//
எனக்கே / எங்களுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
//சில சமயம் தெரிந்தவர்களே இப்படி செய்யும் போது என்ன செய்வது?//
அது தான் மிகப்பெரிய சங்கடமாக உள்ளது.
“யாரைத்தான் நம்புவதோ”ன்னு பாட்டுப்பாட வேண்டியது தான்.
//என் மகள் குழந்தையாய் இருந்த போது கழுத்தில் போட்டிருந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியை கூட இப்படி யாரோ தெரிந்தவர்கள்தான் சுருட்டி கொண்டார்கள். யாரை கேட்பது போனது போனதுதான்.//
அடடா, அது நடந்து 10 வருஷங்கள் ஆகிவிட்டதே! கேட்கவே மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது.
குழந்தைக்கு இப்போது ஒரு 100 பவுனில் எல்லா நகைகளும், தலையோடு கால் வாங்கிப் போட்டுடுங்கோ. பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
பரத நாட்டியத்திற்கு அவை உபயோகப்படும். FIXED ASSET ஆகவும் இருக்கும். After all Rs. 25 Lakhs தான் தேவைப்படும். அதனால் கொஞ்சமும் யோசிக்காதீங்கோ.
யோசிக்க யோசிக்க விலை ஏறிக்கொண்டே போகும். ;)))))
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
Neengal Ammavai patri ezhudhiyadhu romba sandhoshama irrukku. It is very astonishing you remember the price of the chain and each and every thing. I cant believe some people can behave like that, but you got it back which is very nice. Ennaku tamila type panna aasai aana theriyalai sir. Next time I will find it out. But each time I read your articles my heart very fulfilled and makes me happy. Nandri & vanakkam Iyyah
பதிலளிநீக்குPriya Anandakumar April 4, 2013 at 10:12 AM
நீக்குWELCOME TO YOU MADAM. வணக்கம்.
Neengal Ammavai patri ezhudhiyadhu romba sandhoshama irrukku. It is very astonishing you remember the price of the chain and each and every thing. I cant believe some people can behave like that, but you got it back which is very nice. Ennaku tamila type panna aasai aana theriyalai sir. Next time I will find it out. But each time I read your articles my heart very fulfilled and makes me happy. Nandri & vanakkam Iyyah.
//நீங்கள் அம்மாவைப்பற்றி எழுதியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. //
தங்களின் கருத்தினைப்படிக்கும்போது எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது. மிக்க நன்றி.
//தங்கச்சங்கிலி மற்றும் இதர பொருட்களின் அன்றைய விலையை ஞாபகம் வைத்துச்சொல்வது திகைப்பாகவும், வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. //
தங்கம் + வெள்ளி மட்டும் பல காலக்கட்டங்களில் பல விலைகளுக்கு வாங்கியதால் ஞாபகம் உள்ளது.
//சிலர் இதுபோல நடந்துகொள்வதை என்னால் நம்பவே முடியவில்லை.//
எங்களாலும் அன்று நம்பத்தான் முடியவில்லை.
//எப்படியோ நீங்கள் இழந்த அந்தப்பொருளை மீட்டு வந்தது நல்ல விஷயம் தான். //
ஆமாம். சந்தோஷம்.
//எனக்குத்தமிழில் டைப் செய்ய ஆசையாக உள்ளது. ஆனால் தெரியவில்லை சார். அடுத்தமுறை எப்படியும் முயற்சிக்கிறேன். //
என்னை மெயில் மூலம் தொடர்பு கொள்ள விருப்பம் என்றால் சொல்லுங்கள். தமிழில் டைப் அடிப்பது பற்றி அழகாகச் சொல்லித்தருகிறேன். மிகவும் சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம்.
என் MAIL ID : valambal@gmail.com.
//ஆனால் ஒவ்வொருமுறையும் உங்கள் பதிவுகளை வாசிக்கும்போது மனதுக்கு முழு நிறைவாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. நன்றி, வணக்கம் ஐயா.//
இதைத்தாங்கள் சொல்லி நான் கேட்பதே எனக்கு மிகவும் மனதுக்கு முழு நிறைவாகவும், மிகுந்த சந்தோஷமாகவும் உள்ளது. மிக்க நன்றி, மேடம்.
இந்தப்பதிவின் மூன்றாம் பகுதியிலிருந்து தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
இதன் முதல் இரண்டு பகுதிகளையும் நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். கருத்தும் கூறுங்கள். இணைப்புகள் இதோ:
http://gopu1949.blogspot.in/2013/03/1.html
http://gopu1949.blogspot.in/2013/03/2.html
அன்புடன்
VGK.
வெள்ளித்தட்டு என் வீட்டில் என் அம்மாவின் ஞாபகார்த்தமாக பொக்கிஷமாக உள்ளது.
பதிலளிநீக்குvery happy ..
இராஜராஜேஸ்வரி April 4, 2013 at 10:41 AM
நீக்குவாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, இனிய வந்தனங்கள்.
*****வெள்ளித்தட்டு என் வீட்டில் என் அம்மாவின் ஞாபகார்த்தமாக பொக்கிஷமாக உள்ளது.*****
// very happy .. //
தாங்கள் ’வெரி ஹாப்பி’யானதில் எனக்கும்
வெரி வெரி ஹாப்பி தானாக்கும் ;)))))
மனதை மிகவும் நெகிழ வைத்தது உங்கள் பதிவு!
பதிலளிநீக்குஅம்மாவிற்கு இது தெரிந்து விடக்கூடாதே என்று தவிப்புடன் உடன் வெகு தூரம் பயணம் செய்து அம்மாவிற்குப்பிடித்தமான அந்த வெள்ளித்தட்டை மீட்டு வந்த உங்கள் பாசத்திற்கும், அம்மாவை கடைசி வரை அருமையாய் வைத்து பாதுகாத்த உங்கள் அன்பிற்கும் நான் தலை வணங்குகிறேன்!! ஒரு பாசமான தயாருக்கும் ஒரு உயர்ந்த மகனுக்கும் இடையே அன்புப் பாலமாக இருந்த இந்த வெள்ளித்தட்டு உண்மையிலேயே விலைமதிப்பில்லாத ஒரு பொக்கிஷம். பெற்றெடுத்த அன்னையிடம் கடைசி வரை பாசமாக இருக்கும் ஒரு மகன் என்றுமே உயர்ந்த நிலையில் தான் இருப்பார்! நீங்களும் அது போலத்தான் இருப்பீர்கள்!! மனம் நிறையச் செய்த இந்தப் பதிவைக்கொடுத்ததற்கு மனம் நிறைந்த நன்றி! இனிய வாழ்த்துக்கள்!!
மனோ சாமிநாதன் April 4, 2013 at 11:34 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//மனதை மிகவும் நெகிழ வைத்தது உங்கள் பதிவு!//
மிகவும் சந்தோஷம், மேடம்.
//அம்மாவிற்கு இது தெரிந்து விடக்கூடாதே என்று தவிப்புடன் உடன் வெகு தூரம் பயணம் செய்து அம்மாவிற்குப்பிடித்தமான அந்த வெள்ளித்தட்டை மீட்டு வந்த உங்கள் பாசத்திற்கும், அம்மாவை கடைசி வரை அருமையாய் வைத்து பாதுகாத்த உங்கள் அன்பிற்கும் நான் தலை வணங்குகிறேன்!! ஒரு பாசமான தயாருக்கும் ஒரு உயர்ந்த மகனுக்கும் இடையே அன்புப் பாலமாக இருந்த இந்த வெள்ளித்தட்டு உண்மையிலேயே விலைமதிப்பில்லாத ஒரு பொக்கிஷம். பெற்றெடுத்த அன்னையிடம் கடைசி வரை பாசமாக இருக்கும் ஒரு மகன் என்றுமே உயர்ந்த நிலையில் தான் இருப்பார்! நீங்களும் அது போலத்தான் இருப்பீர்கள்!! மனம் நிறையச் செய்த இந்தப் பதிவைக்கொடுத்ததற்கு மனம் நிறைந்த நன்றி! இனிய வாழ்த்துக்கள்!!//
மிக்க மகிழ்ச்சி மேடம். பெற்ற தாயாரைத்தவிர இன்று உலகில் எதையும் நாம் விலைகொடுத்து வாங்கிவிடலாம் தானே, மேடம்.
தாயைப்போல வருமா? அவர்களை பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மகனின் கடைமையும் தானே மேடம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல்வேறு கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், இந்தத்தொடரின் பகுதி-2 தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ந்து வருகை தந்து உற்சாகப்படுத்தி வருவதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
அம்மாவுக்கு திதி வரும் நெருக்கத்தில் நெகிழ்வான நினைவுகள். பொக்கிஷ அறையில் மகிழ்வுடன் சில நெருடல்களும்... மனிதர்கள் தான் எத்தனை தினுசு!
பதிலளிநீக்குநிலாமகள் April 4, 2013 at 3:25 PM
நீக்குவாங்கோ, மேடம். வணக்கம்.
//அம்மாவுக்கு திதி வரும் நெருக்கத்தில்//
ஆமாம் இந்த ஆண்டு அப்பாவுக்கு 30.04.2013; அம்மாவுக்கு 25.05.2013 திதிகள் வர உள்ளன.
//நெகிழ்வான நினைவுகள்.//
சந்தோஷம்.
//பொக்கிஷ அறையில் மகிழ்வுடன் சில நெருடல்களும்... மனிதர்கள் தான் எத்தனை தினுசு!//
ஆமாம் மேடம். பொக்கிஷ அறையில் மகிழ்வுடன் சில நெருடல்களும் தான். சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான். என்ன செய்வது?
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மனதை நெகிழச் செய்திட்ட பதிவு அய்யா. நன்றி
பதிலளிநீக்குகரந்தை ஜெயக்குமார் April 4, 2013 at 4:55 PM
நீக்குவாருங்கள், வணக்கம்
//மனதை நெகிழச் செய்திட்ட பதிவு ஐயா. நன்றி//
தங்களின் அன்பான வருகைக்கும், நெகிழ்வான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
[தாங்கள் இதுவரை வெளியிட்டுள்ள இந்தத்தொடரின் ஆறு பகுதிகளில் மூன்று பகுதிகளுக்கு வருகை தந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் அறிவிக்கின்றன. எனினும் படிக்குப்பாதி வருகை தந்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான். மிக்க நன்றி.]
கடைசி 20 வருடங்கள் அம்மாவை நிம்மதியாக வாழ வைத்தது குறித்து பெரும் சந்தோசம் .தங்க செயின் வாங்கி கொடுத்த அன்பை எண்ணி மகிழ்வதற்குள் அன்றைய விலை பார்த்து அசந்து போனேன்.
பதிலளிநீக்குவெள்ளித்தட்டை டிடக்ட் பண்ண போனாமா,, வந்து அம்மாகிட்ட கொடுத்தமான்னு இல்லாம ,, 100 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்க ஐடியா வேறு, போனதுக்கு குட்டி சுற்றுப்பயணம் கொசுறு.
பெற்றோரின் நினைவிற்கு வயது வரம்பு இல்லை என்பதை இந்த வயதிலும் உங்கள் அன்னை சார்ந்த இந்த பதிவு நிருபித்துள்ளது.,
thirumathi bs sridhar April 4, 2013 at 4:58 PM
நீக்குவாங்கோ அன்புக்குரிய ஆச்சி மேடம், வணக்கம், வணக்கம்.
//கடைசி 20 வருடங்கள் அம்மாவை நிம்மதியாக வாழ வைத்தது குறித்து பெரும் சந்தோசம்.//
அம்மா என்றாலே அம்மா பற்றி அழகாக எழுதிய உங்கள் நினைவு தான் எனக்கு அடிக்கடி வரும்.
//தங்க செயின் வாங்கி கொடுத்த அன்பை எண்ணி மகிழ்வதற்குள் அன்றைய விலை பார்த்து அசந்து போனேன்.//
அடடா, ஏன் இப்படி அசந்து போனீர்கள்? அன்றைக்கு 1972 இல் 600 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை மேடம். இரண்டு மாத முழுச்சம்பளம் போல [Take Home Pay அல்ல].
//வெள்ளித்தட்டை டிடக்ட் பண்ண போனாமா,, வந்து அம்மாகிட்ட கொடுத்தமான்னு இல்லாம ,, 100 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்க ஐடியா வேறு, போனதுக்கு குட்டி சுற்றுப்பயணம் கொசுறு.//
என்ன செய்வது மேடம்? குழந்தையென்றால் குழந்தை தானே! அது என்ன தப்பு செய்தது? அன்போடு ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டது. முதல் நாள் என்னிடம் மிகவும் பழகி ஒட்டிக்கொண்ட குழந்தை வேறு, மேலே திருமதி. கோமதி அரசு அவர்களுக்கு நான் எழுதியுள்ள பதிலையும் படித்துப்பாருங்கோ.
பாண்டிச்சேரிக்கே நான் அதற்கு முன்போ பின்போ போனது இல்லை. போன காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டதால், ஓர் சின்ன சுற்றுப்பயணம் கொசுறு போலத்தான்.
பணச்செலவைவிட, அந்த குறிப்பிட்ட பொருள் என் அம்மாவுக்கு நான் திரும்பச்சேர்க்க வேண்டும் என்பதே, அன்றைக்கு என் குறிக்கோளாக இருந்தது.
//பெற்றோரின் நினைவிற்கு வயது வரம்பு இல்லை என்பதை இந்த வயதிலும் உங்கள் அன்னை சார்ந்த இந்த பதிவு நிருபித்துள்ளது.//
ஆமாம், மேடம். அவர்களுக்கோ நமக்கோ எவ்வளவு வயதானாலும் அம்மான்னா என்றுமே அம்மா தான்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உரிமையுடன் கூடிய கருத்துக்களுக்கும், பதிவினைப்பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
[நீங்க பகுதி-3, பகுதி-4, பகுதி-5 மூன்றுக்கும் வரவில்லை என நான் சொல்லப்போவது இல்லை. ஏனென்றால் அது உங்களுக்கே தெரியும். திடீர்ன்னு வந்தாலும் வந்துடுவீங்கோ. எனக்கு எதற்கு உங்களிடம் ஊர்வம்ப்ஸ்? ;)))))) }
உங்கள் வாழ்வில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறதே! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு நீங்கள் தான் சிறந்த எடுத்து காட்டாக இருப்பீர்கள்
பதிலளிநீக்குநீங்கள் எவ்வளவோ பொக்கிஷங்களை காண்பித்தீர்கள் ஆனால் அம்மாவின் பொக்கிஷத்தின் முன் அவைகள் பின் தங்கி விட்டன
poovizi April 4, 2013 at 6:18 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//உங்கள் வாழ்வில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறதே! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு நீங்கள் தான் சிறந்த எடுத்து காட்டாக இருப்பீர்கள் //
மிகவும் சந்தோஷம்.
//நீங்கள் எவ்வளவோ பொக்கிஷங்களை காண்பித்தீர்கள் ஆனால் அம்மாவின் பொக்கிஷத்தின் முன் அவைகள் பின் தங்கி விட்டன//
ஆமாம் எல்லாமே அம்மாவுக்குப்பின் தான். அம்மாவே மிகச் சிறந்த பொக்கிஷம்.
மொத்த்ம் இதுவரை வெளியிட்டுள்ள ஆறு பகுதிகளில் 3 + 6 மட்டும் படித்துவிட்டு இவ்வளவு விஷயங்களைப் புட்டுப்புட்டு வைத்து விட்டீர்களே! சபாஷ் ;)
உங்கள் கருத்துக்களும் எனக்கு என் அம்மா போன்ற மிகச்சிறந்த பொக்கிஷமே.
7 தலை முறைக்கு உண்டான கல்வியை நீங்கள் கடைபிடித்து வழங்கிவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன் தங்கள் அம்மாவை கவனமுடன் நேசமுடன் பராமரித்து
பதிலளிநீக்குpoovizi April 4, 2013 at 6:19 PM
நீக்குவாங்கோ, மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.
//7 தலை முறைக்கு உண்டான கல்வியை நீங்கள் கடைபிடித்து வழங்கிவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன் தங்கள் அம்மாவை கவனமுடன் நேசமுடன் பராமரித்து//
ஒரு குழந்தையைப்பெற்றெடுப்பதற்குள் ஒரு தாய் எவ்வளவு கஷ்டங்க்ளை, வேதனைகளை, வலிகளை தனக்குள் சுமக்கிறாள்!
குழந்தை பிறந்த பிறகும் அதைப்பேணிப் பாதுகாக்க எவ்வளவு பாடு படுகிறாள்!
எவ்வளவு இரவுகள் தான் தூங்காமல் அந்தக்குழந்தையோடு போராடி பாலூட்டி, சோறூட்டி, தாலாட்டி அதனைத் தூங்க வைக்கிறாள்!
ஒரு மிகச்சிறிய பிள்ளையார் எறும்பு அந்தக்குழந்தையின் மீது ஊர்ந்து சென்றாலும் தாங்க மாட்டாளே அந்தத்தாய்!
அப்படிப்பட்ட உத்தமமான [பிரத்யக்ஷ கடவுளான] தாயை, அவர்களின் வயதான காலத்தில் கவனமுடனும், நேசமுடனும் பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மகன்/மகளின் கடமையாகும்.
அதையே தான் நான் கொஞ்சூண்டு செய்துள்ளேன்.
பெருந்தன்மையுடன் தவறு செய்தவரை மன்னித்திருக்கிறீர்கள். அம்மாவின் நினைவுகள் அவரது ஆசிகளாக உங்களுடன் என்றும் இருக்கும், கோமதிம்மா சொல்லியிருப்பது போல்.
பதிலளிநீக்குராமலக்ஷ்மி April 4, 2013 at 7:41 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பெருந்தன்மையுடன் தவறு செய்தவரை மன்னித்திருக்கிறீர்கள். அம்மாவின் நினைவுகள் அவரது ஆசிகளாக உங்களுடன் என்றும் இருக்கும், கோமதிம்மா சொல்லியிருப்பது போல்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம். ஆம், திருமதி. கோமதி அரசு அவர்கள் சொல்லியுள்ள கருத்துக்கள் மிகச்சிறப்பாகத்தான் உள்ளன. ;) அவர்களுக்கும் உங்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.
நெகிழ வைத்த பதிவு சார்.சரியான நேரத்தில் சென்று மிகவும் அமைதியான முறையில் தட்டை மீட்டெடுத்த் உங்கள் புத்திசாலித்தனத்துக்கும்,பொறுமைக்கும் ஒரு சபாஷ்.தொடருஙக்ள்.
பதிலளிநீக்குஸாதிகா April 4, 2013 at 8:15 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//நெகிழ வைத்த பதிவு சார். சரியான நேரத்தில் சென்று மிகவும் அமைதியான முறையில் தட்டை மீட்டெடுத்த் உங்கள் புத்திசாலித்தனத்துக்கும், பொறுமைக்கும் ஒரு சபாஷ். தொடருங்கள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.
[இந்தத்தொடரின் பகுதி-1 மற்றும் பகுதி-4 ஆகிய இரண்டுக்கும் மட்டும் ஏனோ வருகை தர மறந்துள்ளீர்கள். இது JUST ஒரு சிறிய நினைவூட்டலுக்காக மட்டுமே. நேரமிருந்தால் வருகை தந்து கருத்துக்கூறுங்கள்.]
படித்து நெகிழ்ந்தேன்...
பதிலளிநீக்குகே. பி. ஜனா... April 4, 2013 at 9:04 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//படித்து நெகிழ்ந்தேன்...//
தங்களின் அன்பான வருகைக்கும், படித்து நெகிழ்ந்ததாகச் சொல்லிப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.
பகுதி-3 தவிர இதுவரை வெளியிட்டுள்ள அனைத்துப் பகுதிகளையும் தொடர்ந்து படித்து கருத்தளித்துள்ளீர்கள். மிகவும்
சந்தோஷமாக உள்ளது, சார். மிக்க நன்றி.
No words !!! Really Touched !!!
பதிலளிநீக்குSangeetha Nambi April 4, 2013 at 9:18 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//No words !!! Really Touched !!!//
இதுவரை வெளியிட்டுள்ள ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக அன்புடன் வருகை தந்து, அழகாகக் கருத்தளித்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். Thank you very much, Thanks a Lot.
நெகிழ வைத்த பொக்கிஷம்...
பதிலளிநீக்குஎனது சில நினைவுகளை நினைத்து மனம் கலங்கினேன்...
திண்டுக்கல் தனபாலன் April 4, 2013 at 10:00 PM
நீக்குவாருங்கள் சார், வணக்கம்.
//நெகிழ வைத்த பொக்கிஷம்...//
மிக்க மகிழ்ச்சி, சார்.
//எனது சில நினைவுகளை நினைத்து மனம் கலங்கினேன்...//
ஆஹா, அப்படியா? நீங்காத சில நினைவுகள் நம்மை சமயத்தில் கலங்கத்தான் செய்யும்.
இதுவரை நான் வெளியிட்டுள்ள இந்தத் தொடரின் அனைத்து ஆறு பகுதிகளுக்கும், தாங்கள் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்து அசத்தியுள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களால் எப்படித்தான் உலகில் உள்ள அனைத்துப்பதிவர்கள் பக்கமும் தினமும் போய் கருத்தளித்து அசத்த முடிகிறதோ! எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. எங்கு போனாலும் அங்கு DD ;)))))
தாயாருக்கு வாங்கிக்கொடுத்த தங்கச்செயின் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
பதிலளிநீக்குதங்கமான பொக்கிஷம் சந்தோஷம் தரும் பொக்கிஷம்தான்
இராஜராஜேஸ்வரி April 4, 2013 at 10:12 PM
நீக்கு*****தாயாருக்கு வாங்கிக்கொடுத்த தங்கச்செயின் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.*****
//தங்கமான பொக்கிஷம் சந்தோஷம் தரும் பொக்கிஷம்தான்//
இதைக் கொங்கு நாட்டுக் கோவைத்தங்கமான தங்கள் வாயால் கேட்பது தான், சந்தோஷம் தரும் மிகப்பெரிய பொக்கிஷமாக நினைத்து நான் மகிழ்கிறேன். மிக்க மகிழ்ச்சிங்கோ. ;)
பதிலளிநீக்குஎன் தாயார் அவர்கள் செண்டிமெண்டாக, ஆசையாக, பெருமையாகச் சாப்பிட உபயோகித்து வந்த வெள்ளித் தட்டு என்பதனால், அதை எப்படியும் மீட்டு வரவேண்டும் என்பதற்காகவே, நான் அன்று நள்ளிரவில் புறப்பட்டு பாண்டிச்சேரிக்குப் பயணம் ஆனேன்.
துப்பறியும் கதை மாதிரி விறுவிறுப்பாக இருக்கிறது ..
நியாயமாய் உழைத்து வந்த பணத்தில் முழுமனதோடு அன்போடு வாங்கி அன்னை என்னும் தெய்வத்திர்கு அர்ப்பணித்த வெள்ளித்தட்டு தங்கள் இல்லத்தைவிட்டு எங்கும் செல்லமுடியாதுதான் ..
இராஜராஜேஸ்வரி April 4, 2013 at 10:18 PM
நீக்கு*****என் தாயார் அவர்கள் செண்டிமெண்டாக, ஆசையாக, பெருமையாகச் சாப்பிட உபயோகித்து வந்த வெள்ளித் தட்டு என்பதனால், அதை எப்படியும் மீட்டு வரவேண்டும் என்பதற்காகவே, நான் அன்று நள்ளிரவில் புறப்பட்டு பாண்டிச்சேரிக்குப் பயணம் ஆனேன்.*****
//துப்பறியும் கதை மாதிரி விறுவிறுப்பாக இருக்கிறது ..//
அப்படியா! சந்தோஷம்!! நான் என் பதிவினில் கதைசொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதே!!!
//நியாயமாய் உழைத்து வந்த பணத்தில் முழுமனதோடு அன்போடு வாங்கி அன்னை என்னும் தெய்வத்திற்கு அர்ப்பணித்த வெள்ளித்தட்டு தங்கள் இல்லத்தைவிட்டு எங்கும் செல்லமுடியாதுதான் ..//
அம்பாளின் அசரீரி வாக்குப்போல உள்ளது. மிக்க மகிழ்ச்சி.
நல்லவேளையாக நான் மிகச்சரியான நேரத்தில், அவர்களைத் துரத்திக்கொண்டு பாண்டிச்சேரிக்குப் போனதால், அந்த வெள்ளித்தட்டு, விற்பனைக்கோ அல்லது அடகுக்கடைக்கோ செல்லாமல் தப்பி என் கைக்கே திரும்பக்கிடைத்து விட்டது.
பதிலளிநீக்குஉழைத்து சம்பாதித்த பொருள் ஒருபோதும் கைவிட்டுப்போகாது
இராஜராஜேஸ்வரி April 4, 2013 at 10:42 PM
நீக்கு*****நல்லவேளையாக நான் மிகச்சரியான நேரத்தில், அவர்களைத் துரத்திக்கொண்டு பாண்டிச்சேரிக்குப் போனதால், அந்த வெள்ளித்தட்டு, விற்பனைக்கோ அல்லது அடகுக்கடைக்கோ செல்லாமல் தப்பி என் கைக்கே திரும்பக்கிடைத்து விட்டது. *****
//உழைத்து சம்பாதித்த பொருள் ஒருபோதும் கைவிட்டுப்போகாது//
நல்லா அழுத்தம் திருத்தமாகச் சமத்தா சொல்லிட்டீங்கோ!
மிகவும் ’அ ழு த் த ம்’ தானாக்கும். ;)))))
பாண்டிச்சேரியிலிருந்த STD BOOTH மூலம் என் திருச்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, என் ஜீப் டிரைவராக அது சமயம் பணியாற்றிய திரு. இராஜகோபால் என்பவரிடம், பாண்டிச்சேரிக்கு நான் சென்ற வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக, என் வீட்டுக்குப்போய் என் மனைவியிடம் சொல்லிவிட்வும், என நான் கேட்டுக்கொண்டேன்.
பதிலளிநீக்குஅவரும் உடனடியாக என் வீட்டுக்குப்போய் தகவல்சொல்லியுள்ளார். அதைக்கேட்ட பிறகே என் மனைவியும் நிம்மதி ஆகியிருக்கிறாள்.//
திட்டமிட்ட அருமையான செயல்கள்.. அனாவசிய அலைச்சல் மன உளைச்சலைத்தவிர்த பாங்கு பாராட்டுக்குரியது
இராஜராஜேஸ்வரி April 4, 2013 at 10:47 PM
நீக்கு*****பாண்டிச்சேரியிலிருந்த STD BOOTH மூலம் என் திருச்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, என் ஜீப் டிரைவராக அது சமயம் பணியாற்றிய திரு. இராஜகோபால் என்பவரிடம், பாண்டிச்சேரிக்கு நான் சென்ற வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக, என் வீட்டுக்குப்போய் என் மனைவியிடம் சொல்லிவிட்வும், என நான் கேட்டுக்கொண்டேன்.
அவரும் உடனடியாக என் வீட்டுக்குப்போய் தகவல் சொல்லியுள்ளார். அதைக்கேட்ட பிறகே என் மனைவியும் நிம்மதி ஆகியிருக்கிறாள்.*****
//திட்டமிட்ட அருமையான செயல்கள்.. அனாவசிய அலைச்சல் மன உளைச்சலைத்தவிர்த்த பாங்கு பாராட்டுக்குரியது//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகழகான ஆத்மார்த்தமான பல்வேறு கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், மேடம்.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள என் ஆறு பொக்கிஷத் தொடர் பதிவுகளுக்கும் சேர்த்து ’அஸ்வினி முதல் ரேவதி’ வ்ரையுள்ள ஜொலிக்கும் நக்ஷத்திரங்கள் போல 27 முறை தங்களின் தங்கத் தாமரைகளை அர்சித்து, உற்சாகப்படுத்தி, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, பதிவுகள் அனைத்தையும் பெருமைப்படுத்திச் சிறப்பித்துள்ளீர்கள்.
புள்ளிவிபரப்படி உங்களை அடிச்சுக்க யாருமே இல்லை. நீங்க நீங்க தான் போங்க! அதனால் தான் For me 'YOU ARE THE BEST' என ஏற்கனவே என் பதிவொன்றில் ஸ்பெஷல் விருது கொடுத்துச் சொல்லியுள்ளேன்.
இப்போதும் அதையே நினைவூட்டுகிறேன்.
நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி, நன்றி.
உண்மைதான் நம் வாழ்க்கைப் பாதையில் இப்படியும் சிலரைச் சந்திக்க வேண்டி வந்து விடுகிறது.உங்கள் அதிர்ஷ்டம் பொருள் கிடைத்து விட்டது. என் அனுபவத்தை எனது மணி மணியாய் சிந்தனை என்ற பதிவில் வெளியிட்டுள்ளேன். தாய் மீது நீங்கள் கொண்டிருந்த அன்புக்கு என் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குRukmani Seshasayee April 4, 2013 at 11:00 PM
நீக்குவாங்கோ, வணக்கம். நமஸ்காரம்.
//உண்மைதான் நம் வாழ்க்கைப் பாதையில் இப்படியும் சிலரைச் சந்திக்க வேண்டி வந்து விடுகிறது.//
ஆம். துரதிஷ்டவசமாக மிகச்சிலர் இவ்வாறு நம் வாழ்க்கைப் பாதையில், முட்களாக வந்து சேர்ந்து, தொல்லை கொடுத்து விடுகிறார்கள்.
//உங்கள் அதிர்ஷ்டம் பொருள் கிடைத்து விட்டது.//
ஆம் ஏதோ ஒரு பெரிய அதிர்ஷ்டம் தான் அன்று என்னை சுறுசுறுப்பாக பாண்டிச்சேரிக்குத் துரத்தியது.
இவ்வாறு என்னைத் துரத்தியதில் BHEL Qrs. இல் என் எதிர்வீட்டு நண்பரின் மனைவிக்கு மிகவும் பங்கு உண்டு.
திருமதி ஆண்டாள் alias ராஜி ராகவன் என்று பெயர். Quarters மாடியில் எங்கள் இருவரின் வீடு மட்டும் தான்.
எங்கள் குடும்பம் பற்றியும், குறிப்பாக என் தாயார் குணங்கள் பற்றியும் மிகவும் அறிந்தவர்கள். பாட்டிக்கு இந்த விஷயம் தெரிந்தால் உடனே Heart attack வந்தாலும் வந்திடும். உடனே புறப்பட்டுப்போய் பார்த்து மிரட்டிக்கேட்டுட்டு வாங்கோ என்று என்னிடம் சொல்லி, என்னை புறப்பட்டுச்செல்ல வற்புருத்தினார்கள். அவர்கள் நல்ல புத்திசாலியான தைர்யமான பெண்மணி. நான் புறப்படாவிட்டால் அவர்களே புறப்பட்டுப் போய் இருப்பார்கள். அவ்வளவு ஒரு ஆர்வம் அவர்களுக்கு இந்த விஷயத்தில். ;)
//என் அனுபவத்தை எனது மணி மணியாய் சிந்தனை என்ற பதிவில் வெளியிட்டுள்ளேன்.//
அப்படியா! படித்துப்பார்க்கிறேன். நீங்க அதற்கான இணைப்புக் கொடுத்திருக்கலாமே! பரவாயில்லை, நானே தேடி கண்டுபிடித்துக்கொள்கிறேன். வெள்ளித்தட்டையே கண்டுபிடித்த எனக்கு தங்களின் பதிவையா கண்டு பிடிக்க முடியாது!!!! ;)
//தாய் மீது நீங்கள் கொண்டிருந்த அன்புக்கு என் பாராட்டுக்கள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நெகிழ வைத்த பொக்கிஷங்கள்..
பதிலளிநீக்குஅமைதிச்சாரல் April 5, 2013 at 12:06 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நெகிழ வைத்த பொக்கிஷங்கள்..//
சந்தோஷம் மேடம்.
இந்தத்தொடரின் நான்காம் பகுதியிலிருந்து தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
இப்பொக்கிஷபதிவினில் இதுதான் ஹைலைட்டான பதிவு என் கருத்து. அதுவும் அம்மாவிற்கு நீங்க வாங்கி கொடுத்தது பொக்கிஷத்திலும் பொக்கிஷம்.
பதிலளிநீக்குஇப்படி எல்லோரும் இருந்திட்டால் முதியோர் இல்லம் தேவைப்படாது.
அவருக்கு கொடுத்த வெள்ளித்தட்டு காணவில்லை என்றதும் , பதற்றப்படாமல், மற்றவர் மனம் நோகாமல் அதனை மீட்டவிதம்
ஆகட்டும், அம்மாவையும் வருந்தவைக்காமல்,அதே நேரம் மனைவியின் தவிப்பையும் புரிந்து அவருக்கு தகவல் சொன்ன சமயோசிதமாகட்டும் உங்களின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் பக்குவம் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியப்படும். அதற்கு என் பாராட்டுக்கள் அண்ணா.
குழந்தைக்கு பணம் கொடுத்ததன் மூலம் "இன்னார் செய்தாரை ....என்ற குறளுக்கேற்ப நடந்துகொண்டது உங்க பெருந்தன்மை.பெரியவர்கள் செய்யும் தவறிட்கு பாவம் குழந்தை என்னசெய்யும்.
வெள்ளித்தட்டு,அம்மாவின் சங்கிலி உண்மையிலுமே மிக முக்கியமான பொக்கிஷம்தான்.
ammulu April 5, 2013 at 12:41 AM
நீக்குவாங்கோ அம்முலு வாங்கோ, வணக்கம்.
//இப்பொக்கிஷபதிவினில் இதுதான் ஹைலைட்டான பதிவு என் கருத்து.//
மிக்க மகிழ்ச்சி, அம்முலு.
//அதுவும் அம்மாவிற்கு நீங்க வாங்கி கொடுத்தது பொக்கிஷத்திலும் பொக்கிஷம். இப்படி எல்லோரும் இருந்திட்டால் முதியோர் இல்லம் தேவைப்படாது.//
எல்லோரும் இதுபோல தன் தாயிடம் சற்றே கூடுதல் அன்பாக இருந்திடப் பிரார்த்திப்போம்.
//அவருக்கு கொடுத்த வெள்ளித்தட்டு காணவில்லை என்றதும் , பதற்றப்படாமல், மற்றவர் மனம் நோகாமல் அதனை மீட்டவிதம்
ஆகட்டும், அம்மாவையும் வருந்தவைக்காமல், அதே நேரம் மனைவியின் தவிப்பையும் புரிந்து அவருக்கு தகவல் சொன்ன சமயோசிதமாகட்டும் உங்களின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் பக்குவம் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியப்படும். அதற்கு என் பாராட்டுக்கள் அண்ணா.//
ரொம்ப ரொம்ப சந்தொஷமம்மா. ;)
//குழந்தைக்கு பணம் கொடுத்ததன் மூலம் "இன்னார் செய்தாரை .... என்ற குறளுக்கேற்ப நடந்துகொண்டது உங்க பெருந்தன்மை. பெரியவர்கள் செய்யும் தவறுக்கு பாவம் குழந்தை என்னசெய்யும்?//
கரெக்ட். மிகச்சரியாக உணர்ந்து சொல்லிட்டீங்கோ.
//வெள்ளித்தட்டு,அம்மாவின் சங்கிலி உண்மையிலுமே மிக முக்கியமான பொக்கிஷம்தான்.//
அப்படியா! புரிதலுக்கு மிகவும் மகிழ்ச்சியம்மா.
இந்தத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து அரிய பெரிய கருத்துக்கள் சொல்லி, பாராட்டி, மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ளீர்கள் அம்முலு. என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். முடியும் போது தொடர்ந்து வருகை தாருங்கள்.
பிரியமுள்ள
கோபு அண்ணா
Aha.......
பதிலளிநீக்குThe post is so thrilling sir.
I appreciate the way you recollect the velli plate.
I can realize the feelings of your mother on receiving the chain and plate.
You are really a good son sir.
The post is so touching.
Real treaure.
viji
viji April 5, 2013 at 1:04 AM
நீக்குவாங்கோ விஜி மேடம், வாங்கோ, வணக்கம்.
//Aha....... ஆஹா
The post is so thrilling sir.
இந்தப் பதிவு மிகவும் உணர்ச்சிபூர்வமாக உள்ளது.
I appreciate the way you recollect the velli plate.
தாங்கள் வெள்ளித்தட்டை மீட்டு வந்த வழிமுறைக்கு உங்களை நான் பாராட்டுகிறேன்.//
மிகவும் சந்தோஷம்.
//I can realize the feelings of your mother on receiving the chain and plate.
தங்கச்சங்கிலியும், வெள்ளித்தட்டும் தாங்கள் தங்கள் தாயாருக்கு வாங்கிக்கொடுத்த போது, தங்கள் தாயார் எவ்வளவு தூரம் உணர்ந்து மகிழ்வடைந்திருப்பார்கள் என்பதை என்னால் நன்கு உணரமுடிகிறது.//
மிக்க மகிழ்ச்சி.
//You are really a good son sir.
தாங்கள் உண்மையிலேயே மிகவும் நல்ல ஒரு மகன் தான், சார்.
The post is so touching. Real treasure. ---- viji
தங்களின் இந்தப்பதிவு மிகவும் மனதை தொடுவதாக [டச்சிங் ஆக] உள்ளது. உண்மையான பொக்கிஷம் தான் --- விஜி.//
இதுவ்ரை வெளியிட்டுள்ள இந்தத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து அரிய பெரிய கருத்துக்கள் சொல்லி, பாராட்டி, மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ளீர்கள்.
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பதிலளிநீக்குவாழ்வாங்கு வாழுதல் எனில் என்ன பொருள்
என உங்கள் வாழ்வையே உதாரணமாக நிச்சயம்
சொல்லிவிடலாம்.மனம் தொட்ட பதிவு
வாழ்த்துக்கள்
Ramani S April 5, 2013 at 1:56 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//வாழ்வாங்கு வாழுதல் எனில் என்ன பொருள் என உங்கள் வாழ்வையே உதாரணமாக நிச்சயம் சொல்லிவிடலாம். மனம் தொட்ட பதிவு வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.
"To err is human and to forgive is divine"..i cud see the divinity within u reg that velli thattu..Meenakshi patti en kanmun thondrathu pola sila nimidangal unarnthen..nandrigal pala....SIMPLE AND A HUMBLE HUMAN BEING SHE WAS..! even now i feel d happiness on spending time with her once upon a time.
பதிலளிநீக்குgirijasridhar April 5, 2013 at 2:37 AM
நீக்குவாம்மா கிரிஜா, செளக்யமா?
//"To err is human and to forgive is divine"..i cud see the divinity within u reg that velli thattu.. மனிதர்கள் தவறு இழைப்பது என்பது சகஜம். தவறை மன்னித்தல் என்பது தெய்வீகத்தன்மை. தங்களிடம் உள்ள அந்த தெய்வீகத்தன்மையை இந்த வெள்ளித்தட்டு விஷயத்தில் என்னால் காணமுடிகிறது //
சில நேரங்களின், சில விஷயங்களில், சில மனிதர்களிடம், ஒருசில நிர்பந்தங்களாலும், ஒருசில பின் விளைவுகளை யோசித்தும், நாம் மிகவும் பொறுமையாகவும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. வேறு வழியே இல்லை.
இது பழுத்த அனுபவத்தாலும், மனப்பக்குவத்தாலும் மட்டுமே ஒருவருக்கு வரக்கூடும். இதை தெய்வீகத்தன்மை என்று நீ சொல்வதை, என்னால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் OK நன்றி..
//Meenakshi patti en kanmun thondrathu pola sila nimidangal unarnthen..nandrigal pala....மீனாக்ஷி பாட்டி என் கண்முன் தோன்றுவது போல சில நிமிடங்கள் உணர்ந்தேன்... நன்றிகள் பல //
அப்படியா, இன்னும் உனக்கு அவர்களை நினைவு இருக்கிறதா? ஆச்சர்யம் தான்.
அவர்கள் காலமானபோது [1997] நீ பத்து வயதுக்குழந்தையாய் இருந்திருப்பாய் என நினைக்கிறேன்..
//SIMPLE AND A HUMBLE HUMAN BEING SHE WAS..!//
அந்தப்பாட்டி மிகவும் எளிமையான அடக்கமான மனுஷி !
மிகவும் அழகாக உண்மையைச் சொல்லியிருக்கிறாய். ;) மிகவும் சந்தோஷம்.
//even now i feel d happiness on spending time with her once upon a time.//
முன்னொரு காலத்தில் அந்தப்பாட்டியுடன் நான் சேர்ந்து இருந்த நேரங்களை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியை என் மனதில் உணரமுடிகிற்து.//
என் அம்மாவுக்கு நீ தான் முதல் கொள்ளுப்பேத்தி. பிற்காலத்தில் பேரனின் ஆத்துக்காரியாக வரப்போகிறவள் என்று அப்போதே தெரிந்திருந்தால் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பார்கள் தான்.
உன் ஆத்துக்காரர் ஸ்ரீதர் மேல் கொள்ளைப்பிரியம் என் அம்மாவுக்கு.
மூன்றாவதாகப்பிறந்த அதுவாவது கோபுவுக்கு பெண்ணாக இருக்கக்கூடாதா என மிகவும் ஆதங்கப்பட்டார்கள், என் அம்மா.
உன் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி, கிரிஜா.
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான பதிவு. நிம்மதி தரும் நிறைந்த நினைவுகள். வாழ்த்துக்கள்.
G.M Balasubramaniam April 5, 2013 at 3:53 AM
நீக்குஐயா வாங்கோ, வணக்கம்.
//நெகிழ்ச்சியான பதிவு. நிம்மதி தரும் நிறைந்த நினைவுகள். வாழ்த்துக்கள்.//
நான் தங்களின் பதிவுகள் பக்கம் பல மாதங்களாக வரமுடியாத சூழ்நிலைகளில் இருந்தும், தாங்கள் பெருந்தன்மையாக என் இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பாகங்களில் மூன்று [அதாவது பகுதி-2, 3 and 6] பாகங்களுக்கு வருகை தந்து கருத்துக்கள் கூறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் ஐயா.
சிலிர்க்க வைக்கும் நினைவுகள். உடனடியாகப் பாண்டிச்சேரி போகத் தோன்றியிருக்கிறது பாருங்கள்! அதைவிட மன்னிக்கவும் தோன்றியிருக்கிறதே - உயர்ந்த மனிதர் நீங்கள்.
பதிலளிநீக்குஅப்பாதுரை April 5, 2013 at 7:37 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//சிலிர்க்க வைக்கும் நினைவுகள். //
மிகவும் சந்தோஷம் சார்.
//உடனடியாகப் பாண்டிச்சேரி போகத் தோன்றியிருக்கிறது பாருங்கள்! அதைவிட மன்னிக்கவும் தோன்றியிருக்கிறதே - உயர்ந்த மனிதர் நீங்கள்.//
Sir, வேறு ஏதாவது விலை உயர்ந்த என் உபயோகத்திற்கான பொருள் திருட்டுப்போய் இருந்தாலும், நான் அன்று இரவு பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டுச்சென்று இருக்க மாட்டேன், சார்.
இது என் வயதான தாயார் அன்றாடம் உபயோகித்து வந்த பொருள். அதனால் அதை மீட்டுக்கொண்டு வருவது என் கடமையாகிப்போய் விட்டது.
மேலே Mrs. Rukmani Seshasayee அவர்களுக்கு நான் எழுதியுள்ள பதிலையும் தயவுசெய்து படியுங்கோ சார்.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்.
இலையில்தான் சாப்பிடுவார்கள். கைவசம்,முருக்கெலை தைத்தது,சரகு,என்று வைத்திருப்பார்கள். ஆலிலயில் சாப்பிடமாட்டார்கள் இப்படியெல்லாம் நியதி உண்டு. அதெல்லாம் ஞாபகம் வந்தது. தொடரும்.
பதிலளிநீக்குKamatchi April 5, 2013 at 8:05 AM
நீக்குவாங்கோ காமாக்ஷி மாமி, நமஸ்காரங்கள்.
//இலையில்தான் சாப்பிடுவார்கள். கைவசம், முருக்கெலை தைத்தது, சரகு, என்று வைத்திருப்பார்கள். ஆலிலயில் சாப்பிடமாட்டார்கள் இப்படியெல்லாம் நியதி உண்டு. அதெல்லாம் ஞாபகம் வந்தது. தொடரும்.//
ஆமாம் மாமி, இதில் நிறைய வகை சரகு இலைகள் உண்டு. பலவித சாஸ்திர சம்ப்ரதாயங்கள் வைத்துக்கொண்டு தான் இருப்பார்கள். நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் தான்.
தொடர்ந்து வாங்கோ. ;)
படிக்கும்போதே என்னவோ செய்கிறது.. மனதி உலுக்கும் எழுத்து
பதிலளிநீக்குரிஷபன் April 5, 2013 at 9:50 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//படிக்கும்போதே என்னவோ செய்கிறது.. மனதை உலுக்கும் எழுத்து//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
எழுதரது டைனிங் டேபிளில். தொடரும் போட்டு விட்டேன்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டிலும் உங்களம்மா மாதிரி,பாட்டியும், அப்பாவும் இருந்தார்கள் அதெல்லாம் ஞாபகம் வந்தது. கண்களில் நீர்தான்.
எல்லாவற்றையும்விட பிள்ளையைவிட,நாட்டுப்பெண் இங்கிதமாக இருந்ததுதான் விசேஷமானது. ஒரு தாய்க்குச் செய்ய அன்புதான் முக்கியம். கடைசி இருபது வருஷம், நிறைந்த அமைதியான வாழ்க்கை கிடைத்தது பாக்கியம்தான். கஷ்டங்கள் எதிர்கொள்ள
பாலியத்தில் தெம்பு தானாக உண்டாகும். கடைசி காலங்கள்
அமைதியுடன் கழிக்க நல்ல சூழ்நிலை உண்டாக பிள்ளை,அவர்கள் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரி உங்கள் குடும்பம். தட்டு, சங்கிலி, எல்லாம் ஞாபகார்த்தம் அல்ல, பொக்கிஷம்தான். நல்ல பதிவு.
கிராமங்களில் பேத்தி அதாவது பேய் அத்தி என்று ஒருவகை மரம் உண்டு. அந்த இலையில்தான் துவாதசியன்று சாப்பிடுவார்கள்.
இடிந்த வீடுகளில் தானாக முளைக்கும் ஒரு செடியாகி மரமாகும்.
பெரிய இலைகளைத் தைத்து சாப்பிட இலை ரெடியாகிவிடும்.
அதுவும் ஸமயத்திற்கு உதவும். இப்படி எத்தெத்தனை ஞாபகங்கள்?
நன்றி. ஆசிகளுடனும், அன்புடனும்
Kamatchi April 5, 2013 at 10:40 AM
நீக்குவாங்கோ மாமி, நமஸ்காரம்.
//எழுதறது டைனிங் டேபிளில். தொடரும் போட்டு விட்டேன்.//
அதனால் பரவாயில்லை. சின்னச்சின்ன கமெண்டாக நிறைய போடுவதே நல்லது.
//எங்கள் வீட்டிலும் உங்களம்மா மாதிரி,பாட்டியும், அப்பாவும் இருந்தார்கள் அதெல்லாம் ஞாபகம் வந்தது. கண்களில் நீர்தான்.//
பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்திருக்கும் தான்.
//எல்லாவற்றையும்விட பிள்ளையைவிட, நாட்டுப்பெண் இங்கிதமாக இருந்ததுதான் விசேஷமானது.//
இரண்டு பேருமே நல்ல ஒற்றுமை. இரண்டு பேருக்குமே அதிக சாமர்த்தியமும் கிடையாது. வாய்க்கு ருசியாகச் சமையல், குடும்ப வேலைகள், குழந்தைகளை கவனிப்பது இதுபோலவே. மற்ற நேரங்களில் கொஞ்சம் டி.வி. பார்த்தல், தூக்கம் முதலியன.
//ஒரு தாய்க்குச் செய்ய அன்புதான் முக்கியம். கடைசி இருபது வருஷம், நிறைந்த அமைதியான வாழ்க்கை கிடைத்தது பாக்கியம்தான். கஷ்டங்கள் எதிர்கொள்ள
பாலியத்தில் தெம்பு தானாக உண்டாகும். கடைசி காலங்கள்
அமைதியுடன் கழிக்க நல்ல சூழ்நிலை உண்டாக பிள்ளை, அவர்கள் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரி உங்கள் குடும்பம்.//
என் அப்பா மிகவும் கோபக்காரர். ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் அம்மாவுக்கு அடி விழும். நான் சின்னப் பையனாக இருந்தபோது எனக்கு இதையெல்லாம் பார்த்தால் பயமாக இருக்கும். அம்மாவைப்பார்க்க பாவமாகவும் இருக்கும்.
// தட்டு, சங்கிலி, எல்லாம் ஞாபகார்த்தம் அல்ல, பொக்கிஷம்தான். நல்ல பதிவு.//
சந்தோஷம்.
//கிராமங்களில் பேத்தி அதாவது பேய் அத்தி என்று ஒருவகை மரம் உண்டு. அந்த இலையில்தான் துவாதசியன்று சாப்பிடுவார்கள்.//
தெரியும். என் மாமியார்/மாமனார் வீட்டில் பார்த்துள்ளேன்.
//இடிந்த வீடுகளில் தானாக முளைக்கும் ஒரு செடியாகி மரமாகும். பெரிய இலைகளைத் தைத்து சாப்பிட இலை ரெடியாகிவிடும். அதுவும் ஸமயத்திற்கு உதவும். இப்படி எத்தெத்தனை ஞாபகங்கள்?//
காஞ்சிபுரம் பக்கமெல்லாம் ஹோட்டலில் கூட இதுபோன்று பாடம் செய்யப்பட்ட பேத்தி இலை தான். அழகாக பெரிய ரெளண்டாகத் தைத்து வைத்திருப்பார்கள்.
//நன்றி. ஆசிகளுடனும், அன்புடனும்//
மிகவும் சந்தோஷம் மாமி. அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
அநேக நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
// நான் சம்பாதிக்க ஆரம்பித்து என் அம்மாவுக்காக, நான் ஆசையாக வாங்கிக்கொடுத்த பொருட்கள் இரண்டே இரண்டு மட்டுமே.
பதிலளிநீக்கு[1] கழுத்தில் அணிய ஒரு தங்க செயின்.
[2] சாப்பிடுவதற்கு ஓர் வெள்ளித்தட்டு. //
அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.
அம்மாவின் வெள்ளித்தட்டு காணாமல் போய் மீட்டகதை, விக்கிரமாதித்தனின் சாகசமாய் தோன்றுகிறது.
நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, எங்கள் வீட்டிலும் இதே மாதிரி ஒரு சம்பவம். கிராமத்து உறவினர் ஒருவர், பெரிய புத்தம் புதிய டார்ச் லைட்டை எடுத்துச் சென்று விட்டார். அதனை மூன்று மாதம் கழித்துதான் மீட்க முடிந்தது.
( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)
திருச்சி மாநகரில் தெப்ப உற்சவம் 25.03.2013 என்ற உங்கள் பதிவு என்ன ஆயிற்று?
தி.தமிழ் இளங்கோApril 5, 2013 at 9:57 PM
நீக்குவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.//
மிக்க நன்றி + சந்தோஷம் ஐயா. அவர்கள் மிக மிக நல்லவர்கள் ஐயா. குழந்தைகள் மேல் அளவிட முடியாத பாசத்தைத்தவிர வேறு ஏதும் தெரியாமல் வெள்ளந்தியாக வாழ்ந்தவர்கள், ஐயா.
//அம்மாவின் வெள்ளித்தட்டு காணாமல் போய் மீட்டகதை, விக்கிரமாதித்தனின் சாகசமாய் தோன்றுகிறது.//
என்னுடைய வேறு எந்த விலை உயர்ந்த பொருள் அன்று காணாமல் போய் இருந்தாலும், நான் பாண்டிச்சேரிக்கு அன்று புறப்பட்டுப்போய் இருக்கவே மாட்டேன் ஐயா.
போனால் போகிறது, அவர்களுக்கு என்ன ஒரு கஷ்டமோ, எடுத்துச் சென்று உள்ளார்கள், என நினைத்து பேசாமல் இருந்து விடுவேன் ஐயா.
என் வயதான தாயாரால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது, ஐயா. அதனால் மட்டுமே அன்று பல்வேறு சிரமங்களுக்கும் இடையே, நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன், ஐயா.
மேலும் ஒரு பொருள் காணாமல் போகும் வருத்தத்துடன், பல்வேறு சந்தேகங்கள் பலர் மீது அனாவஸ்யமாக ஒவ்வொருவர் மனதிலும் ஏற்பட்டு வீண் குழப்பங்களுக்கும் இடம் அளித்து விடும் அல்லவா, ஐயா.
அதனால் முடிந்த வரை அதை அப்போதே கீறி ஆற்றிக்கொண்டு விடுவதும் நல்லது என நினைத்துத்தான், நான் என் பயணத்தை மேற்கொண்டேன், ஐயா.
விக்ரமாதித்தன் கதை போலவே தான் இதுவும். இந்தக்கதைக்குள் மேலும் பல உப கதைகள் அடங்கியுள்ளன.
சிலவற்றை வெளிப்படையாக என்னால் இந்தப்பதிவினில் சொல்ல முடியாமல் உள்ளது என்பதே உண்மை, ஐயா.
>>>>>
VGK >>>> திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா [2]
நீக்கு//நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, எங்கள் வீட்டிலும் இதே மாதிரி ஒரு சம்பவம். கிராமத்து உறவினர் ஒருவர், பெரிய புத்தம் புதிய டார்ச் லைட்டை எடுத்துச் சென்று விட்டார். அதனை மூன்று மாதம் கழித்துதான் மீட்க முடிந்தது.//
ஒவ்வொருவர் வீட்டிலும் இதுபோன்ற மன சஞ்சலங்கள் ஏற்படுத்திய நிறைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
இழந்த சிலவற்றை மட்டுமே நம்மால் மீட்க முடியும். பலவற்றை மீட்கவே முடியாது.
என் பையனுக்கு புத்தம்புதிதாக அனைத்து EXTRA FITTINGS உம் போட்ட சைக்கிள் வாங்கிக்கொடுத்தேன். வாங்கிக்கொடுத்த மூன்றாம் நாள் இரவே அதை யாரோ திருடிச்சென்று விட்டனர்.
இது 28 வருடங்கள் முன்பு நடந்தது. போலீஸில் புகார் கொடுத்தான். இருப்பினும் இன்றுவரை எந்தப்பலனும் இல்லை.
நிறைய தடவை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைப்பு வந்ததாலும், அவ்வப்போது அவர்களுக்கு டீ, காஃபி முதலியன வாங்கிக்கொடுக்க வேண்டியிருந்ததாலும், தான் கொடுத்த புகாரையே ஒருநாள் வாபஸ் வாங்கிக்கொண்டு வந்தான்.
//( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)//
மிக்க நன்றி, ஐயா.
//திருச்சி மாநகரில் தெப்ப உற்சவம் 25.03.2013 என்ற உங்கள் பதிவு என்ன ஆயிற்று?//
இந்த என் ”பொக்கிஷம் ” பதிவில் இதுவரை வெளியிட்டுள்ள 6 பகுதிகளைத்தவிர, மேலும் சில பகுதிகளும் என்னால் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் எவ்வளவு பகுதிகள் என என்னால் இன்னும் இறுதி வடிவம் கொடுக்கப்பட வில்லை. எப்படியும் பகுதி-10 அல்லது பகுதி-11 இல் முடிந்து விடும்.
அவை ஒருவழியாக முடிந்த பிறகு கடைசியாக தெப்பத்தை மிதக்க விடலாம் என்று இருக்கிறேன்.
பொக்கிஷங்கள் தொடருக்கு நடுவே அதை வெளியிட வேண்டாம் என்பதால், அதை இப்போது சற்றே நிறுத்தி வைத்துள்ளேன்.
தெப்பம் மிதக்க விடப்படும்போது, “பொக்கிஷம்” தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் வருகை தந்து சிறப்பித்துள்ள நபர்களை மட்டும், தெப்பத்தில் ஏற்றி கெளரவிக்கலாம் என்றும் ஓர் ஆசை என் மனதில் உள்ளது. பார்ப்போம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.
அன்னையின் நினைவே பொக்கிஷம்தான். அதிலும் அவர்கள் உபயோகித்த பொருட்கள் நம்கைவசம் இருக்கும்போது எமக்கு ஏற்படும் மன ஆறுதல், அவைதொலந்தாலோ அல்லது கைநழுவிப்போனாலோ ஏற்படும் துயரம் சொல்லிலடங்காதது உண்மையே...
பதிலளிநீக்குஉங்கள் நினைவில் நிழலாடிய பொக்கிஷமாக அன்னையின் பொருட்கள் பகிர்வு தந்தீர்கள்.
மிகச்சிறப்பு. தொடருங்கள்....
வாழ்த்துக்கள் ஐயா!
இளமதி April 6, 2013 at 1:37 AM
நீக்குவாங்கோம்மா வாங்கோ, வணக்கம்.
//அன்னையின் நினைவே பொக்கிஷம்தான். அதிலும் அவர்கள் உபயோகித்த பொருட்கள் நம்கைவசம் இருக்கும்போது எமக்கு ஏற்படும் மன ஆறுதல், அவை தொலந்தாலோ அல்லது கைநழுவிப்போனாலோ ஏற்படும் துயரம் சொல்லிலடங்காதது உண்மையே...//
ஆமாம். ஆமாம். அன்னையின் நினைவே ஒரு பொக்கிஷம் தான். தாங்கள் சொல்வது எல்லாமே கரெக்ட்.
நன்கு உயிருக்குயிராகப் பழகின நட்புக்கள், கொஞ்சம் பாராமுகமாக இருந்தாலே நமக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்படும்போது, பெற்ற தாயின் நினைவுகளை எப்படி மறக்க இயலும்?
//உங்கள் நினைவில் நிழலாடிய பொக்கிஷமாக அன்னையின் பொருட்கள் பகிர்வு தந்தீர்கள். மிகச்சிறப்பு. தொடருங்கள்....
வாழ்த்துக்கள் ஐயா!//
தங்களின் அன்பான வருகை மகிழ்வளிக்கிறது. வருவீர்களோ மாட்டீர்களோ என என் மனம் கொஞ்சம் அங்கலாய்த்தது.
இதுவரை வெளியிட்ட இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளீர்கள்.
என் மனமார்ந்த நன்றிகள், தொடர்ந்து வருகை தாருங்கள், மேடம்.
தயவு செய்து பொக்கிசத்தை நிறுத்தி விடாதீர்கள் எவ்வளவு செய்திகள் .... பாராட்டுகள் ....
பதிலளிநீக்குமாலதி April 6, 2013 at 3:31 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//தயவு செய்து பொக்கிசத்தை நிறுத்தி விடாதீர்கள் //
அதெப்படி நிறுத்தாமல் இருக்க முடியும்? இந்தப் பொக்கிஷத்
தொடரில் இதுவரை ஆறு பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
நீங்கள் இரண்டாவது பகுதிக்கும் இந்த ஆறாவது பகுதிக்கும் மட்டும் வந்து கருத்தளித்துள்ளீர்கள். மீதி நான்கு பகுதிகளுக்கும் வரவே இல்லை.
உங்களைப்போன்றவர்களின் பொக்கிஷம் போன்ற கருத்துக்கள் என் எல்லாப்பகுதிகளுக்கும் கிடைத்தால் தானே, நானும் ஆர்வமாக இதனை நிறுத்தாமல் உற்சாகமாகத் தொடர முடியும்?
//எவ்வளவு செய்திகள் .... பாராட்டுகள் ....//
சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கள் + கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேட்ம்..
படித்த உடன் மனது கனமாகி விட்டது.
பதிலளிநீக்குநம்ப காலத்துல எல்லாம் நம்ப அம்மாக்கள் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்கள். கண்டிப்பாக நாங்கள் எல்லாம் அந்தக் கஷ்டங்கள் படவில்லை. கணவன், குடும்பம் இதே அவர்களின் எல்லாமாகவே இருந்த காலம். முதல் பாராவைப் படித்ததும் என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. அடுத்த வாரமாவது போய் பார்க்க வேண்டும்.
தட்டு தொலைந்து கிடைத்ததை நீங்கள் எழுதி இருப்பது ஒரு கதை போலவே உள்ளது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது சிலருக்கு மிகவும் சுலபமாக உள்ளது. நல்ல வேளைக்கு அந்தப் பெண்ணின் கணவனாவது நல்லவராக இருந்தாரே.
//என் தாயார் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.
அவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த பல அனுபவங்களை என் கீழ்க்கண்ட மிகப்பெரிய பதிவினில் ஓரளவு விளக்கியுள்ளேன். //
இப்படி ஒரு அருமையான மகன் கிடைத்ததை நினைத்து கண்டிப்பாக கவலைகளை மறந்திருப்பார்கள்.
பொக்கிஷங்களின் சிகரம் இந்தப் பதிவு.
உங்கள் சுவாரசியமான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
JAYANTHI RAMANI April 6, 2013 at 9:24 AM
நீக்குவாங்கோ மேடம் வாங்கோ, வணக்கம்.
//படித்த உடன் மனது கனமாகி விட்டது.//
அச்சச்சோ ! அப்படியா !! பூப்போன்ற [மணம் {மனம்} வீசும்] மனதை கனமாக விடக்கூடாது.
//நம்ப காலத்துல எல்லாம் நம்ப அம்மாக்கள் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்கள். கண்டிப்பாக நாங்கள் எல்லாம் அந்தக் கஷ்டங்கள் படவில்லை. கணவன், குடும்பம் இதே அவர்களின் எல்லாமாகவே இருந்த காலம். முதல் பாராவைப் படித்ததும் என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. அடுத்த வாரமாவது போய் பார்க்க வேண்டும்.//
போச்சுடா, ஏற்கனவே சென்ற இரண்டு பதிவுகளுக்கு, வழக்கம் போல கலகலப்பான பின்னூட்டங்களே வரவில்லையே, இந்த ’ஜெ’ மாமிக்கு திடீர்ன்னு என்ன ஆச்சு? என விசாரப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் நான்.
இதில் அடுத்த வாரமாவது அம்மாவைப்போய் பார்க்க வேண்டும் என நைஸாக லீவ் லெட்டரை நீட்டப்பார்க்கிறீர்களே?
//தட்டு தொலைந்து கிடைத்ததை நீங்கள் எழுதி இருப்பது ஒரு கதை போலவே உள்ளது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது சிலருக்கு மிகவும் சுலபமாக உள்ளது.//
ஒரு சிலரின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சேர்க்கைகள் முதலியன சரியில்லாமல் போய் விடுகிறது.
//நல்ல வேளைக்கு அந்தப் பெண்ணின் கணவனாவது நல்லவராக இருந்தாரே.//
அவன் நல்ல பையனே தவிர, சரியாகப்படிக்கவில்லை. ஏதோ சாதாரண வேலையில், குறைந்த சம்பளத்தில் மாடாக உழைத்து வந்தான் அப்போது.
என் வீட்டிலிருந்து புறப்படும் போது என்னிடம் தனியாக வந்து “கொஞ்சம் பண உதவி செய்ய முடியுமா? முடிந்தால் ஒரு வாரம் கழித்து ரூ, 3000 அனுப்பி உதவுங்கள்” என வேண்டினான்.
நானும் மணியார்டரில் அனுப்புவதாகச்சொல்லி வாக்குறுதி கொடுத்து விட்டு, அவன் விலாசமும் பெற்றுக்கொண்டேன்.
அதனால் அவன் நிச்சயம் திருடியிருக்க மாட்டான் என நான் நம்பினேன்.
இதற்கிடையில் அவன் மனைவி இவ்வாறு செய்வாள் என நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை.
அவளுடன் எனக்கு முன்பின் பழக்கமும் இல்லை. அவள் என் வீட்டுக்கு வந்திருந்த முதல் நாளே, தன் கைவரிசையைக் காட்டிவிட்டாள்.
*****என் தாயார் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள். அவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த பல அனுபவங்களை என் கீழ்க்கண்ட மிகப்பெரிய பதிவினில் ஓரளவு விளக்கியுள்ளேன்.*****
//இப்படி ஒரு அருமையான மகன் கிடைத்ததை நினைத்து கண்டிப்பாக கவலைகளை மறந்திருப்பார்கள்.//
என் தந்தை இறந்த பின் 22 வருஷங்கள் என் அம்மா வாழ்ந்திருக்கிறார்கள். எந்தக்கவலையும் இல்லாமல் செளக்யமாகவே என்னுடன் இருந்தார்கள்.
//பொக்கிஷங்களின் சிகரம் இந்தப் பதிவு.//
சந்தோஷம்.
//உங்கள் சுவாரசியமான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.//
வழக்கம் போன்ற கலகலப்பான பின்னூட்டங்கள் உங்களிடமிருந்து வர வேண்டும். அப்போது தான் என்னால் தொடர முடியும்.
இதன் பகுதி-4 இல் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என நீங்களே போய்ப் படித்துப்பாருங்கோ. அதன் பிறகு ஏன் சொன்னபடி நீங்கள் வரவே இல்லை?
இவருக்குத்தான் ரயில் வண்டி போல பின்னூட்டப்பெட்டி ரொம்பி வழிகிறதே, நாம் வருவதோ வராததோ இவருக்கு எப்படித் தெரியும் என்ற எண்ணமா?
எல்லாப்புள்ளி விபரங்களும் ஃபிங்கர் டிப்ஸ்ஸில் என்னிடம் இருக்குமாக்கும்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இதுவ்ரை இந்தப்பொக்கிஷத்தொடரின் முதல் ஆறு பகுதிகளுக்கும் வந்ததாக பேர் பண்ணியிருகிறீர்கள். OK. நன்றி.
பின்னூட்டம் எழுதும்போது, சிரத்தையாக தங்களின் வழக்கமான முத்திரையைப் பதித்து எழுதுங்கோ. குறும்புகள் வால் தனங்கள் எல்லாமே அதில் இருக்கட்டும்.
ஏனோதானோ என்று எழுதத்தான் ஏராளமானவர்கள் இருக்கக்கூடும் அல்லவா! எனவே அதிலும் தங்களின் தனித்திறமை மிளிரட்டும். புரிகிறதா? அன்பான வாழ்த்துகள்.
பிரியமுள்ள
கோபு .
உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குபழனி. கந்தசாமி April 6, 2013 at 2:27 PM
நீக்குவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.//
இந்த என் பொக்கிஷத் தொடருக்கு தங்களின் முதல் வருகை ஆறம் பகுதியில் ஆரம்பித்துள்ளது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
தங்களின் அன்பான வருகை + பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
எல்லாவிஷயங்களிலும் இருப்பது போல அம்மா விஷயத்தில் இருக்க முடியுமா.
பதிலளிநீக்குஇருந்தாலும் உங்களுக்கு அம்மா பொக்கிஷம் என்ங்களுக்கு இந்தப் பதிவு பெரிய பொக்கிஷம். அதெப்படித்தான் விடாக் கொண்டனாட்டம் கிளம்பி தட்டை மீட்டு வந்தீர்களோ.
திறமைசாலி.ரொம்பத் தர்மசங்கடமான நிலையில் சுறுசுறுப்பாகச் செயல் பட்டு உள்ளீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வல்லிசிம்ஹன் April 6, 2013 at 9:59 PM
நீக்குவாங்கோ வாங்கோ, வணக்கம்.
//எல்லாவிஷயங்களிலும் இருப்பது போல அம்மா விஷயத்தில் இருக்க முடியுமா. இருந்தாலும் உங்களுக்கு அம்மா பொக்கிஷம் எங்களுக்கு இந்தப் பதிவு பெரிய பொக்கிஷம்.//
மிகவும் சந்தோஷம்.
//அதெப்படித்தான் விடாக் கொண்டனாட்டம் கிளம்பி தட்டை மீட்டு வந்தீர்களோ. திறமைசாலி. ரொம்பத் தர்மசங்கடமான நிலையில் சுறுசுறுப்பாகச் செயல் பட்டு உள்ளீர்கள்.//
வேறு ஏதாவது விலை உயர்ந்த என் உபயோகத்திற்கான பொருள் திருட்டுப்போய் இருந்தாலும், நான் அன்று இரவு பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டுச்சென்று இருக்க மாட்டேன், மேடம்.
இது என் வயதான தாயார் அன்றாடம் உபயோகித்து வந்த பொருள். அதனால் அதை மீட்டுக்கொண்டு வருவது என் கடமையாகிப்போய் விட்டது.
மேலே Mrs. Rukmani Seshasayee அவர்களுக்கு நான் எழுதியுள்ள பதிலையும் தயவுசெய்து படியுங்கோ, புரியும்.
//மனம் நிறைந்த வாழ்த்துகள்.//
தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள் மகிழ்வளிக்கின்றன.
இதுவரை வெளியிட்ட இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து வருகை தாருங்கள், மேடம்.
Neela Rufus April 6, 2013 at 7:44 PM
பதிலளிநீக்குWELCOME TO YOU FOR YOUR VERY FIRST VISIT TO MY BLOG.
//Love your blog! I'm happy to follow you, //
I AM VERY HAPPY TO HEAR THIS VERY SWEET NEWS.
//you can visit my blog when you find time :)
http://kitchenista-welcometomykitchen.blogspot.com
SURE ! I SHALL TRY TO VISIT YOUR BLOG WHENEVER YOU RELEASE PURE VEGETARIAN ITEMS.
I THANK YOU ONCE AGAIN FOR YOUR KIND VISIT HERE & FOR THE VALUABLE COMMENTS OFFERED.
உங்கள் அம்மாவே உங்களுக்கு ஒரு பொக்கிஷமாகத்தான் இருந்திருக்க வேண்டும், இல்லையா? அவரும் உங்களைத் தன் பொக்கிஷமாகவே நினைத்திருக்க வேண்டும்!
பதிலளிநீக்குஅவர் போட்டுக்கொண்டிருந்த தங்க செயினும், சாப்பிட்ட வெள்ளித் தட்டும் நிஜமான போக்கிஷங்கல்தான். நீங்கள் வெள்ளித் தட்டை மீட்டுக் கொண்டு வந்த விதம் ஒரு thriller போல இருந்தது. அது மீண்டும் உங்கள் கைக்கு வந்தது அன்று உங்களுக்கு எப்படி இருந்ததோ, எங்களுக்கு மிகப் பெரிய ஆசுவாசம்!
இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Ranjani Narayanan April 7, 2013 at 5:40 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//உங்கள் அம்மாவே உங்களுக்கு ஒரு பொக்கிஷமாகத்தான் இருந்திருக்க வேண்டும், இல்லையா? அவரும் உங்களைத் தன் பொக்கிஷமாகவே நினைத்திருக்க வேண்டும்!//
ஆம், அதே அதே. இருவரும் ஒருவருக்கொருவர் பொக்கிஷங்கள் தான். ;)
//அவர் போட்டுக்கொண்டிருந்த தங்க செயினும், சாப்பிட்ட வெள்ளித் தட்டும் நிஜமான போக்கிஷங்கள் தான்.//
சந்தோஷம்.
//நீங்கள் வெள்ளித் தட்டை மீட்டுக் கொண்டு வந்த விதம் ஒரு thriller போல இருந்தது.//
அது ஒரு Thrilling ஆன அனுபவம் தான்.
//அது மீண்டும் உங்கள் கைக்கு வந்தது அன்று உங்களுக்கு எப்படி இருந்ததோ, எங்களுக்கு மிகப் பெரிய ஆசுவாசம்!//
மிக்க மகிழ்ச்சி.
//இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
ஆஹா, அப்படியா? சந்தோஷம்.
இதுவரை வெளியிட்ட இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாங்கோ, மேடம்.
திகிலூட்டும் சம்பவங்களோடு கூடிய இந்தப் பதிவு படிக்கையிலேயே மனம் அடித்துக் கொண்டது. எப்படியோ தட்டு கிடைத்ததே, அதுவரைக்கும் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
பதிலளிநீக்குGeetha Sambasivam April 7, 2013 at 6:36 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//திகிலூட்டும் சம்பவங்களோடு கூடிய இந்தப் பதிவு படிக்கையிலேயே மனம் அடித்துக் கொண்டது. எப்படியோ தட்டு கிடைத்ததே, அதுவரைக்கும் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.//
ஆம். இறைவனுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
இதுவரை வெளியிட்ட இந்தப்பொக்கிஷத்தொடரின் ஆறு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்கள் சொல்லி சிறப்பித்துள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
என் பெரிய அக்கா பிள்ளைகளில் ஒருவர் , அவருடன் பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரைக்கும், பிரபலமான மணக்குள விநாயகர் ஆலயம் + ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற இடங்களுக்கும் சென்று விட்டு, அதன்பின் திருச்சி திரும்பினேன்.
பதிலளிநீக்குவெள்ளித்தட்டு பொக்கிஷமாய் மீண்டும் கிடைக்கவைத்து தன் தரிசனத்தையும் அருளிய மணக்குளவிநாயகர் மனதை நிறைக்கிறார்..!
இராஜராஜேஸ்வரி April 8, 2013 at 1:29 AM
பதிலளிநீக்குநினைத்தேன் ... வந்[தீர்கள்]தாய் ... நூறு வயது! ;)))))
உங்களுக்கு ஆயுஷூ 100க்கும் மேல் தான்.
தங்களின் வருகை இந்தப்பதிவுக்கு [என் பதில்கள் உள்பட] 100க்கு 100 என காட்டுகிறது பாருங்கோ.
அதனால் தான் மீண்டும் வந்தேன் என்கிறீர்களோ? சந்தோஷம்.
*****என் பெரிய அக்கா பிள்ளைகளில் ஒருவர் , அவருடன் பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரைக்கும், பிரபலமான மணக்குள விநாயகர் ஆலயம் + ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற இடங்களுக்கும் சென்று விட்டு, அதன்பின் திருச்சி திரும்பினேன்.*****
//வெள்ளித்தட்டு பொக்கிஷமாய் மீண்டும் கிடைக்கவைத்து தன் தரிசனத்தையும் அருளிய மணக்குளவிநாயகர் மனதை நிறைக்கிறார்..!//
அந்தத் தொந்திப் பிள்ளையாரப்பா தான், தங்கள் ரூபத்தில் இதை எனக்கு அசரீரி போல, இப்போ சொல்லச் சொல்லியிருப்பது போலத் தோன்றுகிறது.
தங்களின் மீண்டும் வருகையில் என் மனமும் நிறைந்து மகிழ்ந்து போகிறது.
என் அன்பிற்குரிய “விநாயகி” அம்பாளுக்கு என் நன்றியோ நன்றிகள் ! ;)))))
நெகிழ வைக்கும் பதிவு,
பதிலளிநீக்குJaleela Kamal April 8, 2013 at 10:22 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நெகிழ வைக்கும் பதிவு,//
தங்களின் அன்பான வருகைக்கும் நெகிழ வைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.
பிறகு வருகிறேன்
பதிலளிநீக்குJaleela Kamal April 8, 2013 at 10:22 AM
நீக்கு//பிறகு வருகிறேன்//
OK வாங்கோ Thank you. - Gopu
"தாயிற் சிறந்ததொருகோயில் இல்லை" என மிகவும் அன்புடன் வழிகாட்டியாக வாழ்ந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குவெள்ளி தட்டை திருடியவர்களிடமும் மனம்கோணாமல் பண்புடன் மீட்டு வந்த உங்கள் சிறந்த குணத்திற்கு பாராட்டுகள்.
மாதேவி April 9, 2013 at 8:39 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//"தாயிற் சிறந்ததொருகோயில் இல்லை" என மிகவும் அன்புடன் வழிகாட்டியாக வாழ்ந்துள்ளீர்கள்.
வெள்ளி தட்டை திருடியவர்களிடமும் மனம்கோணாமல் பண்புடன் மீட்டு வந்த உங்கள் சிறந்த குணத்திற்கு பாராட்டுகள்.//
இதுவரை இந்தத்தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் அன்புடன் வருகை தந்து அழகாகக் கருத்தளித்துள்ளீர்கள். என் மனமார்ந்த நன்றிகள்.
Was waiting to read the continuation of this publication till 10 p.m this day (09-04-2013),but in vain. Please continue ,Sir
பதிலளிநீக்குlathigar April 9, 2013 at 9:24 AM
பதிலளிநீக்குWelcome to you, Sir.
//Was waiting to read the continuation of this publication till 10 p.m this day (09-04-2013),but in vain. Please continue ,Sir//
For its continuation [Part-7] you have to go the following Link:
http://gopu1949.blogspot.in/2013/04/7.html
Part 8 , 9, 10 & 11 will be released on 13th, 17th, 21st & 25th respectively.
தங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் மனம் நெகிழ்த்துகின்றன வை.கோ.சார். அம்மாவின் மனம் கலங்கக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்ட தங்கள் அன்பும் தங்கள் துணைவியார் அரவணைப்பும் பெரிதும் மதிக்கப்படவேண்டியவை.
பதிலளிநீக்குதிருடு போன வெள்ளித்தட்டை மீட்ட சம்பவம் வியக்கவைக்கிறது. தங்களுக்கு என் பணிவான வணக்கம் சார்.
கீதமஞ்சரி April 9, 2013 at 8:44 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//தங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் மனம் நெகிழ்த்துகின்றன வை.கோ.சார். அம்மாவின் மனம் கலங்கக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்ட தங்கள் அன்பும் தங்கள் துணைவியார் அரவணைப்பும் பெரிதும் மதிக்கப்படவேண்டியவை.//
மிகவும் சந்தோஷம் மேடம். இன்று ஆசையுள்ள் அம்மா அப்பாவின் மாதாந்திர நினைவு நாள் அதனால் தான் அதற்குப் பெயர் அமாவாசை [அம்மா+ஆசை ஆக இருக்கலாம் என நான் நினைத்துக்கொள்வதுண்டு]. இன்று தங்கள் கருத்துக்கள் கிடைத்துள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
//திருடு போன வெள்ளித்தட்டை மீட்ட சம்பவம் வியக்கவைக்கிறது. தங்களுக்கு என் பணிவான வணக்கம் சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
என்னிடம் உள்ள புள்ளிவிபரப்படி, இந்தத்தொடரின் முதல் ஆறு பகுதிகளில் 1,2,3 + 5 ஆகிய பகுதிகளுக்குத் தங்களின் பொக்கிஷமான கருத்துக்கள் எனக்கு ஏனோ கிடைக்கவில்லை.
நேரமிருந்தால் படித்துப்பார்த்து கருத்து அளித்தால், அவற்றை நான் பொக்கிஷமாகவே போற்றிப்பாதுகாப்பேன். ;)
அன்புடன் VGK
பொக்கிஷங்களில் அம்மாவின் சங்கிலியும் அந்த வெள்ளி தட்டும் top !!!
பதிலளிநீக்குஎத்தனை பிள்ளைகள் பெற்றோருக்கு இப்படி வெள்ளி தட்டு வாங்கி தந்திருப்பார்கள் !!!
அம்மா மீது தாங்கள் வைத்த அன்பு வியக்க வைக்கிறது .
..அந்த செயின் அறிய பொக்கிஷமே ...
செயின் வைக்கப்பட்டு இருப்பது பச்சை நிற பட்டு புடவை என்று நினைக்கிறேன் :))
நானும் அம்மாவின் பட்டு புடவை இதே நிறத்தில் வைத்திர்க்கேன் .
அந்த வெள்ளிதட்டு சம்பவம் படிக்கும்போது திக்கென்றது ..வீட்டுக்கு வந்த விருந்தினரை அன்போடு உபசரிப்பது பெரிய காரியமென்றால் ..இப்படி அவர்கள் செய்தால் hospitality என்ற வழக்கமே போய் விடுமே .
நீங்கள் மன்னித்தது உங்கள் பெருந்தன்மை ..அவர்கள் குற்ற வுனர்வில்தான் மீண்டும் உங்களை சந்திக்கவில்லை என்று தோன்றுகிறது
angelin April 15, 2013 at 3:14 AM
நீக்குவாங்கோ நிர்மல, வணக்கம்.
//பொக்கிஷங்களில் அம்மாவின் சங்கிலியும் அந்த வெள்ளி தட்டும் top !!!//
மிகவும் சந்தோஷம்மா.
//எத்தனை பிள்ளைகள் பெற்றோருக்கு இப்படி வெள்ளி தட்டு வாங்கி தந்திருப்பார்கள் !!! அம்மா மீது தாங்கள் வைத்த அன்பு வியக்க வைக்கிறது . .. அந்த செயின் அறிய பொக்கிஷமே ...//
’அம்மா’ என்ற மாபெரும் பொக்கிஷத்தைப்பற்றி நீங்களே நிறைய விஷயங்கள் எனக்குச் சொல்லியிருக்கிறீர்களே! அவரவர்களின் ’அன்புள்ள அம்மா’வுக்கு முன் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை அல்லவா, நிர்மலா !
//செயின் வைக்கப்பட்டு இருப்பது பச்சை நிற பட்டு புடவை என்று நினைக்கிறேன் :))//
”என்ன பார்வை ........ உந்தன் பார்வை” என்ற பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது.
நிர்மலாவுக்கு மிகச்சரியான கழுகுப்பார்வை ;))))))
பச்சை நிறப்புடவை என்பது மிகச்சரியான விடை. ஆனால் அது பட்டு அல்ல. இருப்பினும் பட்டுப்போல் பளபளக்கும் ஓர் புடவை தான்.
//நானும் அம்மாவின் பட்டு புடவை இதே நிறத்தில் வைத்திருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி. பத்திரமாக பாதுகாப்பாக நினைவுப்பொருளாக வைத்துக்கொள்ளுங்கள். வருடம் ஒருமுறையாவது கட்டிக் கொள்ளுங்கள். புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள்.
பச்சைக்கிளி ...... முத்துச்சரம் ...... முல்லைக்கொடி போலத்தோன்றுவீர்கள். ;)))))
//அந்த வெள்ளிதட்டு சம்பவம் படிக்கும்போது திக்கென்றது.. வீட்டுக்கு வந்த விருந்தினரை அன்போடு உபசரிப்பது பெரிய காரியமென்றால் ..இப்படி அவர்கள் செய்தால் hospitality என்ற வழக்கமே போய் விடுமே.//
எல்லோரும் அதுபோல இருக்க மாட்டார்கள், நிர்மலா. ஏதோ லட்சத்திற்கு ஒருவர் இதுபோல தவறாக நடந்துகொள்வார்கள்.
//நீங்கள் மன்னித்தது உங்கள் பெருந்தன்மை ..//
பாவம் .... அவர்களுக்கு அப்போது என்ன பொருளாதாரக் கஷ்டமோ?
என் வயதான அம்மாவின் செண்டிமெண்ட் பொருள் என்பதால் மட்டுமே, நான் அதைத் துரத்திச்சென்றேன்.
வேறு ஏதேனும் என்னுடைய, இன்னும் COSTLY பொருள் என்றால் கூட, போனால் போகட்டும் என நினைத்திருப்பேன். அனாவஸ்யமாக பயணம் மேற்கொண்டிருக்கவே மாட்டேன்.
//அவர்கள் குற்ற உணர்வினால்தான் மீண்டும் உங்களை சந்திக்கவில்லை என்று தோன்றுகிறது.//
இருக்கலாம். எல்லாம் நன்மைக்கே.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நிர்மலா.
ஆஹா உண்மையில் இவை எல்லாம் பொக்கிஷமேதான். ஆனால் உங்களின் பிற்காலம், இவை எல்லாம் பாதுகாக்கப்படுமோ என்பது கேள்விக்குறிதான்.
பதிலளிநீக்குஉண்மையில் அந்தக் காலத்தில் ஒரு உடுப்பு வாங்கினால்கூட, அது கஸ்டப்பட்டு உழைத்து பார்த்துப் பார்த்து வாங்கினார்கள், அதனால் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதை சொல்லும்.
ஆனால் இக்காலத்தில் எதுக்குமே மதிப்பில்லாமல் போய்விட்டது. நகைகூட நினைத்தவுடன் வாங்கும் காலமாகி விட்டமையால்... இனிமேல் கலங்களில் எவை எல்லாம் பொக்கிஷமாக பேணப்படுமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
உங்கள் அம்மாவின் சங்கிலியும் வெள்ளித் தட்டும் உண்மையில் மறக்க முடியாத பொக்கிஷம்தான்.
ஆனா அந்த வெள்ளித்தட்டில் அம்மா சாப்பிட்டா என்பதை மெருகூட்டியதுக்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு தெரியுமோ?:) அதுதான் அப்பெண் களவெடுத்தமை.
அந்த வெள்ளித் தட்டை களவெடுத்து, பின், மீட்டு வந்தமையால், அத்தட்டின் பெருமை இன்னும் அதிகமாகிவிட்டது. அதனால அப்பெண் களவு என்னும் பெயரில் நன்மைதான் செய்திருக்கிறா:)... என மாத்தி யோசிக்கிறேன் நான்... ஹவ் இஸ் இட்?:).
athira April 18, 2013 at 1:04 PM
நீக்குவாங்கோ அதிரா, வணக்கம்.
//ஆஹா உண்மையில் இவை எல்லாம் பொக்கிஷமேதான். ஆனால் உங்களின் பிற்காலம், இவை எல்லாம் பாதுகாக்கப்படுமோ என்பது கேள்விக்குறிதான்.//
கரெக்டூஊஊ. அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட முடியாது.
நாமே போனபின் பொக்கிஷமாவது பொடலங்காயாவது ;)
//உண்மையில் அந்தக் காலத்தில் ஒரு உடுப்பு வாங்கினால்கூட, அது கஸ்டப்பட்டு உழைத்து பார்த்துப் பார்த்து வாங்கினார்கள், அதனால் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதை சொல்லும்.
ஆனால் இக்காலத்தில் எதுக்குமே மதிப்பில்லாமல் போய்விட்டது. நகைகூட நினைத்தவுடன் வாங்கும் காலமாகி விட்டமையால்... இனிமேல் கலங்களில் எவை எல்லாம் பொக்கிஷமாக பேணப்படுமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.//
//ஆண்டவனுக்கே வெளிச்சம்.//
தமிழ்நாட்டில் அடிக்கடி ஆண்டவனும் இப்போது இருட்டில் தான். மின் தடை அதிகமாகவே உள்ளதூஊஊஊ. ;)
//உங்கள் அம்மாவின் சங்கிலியும் வெள்ளித் தட்டும் உண்மையில் மறக்க முடியாத பொக்கிஷம்தான்.//
சரி, சந்தோஷம்.
//ஆனா அந்த வெள்ளித்தட்டில் அம்மா சாப்பிட்டா என்பதை மெருகூட்டியதுக்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு தெரியுமோ?:) அதுதான் அப்பெண் களவெடுத்தமை.
அந்த வெள்ளித் தட்டை களவெடுத்து, பின், மீட்டு வந்தமையால், அத்தட்டின் பெருமை இன்னும் அதிகமாகிவிட்டது. அதனால அப்பெண் களவு என்னும் பெயரில் நன்மைதான் செய்திருக்கிறா:)... என மாத்தி யோசிக்கிறேன் நான்... ஹவ் இஸ் இட்?:).//
சூப்பரோ சூப்பர். நீங்க மாத்தி யோசித்துச் சொல்வது தான் கரெக்டூஊஊஊஊ.
இல்லாவிட்டால் [களவு நடந்திராவிட்டால்] இதைப்பற்றிய பேச்சுக்கே இடமில்லை.
களவு நடந்ததால் மட்டுமே இந்தப்பதிவு களை கட்டியுள்ளது.
Otherwise பதிவே சுவையில்லாமலும், சுரத்து இல்லாமலும் போய் இருக்கக்கூடும்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக மாத்தி யோசித்துக் கூறியுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அதிரா. .
அம்மாவின் தட்டு திரும்ப கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பொக்கிஷமான பகிர்வு.
பதிலளிநீக்குகோவை2தில்லி April 24, 2013 at 11:43 PM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//அம்மாவின் தட்டு திரும்ப கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பொக்கிஷமான பகிர்வு.//
ஆமாம். சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
Rathnavel Natarajan has left a new comment on your post "6] அம்மா! உன் நினைவாக !!":
பதிலளிநீக்கு//அருமையான பதிவு. நன்றி ஐயா. //
வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + இனிய நன்றிகள் ஐயா.
அம்மாவின் நினைவான பொக்கிஷம் மனதை நெகிழச் செய்கிறது.
பதிலளிநீக்குதாங்கள் அம்மாவை விட்டு ஒரு நாள் கூட பியாது இருந்தது மகிழ்ச்சியான விஷயம்.
சரியான நேரத்திற்கு போய் தட்டை மீட்டு விட்டீர்கள்
மன்னிப்பை பெருந்தன்மையுடன் வழங்கி இருக்கிறீர்கள்.
உங்களுக்கு அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு சார்.
R.Umayal Gayathri February 3, 2015 at 1:43 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அம்மாவின் நினைவான பொக்கிஷம் மனதை நெகிழச் செய்கிறது. தாங்கள் அம்மாவை விட்டு ஒரு நாள் கூட
பி ரி யா து இருந்தது மகிழ்ச்சியான விஷயம். //
மிக்க மகிழ்ச்சி.
//சரியான நேரத்திற்கு போய் தட்டை மீட்டு விட்டீர்கள்
மன்னிப்பை பெருந்தன்மையுடன் வழங்கி இருக்கிறீர்கள்.
உங்களுக்கு அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
பதிலளிநீக்குஅண்மையில் மறைந்த எனது அம்மாவின் அந்நாளைய சமையல் நினைவுகளோடு இந்த பதிவினை மீண்டும் இன்று படித்தேன். இந்த பதிவினில் நீங்கள் குறிப்பிட்ட சமையல் பாத்திரங்கள், கரண்டிகள் பெயரைப் படிக்கப் படிக்க அந்நாளில் எங்களது அம்மா சமையலுக்குப் பயன்படுத்திய பொருட்கள் நினைவுக்கு வந்தன. பதிவிற்கு நன்றி.
தி.தமிழ் இளங்கோ April 3, 2015 at 3:13 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அண்மையில் மறைந்த எனது அம்மாவின் அந்நாளைய சமையல் நினைவுகளோடு இந்த பதிவினை மீண்டும் இன்று படித்தேன். இந்த பதிவினில் நீங்கள் குறிப்பிட்ட சமையல் பாத்திரங்கள், கரண்டிகள் பெயரைப் படிக்கப் படிக்க அந்நாளில் எங்களது அம்மா சமையலுக்குப் பயன்படுத்திய பொருட்கள் நினைவுக்கு வந்தன. பதிவிற்கு நன்றி. //
எவ்வளவு வயதானாலும் தாயார் தாயார்தான் சார். தாய்க்கு சமமாக, உண்மையான, எதிர்பாப்பு ஏதும் இல்லாத, பாசம் செலுத்த இந்த உலகத்தில் நாம் எவ்வளவு தேடினாலும் யாரும் கிடைக்கவே போவது இல்லை.
ஆதி நாட்களில் அவர்கள் பட்ட பல கஷ்டங்களை அவர்களே சொல்லிச்சொல்லி, கேட்டுள்ள எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதுடன், சமயத்தில் இன்றும் அவற்றை நினைத்துக்கொண்டால் என் கண்களில் சில சொட்டு கண்ணீர்கள் வருவதும் உண்டு.
அண்மையில் காலமான தங்களின் தாயாரின் நினைவுகளைத் தாங்கள் மறக்க, இன்னும் பல காலம் ஆகும். காலம் தான் நம் மனக்காயங்களை ஆற்றும் நல்லதோர் மருந்து எனச்சொல்லலாம். - அன்புடன் VGK
மெய் வருத்தம் பாரார், கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொளார் என்றபடி உடனடியாக செயல்பட்டதினால் பொக்கிஷம் காப்பாற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅம்மாவின் வெள்ளி தட்டு திரும்ப கிடைத்தது சந்தோஷமான விஷயம் என் பாட்டி வீட்டிலும் நீங்க சொல்லி இருக்கும் பல பாத்திரங்களும் வச்சிருந்தாங்க. இப்ப அவங்க யூஸ் பண்ணின பாத்திரங்கள் நாம காஸ் அடுப்புக்கு யூஸ் பண்ண முடியாதுன்னு சாக்கு மூட்டையில் கட்டி பரண்ல போட்டு வச்சிட்டோம்
பதிலளிநீக்குபூந்தளிர் August 16, 2015 at 6:15 PM
நீக்குவாங்கோம்மா ... வணக்கம்.
அம்மாவின் வெள்ளி தட்டு திரும்ப கிடைத்தது சந்தோஷமான விஷயம். என் பாட்டி வீட்டிலும் நீங்க சொல்லி இருக்கும் பல பாத்திரங்களும் வச்சிருந்தாங்க. இப்ப அவங்க யூஸ் பண்ணின பாத்திரங்கள் நாம காஸ் அடுப்புக்கு யூஸ் பண்ண முடியாதுன்னு சாக்கு மூட்டையில் கட்டி பரண்ல போட்டு வச்சிட்டோம்.//
வெரி குட். சந்தோஷம். :)
வெள்ளிதட்டுல சாப்பிட்டுகிடுவீங்களா. தங்க நெகலஸு பரிசு வாங்ககனிங்க. நீங்கலா பணக்கார பண்ணயாருங்களா.திருட்டு போயிடிச்சினு கம்முனு கெடக்காம தொரத்தி போயி வாங்கியாந்தீங்களே. அவங்கள மன்னாப்பு பண்ணினீங்க அது பெரிய வெசயமுல்லா
பதிலளிநீக்குmru October 23, 2015 at 5:44 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//வெள்ளிதட்டுல சாப்பிட்டுகிடுவீங்களா.//
ஒருசில காரணங்களுக்காக எங்களில் சிலர் அதுபோல சாப்பிடுவதும் உண்டு.
//தங்க நெகலஸு பரிசு வாங்ககனிங்க.//
அகில இந்திய அளவில் நடைபெற்றதோர் போட்டியில் முதல் பரிசாக ஏதோ அதிர்ஷ்டவசமாக என் கட்டுரைக்கு அது அன்று கிடைத்தது. அதனால் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டேன். :)))))
//நீங்கலா பணக்கார பண்ணயாருங்களா.//
இல்லை. அதுபோலெல்லாம் இல்லவே இல்லை. நான் ஒரு ஏழை எளிய அந்தணன் மட்டுமே.
//திருட்டு போயிடிச்சினு கம்முனு கெடக்காம தொரத்தி போயி வாங்கியாந்தீங்களே.//
துரத்திப்போய் பிடிக்க வேண்டியதோர் சூழ்நிலையில் நான் அன்று ஓர் சூழ்நிலைக்கைதியாக இருந்துள்ளேன். இதன் பின்னணியில் இருந்த ஒருசில விஷயங்களை இங்கு என்னால் இப்போது ஓபனாகச் சொல்லி உங்களுக்கு விளங்க வைக்க இயலாது.
//அவங்கள மன்னாப்பு பண்ணினீங்க அது பெரிய வெசயமுல்லா//
நம் பொருளோ நம் கைக்குத் திரும்பக் கிடைத்து விட்டது. அவர்களை மன்னிப்பதே சரியான செயலாகும் என அன்று எனக்குத் தோன்றியது.
இதைப்பெரிதாக்கி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோவதால் யாருக்கு என்ன லாபம்? சொல்லுங்கோ.
பொன்னான நம் நேரமும் மேற்கொண்டு பணமும் மட்டுமே செலவாகும். இதில் மனித உறவுகள் + நட்பு மேலும் மேலும் சிக்கலாகும் அல்லவா.
அம்மாவுக்கு ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த வெள்ளித்தட்டு திருடு போனாலும் விடாம கண்டு பிடித்துக் கொண்டு வந்தது சிறப்பு தாயும் மகனும் கொடுத்து வைத்தவர்கள்.
பதிலளிநீக்கு//எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.// BHEL QUARTERS உண்மையிலேயே சொர்கம். எனது 10ம் மாதம் முதல் 10 வயதுவரை வாழ்ந்த இடம்.குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உகந்த இடம்.
பதிலளிநீக்குஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து தட்டை கண்டுபிடித்து எடுத்துச்சென்று இன்றுவரை பொக்கிஷமாய் பாதுகாத்து....அம்மாவின் நினைவு பொதிந்த பொக்கிஷம்தான்..
பதிலளிநீக்குரொம்ப ரசித்துப்படித்தேன். வெள்ளித்தட்டில் சாப்பிடுவதன் தாத்பர்யம் பலபேருக்குத் தெரியாமல் இருக்கலாம். மற்ற உலோகத் தட்டில் ஒருமுறை சாப்பிட்டால் அது எச்சில்தட்டு என்றுதான் கருத்தில்கொள்ளப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக்கு அந்தமாதிரி கிடையாது என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுவந்ததால், பெரும்பாலும் எல்லோரும் (வீட்டில் பெரியவர்கள்) வாழை இலை அல்லது தையல் இலையில்தான் சாப்பிடுவார்கள். யாருக்கு முடிகிறதோ அவர்கள் வெள்ளித்தட்டில் சாப்பிடுவார்கள். அதனால்தான் பிராமணர்கள் வீட்டுக் கல்யாணத்தில் வெள்ளித்தட்டு, பூஜை செய்வதற்கு உரிய பொருள்களை வெள்ளியினால் கொடுப்பது என்பதெல்லாம் வந்தது.
பதிலளிநீக்குஅம்மாவுக்கு நீங்கள் வாங்கித் தந்ததைப் பதிவு செய்துள்ளது சந்தோஷம். யாருக்காவது பொறி தட்டி அவர்களும் தங்கள் தாயாருக்கு இது மாதிரி செய்வதற்குத் தூண்டுகோலாக இருக்கக்கூடும்.
இதில் எனக்கு ரொம்ப ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி காதும் காதும் வைத்ததுபோன்று விஷயத்தைக் கையாண்டீர்கள் என்பதும், வயதான தாயின் கவனத்துக்கு இந்தப் பிசகு தெரியாதவண்ணம் செய்ததும்தான். தாயாருக்குத் தெரிந்திருந்தால், தான் கவனக்குறைவாக இருந்துவிட்டோமே என்று ரொம்பவும் வருத்தப்பட்டிருப்பார். ஏற்கனவே நீங்கள் காசாளராக வேலை பார்த்தீர்கள் என்று படித்த ஞாபகம். ரொம்ப நல்ல ஹேண்டில் பண்ணியிருந்தீர்கள். அதுவும் தவறு செய்தவரின் கணவனுக்குக்கூட விஷயம் தெரியாமல் செய்தது பாராட்டத்தக்கது. அதுதான் பெரிய மனுஷத் தன்மை.
'நெல்லைத் தமிழன் October 17, 2016 at 7:52 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ரொம்ப ரசித்துப்படித்தேன். வெள்ளித்தட்டில் சாப்பிடுவதன் தாத்பர்யம் பலபேருக்குத் தெரியாமல் இருக்கலாம். மற்ற உலோகத் தட்டில் ஒருமுறை சாப்பிட்டால் அது எச்சில்தட்டு என்றுதான் கருத்தில்கொள்ளப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக்கு அந்தமாதிரி கிடையாது என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுவந்ததால், பெரும்பாலும் எல்லோரும் (வீட்டில் பெரியவர்கள்) வாழை இலை அல்லது தையல் இலையில்தான் சாப்பிடுவார்கள். யாருக்கு முடிகிறதோ அவர்கள் வெள்ளித்தட்டில் சாப்பிடுவார்கள். அதனால்தான் பிராமணர்கள் வீட்டுக் கல்யாணத்தில் வெள்ளித்தட்டு, பூஜை செய்வதற்கு உரிய பொருள்களை வெள்ளியினால் கொடுப்பது என்பதெல்லாம் வந்தது.//
தாங்கள் சொல்வது அனைத்தும் எனக்கும் நன்கு புரிகிறது. வாழை இலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அது இளமையையும் ஆரோக்யத்தையும் தரும் எனவும் விஞ்ஞான பூர்வமாகவே சொல்லுகிறார்கள். சுத்தம் + சுகாதாரமும் இதில் அடங்கியுள்ளது. ஒன் டைம் யூஸ் செய்து தூக்கிப்போட்டு விடுவதால், அந்தக்காலத்தில் அது ஆடு மாடுகளுக்குத் தீனியாகவும் உபயோகப்பட்டது.
//அம்மாவுக்கு நீங்கள் வாங்கித் தந்ததைப் பதிவு செய்துள்ளது சந்தோஷம். யாருக்காவது பொறி தட்டி அவர்களும் தங்கள் தாயாருக்கு இது மாதிரி செய்வதற்குத் தூண்டுகோலாக இருக்கக்கூடும்.//
இதைக் கேட்கவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
//இதில் எனக்கு ரொம்ப ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி காதும் காதும் வைத்ததுபோன்று விஷயத்தைக் கையாண்டீர்கள் என்பதும், வயதான தாயின் கவனத்துக்கு இந்தப் பிசகு தெரியாதவண்ணம் செய்ததும்தான்.//
மிகவும் வயதானவர்கள் + ஸாத்வீகமான குணமுடையவர்களால், இதையெல்லாம் கேள்விப்பட்டால் தாங்கிக் கொள்ள முடியாது அல்லவா !
//தாயாருக்குத் தெரிந்திருந்தால், தான் கவனக்குறைவாக இருந்துவிட்டோமே என்று ரொம்பவும் வருத்தப்பட்டிருப்பார்.//
இதில் அன்று என் தாயார் அவர்களின் கவனக்குறைவினை விட, அன்று என் இல்லத்தின் முழுப்பொறுப்பாளராக + பாதுகாவலராக இருந்துள்ள என் மனைவியின் கவனக்குறையும் அடங்கியுள்ளதே ..... ’தான் கவனக்குறைவாக இருந்துவிட்டதாக தன் மாமியார் நினைக்கக்கூடுமே’ என என் மனைவியும் நினைத்துக் கவலைப்பட்டிருப்பாள் அல்லவா !!
//ஏற்கனவே நீங்கள் காசாளராக வேலை பார்த்தீர்கள் என்று படித்த ஞாபகம். ரொம்ப நல்ல ஹேண்டில் பண்ணியிருந்தீர்கள். அதுவும் தவறு செய்தவரின் கணவனுக்குக்கூட விஷயம் தெரியாமல் செய்தது பாராட்டத்தக்கது. அதுதான் பெரிய மனுஷத் தன்மை.//
எப்படியோ என் பயணம் வெட்டி அலைச்சலாகப் போகாமல், திருட்டுப்போன பொருளை உடனே துரத்திச் சென்று மீட்டு வந்ததில் எனக்கும் ஓர் சந்தோஷமாக இருந்தது.
ஏதோ நடந்தது நடந்து விட்டது. தவறு செய்பவர்களை கடவுள் தண்டிப்பார். அதை பெரிது படுத்தி அவமானப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை.
தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான, மிகச் சிறப்பான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடையீர்... வணக்கம். தங்களது கட்டுரையை சமீபத்தில்தான் படித்தேன். வெள்ளித் தட்டைத் திருடிய பெண்ணின் குழந்தைக்கு நூறு ரூபாய் அன்பளிபாக கொடுத்தது அந்தப் பெண்ணை நிச்சயம் திருந்த செய்திருக்கும்.
பதிலளிநீக்குNagarajan Narayanan April 29, 2018 at 10:49 AM
நீக்கு//அன்புடையீர்... வணக்கம்.//
வாங்கோ மாப்பிள்ளை, வணக்கம்.
//தங்களது கட்டுரையை சமீபத்தில்தான் படித்தேன்.//
மிக்க மகிழ்ச்சி.
//வெள்ளித் தட்டைத் திருடிய பெண்ணின் குழந்தைக்கு நூறு ரூபாய் அன்பளிபாக கொடுத்தது அந்தப் பெண்ணை நிச்சயம் திருந்த செய்திருக்கும்.//
எப்படியோ அவள் ஒருவேளை திருந்தியிருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு மாமா