என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

’கீதமஞ்சரி’யின் ’என்றாவது ஒரு நாள்’ ...... Part 1 of 5

அன்புடையீர், 

அனைவருக்கும் வணக்கம். 

என்றாவது ஒருநாள், ’என்றாவது ஒரு நாள்’ என்ற நூலை வாங்கிப்படிக்க வேண்டும் என எனக்குள் நான் நினைத்திருந்தேன்.




இதற்கிடையில்
’என்றாவது ஒரு நாள்’ 
என்ற நூல் என்னைத்தேடி 
அதுவாகவே ஓடிவந்த நாள்: 
06.05.2015 

தேதி: ஆறு  +  மாதம்:  அஞ்சு 

[ஆறு + அஞ்சு = ஆரஞ்சு] 

 

சுவையிலும்கூட இனிப்பான ஆரஞ்சு ஜூஸேதான் !


கீதமஞ்சரியின்.... தமிழ்த்தேன்.... பார்த்தேன்.... படித்தேன்.... ரசித்தேன்.... சுவைத்தேன்.... மகிழ்ந்தேன்....  பகிர்ந்தேன்.... முழுக்க முழுக்கத் தேனினும் இனிமையான தமிழாக்கம் ! 


வலைத்தளம்: கீத மஞ்சரி

’என்றாவது ஒரு நாள்’ 
நூலாசிரியர்

 ’விமர்சன வித்தகி’ 

திருமதி. 
 கீதா மதிவாணன்  
அவர்கள் பற்றிய சிறுகுறிப்பு 

கீதமஞ்சரி http://geethamanjari.blogspot.in/ என்ற தனது வலைத்தளப் படைப்புகள் வழியாக பரவலாக அறியப்பெற்றவர். தமிழின் மீதுள்ள ஈடுபாட்டால் கவிதைகள், சிறுகதைகள், தொடர் கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள் என்று பலவற்றையும் எழுதி வருகிறார். 

மஞ்சரி, தினமலர் பெண்கள் மலர் போன்ற பத்திரிகைகளிலும், வல்லமை, நிலாச்சாரல், அதீதம், பதிவுகள்  போன்ற இணைய இதழ்களிலும் இவருடைய பல படைப்புகள் வெளியாகியுள்ளன. 

சிட்னியில் நடைபெற்ற சங்கத்தமிழ் மாநாட்டு மலரில் இவர் எழுதிய இலக்கியக் கட்டுரை ஒன்று இடம் பெற்றுள்ளது. தற்சமயம் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் இணைய வானொலியிலும் சிறு பங்காற்றி வருகிறார். 

மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பட்டயப்படிப்பு பயின்றுள்ள இவர் பிறந்து வளர்ந்த ஊர்: எங்கள் திருச்சிராப்பள்ளி என்று சொல்லிக்கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். :)

திருமணத்திற்குப்பின் சென்னையில் வசித்தவர். தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 

இது இவரது முதல் தொகுப்பு நூலாகும். 

சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆஸ்திரேலிய மக்களின் வாழ்க்கை மற்றும் புழங்குமொழி,  கொச்சை வழக்கு ஆகியவற்றை உள்வாங்கி உணர்வோட்டத்துடன் செய்யப்பட்டிருக்கும் திருமதி. கீதா மதிவாணன் அவர்களது மொழியாக்கத்தின் வீச்சு, காடுறை மாந்தர்கள் வாழ்ந்த காலத்திற்கும் சூழலுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.

காடுறை மாந்தர்கள்

முதுகுப்பையுடன் ஊர் ஊராக 
வேலைதேடி அலைவோர்

ரோமக்கத்தரிப்பு நிலையம்

சுரங்கத் தொழிலாளிகள்

இதன் மூலக்கதைகளை எழுதியுள்ள ’ஹென்றி லாஸன்’ பற்றி தனது நூலில் திருமதி. கீதாமதிவாணன் அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனச் சற்றே சுருக்கமாகப் பார்ப்போமா !

Henry Archibald Hertzberg Lawson 
17.06.1867 to 02.09.1922


இவரின் தாயார்: 
கவிஞரும், பதிப்பாசிரியரும், பெண்ணியவாதியுமான  
திருமதி. லூயிஸா லாஸன்

இவரின் தந்தை:
நார்வீஜியாவைச் சார்ந்த 
நீல்ஸ் லாஸன்

ஹென்றி லாஸன் வாழ்ந்த காலம்: 
1867 முதல் 1922 வரை [சுமார் 55 ஆண்டுகள்]

ஹென்றி லாஸன் அவர்களின் சொந்த வாழ்க்கை மிகவும் சோகங்கள் நிறைந்தது. இவரின் 9 வயதில் இவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றால் இவர் கொஞ்சம் கொஞ்சமாக தன் கேட்கும் திறனை இழந்துள்ளார். தன் 14ம் வயதில் முழுமையாகக் காது கேளாதவராகியுள்ளார். சக மாணவர்களின் கேலிப்பேச்சுக்கள், இயல்பிலேயே கூச்ச சுபாவமுள்ள ஹென்றி லாஸனை, மற்றவர்களிடமிருந்து மேலும் பிரித்துவைத்த நிலையில், அவருடைய கவனம் புத்தகவாசிப்பிலும், கவிதைகள் பக்கமும் திரும்பியுள்ளது. கடினமாக உழைத்துப்படித்தும் கல்லூரிப்படிப்பில் அவரால் தேர்ச்சிபெற இயலவில்லை.   

1883ல் பெற்றோர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தது இவரை மேலும் பாதித்தது. இவருடன் பிறந்த மற்ற தம்பி தங்கையர் மூவரும் தாயுடன் வாழ இவர் மட்டும் தன் தந்தையுடன் வாழ நேர்ந்துள்ளது. தந்தையுடன் சேர்ந்து கட்டட மற்றும் தச்சு வேலைகள் செய்யச் சென்று வந்துள்ளார்.  1884ல் புகைவண்டிகளின் பெட்டிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்துள்ளது. அதில் பணிபுரிந்துகொண்டே இரவு நேரப்பள்ளிக்கும் சென்று தன் கல்வியறிவை வளர்த்துள்ளார்.

1887ல் ’புல்லட்டின்’ பத்திரிகையில் ஹென்றி லாஸனின் முதல் கவிதையான ‘குடியரசுப் பாடல்’ வெளியானது. தொடர்ந்து அவருக்கு எழுதுவதற்கான வாய்ப்புகள் வரத் தொடங்கின. சில வருடங்களுக்குப்பிறகு, ஹென்றியின் தாய் ’லூயிஸா’ தானே ஒரு உள்ளூர் பத்திரிகையை 1100 பவுண்டுகளுக்கு விலைக்கு வாங்கி, அதில் தன் மகனுடைய படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடலானார். பெரிய அளவில் விற்பனை இல்லை என்றாலும், ஹென்றியின் படைப்புகள், அவரது தாய், அந்தப்பத்திரிகையை வாங்கிய தொகையை மீட்க உதவின.

வாழ்க்கையில் வருமானத்திற்கான தொடர் போராட்டமும், பல்வேறு அனுபவங்களும் அவரை ஒரு முழுநேர எழுத்தாளராக மாற்றியது. தான் கண்ட, கேட்ட, அனுபவித்த நிகழ்வுகளை, கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் படைத்தார். அவருடைய சமகாலப் படைப்பாளியான பேஞ்ஜோ பேட்டர்ஸனுக்கு தன் படைப்புகள் மூலம் கடும் போட்டியைக் கொடுத்தார்.

ஹென்றி லாஸன் 1896 இல் ’பெர்த்தா ப்ரெட்’டை மணந்தார். ஜோஸப் லாஸன் மற்றும் பெர்தா லாஸன் என இரு குழந்தைகள் பிறந்தனர். பிரபல எழுத்தாளராக இருந்தபோதும் நேர்மையற்ற பதிப்பகத்தார்களால் வஞ்சிக்கப்பட்டார். வறுமையின் பிடியில் சிக்கினார். மன உளைச்சலுக்கு ஆளானார். குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகிப்போயிருந்தார். 

தொடர்ந்த பொருளாதாரச் சிக்கல், எழுத்தாளருக்கே உரிய மனப்போராட்டம், மனைவியின் தொடர் பிணி, பிள்ளைகள் வளர்ப்பு என்று பல தரப்பட்ட நெருக்கடிகளால் அவருக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி, மண வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு, இறுதியாக 1903 இல் விவாகரத்தும் பெற்றார். 

மனைவி மக்களுக்கான ஜீவனாம்சத்தொகை தர இயலாமல் போய் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவருடைய கைதி எண்: 103. சிறையில் தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவங்களை ’நூற்றி மூன்று’ என்ற தலைப்பில் கவிதையாக்கினார். பின்னாளில் அது பிரசுரமானது.

கடனாளியாகவும், குடிகாரனாகவும் இருந்த ஹென்றி லாஸனின் வாழ்க்கை, பின்னாளில் முற்றிலும் நொடித்துப்போனது. நாதியற்றவராய் சிட்னியின் தெருக்களில் அவரைப் பிச்சையெடுக்கவும் வைத்தது. ஒருமுறை மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார். ஆனால் நண்பர்கள் சிலரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.


மனதளவிலும் உடலளவிலும் மிகவும் மோசமான நிலையில் நலிந்து கிடந்தவரைத் தூக்கி நிறுத்திய பெருமை, அவரை விடவும் இருபது வயது மூத்தவரான, அவருடைய சினேகிதி திருமதி. ’இஸபெல் பையர்ஸ்’ (Mrs. Isabel Byers) என்பவரையே சாரும். 


அதுபற்றிய மற்ற சுவாரஸ்யமான விஷயங்களை இதன் அடுத்த பகுதியில் பார்ப்போம்.


’என்றாவது ஒரு நாள்’ 

தொடரும்.




 ஓர் முக்கிய அறிவிப்பு 

இந்த என் தொடர் பதிவு
‘என்றாவது ஒரு நாள்’ 
என்ற நூலைப்பற்றிய என் 
விமர்சனம் அல்ல.


இதுவரை பிறரின் எந்த ஒரு கதைக்கோ அல்லது நூலுக்கோ 
நான் விமர்சனம் ஏதும் எழுதிப் பழக்கம் இல்லாதவனும்கூட.


மேலும் இந்த நூலை எழுதியுள்ளவர்
’விமர்சன வித்தகி’ 
என ஏற்கனவே பெயர்பெற்ற
மிகச்சிறந்த + மிகப்பிரபலமான 
முன்னணி எழுத்தாளர் ஆவார்.


இத்தகையப் பெருமைகளுக்குரிய இவரின் 
நூலினை நான் விமரிசிப்பது
கொஞ்சமும் பொருத்தமாகவும் இருக்காது.


அதனால் இந்த என் தொடரை  
‘என்றாவது ஒரு நாள்’ 
என்ற தலைப்பில்
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் எழுதியுள்ள
நூலைப்பற்றிய என் புகழுரையாக மட்டுமே 
எடுத்துக்கொள்ள வேண்டுமாய் அனைவரையும்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்

[வை. கோபாலகிருஷ்ணன்] 




’என்றாவது ஒரு நாள்’ 
புகழுரை தொடரும்.






85 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஸ்ரீராம். September 6, 2015 at 5:20 AM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      // ஆறு பகுதியாகவா.....! அட! //

      ஆரஞ்சு பழத்தின் தோலினை உரித்து இரண்டாகப் பிளந்தீர்களானால், பெரும்பாலும் ஆறு சுளைகள் தனியாகவும் ஐந்து சுளைகள் தனியாகவுமே கிடைக்கும்.

      [பெரும்பாலும் அதில் 6+5=11 சுளைகள்தான் இருக்கும்]

      அதனாலேயே அந்தப்பழத்தின் பெயர் ஆரஞ்சு என வைத்துள்ளார்களோ என நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

      அதுபோல இந்தத்தொடரை ஆறு பகுதிகளாக விஸ்தாரமாகக் கொடுக்கலாமா அல்லது ஐந்து பகுதிகளாகச் சுருக்கிக் கொடுக்கலாமா என நானும் நீண்ட நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன்.

      அந்த என் யோசனை எப்படித்தங்களுக்குத் தெரிந்ததோ? :)

      //ஆறு பகுதியாகவா.....! அட//

      எனக் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

      ஆனால் ’ஆறா’ அல்லது ’ஐந்தா’ என்ற போட்டியில் ’ஐந்தே’ இறுதியில் வெற்றி பெற்றுள்ளது, ஸ்ரீராம்.

      அதனால் இந்தத்தொடரினில் மொத்தம் 5 பகுதிகள் மட்டுமே, ஸ்ரீராம். [ஆறு அல்ல]

      எனவே பயப்படாமல் மேலும் நான்கு நாட்களுக்கு மட்டும் தினமும் வாங்கோ, போதும். :)))))

      அதன் பிறகு மீண்டும் என் ஓய்வு தொடரும்.

      [ஆறின கஞ்சி பழங்கஞ்சி எனச் சொல்வார்களே ! அதனால் இந்த நூலை நான் படித்து முடித்த, சூட்டோடு சூடாக இதைப்பற்றி, எழுதிவிட வேண்டும் எனத் தீர்மானித்து, என் ஓய்வுக்கு சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு, இங்கு பதிவிட வந்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.]

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. ஆறல்ல.. ஐந்து! எனக்கும் இவ்வளவு பெரிய விமர்சனம் கோபு சாரால் எழுதப்படும் என்பது எதிர்பாராத ஆச்சர்யம்தான். அவருக்கு நேரம் கிடைத்து நூலை வாசிப்பதே பெரிய விஷயம் என்று நினைத்திருக்க, நூலின் விமர்சனத்தை வித்தியாசமாக ஒரு குறுந்தொடராகவே வெளியிட்டிருப்பது பெருமகிழ்வைத் தருகிறது. முதல் ஆளாய் வந்து கருத்திட்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சகோதரி கீதா மதிவாணன் அவர்களின் தொடரை வலைப் பூவில் படித்து ரசித்திருக்கிறேன் ஐயா
    அவரது தேடலும் உழைப்பும் போற்றுதலுக்கு உரியது
    தொடருங்கள் ஐயா
    தொடர்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கரந்தை ஜெயக்குமார்

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா. மிகவும் மெனக்கெட்டு இந்நூலை வாசகர் மத்தியில் கொண்டுசெல்லும் கோபு சாருக்கு என் நன்றி.

      நீக்கு
  3. ஒரு மாத இடைவெளிக்குப் பின் தங்களது பதிவை பார்ப்பது மகிழ்ச்சி. நீங்கள் திருமதி கீதா மதிவாணன் அவர்களின் நூலை விமரிசிக் வில்லையென்று சொன்னாலும் அவரது நூலைப்பற்றி தாங்கள் தந்த அறிமுகமும் மூலக்கதை ஆசிரியர் திரு ஹென்றி லாஸன் அவர்களைப் பற்றிய தகவலும் இந்த நூலை படிக்கத் தூண்டிவிட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. தகவலுக்கு நன்றி!
    அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ வே.நடனசபாபதி

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //ஒரு மாத இடைவெளிக்குப் பின் தங்களது பதிவை பார்ப்பது மகிழ்ச்சி. //

      06.07.2015 to 05.09.2015 இரண்டு மாத இடைவெளி ஆகிவிட்டது சார். இன்னும்கூட நான் ஓய்வினில்தான் உள்ளேன். ஓய்வுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு இங்கு வந்து இந்தப்பதிவினை மட்டும் ஓர் அவசரம் கருதி வெளியிட்டுள்ளேன். :)

      //நீங்கள் திருமதி கீதா மதிவாணன் அவர்களின் நூலை விமரிசிக்க வில்லையென்று சொன்னாலும் அவரது நூலைப்பற்றி தாங்கள் தந்த அறிமுகமும் மூலக்கதை ஆசிரியர் திரு ஹென்றி லாஸன் அவர்களைப் பற்றிய தகவலும் இந்த நூலை படிக்கத் தூண்டிவிட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. தகவலுக்கு நன்றி! அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன். //

      மிகவும் சந்தோஷம் சார், மிக்க நன்றி, சார். ஒரு நான்கு நாட்களுக்கு மட்டும் அவசியம் வாங்கோ, சார்.

      { நான் 07.07.2015 முதல் பிறரின் பதிவுகள் எதிலும் கருத்தளிக்காவிட்டாலும் தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன், சார்.}

      அன்புடன் VGK

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் நூலின் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருப்பதாய்த் தெரிவித்தமைக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  4. சகோதரிக்கு வாழ்த்துகள்...

    பதிவர் விழாவில் பங்கு கொள்ள வேண்டும் என்று எனது விருப்பம் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'விழாவில்' மற்றும் 'பங்கு'
      எனும் வார்த்தைகளிடையே,
      "ஐயா அவர்களும்"
      என்று இடைச் செறுகல் செய்தால் பொருத்தமாய் இருக்குமே தி. த. ஐயா!

      நீக்கு
    2. @ திண்டுக்கல் தனபாலன்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி DD Sir :)

      நீக்கு
    3. வாழ்த்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
    4. அ. முஹம்மது நிஜாமுத்தீன் ஐயா அவர்களே..

      தொடர்பு கொள்ளவும் : 9944345233 / dindiguldhanabalan@yahoo.com

      நீக்கு
  5. சிறந்த திறனாய்வுப் பார்வை
    அறிஞர் கீதா மதிவாணன் அவர்களின்
    முயற்சியைப் பாராட்டுகின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Jeevalingam Yarlpavanan Kasirajalingam

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  6. சகோதரி கீதமஞ்சரி அவர்களது நூலினைப் பற்றி நேற்றுதான் போனில் சொன்னீர்கள். இன்றைக்கு உடனேயே நூலினைப் பற்றிய புகழுரை தந்து விட்டிர்கள்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு வலைப்பக்கம் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. திண்டுக்கல் தனபாலன் அவர்களது தாங்கள் ”பதிவர் விழாவில் பங்கு கொள்ள வேண்டும் என்று எனது விருப்பம் ஐயா... நன்றி...” என்ற கருத்தினை நானும் வழிமொழிகின்றேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ September 6, 2015 at 11:26 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //சகோதரி கீதமஞ்சரி அவர்களது நூலினைப் பற்றி நேற்றுதான் போனில் சொன்னீர்கள். இன்றைக்கு உடனேயே நூலினைப் பற்றிய புகழுரை தந்து விட்டீர்கள். //

      இதுவே மிகவும் தாமதமாகிவிட்டது சார். பல்வேறு
      காரணங்களாலும், நேரமின்மையாலும் 06.05.2015 என்
      கைக்கு வந்த இந்த நூலினை நான் பலநாட்கள் பிரிக்காமல்
      அப்படியே ஒரு ஓரமாக வைத்து விட்டு இப்போது ஒரு 15
      நாட்களுக்கு முன்புதான் எடுத்துப் படிக்கும் வாய்ப்பு
      கிட்டியது. முழுவதும் ஆர்வமாக மனதில் வாங்கிக்கொண்டு படித்து முடித்து விட்டதாகவும் அதுபற்றி மட்டும் சூட்டோடு சூடாக ஒரு பதிவு வெளியிடப் போவதாகவும்தான் நேற்று தங்களிடம் தொலைபேசியில் பேசும்போது நான் சொன்னேன்.

      இன்னும் ஓய்வில் உள்ள நான் இதற்காகவே என் ஓய்வுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துள்ளேன். :)

      //நீண்ட இடைவேளைக்குப் பிறகு வலைப்பக்கம் வந்ததற்கு
      மிக்க மகிழ்ச்சி//

      எனக்கும் இதில் மனதுக்கு சற்றே மகிழ்ச்சியாகவே உள்ளது, சார்.

      //திண்டுக்கல் தனபாலன் அவர்களது தாங்கள் ”பதிவர் விழாவில் பங்கு கொள்ள வேண்டும் என்று எனது விருப்பம் ஐயா... நன்றி...” என்ற கருத்தினை நானும் வழிமொழிகின்றேன்.//

      மிக்க நன்றி, சார். இது பற்றியும் நாம் நேற்றே பேசியுள்ளோம். எனக்குத்தெரிந்த திருச்சி பதிவராகிய தாங்களாவது கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது கேட்க மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அன்றைய நிலை எனக்கு எப்படி இருக்குமோ. இப்போதே சொல்வதற்கு இல்லை. பார்ப்போம் சார்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      ( நான் 07.07.2015 முதல் பிறரின் பதிவுகள் எதிலும் கருத்தளிக்காவிட்டாலும் தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து மகிழ்ந்து வருகிறேன், சார்.}

      அன்புடன் VGK

      நீக்கு
    2. திட்டமிடல், நேர மேலாண்மை போன்றவை பற்றி கோபு சாரிடம்தான் கற்றுகொள்ளவேண்டும். அந்த அளவுக்கு நேர்த்தியான செயல்பாடுகள் அவருடையவை என்பது நாமனைவரும் அறிந்ததுதானே.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  7. அன்புள்ள வை.கோ. சார்!

    திருமதி கீதாமதிவாணனின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

    பலர் பலவற்றைப் படிப்பார்கள். ஆனால் படித்தவற்றை நினைவில் நிறுத்தி அதுபற்றி சொல்ல வேண்டும் என்றாலே ஏதோ தயக்கத்தில் தவிப்பார்கள். அதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் கேட்கவே வேண்டாம். படித்ததைப் பற்றி எழுதுவதற்கும், கோர்வையாக எழுத்தில் அதை சொல்வதற்கும் தேவையான தனித்திறமையைத் தாண்டி இந்தக் காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்க வேண்டும். இந்த ஆர்வம் உங்களின் சிறப்பான செயல்பாடுகளில் தலைமைப் பண்பாய் மிளிர்கிறது. இது விஷயத்தில் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள அதிகம் இருப்பதாக எனக்கு அடிக்கடி தோன்றும்.

    ஒரு லேசான இடைவெளிக்குப் பிறகு உங்களை இங்கு பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஜீவி September 6, 2015 at 11:26 AM

      வாங்கோ சார், நமஸ்காரம் + வணக்கம் சார்.

      //படித்ததைப் பற்றி எழுதுவதற்கும், கோர்வையாக எழுத்தில் அதை சொல்வதற்கும் தேவையான தனித்திறமையைத் தாண்டி இந்தக் காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்க வேண்டும். இந்த ஆர்வம் உங்களின் சிறப்பான செயல்பாடுகளில் தலைமைப் பண்பாய் மிளிர்கிறது.//

      ஆஹா, இதனைத்தங்கள் மூலம் கேட்பதில் நான் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார்.

      //இது விஷயத்தில் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள அதிகம் இருப்பதாக எனக்கு அடிக்கடி தோன்றும்.//

      This is too much Sir. தாங்கள் என் மீது கொண்டுள்ள தனிப்பிரியத்தினால் இவ்வாறெல்லாம் தங்களுக்கு அடிக்கடி தோன்றுகிறதோ என்னவோ, என எனக்குத் தோன்றுகிறது. However Thanks a Lot for your Very Valuable Comments, Sir.

      //ஒரு லேசான இடைவெளிக்குப் பிறகு உங்களை இங்கு பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.//

      எனக்கும் அப்படியே. அதாவது ஒரு லேசான இடைவெளியில் இப்போது உங்களை எல்லோரையும் இங்கு பார்ப்பதில் மிகவும் சந்தோஷமாகவே உள்ளது.

      மிக்க நன்றி, சார்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. \\படித்ததைப் பற்றி எழுதுவதற்கும், கோர்வையாக எழுத்தில் அதை சொல்வதற்கும் தேவையான தனித்திறமையைத் தாண்டி இந்தக் காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்க வேண்டும். இந்த ஆர்வம் உங்களின் சிறப்பான செயல்பாடுகளில் தலைமைப் பண்பாய் மிளிர்கிறது. இது விஷயத்தில் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள அதிகம் இருப்பதாக எனக்கு அடிக்கடி தோன்றும்.\\

      மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். என்னுடைய கருத்தும் இதுதான். தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜீவி சார்.

      நீக்கு
  8. அன்புள்ள கோபு சார், தாங்கள் என்மீது வைத்திருக்கும் அன்புக்கும் மதிப்புக்கும் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மிகுந்த உற்சாகத்தில் புளகாங்கிதமடைந்து இருக்கிறேன். மிகவும் நன்றி சார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகான தங்கள் வலைப்பூ வருகை என்னுடைய நூலின் மதிப்புரையுடன் ஆரம்பித்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது. ஆரம்பப் பதிவே மூல எழுத்தாளருக்குரிய மரியாதையைக் கொடுத்து அவரது வாழ்க்கைக்கதையுடன் ஆரம்பித்திருப்பது மேலும் மகிழ்வளிக்கிறது. இதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். மதிக்கிறேன்.

    புத்தகத்திலிருப்பவற்றை மெனக்கெட்டுத் தட்டச்சு செய்து வெளியிடுவதென்பது சாதாரணமல்ல. அதுவும் ஒரு பகுதியாக இல்லாமல் ஐந்து பகுதிகளாக தகுந்த படங்களுடன் வெளியிடுவது எனக்கு மிகப்பெரிய பெருமை.

    வெறும் புகழுரைகளாக இல்லாமல் தங்களுக்குத் தோன்றும் குறைகளையும் இங்கே சுட்டினால் பெரிதும் மகிழ்வேன். நிறைகளை ஏற்றுக்கொள்ளும் அதே மனப்பாங்குடன் குறைகளையும் ஏற்றுக்கொள்வதுதானே ஒரு எழுத்தாளனுக்கு அழகு. அப்படி தங்கள் பார்வைக்கு குறைகள் தென்பட்டால் கட்டாயம் தெரிவியுங்கள். அது எனக்கு மிகுந்த ஊக்கத்தையே அளிக்கும்.

    இத்தொடர் விமர்சனப் பதிவுகள் மூலம் என்னுடைய மொழிபெயர்ப்பு நூலைச் சிறப்பித்துள்ள தங்களுக்கு மனமார்ந்த நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி September 6, 2015 at 11:30 AM

      வாங்கோ, வணக்கம்.

      தங்கள் நூல் வெளியீட்டால், நான் அதற்கு ஒரு புகழுரை எழுதப்போய், எனக்குத்தங்களால் ஒரு பெருமை கிட்டியுள்ளது என்பதே உண்மை. நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //வெறும் புகழுரைகளாக இல்லாமல் தங்களுக்குத் தோன்றும் குறைகளையும் இங்கே சுட்டினால் பெரிதும் மகிழ்வேன். நிறைகளை ஏற்றுக்கொள்ளும் அதே மனப்பாங்குடன் குறைகளையும் ஏற்றுக்கொள்வதுதானே ஒரு எழுத்தாளனுக்கு அழகு. அப்படி தங்கள் பார்வைக்கு குறைகள் தென்பட்டால் கட்டாயம் தெரிவியுங்கள். அது எனக்கு மிகுந்த ஊக்கத்தையே அளிக்கும்.//

      தங்களின் தன்னடக்கமான இந்த எதிர்பார்ப்பு மிகவும் நியாயமானதே. நானும் இதனை ஒத்துக்கொள்கிறேன். இதுவரை வெறும் கண்களால் படித்துப் பார்த்த எனக்கு ஏதும் குறையே தெரியவில்லை. எதற்கும் நாளைக்கு கடைக்குப்போய் ஒரு பூதக்கண்ணாடி வாங்கி வந்து மீண்டும் ஒருமுறை அலசி ஆராய்ந்து பார்க்கிறேன். ஏதேனும் தென்பட்டால் தெரிவிக்க முயற்சிக்கிறேன். :)

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. \\இதுவரை வெறும் கண்களால் படித்துப் பார்த்த எனக்கு ஏதும் குறையே தெரியவில்லை. எதற்கும் நாளைக்கு கடைக்குப்போய் ஒரு பூதக்கண்ணாடி வாங்கி வந்து மீண்டும் ஒருமுறை அலசி ஆராய்ந்து பார்க்கிறேன். ஏதேனும் தென்பட்டால் தெரிவிக்க முயற்சிக்கிறேன். :)\\

      :)) மிக்க நன்றி கோபு சார்.

      நீக்கு
  9. ஒருமாத காலத்திற்குமேல் ஆகிறது. உங்களைப் பார்க்க முடியவில்லை. இன்று பார்த்ததற்கு மிகவும் ஸந்தோஷம். சற்று ஓய்விற்குப் பிறகு இன்னும் அதிக விஷயதானங்களுடன் உங்களைப் பார்க்க மிக்க ஸந்தோஷம். கீதா மதிவாணன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலைப்பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் அவருக்கும் வயதில் பெரியவர் என்ற முறையில். ஆசிகளும்,அன்பும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி September 6, 2015 at 1:28 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //ஒருமாத காலத்திற்குமேல் ஆகிறது. உங்களைப் பார்க்க முடியவில்லை. இன்று பார்த்ததற்கு மிகவும் ஸந்தோஷம். சற்று ஓய்விற்குப் பிறகு இன்னும் அதிக விஷயதானங்களுடன் உங்களைப் பார்க்க மிக்க ஸந்தோஷம்.//

      ஆமாம் மாமி, கடந்த 2-3 மாதங்களாகவே எனக்கு இங்கே பல்வேறு நெருக்கடிகள், மாமி. விருந்தினர் வருகைகள். அடுத்தடுத்து பண்டிகைகள், உடல்நலக்குறைவு போன்ற பல விஷயங்களால் பதிவுப்பக்கம் எப்போதாவது படிக்க வந்தாலும் யாருக்கும் (தங்களுக்கும்கூட) என்னால் வழக்கம்போல பின்னூட்டமிட முடியவில்லை.

      //கீதா மதிவாணன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலைப்பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்//

      மிகவும் சந்தோஷம் மாமி. இன்னும் 4 நாட்களுக்கு இங்கு தொடர்ந்து நீங்கள் வருகை தந்தால் தான் அவர்களின் சிறப்பான நூலைப்பற்றி தாங்கள் ஓரளவுக்கு அறியமுடியும்.

      //அவருக்கும் வயதில் பெரியவர் என்ற முறையில். ஆசிகளும், அன்பும்//

      அவங்க எங்க ஊர் பொண்ணு மாமி. நன்றாக வாழ்த்தி ஆசீர்வாதம் செய்யுங்கோ மாமி. மிக்க நன்றி, மாமி.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. தங்கள் அன்பும் ஆசியும் கிட்டியதில் அளவிலா மகிழ்ச்சி அம்மா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  10. நானும் தொடரைப் படித்து இரசித்திருக்கிறேன்
    அவரின் திறனறிந்து அதிகம்
    வியந்துகொண்டும் இருக்கிறேன்
    தங்கள் விமர்சனப் பகிர்வு
    படிக்காதவர்களுக்கு நல்ல அறிமுகமாய் இருக்கும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S September 6, 2015 at 1:59 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //நானும் தொடரைப் படித்து இரசித்திருக்கிறேன். அவரின் திறனறிந்து அதிகம் வியந்துகொண்டும் இருக்கிறேன்.//

      மிகவும் மகிழ்ச்சி, சார்.

      //தங்கள் விமர்சனப் பகிர்வு படிக்காதவர்களுக்கு நல்ல அறிமுகமாய் இருக்கும். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மிகச்சரியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி சார்.

      நீக்கு
  11. திருமதி கீதமஞ்சரி பற்றி தெளிவான விளக்கங்கள். அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அவரின் நூலின் மதிப்புரையுடன் ஆரம்பமா.மூலக்கதையை எழுதியுள்ள ஹென்றி லாஸனை நினைவு கூர்ந்தது சிறப்பு. வீற்று மொழி நூலை நம்ம மொழிக்கு தகுந்தாப்போல மொழி பெயர்கணும்னா அதற்கு தனி திறமை வணும். அந்த திறமை நிறம்பியவராக கீதா இருக்காங்க. அந்த திறமையை நம்ம ஆசிரியர் நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டுறாங்க. இருவருமே பாராட்டுக்குறியவர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் September 6, 2015 at 2:35 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //திருமதி கீதமஞ்சரி பற்றி தெளிவான விளக்கங்கள். அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.//

      அவரைத்தாங்கள் அவசியம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். அவங்க எங்க ஊர் பொண்ணாக்கும் :)

      //அவரின் நூலின் மதிப்புரையுடன் ஆரம்பமா.//

      ஏதோ அதுபோல ஒரு பாக்யம் அமைந்துள்ளது. தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களுக்கும் வாங்கோ, ப்ளீஸ். அப்போது தான் என் மதிப்புரையை தாங்களும் மிகச்சரியாக மதிப்பீடு செய்து எப்படி இருந்தது என எனக்கு தனியாக மெயில் மூலம் சொல்லமுடியும். :)

      //மூலக்கதையை எழுதியுள்ள ஹென்றி லாஸனை நினைவு கூர்ந்தது சிறப்பு. வேற்று மொழி நூலை நம்ம மொழிக்கு தகுந்தாற்போல மொழி பெயர்கணும்னா அதற்கு தனி திறமை வேண்டும். அந்த திறமை நிரம்பியவராக கீதா இருக்காங்க.//

      அடேங்கப்பா ..... அவங்க திறமையை முழுவதுமாக எடுத்துச்சொல்லணும்னா ..... அதற்கே நான் ஒரு 108 பகுதிகளுடன் ஓர் மெகா தொடரே எழுத வேண்டியிருக்கும் தெரியுமோ :))

      //அந்த திறமையை நம்ம ஆசிரியர் நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டுறாங்க.//

      2-3 நாட்கள் முன்பு ஒரு பின்னூட்டத்தில் என்னை ’வாத்யாரே’ என்று சொன்னீங்க .... இப்போ ஆசிரியரா .... OK OK நீங்க பார்த்து எது சொன்னாலும் அது எனக்கும் OK தான்.

      வாத்யார் என்றாலும் ஆசிரியர் என்றாலும் ஒன்று தான். :)

      //இருவருமே பாராட்டுக்குரியவர்களே.//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. மூல ஆசிரியரை நினைவுகூர்ந்து முதல் பதிவில் சிறப்பித்திருப்பது மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. உண்மைதான். கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி பூந்தளிர்.

      நீக்கு
  12. வணக்கம் அய்யா,
    தாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துவிட்டீர்கள்,
    கீதாமஞ்சரி அவர்கள் பற்றி தாங்கள் சொன்ன விளக்கங்கள் அருமை, அவரின் தேடல் வித்தியாசமானது. அவர்கள் மொழிமாற்றம் செய்த நூல் குறித்து தாங்கள் தொடரப்போவது மகிழ்ச்சியே,
    தொடர்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran September 6, 2015 at 3:04 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வணக்கம் ஐயா, தாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துவிட்டீர்கள்//

      நீண்ட இடைவெளிக்கு இடையே, ஓர் சிறிய இடைவெளியில் மட்டுமே புகுந்து வந்துள்ளேன். ஒரு 5 நாட்களுக்கு மட்டும் என் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இங்கு இந்தத் தொடரினைப் பதிவிட வந்துள்ளேன். :)

      //கீதமஞ்சரி அவர்கள் பற்றி தாங்கள் சொன்ன விளக்கங்கள் அருமை, அவரின் தேடல் வித்தியாசமானது.//

      அவரைப்பற்றி தாங்கள் அருமையாகவும் வித்யாசமாகவும் தேடிச் சொல்லியுள்ளது எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

      // அவர்கள் மொழிமாற்றம் செய்த நூல் குறித்து தாங்கள் தொடரப்போவது மகிழ்ச்சியே, தொடர்கிறேன். நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டும் அவசியம் இங்கு வாங்கோ. அதுதான் மிகவும் முக்கியம் ஆகும். :)

      நன்றியுடன் VGK

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி மகேஸ்வரி.

      நீக்கு
  13. வணக்கம் கோபு சார்! நீ...ண்....ட இடைவெளிக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் தொடரைத் துவங்கியிருப்பதற்கு மகிழ்ச்சி. என்றாவது ஒரு நாள் புகழுரையுடன் மீண்டும் ஒரு தொடர் உங்கள் தளத்தில் துவங்குவது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் விஷயம். கீத மஞ்சரிக்குப் பாராட்டுக்கள்! புகழுரை என்று சொன்னாலும் நூலைப் பற்றிய சிறப்பான அறிமுகமாக இது இருக்கும் என்பது முதல் பகுதியிலிருந்தே தெரிகிறது! பாராட்டுக்கள் கோபு சார்! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி September 6, 2015 at 3:36 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //வணக்கம் கோபு சார்! நீ...ண்....ட இடைவெளிக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் தொடரைத் துவங்கியிருப்பதற்கு மகிழ்ச்சி.//

      எனக்கும் மகிழ்ச்சியே, நீ...ண்...ட இடைவெளிக்குப் பிறகு அல்ல. நீ...ண்...ட இடைவெளியின் இடையே ஐந்து நாட்களுக்காக மட்டுமே அவசரமாக வந்துள்ளேன். :)

      // என்றாவது ஒரு நாள் புகழுரையுடன் மீண்டும் ஒரு தொடர் உங்கள் தளத்தில் துவங்குவது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் விஷயம்.//

      ’என்றாவது ஒரு நாள்’ தான் தொடர நினைத்தேன். அது இன்றாகவும் நன்றாகவும் அமைந்து விட்டது. நூலைப் படித்து முடித்ததும் சூட்டோடு சூடாக எழுதினால் தானே நல்லது எனத் தோன்றியது. அதனால் படித்து முடித்ததும் உடனே பதிவிட ஆரம்பித்து விட்டேன்.

      //கீத மஞ்சரிக்குப் பாராட்டுக்கள்!//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      //புகழுரை என்று சொன்னாலும் நூலைப் பற்றிய சிறப்பான அறிமுகமாக இது இருக்கும் என்பது முதல் பகுதியிலிருந்தே தெரிகிறது!//

      அப்படியா !!!!! தாங்கள் எதுசொன்னாலும் அது மிகவும் சரியாகவே இருக்கும். அடுத்து நான்கு நாட்களுக்கும் தினமும் வாங்கோ, ப்ளீஸ்.

      //பாராட்டுக்கள் கோபு சார்! தொடருங்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உற்சாகம் தரும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் நன்றியுடன் கோபு

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா. புகழுரை என்று தலைப்பிட்டாலும் கதைகளின் விமர்சனங்கள் உண்மையில் சிறப்பாகவும் வாசகருக்கு ஆவலை உண்டாக்கும் வண்ணமும் இருப்பது நூலுக்குப் பெருமை சேர்ப்பதாகவே உள்ளன.

      நீக்கு
  14. இன்னும் தொடர் படிக்கவில்லை உங்கள் ஊடாக படித்துவிடுகின்றேன் இனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் September 6, 2015 at 4:36 PM

      வாங்கோ நேசன் சார், வணக்கம்.

      //இன்னும் தொடர் படிக்கவில்லை. உங்கள் ஊடாக படித்து விடுகின்றேன் இனி.//

      என் மதிப்புரையும் புகழுரையும் தாங்கள் அந்த நூலை உடனடியாக வாங்கிப்படிக்கும் விதமாக மட்டுமே இருக்கக்கூடும்.

      முழுக்கதையினையும், கதையின் முடிவுடன் என் மூலமாக அறிந்துகொள்ளும் விதமாக அவை இருக்காது. அதுபோல இருக்கவும் கூடாது.

      பெரும்பாலும் அனைத்துக் கதைகளிலும் நான் மிகவும் ரஸித்த ஒருசில இடங்களை மட்டும் சுட்டிக்காட்டி, கதையின் சுருக்கத்தை மட்டுமே கொடுத்திருப்பேன்.

      அவர்களின் மிகச்சிறப்பான எழுத்து நடையினையும், கதையின் முடிவினையும் அறிந்துகொள்ள தாங்கள் நிச்சயமாக அந்த நூலை வாங்கிப் படிக்கும்படியாகத்தான் இருக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி. அடுத்த நான்கு நாட்களுக்கும் தினமும் வாருங்கள்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனிமரம்.

      நீக்கு
  15. உங்கள் பதிவிற்கு அவ்வப்பொழுது வந்து எட்டிபார்த்துக் காத்திருந்தேன். இனி உங்கள் தளம் களைகட்டிவிடும். திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பின்னூட்டங்களை படித்திருக்கிறேன். இனி அவருடைய அரிய படைப்பின் விளக்கத்தை நீங்கள் தர இருக்கிறீர்கள். கூடிய விரைவில் அவருடைய படைப்பையும் ஆவலுடன் வாங்கிப் படிப்பேன். தங்களின் முயற்சிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Venkat S September 6, 2015 at 6:00 PM

      வாங்கோ சார், வணக்கம் சார். நலமா? தங்களை வெகு நாட்களுக்குப்பின் இன்று இங்கு பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வயிற்றைக் காயப்போட்டு, அவ்வப்போது விரதம் இருக்க ஆரம்பித்திருப்பதாக அறிந்தேன். படிக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

      //உங்கள் பதிவிற்கு அவ்வப்பொழுது வந்து எட்டிபார்த்துக் காத்திருந்தேன்.//

      ஆஹா, என்னையும் எதிர்பார்த்து காத்திருந்த ஒருவர் !!!!! இதைக்கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சார்.

      //இனி உங்கள் தளம் களைகட்டிவிடும்.//

      :))))) அடுத்த 4 நாட்களுக்காவது நிச்சயமாக களை கட்டினாலும் ஆச்சர்யம் இல்லைதான். :)))))

      //திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பின்னூட்டங்களை படித்திருக்கிறேன்.//

      சென்ற 2004ம் ஆண்டு, நான் என் வலைத்தளத்தினில் 40 வாரங்களுக்குத் தொடர்ச்சியாக நடத்திய ‘சிறுகதை விமர்சனப்போட்டிகளில்’ ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்கள், சார். மிகத்திறமையான எழுத்தாளர் சார். இந்தத்தொடரில் நான் ஆங்காங்கே ’விமர்சன வித்தகி’ என்று கொடுத்திருக்கும் இடங்களில் காட்டியுள்ள இணைப்புகளை மட்டுமாவது பாருங்கோ சார். அவர்களின் தனித்திறமைகளை ஓரளவுக்கு நீங்களும் உணர்ந்துகொள்ளலாம். :)

      // இனி அவருடைய அரிய படைப்பின் விளக்கத்தை நீங்கள் தர இருக்கிறீர்கள்.//

      ஆமாம் சார். ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு மொத்தம் 5 பகுதிகளாகப் பிரித்து அளிக்க உள்ளேன். அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் அவசியமாக வாங்கோ, சார்.

      //கூடிய விரைவில் அவருடைய படைப்பையும் ஆவலுடன் வாங்கிப் படிப்பேன். தங்களின் முயற்சிக்கு நன்றி.//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
    2. தங்களுடைய வருகைக்கும் நூலை வாசிக்கவிருக்கும் ஆர்வத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. உங்கள் பதிவைக் காலையிலேயே படித்துவிட்டேன். இரண்டு சிறிய சொந்தப் பிரச்சினைகள் மனதை ஆக்கிரமித்து இருந்ததினால் பின்னூட்டம் போடாமல் விட்டு விட்டேன்.

    இந்தப் பதிவைப் படித்தவுடனேயே கூகுளில் இந்த ஒரிஜினல் ஆசிரியரைப் பற்றிய விவரங்கள் தேடி அவருடைய இரண்டு புத்தகங்களை தரவிறக்கினேன். இனிமேல்தான் படிக்கவேண்டும்.

    திருமதி. கீதமஞ்சரி அவர்களின் புத்தகத்தை வாங்கவேண்டும்.

    தங்கள் அறிமுகப் பதிவு அந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டி விட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ பழனி. கந்தசாமி September 6, 2015 at 6:19 PM

      வாங்கோ சார், வணக்கம் சார். மெயில் மூலம் விபரங்கள் அறிந்தேன். தங்களின் இன்றைய சொந்தப்பிரச்சனைகள் இரண்டுமே சுமுகமாக முடிந்திருக்கும் + இப்போது கொஞ்சம் மன அமைதியும் கிட்டியிருக்கும் என நினைக்கிறேன்.

      //தங்கள் அறிமுகப் பதிவு அந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டி விட்டிருக்கிறது.//

      மிக்க மகிழ்ச்சி சார். அடுத்த 4 நாட்களுக்கும் வருகை தாருங்கள். தங்களின் அந்த ஆவல் மேலும் மேலும் என்னால் தூண்டப்படக்கூடும்.

      பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இங்கு அன்புடன் வருகை தந்து, தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பித்ததற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. மூல ஆசிரியரைப் பற்றி கேள்விப்பட்டவுடனேயே அவர் எழுதிய நூல்களைத் தரவிறக்கம் செய்து வாசிக்க விழைந்திருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது. தங்களுடைய ஆர்வத்துக்கு மிகவும் நன்றி ஐயா.

      நீக்கு
  17. திருமதி கீதா மதிவாணன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலை, விரிவாக பதிவிடவுள்ளதறிந்து மகிழ்ச்சி!
    மூல ஆசிரியரின் வாழ்க்கை குறிப்புகளே கதைபோல பல எதிர்பாரா சம்பவங்களோடு போராட்ட வாழ்க்கையாய் இருக்கிறதே?

    அடுத்த பகுதிக்காக இறை நாட்டப்படி காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் September 6, 2015 at 7:26 PM

      வாங்கோ நண்பரே, வணக்கம்.

      //திருமதி கீதா மதிவாணன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலை, விரிவாக பதிவிடவுள்ளதறிந்து மகிழ்ச்சி!//

      அவர்கள் சாதாவோ, சோதாவோ இல்லையே ..............
      கீதா ஆச்சே! :) - மேலும் விமர்சன வித்தகியாச்சே !! :)

      அதனால் மட்டுமே நான் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலைப்பற்றி விரிவாக பதிவிடத் தீர்மானித்துவிட்டேன்.

      //மூல ஆசிரியரின் வாழ்க்கை குறிப்புகளே கதைபோல பல எதிர்பாரா சம்பவங்களோடு போராட்ட வாழ்க்கையாய் இருக்கிறதே?//

      ஆமாம். பெரும்பாலான சிறந்த பிரபல எழுத்தாளர்கள் அனைவருக்குமே இதுஒரு சாபக்கேடு போல எனக்குத் தோன்றுகிறது.

      //அடுத்த பகுதிக்காக இறை நாட்டப்படி காத்திருக்கிறேன்!//

      அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமாவது தாங்கள் இவ்விடம் வருகைதர இறை நாட்டம் கிட்டட்டும்.

      மிக்க நன்றி, நண்பரே. நாளை சந்திப்போம்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. மூல ஆசிரியரின் வாழ்க்கையே ஒரு சோகமயமான கதை போலத்தான்.. அந்த சூழ்நிலைதான் அவரை பல்வேறு விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைக் கதைகளாக்கத் தூண்டியது போலும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. பரிவை சே.குமார் September 7, 2015 at 12:13 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சகோதரிக்கு வாழ்த்துக்கள்...//

      சகோதரி சார்பில் தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  19. ஓரளவு வாசித்தேன்
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi September 7, 2015 at 12:49 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஓரளவு வாசித்தேன். இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  20. ஸார் வந்துவட்டேன்.. நான் பதிலுலகத்துக்கு புது முகம்ல. திருமி கீதாமதிவாணன் மேடம் பத்தி தெரிந்திருக்கல. தெரிஞ்சுக்கதான் இங்க வந்தேன். மொழி பெயர்ப்பு புக்ஸ்லாம் எழுதிருக்காங்களா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய அறிமுகம் இப்பதிவின் வாயிலாய்க் கிடைத்ததில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      நீக்கு
  21. ஸார் ஸார் வெரி ஸாரி. அண்ணனோட மொபைல் யூஸ் பண்ணி பின்னூட்டம் போடரேன் ஏதோ ஸ்பெலிங் மிஸ்டேக் ஆயிட்டு. அதா மறுக்கா வந்திட்டேன்

    பதிலளிநீக்கு
  22. mru September 7, 2015 at 2:45 PM

    வாங்கோ முறுக்கு (mru), வணக்கம்

    //ஸார் வந்து விட்டேன்.. நான் பதிவுலகத்துக்கு புது முகம் இல்லையா! அதனால் கீதாமதிவாணன் மேடம் பத்தி தெரிந்திருக்கவில்லை. //

    அதனால் பரவாயில்லை. தங்கள் வருகைக்கு மிகவும் சந்தோஷம்மா.

    //தெரிஞ்சுக்கதான் இங்க வந்தேன்.//

    மிக்க மகிழ்ச்சி. நீங்க ரொம்ப நல்ல பொண்ணு.

    //மொழி பெயர்ப்பு புக்ஸ்லாம் எழுதிருக்காங்களா..//

    இதுவரை ஒரு புக் மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். நிறைய பதிவுகள் எழுதியிருக்காங்க. அவர்களின் வலைத்தளத்தினில் Follower ஆகிக்கொண்டு, நேரம் கிடைக்கும்போது அனைத்தையும் படியுங்கோ.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru September 7, 2015 at 2:48 PM

      வாங்கோ முருகு (mru), மீண்டும் வணக்கம்.

      //ஸார் ஸார் வெரி ஸாரி. அண்ணனோட மொபைல் யூஸ் பண்ணி பின்னூட்டம் போடறேன். ஏதோ ஸ்பெலிங் மிஸ்டேக் ஆயிட்டுது. அதனால் மறுபடி வந்துட்டேன்.//

      அதனால் பரவாயில்லை. எழுத்துப்பிழை எல்லோருக்குமே ஏற்படத்தான் செய்கிறது. அதுவும் கைபேசி மூலம் என்றால் அதுவும் அண்ணனுடைய கைபேசி என்றால் :) கேட்கவே வேண்டாம்.

      பயத்திலும், அவசரத்தில் இவ்வாறு ஏற்படக்கூடும். நான் ஓரளவு அவற்றை [எழுத்துப்பிழைகளை] மாற்றியுள்ளேன்.

      தங்களின் அன்பான வருகைக்கு நன்றி.

      நீக்கு
  23. அலை பேசி தொலை பேசினுலாம் சொல்லுவாங்க. நீங்க புதுசா கைபேசினுரீங்களே. சும்மனாச்சும் ஒரு டவுட்டுதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru September 8, 2015 at 11:29 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //அலைபேசி, தொலைபேசின்னு எல்லாம் சொல்லுவாங்க. நீங்க புதுசா கைபேசின்னு சொல்றீங்களே. சும்மனாச்சும் ஒரு டவுட்டுக்குத்தான்.//

      நல்லதொரு கேள்விதான். எனக்கும் உடனே டவுட் ஆயிடுச்சு !

      கூகுளாண்டவரிடம் சென்றேன்:

      அவர் சொல்வது இதோ கீழேயுள்ளன:

      -=-=-=-=-=-

      Search Results
      கைபேசி = Hand Set
      தொலைபேசி = Phone
      அலைபேசி = Mobile
      Open in Google Translate

      -=-=-=-=-=-

      தகவல் தொடர்பில், நாம் உபயோகிக்கும் மொழியைவிட, நாம் சொல்ல வருவது பிறகுக்குப் புரிய வேண்டும் என்பதே மிகவும் முக்கியம். அதனால் நானும் இனி தங்களைப்போலவே தூய தமிழில் ’மொபைல்’ என்றே எழுதிவிடலாம் என நினைத்துக்கொண்டேன். :)

      மீண்டும் வருகை தந்து டவுட்டு கேட்டதற்கும், என்னை சற்றே யோசிக்க வைத்ததற்கும் மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  24. ஓ ஓ உடனே ரிப்ளை பண்ணிட்டிங்களே. பெர்பெக்ட ஜென்டில் மேன் நன்றி நன்றி உங்க அடை பதிவுல பின்னூட்டம் போட்டேன். மெயில்ல கன்டின்யூ பண்ணி ருக்கேன். எப்ப ஃப்ரீயோ பாருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru September 8, 2015 at 1:14 PM

      வாங்கோ, வணக்கம்மா. மீண்டும் வருகைக்கு நன்றி.

      //ஓ ஓ உடனே ரிப்ளை பண்ணிட்டிங்களே. பெர்பெக்ட ஜென்டில் மேன். நன்றி நன்றி. உங்க அடை பதிவுல பின்னூட்டம் போட்டேன். மெயில்ல கன்டின்யூ பண்ணியிருக்கேன். எப்ப ஃப்ரீயோ பாருங்க.//

      தகவலுக்கு மிக்க நன்றி. பின்னூட்டத்திற்கும், தங்கள் மெயிலுக்கும் நான் பதில் அளித்து விட்டேன். நீங்க எப்போ ஃப்ரீயோ அப்போ அவற்றைப் பாருங்கோ.

      நீக்கு
  25. கீதமஞ்சரியின் நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுத மிகுந்த ஆவல் இருந்தாலும் சில காரணங்களால் தள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறேன்.
    அவரின் எழுத்திற்குப் பெரிய ரசிகை நான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் September 8, 2015 at 9:37 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கீதமஞ்சரியின் நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.//

      அப்படியா !! மிக்க மகிழ்ச்சி !! :)

      //எழுத மிகுந்த ஆவல் இருந்தாலும் சில காரணங்களால் தள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறேன்.//

      ’என்றாவது ஒரு நாள்’ முழுவதும் படித்து முடித்ததும் ‘என்றாவது ஒரு நாள்’ தங்கள் பாணியில் தாங்களும் எழுதுங்கோ. அது தங்கள் பதிவின் வாசகர்களுக்கு புதிய தகவலாக இருக்கக்கூடும். நூலாசிரியர் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

      //அவரின் எழுத்திற்குப் பெரிய ரசிகை நான்//

      ஆஹா, இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
    2. உங்களுடைய பதிவுகளின் ரசிகையான எனக்கு நீங்கள் ரசிகை என்னும்போது மிகவும் மகிழ்வாக உள்ளது. நன்றி கிரேஸ்.

      நீக்கு
  26. ’கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்...’ என்ற தலைப்பில் கீதமஞ்சரி வலைத்தளப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் 08.09.2015 வெளியிட்டுள்ளதோர் பதிவு: http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_8.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டும்.

    பதிலளிநீக்கு
  27. ஒரு கதையை மூலத்தின் சுவை கெடாமல், வேறு மொழியில் மொழி பெயர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

    அந்த வகையில் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    புத்தகக் கடைக்குப் போவதற்குப் பதில் கோபு அண்ணாவின் வலைத்தளத்துக்குள் நுழைந்து விடலாம் போல் இருக்கிறதே.

    உங்கள் கைங்கரியத்தில் ஹென்றி லாசனைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

    குடத்துள் இட்ட விளக்கு போல் இருப்பவர்களை குன்றில் இட்ட விளக்காக்குவதில் கோபு அண்ணா உங்களுக்கு இணை யாரும் இல்லை.

    எல்லாருடைய வலைத் தளங்களுக்கும் வருகை புரிய வேண்டும் என்ற ஆசை எனக்கு ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. ஆனால் என் செய்ய. என் வலைத் தளத்தில் பதிவு போடவே எனக்கு நேரம் இல்லை.

    ஆறு பதிவுகளையும் படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

    மீண்டும் திருமதி கீதா மதிவாணனுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான அபூர்வ வருகையும், அழகான விரிவான கருத்துக்களும் எனக்கு மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் அளிக்கின்றன.

      //உங்கள் கைங்கரியத்தில் ஹென்றி லாசனைப் பற்றித் தெரிந்து கொண்டேன். //

      நூலாசிரியர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் கைங்கர்யத்தில் மட்டுமே, நானும், ’ஹென்றி லாஸன்’ என்று ஒரு பிரபல எழுத்தாளர் இவ்வுலகில் வாழ்ந்துள்ளார் என்பதையே அறிந்துகொண்டேன். :)))))

      மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
    2. மொழிபெயர்ப்பு பற்றிய புரிதலுடன் கூடிய கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி ஜெயந்தி.

      நீக்கு
    3. மன்னிக்கவேண்டும் ஜெயந்தி மேடம். யாரோ புதியவர் இளையவர் என்று நினைத்து பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டேன்.

      நீக்கு
  28. நீங்களும் நீண்டவிடுப்பு எடுத்து விட்டீர்கள், நானும் இணையம் பக்கம் எப்போதாவது என்பது போல் ஆகி விட்டது மாயவரத்தில் இருப்பு இல்லை வேறு வேறு ஊர்களில் இருக்கிறேன்.
    உங்கள் உடல் நலம் ஓய்வுக்கு பின் பூரணநலம் என்று நினைக்கிறேன்.

    மீண்டும் வந்து சிறப்பான நூல் விமர்சனம், பாராட்டு, கீதாமதிவாணன் அவர்களின் காடுரைகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் அழகாய் சொல்வதை படிக்க போகிறேன். உங்கள் இருவருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு September 9, 2015 at 2:49 PM

      வாங்கோ, வணக்கம். வெகு நாட்களுக்குப்பின் தங்களைப் பார்ப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //நீங்களும் நீண்டவிடுப்பு எடுத்து விட்டீர்கள்,//

      ஆம். இன்னமும்கூட நான் விடுப்பில்தான் இருக்கிறேன். இந்தப்பதிவின் அவசர அவசியம் கருதி .. படித்ததும் சூட்டோடு சூடாக அதைப்பற்றி எழுதிவிட வேண்டும் என்ற ஓர் ஆர்வத்தில் மட்டுமே .. இந்த ஒருபதிவுக்காக மட்டுமே வந்துள்ளேன். மீண்டும் விடுப்பில் சென்று விடுவேன்.

      //நானும் இணையம் பக்கம் எப்போதாவது என்பது போல் ஆகி விட்டது. மாயவரத்தில் இருப்பு இல்லை வேறு வேறு ஊர்களில் இருக்கிறேன்.//

      எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன். நம் ஒவ்வொருவருக்கும் இதுபோல எவ்வளவோ குடும்பச் சூழ்நிலைகள் மாறிமாறி ஏற்படத்தான் செய்கிறது.

      //உங்கள் உடல் நலம் ஓய்வுக்கு பின் பூரணநலம் என்று நினைக்கிறேன்.//

      நான் இங்கு நலமே. அதெல்லாம் வழக்கம்போல் மட்டுமே. நல்லவேளையாக எதுவும் புதிய பிரச்சனைகள் இல்லை. :)

      //மீண்டும் வந்து சிறப்பான நூல் விமர்சனம், பாராட்டு. கீதாமதிவாணன் அவர்களின் கா டு றை க் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் அழகாய் சொல்வதை படிக்க போகிறேன். உங்கள் இருவருவருக்கும் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் எங்கள் இருவர் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். பார்ப்போம். சந்தோஷம்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. காடுறை கதைகளைப் பிடிக்கும் என்று முன்பே ஒருமுறை தெரிவித்திருந்தீர்கள்.. இப்போதும் தெரிவித்துள்ளீர்கள். மிகவும் மகிழ்வாக உள்ளது கோமதி மேடம். தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி.

      நீக்கு
  29. வாழ்த்துக்கள் கீதா .புகழுரை மிக அருமை அண்ணா..இங்கும்லைப்ரரியில் சொல்லி வச்சா கிடைக்கும் .படிக்க ஆவலை தூண்டுகிறது உங்க புகழுரை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin September 10, 2015 at 9:58 PM

      வாங்கோ வணக்கம்.

      //வாழ்த்துக்கள் கீதா . புகழுரை மிக அருமை அண்ணா.. இங்கும்லைப்ரரியில் சொல்லி வச்சா கிடைக்கும். படிக்க ஆவலை தூண்டுகிறது உங்க புகழுரை //

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  30. கீதமஞ்சரியின்.... தமிழ்த்தேன்.... பார்த்தேன்.... படித்தேன்.... ரசித்தேன்.... சுவைத்தேன்.... மகிழ்ந்தேன்.... பகிர்ந்தேன்.... முழுக்க முழுக்கத் தேனினும் இனிமையான தமிழாக்கம் !

    அருமையான திறனாய்வு...
    திருமதி கீதமஞ்சரியின் அயராத மொழிபெயர்ப்பு திறமைக்கு அளித்த மனிமகுடம்...

    பதிலளிநீக்கு
  31. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:47 AM

    வாங்கோ, வணக்கம்.

    **கீதமஞ்சரியின்.... தமிழ்த்தேன்.... பார்த்தேன்.... படித்தேன்.... ரசித்தேன்.... சுவைத்தேன்.... மகிழ்ந்தேன்.... பகிர்ந்தேன்.... முழுக்க முழுக்கத் தேனினும் இனிமையான தமிழாக்கம் ! **

    //அருமையான திறனாய்வு... திருமதி கீதமஞ்சரியின் அயராத மொழிபெயர்ப்பு திறமைக்கு அளித்த மணிமகுடம்...//

    தங்களின் அன்பான வருகைக்கும், தேனினும் இனிமையான கருத்துக்களுக்கும், அயராமல் மொழிபெயர்ப்பு செய்த திறமையான கதாசிரியைக்கு மணிமகுடம் சூட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  32. Mail message from ஆச்சி on 09.11.2015 .... 5.52 AM

    Ennaal comment Box il comment publish kodukka mudiyavillai..so inge therivikiren.

    மற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பதில் எள்ளளவும் குறையற்ற Vgk sir,

    எழுத்தாற்றல் மிக்க கீதா அவர்களின் மொழி பெயர்ப்பு படைப்பினை தங்களது நடையில் பகிர்ந்தளித்துள்ளீர்கள்.

    -=-=-=-=-=-

    வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

    தங்களுக்கும் தங்கள் கணவர், குழந்தைகள் இருவருக்கும் + தங்கள் இல்லத்தில் உள்ள மாமியார் போன்ற மற்ற உறவினர்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு