’என்றாவது ஒரு நாள்’
நூல் புகழுரை
By
வை. கோபாலகிருஷ்ணன்
பகுதி-5
{ நிறைவுப் பகுதி }
Link for Part 1 of 5
Link for Part 4 of 5
வலைத்தளம்: கீத மஞ்சரி
’என்றாவது ஒரு நாள்’
நூலாசிரியர்
’விமர்சன வித்தகி’
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-03-03-third-prize-winner.html
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html
திருமதி.
கீதா மதிவாணன்
அவர்கள்
-oOo-
’என்றாவது ஒரு நாள்’ நூலிலிருக்கும்
ஒவ்வொரு தமிழாக்கக் கதையினிலும்
நான் ரசித்துப்படித்துப் புரிந்துகொண்டவைகளை
ஒருசில வரிகளில் மட்டும் மிகச்சுருக்கமாகப்
பகிர்ந்துகொண்டு வருகிறேன்.
கதை எண்: 1 to 10 க்கான இணைப்பு:
கதை எண்: 11 to 20 க்கான இணைப்பு:
கதை எண்: 21 மற்றும் 22 மட்டும்
இப்போது இங்கே தொடர்கிறது
21. மேக்வாரியின் நண்பன்
அயோக்யன், தறுதலை, களவாணிப்பயல், பயந்தாங்கொள்ளி, புளுகன், மோசடிப்பேர்வழி என்றெல்லாம் சமூகத்தால் அழைக்கப்படும் வாலிபனான ’மேக்வாரி’ என்கிற கதாபாத்திரத்தின் பெயர் நம்மூர் ’கேப்மாரி’ போல பொருத்தமாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
மேக்வாரியின் நண்பர் பெயர்: பார்கோ - இவன் முரட்டு தேகத்துடனான சற்றே கிழவனாவான்.
அந்தக்காலத்தில் 1965-1975 முரட்டு எஞ்ஜின்களுடன் கூடிய கனரக வாகனங்களில் [Bus + Lorry] லேலண்ட், பென்ஸ், பார்கோ என்ற மூன்றும் மிகப் பிரபலமாக இருந்தன. அதுபோலவே முரட்டு தேகத்துடனான இவனுக்கும் பார்கோ என்ற பெயர் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளதாக நான் நினைத்துக்கொண்டேன்.

மேக்வாரி + பார்கோ என்ற இரு பெரும்குடிகாரர்களான பேட்டை ரெளடிகளின் நெருங்கிய நட்பினை உணர்த்தும் கதையாக உள்ளது.
சிறிது காலமாக யார் கண்களிலும் படாமல் உள்ள தன் நண்பன் ‘மேக்வாரி’ ஐ நீண்ட நாட்களாகக் காணுமே என பிறர் இவன் காதுபட பேசிக்கொள்ளும்போது, அவன் இறந்து போய்விட்டதாக மற்றவர்களிடம் ‘பார்கோ’ அறிவிக்கிறான்.
மேலும், ’யாரையும் அவர்கள் இல்லாதபோது, முதுகுக்குப்பின்னால் புறணி பேசும் வழக்கம் கூடாது’ என்று முழு போதையிலும் பார்கோ பிறருக்கு உபதேசம் செய்கிறான். இந்த இடம் படிக்க நல்ல நகைச்சுவையாகவும் யோசிக்க வைப்பதாகவும் உள்ளது.
இறந்து போனதாக பார்கோவால் அறிவிக்கப்பட்ட அதே ’மேக்வாரி’ கதையின் கடைசியில் உயிருடன் வருவது, கதையில் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.
பிறகு என்ன நடந்தது? நூலில் பார்த்துப் படித்து அறியவும்.

22. பொறுப்பிலிகள்
அவள் தன் வீட்டில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவன் வருகிறான்.
தன் வயிற்றில் அவன் வாரிசு உருவாகியுள்ளதாகச் சொல்லி மகிழ்கிறாள். அவளை மட்டும் விரும்பி அனுபவித்த அவன், ஏனோ அதனை ஏற்க மட்டும் விரும்பாமல் இருக்கிறான்.
”உடனே எங்காவாது இதில் எக்ஸ்பர்ட் ஆன பெண்மணிகள் யாரிடமாவது சென்று கலைத்து விடுவது தானே” என்கிறான்.
”என்னிடம் கையில் காசு ஏதும் இல்லை. அதனால் அதற்கும் வழியில்லை .... நீ எனக்குத் துணையாக இருப்பின் நான் அதனைப் பெற்றுக்கொள்கிறேனே ... ஆசையுடன் அழகாக பொறுப்புடன் வளர்க்கிறேனே ... பிற்காலத்தில் அது உன் பெயரைச் சொல்லுமே ... உனக்கு என்றும் ஆதரவாக இருக்குமே” என்கிறாள் அவள்.
இதைக்கேட்டவன் தர்ம சங்கடத்துடன், அவளை அழைத்துக்கொண்டு வெளியே எங்கோ நடைப்பயிற்சிக்குச் செல்ல விரும்புகிறான்.
”இந்த நிலைமையில் நான் எப்படி வெளியே வர முடியும்?, என்னைப்பலரும் பார்க்கக்கூடுமே” என முதலில் மறுக்கிறாள் அவள். இருப்பினும் அவனின் வற்புறுத்தலுக்குப்பின் அவனுடன் வெளியே புறப்பட்டுச்செல்கிறாள்.
வழக்கம்போல அவனுடன் வேகமாக நடக்கவும், உயரமான பாதைகளில் ஏறி அவனுக்கு ஈடாக பின் தொடரவும், தன்னுடைய தற்போதைய உடல் நிலைமை அசெளகர்யமாக இருப்பதாகச் சொல்லி அவனையும் உணர வைக்கிறாள்.

பிறகு அவளை, அவளின் வீட்டில் அவன் பத்திரமாகக் கொண்டுபோய் விடும்போது, ஒரு கணிசமான தொகையை அவளிடம் செலவுக்காகக் கொடுக்கிறான். அவளிடம் அவன் பிறக்கவுள்ள குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளைச் சொல்லி புரிய வைக்கிறான். மேலும் அவளுடன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறான்.
அவளும் அதுபோலவே மனம் விட்டுப்பேசும் போது, ”தன் வயிற்றில் வளரும் கரு நிச்சயமாக ’__ண்’ குழந்தையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது” என அவனிடம் சொல்கிறாள். அவள் இதுபோலச் சொல்லியதில், அவனுக்கு ஓர் மன நிறைவு ஏற்பட்டு, அவன் மனதையே அடியோடு மாற்றி விடுகிறது.

ஓரிரு நாட்களில் திரும்ப வந்து அவளை அழைத்துச் செல்வதாகவும், அதன் பிறகு அவள் தன்னுடனேயே தன் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி இருக்கலாம் என்றும், கர்பிணியான அவள் இனி தையல் வேலைகள் செய்து தவித்துக்கொண்டு, தனித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான்.
மேலும் ”தான் அப்படிப்பட்டவன் அல்ல” என்று தன்னைப்பற்றி அவளிடம் உயர்வாகச் சொல்லியும் செல்கிறான். அவன் அன்புடன் தந்த பணத்தைப்பெற்றுக்கொண்ட அவளும் அவனின் நல்ல முடிவினையும், திடீர் மனமாற்றத்தையும் கண்டு மகிழ்ச்சியடைகிறாள்.
கருவுற்ற ஒரு பெண்ணின் அன்புடன் கூடிய ஓர் மிகச்சிறிய வார்த்தை ‘பொறுப்பிலிகளாக’ இதுவரை இருந்துள்ள இவர்களை எப்படிப் ’பொறுப்பானவர்களாக’ மாற்றியுள்ளது என்பதை நீங்களே படித்துத் தெரிந்து கொண்டால்தான் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கக்கூடும். :)
அப்படியே நம் உசிலம்பட்டி போன்ற ஊர்க்காரர்களுக்கும் இதனை எடுத்துச்சொல்ல வசதியாக இருக்கும்.

என் மூச்சும் பேச்சும்
என்றென்றும் தமிழமுதே!
என் எழுதுகோல் பீச்சும்
எண்ணத்தின் வீச்சுமதுவே!
என் எழுதுகோல் பீச்சும்
எண்ணத்தின் வீச்சுமதுவே!
- கீதமஞ்சரி
http://geethamanjari.blogspot.
ஹென்றி லாஸன் என்பவர், ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மிகச்சிறந்த எழுத்தாளராக இருந்திருக்கலாம். அவர் சொல்லியுள்ள கதைகளும் கருத்துக்களும் அன்றைய காலக்கட்டத்தில், தண்டனைபெற்று வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்து அன்றாடம் தங்களின் வாழ்வாதாரத்திற்கே போராடிய ஏழை மக்களின் சோதனை + வேதனை மிக்க வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம்.
இருப்பினும் அந்த ’ஹென்றி லாஸன்’ அவர்களைப்பற்றி, நாம் இன்று ஓரளவுக்காவது அறிய, கொஞ்சும் தமிழில், தனக்கே உரித்தான தனி நடையில், வெகு அழகாகவும், மிக நேர்த்தியாகவும் மொழியாக்கம் செய்துள்ள திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் கடுமையான உழைப்பினை நாம் பாராட்டியே தீரவேண்டும்.
என்னைப்பொறுத்தவரை இதனைத் தமிழாக்கம் செய்து ஜூஸ் போல நமக்குப் பருகவும், படிக்கவும் கொடுத்துள்ள நம் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற நூலை மட்டும் நான் பார்க்காமலும் படிக்காமலும் இருந்திருந்தால் ’ஹென்றி லாஸன்’ என்ற பிரபலமானதோர் எழுத்தாளரைப்பற்றி நான் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
திருமதி. கீதா மதிவாணன் அவர்களைப்பற்றி ஏற்கனவே தெரிந்துள்ள + இதுவரை தெரிந்துகொள்ள வாய்ப்பு அமையாத தமிழ் எழுத்தாளர்களும், வாசகர்களும், தமிழ் வலையுலகப் பதிவர்களும் அவசியமாகப் படித்து ரஸிக்க வேண்டிய நூல் இது.
எந்தக்காலத்திலோ, யார் யார் வாழ்க்கையிலோ நடந்த சம்பவங்களை யாரோ ஒருவர் எழுதியிருப்பினும், அதற்கு தன் தனித்திறமைகளால் தமிழில் உயிரூட்டம் கொடுத்து, சுவை சேர்த்து, நமக்காகவே ருசியாகச் சமைத்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பரிமாறியுள்ளார்கள் திருமதி. கீதா அவர்கள்.
ஹென்றி லாஸன் அவர்களால் சொல்லியிருக்கக்கூடிய மூலக் கதைகளைவிட, இவர்களின் தமிழ் எழுத்து நடையில் நிறைய சுவாரஸ்யங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். இவர்களின் தனித்திறமைகள் வாய்ந்த தமிழ் எழுத்துக்களுக்காகவே அனைவரும் இந்த நூலினை வாங்கிப் படித்து மகிழலாம் என்பதை எனது தனிப்பட்ட கருத்தாகப் பதிவு செய்துகொள்கிறேன்.
இது இவர்களின் முதல் நூல் வெளியீடாகும். முதல் நூலே வெற்றிகரமாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கதாகும். இந்த தன் நூல் வெற்றிகரமாக அமையவேண்டி இவர்கள் மேற்கொண்டுள்ள சிரத்தையான கடும் உழைப்புகள் பற்றி இவர்களே தன் நூலில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ளார்கள்.
இந்த நூல் வெளியீட்டால் இவர்களுக்கு பல்வேறு புதிய உலக அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்பதில் எனக்கொன்றும் சந்தேகமே இல்லை. அந்த அரிய பெரிய அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு, இவர்களின் பொறுமைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், தனித்தன்மைகளுக்கும், தமிழ் எழுத்தினிலுள்ள தனித்திறமைகளுக்கும், ஆண்டுக்கு ஒன்று வீதம் மேலும் பல நூல்கள் இவர்கள் வெளியிட முயற்சிக்கலாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பல்வேறு காரணங்களால், சற்றே தாமதமானாலும், இந்த நூலை நான் பொறுமையாகவும், முழுமையாகவும், நன்கு புரிந்துகொண்டும், ஒவ்வொரு வரிகளையும் மனதில் ஏற்றிக்கொண்டும் படித்து முடித்து, இதுபோல விரிவாகக் புகழுரை வழங்க எனக்கு வாய்ப்பளித்த ’கீதமஞ்சரி’ வலைத்தளப் பதிவர், திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
’என்றாவது ஒருநாள்’
(மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய
காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்)
மூல ஆசிரியர் :– ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா)
தமிழில் :– கீதா மதிவாணன்
(மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய
காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்)
மூல ஆசிரியர் :– ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா)
பதிப்பகம்: அகநாழிகை
விலை – ரூ.150/-
(அட்டைகள் நீங்கலாக 160 பக்கங்கள்)
கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS complex,
சைதாப்பேட்டை,
சென்னை - 600015.
390, அண்ணா சாலை,
KTS complex,
சைதாப்பேட்டை,
சென்னை - 600015.
Online Store: www.aganazhigaibookstore.com
To Contact Mobile: 9994541010
'கீத மஞ்சரி’ திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் வந்த ‘சீனத்தவனின் ஆவி’ என்ற சிறுகதை ஒலிவாகனம் ஏறி கலை வலம் வந்துள்ளது.
இன்று 22.1.17 இரவு 8.00 - 9.00 மணி வரை நடைபெறும் SBS அரசு ஊடக வானொலியில், சுமார் 73 மொழிகளில் ஒலிபரப்பு நடைபெறுகிறது.
அந்த ஒலி வடிவத்தை நீங்களும் கீழ்வரும் இணைப்பினில் சென்று கேட்கலாம்.
கதை வடிவம்: கீதா.மதிவாணன்.
ஒலிவடிவம்: பாலசிங்கம். பிரபாகரன்.
நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா.துரைசிங்கம்
நிகழ்ச்சி மேலாளர்: ரேமண்ட். செல்வராஜ் (றைசெல்)
ஒலிவடிவம்: பாலசிங்கம். பிரபாகரன்.
நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா.துரைசிங்கம்
நிகழ்ச்சி மேலாளர்: ரேமண்ட். செல்வராஜ் (றைசெல்)
’என்றாவது ஒரு நாள்’
மீண்டும் நாம் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும் வரை
தங்களிடமிருந்து விடைபெறுவது
தங்கள் அன்புள்ள