’என்றாவது ஒரு நாள்’
நூல் புகழுரை
By
வை. கோபாலகிருஷ்ணன்
பகுதி-4
Link for Part 1 of 5
Link for Part 3 of 5
http://gopu1949.blogspot.in/
வலைத்தளம்: கீத மஞ்சரி
’என்றாவது ஒரு நாள்’
நூலாசிரியர்
’விமர்சன வித்தகி’
திருமதி.
கீதா மதிவாணன்
அவர்கள்
-oOo-
’என்றாவது ஒரு நாள்’ நூலிலிருக்கும்
ஒவ்வொரு தமிழாக்கக் கதையினிலும்
நான் ரசித்துப்படித்துப் புரிந்துகொண்டவைகளை
ஒருசில வரிகளில் மட்டும் மிகச்சுருக்கமாகப்
பகிர்ந்துகொண்டு வருகிறேன்.
கதை எண்கள்: 1 to 10 க்கான இணைப்பு:
கதை எண்கள்: 11 to 20 க்கான கதைச்சுருக்கம்
இப்போது இங்கே தொடர்கிறது
11. மூன்று வீடுகள் - ஓர் காதல்
மூன்று ஏழைகளைப்பற்றிய மிகவும் மென்மையான காதல் கதை. மூவருமே ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். ஆனால் வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து வாழ முடியாமல் போனவர்களாக இருக்கக்கூடும் என யூகிக்க முடிகிறது.
ஒரு வீட்டில் ஓர் பெண். பெயர் திருமதி. ஃபாஸ்டர். பிறருக்கு பிரசவ நேர உதவிகள் உள்பட செய்து சற்றே சமூக சேவகியாகவும் இருக்கிறாள். மிகவும் மெலிந்த தேகம் உடையவள். வாசிப்பதிலும் சற்றே ஆர்வமுள்ளவளாக இருக்கிறாள். வழிப்போக்கர்களுக்கு உணவு தயாரித்து அளித்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகிறாள்.
பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் உள்ள ஒரு பெண் குழந்தையுடன் இன்னொரு வீட்டில் இன்னொரு பெண் இருக்கிறாள். அவள் பெயர் திருமதி. ப்ரெண்ட் . இவள் ஏற்கனவே யாரோ ஒருவனுடன் ஓடிப்போய் 2-3 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்துவிட்டு, பெண் குழந்தையொன்றை பெற்றுக்கொண்ட கையோடு, திரும்பி வந்து விட்டவள். தற்சமயம் தையல் வேலை செய்து பிழைப்பவள். பாதி நேரம் பட்டினி கிடந்தாலும் அதனை பிறர் அறியாவண்ணம் கெளரவமாக வாழ நினைப்பவள்.
முதலாமவள் இவளிடம் வலுவில் தானே வந்து நட்பு கொள்கிறாள், இவள் அதனை அவ்வளவாக விரும்பாமல் ஒதுங்கியும்கூட. பட்டினி கிடக்காமல் உடல்நிலையை கவனித்துக்கொள்ள அன்புடன் சில ஆலோசனைகள் சொல்கிறாள். அந்த நிகழ்ச்சி படிக்க மிகவும் நெகிழ்ச்சியாகவே உள்ளது.
முதலாமவள் இவளிடம் வலுவில் தானே வந்து நட்பு கொள்கிறாள், இவள் அதனை அவ்வளவாக விரும்பாமல் ஒதுங்கியும்கூட. பட்டினி கிடக்காமல் உடல்நிலையை கவனித்துக்கொள்ள அன்புடன் சில ஆலோசனைகள் சொல்கிறாள். அந்த நிகழ்ச்சி படிக்க மிகவும் நெகிழ்ச்சியாகவே உள்ளது.
மூன்றாவது ஆசாமி, இளம் மனைவியை இழந்த, கூச்ச சுபாவம் உள்ள ஆண் திருவாளர்: ’டாம் மூர்’ .... இவனையும் திருமதி. ஃபாஸ்டரையும் இணைத்து அன்றொருநாள் கிசு-கிசுப் பேசியவர்களும் உண்டு. ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை அதிகமாகத் தங்களுக்குள் பேசிக்கொண்டதே இல்லை. டாம் மூருக்கு 6-7 வயதில் ‘ஹாரி’ என்றோர் மகன் உள்ளான். ஹாரி பிறந்தபோது அருகில் இருந்து பிரசவம் பார்த்தவளே திருமதி. ஃபாஸ்டர்தான்.
இவர்கள் மூவரில் யாருக்கு யார் மீது, ஏன் காதல் என்பதே இந்தக்கதையில் உள்ள விறுவிறுப்பு.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல்நாள் சில ஆச்சர்யங்கள் நடக்கின்றன.
மகன் ஹாரி விருப்பப்படியே, அவன் தந்தை ’டாம் மூர்’க்கு மீண்டும் மேற்படி இருவரில் ஒருவருடன் திருமணம் நடக்கிறது.
இந்த இரு திருமதிகளில் யார் ஒருவர் கிறிஸ்துமஸ் அன்று ’டாம்-மூர்’ உடன் அவரின் மனைவியாக இணைந்தார் என்பதே கதையின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறுகிறது.
இந்த இரு திருமதிகளில் யார் ஒருவர் கிறிஸ்துமஸ் அன்று ’டாம்-மூர்’ உடன் அவரின் மனைவியாக இணைந்தார் என்பதே கதையின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறுகிறது.
திருமணம் முடிந்ததும், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ஹாரி உள்பட இவர்கள் நால்வருமே ஓர் கோச்சு வண்டியில் ஏறி ஜாலியாக ஊர் சுற்றிவரக் கிளம்புகிறார்கள்.
இனிமையான + மிகவும் மென்மையான மன உணர்வுகளுடன் கூடிய இந்தக் காதல் கதையை திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் தமிழ் எழுத்துக்களில் மிக அழகாகப் படிக்க நேர்வதால், நாமும் அதனை அப்படியே நியாயமாகக் கருதி ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது.
வாழ்க்கை என்றால், புரிதல் உள்ள ஒரு நல்ல துணையுடன் இருப்பது தானே எப்போதுமே, யாருக்குமே நல்லது! :) எத்தனை வயதானாலும்கூட துணையில்லாமல் தனிமை என்பது மிகவும் கொடுமை அல்லவா!
கதைக்கருவும், கதையை நகர்த்தியுள்ள விதமும் எனக்குப் பிடித்துள்ளது.
இனிமையான + மிகவும் மென்மையான மன உணர்வுகளுடன் கூடிய இந்தக் காதல் கதையை திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் தமிழ் எழுத்துக்களில் மிக அழகாகப் படிக்க நேர்வதால், நாமும் அதனை அப்படியே நியாயமாகக் கருதி ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது.
வாழ்க்கை என்றால், புரிதல் உள்ள ஒரு நல்ல துணையுடன் இருப்பது தானே எப்போதுமே, யாருக்குமே நல்லது! :) எத்தனை வயதானாலும்கூட துணையில்லாமல் தனிமை என்பது மிகவும் கொடுமை அல்லவா!
கதைக்கருவும், கதையை நகர்த்தியுள்ள விதமும் எனக்குப் பிடித்துள்ளது.
12. அவன் ஏன் அப்படிச் செய்தான்?
மிகவும் ரசித்த வரிகள்:
1)
1)
செம்மறியாட்டுப்பண்ணை முதலாளியான ஜாப் என்பவன், பிற பெண்களின் எதிரில் தன் மனைவி ஜேடி தன்மீது பரிவு காட்டி, தனது செம்பட்டைத்தலை முடியினைக் கோதிவிடும் போது, ரோமம் சிரைக்கப்பட்ட நிலையில் பெண்ணாடுகளின் மத்தியில் விடப்பட்டுவிட்ட ஒரு கடாவின் மனநிலையோடு நாணத்தால் நெளிவான். :)
2)
2)
நாட்டு வைத்தியர் ஒருவர் அளவுக்கு அதிகமாகக் குடிப்பார். அதுவும் அவரின் சொந்தக்காசில். ஆனால், குடிபோதையில் அபூர்வமாகவே அறுவை சிகிச்சை செய்யவியலாத நிலைக்குப்போவார். அவரை நன்கு அறிந்த காடுறை வாசிகள் அவர் மூன்று குவார்ட்டர் அளவுக்குக் குடித்திருப்பதையே விரும்பினர். ஏனெனில் குடிக்காத தெளிவு நிலையில் அவரிடம் லேசான நடுக்கம் தென்படும். :)
-=-=-=-=-=-=-
தன் மனைவியின் பிரசவ உதவிக்கு ’ஜாப்’பின் மாமியார் வந்து சேர வேண்டும். நாட்டுவைத்தியர் சரியான குடிபோதையளவில் வந்து சேர வேண்டும். ஏழு மைல் தொலைவில் உள்ள, பிரசவ உதவிக்கான பெண்மணி (லங்காஷையரிலிருந்து வாழ்க்கைப்பட்டு இங்கு வந்து சேர்ந்தவள்) உடனே இங்கு வந்து சேர வேண்டும்.
தன் மனைவியின் முதல் பிரசவத்தினை எதிர்பார்க்கும் நாளன்று அவளை முத்தமிட்டுவிட்டு தன் குதிரையில் எங்கோ புறப்படுகிறான் ஜாப். போகும் வழியில் டிங்கோ நாய்களை எதிர்கொள்ள நேரலாம் என்ற கணிப்பில் வேட்டைத்துப்பாக்கியை எடுத்துத் தந்து ”பதட்டமில்லாமல் போய் வாருங்கள்” என்கிறாள் பிரசவவலி வந்த அவன் மனைவி.
தன் மனைவியின் முதல் பிரசவத்தினை எதிர்பார்க்கும் நாளன்று அவளை முத்தமிட்டுவிட்டு தன் குதிரையில் எங்கோ புறப்படுகிறான் ஜாப். போகும் வழியில் டிங்கோ நாய்களை எதிர்கொள்ள நேரலாம் என்ற கணிப்பில் வேட்டைத்துப்பாக்கியை எடுத்துத் தந்து ”பதட்டமில்லாமல் போய் வாருங்கள்” என்கிறாள் பிரசவவலி வந்த அவன் மனைவி.
காட்டில் நீண்ட பயணத்திற்கு இடையே வெகு வேகமாகப்பறக்கும் தன் குதிரையை நிதானமாக நிறுத்தி சற்றே ஓய்வளிக்க நினைக்கிறான். அவன் கைப்பிடி குதிரையின் லகானிலிருந்து சற்றே தளர்கிறது. குதிரையும் வேகம் குறைந்து சற்றே நிதானமாக நடக்கத்துவங்குகையில் அந்த எதிர்பாராத ஆபத்து நிகழ்கிறது.
ஆறடி நீளத்தில் ஓரடி அகலத்தில் ஓர் ராட்சஸனைப்போன்ற பளபளக்கும் கரிய நிறத்தில் கோவான்னா எனப்படும் உடும்பு போன்ற ஆஸ்திரேலியப் பெரும் பல்லி ஒன்று அருகேயிருந்த காய்ந்த மரப்பட்டைகளிலிருந்து தாவி நடு ரோட்டில் குதிரைமுன் பாய்ந்துவிழுகிறது. அதைக்கண்டு பயந்துபோன குதிரை தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறது. கைப்பிடியை நழுவவிட்டுள்ள நிலையில், ஜாப் குதிரையிலிருந்து தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாலும், குதிரையின் சேனத்தில் நன்றாக மாட்டிக்கொண்டு விட்ட தன் கால்களில் ஒன்றினை விடுவித்துக்கொள்ள முடியாமல் ஜாப் காட்டுத்தரைகளில், பயந்த நிலையில் பறக்கும் தன் குதிரையால் வேகமாக இழுத்துச்செல்லப்படுகிறான். அவன் உடம்பெல்லாம் ரத்தம் சொட்டச்சொட்ட காயங்கள்.
இந்தத்தமிழாக்க நூலிலேயே மிகப்பெரிய கதையாக இது உள்ளது. இதில் வரும் மந்திரவாதிபோன்ற நல்ல பழுத்த அனுபவம் வாய்ந்த நாட்டு வைத்தியர் என்ற கதாபாத்திரம் மிக அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஜாப் உயிருடன் தப்பினானா? பிரசவம் ஆன தன் மனைவியையும், புதிதாகப் பிறந்துள்ள தன் குழந்தையையும் சந்தித்தானா? குதிரை என்ன ஆனது? அவன் கொண்டு சென்ற துப்பாக்கி என்ன ஆனது? அவன் உயிருக்குப் போராட்டிக்கொண்டிரு ந்த காட்டுப்பகுதியைக் கண்டுபிடிக்க யாரெல்லாம் + எவையெல்லாம், எப்படியெல்லாம் உதவின என்பதை இந்த நூலைப்படித்து தெரிந்துகொள்ளுங்கள். மிகவும் சுவாரஸ்யமான கதை.
த்ரில்லிங் ஆன நிகழ்வுகளை தனக்கே உரிய தனித்தன்மையுடன் மிகவும் அழகான சொற்களால் தமிழாக்கம் செய்து தந்துள்ள திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். அருமை. அருமையோ அருமை. :)
13. பிரம்மி என்றொரு நண்பன்
நள்ளிரவில் தனிமையில் ஓர் மர்மக்கதையைப் படிப்பது போன்ற பயத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது இந்தக்கதை.
காட்டில் தனிமையில் வாழ்ந்து, தனியே சமைத்து உண்ணும், ஆடுமேய்க்கும் கிழவன் ஒருவன். அவனுக்கு துணையாக ஓர் நாய் மட்டும். நாயின் உதவியுடன் ஆங்காங்கே சிதறித்திரியும் ஆடுகளைப்பட்டியில் அடைத்துவிட்டு, நாயையும் அழைத்துக்கொண்டு நீண்ட தூரம் கல்லறைப்பக்கமாக செல்கிறான் ... அதுவும், எதற்கோ ஒரு பை நிறைய எலும்புகள் பொறுக்கி வருவதற்கு .... ஓர் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில்.
வீடு திரும்பும் வழியில் இறந்து பலமாதங்கள் ஆனதோர் சடலத்தைக் காண்கிறான். முதலில் அதனை ஆடு போன்ற ஏதோவொரு மிருகம் என முதலில் நினைக்கிறான். அதன் அருகே சீமைச்சாராயம் (விஸ்கி) திறக்காத முழு பாட்டில் ஒன்றும் கிடக்கக்காண்கிறான். அதையும் பத்திரப்படுத்திக்கொண்டு, அருகே சென்று அந்த சடலத்தை ஆராய்ந்து பார்த்து, தன்னுடன் நட்புடன் பழகிவந்த ’பிரம்மி’ என்பவனின் சடலம் என்பதை உறுதி செய்துகொண்டு, அவனை சில மரப் பட்டைகளால் மூடி, மிகவும் கஷ்டப்பட்டு நார்போன்ற எதையெல்லாமோ எங்கெல்லாமோ தேடிக் கட்டி முதுகில் சுமந்தபடி தன் வீட்டுக்குக் கொண்டு வருகிறான்.
வரும் வழியெல்லாம் நிறைய கோவான்னாக்கள் [ஆஸ்திரேலிய உடும்புகள்] கூட்டம் கூட்டமாகத் தோன்றி இவனைப் பயமுறுத்தி வருகின்றன. அவைகளைக் கூட்டமாகக் கண்ட இவனின் நாயே நடுங்கிப்போகிறது. சாராயத்தைக் குடித்துக்கொண்டே நாயுடனும், நண்பனின் பிணத்துடனும், சேகரித்து நிரப்பியுள்ள எலும்புகள் பையுடனும், கிழவனின் பயணம் மேலும் தொடர்கிறது.
ஒருவழியாக தன் வீட்டுக்கு வந்து நண்பனின் சடலத்தை, புகைபோக்கி அருகே ஓரிடத்தில் தொங்கச்செய்து, உறங்கப்போகலாம் என நினைத்தவனுக்கு, தன் வீட்டுக்கூரையின் மேல் ஏதேதோ விசித்திரமான ஒலிகள் கேட்கின்றன.
துப்பாக்கியுடன் இரவு முழுவதும் தன் தூக்கத்தையும் தொலைத்து, வீட்டுக்கு வெளியே சற்று தள்ளியுள்ள ஓர் கல்லின் மேல் அமர்ந்து, அவ்வப்போது தன் வீட்டுக்கூரைமேல் ஏற்பட்டுவரும் விசித்திர ஒலியைப்பற்றி ஆராய்கிறான்.
துப்பாக்கியுடன் இரவு முழுவதும் தன் தூக்கத்தையும் தொலைத்து, வீட்டுக்கு வெளியே சற்று தள்ளியுள்ள ஓர் கல்லின் மேல் அமர்ந்து, அவ்வப்போது தன் வீட்டுக்கூரைமேல் ஏற்பட்டுவரும் விசித்திர ஒலியைப்பற்றி ஆராய்கிறான்.
வீட்டுக்கூரையின் மேல் தொடர்ந்து வரும் விசித்திரமான ஒலிகள் எவ்வாறு எதனால் ஏற்படுகின்றன. அதனை அவன் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான் என்பதும் இதில் ஓர் சஸ்பென்ஸ். அந்த சுவாரஸ்யத்தை நூலிலே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்குள் பொழுது விடிந்ததும் தன் நண்பன் பிரம்மியை அடக்கம் செய்ய குழிவெட்டத் திட்டமிடுகிறான். இவ்வாறாக ஒரே திகிலாகச் செல்கிறது இந்தக்கதை.
தன் நண்பனுக்காகவும் அவன் கடைசியாக விட்டுச்சென்ற சாராய பாட்டிலுக்காகவும், மிகவும் ஏழ்மை + முதுமை நிலையிலும், தனிமனிதனாக உள்ள கிழவன், நன்றி மறக்காமல் அவனை நல்லடக்கம் செய்துள்ளது பாராட்டும்படியாக உள்ளது.
தன் நண்பனுக்காகவும் அவன் கடைசியாக விட்டுச்சென்ற சாராய பாட்டிலுக்காகவும், மிகவும் ஏழ்மை + முதுமை நிலையிலும், தனிமனிதனாக உள்ள கிழவன், நன்றி மறக்காமல் அவனை நல்லடக்கம் செய்துள்ளது பாராட்டும்படியாக உள்ளது.
14. ஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம்
படிப்போர் மனதை உருகவைக்கும் சோகக்கதை. பல குழந்தைகளுடன் கஷ்டப்படும் ஓர் விதவைத்தாய். பள்ளிக்குச்செல்ல வேண்டிய பையன் தூக்கமின்றி விடியற்காலம் எழுந்து பலமைல்கள் நடந்து வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. சரியான நேரத்திற்குள் வேலைக்குப் போய்ச்சேராவிட்டால் தனது வேலையே போய்விடுமோ என்ற பயத்தில் அலாரம் அடிக்காமலேயே எழுந்து பழகிய சிறுவன், அன்று உடல்நிலை மிகவும் மோசமானபடியால் அலாரம் அடித்தும் எழுந்திருக்கவே இல்லை.
இந்த ‘என்றாவது ஒரு நாள்’ நூலில் உள்ள சிலகதைகள் திருமதி. கீதா மதிவாணன் அவர்களால் அவர்களின் வலைத்தளத்தினில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்தக்கதையும் அதுபோலவே 2014 மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. http://geethamanjari.blogspot. in/2014/03/4.html அதற்கு முன்பே நிலாச்சாரல் என்ற மின் இதழிலும் இந்தக்கதை வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
//"தூங்கத்தான் நினைக்கிறேன் அம்மா, ஆனால்… அதற்குள் நேரம் முடிந்துவிடுமென்று நினைக்கிறேன்."// என்ற வரிகளைப் படிக்கும்போதே கதையின் சோக முடிவினை ஓரளவுக்கு யூகித்துவிட முடிகிறது. ஏழைத்தாயின் நிலைமை கண்கலங்கச் செய்கிறது.
-oOo-
1979-இல் வெளியிடப்பட்ட ’மாந்தோப்புக்கிளியே’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் மிகவும் கஞ்சனாக
நடிப்பார். அவருக்குப் பிறந்த மகனாக ஒரு சிறுவன் நடிப்பான்.
எப்போதும் தன் தந்தைக்காகவே உழைக்கும் அவன் ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் படுத்திடுவான். அப்போதும்கூட மகாகஞ்சனான அவன் தந்தை முறையான மருத்துவ வசதிகள் செய்துகொடுத்து, மருந்து வாங்கிக்கொடுத்து அவனை தக்க நேரத்தில் காப்பாற்ற மாட்டான்.
அந்தச்சிறுவன் இறக்கும்முன் தன் தந்தையிடம் ஒரு விஷயம் சொல்லுவான். தான் இறந்தபிறகும் தன் தந்தைக்கு தன்னை எரிப்பதற்கு பணம் செலவாகி விடுமே என்ற கவலையில், தானே அதற்கு செலவில்லாமல் ஓர் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லிவிட்டு இறந்து விடுவான்.
படத்தில் அன்று அந்தக்காட்சியைப் பார்த்த நான் தியேட்டரிலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டேன். அதன் பிறகும் பல நாட்கள் அதே நினைவுகளிலேயே நானும் இருந்து வந்தேன்.
நடிப்பார். அவருக்குப் பிறந்த மகனாக ஒரு சிறுவன் நடிப்பான்.
எப்போதும் தன் தந்தைக்காகவே உழைக்கும் அவன் ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் படுத்திடுவான். அப்போதும்கூட மகாகஞ்சனான அவன் தந்தை முறையான மருத்துவ வசதிகள் செய்துகொடுத்து, மருந்து வாங்கிக்கொடுத்து அவனை தக்க நேரத்தில் காப்பாற்ற மாட்டான்.
அந்தச்சிறுவன் இறக்கும்முன் தன் தந்தையிடம் ஒரு விஷயம் சொல்லுவான். தான் இறந்தபிறகும் தன் தந்தைக்கு தன்னை எரிப்பதற்கு பணம் செலவாகி விடுமே என்ற கவலையில், தானே அதற்கு செலவில்லாமல் ஓர் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லிவிட்டு இறந்து விடுவான்.
படத்தில் அன்று அந்தக்காட்சியைப் பார்த்த நான் தியேட்டரிலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டேன். அதன் பிறகும் பல நாட்கள் அதே நினைவுகளிலேயே நானும் இருந்து வந்தேன்.
15. துக்க விசாரணை
தன் 12 வயது மகன் ’ஆர்வி’ இறந்து கிடைக்கும் துக்க வீட்டுக்கு அகஸ்மாத்தாக வருகை தருபவனான ’பில்’லின் விசாரணைகள் ஆரம்பத்தில் அந்தத்தாய்க்கு சற்றே எரிச்சலூட்டுவதாக இருப்பினும், போகப்போக சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
வந்தவனுக்கு வயது 13 மட்டுமே. ஆர்வியுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருபவன் ’பில்’. பணியாற்றும் இடத்தில் ’ஆர்வி’ பட்ட பல்வேறு கஷ்டங்களையும், அவமானங்களையும் ’பில்’ விவரிக்கும் போது படிக்கும் நமக்கும், ’ஆர்வி’யைப்பெற்ற தாயைப்போலவே வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது.
ஏழ்மையான குடும்ப நிலைமைக்காகவும், கிடைத்துள்ள இந்த வேலையையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்பதற்காகவும், ’ஆர்வி’ தான் அங்கு பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் தன்னைப்பெற்ற தாயிடம்கூட பகிர்ந்துகொள்ளாமல் இருந்துள்ளான் என்பதை நினைக்க மிகவும் வேதனையாகத்தான் உள்ளது.
’ஆர்வி’யின் சாவைப்பற்றி அறியாமலேயே, அகஸ்மாத்தாக அவன் வீட்டுக்கு அவனை நேரில் சந்தித்துப்பேசவும், வேலைக்கு வராவிட்டால் அவன் இந்த வேலையையும் இழக்க நேரிடும் என்பதை எச்சரிக்கை செய்யவும் வந்துள்ளவன் ’பில்’.
’ஆர்வி’யைப்பற்றிய விபரங்கள் அனைத்தையும் நன்கு உணர்ந்துள்ள ’பில்’லாவது அவன் இறந்த தினத்தன்று அகஸ்மாத்தாக அவன் உடலைப்பார்க்கவாவது வருகை தந்துள்ளதும், துக்கம் விசாரித்து ஆர்வியின் தாய்க்கு ஆறுதல் சொல்லிச்சென்றதும் படிக்கும் நமக்கும் சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
16. அப்பாவின் பழைய நண்பர்
’டாம்’ என்பவர் அப்பா. ’பில்’ என்பவர் அவரின் பழைய நண்பர். இருவருமே சுரங்கத் தொழிலாளிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். எவ்வளவோ சுக துக்க விஷயங்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டுள்ளவர்கள். அவர்களின் இன்றைய சந்திப்பு, அவர்களை அன்றைய பால்ய நாட்களுக்கு இட்டுச்சென்று மனதுக்குள் மகிழ்விக்கின்றது என்பதை இந்தக்கதையில் காணமுடிகிறது.
டாமின் மகன் சொல்கிறான்:
“அப்பாவின் பழைய நண்பர்கள் அருகிக்கொண்டும், விலகிப்போய்க்கொண்டும் இருந்தார்கள். எப்போதாவது நேர்கிற அவர்களுடைய வருகை, அவருடைய பழைய நினைவுகளை மீட்டு, மீண்டும் மனதில் புதிதாய்ப் பதிய வைப்பதாக இருந்தது. இன்று அவர்களில் ஒருவரை வழியினில் பார்த்தேன். அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு ஒரு சிந்தனை எழுந்தது. இளைய தலைமுறையான நாம் நம்முடைய அப்பாவிடம் காட்டிவரும் பாசத்தை விடவும், அப்பாவின் பழைய நண்பர்கள் அவர்மேல் வைத்திருக்கும் நேசம் அலாதியோ என்ற சந்தேகத்தின் விடை வலி தரக்கூடியதாக இருந்தது”.
டாமின் மகனின் இந்த வரிகளைக் கதையில் படித்து முடித்ததும், இன்றைய உண்மையும்கூட இதுதானே, என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். இன்றைய தலைமுறை இடைவெளிகள் தாங்கிக்கொள்ள முடியாமல் வலி தரக்கூடியதாகத்தானே உள்ளன !
17. மாயக்குரல் சேவல்
ஒரு விசித்திரமான சேவலைப்பற்றிய கதை. அட்டகாசமான வர்ணனைகள். சேவலின் தோற்றம், நடை, வீரம், ஆவேசம், பாவனைகள், குரல்வளம், சண்டைக்கொரு ஜோடி சேவலைக்காண துடிப்பு, நடிப்பு, ஓட்டம், ஒய்யாரம், பெருமிதம் என அனைத்தையும் ஒருசேர அற்புதமான தன் எழுத்துக்களால் ‘மாயக்குரல் சேவல்’ ஒன்றையே நம் கண்முன் நிறுத்தியுள்ளார் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
இறுதியில் தன் மேலேயே வெறுப்புற்ற திருவாளர் ’மாயக்குரல் சேவல்’ அவர்களின் முடிவு எதிர்பாராத திருப்பமாக அமைந்துவிடுகிறது.
மிகவும் ரசித்த வரிகள்:
அடுத்த மூன்று நாட்களுக்கும் இரண்டு சேவல்களும் மாறி மாறிக் கூவிக்கொண்டே இருந்தன. வாய்க்கு வந்த வார்த்தைகளால் ஒன்றையொன்று வசை பாடிக்கொண்டும், வெளியில் வரச்சொல்லி அழைப்பு விடுத்துக்கொண்டும், வந்தால் கோழிச்சாறும், இறகுத் தலையணையும் செய்துவிடத் துடிப்பதைப் போன்றுமிருந்தது.
ஆனால் இரண்டுமே வெளியில் வரவில்லை. ஒவ்வொரு முறையும் மூன்று கூவல்கள் கேட்டதால், எதிரி முகாமில் இரண்டு சேவல்கள் இருக்கக்கூடும் என இவை இரண்டுமே நினைத்துக்கொண்டு வெளியில் வரத் தயங்கின.
18. ஆசிரியர் செய்த பிழை
அழகான மிகவும் அருமையான கதை. இந்தக்கதையையும் ஏற்கனவே கீதமஞ்சரி வலைத்தளத்தில் http://geethamanjari.blogspot. in/2014/07/7.html ஜூலை 2014 இல் படித்துள்ளேன். கருத்தளித்தும் உள்ளேன்.
பொய், திருட்டு, போக்கிரித்தனம், அடிதடி, அடங்காமை, எதிலும் விளையாட்டுத்தனம், ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் கீழ்ப்படியாமை, நம்பிக்கைக்குப் பாத்திரமின்மை என அனைத்து கெட்ட குணங்களும் கொண்ட அண்ணன் 'பில்’. இவற்றிற்கு நேர்மாறான குணங்கள் கொண்ட பயந்த சுபாவமுள்ள தம்பி ‘ஜோ’.
பள்ளிக்கு வராத அண்ணனைப் பற்றிய புகார் கடிதம் ஒன்று வகுப்பு ஆசிரியரால் தம்பி மூலம் பெற்றோருக்குக் கொடுத்தனுப்பப்படுகிறது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த அண்ணனால், பள்ளியிலிருந்து திரும்பும் தம்பி, வழியிலேயே மடக்கப்பட்டு மிரட்டப்படுகிறான்.
பில்லின் மிரட்டலாலும், ஆசிரியர் அனுப்பிய கடிதத்தை, அவன் தன்னிடமிருந்து பிடுங்கி கிழித்தெறிந்து விடுவானே என்ற பயத்தினாலும், நீரற்ற ஓர் பாழும் கிணற்றுப்பகுதியில், கிடந்த மரச்சட்டங்களுக்கு இடையே, மடித்திருந்த அதனைத் தூக்கி எறிந்துவிட்ட ‘ஜோ’ மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு, அன்று இரவு முழுவதும் தூங்காமல் அழுதுகொண்டே இருக்கிறான்.
கடைசியில் அந்தக்கடிதம் என்னதான் ஆனது? அது அவர்கள் பெற்றோர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டதா இல்லையா? என்பதே இந்தக்கதையின் சாரம். அன்று இரவுப்பொழுது முடிந்து அதிகாலை வேளையில், இந்தக்கதையில் சற்றும் எதிர்பாராததோர் திருப்பம் நேரிடுகிறது.
இதுபோன்ற ஒருசில கசப்பான சம்பவங்கள் என் பள்ளிப்பருவத்தினில் ’ஜோ’ போன்ற சுபாவங்கள் நிறைந்த எனக்கும் நிகழ்ந்துள்ளன. http://gopu1949.blogspot.in/ 2012/03/5.html ஆனால் அவை என் அண்ணனால் அல்ல. என்னுடன் அன்று கூடவே பள்ளியில் படித்த ’பில்’ போன்ற, எதற்கும் அஞ்சாத சில சகமாணவர்களால்.
’பில்’ போன்று ஒழுக்கமற்ற சிறுவர்கள் தானாகத்திருந்துவதோ, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் திருத்தப்படுவதோ அவ்வளவு சுலபமான வேலையில்லை. நாளடைவில் அவர்கள் சமூக விரோதிகளாக மாறி, சட்டத்தால் என்றாவது ஒரு நாள் தண்டிக்கப்படலாம். அதன்பிறகு ஒருவேளை அவர்கள் திருந்தலாம்.
19. பண்ணையில் ஒரு நாள்
மாடுகளைப்பற்றிய ஞானமில்லாதவரும், ஊர் உலக சரித்திரக் கதைகளைப்பற்றி வெட்டிப்பேச்சு பேசிவருபவரும், நடத்தும் மாட்டுப் பண்ணை. மாடுகளுக்குப் பால் கறப்பது அவரின் 15 வயது மகன். சுத்தமோ, சுகாதாரமோ, பாதுகாப்போ இல்லாத மாட்டுத்தொழுவம். மாடுகளின் காம்புகளில் வெடிப்புடன் கூடிய புண்கள். அதற்கு சம்பந்தமே இல்லாத ஏதோவொரு ஓர் களிம்பு தடவி வைத்தியம் நடக்கிறது.
கறப்பவனே மாடுகளின் பின்னங்கால்களைக் கட்டிப்போட்டு, தன் வாயைக் காம்பினில் வைத்து பால் குடிக்கிறான். முதலில் கறந்த சிறிதளவு பாலாலேயே புண்ணான காம்புகளைக் கழுவி, பசுக்களுக்கு வலியில்லாமல் சற்றே இதம் அளிக்கிறான். கன்றுகளையும் அவ்வப்போது பால் குடிக்க அனுமதிக்கிறான். கறந்து வைத்த பாலைத் தன் கையாலேயே கன்றுகளுக்கு ஊட்டி விடுகிறான். அவற்றின் வாயினில் சப்பவிடும் அவனின் ஆட்காட்டி விரலையே பசுவின் காம்பாகவும், அவன் மணிக்கட்டையே தாயின் மடியெனவும் நினைத்து கன்றுகள் முட்டி முட்டி பால் அருந்தி மகிழ்கின்றனவாம்.
மாடு, கன்றுகள், கறப்பவன், அவர்களின் ஏழ்மை + அறியாமை, அங்குள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் என அனைத்தையும் பற்றிய அபாரமான வர்ணனைகளை மிகவும் ரசிக்கும்படியாகவே எழுதியுள்ளார்கள், திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்.
கறப்பவனே மாடுகளின் பின்னங்கால்களைக் கட்டிப்போட்டு, தன் வாயைக் காம்பினில் வைத்து பால் குடிக்கிறான். முதலில் கறந்த சிறிதளவு பாலாலேயே புண்ணான காம்புகளைக் கழுவி, பசுக்களுக்கு வலியில்லாமல் சற்றே இதம் அளிக்கிறான். கன்றுகளையும் அவ்வப்போது பால் குடிக்க அனுமதிக்கிறான். கறந்து வைத்த பாலைத் தன் கையாலேயே கன்றுகளுக்கு ஊட்டி விடுகிறான். அவற்றின் வாயினில் சப்பவிடும் அவனின் ஆட்காட்டி விரலையே பசுவின் காம்பாகவும், அவன் மணிக்கட்டையே தாயின் மடியெனவும் நினைத்து கன்றுகள் முட்டி முட்டி பால் அருந்தி மகிழ்கின்றனவாம்.
மாடு, கன்றுகள், கறப்பவன், அவர்களின் ஏழ்மை + அறியாமை, அங்குள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் என அனைத்தையும் பற்றிய அபாரமான வர்ணனைகளை மிகவும் ரசிக்கும்படியாகவே எழுதியுள்ளார்கள், திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்.
அதேபோல சாப்பிடும் அறையிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் விளக்கமாற்றால் ’ஷ்..ஷூ... ஷ்..ஷூ.. எனச்சொல்லி விரட்டிக்கொண்டிருக்கும் தாய் பற்றிய சிறுசிறு விஷயங்களைக்கூட மிக அழகாக வர்ணித்துள்ளார் கதாசிரியர்.
உணவு மேசையில் தொடர்ந்து கொண்டிருந்த, (அறிவுக் குறைவான அவர்களின்) உரையாடல்களின் ஓர் சிறுபகுதி எனச்சொல்லி எழுதியுள்ளதைப் படிக்க மிகவும் நகைச்சுவையாக உள்ளது.
மிகவும் ரசித்த வரிகள்:
விளக்குமாற்றின் சுற்று எல்லையை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு, கவனமாக அதிலிருந்து இரண்டு மூன்று அங்குலங்கள் தள்ளியே நடமாடி வந்தன, சமையல் அறையைச்சுற்றி வந்த அந்தக்கோழிகள்.
சமையல் அறையின் மேசையின் மீது பீங்கான் பாத்திரங்களுக்கு மத்தியில் ஓர் கோழியைப்பார்த்தால், அது எந்தப்பாத்திரத்தையும் கீழே உருட்டி உடைத்து விடாதபடி, கவனமாக அதனை விரட்ட வேண்டும்.
20. கடைசி தரிசனம்
ஒருசிலர் கப்பலிலோ, விமானத்திலோ, புகை வண்டியிலோ, பேருந்துகளிலோ பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு நெருக்கமான சிலர் அவர்களுக்குப் பிரியாவிடை கொடுக்க வருவதுண்டு. இதை சிலர் ஓர் உதவியாகவோ, அல்லது நட்பின் அடையாளமாகவோ அல்லது ஆத்மார்த்தமான பிரியத்துடனோ செய்வதுண்டு. சிலர் அந்த தற்காலிக அல்லது நிரந்தரப் பிரிவை எண்ணி அழுவதும்கூட உண்டு. இதில் சென்ற தலைமுறையைச் சேர்ந்த வயசானவர்கள் நடந்துகொள்வது சற்றே விசித்திரமாகவும், மனதை நெகிழச்செய்வதாகவும் இருக்கும்.
நாளையோ அல்லது அடுத்த நொடியோ நடப்பதை யார் அறிவார்? இவர் அவரைத் திரும்பவும் பார்ப்பாரா, அவர் இவரைத் திரும்பவும் பார்ப்பாரா என்பதைச் சொல்ல முடியாத நிரந்தரமற்ற நம் வாழ்க்கையும் ஓர் பயணமாக அமைந்து விடுவதும் உண்டு. கடைசியாக இவரை இன்ன இடத்தில் இந்த நாளில் சந்தித்தோம் என்ற நினைவு இவருக்கும் அவருக்கும் ஓர் சிறிய மன ஆறுதலை அளிக்கக்கூடும்.
இந்தக்கதையிலும் அதையேதான் ’கடைசி தரிசனம்’ என்ற தலைப்பினில் மிக அழகாகச் சொல்லியுள்ளார்கள். நல்லவேளையாக விடை கொடுத்து அனுப்பும் இவருக்கோ, விடை பெற்றுச்செல்லும் அவருக்கோ ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படவில்லை.
’என்றாவது ஒரு நாள்’
புகழுரை தொடரும்.
திருமதி. கீதமஞ்சரி அவர்களின் மொழிப்புலமை இக்கதைகளின் மூலம் நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது. அவர்களின் உழைப்பிற்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குபழனி. கந்தசாமி September 9, 2015 at 4:43 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//திருமதி. கீதமஞ்சரி அவர்களின் மொழிப்புலமை இக்கதைகளின் மூலம் நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது. அவர்களின் உழைப்பிற்கு பாராட்டுகள்.//
தங்களின் சரியான ஒட்டுமொத்தப் புரிதலுக்கும், நூலாசிரியரின் மொழிப்புலமையை அழகாகப் புரிந்துகொண்டு குறிப்பாகப் பாராட்டியுள்ளதற்கும் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் மிகுந்த நன்றிகள் சார்.
தங்களின் தொடர் வருகையும், அதுவும் இன்று முதல் வருகையும் மேலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மிக்க நன்றி சார். சந்தோஷம் :)
அன்புடன் VGK
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்குஅறிமுகங்களைப் படிக்கும்போதே படித்த நினைவு வருகிறது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம். September 9, 2015 at 5:59 AM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
//அறிமுகங்களைப் படிக்கும்போதே படித்த நினைவு வருகிறது. தொடர்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸ்ரீராம்.
கதைகளை இன்னும் நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி. மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குரசித்த வரிகள் ரொம்பவே ரசிக்க வைத்தது ஐயா...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் September 9, 2015 at 7:05 AM
நீக்கு//ரசித்த வரிகள் ரொம்பவே ரசிக்க வைத்தது ஐயா...//
வாங்கோ Mr DD Sir, வணக்கம்.
தங்களின் ரசனைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
கோபு சார் ரசித்த வரிகளைத் தாங்களும் ரசித்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி தனபாலன்.
நீக்குபடிக்கும் ஆவலை மேன் மேலும் தூண்டும் கதைச் சுருக்கங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் திருமதி கீதா மதிவாணன்.
கோபு அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Jayanthi Jaya September 9, 2015 at 9:59 AM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//படிக்கும் ஆவலை மேன் மேலும் தூண்டும் கதைச் சுருக்கங்கள்.//
மிகவும் சந்தோஷம் ஜெயா. :)
//வாழ்த்துக்கள் திருமதி கீதா மதிவாணன்.//
நூலாசிரியர் அவர்கள் சார்பில் தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள் ஜெயா.
//கோபு அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சியும் மிக்க நன்றியும், ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
வருகைக்கும் கோபு சாரின் பதிவால் என் புத்தகத்தை வாசிக்கவிரும்பும் ஆர்வத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி ஜெயந்தி மேடம்.
நீக்குஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். மூலக் கதையை இலாகவமாக மொழி பெயர்த்து அழகிய நடையில் தந்திருக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும், கதைத் தொகுப்புகளை திறனாய்வு செய்து, கதைகளின் முடிவை சொல்லாமல் முடிவு எப்படி இருக்கும் என யோசிக்க வைக்கும் தங்களின் முத்தாய்ப்பான குறிப்புகளுக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவே.நடனசபாபதி September 9, 2015 at 11:34 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். மூலக் கதையை இலாகவமாக மொழி பெயர்த்து அழகிய நடையில் தந்திருக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும், கதைத் தொகுப்புகளை திறனாய்வு செய்து, கதைகளின் முடிவை சொல்லாமல் முடிவு எப்படி இருக்கும் என யோசிக்க வைக்கும் தங்களின் முத்தாய்ப்பான குறிப்புகளுக்கும் வாழ்த்துக்கள்!//
இந்த என் தொடருக்கு தங்களின் அன்பான தினசரி தொடர் வருகைக்கும், உற்சாகமூட்டிடும் உண்மையான பாராட்டுக் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
தங்களின் ’இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்’ பற்றிய தொடரினை இதுவரை வெளியிட்டுள்ள 5 பகுதிகள் வரை மிகவும் சுவாரஸ்யமாகப் படித்து வருகிறேன்.
1965க்குப் பிறகு நடைபெற்ற அனைத்தும் எனக்கு என் பள்ளிக்கால (மிகவும் கசப்பான) அனுபவங்களால் மிக நன்றாகவே தெரியும். அதற்கு வெகுகாலம் முன்பே இந்தப் போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பது தங்களின் கட்டுரைகளால் மட்டுமே என்னால் அறியமுடிந்தது.
ஒருசில சொந்தக் காரணங்களால், 07.07.2015 முதல் நான் வருகைதந்ததாக பின்னூட்டத் தடம் ஏதும் யார் பதிவிலும் பதிக்காமல் இருந்துவந்தும்கூட, என்னால் விரும்பிப் படித்து ரசிக்கப்பட்டுவரும் மிகச்சில சிறந்த பதிவர்களில், தாங்களும் ஒருவர் என்பதைத்தங்களுக்கு இந்த இடத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் தந்துவரும் படைப்புகள் எல்லாமே, மிகவும் பக்குவமான + அழகான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய + முதிர்ச்சியுள்ள + சுலபமாக எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடிய + மிக மிகப் பயனுள்ள கட்டுரைகளாக இருப்பது, எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உள்ளது.
இன்றைய மிகச்சிறந்த + பண்புள்ள எழுத்தாளர்களில் ஒருவராக என் பார்வைக்குப் புலப்படும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், சார்.
அன்புடன் VGK
எனது பதிவுகளுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. என்னை பாராட்டி தாங்கள் சொல்லியுள்ளவை என்னை உற்சக்கப்படுத்தி மென்மேலும் நன்முறையில் பதிவிட தூண்டும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நீக்குவே.நடனசபாபதி September 9, 2015 at 5:30 PM
நீக்குWelcome Sir !
//எனது பதிவுகளுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. என்னை பாராட்டி தாங்கள் சொல்லியுள்ளவை என்னை உற்சாகப்படுத்தி மென்மேலும் நன்முறையில் பதிவிட தூண்டும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.//
Thanks a Lot for your immediate response, Sir.
Best Wishes ! :)
VGK
தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஐயா. கோபு சாரின் அற்புதமான திறனாய்வால் புத்தக அறிமுகம் தங்களைப் போல பலரையும் சென்றடைந்திருப்பதில் அளவிலா மகிழ்ச்சி.
நீக்குவணக்கம் அய்யா,
பதிலளிநீக்குஇந்த தொகுப்பும் அருமை,
முதல் கதை- மூன்று
தங்கள் பகிர்வு நன்று, திருமணம் முடிந்ததும், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ஹாரி உள்பட இவர்கள் நால்வருமே ஓர் கோச்சு வண்டியில் ஏறி ஜாலியாக ஊர் சுற்றிவரக் கிளம்புகிறார்கள். யார் என்பது கீதா அவர்கள் நூலில் தான் படிக்கனுமோ,,,
தாங்கள் சொல்வது சதிதான், வாழ்க்கைத்துணை கடைசிகாலம் வரை தேவை,,,,,,,,, நல்ல புரிதல் உள்ள துணை,,, அருமை,
2 வது கதை-
அவன் ஏன் அப்படிச் செய்தான்?
எதிர்பாராத திருப்பங்களுடன் ,,,,,,, அருமை,
உடும்பு பற்றிய விளக்கம் அருமை,,,,,,,
நல்லா இருக்கும், படிக்கனும்,
பிரம்மி என்றொரு நண்பன்-
திகில் கதைதான் போலும்,
நன்றி மறவா தன்மை,, தங்கள் பகிர்தலும் நல்லா இருக்கு,
இப்போதைக்கு,,, அடுத்து வருகிறேன்.
நன்றி.
mageswari balachandran September 9, 2015 at 2:08 PM
நீக்கு//வணக்கம் ஐயா,//
வாங்கோ மேடம், வணக்கம்.
//இந்த தொகுப்பும் அருமை//
மிக்க மகிழ்ச்சி.
முதல் கதை:- மூன்று வீடுகள் - ஒரு காதல்
//தங்கள் பகிர்வு நன்று//
மிகவும் சந்தோஷம்.
**திருமணம் முடிந்ததும், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ஹாரி உள்பட இவர்கள் நால்வருமே ஓர் கோச்சு வண்டியில் ஏறி ஜாலியாக ஊர் சுற்றிவரக் கிளம்புகிறார்கள்.** - vgk
//யார் என்பது கீதா அவர்கள் நூலில் தான் படிக்கனுமோ...//
அப்படியில்லை. நாமேகூட யூகிக்கலாம்.
யூகிக்க ஒரு சின்ன க்ளூ:
பொதுவாக பசுமாடு ஒன்று வாங்குபவன், கன்றுடன் அதுவும் காளைக்கன்றாக இல்லாமல் கிடாரிக் கன்றுடன் வாங்குவதையே விரும்புவான். :)
இந்தக்கதையில் மேலும் ஓர் அழகான காரணம் திருமதி. கீதா மதிவாணன் அவர்களால் அந்தச் சிறுவன் ’ஹாரி’ மூலம் சொல்லப்படுகிறது. அதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
சிறு பையனான ஹாரி ஒருநாள் தன் தந்தையிடம் கேட்கிறான்:
“அப்பா, நீங்கள் யாரையாவது இதுவரை காதலித்துள்ளீர்களா?” என்று.
இப்படி ஒரு மகன் கேட்டால் ஒரு தந்தையால் அவனுக்கு என்ன பதில் சொல்லமுடியும்?
அவன் கேட்டுள்ள கேள்விக்குப்பின் ஓர் முக்கியமான காரணம் உள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் இவன் தந்தையைக் காதலித்திருக்கக்கூடும் என்பதற்கான ஏதோ வலுவான காரணம் ஒன்றை அவன் கண்டுபிடித்து, தனக்குள் உணர்ந்த பிறகே, தன் தந்தையிடம் அவனால் இது போல ஒரு கேள்வியைக் கேட்க முடிந்துள்ளது.
அதை மட்டும் சொல்லாமல் மீண்டும் ஓர் சஸ்பென்ஸ் கொடுக்கிறேன். :)
>>>>>
VGK to Mrs. Mageswari balachandran (2)
நீக்கு//தாங்கள் சொல்வது சதிதான்,//
’தாங்கள் சொல்வது சதிதான்’ என்றதைப்படித்ததும் ஒரு நிமிடம் நான் பயந்தேபோய் விட்டேன்.
பிறகு யோசித்ததில் .... சரி, சரி .... அது ‘தாங்கள் சொல்வது சரிதான்’ என்று இருக்க வேண்டும் என நானே நினைத்துக்கொண்டேன். :)
எழுத்துப்பிழையாகியுள்ளது போலிருக்கிறது.
ஒரேயொரு எழுத்து தான் ... இருப்பினும் அதுவே ’சதி’ செய்து மாறிப்போய் அந்த வார்த்தையின் பொருளையே அடியோடு மாற்றி சதி செய்து விட்டது பாருங்கோ :)
//வாழ்க்கைத்துணை கடைசிகாலம் வரை தேவை ...... நல்ல புரிதல் உள்ள துணை ..... அருமை.//
’அருமை’ என அருமையாக முடித்துள்ளீர்கள்.
சிலருக்கு வாழ்க்கைத்துணையின் ’அருமை’ அவர்கள் தன்னுடன் இருக்கும்வரை தெரியாமலேயே போய்விடுவதும் உண்டு. இது அவர்களுக்குள் சரியான புரிதல் இல்லாததால்கூட இருக்கலாம்.
வாழ்க்கைத்துணை கடைசிகாலம் வரை தேவை என்பதைவிட, வயதாக வயதாக, In fact, கடைசிகாலம் நெருங்க நெருங்க, இது ஓர் அத்யாவஸ்யத் தேவையாகிவிடுகிறது என்பது என் கருத்து.
வாழ்க்கைத்துணையைத் தவிர வேறு யாரிடம் நாம் நம் பிரச்சனைகளையும், தேவைகளையும், சுக துக்கங்களையும் மனம் விட்டு பகிர்ந்துகொள்ள இயலும்?
>>>>>
VGK to Mrs. Mageswari balachandran (3)
நீக்கு//2 வது கதை-
அவன் ஏன் அப்படிச் செய்தான்?
எதிர்பாராத திருப்பங்களுடன் ,,,,,,, அருமை,
உடும்பு பற்றிய விளக்கம் அருமை,,,,,,,
நல்லா இருக்கும், படிக்கனும்//
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.
-=-=-=-=-
3-வது கதை
பிரம்மி என்றொரு நண்பன்-
திகில் கதைதான் போலும்,
நன்றி மறவா தன்மை,,
தங்கள் பகிர்தலும் நல்லா இருக்கு,//
மிகவும் சந்தோஷம், மேடம்.
//இப்போதைக்கு,,, அடுத்து வருகிறேன். நன்றி.//
இப்போதைக்கு Bye Bye ! :)
அடுத்தடுத்து வாங்கோ. WELCOME !
VGK
விமர்சனங்களை ரசித்துப் படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. மிகவும் நன்றி மகேஸ்வரி.
நீக்குமிகவும் சுவாரஸ்யமான கதையை மிக சுவரஸ்யாமாய் சொன்னது அருமை.. ’கடைசி தரிசனம்’ விமர்சனம் மிக அருமை.
பதிலளிநீக்குகோமதி அரசு September 9, 2015 at 3:10 PM
நீக்குவாங்கோ மேடம். வணக்கம் மேடம்.
//மிகவும் சுவாரஸ்யமான கதைகளை மிக சுவரஸ்யாமாய் சொன்னது அருமை..//
மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.
// ’கடைசி தரிசனம்’ விமர்சனம் மிக அருமை.//
தாங்கள் அடிக்கடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு வருவதால், தங்களுக்கு இந்தக் கதைச் சுருக்கமும் விமர்சனமும் மிக அருமையாகத் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க நன்றி, மேடம். நாளைய நிறைவுப்பகுதிக்கும் தாங்கள் தரிசனம் கொடுத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அன்புடன் VGK
தங்கள் வருகைக்கும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கதைகளில் தங்களை மிகவும் கவர்ந்த கதையைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும் மிகவும் நன்றி கோமதி மேடம்.
நீக்கு
பதிலளிநீக்குபுத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் அழகான விமர்சனத்தை முன்வைத்துள்ள தங்களுக்கு மனமார்ந்த நன்றி கோபு சார். எந்த அளவுக்குக் கதைகளை உள்வாங்கி வாசித்திருக்கிறீர்கள் என்பதை இதன்மூலம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
கதைகளிலிருந்து மேற்கோள் காட்டியுள்ள வரிகள் நானும் ரசித்தவை.. ரோமம் சிரைக்கப்பட்டு பெண்ணாடுகளின் மத்தியில் விடப்பட்ட ஒரு கடாவின் மனநிலையைக் கூடக் கச்சிதமாக சித்தரித்திருக்கும் ஹென்றி லாசனின் எழுத்து என்னைப் போலவே தங்களையும் கவர்ந்திருப்பதில் வியப்பென்ன? மனிதர்களின் குணாதிசயங்களோடு ஆடு, மாடு, சேவல் என்று பல அஃறிணைகளின் மனநிலைகளையும் அவர் ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பது உண்மையில் வியப்பளிக்கும் விஷயம்.
கதைகள் அறிமுகம், கதைமாந்தர் பற்றிய விளக்கம், கதையின் மையக்கரு பற்றிய புரிதல் இவற்றோடு கதை பற்றிய தங்கள் கருத்துகளும் பதிவின் கனம் கூட்டுகின்றன. கூடுதலாய் கதை தொடர்பான தங்களுடைய அனுபவப் பகிர்வுகளையும் கொடுத்திருப்பது சிறப்பு.
இப்படியானதொரு வித்தியாசமான கருத்துரை என்னுடைய நூலுக்கு தங்கள் வாயிலாய்க் கிடைக்கும் என்று நினைத்தும் பார்க்கவில்லை. தங்களுடைய இத்தொடர் பதிவுகள் மூலம் நூலின் அறிமுகம் பலரையும் சென்று சேர்ந்திருப்பது அறிந்து மிகவும் மகிழ்கிறேன். மனம் நிறைந்த நன்றி கோபு சார்.
கீத மஞ்சரி September 9, 2015 at 7:01 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான + விரிவான பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
தாங்கள் சிரமம் பாராமல் இந்தச்சிறிய தொடரின் முதல் பகுதியிலிருந்து ஆரம்பித்து, இன்றுமுதல் பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் மிக உன்னதமான செயலைப் பார்த்து மகிழ்கிறேன். நெகிழ்கிறேன். பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
நூலாசிரியரான தாங்களே வருகைதந்து, இதுபோலச் செய்வது பின்னூட்டமிட்டுள்ள அவர்கள் அனைவருக்குமே, நிச்சயமாக மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் செயலாகத்தான் இருக்கும்.
மீண்டும் நன்றிகள், மேடம். நாளை நிறைவுப்பகுதியில் நாம் மீண்டும் சந்திப்போம். வாழ்க !
பிரியமுள்ள கோபு
எனக்கு அறிமுகமில்லாத பலரையும் தங்களுடைய இப்பதிவுகள் வாயிலாக நூலின் அறிமுகம் சென்று சேர்ந்திருப்பதற்கு தங்களுக்குதான் நான் நன்றி சொல்லவேண்டும். எவ்வளவு நன்றி சொன்னாலும் தங்களுடைய இப்பெருமுயற்சிக்கு ஈடாகாது. எனினும் மனம் நிறைந்த நன்றி கோபு சார்.
நீக்கு’கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்...’ என்ற தலைப்பில் கீதமஞ்சரி வலைத்தளப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் வெளியிட்டுள்ளதோர் பதிவு: http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_8.html
பதிலளிநீக்குஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டும்.
கீதமஞ்சரியின் மொழியாளுமையும் தங்களின் வாசிப்பும் சிலிர்க்க வைக்கின்றது.
பதிலளிநீக்குதனிமரம் September 9, 2015 at 8:43 PM
நீக்குவாங்கோ நேசன் சார், வணக்கம்.
//கீதமஞ்சரியின் மொழியாளுமையும் தங்களின் வாசிப்பும் சிலிர்க்க வைக்கின்றது.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
அன்புடன் VGK
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனிமரம்.
நீக்குஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாக அலசியிருக்கும் விதத்தைப் பார்த்தால் இது புகழுரையாக மட்டும் தெரியவில்லை. ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் திறனாய்வுக் கட்டுரையாக அல்லவா தெரிகிறது? ஒவ்வொரு கதையிலும் ரசித்த வரிகளையும் சுட்டிக்காட்டியிருப்பதன் மூலம் நன்கு ரசித்து வாசித்திருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது. மொழிபெயர்ப்பாளருக்கும் திறனாய்வாளருக்கும் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஞா. கலையரசி September 9, 2015 at 10:39 PM
நீக்குவாங்கோ, வணக்கம் மேடம்.
//ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாக அலசியிருக்கும் விதத்தைப் பார்த்தால் இது புகழுரையாக மட்டும் தெரியவில்லை. ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் திறனாய்வுக் கட்டுரையாக அல்லவா தெரிகிறது? ஒவ்வொரு கதையிலும் ரசித்த வரிகளையும் சுட்டிக்காட்டியிருப்பதன் மூலம் நன்கு ரசித்து வாசித்திருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது. மொழிபெயர்ப்பாளருக்கும் திறனாய்வாளருக்கும் பாராட்டுக்கள்!//
நூலாசிரியரின் மொழிபெயர்ப்புத் திறமையையும், ஓர் ஆய்வு மாணவனாக நூலினை விழுந்து விழுந்துப் படித்து எழுதியுள்ள என் புகழுரையையும், அதில் நான் ரசித்துச் சொல்லியுள்ள சில வரிகளையும் தாங்களும் நன்கு திறனாய்வு செய்து, ஏதேதோ விரிவாக எடுத்துக்கூறி இருவரையும் பாராட்டிச்சிறப்பித்துள்ள தங்களுக்கு, எங்கள் இருவர் சார்பிலும் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
நன்றியுடன் கோபு
உண்மைதான் அக்கா... ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் வண்ணம் ஒரு பெரிய திறனாய்வே செய்து சமர்ப்பித்திருக்கிறார் கோபு சார். சரியாக சொன்னீர்கள். வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அக்கா.
நீக்குஅய்யா, இன்றுதான் தங்கள் பதிவை பார்த்தேன். வேலை காரணமாக சில நாட்கள் வலைப் பக்கம் வர முடியவில்லை. அதற்குள் தங்களின் நான்கு பதிவுகள் வந்துவிட்டன. அதுவும் கீதா மதிவாணன் அவர்களின் 'என்றாவது ஒருநாள்' பற்றிய விமர்சனம் என்றபோது இன்னும் ஆர்வம் கூடுகிறது. எல்லாவற்றையும் பொறுமையாக படித்துவிட்டு மீண்டும் வருகிறேன் அய்யா!
பதிலளிநீக்குS.P. Senthil Kumar September 9, 2015 at 11:00 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம். தங்களின் சமீபத்திய நூல் வெளியீடு பற்றிய செய்திகளும் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
//ஐயா, இன்றுதான் தங்கள் பதிவை பார்த்தேன். வேலை காரணமாக சில நாட்கள் வலைப் பக்கம் வர முடியவில்லை.//
அதனால் பரவாயில்லை.
//அதற்குள் தங்களின் நான்கு பதிவுகள் வந்துவிட்டன. அதுவும் கீதா மதிவாணன் அவர்களின் 'என்றாவது ஒருநாள்' பற்றிய விமர்சனம் என்றபோது இன்னும் ஆர்வம் கூடுகிறது. எல்லாவற்றையும் பொறுமையாக படித்துவிட்டு மீண்டும் வருகிறேன் ஐயா!//
தொடர்ச்சியாக மொத்தம் 5 பகுதிகள் மட்டுமே. நாளையுடன் நிறைவடைய உள்ளது. பொறுமையாகப் படித்துவிட்டு மீண்டும் வாருங்கள். மிக்க நன்றி. - VGK
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி செந்தில்குமார்.
நீக்குமனதை தொட்ட நிகழ்வுகளும் கதாபாத்திரங்களும் .
பதிலளிநீக்குAngelin September 10, 2015 at 10:25 PM
நீக்குவாங்கோ வணக்கம்.
//மனதை தொட்ட நிகழ்வுகளும் கதாபாத்திரங்களும் .//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
அன்புடன் கோபு அண்ணா
ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதைத் தொடும்வண்ணமாகவே சித்தரிக்கப்பட்டிருப்பது மூலக்கதையின் சிறப்பு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.
நீக்குமூன்று வூடுகள ஒரு காதல் ஓ கே கத தா. அடுத்து அவன் ஏன் அப்டி செய்தான் நல்ல கத. பிரம்மி எனும் நண்பன் கதயும ஓ கே
பதிலளிநீக்குமூனு கதைக்கு மேல ஸ்கோரல் பண்ண முடியல மேலும் கீளுமா உருட்டி உருட்டி ஸ்டக் ஆகுது.. இந்த மௌஸ் க் கு மட்டும் வாயிருந்தா என்னம்மா இப்பூடி பண்ரீங்களேம்மானு கதறி கண்ணீர் விட்டு அளுதிருக்கும்.
mru September 13, 2015 at 5:47 PM
நீக்குவாங்கோ முறுக்கு / முருகு / mru
//மூன்று வூடுகள ஒரு காதல் ஓ கே கத தா. அடுத்து அவன் ஏன் அப்டி செய்தான் நல்ல கத. பிரம்மி எனும் நண்பன் கதயும ஓ கே.//
OK .... OK .... OK ....
//மூனு கதைக்கு மேல ஸ்கோரல் பண்ண முடியல மேலும் கீளுமா உருட்டி உருட்டி ஸ்டக் ஆகுது.. இந்த மௌஸ் க் கு மட்டும் வாயிருந்தா என்னம்மா இப்பூடி பண்ரீங்களேம்மானு கதறி கண்ணீர் விட்டு அளுதிருக்கும்.//
பாவம் அந்த மெளஸ் .... அதை வெளியேற்றி விட்டு வேறு புதுசா வாங்கித்தரச்சொல்லுங்க ..... உங்க அண்ணார் அவர்களை. :)
இங்கு விமர்சிக்கப்பட்டுள்ளவை கதைகள் பற்றிய அறிமுகமே.. முழுக்கதையும் வாசித்தால்தான் முழுமையான பரிமாணத்தைப் பெறமுடியும். மௌஸ் நகராத நிலையிலும் முடிந்தவரை வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.
நீக்குதிருமதி. கீதா மதிவாணன் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்புக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅவரது தளத்தில் சில கதைகளைப் படித்து ரசித்திருக்கிறோம்..
இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:30 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்புக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
அவரது தளத்தில் சில கதைகளைப் படித்து ரசித்திருக்கிறோம்..//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
Mail message from ஆச்சி on 09.11.2015 .... 5.52 AM
பதிலளிநீக்குEnnaal comment Box il comment publish kodukka mudiyavillai..so inge therivikiren.
மற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பதில் எள்ளளவும் குறையற்ற Vgk sir,
எழுத்தாற்றல் மிக்க கீதா அவர்களின் மொழி பெயர்ப்பு படைப்பினை தங்களது நடையில் பகிர்ந்தளித்துள்ளீர்கள்.
-=-=-=-=-=-
வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)
தங்களுக்கும் தங்கள் கணவர், குழந்தைகள் இருவருக்கும் + தங்கள் இல்லத்தில் உள்ள மாமியார் போன்ற மற்ற உறவினர்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு