About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, September 10, 2015

’கீதமஞ்சரி’யின் ’என்றாவது ஒரு நாள்’ ...... Part 5 of 5

 ’என்றாவது ஒரு நாள்’ 

 நூல் புகழுரை  

By 
வை. கோபாலகிருஷ்ணன்

பகுதி-5
{ நிறைவுப் பகுதி }

Link for Part 1 of 5

வலைத்தளம்: கீத மஞ்சரி


’என்றாவது ஒரு நாள்’ 
நூலாசிரியர்
 ’விமர்சன வித்தகி’ 
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-03-03-third-prize-winner.html
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html
திருமதி. 
 கீதா மதிவாணன்  
அவர்கள்

-oOo-

’என்றாவது ஒரு நாள்’ நூலிலிருக்கும் 
ஒவ்வொரு தமிழாக்கக் கதையினிலும் 
நான் ரசித்துப்படித்துப் புரிந்துகொண்டவைகளை
ஒருசில வரிகளில் மட்டும் மிகச்சுருக்கமாகப் 
பகிர்ந்துகொண்டு வருகிறேன்.


கதை எண்: 1 to 10 க்கான இணைப்பு: 

கதை எண்: 11 to 20 க்கான இணைப்பு: 

கதை எண்: 21 மற்றும் 22  மட்டும் 
இப்போது இங்கே தொடர்கிறது

21. மேக்வாரியின் நண்பன்

அயோக்யன், தறுதலை, களவாணிப்பயல், பயந்தாங்கொள்ளி, புளுகன், மோசடிப்பேர்வழி என்றெல்லாம் சமூகத்தால் அழைக்கப்படும் வாலிபனான ’மேக்வாரி’ என்கிற கதாபாத்திரத்தின் பெயர் நம்மூர் ’கேப்மாரி’ போல பொருத்தமாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேக்வாரியின் நண்பர் பெயர்: பார்கோ - இவன் முரட்டு தேகத்துடனான சற்றே கிழவனாவான். 

அந்தக்காலத்தில் 1965-1975 முரட்டு எஞ்ஜின்களுடன் கூடிய கனரக வாகனங்களில் [Bus + Lorry] லேலண்ட், பென்ஸ், பார்கோ என்ற மூன்றும் மிகப் பிரபலமாக இருந்தன. அதுபோலவே முரட்டு தேகத்துடனான இவனுக்கும் பார்கோ என்ற பெயர் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளதாக நான் நினைத்துக்கொண்டேன்.

மேக்வாரி + பார்கோ என்ற இரு பெரும்குடிகாரர்களான பேட்டை ரெளடிகளின் நெருங்கிய நட்பினை உணர்த்தும் கதையாக உள்ளது. 

சிறிது காலமாக யார் கண்களிலும் படாமல் உள்ள தன் நண்பன் ‘மேக்வாரி’ ஐ நீண்ட நாட்களாகக் காணுமே என பிறர் இவன் காதுபட பேசிக்கொள்ளும்போது, அவன் இறந்து போய்விட்டதாக மற்றவர்களிடம் ‘பார்கோ’ அறிவிக்கிறான். 

மேலும், ’யாரையும் அவர்கள் இல்லாதபோது, முதுகுக்குப்பின்னால் புறணி பேசும் வழக்கம் கூடாது’ என்று முழு போதையிலும் பார்கோ பிறருக்கு உபதேசம் செய்கிறான். இந்த இடம் படிக்க நல்ல நகைச்சுவையாகவும் யோசிக்க வைப்பதாகவும் உள்ளது. 

இறந்து போனதாக பார்கோவால் அறிவிக்கப்பட்ட அதே ’மேக்வாரி’ கதையின் கடைசியில் உயிருடன் வருவது, கதையில் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.

பிறகு என்ன நடந்தது? நூலில் பார்த்துப் படித்து அறியவும்.
22. பொறுப்பிலிகள்

அவள் தன் வீட்டில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவன் வருகிறான். 

தன் வயிற்றில் அவன் வாரிசு உருவாகியுள்ளதாகச் சொல்லி மகிழ்கிறாள். அவளை மட்டும் விரும்பி அனுபவித்த அவன், ஏனோ அதனை ஏற்க மட்டும் விரும்பாமல் இருக்கிறான். 

”உடனே எங்காவாது இதில் எக்ஸ்பர்ட் ஆன பெண்மணிகள் யாரிடமாவது சென்று கலைத்து விடுவது தானே” என்கிறான். 

”என்னிடம் கையில் காசு ஏதும் இல்லை. அதனால் அதற்கும் வழியில்லை .... நீ எனக்குத் துணையாக இருப்பின் நான் அதனைப் பெற்றுக்கொள்கிறேனே ... ஆசையுடன் அழகாக பொறுப்புடன் வளர்க்கிறேனே ... பிற்காலத்தில் அது உன் பெயரைச் சொல்லுமே ... உனக்கு என்றும் ஆதரவாக இருக்குமே” என்கிறாள் அவள்.

இதைக்கேட்டவன் தர்ம சங்கடத்துடன், அவளை அழைத்துக்கொண்டு வெளியே எங்கோ நடைப்பயிற்சிக்குச் செல்ல விரும்புகிறான்.

”இந்த நிலைமையில் நான் எப்படி வெளியே வர முடியும்?, என்னைப்பலரும் பார்க்கக்கூடுமே” என முதலில் மறுக்கிறாள் அவள். இருப்பினும் அவனின் வற்புறுத்தலுக்குப்பின் அவனுடன் வெளியே புறப்பட்டுச்செல்கிறாள்.  

வழக்கம்போல அவனுடன் வேகமாக நடக்கவும், உயரமான பாதைகளில் ஏறி அவனுக்கு ஈடாக பின் தொடரவும், தன்னுடைய தற்போதைய உடல் நிலைமை அசெளகர்யமாக இருப்பதாகச் சொல்லி அவனையும் உணர வைக்கிறாள்.

பிறகு அவளை, அவளின் வீட்டில் அவன் பத்திரமாகக் கொண்டுபோய் விடும்போது, ஒரு கணிசமான தொகையை அவளிடம் செலவுக்காகக் கொடுக்கிறான். அவளிடம் அவன் பிறக்கவுள்ள குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளைச் சொல்லி புரிய வைக்கிறான். மேலும் அவளுடன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறான். 

அவளும் அதுபோலவே மனம் விட்டுப்பேசும் போது, ”தன் வயிற்றில் வளரும் கரு நிச்சயமாக ’__ண்’ குழந்தையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது” என அவனிடம் சொல்கிறாள். அவள் இதுபோலச் சொல்லியதில், அவனுக்கு ஓர் மன நிறைவு ஏற்பட்டு, அவன் மனதையே அடியோடு மாற்றி விடுகிறது. 

ஓரிரு நாட்களில் திரும்ப வந்து அவளை அழைத்துச் செல்வதாகவும், அதன் பிறகு அவள் தன்னுடனேயே தன் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி இருக்கலாம் என்றும், கர்பிணியான அவள் இனி தையல் வேலைகள் செய்து தவித்துக்கொண்டு, தனித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். 

மேலும் தான் அப்படிப்பட்டவன் அல்ல” என்று தன்னைப்பற்றி அவளிடம் உயர்வாகச் சொல்லியும் செல்கிறான். அவன் அன்புடன் தந்த பணத்தைப்பெற்றுக்கொண்ட அவளும் அவனின் நல்ல முடிவினையும், திடீர் மனமாற்றத்தையும் கண்டு மகிழ்ச்சியடைகிறாள். 

கருவுற்ற ஒரு பெண்ணின் அன்புடன் கூடிய ஓர் மிகச்சிறிய வார்த்தை ‘பொறுப்பிலிகளாக’ இதுவரை இருந்துள்ள இவர்களை எப்படிப் ’பொறுப்பானவர்களாக’ மாற்றியுள்ளது என்பதை நீங்களே படித்துத் தெரிந்து கொண்டால்தான் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கக்கூடும். :) 

அப்படியே நம் உசிலம்பட்டி போன்ற ஊர்க்காரர்களுக்கும் இதனை எடுத்துச்சொல்ல வசதியாக இருக்கும்.என் மூச்சும் பேச்சும்
என்றென்றும் தமிழமுதே!
என் எழுதுகோல் பீச்சும்
எண்ணத்தின் வீச்சுமதுவே!
   
- கீதமஞ்சரி
http://geethamanjari.blogspot.in/


ஹென்றி லாஸன் என்பவர், ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மிகச்சிறந்த எழுத்தாளராக இருந்திருக்கலாம். அவர் சொல்லியுள்ள கதைகளும் கருத்துக்களும் அன்றைய காலக்கட்டத்தில், தண்டனைபெற்று வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்து அன்றாடம் தங்களின் வாழ்வாதாரத்திற்கே போராடிய ஏழை மக்களின் சோதனை + வேதனை மிக்க வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம். 


இருப்பினும் அந்த ’ஹென்றி லாஸன்’ அவர்களைப்பற்றி, நாம் இன்று ஓரளவுக்காவது அறிய, கொஞ்சும் தமிழில், தனக்கே உரித்தான தனி நடையில், வெகு அழகாகவும், மிக நேர்த்தியாகவும் மொழியாக்கம் செய்துள்ள திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் கடுமையான உழைப்பினை நாம் பாராட்டியே தீரவேண்டும்.
  

என்னைப்பொறுத்தவரை இதனைத் தமிழாக்கம் செய்து ஜூஸ் போல நமக்குப் பருகவும், படிக்கவும் கொடுத்துள்ள நம் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற நூலை மட்டும் நான் பார்க்காமலும் படிக்காமலும் இருந்திருந்தால் ’ஹென்றி லாஸன்’ என்ற பிரபலமானதோர் எழுத்தாளரைப்பற்றி நான் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


திருமதி. கீதா மதிவாணன் அவர்களைப்பற்றி ஏற்கனவே தெரிந்துள்ள + இதுவரை தெரிந்துகொள்ள வாய்ப்பு அமையாத தமிழ் எழுத்தாளர்களும், வாசகர்களும், தமிழ் வலையுலகப் பதிவர்களும் அவசியமாகப் படித்து ரஸிக்க வேண்டிய நூல் இது. 


எந்தக்காலத்திலோ,  யார் யார் வாழ்க்கையிலோ நடந்த சம்பவங்களை யாரோ ஒருவர் எழுதியிருப்பினும், அதற்கு தன் தனித்திறமைகளால் தமிழில் உயிரூட்டம் கொடுத்து, சுவை சேர்த்து, நமக்காகவே ருசியாகச் சமைத்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பரிமாறியுள்ளார்கள் திருமதி. கீதா அவர்கள். 


ஹென்றி லாஸன் அவர்களால் சொல்லியிருக்கக்கூடிய மூலக் கதைகளைவிட, இவர்களின் தமிழ் எழுத்து நடையில் நிறைய சுவாரஸ்யங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். இவர்களின் தனித்திறமைகள் வாய்ந்த தமிழ் எழுத்துக்களுக்காகவே அனைவரும் இந்த நூலினை வாங்கிப் படித்து மகிழலாம் என்பதை எனது தனிப்பட்ட கருத்தாகப் பதிவு செய்துகொள்கிறேன். 


இது இவர்களின் முதல் நூல் வெளியீடாகும். முதல் நூலே வெற்றிகரமாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கதாகும். இந்த தன் நூல் வெற்றிகரமாக அமையவேண்டி இவர்கள் மேற்கொண்டுள்ள சிரத்தையான கடும் உழைப்புகள் பற்றி இவர்களே தன் நூலில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ளார்கள். இந்த நூல் வெளியீட்டால் இவர்களுக்கு பல்வேறு புதிய உலக அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்பதில் எனக்கொன்றும் சந்தேகமே இல்லை. அந்த அரிய பெரிய அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு, இவர்களின் பொறுமைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், தனித்தன்மைகளுக்கும், தமிழ் எழுத்தினிலுள்ள தனித்திறமைகளுக்கும், ஆண்டுக்கு ஒன்று வீதம் மேலும் பல நூல்கள் இவர்கள் வெளியிட முயற்சிக்கலாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


பல்வேறு காரணங்களால், சற்றே தாமதமானாலும், இந்த நூலை நான் பொறுமையாகவும், முழுமையாகவும், நன்கு புரிந்துகொண்டும், ஒவ்வொரு வரிகளையும் மனதில் ஏற்றிக்கொண்டும் படித்து முடித்து, இதுபோல விரிவாகக் புகழுரை வழங்க எனக்கு வாய்ப்பளித்த ’கீதமஞ்சரி’ வலைத்தளப் பதிவர், திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


’என்றாவது ஒருநாள்’

(மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய 
காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்) 

மூல ஆசிரியர் :– ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா) 

தமிழில் :– கீதா மதிவாணன்  

பதிப்பகம்: அகநாழிகை  
விலை – ரூ.150/-  
(அட்டைகள் நீங்கலாக 160 பக்கங்கள்)
கிடைக்குமிடம்: 
அகநாழிகை புத்தக உலகம், 
390, அண்ணா சாலை, 
KTS complex, 
சைதாப்பேட்டை, 
சென்னை - 600015.
To Contact Mobile: 9994541010

30.09.2015 தேதியிட்ட திருச்சி-தினமலர்-தினசரி 
நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி !

'கீத மஞ்சரி’  திருமதி.  கீதா மதிவாணன் அவர்களின்  ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் வந்த ‘சீனத்தவனின் ஆவி’ என்ற சிறுகதை ஒலிவாகனம் ஏறி கலை வலம் வந்துள்ளது.
இன்று 22.1.17 இரவு 8.00 - 9.00 மணி வரை நடைபெறும் SBS அரசு ஊடக வானொலியில், சுமார் 73 மொழிகளில் ஒலிபரப்பு நடைபெறுகிறது.
அந்த ஒலி வடிவத்தை நீங்களும் கீழ்வரும் இணைப்பினில் சென்று கேட்கலாம்.
கதை வடிவம்: கீதா.மதிவாணன்.
ஒலிவடிவம்: பாலசிங்கம். பிரபாகரன்.
நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா.துரைசிங்கம்
நிகழ்ச்சி மேலாளர்: ரேமண்ட். செல்வராஜ் (றைசெல்)


’என்றாவது ஒரு நாள்’

 மீண்டும் நாம் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும் வரை 
தங்களிடமிருந்து விடைபெறுவது


 தங்கள்  அன்புள்ள

[ வை. கோபாலகிருஷ்ணன் ]

66 comments:

 1. சகோவுக்கு எமது வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. KILLERGEE Devakottai September 10, 2015 at 12:07 AM

   //சகோவுக்கு எமது வாழ்த்துகள்//

   மிக்க நன்றி.

   Delete
  2. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றிங்க கில்லர்ஜி.

   Delete
 2. நூலினை வாங்கிப்படிக்க வேண்டிய ஆவலைத்தந்தது உங்களுடைய புகழுரை ஐயா.தொடர் பகிர்வுக்கு நன்றி ஓய்வு முடிந்து விரைவில் வலைப்பக்கம் வாங்க கோபுசார்.

  ReplyDelete
  Replies
  1. தனிமரம் September 10, 2015 at 3:02 AM

   வாங்கோ சார், வணக்கம்.

   //நூலினை வாங்கிப்படிக்க வேண்டிய ஆவலைத்தந்தது உங்களுடைய புகழுரை ஐயா. தொடர் பகிர்வுக்கு நன்றி //

   மிக்க மகிழ்ச்சி. :)

   //ஓய்வு முடிந்து விரைவில் வலைப்பக்கம் வாங்க கோபு சார்.//

   மிகவும் சந்தோஷம். முயற்சிக்கிறேன்.

   இந்தத்தொடரின் அனைத்து ஐந்து பகுதிகளுக்கும் (100%) அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள தங்களுக்கு வழக்கமான என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளுடன் கூடுதல் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ! :)

   அன்புடன் VGK

   Delete
  2. வருகைக்கும் நூலினை வாசிக்கும் ஆர்வத்துக்கும் மிகவும் நன்றி தனிமரம்.

   Delete
 3. திருமதி கீதா மதிவாணன் அவர்களின் உழைப்பிற்கும் திரு வைகோ அவர்களின் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி September 10, 2015 at 3:35 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //திருமதி கீதா மதிவாணன் அவர்களின் உழைப்பிற்கும் திரு வைகோ அவர்களின் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   இந்தத்தொடரின் அனைத்து ஐந்து பகுதிகளுக்கும் (100%) அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள தங்களுக்கு வழக்கமான என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளுடன் கூடுதல் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ! :)

   என்றும் அன்புடன் VGK

   Delete
  2. என்னுடைய உழைப்புக்கு நிகராக தன் உழைப்பை செலவழித்த கோபு சாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 4. மிக அருமையாக இந்த 5 பதிவுகளதங்களுக்கே உரிய பாணியில் திருமதிகீதாமதிவாணன் அவர்களை புகழ்ந்துசிறப்பித்த விதம் பாராட்டுக்குறியது

  ReplyDelete
  Replies
  1. Sundaresan Gangadharan September 10, 2015 at 5:50 AM

   வாங்கோ, சுந்தர். தங்களின் அபூர்வ வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. :)

   //மிக அருமையாக இந்த 5 பதிவுகளைத் தங்களுக்கே உரிய பாணியில் திருமதி. கீதாமதிவாணன் அவர்களை புகழ்ந்து சிறப்பித்த விதம் பாராட்டுக்குரியது.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சுந்தர் !

   அன்புடன் கோபு

   Delete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 5. மேக்வாரி - கேப்மாரி! ஹா...ஹா...ஹா..

  பென்ஸ் பஸ், மற்றும் ஒரு ஃபர்கோ பஸ் அந்தக் காலத்தில் தஞ்சையில் வரும். அவற்றில் ஏறித்தான் பள்ளி செல்வோம்! பென்ஸ் என்னுது என்பான் என் அண்ணன், எனவே ஆப்ஷனே இல்லாமல் ஃபர்கோ என்னுது! அது ஒரு விளையாட்டு!

  இரண்டாவது கதை பாஸிட்டிவ் எனர்ஜி தரும் கதை.

  திருமதி கீதா மதிவாணனுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். September 10, 2015 at 6:18 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //மேக்வாரி - கேப்மாரி! ஹா...ஹா...ஹா.. //

   :) இதனை குறிப்பாக ரஸித்துச் சொல்லியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். :)

   //பென்ஸ் பஸ், மற்றும் ஒரு ஃபர்கோ பஸ் அந்தக் காலத்தில் தஞ்சையில் வரும். அவற்றில் ஏறித்தான் பள்ளி செல்வோம்! பென்ஸ் என்னுது என்பான் என் அண்ணன், எனவே ஆப்ஷனே இல்லாமல் ஃபர்கோ என்னுது! அது ஒரு விளையாட்டு!//

   1968-1970 காலக்கட்டத்தில் நான் ஒரு மிகப்பெரிய முரட்டு ஆட்டோமொபைல்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன்.

   அதனால் Leyland, Benz, Fargo Engines + வண்டிகள் + உதிரி பாகங்கள் அனைத்தையும் பற்றி எனக்கு இப்போதும் அத்துப்படி.

   அவற்றின் எஞ்சின்களில் பிஸ்டன்ஸ், கிராங்க் ஷாப்ட், சிலிண்டர் ஹெட் என்பவை மிகமுக்கியமான விலை அதிகமான பாகங்களாகும். ஒவ்வொரு வண்டிக்கும் இவை அளவிலும் விலையிலும் வேறுபடும். ஒன்றுக்கு ஒன்று சேராது.

   ஒருமுறை 1969இல் நாங்கள் லேலண்டு எஞ்சினுக்காக இம்போர்ட் செய்து வைத்திருந்த கிராங்க் ஷாப்ட்டை வாங்க ஒரு கஸ்டமர் வந்திருந்தார். அதில் பெண்டு ஏதும் இருக்கா இல்லையா என செக்-அப் செய்ய அந்தக் கஸ்டமருடன் திருச்சியிலிருந்து சேலத்திற்கு காரில் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டேன்.

   பெண்டு செக்-அப் செய்யும் வசதி அப்போது அங்கு சேலத்தில் மட்டும்தான் இருந்தது. என் முன்னிலையிலேயே அதன் மேல் தேன் கலரில் பூசப்பட்டிருந்த ஆடையை தோலிருத்து விட்டு, பிறகு அதனை ஓர் பிரத்யேக மெஷினில் மாட்டி, பால் போல எதையோ ஒரு திரவத்தை வழியவிட்டு, ஓடவிட்டு சோதனை செய்தார்கள். அதில் எப்படியும் Very Few Percent Bend இருக்கத்தான் இருக்குமாம். அதற்குள் இருந்ததால் OK ஆகிவிட்டது. கஸ்டமர் பணத்தை என்னிடம் கொடுத்து, பஸ் ஏற்றி என்னைத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.

   அப்போது அந்த லேலண்ட் எஞ்சின் கிராங்க் ஷாப்ட் விலை ரூ. 8000 என எனக்கு ஞாபகம். இப்போது ரூ. 80000 ஆககூட இருக்கக்கூடும்.

   இப்போ லேலண்ட் + பென்ஸ் வண்டிகள் ஓடிக்கொண்டு இருந்தும் ஏனோ ஃபர்கோ வண்டிகள் என் கண்களில் அதிகமாகப் படக்காணோம்.

   தங்கள் பள்ளிக்கால ஃபர்கோ வண்டிப்பயண அனுபவம் கேட்டதில் எனக்கு மகிழ்ச்சியே.

   //இரண்டாவது கதை பாஸிட்டிவ் எனர்ஜி தரும் கதை.//

   ஆமாம். ஸூப்பர் ஸ்டோரி .... ஜில்லென்று ஒரு நல்ல கதைக்கரு.

   கூடவே அந்தக்‘கரு’ கதைக்கு மட்டுமல்லாமல் + அந்த நம் கதாநாயகியின் வயிற்றுக்குள்ளும் கூட :))))) இனிமையே !

   //திருமதி கீதா மதிவாணனுக்குப் பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   இந்த என் தொடரின் அனைத்து ஐந்து பகுதிகளுக்கும் {100%} அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள தங்களுக்கு வழக்கமான என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளுடன் கூடுதல் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ! :)

   அன்புடன் VGK

   Delete
  2. மேக்வாரி - கேப்மாரி சொல்லாடலை நானும் ரசித்தேன். வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete

 6. இரு கதைகளுமே அருமை. ஒரு அன்பான சொல் எப்படி பொறுப்பிலிகளை பொறுப்புள்ளவர்களாக மாற்றும் என்பதை சொல்லும் அந்த கடைசி கதை மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!


  //இதனைத் தமிழாக்கம் செய்து ஜூஸ் போல நமக்குப் பருகவும், படிக்கவும் கொடுத்துள்ள நம் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின்//

  திருமதி கீதா மதிவாணன் அவர்கள் திரு ஹென்றி லாஸன் அவர்களின் கதைகளை தமிழாக்கம் செய்து பழச்சாறு போல் கொடுத்திருக்கிறார் என்றால் நீங்கள் அந்த சாறை வில்லைகளாக (Tablet) மாற்றி விரைவாக நுகர (Consume) உதவியிருக்கிறீர்கள்.

  கதை எழுதுவதே கடினம். அதுவும் இன்னொரு மொழியில் எழுதியதை அதனுடைய மூலக்கரு சிதையாமல் அருமையாய் மொழியாக்கம் செய்ததன் மூலம் ஒரு நல்ல அயல் நாட்டு எழுத்தாளரை தனது சுவாரசியமான எழுத்தின் வடிவில் அறிமுகப்படுத்தியதற்கு முதலில் திருமதி கீதா மதிவாணன்.அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!

  கதைத் தொகுப்பை திறனாய்வு செய்து, சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது எல்லாவற்றையும் விட கடினமானது. அதை திறம்படச்செய்த தங்காலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி September 10, 2015 at 8:07 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //இரு கதைகளுமே அருமை.//

   மிக்க மகிழ்ச்சி.

   //ஒரு அன்பான சொல் எப்படி பொறுப்பிலிகளை பொறுப்புள்ளவர்களாக மாற்றும் என்பதை சொல்லும் அந்த கடைசி கதை மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி! //

   எனக்கும் அந்தக்கதை மிகவும் பிடித்திருந்தது.

   நான் முதல்முறை படித்தபோது சற்றே புரியாமல் தவித்தேன்.

   கதையில் உள்ள அந்தக்’கரு’ எனக்குப் புரிபடாமலும், கண்ணுக்குத் தென்படாமலும் இருந்தது.

   பிறகு ஸ்கேன் செய்து பார்த்தேன். :) [மீண்டும் படித்தேன்] அதன் பின்புதான் அழகான கரு அங்கு உருவாகியிருப்பதை உணர்ந்தேன். :) மகிழ்ந்தேன்.

   >>>>>

   Delete
  2. VGK >>>>> திரு. வே.நடனசபாபதி சார் (2)

   //திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் திரு ஹென்றி லாஸன் அவர்களின் கதைகளை தமிழாக்கம் செய்து பழச்சாறு போல் கொடுத்திருக்கிறார் என்றால் நீங்கள் அந்த சாறை வில்லைகளாக (Tablet) மாற்றி விரைவாக நுகர (Consume) உதவியிருக்கிறீர்கள். //

   ஆஹா, இன்றைய இந்த நம் அவசர உலகில் பழத்தை உரித்துச் சாப்பிட நேரமில்லாமல் ஜூஸாக சிலரும் அதுவும் முடியாமல் வில்லைகளாக முழுங்கிப் பலரும் வாழ்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை இனிப்பாக தேன் தடவிய டாப்லெட் ஆக அளித்துள்ளீர்கள். மிகவும் ரஸித்தேன். மிக்க நன்றி, சார்.

   >>>>>

   Delete
  3. VGK >>>>> திரு. வே.நடனசபாபதி சார் (3)

   //கதை எழுதுவதே கடினம். அதுவும் இன்னொரு மொழியில் எழுதியதை அதனுடைய மூலக்கரு சிதையாமல் அருமையாய் மொழியாக்கம் செய்ததன் மூலம் ஒரு நல்ல அயல் நாட்டு எழுத்தாளரை தனது சுவாரசியமான எழுத்தின் வடிவில் அறிமுகப்படுத்தியதற்கு முதலில் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சார். தங்களுடன் சேர்ந்து நானும் மீண்டும் ஒருமுறை நூலாசிரியர் அவர்களைப் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.

   //கதைத் தொகுப்பை திறனாய்வு செய்து, சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது எல்லாவற்றையும் விட கடினமானது. அதை திறம்படச்செய்த தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள்! //

   ரொம்ப ரொம்ப சந்தோஷம், சார். :)

   இந்த என் தொடரின் அனைத்து ஐந்து பகுதிகளுக்கும் {100%} அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள தங்களுக்கு வழக்கமான என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளுடன் கூடுதல் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ! :)

   அன்புடன் VGK

   Delete
  4. தங்களது ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் பாராட்டுகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.

   Delete
 7. ‘தங்களை’ என்பது தட்டச்சும்போது தங்காலை என வந்துவிட்டது பிழையை பொறுத்தருள்க.

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி September 10, 2015 at 8:09 AM

   //‘தங்களை’ என்பது தட்டச்சும்போது ’தங்காலை’ என வந்துவிட்டது. பிழையை பொறுத்தருள்க.//

   ‘தங்களை’ என்பதைத் தாங்கள் தட்டச்சும்போது ’தங்காலை’ என அதுவே பிழையாக விழுந்து, தங்கள் காலை வாரி விட்டுவிட்டிருக்குமோ என்னவோ, சார் :)

   இதெல்லாம் மிகவும் சகஜம்தானே சார்.

   OK Sir. No problem, Sir. - vgk

   Delete
 8. //அயோக்யன், தறுதலை, களவாணிப்பயல், பயந்தாங்கொள்ளி, புளுகன், மோசடிப்பேர்வழி என்றெல்லாம் சமூகத்தால் அழைக்கப்படும் வாலிபனான ’மேக்வாரி’ என்கிற கதாபாத்திரத்தின் பெயர் நம்மூர் ’கேப்மாரி’ போல பொருத்தமாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. //

  ஹ ஹ ஹ ஹா அருமை

  //திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற நூலை மட்டும் நான் பார்க்காமலும் படிக்காமலும் இருந்திருந்தால் ’ஹென்றி லாஸன்’ என்ற பிரபலமானதோர் எழுத்தாளரைப்பற்றி நான் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.//

  நீங்க மட்டுமா நாங்களும் தான்

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 10, 2015 at 12:13 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   **அயோக்யன், தறுதலை, களவாணிப்பயல், பயந்தாங்கொள்ளி, புளுகன், மோசடிப்பேர்வழி என்றெல்லாம் சமூகத்தால் அழைக்கப்படும் வாலிபனான ’மேக்வாரி’ என்கிற கதாபாத்திரத்தின் பெயர் நம்மூர் ’கேப்மாரி’ போல பொருத்தமாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.**

   //ஹ ஹ ஹ ஹா அருமை//

   என்னே ஒரு அருமையான ரசனை, என்னைப்போலவே :)

   **திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற நூலை மட்டும் நான் பார்க்காமலும் படிக்காமலும் இருந்திருந்தால் ’ஹென்றி லாஸன்’ என்ற பிரபலமானதோர் எழுத்தாளரைப்பற்றி நான் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.**

   //நீங்க மட்டுமா நாங்களும் தான்//

   ஓஹோ!!!!!

   ”நீயும் பொம்மை .... நானும் பொம்மை .... நினைச்சுப்பார்த்தா எல்லாம் பொம்மை”

   பாட்டுப்போலவே உள்ளது, நீங்க இப்படிச் சொல்வது. :)

   >>>>>

   Delete
  2. மேக்வாரி - கேப்மாரி சொல்லாடலை உங்களைப் போலவே நானும் ரசித்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி மேடம்.

   Delete
 9. //தமிழ் எழுத்தினிலுள்ள தனித்திறமைகளுக்கும், ஆண்டுக்கு ஒன்று வீதம் மேலும் பல நூல்கள் இவர்கள் வெளியிட முயற்சிக்கலாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//

  அதே அதே சபாபதே

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 10, 2015 at 12:14 PM

   **தமிழ் எழுத்தினிலுள்ள தனித்திறமைகளுக்கும், ஆண்டுக்கு ஒன்று வீதம் மேலும் பல நூல்கள் இவர்கள் வெளியிட முயற்சிக்கலாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.**

   //அதே அதே சபாபதே//

   அதிரா ..... ஓடியாங்கோ ..... ஓடியாங்கோ. எனக்கும் மஞ்சுவுக்கும் மட்டும் இருந்துவந்த கொப்பி வலது (Copy Right) யை இவங்க ... அதான் உங்க ‘ஜெ’ மாமி இங்கே உபயோகித்துட்டாங்கோ.

   இது நியாயமான்னு கேளுங்கோ. :)

   Delete
  2. இத்தனைப் பேரின் ஊக்கமும் இருக்கும்போது எனக்கென்ன கவலை? உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி மேடம்.

   Delete
  3. அஸ்க், புஸ்க் இது (அதே அதே சபாபதே) நாங்க இந்த மஞ்சுப் பொண்ணு பிறக்கறதுக்கு முன்னாடி இருந்தே உபயோகிச்சுக்கிட்டிருக்கோம். அதிரா கேட்டுக்கோடி அம்மா நியாயத்தை.

   Delete
  4. Jayanthi Jaya September 20, 2015 at 4:15 PM

   //அஸ்க், புஸ்க் இது (அதே அதே சபாபதே) நாங்க இந்த மஞ்சுப் பொண்ணு பிறக்கறதுக்கு முன்னாடி இருந்தே உபயோகிச்சுக்கிட்டிருக்கோம். அதிரா கேட்டுக்கோடி அம்மா நியாயத்தை.//

   ’தேங்காய் ஸ்ரீனிவாஸன்’ என்ற நகைச்சுவை நடிகர் “காசே தான் கடவுளடா” என்ற படத்தில் இந்த ‘அதே அதே சபாபதே’ என்பதைச்சொல்லி பிரபலமாக்கிவிட்டார். நான் விழுந்துவிழுந்து சிரித்த மிகச்சிறப்பானதோர் படம் அது.

   எனவே, நாம் அனைவருமே இதனை நமக்குள் உபயோகிக்கலாம்தான். தவறேதும் இல்லை. :)

   சும்மா ஒரு ஜாலிக்குத்தான் ’அதிரா’ வை நடுவில் நியாயம் சொல்ல அழைத்திருந்தேன். :)

   பிரியமுள்ள கோபு

   Delete
 10. //பல்வேறு காரணங்களால், சற்றே தாமதமானாலும், இந்த நூலை நான் பொறுமையாகவும், முழுமையாகவும், நன்கு புரிந்துகொண்டும், ஒவ்வொரு வரிகளையும் மனதில் ஏற்றிக்கொண்டும் படித்து முடித்து, இதுபோல விரிவாகக் புகழுரை வழங்க எனக்கு வாய்ப்பளித்த ’கீதமஞ்சரி’ வலைத்தளப் பதிவர், திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். //

  கோபு அண்ணா,
  உங்களுக்கும், திருமதி கீதா மதிவாணனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றியும்

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 10, 2015 at 12:15 PM


   **பல்வேறு காரணங்களால், சற்றே தாமதமானாலும், இந்த நூலை நான் பொறுமையாகவும், முழுமையாகவும், நன்கு புரிந்துகொண்டும், ஒவ்வொரு வரிகளையும் மனதில் ஏற்றிக்கொண்டும் படித்து முடித்து, இதுபோல விரிவாகக் புகழுரை வழங்க எனக்கு வாய்ப்பளித்த ’கீதமஞ்சரி’ வலைத்தளப் பதிவர், திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.**

   //கோபு அண்ணா, உங்களுக்கும், திருமதி கீதா மதிவாணனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றியும்//

   மிக்க மகிழ்ச்சி, ஜெயா. மும்முறை வருகை தந்து முக்கனிகள் போல கருத்தளித்து மகிழ்வித்துள்ளீர்கள்.

   இந்த என் தொடரின் அனைத்து ஐந்து பகுதிகளுக்கும் {100%} அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள தங்களுக்கு வழக்கமான, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளுடன் கூடுதல் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ! :)

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
  2. தொடர்ந்து வந்து பல கருத்துரைகளால் சிறப்பித்த தங்களுக்கு மிகவும் நன்றி மேடம்.

   Delete
 11. வணக்கம் அய்யா,
  இரண்டு கதைகளும் அருமை,
  கடைசி கதை நல்ல விசயம், மனம் மாறிய அவன் பொறுப்பான மனிதனாக மாற்ற அன்பான வார்த்தைகள்,,,
  நல்ல தமிழாக்கம் அய்யா, அதனை தாங்கள் எமக்கு தந்ததற்கு நன்றிகள்.
  தாங்கள் கடைசியில் சொன்னது போல் ஒரு நல்ல எழுத்தாளரை திருமதி கீதா மதிவாணன் அவர்கள் நமக்கு அறிமுகம் செய்துள்ளார்.
  வாழ்த்துக்கள் அவருக்கு,
  தங்களுக்கு நன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran September 10, 2015 at 12:24 PM

   //வணக்கம் ஐயா,//

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இரண்டு கதைகளும் அருமை, கடைசி கதை நல்ல விசயம், மனம் மாறிய அவன் பொறுப்பான மனிதனாக மாற்ற அன்பான வார்த்தைகள்,,,//

   மிக்க மகிழ்ச்சி. ஆம், அந்தக்கதை சொல்வது மிகவும் நல்ல விஷயமே.

   //நல்ல தமிழாக்கம் ஐயா, அதனை தாங்கள் எமக்கு தந்ததற்கு நன்றிகள்.//

   மிகவும் சந்தோஷம்.

   //தாங்கள் கடைசியில் சொன்னது போல் ஒரு நல்ல எழுத்தாளரை திருமதி கீதா மதிவாணன் அவர்கள் நமக்கு அறிமுகம் செய்துள்ளார்.//

   ஆமாம். மிகச்சரியாகவே தாங்கள் ஒத்துக்கொண்டு சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி. :)

   //வாழ்த்துகள் அவருக்கு, தங்களுக்கு நன்றி சார்.//

   :))))) மிக்க மகிழ்ச்சி + நன்றி.

   இந்த என் தொடரின் அனைத்து ஐந்து பகுதிகளுக்கும் {100%} அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள தங்களுக்கு, வழக்கமான என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளுடன் கூடுதல் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ! :)

   அன்புடன் VGK

   Delete
  2. வருகைக்கும் கதைச்சுருக்கங்களை ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி.

   Delete
 12. மணிராஜ் அவரகளே வருகையை உறுதி செய்து விட்டார்கள்...

  நீங்கள்...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் September 10, 2015 at 2:15 PM

   வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.

   //மணிராஜ் அவர்களே வருகையை உறுதி செய்து விட்டார்கள்...//

   ஆச்சர்யம்! .... வியப்பு!! .... அதிசயம்!!! .... தங்களின் இதுபோன்ற விசித்திரமான தகவலுக்கு மிக்க நன்றி.

   //நீங்கள்...//

   ??????????

   Delete
 13. மணிராஜ் அவரகளே வருகையை உறுதி செய்து விட்டார்கள்...

  நீங்கள்...?

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் September 10, 2015 at 2:15 PM

   வாங்கோ Mr. DD Sir, மீண்டும் வணக்கம்.

   //மணிராஜ் அவர்களே வருகையை உறுதி செய்து விட்டார்கள்...

   நீங்கள்...?//

   நானும் உறுதி செய்து விட்டேன், என் வர இயலாமையை.

   நேற்று தாங்கள் என்னிடம் அலைபேசியில் அன்புடனும் ஆர்வத்துடனும் வற்புருத்திக் கேட்டுக்கொண்டதால், என் வலைத்தளத்தினைப்பற்றிய ஒருசில தகவல்கள் மட்டும், விரிவஞ்சி சுருக்கோ சுருக்கென்று சுருக்கி, மிகச்சுருக்கமாக அனுப்பி வைத்துள்ளேன்.

   இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   பதிவர் விழா மிகச்சிறப்பாக நடைபெறவும், வெற்றி பெறவும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

   தங்களின் தளராத ஈடுபாட்டுக்கும், உழைப்புக்கும் தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன்.

   என்றும் அன்புடன் VGK

   Delete
  2. வணக்கம்.திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே..

   நான் வலைப்பதிவர் கையேட்டுக்கான குறிப்புகளை மட்டுமே அனுப்பிவைத்தேன்.
   உடல் நலமின்றி சிகிச்சைகள் தொடர்வதால் திருவிழாவில் கலந்துகொள்ள ஆர்வம் இருந்தும் இயலாமை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது..

   Delete
 14. அன்புள்ள கோபு சார், என்னுடைய இந்த நூலை வாசிக்கப் பொறுமையும் அவகாசமும் ஏதுவான சூழலும் அவசியம் தேவை என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. இவை யாவும் நேரடி மொழிபெயர்ப்புக் கதைகள். இம்மாதிரிக் கதைகளின் சுவாரசியமும் போக்கும் மூல ஆசிரியரைப் பொறுத்தவை என்பதால் இதில் மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணத்தைக் காட்டமுடியாது என்பது ஒரு காரணம். மற்றொன்று.. தற்காலத்திய கதைகளாக இல்லாமல் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை… அதுவும் நமக்கு அறிமுகமில்லாத ஆஸ்திரேலியா என்னும் தீவுக்கண்டத்தின் வந்தேறிகளின் கதைகளை மிக இலகுவாகப் புரிந்துகொள்வது எளிதானதன்று.

  இன்னொரு முக்கியக் காரணம், வறண்ட நிலமும் வறிய நிலை மனிதர்களும் வாசிப்பவர்களுக்கு ஒரு விரக்தி மனநிலையையே உண்டாக்கும். வழக்கமான சிறுகதைகளை வாசிக்கும் எதிர்பார்ப்புடன் இக்கதைகளை வாசிக்க ஆரம்பித்தால் ஏமாற்றம்தான் விஞ்சும். இத்தகு கதைகளை வாசிக்குமுன் கதைக்களத்துக்கேற்றபடி வாசகர் தம்மைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். அதனால்தான் இவற்றை முன்னுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

  தாங்களோ… அனைத்துக் கதைகளையும் வாசித்து அழகாக கதைச்சுருக்கம், கதைக்கருவிளக்கம் இவற்றோடு கதை பற்றிய விமர்சனங்களையும் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இறுதிப்பகுதியான இந்தப் பகுதியில் என்னுடைய எழுத்தைப் பற்றி ஏராளமாக புகழ்ந்திருக்கிறீர்கள். தங்களுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் கிடைக்கப்பெற்றமைக்காகப் பெரிதும் உவக்கிறேன். மனம் நிறைந்த நன்றி கோபு சார்.

  கதைகளோடு பயணித்தது போதாதென்று.. இக்கதைகளை மொழிபெயர்க்கும்போது எனக்கேற்பட்ட உணர்வுகளையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை மிகவும் கவர்ந்த விஷயம், மூல ஆசிரியர் ஹென்றி லாசன் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தாங்கள் அளித்திருப்பதுதான். வாழும் காலத்தில் துன்பத்திலும் துயரத்திலும் உழன்ற ஒரு அற்புதமான படைப்பாளியை.. அவர் மறைந்த பிறகும் அவரது படைப்புகளை வாசித்து ரசித்து சிலாகித்து விமர்சித்துக் கொண்டிருக்கிறோமே… இதைவிடவும் வேறு எப்படி அவ்வுன்னதப் படைப்பாளியை சிறப்பிக்கமுடியும்?

  என்னுடைய இந்த புத்தகம் வாயிலாக ஹென்றி லாசன் அவர்களின் படைப்பாற்றலைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே என் நோக்கம். அந்த நோக்கம் தங்கள் பதிவுகள் வாயிலாய்ப் பெருமளவு நிறைவேறியிருப்பது குறித்து அளவிலா மகிழ்ச்சி. மிகவும் நன்றி கோபு சார். தங்கள் ஆசியால் தொடர்ந்து எழுதும் ஊக்கமும் உத்வேகமும் பெற்றிருக்கிறேன். அதற்காகவும் என் கனிவான நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி September 10, 2015 at 4:58 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அன்புள்ள கோபு சார், என்னுடைய இந்த நூலை வாசிக்கப் பொறுமையும் அவகாசமும் ஏதுவான சூழலும் அவசியம் தேவை என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. இவை யாவும் நேரடி மொழிபெயர்ப்புக் கதைகள். இம்மாதிரிக் கதைகளின் சுவாரசியமும் போக்கும் மூல ஆசிரியரைப் பொறுத்தவை என்பதால் இதில் மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணத்தைக் காட்டமுடியாது என்பது ஒரு காரணம். மற்றொன்று.. தற்காலத்திய கதைகளாக இல்லாமல் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை… அதுவும் நமக்கு அறிமுகமில்லாத ஆஸ்திரேலியா என்னும் தீவுக்கண்டத்தின் வந்தேறிகளின் கதைகளை மிக இலகுவாகப் புரிந்துகொள்வது எளிதானதன்று.

   இன்னொரு முக்கியக் காரணம், வறண்ட நிலமும் வறிய நிலை மனிதர்களும் வாசிப்பவர்களுக்கு ஒரு விரக்தி மனநிலையையே உண்டாக்கும். வழக்கமான சிறுகதைகளை வாசிக்கும் எதிர்பார்ப்புடன் இக்கதைகளை வாசிக்க ஆரம்பித்தால் ஏமாற்றம்தான் விஞ்சும். இத்தகு கதைகளை வாசிக்குமுன் கதைக்களத்துக்கேற்றபடி வாசகர் தம்மைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். அதனால்தான் இவற்றை முன்னுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

   தாங்களோ… அனைத்துக் கதைகளையும் வாசித்து அழகாக கதைச்சுருக்கம், கதைக்கருவிளக்கம் இவற்றோடு கதை பற்றிய விமர்சனங்களையும் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். //

   ”வறண்ட நிலமும் வறிய நிலை மனிதர்களும் வாசிப்பவர்களுக்கு ஒரு விரக்தி மனநிலையையே உண்டாக்கும்” எனக்கூறியுள்ளீர்கள். உண்மைதான்.

   ஆனால் சிறுவயதிலிருந்து ’இளமையில் வறுமை’யின் பிடியில் சிக்குண்ட எனக்கு இவற்றை வாசிப்பதிலோ, ஏழை எளியோரின் வாழ்க்கைகளைப் புரிந்துகொள்வதிலோ எந்தவிதமான சிரமமாகவும் தெரியவில்லை. ஏதோ என்னுடைய சொந்தக்கதையையே ஹென்றி லாசன் அவர்கள் சற்றே மாற்றி வேறு விதமாக எழுதியிருக்கிறாரோ என நானும் பல இடங்களில் நினைத்துக்கொள்ள நேர்ந்தது.

   >>>>>

   Delete
  2. கோபு >>>>> கீதமஞ்சரி [2]

   //இறுதிப்பகுதியான இந்தப் பகுதியில் என்னுடைய எழுத்தைப் பற்றி ஏராளமாக புகழ்ந்திருக்கிறீர்கள்.//

   தங்களுடைய திறமையான எழுத்துக்கள், சரியான வாசிப்பு அனுபவம் உள்ள அனைவராலும் புகழப்படக்கூடியவைகள் மட்டுமே.

   மேலும் தங்கள் எழுத்துக்கள் நம் உயர்திரு. ஜீவி சார் அவர்களாலேயே அடிக்கடி மிகவும் சிலாக்கித்துச் சொல்லப்பட்டவைகளாகும்.

   அதற்கு ஓர் உதாரணமாக இதோ இந்தப்பதிவினையே சொல்லலாம்: http://gopu1949.blogspot.in/2014/09/by.html

   அதனால் நான் இந்தப்பகுதியில் தங்களைப்பற்றி எதையும், எள்ளளவுகூட மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

   //தங்களுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் கிடைக்கப்பெற்றமைக்காகப் பெரிதும் உவக்கிறேன். மனம் நிறைந்த நன்றி கோபு சார்.//

   மிக்க மகிழ்ச்சி மேடம். மிக்க நன்றி.

   >>>>>

   Delete
  3. கோபு >>>>> கீதமஞ்சரி [3]

   //கதைகளோடு பயணித்தது போதாதென்று.. இக்கதைகளை மொழிபெயர்க்கும்போது எனக்கேற்பட்ட உணர்வுகளையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.//

   இதிலுள்ள பல்வேறு சிரமங்களை நான் நன்கு உணர்ந்தவன். நாம் எடுத்துச் செய்யும் ஒருசெயல் முழுமையாக நமக்கே ஓர் மனநிறைவாக [With Full Perfection and Self Satisfaction] வெளி(யிட)ப்பட வேண்டும் என்றால், அதற்காக நாம் எவ்வளவு உழைத்து நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும். கடைசிவரை ஏதோ ஒருகுறை இருப்பதுபோலவும் ... முழுத்திருப்தியில்லாதது போலவுமே நம்மால் உணர முடியும்.

   -=-=-=-=-

   ஆங்கிலத்தில் எனக்குக் கிடைத்த சிறுசிறு மெயில்களை நானும் தமிழில் மொழியாக்கம் செய்து, சற்றே என் நகைச்சுவைகளைக் கலந்து மேலும் மெருகூட்டி பதிவாக வெளியிட்டுள்ளேன். அவற்றில் உதாரணமாக இதோ சில:

   http://gopu1949.blogspot.in/2012/09/blog-post.html
   (193 பின்னூட்டங்கள்)
   லஞ்ச லாவண்யங்கள்
   (இராமாயண காலத்திலேயே ஏற்பட்டிருக்குமோ?)

   http://gopu1949.blogspot.in/2012/10/blog-post.html
   (180 பின்னூட்டங்கள்)
   உண்மைக்கதை ... சமோசா வியாபாரி மஞ்சூ

   http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_9165.html
   கடவுள் இருக்கிறாரா? கடவுள் இல்லையா?
   சூடான சுவையான விவாதங்கள்
   (43+30+45=118 பின்னூட்டங்கள்)

   -=-=-=-=-

   தாங்கள் மூலக்கதையாசிரியர் சொல்லியுள்ளதையே அவரின் பாணியிலேயே தமிழில் அப்படியே ஆனால் சற்றே படிக்கச்சுலபமாக மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று உறுதியாக நினைத்துச் செய்துள்ளதால், மிகவும் சிரமப்பட்டுத்தான் இருந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

   இருப்பினும் அதிலும் தாங்கள் வெற்றி கண்டுள்ளதுதான் தங்களின் தனித்தன்மையாகும் + தனித்திறமையாகும்.:)

   >>>>>

   Delete
  4. கோபு >>>>> கீதமஞ்சரி [4]

   //எல்லாவற்றுக்கும் மேலாக என்னை மிகவும் கவர்ந்த விஷயம், மூல ஆசிரியர் ஹென்றி லாசன் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தாங்கள் அளித்திருப்பதுதான்.//

   பிறமொழியிலுள்ள அதுவும் ஓர் மிகப்பிரபலமான எழுத்தாளரின் கதைகளை நம் மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ள ஓர் நூலினை எடுத்து அதற்கு நான் புகழுரை எழுதும்போது, மூலக்கதை ஆசிரியரைப் பற்றியும் விளக்கிச்சொல்லி கெளரவித்தால்தான், வாசிப்பவர்களுக்கும் இதிலுள்ள முக்கியத்துவமும் முழுவிபரங்களும் தெரியக்கூடும் என நினைத்துத்தான் இவ்வாறு செய்துள்ளேன்.

   //வாழும் காலத்தில் துன்பத்திலும் துயரத்திலும் உழன்ற ஒரு அற்புதமான படைப்பாளியை.. அவர் மறைந்த பிறகும் அவரது படைப்புகளை வாசித்து ரசித்து சிலாகித்து விமர்சித்துக் கொண்டிருக்கிறோமே… இதைவிடவும் வேறு எப்படி அவ்வுன்னதப் படைப்பாளியை சிறப்பிக்கமுடியும்? //

   ஆமாம் உண்மைதான். அவர் நம்மில் ஒருவராக, இவ்வாறான நம் எழுத்துக்களின் மூலம், புகழ்பெற்று இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதுவே இதிலுள்ள ஓர் தனிச்சிறப்புதான்.

   //என்னுடைய இந்த புத்தகம் வாயிலாக ஹென்றி லாசன் அவர்களின் படைப்பாற்றலைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே என் நோக்கம். அந்த நோக்கம் தங்கள் பதிவுகள் வாயிலாய்ப் பெருமளவு நிறைவேறியிருப்பது குறித்து அளவிலா மகிழ்ச்சி. மிகவும் நன்றி கோபு சார்.//

   இதில் தங்களின் அற்பணிப்பே மிக மிக அதிகம். இதில் என் பங்கு, ஏதோ இராமாயணத்தில் பாம்பன் பாலம் கட்டும்போது ஸ்ரீராமருக்கு உதவியதாகச் சொல்லப்படும் அணில்குட்டி போல மட்டுமே.

   // தங்கள் ஆசியால் தொடர்ந்து எழுதும் ஊக்கமும் உத்வேகமும் பெற்றிருக்கிறேன். அதற்காகவும் என் கனிவான நன்றி. //

   தாங்கள் இந்த என் தொடருக்கு தினமும் வருகை தந்து எனக்கான விரிவான கருத்துக்கள் அளித்துள்ளதுடன், பிறர் கொடுத்துவரும் பின்னூட்டங்களுக்கும் பதில் அளித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

   மேலும் மேலும் தாங்கள் எழுத்துலகில் ஜொலிக்க என் மனமார்ந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
  5. தங்களுடைய விரிவான பதில்களுக்கு மிகவும் நன்றி கோபு சார். தங்கள் பாராட்டுகளால் நெகிழ்வும் மகிழ்வும் அடைகிறேன்.

   Delete
 15. ’கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்...’ என்ற தலைப்பில் கீதமஞ்சரி வலைத்தளப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் வெளியிட்டுள்ளதோர் பதிவுக்கான இணைப்பு:

  http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_8.html

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டும்.

  ReplyDelete
 16. நூலின் விமர்சனத்துக்கு ஒரு விரிவான தொடரை வெளியிட்டு வழக்கம் போல அசத்திவிட்டீர்கள். இத்தொடரை வாசிக்கும் அனைவருக்குமே நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவதாக இருக்கிறது உங்கள் எழுத்து. ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவான அலசல் இதுவரை இந்நூலுக்கு யாரும் எழுதவில்லை. எனவே உங்கள் தொடரை இந்நூலின் முழுமையான விமர்சனம் என்று கொள்ளலாம். மூல நூல் ஆசிரியர் பற்றியும் கீதா மதிவாணனின் எழுத்துத் திறன் பற்றியும் எல்லோரும் அறியும் படி செய்த உங்கள் எழுத்துக்குப் பாராட்டுக்கள்! இடையிடையே கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு வலையுலகில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி September 10, 2015 at 8:03 PM

   வாங்கோ, மேடம். வணக்கம்.

   //நூலின் விமர்சனத்துக்கு ஒரு விரிவான தொடரை வெளியிட்டு வழக்கம் போல அசத்திவிட்டீர்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //இத்தொடரை வாசிக்கும் அனைவருக்குமே நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவதாக இருக்கிறது உங்கள் எழுத்து. ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவான அலசல் இதுவரை இந்நூலுக்கு யாரும் எழுதவில்லை. எனவே உங்கள் தொடரை இந்நூலின் முழுமையான விமர்சனம் என்று கொள்ளலாம்.//

   சென்ற ஆண்டு பலமுறை ’சிறுகதை விமர்சனப் போட்டிப் பரிசுகள்’ பெற்றுள்ள தாங்கள் என்னுடைய இந்தப் புகழுரையை முழுமையான விமர்சனம் என்று ஏற்றுக்கொண்டு இவ்வாறு சொன்னதுதான், எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

   //மூல நூல் ஆசிரியர் பற்றியும் கீதா மதிவாணனின் எழுத்துத் திறன் பற்றியும் எல்லோரும் அறியும்படி செய்த உங்கள் எழுத்துக்குப் பாராட்டுக்கள்! //

   நூலாசிரியர் அவர்களின் எழுத்துத்திறன் நம்மில் பலரும் மிகவும் நன்றாக அறிந்ததே / உணர்ந்ததே ! :)

   நான் துளிகூட மிகைப் படுத்திக்கூறிவிடவில்லை.

   மேலும் தாங்கள்தான் அவர்களுக்கு ‘விமர்சன வித்தகி’ என்ற பட்டம் கொடுக்கப் பரிந்துரையும் செய்திருந்தீர்கள் என்பது தங்களுக்கும் நினைவிருக்கலாம்.

   எனினும் தங்களின் பாராட்டுகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //இடையிடையே கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு வலையுலகில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.//

   மிக்க நன்றி. நானும் அவ்வாறே செயல்பட்டு இயங்க முயற்சிக்கிறேன்.

   இந்த என் தொடரின் அனைத்து ஐந்து பகுதிகளுக்கும் {100%} அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள தங்களுக்கு, வழக்கமான என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளுடன் கூடுதல் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ! :)

   என்றும் நன்றியுடன் கோபு

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.. இதுவரையிலான விமர்சனங்களிலிருந்து மாறுபட்ட முறையில் விமர்சித்து அதுவும் தொடர்களாக விமர்சனப் பதிவுகளை கோபு சார் வழங்கியமை என் நூலுக்குக் கிடைத்த பெருமை என்றே சொல்லலாம்.

   Delete
 17. மிக அருமையான விமர்சனம். இதைவிட வேறென்ன இந்த நூலுக்கு அணியாரம் வேண்டும்.

  ஹென்றி லாசனும், கீத மஞ்சரியும் சிறப்புப் பெற்றார்கள் உங்கள் புகழுரையால்.

  அனைத்தும் படித்தேன் படித் தேன். ரசித்தேன். :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan September 13, 2015 at 10:50 AM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //மிக அருமையான விமர்சனம். இதைவிட வேறென்ன இந்த நூலுக்கு அணியாரம் வேண்டும்.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //ஹென்றி லாசனும், கீத மஞ்சரியும் சிறப்புப் பெற்றார்கள் உங்கள் புகழுரையால்.//

   அடடா ! அவர்கள் இருவராலும் மட்டுமே என்னால் இந்தப் புகழுரையை எழுதும் வாய்ப்புக் கிட்டி, தங்களின் அன்பான வருகையையும் எட்டமுடிந்துள்ளது என்பதே இதில் உள்ள உண்மை.

   //அனைத்தும் படித்தேன் படித் தேன். ரசித்தேன். :) //

   மிகவும் சந்தோஷம், மிக்க மகிழ்ச்சி.

   தங்களின் அன்பான வருகைக்கும் தேன் சிந்தும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   Delete
  2. சரியாக சொன்னீர்கள் தேனம்மை.. மூல ஆசிரியரைப் பற்றி வாசகன் உணரும்போதுதான் அந்த மொழிபெயர்ப்பு நூல் சிறப்பு பெறுகிறது. அந்த வகையில் இந்நூலுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கோபு சார்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனம்மை.

   Delete
 18. திருமதி கீதா மதிவாணன் அவர்களின் எழுத்து திறமைக்கு தலை வணங்குகிறேன். அவரின் திறமையை பதிஉலகில் உள்ள அனைவருக்கும் வெளிச்சம் போட்டு பெருமைப்படுத்திய குருஜி அவர்களுக்கு பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. mru September 13, 2015 at 5:55 PM

   வாங்கோ mru, வணக்கம்.

   //திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் எழுத்துத் திறமைக்கு தலை வணங்குகிறேன். அவரின் திறமையை பதிவுலகில் உள்ள அனைவருக்கும் வெளிச்சம் போட்டு பெருமைப்படுத்திய குருஜி அவர்களுக்கு பாராட்டுகள்//

   அவர்களின் தனித்திறமை, பதிவுலகில் உள்ள அனைவரும் ஏற்கனவே நன்கு அறிந்ததே. உங்களைப்போன்ற ஒருசில புதுமுகங்களுக்கு மட்டும் தெரியாமல் இருக்கலாம்.

   தாங்களும் தெரிந்துகொள்ள இதோ இந்த ஒருசில பதிவுகளுக்கு மட்டும் சென்று பாருங்கோ:

   http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

   http://gopu1949.blogspot.in/2014/10/5.html

   இப்படிக்கு குருஜி :)

   Delete
  2. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   Delete
 19. தில்லானா மோகனாம்பாள் என்ற படத்தில், புறப்பட்டு வர இஷ்டமில்லாமல் முரண்டு பிடிக்கும் நாயன + நாட்டிய கோஷ்டிகள் இரண்டையும், மதன்பூர் மஹாராஜா அரண்மனைக்கு எப்படியாவது அழைத்துச்செல்ல, சவடால் வைத்தி என்ற கதாபாத்திரம், இங்கும் அங்கும் எப்படியெல்லாமோ சாமர்த்தியமாகப்பேசி, பிரம்மப்பிரயத்தனப்பட்டு கடைசியில் ஒருவழியாக அந்த இரண்டு கோஷ்டிகளையும் சம்மதிக்கவைத்து அழைத்துச்செல்லும்.

  ஏனோ அந்த நகைச்சுவைக்காட்சி, என் நினைவுக்கு இப்போது வந்து, எனக்குப் புன்னகையை வரவழைத்தது.

  ReplyDelete
 20. நேற்று 29.09.2015 தமிழக சட்டசபையில் நம் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு முதல் ’அம்மா இலக்கிய விருது’ வழங்கப்படும் என விதி எண்:110ன் கீழ் பேசும்போது அறிவித்துள்ளார்கள்.

  பல்வேறு பரிசுகளை அறிவித்துள்ள நம் தமிழக மாண்புமிகு முதல்வர் அவர்களின் கீழ்க்கண்ட குறிப்பிட்ட அறிவிப்பு என்னை மிகவும் கவர்ந்தது:

  -=-=-=-=-=-=-=-=-

  “தரமான பிறமொழி படைப்புகளை, சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு, ஆண்டு தோறும் ‘சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது’ வழங்கப்படும். இதில் ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும்”.

  -=-=-=-=-=-=-=-=-

  மேற்படி விருதுக்கு நம் ’கீதமஞ்சரி’ வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற மொழிபெயர்ப்பு நூல், நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர் விட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். :)))))

  தினமலர் 30.09.2015 - பக்கம் எண்: 11 - சட்டசபை செய்திகள் - பற்றிய புகைப்படம் இந்தப்பதிவினில் என்னால் புதிதாக இன்று இணைக்கப்பட்டுள்ளது.

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு
  30.09.2015

  ReplyDelete
 21. நம் அனைவரின் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய தோழி , தங்கை கீதமஞ்சரிக்கு அவ்விருது கிடைக்க வாழ்த்துகிறேன்.

  மேலும் சுசீலாம்மா, சாந்தா தத் மேடம், ரஞ்சனி மேடம், பத்மஜா நாராயணன், ராமலெக்ஷ்மி ஆகியோருக்கும் கிடைக்க வாழ்த்துகிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan September 30, 2015 at 1:23 PM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //நம் அனைவரின் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய தோழி , தங்கை கீதமஞ்சரிக்கு அவ்விருது கிடைக்க வாழ்த்துகிறேன்.//

   தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும் மிக அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   திருமதி. கீதா மதிவாணன் அவர்களுடன் சேர்ந்து தங்களுக்கும் இந்த மாபெரும் பரிசும் பெருமையும் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆவல்.

   ஆசிகள் + அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஹனி மேடம்.

   //மேலும் சுசீலாம்மா, சாந்தா தத் மேடம், ரஞ்சனி மேடம், பத்மஜா நாராயணன், ராமலெக்ஷ்மி ஆகியோருக்கும் கிடைக்க வாழ்த்துகிறேன் :)//

   இப்போதே இங்கேயே 10க்கு 7 பேர் பதிவர்கள் தேறியாச்சு. மிக்க மகிழ்ச்சி :)

   அன்புடன் கோபு

   Delete
 22. ஆஸ்திரேலியாவில் விமான நிலையத்தில் எழுத்தாளரின் மிகப்பெரிய சிலை நிறுவி மரியாதை செய்திருக்கிறார்கள்..
  மிகவும் வியந்து , விரும்பி பகைப்படம் எடுத்துவந்தேன்..

  சகோதரி திருமதி . கீதமஞ்சரி அவர்களின் மொழிபெயர்ப்பும் , அதற்கான புகழுரைகளும் மிகவும் அருமை.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:22 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆஸ்திரேலியாவில் விமான நிலையத்தில் எழுத்தாளரின் மிகப்பெரிய சிலை நிறுவி மரியாதை செய்திருக்கிறார்கள்.. மிகவும் வியந்து, விரும்பி புகைப்படம் எடுத்துவந்தேன்..//

   இதனைக்கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. :)

   //சகோதரி திருமதி . கீதமஞ்சரி அவர்களின் மொழிபெயர்ப்பும், அதற்கான புகழுரைகளும் மிகவும் அருமை.. பாராட்டுக்கள்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 23. Mail message from ஆச்சி on 09.11.2015 .... 5.52 AM

  Ennaal comment Box il comment publish kodukka mudiyavillai..so inge therivikiren.

  மற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பதில் எள்ளளவும் குறையற்ற Vgk sir,

  எழுத்தாற்றல் மிக்க கீதா அவர்களின் மொழி பெயர்ப்பு படைப்பினை தங்களது நடையில் பகிர்ந்தளித்துள்ளீர்கள்.

  -=-=-=-=-=-

  வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

  தங்களுக்கும் தங்கள் கணவர், குழந்தைகள் இருவருக்கும் + தங்கள் இல்லத்தில் உள்ள மாமியார் போன்ற மற்ற உறவினர்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள கோபு

  ReplyDelete
 24. இந்தியக் குடியரசு தினம் & ஆஸ்திரேலிய தினம் என்னும் சிறப்புகளுடைய வரும் 26.01.2017 வியாழக்கிழமையன்று, இந்த நூலின் வெளியீட்டு விழா ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி மாநகரத்தில் நடைபெற உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  Reference Link:

  http://geethamanjari.blogspot.in/2016/12/blog-post.html

  அழைப்பிதழ் விபரம் இந்தப்பதிவின் இறுதியில் இன்று (23.01.2017) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

  இது அனைவரின் தகவலுக்காகவும் மட்டுமே.

  மேற்படி விழா வெற்றிகரமாக இனிதே நடைபெற வாழ்த்துவோம்.

  ReplyDelete
 25. மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி:

  'கீத மஞ்சரி’ திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் வந்த ‘சீனத்தவனின் ஆவி’ என்ற சிறுகதை ஒலிவாகனம் ஏறி கலை வலம் வந்துள்ளது.

  நேற்று 22.1.17 இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெற்ற SBS அரசு ஊடக வானொலியில், சுமார் 73 மொழிகளில் ஒலிபரப்பு நடைபெற்றுள்ளது.

  அந்த ஒலி வடிவத்தை நீங்களும் கீழ்வரும் இணைப்பினில் சென்று கேட்கலாம்.

  http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ciinnnttvnnninnn-aavi?language=ta

  கதை வடிவம்: கீதா.மதிவாணன்.
  ஒலிவடிவம்: பாலசிங்கம். பிரபாகரன்.
  நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா . துரைசிங்கம்
  நிகழ்ச்சி மேலாளர்: ரேமண்ட் . செல்வராஜ் (றைசெல்)

  இதுபற்றிய மேலும் விபரங்களுக்கு:

  http://akshayapaathram.blogspot.in/2017/01/blog-post_22.html

  ReplyDelete