என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

’கீதமஞ்சரி’யின் ’என்றாவது ஒரு நாள்’ ...... Part 3 of 5




 ’என்றாவது ஒரு நாள்’ 

 நூல் புகழுரை  

By 
வை. கோபாலகிருஷ்ணன்

பகுதி-3

Link for Part 1 of 5

Link for Part 2 of 5



வலைத்தளம்: கீத மஞ்சரி

’என்றாவது ஒரு நாள்’ 
நூலாசிரியர்
 ’விமர்சன வித்தகி’ 

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html
திருமதி. 
 கீதா மதிவாணன்  
அவர்கள்

-oOo-

’என்றாவது ஒரு நாள்’ நூலிலிருக்கும் 
ஒவ்வொரு தமிழாக்கக் கதையினிலும் 
நான் ரசித்துப்படித்துப் புரிந்துகொண்டவற்றை 
ஒருசில வரிகளில் மட்டும் மிகச்சுருக்கமாகப் 
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.



மந்தையோட்டி



1. மந்தையோட்டியின் மனைவி

அக்கம்பக்கத்தில் கண்ணுக்கு எட்டிடும் தூரம் வரை வீடுகள் ஏதும் இல்லாத காட்டில் தனியாக, அதிக வசதிகள் அற்ற ஓர் வீட்டில் வாழப்பழகிய ஒரு தாய், அவளின் நான்கு சேய்கள், ஒரு நாய். அவள் எதிர்கொள்ளும் பல்வேறு அன்றாடப் பிரச்சனைகளைப்பற்றிச் சொல்லும் கதை. அண்டை வீடு என்பதே சுமார் 30 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் இருக்குமாம்.

வீட்டைச்சுற்றி முளைத்திருந்த கோரைப்புற்களால் வீடே தீப்பற்றி எரிய இருந்தபோது தீயை அணைக்க அவளின் துணிவு மிக்கப் போராட்டம். அதன் விளைவால் தன் குழந்தைக்கும் நாயுக்குமே தன்னை அடையாளம் தெரியாமல் அவள் முகம் கரியான சோகம். 

காட்டிலேயே தனிமையில் இன்று வாழப்பழகியவள் என்றாலும், முன்பு ஒருநாள் ஓரளவு வசதியாக வாழ்ந்தவள்தான் அவள். காட்டாற்று வெள்ளம் வந்து, அவர்களின் கால்நடைச் செல்வங்களையும் அடித்துச்சென்று வறுமையில் வாட வைத்துள்ளது. 

வருடத்தில் பெரும்பாலான நாட்களில் மந்தையோட்டியாகச் செல்லும் கணவனின் பிரிவு. அவனிடமிருந்து நெடுநாட்களாக தகவல் ஏதும் வராத சோகம் போன்ற பல்வேறு நினைவலைகளின் இடையே இன்று இருக்கிறாள் அவள். 

இதற்கிடையில் ஒரு நாள் இரவு நேரம். பலத்த இடி மின்னலுடன் கூடிய பெரும் மழை. எப்போது வேண்டுமானாலும் அணையக்கூடிய நிலையில் ஒரேயொரு மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டுமே. 

அதே நேரத்தில் இவர்கள் வீட்டுக்குள் இவளின் பார்வையிலேயே புகுந்து எங்கோ தரைப்பகுதியில் பிளந்துள்ள மரப்பலகைகளுக்கு இடையே ஒளிந்துகொண்டு விட்ட ஐந்தடிக்கும் மேலான கருநாகப்பாம்பு ஒன்றின் வருகை, 

தூக்கமின்றி துக்கத்துடன் விடியும்வரை பாம்பினை எதிர்பார்த்து பயந்துகொண்டே அவர்கள் அனைவரும் கையில் தடியுடன் உள்ளார்கள். இந்த நிகழ்வு அவர்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் நமக்கும் பீதியளிக்கிறது, திருமதி. கீதாவின் ஆச்சர்யமான எழுத்துக்களால். 

குழந்தைகள் நால்வரும் ஒவ்வொருவராகத் தூங்கிவிட, விடியும்வரை அந்தப்பாம்பின் நடமாட்டத்தையே எதிர்பார்த்து உறங்காமல் விழித்திருக்கும் தாயும் நாயும் நெகிழவைக்கிறார்கள், படிக்கும் நம்மை. 

பிறகு பாம்பு எப்போது வெளியே வந்தது? எப்படி வெளியே வந்தது? அது யாரைக்கடித்தது? அல்லது அது யாரால் எப்படி அடித்துக்கொல்லப்பட்டது? என்பதே கதையின் முடிச்சாகும்.  

அந்த மந்தையோட்டியின் மூத்த மகனுக்கு வயது பதினொன்று மட்டுமே. அவன் தன் தாயிடம் சொல்வது சற்றே நமக்கு ஆறுதலாக இருப்பினும், அவர்கள் இனியும் சந்திக்க இருக்கும் ஒவ்வொரு சம்பவமுமே, ஓர் மிக நீளமான கருநாகப்பாம்பு போன்றதே என்பதில் ஐயமில்லை என எனக்குத் தோன்றுகிறது. 

என்றோ ஒரு காலத்தில், எப்படியோ வாழ்ந்த காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதையல்லவா ! சுகமான, சுபமான முடிவுகளை நாம் எதிர்பார்க்கவா முடியும்? 





2. சீனத்தவனின் ஆவி

குடி போதையால் வந்த வினை. குடித்த நண்பன் ஒருவன் குதிரையில் ஏறி ஊர்போய்ச்சேர்ந்துவிட, அவனுடன் இவனின் நாயும் தப்பி விட, எங்கோ தொலைத்த தன் தொப்பிக்கு பதிலாக எவனோ கொடுத்ததொருத் தொப்பியை அணிந்து, கையில் ஓர் குடுவையில் விஸ்கியுடன் காட்டுப்பாதையில் தனித்த நடை பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இவனுக்கு.

பேய், பிசாசு, ஆவி என்ற கட்டுக்கதைகளினால் ஏற்பட்ட பயம் ஒருபுறம். கடும் வெயிலால் தோல் பட்டைகள் உரிந்துபோய் நிர்வாண நிலையில் மிக உயரமாக வளர்ந்து பேயாட்டம் ஆடும் நெடுமரங்கள் வழி நெடுகிலும். 

இடையே ’கொலைகார ஓடை’ என்ற பெயரில் உள்ள ஒன்றையும் தாண்ட வேண்டியுள்ளது. இருட்டிடும் வேளையில் ’செத்தவனின் சந்து’ எனப்படும் மலையிடைவெளியையும் கடக்க வேண்டிய நிலையில் உள்ளான். நல்ல நல்ல மிகவும் பொருத்தமான பெயர்களாகவே தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள் இந்தக் கதாசிரியர். 

மேலும் அன்றே இறந்த கன்றுக்குட்டியைத் யாரோ தோல் உரித்து அங்கே வீசிப்போட்டிருந்ததில், அதைப்பார்த்ததும் நிர்வாணமாய் இரு சடலங்கள் போலக் காட்சியளித்ததில் இவனுக்கு மேலும் பீதியாகி விடுகிறது.  வர்ணனைகள் அபாரம்.

இவ்வாறு திகிலுடன் நடக்க நடக்க டப்.. டப்.. டப்.. டப்.. என்று யாரோ பின் தொடர்வதுபோன்றதோர் ஒலி. நடுவில் பாதையின் குறுக்கே மிகப்பெரிய ஆண் கங்காரு ஒன்றின் ஓட்டம் தட் .. தட் .. என்ற பேரொலியுடன். 

சீனாக்காரனின் கல்லறையை நெருங்கும் போது, அருகே மிகப்பெரிய ஓர் வெள்ளை உருவம் புறப்பட்டு வருகிறது. அது என்னவென்று அவனுக்கும் கதையைப்படிக்கும் நமக்கும் புலப்படும் வரை, கதை ஒரே திகிலோ திகிலாகத்தான் உள்ளது. 

ஆஸ்திரேலியாவின் ராட்சஸப்பல்லியான கோவான்னாவைப்போல நடுங்கிப்போய் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே அவன் நடந்து செல்கிறான். 

நெஞ்சினில் ஒருவித பயத்துடன் ஓட்டமும் நடையுமாக அவன் பல மைல்கள் கடந்தும் ... அவனைத் தொடர்ந்து வரும் டப்.. டப்.. டப்.. டப்.. சப்தம் மட்டும் நிற்காமல், தலை தெரிக்கக் கதை முழுக்க ஓட வைக்கிறது அவனை ..... படிக்கும் நமக்கும் ஓர் பயங்கரமான திகில் உணர்வுடன். 

பிறகு அந்த சப்தம் எங்கிருந்துதான் வந்தது? என்பதே இந்தக்கதையில் உள்ள மிகப்பெரிய சுவாரஸ்யமாக உள்ளது. நீங்களும் நூலினைப்படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.






3. ஒற்றைச் சக்கர வண்டி

திருமதி. கீதா அவர்களின், இந்தக்கதைக்கான தலைப்புத் தேர்வு மிக அருமை. 

பிள்ளைப் பாசமுள்ள ஏழைத்தந்தை. மனநோயாளி போன்ற, புரிதல் இல்லாத மனைவி. உடல்நலமில்லாத பெரிய பிள்ளை. அவனுக்கோர் சிறிய தங்கச்சிப்பாப்பா. 

ஒற்றைச் சக்கர வண்டியாக நொடித்தபடி நகர்ந்தோடிவரும் அவர்களின் மிகவும் கசப்பான மற்றும் ஏழ்மையான தினசரி வாழ்க்கை. 

வருடத்தின் கடைசி ஒரு நாள் நகர்வதையே, ஓராண்டு நகர்வதுபோல காட்டியிருப்பது, கதாசிரியரின் எழுத்துக்களின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. 




4. மலாக்கி

மனதைக்கலங்கச் செய்த கதை. 

சில சிறுவர்கள் மிகவும் அப்பாவிகளாகத் தோற்றம் அளிப்பார்கள். கூச்சத்துடனும், ஒருவித பயத்துடனும் பிறருடன் பழகுவார்கள். இதை ஆதாயமாக்கிக்கொண்டு, மற்ற சிறுவர்கள் அவர்களைத் துன்புறுத்துவார்கள், பயமுறுத்துவார்கள், அழவிட்டு மனதளவில் காயப்படுத்தி இன்பம் காண்பார்கள். 

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல, தன் நண்பர்களால் தன் தலைக்கும் உயிருக்கும் ஆபத்து எனத் தெரிந்ததும், ஒரு மிகப்பெரிய கதவையே பெயர்த்துக்கொண்டு, மலாக்கி, ஓர் கங்காருவைவிட வெகு வேகமாகத் தப்பிச்செல்கிறான் ஒரு காட்டுப்பாதைக்குள். 

மற்றொரு சமயத்தில் வேறொரு புதுமணமான பெண்ணின் உயிருக்கு ஆபத்து என உணர்ந்ததும், சற்றும் தாமதிக்காமல் தன் உயிரையே பலியாகக்கொடுத்து அவளை அந்த நிகழவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி விடுகிறான். 

அவன் இறக்கும் தருவாயில் சொல்லும் ஒருசில மரண வாக்குமூல உண்மைகள் அவனின் துஷ்ட நண்பர்களை மிகவும் யோசிக்க வைக்கின்றன. தாங்கள் அவனுக்குச் செய்த துன்பங்களை நினைத்து அவர்களை அழவும் வைக்கின்றன. 

மலாக்கி இதுவரை ஒரு மிக உயர்ந்த கொள்கைக்காக வாழ்ந்த வாழ்க்கையைப் படிக்கும் நம்மையும் கலங்கச் செய்கின்றன. இந்தக்கதையையும் மிகவும் அற்புதமாக எழுதியுள்ளார்கள். இதே கதையை அவர்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டபோது, நான் படித்த ஞாபகம் எனக்கு நன்றாகவே உள்ளது.  http://geethamanjari.blogspot.in/2014/04/6.html





5. முற்றுப்பெறாத ஒரு காதல் கதை

இந்தக் கதையின் ஆரம்பத்தில் பல்வேறு மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பற்றிய அட்டகாசமான வர்ணனைகள் கதாநாயகனின் ப்ளாஷ் பேக் ஸ்டோரியாக காட்டியிருப்பது படிக்க மிக அருமையாக இருந்தது. 

அதுபோன்ற ஏராளமானவற்றில் உதாரணமாக நான் ரசித்த ஒன்று:

//தாய்மையும் பெருமிதமும் கொள்ளத்தக்க இளமஞ்சள் வண்ண கறவைப்பசு. அது தன் மடிக்காம்பை வாயால் பற்றித் தொங்கிக்கொண்டும், பாலை உறிஞ்சிக்கொண்டும், தன் பின்னங்கால்களுக்கிடையில் தலைமுட்டியபடி வந்த கன்றை, வலி சகித்தபடி பொறுமையோடு இழுத்து வந்துகொண்டிருந்தது// :) மிகச்சிறப்பானதோர் வர்ணனை !

காதலைப்பற்றி மிகவும் மென்மையாகச் சொல்லியுள்ள மற்றொரு இடம்:

//புரூக் ஏறிச்சென்ற கோச்சு வண்டி கட்டைவேலியின் திருப்பத்தில் திரும்பும்போது அவன் மறுபடியும் அவளைத் திரும்பிப்பார்த்தான். லிஸி அவளுடைய இயல்புக்கு மாறாய், மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தன் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டிருந்தாள்.// 

முற்றுப்பெறாத காதலாயினும், மறக்க இயலாத ஒருசில சம்பவங்களை, பட்டும் படாததுமாக விளக்கி அருமையாக எடுத்துக்கூறியுள்ள இந்தக்கதையும் திருமதி. கீதாவின் தமிழாக்கத்தில், கொஞ்சும் தமிழைப்போலவே மிகவும் அழகாகத்தான் உள்ளது.






6. அவள் பேசவில்லை

ஒரு தேநீர் விடுதியின் பணிப்பெண், வாடிக்கையாளர்கள் சிலருடன், சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். இதை அதே தேநீர் விடுதிக்குள் உள்ளே புதிதாக நுழையும் வேறு இருவர் கவனித்துள்ளனர். 

அவளை எப்படியாவது தங்களுடனும் அதுபோலவே பேச வைத்துவிட வேண்டும் என பிரும்மப்பிரயத்தனப்பட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களால் அது இயலவில்லை. 

மேலும் மேலும் ஏராளமான கோப்பைகள் தேநீர் ஆர்டர் கொடுத்த படியும், அவளிடம் ஏதாவது பேச்சுக்கொடுத்தபடியும்  உள்ளனர். இருப்பினும் இந்த இரு நண்பர்களால் அவளைக் கடைசிவரை பேசவோ சிரிக்கவோ வைக்கவே முடியாமல் போகிறது. இதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். 

அவள் ஏன் பேசவே இல்லை என்ற காரணமும் சொல்லப்படாமல் .... கடைசிவரை அவள் அவர்களிடம் வாயைத்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசாமலேயே கதையும் முடிந்து விடுகிறது. 

அந்த இரு நபர்களால் அவளின் தேநீர் வியாபாரமும்  சூடு பிடித்து நடந்துள்ளது என்பதே, இந்தக்கதையின் தனிச் சிறப்பாக உள்ளது. எழுத்துநடை மிகவும் அருமை.

எல்லாப்பெண்களும், எல்லா ஆண்களிடமும், எப்போதும், சிரித்துச் சிரித்துப் பேசிவிட மாட்டார்கள் என்பதையும் இந்தக்கதையில் நாம் அறிய முடிகிறது.







7. சமையல்காரரின் நாய்

ஒரு சமையல்காரர் தன்னுடைய செல்லமான நாய் என சொல்லிக்கொண்டுவரும் ஓர் குறிப்பிட்ட நாயின் ரோமத்தை, அவர் சமையலை சாப்பிடும் சிலர், ஆட்டு ரோமங்களைக்கத்தரிக்கும் இயந்திரத்தால் அகற்றி அடையாளம் தெரியாதபடி செய்து விடுகின்றனர். 

எதையும் எளிதில் ஜீரணித்துக்கொள்ளும் சமையல்காரருக்கு, இது விஷயத்தில் தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. வழக்கத்திற்கு மாறாக  பல நாட்கள் புலம்பித்தீர்த்து விடுகிறார். 

பிறகு ஒருவாரத்தில் இயல்பு நிலைக்குத்திரும்பி விடுவதுடன், அவர்கள் செய்துள்ள கேவலமான செயல்களுக்கு புதிய காரணமொன்றை சொல்கிறார். இத்துடன் கதை முடிகிறது. 

அவர் சொன்ன காரணம்தான் என்ன? நூலைப்படித்து அறிந்து கொண்டால் நல்லது.





8. என்றாவது ஒருநாள்

இவள் தான் உலக அழகியாக இருக்க முடியும் என ஒருவன் நினைக்கிறான். படிப்போ, அழகோ, செல்வாக்கோ இல்லாத அவலட்சணங்கள் நிறைந்த முரடனான அவன் அவளைப்பார்க்காமலும், பழகாமலும்தான் இருந்து வருகிறான். 

பிறரின் பார்வைகளிலும், அவளிடமும், அவமானப்பட விரும்பாததால், அவளிடமிருந்து ஒதுங்கியே இருந்து வருகிறான். அவள் இவனின் தங்கையின் சினேகிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அந்த அழகி இவனிடம் சகஜமாகவே பேசியும் பழகியும் வருகிறாள். இவன் தன் கற்பனையில் அவளை தன் மனதளவில் மனைவியாகவே ஆக்கிக்கொண்டுள்ளான். அவளிடம் தன் காதலைப்பற்றி தெரிவிக்க மட்டும், தாழ்வு மனப்பான்மையால், அவனுக்கு ஏனோ தைர்யம் வரவில்லை.

இதற்கிடையில் எல்லைப்பகுதியில் கால்நடைப்பண்ணையில் இவனுக்கு வேலைகிடைத்து, அந்த ஊரையும், தன் தங்கையையும், தன் கற்பனை மனைவியான அழகியையும் விட்டுப் பிரிந்து செல்ல நேர்கிறது. 

புகைவண்டியில் அவனை ஊருக்கு வழியனுப்ப அவன் தங்கையும், மற்ற நண்பர்களும், அந்த அழகியும்கூட வந்துள்ளார்கள்.

தங்கையானவள் இவனிடம் “ஏய் மரமண்டை, அதோ அங்கு தனிமையில் உன்னையும் உன் பிரிவையும் நினைத்துக் கலங்கிக்கொண்டிருக்கும் அவளைப்போய் சந்தித்துப்பேசி விடை பெற்றுக்கொள்” என்கிறாள். 

அவளைத்தனிமையில் சந்திக்கிறான். இவன் பிரிவை எண்ணி அவள் கண்கள் கலங்கியுள்ளன. 

என்றாவது ஒருநாள் இவன் அவளுக்காக ஒருவேளை ஊர் திரும்பலாம் ..... அல்லது ..... ஊர் திரும்பாமலும்கூட இருக்கலாம் ..... இதற்கான விடைகளைக்காண நூலில் உள்ள கதையைப்படிப்பதே நல்லது. 

“ஹூம்.. என்றாவது ஒருநாள்! அந்த நாள் என்று? நாம் எல்லோருமே சொல்லிக்கொண்டு இருக்கிறோம் “என்றாவது ஒரு நாள்” என்று. இந்தக்கதையின் கதாநாயகனும் அதுபோல பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

யாருக்கு யார் மீது, எப்போது, எதற்காகக் காதல் ஏற்படும் என்பதை யாராலுமே கணித்துச் சொல்ல இயலாது, அதுதான் காதலின் இலக்கணம் என்பதையும், ஏழ்மைக்கு முன், பெரும்பாலும் காதல் தோற்றுத்தான் போகிறது என்ற நிதர்சனமான உண்மையை உணர்த்தும் சோகக் கதையாக இருக்குமோ என்னவோ ! 

எதற்கும் நூலில் நீங்களே அதனை திருமதி. கீதா அவர்களின் எழுத்து நடையினில், என்றாவது ஒரு நாள் படித்துப்பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.







9. புதர்க்காடுறை பூனைகள்

யானைபோல பலமுள்ள பூனைகளைப்பற்றிய செய்திகள் மிகவும் வியப்பூட்டுகின்றன. 

பாம்பென்றால் படையும் நடுங்குமே! ஆனால் இந்தப் பூனைகளுக்கு பாம்பென்றால் ஒரே குஷியாகிப்போய்விடுகின்றது. நீளமான பயங்கரமான திமிறி நெளியும் கருநாகத்தைக் கவ்விக்கொண்டுவந்து, குறிப்பாக தங்கள் எஜமானர் வீட்டுப்பெண்மணிகளிடம் காட்ட ஓடிவருவதும், அதனைப்பார்த்த அவர்கள் அலறிப்பிடித்தபடி வீட்டைவிட்டு வெளியேறி விடுவது நடக்குமாம். 

தங்களின் வீர தீரச்செயலைப்பாராட்டாமல் ஏன் இவர்கள் இப்படி அலறி ஓடுகிறார்கள் எனப் புரியாமல் குழம்புமாம் இந்தப்பூனைகள். 

தரைச்சக்கரம் போல தன்னை எட்டு சுற்று சுற்றிக்கொண்டு இறுக்கிய மிகப்பெரிய மலைப்பாம்பின் கழுத்தினைக்கவ்வியபடி வாழ்வா சாவா போராட்டத்துடன், அந்தத் தன் உடலில் சுற்றிய பாம்புடனேயே எஜமானர் வீட்டுக்கு ’மேரி ஆன்’ என்ற வீரம் மிக்க பூனை மலைப்பாம்பினை இழுத்து வருவதும், தன் வாய் திறந்து கத்தி பிறரை உதவிக்கு அழைக்க இயலாத நிலையையும், அதன்பின் நடந்த த்ரில்லிங் ஆன நிகழ்வுகளைப் படிக்கும் போது மிகவும் வியப்போ வியப்பாகத்தான் உள்ளது.  

பூனைப்படை என்ற பெயரில் இன்று பல V.I.P.s கள் தங்களின் பாதுகாப்புக்காக வைத்துள்ளனர். அன்றே மிகப் பெரிய காய்கறித்தோட்ட பண்ணையார்கள், முயல்களிடமிருந்து தங்கள் பயிர்களை இரவு நேரங்களில் காவல்காக்க இதுபோன்ற பலம் வாய்ந்த நிஜமான பூனைப்படைகளை வளர்த்துள்ளனர். தினமும் இரவினில் பல முயல்களைக் கொன்று குவித்துக்காட்டிவிட்டு, எஜமானர் தரும் கூலியாகிய பாலை அதிகாலையில் விரும்பி அருந்துமாம் அந்தப்பூனைகள்.  

ஜேக் என்ற மிகப்பெரியதோர் ஆண் பூனை, இரவெல்லாம் உயிரைக்கொடுத்து, முயல் வேட்டை வேலை செய்துவிட்டு, களைப்புக்காக, வாரம் ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு. மூன்று மைல்கள் தள்ளியிருக்கும் வேறொரு பண்ணையில் பணியிலிருக்கும் தன் காதலிப்பூனையைக் காணச்செல்கிறது என்கிறார் நூலாசிரியர். 

இதைப் படித்ததும் நான் மிகச்சிறிய புன்னகை புரிந்துகொண்டேன். பூனைகளுக்குள் ஏற்படும் காதல் உணர்வுகளைப்பற்றி எவ்வளவு நளினமான எழுத்துக்கள் என்று நினைத்தபடியே ! 

தன் காதலியைப்பார்க்கப்போன அங்கு அந்தப்பூனை, மஹா முரட்டு முயல் ஒன்றுடன் போராடி வென்ற கதையையும் மிகவும் நகைச்சுவையாகவும், படிக்க விறுவிறுப்பாகவும் தமிழாக்கம் செய்து தந்துள்ளார்கள் நம் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்.






10. பணயம்

எனக்கு மிகவும் பிடித்த நல்லதொரு நகைச்சுவையான கதை இது. 

அது குடிபோதை ஏற்றிக்கொள்ளும் நிலையம். முன்பின் தெரியாதவர்கள் கூடி சீட்டாட்டங்கள் போன்ற சூதாட்டங்களும் அங்கு நடைபெறுவது உண்டு.

ஒருவன் முழுபோதையுடன் தூங்கி வழிய, வேறு இருவர் மும்முரமாக சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள். 

அதில் ஒருவன் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்க மற்றொருவன் அனைத்தையும் அவனிடம் இழந்துகொண்டே இருக்கிறான். 

தோற்றவன் மேலும் விளையாட ஏதும் பணமின்றி கிளம்ப நினைக்கும் போது, தன் அருகே மேஜைக்காலில் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள நிலையில் கழுத்தில் புண்ணுடன் உள்ள நாயினை மிகவும் பரிதாபமாக நோக்குகிறான்.  அதற்கு ஒரு ரொட்டித்துண்டு வாங்கிக்கொடுக்கும் நிலையில்கூட இப்போது நான் இல்லையே என நினைத்திருப்பானோ என்னவோ! 

இதுவரை சீட்டாட்டத்தில் தொடர்ந்து ஜெயித்தவனால், தோற்றவனிடம் ஆசையும் நம்பிக்கையும் ஊட்டப்படுகிறது. எப்படியும் மீண்டும் ஒரேயொருமுறை சீட்டாடி ஜெயித்து விடலாம், நாம் இதுவரை இழந்ததைப் மீட்டு விடலாம் என்று நம்பி, அங்கு கட்டப்பட்டுள்ள நாயையே ஒரு பவுண்டுக்கு அவனிடம் பணயமாக வைத்து சீட்டாடி, மீண்டும் வழக்கம்போலத் தோற்றுப் போகிறான். 

ஜெயித்தவன் நாயை அவிழ்த்துக்கொண்டு, தன் பாதையில் தன்னுடன் ஓட்டிச்சென்று விடுகிறான். இதையெல்லாம் கவனித்துவந்த மது விற்பனைப்பெண்மணி, தன் நாய் உள்பட அனைத்தையும் தோற்றுப்போனவன் மேல் பரிதாபப்பட்டு மேலும் ஒரு கோப்பை தன் கணக்கில் மதுவைக் குடிக்கக் கொடுத்து ஆறுதல் கூறி அவனை அனுப்பி வைக்கிறாள். அவனும் அவளுக்கு நன்றிகூறி தன் பாதையில் கிளம்பிச் சென்று விடுகிறான். 

இதுவரை முழுபோதையில் தூங்கிக்கொண்டிருந்தவன் இப்பொது எழுந்து கொள்கிறான். தனக்கு கடனில் மேலும் கொஞ்சம் மது அளிக்குமாறு அந்த மாதுவிடம் கெஞ்சுகிறான். அவள் மறுக்கிறாள். 

ஏற்கனவே அவன் அடைக்க வேண்டிய கடன் பாக்கி நிறைய இருப்பதாகவும், இனிமேலும் கடன் அளித்தால் மதுக்கடை முதலாளி தன்னைத் திட்டுவார் என்றும் சொல்லி மறுத்து விடுகிறாள். 

இதைக்கேட்டபின் அவன் சிறிது நேரம் அந்த மதுக்கடையின் உள்ளேயும் வெளியேயும் நாய் போல சுற்றிச்சுற்றி வந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான். எங்கு தேடியும் அது அவன் கண்களில் படாததால், மது விற்பனைப்பெண்ணிடம் தன் உடமை ஒன்றைக் காணோம் என கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறான்.  

விற்பனைப்பெண்ணை நன்கு மிரட்டி, இது சம்பந்தமாகத் தான் போலீஸுக்குப் போகப்போவதாகவும், புகார் அளித்து அவள் வேலைக்கே உலை வைக்கப்போவதாகவும் மிரட்டியபடி, ஏராளமான கோப்பைகள் மதுவை அவளிடம் இலவசமாகப் பெற்றுக் குடித்துவிட்டு, தான் தூங்கிக்கொண்டிருந்தபோது நடந்த விஷயங்கள் அத்தனையையும் அவள் மூலமாகவே கேட்டுத் தெரிந்துகொள்கிறான். 

தான் தன்னுடன் அழைத்து வந்து கட்டிப்போட்ட நாய்தான் சீட்டாட்டத்தில் பணயமாக வைக்கப்பட்டு, ஜெயித்தவுடன் சென்றுள்ளது என்பதை அவள் மூலம் அறிந்து கொள்கிறான். அந்த சீட்டாட்டத்தில் ஜெயித்தவன் நாயுடன் சென்ற திக்கினையும் அவளிடமே விசாரித்துக்கொண்டு, அதைத்தேடி அதே பாதையில், நல்ல போதையில் தள்ளாடியபடிச் செல்ல எத்தனிக்கிறான். 

கடைசிவரை, அங்கு கட்டப்பட்டு பணயமாக வைத்து சீட்டாடப்பட்ட அந்த நாய், யாருக்கு சொந்தமானது என்பதே, எந்த நாய்க்கும் புரியாமல், கதையை நகர்த்தி சென்றுள்ளதுதான் படிக்க எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. :)




மற்ற கதைகளைப்பற்றி நாம் 
நாளைக்குப் பார்ப்போமா ?




’என்றாவது ஒரு நாள்’ 
புகழுரை தொடரும்.

53 கருத்துகள்:

  1. வாசிக்கும் ஆவலைத்தூண்டும் உரைப்பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் September 8, 2015 at 1:50 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வாசிக்கும் ஆவலைத்தூண்டும் உரைப்பகிர்வு.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
    2. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனிமரம்.

      நீக்கு
  2. கதைகளைப் படித்தேன். உங்கள் சிறுகதைகள் தெளிந்த நீரோட்டம் மாதிரி இருப்பதைப் போல் இவைகள் இல்லை. படித்து முடித்தவுடன் மனதில் ஒருவித சோகமே மிஞ்சுகிறது. இந்த மாதிரிக் கதைகள் படிக்கும் வயதைக் கடந்து விட்டேன் என்று உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி. கந்தசாமி September 8, 2015 at 5:15 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //கதைகளைப் படித்தேன்.//

      கதைச்சுருக்கங்களைப் படித்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி, சார்.

      //உங்கள் சிறுகதைகள் தெளிந்த நீரோட்டம் மாதிரி இருப்பதைப் போல் இவைகள் இல்லை. //

      மனதில் தோன்றிடும் உண்மைகளை, உண்மையாக எடுத்துச் சொல்ல ஓர் மனோதைர்யம் வேண்டும். அது தங்களிடம் தாராளமாக உள்ளது.

      திருஷ்டிபூசணிக்காயை உடைப்பதுபோல இப்படி வெளிப்படையாக உடைக்கலாமா, சார்?

      ’எழுத்தாளர்களின் எழுத்துக்களும், அதற்கு வாசகர்களின் வரவேற்புகளும்’ என்ற தலைப்பினில் என்னால் இன்றைய பதிவர்களையே உதாரணம் காட்டி, நூற்றுக்கணக்கான பதிவுகள் வெளியிட முடியும். நேரமின்மையாலும், எனக்கேன் ஊர்வம்பு என்றும் ஒதுங்கியுள்ளேன்.

      ஒவ்வொருவருடைய எழுத்துக்கள், எழுத்துத்திறமைகள், அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் சப்ஜெக்ட் [கருப்பொருள்], அவர்கள் எழுதிய காலக்கட்டம், சூழ்நிலை, அனுபவங்கள், அவர்கள் சந்திக்க நேர்ந்த மனிதர்கள், சமுதாயம், அரசாங்க சட்ட திட்டங்கள், அவ்வப்போது மாறிவரும் வாசகர்களின் மனநிலை + ரசிப்புத்தன்மை அல்லது சகிப்புத்தன்மை என இதில் எவ்வளவோ விஷயங்கள் அடங்கியுள்ளது, சார்.

      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மேட்டரில் ரசனையிருக்கும். {உதாரணமாக அரசியல், சினிமா, கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், சரித்திரக்கதைகள், பயணக்கட்டுரைகள், விஞ்ஞான ஆராய்ச்சிகள், ஆன்மிக விஷயங்கள், நகைச்சுவை கலந்த கதைகள் + கட்டுரைகள், இலக்கியம், இலக்கணம், உடல் நலம், மருத்துவம், கணிதம், இயற்கை வளங்கள், தோட்டம், மரங்கள், செடி, கொடி, பூக்கள், காய்கள், கனிகள், பறவைகள், விலங்குகள், சமையல் கலை, பாடல்கள், கோலம், கைவேலைகள், சித்திரம், சிற்பம், புதிர்கள், செக்ஸ் மேட்டர்ஸ் முதலியன}

      எல்லோராலும் எல்லோருடைய எழுத்துக்களையும், பொறுமையாகப்படிக்க முடியும் எனச் சொல்லவும் முடியாது, சார்.

      வாசகர்களின் ரசனைக்குத் தகுந்தாற்போல படைப்புகளை ஆபாசமில்லாமலும் அதே சமயம் சற்றே கவர்ச்சிகரமாகவும், படித்ததும் பலக்கச் சிரிக்கா விட்டாலும்கூட, ஒரு சிறு புன்னகையாவது புரியும் வண்ணம், சுவாரஸ்யமாகவும் சற்றே நகைச்சுவை கலந்தும் எழுதி, படிக்கச் சுருக்கமாகவும், சுவையாகவும் தருவோர் மட்டுமே இந்த எழுத்துலகச் சந்தையில் ஓரளவு நீடித்து நிற்க முடியும் என்பது எனது மிகத்தாழ்மையான அபிப்ராயம்.

      //படித்து முடித்தவுடன் மனதில் ஒருவித சோகமே மிஞ்சுகிறது.//

      உண்மைதான். அவரின் பெரும்பாலான கதைகளில் சோகமே அதிகமாக உள்ளது. அது அந்தக் காலத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களால் எழுதப்பட்டுள்ளன. என்னிடமே இதன் மூலக்கதைகளை ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டால் நான் அவற்றைப் படிக்கவே விரும்ப மாட்டேன். ஓரம் கட்டிவிடுவேன்.

      திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் அவற்றை மிகவும் கஷ்டப்பட்டு ஆர்வமாகப் படித்து, பல மொழி அகராதிகளைப் புரட்டிப்பார்த்து, தமிழில் மொழியாக்கம் செய்துள்ளதுதான் இதில் உள்ள மிகச்சிறப்பாக நான் நினைக்கிறேன்.

      மூலக்கதையினில் அதிகமாக மாற்றங்கள் ஏதும் செய்யக்கூடாது என்பதிலும் கவனம் வைத்து, அதே நேரம் படிக்கும் நமக்கும் முடிந்த அளவு சுவாரஸ்யம் குறையாமல், ஓரளவு சுலபமாகப் புரிந்துகொள்ளும் விதமாக இந்த நூலினை எழுதியுள்ள அவர்களின் எழுத்துநடையினை மட்டுமே பாராட்டி நானும் இந்தப் புகழுரைத் தொடரினை எழுதி வருகிறேன்.

      //இந்த மாதிரிக் கதைகள் படிக்கும் வயதைக் கடந்து விட்டேன் என்று உணர்ந்தேன்.//

      நீங்கள் மட்டுமா, நானும் தான், சார். :)

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. அந்தக் காலகட்ட வந்தேறிகளின் வாழ்க்கை உண்மையில் சோக மயமானதுதானே ஐயா. அதை அப்படியே தன் எழுத்துகளால் பிரதிபலித்திருக்கிறார் ஆசிரியர். அவற்றை வாசிக்க பிரத்தியேக மனநிலை தேவைப்படும். உண்மைதான். தங்கள் வருகைக்கும் மனந்திறந்த கருத்துகளுக்கும் மிகவும் நன்றி ஐயா.

      நீக்கு
  3. பல கதைகளை அவர் தளத்திலேயே வாசித்துள்ளேன். தவறவிட்டது சில இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். September 8, 2015 at 5:17 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

      //பல கதைகளை அவர் தளத்திலேயே வாசித்துள்ளேன். //

      நானும்கூட அதேபோல வாசித்துள்ளேன். :)

      //தவறவிட்டது சில இருக்கலாம்.//

      படிக்குப்பாதி இருக்கும். ஏனெனில் அவர்கள் இதிலுள்ள எல்லாக்கதைகளையும் அவர்களின் வலைத்தளத்தினில் வெளியிடவில்லை என நினைக்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
    2. புத்தகத்தில் உள்ள 22 கதைகளில் ஆறு கதைகள் வலைத்தளத்தில் முன்பே வெளியானவைதாம். நீங்களும் தவறாமல் வாசித்துக் கருத்திட்டிருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அருமை ஐயா
    மற்றவர்களைப் புகழவும் ஓர் பெரிய மனம் வேண்டும்
    அது தங்களிடம் நிறைந்திருக்கிறது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் September 8, 2015 at 6:25 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //அருமை ஐயா. மற்றவர்களைப் புகழவும் ஓர் பெரிய மனம் வேண்டும். அது தங்களிடம் நிறைந்திருக்கிறது. நன்றி ஐயா//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். :)

      புகழ வேண்டியவர்களை, புகழ வேண்டிய நேரங்களில், புகழத்தான் வேண்டும்.

      அதற்கு பணம் வேண்டாம் ... மனம் இருந்தால் போதும் ... எனச்சொல்லியுள்ளீர்கள்.

      அதுதான் உண்மையும்கூட. மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் மிக அழகான கருத்துக்கும் நன்றி ஐயா

      நீக்கு
  5. ஒவ்வொரு கதையின் சாரத்தையும் சுருக்கித் தந்து கடைசியில் முடிவை சொல்லாமல் நூலைப்படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளீர்கள். யாரைப் பாராட்ட? மூலக்கதை தந்த திரு ஹென்றி லாசனையா? அதை தமிழாக்கம் செய்த திருமதி கீதா மதிவாணனையா? அல்லது நூலை திறனாய்வு செய்த தங்களையா? திணறுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி September 8, 2015 at 7:38 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //ஒவ்வொரு கதையின் சாரத்தையும் சுருக்கித் தந்து கடைசியில் முடிவை சொல்லாமல் நூலைப்படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளீர்கள்.//

      முழுக்கதையையும் நான் இங்கேயே சொல்லிவிட்டால், நூலினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தாருக்கு, நூல் விற்பனையில் பாதிப்பு ஏதும் ஏற்படக்கூடும் அல்லவா :)

      அதனால் இதுபோலச் செய்வதுதான் சரியான முறையாக இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.

      //யாரைப் பாராட்ட? மூலக்கதை தந்த திரு ஹென்றி லாசனையா? அதை தமிழாக்கம் செய்த திருமதி கீதா மதிவாணனையா? அல்லது நூலை திறனாய்வு செய்த தங்களையா? திணறுகிறேன்!//

      இதில் திணறலுக்கே இடமில்லை. என்னுடைய முழுப்பாராட்டுகளும், மூல நூலினை ஆர்வத்துடன் படித்து, மிகவும் கஷ்டப்பட்டு மொழியாக்கம் செய்து, தமிழில் தன்னுடைய தனிப்பாணியில் மிகச் சிறப்பாக இந்த நூலினை வெளியிட்டு ’ஹென்றி லாஸன்’ என்றொரு பிரபல எழுத்தாளர் இவ்வுலகில் வாழ்ந்துள்ளார் என எனக்கு அறிய வைத்த நூலாசியர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும், இதனை ஆர்வமாகப் படித்து இங்கு கருத்தளிக்கும் தங்களைப்போன்ற நண்பர்களுக்கும் மட்டுமே.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      இதன் அடுத்த இரண்டு பகுதிகளுக்கும் அவசியமாக வாங்கோ.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. மிகவும் வித்தியாசமான முறையில் நூல் பற்றிய விமர்சனத்தை முன்வைத்து வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள கோபு சாருக்கே அனைத்துப் பெருமைகளும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் September 8, 2015 at 8:13 AM

      வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.

      //மலாக்கி மறக்க முடியாத கதை...//

      ஆம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
    2. மலாக்கி ஏற்கனவே என் வலைப்பூவில் வெளியிட்டிருந்தேன். அந்தக் கதையின் நாயகனை அவ்வளவு எளிதில் மறக்கமுடியுமா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. ஸார் ஒரே பதிவுல 10- கதைகள போட்டா எதையும் முளுமையா படிச்சு உள் வாங்கி கருத்து பகிர்ந்துக்க முடியலியே. முதல் கதையில அதாவது (மந்தையோட்டியின் மனைவி) அந்த ஏழை தாய் குழந்தைகளின் நிலமை திடுக்குனு ஆயிடுச்சி.
    பாம்ப வெறட்டினாங்களா அதுவே போயிடுச்சா?

    அடுத்து சீனத்தவனின் ஆவி கதைல அவன் குதிரல போற காட்சி அவன் உருவம் கண்ணு முன்னாடியே நிக்குது. கொலைகார ஓடை செத்தவனின் சந்து கன்னுகுட்டி தோல் உரிக்குதுனு விவரணம் ராட்ச ச பல்லி கோவன்னாவ போல நம்ம மனசயும் நடுங்க வைக்குது. அப்படின்னா இது பாதி பகுதி தானா. மீதி எங்க இருக்கு. இன்னக்கி ரெண்டு தான் படிச்சேன் பொறவால வாறன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru September 8, 2015 at 11:50 AM

      வாங்கோ முருகு, வணக்கம்.

      //ஸார் ஒரே பதிவுல 10- கதைகள போட்டா எதையும்
      முளுமையா படிச்சு உள் வாங்கி கருத்து பகிர்ந்துக்க
      முடியலியே.//

      ஏதோ கொஞ்சம் படிச்சீங்களே, அதுவே போதும்.

      [நம் அதிராவுக்கு அக்காவா இருப்பீங்க போலிருக்கே :) ]

      //முதல் கதையில அதாவது (மந்தையோட்டியின் மனைவி) அந்த ஏழை தாய் குழந்தைகளின் நிலமை திடுக்குனு ஆயிடுச்சி.//

      கதை தானே. திடுக்கிட்டுப்போகாதீங்கோ. அப்புறம் ஜூரம் வந்துடுமாக்கும்.

      //பாம்ப வெறட்டினாங்களா அதுவே போயிடுச்சா?//

      அது யாருக்குத்தெரியும்? நூலை வாங்கிப் புரட்டிப்பார்த்தால் மட்டுமே தெரியுமாக்கும். :)

      //அடுத்து சீனத்தவனின் ஆவி கதைல அவன் குதிரல போற
      காட்சி அவன் உருவம் கண்ணு முன்னாடியே நிக்குது. //

      குதிரையிலே போனவன் அவன் சிட்டாகப் பறந்து போயே போய்ட்டான். இவன் வேறொருவன். இவன் தான் நடந்தே காட்டைக்கடந்து போனவன். சரியாப்படியுங்கோ. அப்போதான் புரியும்.

      //கொலைகார ஓடை செத்தவனின் சந்து கன்னுகுட்டி தோல்
      உரிக்குதுனு விவரணம் ராட்ச ச பல்லி கோவன்னாவ போல நம்ம மனசயும் நடுங்க வைக்குது.//

      அடடா !

      //அப்படின்னா இது பாதி பகுதி தானா. மீதி எங்க இருக்கு. இன்னக்கி ரெண்டு தான் படிச்சேன் //

      மீதியெல்லாம்தான் தொடரும்ன்னு போட்டிருக்கே. பத்துக்கு இரண்டு மட்டும் படிச்சுட்டு மீதி எங்கேன்னு கேள்வி வேறு கேட்கிறீங்களே ! :)

      //பொறவால வாறன்.//

      நீங்க இன்னிக்கு இதில் ரெண்டு படிச்சதே பெரிசு. மெதுவாகவே ஒழிந்தபோது வாங்கோ, போதும். :)

      நீக்கு
    2. இரண்டு கதைச்சுருக்கங்களே உங்களை இந்த அளவுக்குப் பாதித்திருக்கிறதா? மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்துப் பெருமைகளும் கோபு சாருக்கே.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. அன்புள்ள கோபு சார், ஒவ்வொரு கதையையும் மிக அழகாக தெளிவாக சுவாரசியமாக தாங்கள் விமர்சித்திருக்கும் பாங்கு மனம் கவர்கிறது. எந்த அளவுக்கு கருத்தூன்றிப் படித்திருந்தால் இது சாத்தியம். கதைகளின் முடிச்சை அவிழ்த்துவிடாமல் அதே சமயம் வாசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும்படியாக மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

    சீனத்தவனின் ஆவி கதையில் முடிவு தெரிந்துவிட்டால் சுவாரசியம் குன்றிவிடும் என்பதை மிகச்சரியாக கணித்து முடிவைச் சொல்லாமல் தவிர்த்துள்ளது சிறப்பு.
    பிரமாதமான சிறுகதை ஆசிரியல்லவா தாங்கள்? அதனால்தான் இந்தப் புரிதல் தங்களுக்கு எளிதில் கைவந்துள்ளது.

    இந்தப் புத்தகத்தின் கதைகளை இவ்வளவு துல்லியமாகவும் சுவையாகவும் வரையறுத்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் கோபு சார்.

    தங்கள் பாணியிலான கதை பற்றிய கருத்துகளும் விமர்சனங்களும் கதைகளை மொழிபெயர்த்தெழுதிய எனக்கே விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்போது நிச்சயம் மற்றவர்களுக்கு வாசிக்கத்தூண்டும் ஆர்வத்தை உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமேயில்லை. மனமார்ந்த நன்றி சார்.

    இங்கு கருத்திட்டு வாழ்த்திய பாராட்டிய அனைவருக்கும் என் அன்பான நன்றிகள் பல. தங்களுடைய இத்தொடரின் மூலம் பலருக்கும் நூல் பற்றிய அறிமுகம் கிடைத்திருப்பதில் அளவிலாத மகிழ்ச்சி. நாளை வந்து அனைவருக்கும் தனித்தனியே நன்றி சொல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி September 8, 2015 at 6:22 PM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      தங்களின் தமிழாக்கக் கதைகளைப்பற்றி புகழுரை என்ற பெயரில் நான் இங்கு சொல்லியுள்ள கருத்துக்களுக்கு தாங்கள் வருகை தந்து என்ன சொல்லப்போகிறீர்களோ என்ற ஒரே கவலையில் நான் இதுவரை மூழ்கியிருந்தேன்.

      கதாசிரியரான தாங்களே இங்கு அன்புடன் வருகை தந்து என் இந்தப்பதிவினைப் பாராட்டி, விரிவான பின்னூட்டமிட்டுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாகவும், மனதுக்கு நிம்மதியாகவும், ஆறுதலாகவும் உள்ளது.

      இதிலும் சில வரிகளில் தாங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லாமல் ஓர் மிகச்சிறந்த ’விமர்சன வித்தகி’யேதான் என்பதை நிரூபித்தும் உள்ளீர்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான மற்றும் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  9. வணக்கம் அய்யா,
    ஒவ்வொரு கதைப்பற்றியும் எழுதனும், அருமையாக இருக்கு, அவரின் நூலினை படிக்கும் ஆவல் எழுகிறது.
    ஆனால் பெரும்பாலும் சோகம் தான் கதைகளில்,,
    8 வது கதை, கதையின் நாயகன் என்றாவது ஒரு நாள்,,,
    அது தான் நூலின் தலைப்பாகவும்,,,,,, அருமை.
    10 கதையும் படித்து தனியே எழுதனும் அப்படி இருக்கு.
    தங்கள் தொகுப்பும் அருமை, வாழ்த்துககள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran September 8, 2015 at 7:39 PM

      //வணக்கம் ஐயா,//

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //ஒவ்வொரு கதைப்பற்றியும் எழுதனும், அருமையாக இருக்கு, அவரின் நூலினை படிக்கும் ஆவல் எழுகிறது.
      ஆனால் பெரும்பாலும் சோகம் தான் கதைகளில்,,
      8 வது கதை, கதையின் நாயகன் என்றாவது ஒரு நாள்,,,
      அது தான் நூலின் தலைப்பாகவும் ...... அருமை.
      10 கதையும் படித்து தனியே எழுதனும் அப்படி இருக்கு.//

      தாங்கள் அதுபோல 10 பின்னூட்டங்கள் போட்டு தனித்தனியாக ஒவ்வொரு கதையைப்பற்றிய தங்களின் கருத்துக்களையும் எழுதியிருந்தால் ஓர் வித்யாசமாக அழகாக இருந்திருக்குமே ! நூலாசிரியர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் அது மகிழ்ச்சியை அளித்திருக்குமே!! இப்போதுகூட முடிந்தால் அதுபோலச் செய்யுங்கோ.

      //தங்கள் தொகுப்பும் அருமை, வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      இந்த என் தொடருக்குத் தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
    2. மூலக்கதாசிரியரின் துயரம் நிறைந்த வாழ்க்கையும் அவர் வாழ்ந்த காலத்துச்சூழலும் அவருடைய கதைமாந்தர்களின் வழியே பிரதிபலிப்பதே சோகத்துக்குக் காரணம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி.

      நீக்கு
  10. ’கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்...’ என்ற தலைப்பில் கீதமஞ்சரி வலைத்தளப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் 08.09.2015 வெளியிட்டுள்ளதோர் பதிவு: http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_8.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டும்.

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களங்களில் அமைந்து மாறுபட்ட உணர்வுகள் தந்து படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன.
    .
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் September 9, 2015 at 6:33 AM

      வாங்கோ நண்பரே, வணக்கம்.

      //ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களங்களில் அமைந்து மாறுபட்ட உணர்வுகள் தந்து படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பா.

      இறைநாட்டத்துடன் நாளையும் நாம் சந்திப்போம்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. தங்கள் வுருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      நீக்கு
  12. அடடா!

    அருமை கோபு அண்ணா, உங்கள் கதைச் சுருக்கங்கள் படிக்கும் ஆவலை மிகவும் தூண்டி விடுகிறது.

    எனக்கென்னவோ ஆங்கிலத்தில் படிப்பதை விட, தமிழில் படிப்பதுதான் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் திருமதி கீதாவிற்கு என் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 9, 2015 at 9:41 AM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //அடடா!

      அருமை கோபு அண்ணா, உங்கள் கதைச் சுருக்கங்கள் படிக்கும் ஆவலை மிகவும் தூண்டி விடுகிறது.//

      மிகவும் சந்தோஷம்.

      //எனக்கென்னவோ ஆங்கிலத்தில் படிப்பதை விட, தமிழில் படிப்பதுதான் மிகவும் பிடிக்கும்.//

      எனக்கும் அதுபோலவே. தமிழ் நம் தாய்மொழி அல்லவா !

      //அந்த வகையில் திருமதி கீதாவிற்கு என் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.//

      திருமதி கீதா அவர்கள் சார்பில் தங்களின் நன்றியுடன் கூடிய வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
    2. உங்கள் கருத்துகள் பெருமகிழ்வளிக்கின்றன. மிகவும் நன்றி ஜெயந்தி மேடம்.

      நீக்கு
  13. புகழுரையைப் படிக்கும் போது மீண்டும் அக்கதைகள் நினைவில் நிழலாடுகின்றன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M Balasubramaniam September 9, 2015 at 12:01 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //புகழுரையைப் படிக்கும் போது மீண்டும் அக்கதைகள் நினைவில் நிழலாடுகின்றன. வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி சார் + மிக்க நன்றி, சார்.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  14. திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் அவற்றை மிகவும் கஷ்டப்பட்டு ஆர்வமாகப் படித்து, பல மொழி அகராதிகளைப் புரட்டிப்பார்த்து, தமிழில் மொழியாக்கம் செய்துள்ளதுதான் இதில் உள்ள மிகச்சிறப்பாக நான் நினைக்கிறேன். //

    நீங்கள் சொல்வது சரியே . மொழியாக்கம் என்பது மிகவும் கஷ்டமான் பணி மூலக்கதையை சிதைக்காமல் அப்படியே நமக்கு புரிகிற மாதிரி வெகு அழகாய் எழுதி இஎருந்தார்கள். உங்கள் விமர்சனத்தால் மீண்டும் படிக்க ஆவல்.


    வாழ்த்துக்கள் சார், உங்களுக்கும், கீதமஞ்சரிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு September 9, 2015 at 3:05 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      **திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் அவற்றை மிகவும் கஷ்டப்பட்டு ஆர்வமாகப் படித்து, பல மொழி அகராதிகளைப் புரட்டிப்பார்த்து, தமிழில் மொழியாக்கம் செய்துள்ளதுதான் இதில் உள்ள மிகச்சிறப்பாக நான் நினைக்கிறேன்.** - vgk

      //நீங்கள் சொல்வது சரியே . மொழியாக்கம் என்பது மிகவும் கஷ்டமான பணி.//

      மிகவும் கஷ்டமான பணிதான். அதுவும் அதிலுள்ள பலதரப்பட்ட மக்களின் பலதரப்பட்ட கொச்சை மொழிகளைப் படித்து புரிந்துகொண்டு மொழியாக்கம் செய்வது என்பது எல்லோராலும் இயலாது. தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி, மேடம்.

      //மூலக்கதையை சிதைக்காமல் அப்படியே நமக்கு புரிகிற மாதிரி வெகு அழகாய் எழுதி இருந்தார்கள்.//

      அதுதான் அவர்களின் ஸ்பெஷாலிடியாக நானும் நினைத்து மகிழ்கிறேன்.

      //உங்கள் விமர்சனத்தால் மீண்டும் படிக்க ஆவல்.//

      :) மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

      //வாழ்த்துக்கள் சார், உங்களுக்கும், கீதமஞ்சரிக்கும்.//

      இந்தச்சிறிய தொடருக்கு இன்று ஒரே நாளில் தங்களின் அடுத்தடுத்த தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம். - அன்புடன் VGK

      நீக்கு
    2. சாதாரண ஆங்கிலமே எனக்குத் தடுமாற்றம் தரும்போது புதிய சூழலை மையமாக வைத்து ஆஸ்திரேலிய ஆங்கிலத்திலும் கொச்சை மொழிவழக்கிலும் எழுதப்பட்டது என்பதால் சற்று சிரமப்பட்டேன் என்பது உண்மை. ஆனால் இன்று அனைத்தும் மறந்தேபோய்விட்டன. மகிழ்வு மட்டுமே மிஞ்சியிருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      நீக்கு
  15. இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கதைகளில் பெரும்பாலானவை என்னையும் வெகுவாக கவர்ந்தவை. இப்பகுதியை படித்த போது நான் வாசித்து ரசித்தது நினைவுக்கு வந்தது. கதைகளை நன்கு உள்வாங்கி ரசித்துப் படித்துள்ளீர்கள் என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. கீதாவின் புத்தகத்துக்கு நல்லதொரு அறிமுகத்தை உங்கள் தொடர் மூலம் கொடுத்திருக்கிறீர்கள். தொடர் மிகவும் அருமை! பாராட்டுக்கள் கோபு சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி September 9, 2015 at 10:42 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கதைகளில் பெரும்பாலானவை என்னையும் வெகுவாக கவர்ந்தவை. இப்பகுதியை படித்த போது நான் வாசித்து ரசித்தது நினைவுக்கு வந்தது. கதைகளை நன்கு உள்வாங்கி ரசித்துப் படித்துள்ளீர்கள் என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. கீதாவின் புத்தகத்துக்கு நல்லதொரு அறிமுகத்தை உங்கள் தொடர் மூலம் கொடுத்திருக்கிறீர்கள். தொடர் மிகவும் அருமை! பாராட்டுக்கள் கோபு சார்!//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான பல நல்ல கருத்துக்களுக்கும் ‘அருமை’யெனப் பாராட்டியுள்ளதற்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிகவும் நன்றி அக்கா. எந்த அளவுக்குக் கதைகளை உள்வாங்கியிருந்தால் இவ்வளவு தெளிவான விமர்சனத்தை முன்வைக்கமுடியும்? என்னுடைய வியப்பும் அதுதான்.

      நீக்கு
  16. மலாக்கி கதையை உடனே படிக்க வாய்ப்பும் இருப்பதால் ஓர் எட்டுப் போய் படித்துவிட்டு வந்தேன். முடிவு மனதைப் பிசைகிறது. தமிழின் ஓட்டம் அவ்வளவு அருமை. மொழிபெயர்ப்பு என்று சொன்னால் தான் தெரியும். உங்களுடைய புகழுரை அருமைக்கு அருமை சேர்க்கிறது. நல்ல கதைகள் கைகளில் கிடைப்பதே அரிதான இக்கணத்தில், கதையும் தமிழும் திருமதி கீதா அவர்கள் சேர்த்துக் கோர்த்துக் கொடுக்க, கதைச் சரத்தின் முன் தொங்கும் பூச்செண்டாக தங்கள் புகழுரை. இன்னும் இன்னும் படித்து உணவுர்களைப் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா. நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Venkat S September 9, 2015 at 10:56 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //மலாக்கி கதையை உடனே படிக்க வாய்ப்பும் இருப்பதால் ஓர் எட்டுப் போய் படித்துவிட்டு வந்தேன்.//

      அதுபோல ஒரு 3-4 கதைகள் மட்டும் அவர்களின் வலைத்தளத்தினில் நாம் முழுவதுமாகப் படிக்க இயலும். ஆங்காங்கே நான் Easy Ref க்காக அவற்றின் Links கூட கொடுத்துள்ளேன். :)

      //முடிவு மனதைப் பிசைகிறது.// ஆமாம், சார்.

      //தமிழின் ஓட்டம் அவ்வளவு அருமை. மொழிபெயர்ப்பு என்று சொன்னால் தான் தெரியும். உங்களுடைய புகழுரை அருமைக்கு அருமை சேர்க்கிறது. நல்ல கதைகள் கைகளில் கிடைப்பதே அரிதான இக்கணத்தில், கதையும் தமிழும் திருமதி கீதா அவர்கள் சேர்த்துக் கோர்த்துக் கொடுக்க, கதைச் சரத்தின் முன் தொங்கும் பூச்செண்டாக தங்கள் புகழுரை. இன்னும் இன்னும் படித்து உணவுர்களைப் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா. நன்றிகள் பல.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான + விரிவான மலர்ச்சரமாகவும் பூச்செண்டாகவும் மணக்கும் + மயக்கும் கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். Please do come ...... to Part Nos: 2, 4 & 5 also.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. தங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பெரும் ஊக்கம் தருவதாய் உள்ளன. கதைகளை உடனுக்குடன் இணைப்புவழி சென்று வாசித்தது மகிழ்வளிக்கிறது. வருகைக்கும் கருத்துகளுக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

      நீக்கு
    3. தாங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. இன்னும் எவ்வளவு படிக்க வேண்டியிருக்கிறது !! படித்துவிட்டு பின்னூட்டம் இடாமல் போக எனக்கு மனம் வரவே வராது. அடுத்த பதிவிற்கு செல்கிறேன்.

      நீக்கு
    4. Venkat S September 10, 2015 at 10:03 PM

      வாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றிகள்.

      //தாங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. இன்னும் எவ்வளவு படிக்க வேண்டியிருக்கிறது !! படித்துவிட்டு பின்னூட்டம் இடாமல் போக எனக்கு மனம் வரவே வராது. அடுத்த பதிவிற்கு செல்கிறேன்.//

      OK Sir. Thank you, Sir. - vgk

      நீக்கு
  17. சிலவற்றை வாசித்துள்ளேன் ..மற்றவற்றை வாசிக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin September 10, 2015 at 10:19 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சிலவற்றை வாசித்துள்ளேன் ..மற்றவற்றை வாசிக்கணும்//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  18. என்றாவது ஒருநாள் என்னும் தலைப்பே மிகவும்
    எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது..

    கதைசுருக்கமும் புகழுரைகளும் சிறப்பாக இருக்கிறது.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:34 AM

      வாங்கோ, வணக்கம்.

      //என்றாவது ஒருநாள் என்னும் தலைப்பே மிகவும்
      எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது..//

      ஆமாம். ’என்றாவது ஒரு நாள்’ தாங்கள் பழையபடி, உடல்நலம் நல்லபடியாக ஆகி, பின்னூட்டமிட திரும்பி வரமாட்டீர்களா என என் எதிர்பார்ப்பினை தூண்டுவதாக அமைந்தது போலவே என்றும் சொல்லலாம்.

      //கதைச்சுருக்கமும் புகழுரைகளும் சிறப்பாக இருக்கிறது.. வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  19. Mail message from ஆச்சி on 09.11.2015 .... 5.52 AM

    Ennaal comment Box il comment publish kodukka mudiyavillai..so inge therivikiren.

    மற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பதில் எள்ளளவும் குறையற்ற Vgk sir,

    எழுத்தாற்றல் மிக்க கீதா அவர்களின் மொழி பெயர்ப்பு படைப்பினை தங்களது நடையில் பகிர்ந்தளித்துள்ளீர்கள்.

    -=-=-=-=-=-

    வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

    தங்களுக்கும் தங்கள் கணவர், குழந்தைகள் இருவருக்கும் + தங்கள் இல்லத்தில் உள்ள மாமியார் போன்ற மற்ற உறவினர்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு