2
அனைவருக்கும் இனிய
விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துகள் !
’பிள்ளையாரப்பா’வுக்கு
நம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு மிகப்பெரிய எடைகொண்ட
ஒரே கொழுக்கட்டை எடுத்துச்செல்லப்படுகிறது
^ நன்றி: தினமலர்-திருச்சி - 18.09.2015 பக்கம்-9 ^
17.09.2015 வியாழக்கிழமை
நேற்றைய நிகழ்வு .... இன்றைய செய்தியாக !
^ நன்றி: தினமலர்-திருச்சி - 18.09.2015 பக்கம்-9 ^
17.09.2015 வியாழக்கிழமை
நேற்றைய நிகழ்வு .... இன்றைய செய்தியாக !
கடைகளில் கிடைக்கும் அழகோ அழகான
கலர் கலர் பிள்ளையார்கள்
-oOo-
புவனா ஒரு ஆச்சர்யக்குறி !
யார் அந்த புவனா?
புவனமாளும்
ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள்
அனைவரையும்
11.10.2015 ஞாயிறு
புதுக்கோட்டை
தமிழ் வலைப்பதிவர்கள்
சந்திப்பு திருவிழாவுக்கு
வருக! வருக!! வருக!!!
என தங்கத் தேரினில் ஏறி வந்து
அன்புடன் அழைக்கிறாள் !!!!
-oOo-
எனக்குத்தெரிந்து ஓர் 40-50 ஆண்டுகளுக்கு முன்புவரை புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகியவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒரே திருச்சி மாவட்டமாகத்தான் இருந்தது.
இன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்கள் பெயர்களில், தமிழ் எழுத்தாள வலைப்பதிவர்களாகிய நம்மில் பலரும் ஆங்காங்கே சிதறி இருப்பினும், வரும் 11.10.2015 ஞாயிறு, ’வலைப்பதிவர்கள் சந்திப்பு’ என்ற பெயரில் புதுக்கோட்டையில் மீண்டும் ஒன்றாக இணைய இருப்பது ஓர் வரவேற்கத்தக்க இனிமையான அனுபவமாகும்.
தமிழ் அறிஞர் + கவிஞர்
திரு. நா. முத்துநிலவன் அவர்கள்
தலைமையில்
“வலைப்பதிவர் திருவிழா-2015”
விழாக்குழுவினர் பற்றி அறிய
விழா நிகழ்வுகள் பற்றி அறிய
விழாவில் வழங்க உத்தேசித்துள்ள
விருதுகள் பற்றி அறிய
விழாவின் போது அங்கு வெளியிட இருக்கும்
’நூல் வெளியீடுகள்’ பற்றி அறிய
விழாவிற்காக இதுவரை நன்கொடை
அளித்துள்ளோர் பட்டியல் பற்றி அறிய
தங்களின் வருகையை பதிவு செய்து
விண்ணப்பப்படிவம் அனுப்பி வைக்க
இதுவரை தங்களின் வருகையை
உறுதி செய்துள்ளோர் பட்டியல் பற்றி அறிய
“தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”-ல்
இடம் பெற தகவல் அளித்துள்ளவர்கள் பற்றி அறிய
விழாவினைப்பற்றி தங்களின் வலைத்தளத்தில்
விளம்பரப்படுத்தி தனிப்பதிவு எழுதி
வெளியிட்டுள்ளோர் பற்றி அறிய
மின் தமிழ் இலக்கியப் போட்டி பற்றிய
முழுவிபரங்கள் அறிய
மேற்படி போட்டிக்கு இதுவரை வந்து குவிந்துள்ள
படைப்புகளின் தலைப்புக்களும், வகைகளும் அவற்றை
எழுதி அனுப்பியுள்ள பதிவர்களின் பெயர்களும் பற்றி அறிய
Latest Important Link with 30.09.2015 Position
Latest Important Link with 01.10.2015 Position
தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் அவரவர்களின் வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்ப
1) புதுக்கோட்டை திருவிழாவில் நேரில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.
2) தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015 க்கு தங்களைப்பற்றிய தகவல்கள் அளித்தும், விளம்பரங்கள் சேகரித்துக்கொடுத்தும் உதவலாம்.
3) விழா வெற்றிகரமாக நடைபெற நன்கொடைகள் அனுப்பி உதவலாம்
4) விழா பற்றிய செய்திகளை தங்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு, பிறர் அறிய விளம்பரப்படுத்திச் சிறப்பிக்கலாம்.
5) விழாவினை வாழ்த்தி கவிதைகளோ / வாழ்த்துரைகளோ அனுப்பி வைக்கலாம்.
6) மின்-தமிழ் இலக்கியப்போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.
மேலே கொடுத்துள்ள பல்வேறு இணைப்புகள் மூலம், மேலும் பல விபரங்களை அறிந்து, தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை நல்கி, விழா வெற்றிகரமாக நடைபெற உதவிடுமாறு, அனைவரையும் விழாக்குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
இதயத்தால் மகிழ்வோம்!!
மின்-தமிழ் இலக்கியப்போட்டிகளில் கலந்துகொண்டு
மொத்தம் 260 படைப்புகளை அளித்து
சிறப்பித்துள்ளோர் பற்றிய முழு விபரங்கள் அறிய
இதுவரை நடைபெற்ற
வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாக்களில் இல்லாத
புதிய திருப்பமும், சிறப்புமாக:
தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015 வெளியீடு
உலகம் முழுவதும் உள்ள தமிழ் வலைப்பூக்களில் யார்யார் எழுதுகிறார்கள்?
என்னென்ன எழுதிவருகிறார்கள்? எனும் விவரங்கள் அடங்கிய
“தமிழ்வலைப் பதிவர் கையேடு-2015” எனும் நூல் வெளியிடப் படவுள்ளது.
அதில் பங்கேற்க, உலகத் தமிழ்ப் பதிவர்கள்
தம்மைப் பற்றிய விவரக்குறிப்பு தந்துவருகிறார்கள்.
விழாவில் கலந்து கொள்ளும் பதிவர்களுக்கு
இது இலவசமாக வழங்கப்படவுள்ளது.
ooooooooooo
அழைப்பிதழ்
இனி சூடான சுவையான
புதிய செய்திகள் !
போட்டிகள் முடிந்தன... அடுத்து ஒரு போட்டி?!
மேலும் அதிக விபரங்களுக்கு
http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_3.html
வாசகர்களுக்கான விமர்சனப் போட்டி!
யாவரும் கலந்துகொள்ளலாம்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000
இந்தப் புதுமைப்போட்டியில் கலந்துகொள்வதற்கான படிவம்
இதோ இந்த இணைப்பினில் சுலபமாகக் கொடுக்கப்பட்டுள்ளது
http://dindiguldhanabalan. blogspot.com/2015/10/Tamil- Writers-Festival-2015-5.html
வெற்றியாளர்கள் மொத்தம்: 4 + 4 + 3 + 3 + 3 + 2 = 19
போட்டிக்கு வந்துள்ள 260 படைப்புகளில்
இந்தப்படைப்புகளே வெற்றிபெறக்கூடும் என
கருத்துக்கணிப்புச் செய்து
அனுப்பியுள்ளோர் பற்றிய விபரங்கள் அறிய
இதோ இணைப்பு
போட்டி முடிவுகள் அறிவிப்பு
அனைவருக்கும் நம் வாழ்த்துகள் !
-oOo-
-oOo-
விழா - நிகழ்ச்சி நிரல்
விழா ஏற்பாடுகள் பற்றி,
என்னுடன் அலைபேசியில் 10.09.2015 அன்று
பகிர்ந்துகொண்ட திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்,
16.09.2015 அன்று நீண்ட நேரம்
என்னுடன் பேசி மகிழ்வித்த
என்னுடன் பேசி மகிழ்வித்த
விழா ஒருங்கிணைப்பாளர்
கவிஞர் நா. முத்து நிலவன் ஐயா
அவர்களுக்கும்,
அவர்களுக்கும்,
தினமும் வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு செய்திகளை
உடனுக்குடன் பகிர்ந்துகொண்டுவரும்,
விழாக்குழுவினர் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருச்சி மாவட்டத்திலிருந்து விழாவில் கலந்துகொள்ள இதுவரை பெயர் அளித்து பதிவு செய்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.
குறிப்பாக நான் நேரில் சந்தித்துப்பேசிப் பழகியுள்ள
திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா
அவர்களுக்கும்
திருமதி. ருக்மணி சேஷசாயீ அம்மா
அவர்களுக்கும்
என் மனம் நிறைந்த பாராட்டுகள் + வாழ்த்துகள் +
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்று வாருங்கள் !
வென்று வாருங்கள் !!
தமிழ் வலைப்பதிவர்கள்
சந்திப்பு திருவிழா வெற்றிகரமாகவும்,
மிகச்சிறப்பாகவும் நடைபெற
என் அன்பான நல்வாழ்த்துகள்.
என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]
இதுவரை எந்தப் பதிவிலும் வந்திராத எல்லா செய்திகளையும் உள்ளடக்கிய பதிவு. கோபு சார் வாழ்த்துகள்
பதிலளிநீக்குG.M Balasubramaniam September 17, 2015 at 5:44 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//இதுவரை எந்தப் பதிவிலும் வந்திராத எல்லா செய்திகளையும் உள்ளடக்கிய பதிவு. கோபு சார் வாழ்த்துகள்.//
பலரும் பலவிதமாக சிறப்பாகத்தான் எழுதி வருகிறார்கள்.
இருப்பினும் வாசகர்களில் பெரும்பாலோருக்கு, இதில் பல்வேறு குழப்பங்கள் இருக்கக்கூடும் என எனக்குத் தோன்றியது.
அதுபோல அவர்களுக்கு குழப்பமேதும் இல்லாமல் இருக்க மட்டுமே, மிகவும் யோசித்து, இவ்வாறு நான் இந்தப்பதிவினை வடிவமைத்துள்ளேன்.
தங்களின் புரிதலுடன் கூடிய பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் September 17, 2015 at 6:09 PM
நீக்குவாங்கோ Mr. DD Sir, வணக்கம்.
//இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...//
மிக்க நன்றி.
தங்களின் வருகை மிகவும் முக்கியம் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் September 17, 2015 at 6:10 PM
நீக்கு//தங்களின் வருகை மிகவும் முக்கியம் ஐயா... நன்றி...//
:))))) நேற்றே தங்களுக்கு விரிவான மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். தாங்களும் அதனை நன்கு புரிந்துகொண்டு பதில் அளித்துவிட்டீர்கள். :)))))
விழா சிறக்க எனது வாழ்த்துகளும்....
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் September 17, 2015 at 7:50 PM
நீக்குவாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம்.
//விழா சிறக்க எனது வாழ்த்துகளும்....//
மிக்க நன்றி, ஜி.
அன்புடன் வீ.....ஜீ
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குகரந்தை ஜெயக்குமார் September 17, 2015 at 8:02 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா//
மிக்க நன்றி.
வாட்ஸ்-அப் செய்திகளிலும் இந்தப்பதிவினை இடம்பெறச்செய்துள்ளீர்கள். அதற்கும் என் நன்றிகள்.
திரு ஜி.எம்.பி அய்யா சொல்லியிருப்பது போல விழா நிகழ்வுகள் பற்றிய அரிய தொகுப்பாகவே தங்கள் பதிவு வந்திருக்கிறது அய்யா. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். நம் வலைச்சித்தர் அவர்கள் சொன்னது போல விழாவுக்கு, நூற்றுக்கணக்கான தமிழ்ப்பதிவர்களை அறிமுகப்படுத்திய அனுபவமிக்க வலையுலக முன்னோடியான தாங்கள் அவசியம் வரவேண்டும் என்று விழாக்குழுவின் சார்பில் அன்போடு அழைக்கிறேன். ஒரு சிறு குறிப்பு - தாங்கள் சொன்னது போல நான் தமிழறிஞனல்லன் இன்னும் கற்றுவருகிற தமிழ் மாணவன்தான். தங்களின் அன்பு மிகையான எழுதியிருப்பதற்கேற்ப என்னைத் தகுதிப் படுத்திக் கொள்ள முயல்வேன் என உறுதியளிக்கிறேன். நன்றி வணக்கம்.
பதிலளிநீக்குMuthu Nilavan September 17, 2015 at 8:08 PM
நீக்குவாங்கோ ஐயா, வணக்கம் ஐயா.
//திரு ஜி.எம்.பி அய்யா சொல்லியிருப்பது போல விழா நிகழ்வுகள் பற்றிய அரிய தொகுப்பாகவே தங்கள் பதிவு வந்திருக்கிறது அய்யா. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.//
இந்த விழாபற்றி பலரும் பலவிதமாக மிகச்சிறப்பாகத்தான் அவரவர்கள் பதிவுகளில் எழுதிவருகிறார்கள்.
இருப்பினும் அவையாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, ஒரே விஷயத்தைச் சொல்வதுபோல சிலருக்கு [குறிப்பாக இதிலெல்லாம் அதிகமாக ஆர்வமில்லாத சிலருக்கு] ஒருவித அலுப்பினைத் தரக்கூடும் என்பதால் மட்டுமே, நான் இந்தத்தலைப்பினை சற்றே வித்யாசமாகக் கொடுத்துள்ளதுடன், தங்களின் இந்த புதுக்கோட்டை விழா ஏற்பாடுகளிலுள்ள ஒவ்வொரு மாறுபட்ட சிறப்புச் செயல்களுக்கான தலைப்புக்களையும், அவற்றிற்கான இணைப்புக்களுடன் தனித்தனியாக புரியும்படியாக விளக்கிக் கூறியுள்ளேன்.
இந்த என் பாணி, இதில் ஆர்வத்துடன் பங்கேற்கும் பலருக்கும் எளிதில் புரியும் வண்ணம் அமைந்துள்ளதால், நம் திரு. GMB Sir, ’அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம், விமர்சன வித்தகி திருமதி கீதா மதிவாணன், நம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு. ஜீவி ஐயா போன்றவர்கள் இதனைப் பெரிதும் வரவேற்று மகிழ்ந்துள்ளனர்.
எல்லோரும்தான் இதைப்பற்றி தினமும் எழுதிக்கொண்டே இருக்கிறார்களே, நானும் எதற்கு இதுபற்றி தனியே ஒரு பதிவு எழுத வேண்டும் என நீங்கள் புதிதாக என்னிடம் ஓர் கோரிக்கை வைக்கிறீர்கள் என்றுதான் நானும் முதலில், மிகச்சாதாரணமாகவே நினைத்தேன்.
இப்போதுதான், அதன் [என் எழுத்துக்களின்] முக்கியத்துவத்தை நானும் பிறரின் பின்னூட்டங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்டேன்.
தாங்கள் என்னிடம் கோரிக்கை வைத்தது மிகவும் நியாயமே எனவும் எண்ணி இப்போது மகிழ்ந்து கொள்கிறேன். :)
//நம் வலைச்சித்தர் அவர்கள் சொன்னது போல விழாவுக்கு, நூற்றுக்கணக்கான தமிழ்ப்பதிவர்களை அறிமுகப்படுத்திய அனுபவமிக்க வலையுலக முன்னோடியான தாங்கள் அவசியம் வரவேண்டும் என்று விழாக்குழுவின் சார்பில் அன்போடு அழைக்கிறேன்.//
தங்களின் பேரன்புக்கும், நல்ல பண்புகளுக்கும், நாகரீகமான + கண்ணியமான அணுகுமுறைகளுக்கும், முதிர்ச்சியான பேச்சு + செயல்திறன்களுக்கும், தலைமைப்பொறுப்புக்கான அனைத்துத்தரம் வாய்ந்த குணங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தலைவணங்கி தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி, ஐயா.
தங்களைப்போன்றவர்கள் ஆங்காங்கே ஊருக்கு ஒருவராவது இருப்பதை நினைக்க மிகவும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. :)
// ஒரு சிறு குறிப்பு - தாங்கள் சொன்னது போல நான் தமிழறிஞனல்லன் இன்னும் கற்றுவருகிற தமிழ் மாணவன்தான்.//
தங்களைப்பற்றியும், தங்கள் அறிவு + பேச்சாற்றல் + எழுத்தாற்றல் + அடக்கம் ஆகியவை பற்றியும் அனைத்தும் முற்றிலுமாக அறிந்தவன் நான் என்பது தங்களுக்கே தெரியுமோ தெரியாதோ.
நான், திண்டுக்கல் லியோனி அவர்களின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொலைகாட்சியில் விரும்பிக் கேட்பவனும்கூட.
இன்று தமிழில் ஏராளமான எழுத்துப்பிழைகளுடன் தாராளமாக எழுதிவரும் யார் யாரெல்லாமோ தன்னைக் கவிஞர் என்றும், தமிழைக் காக்கவே இந்த உலகில் அவதரித்துள்ள அவதார புருஷன் என்றும் மார்தட்டிக்கொண்டிருக்கும் இந்தப்பதிவுலகில், தங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் தேவையா ஐயா? :)
//தங்களின் அன்பு மிகையான எழுதியிருப்பதற்கேற்ப என்னைத் தகுதிப் படுத்திக் கொள்ள முயல்வேன் என உறுதியளிக்கிறேன். நன்றி வணக்கம்.//
தங்களின் அன்பான வருகைக்கும், வலையுலகிலிருந்து சற்றே நீண்ட ஓய்விலிருக்கும் என்னை இவ்வாறு ஒரு பதிவிட ஊக்கமும் உற்சாகமும் அளித்துத் தூண்டிவிட்டுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.
புதுக்கோட்டை ’தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா’ மிகச்சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய மீண்டும் என் நல்வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
அஹா அருமை கோபால் சார். நான் வர முயல்கிறேன். ஆனால் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். பக்கம்தானே. :)
பதிலளிநீக்குஅருமையான தெளிவான பகிர்வு. இதை அப்படியே சுட்டு என் ப்லாகில் போட்டுக்கலாமா எனத் தோணுது. :)
Thenammai Lakshmanan September 17, 2015 at 10:13 PM
நீக்குவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.
//அஹா அருமை கோபால் சார். நான் வர முயல்கிறேன். ஆனால் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். பக்கம்தானே. :) //
ஹைதராபாத்தாக இருந்தால் ஒருவேளை நான் பறந்து வந்திருப்பேனோ என்னவோ :)
//அருமையான தெளிவான பகிர்வு.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.
//இதை அப்படியே சுட்டு என் ப்லாகில் போட்டுக்கலாமா எனத் தோணுது. :) //
ஆஹா, தாராளமாகச் செய்துகொள்ளுங்கோ. எனக்கு இதில் எந்த ஒரு ஆட்சேபணையும் கிடையாது.
அன்புடன் VGK
அருமையான தொகுப்பு தாங்களும்் விழாவில் கலந்து அது பற்றிய பார்வையை த க்கள் தளத்தில் அறியும் ஆவலுடன்.
பதிலளிநீக்குதனிமரம் September 18, 2015 at 12:42 AM
நீக்கு//அருமையான தொகுப்பு தாங்களும் விழாவில் கலந்து அது பற்றிய பார்வையை தங்கள் தளத்தில் அறியும் ஆவலுடன்.//
வாங்கோ சார், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் ஆவலுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
சிறப்பு.
பதிலளிநீக்குஸ்ரீராம். September 18, 2015 at 6:05 AM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
//சிறப்பு.//
மிக்க நன்றி, ஸ்ரீராம்.
உச்சிப்பிள்ளையாருக்கு கொழுக்கட்டையை தூக்கி செல்வதை தொலைகாட்சியில் பார்த்து இரசித்ததை திரும்பவும் பார்க்க உதவியமைக்கு நன்றி!
பதிலளிநீக்குபுதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் விழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் தாங்கள், அந்த விழாவிற்கு வர இயலவில்லை என்பது வருத்தமே. என்னாலும் பங்கேற்க இயலவில்லை. அந்த விழாவை காணொளியில் கண்டு இரசித்து வாழ்த்துவோம்!
வே.நடனசபாபதி September 18, 2015 at 7:35 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//உச்சிப்பிள்ளையாருக்கு கொழுக்கட்டையை தூக்கி செல்வதை தொலைகாட்சியில் பார்த்து இரசித்ததை திரும்பவும் பார்க்க உதவியமைக்கு நன்றி! //
மிகவும் சந்தோஷம். இருப்பினும் இதில் நான் காட்டியுள்ளது சென்ற சில ஆண்டுகளில் நிகழ்ந்தது. நேற்றைய தினம் நிகழ்ந்த இதே நிகழ்ச்சியின் இதே படம் இன்றைய திருச்சி தினமலரில் பக்கம் எண்: 9 ல் Black & White இல் வெளியிடப்பட்டுள்ளது. முடிந்தால் அதையும் இணைத்துவிட முயற்சிக்கிறேன்.
//புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் விழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் தாங்கள், அந்த விழாவிற்கு வர இயலவில்லை என்பது வருத்தமே. என்னாலும் பங்கேற்க இயலவில்லை. அந்த விழாவை காணொளியில் கண்டு இரசித்து வாழ்த்துவோம்! //
அப்படியே செய்வோம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
திருச்சி மலைக்கோட்டை - பிள்ளையார் சதுர்த்தித் திருவிழா - மிகப்பெரிய ஒரே கொழுக்கட்டை - பற்றிய நேற்றைய 17.09.2015 புதுப்படங்கள் சில [கருப்பு வெள்ளை + கலர்] இப்போது புதிதாக இந்த என் பதிவினில் இணைத்துள்ளேன். இது குறிப்பாகத் தங்களுக்கும், பொதுவாக மற்றவர்களுக்குமான தகவலாகும். அன்புடன் VGK
நீக்குஅருமையான தொகுப்பு கோபு சார், நான் அனுப்பிய என் தளம் பற்றிய விவரங்களின் status எப்படிதெரிந்து கொள்வது என்கிற கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது, நன்றிகோபு சார்.
பதிலளிநீக்குrajalakshmi paramasivam September 18, 2015 at 8:45 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//அருமையான தொகுப்பு கோபு சார், நான் அனுப்பிய என் தளம் பற்றிய விவரங்களின் status எப்படிதெரிந்து கொள்வது என்கிற கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது, நன்றிகோபு சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குழப்பமேதும் இல்லாமல் கேள்விக்கு விடை கிடைத்திருப்பதாகச் சொல்லியிருப்பதற்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
வழக்கம்போல் தங்களுடைய தனித்துவம் தொணிக்க அழகான தொகுப்பாக புதுக்கோட்டை பதிவர் சந்திப்புத் திருவிழா பற்றிய விவரங்கள்.. புவனா ஒரு ஆச்சர்யக்குறி என்று தலைப்பிலேயே அசத்தல் ஆரம்பம்... அம்மாம்பெரிய கொழுக்கட்டையுடன் அடுத்த அசத்தலான ஆச்சர்யம். திருச்சிக்காரி என்றாலும் இதுபோன்ற ஒரு காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இன்று பார்த்து வியந்தேன். நேர்த்தியான தொகுப்புக்கு இனிய பாராட்டுகள் கோபு சார்.
பதிலளிநீக்குகீத மஞ்சரி September 18, 2015 at 1:55 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//வழக்கம்போல் தங்களுடைய தனித்துவம் தொணிக்க அழகான தொகுப்பாக புதுக்கோட்டை பதிவர் சந்திப்புத் திருவிழா பற்றிய விவரங்கள்.. புவனா ஒரு ஆச்சர்யக்குறி என்று தலைப்பிலேயே அசத்தல் ஆரம்பம்...//
தங்களின் அன்பான வருகைக்கும், அந்த புவனா போன்றே அழகான, அசத்தலான, ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
தலைப்புத்தேர்வினை தாங்கள் ரஸித்துச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)
//அம்மாம்பெரிய கொழுக்கட்டையுடன் அடுத்த அசத்தலான ஆச்சர்யம்.//
ஒவ்வொரு கொழுக்கட்டையும் தலா 75 கிலோ எடை கொண்டதாம். கீழேயுள்ள மாணிக்க விநாயகருக்கு ஒன்றாம், மேலேயுள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஒன்றாம்.
இவற்றைத் தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் புதன் மாலை வேளையில் கோயில் மடப்பள்ளியில் துவங்கியதாம்.
பாரம்பர்ய முறையில் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டதாம்.
பெருமளவிலான பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய்கள், ஜாதிக்காய்கள், தேங்காய்கள், நெய், எள் முதலியவற்றைச் சேர்த்து இதனைச் செய்துள்ளார்கள்.
இதுதவிர தேங்காய், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், அவல், பொரி, கடலை, சிறிய அளவிலான மோதகங்கள் என பலவும் எடுத்துச்செல்லப்பட்டு, இரண்டு பிள்ளையார்களுக்கும் நிவேதனம் செய்து, பூஜை + மஹா தீபாரதனை செய்து, சிறப்புக் கூட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது.
வருகை தந்த அனைவருக்கும் அந்த மிகப்பெரிய கொழுக்கட்டைப் பிரஸாதம், பிரித்தளிக்கப்பட்டுள்ளது.
//திருச்சிக்காரி என்றாலும் இதுபோன்ற ஒரு காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை.//
நானும் எவ்வளவோமுறை அங்கு உச்சிப்பிள்ளையாரிடமும், தாயுமானவரிடமும், கீழேயுள்ள மாணிக்க விநாயகரிடமும் சென்று வந்துள்ளேன். இந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் நானும் இதுவரை, இன்றுவரை நேரில் கண்டதே இல்லை.
பொதுவாக எனக்கு அதிகக் கூட்டம் + கும்பல் என்றாலே அந்த இடங்களுக்குப் போகப்பிடிப்பது இல்லை. இதை நான் இங்கு சொல்வது புதுக்கோட்டைக்கோ என தயவுசெய்து நினைச்சுடாதீங்கோ, ப்ளீஸ் :)))))
//இன்று பார்த்து வியந்தேன். நேர்த்தியான தொகுப்புக்கு இனிய பாராட்டுகள் கோபு சார்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
பிரியமுள்ள கோபு
எது மாதிரியும் இல்லாத புது மாதிரி-- இது தான் வை.கோ. சார் டச்சா!.. 'பிரசன்டேஷன்' நேர்த்தி' வழக்கம் போல அற்புதம்!
பதிலளிநீக்குதமிழ் வலைப்பதிவர் கையேடு-- 2015.. யார் மனத்தில் உதித்த ஐடியாவோ! வாழ்த்துக்கள்! புதுமையான இனி வரப்போகும் வலைப்பதிவர் மாநாடுகளுக்கும் உதவக்கூடிய ஆக்கபூர்வமான முயற்சி.. இதை ஆரம்பித்து வைத்த புதுகை மாநாட்டின் நினைவுகள் வலையுலக சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்!
நல்ல பல முடிவுகளை எடுக்க மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்!
ஜீவி September 18, 2015 at 2:48 PM
நீக்குவாங்கோ சார், நமஸ்காரங்கள், வணக்கம்.
//எது மாதிரியும் இல்லாத புது மாதிரி//
இதைப்படித்ததும் நான் சந்தாகட்டி வரவழைத்து தொடர்ச்சியாகப்படித்து வரும் ‘கிழக்கு வாசல் உதயம்’ என்ற மாத இதழே என் நினைவுக்கு வந்தது.
அதில் மேல் அட்டையில் குறிப்பிட்டுள்ள முதல் வாசகமே “எது மாதிரியும் இல்லாத புது மாதிரி இதழ்” + “மனசெல்லாம் மலர்காடாக்கும் பல்சுவைத் திங்களிதழ்” என்பது மட்டுமே.
உண்மையிலேயே அந்த இதழில் சினிமாச்செய்திகளோ, கலர் கலரான கவர்ச்சிப்படங்களோ ஏதும் இல்லாதது மிகவும் வியப்பான விஷயமே.
அதன் ஆசிரியர் பெயர்: திரு. உத்தமசோழன் என்பதாகும். படத்தில் அவரின் உருவமும், எழுத்தில் அவரின் ஆற்றலும் எனக்குத்தங்களைத்தான் அடிக்கடி நினைவு படுத்தி வருகின்றன.
‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ என்ற தலைப்பில் மிக அருமையான தொடரினை கடந்த 62 மாதங்களாக இன்னும் தொடர்ந்து அவரே எழுதி வருகிறார். ஒவ்வொரு மாதமும் அந்த ஒரு தொடர் கதை மட்டுமே சுமார் 8 முதல் 10 பக்கங்களுக்கு வருகிறது. நான் மிகவும் விரும்பி சுவாரஸ்யமாகப் படிக்கும் தொடர்கதை இது.
இதழின் ஆசிரியர் அவர்களே எழுதிவரும் இந்தத்தொடர்கதையும், ”என் வாசலின் வழியே” என்ற தலைப்பில் அவர் எழுதிவரும் தலையங்கமும் சூப்பர். Excellent Writing & Beautiful Narrations. சும்மா சொக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரராக உள்ளார்கள்.
ஒவ்வொரு மாதமும் ‘சுந்தரவல்லி இதுவரை சொல்லிய கதை’ என்று முன்கதைச்சுருக்கமாகவும் அவர்கள் கொடுத்து வருவது, அவ்வப்போது பழசையெல்லாம் நாம் அசைபோட செளகர்யமாகவும், மிகச்சிறப்பாகவும் உள்ளது.
இந்த ’சுந்தரவல்லி சொல்லாத கதை’ என்பதை தனி நூலாகவே அவர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்கள் எனவும் தெரிகிறது. மேலும் பல நூல்களை வெளியிட்டுள்ள மிகப்பிரபலமான எழுத்தாளராக உள்ளார்கள் என்பதை இணையத்தின் மூலமும் இப்போது நான் தெரிந்துகொண்டேன்.
>>>>>
கோபு >>>>> திரு. ஜீவி சார் [2]
நீக்குகிழக்கு வாசல் உதயம் இதழின் நீளம் 10 அங்குலம், அகலம் 8 அங்குலம், அட்டையைத்தவிர 50 பக்கங்கள் உள்ள சற்றே வித்யாசமான தோற்றமுள்ள இதழ்.
மாத இதழ் விலை ரூ.25. ஓர் ஆண்டு சந்தா ரூ.300. மூன்று ஆண்டுகள் சந்தா ரூ. 850. ஐந்து ஆண்டுகள் சந்தா ரூ. 1,400. வாழ்நாள் சந்தா ரூ. 5000/-.
விலாசம்: திரு. உத்தமசோழன் அவர்கள், ஆசிரியர், ‘கிழக்கு வாசல் உதயம்’, 525, சத்யா இல்லம், மடப்புரம் 614 715 திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம். LL 04369-223292; Mobile: 9443343292 e-mail: kizhakkuvaasal@gmail.com
இவையெல்லாம் மிகச்சிறப்பான வாசிப்பினை அனுபவிக்க விருப்பமுள்ள அனைவருக்குமானதோர் பொது தகவலுக்காக மட்டுமே.
>>>>>
கோபு >>>>> திரு. ஜீவி சார் [3]
நீக்கு//எது மாதிரியும் இல்லாத புது மாதிரி-- இது தான் வை.கோ. சார் டச்சா!.. 'பிரசன்டேஷன்' நேர்த்தி' வழக்கம் போல அற்புதம்!//
இதைத்தங்கள் மூலம் அற்புதமாகவும் நேர்த்தியாகவும் இங்கு கேட்பதில் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். :)
>>>>>
கோபு >>>>> திரு. ஜீவி சார் [4]
நீக்கு//தமிழ் வலைப்பதிவர் கையேடு-- 2015.. யார் மனத்தில் உதித்த ஐடியாவோ! வாழ்த்துக்கள்! புதுமையான இனி வரப்போகும் வலைப்பதிவர் மாநாடுகளுக்கும் உதவக்கூடிய ஆக்கபூர்வமான முயற்சி.. இதை ஆரம்பித்து வைத்த புதுகை மாநாட்டின் நினைவுகள் வலையுலக சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்!
நல்ல பல முடிவுகளை எடுக்க மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்!//
மிகச்சரியாகவும் தெளிவாகவும் சொல்லியுள்ளீர்கள்.
தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், புதுக்கோட்டையில் நடக்கவுள்ள பதிவுலக எழுத்தாளர்கள் மாநாட்டின் ஒருசில விசேஷச் சிறப்புக்களை எடுத்துச்சொல்லி வாழ்த்தியுள்ளதற்கும், என் சார்பிலும், புதுக்கோட்டை ‘வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா’க்குழுவினர் சார்பிலும், தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரியமுள்ள கோபு
ஒவ்வொரு வருசமும் பதிவர் சந்திப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறதா? இப்ப தான் இது பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது. கலந்துகிட்டா நிறயா பதிவர்கள பாத்து பேச முடியும்ல. நெனச்சாலே சந்தோசமா இருக்கே. இதெல்லாம் ஒரு கோல்டன் சான்ஸ் கலந்துகிறவங்க அதிஸ்ட சாலிங்க. அப்பாலிக்கா அது பத்திலாம் எல்லாரும் பதிவுல சொல்லுவாங்கல்லா. அத படிச்சு திருப்தி பட்டுகிடதா மிடியும் நல்ல படியா பதிவர் சந்திப்பு விழா நடக்க வாழ்த்துகள் மனசு பூராவுலவும் கலந்துக்க ஆச அடிச்சுக்கீது. சந்தர்பம் சூழ்நில சரிவரல. குருஜி நீங்க போயி கலக்கலியா??
பதிலளிநீக்குmru September 18, 2015 at 6:16 PM
நீக்குவாங்கோ முறுக்கு / முருகு / mru , வணக்கம்.
//ஒவ்வொரு வருசமும் பதிவர் சந்திப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறதா?//
2011ம் ஆண்டு ஈரோட்டில் (தங்கள் ஊராக இருக்குமோ என சந்தேகிக்கிறேன்) சிறிய அளவில் முதன் முதலாக நடைபெற்றதாம்.
அதன்பிறகு 2012 மற்றும் 2013இல் சென்னையிலும், 2014ம் ஆண்டு மதுரையிலும் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.
//இப்ப தான் இது பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது.//
நீங்க 2015 மாடல் புத்தம் புதிய புதுப்பதிவர் அல்லவா. அதனால் இருக்கலாம்.
//கலந்துகிட்டா நிறயா பதிவர்கள பாத்து பேச முடியும்ல. நெனச்சாலே சந்தோசமா இருக்கே. இதெல்லாம் ஒரு கோல்டன் சான்ஸ் கலந்துகிறவங்க அதிஸ்ட சாலிங்க.//
ஆமாம். நீங்கள் சொல்வதும் எதிர்பார்ப்பதும் சரியே. ஆனால் நேரில் போய் ஒருமுறையாவது அனுபவித்தால் மட்டுமே இவையெல்லாம் எவ்வளவு தூரத்திற்கு நமக்கு சாத்தியமாகும், கோல்டன் சான்ஸ்தானா என்பதெல்லாம் தெரியவும் புரியவும் வரும்.
//அப்பாலிக்கா அது பத்திலாம் எல்லாரும் பதிவுல சொல்லுவாங்கல்லா.//
ஆமாம். எல்லோருமே போட்டி போட்டுக்கொண்டே தங்கள் பதிவுகளில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதுவே பல பதிவர்களின் பதிவுகளில் பலநாட்கள்/மாதங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கும் / இழுக்கும்.
சிலர் நேரில் கலந்துகொள்ளப்போவதே இதுபோல பதிவிடும் ஆசையில் மட்டுமே.
//அத படிச்சு திருப்தி பட்டுகிடதா மிடியும்//
ஆஹா, ஓரளவு முடியும். இருப்பினும் வாசிப்பவர்களுக்கு திருப்தி என்பதில், வாசகர்கள் ஒருவருக்கொருவருக்கும் டேஸ்ட் மாறுபடலாம்.
எழுதும் எழுத்தாளர் + வாசிக்கும் வாசகர் ஆகிய இருவரின் டேஸ்ட்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே முழுத்திருப்தி வெளிப்படக்கூடும்.
// நல்ல படியா பதிவர் சந்திப்பு விழா நடக்க வாழ்த்துகள் மனசு பூராவுலவும் கலந்துக்க ஆச அடிச்சுக்கீது. சந்தர்பம் சூழ்நில சரிவரல. குருஜி நீங்க போயி கலக்கலியா??//
எனக்கும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக இல்லை.
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
இந்தப் பதிவை பதிவு வெளியான அன்றே படித்து விட்டு உங்கள் உழைப்பை மனதிற்குள் பாராட்டி விட்டு, பின்னூட்டம் போடுவதற்குள் சிந்தனை புதுக்கோட்டையில் தங்குவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. உடனே விழாக் குழுவினருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். வெளியூர் பதிவர்களின் தங்கும் ஏற்பாடுகள் பற்றி ஏன் இன்னும் ஒரு தகவலும் வரில்லையே என்று சிந்தித்துக்கொண்டு உங்கள் பதிவில் பின்னூட்டம் போட மறந்து விட்டேன்.
பதிலளிநீக்குஆனாலும் உங்கள் உழைப்பைக் கண்டு பொறாமைப் படாமலிருக்க முடியவில்லை. பாராட்டுகிறேன். அனைத்து விபரங்களையும் ஒன்று சேர்த்துக் கொடுத்திருக்கிறீர்கள். பதிவர் சந்திப்புக்கு வராவிட்டாலும் அதில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
பழனி. கந்தசாமி September 20, 2015 at 6:16 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//இந்தப் பதிவை பதிவு வெளியான அன்றே படித்து விட்டு உங்கள் உழைப்பை மனதிற்குள் பாராட்டி விட்டு, பின்னூட்டம் போடுவதற்குள் சிந்தனை புதுக்கோட்டையில் தங்குவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. உடனே விழாக் குழுவினருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். வெளியூர் பதிவர்களின் தங்கும் ஏற்பாடுகள் பற்றி ஏன் இன்னும் ஒரு தகவலும் வரில்லையே என்று சிந்தித்துக்கொண்டு உங்கள் பதிவில் பின்னூட்டம் போட மறந்து விட்டேன்.//
அதனால் பரவாயில்லை சார். தங்களின் தளராத புதுக்கோட்டைப் பயணம்தான் இப்போது மிகவும் முக்கியமானதாகும்.
அதைப்பற்றியே சிந்திப்பதும், அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதும், அங்கு எங்கே நாம் தங்கப்போகிறோம், அங்குள்ள வசதி வாய்ப்புகள் எப்படி என்பதை அறிவதும்தான் மிக மிக அவசரமும், அவசியமுமாகும்.
அரிய பெரிய விழா ஒன்றில் கலந்துகொள்ள இருக்கும் தங்களை நானும் நடுவழியில் சந்திக்க இருக்கிறேன் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)
//ஆனாலும் உங்கள் உழைப்பைக் கண்டு பொறாமைப் படாமலிருக்க முடியவில்லை. பாராட்டுகிறேன். அனைத்து விபரங்களையும் ஒன்று சேர்த்துக் கொடுத்திருக்கிறீர்கள்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
//பதிவர் சந்திப்புக்கு வராவிட்டாலும் அதில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.//
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், தமிழ் பேரறிஞரும், கவிஞருமான திரு. நா. முத்து நிலவன் ஐயா அவர்களே என்னை அலை பேசியில் தொடர்புகொண்டு நீண்ட நேரம் பேசினார்கள்.
என் http://gopu1949.blogspot.in/2015/07/35.html இந்தப்பதிவினை அவர் முழுவதுமாகப் படித்துப்பார்த்துவிட்டு, என் ’நினைவில் நிற்போர்’ எண்ணிக்கையான 100 பெண் பதிவர்கள் + 70 ஆண் பதிவர்கள் ஆக மொத்தம் 170 பதிவர்கள் பட்டியலைக்கண்டு, அசந்துபோனதாகச் சொல்லி வெகுவாகப் பாராட்டினார்கள்.
மேலும் நான் இந்த ’பதிவர்கள் சந்திப்பு விழா’ பற்றி இதுபோல ஒரு பதிவு என் வலைத்தளத்தினில் வெளியிட்டால், அது அந்த என் நினைவில் நிற்கும் 170 பதிவர்களையும் மிகச்சுலபமாகச் சென்றடையும் என வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டார்கள்.
அவரின் அன்புக்கட்டளையை என்னால் மீற இயலாமல், என்னால் ஆன ஓர் மிகச்சிறிய பங்களிப்பாக இதுபோன்றதோர் பதிவினை நானும் வெளியிடும் படியாக ஆனது.
இதன் பெருமையெல்லாம், இதற்கு பெரிதும் தூண்டுகோலாக இருந்துள்ள, விழா ஒருங்கிணைப்பாளர் + மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர் (தொலைகாட்சிப் புகழ்) திரு. முத்து நிலவன் ஐயா அவர்களையே சாரும்.
>>>>>
லேட்டாக பின்னூட்டம் போட வந்ததினால் எனக்கு ஒரு கூடுதல் அனுகூலம் - கற்றவர்களுடைய பின்னூட்டங்களையும் அதற்கு நீங்கள் அளித்த பதில்களையும் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு விரிவாக நடந்தது முதல் முதலில் ஈரோட்டில்தான். மூன்று வருடங்கள் நடத்தினார்கள். பிறகு நின்று விட்டது. இதைப் பற்றி ஒரு தனிப் பதிவு எழுதப் போகிறேன்.
பழனி. கந்தசாமி September 20, 2015 at 6:34 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.
//லேட்டாக பின்னூட்டம் போட வந்ததினால் எனக்கு ஒரு கூடுதல் அனுகூலம் - கற்றவர்களுடைய பின்னூட்டங்களையும் அதற்கு நீங்கள் அளித்த பதில்களையும் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. //
ஆஹா ..... அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள், கற்றதோடு மட்டுமல்லாமல், முனைவர் பட்டமும் பெற்றுள்ள, அன்புடைய, பண்புடைய, மிகவும் கண்ணியமான தாங்கள்.
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார்.
//பதிவர் சந்திப்பு விரிவாக நடந்தது முதல் முதலில் ஈரோட்டில்தான். மூன்று வருடங்கள் நடத்தினார்கள். பிறகு நின்று விட்டது. இதைப் பற்றி ஒரு தனிப் பதிவு எழுதப் போகிறேன்.//
எழுதுங்கோ ..... எழுதுங்கோ ..... எழுதிக்கொண்டே இருங்கோ.
உங்கள் எழுத்துக்களைப் படித்து ஒரு வாரத்திற்கு மேலேயே ஆச்சு. அதனால் வாசகர்களாகிய எங்களுக்கு மிகவும் போரடிக்கிறது.
அதனால் அந்தத்தாங்கள் சொல்லும் ஒரு தனிப்பதிவினை, விரிவாகவும் தொடராகவும் பல பகுதிகளாகப் பிரித்து எழுதிக்கொண்டே இருங்கோ.
தங்களின் அந்த ஈரோட்டு அனுபவங்கள் + சென்னை அனுபவங்கள் + மதுரை அனுபவங்கள், அவற்றில் தாங்கள் கண்ட நிறை குறைகள் பற்றி, விரிவாக எடுத்துரைத்தால், நடக்க இருக்கும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பினில் சிறு குறைகூட ஏதும் இல்லாமல் அமைய வாய்ப்பாகவும் இருக்கக்கூடும்.
தங்களின் அன்பான இருமுறை வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK
தங்களது இந்த பதிவினை நீங்கள் வெளியிட்டவுடனேயே பார்த்து விட்டேன். இதற்கான மற்றவர்களது பின்னூட்டங்களையும், உங்கள் மறுமொழிகளையும் எல்லாவற்றையும் நிதானமாக படித்து ரசிக்க இன்றுதான் நேரம் கிடைத்தது. புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு வரும்படி, உங்கள் மீதுள்ள அன்பால் எல்லோரும் அழைக்கின்றனர். மூத்த வலைப்பதிவரான உங்களை நானும் அழைக்கின்றேன். எனது பெயரை உங்கள் பதிவினில் குறிப்பிட்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ September 22, 2015 at 12:55 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் அபூர்வ வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
//தங்களது இந்த பதிவினை நீங்கள் வெளியிட்டவுடனேயே பார்த்து விட்டேன். இதற்கான மற்றவர்களது பின்னூட்டங்களையும், உங்கள் மறுமொழிகளையும் எல்லாவற்றையும் நிதானமாக படித்து ரசிக்க இன்றுதான் நேரம் கிடைத்தது.//
அதனால் பரவாயில்லை சார். மிக்க மகிழ்ச்சி சார்.
//புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு வரும்படி, உங்கள் மீதுள்ள அன்பால் எல்லோரும் அழைக்கின்றனர். மூத்த வலைப்பதிவரான உங்களை நானும் அழைக்கின்றேன்.//
அனைவரின் அன்பும், குறிப்பாகத் தங்களின் பேரன்பும் என்னை மிகவும் நெகிழச் செய்கின்றன. மிக்க நன்றி, சார்.
//எனது பெயரை உங்கள் பதிவினில் குறிப்பிட்டமைக்கு நன்றி.//
திருச்சி பதிவர்களிலேயே எனக்கு மிக நெருங்கிய நண்பராக இன்றும் தொடர்ந்து இருந்துவரும் தாங்களாவது மேற்படி சந்திப்புக்கு புதுக்கோட்டை சென்று வர உள்ளது, எனக்கு மிகவும் திருப்தியாகவும், மனதுக்கு ஆறுதலாகவும் உள்ளது.
தாங்கள் வெளியிடப்போகும் பதிவுகளின் மூலம், பதிவர் சந்திப்பு பற்றிய அனைத்துத் தகவல்களையும், விபரமாக அறிய மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தங்களின் அன்பான வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
என்றும் அன்புடன் தங்கள் VGK
.
பதிலளிநீக்குவிழாவில் கலந்து மகிழ இவ்வாண்டு(ம்) வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறேன். சிறப்பு விழா இனிதாய் நிகழ்வுற நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.............
அ. முஹம்மது நிஜாமுத்தீன் September 23, 2015 at 9:08 PM
நீக்குவாங்கோ நண்பரே, வணக்கம்.
.
//விழாவில் கலந்து மகிழ இவ்வாண்டு(ம்) வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறேன்.//
ஏன்? என்ன ஆச்சு?
http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_7.html இந்த இணைப்பினில் நாகப்பட்டிணத்திலிருந்து வருகை தரும் நால்வரில் தங்களின் பெயர் முதலிடம் பெற்றிருந்ததை எண்ணி நான் மகிழ்ந்தேன்.
இறை நாட்டம் அதுபோல மாறி அமைந்து விட்டது போலிருக்கிறது. பரவாயில்லை. என்ன செய்வது? எல்லாம் அவன் செயல்.
//சிறப்பு விழா இனிதாய் நிகழ்வுற நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.............//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, நண்பரே.
அன்புடன் VGK
பதிவர் விழா பற்றிய அத்தனை நிகழ்வுகளையும் அருமையாகத் தொகுத்துப் புதுமையான தலைப்புக் கொடுத்து அசத்திவிட்டீர்கள். அழைப்பிதழும் கண்டேன். நன்றி கோபு சார்! விழாவில் தாங்களும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குஞா. கலையரசி October 2, 2015 at 12:40 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//பதிவர் விழா பற்றிய அத்தனை நிகழ்வுகளையும் அருமையாகத் தொகுத்துப் புதுமையான தலைப்புக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.//
மிக்க மகிழ்ச்சி. :)
//அழைப்பிதழும் கண்டேன். நன்றி கோபு சார்!//
தங்களின் அழைப்பிதழும், தனி மின்னஞ்சல் அழைப்பும் நானும் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி, மேடம்.
//விழாவில் தாங்களும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்.//
தங்களின் இந்த ஸ்பெஷல் எதிர்பார்ப்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி + ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளது. மிக்க நன்றி, மேடம்.
விழாவிற்கான எனது நன்கொடை பணத்தினை, என் சார்பில் தாங்களே அனுப்பி உதவியதற்கு (காலத்தினால் செய்த மாபெரும் உதவிக்கு) மீண்டும் என் அன்பு நன்றிகள், மேடம்.
என்றும் நன்றியுடன் கோபு
அற்புதமான தொகுப்பு சார். எல்லா கலர் பிள்ளையாரும் அழகு.
பதிலளிநீக்குSaratha J October 2, 2015 at 9:11 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அற்புதமான தொகுப்பு சார். எல்லா கலர் பிள்ளையாரும் அழகு.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
பதிலளிநீக்குஇன்றுவரை இப்பதிவை அப்டேட் செய்துள்ளீர்கள் என்று தெரிகிறது. நன்றி அய்யா!
தி.தமிழ் இளங்கோ October 3, 2015 at 6:10 AM
நீக்குவாங்கோ ஐயா, வணக்கம் ஐயா.
//இன்றுவரை இப்பதிவை அப்டேட் செய்துள்ளீர்கள் என்று தெரிகிறது. நன்றி அய்யா!//
ஆம் ஐயா, ஏதோ நம்மால் முடிந்தது ..... அது மட்டுமே.
’ஒன்றே செய் ... அதையும் நன்றே செய்’
’செய்வன திருந்தச்செய்’ ..... என்பதுபோல ..... :)
இன்று 03.10.2015 காலை அவர்களால் வெளியிடப்பட்டுள்ள ’போட்டிகள் முடிந்தன... அடுத்து ஒரு போட்டி?!’ என்ற அவசர அறிவிப்புக்கான இணைப்பையும்கூட இதில் இப்போது ஓர் 15 நிமிடங்களுக்கு முன்பு சேர்த்துள்ளேன்.
பல்வேறு புதிய பதிவுகளை நாம் மேலும் மேலும் கொடுத்துக்கொண்டே இருந்தால் அவை அனைவராலும் படிக்க இயலாது. அதில் குழப்பம் மட்டுமே மிஞ்சும் என்பது என் கருத்து.
ஒரே பதிவாகக் கொடுத்து, அதில் அவ்வப்போது புதிய நிகழ்வுகளை அப்-டேட் செய்வது மட்டுமே, இதில் உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்களுக்கு பலனளிக்கக்கூடியதாக இருக்கும்.
தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி, ஐயா.
அன்புடன் VGK
//வணக்கம்... தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்... இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←
பதிலளிநீக்குபுதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்//
-=-=-=-=-=-
வணக்கம்.
ஒவ்வொரு வகையிலும் உள்ள கட்டுரைகளையும், கவிதைகளையும் தனித்தனியே ஆர்வத்துடன் வாசித்து, அவற்றை எனக்குள் தரம் பிரித்து, அவை ஒவ்வொன்றுக்கும் RANKING கொடுத்துக்கொண்டுதான் வருகிறேன்.
படைப்பாளிகளின் பெயர்களுடன் ஒவ்வொரு படைப்பும் இருப்பதாலும், ஒவ்வொரு படைப்பாளிகளின் தரம் பற்றி ஏற்கனவே எனக்குள் ஓர் அபிப்ராயம் உருவாகி இருப்பதாலும், இந்தக் கடினமான வேலை எனக்கு மிகச்சுலபமாகவே மாறியுள்ளது என்றும், நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நம் மதிப்பீடு, போட்டியின் நடுவர் குழுவின் மதிப்பீட்டுடன் எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது என்பதை, எனக்குள் எடை போட்டுப்பார்க்க மட்டுமே, ஓர் சிறிய ஆவலில் இந்த வேலையை நானாகவே (Out of my own interest) செய்து கொண்டு வருகிறேன். விமர்சனப் போட்டியில் பங்குகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.
இருப்பினும் தங்களின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க நான் போட்டிக்கான இறுதி நாள் அன்று, முடிந்தால் பங்குகொள்ள முயற்சிக்கிறேன்.
அன்புடன் VGK
தங்கத் தேரினில் ஏறி வந்து
பதிலளிநீக்குஅன்புடன் அழைப்பிதழ் அளித்து
பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய
பதிவர் திருவிழா பற்றிய அனத்துத் தகவல்களின் தொகுப்பும் மிகவும் பயனுள்ளவையாகத் திகழ்ந்தன.. பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:16 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்கத் தேரினில் ஏறி வந்து அன்புடன் அழைப்பிதழ் அளித்து பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய
பதிவர் திருவிழா பற்றிய அனைத்துத் தகவல்களின் தொகுப்பும் மிகவும் பயனுள்ளவையாகத் திகழ்ந்தன.. பாராட்டுக்கள்..//
தங்கத் தேரினில் ஏறி, தங்கத் தாமரையுடன் காட்சி அளித்து, பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்து, பாராட்டியுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி, மேடம்.
நீங்க இந்த விழாவுக்குப் போகலைன்னு நினைக்கறேன்.
பதிலளிநீக்குபோகாததுக்கே இந்தப் போடு போட்ட நீங்க கலந்து கொண்டிருந்தா? வலை உலகமே கிடுகிடுத்திருக்கும்.
Jayanthi Jaya November 1, 2015 at 5:38 PM
நீக்கு//நீங்க இந்த விழாவுக்குப் போகலைன்னு நினைக்கறேன்.//
போகவில்லை. போக விரும்பவும் இல்லை.
//போகாததுக்கே இந்தப் போடு போட்ட நீங்க //
விழா ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துநிலவன் ஐயா அவர்கள் என்னிடம் பிரத்யேகமாகப் போனில் நீண்ட நேரம் பேசி கேட்டுக்கொண்டதால் மட்டுமே இந்தப்பதிவினை நான் வெளியிட நேர்ந்தது.
//கலந்து கொண்டிருந்தா? வலை உலகமே கிடுகிடுத்திருக்கும்.//
வலையுலகம் ..... அதெல்லாம் ஒன்றும் கிடுகிடுத்துப் போய் இருக்காது. சும்மா ஏதாவதுச் சொல்லாதீங்கோ, ஜெ.
’எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதுபோல, நேரில் விழாவுக்குப் போய்வந்தவர்கள் அனைவரும்தான் தங்கள் தங்கள் பதிவுகளில் வரிந்துக்கட்டிக்கொண்டு எழுதித் தள்ளிக்கொண்டே இருக்கிறார்களே.
அவற்றையெல்லாம் பார்த்தாலே எனக்கு கிடுகிடுக்கிறது. :)