’என்றாவது ஒரு நாள்’
நூல் புகழுரை
By
வை. கோபாலகிருஷ்ணன்
பகுதி-2
Link for Part 1 of 5
வலைத்தளம்: கீத மஞ்சரி
’என்றாவது ஒரு நாள்’
நூலாசிரியர்
’விமர்சன வித்தகி’
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-01-03-first-prize-winners.html
திருமதி.
கீதா மதிவாணன்
அவர்கள்
-oOo-
’என்றாவது ஒரு நாள்’ நூலிலிருந்து
’ஹென்றி லாஸன்’ பற்றிய
மேலும் சில செய்திகள் இப்போது தொடர்கின்றன.
சென்ற பகுதியின் இறுதியில் கூறப்பட்டது:
மனதளவிலும் உடலளவிலும் மிகவும் மோசமான நிலையில் நலிந்து கிடந்த ஹென்றி லாஸன் அவர்களைத் தூக்கி நிறுத்திய பெருமை, அவரை விடவும் இருபது வயது மூத்தவரான, அவருடைய சினேகிதி திருமதி. இஸபெல் பையர்ஸ் (Mrs. Isabel Byers) என்பவரையே சாரும்.
ஓரளவு கல்வியறிவு பெற்றிருந்த ’இஸபெல்’ கவிதைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவராய் இருந்தார். தன் பதின்ம வயதிலிருந்து ஹென்றி லாஸனுடைய கவிதைகளைப் போன்றே பல சிறந்த கவிதைகளை இயற்றியவர். நாட்டின் மிக அற்புதமான வாழுங்கவிஞர் ஒருவர் தன் வாழ்க்கைச் சூழல் காரணமாகத் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருப்பதைக் காணச் சகியாதவராய் அவரை மீண்டும் எழுத வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
ஹென்றி லாஸனின் சார்பில் அவரே பல பதிப்பகத்தாரைப் பார்த்துப் பேசினார். ஹென்றியின் குழந்தைகளுடனும், நண்பர்களுடனும் அவரை மீண்டும் தொடர்புகொள்ளச் செய்தார். அவருடைய ஆதரவாளர்களைச் சந்தித்து ஹென்றிக்கான பொருளாதார உதவிகளை ஏற்பாடு செய்தார்.
அவரை மன நல மருத்துவமனையில் அனுமதித்துப் பராமரித்தார். ஹென்றி மன அழுத்தங்களிலிருந்தும், குடிப்பழக்கங்களிலிருந்தும் விடுபடும் வரை அவர் கூடவே இருந்து பேணிப்பாதுகாத்தார். ஹென்றியின் படைப்புக்களை பதிப்பிக்கும் பொருட்டும், அதற்கான தொகையைப் பெறும் பொருட்டும் பலருக்கும் எண்ணற்ற கடிதங்கள் எழுதினார்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இவர்கள் இருவருக்குமான சினேகம் நீடித்தது.
1922 ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் 2-ம் நாள், தனது 55 ஆவது வயதில், மூளையில் இரத்தக்கசிவு காரணமாக, இஸபெல்லின் இல்லத்திலேயே ஹென்றி லாஸன் உயிர் துறந்தார்.
ஹென்றி லாஸன் அவர்களின் கையொப்பத்துடன், அவர் பண உதவி
கேட்டு யாரோ ஒரு நண்பருக்கு எழுதியுள்ளதோர் கடிதம் .... இதோ கீழே:
இறந்தபின்னர் அவர் பெருமைகளை நன்கு
உணர்ந்து கொண்டாடியுள்ள விசித்திர உலகம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே !
- vgk
ஹென்றி லாஸனின் உடல் அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதுவரை ஆளுநர்களுக்கும், தலைமை நீதிபதிகளுக்கும் மட்டுமே கிடைத்துவந்த அரசு முறை இறுதி மரியாதையைப் பெற்ற, அரசு சாராத முதல் மனிதர் இவரே.
அவருடைய இறுதிச் சடங்கில் அன்றைய பிரதமர் திரு. பில்லி ஹக்ஸும், நியூ செளத் வேல்ஸ் மாநில முதல்வர் திரு. ஜேக் லாங்கும் கலந்துகொண்டனர்.
தன் வாழ்க்கையில் வெற்றிபெற இயலாது சீரழிந்துபோன ஒரு மனிதனின் இறுதிப்பயணத்தில், வியக்கத்தக்க விதமாய், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு, வழியனுப்பி வைத்தனர்.
காடுறை மனிதர்கள் தொடர்பான ஹென்றி லாஸனின்
படைப்பாற்றலைப் பெருமைப்படுத்தும் விதமாக சிட்னியில்
ஹென்றி லாஸனின் வெங்கலச்சிலையொன்று,
முதுகுச்சுமையுடன் கூடிய ஒரு காடுறை மனிதன் ஒருவனுடனும்,
ஒரு நாயுடனும் நிறுவப்பட்டுள்ளது.
1949 ஆம் ஆண்டு அவருடைய உருவப் படத்துடன் ஆஸ்திரேலிய அரசின் அஞ்சல்தலை யொன்று வெளியிடப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.
1966 இல் ஆஸ்திரேலியாவில் தசம எண்ணிக்கையிலான பணப்புழக்கம் அறிமுகப்படுத்தப் பட்டபோது, முதலில் அச்சடிக்கப்பட்ட பத்து டாலர் காகிதப்பணத்தில் அவரது உருவம் அச்சடிக்கப்பட்டு மேலும் சிறப்பிக்கப்பட்டது.
ஹென்றி லாஸனின் படைப்புகள் பலவும் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன. சில, திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் உருவாக்கம் பெற்றுள்ளன.
ஹென்றியின் படைப்பாற்றலைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், பிற படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் ஹென்றி லாஸன் பிறந்த க்ரென்ஃபெல்லில் வருடம் தோறும் ஜூன் மாத வார இறுதியொன்றில், ஹென்றி லாஸன் திருவிழா நடைபெற்று வருகிறது.
ஹென்றியின் வாழ்க்கை, குடும்பம், படைப்புகள், அப்படைப்புக்களுக்குக் காரணமாய் அமைந்த மக்கள், இடங்கள் போன்றவற்றை நினைவுகூறும் வகையில் அவர் வளர்ந்த குல்காங்கில் ஹென்றி லாஸன் மையம் என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
-oOo-
இனி இதன் அடுத்த பகுதிகளில் திருமதி. கீதா மதிவாணன் அவர்களால் மிக நேர்த்தியாக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள, ஹென்றி லாஸன் அவர்களின் குறிப்பிட்டசில {இருபத்திரெண்டு} கதைகளைப் பற்றி சற்றே நாம் அசைபோட்டுப்பார்ப்போம்.
’என்றாவது ஒரு நாள்’
புகழுரை தொடரும்.
ஓரளவு வாசித்தேன்
பதிலளிநீக்குஇருவருக்கும் இனிய வாழ்த்துகள்.
@ kovaikkavi
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஓரளவு வாசித்தேன்//
அதனால் பரவாயில்லை. சந்தோஷமே.
//இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.
நீக்குஎழுத்தாளர்கள் பலரும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் வறுமையின் கோரப்பிடியிலேயே இருந்திருக்கிறார்கள் என்று உணரும்போது மனது வலிக்கிறது.
பதிலளிநீக்கு@பழனி. கந்தசாமி
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//எழுத்தாளர்கள் பலரும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் வறுமையின் கோரப்பிடியிலேயே இருந்திருக்கிறார்கள் என்று உணரும்போது மனது வலிக்கிறது.//
ஆமாம் சார், மனது வலிக்கத்தான் செய்கிறது.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.
எழுத்தை ஆளத்தெரிந்தவர்களுக்கு அந்த எழுத்தைக் காசாக்கத் தெரிவதில்லை. அவர்களுடைய பரிதாப நிலையை எண்ணி மனம் வலிக்கத்தான் செய்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
நீக்குஇது புத்தகத்திலிருக்கும் பகுதியா? ஹென்றி லாஸன் பற்றிய அறிமுகம் நன்று. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம். September 7, 2015 at 5:48 AM
நீக்குவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.
//இது புத்தகத்திலிருக்கும் பகுதியா?//
ஆமாம் ஸ்ரீராம். புத்தகத்தில் உள்ள பகுதியேதான். படங்கள் மட்டும் நான் Net இல் போய் சேகரித்து இணைத்துள்ளேன். Net இல் போய் ’Henry Lawson' எனத்தட்டினாலே அவரைப்பற்றிய பல செய்திகளும், ஏராளமான படங்களும் மிகச் சுலபமாகக் கிடைக்கின்றன.
//ஹென்றி லாஸன் பற்றிய அறிமுகம் நன்று. தொடர்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸ்ரீராம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். புத்தகத்தில் உள்ள ஆசிரியர் குறிப்பு மட்டுமே என் உபயம். மற்றபடி உரிய படங்களை இணையத்தில் தேடிப் பதிந்ததெல்லாம் கோபு சாரின் முயற்சியே.
நீக்குவாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதொடர்கிறேன்
@ கரந்தை ஜெயக்குமார்
நீக்குமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்குஹென்றி லாஸனின் சிறப்புகளை அறிந்தேன் ஐயா... நன்றி... தொடர்கிறேன்...
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
நீக்குமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி Mr DD Sir.
கோபு சாரின் சிறப்பான முயற்சியால் கதைகளை மட்டுமின்றி மூல ஆசிரியர் பற்றியும் பலரும் அறியமுடிந்திருப்பது மகிழ்வளிக்கிறது. நன்றி தனபாலன்.
நீக்கு
பதிலளிநீக்கு//தன் வாழ்க்கையில் வெற்றிபெற இயலாது சீரழிந்துபோன ஒரு மனிதனின் இறுதிப்பயணத்தில், வியக்கத்தக்க விதமாய், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு, வழியனுப்பி வைத்தனர்.//
அவருக்கு சிலை மற்றும் அவர் உருவப்படம் கொண்ட அஞ்சல் தலை, காகித பணத்தில் அவரது உருவப்படம், அவரது படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம் போன்றவைகளை படிக்கும்போது, காலஞ்சென்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள் உயிரோடு இருக்கையில் அவர் கஷ்டப்பட்டபோது, உதவாதவர்கள் தான் இறந்தபின் சிலை திறந்து, விழா நடத்தி கொண்டாடவேண்டாம் என்பதை வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்ற புனைபெயரில் எழுதியிருந்த கவிதை இப்போது என் நினைவுக்கு வருகிறது.
“இத்தனைக்கும் மேலே இனி ஒன்று
ஐயா நான் செத்ததற்கும் பின்னால் நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்புகட்டி கல்லில் வடித்து வையாதீர்
வானத்து அமரன் வந்தான் காண்
வந்தது போல் போனான் காண் என்று புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம் -
அடியேனை விட்டு விடும்”
மக்கள் எப்போதுமே அறிஞர்கள்/கலைஞர்கள் உயிரோடு இருக்கும்போது கௌரவிக்கமாட்டார்கள் போலும்!
திருமதி கீதா மதிவாணன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட கதைகளை படிக்க காத்திருக்கிறேன்.
வே.நடனசபாபதிSeptember 7, 2015 at 7:35 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான பல செய்திகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
//மக்கள் எப்போதுமே அறிஞர்கள்/கலைஞர்கள் உயிரோடு இருக்கும்போது கௌரவிக்கமாட்டார்கள் போலும்!//
அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது, சார்.
//திருமதி கீதா மதிவாணன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட கதைகளை படிக்க காத்திருக்கிறேன். //
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். நாளை சந்திப்போம்.
அன்புடன் VGK
வாழும் நாளில் திறமையாளர்களைப் போற்றவும் புகழவும் மனம் வருவதில்லை.. ஆனால் இறந்தபிறகு...
நீக்குபுதுமைப்பித்தன் அவர்களின் கவி வரிகள் எவ்வளவு யதார்த்தம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குசில நாட்களாக தங்கள் பகிர்வுகளை காணவில்லையே?
உடல் நிலை எப்படி இருக்கிறதுங்க ஐயா?
ஹென்றி சிறப்புகளை அறிந்தேன்.
தோழி கீதாவிற்கு வாழ்த்துகள்.
சசிகலா September 7, 2015 at 11:22 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//வணக்கம் ஐயா! சில நாட்களாக தங்கள் பகிர்வுகளை காணவில்லையே? உடல் நிலை எப்படி இருக்கிறதுங்க ஐயா?//
ஆமாம். விருந்தினர் வருகை + குடும்ப சூழ்நிலைகளால் கடந்த 2 மாதங்களாக நான் வலைப்பக்கம் அதிகமாக வர இயலாமல் போய்விட்டது. உடல்நிலை தேவலாம். பிரச்சனை எதுவும் இல்லை. இருப்பினும் இப்போதும்கூட நான் வலையுலகிலிருந்து ஓய்வில் தான் இருக்கிறேன். இந்த ஒரேயொரு தொடர்பதிவுக்காக மட்டுமே, என் ஓய்வுக்கு சற்றே ஓய்வளித்துவிட்டு இங்கு பதிவிட வந்துள்ளேன். :)
இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில் தங்களுக்குப் பாவலர் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ள செய்தியினைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மேலும் மேலும் சிறப்படைய விரும்பி வாழ்த்தி மகிழ்கிறேன்.
//ஹென்றி சிறப்புகளை அறிந்தேன். தோழி கீதாவிற்கு வாழ்த்துகள்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.
அன்புடன் VGK
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சசி.
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குநாம் எப்பவும் இப்படித்தான் இருக்கும் போது மதிப்பறிய மாட்டோம்,
அப்படித்தான் போலும் இவரின் வாழ்க்கையும், நாம் போன பின் என்ன நடந்தால் என்ன?
வாழ்த்துக்கள் அவர்களுக்கு, தங்களுக்கு நன்றிகள்.
mageswari balachandran September 7, 2015 at 11:41 AM
நீக்கு//வணக்கம்,//
வாங்கோ வணக்கம், மேடம்.
//நாம் எப்பவும் இப்படித்தான், இருக்கும் போது மதிப்பறிய மாட்டோம், அப்படித்தான் போலும் இவரின் வாழ்க்கையும், நாம் போன பின் என்ன நடந்தால் என்ன?//
மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். சில பிரபல எழுத்தாளர்களின் வாழ்க்கை இதுபோல சோகமாக அமைந்துவிடுகிறது. என்ன செய்ய?
//வாழ்த்துக்கள் அவர்களுக்கு, தங்களுக்கு நன்றிகள்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி.
நீக்குஅறிமுகம் நன்று ஐயா. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகே. பி. ஜனா... September 7, 2015 at 1:04 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//அறிமுகம் நன்று ஐயா. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஜனா சார்.
நீக்குஹென்றி லாஸனுடய திறமையை அவர் இருக்கும் வரை யாராலயுமே புரிந்து கொள்ளப்படவில்லயே. அவருக்கு நல்ல சினேகிதியாக இஸபல் கிடைத்தது வரம். ஆனாலும்என்ன ஆச்சு? திறமையானவர்களை அவர்களின் இறப்புக்கு பின்தான் போற்றுவார்களோ என்ன கொடுமை இது.
பதிலளிநீக்குபூந்தளிர் September 7, 2015 at 2:06 PM
நீக்குவாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.
//ஹென்றி லாஸனுடய திறமையை அவர் இருக்கும் வரை யாராலேயுமே புரிந்து கொள்ளப்படவில்லயே. அவருக்கு நல்ல சினேகிதியாக இஸபல் கிடைத்தது வரம்.//
ஆமாம். ஏதோ அதுபோலவாவது அவருக்கு ஒரு நல்ல சினேகிதி அமைந்தது ஒரு வரமேதான்.
//ஆனாலும் என்ன ஆச்சு? திறமையானவர்களை அவர்களின் இறப்புக்கு பின்தான் போற்றுவார்களோ என்ன கொடுமை இது.//
கொடுமையாகத்தான் உள்ளது. என்ன செய்ய?
தங்களின் அன்பான வருகைக்கும், உண்மையாக மனம் திறந்து சொல்லியுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள கோபு
வறுமையின் பிடியில் சிக்கி, பிச்சைக்காரனாகி, மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை முயற்சிவரை போன ஒரு படைப்பாளியை மீட்டெடுத்த திருமதி இஸபெல்லுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். உண்மையே பூந்தளிர். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
நீக்குஇனி வரும் இருபத்திரெண்டு பதிவுகளில் ஒவ்வொரு பதிவும் ஒரு கதை விமரிசனமாக .சாரி, புகழுரையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா.?பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குG.M Balasubramaniam September 7, 2015 at 4:15 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//இனி வரும் இருபத்திரெண்டு பதிவுகளில் ஒவ்வொரு பதிவும் ஒரு கதை விமரிசனமாக .சாரி, புகழுரையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா.? //
தங்களின் சரியான புரிதலுக்கும், நகைச்சுவையான கருத்துக்களுக்கும் நன்றி, சார். தாங்கள் எப்படி வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம்.
//பாராட்டுக்கள்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.
நீக்குமூலக் கதாசிரியரின வாழ்க்கையே ஒரு கதை போல இருக்கு.
பதிலளிநீக்குmru September 7, 2015 at 5:59 PM
நீக்குவாங்கோ, வணக்கம்மா.
//மூலக் கதாசிரியரின் வாழ்க்கையே ஒரு கதை போல இருக்கு.//
ஆமாம். மூலக் கதாசிரியரின் வாழ்க்கைதான் மிகப்பெரிய கதையாக உள்ளது.
அவரால் எழுதப்பட்டவைகளெல்லாம்கூட மிகச் சிறுகதைகளாகவேதான் எனக்குத் தெரிகிறது.
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா.
அன்புடன் VGK
வாழ்க்கையின் அனுபவங்களே கதைகளாகிவிட்டன போலும்.. இவ்வளவுக்கும் அவருக்கு முற்றிலும் காது கேட்காது என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்! வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
நீக்குநான் எழுத்தால் காட்டியுள்ள தகவல்களுக்கு உரிய படங்களைத் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்துள்ளமை தங்களுக்கு இந்த வாசிப்பின்மீதுள்ள ஆர்வத்தை வெகுவாகப் பறைசாற்றுகிறது. தங்களுடைய அர்ப்பணிப்பை எண்ணி வியக்கிறேன். நன்றி கோபு சார்.
பதிலளிநீக்குஇங்கு காட்டப்பட்டுள்ள, உதவிகோரி எழுதப்பட்டுள்ள கடிதத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. தங்கள் தயவால் பார்த்து வியந்தேன்.
கரன்சி தாளையும் அஞ்சல் தலையையும் என்னுடைய வலைப்பூவில் கதைகளை வெளியிட்டபோது பதிந்தேன். ஆனால் புத்தக உருவாக்கத்தின்போது படங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அந்தக் குறையைக் களைந்துவிட்டன இங்கு தாங்கள் தேடித்தேடிப் பகிர்ந்திருக்கும் படங்கள்.
புத்தகத்தின் அட்டையில் ஹென்றிலாசனின் உருவத்தையோ அவர் நினைவாக வடித்த சிலையின் படத்தையோ வைத்திருந்தால் அவர் உருவம் பலரையும் போய்ச்சேர்ந்திருக்குமே என்று தோழி ஒருவர் சொன்னபோது, அப்படி செய்யத் தவறிவிட்டோமே என்று வருந்தினேன். இங்கு தாங்கள் பலரும் காண அவருடைய சிலையின் படத்தைத் தேடியெடுத்துப் பதிவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. மனமார்ந்த நன்றி கோபு சார்.
@ கீத மஞ்சரி September 7, 2015 at 6:05 PM
நீக்குவாங்கோ வணக்கம்.
தங்களின் எழுத்துக்களுக்கு ஏற்ற படங்கள் அனைத்துமே நான் நெட்டிலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டேன்.
//இங்கு காட்டப்பட்டுள்ள, உதவிகோரி எழுதப்பட்டுள்ள கடிதத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. தங்கள் தயவால் பார்த்து வியந்தேன். //
Google Images க்குப்போய் Henry Lawson எனத் தட்டினால் Poems, Quotes, Books, Family, Reserve, Family Tree, High School, Signature, Drive என பல தலைப்புகள் வருகின்றன.
அவை ஒவ்வொன்றிலும், பல்வேறு தகவல்களையும் நம்மால் படங்களாக மிகச்சுலபமாகப் பார்க்க முடிகிறது.
அதில் Signature என்ற பிரிவினுக்குள் உட்புகுந்து நாம் போனால், அவர் தன் கைப்பட எழுதிய நிறைய கடிதங்கள் கிடைக்கின்றன. அதிலிருந்து நான் பொறுக்கி எடுத்துப் போட்டது மட்டுமே இந்த ஓர் கடிதமாகும்.
தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு
ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதில் தாங்கள் காட்டும் முழு அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது. நன்றி கோபு சார்.
நீக்குபுத்தக அறிமுகத்துக்காக இணையத்தில் பல அரிய படங்களையும் அவர் கடிதத்தையும் தேர்ந்தெடுத்துச் சேர்த்திருப்பதால் மூலக் கதாசிரியரைப் பற்றி அனைவரும் விரிவாக அறிய உதவுகின்றது. அவர் வாழுங்காலத்தில்நம் பாரதியைப் போல் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கின்றார் என்பதை அறிய வேதனையாய் இருக்கின்றது. இந்தத் தொடருக்காக மட்டுமின்றி தொடர்ந்து வலையுலகில் நீங்கள் இயங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்!
பதிலளிநீக்குஞா. கலையரசி September 7, 2015 at 8:00 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம் மேடம்.
//புத்தக அறிமுகத்துக்காக இணையத்தில் பல அரிய படங்களையும் அவர் கடிதத்தையும் தேர்ந்தெடுத்துச் சேர்த்திருப்பதால் மூலக் கதாசிரியரைப் பற்றி அனைவரும்
விரிவாக அறிய உதவுகின்றது.//
இந்த ’என்றாவது ஒரு நாள்’ என்ற நூலினை திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் தமிழாக்கத்தில் படித்த பிறகு மட்டுமே, எனக்கு ‘ஹென்றி லாஸன்’ என்ற பெயரில்
இப்படியொரு பிரபல எழுத்தாளர் இந்த உலகில் வாழ்ந்து மறைந்துள்ளார் என்ற விஷயமே தெரிய வந்துள்ளது.
என்னைப்போலவே இன்னும் எவ்வளவு பேர்கள் இவரைப்பற்றி அறியாமலும் தெரியாமலும் இருக்கிறார்களோ !
அதனால் மட்டுமே சற்றே விரிவாகத் தகவல்களைச் சேகரித்து, இந்தப் என் பதிவுத் தொடரினில் நான் அவற்றை சில குறிப்பிட்ட பொருத்தமான படங்களுடனும், அவரின்
கையெழுத்துக் கடிதத்துடனும், அவரின் சிலை படம், அவரின் தபால் தலைப்படம், அவர் படம் போடப்பட்டு அச்சாகி வெளியான கரன்சி நோட், அவர் பெயரில் நடைபெற்று வரும் திருவிழா, அவர் பெயரில் இயங்கிவரும் அருங்காட்சியகம் ஆகியவற்றுடன் கொண்டு வந்து காட்டியுள்ளேன்.
அதனாலேயே இது ஐந்து பகுதிகளுடன் கொண்ட ஒரு சிறு தொடராக வெளியிட வேண்டியதாகவும் அமைந்து விட்டது.
படங்கள் ஏதும் இல்லாமல் சும்மா மொய் மொய்யென்று அடர்த்தியாகவும் பொடிப்பொடியாகவும் எழுதினால், இந்தப்பதிவினை ஒரே பகுதியில்கூட நான் முடித்திருக்கலாம்தான்.
ஆனால் அதனை யாரும் விரும்பி சுவாரஸ்யமாகப் பார்க்கவோ படிக்கவோ மாட்டார்கள் என்பது என் சொந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடமாகும்.
இவற்றையெல்லாம் தாங்களாவது நன்கு புரிந்துகொண்டு எழுதியுள்ள பின்னூட்டம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி, மேடம்.
// அவர் வாழுங்காலத்தில் நம் பாரதியைப் போல் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கின்றார் என்பதை அறிய வேதனையாய் இருக்கின்றது.//
ஆம் மேடம். அவரின் சுய சரித்திரத்தைப் படித்ததும், எனக்கும் நம் மஹாகவி பாரதியார் தான் என் நினைவுக்கு உடனே வந்தார்.
// இந்தத் தொடருக்காக மட்டுமின்றி தொடர்ந்து வலையுலகில் நீங்கள் இயங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்!//
மிக்க நன்றி மேடம். அதற்கான சூழ்நிலைகள் எனக்கும் சாதகமாக விரைவில் அமையட்டும். அதுவரை தங்களின் இந்த வேண்டுகோளை என் மனதில் ஓர் ஓரமாக
பத்திரமாக நானும் வைத்துக்கொள்கிறேன்.
நன்றியுடன் கோபு
மூலக்கதாசிரியரின் பெருமைகளை மிக அழகாக வாசகரிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியை மிக அழகாகப் படங்களுடனும் தகவல்களுடனும் கோபு சார் பதிவிட்டிருப்பதே எனக்குப் பெருமையாக உள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.
நீக்குஹென்றி லாசன் அவர்களின் வாழ்க்கையை சுருக்கமாக அறிய முடிந்தது!
பதிலளிநீக்குஅவருடைய படைப்புகளை் பற்றி அறிய ஆவலுடன்இறை நாட்டப்படி காத்திருக்கிறேன்!!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் September 7, 2015 at 10:54 PM
நீக்குவாருங்கள் நண்பரே, வணக்கம்.
//ஹென்றி லாசன் அவர்களின் வாழ்க்கையை சுருக்கமாக அறிய முடிந்தது!//
சந்தோஷம். என்னாலும் அவரின் வாழ்க்கையைப்பற்றி சுருக்கமாக மட்டுமே கொடுக்க முடிந்துள்ளது :)
//அவருடைய படைப்புகளை் பற்றி அறிய ஆவலுடன்இறை நாட்டப்படி காத்திருக்கிறேன்!!//
மிக்க மகிழ்ச்சி நண்பரே, இறை நாட்டப்படி நாளை நாம் சந்திக்கும் வாய்ப்பு சாதகமாக அமையட்டும்.
அன்புடன் VGK
தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய கருத்துக்கும் மிகவும் நன்றிங்க முஹம்மது நிஜாமுத்தீன்.
நீக்குபல உன்னதமான படைப்பாளிகள் வாழ்வு ஏழ்மையிலே போகுது.தொடர் தொடர்ந்து நூலையும் வாசிக்கும் ஆசையில்.
பதிலளிநீக்குதனிமரம் September 7, 2015 at 11:45 PM
நீக்குவாங்கோ, திரு. நேசன் அவர்களே, வணக்கம்.
//பல உன்னதமான படைப்பாளிகள் வாழ்வு ஏழ்மையிலே போகுது.//
ஆம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.
//தொடர் தொடர்ந்து நூலையும் வாசிக்கும் ஆசையில்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)
தங்கள் வருகைக்கும் நூலை வாசிக்கும் ஆர்வத்துக்கும் மிகவும் நன்றி.
நீக்குஅருமையாக புத்தக விமர்சனம்.தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குதனிமரம் September 7, 2015 at 11:47 PM
நீக்கு//அருமையாக புத்தக விமர்சனம்.தொடர்கின்றேன்.//
தங்களின் தொடர் வருகை மகிழ்வளிக்கிறது. மேலும் மூன்று நாட்களுக்கும் தொடர்ந்து வாருங்கள், நண்பரே.
கருத்துக்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி.
நீக்கு’கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்...’ என்ற தலைப்பில் கீதமஞ்சரி வலைத்தளப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் 08.09.2015 வெளியிட்டுள்ளதோர் பதிவு: http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_8.html
பதிலளிநீக்குஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டும்.
// மனதளவிலும் உடலளவிலும் மிகவும் மோசமான நிலையில் நலிந்து கிடந்த ஹென்றி லாஸன் அவர்களைத் தூக்கி நிறுத்திய பெருமை, அவரை விடவும் இருபது வயது மூத்தவரான, அவருடைய சினேகிதி திருமதி. இஸபெல் பையர்ஸ் (Mrs. Isabel Byers) என்பவரையே சாரும்.//
பதிலளிநீக்குசும்மாவா சொன்னார்கள்
THERE IS A WOMAN BEHIND EVERY SUCCESSFUL MAN என்று.
//ஹென்றி லாஸன் அவர்களின் கையொப்பத்துடன், அவர் பண உதவி கேட்டு யாரோ ஒரு நண்பருக்கு எழுதியுள்ளதோர் கடிதம் .... இதோ கீழே://
அவர் உதவி கேட்டு எழுதி இருந்த வரிகளைப் படித்ததும் மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
// இறந்தபின்னர் அவர் பெருமைகளை நன்கு
உணர்ந்து கொண்டாடியுள்ள விசித்திர உலகம். //
இது வழக்கம் தானே.
வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
நீக்கு//சும்மாவா சொன்னார்கள்
THERE IS A WOMAN BEHIND EVERY SUCCESSFUL MAN என்று.//
கரெக்ட் ஜெயா. Mrs. Isabel Byers அவர்களைப்பற்றி நான் படித்ததும், எனக்கு உடனே, நீங்களும் உங்களைப்போன்ற வேறுசில என் நலம் விரும்பிகளும் மட்டுமே எனக்கு நினைவுக்கு வந்தார்கள். ஆனந்தக்கண்ணீர் விட்டுக் கொண்டேன். தூய நட்பு என்பது யானைபலம் தருவதாக உள்ளதே !
அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜெயந்தி மேடம். இன்று அவரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் உலகம் அன்று அவரைப் பிச்சைக்காரராக்கிப் பார்த்ததுதான் கொடுமை... எல்லா எழுத்தாளர்களின் தலையெழுத்தும் இதுதான்போலும்.. தக்க தருணத்தில் ஒரு நல்ல தோழி மட்டும் கிடைத்திராவிட்டால் அவரை இன்று உலகம் மறந்தே போயிருக்கும்.
நீக்கு//இங்கு காட்டப்பட்டுள்ள, உதவிகோரி எழுதப்பட்டுள்ள கடிதத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. தங்கள் தயவால் பார்த்து வியந்தேன். //
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன் அவர்களின் பின்னூட்டத்தையும், அதற்கு உங்கள் விளக்கத்தையும் படித்து வியந்து, அசந்து, மயங்கி... இன்னும் என்னென்ன சொல்ல.
HATS OFF TO GOPU ANNA.
கோபு அண்ணா, உங்க கிட்ட இருந்து கத்துக்க நிறைய, நிறைய, நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா அதுக்கு என்னுடைய மீதி வாழ்க்கை போறாதுன்னு நினைக்கிறேன்.
உங்கள் ஞாபக சக்தியும் வியக்க வைக்கிறது.
என் சிறு வயதில் நடந்த நிறைய விஷயங்கள் எனக்கு மறந்து விட்டது.
இப்ப நான் என் பேத்திக்காக அவளின் 3 வருடத்தில் நடந்தவற்றை குறித்து வைத்துக் கொண்டு வருகிறேன். அவற்றை சொல்லிக் கொடுத்தால் அவளும் உங்களைப் போல் நடக்கும் விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வாள் என்பதற்காகவே.
ஆனால் நீங்கள் ஒரு சுயம்பு.
அன்புள்ள ஜெயா, மீண்டும் வணக்கம்மா.
நீக்கு//HATS OFF TO GOPU ANNA.
கோபு அண்ணா, உங்க கிட்ட இருந்து கத்துக்க நிறைய, நிறைய, நிறைய விஷயங்கள் இருக்கு.//
தங்களின் மீண்டும் வருகையும் ஆத்மார்த்தமான கருத்துக்களும் என்னை மிகவும் நெகிழ வைக்கின்றன.
//ஆனா அதுக்கு என்னுடைய மீதி வாழ்க்கை போறாதுன்னு நினைக்கிறேன். //
தீர்க்க சுமங்கலியாக, செளக்யமா, சந்தோஷமா, பேரன் பேத்திகளுடன் ஜாலியாக நூறாண்டுகளுக்கு மேலேயே வாழ வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்.
பிரியமுள்ள கோபு அண்ணா
கோபு சாரின் திட்டமிடலும் செய்நேர்த்தியும் எப்போதும் எனது மலைப்புக்குரியவை... கற்றுக்கொள்ள அநேகம் உண்டு அவரிடம். கருத்துக்கு மிகவும் நன்றி மேடம்.
நீக்குஹென்றி லாஸனின் புகைப்படம் அவரைப்பற்றிய குறிப்புகள் எல்லாம் மிக அருமை. எந்த செயலை எடுத்து செய்தாலும் அதில் உங்களின் முழு ஈடுபாடுதான் உங்களின் வெற்றிக்கு காரணம். சாதிக்க பிறந்தவர் தான் நீங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
கோமதி அரசு September 9, 2015 at 2:55 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஹென்றி லாஸனின் புகைப்படம் அவரைப்பற்றிய குறிப்புகள் எல்லாம் மிக அருமை. எந்த செயலை எடுத்து செய்தாலும் அதில் உங்களின் முழு ஈடுபாடுதான் உங்களின் வெற்றிக்கு காரணம். சாதிக்க பிறந்தவர் தான் நீங்கள். வாழ்த்துக்கள்.//
:) ஆஹா, இங்கு திருச்சியில் கொளுத்தும் வெயிலுக்குத் தங்களின் பாராட்டுகளும், வாழ்த்துகளும் ஐஸ்கட்டிபோல ஜில்லுன்னு என்னைக் குளிரடிக்க வைக்கின்றன.
முரட்டுக்கம்பளியைப் போர்த்திக்கொண்டுதான் இதனை நான் இப்போது டைப் அடிக்க வேண்டியுள்ளது. :)
அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். - VGK
தங்கள் வருகைக்கும் கோபு சாரின் அசாத்தியத் திறமை குறித்த தங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி கோமதி மேடம்.
நீக்குஒரு படைப்பாளிக்கு எத்தனை துன்பங்கள் :(
பதிலளிநீக்குஇறந்த பின் இவ்வளவு கவுரவம் செய்து என்னபயன் ?
AngelinSeptember 10, 2015 at 10:09 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஒரு படைப்பாளிக்கு எத்தனை துன்பங்கள் :(
இறந்த பின் இவ்வளவு கவுரவம் செய்து என்னபயன் ?//
மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.
அணை கடந்த வெள்ளம் போல் வாழ்நாளில் வறுமையும் வெறுமையும் கொண்ட எழுத்தாளர் மரணத்தின் பின்னே பெற்ற பெருமைகள் அவருக்கு என்ன பயனைத்தந்திருக்கமுடியும்..?!!
பதிலளிநீக்குவிமர்சனமாக அளிக்காது புகழுரைகள் தந்தது அருமை...
இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:44 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அணை கடந்த வெள்ளம் போல் வாழ்நாளில் வறுமையும் வெறுமையும் கொண்ட எழுத்தாளர் மரணத்தின் பின்னே பெற்ற பெருமைகள் அவருக்கு என்ன பயனைத்தந்திருக்கமுடியும்..?!!//
மிகவும் யோசிக்க வைக்கும் விஷயம்தான். ஒருவர் உயிருடன் இருக்கும்வரை அவரின் அருமை + பெருமைகளை பிறர் சரிவர அறிவதோ புரிவதோ இல்லை. இதுதான் உலகம் என்று ஆகிவிட்டது. என்ன செய்ய?
//விமர்சனமாக அளிக்காது புகழுரைகள் தந்தது அருமை...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
விமர்சன வித்தகிகளின் படைப்புகளுக்கு மிகச் சாதாரணமானவனான நான் எப்படி விமர்சனம் எழுத இயலும்? :)
Mail message from ஆச்சி on 09.11.2015 .... 5.52 AM
பதிலளிநீக்குEnnaal comment Box il comment publish kodukka mudiyavillai..so inge therivikiren.
மற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பதில் எள்ளளவும் குறையற்ற Vgk sir,
எழுத்தாற்றல் மிக்க கீதா அவர்களின் மொழி பெயர்ப்பு படைப்பினை தங்களது நடையில் பகிர்ந்தளித்துள்ளீர்கள்.
-=-=-=-=-=-
வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)
தங்களுக்கும் தங்கள் கணவர், குழந்தைகள் இருவருக்கும் + தங்கள் இல்லத்தில் உள்ள மாமியார் போன்ற மற்ற உறவினர்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு