”பொக்கிஷம்”
தொடர்பதிவு
By
வை. கோபாலகிருஷ்ணன்
காஞ்சீ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட 68 ஆவது பீடாதிபதியாகப் பரிமளித்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களைப்பற்றி தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது.
உங்களில் சிலர் அவர்களை நேரில் தரிஸிக்கும் பாக்யம் பெற்றிருக்கலாம். சிலர் அவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். சிலர் அவர்களைப்பற்றி நூல்கள் மூலம் படித்து உணர்ந்திருக்கலாம்.
காட்சிக்கு எளிமையாகவும், கருணை வடிவமாகவும், சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வரரின் அவதாரமாகவும், ஞானத்தில் தக்ஷிணாமூர்த்தியும் ஞான சரஸ்வதியும் சேர்ந்த மொத்த உருவமாகவும், முக்காலமும் உணர்ந்த மஹா முனிவராகவும், நடமாடும் தெய்வமாகவும் நம்மிடையே மிகச்சமீபத்தில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.
இந்த உலகில் உள்ள அனைத்து மதத்தவர்களாலும், அனைத்து அரசியல் தலைவர்களாலும் போற்றிக் கொண்டாடப்பட்டவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவதரித்த நாள்: 20.05.1894
[ஜய வருஷம் வைகாசி மாதம் எட்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 1.36 மணிக்கு]
அவதார ஸ்தலம்: விழுப்புரம் [தமிழ்நாடு - இந்தியா]
தந்தை பெயர்: ஸ்ரீ. சுப்ரமணிய சாஸ்திரி
தாயார் பெயர்: ஸ்ரீமதி. மஹாலக்ஷ்மி அம்மாள்.
தன் 13 ஆவது வயதில் துறவரம் மேற்கொண்டு, காஞ்சி பீடத்தின் அதிபதியாக நியமிக்கப்பட்ட நாள்: 13.02.1907
கும்பகோணம் ஸ்ரீமடத்தில் கோலாகல பட்டாபிஷேகம் நடந்து ”ஜகத்குரு” என ஆக்கப்பட்ட நாள்: 09.05.1907
இவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்கள், அனைத்து கிராமங்கள், அனைத்துக் கோயில்கள், குளங்கள், நதிகள் என பாதயாத்திரையாகவே பலமுறை பயணம் செய்து, அனைத்துத்தரப்பு மக்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரஹம் செய்தவர்கள்.
இவருடைய காலத்தில் தான், வேதங்கள் தழைத்தோங்கவும், வேத வித்துக்களுக்கு உரிய மரியாதைகள் கிடைக்கவும், புதிய வேதபாடசாலைகள் தோன்றவும், வேதம் கற்க முன்வரும் வித்யார்த்திகளுக்கு உபகாரச்சம்பளம் [STIPEND] அளித்தல், வேத அத்யயனம் முழுவதும் முடித்து பரீக்ஷையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, சான்றிதழ் அளித்தல், அதனுடன் மிகப்பெரிய ஊக்கத்தொகை அளித்தல் போன்றவைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஸ்வாமிகளிடம் ஒப்புதல் பெற்று, பல கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அனைத்துத்தரப்பு மக்களாலும் அன்புடன் போற்றிக்கொண்டாடப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா ஸ்வாமிகள், 08.01.1994 அன்று காஞ்சீபுரத்தில் தனது 100 ஆவது வயதில், தன் பூவுடலைத் துறந்து இறைவனுடன் ஐக்கியமானார்கள்.
என் பள்ளிப்பருவத்தில் [ 1961-1966 ] ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில், நான் படித்த திருச்சி தேசியக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா, சுமார் ஒரு மாதம் முகாமிட்டு தங்கி, ஸ்ரீ சந்த்ரமெளலீஸ்வரர் பூஜை மிகச்சிறப்பாகச் செய்வார்கள். எவ்வளவோ நாட்கள் நானும் பூஜையை தரிஸித்து விட்டு, இவர்களின் திருக்கரங்களால் அபிஷேக தீர்த்தம் வாங்கி அருந்தியது உண்டு.
அந்த நாட்களில் தினமும் கோபூஜை, கஜபூஜை என ஒரே அமர்க்களமாக இருக்கும். அவற்றையெல்லாம் நேரில் கண்டு களிக்க ஏதோவொரு ஜன்மாந்தர புண்ணியம் செய்திருக்க வேண்டும் என அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
நானும் என் குடும்பத்தாரும் இவர்களைப் பலமுறை பல ஊர்களில் தரிஸிக்கும் பாக்யம் பெற்றிருந்தோம். அவற்றில் தமிழ்நாட்டைத் தாண்டி அமைந்துள்ள பண்டரிபுரம், கர்னூல், குண்டக்கல் அருகே உள்ள ஹகரி முதலியன குறிப்பிடத்தக்கவை. ஒவ்வொருமுறை நாங்கள் தரிஸனத்திற்குச்சென்ற போதும் எவ்வளவோ MIRACLES நிகழ்ந்துள்ளன.
பண்டரிபுரத்தில், ஸ்வாமிகள் ஸ்நானம் செய்த சந்திரபாகா நதியினில், அவர்களுக்குப்பின்புறமாக சற்று தள்ளி ஸ்நானம் செய்யும் பாக்யம் பெற்றேன். அதுபோலவே காஞ்சீபுரத்திலும் அவர் நீராடிய ஓர் குளத்தில் அவருடன் ஸ்நானம் செய்யும் பாக்யம் கிடைக்கப்பெற்றேன்.
ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களுடனேயே கூடச்சென்று, ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன், ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகிய தெய்வங்களை மிக அருகில் திவ்ய தரிஸனம் செய்யும் பாக்யம் கிடைக்கப்பெற்றேன்.
நான் தரிஸனத்திற்குச் சென்ற சில சமயங்களில், ஒருசில பெரும் பணக்காரர்களும் தரிஸனத்திற்கு வருவார்கள். மிகப்பெரிய அரசியல் தலைவர்களும், மந்திரிகளும், VIPs களும் கூட தரிஸனத்திற்கு வருவதுண்டு.
இதுபோல வருபவர்கள் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும், அவருக்கு என்னதான் செல்வாக்கு இருந்தாலும், மற்ற ஏழை எளிய மக்கள் போலவே, ஸ்ரீ மஹாபெரியவா சந்நதியில் அனைவருமே சமமாகத்தான் பாவிக்கப்படுவார்கள்.
யாருக்கும் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. முன்னுரிமையும் கிடையாது. அங்கு வருபவர்களுக்கு ஸ்வாமிகளை தரிஸிக்கப் பிராப்தம் இருந்தால் மட்டுமே, ஸ்வாமிகளின் தரிஸனம் கிடைக்கும்.
தரிஸன நேரம் காலம் என்றெல்லாம் எதுவும் வரையறுத்துச்சொல்லவே முடியாது. அதுபோல ஸ்வாமிகள் சிலநாட்கள் முழுக்க முழுக்க மெளனமாகவே இருந்து விடுவார்கள். அதுபோல பல மணி நேரம் தொடர்ச்சியாக த்யானத்தில், நிஷ்டையில் அமர்ந்து விடுவார்கள்.
யாருக்காகவும் தனது மெளன விரதத்தையோ, த்யான நிலையையோ கலைத்துக்கொள்ளவே மாட்டார்கள். சில நாட்களில் அதிர்ஷ்டசாலியான சிலரிடம் வெகு நேரம் பேசிக்கொண்டு இருப்பார்கள். தரிஸனத்திற்கு வருபவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருப்பினும் தனியாக ரூம் போட்டு பேசுவதெல்லாம் நடக்கவே நடக்காது.
தரிஸனத்திற்கு வந்திருக்கும் சாதாரண ஏழை எளிய மக்களுடன் சேர்ந்தே கூட்டத்துடன் நின்று, சிறிய க்யூ வரிசையில் தான், ஒருவர் பின் ஒருவராக தரிஸித்து நமஸ்கரித்துச் செல்ல வேண்டும்.
பெரும்பாலும் மாட்டுக்கொட்டகை போன்ற தென்னங்கீற்றுகளால் கூரை வேயப்பட்ட ஓர் குடிலில் தான், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை தரிஸிக்க முடியும்.
முழுக்க முழுக்க தரிஸனத்திற்குச் செல்வோரின் அதிர்ஷ்டத்தைப்பொறுத்தே, அவர்களை தரிஸிப்பதோ, அவர்கள் பிறருடன் பேசுவதைக்கேட்பதோ அல்லது அவர்களுடன் நாம் சற்று நேரம் பேசும் பாக்யமோ கிடைக்கக்கூடும்.
இவர்களின் பாதங்களை தரிஸித்தாலே போதும். ஏதும் தனியே நாம் வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவர்களின் அருள் பார்வை நம் மீது பட்டாலே போதும். நமக்கு என்ன வேண்டுமோ அது உடனே கிடைத்து விடும். நாம் நம் மனதில் நியாயமாக என்ன நினைத்து வேண்டிக்கொள்கிறோமோ, அது அவரால் உடனடியாகவே நிறைவேற்றித் தரப்படும்.
ஒவ்வொரு முறையும் நான் அவர் பாதங்களை தரிஸிக்கும் போதெல்லாம், அவர் பாதங்களைத் தாங்கி நிற்கும் பாதரக்ஷக்கட்டைகள் [மரக்கட்டையால் செய்யப்பட்ட காலணிகள்] என்ன பாக்யம் செய்திருக்குமோ என நான் என் மனதில் நினைத்துக்கொள்வது உண்டு.
இந்த என் மனதில் ஏற்பட்ட எண்ணங்களை எப்படித்தான் அந்த மஹான் அறிந்து கொண்டாரோ எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரியாத விஷயங்களா? எல்லோருடைய மனதிலும் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ளும் மஹா ஞானியல்லவா!
07.02.1994 அன்று அந்த அதிசயம் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அவர்கள் கடைசியாக அணிந்து கொண்டிருந்த ஒரு ஜோடி பாதரக்ஷைகள் எனக்கே எனக்காக அருட் பிரஸாதமாகக் கிடைக்கப்பெற்றேன்.
அவற்றை வாங்கிக்கொண்ட நான் என் கண்களில் ஒத்திக்கொண்டேன். அந்த கிடைத்தற்கு அரிய பொக்கிஷமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஸ்ரீ பாதுகைகள் இன்றும் என் குடும்பத்தில் உள்ளன.
அந்த ஸ்ரீ பாதரக்ஷை கட்டைகளின் மஹிமை என்ன? மகத்துவம் என்ன?அதை நாங்கள் எவ்வாறு பூஜித்து வருகிறோம்? அவைகள் எவ்வாறு என்னையும் என் குடும்பத்தாரையும் இன்றும் ரக்ஷித்துக்காத்து வருகிறது என்ற விபரங்களை என் அடுத்து வரும் பகுதி ஒன்றினில் [பகுதி-10ல்] விளக்கமாகச் சொல்கிறேன்.
ஸ்ரீகுரு பாத தரிஸனம்
பல ஜன்ம சாப விமோசனம்
தொடரும்
இந்த ‘பொக்கிஷம்’
தொடரின் அடுத்தபகுதி
17.04.2013 புதன்கிழமை
வெளியிடப்படும்
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
இதுவன்றோ பொக்கிஷம்? பாக்கியம் செய்தவர் நீங்கள். முன்பு இராஜராஜேஸ்வரி மேடம் பதிவொன்றில் நீங்கள் வரைந்த காமாட்சி அம்மன் படம் (என்று நினைக்கிறேன்) மகா பெரியவரால் அங்கீகரிக்கப் பட்டுக் கோவிலில் வைக்கப் பட்டுள்ளது என்று சொல்லியிருந்த நினைவு. தொடரக் காத்திருக்கிறேன். பாதரட்சைகள் உங்களிடம் கிடைத்த பின்னணி அறிய ஆவலாயிருக்கிறேன்.
ReplyDeleteஸ்ரீராம். April 12, 2013 at 1:13 AM
Deleteவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
இந்தப்பகுதிக்குத் தங்களின் முதல் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
//இதுவன்றோ பொக்கிஷம்? பாக்கியம் செய்தவர் நீங்கள். முன்பு இராஜராஜேஸ்வரி மேடம் பதிவொன்றில் நீங்கள் வரைந்த காமாட்சி அம்மன் படம் (என்று நினைக்கிறேன்) மகா பெரியவரால் அங்கீகரிக்கப் பட்டுக் கோவிலில் வைக்கப் பட்டுள்ளது என்று சொல்லியிருந்த நினைவு. தொடரக் காத்திருக்கிறேன்.//
இதைப்பற்றிய விபரங்கள் என் அடுத்த பதிவினில் [பகுதி-9 ல்] அறிவிக்கப்பட உள்ளன.
//பாதரட்சைகள் உங்களிடம் கிடைத்த பின்னணி அறிய ஆவலாயிருக்கிறேன்.//
என்னால் தெரிவிக்கக்கூடிய விஷயங்களை மட்டும், இதன் அடுத்த இரண்டு பகுதிகளில் ஓரளவு சொல்ல நினைக்கிறேன். இந்தத்தொடர் முடிந்தபின் ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும். தனியாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்.
Today I learnt a lot of new things about swamigal. You are really very very lucky to get so many opportunities like taking bath in the same tank etc. Thank you very much sir for sharing such great experiences with us.
ReplyDeletePriya Anandakumar April 12, 2013 at 1:18 AM
DeleteWELCOME to you Madam, வாங்கோ, வணக்கம்.
//Today I learnt a lot of new things about swamigal. இன்று நான் ஸ்வாமிகளைப்பற்றி நிறைய புதிய செய்திகள் அறிந்துகொண்டேன்.//
சந்தோஷம். தொடர்ந்து வாருங்கள். மேலும் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
//You are really very very lucky to get so many opportunities like taking bath in the same tank etc. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஸ்நானம் செய்த அதே நதியில், அதே குளத்தில் தாங்களும் கூடவே ஸ்நானம் செய்யும் பல வாய்ப்புகள் கிடைத்துள்ள தாங்கள் உண்மையிலேயே மிக மிக அதிர்ஷ்டசாலி தான்.//
புரிதலுக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி.
//Thank you very much sir for sharing such great experiences with us. தங்களின் மிகச்சிறந்த அனுபவங்களை, இங்கு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக மிக நன்றி, சார்//
மிகவும் சந்தோஷம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
Aha!!!!!!!!!!
ReplyDeleteVery lucky to view this post.
viji
viji April 12, 2013 at 1:33 AM
Deleteவாங்கோ விஜி மேடம், வணக்கம்.
//Aha!!!!!!!!!! ஆஹா!!!!!!!!!! Very lucky to view this post. இந்தப்பதிவைக் காணும் பாக்யம் பெற்ற நான் மிகவும் அதிர்ஷ்டசாலியே - viji விஜி//
தங்களின் மிக நீண்ட மெயிலைப்படித்ததும் எனக்கும் மிகவும் Thrilling ஆகவே இருந்தது. பதிவு வெளியிட்ட மறுநிமிடமே உங்களால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் Miracle ஐ உணர முடிந்துள்ளது. எல்லாமே நல்லபடியாக முடிய பிரார்த்திப்போம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,
உங்களுக்கு நிறைய ஆசிகள் கிடைத்திருக்கிறது. பொறாமையாக இருக்கிறது.உங்களுக்கு அவருடைய பாதணிகள் கிடைத்து பற்றிய பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
ReplyDeleteஎன்ன சொல்வது உங்களது அதிஷ்டத்தைப் பற்றி.!!!
உங்களிடம் ஒரு கேள்வி.
சில வருடங்களுக்கு முன்பாக லா.சு.ராமாமிர்தம் எழுதிய "கல்கண்டு மலையில் சில பொடிகள் " (மகா பெரியவரின் miracles பற்றி இருக்கும்) என்ற மிக அருமையான புத்தகம் படிக்க கிடைத்தது. படித்துக் கொண்டிருந்தோம். வீட்டிற்கு வந்த ஒருத்தர் படித்து விட்டுத் தருகிறேன் என்று எடுத்து சென்றவர் திருப்பித் தரவில்லை.இன்னொரு புக் வாங்கலாம் என்றால் எந்த பதிப்பகம் என்றும் நினைவில்லை. உங்களுக்குத் தெரியுமா? பதிப்பகம் பெயர் சொன்னால் வாங்க எதுவாக இருக்கும்.
நன்றி
rajalakshmi paramasivam April 12, 2013 at 1:40 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//உங்களுக்கு நிறைய ஆசிகள் கிடைத்திருக்கிறது. பொறாமையாக இருக்கிறது. உங்களுக்கு அவருடைய பாதணிகள் கிடைத்து பற்றிய பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். என்ன சொல்வது உங்களது அதிஷ்டத்தைப்பற்றி.!!!//
மிகவும் சந்தோஷம்.
//உங்களிடம் ஒரு கேள்வி: சில வருடங்களுக்கு முன்பாக லா.சு.ராமாமிர்தம் எழுதிய "கல்கண்டு மலையில் சில பொடிகள் " (மகா பெரியவரின் miracles பற்றி இருக்கும்) என்ற மிக அருமையான புத்தகம் படிக்க கிடைத்தது. படித்துக் கொண்டிருந்தோம். வீட்டிற்கு வந்த ஒருத்தர் படித்து விட்டுத் தருகிறேன் என்று எடுத்து சென்றவர் திருப்பித் தரவில்லை. இன்னொரு புக் வாங்கலாம் என்றால் எந்த பதிப்பகம் என்றும் நினைவில்லை. உங்களுக்குத் தெரியுமா? பதிப்பகம் பெயர் சொன்னால் வாங்க எதுவாக இருக்கும். நன்றி//
தாங்கள் சொல்லும் குறிப்பிட்ட புத்தகம் பற்றி என்னிடம் எந்த விபரங்களும் இல்லை. Internet இல் தங்களுக்காக Search போட்டுப்பார்த்தும், அந்த புத்தகத்தை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. லா.ச.ரா அவர்கள் எழுதிய மீதி நூல்கள் மட்டுமே வருகின்றன.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் Miracles பற்றி பலரும் பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள். Higgimbothoms போன்ற பெரிய புத்தகக்கடைகளுக்குச்சென்றால் ஏராளமாகக் கிடைக்கும்.
எனக்கு இதுபோன்ற Miracles பற்றியெல்லாம் அடிக்கடி மெயிலில் தகவல்கள் பலராலும் அனுப்பப்படுகின்றன. தங்கள் மெயில் விலாசம் கொடுத்தால் தினமும் அவற்றை நான் தங்களுக்கு Forward செய்து விடுவேன்.
இதுபோன்று வந்துள்ள மெயில்களில் நான் படிக்க வேண்டியதே நூற்றுக்கணக்கில் உள்ளன. இதுவரை படித்ததில் 2 அல்லது 3 என்னை மிகவும் பாதித்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா கருணையை நினைத்து, என் கண்களிலிருந்து தாரை தாரையாக ஆனந்தக்கண்ணீரை வரவழைத்துள்ளன. அவற்றைத்தேடிக் கண்டுபிடித்து உங்களுக்கு முதலில் அனுப்பி விடுகிறேன்.
என் மெயில் விலாசம்: valambal@gmail.com
விருப்பப்பட்டால் தங்கள் மெயில் விலாசம் எழுதுங்கோ. கட்டாயம் ஒன்றும் இல்லை. தங்கள் விருப்பம் மட்டுமே.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
அவர் பாதங்களை தரிஸிக்கும் போதெல்லாம், அவர் பாதங்களைத் தாங்கி நிற்கும் பாதரக்ஷக்கட்டைகள் [மரக்கட்டையால் செய்யப்பட்ட காலணிகள்] என்ன பாக்யம் செய்திருக்குமோ என நான் என் மனதில் நினைத்துக்கொள்வது உண்டு...
ReplyDeleteகுருவின் மேன்மை உணர்ந்த உங்களிடம் குருவின் பாதரக்ஷைகள் வந்து இருக்கிறது.
//
அவர்கள் கடைசியாக அணிந்து கொண்டிருந்த ஒரு ஜோடி பாதரக்ஷைகள் எனக்கே எனக்காக அருட் பிரஸாதமாகக் கிடைக்கப்பெற்றேன். //
எந்த சமயத்தில் அந்த பாதரக்ஷைகளை பெற்றீர்கள்? அறிய ஆவல்.
கோமதி அரசு April 12, 2013 at 1:47 AM
Deleteவாங்கோ மேடம், வணக்கம்.
*****அவர் பாதங்களை தரிஸிக்கும் போதெல்லாம், அவர் பாதங்களைத் தாங்கி நிற்கும் பாதரக்ஷக்கட்டைகள் [மரக்கட்டையால் செய்யப்பட்ட காலணிகள்] என்ன பாக்யம் செய்திருக்குமோ என நான் என் மனதில் நினைத்துக்கொள்வது உண்டு...*****
//குருவின் மேன்மை உணர்ந்த உங்களிடம் குருவின் பாதரக்ஷைகள் வந்து இருக்கிறது.//
சந்தோஷம்.
*****அவர்கள் கடைசியாக அணிந்து கொண்டிருந்த ஒரு ஜோடி பாதரக்ஷைகள் எனக்கே எனக்காக அருட் பிரஸாதமாகக் கிடைக்கப்பெற்றேன்.*****
//எந்த சமயத்தில் அந்த பாதரக்ஷைகளை பெற்றீர்கள்? அறிய ஆவல்.//
ஆவலுக்கு மிக்க நன்றி. இதன் பின்னனியில் எவ்வளவோ அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. சிலவற்றைக்கேட்டால், சிலருக்குக் கற்பனைக்கதையோ எனத்தோன்றக்கூடும். அவ்வளவு சுலபமாக நம்பமுடியாத இனிய நிகழ்ச்சிகள் அவை.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஸித்தியடைந்தது 08.01.1994 ஸ்ரீபாதுகைகள் எனக்குக்கிடைத்த நாள்: 07.02.1994. மிகச்சரியாக ஒரு மாதத்தில் கிடைக்கப்பெற்றேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
//அவர்கள் கடைசியாக அணிந்து கொண்டிருந்த ஒரு ஜோடி பாதரக்ஷைகள் எனக்கே எனக்காக அருட் பிரஸாதமாகக் கிடைக்கப்பெற்றேன். // இது உங்களுக்கு மிகப்பெரியபொக்கிஷம். இப்பெரியவருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போது உண்டு.நானும் இப்பெரியவரை தரிசிக்கும் பாக்கியம்
ReplyDeleteகிடைத்தது. அடுத்த தொடரை படிக்க நானும் ஆவலாயிருக்கிறேன்.
ammulu April 12, 2013 at 2:03 AM
Deleteவாங்கோ அம்முலு வாங்கோ, வணக்கம்.
*****அவர்கள் கடைசியாக அணிந்து கொண்டிருந்த ஒரு ஜோடி பாதரக்ஷைகள் எனக்கே எனக்காக அருட் பிரஸாதமாகக் கிடைக்கப்பெற்றேன்.*****
//இது உங்களுக்கு மிகப்பெரியபொக்கிஷம்.//
மிகப்பெரிய பொக்கிஷமே தான், அம்முலு. மிகச்சரியாக புரிந்துகொண்டு சொல்லியிருக்கிறீர்கள். சந்தோஷம்.
//இப்பெரியவருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு.//
அப்படியா? மிக்க மகிழ்ச்சி! ;)
//நானும் இப்பெரியவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.//
கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது, அம்முலு.
//அடுத்த தொடரை படிக்க நானும் ஆவலாயிருக்கிறேன்.//
;))))) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.
ஸ்வாமிகளிடம் ஒப்புதல் பெற்று, பல கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டன.
ReplyDeleteஎங்கள் இல்லத்தின் அருகிலுள்ள
காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது கர்ப்பக்கிரக விமானத்திற்கு அருகில் செல்ல அனுமதி பெற்று அங்கு என் நாத்தனாரின் பெண்குழந்தைக்கு காமாட்சி என்று பெயர் சூட்டியவர் சாட்சாத் பெரியவரேதான் ..
என் நாத்தனாருக்கு ஐந்தும் பெண்குழந்தைகளே வரிசையாகப்பிறந்தனர் ...
இராஜராஜேஸ்வரி April 12, 2013 at 2:05 AM
Deleteவாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!! வாங்கோ!!!!
தங்களுக்கு என் புத்தாண்டு வந்தனங்கள்.
*****ஸ்வாமிகளிடம் ஒப்புதல் பெற்று, பல கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டன.*****
//எங்கள் இல்லத்தின் அருகிலுள்ள காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது//
காமாக்ஷி அம்மன் கோயில் அருகே தான் தங்களின் இனிய இல்லம் அமைந்துள்ளதா? சந்தோஷம். இது எனக்கு ஓர் உபரியான தகவலாக்கும். ஹூக்க்க்கும்.
//கர்ப்பக்கிரக விமானத்திற்கு அருகில் செல்ல அனுமதி பெற்று//
தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் அனுமதிக்காமல் கும்பாபிஷேகம் செய்து என்ன பயன்? ;)))))
//அங்கு என் நாத்தனாரின் பெண்குழந்தைக்கு காமாட்சி என்று பெயர் சூட்டியவர் சாட்சாத் பெரியவரேதான்.//
ஆஹா, மிகவும் இனிமையான தகவலாக உள்ளதே! மகிழ்ச்சி!! ;)
//என் நாத்தனாருக்கு ஐந்தும் பெண்குழந்தைகளே வரிசையாகப்பிறந்தனர் ...//
தங்களுக்கு நாத்தனார்களும் ஐவர், அதில் ஒரு நாத்தனாருக்கு பெண் குழந்தைகளும் ஐவரா? ;)
இதைத்தங்களின் அந்த நாத்தனார் அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்களோ? எனக்குத்தெரியாது.
ஆனால் இன்றைக்கு பெண் குழந்தைகள் மட்டுமே மிக நன்றாகப் படிக்கிறார்கள், கடைசிவரை தாய் தந்தையரிடம் மிகவும் பாசமாகவும், ஒட்டுதலாகவும் உள்ளார்கள்.
எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்காமல் போனதில் என்னைவிட என் தாயாருக்கு மிகவும் ஆதங்கமாக இருந்தது.
அரிசி, பருப்பு போல, ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் இரண்டுமாக கலந்து தான் பிறக்கணும் அது தான் குடும்பத்துக்கு அழகு என்று சொல்லி புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
1982ல் எனக்கு மூன்றாவதும் பிள்ளைக்குழந்தை பிறந்துள்ளது எனத்தெரிந்ததும், இதுவாவது ஒரு பெண்ணாக பிறந்திருக்கக்கூடாதா எனச்சொல்லி அன்று முழுவதும் புலம்பினார்கள்.
இன்றைக்கு 30-40 வயதாகியும், பையன்களுக்குப் பொருத்தமான பெண்கள் அமைவது குதிரைக்கொம்பாக ஆகிவிட்டது.
07.02.1994 அன்று அந்த அதிசயம் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அவர்கள் கடைசியாக அணிந்து கொண்டிருந்த ஒரு ஜோடி பாதரக்ஷைகள் எனக்கே எனக்காக அருட் பிரஸாதமாகக் கிடைக்கப்பெற்றேன்.
ReplyDeleteஅதிசயமும் அதிர்ஷ்டமும் ஒருங்கிணைந்து அருட்பிரசாதமாக கிடைத்த பாதரட்சைகளுக்கு நமஸ்காரங்கள்...
இராஜராஜேஸ்வரி April 12, 2013 at 2:11 AM
Delete*****07.02.1994 அன்று அந்த அதிசயம் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அவர்கள் கடைசியாக அணிந்து கொண்டிருந்த ஒரு ஜோடி பாதரக்ஷைகள் எனக்கே எனக்காக அருட் பிரஸாதமாகக் கிடைக்கப்பெற்றேன்.*****
//அதிசயமும் அதிர்ஷ்டமும் ஒருங்கிணைந்து அருட்பிரசாதமாக கிடைத்த பாதரட்சைகளுக்கு நமஸ்காரங்கள்...//
மிகவும் சந்தோஷம். நான் ஸ்ரீபாதுகைகளை வணங்கிடும் போது எல்லோருக்காகவும் தான் “லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து” எனச்சொல்லித்தான் நமஸ்கரிப்பது வழக்கம். அதனால் அதன் பலன் / ஆசிகள் நிச்சயமாக தங்களுக்கும் உண்டு ;)
முழுக்க முழுக்க தரிஸனத்திற்குச் செல்வோரின் அதிர்ஷ்டத்தைப்பொறுத்தே, அவர்களை தரிஸிப்பதோ, அவர்கள் பிறருடன் பேசுவதைக்கேட்பதோ அல்லது அவர்களுடன் நாம் சற்று நேரம் பேசும் பாக்யமோ கிடைக்கக்கூடும்.
ReplyDeleteஒருமுறை நாராயணீயம் வாசிக்கும்போது வந்து அனைவரையும் ஆசீர்வதித்தது பெரும் பேறாகக் கருத்தில் நிறைக்கிறது ...
இராஜராஜேஸ்வரி April 12, 2013 at 2:14 AM
Delete*****முழுக்க முழுக்க தரிஸனத்திற்குச் செல்வோரின் அதிர்ஷ்டத்தைப்பொறுத்தே, அவர்களை தரிஸிப்பதோ, அவர்கள் பிறருடன் பேசுவதைக்கேட்பதோ அல்லது அவர்களுடன் நாம் சற்று நேரம் பேசும் பாக்யமோ கிடைக்கக்கூடும்.*****
//ஒருமுறை நாராயணீயம் வாசிக்கும்போது வந்து அனைவரையும் ஆசீர்வதித்தது பெரும் பேறாகக் கருத்தில் நிறைக்கிறது ...//
ஆஹா, இதனைக்கேட்கவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
தாங்கள் வலையுலகில் / எழுத்துலகில் / ஆன்மிகப்பதிவுகளில் / ஏன் மற்ற அனைத்துத் திறமைகளிலும், செளபாக்யங்களிலும் கொடி மின்னல் போல பளிச்சிடும் காரணம் இப்போதல்லவா தெரிகிறது!!
மேலும் மேலும் சகல ஸம்பத்துக்களும், வெற்றிகளும் பெற்று நீடூழி வாழப் பிரார்த்திக்கிறேன்.
அந்த மஹானின் பாதரட்சைகள் நிஜமான பொக்கிஷம் தான். ஒவ்வொருமுறை உங்கள் பொக்கிஷப் பதிவு படிக்கும்போதும், அடடா, இதைவிட வேறு பொக்கிஷம் இருக்க முடியுமா என்று தோன்றும். ஆனால் அடுத்த பதிவில் இதைவிட பொக்கிஷமான ஒன்றைப் பற்றி எழுதுகிறீர்கள். எல்லாமே ஒன்றையொன்று மிஞ்சும் பொக்கிஷங்களாக இருக்கின்றன.
ReplyDeleteஇந்தப் பதிவுகள் எல்லாமே பொக்கிஷங்கள் தான்.
Ranjani Narayanan April 12, 2013 at 2:55 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//அந்த மஹானின் பாதரட்சைகள் நிஜமான பொக்கிஷம் தான். ஒவ்வொருமுறை உங்கள் பொக்கிஷப் பதிவு படிக்கும்போதும், அடடா, இதைவிட வேறு பொக்கிஷம் இருக்க முடியுமா என்று தோன்றும். ஆனால் அடுத்த பதிவில் இதைவிட பொக்கிஷமான ஒன்றைப் பற்றி எழுதுகிறீர்கள். எல்லாமே ஒன்றையொன்று மிஞ்சும் பொக்கிஷங்களாக இருக்கின்றன. இந்தப் பதிவுகள் எல்லாமே பொக்கிஷங்கள் தான்.//
ஆஹா, எப்படியெல்லாம் யோசித்து எழுதுகிறீர்கள், மேடம். You are So Great! மிகவும் சந்தோஷம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
நம்பிக்கை இல்லாதவனையும் கொஞ்சம் நெகிழச் செய்தப் பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்பாதுரை April 12, 2013 at 3:14 AM
Deleteவாங்கோ சார், வணக்கம்.
//நம்பிக்கை இல்லாதவனையும் கொஞ்சம் நெகிழச் செய்தப் பதிவு. வாழ்த்துக்கள்.//
நானும் தங்களைப்போலவே தான். இந்த ஒரே ஒரு மஹானிடம் மட்டுமே நான் இதுவரை TOTAL SURRENDER ஆகியுள்ளவன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், ’நெகிழச்செய்த பதிவு’ என கருத்துச்சொல்லி, வாழ்த்தியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
// அந்த ஸ்ரீ பாதரக்ஷை கட்டைகளின் மஹிமை என்ன? மகத்துவம் என்ன?அதை நாங்கள் எவ்வாறு பூஜித்து வருகிறோம்? அவைகள் எவ்வாறு என்னையும் என் குடும்பத்தாரையும் இன்றும் ரக்ஷித்துக்காத்து வருகிறது என்ற விபரங்களை என் அடுத்து வரும் பகுதி ஒன்றினில் [பகுதி-10ல்] விளக்கமாகச் சொல்கிறேன். //- அறிய ஆவலாக இருக்கிறோம்.
ReplyDeleteஉஷா அன்பரசு April 12, 2013 at 3:26 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
*****அந்த ஸ்ரீ பாதரக்ஷை கட்டைகளின் மஹிமை என்ன? மகத்துவம் என்ன?அதை நாங்கள் எவ்வாறு பூஜித்து வருகிறோம்? அவைகள் எவ்வாறு என்னையும் என் குடும்பத்தாரையும் இன்றும் ரக்ஷித்துக்காத்து வருகிறது என்ற விபரங்களை என் அடுத்து வரும் பகுதி ஒன்றினில் [பகுதி-10ல்] விளக்கமாகச் சொல்கிறேன்.*****
//அறிய ஆவலாக இருக்கிறோம்.///
சந்தோஷம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
ப்ரத்யக்ஷமாக அந்த கட்டைகள் என்ன பாக்யம் செய்ததோ என்று நினைத்த உங்களிடம், எங்களை உங்களிடம் சேர்த்ததே அந்த பக்திதான் என்று பாதுகைகள் உங்களிடம் கூறியிருக்குமோ?அல்லது மெய்மறந்திருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன். விழுப்புரத்தை
ReplyDeleteஅடுத்த வளவனூர் எங்களூர். எங்களூரில் மஹாப் பெரியவர் முகாமிடும் போது, நெல்லைக், கட்டையினால்த் தேய்த்து, முனை குறையாமல் அக்ஷதை தயாரித்துக் கொடுப்போம் பூஜை செய்வதற்கு.
காமாக்ஷி அம்மன் உருவம் பதித்த வெள்ளிக்காசுகள் ப்ரஸாதமாகக் கிடைக்கும்.
பாதுகை கிடைத்தால் எவ்வளவு ஸந்தோஷம் ஏற்பட்டிருக்கும்?
கொடுத்து வைத்தவர்களுக்கு எடுத்து வைத்திருக்கும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா பூஜைகளையும் பார்க்கக் கொடுத்து வைத்திருந்தோம். பொக்கிஷத்தின் மேன்மையான பொக்கிஷம் உஙகளுக்குக் கிடைத்து அதை எல்லோரும், பார்த்து தரிசிக்கவும்
கொடுத்ததற்கு ஸமானம் எதுவுமில்லை. ஹரஹரசங்கர,சிவசிவசங்கர. பணிந்திடுவோம். அன்புடன்
Kamatchi April 12, 2013 at 3:38 AM
Deleteவாங்கோ மாமி, ”விஜய” தமிழ்ப்புத்தாண்டு நமஸ்காரங்கள்.
//ப்ரத்யக்ஷமாக அந்த கட்டைகள் என்ன பாக்யம் செய்ததோ என்று நினைத்த உங்களிடம், எங்களை உங்களிடம் சேர்த்ததே அந்த பக்திதான் என்று பாதுகைகள் உங்களிடம் கூறியிருக்குமோ?அல்லது மெய்மறந்திருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன்.//
சந்தோஷம், மாமி.
//விழுப்புரத்தை அடுத்த வளவனூர் எங்களூர். எங்களூரில் மஹாப் பெரியவர் முகாமிடும் போது, நெல்லைக், கட்டையினால்த் தேய்த்து, முனை குறையாமல் அக்ஷதை தயாரித்துக் கொடுப்போம் //
ஆமாம் மாமி. அக்ஷதை என்றாலே பின்னமாகாத முழு அரிசி என்று தான் பொருள். அரிசியின் முனை.உடையக்கூடாது என்பார்கள். அவ்வாறு உடைந்த அரிசியை மங்கள அக்ஷதையாக உபயோகிக்க மாட்டார்கள்.
இதெல்லாம் இப்போது நடைமுறைக்கு சாத்யமில்லாத விஷயங்களாகிவிட்டன, அல்லவா!
//பூஜை செய்வதற்கு.காமாக்ஷி அம்மன் உருவம் பதித்த வெள்ளிக்காசுகள் ப்ரஸாதமாகக் கிடைக்கும்.//
ஆமாம் எனக்குக்கூட இரண்டொருமுறை வேறு எதற்கோ [ஸ்ரீராமஜயம் நோட்டு நோட்டாக எழுதிக்கொடுத்ததற்கு என ஞாபகம்] கிடைக்கப்பெற்று, நான் சின்னப்பையனாக இருந்தபோது பூணூலில் அந்த வெள்ளிக்காசினை அணிந்து கொண்டிருந்த ஞாபகம் வருகிறது..
>>>>>>
VGK >>>>> காமாக்ஷி மாமி [2]
Delete//பாதுகை கிடைத்தால் எவ்வளவு ஸந்தோஷம் ஏற்பட்டிருக்கும்? கொடுத்து வைத்தவர்களுக்கு எடுத்து வைத்திருக்கும்.//
நெடுநாள் என் மனதில் ஓர் ஆசை இருந்தது. அது ஓர் நாள் அவர்களால் நிறைவேற்றித்தரப்பட்டுள்ளது.
ஒருசிலர் இரண்டு செட் பாதுகைகள் புதிதாக செய்துகொண்டு வந்து கொடுக்கிறார்கள். ஒருசெட் அங்கேயே ஸ்ரீ மஹா ஸ்வாமிகளுக்காகக் கொடுத்து விடுகிறார்கள்.
இன்னொரு செட்டில் ஸ்ரீ மஹாபெரியவா ஒரே ஒருமுறை மட்டும் தன் பாத்ங்களை வைத்து ஏறி நின்றுவிட்டு, பிறகு அவர்களே, தங்கள் வீட்டு பூஜைக்கு எடுத்துச்செல்லட்டும் என்றும் விட்டுவிடுவார்களாம்.
இதுபோல அபூர்வமாக நிகழ்வதும் உண்டாம். கேள்விப்பட்டுள்ளேன்.
.
//நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா பூஜைகளையும் பார்க்கக் கொடுத்து வைத்திருந்தோம்.//
மிகவும் சந்தோஷம். கோ பூஜையை விட கஜபூஜை பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும். அழகாக மேள தாளம் இசைக்க, யானை அதற்கேற்ப குரல் கொடுத்து குனிந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் செய்யும் பூஜைகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் சீப்புசீப்பாகத் தரும் பழங்களை உட்கொள்வ்வதும் வெகு அழகாகக் காணக்கிடைக்காத காட்சிகளாகவே இருக்கும்.
என் மைத்துனர் ஒருவர் தீவிரமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பக்தர். திருச்சியிலிருந்து சென்னை செல்லும் போது, நடுவே விழுப்புரம் ஸ்டேஷனில் இறங்கி, அங்குள்ள தரை மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு பிறகு மீண்டும் ரயிலில் ஏறுவார். கேட்டால், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் ஜன்ம பூமி என்பார். அவரின் இந்த செயல் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
நீங்களோ விழுப்புரம் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் என்கிறீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ள்து.
//பொக்கிஷத்தின் மேன்மையான பொக்கிஷம் உஙகளுக்குக் கிடைத்து அதை எல்லோரும், பார்த்து தரிசிக்கவும்
கொடுத்ததற்கு ஸமானம் எதுவுமில்லை.//
இப்போது படத்தில் காட்டியுள்ள பாதுகைகள், நான் நெட்டிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளேன். எங்கள் ஆத்தில் இருக்கும் ஸ்ரீ பாதுகைகள் இனி பகுதி-10 இல் தான் வரப்போகிறது.
//ஹரஹரசங்கர, சிவசிவசங்கர. பணிந்திடுவோம். அன்புடன்//
மிக்க மகிழ்ச்சி மாமி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள் / நமஸ்காரங்கள்..
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மாமி.
சிறப்பான தெய்வீக பொக்கிஷம்... அதைப் பற்றிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா... நன்றி...
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் April 12, 2013 at 3:47 AM
Deleteவாருங்கள், வணக்கம்.
//சிறப்பான தெய்வீக பொக்கிஷம்... அதைப் பற்றிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா... நன்றி...//
சந்தோஷம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
உண்மையாகவே மகாபெரியவரின் பாதுகைகளைப் பெற்ற தாங்கள் பெரும் பாக்கியம் செய்தவர் மட்டுமல்ல பெரும் புண்ணியம் செய்தவர் என்றே கருதுகின்றேன்.அவரின் நல்லாசிகள் தங்கள் குடும்பத்திற்கு என்றும் கிட்டும். தங்களுக்குக் கிடைத்த இந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைத்ததாகவே மகிழ்கின்றேன்.
ReplyDeleteRukmani Seshasayee April 12, 2013 at 4:42 AM
Deleteவாங்கோ, இனிய தமிழ்ப்புத்தாண்டு நமஸ்காரங்கள்.
//உண்மையாகவே மகாபெரியவரின் பாதுகைகளைப் பெற்ற தாங்கள் பெரும் பாக்கியம் செய்தவர் மட்டுமல்ல பெரும் புண்ணியம் செய்தவர் என்றே கருதுகின்றேன்.அவரின் நல்லாசிகள் தங்கள் குடும்பத்திற்கு என்றும் கிட்டும்.//
மிகவும் சந்தோஷம்.
//தங்களுக்குக் கிடைத்த இந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைத்ததாகவே மகிழ்கின்றேன்.//
மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள் / நமஸ்காரங்கள்..
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிமையான நல்ல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
தங்களைத் தங்கள் இல்லத்தில்
ReplyDeleteசந்திக்கவேண்டும் ஆசி பெறவேண்டும்
என்கிற ஆசை தங்கள் பதிவுகளைப்
படித்து வந்த போது
பல சமயங்க்களில் என்னுள் தோன்றுவதுண்டு
இப்பதிவுகளைத் தொடரத் தொடர
இது மிக மிக அவசியம் என
இப்போது உறுதிப்பட்டுவிட்டது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து.
Ramani S April 12, 2013 at 5:06 AM
Deleteவாங்கோ, சார். வணக்கம்.
//தங்களைத் தங்கள் இல்லத்தில் சந்திக்கவேண்டும் ஆசி பெறவேண்டும் என்கிற ஆசை தங்கள் பதிவுகளைப்படித்து வந்த போது பல சமயங்க்களில் என்னுள் தோன்றுவதுண்டு. இப்பதிவுகளைத் தொடரத் தொடர இது மிக மிக அவசியம் என
இப்போது உறுதிப்பட்டுவிட்டது//
மிகவும் சந்தோஷம் Mr. ரமணி சார்.
//அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
ராமகிருஷ்ண
ReplyDeleteபரமஹம்சர் சொல்லுவார்.
பருந்து உயரத்தில் பறந்தாலும்
அதன் கண்கள் அதன் மீதுதான்
இருக்கும் என்பார்
(அது எது என்று உங்களுக்கே தெரியும்) .
இவ்வளவு பாக்கியம்பெற
பெரிய புண்ணியம்
செய்திருக்கவேண்டும்)
அருமையான தெளிவான
பதிவு.
சுகரின் பாகவதம் போல் இனிக்கிறது
(சிம்பாலிக்காக கிளி கணினியில்
தட்டச்சு செய்கிறது அற்புதம்)
உங்கள் தொடர்.
படிப்பவர்களின் மனதை உயர்த்துகிறது.
தொடரட்டும் உங்கள் பணி.
Pattabi Raman April 12, 2013 at 5:14 AM
Deleteவாங்கோ Mr. பட்டாபிராமன் Sir, வணக்கம்.
//ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லுவார்:- பருந்து உயரத்தில் பறந்தாலும் அதன் கண்கள் அதன் மீதுதான் இருக்கும் என்பார்
(அது எது என்று உங்களுக்கே தெரியும்)//
அது என்னவோ எனக்கு பலவிஷயங்கள் உண்மையிலேயே தெரிவது இல்லை சார்.
ஒன்று மட்டும் எனக்கு நன்றாகத்தெரியும், சார்.
“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டுள்ளேன்.
அதுபோல நான் ஓர் “ஊர்குருவி” மட்டுமே, மிகச்சாதாரணமானவன் தான், சார். .
//இவ்வளவு பாக்கியம் பெற பெரிய புண்ணியம் செய்திருக்கவேண்டும்//
என் முன்னோர்கள் பலர், பெரிய புண்ணியங்கள் நிறைய செய்திருக்கிறார்கள், எனக்கேள்விப்பட்டுள்ளேன். அதன் பலனாக மட்டுமே இது இருக்கலாம்.
//அருமையான தெளிவான பதிவு. //
வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் போல, தங்கள் வாயால் எனக்கோர் பாராட்டு. மகிழ்ச்சியும் நன்றியும்.
//சுகரின் பாகவதம் போல் இனிக்கிறது//
அடடா, இதெல்லாம் ரொம்பவும் ஓவர் சார். நான் சுகர் அல்ல. சுகர் பேஷண்ட் மட்டுமே.
(சிம்பாலிக்காக கிளி கணினியில் தட்டச்சு செய்கிறது அற்புதம்)
எனக்கு மனதுக்கு மிகவும் பிடித்தமான, தெய்வீகப்பதிவர் ஒருவரின் தளத்தில் அந்தக்கிளி சமீபத்தில், வெளியிடப்பட்டிருந்தது, சார்.
.
அதை மிகவும் கஷ்டப்பட்டு, ஓர் உரிமையுடன், நான் எடுத்துக்கொண்டு, இங்கு உபயோகித்துக்கொண்டு விட்டேன்.
COPY & PASTE செய்யவே முடியாத அந்தக்கிளியை நான் அவர்களின் தளத்திலிருந்து பிடிப்பதற்குள், நான் பட்டபாடு நாய் படாது சார்.
//உங்கள் தொடர்.படிப்பவர்களின் மனதை உயர்த்துகிறது.//
அப்படியா? இதைத்தங்கள் வாயால் கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, சார்.
//தொடரட்டும் உங்கள் பணி.//
தங்கள் சித்தம் ....... என் பாக்யம். முயற்சிக்கிறேன், சார்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தெளிவான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
குருவருள் ததும்பி மனதை நிறைக்கும் பகிர்வுகள்..
ReplyDeleteஇராமபிரான் தன்பாதுகைகளை பரதனிடம் தந்து அனுக்கிரஹிக்க , இராமரின் பிரதிநிதியாக அந்த பாதுகைகளுக்கு
பரதன் பாதுகா பட்டாபிஷேகம் செய்தாரே ..!
அந்த பாதுகை அன்றோ 14 வருடங்கள் சிம்மாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்து ராமராஜ்ஜியத்தியத்திற்குப் பெருமை சேர்த்தது ...!
இப்போது மஹா பெரியவாளின் பாதுகை அவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திரம் தோறும் தங்களால் பூஜை செய்யப்பட்டு அருளாட்சி செய்து கடாட்சிக்கிறது ..
இராஜராஜேஸ்வரி April 12, 2013 at 6:08 AM
Delete//குருவருள் ததும்பி மனதை நிறைக்கும் பகிர்வுகள்.//
இதைக்கேட்க எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.. அம்பாள் அருளும் ததும்பி என் மனதை நிறைக்கும் கருத்துக்களாக உள்ளன. ;)
//இராமபிரான் தன்பாதுகைகளை பரதனிடம் தந்து அனுக்கிரஹிக்க, இராமரின் பிரதிநிதியாக அந்த பாதுகைகளுக்கு
பரதன் பாதுகா பட்டாபிஷேகம் செய்தாரே ..! அந்த பாதுகை அன்றோ 14 வருடங்கள் சிம்மாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்து ராமராஜ்ஜியத்தியத்திற்குப் பெருமை சேர்த்தது ...!//
தாங்கள் வாக்பலிதம் உள்ளவர்களை என்பதை நான் இந்த மேற்கண்ட, கருத்துக்களினால் மீண்டும் உறுதி செய்து கொள்ள முடிந்தது. அது எப்படி என்று என்னால் இங்கு விபரமாகக் கூறமுடியாத நிலையில் நான் இப்போது உள்ளேன். நமக்குள் வாய்ப்புக் கிடைக்கும்போது கட்டாயம் நான் அதை ஒருநாள் உங்களுக்கு எடுத்துச் சொல்லுவேன்.
//இப்போது மஹா பெரியவாளின் பாதுகை அவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திரம் தோறும் தங்களால் பூஜை செய்யப்பட்டு அருளாட்சி செய்து கடாட்சிக்கிறது ..//
ஆம். அதைப்பற்றிய மேலும் விபரங்கள், இந்தத்தொடரின் பகுதி-10 இல் வெளியிட உள்ளேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல்வேறு ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நான்கு முறைகள் செந்தாமரையால் அர்சித்து இந்தப்பதிவுக்குப் பெருமை சேர்த்து, உற்சாகப்படுத்தியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
கொடுத்துவைத்தவர்கள் என்று ஒரு பகுதியினர்.
ReplyDeleteகுருவின் அருள் பாதரக்ஷைகளாக உங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றன.
உங்கள் பொக்கிஷங்கள் எப்பொழுதும் நிரம்பி இருக்கட்டும்.
வல்லிசிம்ஹன் April 12, 2013 at 8:21 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//கொடுத்துவைத்தவர்கள் என்று ஒரு பகுதியினர். குருவின் அருள் பாதரக்ஷைகளாக உங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றன. உங்கள் பொக்கிஷங்கள் எப்பொழுதும் நிரம்பி இருக்கட்டும்.//
மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள் / நமஸ்காரங்கள்..
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
ஹா...........
ReplyDelete”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி April 12, 2013 at 9:03 AM
Deleteவாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.
//ஹா...........//
உலகிலேயே மிகப்பெரிய அளவில் கிலோமீட்டர் கணக்கில் பின்னூட்டமிடுபவர் என்ற பெயரை என் அன்புத்தங்கை “மஞ்சு” [திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்] பெற்றிருந்தார்கள்.
இப்போது உலகிலேயே மிகச்சிறிய [அதுவும் ஒரே ஒரு எழுத்தில்] பின்னூட்டமிடும் சாதனையைத் தாங்கள் புரிந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான “ஹா.........” வுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
நினைப்பது நிறைவேற நிச்சயம் அவன் அருள் வேண்டும்! தாங்கள் பாக்கியசாலி! பொக்கிஷங்கள் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன! பகிர்விற்கு நன்றி ஐயா!
ReplyDeleteSeshadri e.s. April 12, 2013 at 6:36 PM
Deleteவாருங்கள், வணக்கம் சார்.
//நினைப்பது நிறைவேற நிச்சயம் அவன் அருள் வேண்டும்! தாங்கள் பாக்கியசாலி! பொக்கிஷங்கள் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன! பகிர்விற்கு நன்றி ஐயா!//
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
வியப்பான வியப்பு! உண்மையில் பாக்கியசாலி சார் நீங்க! பெரியவரின் ஆசியோடு மனத்தில் நினைத்து மதித்த அவர் பாதரட்சையையும் பெற்றுவிட்ட பாக்கியம் வேறு எத்தனைப் பேருக்கு கிடைக்கும்... பெரும் மரியாதையுடன் வணங்குகிறேன். பாதரட்சைகளின் பெருமை பற்றிய தங்கள் பதிவையும் எதிரநோக்கியிருக்கிறேன்.
ReplyDeleteகீதமஞ்சரி April 12, 2013 at 6:57 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//வியப்பான வியப்பு! உண்மையில் பாக்கியசாலி சார் நீங்க! பெரியவரின் ஆசியோடு மனத்தில் நினைத்து மதித்த அவர் பாதரட்சையையும் பெற்றுவிட்ட பாக்கியம் வேறு எத்தனைப் பேருக்கு கிடைக்கும்... பெரும் மரியாதையுடன் வணங்குகிறேன்.//
மிகவும் சந்தோஷம் மேடம்.
//பாதரட்சைகளின் பெருமை பற்றிய தங்கள் பதிவையும் எதிரநோக்கியிருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
You are really lucky Sir! Waiting for the next part...
ReplyDeletemiddleclassmadhavi April 12, 2013 at 7:49 PM
Deleteவாங்கோ மேடம், வணக்கம்.
//You are really lucky Sir! Waiting for the next part...//
மிக்க மகிழ்ச்சி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அடுத்த பாகத்தை எதிர்நோக்கிக் காத்திருத்தலுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
அருமை. அரிய பொக்கிஷம்.
ReplyDeleteயாருக்கு என்ன கிடைக்கவேண்டும் என்பது தெய்வ சங்கல்பம்.
அது உங்களுக்கு கண்கூடாகத் தெரிகிறது.
திருவருளும் குருவருளும் கிடைத்திருக்கிறதே... இதைவிட வாழ்க்கையில் வேறேன்ன வேண்டும் ஐயா...
மகிழ்ச்சி... தொடருங்கள்...
இளமதி April 13, 2013 at 1:05 AM
Deleteவாங்கோ அன்புக்குரிய கவிதாயினி இளமதி மேடம், வணக்கம்.
//அருமை. அரிய பொக்கிஷம். //
மிகவும் சந்தோஷம்.
//யாருக்கு என்ன கிடைக்கவேண்டும் என்பது தெய்வ சங்கல்பம்.//
தங்கள் வாய்க்கு ஒரு புடிச்சபுடி சர்க்கரையைத்தான் அள்ளிப்போட வேண்டும். என்னால் அங்கு வந்து போடமுடியாது. அதனால் நீங்களே போட்டுக்கோங்கோ.
//அது உங்களுக்கு கண்கூடாகத் தெரிகிறது.
திருவருளும் குருவருளும் கிடைத்திருக்கிறதே... இதைவிட வாழ்க்கையில் வேறேன்ன வேண்டும் ஐயா...//
ஏதோ நீங்கள் சொன்னால் சரி தான். வேறு எதுவும் வேண்டவே வேண்டாம் ..... தான் [சாப்பாடு கூட ;))))) ].
//மகிழ்ச்சி... தொடருங்கள்...//
நான் தொடர்கிறேன், மகிழ்ச்சியாக நீங்களும் தொடர்ந்து வாருங்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ”யங் மூன்” மேடம்.
பொக்கிஷம் பகுதி இன்னும் முடியலையா? தொடருங்க சார்.
ReplyDeleteAsiya Omar April 13, 2013 at 1:33 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//பொக்கிஷம் பகுதி இன்னும் முடியலையா?//
முடியலை, என்னால் முடிக்க முடியலை.
//தொடருங்க சார்.//
சரி. உங்களுக்காக ஐந்து பகுதிகளும், ஏஞ்சலின் அஞ்சுவுக்காக ஐந்து பகுதிகளும், எனக்காக ஒரே ஒரு பகுதியுமாக ஆக மொத்தம் 11 பகுதிகளுடன் முடித்துக்கொள்கிறேன். இப்போ இதுவரை எட்டு ஆச்சு. இன்னும் மூன்றே மூன்று தான் பாக்கியிருக்கு OK யா?
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,
அரிய பொக்கிஷம்... பாக்கியசாலி நீங்கள்....
ReplyDeleteகே. பி. ஜனா... April 13, 2013 at 7:16 AM
Deleteவாங்கோ சார், வணக்கம்.
//அரிய பொக்கிஷம்... பாக்கியசாலி நீங்கள்....//
சந்தோஷம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
பாக்கியசாலி ஐயா நீங்கள்... அருமையான பகிர்வு...
ReplyDeleteஇனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்...
சே. குமார் April 13, 2013 at 12:27 PM
Deleteவாருங்கள், வணக்கம்.
//பாக்கியசாலி ஐயா நீங்கள்... அருமையான பகிர்வு... இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்...//
மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete// அவற்றை வாங்கிக்கொண்ட நான் என் கண்களில் ஒத்திக்கொண்டேன். அந்த கிடைத்தற்கு அரிய பொக்கிஷமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஸ்ரீ பாதுகைகள் இன்றும் என் குடும்பத்தில் உள்ளன. //
உங்கள் பதிவைப் படித்ததும் கம்பராமாயணத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி ஞாபகம் வந்தது. கானகம் சென்ற இராமனிடம் அங்கு அவனைக் காணச் சென்ற பரதன், இராமனின் திருவடிகளைப் பெற்றுக் கொள்கிறான். அவைகளை தனது தலைமீது வைத்து நாடு திரும்புகிறான். அரியணையில் அந்த திருவடிகளை வைத்து ஆட்சி செய்கிறான்.
அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,
'முடித்தலம் இவை' என, முறையின் சூடினான்;
படித்தலம் இறைஞ்சினன், பரதன் போயினான்-
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்
- கம்ப இராமாயணம் – ( திருவடி சூட்டு படலம் – 136 )
( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)
வணக்கம் ஐயா , தாங்கள் நலமா கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததா. பதிவுலகத்திற்கு விரைவில் திரும்பி வந்ததற்கு சந்தோசம் .
Deleteஅஜீம்பாஷா April 13, 2013 at 10:33 PM
Delete//வணக்கம் ஐயா ,//
வாருங்கள் நண்பரே! வணக்கம்.
இந்தப் ‘பொக்கிஷம்’ தொடரில் இதுவரை எட்டு பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் மூன்று பகுதிகள் மட்டும் வெளியிடப்பட உள்ளன.
தாங்கள் முதல் மூன்று பகுதிகளுக்கு மட்டும் வருகை தந்துவிட்டு, இப்போது எட்டாவது பகுதியை மட்டும் எட்டிப்பார்த்து உள்ளீர்கள், என என்னிடம் உள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பகுதி-4 முதல் பகுதி-7 வரை உள்ள நான்கு பகுதிகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் ஒரு மாபெரும் பொக்கிஷமாக எதிர்பார்க்கப்படுகின்றன.
//தாங்கள் நலமா கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததா.//
தாங்கள் நன்றாக குழம்பிப்போய் உள்ளீர்கள் என நினைக்கிறேன்.
நான் நான்கு நாட்களுக்கு ஒரு பதிவு வீதம் தொடர்ந்து கொடுத்து வருகிறேன்.
கடவுள் புண்ணியத்தில் எனக்கு இன்னும் கண்ணில் எந்தக் கோளாறுகளும் ஏற்படவில்லை.
கண் பாதிப்பு என தெரிவித்திருந்தது நம் நண்பர் திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள். அவருக்கும் ”கண் அறுவை சிகிச்சை இப்போது ஒன்றும் அவசரமாக செய்ய வேண்டியது இல்லை” என டாக்டர் சொல்லியிருக்கிறார். ”POWER GLASS + EYE DROPS போட்டு வந்தால் போதும். அடுத்த ஓர் ஆண்டுக்குள் கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும்” என டாக்டர் சொல்லியிருக்கிறார்கள்.
//பதிவுலகத்திற்கு விரைவில் திரும்பி வந்ததற்கு சந்தோசம்.//
இருப்பினும் அவர் பதிவு உலகிற்கு திரும்பி வர கொஞ்சம் நாட்கள் ஆகும். இப்போது கூட 5 நிமிடங்கள் முன்பு அவரிடம் பேசினேன். உங்களையும் மிகவும் விசாரித்தார்.
இந்தத்தொடரின் பகுதி-4 முதல் பகுதி-7 வரை படித்து விட்டு கருத்துச்சொன்னீர்களானால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
இதுவரை 16 நபர்கள் இந்தத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படித்துவிட்டு கருத்துச்சொல்லி இருக்கிறார்கள்.
அந்த லிஸ்டில் தங்கள் பெயர் இல்லாதது ஏனோ எனக்கு சற்றே மனவருத்தம் அளிக்கிறது.
அதற்காக மட்டுமே அழைக்கிறேன். கட்டாயம் வாருங்கள். ;)))))
அன்புடன் VGK
VGK >>>> அஜீம்பாஷா [2]
Deleteஇதுவரை 16 நபர்கள் இந்தத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படித்துவிட்டு கருத்துச்சொல்லி இருக்கிறார்கள். அவர்களின் விபரம்:
திருமதிகள்:
===========
[1] ஆசிய ஓமர் அவர்கள்
[2] கோமதி அரசு அவர்கள்
[3] ரஞ்சனி நாராயணன் அவர்கள்
[4] இராஜராஜேஸ்வரி அவர்கள்
[5] உஷா அன்பரசு அவர்கள்
[6] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
[7] வல்லிசிம்ஹன் அவர்கள்
[8] காமாக்ஷி அம்மாள் அவர்கள்
[9] விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் [விஜி] அவர்கள்
10] இளமதி அவர்கள்
11] கீதமஞ்சரி அவர்கள்
12] அம்முலு அவர்கள்
திருவாளர்கள்:
=============
13] திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
14] ஸ்ரீராம் அவர்கள்
15] தி. தமிழ் இளங்கோ அவர்கள்
16] ????????????
[???????????? அஜீம் பாஷா அவர்களாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன்] ;)))))
தி.தமிழ் இளங்கோ April 13, 2013 at 8:15 PM
Delete//அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள், ஐயா.
*****அவற்றை வாங்கிக்கொண்ட நான் என் கண்களில் ஒத்திக்கொண்டேன். அந்த கிடைத்தற்கு அரிய பொக்கிஷமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஸ்ரீ பாதுகைகள் இன்றும் என் குடும்பத்தில் உள்ளன.*****
//உங்கள் பதிவைப் படித்ததும் கம்பராமாயணத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி ஞாபகம் வந்தது. கானகம் சென்ற இராமனிடம் அங்கு அவனைக் காணச் சென்ற பரதன், இராமனின் திருவடிகளைப் பெற்றுக் கொள்கிறான். அவைகளை தனது தலைமீது வைத்து நாடு திரும்புகிறான். அரியணையில் அந்த திருவடிகளை வைத்து ஆட்சி செய்கிறான்.//
அது மிகவும் அருமையானதோர் காட்சி தான் ஐயா.
//அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,
'முடித்தலம் இவை' என, முறையின் சூடினான்;
படித்தலம் இறைஞ்சினன், பரதன் போயினான்-
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்
- கம்ப இராமாயணம் – ( திருவடி சூட்டு படலம் – 136 )//
மிக அழகான சொற்களைக் கையாண்டுள்ளார், கம்பர். இனிமை... மிகவும் இனிமையான பாடல் தான்.
( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)
மிக்க நன்றி, ஐயா.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் கம்ப ராமாயணப்பாடலுடன் பாடல் இடம்பெற்ற பகுதியினை விளக்கிச்சொல்லியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.
VGK >>>> அஜீம்பாஷா [3]
Deleteஇன்றைய நிலவரப்படி இதுவரை 17 நபர்கள் இந்தத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படித்துவிட்டு கருத்துச்சொல்லி இருக்கிறார்கள். அவர்களில் 15 பேர்களின் பெயர்கள் மேலே தங்கள் தகவலுக்காக அளித்திருந்தேன்.
16 ம் இடத்தைப் பிடித்துள்ள அதிர்ஷ்டசாலி திருமதி.ஏஞ்சலின் அவர்கள்.
17ம் இடத்தைப் பிடித்துள்ள அதிர்ஷ்டசாலி திருமதி மாதேவி அவர்கள்.
என் எழுத்துக்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இன்னும் ஒரு நான்கு நபர்கள் தங்கள் இடங்களை என்னிடம் ரிஸர்வேஷன் செய்து விட்டு சில முக்கிய வேலைகளுக்காகப் போய் இருக்கிறார்கள்.
இதைவிட வேறு என்ன முக்கிய வேலை என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்:
ஒருவர் அமெரிக்க அதிபர் ஓபாமாவின் வேண்டுகோள்படி அண்டார்டிக்காவுக்கு பனி ஆராய்ச்சி செய்யும் பணிக்காகச் சென்றிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் புயலெனப் புறப்பட்டு வ்ந்து பின்னூட்டங்களால் தாக்கக்கூடும்.
அடுத்தவர் தளிராகப்பூப்பறிக்க ஆர்டிக்கா வரை போய் உள்ளதாகத் தெரிகிறது.
மற்றொருவர் இன் அண்ட் அவுட் சென்னையில் தான் இருக்கிறார். பேத்தியுடன் கொஞ்சிக்கொண்டு இருப்பதால் சற்றே தாமதமாம். இவரும் மின்னலெனப் பளிச்சென்று தோன்றி மறையகூடும்.
இன்னொருவர் ஹரியானாவில் ஒரு லாரி நிறைய திருஷ்டிப் பூசணிக்காய்கள் வாங்கிக்கொண்டு வரப்போனவர், அங்கேயே கடையில் உட்கார்ந்த நிலையில் தூங்கிப்போய், கனவுகள் கண்டு, அதையே அப்படியே ஓர் பதிவாக்கி வெளியிட்டு விட்டு, மீண்டும் ஆழந்த உறக்கத்தில் இருக்கிறார். திடீரென விழித்துக்கொண்டு வரலாம்.
இவ்வாறு 20-21 இடங்களும் நிரம்பி வழிய இருப்பதால், அஜீம்பாஷாவாகிய உங்களுக்கு R.A.C தான் அநேகமாகக் கிடைக்கக்கூடும். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
நிச்சயம் போற்றுதலுக்கு உரியவர் மகாப் பெரியவர்
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கவியாழி கண்ணதாசன் April 13, 2013 at 9:22 PM
Deleteவாருங்கள், வணக்கம்.
//நிச்சயம் போற்றுதலுக்கு உரியவர் மகாப் பெரியவர்//
மிகவும் சந்தோஷம்.
//தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.
Mikka nanry. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்……
ReplyDeleteVetha.Elangathilakam
kovaikkavi April 13, 2013 at 10:19 PM
Deleteவாருங்கள், வணக்கம்.
//Mikka nanry. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்…… Vetha.Elangathilakam//
மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteRanjani Narayanan April 13, 2013 at 10:31 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!//
மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
இந்த பதிவை முக நூலில் Sage of Kanchi பக்கத்தில் வெளியிட தங்கள் அனுமதி வேண்டுகிறேன்
ReplyDeleteARUNA April 13, 2013 at 11:30 PM
Deleteஅன்புடையீர் வணக்கம். என் தளத்தினில் தங்களின் இன்றைய முதல் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
//இந்த பதிவை முக நூலில் Sage of Kanchi பக்கத்தில் வெளியிட தங்கள் அனுமதி வேண்டுகிறேன்//
தாராளமாக வெளியிட்டுக்கொள்ளவும். அதில் என்னுடைய லிங்கையும் தயவுசெய்து கொடுக்கவும்.
அதை நான் எவ்வாறு முகநூலில் போய்ப்பார்ப்பது என்பதையும் எனக்கு தயவுசெய்து விபரமாகத் தெரிவிக்கவும்.
பொதுவாக நான் முகநூல் பக்கமே செல்வது கிடையாது.
இந்த பதிவை முக நூலில் Sage of Kanchi பக்கத்தில் வெளியிட தங்கள் அனுமதி வேண்டுகிறேன்
ReplyDeleteARUNA April 13, 2013 at 11:32 PM
Delete//இந்த பதிவை முக நூலில் Sage of Kanchi பக்கத்தில் வெளியிட தங்கள் அனுமதி வேண்டுகிறேன்//
இதற்கு நான் மேலே பதில் அளித்துள்ளேன்.
இந்தத்தொடரின் அடுத்து வரும் பகுதி-9 மற்றும் பகுதி-10 ல், மேலும் பல சுவையான விஷயங்கள் [Sage of Kanchi பற்றி] தங்களுக்குக் கிடைக்கக்கூடும்.
அவைகள் முறையே 16.04.2013 செவ்வாய்க்கிழமை மற்றும் 20.04.2013 சனிக்கிழமை இரவுக்குள் வெளியிடப்பட உள்ளன.
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
வலைசர பாராட்டிற்கும், தமிழ் புத்தாண்டிற்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleterajalakshmi paramasivam April 13, 2013 at 11:55 PM
Deleteவாங்கோ, வணக்கம். மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.
//வலைசர பாராட்டிற்கும், தமிழ் புத்தாண்டிற்கும் எனது வாழ்த்துக்கள்.//
ஆமாம். இன்று 14.04.2013 வலைச்சரத்தில் என் தளத்தினைப்பற்றி எழுதி அறிமுகம் செய்திருந்தனர். இதுபற்றி எனக்கு தகவல் ஏதும் வரவில்லை. தங்களிடமிருந்தே இந்த முதல் தகவல் கிடைத்துள்ளது. மிக்க நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
நிஜமாவே இது ஒரு அரிய பொக்கிஷம் ஐயா,பாக்கியசாலி நீங்கள்.மகா பெரியவர் பற்றி மேலும் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!!..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteS.Menaga April 14, 2013 at 7:21 AM
Deleteவாங்கோ மேனகா, வணக்கம்.
//நிஜமாவே இது ஒரு அரிய பொக்கிஷம் ஐயா,பாக்கியசாலி//
சந்தோஷம்ம்மா! ;)
//நீங்கள்.மகா பெரியவர் பற்றி மேலும் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!!..//
எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேனகா.
இறைவனின் அருள் பெற பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும் என்று சொல்வார்கள் அடுத்த ஜென்மும் அது உங்களை தொடர வாழ்த்துகிறேன் உங்கள் பகிர்வை நாங்கள் படிக்கவும் கொடுத்து வைத்திருக்கிறோம்
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
poovizi April 14, 2013 at 9:07 AM
Deleteவாருங்கள், வணக்கம்.
//இறைவனின் அருள் பெற பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும் என்று சொல்வார்கள் அடுத்த ஜென்மும் அது உங்களை தொடர வாழ்த்துகிறேன்//
அடுத்த ஜன்மத்திலும் நான் ப்ளாக்கில் எழுதுவேனா? அப்படி எழுதினால் நீங்க கமெண்ட் போட வருவீங்களா என்பதே என் இப்போதையக் கவலையாக உள்ளது. ;)))))
இந்த ஜன்மத்திலேயே, இந்தத்தொடருக்கே, இதுவரை வெளியிட்டுள்ள எட்டுப்பகுதிகளில் 4 பகுதிகளுக்கு மட்டுமே வருகை தந்துள்ளீர்கள். You were Absent for Part-1, 2, 4 & 5 of this serial.
எனினும் தங்கள் வாழ்த்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
//உங்கள் பகிர்வை நாங்கள் படிக்கவும் கொடுத்து வைத்திருக்கிறோம்//
மிக்க மகிழ்ச்சி. ;)
//இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//
மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,
பொக்கிசம் இறுதி இரண்டு அங்கமும் வாசித்தேன் அருமை.
ReplyDeleteபாதரட்சை மிக அருமை. இனிய வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
kovaikkaviApril 14, 2013 at 10:40 PM
Deleteவாருங்கள், வணக்கம்.
//பொக்கிசம் இறுதி இரண்டு அங்கமும் வாசித்தேன் அருமை.
பாதரட்சை மிக அருமை. இனிய வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
பொக்கிஷம்.
ReplyDeleteநன்றி ஐயா.
Rathnavel Natarajan April 15, 2013 at 3:15 AM
Deleteவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//பொக்கிஷம். நன்றி ஐயா.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள், ஐயா.
திக்கு முக்காடி போனேன் ...பொக்கிஷங்களின் களஞ்சியம் ..
ReplyDeleteபெரியவரை பற்றி கேள்விபற்றிருக்கிறேன் .வாசித்தும் இருக்கிறேன் .
நான் பள்ளி பயிலும்போது .என் தோழி அவரை சந்தித்த அனுபவங்களை விவரித்து இருக்கிறாள் ..
அவரிடம் இருந்து தங்களுக்கு கிடைத்த பாதரட்சைகள் !!!! நீங்கள் கொடுத்து வைத்தவர் ..அதாவது இறையருள் கொடுத்து வைத்தவர் .!!!!!
angelin April 15, 2013 at 3:34 AM
Deleteவாங்கோ நிர்மலா, வாங்கோ, வணக்கம்.
//திக்கு முக்காடி போனேன் ...பொக்கிஷங்களின் களஞ்சியம் ..//
இன்று ஒரே நாளில் பலபதிவுகளுக்கு கருத்தளித்துள்ள தங்களை நினைத்து நானும் திக்கு முக்காடிப்போனேன். தங்களின் அன்பான கருத்துக்களும் பொக்கிஷங்களின் களஞ்சியமே, எனக்கு. ;)
//பெரியவரை பற்றி கேள்விபற்றிருக்கிறேன் . வாசித்தும் இருக்கிறேன். நான் பள்ளி பயிலும்போது, என் தோழி அவரை சந்தித்த அனுபவங்களை விவரித்து இருக்கிறாள் ..//
இதைக் கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
//அவரிடம் இருந்து தங்களுக்கு கிடைத்த பாதரட்சைகள் !!!! நீங்கள் கொடுத்து வைத்தவர் .. அதாவது இறையருள் கொடுத்து வைத்தவர் .!!!!!//
ரொம்ப சந்தோஷம்ம்ம்மா! ;)
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நிர்மலா.
கிடைத்தற்கு அரிய திவ்ய பொக்கிசமே உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. பெரும் பாக்கியம் செய்திருக்கின்றீர்கள்.
ReplyDeleteமகா பெரியவரின் தர்சனம் எங்கள் அப்பா அம்மாவுக்கு கிடைத்திருக்கின்றது. அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.
திருவடிகளை நாங்களும் வணங்கி நிற்கின்றோம்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சித்திரை வருட வாழ்த்துகள்.
மாதேவி April 15, 2013 at 3:54 AM
Deleteவாங்கோ, வணக்கம். தாங்களும் இதுவரை வெளியிடப்பட்டுள்ள இந்தத்தொட்ரின் அனைத்து எட்டுப்பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். அதுபோல அனைத்துப்பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களில் தாங்கள் 17 ஆவது நபராகும். அதற்கு என் முதற்கண் நன்றிகள்.
//கிடைத்தற்கு அரிய திவ்ய பொக்கிசமே உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. பெரும் பாக்கியம் செய்திருக்கின்றீர்கள்.//
மிகவும் சந்தோஷம்.
//மகா பெரியவரின் தர்சனம் எங்கள் அப்பா அம்மாவுக்கு கிடைத்திருக்கின்றது. அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.//
தங்கள் பெற்றோர்களின் தரிஸன பாக்யமே பலதலைமுறைகளைக் காக்க வல்லது. மிக்க மகிழ்ச்சி.
//திருவடிகளை நாங்களும் வணங்கி நிற்கின்றோம்.//
நாங்கள் பூஜித்துவரும் திருவடிகள் வரும் பகுதி-10 இல் தான் வெளியிடப்பட உள்ளது. இதில் காட்டியுள்ளது நெட்டில் தேடி எடுக்கப்பட்டதாகும்.
//உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சித்திரை வருட வாழ்த்துகள்.//
மிக்க நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,
ஐயா நான் உங்கள் வீட்டு பிள்ளை என் மூத்த சகோதரர் என் வீட்டையும் , பெற்றோர்களையும் பற்றி பேசும்போது பெருமையுடன் அமைதியாக கேட்பதல்லவா மரியாதை . அதுதான் பின்னூட்டம் இடவில்லை .
ReplyDeleteஅஜீமும்அற்புதவிளக்கும் April 15, 2013 at 7:55 AM
Deleteவாங்க, வணக்கம்.
//ஐயா நான் உங்கள் வீட்டு பிள்ளை என் மூத்த சகோதரர் என் வீட்டையும் , பெற்றோர்களையும் பற்றி பேசும்போது பெருமையுடன் அமைதியாக கேட்பதல்லவா மரியாதை//
ஆஹா, இதைக்கேட்டு எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்துப்போய் சீப்பும் கையுமாக இல்லை இல்லை மோதிரமும் கையுமாக பிடில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ;)
//அதுதான் பின்னூட்டம் இடவில்லை.//
மிகவும் சந்தோஷம். நன்றி.
தாங்கள் தொடர்ச்சியாக வராமல், நடுநடுவே மட்டும் வருகை தந்து குழப்பியுள்ளதால், இந்தத்தொடரின் எல்லாப் பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்திடவும் எனக்கேட்டுக்கொண்டேன். அதனால் பரவாயில்லை.
நண்பர் திரு தி. தமிழ் இளங்கோ [எனது எண்ணங்கள்] அவர்களின் பதிவுக்குச்சென்று, அவரை உடல்நலம் விசாரித்து, ஓர் கருத்து அளியுங்கள். போதும்.
இணைப்பு இதோ:
http://tthamizhelango.blogspot.com/2013/03/blog-post_31.html#comment-form
பொக்கிஷம் பிரம்மிக்க வைக்கின்றது சார்.
ReplyDeleteஸாதிகா April 15, 2013 at 11:59 AM
Deleteவாங்கோ மேடம், வணக்கம்.
//பொக்கிஷம் பிரம்மிக்க வைக்கின்றது சார்.//
மிக்க மகிழ்ச்சி.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
இன்று காலை முதன் முதலில் கணினியைத் திறந்த போது
ReplyDeleteஉங்கள் பெயர் கண்ணில் பட்டது.
அடடா.... என்ன ...இவரது வலைக்கே செல்லாமல் சில நாட்கள் இருந்தோமே...
என்று அடுத்த கணம் உங்கள் வலைக்குச் சென்றால்,
அங்கே மஹா பெரியவா திவ்ய தரிசனமும்
அவரது பாத ரக்ஷையும்
பெரியவாள் அனுக்ரஹம் இல்லாமல்
நான் உங்கள் வலைக்கு இன்று வந்திருக்க இயலாது என்றே தோன்றியது.
ஒரே மூச்சில் அத்தனை விஷயத்தையும் சிரத்தையாக படித்தேன்.
ஒரு படம் .. ஒரு கயிறு போன்று ... பல வித வர்ணங்களில்.....
கயிறு கலர் பல்பு போன்று உள்ளெ சுற்றி சுற்றி வருவது போன்ற பிரமை.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
என்ற பஜ கோவிந்தத்தின் வாக்கியமும் நினைவுக்கு வந்தது.
நான் வரும்பொழுது பாத ரக்ஷையை சேவிக்கவேண்டும்.
அதற்கும் அவர் அருள் வேண்டும்.
அப்பதான் அது சாத்யம்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
sury Siva April 15, 2013 at 6:57 PM
Deleteவாங்கோ, அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
//இன்று காலை முதன் முதலில் கணினியைத் திறந்த போது
உங்கள் பெயர் கண்ணில் பட்டது. அடடா.... என்ன ...இவரது வலைக்கே செல்லாமல் சில நாட்கள் இருந்தோமே...
என்று அடுத்த கணம் உங்கள் வலைக்குச் சென்றால் .... அங்கே மஹா பெரியவா திவ்ய தரிசனமும் அவரது பாத ரக்ஷையும்!
பெரியவாள் அனுக்ரஹம் இல்லாமல் நான் உங்கள் வலைக்கு இன்று வந்திருக்க இயலாது என்றே தோன்றியது. //
இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
//ஒரே மூச்சில் அத்தனை விஷயத்தையும் சிரத்தையாக படித்தேன். //
மிக்க மகிழ்ச்சி.
//ஒரு படம் .. ஒரு கயிறு போன்று ... பல வித வர்ணங்களில்.....
கயிறு கலர் பல்பு போன்று உள்ளெ சுற்றி சுற்றி வருவது போன்ற பிரமை.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
என்ற பஜ கோவிந்தத்தின் வாக்கியமும் நினைவுக்கு வந்தது. //
வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். திருப்தியாக உள்ளது.
//நான் வரும்பொழுது பாத ரக்ஷையை சேவிக்கவேண்டும்.
அதற்கும் அவர் அருள் வேண்டும். அப்பதான் அது சாத்யம்.
சுப்பு தாத்தா. www.subbuthatha.blogspot.in//
பிராப்தம் இருந்தால் ... அவர்கள் அருள் இருந்தால் ... அதன்படி நிச்சயம் நடக்கக்கூடும்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நமஸ்காரங்கள்
தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.
சூப்பர் சார் ! இது தான் உண்மையான பொக்கிஷம். ரொம்ப அதிஷ்டக்காரர் நீங்கள்.. கலக்குங்க :)
ReplyDeleteSangeetha Nambi April 15, 2013 at 9:52 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
இந்தத்தொடரில் இது வரை வெளியிடப்பட்டுள்ள எட்டு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ள 19வது நபர் தாங்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். [18வது நபர் திருமதி ஸாதிகா அவர்கள்]
//சூப்பர் சார் ! இது தான் உண்மையான பொக்கிஷம். ரொம்ப அதிஷ்டக்காரர் நீங்கள்.. கலக்குங்க :)//
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
பொக்கிஷ பதிவின் நீளம் இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கிற்து போல இருக்கே,
ReplyDelete9 வது பொக்கிஷம் மிக ஆச்சரியாமான பொக்கிஷம் பதிவு.
அனைத்தையும் ஒன்று விடாமல் மறக்காமல்ஞாபகம் வைத்து எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள் கோபு சார்
Jaleela Kamal April 16, 2013 at 1:07 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//பொக்கிஷ பதிவின் நீளம் இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கிற்து போல இருக்கே, 9 வது பொக்கிஷம் மிக ஆச்சரியாமான பொக்கிஷம் பதிவு. அனைத்தையும் ஒன்று விடாமல் மறக்காமல் ஞாபகம் வைத்து எழுதி இருக்கீங்க.//
மிகவும் சந்தோஷம் மேடம். இது 8வது பொக்கிஷப்பதிவு. 9வது பதிவு அநேகமாக இன்று இரவு வெளியிடப்படலாம். மொத்தம் 11 பதிவுகள் மட்டுமே.
//வாழ்த்துக்கள் கோபு சார்//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.
தாமதத்திற்கு வருந்துகிறேன்,இந்த அரிய பொக்கிஷம் எப்படி கிடைத்ததென்று அடுத்த பகுதி இந்நேரம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்,செம பாக்கியசாலி சார் நீங்க.
ReplyDeletethirumathi bs sridhar April 16, 2013 at 9:28 AM
Deleteவாங்கோ ஆச்சி மேடம். வணக்கம்.
//தாமதத்திற்கு வருந்துகிறேன்//
அதெல்லாம் வருந்தாதீங்கோ. பச்சை உடம்புக்காரங்கோ. சந்தோஷமா இருக்கோணும். ;)))))
//இந்த அரிய பொக்கிஷம் எப்படி கிடைத்ததென்று அடுத்த பகுதி இந்நேரம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்//
இல்லை. இன்னும் அதுபற்றி வரவில்லை. அதைவிட சுவாரஸ்யமாக வேறு ஒரு பதிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
//செம பாக்கியசாலி சார் நீங்க.//
நீங்க மட்டும் என்னவாம்?
சென்ற ஆண்டு ஏப்ரில்/மே மாதம் நான் வெளியிட்ட விசேஷமான பதிவாகிய http://gopu1949.blogspot.in/2012/04/17.html என்பதைப்படித்து விட்டு, எனக்கு மெயில் கொடுத்துவிட்டு, பிறந்தகம் புறப்பட்டுச் சென்றீர்கள்.
அதன் பலனாக 04.06.2013 அன்று, உங்களுக்கும் தானே அந்த மருத்துவமனையில் ஓர் மிகப்பெரிய MIRACLE நடந்தது என என்னிடம் சொல்லி மகிழ்ந்தீர்கள். அதனால் தாங்களும் பாக்கியசாலியே தான்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்புடன் கூடிய நன்றிகள், மேடம்.
இவரின் படம் பார்த்ததுண்டு பெரிதாக அறிந்ததில்லை.... இப்போதான் நிறையத் தகவல்கள் அறிந்தேன் உங்கள் மூலம்.
ReplyDeleteathira April 16, 2013 at 10:56 AM
Deleteவாங்கோ அதிரா, வாங்கோ. தங்களுக்கு கொடுத்த அண்டார்டிகா பனி ஆராய்ச்சிப் பணியை மிகச்சிறப்பாக முடித்துக்கொண்டு, வெற்றிகரமாக திரும்பி வந்த விஷயம், ஒபாமா அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். ;))))) மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
//இவரின் படம் பார்த்ததுண்டு. பெரிதாக அறிந்ததில்லை.... இப்போதான் நிறையத் தகவல்கள் அறிந்தேன் உங்கள் மூலம்.//
மிகவும் சந்தோஷம் அதிரா.
நீங்களோ ஸ்வீட் சிக்ஸ்டீன். இவர் முக்தி அடைந்ததோ 19 ஆண்டுகளுக்கு முன்பு. அதனால் இவரை நீங்கள் பார்த்திருக்க சான்ஸ் இல்லை தான்.
இப்போது நிறைய தகவல்கள் என் மூலம் அறிந்து கொண்டதே, ஏதோ ஓர் புண்ணியம் செய்ததால் மட்டுமே இருக்கக்கூடும். சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி.
என் பள்ளிப்பருவத்தில் [ 1961-1966 ] ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில், நான் படித்த திருச்சி தேசியக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா, சுமார் ஒரு மாதம் முகாமிட்டு தங்கி, ஸ்ரீ சந்த்ரமெளலீஸ்வரர் பூஜை மிகச்சிறப்பாகச் செய்வார்கள். எவ்வளவோ நாட்கள் நானும் பூஜையை தரிஸித்து விட்டு, இவர்களின் திருக்கரங்களால் அபிஷேக தீர்த்தம் வாங்கி அருந்தியது உண்டு. ////
ReplyDeleteஅப்போ படிக்கும் காலத்திலயே நீங்க ரொம்ப நல்லபிள்ளை:).. ஏனெனில் அப்பவே பக்தியோடு கும்பிட்டிருக்கிறீங்க... தீர்த்தம் எல்லாம் வாங்கிப் பருகியிருக்கிறீங்க...
athira April 16, 2013 at 10:57 AM
Delete*****என் பள்ளிப்பருவத்தில் [ 1961-1966 ] ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில், நான் படித்த திருச்சி தேசியக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா, சுமார் ஒரு மாதம் முகாமிட்டு தங்கி, ஸ்ரீ சந்த்ரமெளலீஸ்வரர் பூஜை மிகச்சிறப்பாகச் செய்வார்கள். எவ்வளவோ நாட்கள் நானும் பூஜையை தரிஸித்து விட்டு, இவர்களின் திருக்கரங்களால் அபிஷேக தீர்த்தம் வாங்கி அருந்தியது உண்டு.*****
//அப்போ படிக்கும் காலத்திலயே நீங்க ரொம்ப நல்லபிள்ளை:).. ஏனெனில் அப்பவே பக்தியோடு கும்பிட்டிருக்கிறீங்க... தீர்த்தம் எல்லாம் வாங்கிப் பருகியிருக்கிறீங்க...//
நான் எப்போதுமே நல்ல பிள்ளை தானாக்கும். ஆனால் இப்போ இந்தப்பதிவுலகுக்கு வந்து உங்களுடன் சேர்ந்ததால் மட்டும் ............................................................................................................
............................................................................................................
ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளையாகி விட்டேன்னு சொல்ல வந்தேன். ;)))))
இப்போ தீர்த்தமெல்லாம் பருக முடிவது இல்லை. ;)
ஏனெனில், பூஜை செய்து தீர்த்தம் தந்தவர் இப்போது இல்லையே!
//07.02.1994 அன்று அந்த அதிசயம் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அவர்கள் கடைசியாக அணிந்து கொண்டிருந்த ஒரு ஜோடி பாதரக்ஷைகள் எனக்கே எனக்காக அருட் பிரஸாதமாகக் கிடைக்கப்பெற்றேன். //
ReplyDeleteநிஜமாகவோ? என்னால் நம்பவே முடியவில்லை, கொடுத்து வைத்தவர் நீங்கள்.. அவர் பாதரட்சைகளை அடிக்கடி மாத்துவாரோ?
athira April 16, 2013 at 11:00 AM
Delete*****07.02.1994 அன்று அந்த அதிசயம் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அவர்கள் கடைசியாக அணிந்து கொண்டிருந்த ஒரு ஜோடி பாதரக்ஷைகள் எனக்கே எனக்காக அருட் பிரஸாதமாகக் கிடைக்கப்பெற்றேன்.*****
//நிஜமாகவோ? என்னால் நம்பவே முடியவில்லை, கொடுத்து வைத்தவர் நீங்கள்..//
சந்தோஷம்.
//அவர் பாதரட்சைகளை அடிக்கடி மாத்துவாரோ?//
அவர்களின் பாத அளவுகள் அறிந்து, ஸ்பெஷலாக ஏதோவொரு குறிப்பிட்ட மரத்திலிருந்து பாதரக்ஷைகள் பக்தி சிரத்தையுடன் செய்யச்சொல்லி, அவ்வப்போது கொண்டுவந்து அளிக்கும் தீவிர பக்தர்களும் உண்டு.
எப்படியும் ஒரு 4-5 செட்டாவது, அவ்ருடன் உள்ள உதவியார்கள் ஸ்பேராக வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நாந்தான் 100 ஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. அப்போ எனக்கும் ஏதும் பரிசு தாங்கோ....:).
ReplyDeleteathira April 16, 2013 at 11:02 AM
ReplyDelete//நாந்தான் 100 ஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. அப்போ எனக்கும் ஏதும் பரிசு தாங்கோ....:).//
ஆமாம் அதிரா, நிஜமாலுமே நீங்கதான் இந்தப்பதிவுக்கு 100க்கு 100.
நீங்க நம் அஞ்சுவைப் போய்ப்பாருங்கோ. நான் சொன்னேன்னு சொல்லுங்கோ. பரிசு தருவாங்கோ.
சூப்பரா மென்மையா, மேன்மையா, பட்டுப்போல தன் பட்டுக்கைகளாலே, முறுகலா, சூடா, சுவையா, தோசை சுட்டு வெச்சிருக்காங்கோ, அதையே என் பரிசா வாங்கி சாப்பிடுங்கோ, ப்ளீஸ்.
OK யா?
தங்களின் அன்பான வருகைக்கும் அழகழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.
HAWKINS அப்படீன்னு சொன்னா என்னன்னு தெரியுமா? உங்க பதிலுக்கு அப்புறம் சொல்றேன்.
ReplyDeleteஎன் கணவருக்கும் பெரியவாளிடம் ஒரு (ஒரே ஒரு) அனுபவம் ஏற்பட்டது. அதையும் பிறகு பதிகிறேன்.
//என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் நினைத்ததெல்லாம் வெற்றி//
அது உங்களுக்கு கிடைக்காட்டாதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
உங்களது பொக்கிஷங்களை கண்ணாரக் கண்டு களிக்கவே ஒரு முறை திருச்சிக்கு வரணும்.
பெரியவாளைப் பத்தி பேசற அளவுக்கு எனக்கு அனுபவம், அறிவு, தகுதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஏன் இப்ப உங்களப் பார்த்தாலே பயம் கலந்த மரியாதை ரொம்ப அதிகமாகறது.
JAYANTHI RAMANIApril 19, 2013 at 3:10 AM
ReplyDeleteவாங்கோ, வாங்கோ வணக்கம். இந்தத்தொடரின் முதல் எட்டு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ளவர்கள் பட்டியலில் தாங்கள் 21ம் இடத்தைப்பிடித்து விட்டீர்கள். மிக்க நன்றி. அதற்கு முதலில் என் அன்பான வாழ்த்துகள்.
//HAWKINS அப்படீன்னு சொன்னா என்னன்னு தெரியுமா?//
எனக்குத் தெரியவில்லை. நான் ஒன்று நினைக்கிறேன். அதுவா என சந்தேகமும் உள்ளது. தாங்கள் எழுதியுள்ள வார்த்தையில் கொஞ்சம் Spelling Mistake உள்ளது எனவும் நினைக்கிறேன். Dictionary யிலேயே இல்லாத வார்த்தையாகப் போட்டுள்ளீர்கள். அதனால் அது என்னவென்று தாங்களே திருவாய் மலர்ந்தருளவும்.
//உங்க பதிலுக்கு அப்புறம் சொல்றேன்.//
அப்புறம் என்றாலே அது விழுப்புரம் தான் ! ;)
//என் கணவருக்கும் பெரியவாளிடம் ஒரு (ஒரே ஒரு) அனுபவம் ஏற்பட்டது. அதையும் பிறகு பதிகிறேன்.//
அதைச்செய்யுங்கோ, புண்ணியம் உண்டு.
*****என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் நினைத்ததெல்லாம் வெற்றி*****
//அது உங்களுக்கு கிடைக்காட்டாதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.//
அடடா, அடிக்கும் வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்கு, உங்களின் இந்த வார்த்தைகள்.
//உங்களது பொக்கிஷங்களை கண்ணாரக் கண்டு களிக்கவே ஒரு முறை திருச்சிக்கு வரணும்.//
அவசியம் வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்.
வழிமேல் விழிவைத்து வரவேற்கக் காத்திருப்பான் உங்கள் கோபு அண்ணா.
//பெரியவாளைப் பத்தி பேசற அளவுக்கு எனக்கு அனுபவம், அறிவு, தகுதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. //
எனக்கு அதே தான். யாருக்குமே அவர்களைப்பற்றி பேச யோக்யதையே கிடையாது என்று நினைப்பவன் நான்.
//ஏன் இப்ப உங்களப் பார்த்தாலே பயம் கலந்த மரியாதை ரொம்ப அதிகமாகிறது.//
சும்மா ஏதாவது சொல்லித் தப்பிக்க நினைக்காதீங்கோ. நான் மிகச் சாதாரணமானவன் மட்டுமே.
என்னைப்பொறுத்தவரை நான் ஒரு அல்பமான மானிடப்பிறவி எடுத்துள்ளவன் தான். எல்லா ஆசாபாசங்களும் எக்கச்சக்கமாக நிரம்பி வழியும் மனம் என்னுடையது.
எவ்வளவு வயதானாலும் ஞானமும், வைராக்யமும், மனப்பக்குவமும், கட்டுப்பாடுகளும் எல்லோருக்குமே வந்து விடாது.
சும்மா நாம் ஏதாவது பேசலாம், எழுதலாம். பேசுவது, எழுதுவது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எழுத்துலக தர்மப்படி, ஒரு எழுத்தாளரின் எழுத்துக்கள் பிறர் மனதில் நல்ல எண்ணங்களையும், நல்ல சிந்தனைகளையும் விதைப்பதாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.
அதனால் என்னிடம் எந்த பயமோ, மரியாதையோ தங்களுக்குத் தேவையில்லை. எப்போதும் போலவே, கலகலப்பாக, ஜாலியாக, நகைச்சுவை + தங்களுக்கே உள்ள குறும்பு + வால் தனத்துடன் பழகி வாருங்கள்.
எப்படியோ இந்தப் பதிவு விட்டுப் போயிருக்கு. எப்படி உங்களுக்கு அந்தப் பாதரக்ஷைகளைக் கொடுத்தாங்க? ஆச்சரியமான விஷயம். ஸ்வாமிகளின் அனுகிரஹம் பரிபூரணமாக இருந்திருப்பதாலேயே இதெல்லாம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. பாத ரக்ஷைகள் வந்த விபரம் தெரிந்து கொண்டேன். முடிந்த போது அனுஷ நக்ஷத்திர பூஜையிலும் கலந்து கொள்ள முயல்கிறேன். சீக்கிரம் முடிஞ்சுடும் என்பதால் ஒண்ணும் பிரச்னை இல்லை. இங்கேருந்து கிளம்பத் தான் முடியணும். அதான் கொஞ்சம் கஷ்டம். :))))))
ReplyDeleteGeetha Sambasivam April 21, 2013 at 2:57 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//எப்படியோ இந்தப் பதிவு விட்டுப் போயிருக்கு. எப்படி உங்களுக்கு அந்தப் பாதரக்ஷைகளைக் கொடுத்தாங்க? ஆச்சரியமான விஷயம். ஸ்வாமிகளின் அனுகிரஹம் பரிபூரணமாக இருந்திருப்பதாலேயே இதெல்லாம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. பாத ரக்ஷைகள் வந்த விபரம் தெரிந்து கொண்டேன்.//
சந்தோஷம்.
//முடிந்த போது அனுஷ நக்ஷத்திர பூஜையிலும் கலந்து கொள்ள முயல்கிறேன். சீக்கிரம் முடிஞ்சுடும் என்பதால் ஒண்ணும் பிரச்னை இல்லை. இங்கிருந்து கிளம்பத் தான் முடியணும். அதான் கொஞ்சம் கஷ்டம். :)))))) //
வாங்கோ. முதலிலேயே தகவல் சொல்லிவிட்டு வாங்கோ. மிகவும் சந்தோஷம்.
தற்சமயம் அனுஷபூஜை நடைபெறும் வீட்டில் மாடிக்குச்செல்ல ஒரு 20 படிகள் மட்டும் ஏறி இறங்க வேண்டியதாக இருக்கும். அங்கு லிஃப்ட் ஏதும் கிடையாது.
சாயங்காலம் மிகச்சரியாக 6 மணிக்கு ஆரம்பித்து 7.30க்குள் அஷ்டோத்ர பூஜை, வேதபாராயணம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் அனைத்தும் முடிந்து விடும் தான்.
இந்த 1-1/2 மணிநேரமும் நாம் கீழே வெறும் தரையிலேயே உட்காரும் படியாக இருக்கும்.
இதெல்லாம் வரவர எனக்கே சிரமாமாகத் தோன்றுவதால், இதுபற்றி முன்னெச்சரிக்கையாகத் தங்களுக்கும் தெரிவித்துள்ளேன். தவறாக ஏதும் நினைக்காதீங்கோ.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
இது வரை கிடைத்த பொக்கிஷங்களிலேயே இது தான் விலைமதிப்பற்ற பொக்கிஷமும் கூட. வாழ்த்துகள்.
ReplyDeleteGeetha Sambasivam April 21, 2013 at 2:58 AM
Deleteஇதுவரை இந்த “பொக்கிஷம்” தொடர்பதிவின் முதல் எட்டுப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து, தங்களின் பொக்கிஷமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள 22 நபர்களில் தாங்களும் ஒருவர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
//இது வரை கிடைத்த பொக்கிஷங்களிலேயே இது தான் விலைமதிப்பற்ற பொக்கிஷமும் கூட. வாழ்த்துகள்.//
மிகவும் சந்தோஷம். மீண்டும் வருகைக்கும், விலைமதிப்பற்ற பொக்கிஷமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
பெரியவாளின் பாதரட்சை தங்களுக்கு கிடைத்ததற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். அருமையான பொக்கிஷம்.
ReplyDeleteவிழுப்புரம் சங்கர மடத்திற்கு அடுத்த வீடு தான் என் மாமனார் பிறந்து வளர்ந்த வீடு. பெரியவாளுக்கு என் மாமனாரை நன்றாக பரிச்சயம் உண்டு. உரிமையோடு அழைப்பாராம்..
கோவை2தில்லி April 25, 2013 at 12:02 AM
ReplyDeleteவாங்கோ, வணக்கம்.
//பெரியவாளின் பாதரட்சை தங்களுக்கு கிடைத்ததற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். அருமையான பொக்கிஷம்.//
மிக்க மகிழ்ச்சி.
//விழுப்புரம் சங்கர மடத்திற்கு அடுத்த வீடு தான் என் மாமனார் பிறந்து வளர்ந்த வீடு. பெரியவாளுக்கு என் மாமனாரை நன்றாக பரிச்சயம் உண்டு. உரிமையோடு அழைப்பாராம்..//
அப்படியா! கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் மாமனார் மிகவும் பாக்யசாலி தான். அவருக்கு என் நமஸ்காரங்கள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
அதிர்ஷ்டசாலிதான் நீங்கள். குருவின் பாதுகைகள் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
ReplyDeleteஉண்மையிலேயே ரொம்ப அதிர்ஷ்டக்காரர் நீங்க குருவோட பாதுகை கிடத்திருக்கே
ReplyDeleteபூந்தளிர் August 16, 2015 at 6:33 PM
Deleteவாங்கோ, வணக்கம்மா.
//உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷ்டக்காரர் நீங்க குருவோட பாதுகை கிடத்திருக்கே//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. சந்தோஷம். நீங்க இங்கு நம் ஆத்துக்கு வரும்போது அந்தப் பாதுகைகளை தரிஸிக்க நானே கூட்டிச்செல்கிறேன்.
உங்கட அல்லாபொக்கிஷத்தை விட இந்த பாதுகா பொக்கிஷம்தா அற்புதமானது இல்லீங்களா.
ReplyDeletemru October 23, 2015 at 6:20 PM
Delete//உங்கட அல்லாபொக்கிஷத்தை விட இந்த பாதுகா பொக்கிஷம்தா அற்புதமானது இல்லீங்களா.//
அப்படியும் வைத்துக்கொள்ளலாம்.
தங்களின் அன்பான வருகை + புரிதலுடன் கூடிய கருத்துக்களுக்கு மிக்க நன்றிம்மா.
காஞ்சி பெரியவாமோட பாதுகை கிடைப்பதென்றால் சும்மாவா. அதுவும் உங்களனதில் இருப்பதை அறிந்து கொண்டு பாதுகைகள் உங்களுக்கு கிடைக்கும்படியாக ஆசிர்வாதம் பண்ணி இருக்காரே. உண்மையிலேயே கொடுத்து வைத்த பாக்கியசாலி நீங்கதான்.
ReplyDeleteநெகிழ வைக்கும் பதிவு. ஆண்டவன் வேண்டும் வரம் தருவான். சித்தர்கள் கேட்காததையும் தருவர் என்று ஒரு கோட்பாடு உண்டு. முற்றிலும் உண்மைதான் போலும்..மிகவும் நன்றி வாத்யாரே!
ReplyDelete:)
ReplyDeleteMail message received on 4th May 2017 at 11.43 AM
ReplyDeleteஎனது அன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய, உயர்திரு. கோபு ஸார் அவர்களுக்கு,
ஆச்சரியமாக இருக்குமே. எனக்குள்ளும் ஆச்சரியம் தாண்டவமாடுகிறது.
இன்று உங்களின் பொக்கிஷம் என்ற தாங்கள் எனக்கு அளித்த பரிசு புத்தகத்தைப் படித்தேன்.
ஆஹா... புத்தகமே பொக்கிஷம் தான். அதில் இருக்கும் தங்களது அத்தனை பொக்கிஷங்களும் எனக்குப் பொக்கிஷமாகவே தெரிந்தது.
மஹா பெரியவரின் அருகில் நீங்கள் நிற்கும், குளிக்கும், பண்டரிபுர அனுபவம்... அவருக்கு மிக சமீபத்தில் ஆற்றில் குளித்த அனுபவங்கள் அனைத்தையும் படித்ததும், மனதுக்குள் ஒரு இதமான நெகிழ்ச்சி.
இது போன்ற பாக்கியங்கள் தான் பூர்வஜென்ம புண்ணியங்கள். தங்களது எழுத்துக்களில் நிறைய ஹாஸ்யங்கள், குறும்புகள் எனப் படித்திருந்தாலும்.... இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது கண்களில் நீர் தாரையாகி வழிந்தது என்பது தான் நிஜம்.
பெரியவாளின் பாதுகைகள்..... கண்ணில் கண்டதற்கே நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன்.
குடும்ப உறுப்பினராகவே இருந்தாலுமே, எத்தனை பேர்களுக்கு தங்களது பொக்கிஷத்தையும் தாண்டிய இது போன்ற உயர்ந்த புதையலை அவருக்குத் தரும் மனம் வரும்? நீங்கள் செய்திருக்கிறீர்கள். இது மஹா விந்தையிலும் விந்தை.
பூஜை படங்கள் அற்புதக் காட்சியெனக் கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.... என்று காதினுள் ஒலித்ததை மனம் உணர்ந்து கொண்டது.
நீங்கள் ஒரு அற்புத மாமனிதர்.
அன்னை காமாக்ஷியின் தாங்கள் வரைந்த படம் இப்போதும் அந்தக் கோயிலில் இருக்கும் அல்லவா? வரங்கள் பல பெற்ற பேறு பெற்றவர். பொக்கிஷம் என்ற அனுபவக் குவியல்..... அபாரம்.
இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
பரம ரஸிகை