என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 1 [ பகுதி 1 of 6 ]


அந்தச்சேரிப்பகுதி குடிசை ஒன்றின் வாசலில், மிகவும் ஊர்ந்து சென்று நின்றதில் புத்தம் புதிய, அந்த தக்காளி நிற மாருதி கார், மேலும் கூடுதல் அழகாக இருப்பது போலத்தோன்றமளித்தது.

காலைவேளைக்கதிரவனின் ஒளி, டிரைவர் சீட்டின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் பட்டுப்பிரதிபலித்தது. சேரியில் சைக்கிளின் பழைய டயர்களை ஒரு சிறிய குச்சியால் தட்டி வண்டியாக ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் காரைச்சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தனர்.  அதில் ஒருசிலர் அந்தக்காரை ஆசையுடன் தொட்டுப்பார்த்தனர். அவர்களின் புழுதி படிந்த கைரேகைகள் ஆங்காங்கே திருஷ்டிப்பொட்டு போல அந்தக்காரின் உடம்பில் பதிந்தன.

தன் குடிசையிலிருந்து வெளியில் வந்து எட்டிப்பார்த்த அஞ்சலைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. 

“சாமீ.... நீங்க ஏன் சாமீ இந்தக்குடிசைக்கெல்லாம் வரணும்?  சொல்லி அனுப்பியிருந்தால் நானே ஓடியாந்திருப்பேனில்ல. சரி வந்துட்டீங்க.... வாங்க” எனச்சொல்லி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, எதிர்புறம் இருந்த டீக்கடைக்கு ஓடிப்போய், ஒரு கால் மட்டும் சற்றே நொடிக்கும், மர ஸ்டூல் ஒன்றை இரவல் வாங்கியாந்து, தன் சேலைத்தலைப்பால் அழுத்தித் துடைத்துவிட்டு, குடிசை வாசலில் போட்டுவிட்டு, அமரும்படி வேண்டினாள்.  

அக்கம்பக்கத்து குடிசை வாழ் மக்களின் பார்வை முழுவதும் இவர்கள் மேலேயே இருந்ததால், சிவகுருவுக்கு சற்று சங்கடமாக இருந்தது.  அதை உணர்ந்த அஞ்சலை மரஸ்டூலுடன் குடிசைக்குள் நுழைந்து “மெதுவா குனிஞ்சு வாங்க....சாமீ” என்று உள்ளே அழைத்தாள்.

குடிசை வீடு ஒன்றுக்குள் முதன் முதலாகப்போன சிவகுருவுக்கு அதன் அமைப்பு மிகவும் வியப்பாக இருந்தது. 

நான்கு பக்கங்களும் மண்ணால் எழுப்பப்பட்ட குட்டிச் சுவர்கள். சாணத்தால் மொழுகிய மண் தரை மாட்டுக்கொட்டகையை நினைவுபடுத்தியது.  மேல் புறம் மூங்கில் குச்சிகள் கொடுத்து,  தென்னம் ஓலைகளாலும் முழுவதுமாக வேயப்பட்ட கூரைப்பகுதி. 

இடதுபுறம் இருந்த சமையலறைப்பகுதிக்குச் சிறிய குட்டையானதொரு தடுப்புச்சுவர். ஒரு மூலையில் ஏதோவொரு ஸ்வாமி படம். படத்தின் தலையில் அன்றே பறித்ததோர் செம்பருத்திப்பூ. படத்தின் கீழே அழகியதோர் சிறிய கோலம். அருகில் அழகாக ஏற்றி முத்துப்போல பிரகாசிக்கும் ஒரு மிகச்சிறிய அகல் விளக்கும், அதனருகே, ஒரு எண்ணெய் பாட்டிலும், தீப்பெட்டியும்.

வலதுபுற ஓரமாக கயிறுகள் தளர்ந்து தொங்கிய வண்ணம் ஒரு கயிற்றுக்கட்டில். அதன் மேல் ஒரு பனை ஓலை விசிறி. குடிசையின் மேல்பகுதி மூங்கில்களில் தொங்கும் நீண்ட S வடிவக்கொக்கிகள்.  அவற்றில் தொங்கவிடப்பட்டுள்ள இரண்டு லாந்தர் விளக்குகள்.

மற்றொரு மூலையில் 4 செங்கல்கள் மட்டும் வைத்து அதன் நடுவில் ஆற்றுமணல் பரப்பி, அந்த மணல் மேட்டின் மேல் ஒரு ஈரத்துணி சுற்றிய மண் பானை, மூடியுடன்.  அதன் மீது அந்தப்பானைக்கு கிரீடம் வைத்ததுபோல கவிந்த நிலையில் ஒரு அலுமினியக் குவளை.  

குடிசையின் வாசல்புறம், கொல்லைப்புறம் என்று இருபுறமும் மூங்கில் ப்ளாச்சுகளில் பனை ஓலையால் வேயப்பட்டு எப்போதும் திறந்த நிலையில் கதவுகள் போன்ற அமைப்பு ஒன்று இருந்ததால், அவையே அந்தக்குடிசை வீட்டுக்குள் வெளிச்சமும், காற்றும் வர உதவின.

”மண் குடிசை ... வாசலென்றால் ... தென்றல் வர ... மறுத்திடுமோ”, என்ற வாத்யார் படப்பாடலை, சிவகுருவின் வாய், அவரையறியாமலேயே முணுமுணுத்தது.   

கயிற்றுக்கட்டிலின் அருகே, சாயம் போன நீல நிற சேலை ஒன்றில், கயிற்றால் கட்டப்பட்டுத் தொங்கும் தூளி. வாயில் இரண்டு விரல்களைச்சூப்பியவாறு, சுகமாகத்தூங்கும், எட்டு மாதங்களே ஆன கொழுகொழுக்குழந்தை. 

குடிசை முழுவதும் இப்படி நோட்டம் விட்ட சிவகுருவுக்குத் தான் வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்ற சிறு தடுமாற்றம்.


தொடரும்

       

30 கருத்துகள்:

  1. ஸ்டார்ட் ஆன வேகத்தில் முடிஞ்சு விட்டதே

    பதிலளிநீக்கு
  2. நல்ல துவக்கம்.ஆறில் ஒன்று என
    புதினம் ஆரம்பிக்கையிலேயே போடுவது
    மிகச் சரியாக திட்டமிட்டு படைப்பை
    உருவாக்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது
    முரண்பாடுகளுடன் துவக்குவது
    எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
  3. போன தொடர்கதையை விட, இது இன்னும் அதிகமாய் மெருகேறி அமர்களமாக தொடங்கி இருக்கிறது. பாராட்டுக்கள், கோபு மாமா!

    பதிலளிநீக்கு
  4. சீரியஸ் கதை?!!
    நல்ல வர்ணனைகளுடன் ஆரம்பம்!

    பதிலளிநீக்கு
  5. மண் குடிசை ... வாசலென்றால் ... தென்றல் வர ... மறுத்திடுமோ”//
    அருமையான பாடல் வாய் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது.
    சிவகுரு குழந்தையை தத்து கேட்க வந்திருக்கிறார். அவருக்கு குழந்தை இல்லை. சரியா ஐயா??

    பதிலளிநீக்கு
  6. @இராஜராஜேஸ்வரி

    நீங்க சொன்ன கருவை வைத்து ஏற்கனவே சார் எழுதிட்டதால இது அந்த கரு இல்லைனு
    நினைக்கறேன்.

    பதிலளிநீக்கு
  7. கார் மற்றும் குடிசையின் வர்ணனை அருமை.ஆனால் முதல் பகுதியை
    வர்ணனைகளோடயே நிறுத்தி எங்களோட ஆவலை தூண்டிட்டீங்க

    பதிலளிநீக்கு
  8. சரியா விஷயத்துக்கு வரும் போது இப்படி தொடரும் போட்டுட்டீங்களே!
    அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. சிறுகதை தொடர்கதையா விஜிகே. ம்ம்ம்ம்.!

    பதிலளிநீக்கு
  10. ஒரு குடிலை அழகாக விவரித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல விவரிப்பு... குடிசையின் உள்ளே வரும் தென்றல் காற்றினைப் போல, உங்கள் கதையின் ஆரம்பமும் தென்றலாய் தொடங்கியிருக்கிறது. வெளி வந்த அடுத்த பகுதிகளையும் படித்து கமெண்டுகிறேன்... தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  12. அன்புடன் வருகை தந்து, மேலான கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  13. \\“சாமீ.... நீங்க ஏன் சாமீ இந்தக்குடிசைக்கெல்லாம் வரணும்? சொல்லி அனுப்பியிருந்தால் நானே ஓடியாந்திருப்பேனில்ல. சரி வந்துட்டீங்க.... வாங்க” எனச்சொல்லி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, எதிர்புறம் இருந்த டீக்கடைக்கு ஓடிப்போய், ஒரு கால் மட்டும் சற்றே நொடிக்கும், மர ஸ்டூல் ஒன்றை இரவல் வாங்கியாந்து,\\ குடிசைப்பகுதி மக்களின் பேசும் தொனி உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது.

    "வாங்கி வந்து" என சொல்லாமல் "வாங்கியாந்து" என சொல்லியிருப்பது கதைக்கு பலம்.

    நீங்கள் எழுதும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவதால்தான் எங்களை கதைக்குள் பயணிக்க வைக்க உங்களால் முடிகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

    உங்கள் வயதின் முதிர்ச்சியையும்,இளமையின் வேகத்தையும், ஈடுபாட்டையும் படைப்புகளில் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது VGK சார்...!

    அன்புடன்,
    ராணி கிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  14. வை.கோ சார் இப்ப தான் இந்த கதையை பார்க்கிறேன்.தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது,எனக்கும் குடிசைக்குள் நுழைந்து பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டும் அளவு அழகிய வர்ணனை.

    பதிலளிநீக்கு
  15. nunmadhi said...
    \\“சாமீ.... நீங்க ஏன் சாமீ இந்தக்குடிசைக்கெல்லாம் வரணும்? சொல்லி அனுப்பியிருந்தால் நானே ஓடியாந்திருப்பேனில்ல. சரி வந்துட்டீங்க.... வாங்க” எனச்சொல்லி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, எதிர்புறம் இருந்த டீக்கடைக்கு ஓடிப்போய், ஒரு கால் மட்டும் சற்றே நொடிக்கும், மர ஸ்டூல் ஒன்றை இரவல் வாங்கியாந்து,\\ குடிசைப்பகுதி மக்களின் பேசும் தொனி உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது.

    "வாங்கி வந்து" என சொல்லாமல் "வாங்கியாந்து" என சொல்லியிருப்பது கதைக்கு பலம்.

    நீங்கள் எழுதும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவதால்தான் எங்களை கதைக்குள் பயணிக்க வைக்க உங்களால் முடிகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

    உங்கள் வயதின் முதிர்ச்சியையும்,இளமையின் வேகத்தையும், ஈடுபாட்டையும் படைப்புகளில் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது VGK சார்...!

    அன்புடன்,
    ராணி கிருஷ்ணன்.//

    அன்புள்ள கெளரி லக்ஷ்மி,

    தஙகளின் அன்பான ”ஓடியாந்த” வருகைக்கும், அழகான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு
    பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    இந்த தங்களின் வெகு அழகான பின்னூட்டக் கருத்துக்களை இன்று தான் அகஸ்மாத்தாக என்னால் பார்க்க முடிந்தது.

    I feel very sorry for it, Gowri.
    Pl. do not mistake me.
    Thanks a Lot.

    அன்புடன் உங்கள் vgk

    பதிலளிநீக்கு
  16. Asiya Omar said...
    வை.கோ சார் இப்ப தான் இந்த கதையை பார்க்கிறேன்.தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது,எனக்கும் குடிசைக்குள் நுழைந்து பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டும் அளவு அழகிய வர்ணனை.//

    Respected Madam,

    வாங்கோ.

    குடிசையின் வர்ணனையில் [நம் அன்பாகிய நட்பாகிய குடிசைக்குள்] நுழைந்து பார்த்துள்ள தங்கள் செய்ல் எனக்கு மிகுந்த் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    அன்புள்ள vgk

    பதிலளிநீக்கு
  17. சேரி பகுதியுள் நுழைந்த உணர்வு கதையை படித்த உடன் வந்தது அண்ணா..காரை பார்த்த உடன் சேரிப்பிள்ளைகள் போடும் ஆட்டம் அவர்களின் கள்ளமில்லா உள்ளத்தை காட்டுகிறது அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி,

      வாருங்கள். வணக்கம்.

      தாங்களும் சேரிக்குள் நுழைந்து என் அஞ்சலையுடன் ஒன்றிவிட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே!

      தொடர்ந்து படியுங்கள். அவ்வப்போது கருத்துக்கூறுங்கள்.

      பிரியமுள்ள
      VGK
      அண்ணா

      நீக்கு
  18. இந்தக் குடிசைகளுக்குள் எப்படி வாழ்கிறார்கள் என்பது மேல்குடி மக்களுக்குப் புரியாத புதிர்?

    பதிலளிநீக்கு
  19. ஒரு குப்பத்து கடிசை இப்படித்தான் இருக்கும் எனும் விளக்கம் நல்லா இருக்கு. அந்த பெரிய மனுஷன் எதுக்கு இங்க வந்தருப்பார்???????

    பதிலளிநீக்கு
  20. உங்க கதைகளோட சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?
    எத்தனை நாள் கழித்துப் படித்தாலும், புதிதாய் படிப்பது போல் இருக்கும். சுவாரசியம் குறையாமல் கதை எழுதுவதில் மன்னன் நீங்கள்.

    அதே போல் உங்கள் கதைகள் படிக்கும் போது என்னமோ அந்த நிகழ்ச்சி பக்கத்தில் நடப்பது போலவும் அதை பார்த்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றும்.

    குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும் உங்கள் புகழ் குன்றில் இட்ட விளக்காய் ஆக வேண்டும் என்பதே என் விருப்பம், வேண்டுதல் எல்லாம்.

    NARRATION அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 17, 2015 at 10:20 PM

      //உங்க கதைகளோட சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?
      எத்தனை நாள் கழித்துப் படித்தாலும், புதிதாய் படிப்பது போல் இருக்கும். சுவாரசியம் குறையாமல் கதை எழுதுவதில் மன்னன் நீங்கள்.

      அதே போல் உங்கள் கதைகள் படிக்கும் போது என்னமோ அந்த நிகழ்ச்சி பக்கத்தில் நடப்பது போலவும் அதை பார்த்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றும்.

      குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும் உங்கள் புகழ் குன்றில் இட்ட விளக்காய் ஆக வேண்டும் என்பதே என் விருப்பம், வேண்டுதல் எல்லாம்.

      NARRATION அற்புதம்.//

      ஆஹா, என் அன்புக்குரிய ’ஜெயா’ எழுத்துக்களில் இதைப் படிப்பதே எனக்கு ‘அற்புதம்’ . மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  21. இதுக்கு கமண்டு போட்டாபல நெனப்புகீதே.
    சேரி பக்கம்லா கூட வந்திருக்கீகளா அந்த கார்கார ஆளு எதுக்கு வந்திச்சோ

    பதிலளிநீக்கு
  22. குடிசைக்குளுளேயே நுழைந்து சுற்றி பார்த்ததுபோல உணர முடிந்தது. குடிசை முன்னாடி இப்படி ஆடம்பரமான கார் வந்து நின்னா குப்பத்து ஜனங்கள் எவ்வளவு அதிசயமாக பார்ப்பார்கள் இல்லையா?

    பதிலளிநீக்கு
  23. ஆஹா...அடூர் பாஸியின் மலையாளப் பட ஃப்ரேம்களைப்போல காட்சிகளின் நுணுக்கம்...அவ்வளவு வசதியான மனிதர் குடிசைக்கு ஏன்ன்ன்...???

    பதிலளிநீக்கு
  24. மனதில் நிற்கும் (நிலைக்கும்) வண்ணம் சொல்லும் விதம் அருமை!

    பதிலளிநீக்கு
  25. சேரி பகுதி குடிசை எல்லாம் நேரில் போயி பாக்கவே தேவையில்லை உங்க வர்ணனை மூலமா நாங்களும் உள்ளே நுழைந்து விட்டோம்.. அங்கு வசிப்பவர்களின் வெள்ளந்தி மனதையும் புரிந்து கொள்ள முடிந்தது.. கடையில்போயி காபி வாங்கி கொடுப்பதில் அவர்களின் பொருளாதான நிலமையும் புரிய வைத்து விட்டீர்கள்.. நீங்க எழுதும் எழுத்துகளை ரசித்து உணர்வு பூர்வமாக எழுதுவதால எல்லாராலும் ரசெக்க முடிகிறது. அவர் அவ குழந்தையை தத்து கேக்க வந்த மாதிரிதான் நினைக்க முடிகிறது. நீங்க என்ன ட்விஸ்ட் வச்சிருக்கீங்கனு போக போகத்தானே தெரியவரும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... June 22, 2016 at 11:32 AM

      //சேரி பகுதி குடிசை எல்லாம் நேரில் போயி பாக்கவே தேவையில்லை உங்க வர்ணனை மூலமா நாங்களும் உள்ளே நுழைந்து விட்டோம்.. அங்கு வசிப்பவர்களின் வெள்ளந்தி மனதையும் புரிந்து கொள்ள முடிந்தது.. கடையில்போயி காபி வாங்கி கொடுப்பதில் அவர்களின் பொருளாதான நிலமையும் புரிய வைத்து விட்டீர்கள்.. நீங்க எழுதும் எழுத்துகளை ரசித்து உணர்வு பூர்வமாக எழுதுவதால எல்லாராலும் ரசெக்க முடிகிறது. அவர் அவ குழந்தையை தத்து கேக்க வந்த மாதிரிதான் நினைக்க முடிகிறது. நீங்க என்ன ட்விஸ்ட் வச்சிருக்கீங்கனு போக போகத்தானே தெரியவரும்....//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஈடுபாட்டுடன் கூடிய வாசித்தலுக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்....

      நீக்கு