என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 4 [ பகுதி 4 of 6 ]


தூளியிலிருந்த குழந்தை, அடியில் போடப்பட்டிருந்த கெட்டித்துணியில் ஈரத்தைச் சொட்டவிட்டு சிணுங்க ஆரம்பித்தது. அஞ்சலை தன் குழந்தையைக் கையில் எடுத்து, தண்ணீர் தெளித்து துணியால் துடைத்தவாறே தன் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள். 

இந்த ஏழைக்குடிசையில் பிறந்துள்ள அந்தக்குழந்தை, அழகோ அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது சிவகுருவுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அங்கிருந்த ஓலையால் செய்யப்பட்ட கிலுகிலுப்பையை எடுத்து சிவகுரு குழந்தைக்கு ஆட்டிக்காண்பித்ததும், அது கடகடவென்று வாய்விட்டுச்சிரிக்க ஆரம்பித்தது.

“டேய்....உன் பெயர் என்னடா?” என்று கேட்டபடி அதன் கன்னத்தைத்தொட்ட சிவகுருவிடம் சிரித்தவாறே அது தாவிச்சென்றது. பிறகு அவர் முகத்தையே உற்றுப்பார்த்த அது, அவரின் கோல்ட் ஃப்ரேம் போட்ட மூக்குகண்ணாடியை தன் பிஞ்சு விரல்களால் கழட்டி, தன் கையில் பிடித்து வாயில் வைத்துக்கொள்ளப்போனது. 

“பார்த்து......சாமீ.....கீழே போட்டு உடைச்சுடப்போவுது”  என்று பதறினால் அஞ்சலை. அவர் தன் மூக்குக்கண்ணாடியை, அதன் பிடியிலிருந்து ஒருவாறு கஷ்டப்பட்டுக் காப்பாற்றியதும், அவர் சட்டைப்பையில் குத்தியிருக்கும் பேனாவை எடுக்கக் குனிந்து முயன்றது. 

அந்தக்குழந்தையின் சுறுசுறுப்புடன் கூடிய குறும்புத்தனம் சிவகுருவுக்கு மிகவும் பிடித்துப்போனது. தன்னிடம் இருந்த செல்போன் கேமராவினால், தன்னுடன் சேர்த்து அந்தக்குழந்தையையும் பலவித போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்.

பிறகு அஞ்சலையுடன் அந்தக்குழந்தையையும் கூட்டிக்கொண்டு தன் காரில் வெளியே எங்கோ புறப்படவேண்டும் என்ற தன் விருப்பத்தை அஞ்சலையிடம் தெரிவித்த சிவகுரு, தன் காரை நோக்கிச்செல்லலானார்.

மரஸ்டூலை எதிர்புற டீக்கடையில் நன்றி சொல்லி பொறுப்பாக ஒப்படைத்து விட்டு, தன் குடிசைக்கதவுகளை சாத்தி, நாய் ஏதும் நுழையாத வண்ணம் கயிறு போட்டுக்கட்டிவிட்டு,   கையில் குழந்தையுடன் கிளம்பினாள் அஞ்சலை.

காரின் பின்புற ஓரமாக அமர்ந்தபடி, தன் குழந்தைக்கு வேடிக்கை காட்டியவாறே சென்ற அஞ்சலைக்கு, இவர் இன்று எதற்கு நம்மைத்தேடி வந்தார்? இப்போ எங்கே நம்மைக்கூட்டிப்போகிறார்? என்பது ஒன்றும் புரியாமல் குழப்பமாகவே இருந்தது.  

வந்ததொரு பெரும்புள்ளியுடன், அஞ்சலை ஒய்யாரமாகக் காரில் ஏறி அமர்ந்து எங்கோ புறப்பட்டுச் செல்வதைப்பார்த்த அக்கம் பக்கத்து சேரி ஜனங்கள் தங்களுக்குள் ஏதேதோ கற்பனைகள் செய்துகொண்டு, அவசர அவசரமாகக் கூடிப்பேசலானார்கள். 

”புடிச்சாலும் புடிச்சாள், நல்ல புளியங்கொம்பாத்தான் பார்த்துப் புடிச்சிருக்கிறாள்” என்றாள் கைத்தடி ஊன்றிய ஒரு கிழவி.  

“புருஷனை மலையா நம்பியிருந்தா, அந்தப்பொறம்போக்கும் போய்ச்சேர்ந்து, மாசம் ஒண்ணாச்சு; அவளுக்கும் சின்ன வயசுதானே; புருஷனையே நினைச்சுக்கிட்டு இருந்துட்டு, இப்போ வந்துள்ள அரசனையும் கைவிட்டுட முடியுமா என்ன?”, அடுத்த கிழவி ஏதோ ஒத்துஊதி, அந்த முதல் கிழவியின் பேச்சுக்கு தூபம் போடலானாள்.

“நம்ம அஞ்சலையைப்பத்தி நல்லாத் தெரிஞ்சிருந்தும் இப்படி நாக்கூசாம பேசுறீங்களே! இது உங்களுக்கே நியாயமா” அஞ்சலைக்குப்பரிந்து பேசுபவள் போல, மிகவும் ஆர்வமாக வந்துசேர்ந்துகொண்டாள், அஞ்சலை வயதையொத்த இன்னொருத்தி. 

இப்படியாக எப்போதுமே தங்களின் வெறும் வாயை மென்றுவரும் அவர்களுக்கு, இப்போது, இன்றைக்கு காரில் ஏறிச்சென்ற அஞ்சலை என்ற அவல் கிடைத்து விட்டதில், நேரம் போனது தெரியாமல், கிடைத்த அவலை வாய் ஓயாமல், நன்றாக மென்று வம்பு பேசிக்கொண்டிருந்தனர். 

பிரபல மிகப்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடல்கள், குடும்பத்துக்குத்தேவையான அனைத்து பொருட்களும் விற்கப்படும் பல்பொருள் அங்காடிகள் பலவும் ஒருங்கே நிறைந்திருந்த அந்தப்பகுதியின் நடுவினில் அமைந்திருந்த ஒரு மிகப்பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள் அந்த கார் புகுந்து நின்றது.   

த்ரீ பெட் ஏ.ஸி. ரூமுக்குள் அழைத்துச்செல்லப்பட்டபின், சிவகுருவுக்கும், அஞ்சலைக்கும், குழந்தைக்கும் வயிற்றுப்பசிக்குச்சாப்பிட வேண்டிய அனைத்துப்பதார்த்தங்களும், அந்த ரூமுக்கே வரவழைக்க சிவகுருவால் ஆர்டர் செய்யப்பட்டன.  

குழந்தை அங்கு கும்மென்று போடப்பட்டிருந்த மெத்தை தலையணிகளில் ஜம்மென்று குதித்து விளையாடத் தொடங்கியது. மிகவும் ரம்யமான அந்த சூழ்நிலையில், சிவகுரு அஞ்சலையிடம் தன் மனம் திறந்து பேசத்தொடங்கினார்.     



தொடரும்

28 கருத்துகள்:

  1. இப்படியாக எப்போதுமே தங்களின் வெறும் வாயை மென்றுவரும் அவர்களுக்கு, இப்போது, இன்றைக்கு காரில் ஏறிச்சென்ற அஞ்சலை என்ற அவல் கிடைத்து விட்டதில், நேரம் போனது தெரியாமல், கிடைத்த அவலை வாய் ஓயாமல், நன்றாக மென்று வம்பு பேசிக்கொண்டிருந்தனர்.



    ......இதை மட்டும் சரியாக செய்துடுவாங்க.... எத்தனை பேரின் வாழ்க்கையை இப்படி வம்பு பேசியே கெடுத்து வைத்து இருக்கிறார்கள். :-(

    பதிலளிநீக்கு
  2. சுவாரசியமாக கதை செல்கிறது.

    பதிலளிநீக்கு
  3. புறம் பேச சொல்லித் தரணுமா என்ன

    பதிலளிநீக்கு
  4. மிகச் சரியாகச் சொன்னால்
    "லாத்தலாக " கதை சொல்லிப்போகும்
    உங்கள் பாணி மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. சிவகுரு அஞ்சலையிடம் தன் மனம் திறந்து பேசத்தொடங்கினார். //
    அறிய ஆவலாகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவதென்றால் சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல.

    பதிலளிநீக்கு
  7. டக்கென்று முடிவது போலுள்ளது -
    வம்பு பேசும் உலகம் - கிழவிகள் தவறாகப் பேச, அஞ்சலை வயதுப் பெண் ஆதரவாகப் பேசியது இதம்!

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல் பின்னிப் பெடலெடுக்கிறீர்கள். அடுத்த இரு பாகங்களுக்காக டைம் பாம் ரிசர்வ் பண்ணி வைத்திருக்கிறீர்களா?திக் திக் அண்ட் டிக் டிக்.

    பதிலளிநீக்கு
  9. வம்பு பேசுவது மனிதர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட ஒன்றாயிற்றே... அஞ்சலையிடம் சிவகுரு என்ன பேசினார் - தெரிந்து கொள்ள ஆவலுடன் அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கதை சொல்லிப்போகும்
    உங்கள் பாணி மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. வம்பு பேச சொல்லித் தரணுமா மக்களுக்கு! அடுத்த பகுதிக்கான ஆவலுடன்…..

    பதிலளிநீக்கு
  12. ஏன் இங்க அழைச்சிட்டு வந்தார்? எதிர்பார்ப்புடன்

    பதிலளிநீக்கு
  13. நாங்களும் வம்புக்காகத் தான் அலைகிறோம்? அஞ்சலையை ஏன் அவர் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்...?

    பதிலளிநீக்கு
  14. இந்தப்பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, மேலான கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  15. சுவாரசியமாக செல்கிறது.தொடர்ந்து வாசிக்கிறேன்.இன்று முடித்து விட்டுத்தான் மறுவேலை.

    பதிலளிநீக்கு
  16. Asiya Omar said...
    //சுவாரசியமாக செல்கிறது.தொடர்ந்து வாசிக்கிறேன்.//

    மிகுந்த சுவாரஸ்யத்துடன் கூடிய கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    //இன்று முடித்து விட்டுத்தான் மறுவேலை.//

    அடடா! அவ்வளவு ஒரு ஈடுபாடா?

    தங்களின் அன்பான வருகையும், உண்மையான வாசிப்பு உணர்வுகளை கூறியுள்ள விதமும் எனக்கு மிகுந்த திருப்தியாக உள்ளது.

    மனதில் இனிய புத்துணர்ச்சியும் உற்சாகமும் ஏற்படுகிறது, மேடம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. ஹைய்யோ..பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க அண்ணா... அடுத்து என்ன..!

    பதிலளிநீக்கு
  18. பொறுமையாக ஒவ்வொரு வரியாக ரஸித்து ருசித்துப் படியுங்கள், சகோதரி...... ;)))))

    உங்களுக்காவது இப்போது இந்தக்கதையை முழுவதுமாக இப்போதே படித்துவிடும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது. இந்தக்கதையின் ஒவ்வொரு பகுதிகளையும் நான் சில நாட்க்ள் இடைவெளிவிட்டு, வெளியிட்டபோது, என் வாசகர்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும்? சற்றே யோசித்துப்பாருங்கள் ;)))))

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  19. கதையை மிகவும் சஸ்பென்சுடன் கதாசிரியர் நகர்த்துகிறார், இருந்தாலும் ஸ்டார் ஓட்டல் தனி ரூம் என்றால் மனித மனம் சற்றே விகாரமடைவதைத் தவிர்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  20. inth pakuthiku comment potten nalla ninaivu irukke.
    ஒரு பக்கம் புரம் பேசும் குப்பத்து ஜனங்கள் இன்னொரு பக்கம் ஹோட்டல் ரூம் போய் மனம் விட்டு பேசும் பெரிய மனுஷன் இவ என்ன பண்ணப்போரா?

    பதிலளிநீக்கு
  21. பத்திரிகையில் தொடரும் போட்டது போல் இல்லை. ஏன்னா ஓரிரு க்ளிக்குகளில் அடுத்த பகுதிக்குப் போய் விடுவேனே.

    சுவாரசியம் கிஞ்சித்தும் குறையவில்லை. ம்ம்ம்ம்ம் அடுத்த பகுதிக்குப் போறேன். அவசரம், மிக அவசரம். முடிவு தெரியறதுக்குள்ள தலை வெடிச்சுடும் போல இருக்கே.

    பதிலளிநீக்கு
  22. கொளந்தக பண்ணுற குரும்பல்லா அளகா ரசனயோட சோல்லினிங்க. குப்பத்து சனங்களுக்கு வாசப்படில கந்திகிட்டு பொரணி பேசுரதே பொளப்பா போச்சி. ஆரு வூட்டல ஆரு வராக போராகன்னே கவனம் இருக்கு போல.

    பதிலளிநீக்கு
  23. குப்பத்தில் கார்வந்தாலே அதிசயமாக பார்ப்பவர்கள் அஞ்சலயும் குழந்தையுடன் காரில் ஏறி போவதை பலவித நினைப்புகளுடன் பார்க்கத்தானே செய்வார்கள். அஞ்சலைக்கே எதுக்காக இங்கே கூட்டி வந்திருப்பார் என்று புரியலியே.

    பதிலளிநீக்கு
  24. யூகங்களில் மகிழும் மனங்களுக்கு தீனிபோடுவதுபோல் இந்த எபிசோட் காட்சி முடிவு...என்ன டுவிஸ்ட் காத்திருக்குதுன்னு பாக்கலாம்....

    பதிலளிநீக்கு
  25. குழந்தை சிவகுருவின் கண்ணாடியை பிடுங்குவதும் பேனாவை எடுக்க வருவதுமான குறும்புத்தனங்களை ரசனையுடன் சொல்லி இருக்கீங்க.. குப்பத்து ஜனங்கள் குழந்தைகள் சத்தான உணவு வகைகளை சாப்பிடாமலே எப்படித்தான் கஷ்க்கு முஷ்க்கா வளருதோ... ஆச்சரியம்தான்.. குப்பத்து ஜனங்களின் வம்பு பேசும் குணமும் யதார்த்தமாக சொல்லி போகிறீர்கள்.. ஹோட்டலில் ரீம் போட்டு தனியாக அஞ்சலையிடம் சிவகுரு என்ன கேக்க போகிறானோ என்ற எதிர்பார்ப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... June 27, 2016 at 11:26 AM

      //குழந்தை சிவகுருவின் கண்ணாடியை பிடுங்குவதும் பேனாவை எடுக்க வருவதுமான குறும்புத்தனங்களை ரசனையுடன் சொல்லி இருக்கீங்க.. குப்பத்து ஜனங்கள் குழந்தைகள் சத்தான உணவு வகைகளை சாப்பிடாமலே எப்படித்தான் கஷ்க்கு முஷ்க்கா வளருதோ... ஆச்சரியம்தான்.. குப்பத்து ஜனங்களின் வம்பு பேசும் குணமும் யதார்த்தமாக சொல்லி போகிறீர்கள்.. ஹோட்டலில் ரூம் போட்டு தனியாக அஞ்சலையிடம் சிவகுரு என்ன கேக்க போகிறானோ என்ற எதிர்பார்ப்பு...//

      வாங்கோ வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், சிரத்தையுடன் கூடிய வாசிப்புத்திறனுக்கும், வாசித்ததை மனதில் வாங்கிக்கொண்டு கூறிடும் அருமையான கருத்துக்களுக்கும், ஆவலுடன் கூடிய கதையின் எதிர்பார்ப்புகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு