About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, April 27, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-15]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-15]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-19


[பட்டுவும் கிட்டுவும் வழக்கம் போல் சந்தித்து உரையாடுதல்]


பட்டு:


கிட்டு, உனக்கு விஷயம் தெரியுமோ. நேற்று நீ இல்லாதபோது நடந்தது.


கிட்டு:


சொல்லுங்கோ பட்டு; கேட்கிறேன்.


பட்டு:


நம் சங்கரர் உடன் ”பத்மபாதர் என்கிற ஸனந்த்யாயா”, ”மண்டல மிஷ்ரா என்கிற சுரேஷ்வரர்” , ஊமையும் செவிடுமாக இருந்த “ஹஸ்தமலாகன்” ஆகிய மூன்று பேருடன் ”கிரி” ன்னு ஒருத்தர் இருந்தாரோல்யோ?


கிட்டு:


ஆமாம். அவர் தான் எது நடந்தாலும் வாயே திறக்காமல் கம்முனு இருப்பாரே; 


ஒண்ணும் தெரியாத செவிட்டு முட்டாள்ன்னு எல்லோரும் கூட கேலி செய்வார்களே; 


அவருக்கு என்ன ஆச்சு? 


பட்டு:


சங்கரர் தனது பிரதான சிஷ்யாளுக்கெல்லாம் அருமையானதொரு சொற்பொழிவு நடத்திக் கொண்டிருந்தார்.


திடீர்ன்னு இந்த கிரி நம் சங்கரருக்கு மிக அருகில் வந்தார்.


தோடகாஷ்டகம்னு ஒரு அருமையான எட்டு ஸ்லோகங்களை கணீரென்ற குரலில் சொல்லி, ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும், நான்கு முறை சங்கரரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டே இருந்தார்.


கிட்டு: 


அப்படியா? ரொம்ப ஆச்சர்யமாக இருக்கே!


எல்லோரும் அப்படியே அதிர்ச்சியாகிப் போயிருப்பாளே?


சங்கரர் என்ன சொன்னார்?


பட்டு:


அவருக்கான கிரி என்ற பெயரை மாற்றி ”தோடகர்” ன்னு பெயர் சூட்டி, அவரையும் தன்னோட நாலாவது பிரதான சிஷ்யராக ஏற்றுக்கொண்டு விட்டார்.

கிட்டு:


அவருக்கு என்ன ஒரு பாக்யம் பாரு!


நாம தான் இரண்டுங்கெட்டானாக வேளாவேளைக்கு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிண்டு இருக்கோம். 


நாம் வாயைத்திறந்தாலே எந்த ஸ்லோகமும் வரமாட்டேங்குது. 


ஏப்பமும் கொட்டாவியும் தான் நம் வாயிலிருந்து வருகிறது. 


நாம சாப்பிடவும் தூங்கவும் மட்டுமே ஜன்மா எடுத்திருக்கிறோம்னு நினைக்கிறேன்.


சங்கரருக்குக் கைங்கர்யம் செய்கிறோம்னு சொல்லிண்டு ஏதோ காலத்தைத் தள்ளிண்டு இருக்கோம்.


பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல, நாமும் ஏதோ சங்கரரோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் தான், ஏதோ நம்ப வண்டியும் ஓடிண்டு இருக்கு.


பட்டு:


சரி....  சரி....., நாளைக்கு நாம் சங்கரருடன் திருவிடைமருதூர் போகப் போகிறோம். அதன் பிறகு திருவானைக்கா, அதன் பிறகு திருப்பதி, அதன் பிறகு ஸ்ரீ சைலம்னு வரிசையாக யாத்திரை போக வேண்டியுள்ளது.


சீக்கரமாப்போய் அதற்கான வேலைகளைப் பார்ப்போம்.


ooooooooooooooooooooooooooo


காட்சி-20


[சங்கரரும் பிரதான சிஷ்யர்களும், பல்வேறு சிறுவர்களும் கூடியுள்ளனர்]


சங்கரர்: [ஒரு சிறுவனை நோக்கி]


உனக்கு எந்த ஸ்வாமியை ரொம்பவும் பிடிக்கும்?


பையன்:


எங்கள் எல்லோருக்கும் பிள்ளையாரைத்தான் ரொம்பவும் பிடிக்கும். 


சங்கரர்:


பிள்ளையாரை ஏன் ரொம்பவும் பிடிக்கும்?


பையன்:


பிள்ளையார் தான் அழகாக யானை முகத்துடன், பானைத் தொந்தியுடன், பார்க்கவே ஜோராக இருக்கிறார். 


தலையில் நாம் குட்டு போட்டுக்கொண்டால் போதும். 


பிள்ளையார் நமக்கு எல்லாமே தருவார்ன்னு எங்க அப்பா சொன்னாங்க!


சங்கரர்:


அப்படியானால் நான் ஒரு பிள்ளையார் ஸ்லோகம் சொல்கிறேன்.


நீங்க எல்லோரும் கூடவே சொல்ல வேண்டும், சரியா, சொல்லுவீங்களா?


குழந்தைகள் அனைவரும்: [ஒரே குரலில்] சொல்லுகிறோம்!


சங்கரர்:


[கணேச பஞ்சரத்னம் சொல்லுதல்; குழந்தைகளும் கூடவே சொல்லுதல்]

முதாகராத மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்


கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம்


அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்


நதாசுபாசு நாசகம் நாமாமிதம் விநாயகம்.       [ 1 ]


........... ........... ............ ............. ............. ...............
........... ........... ............ ............. ............. ...............


மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்


ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்வரம்


அரோகதா மதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்


ஸமாஹிதா யுரஷ்டபூதி மம்யுபைதி ஸோசிராத். [ 6 ] 


[ஸ்லோகம் சொன்ன குழந்தைகள் எல்லோருக்கும் 
சங்கரர் கல்கண்டு கொடுத்து அனுப்புதல்]
   [இதன் தொடர்ச்சி நாளை 28.04.2012 சனிக்கிழமை 
காலை 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்] 


ooooooooooooooooooooooooooooooOoooooooooooooooooooooooooooooo

நேற்று திருச்சியில் நடைபெற்ற
ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி பட ஊர்வலம்.

எங்கள் திருச்சி மாநகரத்தில் டவுன் ஸ்டேஷன் அருகே ஸ்ரீ நன்றுடையான் பிள்ளையார் கோயில் என்று ஒன்று உள்ளது. 

அதே போல மலைவாசல் நுழைவாயில் அருகே சின்னக்கடைத் தெருவில் பத்தாய்க்கடை சந்து என்ற இடத்தில் அத்வைத ஸபா என்று ஒன்று உள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும், வேதவித்துக்கள் சிலர் கூடி தினமும் வேத பாராயணங்கள் செய்வார்கள். 

குறிப்பாக கார்த்திகை மாதங்களில் வேதவித்துக்கள் பலரும் சேர்ந்து தினமும் மிகச் சிறப்பாக வேத பாராயணங்கள் செய்வார்கள்.

ஒவ்வொரு வருஷமும் இந்த ஸ்ரீ நன்றுடையான் விநாயகர் கோயில் சார்பாகவும், திருச்சி அத்வைத ஸபா சார்பாகவும் ஸ்ரீ சங்கர ஜயந்தி உத்ஸவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். 

மாலையில் இந்த இரண்டு ஸ்தாபனங்களும் ஸ்ரீஆதிசங்கரரின் திரு உருவப்படத்தைப் புஷ்பங்களாலும் புஷ்பமாலைகளாலும் மின்விளக்குகளாலும் அலங்கரித்து, மேள நாயன வாத்யங்கள் முன்புறம் முழங்க, வானவேடிக்கைகளாக வெடிகள் வெடித்து, திருச்சி மலைக்கோட்டையை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும், புறப்பாட்டு  ஊர்வலமாக அழைத்து வருவார்கள். 

முன்னால் செல்லும் அனைவரும் 

ஹர ஹர சங்கர! 
ஜய ஜய சங்கர!!

காஞ்சி சங்கர! 
காமாக்ஷி சங்கர!!

காலடி சங்கர!
ஸத்குரு சஙகர!!

ஹர ஹர சங்கர!
ஜய ஜய சங்கர!!

என்று சொல்லியபடியே போவார்கள்.

அந்த புறப்பாட்டு ஸ்வாமிப்பட வண்டியின் பின்புறம் நிறைய வேத வித்துக்கள் வேதகோஷமிட்டு வருவார்கள்.   

வேதம் என்ற ஆலமரம் இன்று வரை நம் பாரத தேசத்தில், தழைத்தோங்க வித்திட்டவரான ஸ்ரீ ஆதிசங்கரரின் பட ஊர்வலத்தையும், வேதம் படித்த பண்டிதர்களின் வேதகோஷத்தையும் ஒருங்கே பார்க்கும், நமக்கு நம்மையறியாமல் மெய்சிலிர்த்துப்போகும், 

நேற்று [26.04.2012 வியாழக்கிழமை] ஸ்ரீசங்கர ஜயந்தியை முன்னிட்டு இரவு சுமார் 7 மணியளவில், ஸ்ரீ நன்றுடையான் விநாயகர் கோயில் சார்பாக மிகச்சிறப்பாக அலங்கரிப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் பட ஊர்வலம், புறப்பட்டு வந்தது. 

[அப்போது என் கேமரா பாட்டரியில் சார்ஜ் இல்லாமல் போனதால் அதை கவரேஜ் செய்ய முடியவில்லை.]

பிறகு திருச்சி அத்வைத ஸபா சார்பாக எட்டு மணிக்கு புறப்பட்டு வந்த ஸ்ரீ ஆதிசங்கரர் பட ஊர்வலத்தை மட்டும் புகைப்படம் எடுக்க முடிந்தது. இதோ தங்கள் பார்வைக்காக:

[ஸ்ரீ ஆதிசங்கரர் திரு உருவப்பட ஊர்வலத்தின் பின்புறம் வேதகோஷமிட்டுச்செல்லும் வேத வித்துக்கள்]
    
சுபம்


35 comments:

 1. அருமையான பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி

  ReplyDelete
 2. கிரி என்ற பெயரை மாற்றி ”தோடகர்” ன்னு பெயர் சூட்டி, அவரையும் தன்னோட நாலாவது பிரதான சிஷ்யராக ஏற்றுக்கொண்டு விட்டார்.

  தோடகாஷ்டகம் மிக அருமையான ஸ்லோகம்..

  ReplyDelete
 3. கிரி என்ற பெயரை மாற்றி ”தோடகர்” ன்னு பெயர் சூட்டி, அவரையும் தன்னோட நாலாவது பிரதான சிஷ்யராக ஏற்றுக்கொண்டு விட்டார்.

  தோடகாஷ்டகம் மிக அருமையான ஸ்லோகம்..

  ReplyDelete
 4. பிள்ளையார் தான் அழகாக யானை முகத்துடன், பானைத் தொந்தியுடன், பார்க்கவே ஜோராக இருக்கிறார்.


  தலையில் நாம் குட்டு போட்டுக்கொண்டால் போதும்.


  பிள்ளையார் நமக்கு எல்லாமே தருவார்ன்னு எங்க அப்பா சொன்னாங்க!

  அற்புதமான கணேச பஞ்சரத்னம் நாமும் கூடவே படிக்கிறோம்...

  ReplyDelete
 5. பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல, நாமும் ஏதோ சங்கரரோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் தான், ஏதோ நம்ப வண்டியும் ஓடிண்டு இருக்கு.

  ReplyDelete
 6. வேதம் என்ற ஆலமரம் இன்று வரை நம் பாரத தேசத்தில், தழைத்தோங்க வித்திட்டவரான ஸ்ரீ ஆதிசங்கரரின் பட ஊர்வலத்தையும், வேதம் படித்த பண்டிதர்களின் வேதகோஷத்தையும் ஒருங்கே பார்க்கும், நமக்கு நம்மையறியாமல் மெய்சிலிர்த்துப்போகும், /

  இங்கு கோவையிலும் அருமையாக நடந்தது ஊர்வலமும் ,
  வேத கோஷமும்..

  ReplyDelete
 7. ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!
  காஞ்சி சங்கர! காமாக்ஷி சங்கர!!
  காலடி சங்கர! ஸத்குரு சஙகர!!
  ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!

  ReplyDelete
 8. சார் உங்கள் தளத்துக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன். தெய்வீகமாக் இருக்கிறது

  ReplyDelete
 9. சங்கரரை பற்றிய செய்திகளும், தோடகாஷ்டகமும், சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் என நல்லதோர் பதிவு.

  ReplyDelete
 10. பாலா said...
  //சார் உங்கள் தளத்துக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன். தெய்வீகமாக் இருக்கிறது//

  வாங்க சார் வாங்க.

  தங்களின் முதல் வருகைக்கு நன்றி.
  மகிழ்ச்சியாக உள்ளது. WELCOME to You!

  ReplyDelete
 11. //நாம் வாயைத்திறந்தாலே எந்த ஸ்லோகமும் வரமாட்டேங்குது.
  ஏப்பமும் கொட்டாவியும் தான் நம் வாயிலிருந்து வருகிறது. //

  நாடகத்திலும் அருமையான நையாண்டி. அருமை. தொடர்கிறேன்

  ReplyDelete
 12. பிள்ளையார் ஸ்லோகம் வாசித்துப்பார்த்தேன். உச்சரிக்கத்தான் எனக்கு கடினமாக உள்ளது. போட்டோக்கள் அருமையாக உள்ளது.

  ReplyDelete
 13. விச்சு said...
  //பிள்ளையார் ஸ்லோகம் வாசித்துப்பார்த்தேன். உச்சரிக்கத்தான் எனக்கு கடினமாக உள்ளது. //

  Sir, அது, விஷயம் தெரிந்த ஏற்கனவே சொல்லும் ஆட்களிடம் செவி வழியாகக் கேட்டு அதன் மெட்டைத் தெரிந்து கொண்டுவிட்டால் வெகு அழகாகப் பாடலாம்.

  முதாக

  ராத

  மோதகம்

  ஸதா

  வி

  முக்தி

  ஸாதகம்


  கலாத

  ராவ

  தம்ஸகம்

  விலாஸி

  லோக

  ரக்ஷகம்

  அநாய

  கைக

  நாயகம்

  விநாசி

  தேப

  தைத்யகம்


  நதாசு

  பாசு

  நாசகம்

  நாமாமி

  தம்

  விநாயகம்.

  இதுபோலப் பிரித்து ஒருவித ராகத்துடன் சொல்லுவார்கள்.

  இப்போது இதைப்பார்த்துப் படியுங்கள். சுலபமாக இருக்கும்.

  தங்களின் சிரத்தை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 14. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்! தங்களின் வலைப்பூ பக்தி மணம் வீசுகிறது! தொட்ர்ந்து நுகர்வோம்! நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 15. ஸ்ரீ சங்கர ஜயந்தி திருநாளோடு தொடர் நாடகப் பதிவும் நிறைவு கொண்டுள்ளது பொருத்தம். குழந்தைகள் நாடகமாய்ப் போடுகிற மாதிரி, அவர்கள் மனத்தில் பதிந்து இலயிக்கிற மாதிரி எளிமையாய் இருந்தது விசேஷம்.

  ReplyDelete
 16. miha miha rasithu patithen.
  Arumayaha elethukerelkal.
  Thorarattum unkal eluthu pani.
  viji

  ReplyDelete
 17. [கணேச பஞ்சரத்னம் சொல்லுதல்; குழந்தைகளும் கூடவே சொல்லுதல்]

  குழந்தைகள் சொல்லுவது காதில் ஒலிக்கிறது.

  அருமையான நாடக ஆக்கம்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. கணேச பஞ்சரத்னம் எங்கள் பெரியப்பா தினமும் சொல்ல சிறு வயதில் நாங்களும் கூடவே சொல்லுவோம்....

  சங்கர ஜெயந்தி ஊர்வலம், வேதகோஷம் என தகவல்கள் அருமை.

  தொடர்ந்து வரும் நாடகக் காட்சிகளும் செய்திகளும் மிக அருமை.

  ReplyDelete
 19. நல்ல பதிவு... அருமையான ஆதிசங்கரர் தரிசனம்...நன்றி .

  ReplyDelete
 20. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 21. The info about his disciple giri is new to me. THanks for sharing gopu sir.

  Ganesha is my favourite god who always comes to my rescue without me knowing. I used to chant the pancharatnam along with my mother and sister and that is how I learnt that sloka during my chidlhood days.

  the info about the celebration at your place is very nice.

  ReplyDelete
 22. Mira said...
  //


  Mira said...
  //The info about his disciple giri is new to me. THanks for sharing gopu sir.

  Ganesha is my favourite god who always comes to my rescue without me knowing. I used to chant the pancharatnam along with my mother and sister and that is how I learnt that sloka during my chidlhood days.

  the info about the celebration at your place is very nice.//

  Mira,

  Thanks for your kind visit & offering valuable comments.

  Ganesa [Thonthip Pillaiyar] is my favourite GOD too. ;)))))

  Anbudan
  GOPU

  ReplyDelete
 23. now iam also your follower..iam enjoying the pics though i do not know tamil..the kutty ganeshji lying on the floor looks funny and awesome..

  ReplyDelete
 24. Leelagovind said...
  //now iam also your follower..iam enjoying the pics though i do not know tamil..the kutty ganeshji lying on the floor looks funny and awesome..//

  WELCOME Mrs. LEELA !

  I AM VERY GLAD TO NOTE THAT YOU HAVE ALSO BECOME A FOLLOWER TO MY BLOG.

  THANKS FOR YOUR COMMENTS REGARDING THE BABY KUTTY GANESHJI!!

  WITH KIND REGARDS & BEST WISHES TO YOU ...... vgk

  ReplyDelete
 25. உங்கள் வீட்டில் இருந்து கொண்டே சத் விஷயங்களைக் காண கொடுத்து வைத்தவர் நீங்கள்.

  ReplyDelete
 26. அருமையான விளக்கங்கள், அருமையான ஸ்லோகங்கள்

  ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!
  காஞ்சி சங்கர! காமாக்ஷி சங்கர!!
  காலடி சங்கர! ஸத்குரு சஙகர!!
  ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!

  ReplyDelete
 27. குழந்தைகளுக்குப் பிடித்த கடவுளும் அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் அழகு. சங்கர ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஆதிசங்கரர் பட ஊர்வலத்தை நாங்களும் கண்ணுற்றோம். நன்றி கோபு சார்.

  ReplyDelete
 28. பிள்ளையார் ஸ்லோகம் தோடகாஷ்டகம் என்று நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete
 29. Replies
  1. mruOctober 20, 2015 at 6:20 PM
   ?????-----//

   சரி..... சரி..... :)

   Delete
 30. தோடகாஷ்டகம் பவித்ரமான ஸ்லோகம் கிரிதான் தோகரா சங்கரர் ஒவ்வொருவருக்கும் தன் அருள் மழையை பொழிந்து வருகிறார். படிக்க படிக்க பரவசம்

  ReplyDelete
 31. அது யார் வாத்யாரே பட்டு - கிட்டு? கற்பனைப்பாத்திரங்களா?

  ReplyDelete