About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, April 26, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-14]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-17


[பட்டுவும் கிட்டுவும் மட்டும் உரையாடுதல்]


பட்டு:


கிட்டு, சங்கரரின் அம்மா காலமான பின்பு நாமும் சங்கரருக்கு கைங்கர்யம் செய்வதாகச் சொல்லி, நம் ஊரை விட்டுப் புறப்பட்டு வந்து விளையாட்டுப்போல ஒரு வருஷம் ஆச்சு.


கிட்டு:


ஆமாம் பட்டு. இதுபோன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? 


எல்லாம் நாம் பூர்வ ஜன்மத்திலே செய்த புண்ணியம் தான்.  


பல புண்ணிய நதிகளிலே சங்கரரோடு நாமும் ஸ்நானம் செய்ய முடிகிறது.

பல கோயில்களுக்கு சங்கரரோடு போய் ஸ்வாமி தரிஸனமும் திவ்யமாகச் செய்ய முடிகிறது.

பட்டு: 

அது மட்டுமா? எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பும், ராஜ உபசாரமும் கிடைத்து வருகிறது. 


பல மொழிகள் பேசும் பல ஜனங்களைப் பார்த்து, பழகிட முடிகிறது. 


மதம் மாற்றப்பட்டு, அறியாமையால் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட ஜனங்கள் எல்லோரையும், அத்வைதத்தில் நம்பிக்கை வைக்குமாறு கூறி, நம் வைதீக மதத்திற்கே அவர்கள் திரும்பி வருமாறு சங்கரர் செய்து வரும் அரும் தொண்டைக் காண முடிகிறது. 


சங்கரர் தன் தபோ வலிமையாலும், அபூர்வ சக்திகளாலும், யந்திரப் பிரதிஷ்டை செய்து, பல கோயில்களுக்கு புணருத்தாரணம் [கும்பாபிஷேகம்] செய்து வருவதையும், பராசக்தியின் அருளைப் பரப்புவதையும், நம் கண்களால் கண்டு மகிழமுடிகிறது.

கிட்டு:

நாளைக்கு நாம் சங்கரரோடு கொல்லூர் மூகாம்பிகையை தரிஸிக்கப்போகிறோம், பட்டு.

பட்டு:

ஆமாம்.... ஆமாம்..... அதற்கான பயண வேலைகளையெல்லாம் கவனிப்போம்.

oooooooooooooooooooooooooo


கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை

காட்சி-18

[மூகாம்பிகை கோயில் செல்லும் வழியில் கூட்டமாக ஜனங்கள்]

யாரோ ஒருவர்:

மூகாம்பிகை கோயிலுக்கு சங்கராச்சார்யார் வருகிறார்கள்.

ஓரமாக வரிசையாக நில்லுங்கோ!

பாதையில் யாரும் தயவுசெய்து நிற்காதீர்கள்.

[ஒரு ஏழை பெரியவர் தன் மகனுடன் சங்கரரிடம் வருதல்]

பெரியவர்: [தன் வாயை வலது கை விரல்களால் பெளயமாக மூடியபடி]

இவன் என் குழந்தை. 

பிறந்ததிலிருந்து வாயும் பேச வராமல் காதும் கேட்காமல் இருக்கிறான், 

பெரியவா தான் இவனுக்கு அனுக்ரஹம் செய்யணும்.     

சங்கரர்: [அந்தப்பையனைத் தன் கரங்களால் தொட்டபடி]

நீ யாரப்பா?

பையன்:

இந்த என் உடல் என்னுடையது அல்ல. 

அது பரமாத்மாவுக்கே சொந்தம். 

நான் யார் என்று எப்படிச் சொல்வது?

சங்கரர்: [அந்தப் பையனைப் பார்த்து]

உன்னுடைய பதில் எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.

இந்தா [நெல்லிக்கனி ஒன்றை அவனிடம் கொடுத்தல்] இதைச் சாப்பிடு.

சங்கரர்: [மற்றவர்களைப் பார்த்து]

இன்று முதல் இவன் பெயர் “ஹஸ்தமலாகன்”.

என்னுடன் என் பிரதான சிஷ்யர்களில் ஒருவனாக இருப்பார். 

பெரியவர்:

ஐயனே! என் குழந்தையை முதன் முதலாகப் பேச வைத்த நீங்கள் தான் நடமாடும் தெய்வம். 

என்னே என் குழந்தையின் பாக்யம்! 

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!

[பெரியவரும், அந்தச்சிறுவனும் சங்கரரின் காலில் விழுந்து நமஸ்கரித்தல்]கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகைத் தேர் ஓட்டம்


ooooooooooooooooooooooooooooooooஇன்று 26.04.2012 வியாழக்கிழமை [குருவாரம்]
சித்திரை மாதம் - திருவாதரை நக்ஷத்திரம்
ஸ்ரீ ஆதி சங்கரர், 
கேரளாவில் உள்ள “காலடி” என்ற சிற்றூரில் 
அவதாரம் செய்த திருநாள்.
”சங்கர ஜயந்தி” 
என்று எங்கும் கொண்டாடப்படுகிறது.
நாமும் அவரை நினைத்து வணங்கி 
குருவருள் பெறுவோமாக!

ஜய ஜய சங்கர!
ஹர ஹர சங்கர!!


-oOo-[இதன் தொடர்ச்சி நாளை 27.04.2012 வெள்ளிக்கிழமை 
பகல் 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்] 


24 comments:

 1. ’ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் ‘

  சங்கர ஜயந்தி அன்று நல்ல பகிர்வாய் உங்கள் நாடகம் படிக்கும் பேறு!

  சங்கரரின் புகழ் வாழ்க!

  அவர் திருவடியை வணங்கி அவர் அருள் பெறுவோம்.
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நல்ல நாளில் நல்லதொரு பகிர்வு!
  நன்றி!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 3. சங்கர ஜெயந்தியான இன்று நல்ல விஷயங்களை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றி சார்.

  ஹர ஹர சங்கர
  ஜெய ஜெய சங்கர

  சிறுவயதில் ஒரு ஸ்லோகம் படித்திருக்கிறேன்,

  ”ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம்
  ஆலயம் கருணாலயம்
  நமாமி பகவத் பாத சங்கரம்
  லோக சங்கரம்”

  ReplyDelete
 4. சங்கரர் தன் தபோ வலிமையாலும், அபூர்வ சக்திகளாலும், யந்திரப் பிரதிஷ்டை செய்து, பல கோயில்களுக்கு புணருத்தாரணம் [கும்பாபிஷேகம்] செய்து வருவதையும், பராசக்தியின் அருளைப் பரப்புவதையும், நம் கண்களால் கண்டு மகிழமுடிகிறது.

  ரொம்ப பாக்கியமான பகிர்வுகள்..

  ReplyDelete
 5. ஐயனே! என் குழந்தையை முதன் முதலாகப் பேச வைத்த நீங்கள் தான் நடமாடும் தெய்வம்.
  என்னே என் குழந்தையின் பாக்யம்!
  ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!

  ஊமையை ஹஸ்தாமலகராக உயர்த்தி கவிபாட வைத்த சங்கர காவியம் அருமை.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. மதம் மாற்றப்பட்டு, அறியாமையால் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட ஜனங்கள் எல்லோரையும், அத்வைதத்தில் நம்பிக்கை வைக்குமாறு கூறி, நம் வைதீக மதத்திற்கே அவர்கள் திரும்பி வருமாறு சங்கரர் செய்து வரும் அரும் தொண்டைக் காண முடிகிறது.

  கருணை வள்ளலாய் அன்பின் ஊற்றாய் திகழும் சங்கரரின் அருமையான பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. நல்ல நாளில் நல்லதொரு பகிர்வு!
  நன்றி!

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு.நன்றி வைகோ சார்.ஹஸ்தாமலகீயம் சில ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன்.
  என் வலைப்பூவுக்கு வாருங்களேன்
  http://shravanan.blogspot.in/2012/04/blog-post.html

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு....

  சங்கர ஜெயந்தி ஆன இன்று இந்த இனிய பகிர்வைக் கொடுத்த உங்களுக்கு எனது நன்றி.

  ReplyDelete
 10. நல்ல பதிவு...அழகாய் வீற்றிருக்கும் மூகாம்பிகையின் அருமையான தரிசனம்...

  ReplyDelete
 11. I think I am lucky enough to read about out Great Guru over here.
  Thanks sir, for sharing.
  viji

  ReplyDelete
 12. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 13. Good post Gopu Sir. Mookambika always reminds me the nice tamizh song scored by Ilayaraja....Janani Janani...so devotional...now-a-days even the so called devotional songs by new singers (not carnatic) miss the devotion & divinity in it.

  ReplyDelete
 14. Mira said...
  //Good post Gopu Sir. Mookambika always reminds me the nice tamizh song scored by Ilayaraja....Janani Janani...so devotional...now-a-days even the so called devotional songs by new singers (not carnatic) miss the devotion & divinity in it.//

  Thank you very much Mira ;)
  Ambudan GOPU

  ReplyDelete
 15. Mira said...
  //Good post Gopu Sir. Mookambika always reminds me the nice tamizh song scored by Ilayaraja....Janani Janani...so devotional...now-a-days even the so called devotional songs by new singers (not carnatic) miss the devotion & divinity in it.//

  இளையராஜா அவர்களின் “ஜனனி...ஜனனி” பாடலை சமீபத்தில் ஒரு முறை, அவர் தன் வாயால் பாட, நான் நேரில் கேட்கும் பாக்யம் பெற்றேன்.

  அருமையோ அருமை தான்.

  Mira,
  Thank you very much for your kind entry & valuable comments, please.
  Anbudan,
  Gopu

  ReplyDelete
 16. காலடி மிகவும் புண்ணியம் செய்த ஊர்.

  ReplyDelete
 17. ஹர ஹர சங்கர
  ஜெய ஜெய சங்கர

  ReplyDelete
 18. வியக்கவைக்கும் அபூர்வ நிகழ்வுகள்...

  ReplyDelete
 19. போன பதிவுல நிறைவு பதிவு என்று நினைத்து பினனூட்டம் போட்டுட்டேன் அவசர புத்தி

  ReplyDelete
 20. இன்னாமோ மக்களுக்கு நல்லதுலா பண்ணுறாங்கபோல. அபூருவ சக்திலாம் கொண்டவருபோல

  ReplyDelete
  Replies
  1. :) ஆமாம். அதே அதே .... மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   Delete
 21. ஸ்ரீமூகாம்பிகை தரிசனம் வாய் பேச முடியாத பையனுக்கு அருள் செய்தது எல்லாமே சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள்.

  ReplyDelete
 22. பேச்சையும் வரவழைத்து சிஷ்யனாகவும் ஏற்றுக்கொண்டது..யாருக்குக் கிடைக்கும்??

  ReplyDelete