About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, April 23, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-13]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-13]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-16/2/2[கிட்டு தன் பேச்சைத் தொடர்கிறார், பட்டுவும் ஆர்யாம்பாளும் சுவாரஸ்யமாக அவரின் பேச்சினை கவனித்து வருகின்றனர்] 


”நமது விவாதத்தைக் கேட்டு இறுதியில் வெற்றி பெற்றவர் யார் என்று நியாயம் சொல்லவும், தீர்ப்பு சொல்லவும் ஒருவர் வேண்டும்.

தங்கள் மனைவி சரஸவாணியே கூட அந்த நீதிபதியாக இருக்கலாம்” என்கிறார் மண்டல மிஷ்ராவிடம், நம் சங்கரர்.

நன்கு படித்த அதிபுத்திசாலியான சரஸவாணி, இங்கு சங்கரராக வந்திருப்பவர் அந்த சாக்ஷாத் பரமேஸ்வரனே என்பதை உணர்ந்து கொண்டு விட்டாள்.

தான் நீதிபதியாக இருந்து தன் கணவரை தோற்றவராக அறிவிப்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்த அவள், வாதம் செய்யும் நீங்கள் இருவரும், ”ஆளுக்கு ஒரு மாலை கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். வாதத்தின் முடிவில் யாருடைய மாலை வாடிவிட்டதோ அவர்கள் தோற்றதாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டாள்.நம் சங்கரனே கடைசியில் போட்டியில் வென்றார்.

போட்டியின் நிபந்தனைகளின்படி, மண்டல மிஷ்ரா தன் வீடு மற்றும் மனைவியினைப் பிரிந்து செல்லும்படி நேர்ந்தது.

தன் கணவனின் தோல்வியால் வந்துள்ள இந்தப்பிரிவினைத் தாங்க முடியாமல் வருத்தம் கொண்ட சரஸவாணி 

“கணவனும் மனைவியும் வெவ்வேறு உடல் கொண்டிருந்தாலும், அவர்கள் இருவரும் ஒருவர் என்பதே நமது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு இருக்கும்போது எங்கள் இருவரில் ஒருவருடன் மட்டும் தாங்கள் விவாதம் செய்து வெற்றி பெற்றதாக முடிவுக்கு வருவது எவ்வாறு நியாயமாகும்?” 


என்றாளாம்.

பட்டு:

ஆஹா, இந்த விவாதமும் சூடாக சுவையாகவே உள்ளதே! அப்புறம் நடந்ததை சீக்கரமாகச் சொல்லும், ஓய்.

கிட்டு: 

இதை ஒத்துக்கொண்ட சங்கரரும் சரஸவாணியுடன் தன் விவாதத்தைத் தொடர்ந்து கொண்டே மண்டல மிஷ்ராவுடன் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

சரஸவாணியும் தனது வினாக்களை மழைபோலப் பொழியத் தொடங்கினாளாம்.      

சங்கரரும் அதற்கான விளக்கங்களையும், விடைகளையும் வெகு அழகாக எடுத்துரைத்தவாறே நடந்து வரலானாராம்.

அவர்களின் இந்த விவாதப் பயணத்தின் ஒரு கட்டத்தில், கர்னாடக மாநிலம், துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள சிருங்கேரி என்னும் இடத்தை அடைந்தனராம்.

சங்கரரும் மண்டல மிஷ்ராவும் மட்டும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க, சரஸவாணி மட்டும் துங்கபத்ரா மணலில் சிலையாக மாறி நின்று விட்டாளாம்.
திரும்பிப்பார்த்த சங்கரர் தனது ஞான திருஷ்டியால் சரஸவாணி நின்ற இடமே, அத்வைதத்தைப் பரப்ப ஏற்ற இடம் என்பதை உணர்ந்து, அந்த இடத்திலேயே ”சாரதா பீடம்” என்று ஒன்றை நிறுவினாராம்.

பட்டு: 

ஆஹா! அருமையானதொரு நிகழ்ச்சி, கிட்டண்ணா!

நானும் நீரும் ஒரு நாள் சிருங்கேரிக்குப்போய், இந்த சாரதா பீடத்தைப் பார்த்து தரிஸித்து விட்டு வரவேண்டும்.

கிட்டு: 

”ஆர்யாம்பாள் மாமியையும் நம்முடன் அழைத்துப் போக வேண்டும்” 

என்று சொல்லி அவர்கள் இருவரும் ஆர்யாம்பாளை நோக்குகிறார்கள்.

[அப்போது ஆர்யாம்பாள் மயங்கி கீழே சாய்கிறாள்]

பட்டு:

கிட்டண்ணா, உடனே ஓடிப்போய் வைத்தியரைக் கூட்டி வாருங்கள்.

[கிட்டு ஓடுகிறார். வைத்தியருடன் திரும்பி வருகிறார்]

வைத்தியர்: [ஆர்யாம்பாளை நாடி பிடித்து பரிசோதனை செய்து விட்டு]

”ஒன்றும் பயமில்லை. தன் குழந்தை சங்கரனைப் பார்க்க முடியவில்லையே என்ற மனக்கவலை தான். குடிக்க ஏதாவது சூடாகக் கொடுங்கள். சரியாகி விடும்”

[பட்டு சூடாக கஞ்சி வைத்துக் கொடுக்கிறார்]

பட்டு: 

இந்தாங்கோ மாமி! கொஞ்சம் கஞ்சி சாப்பிடுங்கோ. சங்கரனுக்கு தகவல் கொடுத்து ஒருமுறை நேரில் வந்து உங்களைப் பார்த்துவிட்டுப் போகச் சொல்கிறேன். 

[வாசலில் ஒரே கூட்டம். ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!! கோஷம். பல்வேறு பக்தர்களுடன் சங்கரர் தன் தாயைப் பார்க்க வந்துள்ளார்]

ஆர்யாம்பாள்:

சங்கரா! நீ வந்துட்டயாடா என் கண்ணே!!

[தன் மகன் சங்கரனைக் கட்டித்தழுவியபடியே, கீழே சரிந்து விழுகிறாள்]

சங்கரன்:

பட்டு மாமா! கிட்டு மாமா! அம்மாவின் உயிர் பிரிந்து விட்டது. 

மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.

பட்டு:

அடடா! சங்கரனைக் கடைசியாக ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்றே உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்தாள் போலிருக்கே!

கிட்டு:

ஆமாம்.... ஆமாம்.... குழந்தை திரும்பி வந்துட்டான் என்ற சந்தோஷத்திலேயே மகராசியாகக் கண்ணை மூடிவிட்டாள்.

ஊர் மக்களில் சிலர்: 

”சங்கரா! நீ ஒரு சந்நியாஸி. 

உன் தாயாருக்கு கர்மா செய்ய உனக்கு அதிகாரம் இல்லை”

சங்கரன்:

அவள் அன்றும், இன்றும், என்றும் என்னைப் பெற்ற தாயார் தான்.

அவளை மோட்சத்திற்கு அனுப்ப எனக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு.

நானே என் கையால் அவளுக்குக் கொள்ளி போடுவேன்.

ஊராரில் ஒரு சிலர்:

நாம் சொல்லி இவன் கேட்பானா?

அவனுக்குத்தான் ’ஜே’ போட இன்று ஒரு பெரிய கும்பலே உள்ளதே!

நமக்கென்ன வம்பு? என்னவோ செய்யட்டும்!! 

[புலம்பியவாறே புறப்பட்டுச் செல்கின்றனர்]

சங்கரன்:

பட்டு மாமா! கிட்டு மாமா!!

அம்மாவின் உடலை எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யுங்கள்.

நானே கொள்ளி போடப்போகிறேன்.

ஓர் அன்பான அறிவிப்பு

[இந்த நாடகத்தின் தொடர்ச்சி வரும் 
26.04.2012 வியாழக்கிழமை முதல்
30.04.2012 திங்கட்கிழமை வரை 
தினமும் ஒவ்வொரு பகுதியாக 
மதியம் சுமார் 11 மணிக்கு வெளியிடப்படும்]


24.04.2012 செவ்வாய்க்கிழமையும்
25.04.2012 புதன்கிழமையும் 
வேறு இரு பதிவுகள் வெளியாக உள்ளன.


அன்புடன்
vgk

28 comments:

 1. திரும்பிப்பார்த்த சங்கரர் தனது ஞான திருஷ்டியால் சரஸவாணி நின்ற இடமே, அத்வைதத்தைப் பரப்ப ஏற்ற இடம் என்பதை உணர்ந்து, அந்த இடத்திலேயே ”சாரதா பீடம்” என்று ஒன்றை நிறுவினாராம்.


  சாட்சாத் கலைவாணியே சரஸவாணியாக வந்து சங்கரரை சோதித்து ரிசல்ட் சொல்லிவிட்டாரோ !

  ReplyDelete
 2. கர்ப்பிணி தவளைக்கு நல்லபாம்பொன்று தன் படத்தை விரித்து நிழல் கொடுத்த காட்சியைக் கண்டு கோவில்கொள்ளத் திரு உள்ளம் கொண்டாரோ அன்னை !

  ReplyDelete
 3. கர்ப்பிணி தவளைக்கு நல்லபாம்பொன்று தன் படத்தை விரித்து நிழல் கொடுத்த காட்சியைக் கண்டு கோவில்கொள்ளத் திரு உள்ளம் கொண்டாரோ அன்னை !

  ReplyDelete
 4. கர்ப்பிணி தவளைக்கு நல்லபாம்பொன்று தன் படத்தை விரித்து நிழல் கொடுத்த காட்சியைக் கண்டு கோவில்கொள்ளத் திரு உள்ளம் கொண்டாரோ அன்னை !

  ReplyDelete
 5. கர்ப்பிணி தவளைக்கு நல்லபாம்பொன்று தன் படத்தை விரித்து நிழல் கொடுத்த காட்சியைக் கண்டு கோவில்கொள்ளத் திரு உள்ளம் கொண்டாரோ அன்னை !

  ReplyDelete
 6. //இராஜராஜேஸ்வரி said...
  கர்ப்பிணி தவளைக்கு நல்லபாம்பொன்று தன் படத்தை விரித்து நிழல் கொடுத்த காட்சியைக் கண்டு கோவில்கொள்ளத் திரு உள்ளம் கொண்டாரோ அன்னை!//

  இந்தக்கதை கேட்டுள்ளேன்.

  இது அங்கு நடந்த அதிஸயம் தானா?

  மிக்க மகிழ்ச்சி.

  இயற்கையின் எதிரிகளே, ஒருவருகொருவர் உதவிடும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் ஒரு புண்ணிய பூமியாகத்தான் இருக்கும்.

  கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி, மேடம். ;)))))

  ReplyDelete
  Replies
  1. அந்தக் கர்ப்பிணித் தவளைக்கு ஒரே பிரஸவத்தில் நான்கு குட்டிகள் பிறந்திருக்குமோ என்னவோ !!!!

   எனக்கு ஒரே பின்னூட்டம் அடுத்தடுத்து நான்கு முறை கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. :))))

   Delete
 7. வணக்கம் ஐயா,
  கடந்த ஐந்து பகுதிகளை படிக்க நேரம் கிட்டாது போயிற்று...
  இன்று வந்ததும் ஒரே மூச்சில் அத்தனையும் படித்துவிட்டேன்...

  ஏட்டில் ஏறவேண்டிய பொக்கிஷம் ஐயா
  இந்த நாடக களம்...

  ReplyDelete
 8. //நாம் சொல்லி இவன் கேட்பானா?
  அவனுக்குத்தான் ’ஜே’ போட இன்று ஒரு பெரிய கும்பலே உள்ளதே! //

  அந்தக் காலத்திலும் இம்மாதிரிப் பேச்சுகள் இருந்திருக்கும்தான்!

  ReplyDelete
 9. சங்கரர் தனது ஞான திருஷ்டியால் சரஸவாணி நின்ற இடமே, அத்வைதத்தைப் பரப்ப ஏற்ற இடம் என்பதை உணர்ந்து, அந்த இடத்திலேயே ”சாரதா பீடம்” என்று ஒன்றை நிறுவினாராம்.//

  நல்ல பகிர்வு.

  சாராதா பீடத்தைப் போய் பார்த்து வர வேண்டும்.
  புண்ணிய பூமியை உங்கள் பதிவில் முதலில் தரிசிக்கிறோம்.

  ReplyDelete
 10. சாரதா பீடம் வந்த கதையும் மேலும் நல்ல பல விஷயங்களையும் தெரிந்து கொண்டேன்.

  தொடருங்கள். தொடர்வேன்.

  ReplyDelete
 11. சாரதா பீடம் வந்த கதையும் மேலும் நல்ல பல விஷயங்களையும் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 12. சாரதா பீடம் உருவான கதையை தெரிந்து கொண்டேன். தொடர்கிறேன்.

  ReplyDelete
 13. Very interesting...
  I am reading all parts at one stretch.

  ReplyDelete
 14. Very interesting.
  Afrid I miss some parts when I am out of home.
  viji

  ReplyDelete
 15. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 16. Erlier in DD tamizh they used to telecast dramas on tuesdays and I remember seeing a drama on this part.....

  ReplyDelete
 17. Mira said...
  //Earlier in DD tamizh they used to telecast dramas on tuesdays and I remember seeing a drama on this part.....//

  Yes. I do remember this.

  Mira,
  Thank you very much for your kind entry & valuable comments, please.
  Anbudan,
  Gopu

  ReplyDelete
 18. சந்நியாசியும் தாய்க்கு ஈமக்கடன் செய்யலாம் என்று அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
 19. // நாம் சொல்லி இவன் கேட்பானா?
  அவனுக்குத்தான் ’ஜே’ போட இன்று ஒரு பெரிய கும்பலே உள்ளதே!
  நமக்கென்ன வம்பு? என்னவோ செய்யட்டும்!! //

  அந்த நாளிலும் எதிர்க்கட்சி உண்டு போலும்.

  ஆனால் இறைவனின் அவதாரத்திற்கு முன் இவர்கள் எம்மாத்திரம்.

  ReplyDelete
 20. தாய்க்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. அதை நிறைவேற்றமுடியாமல் தடங்கல்களா? சந்நியாசியானாலும் தாய்க்குப் பிள்ளைதானே? கடமையையும் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றத்தான் வேண்டும்.

  ReplyDelete
 21. சிருங்கேரி ஆச்சாரியாள்தான் தாத்தா பாட்டி குடும்பத்துக்கு குரு. இன்று அது பற்றிய பதிவு படிக்கும்போது அதெல்லாம் நினைவில் வரது. ஆர்யாம்பாள் கடைசி நேரம் மகன் முகம் பாக்க கிடைத்ததே

  ReplyDelete
 22. ?????....... நீங்க கொடுத்த சலுக யூஸ் பண்ணும்படி ஆயிடிச்சி

  ReplyDelete
  Replies
  1. mruOctober 20, 2015 at 4:18 PM

   //?????....... நீங்க கொடுத்த சலுக யூஸ் பண்ணும்படி ஆயிடிச்சி//

   அதனால் பரவாயில்லை. தங்களுக்கு மட்டுமே என்னால் கொடுக்கப்பட்டுள்ள விசேஷ சலுகை இது. தாராளமாக நீங்க அவ்வப்போது யூஸ் பண்ணிக்கொள்ளுங்கோ. :)

   Delete
 23. சரஸவாணி வந்திருப்பவர் சாஷாத் பரமேசுவரனே என்று கண்டு கொண்டாள் அவருக்கு எதிராக எப்படி தீர்ப்பு சொல்லமுடியும்.

  ReplyDelete
 24. சினிமாவாகவே எடுக்கலாம் போல இருக்கு...செமயா இருக்கு..

  ReplyDelete
 25. தாய்மை ஒரு வரம்! தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தக்க தருணத்தில் தடங்கல்களைத் தாண்டி தன் கையாலேயே தாய்க்கு ஆற்றிய கடனை அறிய வைத்த ஆசிரியருக்கு நன்றி!

  ReplyDelete
 26. அருமையான பதிவு!

  ReplyDelete