About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, April 22, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-10]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-10]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-14
[பட்டுவும் கிட்டுவும் சங்கரனின் தாய் ஆர்யாம்பாளுடன்]


கிட்டு:


பட்டு, செய்தி கேட்டாயோ! 


நம் சங்கரனின் புகழ் இந்த நாடெங்கும் பரவிப்போய் உள்ளது.


பட்டு: 


அப்படியா! கிட்டு, அதை விபரமாச் சொல்லும் ஓய்.


கிட்டு:


சங்கரனைப் பிள்ளையாய்ப் பெற இந்தத் தாய் என்ன தவம் செய்தாளோ!


அந்த பகவானே சங்கரனாய் அவதாரம் செய்துள்ளார் போலத்தான் தெரிகிறது.


ஊர் ஊராய்ப்போய் பலவித அற்புதங்கள் செய்கிறான் நம் சங்கரன்.


ஊரே, உலகமே அவனைக் கொண்டாடுது.


பட்டு: 


பொறுமையா ஒவ்வொரு விஷயமாச் சொல்லுங்கோ!


அதைப்பற்றிக் கேட்டாலே நமக்கும் புண்ணியம் வந்து சேரும்.


கிட்டு:


குருவான ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் வேண்டுகோள்படி சங்கரன் நேராகக் காசிக்குப்போய், கங்கைக்கரையில் பல்வேறு சிஷ்யர்களோடு தங்கியிருக்கிறார்.


அதில் ’சனந்த்யாயா’ என்ற ஒரு சிஷ்யர்.


சங்கரன் மீது அலாதியான குரு பக்தி கொண்டவர்.


கங்கையின் அக்கரையில், சங்கரனின் வஸ்த்ரங்களை துவைத்து அலசிப் பிழிந்து, உலர்த்திக்கொண்டுள்ளார்.


“சீடர் சனந்த்யாயா” எங்கே?  உலர்ந்த என் வஸ்த்ரங்களுடன் உடனடியாக இங்கே வரச்சொல்லுங்கோ” சங்கரன் உத்தரவு இடுகிறார்.


அந்தச் சோம்பேறி சனந்த்யாயா, அக்கரையிலிருந்து இக்கரைக்கு வந்து, வஸ்த்ரங்களைக் கொடுத்து, இவர் அவற்றை அணிந்துகொள்ள வேண்டுமாம்; இது இன்று நடக்கும் காரியமா? என மீதி சீடர்கள் மனதுக்குள் எண்ணுகிறார்கள்.


இருப்பினும் குருவின் ஆக்ஞைப்படி 


“சனந்த்யாயா, உடனே நீ இங்கு புறப்பட்டு வா! நம் குருவுக்கு அவசரமாக வஸ்த்ரங்கள் தேவைப்படுகின்றன” 


எல்லோருமாக சேர்ந்து கத்துகிறார்கள்,


கையினால் ஜாடையும் காட்டுகிறார்கள்.    


இதைக்கேட்டதும் சனந்த்யாயா துணிகளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டு, கங்கை நீரின் மேல் கால் வைத்து நடந்தும் ஓடியும் தாவியும் வருகிறார். 

அவர் உடலிலோ வஸ்த்ரங்களிலோ கொஞ்சமும் தண்ணீர் படவில்லை.


அவர் கால் பதித்த இடங்களிலெல்லாம் மிகப்பெரிய தாமரைப்பூக்கள் பூத்து அவரைத் தண்ணீரில் மூழ்காமல் தாங்கிக்கொண்டிருந்தன.


அவரின் குரு பக்தியால் அவரால் சுலபமாக தண்ணீரில் மூழ்காமல், தண்ணீரின் மேலேயே நடந்து வர முடிந்தது.


சனந்த்யாயாவின் மகிமையையும், குரு பக்தியையும் அனைவரும் அறிந்து கொள்ளவே சங்கரன் செய்த திருவிளையாடல் தான் இது என்பது அனைவருக்கும் புரிந்தது.


சனந்த்யாயாவை, சங்கரரின் விருப்பப்படி அனைவரும் “பத்மபாதர்” என்று மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினார்களாம். 


சங்கரரும், ’பத்மபாதர்’ அவர்களைத் தன் பிரதான சிஷ்யர்களுள் ஒருவராக் ஏற்றுக்கொண்டாராம். 


பட்டு:


ஆஹா! இதைக் கேட்கவே காதுக்கு மிகவும் இனிமையாக உள்ளதே!


வேறு ஏதாவது விஷயங்கள் இருந்தால் இதுபோல தினமும் ஒன்றாகச் சொல்லு.


கிட்டு:


ஆஹா! பேஷா; 


”ஹர ஹர சங்கர! 
  ஜய ஜய சங்கர!!”


என்ற கோஷம் சங்கரன் செல்லும் எல்லா இடங்களிலும் ஜனங்களால் சொல்லப்பட்டு வருகிறது. 


நாமும் அதுபோல இப்போது சொல்லுவோமா?


[மூவரும் சேர்ந்து 

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!! 
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!! 
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!! 
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!! 

என்று கூறுகின்றனர்]ஓர் முக்கிய அறிவிப்பு

இதன் தொடர்ச்சி [ பகுதி-11, காட்சி-15 ] இன்று ஞாயிறு


இரவு 8 மணி சுமாருக்கு வெளியிடப்படும்.


அதில் மிகவும் சுவாரஸ்யமானதோர் விவாதம் உள்ளது.
காணத்தவறாதீர்கள்.

23 comments:

 1. விவாதம் என்ன என்பதை அறிய ஆவல்தான். காலடித்தடத்தில் தாமரை அற்புதமான படம்.

  ReplyDelete
 2. ஆவலுடன் உள்ளேன்

  ReplyDelete
 3. பத்மபாதர் பற்றி அழகாகச் சொன்னீர்கள்!

  ReplyDelete
 4. விடாமல் படித்து வருகிறேன். தெரிந்த கதையாயிருந்தாலும் சுவை குன்றாமல் அடுத்து என்ன எனும் ஆவலோடு காத்திருக்க வைக்கிறீர்கள்!! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 5. பத்மபாதர் பற்றி அழகாய்ச் சொல்லியாச்சு! அடுத்தது என்ன என்ற ஆவலுடன்....

  ReplyDelete
 6. அவர் கால் பதித்த இடங்களிலெல்லாம் மிகப்பெரிய தாமரைப்பூக்கள் பூத்து அவரைத் தண்ணீரில் மூழ்காமல் தாங்கிக்கொண்டிருந்தன.

  பத்ம பாதர் அருமையான குரு பக்திக்கு உதாரணம்..

  ReplyDelete
 7. ”ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!! ”ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!! ”ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!! ”ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!

  ReplyDelete
 8. குரு பக்தியை உணர்த்திய விதம் அருமை!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 9. Pranams to our JagatGuru.
  viji

  ReplyDelete
 10. குரு பக்தியை பற்றி தெரிந்து கொண்டோம். படங்களும் அருமை.

  ReplyDelete
 11. பத்மபாதரின் அருமைகளை படிக்க எப்படி விட்டுப்போச்சுன்னு தெரியல்லே. நினைவு படுத்தி அழைத்ததற்கு நன்றி சார். குருபக்திக்கு இணையே கிடையாதுன்னு அழகா சொல்லி இருக்கீங்க. நன்றி

  ReplyDelete
 12. சனந்த்யாயாவின் மகிமையையும், குரு பக்தியையும் அனைவரும் அறிந்து கொள்ளவே சங்கரன் செய்த திருவிளையாடல் தான் இது என்பது அனைவருக்கும் புரிந்தது.


  சனந்த்யாயாவை, சங்கரரின் விருப்பப்படி அனைவரும் “பத்மபாதர்” என்று மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினார்களாம். //

  குரு பக்திக்கு சனந்த்யாயாவை தவிர வேறு யார்.

  பதமபாதர் திருவடி வாழ்க.
  சங்கரரின் திருவடி வாழ்க.
  உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. ”ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!
  ”ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!
  ”ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!
  ”ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!

  Interesting!

  ReplyDelete
 14. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 15. குருவின் சக்தி சிஷ்யனின் மூலம் வெளிப்படுகிறது.

  ReplyDelete
 16. வேறு ஏதாவது விஷயங்கள் இருந்தால் இதுபோல தினமும் ஒன்றாகச் சொல்லு.//

  நாங்களும் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 17. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். இந்தத்தாயும் தன் மகனின் பெருமைகளை பிறர் வாயால் சொல்லக்கேட்டு உளம்பூரித்துப் போகிறார்.

  ReplyDelete
 18. ஆஹா குருவுக்கு அற்புதமான சிஷ்யர் கிடைத்து விட்டார்

  ReplyDelete
 19. அந்த சாமியாரு எத்தர தான் நல்ல வெசயங்க பண்ணினா காட்டியும் அம்மிய மனசு கஸ்டப்பட வச்சிடிச்சில்ல

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். எந்தத்தாயும் தன் மகன் கல்யாணம் செய்துகொண்டு பிறரைப்போல வாழாமல், சாமியாராகச் செல்வதை மனசார விரும்பவே மாட்டாள். இதனால் அவள் மனசு மிகவும் கஷ்டப்படும்தான். இதில் சந்தேகமே இல்லை.

   Delete
 20. சனந்த்யாயின் பக்தியை மற்றவர்கள் புரிந்து கொள்ள இப்படி ஒரு திருவிளையாடலா பத்ம பாதர் பெயர் பொருத்தம் அழகு

  ReplyDelete
 21. அவர் கால் பதித்த இடங்களிலெல்லாம் மிகப்பெரிய தாமரைப்பூக்கள் பூத்து அவரைத் தண்ணீரில் மூழ்காமல் தாங்கிக்கொண்டிருந்தன.// குரு பக்தியால் ஏற்பட்ட ஆச்சரியங்கள்???

  ReplyDelete