About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, April 29, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-17]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-22
[சங்கரர், தன் நான்கு பிரதான சிஷ்யர்களுடன் அமர்ந்திருக்க கூடவே வேறு சிலரும் உள்ளனர். சங்கரர் ஏதோ சொற்பொழிவு ஆற்றத் தயாராக உள்ளது போல அனைவருக்கும் தோன்றுகிறது.]
ஸ்ரீ பத்ரிநாத் ஆலயம்

சங்கரர்: 


பத்ரிநாராயணருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் முடித்து விட்டோம்,  இப்போது தான் மனம் அமைதியாக உள்ளது. 


இந்த த்யான மண்டபத்தில் உங்களுக்கெல்லாம் ஏதாவது சொல்லணும்னு தோன்றுகிறது. 


நீங்கள் எல்லோரும் தொடர்ந்து அத்வைத சித்தாந்தங்களை, மிகவும் எளிய முறையில், மக்களுக்குப் புரியுமாறு எடுத்துக்கூற வேண்டும்.
ஒருவர்: [சங்கரரிடம் மிகவும் பெளவ்யமாக] 


தங்கள் திருவாயால் எங்களுக்கு எடுத்துக்கூறினால், நாங்கள் அதைப் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்ல செளகர்யமாக இருக்கும், என்று பெரியவாளிடம் விக்ஞாபனம் செய்து கொள்கிறேன். 


நான் ஏதாவது தப்பாப் பேசியிருந்தால் தயவுசெய்து பெரியவா என்னை க்ஷமித்துக்கொள்ளணும்.
சங்கரர்:


[1]


கடவுள் தான் பரமாத்மா.


பரமாத்மா ஒரு மிகப்பெரிய ஸமுத்ரம் போன்றவர். 


ஜீவாத்மா என்ற நாம் ஸமுத்ர நீரில், காற்றடிக்கும் போது ஏற்படும் நீர்க்குமிழிகள் போன்றவர்கள்.


பிடிமானம் ஏதுமின்றி தத்தளிப்பவர்கள்.


ஸமுத்ரம் வேறு, அந்த ஸமுத்ரத்தில் உள்ள நீர்க்குமிழிகள் வேறு அல்ல.


இரண்டும் ஒன்று தான்.


ஸமுத்ரமும் தண்ணீர் தான்; நீர்க்குமிழிகளும் ஸமுத்ரத் தண்ணீர் தான்.  


ஸமுத்ரத் தண்ணீராலேயே உருவாக்கப் பட்டவைகள் தான் நீர் குமிழிகள்.


அது வேறு இது வேறு அல்ல.


அது போலத்தான், அடிக்கும் காற்று என்பது, நாம் ஏற்கனவே செய்த அல்லது செய்து கொண்டிருக்கிற பாவ புண்ணியங்கள் போல என்று சொல்லலாம். 


காற்று நல்லதாக, இதமானதாக, விரும்பக்கூடியதாக, தென்றலாக வீசலாம். 


அதுவே மிகக்கொடூரமாக, சூறாவளியாக, அழிக்கும் ஆற்றல் கொண்டதாக, புயலாகவும் வீசலாம்.


கெட்ட காற்று வீசினால் கடல் அலைகளில் மாட்டித் தடுமாறும், நீர்குமிழி போல நாமும் தத்தளிக்கிறோம்.


மனம் சஞ்சலப்படுகிறது.


மனதை ஒருநிலைப் படுத்தினால் பக்தி ஏற்படுகிறது.


பக்தி ஏற்பட்டால் ஞானம் ஏற்படுகிறது.


ஞானம் ஏற்பட்டு விட்டால் ஜீவாத்மாவான நம்மால் பரமாத்மாவை அடைய முடிகிறது.


கடல் அலையில் தத்தளிக்கும் நீர்குமிழி மேல், நல்லதொரு அமைதியான காற்று வீசும்போது, நீர்க்குமிழி உடைந்து ஸமுத்ர நீருடன் கலந்து விடுகிறது. 


அதுபோலவே ஞானம் ஏற்பட்டு விட்டால் அக்ஞானம் ஒழிந்துபோய், நாமும் தெய்வமும் ஒன்று என்ற ஒரு உன்னத சம நிலையை எட்ட முடிகிறது.


இதுவே நாம் சொல்லும் அத்வைதக் கருத்தாகும்.


[2]


முக்காலமும் உணர்ந்த ஞானிகள் கூறுவதைக் கேட்டு நடப்பது தான் மிகவும் சுலபமான வழி.


ஆற்று நீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. 


தாகத்தால் ஒரு சின்னக்குழந்தை நாக்கு வரண்டு போய்த் தவிக்கிறது.


அதனால் ஆற்றில் இறங்கி நீர் அருந்த முடியுமா?


ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை மொண்டுக் கொடுத்தால், குழந்தை சுலபமாகக் குடித்து தாக ஸாந்தி செய்துகொள்ள முடியும் அல்லவா?


நீரை மொண்டு குழந்தைக்குக் குடிக்கக் கொடுப்பது போலத்தான், நமக்கு ஞானிகள் காட்டிடும், வகுத்துத்தரும் வழிமுறைகள் யாவும் சுலபமானவை.


நாம் செய்யவேண்டியது, குருவிடம் முழுவதுமாக நம்பிக்கை வைத்து சரணாகதி அடைவது மட்டுமே; மற்றவைகள் அவர்பாடு என்று இருந்து விட வேண்டும்.


அவர் நம்மை இந்தப்பிறவிப் பெருங்கடலிலிருந்து காப்பாற்றி, பகவான் திருவடிகளில், கரை சேர்த்து விடுவார்.


கர்மானுஷ்டானங்கள் செய்வது நம் மன அழுக்கை நீக்க உதவும்.


பக்திசெய்தால் மனம் ஒரு நிலைப்படும்.


மனம் ஒருநிலைப்படுதலே, குருவிடம் சென்று ஞானம் பெறுவதற்கான முதல்நிலை.


[3]


ஒரு அறையில் நல்ல இருட்டாக உள்ளது.


ஒரு ஓரமாக ஒரு பூமாலை கிடக்கிறது.


கதவைத் திறந்துகொண்டு ஒருவர் உள்ளே வருகிறார்.


இருண்ட அந்த அறையில் நுழைந்தவருக்கு ஏதோ சுருண்டு பளபளப்பாக உள்ள அந்த வஸ்து பாம்பு என்று தோன்றுகிறது.


உடனே அவருக்கு மிகுந்த பயம் ஏற்படுகிறது.


நேரம் ஆக ஆக அந்த பயம் அதிகரிக்கிறது.


அந்த வஸ்து பூமாலை என்பது தான் சத்தியம்.


அந்த சத்தியம் தான் ப்ரும்மம்.


ப்ரும்மமாகிய சத்தியமாகிய மாலை என்பதை அவர் உணராமல் தடுப்பது தான் மாயை என்ற அறியாமை.


இந்த உலகமே மாயை தான்; அறியாமை தான்; பாம்பு தான்; பயம் தான்.


அறியாமையை அகற்றி எல்லோரும் ப்ரும்மத்தை உணர வேண்டும்.


அதற்கு ஞானம் என்ற ஒளி வேண்டும்.


ஞானம் என்ற ஒளியைப்பெற ஞானிகளின் வழிகாட்டுதல் வேண்டும்.


[4]


பெரிய பாறாங்கல்லாக இருந்த ஒரு வஸ்துவை சிற்பி ஒருவன் செதுக்குகிறான்,      


அதை தெய்வத்தின் தோற்றத்துடன் அழகிய சிலையாக வடிக்கிறான். 


அந்தச்சிலை கோயிலில் வைத்து தெய்வமாக வணங்கப்படுகிறது.


சிலையாக உருவாவதற்கு முன்பு அது கல்லாக இருந்தது.


சிலையாக உருவான பின்பும் அது கல்லே தான்.


வெறும் கல்லாக இருந்த அது இப்போது கற்சிலை என பெயர் மாற்றம் அடைந்துள்ளது.


பெரிய அந்தக்கல்லிலிருந்து தேவையில்லாத பாகங்கள் மட்டும் சிற்பியால் நீக்கப்பட்டுள்ளன அல்லது செதுக்கி எறியப்பட்டுள்ளன.


தேவையற்றவைகள் நீக்கப்பட்டு விட்டதால், அதே கல்லிலிருந்து அழகிய சிலை தோன்றி, அனைவராலும் வழிபட்டு போற்றக்கூடிய நிலை அந்தக்கல்லுக்கு ஏற்பட்டுள்ளது.


அதுபோலவே நம்மிடம் உள்ள 


தேவையற்ற எண்ணங்களையும், 
தேவையற்ற பேச்சுக்களையும், 
தேவையற்ற செயல்களையும், 
தேவையற்ற ஆணவத்தையும், 
தேவையற்ற ஆடம்பரங்களையும், 
தேவையற்ற சுயநலத்தையும் 


நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்.


இதுவே ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டும் ஒன்று என்ற அத்வைத தத்துவமாகும்.


[சங்கரர் தனது உரையை முடித்துக்கொள்கிறார். அனைவரும் எழுந்து சங்கரரை வணங்கி நமஸ்கரிக்கின்றனர்] .


ooooooooooOoooooooooo


இந்த தொடர் நாடகத்தின் இறுதிப்பகுதி 
{ பகுதி-18 [காட்சிகள் 23+24] }
நாளை 30.04.2012 திங்கட்கிழமை
  பகல் 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்.   
குருவருளாலும்,

திருவருளாலும்,
 
பின்னூட்டம் என்ற உற்சாக பானத்தை 
அடிக்கடி அள்ளி அள்ளி தந்துள்ள 
உங்கள் அனைவரின் அருளாலும்

இது என் 300 ஆவது 
பதிவாக அமைந்துள்ளது.

மேலும் இது, இந்த 2012 ஆம் ஆண்டின் 
100 ஆவது பதிவுமாகும்.தங்கள் அனைவரின்
ஒத்துழைப்புக்கும்
அடியேனின் மனமார்ந்த
இனிய நன்றிகள்!
நாளை மீண்டும் சந்திப்போம்.


என்றும் அன்புடன் தங்கள்
vgk50 comments:

 1. குழந்தைக்குச் சொல்வதை போல் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது தங்கள் எழுதும் நடையும். அதற்காகவே மீண்டும் ஒரு முறை படித்தேன். நன்றி ஐயா

  ReplyDelete
 2. அருமையாகவும் தெளிவாகவும் உள்ள தங்கள் எழுத்தும் நடையும். அதற்காகவே மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டுதல் உண்டாகிரது.Your presentation with proper and colorful fonts is an additional attraction அன்புடன் எம்.ஜே.ராமன்.

  ReplyDelete
 3. அருமையான எளிமையான விளக்கம்
  300 வது இததனை சிறப்பான பதிவாக அமையவும்
  கொடுப்பினை வேண்டும் மிக்க மகிழ்ச்சி
  தொடர வழ்த்துக்கள்

  ReplyDelete
 4. 300- வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  நாம் செய்யவேண்டியது, குருவிடம் முழுவதுமாக நம்பிக்கை வைத்து சரணாகதி அடைவது மட்டுமே; மற்றவைகள் அவர்பாடு என்று இருந்து விட வேண்டும்.
  எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க சரணாகதி தத்துவத்தை

  ReplyDelete
 5. VGK அவர்களுக்கு வணக்கம்! ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டும் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை மிக எளிமையாக விளக்கிச் சொன்னதற்கு நன்றி! சில தெளிவுறுத்தலுக்காக இந்த பதிவை மட்டும் திரும்ப திரும்ப படிக்கலாம் என்று இருக்கிறேன்.

  தங்களின் 300 – ஆவது பதிவாகவும், இந்த ஆண்டின் தங்களது 100 – ஆவது பதிவாகவும் எழுதிய தங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. நல்லதொரு பகிர்வு. சொன்ன கருத்துகள் அனைத்துமே எளிமையாக, நெஞ்சில் நிறுத்திக் கொள்ளும் படியாக இருந்தது.

  300வது பகிர்வுக்கு வாழ்த்துகள் சார். மேலும் இது போல் நல்ல பகிர்வுகள் தர வேண்டும்.

  ReplyDelete
 7. தொடர் பதிவுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 8. நான்கு குறிப்புகளாகக் கொடுத்துள்ள குறிப்புகள் எளிமையாகவும் அழகாகவும் இருக்கின்றன,
  மொத்தத்தில் முன்னூறாவது பதிவுக்கும், இந்த வருடத்தின் நூறாவது பதிவுக்கும் அதுவும் இந்த இரண்டு சிறப்புகளும் இந்தப் பதிவுக்காய் மைந்து விட்ட சிறப்புக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. முன்னூறாவது பதிவுக்கு ,வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 10. //அதுபோலவே நம்மிடம் உள்ள


  தேவையற்ற எண்ணங்களையும்,
  தேவையற்ற பேச்சுக்களையும்,
  தேவையற்ற செயல்களையும்,
  தேவையற்ற ஆணவத்தையும்,
  தேவையற்ற ஆடம்பரங்களையும்,
  தேவையற்ற சுயநலத்தையும்


  நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்//

  எத்தனை எத்தனை வெட்டி எறியப்படவேண்டியவை ஒவ்வொருவரிடமும்....

  நல்ல கருத்துகள் கொண்ட பகிர்வு.

  தங்களது 300-வது பதிவு, இந்த வருடத்தின் 100-ஆம் பதிவு... மிக்க சந்தோஷம். வாழ்த்துகள். மேலும் பல நல்ல பதிவுகள் தொடர்ந்து தர வேண்டுகிறேன்.

  ReplyDelete
 11. எளிதில் அடைந்துவிட முடியாததாகிய பிரம்மத்தை அடைய குருவருள் தேவைதான் ஐயா. இல்லையேல் சாமானியர்களாகிய நம்மால் அவ்வளவு சுலபமாக ஜீவாத்மாவை அடைந்துவிட முடியாதுதான். மிகவும் எளிமையாகவும், அருமையாகவும் பதிவிட்டிருக்கிறீர்கள். வெகு நாட்களுக்குப் பிறகு தங்களது எழுத்துக்களை இப்போதுதான் படிக்க முடிந்தது. தங்களின் ஆன்மீகப் பணி அற்புதமாகத் தொடர்வது குறித்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

  அன்புடன் நுண்மதி.

  ReplyDelete
 12. தேவையற்ற எண்ணங்களையும்,
  தேவையற்ற பேச்சுக்களையும்,
  தேவையற்ற செயல்களையும்,
  தேவையற்ற ஆணவத்தையும்,
  தேவையற்ற ஆடம்பரங்களையும்,
  தேவையற்ற சுயநலத்தையும்


  நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்.


  இதுவே ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டும் ஒன்று என்ற அத்வைத தத்துவமாகும்.//

  அழகாய் அத்வைத தத்துவத்தை விளக்கி விட்டீர்கள்.

  உங்கள் 300வது பதிவுக்கும், இந்தவருட 100வது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.

  குருவருளால் ஆன்மீகப் பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. தங்கள் 300வது பதிவுக்கும்,
  இந்தவருட 100வது பதிவுக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. தேவையற்றவைகள் நீக்கப்பட்டு விட்டதால், அதே கல்லிலிருந்து அழகிய சிலை தோன்றி, அனைவராலும் வழிபட்டு போற்றக்கூடிய நிலை அந்தக்கல்லுக்கு ஏற்பட்டுள்ளது.


  பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஒளிரும் வரிகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 15. கடல் அலையில் தத்தளிக்கும் நீர்குமிழி மேல், நல்லதொரு அமைதியான காற்று வீசும்போது, நீர்க்குமிழி உடைந்து ஸமுத்ர நீருடன் கலந்து விடுகிறது

  அந்த அனுகூலமான காற்றாக குருவாயூரப்பனே அருள்புரிந்து காக்கட்டும்..

  ReplyDelete
 16. இதுவே ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டும் ஒன்று என்ற அத்வைத தத்துவமாகும்.

  அத்வைதம் சித்திக்க பரம்பொருளே
  அவதாரமாக வந்து அளித்த அற்புதகருத்துகளின் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 17. நீரை மொண்டு குழந்தைக்குக் குடிக்கக் கொடுப்பது போலத்தான், நமக்கு ஞானிகள் காட்டிடும், வகுத்துத்தரும் வழிமுறைகள் யாவும் சுலபமானவை.


  மிக எளிமையாக மனம் உணர்ந்து தெளியும் வண்ணம் அளித்த அருமையான கருத்துகள் ..

  ReplyDelete
 18. தேவையற்ற எண்ணங்களையும்,
  தேவையற்ற பேச்சுக்களையும்,
  தேவையற்ற செயல்களையும்,
  தேவையற்ற ஆணவத்தையும்,
  தேவையற்ற ஆடம்பரங்களையும்,
  தேவையற்ற சுயநலத்தையும்


  நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்.


  ஆழ்ந்து பொருள் தரும்
  அவசியமான வரிகள்...

  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. நன்றிகள்..

  ReplyDelete
 19. குருவருளாலும்,

  திருவருளாலும், நிறைவுற்ற அற்புத பகிர்வு..

  ReplyDelete
 20. 300th post!!! WOW!!! Congratulations!

  ReplyDelete
 21. மனதை ஒருநிலைப் படுத்தினால் பக்தி ஏற்படுகிறது.


  பக்தி ஏற்பட்டால் ஞானம் ஏற்படுகிறது.


  ஞானம் ஏற்பட்டு விட்டால் ஜீவாத்மாவான நம்மால் பரமாத்மாவை அடைய முடிகிறது./
  -அருமையான் பதிவு தங்கலின் 300/100 ஆக அமைந்ததும் அற்புதம்தான்!
  தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
  தொடரட்டும் உங்கள் அற்புதமான படைப்புகள்
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 22. சார் உங்களோட முன்னூறாவது பதிவிற்கு நல்வாழ்த்துக்கள்.குறுகிய காலத்தில் இத்தனை பதிவுகள் எழுதிக் குவித்தமைக்கு பாராட்டுக்கள்.
  ஒவ்வொன்றும் மிகப் பெரிய பதிவு.கடின உழைப்பு உங்களோட ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படுவதை கண்டு ஆச்சரியப் படுவதுண்டு.உங்கள் எழுத்துலக பயணத்தில் தொடர்ந்து வெற்றிகள் கிட்டட்டும்.

  ReplyDelete
 23. தங்கள் 300 ஆவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
 24. Simple words, great thoughts! Thank you.

  ReplyDelete
 25. Congragulations Sir, for your 300th post.
  Each and everyone is like muthukkal.
  I enjoyed well with this post.
  Every bit really. So not writing about word by word.
  I prey God to give you energy to continue.
  viji

  ReplyDelete
 26. 300வது பதிவுக்கும் 2012ம் ஆண்டின் செஞ்சுரி பதிவுக்கும் வாழ்த்துக்கள். எளிமையான வரிகளில் படைத்திருப்பது அற்புதம்.

  ReplyDelete
 27. தங்கள் 300வது பதிவுக்கும், இந்தவருட 100வது பதிவுக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள். இந்த ஸ்பீடில் போனால் உங்களை யாரும் பிடிக்க முடியாது ஐயா..... எண்ணிக்கையில் மட்டுமல்ல 'தரத்திலும்" உங்கள் கடின உழைப்பிலும் உங்கள் பதிவுகள் மிகவும் "ஜொலிக்கின்றன."

  உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. தங்களின் 300 வது பதிவிற்கு வாழ்த்துகள் சார்.மேலும் பல நூறு பதிவுகள் பதிவிட வாழ்த்துகள்.தங்கள் ஆசிர்வாதங்களும் எனக்கு என்றும் கிடைத்திட வேண்டும்.

  ReplyDelete
 29. 300 பதிவுகளைத் தந்திருக்கின்றீர்கள் உங்கள் அயராத உழைப்புக்கும் ஆர்வமிக்க எழுத்துப் பணிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் . நல்ல விடயங்கள் தந்திருக்கின்றீர்கள். இந்து கலாச்சாரத்தில் கற்றவை இன்று ஞாபகத்திற்கு கொண்டுவரக் கூடியதாக இருக்கின்றது . மிக்க நன்றி .

  ReplyDelete
 30. 300 வது பதிவுக்கு ,வாழ்த்துக்கள் சார்.
  கடல் அலையில் தத்தளிக்கும் நீர்குமிழி மேல், நல்லதொரு அமைதியான காற்று வீசும்போது, நீர்க்குமிழி உடைந்து ஸமுத்ர நீருடன் கலந்து விடுகிறது.
  அதுபோலவே ஞானம் ஏற்பட்டு விட்டால் அக்ஞானம் ஒழிந்துபோய், நாமும் தெய்வமும் ஒன்று என்ற ஒரு உன்னத சம நிலையை எட்ட முடிகிறது.
  நல்ல கருத்துகள் கொண்ட பகிர்வு.

  ReplyDelete
 31. //ஜீவாத்மா என்ற நாம் ஸமுத்ர நீரில், காற்றடிக்கும் போது ஏற்படும் நீர்க்குமிழிகள் போன்றவர்கள்.
  //

  migach chari.. Its easier to grasp in words, but tough to practice...hmmm

  ReplyDelete
 32. தேவையற்ற எண்ணங்களையும்,
  தேவையற்ற பேச்சுக்களையும்,
  தேவையற்ற செயல்களையும்,
  தேவையற்ற ஆணவத்தையும்,
  தேவையற்ற ஆடம்பரங்களையும்,
  தேவையற்ற சுயநலத்தையும்


  நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்.

  Very true...

  ReplyDelete
 33. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 34. அன்பின் வை.கோ

  அருமையான பதிவு. முன்னூறாவது பதிவும் கூட. நல்லதொரு பணியினை நன்றாகவே செய்து - நாடகத்திற்கு சரியாக இரண்டு மணி நேரத்தில் நடத்துவதற்கு திட்டமும் வகுத்து - அகில இந்திய அளவில் மூன்றாம் பரிசும்
  பெற்றது பாராட்டுகுரிய அரிய செயல் . மேன் மேலும் பல வெற்றிகளைப் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 35. cheena (சீனா) said...
  //அன்பின் வை.கோ

  அருமையான பதிவு. முன்னூறாவது பதிவும் கூட. நல்லதொரு பணியினை நன்றாகவே செய்து - நாடகத்திற்கு சரியாக இரண்டு மணி நேரத்தில் நடத்துவதற்கு திட்டமும் வகுத்து - அகில இந்திய அளவில் மூன்றாம் பரிசும்
  பெற்றது பாராட்டுகுரிய அரிய செயல் . மேன் மேலும் பல வெற்றிகளைப் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு,

  வணக்கம்.

  தங்களின் அன்பான வருகையும், அழகான நல்வாழ்த்துகளும் எனக்கு மிகவும் உற்சாகம் தருவதாக உள்ளது.

  மிகவும் சந்தோஷமும், நன்றிகளும்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 36. நல்ல பதிவு பாராட்டுக்கள்

  ஆதி சங்கரர் வெளியிட்ட அத்வைத கருத்துக்கள் ஒருவருக்கும் புரியவில்லை

  அதனால் விஷிஸ்தாத்வைதம் என்றும் துவைதம் என்றும் அது விரிந்தது.

  அத்வைத தத்துவத்தை போதித்த சங்கரரே முடிவில்
  தன்னுடைய தத்துவம் படித்த பண்டிதர்களுக்கே புரியவில்லை எங்கே பாமர ஜனங்களுக்கு புரியபோகிறது என்று முடிவு செய்து. பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று எல்லோரையும் சொல்ல சொல்லிவிட்டார்.

  இன்று கோவிந்த நாம் சங்கீர்த்தனம் ஒன்றுதான் படித்தவனுக்கும் பாமரனுக்கும்
  வழிகாட்டிகொண்டிருக்கிறது. என்றால் அது மிகையாது

  ReplyDelete
  Replies
  1. Pattabi RamanMay 7, 2013 at 8:12 AM

   வாங்கோ ஸார், வணக்கம். நமஸ்காரம்.

   //நல்ல பதிவு பாராட்டுக்கள் //

   சந்தோஷம்.

   //ஆதி சங்கரர் வெளியிட்ட அத்வைத கருத்துக்கள் ஒருவருக்கும் புரியவில்லை. அதனால் விஷிஸ்தாத்வைதம் என்றும் துவைதம் என்றும் அது விரிந்தது.//

   அடடா !

   //அத்வைத தத்துவத்தை போதித்த சங்கரரே முடிவில் தன்னுடைய தத்துவம் படித்த பண்டிதர்களுக்கே புரியவில்லை எங்கே பாமர ஜனங்களுக்கு புரியபோகிறது என்று முடிவு செய்து. பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று எல்லோரையும் சொல்ல சொல்லிவிட்டார். //

   இதைச் சொல்வது எல்லோருக்கும் மிகவும் சுலபமானது தான்.

   //இன்று கோவிந்த நாம் சங்கீர்த்தனம் ஒன்றுதான் படித்தவனுக்கும் பாமரனுக்கும் வழிகாட்டிகொண்டிருக்கிறது. என்றால் அது மிகையாது //

   அச்சா, பஹூத் அச்சா !

   ”பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே !”

   தங்களின் அன்பான வருகைக்கும், தெளிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸார்.

   Delete
 37. அத்வைத சித்தாந்தத்தை மிக அழகாகத் தெளிவான வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லியது பாராட்டத் தகுந்தது.

  ReplyDelete
 38. நீரை மொண்டு குழந்தைக்குக் குடிக்கக் கொடுப்பது போலத்தான், நமக்கு ஞானிகள் காட்டிடும், வகுத்துத்தரும் வழிமுறைகள் யாவும் சுலபமானவை.//

  பச்சை குழந்தைக்கு சொல்வது போல் சொல்லி இருக்கிறார்.

  //அதுபோலவே நம்மிடம் உள்ள


  தேவையற்ற எண்ணங்களையும்,
  தேவையற்ற பேச்சுக்களையும்,
  தேவையற்ற செயல்களையும்,
  தேவையற்ற ஆணவத்தையும்,
  தேவையற்ற ஆடம்பரங்களையும்,
  தேவையற்ற சுயநலத்தையும்


  நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்.//

  SO SIMPLE.

  ReplyDelete
 39. எவ்வளவு சிறப்பான தெளிவான தீர்க்கமான கருத்துகள்.

  ReplyDelete
 40. பூமாலய பாத்தா பாம்புனு பயந்தாங்க. இந்த வெசயம் ழவேர இன்னாமோ சொல்லுதோ

  ReplyDelete
  Replies
  1. :) பாம்பைப் பூமாலைன்னு நினைச்சு யாராவது பக்கத்துலே போய் அதைத்தொட்டு அது அவர்களைக் கடிக்காமல் இருக்கணுமேன்னும் கவலையாக்கீது என்கிறீர்களா ? :)

   Delete
 41. கடலும் தண்ணீரால் நிறம்பியதுதான் நீர்க்குமிழியும் தண்ணீரால் நிறம்பியதுதான் பிரம்மத்தை அடைய பலவித சோதனைகளை தாண்டிதான்வரணும் பூமாலையை பாம்பாக எண்ணும் மாயை கண்ணை மறைக்கும்

  ReplyDelete
 42. அத்வைதத் தத்துவத்தையே எளிமையாகச் சொல்லியது சிறப்பு. நன்றி.

  ReplyDelete
 43. நான்கு செய்திகள். அத்வைதத்தையும், குருவை அடியொற்றிச் செல்லும் அவசியத்தையும், அப்படிச் செல்ல ஞானம் ஏற்படவேண்டும் என்பதையும், அதற்கு முதல் நிலை 'பக்தி மார்க்கம்' என்பதையும் தெளிவாக உரைக்கிறது.

  'உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்' என்பதை நாலாவது செய்தி சொல்கிறது. நாம் வேறு பரமாத்மா வேறு அல்ல. நம்மில் குணக்குறையாக உள்ள கல் செதில்களை நீக்கினால், நாம் உயர் நிலை எய்தி, நாம் பரமாத்மா நிலைக்கு உயர்ந்து நாமும் பரமாத்மாவும் வேறு வேறு அல்ல என்று உணர்ந்துகொள்வோம் என்ற செய்தி இனிமை.

  பௌத்த ஆலயத்தில் இருந்த புத்தரை, ஆதிசங்கரர் நாராயணராக ஸ்தாபித்தார் என்று படித்திருக்கிறேன். அதனால்தான் எங்கும் இல்லாத தன்மையாய் பத்மத்தில் அமர்ந்த கோலத்தில் நாராயணர் சேவை தருகிறார் என்று படித்திருக்கிறேன். இந்தக் கோவில் ஆதியில் இன்னும் உயரமான சிகரத்தில் இருந்தது என்றும், பக்தர்கள் வருவதற்கு எளிதாக, இப்போது உள்ள இடத்தில் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாம்.

  ReplyDelete
 44. நெல்லைத் தமிழன் November 20, 2017 at 11:35 AM

  //நான்கு செய்திகள். ........................ நிர்மாணிக்கப்பட்டதாம்.//

  வாங்கோ ஸ்வாமீ. வணக்கம். தங்களின் அன்பு வருகைக்கும், சிரத்தையுடன் கூடிய கூடுதல் தகவல்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  ReplyDelete