About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, April 19, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-5]ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-5]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-7


[தெருவோரம் பெஞ்சில் அரட்டை அடித்துக்கொண்டு இருவர். சங்கரன் பிக்ஷை பாத்திரத்துடன் வருதல்]


ஒருவர்:


இந்த அம்பியைப்பார்த்தாயோ! 


பளிச்சுனு தேஜஸுடன் இருக்கான் பாரு. 


புதுசா குருகுலத்தில் சேர்ந்திருப்பான் போலிருக்கு. 


பிக்ஷை வாங்கப் புறப்பட்டிருக்கிறான். 


பாவம் ... நேற்று ஏகாதஸி. குரு அவனை முழுப்பட்டினி போட்டிருப்பார். 


இன்று துவாதஸி என்பதால் காலையிலேயே பிக்ஷைக்கு அனுப்பியிருக்கிறார். 


பாவம் .... யார் பெற்ற குழந்தையோ?


மற்றவர்:


போயும் போயும் அஷ்ட தரித்திரம் பிடித்த அந்த அம்மா வீட்டுக்கு பிக்ஷை எடுக்கப்போகிறான் பாரு. 


அந்த வீட்டில் அவனுக்கு என்ன கிடைக்கும்?  


எப்போதும் அடுப்பில் பூனை தூங்கும் வீடு அது. 


அவர்களே சாப்பாட்டுக்கு லாட்டரி அடிப்பவர்கள். 


என்ன நடக்கப்போகுதுன்னு வேடிக்கை பார்ப்போம்.


சங்கரன்: 


பவதி பிக்ஷாந்தேஹி .... 


பவதி பிக்ஷாந்தேஹி ....


[வீட்டுப்பெண்மணி ஏழ்மையின் உருவமாய் வெளியே வருகிறாள்.  சங்கரனைப் பார்க்கிறாள்]


{ அவளின் மனம் பேசுவதாக ஓர் பின்னனிக் குரல்}


”அடடா, இன்று துவாதஸி புண்ணிய காலம். நல்ல பிரும்ம தேஜஸுடன் ஒரு பிரும்மச்சாரி குழந்தை நம்மிடம் பிக்ஷை கேட்டு வந்துள்ளது. 


நம் வீட்டிலோ ஒரு பிடி அரிசி கூட இல்லையே. நான் என்ன செய்வேன்? 


’இல்லை’ என்று எப்படி என் வாயால் கூறுவேன்? 


தெய்வமே இது என்ன சோதனை?


[மீண்டும் அவள் கையைப்பிசைந்து கொண்டு வீட்டினுள் செல்லுதல்]


{ அவள் பேசுவது போல பின்னனிக்குரல் மீண்டும் பேசுகிறது}


”ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டும் தான் இப்போது வீட்டில் உள்ளது. 


ஒன்றுமே இல்லை என்று சொல்வதற்கு பதில் இன்று நம் வீட்டில் இருக்கும் ஒரே ஒரு நெல்லிக்கனியையாவது, கொடுப்பதே மேல்! “


[மிகுந்த தயக்கத்துடன் கூசிக்குறுகி வெளியே வந்து, தான் உடுத்தியுள்ள அழுக்குப் புடவைத் தலைப்பால் அந்த நெல்லிக்கனியைத் துடைத்து விட்டு, சுத்தப்படுத்தி விட்டு, சங்கரனின் பிக்ஷைப்பாத்திரத்தில் அதைப் போடுதல். பிறகு மிகுந்த வெட்கத்துடன் அவள் வீட்டினுள் செல்லுதல்] {சங்கரன் நினைப்பதுபோல ஓர் பின்னனிக்குரல்}


ஆஹா! இந்த அம்மாவுக்கு இவ்வளவு வறுமை இருந்தும், ”இல்லை” என்ற சொல்லைச் சொல்ல மனஸு வராமல், ஒரு மிகச்சிறிய நெல்லிக்கனியே ஆனாலும், தன்னிடம் இருந்ததை அப்படியே முழுவதுமாக தானம் செய்து விட்டார்களே! 


இதுவல்லவோ மிகச்சிறந்த தானம்!!


இனியும் இவர்களை வறுமையில் வாடவிடக்கூடாது.


சங்கரன் கண்களை மூடி ஸ்ரீ லக்ஷ்மி தேவியைப் பிரார்த்திக்கிறார்.


லக்ஷ்மி தேவியே! இந்த ஏழைத்தாய்க்கு எல்லாவித செல்வங்களும் அளிப்பாயாக!! 


என்று சொல்லி கனகதாரா ஸ்லோகம் சொல்லுதல்.


[இந்த இடத்தில் சங்கரன் பக்தியுடன் கண்மூடி வாய் அசைக்க, பின்னனி இசையில் பாடலைப் பாடச்செய்யலாம்]


அங்கம் ஹரே: புளகபூஷ்ண மாச்ரயந்தீ
         ப்ருங்காங்னேவ முகுளா பரணம் தமாலம்   
அங்கீக்ருதாகில விபூதி ரபாங்க லீலா
         மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: [ 1 ]


.....................  .....................  ...................


ஸ்துவன்தியே ஸ்துதி பிரமீபிரந் வஹம்
     த்ரயீமயீம் த்ரிபுவனமாதரம் ரமாம்
குணாதிகா குருபரபாக்ய பாகின:
    பரந்திரத புவி புதாபாவி தாசயா:                          [ 21 ]  
[கனகதாரா ஸ்தோத்ர பாடல் முடிந்ததும் தங்கநிற காசுகளாக அந்த வீட்டின் வாசலில் மழைபோல நிறைய கொட்டுவதாகக் காட்டலாம் அல்லது தங்கநிறத்தில் சிறிய நெல்லிக்கனிபோலவே நிறைய குட்டிக்குட்டி பந்துகள் கொட்டுவது போலக் காட்டலாம்.


புத்தம்புதிய ஜொலிக்கும் பட்டுப்புடவை அணிந்து, கைகளில் டஜன் கணக்கில் தங்க வளையல்கள் அணிந்து, கழுத்தில் நிறைய தங்க ஆபரணங்களுடன், அந்த நெல்லிக்கனியை பிக்ஷை அளித்த அம்மா வெளியே வந்து, சிரித்த முகத்துடன், தட்டு நிறைய லட்டுகளும், பழங்களுமாக பலவற்றை சங்கரனுக்கு சமர்பிப்பது போலவும், சங்கரனைக் கையெடுத்து கும்பிடுவது போலவும் காட்டலாம்.


இதைப்பார்த்து பிரமித்துப்போன அந்த அரட்டை ஆசாமிகள் இருவரும், சங்கரனின் மகிமையை உணர்ந்து, சங்கரனை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விழுந்து கும்பிடுவதாகக் காட்டலாம்] [இதன் தொடர்ச்சி தினமும் இரவு 9 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]

29 comments:

 1. கனக தாரா ஸ்தொத்திரம் எந்த நேரம் சொல்லப்பட்டது என்று ஏற்கனவே படித்து தெரிந்திருந்த விஷயம்தான். திரும்ப படிக்க கொடுத்ததற்கு நன்றி.

  ReplyDelete
 2. ஒரே மூச்சில் ஐந்து பதிவுகளையும் படித்து முடித்து
  அடுத்த பதிவுக்குக் காத்துக் கொண்டு உள்ளேன்
  படங்களும் சொல்லிச் செல்லும் விதமும் மிக மிக அற்புதம்
  எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. [கனகதாரா ஸ்தோத்ர பாடல் முடிந்ததும் தங்கநிற காசுகளாக அந்த வீட்டின் வாசலில் மழைபோல நிறைய கொட்டுவதாகக் காட்டலாம் அல்லது தங்கநிறத்தில் சிறிய நெல்லிக்கனிபோலவே நிறைய குட்டிக்குட்டி பந்துகள் கொட்டுவது போலக் காட்டலாம்.//

  நல்ல யோசனை.

  இப்பபோது நாடகம் போட்டால் தங்கம் மாதிரி நெல்லிக்கனியை கொட்டலாம்.

  அருமையான படங்கள்.
  அருமையான வசனங்கள்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நன்றாக ரசித்து எழுதுகிறீர்கள். அதனால்தானோ என்னவோ வாசிக்கும் எங்களுக்கும் அதே புளகாங்கிதம்.

  ReplyDelete
 5. தெரிந்த கதை தான்...ஆனால் சுவாரசியமான எளிய நடையில் சொல்லப்பட்டதால் படிக்க ஆனந்தமாக இருக்கிறது.
  கனகதாரா ஸ்தோத்ரம் அர்த்தம் படிக்க நன்றாக உள்ளது.

  ReplyDelete
 6. எல்லாம் இருந்தும் தானம் இடுவதைவிட ஒன்றுமில்லாதவன் அளிக்கும் தானம் சிறந்ததுதான்.

  ReplyDelete
 7. எளிமையாக, புரியும்படி சுருக்கமாக கொடுத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 8. அள்ளிக் கொடுத்தால் தான் ஈகை என்பது இல்லை
  மனதைப் பொறுத்து கிள்ளிக் கொடுத்தாலும் ஈகையே...

  அழகான கருத்து ஒன்றை அறிந்தேன் ஐயா...

  ReplyDelete
 9. ஒவ்வொரு பகுதியும் சுவாரசியம். கனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த கதை தெரிந்த ஒன்று எனினும் சுவாரசியமாகக் கேட்பது [படிப்பது] முதல் முறை!

  தொடர்ந்து படிக்க ஆவலுடன்

  ReplyDelete
 10. போயும் போயும் அஷ்ட தரித்திரம் பிடித்த அந்த அம்மா வீட்டுக்கு பிக்ஷை எடுக்கப்போகிறான் பாரு.//

  அஷ்ட ஐஸ்வர்யமும் நிறைந்திட சொர்ணத்துமனைக்கினாரே சங்கரர்..

  ReplyDelete
 11. ஆதி சங்கரரின் வாக்கும் பொன் கொழிக்கும் கனகரையாகப்பொழிந்த அற்புத ஸ்லோகப்பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 12. வெள்ளிக்கிழமையான இன்று லஷ்மி கடாட்சத்துடன் இந்த பதிவு அருமை சார். ஆர்வமாய் படித்துக் கொண்டு வருகிறேன்.

  ReplyDelete
 13. அற்புதமான பதிவு!
  நன்றி ஐயா!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 14. அற்புதமான பதிவு!
  நன்றி ஐயா!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 15. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 16. another very good lesson from sankara's life. I remember my mother telling this story to me in my childhood days and I used to picturise the scene which still stays green in my memory.

  ReplyDelete
 17. Mira,

  Thank you very much for your kind entry & valuable comments to
  Part 2, 4, 5, 7 & 11 of this drama.

  Affectionately yours,
  Gopu

  ReplyDelete
 18. இந்தக் காட்சியைப் பார்க்கும் யாவரும் மனம் உருகுவார்கள் என்பது உறுதி.

  ReplyDelete
 19. புத்தம்புதிய ஜொலிக்கும் பட்டுப்புடவை அணிந்து, கைகளில் டஜன் கணக்கில் தங்க வளையல்கள் அணிந்து, கழுத்தில் நிறைய தங்க ஆபரணங்களுடன், அந்த நெல்லிக்கனியை பிக்ஷை அளித்த அம்மா வெளியே வந்து, சிரித்த முகத்துடன், தட்டு நிறைய லட்டுகளும், பழங்களுமாக பலவற்றை சங்கரனுக்கு சமர்பிப்பது போலவும், சங்கரனைக் கையெடுத்து கும்பிடுவது போலவும் காட்டலாம்.


  இதைப்பார்த்து பிரமித்துப்போன அந்த அரட்டை ஆசாமிகள் இருவரும், சங்கரனின் மகிமையை உணர்ந்து, சங்கரனை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விழுந்து கும்பிடுவதாகக் காட்டலாம்]


  அட! இதற்கு நடுவில் உங்கள் கற்பனை அற்புதம்.

  ReplyDelete
 20. இல்லை என்று சொல்லாமல் இருப்பைத் தானமாகத் தரும் தாயின் வறுமை போக உதவிய சங்கரன்...தெய்வக்குழந்தை என்பதில் சந்தேகமென்ன.. நாடகத்தன்மை மாறாமல் காட்சிகளையும் மிகத்துல்லியமாக எழுதியிருக்கும் விதம் அசத்துகிறது.

  ReplyDelete
 21. கனகதாரா ஸ்தோத்திரம் பாட்டி கூட சேர்ந்து நானும் தினசரி சொல்லியிருக்கேன். சின்ன வயதில. இப்ப கூட மனப்பாடமா மனசில் இருக்கு. எந்த நேரத்தில் யாரால் யாருக்காக பாடப் பட்டதென்றும் பாட்டி சொல்லி தெரியும் இப்ப உங்க மூலமா மறுபடியும் தெரிந்து கொள்ள முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் August 5, 2015 at 11:44 AM

   //கனகதாரா ஸ்தோத்திரம் பாட்டி கூட சேர்ந்து நானும் தினசரி சொல்லியிருக்கேன். சின்ன வயதில.//

   ஆஹா, சந்தோஷம். சின்ன வயதில் பாட்டி கூட சேர்ந்து இருந்ததும், அவர்கள் மூலமாக கனகதாரா ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை அறிந்து மனப்பாடம் செய்துள்ளதும் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் எல்லாக்குழந்தைகளுக்கு கிடைக்காது. அதுவரை, தங்களின் சின்னக்குழந்தை பருவம் மிகவும் அதிர்ஷ்டகரமானதுதான். :)

   //இப்ப கூட மனப்பாடமா மனசில் இருக்கு.//

   சிறுகுழந்தையாய் இருக்கும்போது மனப்பாடமானது பசுமரத்து ஆணிபோல மனதில் பதிந்துவிடும். மறக்கவே மறக்காது.

   //எந்த நேரத்தில் யாரால் யாருக்காக பாடப் பட்டதென்றும் பாட்டி சொல்லி தெரியும். இப்ப உங்க மூலமா மறுபடியும் தெரிந்து கொள்ள முடிந்தது.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   Delete
 22. பிஷைனாலும் பிச்சைனாலும் ஒண்ணுதானா அல்லாகாட்டி அது வேர இது வேர வேரயா

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 3:54 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //பிஷைனாலும் பிச்சைனாலும் ஒண்ணுதானா அல்லாகாட்டி அது வேர இது வேர வேரயா//

   பிக்ஷை [உச்சரிப்பு: பி க் ஷை] என்ற சமஸ்கிருத சொல்லே தமிழில் பிச்சையென மாறியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

   பிக்ஷை = பிச்சை .... ஓரளவுக்கு பொருள் ஒன்றுதான்.

   அன்றைக்கு பிக்ஷை கேட்டு ஒரு சிலர் வீடுகளுக்குச் சென்று வந்த பாடசாலையில் வேதம் படிக்கும் மாணவர்களுக்கும், எப்போதுமே பிச்சை எடுப்பதையே தங்கள் பிழைப்பாக வைத்துக்கொள்பவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

   இந்தப்பகுதிக்குத் தங்களின் வருகைக்கும் நியாயமானதொரு கேள்விக்கும் மிக்க நன்றி.

   Delete
 23. டனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த விதம் அருமை. வீடு வீடாக பிஷை எடுத்துவர எவ்வளவு மனதிடமும் துணிவும் வேணும். ஏழை ஸ்திரிக்கு அருள் செய்த தயாள குணம் எல்லாமே சிறப்பு

  ReplyDelete
 24. கனகதாரா ஸ்தோத்திரம் பிறந்ததை சொன்ன விதம்...படம்...எனக்கு மிகவும் பிடித்தது.

  ReplyDelete