About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, April 22, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-11]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-11]

By வை. கோபாலகிருஷ்ணன்
காட்சி-15


[சங்கரர் கங்கையில் குளித்துவிட்டு, தன் சீடர்களுடன், மடி ஆச்சாரமாக வந்து கொண்டிருக்கிறார். எதிரே மிகவும் கந்தலான அழுக்கு உடைகளுடன், குளித்துப் பல நாட்கள் ஆன நிலையில், தன் மனைவி மற்றும் நான்கு நாய்களுடன் எதிரே வந்து வழிமறித்து நிற்கிறான் ஒருவன். 


{பெரிய சைஸில், கீ கொடுத்தால் வாலை ஆட்டியபடி நகரும் பொம்மை நாய்களாகக் கூட நாடக மேடையில் காட்டலாம்}சங்கரன்: {கோபத்துடன்} 


ஐயனே! சற்று நீங்கள் ஒதுங்கிச் செல்லக்கூடாதா?


எதிரே வந்தவன்:


நாங்கள் ஏன் ஒதுங்கிச் செல்ல வேண்டும்?


நாங்கள் தீண்டத் தகாதவர்களா?


நீங்கள் மட்டும் தான் உயர்ந்த ஜாதியா?


நாங்கள் தாழ்ந்த ஜாதியா?


நீங்கள் கூறும் அத்வைத சித்தாந்தம் என்ன சொல்லுகிறது?


எல்லா உயிர்களும் கடவுளின் சிருஷ்டிதானே?


பிறகு உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது?


பரமாத்வான கடவுளும், ஜீவாத்மாவான நீயும், நானும், ஏன் இந்த நாய்களும் கூட ஒன்றே என்றல்லவா உன் அத்வைதம் கூறுகின்றது.


அந்த அத்வைதம் உண்மையானால், நீயும் நாங்களும் சமமானவர்கள் தானே?


பிறகு தீண்டாமை எங்கிருந்து வந்தது?


உன்னிடமிருந்து நான் எப்படி வேறு பட்டவன் ஆகிறேன்?


நான் ஏன் உன் மீது படாமல் ஒதுங்கிச் செல்லவேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?


நீ சொல்வது எனக்கு நியாயமாக தோன்றவில்லை.


என்னால் அது ஏற்றுக் கொள்ளும் படியாகவும் இல்லை.


உன் அத்வைத கருத்துக்களை ஒருவேளை நீ சரியென்று நினைத்தால், இந்த உன்னுடைய அணுகுமுறைக்கு என்ன அர்த்தம்?


இதைப்பற்றி எனக்கு விளக்கிவிட்டே, நீ இங்கிருந்து செல்ல வேண்டும்.


[சங்கரன் ஒரு நிமிடம் தன் கண்களை மூடித் திறக்கிறார். அதன்பின் அவனின் கால்களில் விழுந்து அவனை வணங்கி நமஸ்கரித்து எழுகிறார்]


சங்கரன்: 


ஸ்வாமீ! நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக ஓட்டிக்கொண்டு,  மாறு வேடம் பூண்டு இங்கு எழுந்தருளியுள்ள தாங்கள் சாக்ஷாத் பரமசிவனார் தான் என்பதை நான் உணர்ந்து கொண்டு விட்டேன்.


அத்வைத கருத்துக்களை அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்த தங்களை “மனிஷ பஞ்சகம்” பாடி வணங்குகிறேன்.எதிரே வந்தவனாக வந்த சிவன்:


சங்கரா! உன் அறிவும் புகழும் அனைவரும் அறியவே இவ்வாறு யாம் ஒரு நாடகமாடினோம். 


பிரும்மத்தை உணர மனத்தூய்மையுடன், உடல் தூய்மையும் அவசியமே என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். 


உனக்கு உன் செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் பல உண்டாக வாழ்த்துகிறேன். 


[சங்கரனும் மற்றவர்களும் அவரை வணங்கி விடை பெறுதல்]
இதன் தொடர்ச்சி  


  நாளை திங்கட்கிழமை 23.04.2012 அன்று வெளியாகும் நேரங்கள்:-

பகுதி-12 [காட்சி 16/1/2] காலை சுமார் 10  மணிக்கு


பகுதி-13 [காட்சி 16/2/2] இரவு சுமார் 8 மணிக்கு  

25 comments:

 1. நல்ல விஷயம்....

  தொடர்ந்து படித்து வருகிறேன். நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. உங்களக்கு எனது மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 2. அத்வைத கருத்துக்களை அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்த தங்களை “மனிஷ பஞ்சகம்” பாடி வணங்குகிறேன்.

  அருமையான பகிர்வு..

  ReplyDelete
 3. சங்கரா! உன் அறிவும் புகழும் அனைவரும் அறியவே இவ்வாறு யாம் ஒரு நாடகமாடினோம்.


  பிரும்மத்தை உணர மனத்தூய்மையுடன், உடல் தூய்மையும் அவசியமே என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.


  சங்கரருக்கு அருள் புரிந்த சங்கரனை வணங்குவோம்..

  ReplyDelete
 4. நல்லதொரு ஆன்மிகப் பதிவு! நன்றி ஐயா!
  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 5. பிரும்மத்தை உணர மனத்தூய்மையுடன், உடல் தூய்மையும் அவசியமே என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.//

  இறைவனே வந்து
  நல்ல கருத்துக்களை சொல்லும் இடம் அருமை.
  நல்ல பகிர்வு.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. ரசித்துப் படித்து மகிழ்ந்தேன்
  தெரியாதனத் தெரிந்து கொண்டேன்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. Aha.....
  It is very pleasent exxperience reading about JagatGuru.
  viji

  ReplyDelete
 9. Aha.....
  It is very pleasent exxperience reading about JagatGuru.
  viji

  ReplyDelete
 10. Aha.....
  It is very pleasent exxperience reading about JagatGuru.
  viji

  ReplyDelete
 11. பிரும்மத்தை உணர மனத்தூய்மையுடன், உடல் தூய்மையும் அவசியமே என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.//

  இறைவனே வந்து
  நல்ல கருத்துக்களை சொல்லும் இடம் அருமை.
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 12. நல்லதொரு கருத்தை பகிர்ந்து உள்ளீர்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
 13. நாங்கள் ஏன் ஒதுங்கிச் செல்ல வேண்டும்?


  நாங்கள் தீண்டத் தகாதவர்களா?


  நீங்கள் மட்டும் தான் உயர்ந்த ஜாதியா?


  நாங்கள் தாழ்ந்த ஜாதியா?


  நீங்கள் கூறும் அத்வைத சித்தாந்தம் என்ன சொல்லுகிறது?

  எல்லா உயிர்களும் கடவுளின் சிருஷ்டிதானே?

  பிறகு உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது?


  .....வைர வரிகள்...

  ReplyDelete
 14. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 15. well narrated scene with apt dialogues, Gopu Sir

  ReplyDelete
 16. Mira said...
  //well narrated scene with apt dialogues, Gopu Sir//

  Mira,

  Thank you very much for your kind entry & valuable comments to
  Part 2 to 7 & 11 of this drama.

  Affectionately yours,
  Gopu

  ReplyDelete
 17. சங்கரனை சங்கரன் ஆட்கொணட விதம் மனதை மயக்குகிறது.

  ReplyDelete
 18. சங்கரா சிவ சங்கரா

  சங்கரனும் சிவனும் ஒன்றே.

  இருந்தாலும் இதெல்லாம் நமக்காக அல்லவோ நிகழ்ந்தது.

  ReplyDelete
 19. சிந்திக்கவைக்கும் சிறப்பான கருத்துகள்.

  ReplyDelete
 20. ஓஹ் நான்கு வேதங்களையும் நாய் உருவில் அழைத்து வந்தது ஈசனே அனறோ? இன்னும் என்னவெல்லாம் திருவிளையாடல் நடத்தப்போகிறாறோ?

  ReplyDelete
 21. ஜாதி வித்யாசமெல்லா எந்த மத கடவுளுகளும் ஆதரிக்கல. நா முன்ன ஒரு கமண்டுல சொல்லினேன்ல கொடுமுடின்னு ஒஉ ஊருக்கு பிக்னிக் போனோமுனு அங்கயும் கூட ஆத்து கரைல ஒரு பெரிய கோவிலு இருந்திச்சி. ஆசயா போனோம் வெளிய பெரிய போர்டுல இந்துக்கள் மட்டும் உள்ள வரலாம்னு இருந்திச்சி மனசுல ரொம்ப கஸ்டமாயிடிச்சி

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 4:14 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //ஜாதி வித்யாசமெல்லா எந்த மத கடவுளுகளும் ஆதரிக்கல. நா முன்ன ஒரு கமண்டுல சொல்லினேன்ல கொடுமுடின்னு ஒஉ ஊருக்கு பிக்னிக் போனோமுனு அங்கயும் கூட ஆத்து கரைல ஒரு பெரிய கோவிலு இருந்திச்சி. ஆசயா போனோம் வெளிய பெரிய போர்டுல இந்துக்கள் மட்டும் உள்ள வரலாம்னு இருந்திச்சி மனசுல ரொம்ப கஸ்டமாயிடிச்சி//

   ஜாதி, மதம், இனம், மொழி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடெல்லாம் மனிதர்களால் நாளடைவில் ஏற்படுத்தப்பட்டதே அன்றி கடவுளால் ஒருபோதும் ஏற்படுத்தப்படவில்லை என்பதே உண்மையாக இருக்க முடியும்.

   கடவுள் என்பவர் நிச்சயமாக இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவராகவே இருக்கக்கூடும்.

   Delete
 22. கடவுளை உணறவும் உள்ளத்தூய்மையும் உடல் தூய்மையும் அவசியம் என்பதை சிறப்பா சொன்ன பதிவு
  .

  ReplyDelete
 23. பிரும்மத்தை உணர மனத்தூய்மையுடன், உடல் தூய்மையும் அவசியமே என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். // நல்ல மெஸேஜ்.

  ReplyDelete