About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, April 16, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-2]ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-2]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-2


[திருச்சூரில் வடக்கும்நாதன் என்ற பெயரில் உள்ள சிவன் கோயிலில் சிவகுருவும், ஆர்யாம்பாளும்]

ஆர்யாம்பாள்: 


ஸ்வாமீ! நாம் இங்கு திருச்சூர் வடக்கும்நாதன் கோயிலுக்கு வந்து விரதம் மேற்கொண்டு இன்றுடன் 48 நாட்கள் முடிவடைகின்றன. 


வடக்கும்நாதன் ஸ்வாமி நமக்கு அருள் புரிவாரா? 


நமக்குக் குழந்தை பாக்யம் கிட்டுமா?


சிவகுரு: 


நமக்கு எந்த பாக்யத்தை எப்போது அளிக்க வேண்டும் என்பது அந்த பகவானுக்குத் தெரியும் ஆர்யா! 


நாம் யாருக்கும் எந்தக்கெடுதலும் மனதால் கூட நினைப்பதில்லை. 


நம்மைவிட ஏழையாக உள்ளவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளும், தொண்டுகளும் செய்து வருகிறோம். 


சிவனே கதியென இந்த 48 நாட்களில் நம் விரதத்தையும் முடித்து விட்டோம். 


நல்லதையே நினைப்போம். 


அந்த சிவன் அருளால் நிச்சயம் நல்லதே நடக்கும்.


[சிவபெருமான் தோன்றுதல். சிவகுருவும் ஆர்யாம்பாளும் மகிழ்ச்சியுடன் சிவனை வணங்குதல்.]


சிவன்: 


உங்கள் பக்தியை மெச்சினோம். 


உங்களுக்குக் குழந்தைப்பேறு ஏற்பட அருள் புரிகிறோம். 


உங்களுக்கு மந்த புத்திகொண்ட பல குழந்தைகள் வேண்டுமா அல்லது அதிபுத்திசாலியான ஒரே மகன் வேண்டுமா?


சிவகுரு: 


அதை முடிவு செய்வது நாங்கள் அல்ல ஸ்வாமீ. எங்களுக்கு எது நல்லதோ அதைத் தாங்களே பார்த்து அருள் புரிய வேண்டும்.. ஸ்வாமீ.


சிவன்: 


உங்களின் சரியான பதிலால் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். 


அப்படியே நடக்க அருள் புரிகிறோம். நிம்மதியாகச் சென்று வாருங்கள்.


[சிவபெருமான் மறைந்து போய் விடுதல்]


 வடக்கும்நாதன் ஆலயத்தில் நடைபெறும்
திருச்சூர் பூரத்திருவிழா

[அந்தக்காலத்தில் தென் கைலாஸம் என்றே 
அழைக்கப்பட்ட பழமையான ஆலயம்]

[இதன் தொடர்ச்சி தினமும் இரவு 9 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]

30 comments:

 1. ஆதி சங்கரர் அவதாரத்தில் இருந்து ஆரம்பமா. தொடருங்கள்.

  ReplyDelete
 2. My Pranams to the Deiva parents Aryamba and Sivaguru.
  viji

  ReplyDelete
 3. ஆதி சங்கரர் அவதாரம் பற்றிய விஷயங்கள் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. ஆரம்பம் சிவ தரிசனத்தில்...
  அவதார சுவடுகளை
  நித்தமும் தரிசிக்க வருகிறேன் ஐயா...

  ReplyDelete
 5. நமக்கு எந்த பாக்யத்தை எப்போது அளிக்க வேண்டும் என்பது அந்த பகவானுக்குத் தெரியும் ஆர்யா!

  சிவனே -- மகனே என்று அழைக்க வரம் தரும் அற்புத வரலாறு

  ReplyDelete
 6. வடக்கும்நாதன் ஆலயத்தில் நடைபெறும்திருச்சூர் பூரத்திருவிழா
  [அந்தக்காலத்தில் தென் கைலாஸம் என்றே அழைக்கப்பட்ட பழமையான ஆலயம்]


  அருமையான வடக்கு நாதர் பூரத்திருவிழா படங்களுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 7. சிவாம்சமான ஆதிசங்கரர் அவதாரம் அமர்க்களமான ஆரம்பம்..

  ReplyDelete
 8. உங்களுக்கு மந்த புத்திகொண்ட பல குழந்தைகள் வேண்டுமா அல்லது அதிபுத்திசாலியான ஒரே மகன் வேண்டுமா?


  சிவகுரு:


  அதை முடிவு செய்வது நாங்கள் அல்ல ஸ்வாமீ. எங்களுக்கு எது நல்லதோ அதைத் தாங்களே பார்த்து அருள் புரிய வேண்டும்.. ஸ்வாமீ //

  எத்தனை அனுபூதி பெற்ற தம்பதிகள்!

  முடிவை சிவனிடமே விட்டதால்தானே சிவனே வந்து மகனாக பிறந்து பெற்றோராகும் பாக்கியம் பெற்றார்கள் ...

  ReplyDelete
 9. ஆதி சங்கரர் பற்றி படித்திருக்கிறேன். உங்கள் எழுத்துக்களில் திரும்ப தரிசிக்கப் போகிறேன். :)

  ReplyDelete
 10. நல்ல பகிர்வு சார். தொடர்கிறேன்.

  ReplyDelete
 11. எங்களுக்கு எது நல்லதோ அதைத் தாங்களே பார்த்து அருள் புரிய வேண்டும்.. ஸ்வாமீ.//

  இறைவனிடம் இப்படித்தான் பிராத்தனை செய்ய வேண்டும்.
  இது தான் நல்ல முறை.

  ReplyDelete
 12. பாமரரும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் பெரிய விஷயத்தை சொல்கிறீர்கள்...பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. Very apt question from Lord Shiva, and an equally apt reply from Sivaguru. It is not that we always get that we pray for. But God always gives us what is really required by us. Obviously, we don't know what we really want - we tend to pray for some mundane things in life.

  ReplyDelete
 14. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்ற வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வந்தது!

  ReplyDelete
 15. //அதை முடிவு செய்வது நாங்கள் அல்ல ஸ்வாமீ. எங்களுக்கு எது நல்லதோ அதைத் தாங்களே பார்த்து அருள் புரிய வேண்டும்.. ஸ்வாமீ.

  //

  எப்பேற்பட்ட பக்குவப்பட்ட மனம்!!!!!

  ReplyDelete
 16. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 17. Only god knows who deserves what. If we understand that and submit ourselves 100% at the feet of almighty he takes care of his children.

  I have experienced, experiencing.. :)

  Each one's life gives the other valuable lessons.

  ReplyDelete
 18. Mira,

  Thank you very much for your kind entry & valuable comments to
  Part 2,4,5,7 & 11 of this drama.

  Affectionately yours,
  Gopu

  ReplyDelete
 19. காட்சி அமைப்புகள் நாடகத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கிறீர்கள். இந்த நாடகம் எங்கே அரங்கேறியது?

  ReplyDelete
 20. ஜெய ஜெய சங்கர
  ஹர ஹர சங்கர

  சங்கரர் அவதாரம் முதல் தொடங்கியுள்ளீர்கள்.

  ரொம்ப எளிமையாக புரிந்து கொள்ளும்படி உள்ளது.

  நன்றி.

  ReplyDelete
 21. ஒரு தகவலை சாதாரணமாய் சொல்வதை விடவும் நாடக பாணியில் சொல்லும்போது அதன் தாக்கம் அதிகம். மேலும் தேவையில்லாத செய்திகள் தவிர்க்கப்படுகின்றன. இங்கும் அப்படியே...

  எப்படிப்பட்ட குழந்தை வேண்டும் என்பதை இறைவனின் பொறுப்பிலேயே விட்டுவிட்ட தம்பதியர் புத்திசாலிகள். தொடர்கிறேன்.

  ReplyDelete
 22. நமக்கு என்ன தரவேண்டுமென தீர்மானிப்பவர் இறைவனே .அதை அழகா சொல்லிட்டீங்க.

  ReplyDelete
 23. படங்க அல்லா நல்லாகீது நமக்கு எது எது எப்பூடில்லா நடக்கணுமோன்னு அந்த ஆண்டவருதானே தீர்மானம் செய்துபோடுவாங்கல.

  ReplyDelete
  Replies
  1. :) ஆமாம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)

   Delete
 24. படங்களுடன் பதிவு சுவாரசியமாக ஆரம்பம் ஆண்டவன் தன் பக்தர்களை ஒரநாளும் கைவிட மாட்டாரே.

  ReplyDelete
 25. நமக்கு எந்த பாக்யத்தை எப்போது அளிக்க வேண்டும் என்பது அந்த பகவானுக்குத் தெரியும் ஆர்யா! // வசனங்களுடன் வாழ்க்கைத்தத்துவம்...

  ReplyDelete