About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, April 15, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-1]

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-1]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-1

[சிவபெருமான் அமர்ந்திருத்தல். தேவர்களும் ரிஷிகளும் சிவபெருமானிடம் வருதல்]
குழு: 


சிவாய நம ஓம்.. சிவாய நம ஓம். ஸம்போ மஹாதேவா .. ஸாம்பப் பரமேஷ்வரா.. ஸ்வாமி நமஸ்கரிக்கிறோம். 


[கைகூப்பி சிரம் தாழ்த்தி வணங்குதல்]

சிவன்: 


வாருங்கள் மஹரிஷிகளே! வாருங்கள் தேவர்களே!! ஏது இவ்வளவு தூரம்?

குழு: 


ஸ்வாமீ ! பக்திக்குறைவினால் உலகம் தவறான பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. உலகத்தை மீண்டும் நல் வழிப்பாதையில் கொண்டு செல்ல தாங்கள் தான் ஏதாவது வழி செய்ய வேண்டும். இதைச்சொல்லவே நாங்கள் இங்கு வந்தோம்.

சிவன்: 


யாமும் அனைத்தையும் அறிந்தோம். விரைவில் பூலோகத்தில் மனிதனாக அவதரிக்க எண்ணியுள்ளோம். கவலையின்றி சென்று வாருங்கள்.

குழு: 


ஆஹா! மிக்க மகிழ்ச்சி. தங்களின் பூலோக அவதாரத்தில் எங்களுக்கும் தங்களை தரிஸிக்க சந்த்ர்ப்பம் அளித்து உதவ வேண்டும், ஸ்வாமீ.

சிவன்: 


அப்படியே ஆகட்டும். பாரத தேசத்தில், கேரள மாநிலத்தில், காலடி என்ற சிற்றூரில் சந்திப்போமாக! 


என் சிவகணங்களில் ஒருவரான பட்டாபியை பட்டுவாகவும், மற்றொருவரான கிருஷ்ணமூர்த்தியைக் கிட்டுவாகவும் ஆக்கி, யாம் நடத்த உள்ள நாடகத்தை பற்றி மக்களுக்கு அவ்வப்போது விளக்கம் தர வைக்க விரும்புகிறோம்.

குழு: 


விடைபெறுகிறோம் ஸ்வாமீ ! சிவாய நம ஓம் ... சிவாய நம ஓம். 


தொடரும்
[இதன் தொடர்ச்சி தினமும் இரவு 9 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]

32 comments:

 1. இயல் இசை நாடகம் என்று சகல கலா வல்லவராய் இருக்கிறீர்கள்..
  சிவனின் திருவிளையாடல் எப்பவுமே சுவாரசியம்தான்.
  ஆரம்பமே ஜோர்..

  ReplyDelete
 2. பக்திக்குறைவினால் உலகம் தவறான பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. உலகத்தை மீண்டும் நல் வழிப்பாதையில் கொண்டு செல்ல தாங்கள் தான் ஏதாவது வழி செய்ய வேண்டும். /

  சிவாம்சமான ஆதிசங்கரரின் அவதார ஆரம்பம் அமர்களம்... பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்

  மிகத்திறமையாக - மாண்வர்களால் எளிதில் மனதில் உணர்ந்துகொண்டு நடிப்பில் வெளிப்படுத்தும் வண்ணம் , ஆழ்ந்த பொருளும் கொண்டு அற்புதமாக வடிவமைக்கப்ப்பட்ட நாடக ஆக்கம் .. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. இன்னும் கொஞ்சம் பெரிய பார்ட்டா போடக் கூடாதா?!!

  ReplyDelete
 5. ஆரம்பமே ஜோர்..

  எம்.ஜே.ராமன்

  ReplyDelete
 6. இணையப் பதிவுகளில் இதுவரை யாரும் நாடகம் எழுதி நான் படித்ததில்லை. அப்படி ஒரு எண்ணம் எனக்கிருந்தது.
  நீங்கள் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. Aha........
  Waiting waiting to read further.
  viji

  ReplyDelete
 8. பட்டு - கிட்டு பேரைச் சொல்லி தொடங்கியிருக்கே ஒரு லட்டு...(பதிவு)
  pril 15, 2012 10:42 AM
  //ஜீவி said...
  இணையப் பதிவுகளில் இதுவரை யாரும் நாடகம் எழுதி நான் படித்ததில்லை.//

  ஜீவி சார்...அப்பாதுரை நாடகம் பதிவு எழுதி இருக்கிறார்.

  ReplyDelete
 9. ஸ்ரீராம், தகவலுக்கு நன்றி.

  அங்கு போய் படித்துப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 10. ஆதிசங்கரரின் அவதார மகிமைகளை
  நாடக உருவில் தரிசிக்க ஆவலாய் உள்ளேன் ஐயா..

  ReplyDelete
 11. சிவனின் திருவிளையாடல்கள் படிக்க படிக்க சுக்மான அனுபவம்தான். நன்றி

  ReplyDelete
 12. பக்திக்குறைவினால் உலகம் தவறான பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. உலகத்தை மீண்டும் நல் வழிப்பாதையில் கொண்டு செல்ல தாங்கள் தான் ஏதாவது வழி செய்ய வேண்டும். இதைச்சொல்லவே நாங்கள் இங்கு வந்தோம்.//

  சிவன் ஆதிசங்கரர் அருமை.

  ஆதி சங்கரரின் வரலாற்றை
  பட்டு, கிட்டு கதாபாத்திரங்கள் வழியாக அறிந்து கொள்ளபோவதை அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 13. ஆதி சங்கரரின் வரலாற்றை தங்களின் நாடக ரூபத்தில் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன் சார்.

  ReplyDelete
 14. நாடகம் நன்றாகத் தொடங்கி இருக்கிறது. தினம் தினம் நாடகத்தினைக் காண உங்கள் வலைப்பூ பக்கம் வந்துவிடுவேன்!

  ReplyDelete
 15. நல்லா சுவாரஸ்யமாக இருக்கு சார்.

  ReplyDelete
 16. உரையாடல் வடிவில் ஆதிசங்கரரின் வாழ்க்கை படிக்க சுவராஸ்யமாக உள்ளது.

  ReplyDelete
 17. VGK அவர்களுக்கு வணக்கம்! தொடரட்டும் உங்கள் பதிவு!

  ReplyDelete
 18. ஆரம்பமே ஜோராக களை கட்டி விட்டதே...

  ReplyDelete
 19. ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்

  அணைத்து பதிவுகளையும் இன்றே படிக்கத் தூண்டிய முதல் பதிவு

  ReplyDelete
 20. ஆரம்பமே ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் உள்ளது! தொடர்வேன்! நன்றி!

  ReplyDelete
 21. ஆஹா பட்டு கிட்டு ஆரம்பம் ஜோர்

  ReplyDelete
 22. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 23. நாடகம் கன ஜோராக ஆரம்பித்திருக்கிறது. பாராட்டுகள்.

  ReplyDelete
 24. கோபு அண்ணா நீங்கள் ஒரு ஜீனியஸ்.

  என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு குடத்தில் இட்ட விளக்கு. உங்கள் புகழ் குன்றில் இட்ட விளக்காக ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

  நாடகம் ஆரம்பமே களை கட்டி விட்டது.

  ReplyDelete
 25. நாடகத்தை நடத்திவைப்பனைக் கொண்டே ஒரு நாடகம் - சிறப்பான துவக்கம். தொடர்ந்து வாசிக்கிறேன்.

  ReplyDelete
 26. நாடகத்தை ரசிக்க நாங்க எல்லாருமே ஆர்வமாக காத்திருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் August 5, 2015 at 11:19 AM

   வாங்கோ, பூந்தளிர். வணக்கம்மா. நலம் தானே? நீண்ட நாட்களுக்குப்பின் தொடர ஆரம்பித்துள்ளீர்கள். ஆரம்பமே ஸ்ரீ ஆதிசங்கரரைப்பற்றி அமைந்துள்ளதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. :)

   //நாடகத்தை ரசிக்க நாங்க எல்லாருமே ஆர்வமாக காத்திருக்கிறோம்//

   ஆஹா, நல்லது. மிகவும் சந்தோஷம்மா.

   பிரியமுள்ள கோபு

   Delete
 27. இவங்க இன்னா நாடகம் நடத்த போராங்க

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 3:44 PM

   //இவங்க இன்னா நாடகம் நடத்த போராங்க//

   தொடர்ந்து படிச்சுப்பாருங்கோ. ஒருவேளை தெரியக்கூடும்.

   Delete
 28. ஆதி சங்கரர் கதை நாடக வடிவமா கொடுக்கப் போறீங்களா. ஹெயிடிங்க்.

  ReplyDelete
 29. அசத்தலான படங்களுடன் ஆரம்பம்...நாடகத்தமிழையும் விட்டு வைக்கலயா??

  ReplyDelete