About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, April 22, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-9]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-9]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-13


[ஸ்ரீ கோவிந்த பகவத் பாதருடன் வேறொரு சிஷ்யர்]

சிஷ்யர்:


ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் அவர்களுக்கு வந்தனம்!


ஸ்வாமீ! இன்று ஒரு அதிசயம் நிகழ்ந்தது.


ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர்: 


என்னவென்று சொல்.


சிஷ்யர்: 


சங்கரன் என்ற இளம் துறவி நர்மதை ஆற்றின் வெள்ளப்பெருக்கை தன் மந்திர சக்தியால் அடக்கி, தன் தவ வலிமையால் கமண்டலத்திற்குள் அடக்கிவிட்டார், ஸ்வாமி.


என் இரு கண்களாலேயே இந்த அதிசயத்தைக் கண்டேன்.


அந்த இளம் துறவியைத் தங்களிடம் அழைத்து வந்துள்ளேன்.


[சங்கரன் உள்ளே நுழைந்து வந்து வணக்கம் கூறி, ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரை நமஸ்கரித்தல்]


ஸ்ரீ கோவி: 


வா சங்கரா! வா .... உன்னைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.  உன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி நேற்றே எனக்குக் கனவில் உத்தரவு வந்து விட்டது.


சங்கரன்:


அது என் பாக்யம் குருவே!


நான் என்னசெய்ய வேண்டும் என்று உத்தரவு கொடுங்கள் குருவே!


ஸ்ரீ கோவி: 


பல்வேறு வேதங்களையும், சாஸ்திரங்களையும் நீ கற்றுத் தேர்ந்துள்ளாய்.


எல்லா உயிர்களும் கடவுளின் சிருஷ்டியே.


பரமாத்மாவான கடவுளும், ஜீவாத்மாக்களான உயிர்களும் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை உலகிற்கு நீ உணர்த்த வேண்டும்.


நம் நாடு பூராவும் நீ சென்று அத்வைத தத்துவங்களைப் பரப்பிட வேண்டும்.


சங்கரன்: 


அப்படியே செய்கிறேன் குருவே! 


எனக்கு உத்தரவு கொடுங்கள்.

[சங்கரன் குருவை வணங்கி நமஸ்கரித்து விடை பெறுதல்] 

  
[இதன் தொடர்ச்சி [ பகுதி-10] 


இன்று மதியம் 3 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]

28 comments:

 1. படித்து இன்புற்றோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பரமாத்மாவான கடவுளும், ஜீவாத்மாக்களான உயிர்களும் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை உலகிற்கு நீ உணர்த்த வேண்டும்.//

  சங்கரரின் அத்வைத தத்துவங்கள் வரப் போகிறதா!

  நன்றி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. குருவும் சிஷ்யரும் சந்தித்துவிட்டார்கள். இனிமேல்தான் நாம் படித்து மகிழ நிறைய விஷயங்கள் கிடைக்கப்போகிரதுன்னு நினைக்கிரேன். தொடருங்கள்.

  ReplyDelete
 4. தொடருங்கள் உங்களைத் தொடருகிறோம்

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு.

  சங்கரரின் அத்வைத கோட்பாடுகளை தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  ReplyDelete
 6. VGK அவர்களுக்கு வணக்கம்! தாங்கள் எழுதி வரும் ஆதி சங்கரர் வாழ்வும் வாக்கும் நாடகத் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். இனி தாங்கள் எழுதப் போகும் அத்வைத தத்துவங்களை உங்களுக்கே உரிய இயல்பான நடையில் தனியே விளக்கமும் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 7. தி.தமிழ் இளங்கோ said...
  //VGK அவர்களுக்கு வணக்கம்! தாங்கள் எழுதி வரும் ஆதி சங்கரர் வாழ்வும் வாக்கும் நாடகத் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன்.//

  மிக்க நன்றி, ஐயா. அவ்வப்போது ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் கருத்துக்களைப்பதிவு செய்தால், மேலும் மகிழ்ச்சியடைவேன்.

  //இனி தாங்கள் எழுதப் போகும் அத்வைத தத்துவங்களை உங்களுக்கே உரிய இயல்பான நடையில் தனியே விளக்கமும் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.//

  இனிவரும் பகுதிகள் தங்களைப் போன்று ஆர்வமாகப் படிப்பவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.

  அத்வைத தத்துவ விளக்கங்களை ஸ்ரீ சங்கரர் அவர்களின் திருவாயிலிருந்து மிக அழகாக நீங்கள் கேட்கலாம்.

  பகுதி-17 [காட்சி-22] இல் அவைகளை ஸ்ரீ சங்கரர் பேசுவது போல வெகு விளக்கமாக, சுலபமாக மனதில் பதியும் உதாரணங்களுடன், எழுதியுள்ளேன். அடுத்த ஞாயிறு [29.04.2012] காலை 11 மணிக்கு அது வெளியாக உள்ளது.

  தங்களின் இன்றைய கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

  அவ்வப்போது வருகை தந்து ஏதாவது எழுதி உற்சாகப்படுத்துங்கள், ஐயா.

  அன்புடன் vgk

  ReplyDelete
 8. அத்வைத தத்துவங்கள்...எல்லோருக்கும் புரியும் வண்ணம் தாருங்கள். தங்கள் உழைப்பிற்கு நன்றி.

  ReplyDelete
 9. இன்னும் நிறைய விஷயங்கள் வரப் போகிறது. தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 10. தொடர்கிறேன் நன்றி!
  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 11. Waiting to read further.
  viji

  ReplyDelete
 12. பரமாத்மாவான கடவுளும், ஜீவாத்மாக்களான உயிர்களும் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை உலகிற்கு நீ உணர்த்த வேண்டும்.


  அத்வைத தத்துவத்தை பார்முழுதும் பரப்பி உணர்த்திய கருணைக்கடல் அல்லவா சங்கரர் ,,

  ReplyDelete
 13. சங்கரன் என்ற இளம் துறவி நர்மதை ஆற்றின் வெள்ளப்பெருக்கை தன் மந்திர சக்தியால் அடக்கி, தன் தவ வலிமையால் கமண்டலத்திற்குள் அடக்கிவிட்டார், ஸ்வாமி.

  கங்கையை தன் சடையில் அடக்கிய சங்கரரின் அவதாரமாயிற்றே!

  ReplyDelete
 14. மிகத்திறமையான நாடக ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 15. தொடர்கிறேன்...

  ReplyDelete
 16. மனதுக்கு இதமான பதிவு...

  ReplyDelete
 17. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 18. ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு சுவையாகச் செல்லுகிறது. தொடரட்டும் உங்கள் சேவை.

  ReplyDelete
 19. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.//

  கரும்பு தின்னக் கூலியா. கரும்பு கூட இல்லை. அதையும் ஜூசா பிழிஞ்சு கொடுத்துடறீங்க. குடிக்கத்தான் கொடுத்து வைத்திருக்கணும்.

  ReplyDelete
 20. சீடன் குருவுக்காக காத்திருக்கலாம். ஆனால் இங்கே குரு தன் சீடனுக்காக காத்திருக்கிறாரே... அற்புதம்.

  ReplyDelete
 21. குருவை சந்தித்துவிட்டார் சங்கரர் அவர்கள் இருவரின் அருளால் நமக்கு அற்புதமான விஷயங்கள் கிடைக்க போகிறது.

  ReplyDelete
 22. அந்த பச்ச புள்ளயே சாமியாரா ஆயிடிச்சி. அவுகளுக்கு கூட ஒரு குருவா.

  ReplyDelete
  Replies
  1. :) சாமியாராகப்போனாலும்கூட, ஒவ்வொரு சாமியாருக்கும் தனியே ஒரு குரு என்பவர் உண்டு.

   அதாவது நீங்கள் என்னை குருஜி என்று அழைப்பது போல ! :)

   Delete
 23. கோவிந்த பகவத் பாதரை சந்தித்து விட்டார் சங்கரர்.இவர்களின் உரையாடல்களிலிருந்து எங்களுக்கெல்லாம் தூவிட்டாத அமுத மொழிகள் கிடைக்கப்போகிறது.

  ReplyDelete
 24. சங்கரன் என்ற இளம் துறவி நர்மதை ஆற்றின் வெள்ளப்பெருக்கை தன் மந்திர சக்தியால் அடக்கி, தன் தவ வலிமையால் கமண்டலத்திற்குள் அடக்கிவிட்டார், ஸ்வாமி.// இன்றும் ஆதி சன்கரர் வந்தால் தான் சென்னை தப்பிக்கும்போல உள்ளதே.

  ReplyDelete
  Replies
  1. RAVIJI RAVI December 4, 2015 at 12:22 AM

   **சங்கரன் என்ற இளம் துறவி நர்மதை ஆற்றின் வெள்ளப்பெருக்கை தன் மந்திர சக்தியால் அடக்கி, தன் தவ வலிமையால் கமண்டலத்திற்குள் அடக்கிவிட்டார், ஸ்வாமி.**

   // இன்றும் ஆதி சன்கரர் வந்தால் தான் சென்னை தப்பிக்கும்போல உள்ளதே.//

   :)))))))))))))))) சூப்பர் ..... டைம்லி ஜோக் ! :))))))))))))))))

   Delete