About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, April 28, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-16]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-21


[பட்டுவும் கிட்டுவும் வெகு நாட்களுக்குப்பின் சந்தித்து உரையாடுதல்]


பட்டு:


என்ன கிட்டு, உடம்பு சரியில்லைன்னு சொல்லி யாத்திரைக்கு வராமலேயே இருந்துட்டேளே! இப்போ உடம்பு எப்படி இருக்கு?


கிட்டு:


ஏதோ தேவலாம். 


அதெல்லாம் நாம பார்த்த இடம் தானேன்னு இருந்துட்டேன். 


வடக்கே பத்ரிநாத் யாத்திரைக்கு கட்டாயம் வருவேன். 


நீங்க போன இடத்திலெல்லாம் என்னென்ன நடந்ததுன்னு விபரமாச் சொல்லுங்கோ!


பட்டு:


திருவடைமருதூரில் இருந்த சைவாளெல்லாம், ஏதேதோ நம் சங்கரரிடம் வாதமும் விவாதமும் செய்தார்கள்.திருவிடைமருதூர் கோயிலின் ஒரு பகுதி


திருவிடைமருதூர் கோயில் கோபுரம்
சங்கரர் அவர்களையெல்லாம் கோயிலுக்கு வாங்கோ, அங்கே போய் பேசிக்கலாம் என்று சொல்லி உள்ளே தெய்வ சந்நதிக்கே அழைச்சுண்டு போய் விட்டார். 


உள்ளே போனதும் “சத்யமே அத்வைதம்... அத்வைதமே சத்யம்” ன்னு மூன்று முறை அசரீரி மாதிரி பெரிய குரல் வந்தது.


சிவலிங்கத்தின் இரண்டு புறமும், இரண்டு பெரிய கைகள் நீண்டு வந்தன.


அது அந்த அசரீரிக்குரலை ஆமோதிப்பது போல இருந்தது.


எல்லா சைவாளும் நமஸ்கரித்து சங்கரரையே குருவாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.


கிட்டு:


ஆஹா! என்ன ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது!! நான் பார்க்காம விட்டுட்டேனே!!!


பட்டு:


அது மட்டுமா! ’திருவானைக்கா’ வுக்கு சங்கரர் போனபோது, பக்தாள் யாருமே அகிலாண்டேஸ்வரி அம்பாளை தரிஸிக்க முடியாமல் இருந்தது. 


அம்பாளுக்கு ஒரே கோபம். ஆக்ரோஷம். யாருமே கிட்ட நெருங்க முடியவில்லை. கருவறைக்குப்போனால் அனல் அடிக்குது. சங்கரரிடம் எல்லோரும் இதைப்பற்றிச் சொல்லி முறையிட்டனர்.


கிட்டு:


அப்புறம் சங்கரர் என்ன தான் செய்தார்?


பட்டு:


அம்பாள் காதுகளில் போட *தாடங்கம்* என்று ஒரு ஜோடி நகை செய்யச்சொல்லி, தன் கைகளாலேயே சங்கரர் அந்த அம்பாளுக்கு அணிவித்தார். 


அம்பாள் சந்நதிக்கு நேர் எதிர்புறம், அம்பாளின் குழந்தையான தொந்திப் பிள்ளையாருக்கு சந்நதியை அமைக்கச் செய்தார் சங்கரர். 


கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா? 


அம்பாளின் கோபம் தணிந்து அந்த இடமே குளுமையாகி விட்டது. 


பக்தர்கள் கூட்டம் சங்கரரைக் கொண்டாடியது.


விழுந்து விழுந்து அனைவரும் சங்கரரை நமஸ்கரித்து வணங்கினார்கள்.


கிட்டு: 


ஆஹா! இதையும் நான் நேரில் கண்டுகளிக்கக் கொடுத்து வைக்கவில்லையே!


பட்டு:


அது போகட்டும். திருப்பதியிலே நம் சங்கரர் “விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்” ன்னு ஒண்ணு பாடினார் பாரு! காதில் அப்படியே தேன் பாய்வதாக இருந்தது. 


ஸ்ரீ மஹாவிஷ்ணுவை கால் முதல் தலை வரை அங்க அங்கமாக அழகாக வர்ணித்துப்பாடி அசத்தி விட்டார்.

கிட்டு:


பட்டு .... நீ சொல்வதைப் பார்த்தால் ஸ்ரீசைலத்திலும் ஏதாவது அதிஸயம் நடந்திருக்குமே!


பட்டு:


ஆமாம். அதிலென்ன சந்தேகம்?


மல்லிகார்ஜுன சிவனை மல்லிகை மணத்துடன் மரத்தடியில் பார்த்து பரவஸம் அடைந்த நம் சங்கரர், தன்னை மறந்து “சிவானந்த லகரி” என்ற ஸ்லோகத்தை, சீற்றத்துடன் எழும்பும் கடல் அலைபோல கணீரென்று பாடியது, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது.ஸ்ரீ மல்லிகார்ஜுன சிவன்கிட்டு:


சரி ...... சரி! இதையெல்லாம் கண் இருந்தும் என்னால் காண முடியாமல் போய் விட்டது. 


பத்ரிநாத் யாத்திரைக்குத் தயாராகி விடுவோம், நாம் ....... வாருங்கள்.[இதன் தொடர்ச்சி நாளை 29.04.2012 ஞாயிறு 
காலை 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்.


அதில் அத்வைதம் பற்றி 
ஸ்ரீ ஆதிசங்கரர் சொல்வது போல அழகான
எளிமையான அருள் வாக்குகள் சில, 
தகுந்த உதாரணங்களுடன் 
கொடுக்கப்பட்டுள்ளன. 


காணத்தவறாதீர்கள்] [*தாடங்கம்*திருச்சி திருவானைக்கோயில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்குக் காதில் அணிவிக்கப்படும் ஓர் ஆபரணம்; அது ஸ்ரீசக்ர வடிவில் அமைந்திருக்கக்கூடிய ஒன்று]

35 comments:

 1. // கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா? // என்ன ஒரு அறிவார்ந்த செயல்.

  அருமையாக செல்கிறது. சுவைபட எழுதும் உங்களுக்கு என் வணக்கங்கள்

  ReplyDelete
 2. ஆதிசங்கரரின் பெருமைகளை வரிசையாக தெரிந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறேன்.

  அகிலாண்டேஸ்வரியின் தாடங்கம் பற்றி முன்பு ஒரு புத்தகத்திலும் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. @ திருச்சி கைலாசபுரம் குடியிருப்பில் வருடா வருடம் ஒரு குடும்பம் ஸ்ரீ சங்கர ஜயந்தி கொண்டாடுவர்கள்.அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை.அவரது மனைவியை காரைக்குடி மாமி என்பார்கள்.நிறைய புத்திர சம்பத்து உள்ளவர்கள். என் மனைவி தவறாமல் கலந்து கொள்வாள்.

  ReplyDelete
 4. VGK அவர்களுக்கு வணக்கம்! ஆதி சங்கரர் பற்றிய தங்கள் பதிவுகள் மற்றும் மற்றைய ஆன்மீக பதிவுகள் அனைத்தும், ஒரு நூலாக வெளிவரும் நாள் தூரத்தில் இல்லை என்று தெரிகிறது. அடுத்து வரும் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 5. G.M Balasubramaniam said...
  @ //திருச்சி கைலாசபுரம் குடியிருப்பில் வருடா வருடம் ஒரு குடும்பம் ஸ்ரீ சங்கர ஜயந்தி கொண்டாடுவர்கள்.அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை.அவரது மனைவியை காரைக்குடி மாமி என்பார்கள்.நிறைய புத்திர சம்பத்து உள்ளவர்கள். என் மனைவி தவறாமல் கலந்து கொள்வாள்.//

  ஐயா,
  வணக்கம்.
  அவர் பெயர்: N. ராமநாத ஐயர்.
  சமீபத்தில் ஓராண்டு முன் காலமாகி விட்டார். BHEL NDTL இல் வேலை பார்த்து 24.12.1983 இல் பணி ஓய்வு பெற்றவர். அவரின் சொந்த ஊர் காரைக்குடி ஆதனகோட்டை என்று கேள்வி. எனக்கு மிகவும் வேண்டிய தங்கமான நபர் அவர்.

  அவரின் தந்தையால் காரைக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தை தொடர்ந்து பல்லாண்டுகள் நடத்தி வந்தார் நம் BHEL கைலாஸபுரத்தில். நானும் ஒவ்வொரு வருஷம்ம் கலந்து கொண்டதுண்டு.

  இப்போது அவர் மகன் ஸ்ரீ ஹரிஹரன் என்பவர் 90 ஆவது ஆண்டாக 26.04.2012 முதல் 30.04.2012 வரை அதே BHEL கைலாஸபுரத்தில் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார்.

  இந்த ஹரிஹரன் நம் BHEL 53 Bldg. இல் E2 or E3 ஆகப் பணியாற்றுகிறார்.

  அவர் வீட்டு விலாசம்:
  R. HARIHARAN
  Plot No. 4/76-A,
  2nd Cross Street,
  Ganesapuram,
  Tiruchi-620014

  Phone: 0431-2513334

  இவரும் எனக்கு நண்பரே; எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள்ளாகவே.

  அவரையும் ஞாபகமாக இந்தப்ப்திவினில் கொண்டுவர வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றிகள்.

  பரம்பரை பரம்பரையாக கடந்த 90 வருஷங்களாக ஸ்ரீமத் சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் மிகச்சிறப்பாக செய்து வரும் புண்யாத்மாக்கள்.

  நிறைய வேதவித்துக்களை அழைத்து, வேத பாராயணம், பிரவசனம் முதலியன செய்து வருகிறார்கள்.

  நான் என்னால் முடிந்த ஒரு தொகையை ஒவ்வொரு ஆண்டும்
  இவர்களுக்குக் கொடுத்து வருவதோடு சரி.

  அன்புடன் vgk

  ReplyDelete
 6. உங்கள் பதிவைப் படித்ததும் முதல் முதல் அம்பாளைத் தரிசித்ததும்,கோவில் குருக்கள் ஸ்ரீசக்கர வரலாற்றைச் சொன்னதும் நினைவுக்கு வந்தது. இதே தாடங்கத்தை ஸ்ரீ மஹாபெரியவா கழற்றிச் சீர் செய்து மாட்டியதையும் சொன்னார்,.இந்தத் தாயின் அழகு இன்றும் மனதில் நிற்கிறது. அருமையான பகிர்தலுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 7. ஆதிசங்கரரின் பெருமைகளை வரிசையாக தெரிந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறேன்.

  அகிலாண்டேஸ்வரியின் தாடங்கம் பற்றி முன்பு ஒரு புத்தகத்திலும் படித்திருக்கிறேன்

  ரொம்ப நல்ல விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிகிரது அதற்கு நன்றி

  ReplyDelete
 8. ஆதிசங்கரரின் அற்புதங்களைத் தொடர்ந்து எளிமையாகத் தருகிறீர்கள். நானும் நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 9. உள்ளே போனதும் “சத்யமே அத்வைதம்... அத்வைதமே சத்யம்” ன்னு மூன்று முறை அசரீரி மாதிரி பெரிய குரல் வந்தது.


  சிவலிங்கத்தின் இரண்டு புறமும், இரண்டு பெரிய கைகள் நீண்டு வந்தன.


  அற்புதமான காட்சிப்பதிவு..

  ReplyDelete
 10. அம்பாளின் கோபம் தணிந்து அந்த இடமே குளுமையாகி விட்டது.


  ஸ்ரீ சக்ர தாடங்கம் அணிந்த அம்பிகையை மனதில் காட்சியளிக்க வைத்த குளுமையான பகிர்வு ..

  ReplyDelete
 11. “விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்” !
  தேன் பாய்வதாக அருமையாய் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 12. “சிவானந்த லகரி” என்ற ஸ்லோகத்தை, சீற்றத்துடன் எழும்பும் கடல் அலைபோல ஆனந்த லஹரி அற்புத பாடல்கள்..

  ReplyDelete
 13. அகிலாண்டேஸ்வரி - பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் எனக்கு. தடாங்கம் அணிவித்து அம்மனின் பார்வையை அருட்பார்வையாக்கிய விஷயம் படித்துத் தெரிந்து கொண்டேன்.

  நல்ல பகிர்வுகள் தொடரட்டும்.

  ReplyDelete
 14. I remember the day I visited these holy places. I can view these places in my "ahakan".
  Thanks for reminding me.
  Waiting for next post.
  viji

  ReplyDelete
 15. ஆனைக்காவில் அருள்புரியும் அகிலாண்டேஸ்வரியை மீண்டும் ஒருமுறை தரிசித்த திருப்தி ஏற்பட்டது!
  நன்றி!

  ReplyDelete
 16. ஆதி சங்கரரின் அற்புத வாழ்வை படம் பிடித்து காட்டுகிறீர்கள்.நன்றி. கதை சொல்லும் முறை அருமை.

  ReplyDelete
 17. அம்பாள் சந்நதிக்கு நேர் எதிர்புறம், அம்பாளின் குழந்தையான தொந்திப் பிள்ளையாருக்கு சந்நதியை அமைக்கச் செய்தார் சங்கரர்.


  கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா?


  அம்பாளின் கோபம் தணிந்து அந்த இடமே குளுமையாகி விட்டது.//

  எல்லோர் மனதிலும் குளுமையை அம்பாள் தரட்டும்.
  ஆதிசங்கரரின் அற்புதங்களை படிக்கும் போது பரவசம் ஏற்படுகிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. பத்ரிநாத் யாத்திரைக்குத் தயாராகி விடுவோம், நாம் ....... வாருங்கள்.//

  நான் தயாராகி விட்டேன்.
  உங்கள் பதிவில் பத்ரிநாத யாத்திரை பார்த்து விட்டு அடுத்த மாதம் பத்ரிநாத் யாத்திரை போக வேண்டும் என்பது இறைவன் சித்தம் போலும்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. நிறைய தகவல்கள் புதிது. கோடி நன்றி.

  ReplyDelete
 20. Very interesting info...Thanx...

  ReplyDelete
 21. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 22. interesting. I had been to the thiruvanaika temple, but never heard about this part of temple history. thanks for sharing.

  ReplyDelete
 23. Mira said...
  //interesting. I had been to the thiruvanaika temple, but never heard about this part of temple history. thanks for sharing.//

  Thanks for your kind entry & valuable comments, Mira.

  முடிந்தால் அடுத்தமுறை திருவானைக்கா செல்லும்போது பகல் 11.30 முதல் 12.30 வரை ஸ்வாமி [ஸ்ரீ ஜம்புகேவரர் சிவன்]சந்நதியில் இருப்பது போல செல்லுங்கள்.

  கோயில் குருக்கள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் [அம்பாள்] போல புடவை அணிந்துகொண்டு, ஸ்வாமி சந்நதிக்கு வருவார்.

  பிறகு பிரத்யக்ஷ கோபூஜை நடைபெறும்.

  அம்பாளே சிவ தரிஸனம் செய்து பூஜிப்பதாக ஐதீகம்.

  அந்த நிகழ்ச்சி வெகு அழகாக இருக்கும்.

  ஒரு 100 பேர்களாவது தினமும் இதை தரிஸிக்கவே காத்திருப்பார்கள்.

  அன்புடன்
  GOPU

  ReplyDelete
 24. Mira said...
  //interesting. I had been to the thiruvanaika temple, but never heard about this part of temple history. thanks for sharing.//

  Thanks for your kind entry & valuable comments, Mira.

  முடிந்தால் அடுத்தமுறை திருவானைக்கா செல்லும்போது பகல் 11.30 முதல் 12.30 வரை ஸ்வாமி [ஸ்ரீ ஜம்புகேவரர் சிவன்]சந்நதியில் இருப்பது போல செல்லுங்கள்.

  கோயில் குருக்கள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் [அம்பாள்] போல புடவை அணிந்துகொண்டு, ஸ்வாமி சந்நதிக்கு வருவார்.

  பிறகு பிரத்யக்ஷ கோபூஜை நடைபெறும்.

  அம்பாளே சிவ தரிஸனம் செய்து பூஜிப்பதாக ஐதீகம்.

  அந்த நிகழ்ச்சி வெகு அழகாக இருக்கும்.

  ஒரு 100 பேர்களாவது தினமும் இதை தரிஸிக்கவே காத்திருப்பார்கள்.

  அன்புடன்
  GOPU

  ReplyDelete
 25. அம்பாளின் கோபத்தைத் தணிக்க ஸ்ரீசங்கரர் செய்த உபாயம் போற்றத்தகுந்தது.

  ReplyDelete
 26. திருவிடை மருதூர் மகாலிங்கஸ்வாமி கோவில் எவ்வளவு பெரியது.

  உங்கள் முதல் புகைப்படத்தில் இருப்பது சிங்கக் கிணறு.

  திருவானைக்கா சென்றபோது அந்த தாடகத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

  அன்னையின் முன் மகன் அருமையான யோசனை. பிள்ளையின் மழலை முன் தாயாரெல்லாம் சரண்டர் தான்.

  ReplyDelete
 27. \\கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா?\\ தாய்மையின் பலமும் பலவீனமும் அறிந்தவர் அல்லவா?

  ReplyDelete
 28. அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களும் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. மழுவதாக நம்பிக்கை வைத்து பூரண சரணாகதி ஆவது தான் நம்மால் முடிந்தது

  ReplyDelete
 31. படங்கலா நல்லா கீதுஃபுல்லா சரண்டர் ஆகிபிடணுமோ

  ReplyDelete
  Replies
  1. :) ஆமாம். அப்படித்தான் சொல்றாங்கோ :)

   Delete
 32. சிவானந்தலஹரி ஸ்லோகம் பிறந்த விதம் அம்மனுக்கு தாடங்கம் பண்ணிப்போட்டது பிள்ளையாரையே அம்மனுக்கு எதிர்ல பிரதிஷ்டை செய்தது எல்லாமே அருமை.

  ReplyDelete
 33. திருவிடைமருதூர் கோயில் நான் போயிருக்கிறேன்...பெரியது..அருமையானது..

  ReplyDelete