என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

காலம் மாறிப்போச்சு ! சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2


அனைவருக்கும் இனிய 
”பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்”காலம் மாறிப்போச்சு!

சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2

By வை. கோபாலகிருஷ்ணன்ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு, என் மகன் அழைப்பின் பேரில் துபாய் சென்று ஒண்ணரை மாதங்கள் தங்கும்படி நேர்ந்தது. அதனிடையில் விநாயக சதுர்த்தி பண்டிகையும் வந்தது. ”நம் ஊராக இருந்தால் களிமண்ணில் பிள்ளையார் செய்துகொண்டு ஒரே அமர்க்களப்படும்” என்று என் மகனிடம் முதல் நாள் சாயங்காலம் கூறினேன். 

”இங்கேயும் பிள்ளையார் கிடைக்கும் அப்பா”, என்று சொல்லி உடனே யாருக்கோ போன் செய்து பேசினான். 

”அப்படியா, ஓ.கே. என்ன விலையானாலும் பரவாயில்லை. அந்த ஒரே ஒரு பிள்ளையாரை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் நேரில் வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, என்னையும் அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டான்.

நீண்ட பயணத்திற்குப்பின் கார் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிச்சுற்றி வருவது போல எனக்குத்தோன்றியது. பிறகு தான் புரிந்தது, கார் பார்க் செய்ய இடமில்லாமல் என் மகன் கஷ்டப்படுகிறான் என்று.

ஒருவழியாகக் காரை ஓர் இடத்தில் பார்க் செய்துவிட்டு, அங்குள்ள மிஷினில் பணம் போட்டு, அதற்கான டோக்கன் ஒன்றை காரின் முன்புறக்கண்ணாடியில், வெளியிலிருந்து பார்த்தால் தெரிவது போல வைத்துவிட்டு, ரிமோட் மூலம், கார் கண்ணாடிகளையும், கதவுகளையும் தானாகவே மூடச்செய்துவிட்டு, ஒரு சந்தின் குறுக்கே நுழைந்து அந்தக் கடைக்குக் கூட்டிச்சென்றான்.

”பெருமாள் பிள்ளை பூக்கடை” என்று தூய தமிழில் எழுதியிருந்தது, என்னை வியப்பில் ஆழ்த்தியது.   அருகிலேயே ஒரு சிவன் கோயில். அர்ச்சனை சாமான்கள் முதல் அனைத்து பூஜை சாமான்களும் விற்கப்படும் அருமையான கடை அது. அந்தக்கடையில் உள்ள அனைவரும் தமிழில் பேசினர். தமிழ்நாட்டுக்கே வந்து விட்டது போல மிகவும் சந்தோஷப்பட்டேன்.

கடைக்காரர் வரவேற்றதும் என் மகன் தான் புக் செய்திருந்த பிள்ளையாரைக் கேட்டான். ”பலபேர் வேண்டி விரும்பிக்கேட்டும் ஸ்டாக் தீர்ந்துவிட்டது என்று சொல்லி உங்களுக்காகவே ரிசர்வ் செய்து வைத்துவிட்டேன்” என்று சொல்லி அந்த மிகச்சிறிய களிமண் பிள்ளையாரை எடுத்துக்காட்டி பேக் செய்து கொடுத்தார். 

“என்ன விலை” என்று என் மகனிடம் கேட்டேன். 

”இருபது திர்ஹாம் மட்டுமே” என்று சொன்னான். 

நம்மூர் மதிப்புக்கு 250 ரூபாய் என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டேன். மற்ற தேங்காய், வாழைப்பழம், பூக்கள் முதலிய பூஜைக்குத் தேவைப்படும் எல்லா சாமான்களையும் அங்கேயே வாங்கிக்கொண்டு, சிவன் கோயிலுக்குப்போய் சிவனையும் தரிஸித்து விட்டு, காரில் வீடு வந்து சேர இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. 

நம்மூரில் ஐந்து அல்லது பத்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்தக்களிமண் பிள்ளையார் இங்கு இவ்வளவு விலை விற்கிறது. அதுவும் அதை வாங்கிவர காருக்குப்பெட்ரோல் முதல் கணக்குப்போட்டால் .... அப்பாடா” என்றேன்.

“அப்பா, நீ முதன் முதலாக எங்கள் துபாய்க்கு வந்திருக்கிறாய். நாளைக்கு விநாயகர் பூஜை இங்கு நம் வீட்டில் செய்யப்போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!;

காசு கொடுத்தாலும், நமக்கு வேண்டிய எந்தப்பொருளும் கிடைக்கிறதே! அதுவே மிகப்பெரிய விஷயம் அல்லவா! மேலும் நம் நாட்டிலிருந்து துபாய் வரை, ஆகாய விமானத்தில் பறந்து வந்துள்ள பிள்ளையார் அல்லவா இது! அதையெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால், நாம் இந்தப் பிள்ளையாருக்காகக் கொடுத்துள்ளது மிகவும் சொற்பத்தொகையாகும்” என்றான். 

இவனின் இந்தப் பேச்சைக் கேட்க, நல்ல வேளையாக என் தகப்பனாரும் இல்லை, என் மாமனாரும் இல்லை.

மறுநாள் பூஜையில் வைத்த களிமண் பிள்ளையாருக்கு, லேசாக பத்து உத்தரணி அபிஷேகம், அலங்காரம், மலர்களால் அர்ச்சனை, நைவேத்யம் எல்லாம் செய்து என் பேரனிடம் காட்டி மகிழ்ந்தேன். ”பிள்ளையாரை பூஜை முடிந்ததும் நாளைக்கு எடுத்து உன்னிடம் தருகிறேன்; நீ விளையாடலாம்” என்றேன்.    

“நோ ... தாத்தா ..... ஐ டோண்ட் வாண்ட் திஸ்; ஐ ஹாவ் ப்ளெண்டி ஆஃப் ந்யூ டாய்ஸ் வித் மீ” என்று சொல்லி தன்னுடைய விளையாட்டு சாமான்கள் வைத்திருக்கும் தனி அறைக்கு என்னைக் கூட்டிச் சென்றான்.

பல்வேறு வகையான கார்கள், விமானங்கள், கீ கொடுத்தால் ஓடும் பொம்மைகள், ஆடும் பொம்மைகள், விளக்கு எரியும் பொம்மைகள், ஒலி எழுப்பும் மிருக பொம்மைகள், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பலவிதமான விசித்திரமான பொம்மைகள் என ஏராளமானவற்றைக்காட்டி என்னை பிரமிக்க வைத்து விட்டான்,
புதிதாக அப்பா நேற்று வாங்கி வந்தது என்று சொல்லி, ஒரு பெரிய பார்ஸலைப் பிரித்தான். உள்ளே ஒரு ரோபோ பொம்மை - பலவிதமான வேலைகள் செய்யுமாம். அதன் அட்டைப்பெட்டியில் போட்டிருந்த விலையைப்பார்த்தேன். எழுநூறு திர்ஹாம் என ஒட்டப்பட்டிருந்தது. நம்மூர் விலைக்கு ஒரு 8000 அல்லது 9000 ரூபாய் இருக்கலாம். 

என்னுடைய பேரனின் தற்போதைய வயதாகிய இதே ஏழு வயதில், நான் ஒரே ஒரு கலர் பிள்ளையார் பொம்மைக்கு ஆசைப்பட்டு, அதுவும் கிடைக்காமல் நிராசையானதை நினைத்துக்கொண்டேன். என் பேரன் விளையாடும் பொம்மைகளைப் பார்த்து எனக்கு மிகவும் பிரமிப்பு ஏற்பட்டது. அவனுடனும், அந்த அழகழகான பொம்மைகளுடனும் விளையாடிய நானும் அன்று ஒரு சிறு குழந்தையாகவே மாறிப்போனேன். இந்தப்பேரனிடம் போய் களிமண் பிள்ளையாரை விளையாடத்தருவதாகச் சொன்னோமே என மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டேன்.  

காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.  மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!
காலம் மாறிப்போச்சு!

இருப்பினும் பிள்ளையார் காப்பாற்றுவார்!!
  
-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-

99 கருத்துகள்:

 1. காலம் மாறிப்போச்சு அனுபவக் கதை
  அருமையிலும் அருமை
  தற்போதைய குழந்தைகளுக்கு
  பிள்ளையார் பொம்மையின் பெருமைகள் அருமைகள்
  தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லைதான்
  அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி
  தங்களின்பிள்ளையார் குறித்த மனோ நிலை
  அதை திருப்தி செய்ய தங்கள் மகன் எடுத்துக்கொண்ட முயற்சி
  அதை வெறும் பொம்மையாகக் கூட அங்கீகரிக்கத் தயங்கும் பேரன்
  அதனை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் தங்கள் முதிர்ச்சி
  ஒரு சிறு விஷயத்தை வைத்து தலைமுறை வித்தியாசத்தை
  மிக அழகாகச் சொல்லிப்போனதை எண்ணி எண்ணி
  மிகவும் மகிழ்ந்தேன்
  தரமான மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வை.கோ

  இரண்டாம் பாகம் அருமையாக உள்ளது. நம் இளமைப் பிராயமும் நமது பேரக்குழந்தைகளின் இளமைப் பிராயத்திற்கும் எவ்வள்வு வேறுபாடுகள் ... நமது பிராயம் வறுமையில் திறமையாக மகிழ்வுடன் இருந்த காலம். அவர்கள் பிராயம் செல்வச் செழிப்பில், எதிலும் ஈடுபாடு இல்லாமல் பல்வேறு சிந்தனைகளில் வாழும் காலம்.

  பேரனுக்குத் தாத்தா செய்து காட்டிய விநாயகர் பூஜை - விளையாட பிள்ளையாரை விட அவனுக்குப் பிடித்த பொம்மைகளையே அவன் விரும்பியது ..... காலம் மாறிவிட்டது வை.கோ.

  மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது. நாம் மாற வில்லை எனில் மாற்றம் நம்மை மாற்றி விடும்.

  நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. மாறும் காலங்களையும், மாறும் மனோ பாவங்களையும், அழகாகச் சொல்லி மாறாதது நித்தம் நிகழும் மாற்றங்கள் மட்டுமே என்பதை அழகாக நிறுவியுள்ளீர்கள். காசு பணம் பார்க்காமல் மக்களின் மன உணர்வுகளை மதிப்பதும் சுகம். காசை வேஸ்ட் செய்யாமல் சந்ததியினருக்குச் சேர்த்து அவர்கள் வாழ்வில் மேலும் முன்னேற வழி செய்ததும் அழகு என்றாலும் என் வோட் முதலாவதற்கே.

  பதிலளிநீக்கு
 4. இரண்டு பகுதிகளையும் படித்தேன்.தங்களின் அனுபவம் மற்றும் கால மாற்றங்களை இனிமையாகவும்,நகைச்சுவையாகவும் சிறுகதையாக்கிள்ளீர்கள்.

  உ.ம்:தங்கள் அப்பாவையும் மாமனாரையும் ஓப்பிட்டது,மனுடன் கார் பார்க்கிற்க்காக சுற்றியது.தலைமுறை மாற்றங்களை சந்தித்துதான் வருகிறோம்.நல்லவைகளை ஏற்போம்.அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. //நம்மூரில் ஐந்து அல்லது பத்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்தக்களிமண் பிள்ளையார்//

  நம்ம ஊரிலும் இப்ப முப்பது ரூபாய்க்கு குறைந்து பிள்ளையார் கிடையாது

  //தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!//

  முக்கியமான மறுக்க முடியாத உண்மையை தெளிவு பட கூறி நன்றாக முடித்து இருக்கிறீர்கள்

  மேலும் இது போல் பல பதிவுகளை எங்களுக்கு அளிக்க பிள்ளையார்
  தங்களை பூரண ஆரோக்கியத்துடனும் மன நிறைவுடனும் வைக்க பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. காலமாற்றத்தை அருமையாகக் காட்டியுள்ளீர்கள். முதல் பாக பின்னூட்டத்தில் நாணயங்களைப் பற்றிய தங்கள் பகிர்வு மிக அருமை. அணா பார்த்ததில்லை எனினும் 1 முதல் 20 பைசா, தாமரைப் படமிட்டது உட்பட பார்த்திருக்கிறேன். சில கைவசம் உள்ளன. படமெடுத்துப் பகிர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஆம் ஐயா,
  மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  ஒரு அழகான அனுபவபகிர்வு.நன்றி பகிர்வுக்கு.

  ///.அப்பா, நீ முதன் முதலாக எங்கள் துபாய்க்கு வந்திருக்கிறாய். நாளைக்கு விநாயகர் பூஜை இங்கு நம் வீட்டில் செய்யப்போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!;//

  அருமையான பிள்ளை. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 8. காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. //

  என்றும் மாறாத வரிகள்!

  பதிலளிநீக்கு
 9. காலம் மாறும் காட்சியும் மாறும்

  கைக்கு எட்டாககனிகள் காலடியில்!

  பதிலளிநீக்கு
 10. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!

  அனுபவமொழிகள் அட்சரலட்சம் பெறும்!

  பதிலளிநீக்கு
 11. தலைமுறை வித்தியாசத்தை
  மிக அழகாகச் சொல்லி மனம் கவர்ந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. இதுதான் தலைமுறை மாற்றமோ.... வாழ்க்கைதரம் உயர்ந்து விட்டது அல்லவா

  பதிலளிநீக்கு
 13. மாற்றங்கள் ஒன்று தானே மாறாதவை .....அழகான கதை .....

  பதிலளிநீக்கு
 14. அருமையான பதிவு. அனுபவங்களே அழகிய கதைகளாக மலர்கிறது.

  பதிலளிநீக்கு
 15. காலத்திற்கேற்ற பொருத்தமான அனுபவப் பதிவு!

  நான் இன்று வாசலில் வாங்கிய பிள்ளையார் 35 ரூபாய்!

  பதிலளிநீக்கு
 16. ஆமாங்க மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருக்கு .ஒருவேளை பெண் பிள்ளைகள் வித்தியாசமோ .ஏன் என்றால் .
  எத்தனயோ barbie ,bratz பொம்மைகள் இருந்தாலும் பானைகடையில் சின்ன சொப்புகளை என் மகள் ஆசையோடு வாங்கினாள்.அருமையான அனுபவ பகிர்வு.

  பதிலளிநீக்கு
 17. ரொம்ப அருமை கோபால் ஜி.. குழந்தைகளிடம் என் அம்மா ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டார் ஒரு தரம்.. அது ஞாபகம் வந்து என்னைப் புன்முறுவல் பூக்க வைத்தது உங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு
 18. நாளைக்கு விநாயகர் பூஜை இங்கு நம் வீட்டில் செய்யப்போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!

  மனிதரைக் கொண்டாடுகிற அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 19. நம் சந்தோஷத்துக்கு பைசா பார்க்க முடியுமா என்ன?

  பதிலளிநீக்கு
 20. களிமண் பிள்ளையாரிலிருந்து லீட் எடுத்து அழகாக மாற்றங்களை வரவேற்றுள்ளீர்கள். முதல் பகுதியை வைத்து கெஸ் பண்ணவே முடியவில்லை. அருமையான கதை. நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 21. இன்றைக்கு முழுவதும் நான் வினாயகருடன் பிஸியாக இருந்ததால், இங்கு வர சற்று தாமதம் ஆகிவிட்டது சார்.

  பதிலளிநீக்கு
 22. Ramani said...
  //காலம் மாறிப்போச்சு அனுபவக் கதை
  அருமையிலும் அருமை
  தற்போதைய குழந்தைகளுக்கு
  பிள்ளையார் பொம்மையின் பெருமைகள் அருமைகள்
  தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லைதான்
  அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி
  தங்களின்பிள்ளையார் குறித்த மனோ நிலை அதை திருப்தி செய்ய தங்கள் மகன் எடுத்துக்கொண்ட முயற்சி
  அதை வெறும் பொம்மையாகக் கூட அங்கீகரிக்கத் தயங்கும் பேரன்
  அதனை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் தங்கள் முதிர்ச்சி; ஒரு சிறு விஷயத்தை வைத்து தலைமுறை வித்தியாசத்தை மிக அழகாகச் சொல்லிப்போனதை எண்ணி எண்ணி
  மிகவும் மகிழ்ந்தேன். தரமான மனம் கவர்ந்த பதிவு. தொடர வாழ்த்துக்கள்//

  அன்புள்ள ரமணி சார், தங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது. மிகவும் சந்தோஷம். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 23. துஷ்யந்தன் said...
  //தரம் மிக்க சிறுகதையே அய்யா..//

  தங்களின் தரமான கருத்துக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. cheena (சீனா) said...
  //அன்பின் வை.கோ

  இரண்டாம் பாகம் அருமையாக உள்ளது. நம் இளமைப் பிராயமும் நமது பேரக்குழந்தைகளின் இளமைப் பிராயத்திற்கும் எவ்வள்வு வேறுபாடுகள் ... நமது பிராயம் வறுமையில் திறமையாக மகிழ்வுடன் இருந்த காலம். அவர்கள் பிராயம் செல்வச் செழிப்பில், எதிலும் ஈடுபாடு இல்லாமல் பல்வேறு சிந்தனைகளில் வாழும் காலம்.

  பேரனுக்குத் தாத்தா செய்து காட்டிய விநாயகர் பூஜை - விளையாட பிள்ளையாரை விட அவனுக்குப் பிடித்த பொம்மைகளையே அவன் விரும்பியது ..... காலம் மாறிவிட்டது வை.கோ.

  மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது. நாம் மாற வில்லை எனில் மாற்றம் நம்மை மாற்றி விடும்.

  நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா//

  தங்களின் அன்பான வருகை+ஆழமான அழகான கருத்துக்கள்+பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள் எல்லாம் எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. மிக்க நன்றி ஐயா. vgk

  August 31, 2011 4:59 PM

  பதிலளிநீக்கு
 25. ஸ்ரீராம். said...
  //மாறும் காலங்களையும், மாறும் மனோ பாவங்களையும், அழகாகச் சொல்லி மாறாதது நித்தம் நிகழும் மாற்றங்கள் மட்டுமே என்பதை அழகாக நிறுவியுள்ளீர்கள். காசு பணம் பார்க்காமல் மக்களின் மன உணர்வுகளை மதிப்பதும் சுகம். காசை வேஸ்ட் செய்யாமல் சந்ததியினருக்குச் சேர்த்து அவர்கள் வாழ்வில் மேலும் முன்னேற வழி செய்ததும் அழகு என்றாலும் என் வோட் முதலாவதற்கே.//

  வருகைக்கும், ”காசு பணம் பார்க்காமல் மக்களின் மன உணர்வுகளை மதிப்பதும் சுகம்” என்பதற்கே தங்கள் வோட் என்ற சிறப்பான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், மனமார்ந்த நன்றிகள் ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்.

  பதிலளிநீக்கு
 26. thirumathi bs sridhar said...
  //இரண்டு பகுதிகளையும் படித்தேன்.தங்களின் அனுபவம் மற்றும் கால மாற்றங்களை இனிமையாகவும்,நகைச்சுவையாகவும் சிறுகதையாக்கிள்ளீர்கள்.

  உ.ம்:தங்கள் அப்பாவையும் மாமனாரையும் ஓப்பிட்டது,மகனுடன் கார் பார்க்கிற்க்காக சுற்றியது.தலைமுறை மாற்றங்களை சந்தித்துதான் வருகிறோம்.நல்லவைகளை ஏற்போம்.அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்//

  தங்கள் கருத்துக்கள்+விரும்பிய பகுதி+நகைச்சுவைப்பகுதிகள்+விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள், நீண்ட நாட்களுக்குப்பின் வருகை முதலிய எல்லாவற்றிற்கும் நன்றிகள், மேடம்.

  உங்களின் பிள்ளையார் ஸ்பெஷல் பகுதி இன்று ரொம்பப் பிரமாதமாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. raji said...
  //நம்மூரில் ஐந்து அல்லது பத்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்தக்களிமண் பிள்ளையார்//

  ///நம்ம ஊரிலும் இப்ப முப்பது ரூபாய்க்கு குறைந்து பிள்ளையார் கிடையாது///

  ஆமாம். நல்ல வாளிப்பான கஷ்குமுஷ்கு களிமண் பிள்ளையாரை ரூ 30 முதல் 60 வரை சொல்லுகிறார்கள். Value added ஆக கிரீடத்திற்கு தங்கக்கலர் பூச்சு, முன் பகுதிமுழுவதும் ஏதோ கருப்புகலர் பெயிண்ட், அழகாக கண்ணைக்கவரும் கலரில் குடைகள் (தனியாக 10 ரூபாய்க்கு) என்று பலவித முன்னேற்றங்கள் இந்த வருஷம். எங்கள் தெருவே இன்று காலை ஜே ஜே என்று இருந்தது.


  //தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!//

  ///முக்கியமான மறுக்க முடியாத உண்மையை தெளிவு பட கூறி நன்றாக முடித்து இருக்கிறீர்கள்///

  நீங்களே நீண்ட நாட்களுக்குப்பின், அவ்வப்போது அத்திப்பூத்தாற்போல எப்போதாவது வந்து பாராட்டிச்செல்வது, மனதிற்கு இதமளிக்கிறது.


  //மேலும் இது போல் பல பதிவுகளை எங்களுக்கு அளிக்க பிள்ளையார்
  தங்களை பூரண ஆரோக்கியத்துடனும் மன நிறைவுடனும் வைக்க பிரார்த்திக்கிறேன்.//

  பூரண ஆரோக்கியமும், மன நிறைவும் தாங்க ரொம்ப முக்கியமாக, அவசியமாகத் தேவைப்படுகிறது.
  தங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.
  என் மனமார்ந்த நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 28. ராமலக்ஷ்மி said...
  //காலமாற்றத்தை அருமையாகக் காட்டியுள்ளீர்கள். முதல் பாக பின்னூட்டத்தில் நாணயங்களைப் பற்றிய தங்கள் பகிர்வு மிக அருமை. அணா பார்த்ததில்லை எனினும் 1 முதல் 20 பைசா, தாமரைப் படமிட்டது உட்பட பார்த்திருக்கிறேன். சில கைவசம் உள்ளன. படமெடுத்துப் பகிர்கிறேன்.//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், முதல் பாகத்திற்கு நான் எழுதியுள்ள பின்னூட்டம் ஒன்றை பாராட்டியதற்கும் மிக்க நன்றிகள்.

  என்னிடம் கூட பழைய காசுகள் நிறைய இருந்தன. அவற்றை வீட்டில் இப்போது தேடிக் கண்டுபிடிப்பது சற்று கஷ்டமாக உள்ளது. ஒரு வேளை கிடைத்தால் முயற்ச்சிக்கிறேன்.

  தாங்கள் தங்களிடமுள்ளதை அவசியம் போட்டோ எடுத்து பதிவாக வெளியிடவும். vgk

  பதிலளிநீக்கு
 29. RAMVI said...
  ஆம் ஐயா,
  மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  ஒரு அழகான அனுபவபகிர்வு.நன்றி பகிர்வுக்கு.

  ///.அப்பா, நீ முதன் முதலாக எங்கள் துபாய்க்கு வந்திருக்கிறாய். நாளைக்கு விநாயகர் பூஜை இங்கு நம் வீட்டில் செய்யப்போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!;//

  அருமையான பிள்ளை. வாழ்த்துக்கள்..

  அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள்+ வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 30. இராஜராஜேஸ்வரி said...
  //காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. //

  என்றும் மாறாத வரிகள்! OK OK

  பதிலளிநீக்கு
 31. இராஜராஜேஸ்வரி said...
  காலம் மாறும் காட்சியும் மாறும்

  கைக்கு எட்டாககனிகள் காலடியில்!

  ஆமாம்! ஆமாம்!!
  ’காலடி’யில் ஒரு ஏழைக்காக தங்க நெல்லிக்கனிகளை வரவழைத்த ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் போல உள்ளது தங்களின் இந்தக் கருத்துக்கள், இந்த ஏழை எழுத்தாளனுக்காக. நன்றிகள்.vgk

  பதிலளிநீக்கு
 32. இராஜராஜேஸ்வரி said...
  தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!

  //அனுபவமொழிகள் அட்சரலட்சம் பெறும்!//

  அடேங்கப்பா! தெய்வாம்சம் பொருந்திய தாங்கள் சொல்லும் கருத்துக்கள் ஒரு வேளை அட்சரலட்சம் பெறலாம். மனமார்ந்த நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 33. இராஜராஜேஸ்வரி said...
  //தலைமுறை வித்தியாசத்தை
  மிக அழகாகச் சொல்லி மனம் கவர்ந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

  என் ஒவ்வொரு பதிவுக்கும் நான்கு அழகிய தாமரைகளை மலரச்செய்கிறீர்கள். அந்த ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மனே பிரத்யட்சமாக நேரில் வந்து தன் நான்கு திருக்கரங்களால் அருளாசி வழங்குவது போல உணர்ந்து மகிழ்கிறேன்.

  மிக மிக மிக மிக நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 34. Prabu Krishna (பலே பிரபு) said...
  //இதுதான் தலைமுறை மாற்றமோ.... வாழ்க்கைதரம் உயர்ந்து விட்டது அல்லவா//

  வாழ்க்கையின் பொருளாதாரத்தரம் ஓரளவுக்கு, அதுவும் ஒருசிலருக்கு உயர்ந்துள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  தலைமுறை மாற்றங்கள் சிலவிஷயங்களில் சிலரால் ஜீரணிக்க முடியாமல் தான் உள்ளது என்பதே உண்மை.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 35. கந்தசாமி. said...
  //மாற்றங்கள் ஒன்று தானே மாறாதவை .....அழகான கதை .....//

  அழகாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 36. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
  //அருமையான பதிவு.//

  தங்களின் அபூர்வ வருகையும், ஆச்சர்யமான கருத்துக்களும் தான், நான் ஏதோ என் சொந்த அனுபவங்களுக்கு சற்றே காது மூக்கு வைத்து எழுதிய கதைக்கு ஒரு ”அருமையான பதிவு” என்ற அங்கீகாரம் கிடைத்ததாக, என்னை மிகவும் மகிழ்வடையச்செய்கிறது.

  // அனுபவங்களே அழகிய கதைகளாக மலர்கிறது.//

  தங்களின் இந்தக்கருத்து முற்றிலும் உண்மை தான் மேடம்.

  தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
  வணக்கங்களுடன் vgk

  பதிலளிநீக்கு
 37. middleclassmadhavi said...
  //காலத்திற்கேற்ற பொருத்தமான அனுபவப் பதிவு!//

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  //நான் இன்று வாசலில் வாங்கிய பிள்ளையார் 35 ரூபாய்!//

  ஆமாம். இந்த ஆண்டு இங்கு திருச்சியிலும் 25 ரூபாய் முதல் 75 ரூபாய்கள் வரை பலவிதமான சைஸ் & டிசைன்களில் களிமண் பிள்ளையார் விற்கப்படுகின்றன.

  மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், வாங்கும் சக்தி அதிகரிப்பையும், முற்றிய பக்திப் பரவசத்தையும் காட்டுகிறதோ என்னவோ!

  நான் கதையில் குறிப்பிட்டுள்ளது 2004 ஆண்டு நடந்த [துபாய்] பிள்ளையார் சதுர்த்தி பற்றியது. அதனால் அப்போது சற்றே விலை குறைவாக இருந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 38. angelin said...
  //ஆமாங்க மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருக்கு .ஒருவேளை பெண் பிள்ளைகள் வித்தியாசமோ .ஏன் என்றால், எத்தனயோ barbie ,bratz பொம்மைகள் இருந்தாலும் பானைகடையில் சின்ன சொப்புகளை என் மகள் ஆசையோடு வாங்கினாள்.அருமையான அனுபவ பகிர்வு.//


  பெண் குழந்தைகள் எல்லோருமே ரொம்பவும் கட்டிச் சமத்தாகவே இருப்பார்கள். அவர்கள் ரசனை சற்றே மாறுபட்டதாக இருக்கக்கூடும். கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 39. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //ரொம்ப அருமை கோபால் ஜி.. குழந்தைகளிடம் என் அம்மா ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டார் ஒரு தரம்.. அது ஞாபகம் வந்து என்னைப் புன்முறுவல் பூக்க வைத்தது உங்கள் பதிவு.//

  மிகச்சிறந்த எழுத்தாளராகிய தங்கள் வருகை+பாராட்டுக்கள்+தங்கள் தாயார் தங்கள் குழந்தைகளிடம் ஸ்கேட்டிங் கற்றுக்கொண்ட ஞாபகம் வந்து புன்முறுவல் பூத்ததை பகிர்ந்து கொண்டது அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். vgk

  பதிலளிநீக்கு
 40. ரிஷபன் said...
  நாளைக்கு விநாயகர் பூஜை இங்கு நம் வீட்டில் செய்யப்போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!

  //மனிதரைக் கொண்டாடுகிற அருமையான பதிவு.//

  தங்களின் அருமையான கருத்துக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.
  மிக்க நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 41. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //நம் சந்தோஷத்துக்கு பைசா பார்க்க முடியுமா என்ன?//

  பார்க்க முடியவே முடியாது.

  ஆனால்......

  பஜ்ஜி, ஸ்பெஷல் ரவா, வெங்காய ஊத்தப்பம் கெட்டிச்சட்னி என்று நம் இஷ்டப்படி, நம் சந்தோஷத்திற்கு ஆர்டர் செய்யும் முன், பையில் பைசா இல்லாவிட்டாலும், ஒரு ஐநூறோ ஆயிரமோ நோட்டாக இருக்கா என்று ஒரு முறை பார்த்துக்கொள்வது தானே நல்லது!

  [நமது நீண்ட நாள் DUE ஒன்று பாக்கியுள்ளது ஸ்வாமி.] vgk

  பதிலளிநீக்கு
 42. சாகம்பரி said...
  //களிமண் பிள்ளையாரிலிருந்து லீட் எடுத்து அழகாக மாற்றங்களை வரவேற்றுள்ளீர்கள். முதல் பகுதியை வைத்து கெஸ் பண்ணவே முடியவில்லை. அருமையான கதை. நன்றி சார்.//

  தங்களின் அருமையான கருத்துக்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது, மேடம். மிக்க நன்றி.vgk

  பதிலளிநீக்கு
 43. சாகம்பரி said...
  //இன்றைக்கு முழுவதும் நான் வினாயகருடன் பிஸியாக இருந்ததால், இங்கு வர சற்று தாமதம் ஆகிவிட்டது சார்.//

  அதனால் என்ன பரவாயில்லை, மேடம்.

  எல்லோருமே உங்களைப்போலவே விநாயகருடன் பிஸியாகவே தான் இருந்திருப்பார்கள் என்றாலும், மிகச்சிறந்த முறையில் மிக அழகாக
  கைதேர்ந்த ஒரு சிற்பிபோல விநாயகரை தாங்களே சிலையாக வடித்ததைக்கண்டு நானே மிகவும் வியந்து போனேன். இது தங்களுக்கு இறைவன் தந்துள்ள தனித்திறமை.
  மிகுந்த பொறுமையும் வேண்டும்.

  மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
  பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

  vgk

  பதிலளிநீக்கு
 44. மிகவும் ரசித்தேன். சிறு வயதில் காலணாவுக்கு, ரோடு முக்கில் இருக்கும் பெட்டிக்கடையில் ஒரு சிறிய கேக் சைசில் தேங்காய் பர்பி வாங்கிச் சாப்பிட்டேன். இன்று அது பத்து ரூபாய். ஆனாலும் அந்த ருசி இல்லை.

  இந்த மாற்றங்களை இயற்கையாய் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும். இல்லையென்றால் கசப்புதான் மிஞ்சும்.

  பதிலளிநீக்கு
 45. DrPKandaswamyPhD said...
  //மிகவும் ரசித்தேன். சிறு வயதில் காலணாவுக்கு, ரோடு முக்கில் இருக்கும் பெட்டிக்கடையில் ஒரு சிறிய கேக் சைசில் தேங்காய் பர்பி வாங்கிச் சாப்பிட்டேன். இன்று அது பத்து ரூபாய். ஆனாலும் அந்த ருசி இல்லை.

  இந்த மாற்றங்களை இயற்கையாய் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும். இல்லையென்றால் கசப்புதான் மிஞ்சும்.//

  தங்களின் அன்பான வருகையும், மிகவும் ரசித்துப்படித்ததாகச் சொல்லியதும், அன்று ரோடு முக்கில் இருந்த பெட்டிக்கடையில் காலணாவுக்கு வாங்கிய சிறிய கேக் சைஸிலான தேங்காய் பர்பி போல இனிப்பாகவும் ருசியாகவும் பாகு பதமாகவும் உள்ளது.

  அந்த அருமையான நாட்களும், அந்த ருசியும், நம் இளமைப்பருவமும் இனி வரப்போவதில்லை தான்.

  தாங்கள் சொல்வது போல இன்றைய வாழ்க்கை கசந்து விடாமல் இருக்க மாற்றங்களை ஏற்றுக்கொள்ளப் பழகிடுவோம்.

  பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி, சார். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 46. அனுபவக் கதை.... மிகவும் அருமை... அந்தக் கால விளையாட்டுப் பொருட்களுக்கும், இப்போதைய விளையாட்டுப் பொருட்களுக்கும் நிறைய வித்தியாசம்....

  நாம் விளையாட்டு என்று விளையாடியதெல்லாம் இன்றுள்ள குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை....

  நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 47. அருமையான கதை. எங்கு சென்றாலும் எமது கலாச்சார நிகழ்வுகளைக் கொண்டு செல்லும் பிள்ளைகள் இருக்கும் வரை வாழ்வு சிறக்கும். கதையினூடாக, கதைச் சூழல் நடைமுறைகள் எடுத்துக்காட்டப்பட்டிருப்பது சிறப்பு. எக்காலம் கடந்தாலும் அக்காலத்தை இக்கதை எடுத்துக்காட்டும்.

  பதிலளிநீக்கு
 48. மாற்றம் ஒன்றே மாற்றமென-என்றும்
  மாறா தெனவே சாற்றுமென
  ஆற்றல் மிகவும் கதைசொல்லி-ஐயா
  அனுபவம் பெற்ற விதம்சொல்லி
  போற்றப் புகழும் பெற்றீரே-உம்
  பேரனால் இதனைக் கற்றீரே!
  மாற்றம் அறிந்து நடப்பாரே-ஏ
  மாற்றம் இன்றி இருப்பாரே

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 49. வெங்கட் நாகராஜ் said...
  //அனுபவக் கதை.... மிகவும் அருமை... அந்தக் கால விளையாட்டுப் பொருட்களுக்கும், இப்போதைய விளையாட்டுப் பொருட்களுக்கும் நிறைய வித்தியாசம்....

  நாம் விளையாட்டு என்று விளையாடியதெல்லாம் இன்றுள்ள குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை....

  நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.//

  வாங்க வெங்கட். சரியாகச் சொன்னீர்கள்.

  விளையாட்டுப்பொருட்கள் மட்டுமல்ல, தீனி, பக்ஷணங்கள், டிபன் முதலியவைகளும் நாம் அன்று விரும்பியதை இவர்கள் விரும்புவதில்லை.

  பெரிய பெரிய ஒஸ்தியான மிகவும் சுவையான சாக்லேட் பார்கள், அது போல விதவிதமான பெயர்களில் (எனக்கு வெண்ணிலா மட்டுமே .. அதுவும் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியும்) சுவையான, விலை அதிகமான ஐஸ்க்ரீம் கோப்பைகள் தவிர எதையும் ஆர்வத்துடன் சாப்பிடுவது இல்லை.

  நெய் ஊற்றி மையப்பிசைந்த சூடான நல்ல பருப்பு சாதம் + சாம்பார் + காய்கறிகள் சாப்பிடக்கூட விரும்பாதவர்களாக உள்ளனர் இன்றைய குழந்தைகள். இட்லி வேண்டாம் தோசையென்றால் OK என்கிறார்கள்.

  கருத்துப்பகிர்வுக்கு நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 50. சந்திரகௌரி said...
  //அருமையான கதை. எங்கு சென்றாலும் எமது கலாச்சார நிகழ்வுகளைக் கொண்டு செல்லும் பிள்ளைகள் இருக்கும் வரை வாழ்வு சிறக்கும். கதையினூடாக, கதைச் சூழல் நடைமுறைகள் எடுத்துக்காட்டப்பட்டிருப்பது சிறப்பு. எக்காலம் கடந்தாலும் அக்காலத்தை இக்கதை எடுத்துக்காட்டும்.//

  தங்களின் அன்பான வருகை+அரிய கருத்துக்கள்+பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளது.
  மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 51. புலவர் சா இராமாநுசம் said...
  //மாற்றம் ஒன்றே மாற்றமென-என்றும்
  மாறா தெனவே சாற்றுமென
  ஆற்றல் மிகவும் கதைசொல்லி-ஐயா
  அனுபவம் பெற்ற விதம்சொல்லி
  போற்றப் புகழும் பெற்றீரே-உம்
  பேரனால் இதனைக் கற்றீரே!
  மாற்றம் அறிந்து நடப்பாரே-ஏ
  மாற்றம் இன்றி இருப்பாரே

  புலவர் சா இராமாநுசம்//

  அடடா! தங்கள் கருத்துக்களே பாராட்டுக்களே .. அதுவும் ஒரு அழகிய கவிதையாய்..........

  என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது.

  புலவர் அவர்களின் புலமை புல்லரிக்கச் செய்கிறது.

  மிக்க நன்றி கலந்த வணக்கம் ஐயா.

  பதிலளிநீக்கு
 52. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  காலமாற்றத்தை அழகாகக் காட்டியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 53. //தாங்கள் தங்களிடமுள்ளதை அவசியம் போட்டோ எடுத்து பதிவாக வெளியிடவும். //

  அவசியம் செய்கிறேன். சில ஊரிலும் உள்ளன. அவற்றையும் சேர்த்துக் கொண்டு தொகுப்பாக வெளியிடுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 54. மாதேவி said...
  //விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  காலமாற்றத்தை அழகாகக் காட்டியுள்ளீர்கள்.//

  மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 55. ராமலக்ஷ்மி said...
  //தாங்கள் தங்களிடமுள்ளதை அவசியம் போட்டோ எடுத்து பதிவாக வெளியிடவும். //

  அவசியம் செய்கிறேன். சில ஊரிலும் உள்ளன. அவற்றையும் சேர்த்துக் கொண்டு தொகுப்பாக வெளியிடுகிறேன். நன்றி.//

  மிக்க நன்றி, மேடம்.
  அவசரமே இல்லை.
  தங்களுக்கு செளகர்யப்பட்டபோது வெளியிடுங்கள், போதும்.
  அன்பான தகவலுக்கு நன்றி. vgk

  பதிலளிநீக்கு
 56. காலம் மாறிப்போச்சு!


  இருப்பினும் பிள்ளையார் காப்பாற்றுவார்!!
  காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. //

  என்றும் மாறாத வரிகள்!

  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 57. Rathnavel said...
  //அருமையான பதிவு.
  நன்றி ஐயா//

  தங்கள் வருகைக்கும், ”அருமையான பதிவு” என்ற அருமையான கருத்துக்கும் நன்றிகள், ஐயா.

  பதிலளிநீக்கு
 58. kovaikkavi said...
  //காலம் மாறிப்போச்சு!


  இருப்பினும் பிள்ளையார் காப்பாற்றுவார்!!
  காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. //

  என்றும் மாறாத வரிகள்!

  வேதா. இலங்காதிலகம்.//

  தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 59. மிக,மிக அருமையான கதை. கருத்துக்களைச்சொன்னவிதம் அழகு

  பதிலளிநீக்கு
 60. Lakshmi said...
  //மிக,மிக அருமையான கதை. கருத்துக்களைச்சொன்னவிதம் அழகு//

  தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கும், மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 61. அருமையான கதை! தலைமுறை இடைவெளியை சிறப்பாக பதிவு செய்தீர்கள்! நன்றி

  பதிலளிநீக்கு
 62. படத்தில் அழகழகாய்ப் பிள்ளையார்.. பூசப்பட்டு இருக்கும் நிறங்களுக்குப் பின்னால் ஏதாவது காரணக் கதைகளுண்டா?

  //கார் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிச்சுற்றி வருவது போல எனக்குத்தோன்றியது.// ;)

  //ஆகாய விமானத்தில் பறந்து வந்துள்ள பிள்ளையார் அல்லவா இது!// ;) ஆமாம், நிச்சயம் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதையே நாம் வாங்கிக் கொண்டு போனால்... ஒவ்வொரு விமான நிலையத்திலும் பையைத் தூக்கித் தூக்கிப் போடுவதில்... கடைசியில் ஒரு பிடி மண் ஆகி இருக்கும். ;) அவர்களும் எத்தனை கொண்டு வந்து எத்தனை மீந்ததோ! அத்தனைக்கும் சேர்த்துத்தானே விலை.

  கடைசிப் பந்தி உண்மை.

  பதிலளிநீக்கு
 63. thalir said...
  //அருமையான கதை! தலைமுறை இடைவெளியை சிறப்பாக பதிவு செய்தீர்கள்! நன்றி//

  தங்களின் புதிய வருகைக்கும், அரிய கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே! அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 64. இமா said...
  ***படத்தில் அழகழகாய்ப் பிள்ளையார்.. பூசப்பட்டு இருக்கும் நிறங்களுக்குப் பின்னால் ஏதாவது காரணக் கதைகளுண்டா?***

  நிச்சயமாக காரணக்கதைகள் இருக்கத்தான் செய்யும், மேடம்.
  பல ஏழைத்தொழிலாளிகளின் கடும் உழைப்பும், அவர்கள் வாழ்வின் சோகமும் தான் பல நிறங்களில் அழகழகான பிள்ளையார்களாக மாறியிருக்கக்கூடும்.

  //கார் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிச்சுற்றி வருவது போல எனக்குத்தோன்றியது.// ;)

  //ஆகாய விமானத்தில் பறந்து வந்துள்ள பிள்ளையார் அல்லவா இது!// ;)

  ***ஆமாம், நிச்சயம் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதையே நாம் வாங்கிக் கொண்டு போனால்... ஒவ்வொரு விமான நிலையத்திலும் பையைத் தூக்கித் தூக்கிப் போடுவதில்... கடைசியில் ஒரு பிடி மண் ஆகி இருக்கும். ;) அவர்களும் எத்தனை கொண்டு வந்து எத்தனை மீந்ததோ! அத்தனைக்கும் சேர்த்துத்தானே விலை.***

  உங்களின் கருத்துக்கள் மிக அழகாக உள்ளன, தங்களின் மிக நேர்த்தியான கைவேலைகள் போலவே!

  ***கடைசிப் பந்தி உண்மை.***

  எந்தப்பந்தியாய் இருந்தால் என்ன, மேடம். பசிக்கு ருசியாய் ஏதாவது கிடைத்தால் போதுமே!

  தங்களின் பின்னூட்டம் அந்த மகிழ்வையும் திருப்தியையும் எனக்கு அளித்து விட்டது. அது போதும். vgk

  பதிலளிநீக்கு
 65. மாறாதது மாற்றம் மட்டுமே என்பது புரிவதற்குள் படும் பாடு..

  பதிலளிநீக்கு
 66. அப்பாதுரை said...
  //மாறாதது மாற்றம் மட்டுமே என்பது புரிவதற்குள் படும் பாடு..//

  ஐயா, வாங்க! வணக்கம்.

  ரொம்பப்பாடாய் பட்டுத்தாங்க சில சமாஜாரங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

  ஏன்னா காலம் மாறிப்போச்சுதுங்க, சார்!

  தங்களின் அன்பான வருகைக்கு நன்றி, சார். vgk

  பதிலளிநீக்கு
 67. //காலம் மாறிப்போச்சு!

  இருப்பினும் பிள்ளையார் காப்பாற்றுவார்!! //

  -- இது தான் வை.கோ.சாரின் ஸ்டைல்!

  நல்ல மனசிலிருந்து வெளிப்பட்ட நம்பிக்கை வரிகள் வெளிப்பூச்சுகள் இன்றி பளிச்சென்று தெரிந்தன.

  'பிள்ளையார் காப்பாற்றுவார் என்று நம்பிச் செயல்படுவதில் எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் இல்லை' என்பதைத் தான் உங்கள் பாணியில எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 68. ஜீவி said...
  //காலம் மாறிப்போச்சு!

  இருப்பினும் பிள்ளையார் காப்பாற்றுவார்!! //

  ***-- இது தான் வை.கோ.சாரின் ஸ்டைல்!

  நல்ல மனசிலிருந்து வெளிப்பட்ட நம்பிக்கை வரிகள் வெளிப்பூச்சுகள் இன்றி பளிச்சென்று தெரிந்தன.

  'பிள்ளையார் காப்பாற்றுவார் என்று நம்பிச் செயல்படுவதில் எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் இல்லை' என்பதைத் தான் உங்கள் பாணியில எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள்!***

  ஜீவி சாரின் பாராட்டுக்கள் பூவனத்தில் நின்ற என் மீது பூமாரி பொழிந்தது போல மகிழ்ச்சியளிக்கிறது.

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள், சார்.vgk

  பதிலளிநீக்கு
 69. Children at the age of your grandson do not think about the value of the gift . For them a clay doll will be more valuable than many costly gifts. because they value affection more. that is my experience. I feel children should be taught about values in life more than the values of material things. best wishes.

  பதிலளிநீக்கு
 70. G.M Balasubramaniam said...
  //Children at the age of your grandson do not think about the value of the gift . For them a clay doll will be more valuable than many costly gifts. because they value affection more. that is my experience. I feel children should be taught about values in life more than the values of material things. best wishes.//

  Thank you for your very valuable comments, Sir. vgk

  பதிலளிநீக்கு
 71. ”காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!”

  மறுக்க முடியாத உண்மை.

  திகட்டாத பதிவுகளைத் தரும் உங்களுக்கு என்றுமே ஆனந்தம் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 72. The firt part was more interesting and humorous though there was a clear message in the second part.

  The "Ottai Kalana" - my late father when we were living in Triplicane had kept a garland of all these "Kalanas" on an Amman picture. When our family had to move back to village, this garland was dismantled, and used for some purpose.

  By the way, the Naye Paise had come about earlier than 1960, I guess. Was it in late fifties?

  The way you described the story, one felt that the incidents and the conversation were real.

  Your grandson wanting to play with the modern toys is understandable; it is just that we should embrace the changes, instead of resisting them.

  After a decade or so, this year, I was in Madras on Vinayaka Chaturthi day, but was busy meeting my relatives, and enjoyed eating Kozhukattai though.

  I took the opportunity, again after decades, on the auspicious day, to walk along my memory lane literally in and around Triplicane right upto my favorite Marina Beach. I expect to post my experience in my blog hopefully soon.

  பதிலளிநீக்கு
 73. கோவை2தில்லி said...
  ”காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!”

  ***மறுக்க முடியாத உண்மை.

  திகட்டாத பதிவுகளைத் தரும் உங்களுக்கு என்றுமே ஆனந்தம் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.***

  தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும்,
  என்றும் எனக்கு ஆனந்தம் கிடைக்க ஆண்டவனிடம் பிரார்த்திப்பதாகச் சொல்லும், மனதிற்கு ஹிதமளிக்கும் வார்த்தைகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 74. ”பிள்ளையாரை பூஜை முடிந்ததும் நாளைக்கு எடுத்து உன்னிடம் தருகிறேன்; நீ விளையாடலாம்” என்றேன்.
  இன்றைய தாத்தா பிள்ளையாரை ஏன் விளையாடத்தருவதாக கூறினார் என்ற கேள்விக்கு காலம் மாறிப்போச்சு என்பதே பதிலாக நின்று ஜொலிக்கிறது. நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 75. Chandramouli said...
  //The firt part was more interesting and humorous though there was a clear message in the second part.//

  Yes Sir, I do agree. In first part my interactions were with my aged father & father-in-law, who knows the money value very well with their restricted hard earned income, in a noble way.

  //The "Ottai Kalana" - my late father when we were living in Triplicane had kept a garland of all these "Kalanas" on an Amman picture. When our family had to move back to village, this garland was dismantled, and used for some purpose.//

  Yes Sir. It was a beautiful copper coin with flowers all around. We may easily make garlands with the help of the holes in the centre portion of the coin. We may insert our little finger into the coin hole for just 1 inch [2.5 cm]

  //By the way, the Naye Paise had come about earlier than 1960, I guess. Was it in late fifties?//

  I born on 8.12.1949 - Say 1950 - In my age of just 4 (1954) I have given Ottai Kalana (which is equal to 3 Thambudies) & bought one Kambarcut for 1 thambudi & the balance 2 thumbudies were given back to me by the seller which I still remember.

  Like that the exact period period of introduction of Naya Paise, I don't remember correctly, but it was there along with ANAA (16 ANAAs = 1 Rupee) during 1958-1962 & I myself spent both ANAAs as well as Naye Paise for purchase of things & travel in Buses in this same period of 1958-1962.

  //The way you described the story, one felt that the incidents and the conversation were real.//

  Yes Sir, Most of the incidents are real only in my lifetime + something I have added jovially for giving taste to readers.

  //Your grandson wanting to play with the modern toys is understandable; it is just that we should embrace the changes, instead of resisting them.//

  I felt very Happy only with my grandson & his costly toys. In fact I have not told him anything about the Kalimann Pillaiyaar, at all.

  Just for a fun only & to give some interesting matter to the readers, I have added in the story 'that I am going to give it as a toy' to my grandson, after the Pooja.

  When he came here to Tiruchi, I took him to a toy shop & he himself choosed 2-3 items totally worth for more than 1000 rupees, at his age of 6-8 & I paid the money with will & pleasure.

  I watched him & he is interested in the new toys, only for very few days & then he will not touch it at all.

  It will be here & there for some days & then reach the show case only.

  But he may ask some more new toys while taking him to bazaar for shopping. What to do? after all, he is a very small boy grown up in a foreign country in a rich life style.

  Slowly we are giving the toys bought for him, one by one, to some other small children who visit our house, for which my grandson will not say anything.


  //After a decade or so, this year, I was in Madras on Vinayaka Chaturthi day, but was busy meeting my relatives, and enjoyed eating Kozhukattai though.//

  Very nice experience to you after a very long period. Sweet news to hear this, Sir.

  //I took the opportunity, again after decades, on the auspicious day, to walk along my memory lane literally in and around Triplicane right upto my favorite Marina Beach. I expect to post my experience in my blog hopefully soon.//

  WELCOME Sir. Write all your experiences, if possible in Tamil, which will be more interesting to read & understand by all.

  Thanks for your lengthy & very valuable comments, Sir.

  With kind regards,
  vgk

  பதிலளிநீக்கு
 76. VENKAT said...
  //”பிள்ளையாரை பூஜை முடிந்ததும் நாளைக்கு எடுத்து உன்னிடம் தருகிறேன்; நீ விளையாடலாம்” என்றேன்.//

  இது சும்மா கதையில் சேர்த்த கற்பனைப்பகுதியாகும். நானாவது அதுவும் என் அருமைப் பேரனிடமாவது, அப்படிச் சொல்வதாவது!

  அனுபவக்கதையைச் சொல்லும் போது கொஞ்சம் கொஞ்சம் நகைச்சுவைக்காகவும், கதையை எப்படியாவது கொண்டுபோய் ஏதாவது ஒரு இடத்தில் ப்ரேக் போட்டு நிறுத்தி முடிக்க வேண்டும் என்பதற்காகவும்
  சேர்க்கப்பட்டது இது.


  //இன்றைய தாத்தா பிள்ளையாரை ஏன் விளையாடத்தருவதாக கூறினார் என்ற கேள்விக்கு காலம் மாறிப்போச்சு என்பதே பதிலாக நின்று ஜொலிக்கிறது. நல்ல பதிவு.//

  தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் நன்றி.

  You may also like to read my reply to the Comments by Mr Chandramouli, Sir.

  vgk

  பதிலளிநீக்கு
 77. ”பெருமாள் பிள்ளை பூக்கடை” என்று தூய தமிழில் எழுதியிருந்தது, என்னை வியப்பில் ஆழ்த்தியது. அருகிலேயே ஒரு சிவன் கோயில். அர்ச்சனை சாமான்கள் முதல் அனைத்து பூஜை சாமான்களும் விற்கப்படும் அருமையான கடை அது. அந்தக்கடையில் உள்ள அனைவரும் தமிழில் பேசினர். தமிழ்நாட்டுக்கே வந்து விட்டது போல மிகவும் சந்தோஷப்பட்டேன்”.

  தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. இல்லியா? உலகத்தில் எந்தமூலையிலும் த்மிழர்கள் இல்லாத இடமே இல்லெதான்.


  “அப்பா, நீ முதன் முதலாக எங்கள் துபாய்க்கு வந்திருக்கிறாய். நாளைக்கு விநாயகர் பூஜை இங்கு நம் வீட்டில் செய்யப்போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!;”
  ஆமா, உண்மையிலும் உண்மைதான்.

  காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!”

  ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. இல்லியா? உலகத்தில் எந்தமூலையிலும் த்மிழர்கள் இல்லாத இடமே இல்லைதான்.//

   ஆம். இன்று உலகில் எங்கு சென்றாலும் ஆங்காங்கே தமிழர்கள் பரவித்தான் உள்ளனர். அவர்களில் சில அதிர்ஷ்டசாலிகள் மட்டும் தலை நிமிர்ந்தும் நிற்கிறார்கள் தான்.

   **அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!;”**

   //ஆமா, உண்மையிலும் உண்மைதான்.//

   நீங்க சொன்னா உண்மையாகத்தான் இருக்கும்.

   **காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!”**

   //ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.//

   ரொம்ப சந்தோஷம்.

   பூந்தளிரின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள
   கோபு

   நீக்கு
 78. நாம் எப்போதும் நீர் போல்
  இருக்க பழகி கொள்ளவேண்டும்

  உப்போடு இருக்கும்போது
  உப்பு நீராகிடவேண்டும்

  அதோடு சேர்ந்து கொண்டு
  உப்பு கரிக்க வேண்டும்

  இனிப்போடு சேரும்போது
  இனிக்க வேண்டும்.

  அதுபோல்தான் குழந்தைகளாகட்டும் ,
  வாலிப வயதினராகட்டும் ,
  முதியவர்களாகட்டும் அவர்கள்
  உறவு வேண்டுமென்றால் அளவோடு
  நம் தனித்தன்மை பாதிக்காத அளவிற்கு
  அவர்களோடு நாம் அனுசரித்து போகவேண்டும்.

  அவ்வாறு அனுசரித்து போக முடியாத நிலையில்.
  அவர்களை விட்டு விலகியிருப்பதுதான்
  இருவருக்கும் நல்லது. .

  பதிலளிநீக்கு
 79. Pattabi Raman September 10, 2013 at 5:00 AM

  வாங்கோ அண்ணா, வணக்கம், நமஸ்காரம்.

  //நாம் எப்போதும் நீர் போல் இருக்க பழகி கொள்ளவேண்டும். உப்போடு இருக்கும்போது உப்பு நீராகிடவேண்டும். அதோடு சேர்ந்து கொண்டு
  உப்பு கரிக்க வேண்டும். இனிப்போடு சேரும்போது
  இனிக்க வேண்டும்.

  அதுபோல்தான் குழந்தைகளாகட்டும், வாலிப வயதினராகட்டும், முதியவர்களாகட்டும் அவர்கள்
  உறவு வேண்டுமென்றால் அளவோடு நம் தனித்தன்மை பாதிக்காத அளவிற்கு அவர்களோடு நாம் அனுசரித்து போகவேண்டும்.

  அவ்வாறு அனுசரித்து போக முடியாத நிலையில்.
  அவர்களை விட்டு விலகியிருப்பதுதான் இருவருக்கும் நல்லது.//

  நான் என் மனதில் எப்போதும் நினைப்பதையே நீங்களும் மிகவும் அழகாகவே சொல்லிவிட்டீர்கள்.

  நான் எப்போதுமே என் தனித்தன்மையை யாருக்காகவும், எதற்காகவும் இழக்காமல், தாமரை இலைத்தண்ணீராகவே அனைவருடனும் பழகி வருபவன்.

  என்னைப்பற்றி முற்றிலும் புரிந்தவர்கள் மிகவும் சொற்பமே. அவர்களுக்கு என் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் என்றும் தேவை. நான் நழுவினாலும் அவர்கள் என்னை விட்டு என்றுமே விலக விரும்புவது இல்லை. எல்லோர் மனதிலும் நான் இன்றுவரை மிக உயர்ந்த இடத்தில் மட்டுமே இருந்து வருகிறேன்.

  நான் யாரிடமும் [சொந்தப்பிள்ளைகளே ஆனாலும்] எதையும் எப்போதும் எதிர்பார்ப்பது கிடையாது. அவர்களாகவே கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுபவன். என் கணக்கு வழக்குகள் எப்போது கச்சிதமாக கரெக்டாகவே இருக்கும்.

  இப்போதைக்கு கடவுள் அருளால் யார் தயவும் இன்றி என்னால் என் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க முடிகிறது.

  முடிந்தால் நான் என்னால் ஆன சிறு உதவிகளை , தேவைப்பட்டால், மற்றவர்களுக்குச் செய்வதோடு சரி.

  நான் என் சொந்த அனுபவத்தாலும், வாழ்க்கையில் பல காலக்கட்டங்களில் நான் போட்ட எதிர் நீச்சல்களாலும் எதிலும் மிகுந்த சுதாரிப்புடன் உள்ளவன் தான்.

  “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற என் அனுபவக் கட்டுரையையும், “பொக்கிஷங்கள்” என்ற என் தொடரையும் தயவுசெய்து பொறுமையாகப் படித்துப்பாருங்கள். உங்களுக்கே என்னைப்பற்றி தெரியவரும்.

  இணைபு இதோ:

  http://gopu1949.blogspot.in/2012/03/1.html

  http://gopu1949.blogspot.in/2013/03/1.html


  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்க்கையின் வெற்றிக்கான இரகசியங்களையும், உறவுகள் மேம்படவும் நயம்படக் கூறியுள்ள நல்ல கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், அண்ணா.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 80. வெளிநாட்டுக்கு நாம் போனால் எதையும் நம்ம ஊர் பணத்திற்கு மாற்றி எண்ணி, ஐயோ இவ்வளவு ரூபாயா என்று அங்கலாய்ப்பதைத் தவிர்க்க இயலாது.

  பதிலளிநீக்கு
 81. //காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!//

  மாறியது நெஞ்சம்
  மாற்றியது காலம்

  என் கல்யாணத்துக்கே என் அம்மாவும், அக்காவும்தான் புடைவை எடுக்கச் சென்றார்கள். ஆனால் இப்ப குஞ்சு, குளுவான் எல்லாம் குட்டி கவுன் எடுக்கவே துணிக்கடைக்கு வந்துடறதுகள். இதுல விசேஷம் என்னன்னா நான் தினமும் கட்டிக்க வேண்டிய புடைவையைக்கூட என் பேத்தி நான் எடுத்துக் கொடுக்கறேன் என்கிறாள்.

  சந்தோஷமாக மாறி விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi JayaJune 8, 2015 at 12:11 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   **காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!**

   //மாறியது நெஞ்சம்
   மாற்றியது காலம்//

   ஆஹா, அந்தக்காலத்தில் 1969-1970 இல் வந்த எனக்கு மிகவும் பிடித்தமான, நான் பலமுறை பார்த்து ரஸித்த ‘பணமா பாசமா?’ என்ற திரைப்படத்தில் வரும் பாடல் அல்லவா .... :)

   மிகப்பெரிய பணக்காரியான சரோஜாதேவி, மிகவும் ஏழை ஓவியனான ஜெமினிகணேசனிடம் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டுப் பாடும் ஏக்கப்பாடல் அல்லவா!!

   மாறியது நெஞ்சம் .... மாற்றியவர் யாரோ ?
   காரிகையின் உள்ளம் .... காண வருவாரோ?

   என்று ஆரம்பிக்கும் இனிமையான பாடலைச் சுட்டிக்காட்டி பின்னூட்டமிட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஜெயா.

   காலம் எல்லாவற்றையுமே மாற்றித்தான் வருகிறது. இருப்பினும் என்றுமே மறக்க இயலாத அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து வந்து முட்டிமோதி ஹிம்சிக்கத்தான் செய்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை :)

   //என் கல்யாணத்துக்கே என் அம்மாவும், அக்காவும்தான் புடைவை எடுக்கச் சென்றார்கள். ஆனால் இப்ப குஞ்சு, குளுவான் எல்லாம் குட்டி கவுன் எடுக்கவே துணிக்கடைக்கு வந்துடறதுகள்.//

   ஆமாம். ஆமாம். இதுவும் உண்மைதான்.

   //இதுல விசேஷம் என்னன்னா நான் தினமும் கட்டிக்க வேண்டிய புடைவையைக்கூட என் பேத்தி நான் எடுத்துக் கொடுக்கறேன் என்கிறாள். சந்தோஷமாக மாறி விட்டேன்.//

   இதைக் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இப்போ கலர் மேட்ச் எல்லாம் நம்மைவிட மிகவும் நன்றாகவே தெரிகின்றது.

   சமத்துக்குட்டி... பட்டுத்தங்கம்... குட்டிச்செல்லம்... குட்டியூண்டு ஜெயா... ‘லயா’குட்டிக்கு கோபு தாத்தாவின் அன்பான ஆசிகள்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 82. துபைல போயி புள்ளயாரு பூசைலா பண்ணுனீங்களா. நீங்கல்லா நெறய நெறய சாமி கும்பிட்டுகிடுவீங்களோ.

  பதிலளிநீக்கு
 83. தலைமுறை இடைவெளி, மாற்றங்களைக்கிறப்பாக சொன்னீர்கள். வெளி நாடுகளின் விலையைப்பார்த்துதான் நாமல்லாம் பிரமிச்சு போறோம் கை நிறைய சம்ளத்தையும் அள்ளி தராங்களே.

  பதிலளிநீக்கு
 84. //காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!/// செம மேட்டரு...அப்டேட் ஆகலன்னா அவுட்டேட்தான்...


  பதிலளிநீக்கு
 85. மாற்றங்களை ஏற்கும் மனமிருந்தால் மகிழ்வுதான்!

  பதிலளிநீக்கு
 86. தலைமுறை இடைவெளியால் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். களிமண் எடுத்து வந்து பிள்ளையார் பிடித்தது எல்லாவற்றிலும் சிறந்தது என்பதே என் கருத்தும். சூழலுக்கு எந்தக் கெடுதலும் செய்யாப்பிள்ளையார்! இன்றைய கலர் கலர் பிள்ளையார்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை. கதை நன்றாயிருக்கிறது. பாராட்டுக்கள் கோபுசார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி October 14, 2016 at 12:15 PM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //தலைமுறை இடைவெளியால் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //களிமண் எடுத்து வந்து பிள்ளையார் பிடித்தது எல்லாவற்றிலும் சிறந்தது என்பதே என் கருத்தும். சூழலுக்கு எந்தக் கெடுதலும் செய்யாப்பிள்ளையார்!//

   மிகவும் சந்தோஷம்.

   //இன்றைய கலர் கலர் பிள்ளையார்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை.//

   ஆமாம். இதனை இப்போது நானும் உணர்கிறேன்.

   //கதை நன்றாயிருக்கிறது. பாராட்டுக்கள் கோபுசார்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
 87. அட ஆச்சரியமாக இருக்கிறதே
  நான் தான் முதல் பின்னூட்டம் இட்டுள்ளேன்
  இறுதிப் பத்தியில் இரத்தினச் சுருக்கமாய்ச்
  சொல்லியுள்ள கருத்து அருமையிலும் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 88. கதையின் இரு பகுதிகளையும் இன்றுதான் வாசிக்க முடிந்தது . மிகவும் ரசித்துப் படித்தேன். சாதாரண விஷயங்களையும் அழகாக , நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீர்கள் ; பாராட்டுகிறேன் .நல்ல கருத்துகளும் நிறைந்து இருக்கின்றன .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொ.ஞானசம்பந்தன் January 31, 2019 at 11:23 AM

   வாங்கோ ஐயா, நமஸ்காரங்கள், வணக்கம்.

   //கதையின் இரு பகுதிகளையும் இன்றுதான் வாசிக்க முடிந்தது.//

   அதனால் பரவாயில்லை ஐயா. ’சொன்னதை சொன்னபடி அப்படியே செய்வதும், செய்வதை மட்டும் சொல்வதும்’ தங்களின் வழக்கமாக உள்ளது. கவனித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது. நானும் உங்களைப் போலவேதான். யாரிடமும் தேர்தல் வாக்குறுதி போல எதுவும் சொல்வது இல்லை. ஒருவேளை வாய் தவறிச் சொல்லிவிட்டால் செய்யாமல் இருப்பதும் இல்லை.

   //மிகவும் ரசித்துப் படித்தேன். சாதாரண விஷயங்களையும் அழகாக, நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீர்கள்; பாராட்டுகிறேன். நல்ல கருத்துகளும் நிறைந்து இருக்கின்றன.//

   இறையருளால் என் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், நகைச்சுவை கலந்தே எப்போதும் அமைந்துவிடுகிறது. அதுவே எனக்கு ப்ளஸ் பாயிண்ட் ஆகவும் உள்ளது. தங்களின் இந்தப் பொன்னான கருத்துக்களால் நான் தன்யனானேன்.

   என் மதிப்பிற்குரிய மிக மூத்த எழுத்தாளரான தங்களின் பாராட்டுக்களுக்கு அடியேன் தலை வணங்குகிறேன். மிக்க நன்றி, ஐயா.

   அன்புடன் கோபு

   நீக்கு
 89. WhatsApp COMMENT FROM Mr. JEEVI Sir ON 21.11.2020

  உங்கள் காலம் மாறிப்போச்சு கதையை படித்து விட்டேன். இப்பொழுது படிக்க இன்னொரு விதமாய் இருந்தது. இயல்பான நகை (ச்சுவை) நீங்கள் பெற்ற வரம். பல இடங்களில் அதை மனசார ரசித்தேன். Nice write up. நிச்சயம் இந்தக் கதை பரிசுக்குத் தேர்வாகும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார். 👍. 🙏

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர்களின் + அறிவு *ஜீவி* களின் ஆசீர்வாதங்களால் மட்டுமே, ஸார். தன்யனானேன்.

   நீக்கு