About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, August 31, 2011

காலம் மாறிப்போச்சு ! சிறுகதை பகுதி 1 of 2

காலம் மாறிப்போச்சு !

[ சிறுகதை பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்
விநாயகர் தான் என் இஷ்ட தெய்வம். எனக்கு இப்போது 60 வயதுகள் முடிந்து விட்டது. அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். என் வீட்டருகில் களிமண்ணைக் குழைத்து விநாயகர் சிலைகளை அச்சில் வடித்து விநாயக சதுர்த்திக்கு ஒரு வாரம் முன்பே விற்பனைக்குத் தயாராக வைப்பார்கள்.  நிறைய கலைஞர்கள் மலைமலையாக குழைத்த களிமண்ணுடன் வரிசையாக தெருவோரம் அமர்ந்திருப்பார்கள். மிகவும் கலை நுணுக்கத்துடன் பல சைஸ்களில் விநாயகரை வடிவமைத்து வரிசையாக அடுக்கிக்கொண்டே போவார்கள்.  

ஒரு அணா முதல் நான்கு அணா வரை (ஒரு ரூபாய்க்கு 16 அணா - ஒரு அணா என்பது ஆறேகால் பைசாவுக்கு சமம் - நான்கு அணா என்றால் 25 பைசா) பலவித சைஸ்களில் விநாயகர் கிடைப்பார். மிகச்சிறிய பிள்ளையார் ஒரு அணா. முரட்டு சைஸ் பிள்ளையார் நாலு அணா. ’விலை மதிப்பில்லாத அந்த பிள்ளையாருக்கு ஒரு விலையா’ என நான் ஆச்சர்யப்பட்டதுண்டு. 

நாம் தரும் அந்த விலை, அந்த விநாயகருக்கு இல்லை என்பதையும், அதை நமக்காக வடிவமைத்துத்தரும் ஏழைத்தொழிலாளிகளின் உற்சாகமான உழைப்பிற்கே அந்த விலை என்பதையும் எனக்கு வயதாக வயதாக உணர்ந்து கொள்ள முடிந்தது. 

என் அந்த சிறிய வயதில், களிமண்ணை வைத்து அழகாக அச்சில் விநாயகரை வரவழைக்கும் அவர்களின் திறமையைப் பல மணி நேரம் அவர்கள் அருகிலேயே நின்று பார்த்து நான் வியந்ததுண்டு. 

என் அப்பா சாங்ஷன் செய்யும் ஒரணா அல்லது ஒண்ணரை அணா நாணயத்தை எடுத்துக்கொண்டு என் வீட்டு பூஜைக்குப் பிள்ளையார் வாங்க கோலம் போடப்பட்ட ஒரு பலகையை எடுத்துக்கொண்டு, சேதாரம் எதுவும் இல்லாத ஓரளவு நல்ல பினிஷிங் உள்ள சற்று நிதான சைஸ் விநாயகரை பேரம் பேசி சர்வ ஜாக்கிரதையாக உடையாமல் வாங்கி வருவேன். 


அப்போதெல்லாம் எந்த சாமான்கள் வாங்கினாலும், கொசுறு கொஞ்சம் வாங்கி வருவோம். மளிகைக்கடைகளில் சாமான்கள் வாங்கும் போது கடைக்காரரே பொட்டுக்கடலை கொஞ்சம் கொசுறாக (இன்றைய இலவச இணைப்பு போல) தருவார். 


அதுபோலவே விநாயகர் வாங்கிவரும்போது கொசுறாக கொஞ்சம் ஈரப்பதமுள்ள களிமண் கேட்டு வாங்கி வருவதுண்டு. பலகையில் அமர்ந்துள்ள விநாயகர் ஆடாமல் அசையாமல் இருக்க அந்த ஈரக்களிமண்ணை (கொசுறை) அண்டக்கொடுப்பதுண்டு. அச்சில் வார்த்த விநாயகர் சிலையில் ஏதும் விரிசலோ வெடிப்போ ஏற்பட்டால் அந்தக் கொசுறுக் களிமண்ணை தண்ணீர் கலந்து ஆங்காங்கே ‘டச்-அப்’ செய்யவும் அது உதவும். 


பூஜை முடிந்த ஓரிரு நாட்களில் அந்த விநாயகரை நதியிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போட்டுவிடச் சொல்லுவார்கள். எனக்கு அழுகையே வந்துவிடும். நம்மைக்காக்கும் கடவுளை நாம் காக்க வேண்டாமா? அவரை நீரில் மூழ்கடிக்கலாமா? என்பது என் சந்தேகம். ஆனால் யாரும் என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்காமல் “அது தான் சாஸ்திரம், அது தான் சம்ப்ரதாயம். நீ நாங்கள் சொன்னதை மட்டும் செய்” என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவார்கள். 


நாளடைவில் கலர் கலராக விநாயகர் சிலைகள் வரத்தொடங்கின. ஆரம்ப காலத்தில் ஒரே கலராக நீலம் அல்லது ரோஸ் கலரில் விநாயகர் விற்பனைக்கு வந்தார். அதன் பிறகு மல்டி கலர்களில் ஆயில் பெயிண்ட் அடித்து அழகிய பட்டுப்புடவைகள் போல ஜொலிக்கும் விநாயகர்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின.


பார்க்கவே வெகு அழகாக இருக்கும். எனக்கு அந்த மல்டி கலர் பிள்ளையாரில் ஒன்று வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை இருந்தது. களிமண் பிள்ளையாரைவிட கலர் பிள்ளையார் பல மடங்கு விலை அதிகம் இருந்ததாலும், அதனை வாங்கித்தர என் தந்தைக்கு பட்ஜெட் பற்றாக்குறையாக இருந்ததாலும், என் ஆசை அந்த நாட்களில் நிராசையாகவே போய் விட்டது. 


ஆயிரம் கலர் பிள்ளையார்கள் விற்பனைக்கு வந்தாலும், களிமண்ணால் வடித்த (ப்ளாக் + ஒயிட்) பிள்ளையார் தான் அபிஷேகத்திற்கும் பூஜைக்கும் வைத்து வழிபட சாஸ்திரப்படி சிறந்தது என ஒரே போடாகப் போட்டு, என்னை சமாதானப் படுத்தி விட்டனர், என் பெற்றோர்கள்.


ஆனால் வசதியுள்ள என் வயது சிறுவர்களும் நண்பர்களும் விதவிதமான கலர் பிள்ளையார்களுடன் விளையாட வந்தபோது என் மனம் மட்டும் வருந்தியது உண்டு.


ஒரு நாள் விநாயகச் சதுர்த்திக்கு முதல் நாளே என் மாமனார் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. அது ஒரு குக்கிராமம். அருகில் விநாயகர் சிலை செய்து விற்கும் எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. அவ்வாறு எதுவும் வாங்கி வர வேண்டுமென்றால் பல மைல் தொலைவில் உள்ள தாலூகா பஜாருக்குப்போய் வரவேண்டுமாம். 


விநாயகர் பொம்மை இல்லாமல் எப்படி பூஜை செய்வீர்கள் என்று என் மனைவியிடம் வினா எழுப்பினேன். “அதெல்லாம், வாய்க்காலுக்கு குளிக்கப் போயிருக்கும் உங்கள் மாமனார் வரும்போது களிமண்ணுடன் தான் வருவார்; வந்ததும் அவரே ஜோராகப் பிள்ளையார் பிடித்து விடுவார், பாருங்கள்” என்றாள்.


இதைக்கேட்டதும் எனக்கு மிகவும் ஆச்சார்யமாகப்போய் விட்டது. ”பிள்ளையார் செய்யும் அச்சு உங்கள் வீட்டிலேயே உள்ளதா” என அப்பாவித்தனமாகக் கேட்டு விட்டேன். இதைக்கேட்ட அவள் களுக்கென்று சிரித்து விட்டாள்.


அதற்குள் என் மாமனார் தன் ஈர காசித்துண்டில் களிமண்ணுடன் வாசலில் வந்து நின்று, தொப்பென்று அதை வாசல் திண்ணையில் வீசிவிட்டு, தானும் திண்ணையில் அமர்ந்தார். வேறு ஒரு ஈர வஸ்த்திரத்தில் அருகம்புல்லும், வெள்ளெருக்குப்பூக்களும், மாவிலையும் வேறு சில புஷ்பங்களும் பறித்து வந்திருந்தார். 


நான் அவர் பிள்ளையார் பிடிக்கப்போவதை ஆவலுடன் காண அவர் அருகில் அமரப்போனேன்.  


“மாப்பிள்ளை!  நீர் பல் துலக்கினீரா, ஸ்நானம் செய்தீரா, மடியா, விழுப்பா; எப்படியிருந்தாலும் என் மீது பட்டு விடாதீர்கள்” என்று சொல்லி என்னை  ஒரு விதக்கடுப்புடன் முறைத்துப்பார்த்தார்.


வாய்க்கால் வரை நடந்தே போய், ஸ்நானம் செய்துவிட்டு, உடம்பு பூராவும் பட்டைபட்டையாக விபூதியை குழைத்து இட்டுக்கொண்டு சிவப்பழமாக, ஈர வஸ்த்திரங்களுடன் பிள்ளையார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யப்போகும் அவர் சொல்லுவதும் நியாயம் தான் என்று உணர்ந்த நான், குளியல் முடித்துவிட்டு வர கொல்லைப்புற கிணற்றடிக்குக் கிளம்பினேன்.


கொல்லைப்புற கோட்டை அடுப்பில் குப்பை சத்தைகளையும், மரக்குச்சிகளையும் திணித்து ஒரே புகையுடன் வெந்நீர் போட்டுக்கொண்டிருந்த என் மாமியார், என்னவளிடம் “மாப்பிள்ளை குளிக்க சூடாக ஒரு அடுக்கு வெந்நீர் கொண்டுபோய்க் கொடுடீ” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.


குளித்து முடித்து விபூதிப்பட்டைகளுடன் நான் வாசலுக்கு வருவதற்குள், என் மாமனார், அந்தக் கிராமத்து வீட்டு நடு ஹாலில் ஒரு ஓரமாக அமர்ந்து பூஜை செய்யத் தயாராகிவிட்டார்.


மாமனாரால் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை ஆவலுடன் நோக்கினேன். அதில் ஒரு அழகு இல்லை. ஆனால் ஒரு வித அமைப்பு மட்டுமே இருந்தது.


சாத்துக்குடி அளவுக்கு ஒரு களிமண் உருண்டை. அது தான் தொந்தியாம். அதன் மேல் எலுமிச்சம்பழம் அளவுக்கு ஒரு சிறிய உருண்டை. அதுதான் முகமாம். அதன் மேல் தீபாவளிக்கலசம் போன்று முக்கோண வடிவில் ஒரு களிமண் அமைப்பு. அது தான் கிரீடமாம். தொந்திக்குக்கீழே இருபுறமும் ஓவல் ஷேப்பில் இரு உருண்டைகள். அவை இரண்டும் கால்களாம். எலுமிச்சை உருண்டை முகத்திலிருந்து தொந்தி முடிவு வரை மண்புழு போல ஒரு களிமண் படரவிடப்பட்டிருந்தது. அது தும்பிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இருபுறமும் அதுபோல கைகளுக்கும், காதுகளுக்கும் ஏதேதோ அட்டாச்மெண்ட் கொடுத்திருந்தார். மொத்தத்தில் நான் எதிர்பார்த்த அழகான பிள்ளையாரை அங்கு காணோம்.


“என்ன மாமா! சொல்லியிருந்தால், ஊரிலிருந்து வரும்போது, நானே அழகாகஒரு பிள்ளையார் பொம்மை வாங்கி வந்திருப்பேனே” என்றேன். 


என்னைப்பார்த்து முறைத்த அவர், ”மாப்பிள்ளை, அனாவஸ்யமாகக் காசைக் களிமண்ணாக ஆக்கக்கூடாது. குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, மடியாக சுத்தமான ஈரக்களிமண் எடுத்து வந்து, அதில் நாமே விநாயகரை வடித்து பூஜிப்பதே சாஸ்திரப்படி சாலச் சிறந்தது” என்றார்.


என் இந்த மாமனாரை விட என் அப்பா எவ்வளவோ மேல் என்று நினைத்துக்கொண்டேன்.


தொடரும்

64 comments:

 1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ”மாப்பிள்ளை, அனாவஸ்யமாகக் காசைக் களிமண்ணாக ஆக்கக்கூடாது. குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, மடியாக சுத்தமான ஈரக்களிமண் எடுத்து வந்து, அதில் நாமே விநாயகரை வடித்து பூஜிப்பதே சாஸ்திரப்படி சாலச் சிறந்தது” என்றார்.//

  என்க்கும் தம் கையால் அவர் செயத பிள்ளையாரே மகிழ்ச்சியளிக்கிறார்

  ReplyDelete
 3. சட்டமோ சாஸ்திரமோ அழகு குறைவோ கணக்கில் வரவில்லை.
  அவரவர் கையால் பிடித்தபிள்ளையார் உயர்த்திதானே.

  ReplyDelete
 4. காலம் மாறினாலும் மாறாத கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. ம்மைக்காக்கும் கடவுளை நாம் காக்க வேண்டாமா? அவரை நீரில் மூழ்கடிக்கலாமா? என்பது என் சந்தேகம். /

  பஞ்சபூதங்களினால் ஆக்கப்பட்டது அவ்வாறே கலக்கப்படவேண்டும் தத்துவம் பிறகு உணர்ந்தாரா?

  ReplyDelete
 6. எனக்கும் அவர் பிடித்த பிள்ளையாரே ரொம்பப் பிடித்திருக்கிறார் கோபால் ஜி..)

  ReplyDelete
 7. எனக்கும் வர்ணப் பிள்ளையாரைவிட
  இப்படி பிடுச்சிவச்ச பிள்ளையாரைத்தான்
  ரொம்ப பிடிக்கும்.நம்ம தயாரிப்பு இல்லையா
  அனுபவக் கதை அருமையாகப் போகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. கொசுறுக் களிமண் குடை, தோரணம் போன்ற எக்ஸ்ட்ரா ஃ பிட்டிங்க்சுக்கும் உதவும்!
  என்ன இருந்தாலும் இந்த மாப்பிள்ளை-மாமனார் முறைப்புக் குறையாது போலும்!

  ReplyDelete
 9. .எங்க ஊர்களில சாணத்திலையும் விநாயகர் பிடித்து வழிபடுவார்களே..தொடர்கிறேன் ஐயா ..

  ReplyDelete
 10. பட்டறிவு நல்ல கதையாக உருவெடுத்து இருக்கிறது அதுவும் இன்றைய நாளின் சூழலுக்கேற்ற வகையில் பழமையும் புதுமையும் இணையும் பொது இந்த குமுகம் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என என்னுகிறவள் நான் பாராட்டுகள் நன்றி.

  ReplyDelete
 11. இன்றைக்கும் நான் கைகளினால் பிள்ளையார் செய்துதான் வினாயகர் சதுர்த்தி அன்று வணங்குகிறேன். அப்படித்தான் செய்ய வேண்டும் என்று அன் தாயார் கற்றுத்தந்தார். என் மகனுக்கு இதனை கற்றுத் தந்துவிட்டேன். மகிழம்பூச்சரத்தில் 'பூஜையறையில்..' என்ற லிங்கில் இருப்பது என்னுடைய பிள்ளையார்தான். இதனை மற்றவர்களும் முயற்சிப்பார்கள் என்று கருதிதான் இந்த கருத்தை பதிகிறேன். கதையின் தொடர்கிறேன் சார்.

  ReplyDelete
 12. //“மாப்பிள்ளை! நீர் பல் துலக்கினீரா, ஸ்நானம் செய்தீரா, மடியா, விழுப்பா; எப்படியிருந்தாலும் என் மீது பட்டு விடாதீர்கள்” என்று சொல்லி என்னை ஒரு விதக்கடுப்புடன்
  முறைத்துப்பார்த்தார்./மாப்பிள்ளைமுறுக்கு என்றுதான் கேள்வி பட்டிருக்கிறேன்.இங்கே மாமனார் முறுக்கா??
  உங்க அனுபவம் பற்றிய கதை அருமை.

  ReplyDelete
 13. எனக்கும் வாளியோ கூடையோ எடுத்துப் போய் அச்சில் வார்த்த சூடோடு பிள்ளையார் வாங்கிய ஞாபகம் வருகிறது!
  /பூஜை முடிந்த ஓரிரு நாட்களில் அந்த விநாயகரை நதியிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போட்டுவிடச் சொல்லுவார்கள். / ஒரு வேளை அந்தத் தொழிலாளர்களுக்கு அடுத்த வருடமும் வேலை கொடுப்பதற்காக இருக்கலாம்!! :-))

  ReplyDelete
 14. தொடரும்......

  விநாயகர் வருகைகைக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 15. அன்பின் வை.கோ - கதை நன்று - எங்களுக்கும் இஷ்ட தெய்வம் பிள்ளையார்தான். எங்கள் வீட்டில் இருக்கும் பல்வேறு வடிவங்களில் உள்ள பிள்ளையார்களை எண்ணி எங்கள் பேத்தியும் பேரணும் 36 இல்ல 38 எனச் சண்டையிடுவர்.

  ஆமா ஒன்றரையணா நாணயம் இருந்ததா என்ன ? அப்பா சாங்க்ஷன் அவ்வளவு தானா ? - எங்கப்பா கா ரூவா தருவாரெ !ஓரணா என்பது ஆறேகால் பைசாவுக்குச் சமமா ? ஆறு பைசா தான் தருவாரகள் ஓரணாவிற்கு - நாலணாவிற்குத்தான் 25 பைசா தருவாரகள்.

  விநாயகருக்கு விலையா - இல்லை இல்லை - உழைப்பிற்குத்தான் விலை - சிந்தனை நன்று.

  கொசுறுக் களிமண் இப்போதும் உண்டு

  பொட்டுக்கடலை - இப்ப வழக்கில் இல்லையோ - வறுகடல - ஒடச்ச க்டல்ல தான் இப்போ - ( திருச்சிலே பொட்டுக்க்டலை உண்டோ )

  சதுர்த்தி முடிந்த வுடன் பிள்ளையாரை நீர் நிலைகளில் விடுவது வழக்கம் . இதுக்கு விளக்கமெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க

  மல்டி கலர் பிள்ளையார வாங்க பட்ஜெட் உதச்சிருக்குல்ல - ம்ம்ம்ம்ம்

  மாமனார வுட அப்பா எப்போதும் மேல் தான் வைகோ

  நல்லாருந்திச்சி - கதை - அடுத்த் பகுதி வரட்டும் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
 16. இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. நாம் தரும் அந்த விலை, அந்த விநாயகருக்கு இல்லை என்பதையும், அதை நமக்காக வடிவமைத்துத்தரும் ஏழைத்தொழிலாளிகளின் உற்சாகமான உழைப்பிற்கே அந்த விலை என்பதையும் எனக்கு வயதாக வயதாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

  டைம்லி ஸ்டோரி..
  விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. I will comment after the second part. vaazthhukkaL

  ReplyDelete
 19. அருமை. தொடருங்கள். சதுர்த்தி தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. அருமையான பதிவு.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  ReplyDelete
 21. cheena (சீனா) said...
  //ஆமா ஒன்றரையணா நாணயம் இருந்ததா என்ன ? அப்பா சாங்க்ஷன் அவ்வளவு தானா ? - எங்கப்பா கா ரூவா தருவாரெ !ஓரணா என்பது ஆறேகால் பைசாவுக்குச் சமமா ? ஆறு பைசா தான் தருவாரகள் ஓரணாவிற்கு - நாலணாவிற்குத்தான் 25 பைசா தருவாரகள்.//

  1955 வரை தம்புடி என்ற ஒரு நாணயம் இருந்தது. காலணாவுக்கு 3 தம்புடி. ஒரு முழு ரூபாய்க்கு 192 தம்புடி.

  1965 வரை காலணா, அரையணா, ஒரு அணா, இரண்டு அணா, நான்கு அணா, எட்டு அணா & ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்தன.

  1960 முதல் புதிய காசுகள் (நயாபைசா) அறிமுகம் செய்யப்பட்டன. 100 நயா பைசா என்பது ஒரு முழு ரூபாய் என்று கொண்டு வ்ரப்பட்டது.

  1960 முதல் 1965 வரை மேற்படி காலணா, அரையணா, ஒரு அணா, இரண்டு அணா, நாலணா, எட்டணாவுடன் இந்த புதிய நயாபைசாக்களும் சேர்ந்து புழக்கத்தில் இருந்து, எல்லோரையும் குழப்பி வந்தன.

  அதன் பிறகு அணாக்கள் யாவும் செல்லாது என்று சொல்லி விட்டனர். பஸ்ஸில் ஒரணா டிக்கெட் என்றால் ஒரணா தான் தர வேண்டும். ஆறு நயாபைசா கொடுத்தால், நடத்துனர்கள் வாங்க மாட்டார்கள். ஏனென்றால் ஒரணா என்பது 6.25 நயாபைசாவுக்குத் தான் சமமாகும். 6 நயாபைசாக்களுக்கு சமமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  பழைய காசுகள் ஒழிந்தபிறகு நயாபைசா என்ற பெயர் மாறி வெறும் பைசா ஆனது. ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா, 25 பைசா, 50 பைசா & ஒரு ரூபாய் மட்டும் இருந்தன.

  பிறகு 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களும் வரத்தொடங்கின.

  பிறகு திடீரென்று 1 பைசா முதல் 20 பைசா வரை செல்லாது என்று கூறி விட்டனர். இப்போது சமீபத்தில் 25 பைசா நாணயமும் செல்லாது என்று சொல்லி விட்டனர்.

  இப்போது செல்லுபடியாகும் குறைந்தபட்ச நாணயம் 50 பைசா மட்டுமே என்று உள்ளது.

  1965 வரை இருந்த காலணா செப்பில் செய்யப்பட்டது. அது இந்தக்கால ஒரு ரூபாய்போல வெயிட்டாக இருக்கும்.
  அதில் ஓட்டைக்காலணா என்றும் ஒரு வகை இருந்தது. நடுவில் வட்டமாக ஓட்டையுடன் பார்க்க அழகாக இருக்கும். பூப்படம் விளிம்பில் வரையப்பட்டிருக்கும்.

  அதுபோல ஒரு இருபது வருடங்கள் முன்பு புழகத்தில் இருந்த 20 பைசாக்களில் சில பித்தளைக்காசுகளாக அழகான தாமரை படம் பொறித்ததாக இருந்தன. அதை ஒவ்வொருவரும் 108 வீதம் சேர்த்து வைத்துக்கொண்டு, அதனால் பூஜை அர்ச்சனை செய்ய ஆரம்பித்ததால், அவை ஜனங்களிடம் சுலபமாக புழக்கத்து வராமல், ஆங்காங்கே பதுங்கிக் கொண்டன.

  இந்த நாணயங்களை இன்னும் வைத்துக்கொண்டிருப்பவர்கள், அவற்றைப்படத்துடன், ஒரு தனிப்பதிவாகவே வெளியிட்டால் நன்றாக இருக்கும். என்னிடம் உள்ள ஒருசில நாணயங்களைத் தேடிப்பார்த்து நானும் முயற்சி செய்கிறேன்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 22. காலம் மாறித்தான் போய்விட்டது.... நெய்வேலியில் நான் கூட களிமண் கொண்டு பிள்ளையார் பிடிக்கப் போய் அது வேறு ஏதோ ஆனதை நினைத்து இப்போது சிரிக்கிறேன்...

  நல்ல கதை. அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 23. ஆன்மீகம் பொருத்தவரை எல்லாம் சரியே, பிறருக்கு உபத்திரவம் கொடுக்காத வரை.
  கலர் பிள்ளையார் நாயகனின் விருப்பம். முந்தைய தலைமுறை களிமண் பிள்ளையாரை பரிந்துரை செய்திருக்கிறார்கள். நம் அடுத்த தலைமுறை i-pad அனிமேஷன் பிள்ளையாரை விரும்பலாம். வளக்கமான சுவாரசியம். அசத்துரீங்க ஐயா.....தொடருங்கள்..கதையில் என்ன திருப்பம் வரும்?...

  ReplyDelete
 24. //அந்த விநாயகரை நதியிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போட்டுவிடச் சொல்லுவார்கள்.//
  எனக்கு கூட சிறுவயதில் ஒரு ஆதங்கம் இருந்தது .இவ்ளோ cute கணேஷ் ஜீயை நீரில் கரைக்கிரார்களே என்று .பிறகுதான் அதன் காரணத்தை தெரிந்து கொண்டேன் .பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 25. பிடித்து வைத்த பிள்ளையார்தான் எனக்கு பிடித்த பிள்ளையார்


  உங்கள் அனுபவங்களை சுவை பட கூறி இருக்கிறீர்கள்
  பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 26. பிடித்து வைத்த பிள்ளையார்தான் எனக்கு பிடித்த பிள்ளையார்


  உங்கள் அனுபவங்களை சுவை பட கூறி இருக்கிறீர்கள்
  பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 27. ஸார்...பிள்ளையார் போலவே..உங்க இடுகையும் நல்லா இருந்தது.....

  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 28. இந்த முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, வரவேற்று, உற்சாகப்படுத்தி, அரிய கருத்துக்கள் கூறி, பாராட்டி மகிழ்வித்துள்ள என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இதன் தொடர்ச்சி இரண்டாம் பகுதி அதாவது இறுதிப்பகுதி நாளை 01.09.2011 வியாழன் “பிள்ளையார் சதுர்த்தி” பண்டிகை அன்று வெளியாக உள்ளது. அன்புடன் vgk

  ReplyDelete
 29. சுவாரஸ்யமான கதை! அடுத்தபகுதி எப்போ?

  ReplyDelete
 30. எனக்கும் பிள்ளையாரைப் பிடிக்கும், அழகாய் இருப்பார் என்பதால்.

  //நிறைய கலைஞர்கள் மலைமலையாக குழைத்த களிமண்ணுடன் வரிசையாக தெருவோரம்// அழகாக இருந்திருக்குமே!

  //கொசுறாகக் களிமண்// நல்ல யோசனைதான். ;)

  களிமண்ணில் விநாயகர் பிடித்து பூஜை முடிந்ததும் நீரில் போடுவது சிறந்த முறையாகத்தான் தெரிகிறது, கரைந்து போய்விடும். வீட்டில் இருக்கும் போது சின்னதாக உடைந்து போனாலும் மனதுக்குக் கவலையாக இருக்கும் இல்லையா? கடவுள் உருவம் உடைந்தாலும் கண்டபடி தூக்கிப் போட முடியாது. அதற்குக் கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். உடையாமல் உடனே நீரில் கரைப்பது நல்லதுதான்.

  //சாத்துக்குடி.. எலுமிச்சம்பழம்..// :) அறுசுவையில் ஒருமுறை (http://www.arusuvai.com/tamil/node/5567) அழகாய் பிள்ளையார் செய்யும் விதம் சொல்லிக் கொடுத்து இருந்தார்கள். நெல்லிக்காய், சுண்டங்காய், முந்திரிப் பருப்பு எல்லாம் அளவுகளாய்ச் சொல்லி இருந்தார்கள். எனக்கும் செய்து பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால் பிறகு அதை என்ன செய்வது என்று இதுவரை செய்து பார்க்கவே இல்லை.

  //அடுப்பில் குப்பை சத்தைகளையும், மரக்குச்சிகளையும் திணித்து ஒரே புகையுடன் வெந்நீர்// பழைய நினைவுகள் வருகிறது எனக்கு. :)

  //காசைக் களிமண்ணாக ஆக்கக்கூடாது.// ரசித்தேன். ;)

  ReplyDelete
 31. thalir said...
  //சுவாரஸ்யமான கதை! அடுத்தபகுதி எப்போ?//

  தங்களின் புதிய வருகைக்கும், ’சுவாரஸ்யமான கதை’ என்ற கருத்துக்கும் மிக்க நன்றி, நண்பரே!
  அடுத்தபகுதியும் 1.9.2011 அன்று வெளியிட்டுள்ளேன்.

  நேரம் கிடைத்தால் தொடர்ந்து வாருங்கள். உற்சாகம் தாருங்கள். அன்புடன் vgk

  ReplyDelete
 32. இமா said...
  ***எனக்கும் பிள்ளையாரைப் பிடிக்கும், அழகாய் இருப்பார் என்பதால்.***

  கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. நாங்கள் குவார்டர்ஸ்ஸில் வசித்த போது, ப்யாரேஜான் என்ற முகமதிய நண்பர் என் அண்டை வீட்டுக்காரர். மிகவும் நல்லவர். பெரிய தொந்தியுடன் இருப்பார். அவரை நான் அன்புடன் ‘பிள்ளையார் பாய்’ என்று தான் அழைப்பேன். அவ்ரும் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டு, அப்படியே தொடர்ந்து அழைக்க அனுமதித்தார். அந்த ஞாபகம் வந்தது.

  //நிறைய கலைஞர்கள் மலைமலையாக குழைத்த களிமண்ணுடன் வரிசையாக தெருவோரம்//

  ***அழகாக இருந்திருக்குமே!***

  ஆம் சிறுவயதில் நான் அவர்கள் செய்வதை ஆசையாக நீண்ட நேரம் பார்த்து ரசிப்பதுண்டு.

  //கொசுறாகக் களிமண்//
  ***நல்ல யோசனைதான். ;)***
  ஆம். அவர்களே கேட்டால் தந்து விடுவார்கள்.

  ***களிமண்ணில் விநாயகர் பிடித்து பூஜை முடிந்ததும் நீரில் போடுவது சிறந்த முறையாகத்தான் தெரிகிறது, கரைந்து போய்விடும். வீட்டில் இருக்கும் போது சின்னதாக உடைந்து போனாலும் மனதுக்குக் கவலையாக இருக்கும் இல்லையா? கடவுள் உருவம் உடைந்தாலும் கண்டபடி தூக்கிப் போட முடியாது. அதற்குக் கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். உடையாமல் உடனே நீரில் கரைப்பது நல்லதுதான்.***

  ஆமாம், அவ்வாறு தான் செய்யப்படுகிறது. அதுதான் நல்லது.
  “பஞ்சபூதங்களினால் ஆக்கப்பட்டது அவ்வாறே கலக்கப்படவேண்டும் என்பது தத்துவம்” என்று நம் திருமதி இராஜராஜேஸ்வரி [ஆன்மீக Authority] அவர்கள் கூட பின்னூட்டம் கொடுத்துள்ளார்கள்

  ***சாத்துக்குடி.. எலுமிச்சம்பழம்..// :) அறுசுவையில் ஒருமுறை (http://www.arusuvai.com/tamil/node/5567) அழகாய் பிள்ளையார் செய்யும் விதம் சொல்லிக் கொடுத்து இருந்தார்கள். நெல்லிக்காய், சுண்டங்காய், முந்திரிப் பருப்பு எல்லாம் அளவுகளாய்ச் சொல்லி இருந்தார்கள். எனக்கும் செய்து பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால் பிறகு அதை என்ன செய்வது என்று இதுவரை செய்து பார்க்கவே இல்லை.***

  உங்களால் செய்ய முடியாத கைவேலைகளா..என்ன! இருப்பினும் செய்த பிறகு அதை என்ன செய்வது என்ற பிரச்சனைதான் வரும் .. நீங்கள் சொல்வதும் சரியே.

  //அடுப்பில் குப்பை சத்தைகளையும், மரக்குச்சிகளையும் திணித்து ஒரே புகையுடன் வெந்நீர்//

  ***பழைய நினைவுகள் வருகிறது எனக்கு. :)***

  ஆம். அந்தக்காலத்தில் என் அம்மாவும் மாமியாரும் இதுபோல பலகாலம் கஷ்டப்பட்டவர்களே.

  //காசைக் களிமண்ணாக ஆக்கக்கூடாது.//
  ***ரசித்தேன். ;)***

  மிக்க மகிழ்ச்சி, மேடம். vgk

  ReplyDelete
 33. என்ன இருந்தாலும் மடியாக களிமண்ணும், பூக்களும் கொண்டு வந்து தானே பிள்ளையாரை பிடித்து பூஜை செய்தது தான் உயர்ந்தது எனத் தோன்றுகிறது.

  நல்ல பகிர்வு சார்.

  ReplyDelete
 34. கோவை2தில்லி said...
  //என்ன இருந்தாலும் மடியாக களிமண்ணும், பூக்களும் கொண்டு வந்து தானே பிள்ளையாரை பிடித்து பூஜை செய்தது தான் உயர்ந்தது எனத் தோன்றுகிறது.//

  ஆமாம் மேடம். கிராமத்தில் இதற்கெல்லாம் வசதி வாய்ப்பு இருக்கக்கூடும். செய்யலாம்.

  டவுனில், எல்லாமே கடையில் வாங்கி மனையில் வைப்பதே பெரும்பாடாக உள்ளது. பிள்ளையார் எப்படிப் பிடிப்பது? பூக்கள் எங்கே பறிப்பது?

  //நல்ல பகிர்வு சார்.//
  மிக்க நன்றி, மேடம்.

  ReplyDelete
 35. ஐயா தங்களின் பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

  ReplyDelete
 36. RAMVI said...
  //ஐயா தங்களின் பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.//

  ரொம்ப்வும் சந்தோஷம் மேடம்.நன்றி

  ReplyDelete
 37. ஒரு அணா முதல் நான்கு அணா வரை (ஒரு ரூபாய்க்கு 16 அணா - ஒரு அணா என்பது ஆறேகால் பைசாவுக்கு சமம் - நான்கு அணா என்றால் 25 பைசா) பலவித சைஸ்களில் விநாயகர் கிடைப்பார். மிகச்சிறிய பிள்ளையார் ஒரு அணா. முரட்டு சைஸ் பிள்ளையார் நாலு அணா. ’விலை மதிப்பில்லாத அந்த பிள்ளையாருக்கு ஒரு விலையா’ என நான் ஆச்சர்யப்பட்டதுண்டு.
  ஆரம்பமே களை கட்டுதே. அணா, பைசா கணக்குகளே கண்ணைக்கட்டுதே. அதேதான் விலை மதிப்பில்லாதபிள்ளையாருக்கே விலையா?

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் January 17, 2013 at 8:43 PM

   வாங்கோ அன்புக்குரிய “பூந்தளிர்” அவர்களே, வ்ணக்கம்.

   [புனைப் பெயரிலேயே எவ்வளவு ஓர் அழகு! ;)))))]

   *****ஒரு அணா முதல் நான்கு அணா வரை (ஒரு ரூபாய்க்கு 16 அணா - ஒரு அணா என்பது ஆறேகால் பைசாவுக்கு சமம் - நான்கு அணா என்றால் 25 பைசா) பலவித சைஸ்களில் விநாயகர் கிடைப்பார். மிகச்சிறிய பிள்ளையார் ஒரு அணா. முரட்டு சைஸ் பிள்ளையார் நாலு அணா. ’விலை மதிப்பில்லாத அந்த பிள்ளையாருக்கு ஒரு விலையா’ என நான் ஆச்சர்யப்பட்டதுண்டு.*****

   //ஆரம்பமே களை கட்டுதே.//

   ஆரம்பத்தில் எல்லாம இதுபோல களை கட்டத்தான் செய்யும்.

   உங்களுக்கும் இது ஆரம்ப கட்டம்ம் மட்டும் தானே!

   போகப்போகப் பாருங்கள்.

   [போகப்போகத்தெரியும் ... இந்தப் பூவின் வாஸம் புரியும்]

   //அணா, பைசா கணக்குகளே கண்ணைக்கட்டுதே.//

   கண்ணைக்கட்டினால் போய்த்தூங்குங்கோ. இந்தக் குட்டியூண்டு கணக்குக்கே கண்ணைக் கட்டினால் எப்படி?

   என் குட்டியூண்டு நகைச்சுவைக்கதை “அவன் போட்ட கணக்கு” போய்ப்படியுங்கோ, தெரியும்.

   இணைப்பு இதோ:   //அதேதான் விலை மதிப்பில்லாதபிள்ளையாருக்கே விலையா?//

   எல்லாவற்றிற்குமே ஒரு விலை உண்டு தான். விலைமதிக்க முடியாத சில நட்புக்களை நான் இழந்து தவிக்கிறேன் ...... தெரியுமா? ;(

   பிரியமுள்ள
   கோபு

   Delete
  2. ஆஆஆஆஆ .... உங்களுடன் சேர்ந்ததால் பாருங்கோ .... எனக்கும் கணக்கு இப்போ உதைக்க ஆரம்பிச்சுடுச்சு.

   இணைப்பு இதோ என்று சொல்லிவிட்டு, இணைக்காமலேயே
   அனுப்பி விட்டேன். இப்போதான் கவனிச்சேன்.

   ஆனாலும் உங்களை நான் விடுவேனா என்ன?

   இதோ அந்த இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html

   தலைப்பு: ‘அவன் போட்ட கணக்கு’

   பிரியமுள்ள
   கோபு

   Delete
 38. சொந்த அனுபவங்களை எல்லாம்
  சுவையாக அந்தக் கால ரேடியோ
  நாடகங்கள்போல் மாற்றித் தந்து
  வாசகர்களை கற்பனை கடலில்
  மிதக்க விடும் கலை
  உம் கைவசம் உள்ளது

  அது இருக்கும் வரை உம்மை யாரும்
  அசைக்கமுடியாது

  சிரிப்பு வருது சிரிப்பு வருது
  உங்கள் பதிவைப் படித்தால்

  சிரிக்க மறுக்கும் சிடுமூஞ்சிகளுக்கும்
  சிரிப்பு வரும் சிரிப்பு வரும்

  ஆனால் ஜாக்கிரதை.
  உங்களையும் ஒரு கூட்டம்
  கிண்டலடித்துக் கொண்டிருக்கும்
  என்பதை மறந்துவிடாதீர்.

  ReplyDelete
 39. சொந்த அனுபவங்களை எல்லாம்
  சுவையாக அந்தக் கால ரேடியோ
  நாடகங்கள்போல் மாற்றித் தந்து
  வாசகர்களை கற்பனை கடலில்
  மிதக்க விடும் கலை
  உம் கைவசம் உள்ளது

  அது இருக்கும் வரை உம்மை யாரும்
  அசைக்கமுடியாது

  சிரிப்பு வருது சிரிப்பு வருது
  உங்கள் பதிவைப் படித்தால்

  சிரிக்க மறுக்கும் சிடுமூஞ்சிகளுக்கும்
  சிரிப்பு வரும் சிரிப்பு வரும்

  ஆனால் ஜாக்கிரதை.
  உங்களையும் ஒரு கூட்டம்
  கிண்டலடித்துக் கொண்டிருக்கும்
  என்பதை மறந்துவிடாதீர்.

  ReplyDelete
 40. Pattabi Raman September 10, 2013 at 4:51 AM


  வாங்கோ அண்ணா, வாங்கோ! நமஸ்காரம்.

  //சொந்த அனுபவங்களை எல்லாம் சுவையாக அந்தக் கால ரேடியோ நாடகங்கள்போல் மாற்றித் தந்து வாசகர்களை கற்பனை கடலில் மிதக்க விடும் கலை உம் கைவசம் உள்ளது

  அது இருக்கும் வரை உம்மை யாரும் அசைக்கமுடியாது //

  ஏதோ பகவானால் கொடுக்கப்பட்டுள்ளதோர் தனித்தன்மை + தனிச்சிறப்பு, அண்ணா.

  //சிரிப்பு வருது சிரிப்பு வருது உங்கள் பதிவைப் படித்தால் சிரிக்க மறுக்கும் சிடுமூஞ்சிகளுக்கும்
  சிரிப்பு வரும் சிரிப்பு வரும் //

  அப்படியா அண்ணா, ஏதோ என்னால், என் நகைச்சுவை கலந்த எழுத்துக்களால் சிலரை சில நிமிடங்களாவது சிரிக்க வைக்க முடிவதில் எனக்கும் மகிழ்ச்சியே.

  //ஆனால் ஜாக்கிரதை. உங்களையும் ஒரு கூட்டம்
  கிண்டலடித்துக் கொண்டிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்.//

  எப்படி மறக்க முடியும்?

  நேரிடையாகவும் மறைமுகமாகவும் என்னிடம் மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு சிலர் டெலிபோன் மெயில் சாட்டிங் போன்றவற்றில் என்னை ரொம்பத்தான் கிண்டலும் கேலியும் செய்து, பாராட்டியும் மகிழ்கிறார்கள்.

  அவ்வளவு ஒரு பிரியம் அவர்களுக்கு என் மீது. ;)

  தங்களின் அன்பான வருகை + அழகான பாராட்டுக்கள் + சிரத்தையான எச்சரிக்கை ஆகிய அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் அண்ணா.

  ReplyDelete
 41. ஒரு உருண்டையாக எதை வைத்தாலும் அது பிள்ளையார்தான்.

  ReplyDelete
 42. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

  அன்புடையீர்,

  வணக்கம்.

  31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இதுவரை, 2011 ஜனவரி முதல் 2011 ஆகஸ்டு வரையிலான எட்டு மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் VGK

  ReplyDelete
 43. அன்புள்ள பூந்தளிர் அவர்களுக்கு,

  வணக்கம்மா.

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 ஆகஸ்டு வரை முதல் எட்டு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  ReplyDelete
 44. அடடா! இந்தப் பதிவையும் சங்கட ஹர சதுர்த்தியான இன்று படிப்பதிலும், பதிவிடுவதிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

  அருமையான NARRATION வழக்கம் போல. அதுதான் உங்களுக்குக் கை வந்த கலை ஆயிற்றே.

  அப்படியே என் சின்ன வயது பக்கங்களை புரட்டிப் போட்டா மாதிரி இருக்கு. நானும் அப்படியே கோலம் போட்ட பலகையை எடுத்துக்கொண்டு பிள்ளையார் வாங்கக் கிளம்பிட்டேன் மனக்கண்ணில்.

  ReplyDelete
 45. நம்ப தலைமுறை ஒண்ணுதான் எல்லா பக்கமும் இடி வாங்கிய தலைமுறை. பெரியவர்களுக்கு ரொம்பவும் பயப்படுவோம். இந்தக் காலத்து பிள்ளைகள் தங்களுடைய கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லி விடுகிறார்கள். பயப்படுவதில்லை. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

  அவர்களுக்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டால் நமக்கு மகிழ்ச்சி. இல்லாவிட்டால் கஷ்டம் தான்.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

   அன்புள்ள ஜெயா,

   வணக்கம்மா !

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 ஆகஸ்டு வரை முதல் எட்டு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 46. ஓஹோ இப்பூடிதா புள்ளயாரு பூசைலா பண்ணுவாகளோ ஆமா பொரவால ஏதுக்கு தண்ணீருல கொண்டு போடுராங்க.

  ReplyDelete
  Replies
  1. mru October 12, 2015 at 10:11 AM

   //ஓஹோ இப்பூடிதா புள்ளயாரு பூசைலா பண்ணுவாகளோ ஆமா பொரவால ஏதுக்கு தண்ணீருல கொண்டு போடுராங்க.//

   கிணறு, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளிலிருந்து எடுக்கப்படும் களிமண்ணால் இந்தப் பிள்ளையார்கள் செய்யப்படுவதால், மீண்டும் அந்தக் களிமண், அதே நீர் நிலைகளிலேயே போடப்பட வேண்டும் அதுதான் நியாயம் என்பதால், அவ்வாறு செய்கிறார்கள்.

   களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார்களின் மேல் வர்ணம் அடிப்பது + அழகூட்டி அலங்கரிப்பது என்பதெல்லாம், நாளடைவில் ஏற்பட்டுள்ள தேவையில்லாத + சுற்றுச்சூழலை மாசு படுத்தும் கலாச்சாரங்கள் ஆகும்.

   Delete
 47. நாம் தரும் விலை அந்த பிள்ளையாருக்கில்லை. அவரை வடிவமைக்கும் ஏழைத் தொழிலாளிக்குத்தான். ரொம்ப சரியான வார்த்தைகளில் சொன்னீர்கள். அந்த பிள்ளையாரப்பனை யாராலாவது விலை கொடுத்தெல்லாம் வாங்கிட முடியுமா என்ன.

  ReplyDelete
 48. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஆகஸ்டு மாதம் முடிய, என்னால் முதல் 8 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 49. லட்டை எங்கே கடித்தாலும் இனிப்புதான்...வினாயகர் எப்படி இருந்தாலும் வழிபட்டாலும் அருள்தான். அடுத்தது என்னாச்சு?

  ReplyDelete
 50. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஆகஸ்டு மாதம் வரை, என்னால் முதல் 8 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 51. பழைய நினைவுகளைத் தூண்டும் பதிவு!

  ReplyDelete
 52. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஆகஸ்டு மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 8 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 53. ஆயிரம் கலர் பிள்ளையார்கள் விற்பனைக்கு வந்தாலும், களிமண்ணால் வடித்த (ப்ளாக் + ஒயிட்) பிள்ளையார் தான் அபிஷேகத்திற்கும் பூஜைக்கும் வைத்து வழிபட சாஸ்திரப்படி சிறந்தது என ஒரே போடாகப் போட்டு, என்னை சமாதானப் படுத்தி விட்டனர், என் பெற்றோர்கள். - கதையை வாசித்தேன் சார்! பலவித வண்ணங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளைக் கடலில் கரைப்பதால் தண்ணீர் பெருமளவில் மாசுபடுகின்றது என்று சூழலியலார் வேதனை தெரிவிக்கின்றனர். வெறும் களிமண்ணால் செய்த பிள்ளையார் சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் செய்யாதது.எனவே உங்கள் ஆசை நிராசையானாலும் சூழலுக்கு எந்தவிதக் கேடும் செய்யாத பிள்ளையாரை உங்கள் பெற்றோர் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. அழகு என்றும் ஆபத்து தான்! நல்ல கதை. பாராட்டுக்கள் சார்!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி October 14, 2016 at 12:11 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   அந்த சின்ன வயதில் எனக்கு, பலவித வண்ணங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளைக் கடலில்/நதியில்/குளத்தில்/கிணற்றில் கரைப்பதால் தண்ணீர் பெருமளவில் மாசுபடுகின்றது, இவை சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் விளைவிக்கின்றன என்பதெல்லாம் தெரியாமல் இருந்துள்ளது.

   தங்களின் அன்பான வருகைக்கும் நியாயமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் மேடம்.

   Delete
 54. முன்னால் சொன்னதை மீண்டும்
  நினைத்துக் கொள்ளும்படியாக
  இறுதி வரி அமைத்தது அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 55. WHATSAPP COMMENT FROM Mr. JEEVI Sir ON 21.11.2020

  உங்கள் காலம் மாறிப்போச்சு கதையை படித்து விட்டேன். இப்பொழுது படிக்க இன்னொரு விதமாய் இருந்தது. இயல்பான நகை (ச்சுவை) நீங்கள் பெற்ற வரம். பல இடங்களில் அதை மனசார ரசித்தேன். Nice write up. நிச்சயம் இந்தக் கதை பரிசுக்குத் தேர்வாகும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார். 👍. 🙏

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர்களின் + அறிவு *ஜீவி* களின் ஆசீர்வாதங்களால் மட்டுமே, ஸார். தன்யனானேன்.

   Delete