என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 6 ஆகஸ்ட், 2011

ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக வேண்டுமா? சுலபமான வழியிருக்கு வாங்க!

ஒரே மாதத்தில் நீங்கள் 
கோடீஸ்வரர் ஆக வேண்டுமா?

மிகச்சுலபமான வழியிருக்கு
உடனே வாங்க! என்னிடம்

சிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 5 ]
By வை. கோபாலகிருஷ்ணன்


-o-o-o-o-O-o-o-o-o-

மிகச்சுலபமான வழிமுறைகள் இதோ இங்கே:


வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியன்று என்னிடம் ஒரு சிறுசேமிப்புக் கணக்கு துவங்குங்கள். 

01.10.2011 அன்று ஒரே ஒரு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

02.10.2011 அன்று முதல் நாள் போல இரு மடங்கு அதாவது இரண்டே இரண்டு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

03.10.2011 அன்று முதல் நாள் கொடுத்த இரண்டு பைசா போல இரண்டு மடங்கு அதாவது 4 பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

இதுபோல 1.10.2011 முதல் 31.10.2011 வரை, முதல் நாள் சேமித்தது போல இரண்டு மடங்கு அடுத்த நாள் சேமிக்க வேண்டும், நீங்கள். 

வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதிக்கும் நீங்கள் இது போல செய்வது கஷ்டமா என்ன? 

அதுவும் மிகவும் நம்பிக்கையான நாணயமான என்னிடம், அதுவும் நீங்கள் சேமிக்கத்தானே போகிறீர்கள்! 

இதில் வெட்டிச்செலவோ வீண்செலவோ ஏதும் இல்லையே!! 

ஒரே ஒரு பைசாவில் ஆரம்பிக்கும் மிகவும் எளிமையான சுலபமான சேமிப்பு அல்லவா!!!

ஒரு மாதம் அதாவது அக்டோபர் 31 நாட்கள் முடிந்ததும், அதாவது 01.11.2011 அன்று,  நான் சுளையாக உங்களுக்குத் தரப்போவதோ 

”ஒரு கோடி ரூபாய்”


இந்த கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில், முதலில் என்னிடம் பெயர் பதிவு செய்துகொள்ளும் 100 நபர்களுக்கு ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்க நாணயம் இலவசம்; ஆடித்தள்ளுபடி போல. 

மொத்த வாடிக்கையாளர்களின் பெயர்களை குலுக்கல் நடத்தி அதில் விழும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 25 லட்ச ரூபாய் விலையுள்ள மிக உயர்ந்த கார் பரிசும் உண்டு. கார் பெறும் அதிர்ஷ்டசாலி நீங்களே தான். முந்துங்கள்! 

இனியும் என்ன யோசனை! 

சிந்தியுங்கள் !!
  
செயல்படுங்கள் !!!

அன்பான வாழ்த்துக்கள்!!!!

-o-o-o-o-O-o-o-o-o-என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


[பின்குறிப்பு:பொறுமையாகக் கணக்குப் போட்டுப் பார்த்தீர்களானால் கோடீஸ்வரராகப்போவது நீங்கள் மட்டும் அல்ல; நானும் தான் என்பது உங்களுக்கே நன்கு விளங்கும்!! 


இது போலத்தாங்க எல்லா வியாபார நிறுவனங்களும் நம்மை மூளைச்சலவை செய்து, மாபெரும் அதிரடித்தள்ளுபடி, ஆடித்தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இந்தப்பொருள் வாங்கினால் அந்தப்பொருள் இலவசம், அடக்கவிலைக்கே விற்பனை செய்கிறோம் என்று ஏதேதோ சொல்லி, நம்மை ஏமாற்றுகிறார்கள்.நாமும் எதையுமே யோசிக்காமல் மீண்டும் மீண்டும் ஏமாறுகிறோம்.யாரும் எந்த வியாபாரியும், எந்த உற்பத்தியாளரும் இலாபம் இல்லாமல் எந்தத் தொழிலும் செய்யவே மாட்டார்கள். அதுபோல செய்யவும் முடியாது என்பதே உண்மை. விழிப்புணர்வு கொள்ளுங்கள். நியாயமாக சம்பாதித்து, எளிமையாக வாழக்கற்று,  இனிமையாக இருப்போமாக!  வாழ்த்துக்கள் ]


-o-o-o-o-o-o-o-


 “எளிய வாழ்க்கை” என்ற தலைப்பில் ஜகத்குரு அவர்கள் கூறியுள்ள அருள் வாக்கை நீங்களும் கொஞ்சம் படியுங்களேன்:  


'நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும்’ என்று நினைப்பது உத்தமமான எண்ணம். ஆனால் எண்ணம் உத்தமமாயிருந்து விட்டால் போதுமா?


நாம் டாம்பீகமாக வாழ்க்கை நடத்திக்கொண்டு, மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? அப்படியே நடந்து அமெரிக்கா மாதிரி எல்லோரும் ‘லக்‌ஷூரியஸாக’ வாழ முடிந்தாலும் அது நல்லது தானா?


லெளகீகமான செளக்யங்கள் ஜாஸ்தியாக ஆக, ஆத்மாபிவிருத்திக்கே விழியில்லாமல் தானே ஆகியிருக்கிறது? எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரி தானே இந்த ஆசை என்பது. அது எவ்வளவு செளக்யம் இருந்தாலும் திருப்திப்படாமல் இன்னும் புதுசு புதுசாய் ஸெளக்ய ஸாதனங்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கும்.


மனுஷ்யனின் ஆத்மாபிவிருத்திக்கு பிரதிகூலமாக வெறும் லெளகீக ரீதியில் செய்கிற எந்த உபகாரமும் உபகாரமேயில்லை. அபகாரம் தான்.


எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்மக்ஷேமம். ஆகையால் மற்றவர்கள் எளிய வாழ்க்கையில் இருக்கும்படியாகப் பண்ணுவதுதான் நிஜமான உபகாரம். இதை எப்படிப் பண்ணுவது? நாம் டாம்பீகமாக வாழ்ந்துகொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தால் நடக்குமா? ஆகையால் நாமே எளிமையாக வாழ்ந்து காட்ட வேண்டும். 


அதாவது, ‘நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழ வேண்டும்’ என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும். ‘ஏழைகள் உள்பட மற்றவர்கள் எல்லோரும் எப்படி வாழமுடியுமோ, எப்படி வாழ்ந்தால்தான் ஆத்மாபிவிருத்திக்கு நல்லதோ, அப்படித்தான் நாமும் வாழ வேண்டும்; அதாவது ரொம்ப ஸிம்பிளாக வாழவேண்டும்’ என்று முதலில் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்.    [நன்றி: கல்கி 11.07.2010 பக்கம் 33 ]


71 கருத்துகள்:

 1. இந்த கணக்கைப்பார்த்தா ஆயிடாம் போல...

  ஆனா..?

  பதிலளிநீக்கு
 2. விழிப்புணர்வு கொள்ளுங்கள். நியாயமாக சம்பாதித்து, எளிமையாக வாழக்கற்று, இனிமையாக இருப்போமாக! வாழ்த்துக்கள் ]//

  விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மூளைச்சலவை செய்து, மாபெரும் அதிரடித்தள்ளுபடி, ஆடித்தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இந்தப்பொருள் வாங்கினால் அந்தப்பொருள் இலவசம், அடக்கவிலைக்கே விற்பனை செய்கிறோம் என்று ஏதேதோ சொல்லி, நம்மை ஏமாற்றுகிறார்கள்.//

  அதுவும் ஆடிதள்ளும்படி விளம்பரங்கள் அதிகம். சரியான நேரத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. யாரும் எந்த வியாபாரியும், எந்த உற்பத்தியாளரும் இலாபம் இல்லாமல் எந்தத் தொழிலும் செய்யவே மாட்டார்கள். அதுபோல செய்யவும் முடியாது என்பதே உண்மை. //

  ஆணித்தரமாக கூறியிருக்கிறீர்கள். புரிந்துகொண்டால் சரி.

  பதிலளிநீக்கு
 5. நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும். ‘/

  தீர்மானமில்லாத வாழ்க்கை கடிவாளமில்லாத குதிரை
  பிரேக் இல்லாத வண்டி.

  பதிலளிநீக்கு
 6. //எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரி தானே இந்த ஆசை என்பது. //

  super...

  பதிலளிநீக்கு
 7. நல்ல விழிப்புணர்வளிக்கும் இடுகை ஐயா.

  பதிலளிநீக்கு
 8. மூளைச்சலவை இன்று வியாபரத்தின் அடிப்படைத் தகுதியாகவே இருக்கிறது.

  ஏமாறுவோர் இருக்கும் வரை......
  இது தொடரும்.

  பதிலளிநீக்கு
 9. பயனுள்ள பகிர்வு.

  //"அதாவது, ‘நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழ வேண்டும்’ என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்."//

  நானும் படித்தேன். அருமையான வரிகள். அவர் குரலில் ஒன்பது சிடிக்கள் வாங்கி வைத்துள்ளேன்

  பதிலளிநீக்கு
 10. முதல் பகுதி அலெக்ஸ் கம்பெனி என்று திருச்சியில் பிரபலாமான வார்த்தை நினைவிற்கு வருகிறது. பெரியவாள் வாக்குப்படி நாம் நடக்க முயற்சிக்கலாம். ஒரேயடியாக இல்லாவிட்டலும் சிறிது சிறிதாக முயற்சிப்போம்.

  பதிலளிநீக்கு
 11. //ஒரே மாதத்தில் நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா?//

  இதுவே ஒரு நோட்டீஸ் அடித்து பேருந்துகளிலும், ரயிலிலும் ஓட்டியிருந்தால், பின்குறிப்பைப் படிக்காமல் கும்பகோணம் மகாமகம் போல உங்கள் வீட்டு வாசலில் கூட்டம் கூடியிருக்கும்.

  அப்புறம், கொஞ்ச நாட்கள் கழித்து அதே கூட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீரும் கம்பலையுமாய் "ஏமாத்திட்டாங்க, அரசாங்கம் தான் கண்டுபிடிக்கணும்," என்று அலறுவதை டிவியில் பார்க்கலாம்.

  :-))))

  பதிலளிநீக்கு
 12. திருமதி சாகம்பரி &
  திரு சேட்டைக்காரன்

  இது ஏமாற்று வேலையே அல்ல.
  ஒன்றாம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நான் சொன்னபடி நீங்கள் கொடுத்தால் நிச்சயமாக என்னால் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தர முடியும்.

  உங்களால் தான் தொடர்ந்து நான் சொன்னபடி தினமும் தவறாமல் தொகையை சேமிக்க முடியாது என்பதே உண்மை.

  இது சாதாரண ஒரு கணக்கு மட்டுமே. எந்த ஏமாற்று வேலைகளும் இதில் கிடையவே கிடையாது.

  ஒரு பேப்பரிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ இந்தக்கணக்கைப் போட்டுக் கூட்டிப்பாருங்கள்.

  அப்போது தெரியும் நீங்கள் என்னிடம் கொடுக்கும் மொத்தத்தொகை எவ்வளவு, அந்தத்தொகையுடன் ஒப்பிடும்போது நான் உங்களிடம் கொடுப்பதாகச் சொல்லும் ஒரு கோடி ரூபாய் என்பது எவ்வளவு ஒரு மிகச்சிறிய அல்பமான தொகை என்பது.

  இது ஒரு வேடிக்கையான கணக்கு மட்டுமே. ஏமாற்று வேலை எதுவுமே கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 13. //
  ஒரு பேப்பரிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ இந்தக்கணக்கைப் போட்டுக் கூட்டிப்பாருங்கள்.

  இது ஒரு வேடிக்கையான கணக்கு மட்டுமே. ஏமாற்று வேலை எதுவுமே கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளவும்.//

  நீங்கள் நகைச்சுவையாக எழுதியிருப்பதாக நினைத்தேன். இது போல பல சீட்டுக்கம்பனிகள் செய்த முந்திய செய்திகளும் ஞாபகத்துக்கு வந்தன. மற்றபடி, இதை ஏமாற்றுவேலை என்றெல்லாம் சொல்லுகிற துணிவோ அறிவோ எனக்குக் கிடையாது சார்!

  எனது சிற்றறிவுக்கு இது புரியவில்லை. இதனால் தான் கணக்கு, புதிர் சம்பந்தப்பட்ட இடுகைகளில் பின்னூட்டம் இடுவதில்லை. எனது குறிக்கோள் இதை ஏமாற்று வேலை என்று சொல்வதல்ல என்று மட்டும் பணிவோடு சொல்லிக்கொள்கிறேன். தவறாய் இருப்பின் மன்னிப்புக் கோருகிறேன்.

  பி.கு: எனது கருத்துக்கான பதிலை உங்கள் இடுகையில் போட்டால் போதுமானது. :-)

  பதிலளிநீக்கு
 14. சார், பிராக்டிக்கலாக பார்க்கும்போது சில நாட்கள் கழித்து கட்டமுடியாமல் போய்விட்டால் ஸ்கீமிலிருந்து விலக்கிவிடுவார்கள். நாம் ஏற்கன்வே கட்டிய பணம் வருவதும் சந்தேகம்தான். இது போன்று நடந்த கதைகளும் உண்டு. முடிக்க முடியாத டெர்ம்ஸை சொல்லும் விதத்தில் எளிதாக அறிமுகபடுத்துவது ஏமாற்று வேலைதானே. அதைத்தான் அலெக்ஸ்கம்பெனி என்று சொன்னேன்

  பதிலளிநீக்கு
 15. அட அடுத்த கணக்கு.... இப்பல்லாம் ஒரே கணக்குப் பதிவாகவே இருக்கு.... ரொம்ப நல்லா இருக்கு இந்த பகிர்வுகள். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 16. நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 17. பேராசை பேரு நஷ்டம் என உணருவதற்கான நல்ல பதிவு இது.

  பதிலளிநீக்கு
 18. அட..அருமையான கணக்கு!
  இந்த கால கட்டத்தில் எளிமையாக வாழ நினைப்பதும் தவம் தான்!

  பதிலளிநீக்கு
 19. அன்பின் கோபு சார் இந்தக் கண்க்கை என் பதிவு சிறு துளி பெரு வெள்ளம் -ல் கவிதையாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் கணக்குப் போடுவதை வாசகர்களுக்கே விட்டு விட்டேன். சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் என்றுமே சிறந்தது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து, முப்பத்து ஒன்றாம் தேதி வரையிலும் நான் கொடுக்கின்ற தொகை ரூ 21,47,48,364 + எழுபது பைசாக்கள். நீங்க எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், உங்களுக்கு லாபம் 20,47,48,364 + எழுபது பைசாக்கள்.கிட்டத் தட்ட இருபதரைக் கோடி ரூபாய்கள்.

  பதிலளிநீக்கு
 21. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை சீட்டுக் கம்பெனிகளில் ஏமாறுபவர்கள் டிவிக்களில் காண்பிக்கப்பட்டாலும் யாரும் மாறவே இல்லை. தொடர்ந்து ஏமாந்து கொண்டுதானிருக்கிறார்கள். கோபால் சார்

  பதிலளிநீக்கு
 22. kggouthaman said...
  //அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து, முப்பத்து ஒன்றாம் தேதி வரையிலும் நான் கொடுக்கின்ற தொகை ரூ 21,47,48,364 + எழுபது பைசாக்கள். நீங்க எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், உங்களுக்கு லாபம் 20,47,48,364 + எழுபது பைசாக்கள்.கிட்டத் தட்ட இருபதரைக் கோடி ரூபாய்கள்.//

  Sir,

  I think some calculation mistake will be there in your working.

  According to me, the total collection from 1st to 31st is Rs. 2,14,74,836--47 P only.

  On 31st alone, the depositor should pay Rs. 1,07,37,418/24 P to me.

  Please check up once again & confirm.

  பதிலளிநீக்கு
 23. அன்பின் வை.கோ - இது சாதாரணக்கணக்கு தான் - யாரும் கணக்குப் போட்டுப் பாரப்பதில்லை. 31 நாட்களுக்கு விதி முறைப்படி கட்டினால் - மொத்தம் கட்டிய துகை இரண்டு கோடியே பதினான்கு இலட்சத்து எழுபத்து நாலாயிரத்து எண்ணூற்று முப்பத்தாறு ரூபாய் நாற்பத்தேழு பைசா வரும். அழகாக தாங்களூம் ஒரு கோடி ரூபாய், தங்கக்காசு 25 இலட்சத்துக்குக் கார் என வாரி வழங்கலாம். இது மாதிரி விளம்பரங்கள் வரும் போது யாரும் கணக்குப் போட்டுப் பார்ப்பதில்லை.

  கவுதமன் மறுமொழியில் கூறியது சரியான விடையைப் போல் பத்து மடங்கு.

  எளிய வாழ்க்கை - ஜகத்குரு அவர்கள் கூறீய அருள் வாக்கு அருமை. பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 24. பல வருடங்கள் முன் என்டமூரி வீரேந்த்ர நாத் எழுதி தமிழில் வெளியான பணம் என்னும் நாவலின் கருவே இதுதான்.

  பதிலளிநீக்கு
 25. நல்ல வழியாகத்தான் தெரியுது. நான் சேர்ந்துடுவேன். ஆனா ஒரு சிக்கல். கோடி ரூபாய் கெடச்சா அப்புறம் எனக்கு தூக்கம் வராதே, என்ன பண்றதுங்க?

  ஒரு பழைய கதை இங்கு பொருத்தமாக இருக்கும்.

  சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்த ஒரு அரசவை மேதைக்கு பரிசளிக்க அந்த மன்னன் விரும்பினானாம். அதற்கு அந்த மேதை எனக்குப் பரிசு ஒன்றும் வேண்டாம், உங்கள் ஆதரவு இருந்தால் போதும் என்றானாம். மன்னன் வற்புறுத்த அந்த மேதை கேட்டது.

  சதுரங்க கட்டத்தில் முதல் கட்டத்தில் ஒரு நெல் மணியும், அதற்கடுத்த கட்டத்தில் இரண்டு நெல்மணியும், இப்படியே ஒவ்வொரு கட்டத்திற்கும் முந்தின கட்டத்தில் வைத்ததைப் போல இரு மடங்கு நெல் மணிகளுமாக 64 கட்டத்திலும் வைத்துக் கொடுத்தால் போதும் என்று சொன்னானாம்.

  மன்னன் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து விட்டு, உன் ஆசை இவ்வளவுதானா என்று சொல்லி, மந்திரிகளைக் கூப்பிட்டு இவன் கேட்ட அளவு நெல் மணிகளை உடனே கொடுங்கள் என்று சொல்லிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டான்.

  மறுநாள் காலை அரசவைக்கு வந்தவுடன் மன்னன் மகாமந்திரியைக் கூப்பிட்டு "அந்தப் பைத்தியக்காரனுக்கு அவன் கேட்ட நெல்லைக் கொடுத்தாயிற்றா?" என்று கேட்டானாம்.

  மந்திரி தலையைச் சொறிந்து கொண்டு இன்னமும் கணக்குப் போட்டு முடியவில்லை, சீக்கிரம் போட்டு விடுவோம் என்று சொல்ல, மன்னன் கோபமாகி, இன்று மாலைக்குள் அவன் கேட்ட நெல்லைக் கொடுக்காவிட்டால் உங்களைச் சிரச்சேதம் செய்து விடுவேன் என்று ஆணையிட்டான்.

  அன்று மாலை மகாமந்திரி மன்னனிடம் பவ்யமாக வந்து மன்னா. கணக்குப் போட்டு முடித்து விட்டோம் என்று சொன்னான். அப்படியானால் நெல்லைக் கொடுத்தாயிற்றா என்று மன்னன் கேட்டான்.

  மந்திரி இல்லையென்று கூற, ஏன் தாமதம் என்று மன்னன் கேட்டான். மந்திரி தலையைச் சொறிந்து கொண்டே, அவ்வளவு நெல் நம் கஜானாவில் இல்லையென்று சொன்னான். என்ன, அப்படியா, அப்படியானால் நம் தலைநகரிலுள்ள எல்லா வீடுகளிலிருந்தும் நெல்லைக் கைப்பற்றிக் கொடுக்க வேண்டியதுதானே என்றான்.

  மன்னா, அதில் ஒரு சிக்கல். நம் தலைநகர் மட்டுமல்ல, நம் நாட்டிலுள்ள அத்தனை நெல்லையும் கொள்முதல் செய்தால் கூட அவன் கேட்ட நெல்லைக் கொடுக்க முடியாது, அது மட்டுமல்ல, இன்னும் பல ஆண்டுகளுக்கு நம் நாட்டில் விளையும் நெல் கூட அவனுக்குக் கொடுக்கப் போதாது என்றான்

  மன்னன் இதைக்கேட்டு வாயடைத்துப் போனான். அதன் பிறகு அந்த மேதையை சிரச்சேதம் செய்ததாக ஒரு செய்தி.

  கதையின் நீதி:

  உங்களை என்ன செய்யலாம் என்பதை பொதுமக்கள் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறேன்!!!!!!!!

  பதிலளிநீக்கு
 26. என்னுடைய கணக்கு தவறு. ஒரு பைசா என்பதை 0.1 என்று எடுத்துக் கொண்டு கணக்கிட்டதால் - வந்த தவறான விடை - பத்து மடங்கு அதிகமாகி விட்டது. 0.01 என்று எடுத்துக்கொண்டு கணக்கிட்டால், 2,14,74,836.47 இரண்டு கோடியே பதினான்கு இலட்சத்து எழுபத்து நான்காயிரத்து எண்ணூற்று முப்பத்தாறு ரூபாய்களும், நாற்பத்தேழு பைசாக்க்களும்தான் வரும். சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கு நன்றி. எல்லோருக்கும் 'உலக நட்பு நாள்' வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 27. கோடியே வேணாம்
  உங்க அன்பு போதும்

  பதிலளிநீக்கு
 28. // இலாபம் இல்லாமல் எந்தத் தொழிலும் செய்யவே மாட்டார்கள். //

  உண்மை. நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 29. மூளைச்சலவை இன்று வியாபரத்தின் அடிப்படைத் தகுதியாகவே இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. //எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரி தானே இந்த ஆசை என்பது// satyamana varthaikal sir!!

  பதிலளிநீக்கு
 31. நிறைய பேரின் ஆதீத ஆசைக்கு ஒரு குட்டு...

  இப்போதான் உங்க திருச்சி பத்தின பதிவு பார்த்தேன். கமெண்ட் கூறியுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 32. இந்தக் கதையும் படிக்கலாம்!!

  http://www.nilacharal.com/tamil/specials/tamil_community_248.asp

  பதிலளிநீக்கு
 33. கோடீஸ்வர விழிப்புணர்வுக்கு நன்றி ஐயா....


  அதாவது ரொம்ப ஸிம்பிளாக வாழவேண்டும்’ என்று முதலில் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்/  நல்ல கருத்துடன் விளக்கியிருக்குறீங்க...
  மனிதன் வாழும் பாங்கை....
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 34. ஒரு மாசம் எதுக்கு சார், கோடீஸ்வரன்னு பேரை மாத்திக்கிட்டா ஒரே நிமிசத்துல கோடீஸ்வரன் ஆகிடலாம்.....!

  பதிலளிநீக்கு
 35. நல்ல விழிப்புணர்வு ஊட்டும்
  பதிவு
  நன்று நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 36. விந்தையான கணக்குத் தான்! புக்மார்க் பண்ணிக்கிறேன். நான் தாத்தா ஆகும் காலத்தில் பேரப்பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டாமா?!
  பெரியவா வார்த்தைகள் அக்ஷ்ர லட்சம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Total : 2,14,74,836.47 INR = (2 power 31) - 1 correct?
   வானவில் மனிதர் வங்கி மனிதர் ஆச்சே :)?

   நீக்கு
 37. அனைவரும் அறிய வேண்டிய விஷயம்
  விழிப்புணர்வு மிக்க பதிவு.பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 38. நல்ல பதிவு
  எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு

  பதிலளிநீக்கு
 39. அய்.. அய் நான் 107374182.4
  ரூபாய் (பத்து கோடியே 73 லட்சத்து 74 ஆயிரத்து 182 ரூபாய்) கொடுப்பேனாம் . சார் ஒரு கோடி மட்டும் கொடுத்து வள்ளல் பட்டம் வாங்கிக்குவாராம்.
  கெளம்பிட்டாங்கய்யா ... கெளம்பிட்டாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவகுமாரன்August 7, 2011 at 1:24 PM

   கணக்குக்கான உங்கள் விடை முற்றிலும் தவறு. மீண்டும் பொறுமையாக சரியாகக் கூட்டிப்பாருங்கள்.

   ஏற்கனவே பலர் சரியான விடைகளை மேலே எழுதியும், தாங்கள் எப்படி இப்படியொரு தவறான விடையைச் சொல்கிறீர்களோ ! ?????

   நீக்கு
 40. விழிப்புணர்வு கொள்ளுங்கள். நியாயமாக சம்பாதித்து, எளிமையாக வாழக்கற்று, இனிமையாக இருப்போமாக! //

  நியாய‌மான‌ பேச்சு இது!

  க‌ண‌க்கு த‌லைசுற்ற்லான‌ பிர‌மிப்பு.

  பதிலளிநீக்கு
 41. நீங்கள் பின்குறிப்பு மட்டும் போடாமல் விட்டிருந்தீர்களானால்..... உங்கள் மெயில் இன்பாக்ஸ் நிறைந்திருக்கும்... உங்கள் செல்போன் அலறிக்கொண்டேயிருந்திருக்கும்...

  காரணம்.. எதைச் சொன்னாலும் அதை நம்பி ஏமாறும் உள்ளங்கள் இங்கே அதிகம்.

  பயனுள்ள பதிவு...

  பதிலளிநீக்கு
 42. இந்த ஏமாற்று வேலைகள் இனியும் தொடரும்.... ஏனென்றால் ஏமாறதான் நாம் இருக்கோம் அல்லவா...

  ஒட்டு மொத்த மக்களும் விழிப்புணர்வு பெறுவது எப்போது...?

  பதிலளிநீக்கு
 43. ஆசைகாட்டி ஏமாற்றுவதுதான் பொதுவாகச் செய்வார்கள். நீங்கள் ஆசைக்காட்டி உங்கள் தளத்திற்கு வரவழைத்து நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். அப்போதே இந்தக் கணக்கெல்லாம் குமுதம் மாதிரி இதழ்களில் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இன்றைய தலைமுறை சிலவற்றை விளங்கிக்கொள்ள இதுபோன்ற அழைப்புக்களும் அதைத்தொடர்ந்த சிந்தனைகளும் தேவை.சரியானபடி செய்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 44. //விழிப்புணர்வு கொள்ளுங்கள். நியாயமாக சம்பாதித்து, எளிமையாக வாழக்கற்று, இனிமையாக இருப்போமாக! வாழ்த்துக்கள் ]//
  ஆம் ஐயா எளிமையாக வாழ்வதே சிறந்தது.

  நல்ல பயனுள்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 45. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, ஆதரவாக பல கருத்துக்கள் கூறி,என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அருமை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  பதிலளிநீக்கு
 46. தலைப்பைப் பார்த்ததும் உடனடியாக தங்கள் அலைபேசி எண்ணை வாங்கி தங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கை காலெல்லாம் பரபரத்தது. முழுக்கப் படித்ததும் தான் " யதார்த்தம் " நறுக் என்று ஒரு கொட்டு வைத்தது ! இங்கு பலர், குறுக்கு வழியைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். இந்த உண்மை, நேர்மை , எளிமை யாவும் சமூகத்தில் வழக்கொழிந்து கொண்டிருக்கும் வார்த்தைகளாகி விட்டன. அதை அருமையான யதார்த்த நடையில் உணர்த்துகிறது தங்கள் பதிவு !

  பதிலளிநீக்கு
 47. வாருங்கள் திரு. குருச்சந்திரன் அவர்களே,

  வணக்கம். தங்களின் அன்பான முதல் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 48. sir
  உங்களுடைய கோடீஸ்வரராகும், கோடிஸ்வரராக்கும் யுத்தி அருமையாக இருந்தது.

  ராஜி

  பதிலளிநீக்கு
 49. rajalakshmi paramasivam November 30, 2012 4:11 AM
  //sir
  உங்களுடைய கோடீஸ்வரராகும், கோடிஸ்வரராக்கும் யுத்தி அருமையாக இருந்தது.

  ராஜி//

  வாருங்கள் மேடம். வணக்கம்.

  தங்களின் அன்பான வருகைக்கும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கோடீஸ்வரராகும் திட்டத்தினைப் புரிந்து கொண்டு கருத்தளித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 50. எம்மாம் பெரிய பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.அப்பாடா?

  பதிலளிநீக்கு
 51. இந்த பதிவைப் படிச்சதும் நான் கோடீஸ் வரி ஆயிட்ட மாதிரி இருக்கு

  பதிலளிநீக்கு
 52. //அதுவும் மிகவும் நம்பிக்கையான நாணயமான என்னிடம்//

  இதுக்கு ஏதாவது சர்ட்டிபிகேட் இருக்குதா? இருந்தாத்தான் நான் நம்புவேன்.

  பதிலளிநீக்கு
 53. குறுக்கு வழியில பணம் சேர்க்கணும்ன்னு நினைக்கறவங்க இந்தப் பதிவைப் படிக்கட்டும்.

  ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.

  பதிலளிநீக்கு
 54. நமக்கெல்லா கருக்கு வளி தோதுபடாதுங்க. நேர்மயா ஒளச்சு சம்பாரிச்சாதா தங்கும்ல.

  பதிலளிநீக்கு
 55. தலைப்பு பார்த்து எத்தனை பேரு ஓடோடி வந்திருக்காங்க. எளிமையா வாழணும் என்பதெல்லாம் சரியான கருத்து தான். நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியலயே. பல வீடுகளில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போயி சம்பாதிக்கிறவர்களாக இருக்காங்க. குழந்தை களுக்கோ பணத்தின் அருமையை தெரிந்து கொள்வதற்கே வாய்ப்பில்லை. எப்படி எளிமையான வாழ்க்கையை புரிய வைக்க.

  பதிலளிநீக்கு
 56. //‘ஏழைகள் உள்பட மற்றவர்கள் எல்லோரும் எப்படி வாழமுடியுமோ, எப்படி வாழ்ந்தால்தான் ஆத்மாபிவிருத்திக்கு நல்லதோ, அப்படித்தான் நாமும் வாழ வேண்டும்; அதாவது ரொம்ப ஸிம்பிளாக வாழவேண்டும்’ என்று முதலில் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்.// உண்மைதான். எளிமை என்றும் ...வலிமை...

  பதிலளிநீக்கு
 57. நேர்மையா சம்பாதித்து நியாயமா வாழுறவங்களுக்கு இந்த கோடீஸ்வர ஆசையெல்லாம் வரவே வராது.....வரவும் கூடாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... March 8, 2017 at 2:04 PM

   //நேர்மையா சம்பாதித்து நியாயமா வாழுறவங்களுக்கு இந்த கோடீஸ்வர ஆசையெல்லாம் வரவே வராது..... வரவும் கூடாது...//

   அதெல்லாம் சரி. சேமிப்பு என்பதும் மிகவும் அவசியமாகும்.

   நீக்கு