முதிர்ந்த பார்வை
[சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
இப்படியாக மணிகண்டனும் கல்யாணியும் தனிக்குடித்தனம் செய்ய ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அவர்கள் இருவரும்,அந்த வயதான பெரியவர்களுக்குப் பிடித்தமான பலகாரங்களுடன், முதியோர் இல்லம் சென்று, அவர்களுடன் நெடுநேரம் பேசிவிட்டு,விடைபெறும் முன் அவர்களை நமஸ்கரித்து ஆசி வாங்கிவரத் தவறுவதில்லை.
இசைப்பிரியரான மணிகண்டனின் தாய், அடுத்தமுறை தன்னைப்பார்க்க வரும்போது, தன் வீட்டிலுள்ள பழைய வீணையை மட்டும் தன்னிடம் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள்.
ஏதோ வேறு வழி தெரியாமல் புறப்பட்டு வந்து விட்டார்களே தவிர, குடும்பத்தை விட்டு, முதியோர் இல்லத்தில் சேர்ந்த அவர்களுக்கு ஒவ்வொரு நாள் போவதும் ஒரு யுகமாகவே தோன்றியது. ”மணிகண்டன் என்ன செய்கிறானோ, எப்படி இருக்கிறானோ; பாவம் கல்யாணி வீட்டில் தனியாக இருந்து, எல்லா வேலைகளையும் ஒண்டியாகவே செய்து என்ன கஷ்டப்படுகிறாளோ” என்ற நினைவுடனே இருந்து வந்தனர்.
நேரம் தவறாமல் வாய்க்கு ருசியாக சமையல் செய்துபோட்டு வந்த தங்கள் மருமகள் கல்யாணியை நினைத்து அவ்வப்போது கண் கலங்கி வந்தனர்.
ஏதோ ஒரு ஆத்ம திருப்திக்கு, அந்தத்தாய்க்கு, தான் என்றோ கற்ற வீணை இப்போது தேவைப்படுகிறது. வீணாக இங்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தில் வீணையையாவது மீட்டு, மனச்சாந்தி அடையலாமோ! என்ற ஒரு சிறு ஏக்கம், அந்த அம்மாளுக்கு.
இசைப்பிரியரான மணிகண்டனின் தாய், அடுத்தமுறை தன்னைப்பார்க்க வரும்போது, தன் வீட்டிலுள்ள பழைய வீணையை மட்டும் தன்னிடம் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள்.
ஏதோ வேறு வழி தெரியாமல் புறப்பட்டு வந்து விட்டார்களே தவிர, குடும்பத்தை விட்டு, முதியோர் இல்லத்தில் சேர்ந்த அவர்களுக்கு ஒவ்வொரு நாள் போவதும் ஒரு யுகமாகவே தோன்றியது. ”மணிகண்டன் என்ன செய்கிறானோ, எப்படி இருக்கிறானோ; பாவம் கல்யாணி வீட்டில் தனியாக இருந்து, எல்லா வேலைகளையும் ஒண்டியாகவே செய்து என்ன கஷ்டப்படுகிறாளோ” என்ற நினைவுடனே இருந்து வந்தனர்.
நேரம் தவறாமல் வாய்க்கு ருசியாக சமையல் செய்துபோட்டு வந்த தங்கள் மருமகள் கல்யாணியை நினைத்து அவ்வப்போது கண் கலங்கி வந்தனர்.
ஏதோ ஒரு ஆத்ம திருப்திக்கு, அந்தத்தாய்க்கு, தான் என்றோ கற்ற வீணை இப்போது தேவைப்படுகிறது. வீணாக இங்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தில் வீணையையாவது மீட்டு, மனச்சாந்தி அடையலாமோ! என்ற ஒரு சிறு ஏக்கம், அந்த அம்மாளுக்கு.
இது இவ்வாறு இருக்க, அக்கம் பக்கத்தில் உள்ள பெண்மணிகள், ஜாடைமாடையாக “இருந்தால் நம் கல்யாணி மாதிரி அதிர்ஷ்டமாக இருக்கணும்; வந்து நாலே வருஷத்தில், அப்பா அம்மாவின் செல்லப்பிள்ளையாண்டானாக இருந்த மணிகண்டனை அடியோடு மாற்றி, அவர்கள் இருவரையும் பேயோட்டுவது போல, வீட்டைவிட்டுத் துரத்தி விட்டு, ஜாலியாக இருக்கிறாள், பாரு; நம்ம எல்லோருக்கும் இதுபோல ஒரு அதிர்ஷ்டம் அடிக்குமா என்ன? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பிணை வேண்டுமோல்யோ!” என்று பேசிக்கொள்வதைக் கேட்க கல்யாணிக்கு மனம் வேதனைப்பட்டு வந்தது. ஊர் வாயை மூடமுடியுமா என்ன? எல்லாம் நம் தலையெழுத்து என்று பேசாமலேயே இருந்து விட்டாள்.
ஒண்டியாகவே வீட்டுக்காரியங்கள் எல்லாவற்றையும் பார்த்து வந்த கல்யாணியின் உடம்பு சற்று இளைப்பாகவும், களைப்பாகவும் மாறத்தொடங்கியது. தலை சுற்றல், வாந்தி என அவதிப்பட்டவளை, மணிகண்டன் டாக்டரம்மாவிடம் கூட்டிச்சென்றான்.
எல்லாவித டெஸ்ட்களும் செய்த டாக்டரம்மா, அவள் கருவுற்றிருப்பதாகவும், இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாகவும், அடுத்த மாத டெஸ்ட்டுக்கு வரும்போது அதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்து விட்டு, கல்யாணியின் உடம்பை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் கூறிவிட்டு, ஒருசில மாத்திரைகளும், டானிக்கும் வாங்கி சாப்பிடும்படி சீட்டு எழுதிக்கொடுத்தார்கள்.
எல்லாவித டெஸ்ட்களும் செய்த டாக்டரம்மா, அவள் கருவுற்றிருப்பதாகவும், இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாகவும், அடுத்த மாத டெஸ்ட்டுக்கு வரும்போது அதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்து விட்டு, கல்யாணியின் உடம்பை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் கூறிவிட்டு, ஒருசில மாத்திரைகளும், டானிக்கும் வாங்கி சாப்பிடும்படி சீட்டு எழுதிக்கொடுத்தார்கள்.
டாக்டர் சொன்னதைக்கேட்ட மணிகண்டன் கல்யாணியைக் கூட்டிக்கொண்டு, நேராக முதியோர் இல்லத்திற்குச் சென்று, தன் தாய் தந்தையரிடம், டாக்டரம்மா சொன்ன விஷயங்களைத் தெரிவித்து விட்டு, இந்த நேரத்தில் அவளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்? அவளுக்கு உதவிகள் செய்ய தன் மாமியாரையோ அல்லது மச்சினியையோ வரவழைக்க வேண்டுமா? என பல்வேறு சந்தேகங்களைத் தன் தாயிடம் கேட்கலானான்.
தங்களுக்கு பேரன்களோ, பேத்திகளோ அல்லது இரண்டுமோ பிறக்க இருக்கும் இனிப்பான சமாசாரத்தைக் கேள்விப்பட்ட, அந்த வயதான இருவரும், மிகவும் சந்தோஷப்பட்டு, வாழ்த்தினர்.
“இந்த சந்தோஷமான நேரத்தில் வயதான நீங்கள் இருவரும் வீட்டில் இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! ஜோஸ்யர் சொன்ன ஒரு வருடத்திற்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கின்றதே; அதற்குள் பிரஸவ நேரமும் நெருங்கி விடலாம்; அல்லது பிரஸவமே கூட நிகழ்ந்து விடலாம்! யார் தான் வந்து எங்களுக்கு உதவப்போகிறார்களோ” என்று கணவன் மனைவி இருவரும் கண் கலங்கியபடி கூறினார்கள்.
மணிகண்டனின் தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். பிறகு அவர்களுக்குள் தனியாகப்பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.
“டேய் ... மணிகண்டா, வருவது வரட்டும்டா, நீ போய் ஒரு டாக்ஸி கூட்டிக்கொண்டு வா. நாங்கள் இருவரும் இப்போதே உங்களுடன் வீட்டுக்கு வந்து விடுகிறோம்; இதுபோன்ற நேரத்தில் கல்யாணிக்கு போஷாக்கான ஆகாரங்கள் நிறைய கொடுத்து, அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கச்சொல்லி கவனமாகப் பார்த்துக்கொள்ளணும்” என்றார் மணிகண்டனின் தந்தை. கல்யாணியின் தலையைக் கோதிக் கொடுத்துக் கொண்டே மணிகண்டனின் தாயும் அதை அப்படியே ஆமோதித்தாள்.
“ஜோஸ்யர் சொன்னபடி, குருப்பெயர்ச்சி முடியும் முன்பு, நாம் எல்லோரும் சேர்ந்திருந்தால், ஒரு வேளை யாருக்காவது ஏதாவது ஆபத்து வருமோ?” என்று கவலையுடன் வினவினான், மணிகண்டன்.
“அதுபோல எதுவும் ஏற்படாதுடா; அதற்கும் ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார் அந்த ஜோஸ்யர்” என்றார் மணிகண்டனின் தந்தை.
“அப்படியா! அது என்னப்பா .... பரிகாரம்; நீங்க எங்களிடம் சொல்லவே இல்லையே” ஆச்சர்யத்துடன் கேட்டனர், மணிகண்டனும் கல்யாணியும்.
“குருப்பெயர்ச்சி முடிந்த ஒரு மூன்று மாதத்திற்குள், பேரனையோ அல்லது பேத்தியையோ அழைத்துக்கொண்டு, குருவாயூரப்பன் கோயிலுக்குப்போய் துலாபாரம் கொடுக்கணுமாம்; அது தான் அந்தப்பரிகாரம்;
நமக்குத்தான் பேரனோ அல்லது பேத்தியோ இதுவரை கடந்த நாலு வருஷமாகப் பிறக்காமலேயே உள்ளதே; எப்படி அந்த ஜோஸ்யர் சொன்னப் பரிகாரத்தை நம்மால் செய்ய முடியும் என்று தான், நாங்கள் முதியோர் இல்லம் போவதென்று முடிவெடுத்தோம்;
இப்போது தான் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கப்போவதாக டாக்டரம்மாவே சொல்லி விட்டார்களே; குழந்தைகளை அழைத்துப்போய் துலாபாரம் கொடுத்து விட்டால் போச்சு! எல்லாம் அந்த குருவாயூரப்பன் செயல்!; அந்த குருவாயூரப்பன் மேலேயே பாரத்தைப்போட்டு விட்டு, நாம் வீட்டுக்குப்போய் ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றனர் மணிகண்டனின் அப்பாவும், அம்மாவும்.
திருமணம் ஆகி, நான்கு வருடங்கள் ஆகியும், இதுவரை தங்கள் மருமகளுக்கு தாய்மை அடையும் பாக்யம் இல்லாமல் தட்டிப்போய் வருகிறதே! தன் மகன் கட்டியுள்ள சிறிய சிங்கிள் பெட்ரூம் வீட்டில், கணவனும் மனைவியும் தனிமையில் சந்தோஷமாக இருந்தால் தான் தங்களுக்குப் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கக்கூடும். அதற்கு தாங்கள் எந்தவிதத்திலும் ஒரு இடையூறாக இருக்கவே கூடாது, என்று நினைத்து அவர்கள் இருவரும் நடத்திய நாடகமே, நடுவில் குருவாயூரிலிருந்து ஜோஸ்யர் ஒருவர் வந்து போனது என்ற கற்பனைக்கதை.
ஆனாலும் இந்த உண்மையான கதை, அந்த இரு வயதானவர்களையும், அந்த குருவாயூரப்பனையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.
[ஆனால் இப்போது உங்கள் எல்லோருக்குமே
இந்த விஷயம் தெரிந்து விட்டதே ..... ! அடடா !!
இந்த விஷயம் தெரிந்து விட்டதே ..... ! அடடா !!
ஹே! குருவாயூரப்பா நீ தான் என்னைக் காத்தருள வேண்டும்!!]
-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-
nice story..
பதிலளிநீக்குகுட்டி குருவாயூரப்பன் வருகைக்காக குருவாயூரப்பன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நடத்திய நாடகம் இனிமை.
பதிலளிநீக்குமுதிர்ந்த பார்வையால் இரட்டிப்பு மகிழ்ச்சி முகிழ்த்த்து அருமை.
பதிலளிநீக்குஇசைப்பிரியரான மணிகண்டனின் தாய், அடுத்தமுறை தன்னைப்பார்க்க வரும்போது, தன் வீட்டிலுள்ள பழைய வீணையை மட்டும் தன்னிடம் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள்.
பதிலளிநீக்குஇனி வீணை இசையை தோற்கடிக்கும் மழழை இசை மழையில் திளைக்கப் போகிறார்களே! வாழ்த்துக்கள்.
ஹே! குருவாயூரப்பா நீ தான் என்னைக் காத்தருள வேண்டும்!!//
பதிலளிநீக்குஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
சிக்கேதும் இல்லாமல் சிக்கென முடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு“குருப்பெயர்ச்சி முடிந்த ஒரு மூன்று மாதத்திற்குள், பேரனையோ அல்லது பேத்தியையோ அழைத்துக்கொண்டு, குருவாயூரப்பன் கோயிலுக்குப்போய் துலாபாரம் கொடுக்கணுமாம்; அது தான் அந்தப்பரிகாரம்;//
பதிலளிநீக்குஅழகான அருமையான இனிமையான் கதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நான் யுகித்தது சரியாக போய்விட்டது.அழகான குடும்ப கதை.ஆனால் அதிலும் நீங்கள் சஸ்பன்ஸ் சேர்த்து அருமையான முடிவாக கொடுத்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குநல்ல கதை, முடிவு நன்றாக இருக்கு அய்யா....
பதிலளிநீக்குஅன்பின் வைகோ - நான் எதிர் பார்த்தது தான் - பகுதி 1ல் நான் இட்ட மறு மொழியில் // மணிகண்டனுக்கு குழந்தைகள் இல்லையோ ....// எனக் கேட்டிருந்தேன். இதனை மனதில் வைத்துத்தான் - இந்த மாதிரி, பெற்றோர் முதியோர் இல்லம் செல்வதும், மாமனார் மாமியார் வர மாட்டேன் எனச் சொல்வதும் - தம்பதிகளின் தாம்பத்தியம் நடக்கத்தான் என்பது பல கதைகளில் முன்னரே சொல்லப் பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குசுவாரசியமாகச் சென்ற கதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இங்கிதம் தெரிந்த பெற்றோர்னு சொன்னால் நாகரீகமா இருக்குமானு தெரியவில்லை.நல்ல கதை,முடிவு.
பதிலளிநீக்குமிக அருமை..:)))
பதிலளிநீக்குநல்ல மனம் வாழ்க....! இந்தச் சூழ்நிலை பற்பல இல்லங்களில் நிலவுகிறது. சென்னையில் தனிமையை நாடி பல ஜோடிகள் மாலையில் கடற்கரையில் கூடுவதைப் பார்க்கலாம்.
பதிலளிநீக்குஎதிர்பாராத ஆனால் அருமையான முடிவு .
பதிலளிநீக்குஅந்தக் கடைசி பாராவைப் படிக்கும் வரை
பதிலளிநீக்குகதை கொஞ்சம் நெருடலாகத்தான் பட்டது
இறுதிப் பாராவைப் படித்தவுடன் தான்
மன்ம் மிகவும் சந்தோஷப் பட்டது
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
பதிலளிநீக்குநல்லதோர் முடிவு....
பதிலளிநீக்குஎல்லாம் நல்லதற்கே என்பது இன்னும் தெளிவு ஆகியிருக்கிறது....
நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.
An acceptable, 'feel-good' ending, not unexpected.
பதிலளிநீக்குDoes any one know how these "Mudhiyor Illams" function really? I heard some disturbing stories that they treat the infirm and sick people very badly.
In this modern age when the children are away abroad, such homes cannot be avoided. Isn't time that some regular social audits are conducted to ensure that the homes fulfill their commitments. Here, I am talking about the paid homes, though such audits might be necessary for the free homes as well.
பெரியோர் பெரியோர்தான். வானபிரஸ்தம், கிருகஸ்தம் என்று இந்து தர்மங்கள் சொல்லி வைத்த நியதிகள் இவை. அடுத்த படியில் இருப்போர் புரிந்து கொண்டு உதவ வேண்டும். அருமையான முடிவு.
பதிலளிநீக்குசார் லிங்க் தவறாக உள்ளது. தமிழ்மணத்திலிருந்து தங்கள் பதிவிற்கு வரமுடியவில்லை.
பதிலளிநீக்குகதை சூப்பர் சார்.....
பதிலளிநீக்குVery nice narration.........I was deeply moved by the end...........it is very rare nowadays to read or see something in magazines and films where only good things are talked about.....nalladaiye ninaithu nalladaiye ezudhiyirukkirar our dear vaigo.
பதிலளிநீக்குanbudan manakkal j.raman
குருவாயூரப்பன் அருளாலே கதை சுப முடிவுடன் அமைந்து விட்டது மகிழ்ச்சியே
பதிலளிநீக்குத ம 7.இன்ட்லி 12
கதையை அருமையாக முடித்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஎதிர்பார்த்த முடிவையே எழுதியிருப்பது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅருமை ஐயா.
பதிலளிநீக்குநன்றி.
அப்பாடா!இப்பவும் எல்லாரும் நல்லவங்களாவே இருக்காங்கப்பா!!
பதிலளிநீக்குமுதிந்த பார்வை எப்போதும் சரியாகத்தான் சிந்தித்து செயல்படும் என்று அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குஅன்புடன் வருகை தந்து,
பதிலளிநீக்குஅரிய பெரிய கருத்துக்கள் கூறி, என்னை உற்சாகப்படுத்தியுள்ள
என் அருமை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள் vgk
நானும் ஓரளவு யூகித்து வைத்திருந்தேன். நல்ல முடிவு சார்.
பதிலளிநீக்குகுருவாயூரப்பன் அருளாலே எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.
கதை ரொம்ப நல்லாருக்கு.
பதிலளிநீக்குஅழகாய் முடித்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குகுருவாயூரப்பன் உங்களை நிச்சயம் வாழ்த்துவார்.
ஐயா
பதிலளிநீக்குஓட்டு போட்டு விட்டே
உள்ளே வருகிறேன்
எனக்குத் தெரியும்
இப் பதிவு வைகோ பதிவுஅல்ல
கதைக்கோ பதிவு என்பது
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இந்தத் தடவை தலைப்பு தான் பெயரைத் தட்டிக் கொண்டு போகிறது. நல்லதிற்காக தங்களை வருத்திக் கொள்ளும் பக்குவம் அந்தப் பக்குவப்பட்ட வயசில் தான் வரும் போலிருக்கு.
பதிலளிநீக்குநல்ல நல்ல கதைகளாகத் தரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
முதிர்ந்த பார்வை அருமை.
பதிலளிநீக்குஏதோ வேறு வழி தெரியாமல் புறப்பட்டு வந்து விட்டார்களே தவிர, குடும்பத்தை விட்டு, முதியோர் இல்லத்தில் சேர்ந்த அவர்களுக்கு ஒவ்வொரு நாள் போவதும் ஒரு யுகமாகவே தோன்றியது. ”மணிகண்டன் என்ன செய்கிறானோ, எப்படி இருக்கிறானோ; பாவம் கல்யாணி வீட்டில் தனியாக இருந்து, எல்லா வேலைகளையும் ஒண்டியாகவே செய்து என்ன கஷ்டப்படுகிறாளோ” என்ற நினைவுடனே இருந்து வந்தனர்.
பதிலளிநீக்குஇதுபோல குடும்ப உறவுகள் அமைந்து விட்டால் சொர்க்கம்தான்.
திருமணம் ஆகி, நான்கு வருடங்கள் ஆகியும், இதுவரை தங்கள் மருமகளுக்கு தாய்மை அடையும் பாக்யம் இல்லாமல் தட்டிப்போய் வருகிறதே! தன் மகன் கட்டியுள்ள சிறிய சிங்கிள் பெட்ரூம் வீட்டில், கணவனும் மனைவியும் தனிமையில் சந்தோஷமாக இருந்தால் தான் தங்களுக்குப் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கக்கூடும். அதற்கு தாங்கள் எந்தவிதத்திலும் ஒரு இடையூறாக இருக்கவே கூடாது, என்று நினைத்து அவர்கள் இருவரும் நடத்திய நாடகமே, நடுவில் குருவாயூரிலிருந்து ஜோஸ்யர் ஒருவர் வந்து போனது என்ற கற்பனைக்கதை.
ஆஹா, அப்படி போகுதா கதை. சூப்பர் ட்விஸ்ட்தான்.
பூந்தளிர் January 17, 2013 at 9:04 PM
நீக்கு**ஏதோ வேறு வழி தெரியாமல் புறப்பட்டு வந்து விட்டார்களே தவிர, குடும்பத்தை விட்டு, முதியோர் இல்லத்தில் சேர்ந்த அவர்களுக்கு ஒவ்வொரு நாள் போவதும் ஒரு யுகமாகவே தோன்றியது. ”மணிகண்டன் என்ன செய்கிறானோ, எப்படி இருக்கிறானோ; பாவம் கல்யாணி வீட்டில் தனியாக இருந்து, எல்லா வேலைகளையும் ஒண்டியாகவே செய்து என்ன கஷ்டப்படுகிறாளோ” என்ற நினைவுடனே இருந்து வந்தனர்.**
//இதுபோல குடும்ப உறவுகள் அமைந்து விட்டால் சொர்க்கம் தான்.//
என் இந்த வரிகளைப்பாராட்டி என்னை நீங்க இப்போது சொர்க்கத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள்.
நன்றியோ நன்றிகள் ... பூந்தளிருக்கு.
>>>>>
கோபு >>> பூந்தளிர்
நீக்கு**திருமணம் ஆகி, நான்கு வருடங்கள் ஆகியும், இதுவரை தங்கள் மருமகளுக்கு தாய்மை அடையும் பாக்யம் இல்லாமல் தட்டிப்போய் வருகிறதே! தன் மகன் கட்டியுள்ள சிறிய சிங்கிள் பெட்ரூம் வீட்டில், கணவனும் மனைவியும் தனிமையில் சந்தோஷமாக இருந்தால் தான் தங்களுக்குப் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கக்கூடும். அதற்கு தாங்கள் எந்தவிதத்திலும் ஒரு இடையூறாக இருக்கவே கூடாது, என்று நினைத்து அவர்கள் இருவரும் நடத்திய நாடகமே, நடுவில் குருவாயூரிலிருந்து ஜோஸ்யர் ஒருவர் வந்து போனது என்ற கற்பனைக்கதை.**
//ஆஹா, அப்படி போகுதா கதை.//
என்ன அப்படிப்போகுதா கதை? நீங்க என்ன சொல்றீங்கோன்னு எனக்கு ஒண்ணுமே புரியலை.
நான் ஒரு மக்கூஊஊஊஊ + ட்யூப் லைட்டூஊஊஊஊ.
//சூப்பர் ட்விஸ்ட்தான்.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
பெரிசுகளின் தந்திரமே தந்திரம். எப்படியோ அவர்களின் நோக்கம் நிறைவேறிற்று.
பதிலளிநீக்கு:)))))))
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஉங்களின் நல்ல எண்ணங்கள் உங்கள் எழுத்தில் பளிச்சிடுகின்றன. மூணு பெண்களுக்கு அப்பா (மாமனார்) ஆயிற்றே சும்மாவா.
எல்லாப் பெண்களுக்கும் கல்யாணியின் மாமனார், மாமியார் போல் கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
முடிவு நல்லா இருந்திச்சி
பதிலளிநீக்குநல்லா கழப்படியா போயி நல்ல முடிவே கொடுதுட்டீங்க. துலாபாரம் பண்ண குருவாயூருக்கு எப்ப கெளம்பறாங்க.
பதிலளிநீக்குஆஹாஹா...உண்மையான அக்கறைன்னா இதுதான். white lies....இந்தப்பிரிவு உறவை இன்னும் நெருக்கமாக்கி இருக்கும் அல்லவா....சூப்ப்ப்ப்பர்...
பதிலளிநீக்குஇனிமையான முடிவு நிறைவைத் தந்தது!
பதிலளிநீக்கு