About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, September 18, 2011

கொ ட் டா வி








கொட்டாவி

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




”பட்டாபி, உன்னை எப்போது வேண்டுமானாலும் ஜீ.எம் (General Manager) கூப்பிடக்கூடும். தயாராக இருந்து கொள். உன்னைப்பற்றி நிறைய பேர்கள் ஏதேதோ அவரிடம் ஏத்தி விட்டுள்ளார்கள் என்று தெரிகிறது” என்று தன்னுடன் படித்தவனும், தற்போது ஜீ.எம் அவர்களுக்கு செகரட்டரியாக இருப்பவனுமாகிய கிச்சாமி எச்சரித்து விட்டுப்போனதும், நிதித்துறை குட்டி அதிகாரியான பட்டாபிக்கு அடிவயிற்றைக் கலக்கியது. 

இப்போது தான் சமீபத்தில் வட இந்தியாவிலிருந்து பணி மாற்றத்தில் [On Transfer] இங்கு வந்துள்ள ஜீ.எம் அவர்கள் மிகவும் கெடுபிடியானவர். எதற்கும் வளைந்து கொடுக்காதவர் [Straight Forward ஆன ஆசாமி]. கண்டிப்பும் கறாரும் மிகுந்தவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு உதாரண புருஷர். தயவு தாட்சிண்யமே பாராமல் தவறு செய்பவர்களை தண்டித்து விடுபவர் என்றெல்லாம் அலுவலகத்தில் ஒரே பேச்சாக உள்ளது.

பட்டாபியைப் பொருத்தவரை பெரிய தவறு ஏதும் செய்துவிடவில்லை தான். கடந்த ஒரே மாதத்தில் மட்டும், நாலு வெவ்வேறு பிரபல தமிழ் வார இதழ்களில், பட்டாபி எழுதிய சிறுகதைகள்,”கொட்டாவி” என்ற புனைப்பெயரில் பிரசுரமாகியுள்ளன. 

அந்த அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில், பரவலாக இதைப்பற்றியே பேச்சு. பலரும் பட்டாபியின் கற்பனைத் திறனையும், நல்ல எழுத்து நடையையும்,  கதையின் சுவாரஸ்யமான கருத்துக்களையும், மனதாரப் பாராட்டவே செய்தனர். 

ஒரு சிலருக்கு மட்டும் அவர் மீது ஏதோ கோபம். பொறாமை என்று கூடச் சொல்லலாம். ஆபீஸில் தாங்கள் மட்டும்தான், வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாக வேலை பார்ப்பதாகவும், ஆனால் இந்தப் பட்டாபி ஏதோ கதை எழுதுவதாகச்சொல்லி, எப்போதும் கதை பண்ணிக்கொண்டு திரிவதாகவும், ஒருவிதக் கடுப்பில் இருந்து வந்தனர்.  

அவர்களில் யாராவது இவரைப்பற்றி புது ஜீ.எம். அவர்களிடம் போட்டுக் கொடுத்திருக்கலாம் என்ற பயம், பட்டாபியைப் பற்றிக்கொண்டது.

ஜீ.எம். கூப்பிடுவதாகப் பட்டாபிக்கு அழைப்பு வந்தது. பட்டாபி அவசர அவசரமாக ஒன் பாத்ரூம் போய்விட்டு, முகத்தை நன்றாக அலம்பித் துடைத்து விட்டு, சட்டைப்பையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்து, நெற்றியில் சிறியதாக விபூதி பூசிக்கொண்டு, எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, செகரட்டரி கிச்சாமியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, ஜீ.எம். ரூமுக்குள் மெதுவாக பூனைபோல நுழைந்து, மிகவும் பெளவ்யமாக நின்றார்.


”அதிகாரிகளுக்கு முன்னும், கழுதைக்குப் பின்னும் நிற்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் உதைபட நேரிடும்” என்று எப்போதோ யாரோ சொல்லிக்கொடுத்த அறிவுரைகள் நினைவுக்கு வந்தது, பட்டாபிக்கு. 

ஃபைல்களில் மூழ்கியிருந்த ஜீ.எம். தன் தலையை சற்றே நிமிர்த்திப் பார்த்ததும், இரு கைகளையும் கூப்பி “நமஸ்காரம் ஸார்” என்று சொல்லி ஒரு பெரிய கும்பிடு போட்டார், பட்டாபி.

“வாங்க ... நீங்க தான் பட்டாபியா, உட்காருங்கோ” என்றார் ஜீ.எம்.

“தேங்க்ஸ் ஸார்” என்று சொல்லியபடியே ஜீ.எம். இருக்கைக்கு முன்புள்ள டேபிள் அருகே இருந்த மிகப்பெரிய குஷன் சேர்களில் ஒன்றின் நுனியில் மட்டும், பட்டும் படாததுமாக பதட்டத்துடன் அமர்ந்தார், பட்டாபி.

“நீங்க ஏதேதோ கதையெல்லாம் எழுதறேளாமே; எல்லோருமே சொல்றா. அதைப்பற்றி என்னவென்று விசாரித்து விட்டு, உங்களை டிரான்ஸ்பர் செய்யலாம்னு இருக்கேன்” என்றார் ஜீ.எம்.

“சார், சார் ... ப்ளீஸ்.... அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஏதாவது செஞ்சுடாதீங்கோ. நான் பிள்ளைகுட்டிக்காரன். வயசான அம்மா, அப்பா இருக்கா. நான் அவாளுக்கு ஒரே பிள்ளை. எனக்கும் என் மனைவிக்கும் சுகர், ப்ரஷர் எல்லாமே இருக்கு. என் மூணு குழந்தைகளும் முறையே எட்டாவது, ஆறாவது, நாலாவது படிக்கிறார்கள்; 


ஏதோ உள்ளூரிலேயே வேலையாய் இருப்பதால் ஒரு மாதிரியாக என் லைஃப் ஓடிண்டு இருக்கு. எங்கக் கூட்டுக் குடும்பம் என்கிற குருவிக்கூட்டை தயவுசெய்து கலைச்சுடாதீங்கோ. உங்களுக்குப் புண்ணியமாப்போகும்; 


நான் வேணும்னா இனிமே இந்த நிமிஷத்திலிருந்து கதை எழுதுவதையே விட்டுடறேன். தயவுசெய்து இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சு விட்டுங்கோ” என்று கண் கலங்கியபடி மன்றாடினார் பட்டாபி.


”நோ...  நோ... மிஸ்டர் பட்டாபி, நீங்க இந்த டிரான்ஸ்ஃபரிலிருந்து தப்பிக்கவே முடியாது. நான் ஒரு முடிவு எடுத்தேன் என்றால் எடுத்தது தான்” என்று ஜீ.எம். சொல்லும்போதே அதை ஆமோதிப்பது போல டெலிபோன் மணி அடித்தது. 


ரிஸீவரைக் கையில் எடுத்து, “யெஸ்; கனெக்ட் தி கால்” என்றவர் யாருடனோ என்னென்னவோ வெகுநேரம் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்த வண்ணமும், இருந்தார். 


பட்டாபிக்கு மனது பக்பக்கென்று அடித்துக்கொண்டு ப்ளட் பிரஷர் எகிறியது. எந்த பாஷை தெரியாத ஊரோ அல்லது தண்ணியில்லாத காடோ என சோகத்தில் ஆழ்ந்திருந்தார் பட்டாபி. அந்த ஏ.ஸீ. ரூம் குளிரிலும் இவருக்கு மட்டும் வியர்த்துக் கொட்டியது.       


டெலிபோன் உரையாடல் முடிந்ததும் ஜீ.எம். இவரை நோக்கினார்.


“பயப்படாதீங்க மிஸ்டர் பட்டாபி. பத்திரிக்கை துறையுடன் பல்லாண்டு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள தங்களைப் பிரமோட் செய்து நம் விளம்பரத்துறைக்கு மேனேஜராகப் போடப் போகிறேன்;


நீங்கள் தற்போது வேலை பார்க்கும் அக்கவுண்ட்ஸ் பிரிவிலிருந்து வணிக விளம்பரப்பிரிவுக்குத்தான் லோக்கல் டிரான்ஸ்ஃபர்; அதுவும் மேனேஜர் ப்ரமோஷனுடன்; அட்வான்ஸ் கன்கிராஜுலேஷன்ஸ்; 


பை-த-பை நீங்க இதுவரை எழுதின கதைகள் எல்லாம் எனக்கு ஒரு செட் கம்ப்ளீட்டாக வேணும். ரொம்ப நாட்கள் டெல்லியிலேயே இருந்து விட்டதால், தமிழில் கதைகள் படிக்க செளகர்யப்படாமல் போய் விட்டது. எனக்கும் என் மனைவிக்கும் தமிழில் சிறுகதை படிக்க மிகவும் ஆர்வமுண்டு;


நீங்க தொடர்ச்சியா தமிழ் பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்பிக்கொண்டே இருக்கணும். பட்டாபின்னு .... ஸாரி .... கொட்டாவின்னு ஒரு பிரபல எழுத்தாளர் இவ்வளவு பெரிய நம் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்றால் அது நம் நிறுவனத்திற்கே ஒரு பெருமை இல்லையா! என்று மனம் திறந்து பாராட்டிவிட்டு, தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற ஜீ.எம். பட்டாபியின் கரங்களைப் பிடித்து குலுக்கி விட்டு “ஆல்-தி-பெஸ்ட்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.


நன்றி கூறி விடை பெற்ற பட்டாபிக்கு புதிய ஜீ.எம். ஒரு தங்கமானவர் என்பதை உரசிப் பார்த்த பிறகே உணர முடிந்தது.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-











64 comments:

  1. நல்ல அருமையான கதை.. மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
  2. எல்லோருமே அதிகாரி கூப்பிடுகிறார் என்றாலே
    எதிர்மறை எண்ணத்தோடுதான் பார்க்கப் போவோம்
    அதை மிக அழகான கதையாக்கி ரசிக்கும் படியாகக்
    கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 2

    ReplyDelete
  3. அனுபவிக்கும் முன்னரே சூழ்நிலையை
    அனுமானித்து குழப்பிக் கொள்ளும் குணம் நம்மில் பலருக்கும் உண்டு.
    நல்லதற்கே என்றாலும் கெடுதியை எண்ணி மனம் கலங்கும் ஒரு நிகழ்வை வைத்து சுவாரசியமாக கதை புனையும் தங்கள் திறனுக்கு வணக்கங்கள்

    ReplyDelete
  4. நல்ல சிறுகதைக்கு வேண்டிய எல்லா லட்சணங்களுடன் கூடிய அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் வைகோ.

    ReplyDelete
  5. கொட்டாவியின் படபடப்பு பரவசமாக முடிந்ததில் வாசகர்களுக்கும் மகிழ்ச்சி. நல்ல கதை.

    ReplyDelete
  6. ஓவியத்துக்காகக் கதை பிறந்ததா? அல்லது கதைக்காக ஓவியம் வரைந்தீர்களா? :-)

    அழகாக, கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. டாஷ் போர்டில் பார்த்த போதே உங்கள் கைவண்ணம் என்று புரிந்துகொண்டேன்.

    கதை - வழக்கம் போல் அருமை.

    ReplyDelete
  7. த ம ஓட்டு நேற்று போட இயலாமல் ஏதோ பிரச்சனை.இப்பொழுது போட்டு விட்டேன்.த ம 3

    ReplyDelete
  8. ஒரு சின்ன கரு தான். அழகாக விரிவுபடுத்தி எழுதிவிட்டீர்கள்! பேனாக்களாலான மனிதனின் ஓவியம் அதற்கு மிகப்பொருத்தமாய் அருமை!

    ReplyDelete
  9. எழுத்தாளனுக்கு எல்லாமே அவன் எழுதுவது சார்ந்துதான்.. ஓவியம் அதை அழகாய்க் காட்டி விட்டது.
    கதை பாசிட்டிவ் டானிக்.

    ReplyDelete
  10. பட்டாபி விடாமல் ....சாரி கொட்டாவி விடாமல் படித்து முடித்தேன்...கதை சூப்பர்..படம் சூப்பரோ..சூப்பர்!


    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  11. இந்த மாதிரி ஒரு ஜி.எம். எனக்குமிருந்தால், தினமும் ரெண்டு மூன்று இடுகைகள் எழுதுவேன். கொடுத்து வைத்த கொட்டாவி, sorry, பட்டாபி! :-)

    ReplyDelete
  12. தேர்ந்த சிறுகதை இலக்கணத்துடன் கூடிய கதை அமைப்பு கொட்டாவி உமியில் கொட்டாவி விடவைக்குமோ என என்னிபோக நல்ல பதிவ சுவைத்தேன் பாராட்டுகள்.

    ReplyDelete
  13. அந்த அதிகாரி ரொம்ப நல்லவர்போல இருக்கு.

    ReplyDelete
  14. நல்ல புனைப் பெயராக இருக்கே!

    கதை நல்லாயிருக்கு!

    ReplyDelete
  15. மனம் திறந்து பாராட்டிவிட்டு, தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற ஜீ.எம். பட்டாபியின் கரங்களைப் பிடித்து குலுக்கி விட்டு “ஆல்-தி-பெஸ்ட்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.//

    “ஆல்-தி-பெஸ்ட்”
    “ஆல்-தி-பெஸ்ட்” அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. பேனா மனிதன் ஓவியம் கதைக்கு அற்புதமான பொருத்தம்.

    ReplyDelete
  17. பட்டாபி எழுதிய சிறுகதைகள்,”கொட்டாவி” என்ற புனைப்பெயரில் பிரசுரமாகியுள்ளன/

    பட்டாபியின் கொட்டாவி சூப்பர்...

    ReplyDelete
  18. ஒரு சிலருக்கு மட்டும் அவர் மீது ஏதோ கோபம். பொறாமை என்று கூடச் சொல்லலாம். /

    இவை இல்லாத இடம் இல்லையே!

    ReplyDelete
  19. ”அதிகாரிகளுக்கு முன்னும், கழுதைக்குப் பின்னும் நிற்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் உதைபட நேரிடும்”/

    முன்னே போனால் கடிக்கும்
    பின்னே போனால் உதைக்கும்....

    ReplyDelete
  20. ஒரு பிரபல எழுத்தாளர் இவ்வளவு பெரிய நம் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்றால் அது நம் நிறுவனத்திற்கே ஒரு பெருமை இல்லையா! என்று மனம் திறந்து பாராட்டிவிட்டு/

    பழம் நழுவி பாலில் விழுந்து
    அதுவும் நழுவி வாயில் விழுந்த
    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. படம் சொல்லும் கதைக்கே தனிக்கதை எழுதலாம், போலிருக்கு!

    ReplyDelete
  22. எழுத்தாளரைக் குறிக்க பேனாவால் ஆன படம் தங்கள் கற்பனைக்கு ஒரு சான்று. இன்னும் கதை சம்பவங்களுக்கேற்ப நீங்கள் படங்கள் வரையத் தொடங்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்! எழுத்தாளரைப் புரிந்து கொண்டு ஊக்கம் கொடுக்கும் ஜி எம் அமைந்ததால் அவர் உயர்ந்தார். மாறான ஜி எம் வருவதற்கும் வாய்ப்புண்டு. அபபடி வந்தால் என்ன நடக்கும், எதிர்மறையா, அபபடி எதிர்மறையாக இருந்தால் கதாநாயகன் எப்படி சமாளிப்பார் என்று யோசித்தால் இன்னொரு கதை ரெடி!

    ReplyDelete
  23. உயர் அதிகாரி கூப்பிடுகிறார் என்றவுடன் பாட்டாபியின் மனதில் ஓடிய எண்ணத்தையும் அவரின் நடவடிக்கைகளையும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.
    அருமையான கதை, அழகான முடிவு.

    ReplyDelete
  24. நீங்க தொடர்ச்சியா தமிழ் பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்பிக்கொண்டே இருக்கணும். பட்டாபின்னு .... ஸாரி .... கொட்டாவின்னு ஒரு பிரபல எழுத்தாளர் இவ்வளவு பெரிய நம் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்றால் அது நம் நிறுவனத்திற்கே ஒரு பெருமை இல்லையா! என்று மனம் திறந்து பாராட்டிவிட்டு, தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற ஜீ.எம். பட்டாபியின் கரங்களைப் பிடித்து குலுக்கி விட்டு “ஆல்-தி-பெஸ்ட்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    ஏக்கத்தோடு காத்திருந்த பட்டாபியின் மனதிற்கு இந்த எதிர்பாராத வாய்ப்புக் கிடைத்ததும் மனம் எவ்வளவு ஆனந்தம் அடைந்திருக்கும்.இதுதான் முயற்சிக்குக் கிடைத்த அதிஸ்ரம்
    இல்லையா ....அருமை ஐயா கதையை அழகாக ஆரம்பித்து அழகாக முடித்துள்ளீர்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .................

    ReplyDelete
  25. பதிவின் கனதியை படம் சொல்கிறது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

    ReplyDelete
  26. //அதிகாரிகளுக்கு முன்னும், கழுதைக்குப் பின்னும் நிற்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்;// ஹா...ஹா..

    சுவரஸ்யமான கதை.எதிர்பார்க்காத ப்ரோமோசன்.அழகாக முடித்துள்ளீர்கள். ஓவியம் சூப்பராக உள்ளது.நீங்கள் வரைந்ததா?

    ReplyDelete
  27. தலைப்பே தன்னி சிறப்பே
    கதையும் நல்ல கதையே!

    பிலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. உங்கள் கைவண்ணத்தில் ஓவியமும், கதையும் இரண்டுமே அருமையாக உள்ளது சார்.

    இப்படி ஒரு ஜீ.எம் எல்லோருக்கும் அமைந்து விட்டால் நன்றாக இருக்கும். புனைப்பெயர் பிரமாதம்...

    இண்ட்லி 13, த.ம 10.

    ReplyDelete
  29. ஓவியமும், ஓவியக் கதையும் பிரமாதம்.... ஒரு பயத்துடன் போன கொட்டாவிக்கு சாரி பட்டாபிக்கு நிச்சயம் மகிழ்ச்சி தான்..... நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  30. சுகமான முடிவு. சுவையான கதை.

    ReplyDelete
  31. ஹிஹி...

    பட்டாபி போல மஞ்சு போல இன்னும் எத்தனை பேர் தான் இப்படி ஜி எம்மை பார்த்து பயப்படுவது...

    அருமையா ஸ்வீட்டா கதை சொல்றீங்க...

    உங்க கதை படிக்கும்போது அமைதியா ஈசிசேர்ல உட்கார்ந்துகிட்டு வேப்பமரத்து நிழல்ல சிலுசிலுன்னு காத்து வந்து புக் பேப்பரை படபடக்க படிப்பது போல இருக்கு...

    அத்தனை அருமையா இருக்கு கதை....

    நார்மலா வேலை பாக்கிறவா மேனேஜ்மெண்ட் கிட்ட பயப்படுவது சகஜம் தான்..நான் உள்பட....

    ஆனால் ஜீ எம் எத்தனை நல்லவரா இருக்கார். அவருடைய ரசனையே இவருக்கு பிரமோஷன் வாங்கி கொடுக்கும்படி வெச்சுடுத்தே...

    பட்டாபியின் எழுத்து திறமை ஜீ எம் பார்த்ததால் தான் இந்த பிரமோஷன்...

    அருமையான கதை நடை... விகடன்ல படிப்பது போல் அத்தனை அருமையாக இருந்தது.. குட்டியூண்டு சஸ்பென்ஸ் வெச்சு முடிச்சிருக்கீங்க...

    அன்பு வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
  32. அன்பின் வை.கோ - பட்டாபி - சாரி - கொட்டாவி அருமையான சிறுகதை. பட்டாபியின் மன நிலை - அவருடைய குடும்பச் சூழ்நிலையினைக் கூறும் இடம் - அத்தனையும் இயல்பாக இருக்கிறது. தகுந்தவரைத் தகுந்த இடத்திற்குத் தேர்ந்தெடுத்த பொது மேலாளரின் குணம் போற்றத்தக்கது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  33. மேலாண்மையின் அடிப்படைத் தகுதிகளில் ஒன்று, 'புரிதல்'. கதையை ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  34. சித்திரமும் உங்கள் கைப்பழக்கமா? நன்றாக உள்ளது.

    ReplyDelete
  35. இதே மாதிரி எல்லா அதிகாரிகளும் சொன்னா நன்னா தான் இருக்கும்!! :))

    ReplyDelete
  36. நான் என் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு மட்டும், வழக்கமாக கொடுத்துக் கொண்டிருந்த மெயில் மூலமான தகவலோ அல்லது அழைப்போ, இந்த சிறுகதை வெளியீட்டுக்கு, கொடுக்காமலேயே இருந்தும் கூட, தாங்களாகவே முன்வந்து நல்ல பல கருத்துக்கள் கூறி, வரவேற்று உற்சாகப்படுத்தியுள்ள

    திரு. கவிதை காதலன் அவர்கள்
    திரு. ரமணி சார் அவர்கள்
    திரு. DrPKandaswamyPhD அவர்கள்
    திரு. ரிஷபன் அவர்கள்**
    திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்கள்**
    திரு. சேட்டைக்காரன் அவர்கள்
    திரு. ஜீவி அவர்கள்**
    திரு. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்**
    திரு. மதி சுதா அவர்கள்**
    புலவர் திரு.சா.இராமாநுசம் அவர்கள்
    திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்**
    திரு. கே.பி.ஜனா அவர்கள்
    திரு. சீனா ஐயா அவர்கள்
    திரு. அப்பாத்துரை அவர்கள்**
    திரு. தக்குடு அவர்கள்



    திருமதி ராஜி அவர்கள்
    திருமதி ராமலக்ஷ்மி அவர்கள்
    திருமதி இமா அவர்கள்**
    திருமதி மனோ சாமிநாதன் அவர்கள்**
    திருமதி மாலதி அவர்கள்
    திருமதி Lakshmi அவர்கள்
    திருமதி MiddleClassMadhavi அவர்கள்

    6 முறை அழகான செந்தாமரைகளை மலரச்செய்து அருளியுள்ள திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்கள்**

    திருமதி RAMVI அவர்கள்
    திருமதி அம்பாளடியாள் அவர்கள்
    திருமதி thirumathi bs sidhar அவர்கள்**
    திருமதி கோவை2தில்லை அவர்கள்**
    திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள்

    ஆகிய 28 பாசமிகு நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒரு மாறுதலுக்காக, கையால் மிகச் சாதாரணமாக வரைந்த ஓவியத்தைப் பாராட்டியுள்ள ** 12 பேர்களுக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதிதாகவும் முதன் முதலாகவும் வருகை தந்து கருத்துக்கூறியுள்ள “கவிதை காதலன்” அவர்களை, நேரமும் விருப்பமும் இருந்தால் தொடர்ந்து வருக வருக வருக என வரவேற்கிறேன்.

    நாளை வேறொரு கதையில் சந்திப்போம்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  37. மஞ்சுபாஷிணி
    Cashier in warba insurance co., இருப்பிடம்:Fahaheel:kuwait:குவைத் said...

    Cashier என்ற பொறுப்பான பதவி வகிப்பதால் பொறுமையாக பணத்தை எண்ணி Tally செய்வது போலவே, பொறுமையாகப் படித்து, விரிவாக விளக்கமாக நீண்ட பின்னூட்டம் தருகிறீர்கள்.

    அது எனக்குப் பிடித்துள்ளது, நானும் உங்களைப் போலவே பணம் என்னும் பாம்புடன் நீண்டநாள் பழகியவன் என்பதாலோ என்னவோ.

    //அருமையா ஸ்வீட்டா கதை சொல்றீங்க...//

    ஸ்வீட்டான கருத்துக்கு நன்றிகள்.

    //உங்க கதை படிக்கும்போது அமைதியா ஈசிசேர்ல உட்கார்ந்துகிட்டு வேப்பமரத்து நிழல்ல சிலுசிலுன்னு காத்து வந்து புக் பேப்பரை படபடக்க படிப்பது போல இருக்கு...//

    உங்கள் ரசனையே சிலுசிலுன்னு, குளுகுளுன்னு இருக்குது, அந்த வேப்பமரத்தடியின் நிழல் போலவே.

    //அத்தனை அருமையா இருக்கு கதை....

    அருமையான கதை நடை... விகடன்ல படிப்பது போல் அத்தனை அருமையாக இருந்தது.. குட்டியூண்டு சஸ்பென்ஸ் வெச்சு முடிச்சிருக்கீங்க...

    அன்பு வாழ்த்துகள் சார்...//

    தங்களின் விசேஷமான பாராட்டுக்களுக்கு நன்றிகள், மேடம். அன்புடன் vgk

    ReplyDelete
  38. // DrPKandaswamyPhD said...
    நல்ல சிறுகதைக்கு வேண்டிய எல்லா லட்சணங்களுடன் கூடிய அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் வைகோ.//

    தங்களின் இத்தகைய பாராட்டு என்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக உள்ளது.
    மிக்க நன்றி டாக்டர் சார்.

    ReplyDelete
  39. பட்டாபிக்கு பணிமாற்றம் நல்ல மாற்றமாகிவிட்டது. அருமையான நடையில் மற்றுமொரு நகைச்சுவை கதை

    ReplyDelete
  40. சாகம்பரி said...
    //பட்டாபிக்கு பணிமாற்றம் நல்ல மாற்றமாகிவிட்டது. அருமையான நடையில் மற்றுமொரு நகைச்சுவை கதை//

    தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். vgk

    ReplyDelete
  41. ரசித்தேன். எப்படி சார் உங்களால இவ்வளவு கதை(ரசிக்கும்படியாகவும்) எழுத முடிகிறது?

    ReplyDelete
    Replies
    1. Thank you very much, Mr விச்சு Sir.
      தங்களின் பாராட்டுக்க்ள் என்னை மகிழ்வித்து உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது.

      Delete
  42. படம் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நான் கையால் வரைந்த படத்தை ரசித்து, “அருமை” எனக் கூறியுள்ளதற்கு மிக்க நன்றி மேடம்.

      Delete
  43. பட்டாபி எழுதிய சிறுகதைகள் ”கொட்டாவி”... ஆஹா கதையின் பெயரே நல்ல இருக்கு.... ஆர்வத்துடன்...

    ReplyDelete
    Replies
    1. பட்டாபியின் புனைப்பெயர் கொட்டாவி ....

      ஆர்வத்துடன் படித்து வருவதும் இடை இடையே கருத்துக் கூறிவருவதும், புதுமையாக, எனக்கோர் மகிழ்ச்சியளிக்கிறது.
      அதற்கோர் ஸ்பெஷல் நன்றி .... ;)))))

      Delete
  44. ஆமாம் ஐயா எனக்கும் கதையை படிக்கும் பொழுது பக்பக்வெனதான் இருந்தது....
    முமையாக படித்த பின் தான் தெரிந்தது பட்டாபிக்கு ஏற்ற பெயர்தான் கொட்டாவி....
    ரொம்ப அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.....
    எனக்கு இதை அனுப்பிவைத்ததர்க்கு மிக்க நன்றி....

    ReplyDelete
    Replies
    1. கதையைப் பாதி படிக்கும் போதே கொட்டாவி வந்து தாங்களும் தூங்கி விடாமல், முழுக்கதையையும் படித்து ரஸித்து, கருத்துக்கள் கூறியுள்ளது, மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      நன்றியோ நன்றிகள்! அன்புடன் vgk

      Delete
  45. 'கொட்டாவி' கதை மேலதிகாரி நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக நடந்து நம் மதிப்பில் மிக உயர்ந்து விட்டார்.
    கதை அருமை வை. கோ. சார்.
    --

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மேடம்.

      அந்த மேலதிகாரியின் நடவடிக்கை, பட்டாபி பயந்தது போல இல்லாமலும், அதேசமயம் எழுத்தாளரான ’கொட்டாவி’ என்கிற பட்டாபியை மேலும் ஊக்குவிப்பதாகவும், நல்லதொரு பாஸிடிவ் அப்ரோச்சாகவும் இருந்துள்ளது தான் ஆச்சர்யம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள், மேடம்.

      அன்புடன் vgk

      Delete
  46. அருமையான ப்ளோ! அழகான சிறுகதை சார்!

    ReplyDelete
    Replies
    1. Ms. PATTU Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

      //அருமையான flow//

      எனது ஸ்பெஷல் நன்றிகள், தங்களுக்கு மட்டும். vgk

      Delete
  47. சற்றுமுன் கிடைத்த ஓர் மகிழ்ச்சியான செய்தி:

    ’கொட்டாவி’ என்ற தலைப்பில் தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த என் சிறுகதை திருமதி. பாக்யம் ஷர்மா என்பவரால் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து வெளியாகியுள்ள, DAINIK BHASKAR என்ற மிகப்பிரபலமான ஹிந்தி இதழில் இன்று 20.07.2014 என் பெயர் + புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இது ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள என் இரண்டாம் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    ReplyDelete
  48. கொட்டும் முரசாக எட்டுத்திக்கும் பரவி
    திக்கெட்டும் புகழ்பரவ பிரார்த்தனைகள்..!!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரிJuly 22, 2014 at 7:02 PM

      வாங்கோ ... வணக்கம்.

      //கொட்டும் முரசாக எட்டுத்திக்கும் பரவி
      திக்கெட்டும் புகழ்பரவ பிரார்த்தனைகள்..!!//

      என் நலம் விரும்பியான தங்களின் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.

      திக்கெட்டும் என் புகழ் பரவும்போது அதில் சரிபாதிக்குமேல் தங்களுக்கும் உண்டு அல்லவா ! ;)

      தாங்கள் அவ்வப்போது தந்துவரும் ஊக்கமும் உற்சாகமும் அல்லவா என்னைத் தொடர்ந்து எழுதவைக்கிறது !!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  49. வழக்கம் போல கதை நல்ல ரசனையான எழுத்து.

    ReplyDelete
  50. பட்டாபியின் புனைப் பெயர் கொட்டாவி சூப்பர்.
    கதையும் சூப்பர்.

    //இந்த என் சிறுகதை திருமதி. பாக்யம் ஷர்மா என்பவரால் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து வெளியாகியுள்ள, DAINIK BHASKAR என்ற மிகப்பிரபலமான ஹிந்தி இதழில் இன்று 20.07.2014 என் பெயர் + புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். //

    இது சூப்பரோ சூப்பர்.

    மனது கொஞ்சம் கஷ்டப்படும் போது உங்க வலைத்தளத்துக்குள் நுழைந்து உங்க சிறுகதைகளைப் படித்தால் கண்டிப்பாக கொட்டாவி வராது. மனம் லேசாகிடும்.

    நல்ல ரசனை உங்களுக்கு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. பட்டாபி கொட்டாவி எங்கேந்துதா பேரு கெடைக்குதோ. லோக்கலிலே டிரான்ஸ்பர் கெடச்சது நல்லாயிட்டு.

    ReplyDelete
  52. அதிகாரிகளுக்கு முன்னாடயும் கழுதைக்கு பின்னேயும் போனால் கடிக்கும் என்ன வார்த்தை ஜாலங்கள் பட்டாபி கொட்டாவி பெயர் பொருத்தம்தான்.

    ReplyDelete
  53. கொட்டாவி @ பட்டாபி ....என்னா ஒரு பேரு...சில நேரம் மத்தவங்க பத்த வக்கிறது கோவில் தீபமாக மாறி வாழ்க்கைக்கே ஒளி ஏத்திடுது...

    ReplyDelete
  54. கொட்டாவி வராமல் விறுவிறுப்பாக சென்ற கதை!

    ReplyDelete