About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, September 30, 2011

ஜா தி ப் பூ
ஜா தி ப் பூ

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
பூக்களை விட அந்தப்பூக்காரி நல்ல அழகு. 

பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண்.

பின்புறம் ஒன்றும் முன்புறம் ஒன்றுமாக போடப்பட்ட இரண்டைப் பின்னல்கள். பாவாடை சட்டை தாவணி.  பளிச்சென்ற தோற்றம். பார்த்தால் படித்த பெண்ணாகத் தோன்றுகிறாள். பூ வியாபரத்திற்குப் புதியவளோ! என்றும் புரியாத நிலை.

அந்தக்கோயில் வாசலில் பூ விற்று வந்த கிழவியின் வியாபாரம் இந்தப் புதுப் பெண்ணின் வருகையால் கடந்த ஒரு வாரமாகப் படுத்துப்போனது.

இந்தப்பெண்ணின் புதிய பூ வியாபாரத்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல, பூ வாங்கும் சாக்கில் பல இளைஞர்கள் அந்தப்பெண்ணை வட்டமிட ஆரம்பித்தனர். சிலர் தங்கள் பாழும் நெற்றியில் புதிதாகப் பட்டையிட்டுக்கொண்டு, அவளை பக்திப்பரவசத்தால் ஆட்கொள்ளப் பார்த்தனர்.

இதுபோல எவ்வளவு பேர்கள் அவளிடம் வந்தாலும், வழியோ வழியென்று வழிந்தாலும், தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால், ஜொள்ளர்களை சமாளித்து, பூ வியாபாரத்திலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி, மிகக் குறுகிய நேரத்திற்குள், தன் கூடை முழுவதும் காலிசெய்துவிட்டு, கை நிறைய காசுகளுடன், கிழவியைப்பார்த்து கண் சிமிட்டியவாறே “வரட்டுமா பாட்டி” எப்படி என் சாமர்த்தியமான வியாபாரம்? என்பது போல, சிரித்துக்கொண்டே சென்று விடுவாள்.

”ஜாக்கிரதையாப் பார்த்துப் போம்மா கண்ணு” என்பாள் அந்தக்கிழவியும் எந்த விதமான போட்டியோ பொறாமையோ இல்லாமல்.

ஆனாலும் அந்தப்பெண் போன பிறகே பாட்டிக்கு தன் பூ வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

அந்தப் பெண்ணைப் பற்றி பலரும் இந்தப்பாட்டியிடம் விசாரித்தார்கள். அந்தப்பெண் யார்? அவள் பெயர் என்ன? எந்த ஊரு? இங்கே எங்கே தங்கியிருக்கிறாள்? என்று தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஓர் ஆவலும் ஆர்வமும்.

”அந்தப்பாப்பா யாரோ எனக்குத் தெரியாதுப்பா; மொத்தத்தில் அது என் பிழைப்பைக் கெடுக்கத்தான் இங்கு வந்து போயிட்டு இருக்கு; இனிமேல் அது இங்கே செவ்வாய் வெள்ளி மட்டும் தான் வருமாம், இன்னிக்கு என்னிடம் சொல்லிட்டுப்போச்சு” என்று கிழவி தன்னிடம் விசாரித்த பலரிடமும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

இதை கவனித்த ஒரு இளைஞன் மட்டும் கிழவியின் காதருகே போய் “பாட்டி, அந்தப்பொண்ணை செவ்வாய் வெள்ளியும் கூட இங்கு வரவேண்டாம்ன்னு கண்டிச்சு சொல்லிடுங்க” என்றான் சற்றே தயங்கியவாறு. 

இதைச்சொன்ன அந்த இளைஞனை, அந்தப்பூக்காரக் கிழவிக்கு, அவனுடைய சின்ன வயதிலிருந்தே பழக்கம் உண்டு. செல்லமாக அவனை பேராண்டி என்று தான் கூப்பிடுவாள்.

தினமும் தவறாமல் இந்தக் கோயிலுக்கு வருபவன். உண்மையிலேயே கடவுள் பக்தி உடையவன்.

ஒரு நாள், உடல்நலமின்றி இருந்து, பலத்த மழையில் நனைய வேண்டிய இந்தக்கிழவியை, பாசத்தோடு குடை பிடித்து, அவளின் பூக்கூடையுடன், அவளின் குடிசை வீடு வரை கூடவே போய், அவளை அவள் வீட்டில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தவன்.  

இந்தத்தள்ளாத வயதிலும், பூத்தொடுத்து பூ வியாபாரம் செய்து உழைத்து சாப்பிடும் அந்தக் கிழவி மேல் அவனுக்கு ஒரு தனி பிரியம் உண்டு. மேலும் கோயிலுக்குப்போய் ஸ்வாமி கும்பிட்டு விட்டு திரும்ப வீட்டுக்குப்போகும் முன் இந்தக் கிழவியிடம் ஒரு பத்து நிமிடங்களாவது தினமும் பேசிவிட்டுத் தான் போவான்.

சிறு வயதில் ஒவ்வொரு பூக்களின் பெயர்களையும் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.

“இது மல்லிகைப்பூ, இது முல்லைப்பூ, இது ஜாதிப்பூ, இது கனகாம்பரப்பூ,  இது வாடாமல்லி, இது ரோஜாப்பூ, இது தாழம்பூ, இது வெண் தாமரைப்பூ, இது செந்தாமரைப்பூ, இது மரிக்கொழுந்து, இது ஜவந்திப்பூ, இது பட்டுரோஜா, இது பாரிஜாதம் (பவழமல்லி), இது இருட்சிப்பூ, இது நந்தியாவட்டை, இது செம்பருத்தி, இது மகிழம்பூ, இது வில்வம், இது துளசி” என ஒவ்வொன்றையும் அவனுக்கு அந்தப்பாட்டி பொறுமையாகச்சொல்லிப் புரிய வைத்திருக்கிறாள்.

”மனுஷங்கக்கிட்டே தான் ஜாதிவெறி இருக்குன்னு பார்த்தா, பூக்களில் கூட ஜாதிப்பூன்னு ஒரு ஜாதி தனியா இருக்காப்பாட்டி” என்று புரட்சிகரமாக அவன் சிறு வயதிலேயே கேட்டதை நினைத்து கிழவி பலமுறை தனக்குள் வியந்து இருக்கிறாள்.

தான் பள்ளியில் படித்து முதல் ரேங்க் வாங்குவது முதல், காலேஜில் சேர்ந்தது, காலேஜ் படிப்பு முடிந்த கையோடு, உள்ளூரிலேயே பேங்க் ஒன்றில் நல்ல வேலையில் அமர்ந்துள்ளது, கை நிறைய இப்போது சம்பளம் வாங்குவது வரை, அவ்வப்போது அனைத்து விஷயங்களையும் அந்தப்பூக்காரப் பாட்டியிடம் பகிர்ந்துகொண்டு, அவள் அவனை மனதார வாழ்த்துவதில் பேரின்பம் கொண்டு வருபவன் அவன்.

பெண் வீட்டுக்கு எந்த ஒரு செலவும் வைக்காமல், தான் திருமணம் செய்துகொள்ள விரும்பும், அந்த இளம் பூக்காரப்பெண்ணை, பொது இடத்தில் பலரும் மொய்ப்பதில் அவனுக்குத் துளியும் இஷ்டமில்லை.

வழக்கம்போல் அந்தப்பூக்கார கிழவியிடம், தன் மனதில் உள்ள விருப்பத்தைத் தெரிவித்து, அது நல்லபடியாக நடக்க வேண்டி, ஆசீர்வதிக்கும் படியாக வேண்டினான். அப்போது கோயில் மணி அடித்தது நல்லதொரு சகுனமாகத் தோன்றியது அந்தப்பாட்டிக்கும், அவளின் பேராண்டிக்கும்.

உயர்நிலைப் படிப்புத் தேர்வு முடிந்து, லீவுக்கு தன் வீட்டுக்கு வந்துள்ள தன் பேத்தி, தான் எவ்வளவு தடுத்தும் கேளாமல், தனக்குப் போட்டியாக ஒரு மாதம் மட்டும் பூ வியாபாரம் செய்யப்போவதாகவும், நான் உன் பேத்தி தான் என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளதை அந்தப்பூக்காரக் கிழவி தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

விளையாட்டாக பூ வியாபாரம் செய்ய இங்கு வந்து போன தன் சொந்தப்பேத்திக்கு, அதுவே பூச்சூடி மணமகளாக மாறும் பாக்யத்தைத் தந்துள்ளதிலும், அதுவும் இந்தத் தனக்கு மிகவும் பழக்கமான, ரொம்ப நல்ல பையன் தன் பேத்தியை தன் மனசார விரும்புவதையும் நினைத்துப் பூரித்துப்போனாள். 

எல்லாம் அந்தக் கோயில் அம்பாளின் அனுக்கிரஹம் தான் என்று வியந்து, சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கினாள் அந்தப் பூக்காரக்கிழவி. 

“எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என்றாள் அந்தக்கிழவி. மீண்டும் கோயில் மணி மேள தாளத்துடன் ஒலித்தது. 
  
-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-


இந்தச் சிறுகதை ‘வல்லமை’ மின் இதழில் 
30.09.2011 அன்று வெளியிடப்பட்டது
http://www.vallamai.com/archives/8633/

73 comments:

 1. உங்கள் கதைகளில் வர்ணனை லாவகமாக வருகிறது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. //விளையாட்டாக பூ வியாபரம் செய்ய இங்கு வந்து போன-- தன் சொந்தப்பேத்திக்கு...//

  வழுக்கு சாலையில் வழுக்கிக் கொண்டு போன வாகனக் கதைக்கு இது எதிர்பாராத திருப்பம் தான்!

  அந்த 'மாப்பிளே'யில் கொடுத்திருந்த அழுத்தமும் ஒற்றை வார்த்தையில் கிழவியின் விருப்பத்தைச் சொல்வதாகவும், ரசிக்கக் கூடியதாகவும் இருந்தது!

  எளிய நடையில் எழுதப்பட்ட சிறுகதைக்கு ஏகப்பட்ட நன்றிகள்!

  ReplyDelete
 3. நல்ல ட்விஸ்ட்!
  அந்தப் பாட்டியை மறக்கவியலாது.

  ReplyDelete
 4. கதை நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. பூவைவிட பூக்காரியை விட
  நீங்கள் கதை சொல்லிப் போன விதம்
  ரொம்ப ரொமப அழகு
  தலைப்பை ஜாதி பூ என வைத்து
  அது விஷயமாக ஏதோ சொல்லப்
  போகிறீர்களோ என நாங்களாக ஒரு
  கதையை எதிர்பார்த்து நிற்க நீங்கள்
  வேறு விதமாக சொல்லிப் போனது
  எனக்கு மிகவும் பிடித்திருந்தது
  அருமையான கதை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 6. ஒரு நல்ல கதையை குடுத்ததர்க்கு நன்றிகள்..

  ReplyDelete
 7. //பூக்களை விட அந்தப்பூக்காரி நல்ல அழகு.

  பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண்//

  ஆரம்பமே அசத்தல் வை கோ
  வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. நல்ல கதை.... மாப்பிள்ளை கிடைக்க இப்படியும் டிரிக் இருக்கா?

  ReplyDelete
 9. வழக்கம் போல எளிய நடையில் அமைந்த அழகான கதை கோபாலன் சார்!

  ReplyDelete
 10. பூ வியாபாரம் பண்ண வந்தவளுக்கு கழுத்தில் பூமாலையே போட்டு விட்டீர்கள்..

  ReplyDelete
 11. அருமை.இது ஒரு சாமர்த்தியம்தான்.

  ReplyDelete
 12. ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா நான் ஊகித்தமாதிரியே தான் கதை முடிந்திருக்கு.....

  நான் கதை படிச்சிட்டு வரும்போதே ஓரளவுக்கு ஊகிக்க முயல்வேன் இப்படி இருக்குமா இப்படி இருக்குமா இப்படி போகுமா கதையின் போக்கு என்று....

  அதன்படி நான் ஊகித்தது கண்டிப்பா அந்த பெண் பூ தனக்கு போட்டியாக விற்க வந்தும் பாட்டி ஒன்னும் சொல்லாம இருந்தது ஒரு பாயிண்ட்... ரெண்டு அந்த பெண்ணிடம் பொறாமை காட்டாதது.... மூன்றாவது ஏன் அந்த பெண் வரலைன்னு கேட்டப்ப கூட ரொம்ப சமாதானமாவே பதில் சொன்னது..... ரெண்டும் ரெண்டும் நாலுன்னு சட்டுனு ஊகிக்க முடிஞ்சுது.....

  அடுத்தது அருமையா அந்த பையனை பற்றி அவன் குணாதிசயத்தை பற்றி கதை ஆசிரியர் நீங்க விவரிக்கும்போதும் நினைச்சேன் சரி சரி இந்த பையன் தான் கதையின் நாயகனா கண்டிப்பா இறுதியில் சுபமா முடியும்னு...

  அருமையான கதை பகிர்வு சார்... எந்த வேலையும் கண்டிப்பா குறைவில்லை.. பேத்தி நல்லா படித்தாலும் பாட்டிக்கு உத்தாசையாக பூ விற்று காண்பித்த அறிவை சபாஷ் சொல்ல தோணுகிறது....

  பூவில் கூட ஜாதி பெயரை வேண்டாத அருமையான கேரக்டர் பேத்திக்கு அமையும் மாப்பிள்ளை....

  எளிமையா கதை சொல்லி அழகா சுபம் போட்டிருக்கீங்க சார்...

  அன்பு நன்றிகள் பகிர்வுக்கு சார்....

  ReplyDelete
 13. அருமையான கதை.

  கதை சொல்லும் பாங்கு அருமை சார்.

  ReplyDelete
 14. அருமையான கதை..... விவரங்கள் சொல்லிப் போவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்... எந்த கதையாக இருந்தாலும் அதில் எடுத்துக் கொண்ட விஷயம் பற்றி பற்பல விஷயங்களைச் சொல்வதற்கு நீங்கள் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கும் என நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது...

  ReplyDelete
 15. இது மல்லிகைப்பூ, இது முல்லைப்பூ, இது ஜாதிப்பூ, இது கனகாம்பரப்பூ, இது வாடாமல்லி, இது ரோஜாப்பூ, இது தாழம்பூ, இது வெண் தாமரைப்பூ, இது செந்தாமரைப்பூ, இது மரிக்கொழுந்து, இது ஜவந்திப்பூ, இது பட்டுரோஜா, இது பாரிஜாதம் (பவழமல்லி), இது இருட்சிப்பூ, இது நந்தியாவட்டை, இது செம்பருத்தி, இது மகிழம்பூ, இது வில்வம், இது துளசி” /

  மணம் நிறைந்த அருமையான கதை.
  திருமணமும் கூட்டிவைத்துவிட்ட
  மனம் நிறைந்த கதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்>

  ReplyDelete
 16. ”ஜாக்கிரதையாப் பார்த்துப் போம்மா கண்ணு” என்பாள் அந்தக்கிழவியும் எந்த விதமான போட்டியோ பொறாமையோ இல்லாமல்./

  வயதிற்கேற்ற முதிர்ச்சியுடன் பாட்டியின் சொற்கள் இனிமை!

  ReplyDelete
 17. “எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என்றாள் அந்தக்கிழவி. மீண்டும் கோயில் மணி மேள தாளத்துடன் ஒலித்தது./

  ஒரே வார்த்தையிலும்,மேளதாள் ஒலியிலும் ஓராயிரம் அர்த்தங்கலைப் பொதித்த சாமர்த்தியம் தங்களைத்தவிர யாருக்கு வரும்!

  ReplyDelete
 18. ”மனுஷங்கக்கிட்டே தான் ஜாதிவெறி இருக்குன்னு பார்த்தா, பூக்களில் கூட ஜாதிப்பூன்னு ஒரு ஜாதி தனியா இருக்காப்பாட்டி” என்று புரட்சிகரமாக அவன் சிறு வயதிலேயே கேட்டதை நினைத்து கிழவி பலமுறை தனக்குள் வியந்து இருக்கிறாள்./

  சிறுவயதிலேயே சிறப்பான சிந்தனை வியப்புதான்.

  ReplyDelete
 19. நன்றி. பூமணம் நிறைந்து மனம் நிறைத்த கதைக்கு எத்தனை வாழ்த்து சொன்னாலும் திருப்தி வரமாட்டேன் என்கிறதே!

  ReplyDelete
 20. ”ஜாதிப்பூ “பெயருக்கு பொருத்தமாக //”மனுஷங்கக்கிட்டே தான் ஜாதிவெறி இருக்குன்னு பார்த்தா, பூக்களில் கூட ஜாதிப்பூன்னு ஒரு ஜாதி தனியா இருக்காப்பாட்டி” என்று புரட்சிகரமாக அவன் சிறு வயதிலேயே கேட்டதை நினைத்து கிழவி பலமுறை தனக்குள் வியந்து இருக்கிறாள்.//நல்லதொரு மெசேஜையும் சிறுகதை,மூலம் தந்து விட்டீர்கள்.பூக்கார பாட்டியும்,பேத்தியும் மனதில் நிறைந்து விட்டார்கள்.கதை சொல்லிய விதம் அழகோ அழகு.வாழ்த்துக்கள்!

  எனது வலைப்பூ பக்கமும் வாருங்கள்.தங்கள் கருத்தினை பகிருங்கள்.

  ReplyDelete
 21. பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
  நடைபெறும் திருமனத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. அழகான சிறுகதை ஐயா ! பேத்திக்கு கொடுத்த வர்ணனைகள் அருமை .

  ReplyDelete
 23. நல்ல உள்ளம் கொண்டவர்க்கு நல்லதுதான் அமையும். ஜாதிப்பூ வெள்ளை உள்ளத்தை குறிக்கிறதோ? நல்ல கதை சார்.

  ReplyDelete
 24. அழகான கதை.கதையின் மூன்று நபர்களையும் நேரில் பார்ப்பது போலவே யூகிக்க முடிந்தது.

  ReplyDelete
 25. அருமையான கதை.

  ReplyDelete
 26. Beautiful story........
  the very first line was interesting.

  End was superb.

  Manakkal Raman

  ReplyDelete
 27. வித்தியாசமான கதைதான்.
  நடை வழக்கம் போலவே அருமை.சின்ன நூலிழையை வைத்து ஆடை நூற்கும் அருமைக் கலை போல்
  தங்கள் கலையும் வியக்கத்ததக்க வண்ணம் உள்ளது

  ReplyDelete
 28. தலைவரே... உங்க வலைப்பூவுக்கு முதல் வருகை தருகிறேன்... இனி தொடர்ந்து வருவேன்... உங்களுக்கு வைகோவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா...?

  ReplyDelete
 29. என்ன வை.கோ.சார்? சுகம்தானா?

  விறுவிறுப்பான துவக்கம்.விஸ்தாரமான ஆலாபனை.எதிர்பாராத முடிவு.இதுதான் வை.கோவின் சூத்திரம்.

  சபாஷ் வை.கோ.சார்.அடிக்கடி இனி சந்திப்போம்.

  ReplyDelete
 30. பவழமல்லி, இருவாட்சி, மகிழம்பூ என்று அழகழகான பூக்களின் பெயர்களை எழுதி சின்ன வயதின் நினைவலைகளைக் கொண்டு வந்து விட்டீட்கள். இத்தனைப்பூக்களின் வாசம் போலவே கதையும் மணத்தது!

  ReplyDelete
 31. எனக்கு நானே இம்முறை ஒரு “ ஷொட்டு “கொடுத்துக் கொள்கிறேன். கதை படிக்க ஆரம்பிக்குமுன்னே முடிவை சரியாக யூகித்து விட்டேன். எளிய நடை, நல்ல எழுத்தோட்டம் இவைதான் உங்கள் பலம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. //”மனுஷங்கக்கிட்டே தான் ஜாதிவெறி இருக்குன்னு பார்த்தா, பூக்களில் கூட ஜாதிப்பூன்னு ஒரு ஜாதி தனியா இருக்காப்பாட்டி”//

  பூக்களின் ஜாதியால் எந்தக்கெடுதலும் இல்லை,மனிதர்களில் ஜாதியினால் பலவிதமான பாதிப்பு.(பூ)

  சுவாரசியமான கதை.மிக எளியதான நடைமுறையில் அருமையாக எழுதியிருக்கிரீர்கள்.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 33. வாவ்,, ரொம்ப சூப்பர் கதை,,,

  ReplyDelete
 34. நான் ரொம்ப நாள் கழிச்சு படிச்சா நல்ல கதை..

  ReplyDelete
 35. சுவாரஸ்யமாக இருந்தது,,,,

  ReplyDelete
 36. கதை மிகவும் அருமை,உங்க மற்ற கதைகளையும் நேரம் கிடைக்கும் பொழுது படிக்க வேண்டும்..

  ReplyDelete
 37. ஐயா நிஜமாகவே நடந்த கதைபோலவே உங்கள் எழுத்தோட்டம் நகர்த்திச்செல்கிறது..
  கதை எழுதுவதில் தனிப்பெருமை உங்களுக்கே ..
  அற்புதமான வர்ணனையும் மெல்லோட்டமாக கதையை அழகு படுத்துகிறது..
  எதிர்பார்ப்புடன் அடுத்ததற்காக..
  பாராட்டுக்கள் ஐயா..

  ReplyDelete
 38. வை.கோ சார்! நானொரு முடிவை ஊகித்து வைத்துக் கொண்டு படித்து முடித்தேன்.. போங்க சார்! வேற ட்விஸ்ட் கொடுத்து க்ளீன் போல்ட் ஆக்கிட்டீங்க என்னை! உங்கள்
  வார்த்தைகள் வழக்கம் போல் பூச்சூடல் நேர்த்தி!

  ReplyDelete
 39. thirumathi bs sridhar has left a new comment on the post "ஜா தி ப் பூ":

  அழகான கதை.கதையின் மூன்று நபர்களையும் நேரில் பார்ப்பது போலவே யூகிக்க முடிந்தது.

  ReplyDelete
 40. திருமதி இமா அவர்களிடமிருந்து சுட்டியில் வந்த தகவல்:

  imma: //ஜா தி ப் பூ // nice story :)

  ReplyDelete
 41. தோழர் இராஜகோபால் அவர்கள் எழுதிய சுட்டித்தகவல்

  Rajagopalan:
  21:12

  உங்களின் ஜாதிப்பூ கதையை என்னுடைய பேஜில் ஷேர் பண்ணினேன்

  மற்றவர்களும் படிக்க யேதுவாக.

  ReplyDelete
 42. அன்பின் வை.கோ - கதை அருமை - மாப்ளே - இறுதியில் பாட்டி சொல்லும் ஒரு சொல்லில் அனைத்தும் அடங்கி விட்டது. பையனுக்குப் பிடித்து - பாட்டிக்கும் பிடித்து விட்டது - பேத்தி கொடுத்த வைத்தவள் = பூவில் இத்தனை வகையா - அதுதான் வை.கோ - நல்வாழ்த்துகள் - அழைப்பு அனுப்புக - வந்து வாழ்த்துகிறோம் - நட்புடன் சீனா

  ReplyDelete
 43. கதை அருமையாக இருந்தது சார். நல்ல முடிவு.

  எனக்கு மிகவும் பிடித்த பூவென்றால் அது ஜாதிப்பூ தான்.

  நவராத்திரி சுண்டல் கலெக்‌ஷனில் ரொம்ப பிஸியாகி விட்டேன்.

  ReplyDelete
 44. உங்க‌ளின் ம‌னதை விற்ற‌வ‌ளா?
  உங்க‌ ம‌னசு ஒரு 'பூ'ன்னு சொல்ல‌ வ‌ந்தேன்.

  ReplyDelete
 45. கதையை கவர்ச்சியாக எடுத்து செல்லிகிற விதம் உண்மையில் பாராட்டு களுக்கு உரியது கருத்துகளை இப்படி கூறும்போது மற்றவர்களிடம் விரைந்து சென்றடையும்பாராட்டுகள்

  ReplyDelete
 46. கதையை விட கதை சொன்ன விதம அருமை. எளிய நடை. சூப்பர்.

  ReplyDelete
 47. இந்த சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, அநேகமாக ஒருமனதாக அனைவருமே, புகழ்ந்து பாராட்டி, அழகழகான கருத்துக்கள் கூறி என்னை உற்சாகப்படுத்தியுள்ள அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைக்கூறிக் கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள், vgk

  ReplyDelete
 48. இம்முறை நானும் படிக்கும்போதே சரியாகக் கண்டு பிடித்துவிட்டேன். பாஸ்மாக்ஸ் கிடைக்கும்தானே :)

  ReplyDelete
  Replies
  1. மாதேவி October 4, 2011 5:25 AM
   இம்முறை நானும் படிக்கும்போதே சரியாகக் கண்டு பிடித்துவிட்டேன். பாஸ்மாக்ஸ் கிடைக்கும்தானே :)//

   மிக்க நன்றி. 100/100 செண்டம் கொடுத்து விட்டேன்.
   போதுமா ? மகிழ்ச்சி தானே ? அன்புடன் VGK

   Delete
 49. படித்தேன், ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. DrPKandaswamyPhD October 4, 2011 6:56 AM
   படித்தேன், ரசித்தேன்.//

   மிகவும் சந்தோஷம் ஐயா. அன்புடன் VGK

   Delete
 50. மிக்க நன்று..

  ReplyDelete
  Replies
  1. reka October 4, 2011 9:42 AM
   மிக்க நன்று..//

   மகிழ்ச்சி, நன்றி. அன்புடன் VGK

   Delete
 51. வணக்கம்
  வை.கோபாலகிருஷ்ணன்(ஐயா)

  ஜாதிப்பூ படைப்பு மிக அருமை ஐயா.. நீங்கள் கையாண்ட வர்ணனை மிகவு என்னைகவர்ந்துள்ளது.பூவை விட பூக்காரியை பற்றிய வர்ணனை மிகவும் அருமை அருமை
  வாழ்த்துக்கள் வலைப்பூ வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பூவை பாரக்க கிடைத்தது.
  நேரம் இருக்கும் போது நம்ம வலைப்பக்கமும் வாருங்கள் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் (ஐயா)

  -நன்றி-
  -என்றும் அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 52. 2008rupan October 19, 2012 6:02 PM
  //வணக்கம்
  வை.கோபாலகிருஷ்ணன்(ஐயா)//

  வணக்கம் நண்பரே, வாருங்கள்.

  //ஜாதிப்பூ படைப்பு மிக அருமை ஐயா.. நீங்கள் கையாண்ட வர்ணனை மிகவும் என்னைக் கவர்ந்துள்ளது.பூக்களை விட பூக்காரியை பற்றிய வர்ணனை மிகவும் அருமை அருமை
  வாழ்த்துக்கள்.//

  மிகவும் சந்தோஷம்.

  //வலைப்பூ வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பூவை பாரக்க கிடைத்தது.//

  அப்படியா? மகிழ்ச்சி. வலைச்சரத்திற்கும், வலைச்சர ஆசிரியரான என் அருமை நண்பர் ஆரண்யநிவாஸ் ஆர். இராமமூர்த்திக்கும் என் நன்றிகள்.

  //நேரம் இருக்கும் போது நம்ம வலைப்பக்கமும் வாருங்கள் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் (ஐயா)//

  ஆகட்டும் .. முயற்சிக்கிறேன், நண்பரே.

  //-நன்றி-
  -என்றும் அன்புடன்-
  -ரூபன்-//

  தங்களின் இன்றைய அன்பான புதிய வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும்
  என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 53. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

  அன்புடையீர்,

  வணக்கம்.

  31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இதுவரை, 2011 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் VGK

  ReplyDelete
 54. மலர் களின் வாசம் போலவே வாசமான கதை.

  ReplyDelete
  Replies
  1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 செப்டெம்பர் வரை முதல் ஒன்பது மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 55. ட்விஸ்ட் ஆடறதே, ஹி, ஹி, ஹி, கதையில ட்விஸ்ட் வெக்கறதே உங்களுக்கு பொழப்பா போச்சு.

  அப்படி இருக்கறதால தானே ரசிச்சுப் படிக்கறீங்கன்னு சொல்றீங்களா? அது என்னவோ வாஸ்தவம் தான்.

  அந்தப் பொண்ணு பாட்டியோட சொந்த பேத்தியா இருக்கும்ன்னு யூகிக்கவே முடியல.

  அருமையான குட்டிக்கதை.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

   அன்புள்ள ஜெயா,

   வணக்கம்மா !

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரை முதல் ஒன்பது மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 56. பூக்கள விட பூக்காரி அளகோ (இன்னாமா ஜொள்ளு ஒளுகுது) மனுசங்கதா ஜாதி பாப்பாங்கனா பூக்களிலயுமா பாப்பாங்க இது இன்னா கோராம.

  ReplyDelete
 57. mru October 12, 2015 at 12:52 PM

  /பூக்கள விட பூக்காரி அளகோ (இன்னாமா ஜொள்ளு ஒளுகுது) //

  ஜொள்ளு என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. உண்மையான அழகினை ரஸித்து மனதுக்குள் ஜொள்ளு விட்டாலும் தப்பேதும் இல்லை என்று நான் அடிக்கடி நினைப்பதும் உண்டு.

  நான் ஆபீஸுக்குப்போகும் நாட்களில், ஒருநாள் காலை 6.45 க்கு பஸ்ஸில் ஏறி அமர்ந்து, பஸ் புறப்படும் முன்பு, இதுபோன்ற ஒரு அழகான இளம் பூக்காரப் பெண்ணை நான் நேரில் சந்திக்க நேர்ந்தது.

  உடனடியாக கொடிமின்னல் போல என் மனதில் உதித்த வாக்கியம்: ’பூக்களைவிட அந்தப் பூக்காரி நல்ல அழகு’ என்பதாகும்.

  உடனே ஆபீஸ் போகும்வரை மனதுக்குள் இதனை (கதையை) அசைபோட்டபடி பஸ்ஸில் சென்றேன். ஆபீஸ் போனதும், வழக்கமாக கேண்டீனுக்கு டிபன் சாப்பிடப் போவதையும் அன்று ஒருநாள் மட்டும், தியாகம் செய்துவிட்டு இந்தக்கதையை நான் எழுதி முடித்தேன். பலரும் பாராட்டினார்கள்.

  வயிறு நிறைய டிபன் சாப்பிட்டது போன்ற மகிழ்ச்சியும் திருப்தியும் அன்று எனக்கு ஏற்பட்டது. :)

  அன்புடன் குருஜி கோபு

  ReplyDelete
 58. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

  அன்புள்ள (mru) முருகு,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரை, முதல் ஒன்பது மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

  ReplyDelete
 59. பூக்கார பாட்டிம்மாவை மறக்கவே முடியாது. நல்ல பாத்திர படைப்பு. பூக்களை விட பூக்காரி அழகாதான் தெரியறா எங்களுக்கும்.  ReplyDelete
 60. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 செப்டம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 9 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ********************************************************

  As on date, at this moment,
  Status of your Comments Completion:

  140 Posts over, out of 750 Posts :)

  9 Months over, out of 51 Months :))

  This achievement is just within
  FOUR DAYS only !!!! :)))
  { 15th to 18th November, 2015 }

  Very Great Job !

  Best Wishes ........ :))))

  vgk

  ********************************************************

  ReplyDelete
 61. // “எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என்றாள் அந்தக்கிழவி. மீண்டும் கோயில் மணி மேள தாளத்துடன் ஒலித்தது. //What a punch!!!! ஓப்பனிங் மாதிரி ஃபினிஷிங்கும் சூப்பர்..

  ReplyDelete
 62. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 செப்டம்பர் மாதம் வரை, என்னால் முதல் 9 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 63. ஜாதிப்பூவின் வாசனையை அனுபவித்தேன் இந்த கதை மூலம்!

  ReplyDelete
 64. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 செப்டம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 9 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. My Dear E S Seshadri,

   As on date, at this moment,
   Status of your Comments Completion:

   140 Posts over, out of 750 Posts :)

   9 Months over, out of 51 Months :))

   This achievement is just within a day
   ..... TODAY 17.12.2015 :)))

   THIS IS A RECORD BREAK ACHIEVEMENT

   Best Wishes ........ :))))

   VGK

   Delete
 65. கதை நல்லா இருந்தது. பொதுவா கடை வைக்கறவங்க, தனக்குப் போட்டிக்கடையைத் தாங்களே மற்றவர்களை வைத்துத் திறந்திடுவாங்க.

  முதல் வரியைப் படித்தவுடன், படத்தைப் பார்த்து, என்ன ஆயிற்று.. அவசரகோலத்தில் 60 வருடத்துக்கு முன் 16 வயதாயிருந்த பெண்ணின் படத்தைப்போட்டிருக்கிறாரே என்று நினைத்தேன்.

  ரசிக்கும்படி கதை இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழன் July 2, 2017 at 5:02 PM

   வாங்கோ, வணக்கம்.

   //கதை நல்லா இருந்தது.//

   மிக்க மகிழ்ச்சி.

   //முதல் வரியைப் படித்தவுடன், படத்தைப் பார்த்து, என்ன ஆயிற்று.. அவசரகோலத்தில் 60 வருடத்துக்கு முன் 16 வயதாயிருந்த பெண்ணின் படத்தைப்போட்டிருக்கிறாரே என்று நினைத்தேன்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதே கதையை 2014-ல் சிறுகதை விமர்சனப்போட்டிக்காக வெளியிட்ட போது அந்த முதலில் காட்டியுள்ள பெண்குட்டியை நன்கு இளமையாகக் கொண்டு வந்து காட்சிப்படுத்தி விட்டேன். இதோ அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html

   //ரசிக்கும்படி கதை இருந்தது.//

   தங்களின் அன்பான வருகைக்கும், மணக்கும் ஜாதி-மல்லி போன்ற நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete