என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

பெயர்ச் சூட்டல்




பெயர்ச் சூட்டல்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




இன்று சாயங்காலம் ஆபீஸ் விட்டு வீடு திரும்பும்போது எப்படியும் நல்ல செய்தி நம் காதில் விழுந்துவிடும் என்ற ஆவலில் ரகு, தன் வீட்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தான்.


தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதில் தன் தாயும் தந்தையும் இவ்வளவு தூரம் அக்கறை காட்டுவதும், விவாதிப்பதும் அவர்களின் ஒரே பிள்ளையான ரகுவுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்து வியப்படையச் செய்தது.

எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவதில் தன் பெற்றோருக்கு நிகர் யாருமே கிடையாது என்பதில் ரகுவுக்கு ஒரு தனி பெருமை தான்.

நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு, அவர்களே ஒரு முடிவுக்கு வந்து, அவர்களாகவே தன்னிடம் தெரிவிக்கட்டும் என்று ஒருவித வெட்கத்துடன் ஹாலில் டீ.வி. பார்க்க அமர்ந்தான்.

இறுதியில் பேரனாக இருப்பின் “சந்தான கோபாலகிருஷ்ண மூர்த்தி” என்று பெயர் வைப்பது என்றும், ஒருவேளைப் பேத்தியாக இருப்பின் “பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்று பெயர் வைப்பதெனவும் முடிவு செய்து, ஒரு வெள்ளைத்தாளில் அதை அப்படியே அழகாக எழுதி, நாலா பக்கமும் மஞ்சள்பொடியை சற்றே நீரில் கலந்து அழகாக பட்டையடித்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி, அங்கிருந்த உண்டியலுக்குள் அந்தப்பேப்பரை மடித்துப்போட்டு ஞாபகமாக பத்திரப்படுத்தி விட்டனர்.

அவர்கள் வாயால் தன்னிடம் எதுவுமே சொல்லாததால் பொறுமை இழந்த ரகு, தன் தாயாரிடம், “என்னம்மா முடிவு செய்தீர்கள்?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.









”நேற்று வந்த பெண் ஜாதகமும், உனக்குப்பொருத்தமாய் இல்லைன்னு, நம்ம ஜோஸ்யர் இன்று வந்து சொல்லிட்டுப் போயிட்டாருடா; 


வேறு ஏதாவது ஜாதகம் பொருந்தி வருதான்னு பார்ப்போம். 


எல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம், நல்ல காலம் வரணுமோள்யோ” என்றாள்.     

ரகு வழக்கம் போல் நொந்து நூலாகிப்போனான்.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-




இந்தச்சிறுகதை "வல்லமை” 
மின் இதழிலும் இன்று 
04.10.2011 வெளியாகியுள்ளது.
www.vallamai.com

59 கருத்துகள்:

  1. "நல்ல நேரம்.... முட்டை விற்கும் பெண்ணின் கதையாகிவிடக் கூடாது.:(

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அடியேன்னு சொல்ல ஆத்துக்காரி இல்லியாம் குழந்தைக்கு என்ன பேரு வைப்பதா?

    பதிலளிநீக்கு
  3. இந்தக்காலத்தில் இப்படிக்கூட பொறுமையான பிள்ளைகள் இருக்கின்றார்களா?என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று யூகிக்க முடியாமல் நச் என்று அழகாய் கதையை முடித்திருப்பது அருமை.வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  4. சிறுகதை அருமை .வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  5. இனிய இரவு வணக்கம் ஐயா,

    நல்லதோர் பின் நவீனத்துவம் கலந்த குட்டிக் கதையினைத் தந்திருக்கிறீங்க.

    இறுதிப் பந்தியில் திருப்பு முனையுடன் விடயத்தைச் சொல்லிய விதம் அட்டகாசம் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. நான் கொஞ்சம் வாழை மட்டை இனம்
    கொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்து கொண்டேன்
    நல்ல சின்னஞ்சிறு கதை
    தொடர வாழ்த்துக்கள் த.ம 4

    பதிலளிநீக்கு
  7. ஏதோ பழமொழி சொல்வார்களே....அது போல அல்லவா இருக்கிறது...! பாவம் ரகு!

    பதிலளிநீக்கு
  8. என்னடா, அந்த கதைநாயகனின் மனைவி பற்றி ஒன்றுமே வரவில்லையே என யோசித்துக் கொண்டே படித்தேன்... கடைசியில் தான் புரிந்தது - இன்னும் கதாநாயகியே கிடைக்கவில்லை என... :)

    நல்ல கதை... பகிர்வுக்கு நன்றி.

    தமிழ்மணம் - 6/6

    பதிலளிநீக்கு
  9. // Ramani said...
    நான் கொஞ்சம் வாழை மட்டை இனம்
    கொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்து கொண்டேன்
    நல்ல சின்னஞ்சிறு கதை
    தொடர வாழ்த்துக்கள் த.ம 4//

    ரமணி சார் அதென்ன வாழை மட்டை இனம்.உங்கள் பாணியில் இதனை கருவாக கொண்டு கவிதை மழையாக பொழிந்து எனக்கு புரிய வையுங்களேன்.

    பதிலளிநீக்கு
  10. ஹாஹாஹா முடியலை.. அவ்வளவு சிரித்தேன்..:)

    பதிலளிநீக்கு
  11. குழந்தை வேண்டுமென்பவர்கள் யாரிடமிருந்தாவது சிறு பிள்ளைகளின் சட்டையை வாங்கி வீட்டில் வைப்பார்கள். பிள்ளை பிறக்கும் யோகம் கிட்டும் என்று. அது போல பெயரிடலும் வொர்க் அவுட் ஆகலாம்.

    பதிலளிநீக்கு
  12. //இறுதியில் பேரனாக இருப்பின் “சந்தான கோபாலகிருஷ்ண மூர்த்தி” என்று பெயர் வைப்பது என்றும், ஒருவேளைப் பேத்தியாக இருப்பின் “பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்று பெயர் வைப்பதெனவும் முடிவு செய்து//

    இவ்வளவு திட்டமிட்டவர்கள் பேரை மட்டும் இவ்வளவு "சுருக்கமாக" வைத்திருப்பதன் காரணம் யாதோ? :-)

    வெள்ளரிப்பிஞ்சு மாதிரி ஒரு நறுக்கென்று ஒரு நகைச்சுவைக் கதை ஐயா!

    பதிலளிநீக்கு
  13. சார் கதைய முதல்ல் படிச்சவுடன் புரியவே இல்ல..!!! மக்கு நான்..கதை நன்று :)

    பதிலளிநீக்கு
  14. எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவதில் தன் பெற்றோருக்கு நிகர் யாருமே கிடையாது என்பதில் ரகுவுக்கு ஒரு தனி பெருமை தான்.

    அருமைதான்!

    பதிலளிநீக்கு
  15. பேரனாக இருப்பின் “சந்தான கோபாலகிருஷ்ண மூர்த்தி” என்று பெயர் வைப்பது என்றும், ஒருவேளைப் பேத்தியாக இருப்பின் “பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்று பெயர் வைப்பதெனவும் முடிவு செய்து, /

    தங்கள் பெயரையே பேரனுக்கும் அருமையாய் எழுதி வைக்கச் செய்துவிட்டீர்களா!

    பதிலளிநீக்கு
  16. என்ன பெயர்? என்னபெயர்?? என்று ஆவலாய் வந்தால்....இன்னும் கலயாண்மே முடிவாகவில்லை!

    பதிலளிநீக்கு
  17. எல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம், நல்ல காலம் வரணுமோள்யோ” என்றாள்.
    ரகு வழக்கம் போல் நொந்து நூலாகிப்போனான்.


    பாவம்தான்!

    பதிலளிநீக்கு
  18. பொறுமை இழந்த ரகு, தன் தாயாரிடம், “என்னம்மா முடிவு செய்தீர்கள்?” என்று ஆர்வத்துடன் கேட்டான்./

    திரில்லர் கதை மாதிரி எதிர்பார்க்கவைத்தது!

    பதிலளிநீக்கு
  19. வல்லமையில் வெளியானதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.!

    பதிலளிநீக்கு
  20. பிள்ளை பிறக்குமுன் பெயர் வையாதே என்பது முது மொழி!

    கூப்பிட மனைவி வருமுன்னே குழந்தைக்குப் பெயர் சூட்டல்!!!?? .

    பதிலளிநீக்கு
  21. நொந்து நூலாகிப் போனது ரகு மட்டுமா? நானும் தான். அற்புதம் சார்!

    பதிலளிநீக்கு
  22. ஐயா!
    நல்ல கதை!
    ஆகாயத்திலே கோட்டை கட்டி
    அதிலே சன்னல் எத்தனை
    கதவு எத்தனை என்று ஆய்வு
    செய்தானாம் ஒருவன் அது போல
    மிகவும் நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  23. நல்ல ஒரு சிறு கதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. ஆகா! நல்ல சஸ்பென்ஸ் கதை..
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  25. ஒரு சின்ன சாதாரண விஷயத்தை எடுத்து ஒரு பெரிய சஸ்பென்ஸை கொடுத்து அழகான கதையாக்கி விட்டீர்கள்.அருமை.

    பதிலளிநீக்கு
  26. ஒரு நல்ல சிறுகதை பாராட்டுகள் பொறுமையான மகன் சிறந்த ஆக்கம் பாராட்டுகள்
    இரமணி ஐயா தம்மை வழமட்டை என குறிப்பிட்டு இருந்தார் இதன் மகத்துவம் நச்சுகளை நேக்கும் தன்மை கொண்டது அது

    பதிலளிநீக்கு
  27. கதைத்தலைப்பு.... அருமையா இருக்கு..

    சரி கதை தலைப்புக்கேற்றார்போல் கதையை தொடங்கி அப்டியே எங்களையும் ஒரே கோணத்தில் கொண்டு போய்விட்டு பெரிய கேள்விக்குறி போட்டு

    சடார்னு பஸ் ஒரு பெரிய டர்ன் போட்டு ரிவர்ஸ் எடுத்து திருப்பின மாதிரி கதைல செம்ம திருப்பம்... ( நான் சத்தியமா எதிர்ப்பார்க்கலை.. ஏமாந்துட்டேன் :) )

    இப்படி தான் கதை போகும்னு நினைச்சு நான் படிச்சிட்டே வந்தேன். அச்சு விகடன்ல படிப்பது போலவே செம்மயா இருக்கு வை கோ சார்....

    அது சரி பேரன் பெயரும் பேத்தி பெயரும் இப்படி பெரிசு பெரிசா வைப்பீங்கன்னு தெரிஞ்சு தான் குவைத்ல பாஸ்போர்ட் குழந்தைக்கு எடுக்கும்போது கூட அப்பா பேரு சேர்க்காம குழந்தை பேரு மட்டும் போடனும்னு ரூல் போட்டுட்டாங்க...

    பின்பக்கம் தான் அப்பா பெயர் அம்மா பெயர் வரும்... இவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ பெரிய பேரா?

    கதையின் போக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஏன்னா நான் எதிர்ப்பார்க்கலையே இப்படி கதை நச் நு முடியும்னு.....

    ரசிக்க வைத்த பகிர்வு வை கோபாலக்ருஷ்ணன் சார். அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.....

    பதிலளிநீக்கு
  28. ஹை நானு நானு.....

    நானு கூட வாழைமட்டை தான்....

    படிச்சேனா புரியலை முதல்ல....

    என்ன சொல்றாங்க வை கோ சார் அப்டின்னு பார்த்தேன்... சரின்னு திரும்ப படித்தேன்... ஹுஹும் அப்பவும் புரியலை... எப்படி லிங்க் சேர்க்கிறீங்கன்னு.... சரியான ட்யூப் லைட் இது என் உறவினர்கள் சொல்வது என்னை...

    சரியான தயிர்சாதம் இது என் நட்புகள் சொல்வது என்னை....

    ஞானப்பண்டு இது ஆசையாய் அம்மாவின் தோழி சொல்வார் என்னை..

    அந்த அளவுக்கு மந்தப்புத்தியாக்கும் எனக்கு....

    ரமணி சார் போட்டதை படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது.....

    அவர் வெறும் வாழைமட்டை தான்...

    நான் - ட்யூப்லைட், தயிர்சாதம், ஞானப்பண்டு.. :)

    பதிலளிநீக்கு
  29. அருமையான குட்டிக்கதை! இந்த மாதிரி கனவுகளுடன் எத்த‌னையோ பேர்கள் ஆதங்கத்துடன் வாழ்வதை அழகாக படம் ப்டித்துக் காட்டியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  30. அது போச்சு போங்கோ:-))
    இதைத் தான்
    'அடி'ங்க‌ற‌துக்கு பெண்டாட்டி காண‌லையாம்; அட்ச‌ர‌பியாச‌த்துக்குப் பேர் என்ன‌ வெக்க‌ற‌துன்னாளாம்

    என்றார்க‌ளோ அந்த‌க்கால‌த்தில்!

    அட‌க் க‌ட‌வுளே... ல‌க்ஷ்மி அம்மாக்கும் இதே தோணிருக்கே...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த என் சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு வாழ்த்தி, வரவேற்றுள்ள அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      vgk

      நீக்கு
  31. பெயர்ச் சூட்டல் வைபவத்திற்கு வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  32. இராஜராஜேஸ்வரி said...
    //பெயர்ச் சூட்டல் வைபவத்திற்கு வாழ்த்துகள் !//

    தங்களின் மீண்டும் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

    மிக்க நன்றி, மேடம்.

    எனக்கு இனிமேல் பேத்தி பிறந்தால் அவளுக்கு நிச்சயமாக உங்கள் பெயரான ”இராஜராஜேஸ்வரி” என்று தான் வைப்பேன். அது மட்டும் நிச்சயம். எனக்கு இந்தப்பெயரில் அவ்வளவு ஒரு ஈடுபாடு. ;)))))

    பதிலளிநீக்கு
  33. மிகவும் அருமையாக சிறிய கதையாக இருந்தாலும் பொறுமைசாலி ரகு கதை ..... என்னை சிரிக்க வைத்தது ஐயா...

    //எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவதில் தன் பெற்றோருக்கு நிகர் யாருமே கிடையாது என்பதில் ரகுவுக்கு ஒரு தனி பெருமை தான்.// ... ஆனால் இவ்வளவு முன்கூட்டியே பெயர்சூட்டு விழாவா..... சிரிக்க வைத்தது கதை....

    ஆனாலும் கதையிலும் பேரனுக்கு உங்கள் பெயரை வைக்க சொல்லிவிட்டீர்கள் ஐயா..... பொருத்தமான பெயர்தான் ஐயா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ, திருமதி விஜிபார்த்திபன் அவர்களே! வணக்கம்.

      என்னைப்போன்ற பொறுமைசாலி ரகுவின் கதை உங்களைச் சிரிக்க வைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷமே, மேடம்.

      [ஆனால் நான் இப்போது தான், அதுவும் அனுபவத்தினால் பொறுமைசாலியாகியுள்ளேன்.

      அப்போதெல்லாம் அப்படி அல்ல.

      எனக்கு Just 21 வயது, முடிந்த உடனேயே Just 18 ஆன என் அத்தையின் பெண் வழிப்பேத்தியை திருமணம் செய்து வைத்து விட்டனர்.

      அதனால் எனக்கு 50 வயது ஆவதற்கு ஓர் ஆண்டு முன்பே, எனக்கு முதன் முதலாகப் பேத்தி பிறந்து விட்டாள்]

      கதையில் வரும் பேரனின் பெயரில் One Third மட்டுமே என் பெயர் உள்ளது.

      அதுசரி, என் பெயர்க்காரணம் உங்களுக்குத் தெரியுமோ?
      தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் தாங்கள் சமீபத்தில் 7-8 மாதங்கள் முன்பு தான் வலையுலகிலேயே வலம் வர ஆரம்பித்துள்ளீர்கள். உடனே போய் இந்த இணைப்பைப் படியுங்கோ:

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

      அதுவும் நல்ல நகைச்சுவையாகவே இருக்கும். அதற்கும் ஏதாவது ஒரு கமெண்ட் கொடுங்கோ.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  34. 'அடிங்கிற ஆம்படையானைக் காணும்; பிள்ள பொறந்தா கோபால கிருஷ்ணன் ' என்கிற பழமொழியையே கதையாக எழுதிய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போறாது!
    --

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மேடம், ”அடியேங்க ஆம்படையாளைக் காணோம், பிள்ளை பிறந்தா சந்தான கோபாலகிருஷ்ணன் ன்னு பெயர் வைக்கணும் சொல்றான்” என்று இங்கும் ஒரு பழமொழியைச் சொல்லிக் கேள்விப் பட்டுள்ளேன். அதையே தான் சற்றே மாற்றி இந்த சிறுகதையாக எழுதியுள்ளேன்.

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, மேடம். அன்புடன் vgk

      நீக்கு
  35. சூப்பர். எத்தனை விதமான உணர்ச்சிகள் இந்த குட்டி கதையில்!மிக பிடித்த கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ms. PATTU Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

      நீக்கு
  36. என்ன இப்படிப்பண்ணிட்டீங்களே? நாங்க என்னென்ன கற்பனைல இருந்தோம்?

    பதிலளிநீக்கு
  37. ஆஹூ ஆஹான்னு டைப் பண்ணினா ஆ ஹுன்னு வருது. உங்க நகைசுசுவை எழுத்துகளைப படித்து என் கையும் தடுமாறுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 19, 2015 at 10:30 AM

      //ஆஹூ ஆஹான்னு டைப் பண்ணினா ஆ ஹுன்னு வருது. உங்க நகைச்சுவை எழுத்துகளைப படித்து என் கையும் தடுமாறுது//

      ஏம்மா இந்தத் தடுமாற்றம்? மெதுவாகப் பொறுமையாக அடியுங்கோ. அப்படியே தப்பானாலும் ஒன்றும் தப்பே இல்லை. :) தைர்யமாக தடுமாறாம ஸ்டெடியா இருங்கோ, போதும்.

      என் நகைச்சுவை எழுத்துக்களைப்படித்து உங்கள் கையே தடுமாறுகிறது என்பதைக் கேட்கும் போது, எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசித்தேன். சிரித்தேன். மிக்க நன்றி.

      நீக்கு
  38. அடியேன்னு கூப்பிட பெண்டாட்டி இல்லை. அடுத்த புள்ளைக்கு கிருஷ்ணசாமினு பேர் வெக்கலாம்ன்னானாம்.

    அந்தப் பிள்ளைக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி, அப்படியே அவன் கனவெல்லாம் நினைவாக வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. அட கொமரே நிக்கா வே ஆகல அதுக்கும்மாரவா குஞ்சு குளுவானுக்கு பேரு தேடுரே. நல்ஸாதா கீது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru September 15, 2015 at 11:10 AM


      //அட கொமரே ... நிக்கா வே ஆகல ... அதுக்கும்மாரவா குஞ்சு குளுவானுக்கு பேரு தேடுரே. நல்ஸாதா கீது.//

      நிக்கா = திருமணம், கல்யாணம் ஓக்கே.

      குஞ்சு குளுவான் = குழந்தைகள் ஓக்கே

      ’கொமரே’ மற்றும் ’நல்ஸாதா கீது’ சரியா புரியவில்லை.

      எனினும் ஓக்கே, ஓக்கே. ஏதோ நாளடைவில் இவை பற்றியெல்லாம் நானும் புரிந்துகொள்ளக்கூடும்.

      அசல் அச்சாக ’அதிரா’வே தான் ! :)

      நீக்கு
  40. அட ஆமால்ல இப்ப நா படிக்குதெல்லா போட்டி கலக்கல. நிக்காஹ் கட்ட முன்னியே குஞ்சு குளுவானுக்கு பேரு தேடுர ஆளப்பாக்காங்காட்டியும் ஐயோபாவமால்ல இருக்குது

    பதிலளிநீக்கு
  41. பேரக்குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பெயராக ஸெலக்ட் பண்ணினாலும் கூப்பிட வசதியாக பெரைபுஜ்ஜிமா கோபு என்றெல்லாம் சுருக்கிடுவாங்களே. அடியேங்கறதுக்கு இன்னும் ஆத்துக்காரியே வரலியே.

    பதிலளிநீக்கு
  42. முன்னாடி..சரிதான்..அதுக்காக இவ்வ்வளவு முன்னாடியா...ஐயோடா...

    பதிலளிநீக்கு
  43. கல்யாணம், சீமந்தம் எல்லாம் கடந்த நிலை என்று பார்த்தால் முடிவு இப்படியா?

    பதிலளிநீக்கு