புது வண்டி
சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
தன்னுடைய புத்தம்புது வண்டியை சுத்தமாகக் கழுவித் துடைத்து, மல்லிகை மணத்துடன் கூடிய ஸ்ப்ரேயர் தெளித்து, டேஷ் போர்டில் இருந்த விநாயகருக்கு பூவும் வைத்து, நான்கு ஊதுபத்திகள் ஏற்றி, இதுவரை ஏதும் சவாரிக்கு அழைப்பு வராததால், அன்றைய செய்தித்தாளைப் புரட்டிய வண்ணம் டிரைவர் சீட்டில்,காற்றுக்காக கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, அமர்ந்திருந்தான் ராமைய்யா.
புது வண்டி வாங்கி ஒரு மாதமே ஆகியும், நேற்று வரை தொழில் அமோகமாகத்தான் நடந்து வருகிறது.
எப்போதுமே மிகவும் சுறுசுறுப்பான அந்தப் போக்குவரத்துப் பகுதியில் காலேஜ், பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசாங்க ஆஸ்பத்தரி, போலீஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் போன்ற அனைத்துமே இருப்பதாலும், எப்போதுமே ஜன நடமாட்டத்திற்கு பஞ்சமே இல்லாததாலும், ராமைய்யாவுக்கு அடிக்கடி சவாரி கிடைப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை தான்.
என்ன ஒரே ஒரு சின்ன குறைதான் ராமைய்யாவுக்கு. வரும் வாடிக்கையாளர்கள், புத்தம்புது வண்டியாச்சே, அதை படு சுத்தமாகப் பராமறித்து வைத்துள்ளாரே, நாமும் ஒத்துழைப்புக் கொடுக்கணும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாதவர்களாக உள்ளனர்.
அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக வண்டியில் ஏறி வண்டியை அசிங்கப்படுத்தி விடுகின்றனர். போதாக்குறைக்கு மாலைகளையும், உதிரிப்பூக்களையும் வண்டி முழுக்க வாரி இறைத்து விடுகின்றனர்.
அமரர் ஊர்தி தானே! என்ற ஓர் அலட்சியம் அவர்களுக்கு.
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-
[இந்தச் சிறுகதை ”வல்லமை” மின் இதழில் 12.10.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது.]
Reference : http://www.vallamai.com/archives/9126/
[இந்தச் சிறுகதை ”வல்லமை” மின் இதழில் 12.10.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது.]
Reference : http://www.vallamai.com/archives/9126/
உடையவனுக்கு கொண்ட பொருள் மேல் கண்..
பதிலளிநீக்குவாங்கியவனுக்கோ அதன் பயன் மேல் கண்...
கதை நல்லா இருந்துச்சு ஐயா..
நல்ல சிறுகதை...
பதிலளிநீக்குபுதுசு புதுசா யோசிச்சு ..
பதிலளிநீக்குசூப்பர்..
ஹைக்கூ கதைகளாக வெளியிட்டு வருகிறீர்களா....அமரர் ஊர்தியில் ஏறுபவர்கள் இருக்கும் நிலையில் சுத்தத்தைப் பற்றி யோசிக்கும் நிலையில் இருக்க மாட்டார்களே...!
பதிலளிநீக்கு//எப்போதுமே ஜன நடமாட்டத்திற்கு பஞ்சமே இல்லாததாலும், ராமைய்யாவுக்கு அடிக்கடி சவாரி கிடைப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை//
பதிலளிநீக்குஅழகான முரண். சவாரிக்கு பஞ்சமே இருக்காது...
TM5
வித்தியாசம்,வித்தியாசமாக யோசிக்கறீங்க.
பதிலளிநீக்குகாக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சாயிற்றே! :-)
பதிலளிநீக்குஎன்னவா இருந்தாலும், தன்னோட சொந்த வண்டியாச்சே...
பதிலளிநீக்குவித்தியாசமான யோசனை செய்து எங்களுக்கு நிறைய கதைகள் ரசிக்கத்தருவதற்கு மிக்க நன்றி சார்...
சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு..
பதிலளிநீக்குவித்யாசமாக யோசித்து பதிவு போடுரீங்க.
பதிலளிநீக்குமிக அருமையாக ஒரு வரியில் ஒரு ஹைகூ
பதிலளிநீக்குமுடிவைவைத்துமுன் பகுதியில்
மிக அழகாக அதை எந்த விதத்திலும் கற்பனை
செய்ய முடியாதபடி கதை சொல்லிப் போகும் விதம் அழகு
மனம் கவர்ந்த கதை
தொடர வாழ்த்துக்கள் த.ம 8
An unexpected twist at the end, like those one page stories in Tamil magazines. You brought up a good build up in just a few sentences. Good.
பதிலளிநீக்குஅமரர் ஊர்திக்கு புது வண்டி வாங்குவார்களா? நான் second hand , third hand வண்டி தான் வாங்குவார்கள் என்று எண்ணியிருந்தேன்.. கதையும் அருமை, தகவலும் புதுமை...
பதிலளிநீக்குஅண்ணே டப்புன்னு எதோ நின்னாப்போல இருந்துது!
பதிலளிநீக்குநந்தவனத்து ஆண்டி கேள்வி பட்டிருக்கிறோம். இவர் நந்தவனத்து சாரதியா.
பதிலளிநீக்குஅருமை.
அமரத்துவம் வாய்ந்த கதை!
பதிலளிநீக்குகதை சூப்பரு.ஆனால் இவரு புது வண்டிய சுத்தமா,பாதுகாப்பா வச்சிருந்தாலும்
பதிலளிநீக்கு//அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக வண்டியில் ஏறி வண்டியை அசிங்கப்படுத்தி விடுகின்றனர். போதாக்குறைக்கு மாலைகளையும், உதிரிப்பூக்களையும் வண்டி முழுக்க வாரி இறைத்து விடுகின்றனர்//
இது ரொம்ப டூ மச் சார்.
அவரவர் வேதனை அவரவருக்கு.
வை கோ வைகோதான்!
பதிலளிநீக்குஎன்றும் மனம்மகிழ
சொல்வது இதுவேதான்
புலவர் சா இராமாநுசம்
கடைசியில் உள்ள திருப்பம்தான் எதிர்பாராதது. நச்சென்ற முடிவுடன் குட்டிக்கதை மிக அருமை.
பதிலளிநீக்குமருத்துவப்படிப்பு படித்து வந்தவர்கள் நிறைய மனிதர்கள் நோய் வாய்ப்பட வேண்டும் என்று விரும்புவார்களா.?அமரர் ஊர்தி வைத்திருப்பவர் அநேக மரணங்கள் நேர விரும்புவார்களா.?முரணான நோக்கம் இருக்கச் சாத்தியமா.?
பதிலளிநீக்குகுட்டி குட்டி கதைகளில் அசத்தி வருகிறீர்கள் சார்.
பதிலளிநீக்குஅட....ஜீவனுள்ள கதை!!!
பதிலளிநீக்குநிறைய வித்தியாசமா சிந்திக்கறீங்க.இது உங்களுக்குத்தான் முடியுது.
பதிலளிநீக்குகொன்னுட்டீங்க சார்!
பதிலளிநீக்குஅருமை.
Dear All,
பதிலளிநீக்குஇந்த என் குட்டியூண்டு கதைக்கு அன்புடன் வருகை தந்து அழகாகக் கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள என் அன்புக்குரிய தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள்,
vgk
குட்டி கதை மிகவும் அருமையாகவும் படித்தபின் மகிழ்ச்சியாகவும் இருந்தது..... இதெல்லாம் எப்படி ஐயா உங்களால் மட்டும் முடிகிறது.... சூப்பர் ....
பதிலளிநீக்குThank you very much Mrs. VijiParthiban, Madam.
பதிலளிநீக்கு//இதெல்லாம் எப்படி ஐயா உங்களால் மட்டும் முடிகிறது....?//
ஏதாவது மாத்திமாத்தி யோசித்துக்கொண்டே இருப்பேன். அது எப்படி என்றால் இந்தப் பதிவுக்குப்போய் சற்றே 2 நிமிடங்கள் மட்டும், பார்த்து விட்டு வாருங்கள். உடனே உங்களுக்கே புரிந்துவிடும்.
http://gopu1949.blogspot.in/2011/04/6_17.html
அன்புடன்
vgk
நல்ல ட்விஸ்ட். மனதைத் தொடுகிறது. வண்டியின் ஓனர் மனநிலை பரிதாபத்திற்குரியது.
பதிலளிநீக்குஇபுபடி வித்யாசமா யோசித்து எழுதுவதால் தான் சிறந்த எழுத்தாளரா இருகுகீஙுக.
பதிலளிநீக்குபூந்தளிர் May 19, 2015 at 10:48 AM
நீக்கு//இப்படி வித்யாசமா யோசித்து எழுதுவதால் தான் சிறந்த எழுத்தாளரா இருக்கீங்க.//
:)
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா, சிவகாமி.
தாங்க முடியல சாமி, இவர் அட்டகாசத்த.
பதிலளிநீக்குகுட்டியூண்டு கதையில வெக்கிறாரு சஸ்பென்சு.
வித்தியாசமா யோசிக்கறாரே!
அமரர் ஊர்தின்னா இன்னாட்டிங்குது அம்மி. வெளக்கி சொன்னதுக்கப்பால இதுக்கு கூடவா வண்டி இருக்குது.னுது
பதிலளிநீக்குmru September 15, 2015 at 11:07 AM
நீக்கு//அமரர் ஊர்தின்னா இன்னாட்டிங்குது அம்மி. வெளக்கி சொன்னதுக்கப்பால இதுக்கு கூடவா வண்டி இருக்குது.னுது//
:))))) மிக்க நன்றி ! அவங்க காலத்திலே இதெல்லாம் கேள்விப்பட்டே இருக்க மாட்டாங்கோ.
எங்கட அம்மிகேக்குது இதுக்கெல்லா கூடவா வண்டி கெடக்கோதுன்னுபிட்டு
பதிலளிநீக்குபுது வண்டி வர்ணனை பார்த்து வேற மாதிரி நினைத்தேன். வழக்கம் போல கடைசியில் அமரர் ஊர்தி என ட்விஸ் வச்சூட்டீங்களே. ஹைக்கூ கவிதை போல ஹைக்கூ கதை.
பதிலளிநீக்குதன் குஞ்சு பொன் குஞ்சு கதைதான்...'எண்ட்'லயும் ஒரு டுவிஸ்டா???
பதிலளிநீக்குஎஓஅடி சார் இப்படிக் கொல்றீங்க?
பதிலளிநீக்கு