எட்டாக் க[ன்]னிகள்
சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
நான் தினமும் பயணிக்கும் அரசுப்பேருந்தில், அது கிளம்பும் இடத்திலேயே ஏறி விடுவதால் அதிக கும்பல் இருக்காது. பாதி பஸ் காலியாகவே இருக்கும். கடந்த ஒரு மாத காலமாக மட்டும் இளம் வயதுப்பெண்கள் ஒரு கூட்டமாக அந்தப்பேருந்தில் ஏறி கலகலப்பை ஏற்படுத்து வருகின்றனர்.
ஏதோ ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் ப்ராஜக்ட் வொர்க்கோ, டிரைனிங்கோ செய்யச்செல்கின்றனர் என்று கேள்வி. எது எப்படியோ மல்லிகை மணத்துடன் பயணம் இப்போது இனிமையாக மாறியுள்ளது எனக்கு.
அந்தக்கூட்டத்தில் ஒருத்தி மட்டும் ஒட்டடைக்குச்சி போல அசாதாரண உயரம். குதிரை முகம். அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி வேறு. எலி வால் போன்ற குட்டையான கொஞ்சூண்டு தலைமுடி. மோட்டு நெற்றி.
ஒரே நிதான உயரமுள்ள மற்ற பெண்களுடன் இவள் சேர்ந்திருப்பது, ஏதோ அழகிய வாத்துக்கூட்டங்களின் நடுவே, கொக்கு ஒன்று நிற்பது போலத்தோன்றியது எனக்கு. ஆரம்பத்தில், இப்படியும் ஒரு அழகற்ற படைப்பா! என அவள் மேல் நான் அனுதாபம் கொண்டேன்.
ஆனால் நாளடைவில் அவள் என்னுடன் வலிய வந்து அன்புடன் பேசியதில், எனக்குள் ஏதோ ஒருவித இரசாயன மாற்றம் ஏற்பட்டது. எனக்கு அவளும் ஒரு அழகிய தேவதையாகவே தெரிய ஆரம்பித்து விட்டாள்.
என் உருவத்தைப் பார்த்தால் தெரியாதே தவிர, எனக்கும் விளையாட்டுப்போல முப்பது வயது ஆகி விட்டது. இதுவரை பெண் வாடையே அறியாத ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய சுத்த *பிரும்மச்சாரி* நான். இருந்தும் என் வீட்டில் இன்னும் என் திருமணம் பற்றிய பேச்சே எடுக்காமல் உள்ளனர்.
=================================================
[*பிரும்மச்சாரி* என்றால் இன்னும் திருமணமே ஆகாதவன் என்று பொருள்.
நான், ஒரு இராமாயண உபன்யாசம் கேட்ட போது, இராமாயணக் கதை சொன்னவர் வேடிக்கையாக, நகைச்சுவையாக ஒரு விஷயம் சொன்னார்.
நான், ஒரு இராமாயண உபன்யாசம் கேட்ட போது, இராமாயணக் கதை சொன்னவர் வேடிக்கையாக, நகைச்சுவையாக ஒரு விஷயம் சொன்னார்.
”அதாவது, ஆஞ்சநேயர் (அனுமன்) ஒரு சுத்த பிரும்மச்சாரி.
ஆனால் அவர் ஒரு வானரம் (குரங்கு இனம்).
வானரத்தில் கூட பிரும்மச்சாரி உண்டா? என்று நீங்கள் கேட்கலாம்.
வானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு.
பிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு” என்றார்.
இதைக்கேட்டதும் அந்த அவையில் கூடியிருந்த நாங்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்..]
====================================================
”சார், மணி என்ன ஆகுது. என் வாட்ச் ஓடவில்லை. பேட்டரி மாற்றனும் என்று நினைக்கிறேன்” என்றாள் என்னிடம் ஒருநாள்.
”இந்தக்காவிரி நதி நீர் பிரச்சனை கடைசியில் எப்படி சார் போய் முடியும்? நமக்கு தண்ணீர் வருமா வராதா? செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த என் கவனத்தை அவள் பக்கம் திருப்பினாள், ஒரு நாள்.
“பொங்கியெழும் இளமை உணர்ச்சிகளையும், ஓடிவரும் நதி நீரையும் ஒருவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது கட்டுக்கடங்காமல் வெள்ளமாய்ப் பாய்ந்து வரும். தாகமும் மோகமும் தீர அனுபவிப்பது அனைவரின் பிறப்புரிமையே” என விளக்கினேன்.
எனக்கு அவள் மேல் ஏற்பட்டுள்ள தாகத்தையும் மோகத்தையும் கோடிட்டுக் காட்ட இது தான் சந்தர்ப்பம் என்று விளக்கம் கொடுத்த என்னுள் ஒருவித சந்தோஷமும் பரவசமும் ஏற்பட்டதை உணர்ந்தேன்.
என் விளக்கம் கேட்ட அவளும் ஒருவித வெட்கம் கலந்த சிரிப்புடன் சென்றதாகவே எனக்கு மட்டும் புரிந்தது.
பஸ் சார்ஜுக்கு சரியான சில்லறைக்காசு இல்லாமல், நடத்துனரிடம் பாட்டு வாங்க இருந்த என்னை, தானே சில்லறை கொடுத்து உதவி செய்தாள், மற்றொரு நாள்.
இப்படியாக எங்களின் பஸ் ஸ்நேகிதம் நாளுக்கு நாள் நன்கு வளர்ந்து வந்தது. மிகவும் உயரமான அவள் என் மனதிலும் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டாள் என்றால் அது மிகையாகாது.
என் மனதிலிருந்த ஆசைகளையெல்லாம் கொட்டி, அவளுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டேன், மறுநாள் சந்திக்கும் போது எப்படியும் அவளிடம் கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில்.
திடீரென்று மறுநாள் அந்தப்பெண் மட்டும் அந்த பஸ்ஸில் வரக்காணோம். எனக்கு வாழ்க்கையே சூன்யமாகி விட்டது போல ஒருவித உணர்வு ஏற்பட்டது.
என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவோ, அவள் ஏன் வரவில்லை என்று மற்ற பெண்களிடம் காரணம் கேட்கவோ, எனக்கு ஒருவித தயக்கமாக இருந்தது. அவள் ஃபோன் நம்பர், வீட்டு விலாசம் போன்ற விபரங்கள் கூட, இதுவரை அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ளாதது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து வேதனைப் பட்டேன்.
நான் அவளுக்கு எழுதிய கடிதத்தை நானே பலமுறை பிரித்துப் பிரித்துப் படித்ததில், அது கசங்க ஆரம்பித்து விட்டது. எப்படியும் நாளை வருவாள் என்ற நம்பிக்கையில், இரவு முழுவதும் கண் விழித்து முத்து முத்தாக மீண்டும் அதே கடிதத்தை, வேறொரு புதிய தாளில் அழகாக எழுதி முடித்து, ஒரு கவரில் போட்டு பத்திரப் படுத்திக் கொண்டேன்.
மறுநாள் பஸ்ஸில் ஏறிய சற்று நேரத்தில் ஒரு சின்னப்பெண் என்னிடம் வந்தாள், “சார், உங்க ஃப்ரண்ட் இதை உங்களிடம் கொடுக்கச்சொன்னா” என்று சொல்லி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.
“தாங்க்யூ வெரிமச்” என்று சொல்லி பலவித சந்தோஷமான கற்பனைகளுடன் அதை வாங்கிய நான், தனிமையில் அமர்ந்து, அந்தக்கவருக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு, அந்தக்கவரை அவசரமாகப் பிரித்துப் படித்தேன். கண் இருட்டி வந்து என் தலை சுற்றுவது போல உணர்ந்தேன்.
அவளுடைய அத்தைப்பையனுடன் அவளுக்கு நாளைய தினம் நிச்சயதார்த்தமாம். இரண்டு மாதங்கள் கழித்துத் திருமணமாம். நாளைய நிச்சயதார்த்தத்திற்கு நானும் கட்டாயம் வர வேண்டுமாம். அழைப்பிதழ் போல அழகாக கையால் எழுதி அனுப்பியிருக்கிறாள்.
அழகில்லாவிட்டாலும், நல்ல உயரமான அவளை மணக்கவும் ஒருவன் முன் வந்துள்ளான். அவள் மேல் ஆசை வைத்த எனக்குத்தான் கொடுப்பினை இல்லை. மன வருத்தம் அடைவதைத்தவிர நான் வேறு என்னதான் செய்ய முடியும்?
..................................
..........................................
..................................................
..........................................................
...................................................................
..............................................................................
.......................................................................................
நான் எழுந்து நின்றால் அவள் முழங்கால் வரை தான் இருப்பேன். முப்பது வயதாகியும் மூன்று அடி மூன்று அங்குல உயரமே வளர்ந்துள்ள என்னை மணக்க எவள் எங்கே பிறந்திருக்கிறாளோ? உங்களில் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து எனக்குத் தெரிவியுங்களேன்.
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-
சார்,,கடைசியில் வச்சீங்களே ஆப்பு...கொஞ்சமும் எதிர் பார்க்காத முடிவு.கதை சூப்பர்.வி ஜி கே சார் கிட்டே இருந்து மட்டுமே இப்படி வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கமுடியும்.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதலைப்பு ஆகா...ஆகா...
பதிலளிநீக்குகதையின் இறுதியில் வித்யாசமான எதிர்பார்க்கா முடிவு... அருமை
பதிலளிநீக்குஆஹா... கடைசியில் ஒரு ட்விஸ்ட்....
பதிலளிநீக்குநல்ல கதை... வாழ்க்கையில் நடக்கும் வித்தியாசமான விஷயங்கள் எத்தனை கதைகளை நமக்கு வழங்குகின்றன....
நல்ல பகிர்வுக்கு நன்றி. த.ம. மூன்று...
கதை நல்லா இருந்துச்சு...
பதிலளிநீக்குஅப்புறம் அந்த ஆஞ்சநேயர் குரங்கு இனம் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்...
அழகிய முகத்துடன் இருந்தவரை சிறு குழந்தையாய் இருந்த பொழுது இந்திரன் அடித்ததால் முகம் வீங்கி குரங்கு போல் ஆனது என்பது தான் புராணம்... மேலும், அவரது தந்தை வாயு, அன்னை அஞ்சனா தேவி என்ற மனித இன பெண்.. அப்புறம் எப்படி குரங்காய்?
கதையை சுவாரசியமா படித்து வரும்போது முடிவில் நல்ல திருப்பம்.
பதிலளிநீக்கு// suryajeeva said...
பதிலளிநீக்குகதை நல்லா இருந்துச்சு...
அப்புறம் அந்த ஆஞ்சநேயர் குரங்கு இனம் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்...
அழகிய முகத்துடன் இருந்தவரை சிறு குழந்தையாய் இருந்த பொழுது இந்திரன் அடித்ததால் முகம் வீங்கி குரங்கு போல் ஆனது என்பது தான் புராணம்... மேலும், அவரது தந்தை வாயு, அன்னை அஞ்சனா தேவி என்ற மனித இன பெண்.. அப்புறம் எப்படி குரங்காய்?//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, சார்.
இராமாயண உபன்யாசம் செய்த அந்தப் பெரியவர் நகைச்சுவையாக மேடையில் அன்று சொன்னதை நான் அப்படியே எழுதியுள்ளேன்.vgk
வானரங்களே பிரம்மச்சாரிகளாய்.. பிரம்மச்சாரிகளே வானரங்களாய்... timing.. and sense of humor is excellent.. :-)
பதிலளிநீக்குஎதிர்பாராத முடிவு!
பதிலளிநீக்குசர்றும் எதிர்பார்க்கவில்லை.
சுவாரஷ்யமான கதைக்குப் பாராட்டுக்கள்.
எட்டாக் க[ன்]னிகள்"
பதிலளிநீக்குதலைப்பு மிக அருமையாக கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது.
எது எப்படியோ மல்லிகை மணத்துடன் பயணம் இப்போது இனிமையாக மாறியுள்ளது எனக்கு.
பதிலளிநீக்குகதையும் இனிமையாக பயணிக்கிறது.
கடைசியில் எட்டாமல் கொட்டாவிவிடும் க(ன்)னி !
மிகவும் உயரமான அவள் என் மனதிலும் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டாள் என்றால் அது மிகையாகாது.
பதிலளிநீக்குகதையும் ம்னதில் இடம் பிடித்துவிட்டது.
சார் மெட்டுக்கு பாட்டா?
பதிலளிநீக்குஅல்லது பாட்டுக்கு மெட்டானு சினிமாக்காரர்கள் பேசுவதை பார்த்திருக்கிறேன்.அதுபோல கதைக்கு படமா?படத்திற்காக கதையா?
கதை சூப்பர்.இந்த குட்டி ஆசாமியை டிவியில் பாத்திருக்கிறேன்.இவர் ஐந்து மாதத்தில் 600 கிராம் எடையுடன் பிறந்ததாக சொன்னதாக ஞாபகம்.பல எதிர்ப்பிலும்,வறுமையிலும் இவரின் தாயின் விடா முயற்சியில் நம்பிக்கையிலும் இவர் பிழைத்து வாழ்ந்து வருவதாக சொன்னார்கள்.மாடிப்படியில் ஒரு படியிலிருந்து அடுத்த படியை சுவரேறி குதிப்பது போல் வந்தது பரிதாபமாக இருந்தது.
இவருக்காக ஒரு கதையே அமைத்துவிட்ட உங்களுக்கும் கின்னஸ் அவார்ட் கொடுக்கலாமான்னு சம்பந்தப்பட்ட குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்
கதையை படிச்சிகிட்டே வரும்போது
பதிலளிநீக்குஅப்படியே போறபோக்குல எழுதியது போல
ஒரு யதார்த்தம்..
கடைசியில கொடுத்த முடிவு எதிர்பார்க்கவே இல்லை..
அவருக்கு அந்த பெண் எட்டாக் கனி(கன்னி)தான்...
//வானரங்களே பிரம்மச்சாரிகளாய்.. பிரம்மச்சாரிகளே வானரங்களாய்... ///
பதிலளிநீக்குஇதிலுள்ள நகைச்சுவை அபாரமானது...
வாத்திடை கொக்கு மிக ரசித்தேன். தலைப்பு மிகப்பிடித்தது.
பதிலளிநீக்குஅருமையான நடையுடன் கூடிய அழகிய கதை. அந்த குட்டி கதையும் அருமை, நன்றி சார்.
பதிலளிநீக்குஅருமையான கதை
பதிலளிநீக்குதான் எப்படியிருந்தாலும் பெண் அழகாய்
இருக்கவேண்டும் என்கிற மனோபாவம் உள்ளவர்கள் ஆண்கள்
நம் கதா நாயகன் பரவாயில்லையே என மிகவும் ஆச்சரியப்பட்டேன்
கடையில்தான் விஷயம் புரிந்தது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 6
வை கோ வைகோதான்-கதை
பதிலளிநீக்குவடிப்பதில் தனியிடந்தான்
புலவர் சா இராமாநுசம்
எதிர்பாராவகையில் கதையை “நச்” என்று முடித்திருக்கிறீர்கள். அருமை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குசாதாரண காதல் கதை என்று நினைத்து படித்தேன் முடிவில் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட்.இதுதான் உங்களுடைய எழுத்தின் சிறப்பு.
பதிலளிநீக்குகதையின் தலைப்பிலேயே எட்டாக்(ன்)னிகள் எழுதி விட்டதால் கொஞ்சம் தெரிந்து விட்டது கதையின் முடிவு.
பதிலளிநீக்குஇருந்தாலும் நீங்கள் சொன்ன முடிவு எதிர்ப்பார்க்க முடியாத ஒன்று.
கதை அருமை.
செம ட்விஸ்ட்டுங்க.. என்ன காரணமா இருக்கும்ன்னு யோசிச்சிட்டே வர்றப்ப புதுசா ஒரு முடிவு.
பதிலளிநீக்குஅருமையாயிருக்கு.
எதிர்பாராத திருப்பத்துடன் சுவாரஸ்யமான கதை.
பதிலளிநீக்குபாவமாக இருந்தது.
பதிலளிநீக்குதாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குதங்கள் பதிவுகளுக்கு ஒரு விசிட் போய்ட்டு வந்தேன்..
இத்தனை நாள் வராமல் போனதை எண்ணி வருந்துகிறேன்.
வானர பிரம்மச்சாரிகளை விட
பதிலளிநீக்குபிரம்மச்சாரி வானரங்கள்... சரியான பொருத்தம்..
:)))
O.Hendry கதையில் வருவது போன்ற ட்விஸ்ட்; கதைக்கேற்ப பொருத்தமான தலைப்பு.... அருமை.
பதிலளிநீக்குஹாஹாஹா எதிர்பார்க்கவே இல்லை முடிவை.. கதை அருமை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅநேகர் கூறியதுபோல எதிர்பார்க்காத முடிவுதான்.
பதிலளிநீக்குவானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு.
பதிலளிநீக்குபிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு
கதையின் இறுதியில் வித்யாசமான எதிர்பார்க்கா முடிவு... அருமை
நல்லா கதை எழுதறீங்க!சுவாரஸ்யம் மட்டுமின்றி, உடல் வளர்ச்சி குறைந்தவர்களின் சோகமும் புரிய வைக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகடிதம் கொண்டு போகும் போதே தெரியும் அவள் அங்கு வரமாட்டாள் என்று. என் கற்பனையும் சரியாகியது. நல்ல கதை ஐயா. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
கதை சூப்பர் முடிவு எதிர் பாராதது.tamil manam +1
பதிலளிநீக்குகதை அருமை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குLast line changed it all..
பதிலளிநீக்குபொருத்தமான தலைப்பு.
பதிலளிநீக்குஎதிர்பாராத முடிவு. ;)
வழக்கம்போல் அருமையான எழுத்துநடை.
சூப்பர் அண்ணா.
சற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ்...
பதிலளிநீக்குதலைப்பும் ஜோர்...
எட்டாக் க[ன்]னியைப் பற்றிய வருணனை அனுதாபப்படவும்,அவளின் குணம் காதல் கொள்ளவும் வைத்தது.
பதிலளிநீக்கு"நான் அவளுக்கு எழுதிய கடிதத்தை நானே பலமுறை பிரித்துப் பிரித்துப் படித்ததில், அது கசங்க ஆரம்பித்து விட்டது." இந்த இடத்தில் யதார்த்தமாக, ஆனால் அழுத்தமாக உண்ர்வுகளைப் பதித்திருக்கிறீர்கள்.
"நான் எழுந்து நின்றால் அவள் முழங்கால் வரை தான் இருப்பேன். முப்பது வயதாகியும் மூன்று அடி மூன்று அங்குல உயரமே வளர்ந்துள்ள என்னை மணக்க எவள் எங்கே பிறந்திருக்கிறாளோ? ". இந்த இடத்தில் வித்தியாசமாகப் பார்க்கப்படும் குள்ள மனிதர்களின் பிரதிபலிப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.
வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து, விளக்கிய விதம் அருமை.
வானரங்களும்,பிரும்மச்சாரிகளும் பற்றிய ஒப்பீடு சிரிப்பை வரவழைத்தது.
கடைசிப் பத்தி கண்ணீரை வரவழைத்தது.
மூன்றே மூன்று கதாபாத்திரங்களையும்,ஒரு பேருந்தையும் வைத்துக் கொண்டு, அனுதாபம்,காதல்,யதார்த்தம்,பாதிக்கப்பட்டவரின் மனநிலை,சிரிப்பு,கண்ணீர் என படிப்பவர்களை உணர வைப்பது அசாத்தியம்...
பேருந்தில் உங்களோடு கூட நானும் பயணித்ததாய் உணர்ந்தேன்...
இந்தக் கதை[யும்] ரொம்ப பிடிச்சிருக்கு VGK சார்...
அன்புடன்,
ராணி கிருஷ்ணன்.
அன்புள்ள கெளரி லக்ஷ்மி,[நுண்மதி]
நீக்குஉங்களின் இந்தக்கதை விமர்சனம் என்னை மிகவும் கவர்வதாகவும், மனதுக்கு உற்சாகம் தருவதாகவும் உள்ளது.
உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
அன்புடன்
கோபு
"ஒட்டடைக்குச்சி", "வாத்துக்கள் நடுவே கொக்கு" நல்ல உவமைகள்.
பதிலளிநீக்குஇப்படி நல்ல குட்டிக்கதைகளை உங்களால் மட்டுமே எழுத முடியும்.
வாழ்த்துக்கள்.
எதிர்பாராத முடிவு.
பதிலளிநீக்குபிரும்மச்சாரி வானர ஜோக் பிரமாதம்.
இரண்டு பதிவுகளாக காமெடி கலக்குகிறது
ஒட்டடைக் குச்சிக்குக் கல்யாணம் என்று சந்தோஷப் படுவதா? மனதில் ஏகப்பட்ட ஆசையை சுமந்திருந்த 'குள்ளனை' நினைத்து வருந்துவதா? நல்ல கதை!
பதிலளிநீக்குஇந்த என் நகைச்சுவைக் கதைக்கு பெரும் திரளாக அன்புடன் வருகை தந்து சிறப்பித்து, ஏகோபித்த பாராட்டுக்களை அள்ளி அள்ளி தாராளமாகவும் ஏராளமாகவும் வழங்கியுள்ள என் அன்புத் தோழர்கள் + தோழிகள், 35 பேர்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன் தங்கள்,
vgk
மனசிலே ஏமாத்தம் , கதை முடிந்த வுடன்.
பதிலளிநீக்குவருத்தமாக இருந்தது.
ஆமாம், நவரச கதைகளா பாத்து அனுப்பினீங்களா, என்ன?
Ms. PATTU Madam,
பதிலளிநீக்குதங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk
[இவை யாவும் நவரசக்கதைகளின் LOT-1 மட்டுமே. இதுபோல மேலும் தேவையென்றால் valambal@gmail.com க்கு மெயில் அனுப்பவும். அடுத்த அடுத்த LOT களில், மேலும் பல இணைப்புகள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கப்படும். vgk]
கதையின் தலைப்பு மிகவும் அருமையானது.... கதை மல்லிகைமனத்துடன் மிகவும் நகைசுவை கலந்து காணப்பட்டது.... ஆனால் எதிர்பார்க்க முடியாத முடிவு கொடுத்து சற்று சிந்திக்க வைத்து விட்டது கதை.... அருமை ஐயா ... அதற்க்கான படம் அருமை.... கொக்குபோன்ற அந்த பெண் இந்த அழகான சின்னபிள்ளையை வருத்தபடவைத்து விட்டல்....
பதிலளிநீக்குஅன்புள்ள VIJIPARTHIBAN Madam, வாங்க, வணக்கம்.
நீக்குகதையின் தலைப்பு மிகவும் அருமையானது எனத் தலையில் அடித்துச்சொல்லியுள்ளதற்கு மிக்க நன்றி, நன்றி!! ;))))))
கதையில் நகைச்சுவை அதுவும் மல்லிகைமணத்துடன் வீசியதாகச் சொல்லியுள்ள தங்கள் சொல்லாடலிலும் அதே ஜாஸ்மின் ஸ்மெல் வீசுவதால் எனக்கு சற்றே மயக்கம் வந்து விட்டது. ;)))))
எதிர்பார்க்காத முடிவு அருமை. அதற்கான படம் அருமை. கொக்குப்போன்ற பெண் அருமை. குள்ளமான இந்த ஆசாமி அருமை என எல்லா அருமைகளையும் பாராட்டு மழையாக பொழிந்து தள்ளியுள்ள தங்களின் கருத்துக்களும் அருமை தான் மேடம். மிக்க மகிழ்ச்சி. அன்புடன் vgk
நீக்குவாழ்க்கையில் எதுவும் நாம் நினைத்தபடி நடந்து விட்டால் அப்புறம் மனிதனைக் கையில் பிடிக்க முடியுமா?
பதிலளிநீக்குஇன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே இறைவன்.
பதிலளிநீக்குபூந்தளிர் May 19, 2015 at 10:44 AM
நீக்கு//இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே இறைவன்.//
கரெக்டா பாயிண்ட பிடிச்சு சொல்லிட்டீங்க ! அதே, அதே!!
எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்ட கதை ஆகிவிட்டது இந்தக் கதாநாயகனின் கதை.
பதிலளிநீக்குவழக்கம் போல் எதிர்பாராத சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் திருப்பத்தை சொன்னேன். எப்படிதான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ?
அட ரூம் போட்டு யோசிப்பாரோ?
மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
எட்டாக் க(ன்)னிகள் : மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதெனக் காட்டும் கதை. அழகற்ற பெண்ணை கண்ணுக்குள் கொண்டு தரும் அழகான வர்ணனை.
நவரசத்தில்... இந்தக் கதை ஒரு ..."ஆச்சரியம்"..!
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
ஆம்புள கொமரு பொட்ட கொமருகள வரும்பறதுல தப்பேதுமில்ல கடசி வரில வச்சீங்க பாருங்க ஆப்பு செம தூளு.
பதிலளிநீக்குபெண்களை என்னமா ரசிச்சு வர்ணனை செய்யுறீங்க. அதே சமயம் ஆண்கள் அழகான பெண்களைக்கண்டுவிட்டால் எப்படி யெல்லாம் மனதில் நினைப்பார்கள் என்பதையும் தத்ரூபமா சொல்லி இருக்கீங்க. குள்ளமான பையன் ஆனா என்ன. அவன் மனதிலும் ஆசைகள் இருக்கத்தானே இருக்கும். அவனுக்கேத்த ஜோடி கிடைக்காமலா போகும்.
பதிலளிநீக்குதலைப்பே கதை சொல்லும் உத்தி...அருமை...சுமாரான அழகியும் உயரமானதாலயே எட்டாம போனது பரிதாபம்தான்...
பதிலளிநீக்குஎட்டாமற் போனதை சொன்னவிதம் அருமை! இராமாயண உபன்யாசம் இரசித்தேன்!
பதிலளிநீக்கு